வெளிநாட்டில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கான புதிய மசோதா பாதுகாப்பு வழங்கவில்லை — அது அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது -ரெஜிமோன் குட்டப்பன்

 மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, ​​கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும்.


தற்போது 17 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் மற்ற நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பலவீனமான தொழிலாளர் சட்டங்கள் அல்லது பாதுகாப்பு அபாயங்கள் உள்ள நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்று ஒரு நாடாளுமன்ற அறிக்கை காட்டுகிறது.


இருப்பினும், இந்தியா இன்னும் பழைய குடியேற்றச் சட்டத்தின் மூலம் இந்தப் பெரிய இடம்பெயர்வை நிர்வகிக்கிறது. இது 42 ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்றைய உலகிற்கு இனி பொருந்தாது. அரசாங்கம் 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டில் அதைப் புதுப்பிக்க முயற்சித்தது. ஆனால், அப்பொழுது தோல்வியடைந்தது. இப்போது, ​​அரசாங்கம் வெளிநாட்டு நகர்வு (சேவை மற்றும் நலன்) மசோதா (Overseas Mobility (Facilitation and Welfare) Bill) (2025) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், அரசாங்கம் நவம்பர் 7 வரை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.


இது ஒரு முக்கியமான தருணம்: இந்த மசோதா இறுதியாக நமது உலகளாவிய தொழிலாளர்களுக்குத் தகுதியான பாதுகாப்புகளையும் பாதைகளையும் வழங்குமா?


இந்த மசோதா 1983-ஆம் ஆண்டு சட்டத்திற்கு ஒரு நவீன புதுப்பிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், வலுவான நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உலகமயமாக்கலின் நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. வளர்ந்துவரும் உலகமயமாக்கல் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும், அனைத்து நிலைகளிலும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க வலுவான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதியளிக்கிறது.


இருப்பினும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஒரு நெருக்கமான பார்வை ஏமாற்றமளிக்கும் யதார்த்தத்தைக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, வலுவான உரிமைகளுக்குப் பதிலாக தெளிவற்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றுவதாகத் தெரிகிறது.


சட்டப் பாதுகாப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்குப் பதிலாக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன்மூலம் இது புலம்பெயர்ந்தோரை ஏமாற்றுகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் தொடர்ந்து அதே பழைய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வளைகுடா நாடுகளில் ஊதியம் பெறாத வேலைகள் அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணைய அடிமை முகாம்களுக்கு (cyber slave camps) கடத்தப்படுவது போன்ற பல ஆண்டுகளாக இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட அதே வகையான சுரண்டலுக்கு அவர்களை ஆளாக்குகிறது.


இங்கு "இணைய அடிமை முகாம்கள் (cyber slave camps)" என்பது தென்கிழக்கு ஆசியாவில் — முக்கியமாக மியான்மர், கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் — உள்ள ரகசிய, சிறை போன்ற கூட்டுப் பகுதிகளைக் குறிக்கிறது. இங்கு மனித கடத்தல்காரர்கள் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களைச் சிறை வைத்து, ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளை நடத்த வற்புறுத்துகின்றனர்.

 

தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த மசோதா மக்கள் சுதந்திரமாக பணியாற்ற உதவாது; மாறாக, அது அதிக சிக்கல்களையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்.


இந்த மசோதா வேலைவாய்ப்புகள் பற்றிய மிகக் குறைந்த விவரங்களையே வழங்குகிறது. அங்கு அதிக தெளிவு தேவைப்படுகிறது. பிரிவு 2(v) வேலை வகைகளை பட்டியலிடுவதன் மூலம் "வேலை" என்பதை வரையறுக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் அல்லது ஓய்வு நாட்கள் போன்ற முக்கிய பாதுகாப்புகளைக் குறிப்பிடவில்லை.


பிரிவு 4(d) தொழிலாளர்களின் "பாதுகாப்பான திரும்புதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பை" உறுதி செய்வது பற்றி கூறுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த நிதி அல்லது பயிற்சித் திட்டங்களை வழங்கவில்லை. இது 182 நாட்களுக்குள் நாடு கடத்தப்படுபவர்களையும் பிரிவு 2(t) விலக்குகிறது. குறுகிய காலத்தில் நாடு திரும்புபவர்களை விட்டுவிடுகிறது.


புதிய சட்டம் பழைய 1983ஆம் ஆண்டு சட்டத்தின் குடியேற்ற அனுமதி அலுவலகங்களை (emigration clearance offices), "நடமாடும் வள மையங்கள்" (Mobility Resource Centers) என்று மாற்றுகிறது. இருப்பினும், இந்த மையங்களுக்கு உண்மையான அதிகாரம் குறைவாகவே உள்ளது. பல மொழிகளில் முறையான ஆலோசனையை உறுதி செய்வதற்கான தெளிவான விதிகள் இல்லை அல்லது பாஸ்போர்ட் பறிமுதல் அல்லது தொழிலாளர் துஷ்பிரயோகம் போன்ற அபாயங்கள் பற்றிய தகவல்களை எளிதாக நடைமுறைப்படுத்தக்கூடிய தரநிலைகளும் இல்லை. இதன் விளைவாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த பல குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் இன்னும் சரியான விழிப்புணர்வு அல்லது பாதுகாப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.


பிரிவு 11(vi) வெளிநாடுகளில் உள்ள "வழிமுறைகள்" பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், நிலையான காலக்கெடுவுடன் கூடிய தூதரக அடிப்படையிலான நடுவர் மன்றம் போன்ற தெளிவான படிகளைக் குறிப்பிடவில்லை.


பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறியீட்டு கவனத்தை மட்டுமே பெறுகின்றன. பிரிவு 12(2) "பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான" திட்டங்களை உருவாக்குவது பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் யார் என்பதை வரையறுக்கவில்லை. துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களுக்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை, குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இது பெரும்பாலும் கடத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறார்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகிறது. இது பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாட்டிற்கும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW)) எதிரானது. இந்தியர்கள் ஏற்கனவே பாகுபாட்டை எதிர்கொள்ளும் அரபு வளைகுடா நாடுகளில், இத்தகைய தெளிவின்மை இன்னும் தீங்கு விளைவிக்கும்.


இந்த மசோதா அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தையும் வழங்குகிறது. எந்தவொரு நீதித்துறை மதிப்பாய்வு அல்லது புலம்பெயர்ந்தோரின் உள்ளீடு இல்லாமல் "தேசிய பாதுகாப்பு" அல்லது "பொது நலன்" போன்ற தெளிவற்ற காரணங்களுக்காக முழு நாடுகளுக்கும் பயணத்தைத் தடைசெய்ய பிரிவு 13 மையத்தை அனுமதிக்கிறது.


வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட 1983-ஆம் ஆண்டு சட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த மசோதா வெளிப்படைத்தன்மை இல்லாமல் அவற்றை விரிவுபடுத்துகிறது. இது திடீரென வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடுக்கக்கூடும். மேலும், பிரிவு 19-ன் கீழ் இயக்க சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறக்கூடும்.


வெளிநாட்டு வேலைகளிலிருந்து வரும் வருமானத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கும் உலகில், இதுபோன்ற நியாயமற்ற கொள்கைகள் பாதுகாப்பை வழங்குவதில்லை. மேலும், அவை கண்ணியத்திற்கு தடையாகின்றன.


வெளிநாட்டு வேலைக்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படும் ஆட்சேர்ப்பு, பெரும்பாலும் ஒரு கனவாகவே மாறிவிடும். பிரிவு 14, வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றிப் பேசுகிறது. ஆனால், முக்கியமான விவரங்களை பின்னர் "விதிகளின்" மூலம் முடிவு செய்ய விட்டுவிடுகிறது. ஆட்சேர்ப்பு கட்டணங்கள் அல்லது பிணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மீதான தடைகள் குறித்த எந்த வரம்புகளையும் இது குறிப்பிடவில்லை. 1983-ஆம் ஆண்டு சட்டம் குறைந்தபட்சம் கட்டண வரம்புகளைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த புதிய மசோதா அவற்றை முழுமையாகப் புறக்கணிக்கிறது. தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தக் கோரும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளின் 181 பிரிவையும் இது கவனிக்கவில்லை.


இதன் காரணமாக, கடன் அடிமைத்தனம் தொடர்கிறது. குறிப்பாக அரபு வளைகுடாவில், பல இந்திய தொழிலாளர்கள் மாதக்கணக்கில் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இதை "நல்ல வேலை நிலைமைகள்" ("decent working conditions”) என்று அழைக்க முடியாது. மாறாக, வேலை தேடுபவர்களை சுரண்டும் இடைத்தரகர்களுக்கு இது பயனளிக்கிறது.


இதேபோல், பிரிவு 17 வெளிநாட்டு முதலாளிகளைப் பற்றி கூறுகிறது, ஆனால் கட்டுமானம் மற்றும் வீட்டு வேலைகளில் பாதுகாப்பற்ற அல்லது சுரண்டல் நிலைமைகளுக்கு ஆய்வுகள் அல்லது முதலாளிகளின் பொறுப்பை அவை வழங்கவில்லை. வளைகுடாவில் இந்தியர்கள் மிகவும் ஆபத்தில் உள்ள துறைகள் உள்ளன. 1983-ஆம் ஆண்டு சட்டம் சிறந்த பாதுகாப்புகளை எதிர்பார்த்த நிலையில் அது தற்போது நீண்ட வேலை நேரம் மற்றும் பாதுகாப்பற்ற பணியிடங்கள் போன்ற துஷ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின் (ILO) 155 பிரிவான  பாதுகாப்பான பணிச்சூழலுக்கான கோரிக்கையை மீறுகிறது.


ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு (பிரிவு 18) சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தரவைச் சேகரிக்கிறது. இது அவர்களின் சம்மதத்தைக் கேட்காது மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டம் சட்டத்தைப் பின்பற்றாது. இந்த பலவீனமான தனியுரிமைப் பாதுகாப்பு, மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கிறது மற்றும் நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு களங்கத்தை உருவாக்குகிறது. அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, தரவு கண்காணிப்புக்கான ஒரு கருவியாக மாறுகிறது. பிரிவுகள் 20–22 இந்திய நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடுமையான அபராதம் விதிக்கின்றன. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த அபராதங்களும் விதிப்பதில்லை. இதில் காப்பீடு தொடர்பான சலுகைகளும் இல்லை. இந்த அணுகுமுறை தடுப்பைவிட தண்டனையில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின்  (ILO)  நல்ல வேலைவாய்ப்பு முறைகளுக்கு எதிரானது.


1983 சட்டம் ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் பலவீனமான மேற்பார்வை மற்றும் ஊழலுக்கு எதிராக ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, ​​கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும். நாம் சரியான ஆதரவுடன் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை என்றால், நாம் திறமையை ஏற்றுமதி செய்யவில்லை மாறாக விரக்தியை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் உலகளாவிய லட்சியங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்; நாட்டில் மக்களும் சிறப்பாக இருக்க வேண்டும்.


குட்டப்பன் ஒரு தொழிலாளர் இடம்பெயர்வு நிபுணர் மற்றும் எழுத்தாளர்.



Original article:

Share:

இந்தியாவின் சுகாதார அமைப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. -ஆனந்த் கிருஷ்ணன்

 இவர்களின் தேவையை கருத்தில்கொண்டு, ஆட்சேர்ப்பு முறை, ஊக்கத்தொகைகளின் பங்கு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.


சத்தீஸ்கரில் சுமார் 16,000 தேசிய சுகாதார திட்ட (National Health Mission (NHM)) ஊழியர்கள் சமீபத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். ஹரியானா மற்றும் கேரளாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists(ASHA)) தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொழிற்சங்கங்களை அமைத்துள்ளனர். 

இந்த வேலைநிறுத்தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களுக்குள் உள்ள தீவிரமான பிரச்சினைகளைக் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (comprehensive primary healthcare (CPHC)) வழங்குவதற்கான உந்துதல் புதிய பணியாளர் சவால்களை உருவாக்கியுள்ளது, அவை திறம்பட தீர்க்கப்பட வேண்டும்.


இந்தச் சூழலில், விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (CPHC) வழங்குவதில் வழக்கமான சுகாதாரப் பணியாளர்களை ஆதரிக்கும் மூன்று பிரிவு பணியாளர்கள் தனித்து நிற்கிறார்கள். இதில், அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers (AWW)), அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) ஆவர். அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் (Integrated Child Development Services Scheme (ICDS)) ஒரு பகுதியாகும். மேலும், அவர்களின் பங்கு ஊட்டச்சத்து கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கூடுதல் மற்றும் தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை வழங்குவதை எளிதாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது. சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அவர்கள் அதனுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள்.


சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) 2005-ஆம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களது முதன்மைப் பொறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சாத்தியமான பயனாளிகளை சுகாதார வசதிகளுக்கு திரட்டுவதுமாகும். சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 2018-ல் சமூக சுகாதார அதிகாரிகளின் (CHO) புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அவர்கள் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது ஆயுஷ் பயிற்சியாளர்கள் ஆவார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அவர்களது ஊதியம் நிலையான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையின் கலவையாகும்.


அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களும் (Accredited Social Health Activists(ASHA)) அங்கன்வாடி பணியாளர்களும் (Anganwadi workers (AWW)) சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் (healthcare providers) அல்ல. இருவரும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் சுமார் 1,000 பேர் அல்லது 200 வீடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். இருவரும் "இணைப்பு" பணியாளர்கள் - அவர்கள் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை சமூகத்துடன் இணைத்து, கடைசி கட்ட இணைப்பை வழங்குகிறார்கள்.


சேவை வழங்குவதை உறுதி செய்யத் தவறிய வழக்கமான தொழிலாளர்களின் அனுபவம் குறைவாக இருந்ததால், தன்னார்வலர் அடிப்படையிலான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருவரும் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வரை பகுதிநேர வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு (AWW) நிலையான கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) செய்யப்படும் ஒவ்வொரு நிலை வேலைக்கும் ஊக்கத்தொகையாக ஊதியம் பெறுகிறார்கள். பிரசவம் அல்லது நோய்வாய்ப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை போன்ற எந்தவொரு அவசரநிலைகளுக்கும் அல்லது ஒரு நோயாளியை சுகாதார வசதிக்கு அழைத்துச் செல்வதற்கும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மாதத்திற்கு ரூ.5,000-10,000 சம்பாதிக்கிறார்கள். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) சுமார் ரூ.12,000 சம்பாதிக்கிறார்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் அங்கீகாரம்பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களின் (ASHA) பணி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுடன் (ASHA) நான் தொடர்பு கொண்டபோது, ​​அவர்களை தங்கள் பணியில் பெருமை கொள்ளும் ஒரு உந்துதல் பெற்ற மக்கள் குழுவாக நான் பார்க்கிறேன். அவர்கள் இப்போது சுகாதார அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாக மாறிவிட்டனர். அவர்கள் இல்லாமல் திறம்பட செயல்பட முடியாது.


காலப்போக்கில், இந்த இரண்டுவகை பணியாளர்களுக்கும் அவர்களின் உண்மையான பணியின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொற்றில்லா நோய் (Non-Communicable Diseases (NCDs)) பரிசோதனை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குதல் ஆகியவை அடங்கும். விருப்பமில்லாத வழக்கமான ஊழியர்களை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பணியாளர்களுக்கு அத்தகைய பணிகளை ஒதுக்கி அவர்களை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு எளிதாக்குகிறது. இது அவர்களின் வேலை நேரத்தை உண்மையான நிலையில் நான்குபேரைவிட அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்கள் சில கூடுதல் ஊதியத்தைப் பெறுகிறார்கள்.


இருப்பினும், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) இருவருக்கும் பல குறைகள் உள்ளன. இவற்றில் அதிகரித்துவரும் பணிச்சுமை, போதுமான பாதுகாப்புநிலை இல்லாதது, மிக முக்கியமாக, பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் இல்லாதது ஆகியவை அடங்கும். இந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ASHA) தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது. பல மாநிலங்களில் வேலைநிறுத்தங்கள் இப்போது பொதுவானதாகிவிட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தொழிற்சங்கங்கள் உள்ளன, மேலும் அவர்கள் வழக்கமான பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். நீதிமன்றங்கள் பொதுவாக அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, விடுப்பு போன்ற அரசு ஊழியர்களின் சலுகைகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்தன. இருப்பினும், அரசாங்கம் அவர்கள் "தன்னார்வலர்கள்" என்றும், அரசு ஊழியர்களாகக் கருத முடியாது என்றும் கூறுகிறது. இருப்பினும், அது அவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்துள்ளது.


இந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது மிகப்பெரிய சம்பளப் பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொரு குழுவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இது பதவி உயர்வுகள் தொடர்பான சிக்கல்களையும் உருவாக்கும். இந்த தன்னார்வ பணியாளர்கள் உருவாக்கப்பட்டபோது, ​​பதவி உயர்வுகளுக்கான எந்த அமைப்பும் திட்டமிடப்படவில்லை. இப்போது நிரந்தரப்படுத்தல் மற்றும் பதவி உயர்வுகள் இந்த பணியாளர்கள் முதலில் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையையும் நியாயத்தையும் கேள்விக்குள்ளாக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சமூக சுகாதார அதிகாரிகள் (CHO) இந்தப் பணியாளர்களைப் போலவே பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், அவற்றின் பதவி உயர்வு வழிகளும் நன்கு வரையறுக்கப்படவில்லை.


சுகாதாரப் பணியாளர்களுக்கு மற்றொரு சவால், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகும். துணை செவிலித் தாதி (Auxiliary Nurse Midwife (ANM)) பணியிடங்களில் சுமார் 10-15 சதவீதமும், மருத்துவர் பணியிடங்களில் 20-25 சதவீதமும் காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் இப்போது பெரும்பாலும் ஒப்பந்தப் பணிகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த ஊழியர்களை நோக்கிய இந்த மாற்றம் முக்கியமாக நிகழ்கிறது. ஏனெனில், இது குறைந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இல்லாதது போன்ற நிதிச் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், ஆட்சேர்ப்பு தாமதங்கள் மற்றும் ஊழலைத் தவிர்ப்பதன் மூலம் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துகிறது.


இந்த உதாரணங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது சுகாதாரப் பணியாளர்களை எவ்வாறு அணுகுகின்றன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) போன்ற பல மத்திய நிதியுதவித் திட்டங்கள், வழக்கமான ஊழியர்களை பணியமர்த்துவதற்கான மாநிலங்களின் மோசமான உந்துதலைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 


சுகாதார அமைச்சகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் இந்த சவால்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் தீர்வுகளைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஆட்சேர்ப்பு முறைகள், ஊக்கத்தொகை கட்டமைப்புகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அமைப்பு போன்ற முக்கிய கவலைகளைக் கையாள வேண்டிய நேரம் இது. இதில், ஒப்பந்த மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஒரு பங்கு இருந்தாலும், அமைப்பு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது அவர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. இதில் சிறந்த சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.


எழுத்தாளர் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சமூக மருத்துவ மையத்தில் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

ஒரு திருத்தப்பட்ட அரசியலமைப்பு மசோதா, அதன் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் -ஆர்.கே.விஜ், ஷிவானி விஜ்

 அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா மற்றும் அதன் 'கைது' மீதான கவனம் குறித்து அதிக ஆய்வு தேவை.


மத்திய அமைச்சரவை, மாநில அமைச்சரவை மற்றும் டெல்லிக்கான சிறப்பு நிர்வாக விதிகள் தொடர்பான அரசியலமைப்பின் பிரிவு 75, பிரிவு 164 மற்றும் பிரிவு 239AA ஆகியவற்றைத் திருத்துவதற்காக மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (Joint Parliamentary Committee) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின்பேரில் குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்படுவார். அந்தக் காவலின் 31-வது நாளுக்குள் இந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அல்லது, ஆலோசனை வழங்கவில்லை என்றால், அமைச்சர் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார். மாநில சட்டமன்றங்களில் உள்ள அமைச்சர்களுக்கும் இதே போன்ற விதி பொருந்தும். அவர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். ஒரு மாநிலத்தின் பிரதமர் மற்றும் முதலமைச்சரைப் பொறுத்தவரை, அவர்கள் 31-வது நாளுக்குள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது (தானாகவே) ஒரு மாநிலத்தின் பிரதமர் அல்லது முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டும்


எதிர்க்கட்சிகளுக்கு சர்ச்சைக்குரியதாக இருந்தது எது?


எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து ஒன்று சேர நிர்பந்தித்த இரண்டு சர்ச்சைக்குரிய பிரச்சினைகள், காவல்துறையினரால் 'கைது' செய்யப்பட்டதும், நீதிமன்றத்தால் 'தடுப்புக் காவல்' வைக்க அனுமதித்ததும் ஆகும். இருவருக்கும் பரந்த அளவிலான அதிகாரம் இருப்பதால், மசோதா தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான முதல் நிபந்தனை கைது ஆகும். இது விருப்புரிமை மற்றும் அமலாக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளது. ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு கைது செய்யப்படுவதற்கு முன்பு சில நிபந்தனைகளை அமல்படுத்த பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) வழங்குகிறது. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரையும் ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்வது கட்டாயமில்லை.


தீனன் vs ஜெயலலிதா-1989 (Deenan vs Jayalalithaa) வழக்கில், மனுதாரர் தனது உள்ளார்ந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதிவாதியான ஜெயலலிதாவைக் கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோது, ​​காவல் விசாரணையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.


பிரிவு 41-ன் கீழ் 'கைது செய்யலாம்' (may arrest) என்ற வார்த்தைகள் கைது செய்யும் அதிகாரம் விருப்புரிமை கொண்டது என்பதையும், ஒரு காவல்துறை அதிகாரி எப்போதும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் காட்டுகிறது என்று உயர்நீதிமன்றம் கூறியது. கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இருந்தாலும், குற்றத்தின் தன்மை மற்றும் புகாரில் மட்டுமல்ல, விசாரணையின்போதும் வெளிப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து, அவர் நபர்களைக் கைது செய்வதைத் தவிர்க்கலாம். ஒரு தனிப்பட்ட நபரால் ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம், அவர் முன்னிலையில் பிணையில் (ஜாமீனில்) வெளிவர முடியாத மற்றும் விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் அவர் முன்னிலையில் செய்யப்பட்டாலோ அல்லது அந்த நபர் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலோ மட்டுமே கைது செய்ய முடியும். மற்ற எல்லா வழக்குகளிலும், அத்தகைய அதிகாரம் பொருந்தாது.


ஜோகிந்தர் குமார் vs உத்திரப் பிரதேச மாநிலம்-1994 (Joginder Kumar vs State of U.P.) வழக்கில், ஒரு காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதால் மட்டுமே கைது செய்ய முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியது. கைது செய்யப்படுவதை நியாயப்படுத்த அந்த அதிகாரிக்கு சரியான காரணம் இருக்க வேண்டும். ஒருவரைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைப்பது ஒரு நபரின் நற்பெயருக்கும் சுயமரியாதைக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.


மற்றொரு வழக்கில், அமராவதி மற்றும் பிறர் எதிர். உத்திரப் பிரதேச மாநிலம்-2004 (Amarawati and Anr. (Smt.) vs State of U.P.), அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure (CrPC)) பிரிவு 41 மற்றும் பிரிவு 157-ன் விதிகளின்படி, 'அடையாளம் காணக்கூடிய குற்றம்' என்பதன் வரையறையை கவனமாக ஆராய்ந்த பிறகு, சட்டமன்றம் 'கைது செய்யலாம்' என்ற வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளது என்றும், ஒவ்வொரு அறியக்கூடிய குற்றத்திலும் ஒருவரைக் கைது செய்வது காவல்துறைக்கு கட்டாயமில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 157, அறியக்கூடிய குற்றத்தை விசாரித்து, தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.


2009-ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41-ல் செய்யப்பட்ட திருத்தத்தில், ஏழு ஆண்டுகள்வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களிலும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களிலும் கைது செய்வதற்கு சில வேறுபாடுகளை குறிப்பிட்டது. இருப்பினும், (ஒரு நபரைக் கைது செய்யத் தேவையில்லை என்றால்) ஆஜராகுமாறு அறிவிப்பை வழங்குவதற்கு வழங்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41A, அவற்றின் சிறைத்தண்டனை காலத்தின் அடிப்படையில் குற்றங்களுக்கு இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தாது. சதேந்தர் குமார் அன்டில் vs சிபிஐ மற்றும் பிறர்.-2022 (Satender Kumar Antil vs CBI and Anr) வழக்கில், விசாரணை நிறுவனங்கள் பிரிவு 41 மற்றும் பிரிவு 41A குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 35, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் 41A-ஐ ஒன்றாகப் படிக்கும்போது ஒத்திருக்கிறது.


கைது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்


கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்வது அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு நல்லதல்ல என்றாலும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து காவல்துறையினரால் கைது செய்யும் இந்த விருப்புரிமை அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை நிராகரிக்க முடியாது. அர்னேஷ் குமார் vs பீகார் மாநிலம் மற்றும் பிறர்-2014 (Arnesh Kumar vs State of Bihar and Another) வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றாததற்கு உயர்நீதிமன்றங்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்துள்ளன. இது கைதுக்கு அவசியமான காரணங்களையும் ஆதாரங்களையும் விசாரணை அதிகாரி பதிவுசெய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. தேசிய காவல் ஆணையம்-1977 (National Police Commission) தனது மூன்றாவது அறிக்கையில் கிட்டத்தட்ட 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்று குறிப்பிட்டது. காவல்துறை அரசியல் அழுத்தத்திற்கு இணங்குவதாகக் கூறப்படும் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளில் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய 'கைது' ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படலாம்.


இரண்டாவது நிபந்தனை, "தொடர்ச்சியாக முப்பது நாட்கள்" தொடர்ந்து காவலில் வைப்பது, இது பிணையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்தக் காலத்திற்குள் ஒரு அமைச்சர் பிணைபெற முடிந்தால், பிரிவு 75(5A)-ன் கீழ் தகுதி நீக்கம் செல்லுபடியாகாது. 'பிணைஎன்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' (bail is the rule, jail is the exception) என்ற கொள்கையை உச்சநீதிமன்றம் பலமுறை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தாலும், மும்முறை சோதனையைத் தவிர வேறு காரணிகளுக்காக பிணைபெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது. அதாவது, தப்பித்து ஓடுவதற்கான சாத்தியக்கூறு, ஆதாரங்களை சேதப்படுத்தும் நிலை மற்றும் சாட்சிகளை அச்சுறுத்துதல் நிலை போன்ற காரணங்களால் நிராகரிக்கப்படும். உதாரணமாக, குற்றம் சாட்டப்பட்டவரின் நிரபராதி என்ற அனுமானத்துடன் முரண்பட்டாலும், ஒரு குற்றத்தின் ஈர்ப்பு அல்லது தீவிரம் ஒரு முக்கியமான நான்காவது காரணியாகக் கருதப்படுகிறது. எனவே, பொருளாதார குற்றங்களில் ஆரம்ப கட்டங்களில் பிணைவழங்கப்படலாம் என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர் கணிசமான சிறைவாசத்தை அனுபவித்திருக்காவிட்டால் கொடூரமான குற்றங்களில் பிணைபெறுவது மிகவும் கடினமாகிவிடும்.


முக்கியப் பிரச்சினைகள்


புதிய திருத்தம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 167(2)-ன் கீழ் (BNSS-ன் பிரிவு 187 உடன் தொடர்புடையது) பிணைவழங்குவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, விசாரணை 60 அல்லது 90 நாட்களுக்குள் முடிவடையாதபோது, ​​பிணைபெறத் தவறுவது குற்றம் சாட்டப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமையாகும். காவல்துறை மற்றும் நீதித்துறை காவலின் ஒட்டுமொத்த காலம் 30 நாட்களைத் தாண்டியதால், பிரிவு 75(5A)-ன் கீழ் தடை நியாயமானதாகத் தெரியவில்லை. காவலில் வைப்பது சிறைத்தண்டனை அனுபவிப்பதைப் போன்றது அல்ல, மேலும் நீதிமன்றத்தால் அவ்வப்போது நீட்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நீதிமன்றங்கள் இந்த நீட்டிப்பை 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரம்பிற்குள் இந்த நீட்டிப்புகளை வழங்குகின்றன.


PMLA : Prevention of Money Laundering Act  -பணமோசடி தடுப்புச் சட்டம் 

NDPS :  Narcotic Drugs and Psychotropic Substances - போதை மருந்துகள் மற்றும் மனநோய் 

            தூண்டும் பொருட்கள்

UAPA : Unlawful Activities (Prevention) Act -சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 


மேலும், 'தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் குற்றம்' என்ற சொற்றொடரில் PMLA (பணமோசடி), NDPS (போதைப்பொருள்) மற்றும் UAPA (சட்டவிரோத செயல்பாடு) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் புகார்களும் அடங்கும். அனைத்து சிறப்புச் சட்டங்களிலும் CrPC/BNSS-ல் இல்லாத இரட்டை பிணைநிபந்தனைகள் இருப்பதால் இது இன்னும் ஆபத்தானது. முதலாவதாக, குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும், இரண்டாவதாக, பிணையில் இருக்கும்போது அவர் எந்தக் குற்றத்தையும் செய்யமாட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும். விசாரணைக்கு மாறாக, இந்த நிபந்தனைகள் பிணைகட்டத்திலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவை பெரும்பாலும் கடுமையானவை என்று அழைக்கப்படுகின்றன. மேலும், வழக்கு விசாரணையிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதாரச் சுமையை மாற்றியமைக்கின்றன. மதுபானக் கொள்கை ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் சிசோடியா வழக்கு, ஒரு உதாரணமாகும். இது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 17 மாதங்களுக்குப் பிறகு பிணைவழங்கப்பட்டது. சிறப்புச் சட்டங்களின் கீழ் உள்ள வழக்குகளுக்கு இது பொதுவானது என்பதால், புதிய திருத்த மசோதாவில் "தொடர்ச்சியாக முப்பது நாட்கள்" வரம்பு மிகக் குறைந்த வரம்பை அமைக்கிறது. இதன் அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அது கடுமையான மற்றும் நியாயமற்ற சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.


ஒரு அமைச்சருக்கு பிணைவழங்குவதில் தடையாக இருக்கும் மற்றொரு காரணி, அவர்களின் அதிகார நிலை காரணமாக சாட்சிகளை பாதிக்கும் திறன் ஆகும். இது விசாரணை மற்றும் விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு அமைச்சர் கடினமான தேர்வை எதிர்கொள்ள நேரிடும், அதாவது பதவியில் தொடர்வதா அல்லது பிணைகோருவதா என்பது குறித்து. அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், அது பிணை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கலாம். இது திருத்தப்பட்ட விதிகளின்கீழ் பதவி நீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், அமைச்சர் இராஜினாமா செய்தால், பின்னர் பிணை வழங்கப்பட்டாலும்கூட அவர்களால் தங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாது.


பிணை வழங்குவதை நிச்சயமற்றதாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் ஆக்கும் இறுதிக் காரணி, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் சுதந்திரத்தை ஆதரிக்கும் (pro-liberty) நிலைப்பாடு அல்லது சுதந்திரத்திற்கு எதிரான (ante-liberty) நிலைப்பாடு உள்ளதா என்பதாகும். ஒரு வழக்கின் புறநிலை உண்மைகளைத் தவிர்த்துவிட்டு, இது பிணை வழங்குவதில் மிகுந்த அகநிலைத்தன்மையையும் விவேகத்தையும் ஏற்படுத்துகிறது.


ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஷிவானி விஜ் ஒரு வழக்கறிஞர்.



Original article:

Share:

சீரற்ற வளர்ச்சி : செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி தரவுகள் குறித்து . . .

 தேவையை அதிகரிக்க வருமானத்தை அதிகரிப்பதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.


செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தித் தரவு, இரண்டாவது காலாண்டு மற்றும் நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் செய்திகள் அனைத்தும் மோசமாக இல்லை. ஆனால், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. அரையாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2025-க்கு இடையில், தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production(IIP)) தரவு, தொழில்துறை வளர்ச்சி குறைந்தது ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இது வெறும் 3% மட்டுமே, இது எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு. இருப்பினும், இரண்டாவது காலாண்டில் நிலைமை மேம்படுவதைக் காட்டுகிறது. இதில், இரண்டாவது காலண்டின் (Q2) வளர்ச்சி முதல் காலாண்டின் (Q1) 2% உடன் ஒப்பிடும்போது 4.1% மிகவும் வலுவானது. இவை அனைத்திலும் உற்பத்தித் துறை முக்கிய நேர்மறையான புள்ளியாக இருந்தது. செப்டம்பரில், இது 4.8% வளர்ச்சியடைந்தது, இது இந்த நிதியாண்டில் இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சியாகும். காலாண்டு அடிப்படையில், ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் வலுவான 4.9% வளர்ச்சியைக் கண்டது, இது டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டிற்குப் பிறகு அது கண்ட வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். அரையாண்டு அடிப்படையில், இந்தத் துறையின் வளர்ச்சி முந்தைய ஆண்டின் முதல் பாதியில் 3.8%-ஆகக் குறைந்த பின்னர், ஏப்ரல்-செப்டம்பர் 2025 பாதியில் 4.1% ஆக மீண்டும் உயர்ந்தது. சுரங்கத் துறையின் செயல்பாடு செப்டம்பர் 2025, இரண்டாவது காலாண்டிலும், நிதியாண்டின் முதல் பாதியிலும் சுருங்கியது. இந்த ஆண்டு பருவமழை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், இந்த செயல்திறன் இன்னும் வழக்கத்திற்கு மாறாக மோசமாக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் உத்திநிலையான கனிமப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தத் துறையை வலுப்படுத்துவது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.


உற்பத்தித் துறையின் வலுவான செயல்திறன் வெளிப்படையாகத் தெரிவது, அதை நேரடியாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. இந்தத் தரவுகள் வளர்ச்சிக்கான பரந்த அளவில் இல்லை என்றும், இது ஒரு சில துறைகளில் குவிந்துள்ளது என்றும் காட்டுகின்றன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) அளவிடப்பட்ட 23 முக்கிய உற்பத்தி துணைத் துறைகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கின. ஆடைகள், தோல் பொருட்கள், ரப்பர் பொருட்கள் மற்றும் நெகிழிப் பொருட்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் அனைத்தும் செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கியது கவலைக்குரியது. வளர்ச்சி அடைந்த துறைகளில் மரப் பொருட்கள், கனிமப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகப் பொருட்கள் ஆகியவை அடங்கும், இவை பலவும் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்டுள்ளன. இந்தப் போக்கு தொடர்ந்தால், அது வேலை உருவாக்கத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். தரவின் மற்றொரு கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், நுகர்வோர் நீடித்து உபயோகிக்க முடியாத பொருட்கள் துறை கடந்த ஆறு தொடர்ச்சியான காலாண்டுகளாக சுருங்கியுள்ளது. இவற்றில் சில உப்பு மற்றும் உணவு எண்ணெய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் என்றாலும், மற்றவை விருப்பத்தேர்வு செலவினப் பொருட்களாகும். இதில் பெரும்பாலானவை அடிப்படை விளைவு காரணமாக இருந்தாலும், தேவை குறைவு என்பது கொள்கை வகுப்பாளர்கள் சில காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும். உண்மையான தீர்வு வருமானங்களை அதிகரிப்பதிலும் வேலைகளை உருவாக்குவதிலும் உள்ளது.



Original article:

Share:

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிகாரமளித்தல் -ஜீவன் குமார் ஜெத்தானி மற்றும் சத்ய பிரகாஷ் சௌபே

 பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பாலின விளைவு.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதைப் பொறுத்தே உள்ளது. நாட்டில் 79 சதவீதம் பெண் தொழிலாளர்கள் கிராமப்புறங்களிலேயே உள்ளனர்.


பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவு (Entrepreneurship) ஒரு முக்கியமான முன்னேற்றப் பாதையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (Micro, Small & Medium Enterprises (MSMEs)) 20 சதவீதம் பெண்களின் வசம் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற மற்றும் மிகச் சிறிய அளவிலான நிறுவனங்களாகும். பெண் தொழில்முனைவோருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட்டால், அவர்களால் 2030ஆம் ஆண்டுக்குள் 170 மில்லியன் வேலைவாய்ப்புகள் வரை உருவாக்க முடியும்.


கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூக சமத்துவத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது என்பதை அரசாங்கம் நீண்ட காலமாகவே அங்கீகரித்து வருகிறது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission (NRLM)) போன்ற முக்கியத் திட்டங்கள், உலகின் மிகப்பெரிய பெண்கள் கூட்டு அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது 10 கோடி கிராமப்புறக் குடும்பங்களை 90.9 லட்சம் சுய உதவிக் குழுக்களாக (Self-Help Groups (SHGs)) ஒன்றிணைத்து, தொழில் மற்றும் கடன் அணுகலுக்கான தளங்களை உருவாக்கியுள்ளது. 'இலட்சாதிபதி தீதி யோஜனா' (Lakhpati Didi Yojana) என்ற மற்றொரு திட்டமானது, அதிக வருமானம் தரக்கூடிய தொழில்கள் மூலம் பெண்களின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தத் திட்டங்கள் தனியாகச் செயல்படுவது இல்லை. பிற அமைச்சகங்கள் மற்றும் தனியார் துறையின் துணைக் கூட்டு முயற்சிகளை முயற்சிகளை இணைக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihood Mission (NRLM)) ஆதரவு பெற்ற நிறுவனங்களுக்கு பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Distributed Renewable Energy (DRE)) தீர்வுகளைச் சேர்ப்பது உற்பத்தித்திறன் சிக்கல்களைத் தீர்க்கவும், செலவுகளைக் குறைக்கவும், அவற்றை மேலும் நிலையானதாகவும் மாற்றும். ஊரக வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளுக்கு இடையேயான இந்தக் கூட்டு அணுகுமுறை, மீள்திறன் கொண்ட, பெண்களால் நடத்தப்படும் ஊரக நிறுவனங்களை உருவாக்க ஒரு பெரும் மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது.


பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (DRE) ஒரு சக்திவாய்ந்த தீர்வாக இருக்கலாம். அவை உழவர்களுக்கு சூரியசக்தி குளிர் சேமிப்பு அலகுகள் (solar cold storage units) முதல் சூரிய சக்தியால் இயங்கும் தறிகள் (solar-powered looms) மற்றும் நீர்ப்பாசன குழாய்கள் (irrigation pumps) வரை அவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன, பணிச்சுமையைக் குறைக்கின்றன மற்றும் புதிய சந்தைகளை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Decentralized Renewable Energy for Women’s Economic Empowerment (DEWEE)) போன்ற திட்டங்களால், உத்திரப்பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (Uttar Pradesh State Rural Livelihood Mission (UPSRLM)) வாயிலாக 1,000 பெண்கள் ஏற்கெனவே சூரிய சக்தியைப் பயன்படுத்தி தங்கள் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.


ஒடிசாவில், ரெஷம் சூத்ராவின் (Resham Sutra) சூரிய சக்தி மூலம் இயங்கும் பட்டு நூற்பு இயந்திரங்கள் (solar reeling machines) பட்டுத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன. கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் தூய்மையான ஆற்றலைக் கொண்டு தங்கள் தொழில்களை எவ்வாறு மாற்றியமைக்கிறார்கள் என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன.


தடைகளை உடைத்தல்


பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களைப்  பெருமளவில் ஏற்றுக்கொள்வதில் பெண்கள் தொடர்ந்து பல தடைகளைச் சந்தித்து வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாமை, சமூக-பண்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான நிதி ஆகியவை அடிப்படை சவால்களாக அமைகின்றன. பெண்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) கடன் இடைவெளி ₹20 முதல் 25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


வணிக மாதிரிகள் (business models), முதலீட்டைத் திரும்பப் பெறும் காலங்கள் (payback periods) மற்றும் நீண்ட கால நிதியியல் வருமானங்கள் (long-term financial returns) குறித்த போதிய புரிதல் இல்லாததால், தொழில்நுட்பங்களின் செயல்திறனை மதிப்பிடுவதில் பெண்கள் பெரும்பாலும் சிரமப்படுகின்றனர். இந்தத் தொழில்நுட்பங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய பயிற்சி இல்லாததும் அவற்றின் பயன்பாட்டிற்குத்  தடையாக உள்ளது.


கூடுதலாக, உபகரண வழங்குநர்கள் (equipment suppliers), நிதியளிப்பவர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தனித்தனி குழுக்களாகச் (silos) செயல்படுவதால், பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Distributed Renewable Energy) விநியோகச் சங்கிலிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது சந்தை இணைப்புகள் மற்றும் தேவை வழிகளை (demand channels) மட்டுப்படுத்துவதோடு, அதிகரித்த உற்பத்தியின் முழுப் பயன்பாட்டிற்குத் (underutilisation) தடையாகவும் இருக்கிறது.


பரவலாக்கப்பட்ட ஆற்றலானது (DRE) கிராமப்புற வாழ்வாதாரங்களை மறுவரையறை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கும் ஆற்றல் மாற்றத்திற்கும் உந்துசக்தியாக மாறும் மீள்தன்மை கொண்ட தொழில்முனைவோராகப்  பெண்களை மாற்றும். இதற்கு அரசாங்கத் திட்டங்கள் (Government programmes), தனியார் கூட்டாண்மைகள் (Private partnerships) மற்றும் தொண்டு நிறுவன ஆதரவு (Philanthropic support) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை.  இந்தக் கூட்டு முயற்சி பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொழில்சார்ந்த உறவுகளையும் பலப்படுத்தும். பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (DEWEE) போன்ற திட்டங்கள், களத்தில் எப்படி செயல்படுகின்றன என்பதை ஏற்கனவே நிரூபித்து வருகின்றன.


இந்தியா இன்று பெண்களை மையமாகக் கொண்ட எரிசக்தி அமைப்புகளில் முதலீடு செய்தால், அது மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள் வளரவும், சமூகங்களை மேம்படுத்தவும், நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும்.


ஜெத்தானி, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy (MNRE), Government of India) மூத்த இயக்குநர் மற்றும் விஞ்ஞானி (Scientist-F) ஆவார்; சௌபே, Demand, Jobs & Livelihood, Global Energy Alliance for People and Planet அமைப்பின் இயக்குநர் ஆவார்.



Original article:

Share:

உலகளாவிய கப்பல் துறையின் பசுமை மாற்றத்தை வழிநடத்தும் இந்தியாவின் லட்சியம் வலுவான அடித்தளத்தில் உள்ளது. -சர்பானந்தா சோனோவால்

 இந்தியாவில் குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகள், வலுவான பொறியியல் நிபுணத்துவம் மற்றும் பயிற்சி பெற்ற கடற்படையினரின் பெரிய குழு உள்ளது. இந்த பலங்கள் நாட்டை பெரிய அளவில் வேலை செய்யும் திறன் கொண்டதாக ஆக்குகின்றன. மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை வடிவமைக்கவும் இந்தியா தயாராக உள்ளது.


உலகப் பெருங்கடல்களில் ஒரு அமைதியான புரட்சி நடந்து வருகிறது. ஒரு காலத்தில் எரிசக்தி மாற்றத்தில் பின்தங்கியிருந்த கப்பல் துறை இப்போது ஒரு திருப்புமுனையில் உள்ளது. காலநிலை நடவடிக்கை அவசரமாகி வருவதால், உமிழ்வு விதிகள் கடுமையாகி வருகின்றன. அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் பூஜ்ஜிய கார்பன் கப்பல்கள் மற்றும் எரிபொருட்களை நோக்கி மூலதனத்தை மாற்றுகிறார்கள். மேலும், தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது. இந்த மாறிவரும் உலகளாவிய சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட திறன்களால் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.


புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்க அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளது. இதன் காரணமாக உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகள் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சியுடன் (Make in India initiative) வளர்ந்து வரும் மற்றும் மீள்தன்மை கொண்ட தொழில்துறை அடித்தளம், மற்றும் மிகவும் பரபரப்பான கிழக்கு-மேற்கு வர்த்தக பாதையில் துறைமுகங்களை நவீனமயமாக்குதல், இயந்திரமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றுக்கான முயற்சிகள் இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான நன்மையை வழங்கியுள்ளன. உலகளாவிய பசுமை கடல்சார் மாற்றத்தில் நமது கடல்சார் துறை அர்த்தமுள்ள வகையில் சேர முடியுமா என்று ஊகிப்பதில் இருந்து, அதை தீர்க்கமாக வழிநடத்த முடியுமா என்று கேட்பதற்கு நாம் நகர்ந்துள்ளோம்.


ஒரு துணிச்சலான முதலீடு


இந்தியாவின் கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை மறுகற்பனை செய்யவும், புதுப்பிக்கவும், புத்துயிர் பெறவும் மோடி அரசாங்கம் சமீபத்தில் ரூ.69,725 கோடி ($8 பில்லியன்) மதிப்பிலான தொகுப்புக்கு ஒப்புதல் அளித்ததில் அந்த தலைமைத்துவ நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு சாதாரண பட்ஜெட் ஒதுக்கீடு மட்டுமல்ல, மாறாக லட்சியத்தின் குறியீடாகும். இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்வதன் மூலம், குறைந்த கார்பன் கப்பல் போக்குவரத்தை நோக்கிய உலகளாவிய நகர்வில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது என்பதை மோடி அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா ஒரு பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கடல்சார் மறுமலர்ச்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு காலத்தில் இந்தியாவின் வர்த்தக பாரம்பரியத்தை வடிவமைத்த கடல்சார் நிறுவனத்தின் பழைய உணர்வை மீண்டும் கொண்டுவருகிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தடையின்றி ஒத்துப்போகிறது. இது, உலகளாவிய வர்த்தக பாதைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும், அவற்றுக்கு சேவை செய்யும் ஒரு நம்பிக்கையான, திறமையான நாடாக உள்ளது.


உலகளாவிய அலை மாறி வருகிறது


சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation (IMO)) 2050-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நோக்கி ஒரு தெளிவான பாதையை நிர்ணயித்துள்ளது. ஐரோப்பா ஏற்கனவே வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் கார்பன் சந்தை இப்போது கப்பல்கள் அவற்றின் உமிழ்வுகளுக்கு பணம் செலுத்த வைக்கிறது, மேலும், FuelEU கடல்சார் விதிகள் ஒவ்வொரு ஆண்டும் எரிபொருள் தரநிலைகளை கடுமையாக்குகின்றன.


FuelEU :  FuelEU என்பது, கப்பல்கள் வெளியிடும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த ஒரு சட்டம்


செய்தி தெளிவாக உள்ளது. பசுமை அம்மோனியா மற்றும் மெத்தனால் போன்ற மாற்று எரிபொருள்கள் சோதனை நிலைகளிலிருந்து உண்மையான கொள்முதல்களுக்கு நகர்கின்றன. அரசாங்கக் கொள்கைகள் சந்தையை வடிவமைக்கத் தொடங்கும் நிலை இதுதான். இது பின்னர் உந்துதலை உருவாக்குகிறது. இந்தியா முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை, குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செலவுகள், வலுவான பொறியியல் திறன்கள் மற்றும் பயிற்சி பெற்ற கடற்படையினர் போன்றவைகளை உள்ளடக்கும். இந்த பலங்கள் இந்தியா இந்த உலகளாவிய உந்துதலை கடல்சார் சந்தையின் குறிப்பிடத்தக்க பங்காக மாற்ற உதவும்.


இந்திய சூரிய சக்தி கழகம் (Solar Energy Corporation of India (SECI)) நிர்ணயித்த இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின் கட்டணங்கள் உலகளவில் மிகக் குறைவானவை. இது, ஒரு கிலோவாட் மணிக்கு சுமார் ரூ.2 ஆகும். இது பசுமை எரிபொருட்களை போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. பசுமை அம்மோனியாவிற்கான சமீபத்திய ஏலங்கள் கிலோவிற்கு சுமார் ரூ.52 ஆக உள்ளன. இதனால், இந்திய உற்பத்தி செலவுகள் டன்னுக்கு $650 க்கும் குறைவாக செலவாகிறது. இது பல முக்கிய ஏற்றுமதி மையங்களை விட மலிவானது.


இந்த விலையின் நன்மை உண்மையானது. ஆசிய கப்பல் நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய வாங்குபவர்கள் ஏற்கனவே ஒரு டன்னுக்கு $550–$1,000 வரை விலையில் நீண்ட கால ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தியா பெரிய அளவில் விநியோகிக்கத் தயாராக உள்ளது.


நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பும் சமமாக முக்கியமானது. ஒரு காலத்தில் எண்ணெய் மற்றும் பெட்ரோ இராசாயனத் தொழில்களை ஆதரித்த கனரக பொறியியல் துறை இப்போது பசுமை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறி வருகிறது. இது பதுங்கு குழிகள் (bunkering skids), இரட்டை-எரிபொருள் இயந்திரங்கள் (dual-fuel engines) மற்றும் சுத்தமான எரிபொருட்களுக்கான சேமிப்பு அமைப்புகளை (storage systems for clean fuels) உருவாக்கி வருகிறது. இந்தியாவின் புவியியல் இந்த நன்மையை அதிகரிக்கிறது. இரு கடற்கரைகளிலும் உள்ள துறைமுகங்கள் முக்கிய உலகளாவிய வர்த்தக பாதைகளில் அமைந்துள்ளன. மேலும், நமது கடற்படையினர் புதிய எரிபொருட்களுக்கான கிரையோஜெனிக் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளைக் கையாள விரைவாக திறமையானவர்களாக இருக்க முடியும். இந்தியா அடுத்த தலைமுறை கடல்சார் எரிபொருட்களை பெரும்பாலானவற்றை விட வேகமாகவும் மலிவுடனும் உற்பத்தி செய்ய, கையாள மற்றும் ஏற்றுமதி செய்ய முடியும்.


தொலைநோக்கிலிருந்து வங்கிச் சேவை தேவை வரை


இருப்பினும், லட்சியம் மட்டுமே மூலதனத்தை ஈர்க்க முடியாது. வங்கிச் சேவைத் திட்டங்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும். அதனால்தான், அதன் நோக்கத்தை முதலீடு செய்யக்கூடிய தேவையாக மாற்றுவது அடுத்த நிலையாக உள்ளது.


இந்திய துறைமுக சங்கம் (Indian Ports Association (IPA)) மற்றும் RMI, பசுமைக்கான நுழைவாயில் (Gateway to Green) ஆகியவற்றின் கூட்டு ஆய்வில், பசுமை எரிபொருள் மையங்களுக்கான ஆரம்ப முதலீடாக தீன்தயாள், வ.உ.சிதம்பரனார் (VOC) மற்றும் பாரதீப் துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களிடம் ஏற்கனவே நிலம், வரைவு மற்றும் குழாய் ஆற்றல் உள்ளது. சேமிப்பு, மின் கட்ட மேம்பாடுகள் மற்றும் பல எரிபொருள் முனையங்களில் கவனம் செலுத்தும் முதலீடுகளுடன், அவை விரைவில் பசுமைக்கு ஏற்றாதாக மாறும்.


அடுத்த கட்டநிலை தேவையை உருவாக்குவதாகும். காண்ட்லா முதல் வ.உ.சிதம்பரனார் வரையிலான உள்நாட்டு பசுமை கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் இந்தியாவை சிங்கப்பூர் மற்றும் ரோட்டர்டாமுடன் இணைக்கும் சர்வதேச வழித்தடங்கள் எரிபொருள் தேவைகளை ஒருங்கிணைத்து, கணிக்கக்கூடிய செயல்திறனை உருவாக்க முடியும். விநியோகம் கட்டமைக்கப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் போது, ​​நிதி எளிதாகிறது. கப்பல் உரிமையாளர்கள் பின்னர் கடற்படை மாற்றங்களைத் திட்டமிடலாம். சரக்கு உரிமையாளர்கள் நீண்ட கால சாசன ஒப்பந்தங்களில் நுழையலாம். மேலும், கடன் வழங்குபவர்கள் நம்பிக்கையுடன் ஆபத்தை மதிப்பிடலாம். உலகளாவிய குறைந்த கார்பன் கடல்சார் பொருளாதாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத முனையாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது.


நம்பிக்கையை உருவாக்குதல், மதிப்பை உருவாக்குதல்


அமைச்சகத்தின் முக்கிய கவனம் இப்போது நம்பகத்தன்மையை வளர்ப்பதில் உள்ளது. முன்னோடி வழித்தடங்கள், மேம்படுத்தப்பட்ட துறைமுகங்கள் மற்றும் தெளிவான செயல்திறன் இலக்குகள் போன்ற ஆரம்பகால சாதனைகள் பசுமை கப்பல் போக்குவரத்து என்பது ஒரு சோதனை மட்டுமல்ல என்பதைக் காட்டும். இது ஒரு பொருளாதார முன்னேற்றம். காணக்கூடிய வெற்றி முதலீட்டாளர் நம்பிக்கையை ஈர்க்கும். இது எதிர்கால விதிமுறைகளையும் வழிநடத்தும் மற்றும் பிற முக்கிய துறைமுகங்கள் பின்பற்ற ஒரு மாதிரியாக செயல்படும்.


பொருளாதாரக் காரணிகளும் சமமாக வலுவாக உள்ளன. வளர்ந்து வரும் சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization (IMO)) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) தரநிலைகளுடன் இணங்குவது ஏற்றுமதி சந்தை அணுகலைப் பாதுகாக்கிறது மற்றும் எதிர்கால கார்பன் அபராதங்களிலிருந்து இந்தியத் தொழில்களைப் பாதுகாக்கிறது. இயந்திரங்கள், சேமிப்பு தொட்டிகள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளின் உள்நாட்டு உற்பத்தி திறமையான வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் கடலோர மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும். முழுமையான பசுமையான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பு துறைமுகங்களுக்கு தொடர்ச்சியான சேவை வருவாயை உருவாக்கும். அதே நேரத்தில், இது சரக்கு உமிழ்வைக் குறைக்கும். இது கார்பன் விதிகளால் வரையறுக்கப்பட்ட உலகில் ஒரு முக்கிய நன்மையாகும்.


ஒவ்வொரு உலகளாவிய மாற்றமும் முன்னிலை வகிக்க அல்லது பின்தங்க ஒரு குறுகிய வாய்ப்பை மட்டுமே வழங்குகிறது. கார்பன் விலைகள் அதிகரித்து இணக்க விதிகள் கடுமையாகும்போது, கப்பல்கள் தூய எரிபொருள்கள் மற்றும் திறமையான சேவைகளை வழங்கும் துறைமுகங்களைத் தேர்ந்தெடுக்கும். விரைவாகச் செயல்படுபவர்கள் புதிய வர்த்தக புவியியலை வடிவமைப்பார்கள். தாமதப்படுத்துபவர்கள் அதைச் சமாளிக்க அதிக செலவுகளைச் செலுத்த வேண்டியிருக்கும்.


இந்தியாவின் 8 பில்லியன் டாலர் உறுதிமொழி என்பது வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், அதை வடிவமைக்கவும் இந்தியா இலக்கு வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை, பிரதமர் நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டுக்குள் ”வளர்ந்த இந்தியா” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு நாட்டை தீவிரமாக நகர்த்துகிறது. பசுமை கடல்சார் பொருளாதாரத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல், பொற்காலத்தின் போது தொடங்கப்பட்ட முயற்சிகள் மூலம் அதை வழிநடத்தவும் இந்தியாவின் தயார்நிலையைக் காட்டுகிறது.


கட்டுரையாளர் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஆவார்.



Original article:

Share: