மொரீஷியஸின் அகலேகாவில் இந்தியா கட்டிய விமான ஓடுபாதை திறக்கப்பட்டது: மாலத்தீவு மற்றும் சீனாவுக்கு எதிராக அதன் ராஜதந்திர முக்கியத்துவம் - சுபாஜித் ராய்

 இந்தியப் பெருங்கடலில் இந்தியா குறிப்பிடத்தக்க ராஜதந்திர நலன்களைக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் தீவு நாடுகளுடன் புதுடெல்லி நல்லுறவைப் பேண வேண்டும். அதே நேரத்தில், தனது ராஜதந்திர நலன்களையும் கவனிக்க வேண்டும்.


பிப்ரவரி 29, வியாழக்கிழமை, மொரீஷியஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் கூட்டாக ஒரு விமான ஓடுதளம் மற்றும் ஒரு படகுத்துறையை திறந்து வைத்தனர். இவற்றை, இந்தியா மொரீசியசின் அகலேகாவில் (Agalega) கட்டியது.  இது போர்ட் லூயிஸுக்கு வடக்கே 1,100 கிமீ தொலைவிலும், மாலேவிலிருந்து தென்மேற்கே 2,500 கிமீ தொலைவிலும் உள்ளது.


இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு மொரீஷியஸும் மாலத்தீவும் முக்கியமானவை. ஏனென்றால் இந்த இடங்கள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்கு முக்கியமானவை. இந்திய பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்க்கு அவை முக்கியமானவை. ஏனென்றால் இந்த பிராந்தியத்தில் சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


முகமது முய்சு (Mohamed Muizzu) நவம்பர் 2023 இல் மாலத்தீவின் ஜனாதிபதியானார். அவர் சீனாவின் ஆதரவானவராக பார்க்கப்படுகிறார். அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே, இந்திய இராணுவ வீரர்களை மாலத்தீவிலிருந்து வெளியேறுமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார். அதிபர் தேர்தலில்  "இந்தியாவை வெளியேற்றுவோம்" (India Out) பிரச்சாரத்தை அவர் வெற்றிக்கு பயன்படுத்தினார்.


திங்கள்கிழமை மாலை, மாலத்தீவுகளின் பாதுகாப்பு அமைச்சகம்,  நாட்டின் தெற்கே உள்ள அட்டூவில் ஹெலிகாப்டரை இயக்குவதற்கு, இந்தியாவின் முதல் தொழில்நுட்பக் குழு வந்துவிட்டதாக அறிவித்தது.  பிப்ரவரி 2 அன்று, மாலத்தீவில் இருந்து சுமார் 80 ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெறுவதாக இந்தியாவும் மாலத்தீவுகளும் ஒப்புக்கொண்டன.  

 

மாலத்தீவில் உள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் "தற்போதைய பணியாளர்களுக்கு" பதிலாக "திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்களால்" இயக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

        


மொரீஷியஸ் வழக்கு


மார்ச் 2015 இல், பிரதமர் மோடியின் மொரீஷியஸ் பயணத்தின் போது, அகலேகா தீவில் கடல் மற்றும் விமான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.   


மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் பிரதமர் மோடி மற்றும் அப்போதைய பிரதமர் அனிரூத் ஜக்நாத் (Mauritius Anerood Jugnauth) ஆகியோருடன் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மொரீஷியஸ் தீவில் சிறந்த கடல் மற்றும் விமான இணைப்புக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த முயற்சி தொலைதூரத் தீவின் மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் வெளித் தீவில் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மொரீஷியஸ் பாதுகாப்புப் படைகளின் திறன்களை வலுப்படுத்தும் உதவும்.


புதிய விமான ஓடுபாதை மற்றும் படகுத்துறையை திறந்து வைத்த பிரதமர் ஜுக்நாத், தீவின் விமான ஓடுதளத்தை மேம்படுத்த 2003 ஆம் ஆண்டு முதல் 70 சதுர கிமீ தீவில் விமான ஓடுபாதையை மேம்படுத்த பல முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை பிரதமர் ஜுக்நாத் நினைவு கூர்ந்தார். மொரீஷியஸுக்கு உதவுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பாராட்டிய அவர், இந்தியாவைப் பற்றி சில தனிநபர்கள் தெரிவித்த எதிர்மறையான கருத்துக்களை விமர்சித்தார்.


2015 மார்ச்சில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மொரீஷியஸின் வளர்ச்சி இலக்குகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் ஜுக்னவுத் வலியுறுத்தினார். சிலர் தவறான கூற்றுக்களை முன்வைத்த போதிலும், மொரீஷியஸ் அகலேகா மீதான தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்கவோ அல்லது அகலேகாவை ஒரு இராணுவ தளமாக மாற்றவோ ஒருபோதும் விரும்பவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.


2.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மொரீஷியஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை திறம்பட கண்காணிப்பதில் இந்தியாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் ஜுக்னவுத் எடுத்துரைத்தார். இந்த ஒத்துழைப்பு கடற்கொள்ளை, பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல், அத்துடன் சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.


இந்தியப் பெருங்கடலில் சீனா


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை சீனா மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது. கடல்சார் பாதுகாப்பு ஆய்வாளரான தர்ஷனா எம் பருவா (Darshana M Baruah) ஏப்ரல் 2023 இல் இதைக் கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவிடம் இது குறித்து அவர் பேசினார். சீனாவின் கச்சா எண்ணெய் சப்ளையர்களில் பெரும்பாலோர் இந்தியப் பெருங்கடலைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் விளக்கினார். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தீவு நாடுகள் மற்றும் கடலோர நாடுகளுடனான சீனாவின் நடவடிக்கைகளுக்கும் இந்தியப் பெருங்கடல் முக்கியமானது.


இந்தியப் பெருங்கடல் "சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையாகும்" என்றும், "வரலாறு நமக்குச் சொல்லும் விதமாக, கொடி வர்த்தகத்தைப் பின்பற்றுகிறது" என்றும் பருவா கூறினார். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆர்வம் மட்டுமே வளரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, ”என்று அவர் கூறினார்.


இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆறு தீவு நாடுகளில் ஒவ்வொன்றிலும் சீனாவுக்கு ஒரு தூதரகம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த நாடுகள் இலங்கை, மாலத்தீவுகள், மொரிஷியஸ், சீஷெல்ஸ், மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அல்லது பிரான்ஸ் போன்ற பாரம்பரிய நாடுகள் எதுவும் இந்த அளவிலான இராஜதந்திர இருப்பைக் கொண்டிருக்கவில்லை. சீனாவின் இராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அது இப்பகுதியில் ஒரு இராணுவ முகாமை நிறுவத் தொடங்கியுள்ளது.


2017 ஆம் ஆண்டில், சீனா தனது எல்லைக்கு வெளியே ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) பகுதியில் அமைந்துள்ள ஜிபூட்டியில் தனது முதல் இராணுவ தளத்தை அமைத்தது. இந்தியப் பெருங்கடலில் சீனா மற்றொரு இராணுவ தளத்தை அமைக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான், மியான்மர் அல்லது இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதி ஆகியவை அதற்க்கு சாத்தியமான இடங்கள் ஆகும்.


இந்த தீவு நாடுகளின் அரசாங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. இந்த நாடுகளின் உள்நாட்டு அரசியல் அவற்றின் வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா தனது இராஜதந்திர உறவுகளை கவனமாக நிர்வகிக்க வேண்டும், அதே நேரத்தில் இப்பகுதியில் தனது இராஜதந்திர இலக்குகளையும் தொடர வேண்டும்.


மொரிஷியஸில் உள்ள ஜுக்நாத் தலைமையிலான அரசாங்கம், மாலத்தீவில் உள்ள சோலி அரசாங்கத்தை விட இந்தியாவின் இருப்பு குறித்த உள்நாட்டு விமர்சனங்களை மிகவும் திறம்பட நிர்வகித்துள்ளது.


மாலேயின் முன்னேற்றங்களை புது தில்லி உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அப்துல்லா ஷாஹித் சனிக்கிழமை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த நேர்கானலில். மாலத்தீவில் உள்ள "ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள்" குறித்து ஜனாதிபதி முய்சுவின் விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார். ஷாஹித் இந்த கூற்றுகளை ஒரு தொடர் பொய் என்று அழைத்தார். ஆயுதம் ஏந்திய வெளிநாட்டுப் படையினர் எவரும் நாட்டில் நிலைநிறுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




Original article:

Share:

கசியும் வினாத்தாள்கள் மற்றும் மோசடிகள் : இந்தியாவின் தேர்வுகளை எவ்வாறு சரிசெய்வது? - ஆர்.சுப்பிரமணியம், அர்ஜோமா மௌலிக்

 தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால், அவை ஊடுருவலுக்கு (hacking) ஆளாக நேரிடும். மோசடியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு நல்ல வழி, தேர்வின் முக்கியத்துவத்தை குறைப்பதாகும். அந்த, தேர்வானது முதன்மையான அடிப்படையாக இருந்து அவற்றை வெறும் தகுதித் தேர்வுகளாக மாற்ற முடியுமா? 


அனைத்து மத்திய அரசு ஆட்சேர்ப்பு முகமைகள் (central government recruitment agencies) மற்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) மூலம் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வுகளை இந்த சட்டம் உள்ளடக்கியது.

 

பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு மசோதா (Public Examinations Prevention of Unfair Means Bill) 2024 குறித்து நாடாளுமன்றம் விவாதித்தபோது, உத்தரபிரதேசத்தில் காவலர் ஆட்சேர்ப்புக்காக மற்றொரு வினாத்தாள் கசிவு நிகழ்வு நடைபெற்றது. இந்த கசிவுகள் தேர்வு முறையில் உள்ள சிக்கல்களைக் காட்டுகின்றன மற்றும் கடினமாக உழைக்கும் இளைஞர்களை விரக்தியடையச் செய்கின்றன. பிப்ரவரி 12 ஆம் தேதி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகள் தடுப்புச் சட்டம், 2024 (Public Examinations Prevention of Unfair Means Act) இன் படி, மோசடி செய்பவர்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது. மேலும் தேர்வுகளை நடத்தும் சேவை வழங்குநர்களுக்கு (service providers) ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். 


அனைத்து மத்திய அரசு ஆட்சேர்ப்பு முகமைகள் (central government recruitment agencies) மற்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) மூலம் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்த சட்டம் பொருந்தும். இது வேலைக்கான தேர்வுகள் மட்டுமல்ல, JEE/NEET போன்ற குறிப்பிடத்தக்க கல்வி நுழைவுகளையும் உள்ளடக்கியது.  

அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதற்கான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. தேர்வு மோசடியில் உள்ளவருக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாகுமா? குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே தேர்வு சம்மந்தமான மோசடிக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்களின் கீழ் எந்த தண்டனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலான வழக்குகளில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

 

ஒரு நல்ல தேர்வானது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். நம்பகத்தன்மை (Reliability) அதாவது, அதே செயல்திறனுக்கான நிலையான முடிவுகள், செல்லுபடியாகும் தன்மையானது (validity) அதன் தேர்வுக்கான நோக்கம் கொண்ட உள்ளடக்கத்தை அளவிடுதல், புறநிலை மதிப்பீட்டில் அகநிலையை நீக்குதல் (objectivity), தெளிவு மற்றும் விரிவான தன்மை (clarity and comprehensiveness) ஆகியவை ஆகும். வினாத்தாள் உருவாக்குதல், அவற்றிற்கு ரகசியம் காத்தல், தேர்வு மையங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் மதிப்பீடு/அட்டவணை உள்ளிட்ட தேர்வு செயல்முறைகள், மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல தேர்வு நடத்தும் அதிகாரிகள் இந்த செயல்முறைகளை சமரசம் செய்துகொள்கின்றனர். இதனால், நியாயமற்ற நடைமுறைகளுக்கு வழிவகுப்பதுடன், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். இதனால்  தவறிழைத்தவர்கள் விளைவுகளைச் சந்திக்காமல் தப்பித்துவிடுகிறார்கள்.  


மிகவும் அறிவியல் பூர்வமான தேர்வு முறைக்கு ஒரு தொழில்முறை தேர்வு நடத்தும் அமைப்பை (professional exam-conducting body) நிறுவுவதற்கான எங்கள் வாதத்தின் அடிப்படையில் தேசிய சோதனை முகமை (National Testing Agency (NTA)) அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தேர்வுகளை மிகவும் அறிவியல் பூர்வமாகவும், நம்பகமானதாகவும், தொழில் ரீதியாகவும் நடத்துவதற்கான பயணத்தின் ஆரம்பப் படியை தேசிய சோதனை முகமை (NTA) குறிக்கிறது. இந்த பயணம் விரிவானது மற்றும் நிலையான முயற்சிகள் தேவைப்படுகிறது.


தேர்வுகளை நடத்துவது, குறிப்பாக அரசாங்க வேலைகள் மீதான குறிப்பிடத்தக்க மதிப்பு காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது. வினாத்தாள்களை உருவாக்குவது, அவற்றை அச்சிடுவது மற்றும் கொண்டு செல்வது, அத்துடன் விடைத்தாள்களைக் கையாள்வது அனைத்திலும் பல சிக்கல்கள் உள்ளன. இந்த செயல்முறைகள் எதுவும் அறிவுள்ள எந்த நிறுவனத்தாலும் தணிக்கை செய்யப்படவில்லை. இதனால், இது மேலும் சவால்களை முன்வைக்கிறது.  


தேர்வுகளை ஆன்லைன் தேர்வுகளாக மாற்றுவது அச்சிடுதல் மற்றும் விநியோகம் மூலம் மோசடி செய்வது போன்ற காகிதத் தேர்வுகளில் உள்ள சிக்கல்களுக்கு ஒரு தீர்வாகக் காணப்பட்டது. ஆனால் இது இன்னும் புதிய சவால்களைக் கொண்டுள்ளது. அதிகாரிகள் இப்போது ஆன்லைன் தேர்வுகளுக்கு சேவை வழங்குநர்களை (service providers) நியமிப்பதுடன், அவர்களின் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். ஆனால் அது முழுமையாக சோதிக்கப்படவில்லை. இந்த அமைப்புகளை சரிபார்க்க அரசாங்கத்திடம் போதிய நிபுணத்துவம் இல்லை. இதனால் அவை ஊடுருவலால் (hacking) பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தேர்வுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வரை, அவை ஊடுருவலால் (hacking) ஆளாக நேரிடும். அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பது ஒரு தீர்வாக இருக்கலாம். தேர்வுக்கான முக்கிய காரணியாக இருப்பதற்குப் பதிலாக, தேர்வுகள் தகுதித் தேர்வுகளாக இருக்கலாம். உதாரணமாக, சிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தேர்வு மதிப்பெண்களை மற்ற காரணிகளுடன் கருத்தில் கொள்கின்றன. வேலைக்கான தேர்வுகள் காலப்போக்கில் கல்வி மற்றும் கல்வி சாரா சாதனைகளையும் உள்ளடக்கியிருக்கலாம். இது ஒரு தேர்வை நம்பியிருப்பதைக் குறைக்கும்.


முறையான மோசடி மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கிறது. அனைத்து வகையான தேர்வு குற்றங்களையும் விசாரிக்கவும், குற்றவாளிகளை உடனடியாக நீதியின் முன் நிறுத்தவும் அதிகாரம் கொண்ட ஒரு பிரத்யேக விசாரணை நிறுவனத்தை நிறுவ வேண்டிய நேரம் இது. நியாயமான மற்றும் நம்பகமான தேர்வுகளுக்கான தேடலில், முக்கியமானது நியாயம் மட்டுமல்ல, வலுவான, குற்றமற்ற மற்றும் ஆக்கபூர்வமான அமைப்பாகும். 


சுப்பிரமணியம் இந்திய அரசின் முன்னாள் கல்வித்துறை செயலாளர். மௌலிக் ஒரு CRISP ஆய்வறிஞர்.




Original article:

Share:

தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த உச்சநீதிமன்றம் எவ்வாறு உதவியுள்ளது ? -சஞ்சய் குமார், கார்த்திகே சிங்

 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை (Electoral bonds scheme) 'அரசியலமைப்பிற்கு விரோதமானது' (unconstitutional) என்று ரத்து செய்ததன் மூலம்,  இந்திய உச்சநீதிமன்றம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.


தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பானது குறிப்பிடத்தக்கது மற்றும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஏனெனில் இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் நோக்கத்தை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association of Democratic Reforms (ADR)) vs இந்திய ஒன்றியம் (Union Of India) வழக்கில், ஒன்றிய அரசினால்  2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இது அரசியலமைப்பின் 19(1) (ஏ) பிரிவின் கீழ் வாக்காளர்களின் தகவலுக்கான உரிமையை மீறுவதாகக் கூறப்பட்டது. குறிப்பிடப்படாத அரசியல் நன்கொடைகளை அனுமதிக்கும் வகையில் வருமான வரிச் சட்டம் (Income Tax Act) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People Act) செய்யப்பட்ட மாற்றங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. 


பல காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற வரலாற்றில் இந்தத் தீர்ப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முழுவதுமாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த, ஒவ்வொரு அரசாங்க வாதத்தையும் நிராகரிக்கும் கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்த ஒரு அரிய நிகழ்வாக இதை பார்க்கிறது. அரசியலமைப்பின் உறுப்பு 19(1) (அ) இன் கீழ் தகவலுக்கான உரிமையின் நோக்கத்தை இது விரிவுபடுத்தியது என்பது மிகவும் மேம்பட்ட காரணமாகும். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "வாக்களிக்கும் தேர்வை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் நிதியுதவி பற்றிய தகவல் அவசியம்" என்று சரியாக வலியுறுத்தினார்.


உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசியல் நிதி ஆதாரங்களை வெளிப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மறைத்தலுக்கு எதிரான  ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும்.  இது ஊழலை வளர்க்கிறது மற்றும் ஆளும் கட்சியுடன் ஒரு ‘ஓர் ஆதரவிற்கு ஓர் உதவி’ (quid pro quo) எனும் கலாச்சாரத்தை வளர்க்கிறது. குறைந்த வளங்களைக் கொண்ட நன்கொடையாளர்களுக்கு மாறாக, பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் அரசியல் பங்களிப்புகள்,  கொள்கை உருவாக்கம் மற்றும் உரிமம் ஒதுக்கீடு ஆகியவற்றில் அரசாங்க முடிவுகளை பாதிக்க அனுமதிக்கிறது. தகவல் பெறும் உரிமை மற்றும் தகவல் தனியுரிமைக்கான நன்கொடையாளரின் உரிமை (donor’s right to informational privacy) ஆகிய இரண்டு அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான மோதலை நிவர்த்தி செய்வதற்கான விகிதாசாரத் தரத்தை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. முக்கியமாக, கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அதன் இலக்குக்கு குறைந்தபட்ச கட்டுப்பாடு நடவடிக்கையைப் பயன்படுத்தவில்லை என்றும், அடிப்படை உரிமைகளை மீறுவது நியாயமற்றது என்றும் கூறியது. கடந்த காலங்களில், இத்தகைய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒற்றை மற்றும் இரட்டை விகிதாச்சார தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நீதிமன்றங்கள் கூட்டு அல்லது பொது நலன் கோட்பாட்டைப் பயன்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் அரசியலமைப்பைப் பார்க்கும்போது, நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதில் நியாயமான அம்சங்களை வெளிப்படுத்துகிறது. 1975 ஆம் ஆண்டில் இந்திரா நேரு காந்தி vs ராஜ் நரேன் (1975) (Indira Nehru Gandhi vs Raj Narain) வழக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டியது. அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையமும், அதன் முகமைகளும், வேட்பாளர்களும், முறையான வாக்குப்பதிவை உறுதிசெய்வதற்குப் பொறுப்பான பிரத்யேக "பொறுப்பாளர்களாக" கருதப்பட்டனர். வாக்குப்பதிவு நாளில் நியாயமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதிலும், தேர்தல் சர்ச்சைகளுக்குப் பிறகு நியாயமான தீர்ப்பை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. சட்ட உத்தரவுகளின்படி ஒழுங்குமுறையின் நோக்கம் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் சட்டப்பூர்வ சட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக கருதப்படவில்லை. பின்னர், 1990களில் மாதிரி நடத்தை விதிமுறை (Model Code of Conduct (MCC)) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் அரசியல் கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் ஏதேனும் தவறு செய்தால் சிக்கலில் சிக்கக்கூடும். கடந்த 20 ஆண்டுகளில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association of Democratic Reforms (ADR)) vs இந்திய ஒன்றியம் (Union Of India (Uoi)) 2002-ல் நடந்த நீதிமன்ற தீர்ப்புகள் நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய நீதிமன்றங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளன. மாதிரி நடத்தை விதிமுறையின் போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட, தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய வேட்பாளர்களின் பணம் மற்றும் குற்றப் பதிவுகளைப் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. வேட்பாளர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது. இது பணம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பதை உறுதி செய்வது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதாகும்.


தேர்தல் பத்திரங்கள் வழக்கில், உச்ச நீதிமன்றம் "சட்டத்தின் அடிப்படையான இருவேறுபாட்டை" எடுத்துக்காட்டியுள்ளது. இது ஒவ்வொரு வேட்பாளருக்கும், குறிப்பிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி90ன் கீழ் தேர்தல் செலவினத்தின் சில வரம்புடன் தொடர்புடையது. இது, சட்டத்தில் ஒரு முக்கிய மோசடியை முன்னிலைப்படுத்தியது. ஒரு வேட்பாளர் தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதற்கு இது ஒரு வரம்பை அமைக்கிறது ஆனால் வேட்பாளர் பெற்ற நன்கொடைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனக் குறிப்பிடுகிறது. அரசியல் கட்சிகளின் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டாலும், பிரச்சாரத்தின் போது அவற்றின் செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. தேர்தல் வெற்றிகளைப் பாதுகாக்க நேர்மையற்ற முறைகள் பயன்படுத்தப்படலாம் என்பதால், அரசியல்வாதிகள் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தும் பணம் முக்கியமான தகவல். நீதிபதி கண்ணா வலியுறுத்தியபடி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களிடமிருந்து கணிசமான நன்கொடைகள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படையாக கண்காணிக்கப்பட வேண்டும்.  

  

போக்குவரத்து, சமூக ஊடக மேலாண்மை, பேரணி செலவுகள், பிரச்சார மேலாளர்களை பணியமர்த்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்தல் செலவினங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கோருவது பொறுப்பான செலவினங்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிராகவும் செயல்படும். இதில் பணம் மற்றும் இலவசங்கள் விநியோகம், முக்கிய ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா (Cambridge Analytica) போன்ற முகமைகள் தவறான தகவல் மூலம் தேர்தல் தேர்வுகளை கையாளும் வகையில் சமூக ஊடக வழிமுறைகளை தவறாக பயன்படுத்துவதை உள்ளடக்கியது.


இந்த குறிப்பிடத்தக்க தீர்ப்பு, செல்லுபடியாகும் தேர்தல் மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டுவதன் மூலமும், சட்டமியற்றுபவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதன் மூலமும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் அரசியலமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கிறது. இது வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தல்களின் சட்டப்பூர்வ புரிதலுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளைச் சேர்க்கிறது, விதிவிலக்கான தெளிவைக் கொண்டுவருகிறது. ஒட்டுமொத்தமாக, இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது. 


குமார் டெல்லியில் உள்ள வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் (Centre for the Study of Developing Societies (CSDS)) பேராசிரியராக உள்ளார்.  

சிங் மற்றும் சச்தேவா பாட்டியாலாவில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் (Rajiv Gandhi National University of Law (RGNUL)) நான்காம் ஆண்டு மாணவர்களாக உள்ளனர். 




Original article:

Share:

துல்லியமான தரவுகள் இல்லாததால் தடைகளை எதிர்கொள்ளும் பழங்குடியினருக்கான மத்திய அரசின் வீட்டு வசதி திட்டம் -சோபனா கே.நாயர்

 பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM Janjati Adivasi Nyay Maha Abhiyaan (PM-JANMAN)) திட்டத்தை செயல்படுத்தும் போது, சாத்தியமான பயனாளிகள் பற்றிய தரவுகளை சேகரிப்பது  வீட்டுவசதி அம்சத்தில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.


கட்டப்பட வேண்டிய 5 லட்சம் வீடுகளில், 2.5 லட்சம் வீடுகளுக்கு பிப்ரவரி 15ம் தேதிக்குள் அனுமதி வழங்க இலக்கு நிர்ணயித்திருந்தது. நவம்பர் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டு, 2023 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM Janjati Adivasi Nyay Maha Abhiyaan (PM-JANMAN)) திட்டம்  தேர்தல் நெருங்கும்போது விரைவாக செயல்படுத்தப்படுகிறது.


பிப்ரவரி 17 ம் தேதி தி இந்து (The Hindu) நாளிதழின் அறிக்கையின்படி, நாடு முழுவதும், குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) கீழ் வகைப்படுத்தப்பட்ட 75 பழங்குடியினரின் மொத்த மக்கள்தொகையை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பிரதமர் கதி சக்தி (prime minister Gati Shakti) இணையதளத்தைப் பயன்படுத்தியது. பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) மக்கள்தொகைக்கு அரசாங்கம் மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளை வழங்கியது. ஆரம்பத்தில் நவம்பரில் 28 லட்சம் ஆகவும்,  பின்னர், இது ஜனவரி நடுப்பகுதியில் 36.5 லட்சமாகவும் உயர்ந்தது, பின்னர் ஜனவரி இறுதிக்குள் 44.64 லட்சமாக உயர்ந்தது.


கதி சக்தி செயலி ( Gati Shakti app) மாநில அரசுகளுக்கு எண்களை வழங்கியது. இந்த அரசுகள் தங்கள் கணக்கெடுப்பை நடத்த ஒரு மாத கால அவகாசம் இருந்தது. இந்த கணக்கெடுப்பு டிசம்பர் 15 அன்று தொடங்கியது. ஜனவரி 15-ம் தேதிக்குள் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால், ஜனவரி 25 ஆம் தேதி வீட்டு அனுமதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. 


பல மாநிலங்கள் அவற்றை முடிக்கும் முன்பே தங்கள் கணக்கெடுப்புகளைத் தொடங்கின. அவர்கள் காலக்கெடுவை சந்திக்க விரும்பினர். தரவுகளில் வேறுபாடுகள் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வேறுபாடு,  தரவு பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கும்   தரவுகளுக்கும் மாநில அரசின் தரவுகளுக்கும் இடையில் உள்ளது. இப்போதைக்கு, ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிராமங்களில் மட்டுமே வீடுகள் கட்ட  அனுமதி அளிக்க முடியும். மத்திய பிரதேச அரசு ஒன்றிய அரசுக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளது. சிலருக்கு பலன் கிடைக்காது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத கிராமங்களில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) உறுப்பினர்கள் இருப்பதை அரசு கண்டறிந்துள்ளது.


மத்திய பிரதேச ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருப்பவர் கேதார் சிங். 16 மாவட்டங்களில் மட்டுமல்ல, 24 மாவட்டங்களிலும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) இத்திட்டத்திற்கு தகுதி பெறும் மேலும் 50,000 குடும்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. திரிபுராவிலும் இதேபோன்ற பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. 


“மக்கள் தொகை எப்போதும் நிலையானது அல்ல. குறிப்பாக, இந்த குழுக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவின் கீழ் வருவதால், அவர்கள் தொடர்ந்து வேலை தேடி இடம்பெயர்கின்றனர். தகுதியுடைய ஒவ்வொரு குடும்பமும் காப்பீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்,” என்று திரிபுரா ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளர் சந்தீப் ரத்தோர் விளக்கினார்.


இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ரூ.24,104 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 80% வீடுகள் மற்றும் சாலைகள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.




Original article:

Share:

சீனா வெளியேறிய நிலையில், இலங்கையில் மின் உற்பத்தி திட்டத்தை கட்டியெழுப்பவுள்ள இந்திய நிறுவனம் -மீரா சீனிவாசன்

 இலங்கையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் சீனாவின் எரிசக்தி திட்டத்தை இந்தியா எதிர்த்தது மற்றும் கடனுக்கு பதிலாக மானியம் வழங்க பரிந்துரைத்தது. இலங்கை அரசாங்கமும் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனமும் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், வட இலங்கையில் ஒரு சீனாவின் எரிசக்தி திட்டத்தை இந்தியா எதிர்த்தது. இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மிக அருகில், சுமார் 50 கி.மீ தொலைவில் இருந்தது. இதற்காக இந்தியா 11 மில்லியன் டாலர் மானியத்துடன் யாழ்ப்பாண தீபகற்பத்தில் (Jaffna peninsula) உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டத்தை (hybrid power project) செயல்படுத்த உள்ளது.


இலங்கை நிலையான எரிசக்தி ஆணையம் (Sri Lanka Sustainable Energy Authority), இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய நிறுவனமான U-Solar Clean Energy Solutions ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மூன்று தீவுகளில் "கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை" (Hybrid Renewable Energy Systems) உருவாக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  நெடுந்தீவு (Neduntheevu), நயினாதீவு (Nainativu), யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகில் உள்ள அனலைதீவு (Analaitivu) ஆகியன இத்தீவுகள் ஆகும்.


மூன்று தீவுகளில் வாழும் மக்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் மூலம் நிதியுதவி அளிக்கிறது. இந்த கலப்பின திட்டத்தில்,  சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவை அடங்கும். இந்த அணுகுமுறையில் ஆற்றல் திறன்களை அதிகம் பயன்படுத்துவதாகும். இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 


இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்த திட்டம் குறித்து அவர்  X வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த திட்டத்தில் 530 கிலோவாட் காற்றாலை மின்சாரமும், 1,700 கிலோவாட் சூரிய சக்தியும் இருக்கும். இது மணிக்கு 2,400 கிலோவாட் பேட்டரி சக்தியையும் உள்ளடக்கும். 2,500 கிலோவாட் டீசல் மின்சக்தி அமைப்புடன் கூடிய திட்டம் இருக்கும். இந்த அமைப்பு மூன்று தீவுகளிலும் யு-சோலார் (U-SOLAR) நிறுவனத்தால் கட்டப்படும்.


இந்த திட்டத்திற்காக பெங்களூருவைச் சேர்ந்த யு-சோலார் (U-SOLAR) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான போட்டி ஏல அடிப்படை மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய நிறுவனங்களுக்காக இலங்கை அரசு இந்த செயல்முறையை ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


நாட்டில் 3வது திட்டம்


இந்த முயற்சியானது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இந்தியாவால் ஆதரிக்கப்படும் மூன்றாவது ஆற்றல் திட்டமாகும். தேசிய அனல் மின் கழகம் (National Thermal Power Corporation) சம்பூர் நகரில் சூரிய சக்தி திட்டத்தை வழிநடத்துகிறது. மன்னார் மற்றும் பூநகரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அதானி குழுமம் (Adani Group)  செயல்படுத்தி வருகிறது.


ஆரம்பத்தில், இலங்கை அமைச்சரவை மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சீனாவின் கூட்டு முயற்சிக்கு ஒப்புதல் அளித்தது. ஆசிய மேம்பாட்டு வங்கியின் (Asian Development Bank) ஆதரவுடன் இந்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்தியாவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் சீன இருப்பு குறித்த கவலைகள் காரணமாக, இந்தியா இந்த திட்டத்திற்கு கடனுக்கு பதிலாக மானியமாக நிதியளிக்க முன்மொழிந்தது. இதற்கு இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.


மார்ச் 2022 இல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின் போது, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், இந்த முன்னேற்றங்கள் குறித்து சீனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இலங்கை அதிகாரிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதுவர், தெளிவான காரணமின்றி ஆரம்ப திட்டங்களை நிறுத்தியதற்காக இலங்கை அதிகாரிகளை வழக்கத்திற்கு மாறாக விமர்சித்தார், சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான செய்தியை அனுப்புவது குறித்து கவலை தெரிவித்தார். 


இதற்கிடையில், 2021 டிசம்பரில் இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி (Sino Soar Hybrid Technology), மாலத்தீவில் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.




Original article:

Share:

இந்தியாவில் வளர்ந்து வரும் மரண தண்டனை பிரச்சினை -லட்சுமி மேனன், ஸ்னேஹல் தோட்டே

 இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை மறுசீரமைக்கத் தொடங்கியது, ஆனால் மாற்றங்கள் இன்னும் விசாரணை நீதிமன்றங்களை எட்டவில்லை.


2023 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் 561 மரண தண்டனை கைதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக உயர்ந்ததாகும். இந்திய உச்சநீதிமன்றம் 2023 இல் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்தது. அது மறுஆய்வு செய்த வழக்குகளில் மரண தண்டனை கைதிகளில் கிட்டத்தட்ட 55% பேரை விடுவித்தது.  செப்டம்பர் 2022 இல், நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு அமர்வை அமைக்க முடிவு செய்தது. இந்த அமர்வு மரண தண்டனை தண்டனையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி இருந்தபோதிலும், இந்தியாவில் தண்டனை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் இன்னும் பெரிய சிக்கல்கள் உள்ளன. உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசியலமைப்பு சாசன அமர்வின் செயல்திறன் சந்தேகத்திற்குரியது. பல விடுதலைகள் மற்றும் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்தியாவில் மரண தண்டனையை சீர்திருத்துவது என்பது தண்டனை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்று அது அறிவுறுத்துகிறது.


மேலும் தண்டனைக் குறைப்புகளும் விடுதலைகளும்


திட்டம் 39A (Project 39A)இன் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர புள்ளிவிவரங்கள் மரண தண்டனை சீர்திருத்தங்களில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றம் மே 2022 இல் மனோஜ் vs மத்தியப் பிரதேச மாநில (Manoj vs The State Of Madhya Pradesh (May 2022)) வழக்கில் வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வழிகாட்டுதல்கள் தண்டனை நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இரண்டாவது ஆண்டாக, விசாரணை நீதிமன்றங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை. 2023 ஆம் ஆண்டில், மனோஜ் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றிய தேவையான தகவல்கள் இல்லாமல் விசாரணை நீதிமன்றங்கள் 86.96% மரண தண்டனைகளை விதித்தன. 


2023 ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்வதிலும் உயர் நீதிமன்றங்கள் தயக்கம் காட்டின. உச்ச நீதிமன்றம் முடிவு செய்த 10 வழக்குகளில் மரண தண்டனையை உறுதி செய்யவில்லை. உயர்நீதிமன்றங்கள் ஒரு மரண தண்டனையை மட்டுமே உறுதி செய்தன. இந்த நடத்தை மரண தண்டனை இந்தியா அறிக்கை  2016 (Death Penalty India Report (2016)) கண்டறிந்ததைப் பொருத்தது. 2000 மற்றும் 2015 க்கு இடையில், விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் 4.9% மட்டுமே உயர் மட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும், நீதிமன்றம் மரண தண்டனைகளை உறுதிப்படுத்துகிறது, ஆனால் மரண தண்டனையை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றுகிறது.


தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில், இந்த வழக்குகள் நீதிமன்றத்தின் வேலையில் ஒரு சிறிய பகுதியாக இருந்தன. ஆனால் இந்த முடிவுகள் காவல்துறை, நீதிமன்றத்திற்கு குற்றஞ்சாட்டுபவர்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் உள்ள பெரிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்த விடுதலைக்கான காரணங்களில் தயாரிக்கப்பட்ட ஆதாரங்கள், மாற்றப்பட்ட ஆரம்ப நிலை  காவல்துறை அறிக்கைகள், மாற்றப்பட்ட தடயவியல் சான்றுகள் மற்றும் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கேள்விக்குரிய ஆதாரங்கள் ஆகியவை அடங்கும். 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மரண தண்டனை குறித்த உச்ச நீதிமன்றத்தின் பெரும்பாலான தீர்ப்புகள் விடுதலைக்கு வழிவகுத்தன. 


கைதிகளை விடுதலை செய்ய நீதிமன்றம் முடிவு செய்யும் போது குறிப்பிட்ட வழக்குகளில் கவனம் செலுத்துகிறது. மரண தண்டனை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் உள்ள பெரிய பிரச்சனைகளைப் பற்றி அது வெளிப்படையாகப் பேசவில்லை. தண்டனைகளை முடிவு செய்யும் போது, மரண தண்டனையில் உள்ள பெரிய பிரச்சனைகளைப் பார்க்க நீதிமன்றம் மிகவும் திறந்திருக்கிறது. இது செப்டம்பர் 2022 இல் காட்டப்பட்டது. மரண தண்டனை பற்றிய முக்கியமான கேள்விகளை அரசியலமைப்பு அமர்வு மூலம் ஆராய நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழக்குகளில் இருந்து அதிகமான கைதிகளை விடுவித்து வருகிறது. நமது குற்றவியல் அமைப்பில் தவறுகள் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதை இது காட்டுகிறது. பல கைதிகள் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதைப் பார்க்கும்போது, நமது அமைப்பில் உள்ள அபாயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.


மரண தண்டனை கைதியின் நிலை


மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகள் மரண பயத்தில் வாழ்கின்றனர் மற்றும் சிறையில் வன்முறை மற்றும் அவமானத்தை தாங்கிக் கொள்கின்றனர். வேலை, கல்வி மற்றும் ஓய்வு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பிரிக்கும் சிறைக் கொள்கைகள், இத்தகைய மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான சிறிய வழிகளை நீக்குகின்றன. மரண தண்டனை விதிக்கப்பட்ட அனுபவம், யாராவது குற்றவாளி அல்ல என்று கண்டறியப்பட்ட பின்னரும் அல்லது அவர்களின் தண்டனை மாற்றப்பட்ட பின்னரும் கூட, நீண்டகால உளவியல் விளைவுகளை ஏற்படுத்துகிறது.


இருப்பினும், விசாரணை நீதிமன்றங்கள் மரண தண்டனையை அதிகமாகவும் நியாயமின்றியும் பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் மரண தண்டனை விதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திட்டம் 39 A (Project 39A) அறிக்கையின் தரவு, உயர் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளைக் கையாளும் விகிதத்தில் 15% மெதுவாக முடிப்பதாகக் காட்டுகிறது, இது மோசமான நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பலர் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பு அல்லது அவர்களின் தண்டனை மாற்றப்படுவதற்கு முன்பு தேவையில்லாமல் துன்பப்படுகிறார்கள். செப்டம்பர் 2023 இல், ஏர்வாடா சிறையில் ஒரு நபர் 2019 முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஆறு ஆண்டுகள் மரண தண்டனை அனுபவித்து தற்கொலை செய்து கொண்டார். நம்பகத்தன்மையற்ற செயல்முறைகள் மூலம் தனிநபர்களை இதுபோன்ற மனிதாபிமானமற்ற தண்டனைக்கு உட்படுத்துவது சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. 


மரண தண்டனை குறித்த தனது அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் சாசன அமர்வைக் அமைப்பது  பாராட்டத்தக்கது என்றாலும், அது பிரச்சினையை திறம்படத் தீர்க்காது. உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை தண்டனை வழங்குவது தொடர்பாக முன்னெடூக்கப்பட்ட சீர்திருத்தங்களை விசாரணை நீதிமன்றங்கள் சரியாகப் பின்பற்றவில்லை, இது போன்ற முயற்சிகள் பயனற்றவை. திட்டம் 39 A (Project 39A) இன் 2023 அறிக்கை, நீதிமன்றம் என்ன கவனம் செலுத்துகிறது என்பதற்கும், மரண தண்டனை வழக்குகளில் குற்றவியல் நடைமுறையில் உள்ள பரந்த நெருக்கடிக்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிப்படுத்துகிறது.  இது, காவல்துறை முதல் சிறைச்சாலைகள் வரை அனைத்தையும் பாதிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் முயற்சிகள் போதுமானதாகவோ அல்லது சரியான நேரத்தில் பிரச்சினையைத் தீர்க்கவோ முடியாது என்று அது அறிவுறுத்துகிறது. 


லட்சுமி மேனன் மற்றும் ஸ்னேஹல் தோட்டே ஆகியோர் டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் திட்டம் 39A (Project 39A) இல் பணிபுரிந்து 'Death Penalty in India: Annual Statistics Report 2023’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.




Original article:

Share:

இந்தியாவின் பாலஸ்தீன கொள்கையில் மாற்றமும் தொடர்ச்சியும் -ஸ்டான்லி ஜானி

 வரலாற்று ரீதியாக, பாலஸ்தீன பிரச்சினைக்கு இந்தியா உறுதியான ஆதரவாளராக இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவு வளர்ந்திருந்தாலும், இஸ்ரேலுடனான தனது புதிய கூட்டாண்மைக்கும், பாலஸ்தீனத்துடனான அதன் பழைய உறுதிப்பாட்டையும் இந்தியா சமநிலைப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா இந்த சமநிலையான நிலைப்பாட்டில் இருந்து விலகி, இந்தியாவானது இஸ்ரேலுக்கு சாதகமாக இருக்கிறதா என்பது பற்றிய கவலைகள் உள்ளன. மேற்கு ஆசியாவில் நிலைமை மாறி வருவதால் இது நடக்கிறது. அரபு நாடுகள் கூட இஸ்ரேலுடன் நல்லுறவை அளித்து பாலஸ்தீன பிரச்சினையை புறக்கணித்து வருகின்றன.


அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில், பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவார்கள். இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி X வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றில் தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ’இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.


2017 இல், இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் திரு.மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேர்மறையான முறையில் நல்ல தனிப்பட்ட உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். திரு. மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் இஸ்ரேலின் உறுதியான பாதுகாப்பு அணுகுமுறையை வெளிப்படையாகப் பாராட்டுகிறார்கள். ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 26 அன்று, காசாவில் "உடனடியான, நீடித்த மற்றும் நிலையான மனிதாபிமான போர்நிறுத்தத்தை" வலியுறுத்தும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (United Nations General Assembly (UNGA) வாக்கெடுப்பில் இருந்து இந்தியாவானது விலகத் தீர்மானித்தது. இதனால், அக்டோபர் 7 "பயங்கரவாதத் தாக்குதலை" எதிர்த்து தீர்மானமானது வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்று இந்தியா தனது முடிவை விளக்கியது. பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கை மாறி வருவதையே இந்த நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.


வளர்ந்து வரும் அணுகுமுறை


பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பல ஆண்டுகளாக மாறிவிட்டது. 1947 நவம்பரில், பாலஸ்தீனத்தை யூத நாடாகவும், அரபு நாடாகவும், சர்வதேச நகரமாகவும் (ஜெருசலேம்) பிரிக்கும் தீர்மானத்தின் மீது ஐக்கிய நாடு பொதுச் சபையில்; வாக்களித்தபோது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரபுக் கூட்டமைப்புடன் இணைந்து அதற்கு எதிராக வாக்களித்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு பாலஸ்தீனத்தில் குடியேறிய சியோனிச மக்களை இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்குடன் ஒப்பிட்டார். பிரிவினையை அனுபவித்த இந்தியா, பாலஸ்தீனத்தைப் பிளவுபடுத்துவதை ஆதரிக்கக் கூடாது என்று நேரு நம்பினார். இருப்பினும், மே 1948 இல் இஸ்ரேல் சுதந்திரத்தை அறிவித்த பிறகு, இந்தியாவின் அணுகுமுறை மாறியதுடன் அது, 1950 வாக்கில் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால் அப்போது அது முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவில்லை. பனிப்போரின் போது, மூன்றாம் உலக நாடுகளின் தன்னாட்சி உரிமையை வென்ற இந்தியா, பாலஸ்தீனிய காரணத்தை மிகவும் வெளிப்படையாக ஆதரிப்பவர்களில் ஒருவராக தனித்து நின்றது.


1992 ஆம் ஆண்டில், இந்தியா இஸ்ரேலுடன் முழு இராஜதந்திர உறவுகளைத் தொடங்கியது. அப்போதிருந்து, இந்தியாவுக்கும், டெல் அவிவ் (Tel Aviv) இடையேயான உறவு வலுவடைந்துள்ளது. இன்று, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக இஸ்ரேல் உள்ளது. ஆனால், இந்தியா பகிரங்கமாக தனது ஆதரவைப் பேணியது, ஒரு இறையாண்மை, சுதந்திரமான, சாத்தியமான மற்றும் ஐக்கிய பாலஸ்தீனத்தின் விளைவாக, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் சமாதானமாக அருகருகே வாழ்கிறது. இந்த நிலைப்பாடு அரபு அமைதி முன்முயற்சி (Arab Peace Initiative), குவார்டெட் சாலை வரைபடம் (Quartet Road map) மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் ஒப்புதல்களுடன் ஒத்துப்போகிறது. முக்கியமாக, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, 1967-ன் எல்லைகளை ஒட்டி பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு இந்தியா ஆதரவளித்தது.


திரு. மோடி பிரதமரான பிறகு, இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிப்ரவரி 2018 இல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவுக்கு அவர் பயணம் செய்தபோது, நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஜெருசலேமின் நிலை அல்லது குறிப்பிட்ட எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததற்கு எதிராக இந்தியா வாக்களித்தது, முழு நகரத்தின் மீதான இஸ்ரேலின் உரிமையை ஆதரிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனால் தலைநகர் மற்றும் எல்லைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை இந்தியா இனி விவாதிக்காது. இருப்பினும், அது இஸ்ரேலின் கூட்டாளியாக இருந்து இரு நாடுகளின் தீர்வை ஆதரிக்கிறது. இந்தியாவின் பாலஸ்தீனக் கொள்கையின் தார்மீக அம்சங்களை விட உண்மையான அரசியலின் நடைமுறைக் கருத்தாய்வுகள் முன்னுரிமை பெற்றுள்ளன.


ஐக்கிய நாடுகளவையில் இந்தியாவின் வாக்களிக்கும் முறையை முழுமையாக ஆராய்ந்து அக்டோபர் 7 முதல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் இந்த சசமநிலையைப் பேணுவதற்கான நிலைப்பாடு மாறாமல் இருப்பதைக் குறிக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பிரேசில் அல்லது தென்னாப்பிரிக்காவைப் போல இந்தியா ஒரு வலுவான தார்மீக விமர்சகராக இல்லை அல்லது அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற இஸ்ரேலின் அமைதியான பார்வையாளரோ அல்லது ஆதரவாளரோ அல்ல.


பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியா இறையாண்மையுள்ள, சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை ஆதரிக்கிறது என்று கூறியது. ஆரம்பத்தில் வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, பின்னர் இஸ்ரேல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் குறைந்தது நான்கு முறை வாக்களித்தது.


நவம்பர் 12, 2023 அன்று, கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலன் (occupied Syrian Golan) உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் (occupied Palestinian territories) இஸ்ரேலிய குடியேற்றங்களைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேலின் தற்போதைய ஆக்கிரமிப்பு குறித்து கவலை தெரிவிக்கும் மற்றொரு தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது. டிசம்பர் 12 அன்று, உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. மேலும், டிசம்பர் 19 அன்று, பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை  (Palestinian right to self-determination) இந்தியா ஆதரித்தது.


ஒவ்வொரு நாடும் எங்கு நிற்கிறது என்பதை வாக்களிப்பு பதிவு தெளிவாகக் காட்டுகிறது. பாலஸ்தீனிய பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுத்தாமல், இரண்டு நாடுகளின் தீர்வுக்கு சாத்தியமில்லை. பாலஸ்தீன இராணுவங்களுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேலின் வலுவான இராணுவத்தை கருத்தில் கொண்டு, குறிப்பிடத்தக்க அதிகார சமநிலையின்மை காரணமாக ஒரு தீர்மானத்திற்கான பாதை இராஜதந்திரத்தில் உள்ளது, போரின் மூலம் அல்ல. எனவே, இரு நாட்டின் தீர்வை ஆதரிப்பதற்கு, வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது, பேச்சுவார்த்தைக்கான ஆதரவு, குடியேற்றங்களைக் கண்டிப்பது மற்றும் பாலஸ்தீனிய சுயநிர்ணயத்திற்கான ஆதரவு ஆகியவை இருக்க வேண்டும். இருநாடுகளின் தீர்வை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆனால் ஐக்கிய நாடு தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்து போர்நிறுத்த அழைப்புகளை நிராகரிக்கும் அமெரிக்காவைப் போலல்லாமல், இந்தியா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இந்தியாவின் நலன்கள்


பாலஸ்தீனத்தை ஆதரிப்பது தேசிய நலன்களில் சில அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகளால் காஸாவில் நிலைமை மோசமாக உள்ளது. 30,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதுடன், சுமார் 70,000 பேர் காயமடைந்துள்ளனர். காசாவின் 2.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 90% பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை 21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகும். இஸ்ரேல் அதன் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், சர்வதேச சட்டங்களால் விளைவுகளை எதிர்கொள்ளவில்லை. இஸ்ரேலை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரிப்பதே இதற்குக் காரணம். இருப்பினும், அமெரிக்காவின் ஆதரவும், பாலஸ்தீனியர்களின் உயிர்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து இஸ்ரேலின் அக்கறையின்மையும் உலகளவில், குறிப்பாக உலகளாவிய தெற்கில் வலுவான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் எதிர்வினையாற்றுகின்றன. தென்னாப்பிரிக்கா இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்தத்துக்கு சீனா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் உட்பட பல்வேறு பாலஸ்தீன குழுக்களுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


உலகளாவிய தெற்கில் இந்தியா ஒரு தலைவராக இருக்க விரும்புகிறது. எனவே, இந்த சர்வதேச கவலைகளையும் எதிர்வினைகளையும் அது புறக்கணிக்க முடியாது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலை பகிரங்கமாக விமர்சித்தார். கடந்த மாதம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) காசாவில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த அறிக்கைதான் இதுவரை போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா நேரடியாக விமர்சித்த அறிக்கையாகும்.


அக்டோபர் 7 தாக்குதலும் இஸ்ரேலின் எதிர்வினையும் பிராந்தியத்தின் நிலைமையை மாற்றியுள்ளன. அக்டோபர் 7-க்கு முன்பு, அரபு நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராகி வந்தது. இது ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்குப் (Abraham Accord) பிறகு. இப்போது, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலைப் போலவே அமெரிக்காவின் நற்பெயரும் சேதமடைந்துள்ளது. சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவது நடக்கவில்லை. இதன் காரணமாக, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார தாழ்வாரத்திற்கான (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) திட்டங்கள் தாமதமாகின்றன. இந்த நெருக்கடி நீடித்து, செங்கடலில் உள்ள கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்கினால், அது இந்தியாவை பொருளாதார ரீதியாக பாதிக்கும். காஸாவில் ஒரு நீண்ட போர் ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். இந்த மோதலில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கூட்டாளி நாடுகளாகும். இறுதியாக, போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவது, மேற்கு ஆசியாவில் நிலைத்தன்மையை மீண்டும் கொண்டு வருவது மற்றும் பாலஸ்தீன பிரச்சினையைத் தீர்ப்பது ஆகியவை இந்தியாவுக்கு முக்கியம். இந்த இலக்குகள் இந்தியாவின் மேற்கு நோக்கிய கொள்கையின் மையமாக இருக்க வேண்டும்.




Original article:

Share:

ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) மற்றும் 10,000 இந்திய மரபணுக்களை வரிசைப்படுத்துதல் பற்றி . . .

 மரபணு வரிசைமுறையின் (genome sequencing) கண்டுபிடிப்புகள் பரவலாக பகிரப்பட வேண்டும். 


ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) உயிரிதொழில்நுட்பவியல் துறையால் (Department of Biotechnology) நிர்வகிக்கப்படுகிறது. இது 10,000 இந்திய மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளது. 10,000 மரபணுக்களை வரிசைப்படுத்துவது என்பது 10,000 நபர்களின் முழுமையான டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்வதாகும்.  இதன் பொருள், 10,000 பேரின் முழு மரபணுக் குறியீட்டையும் (டிஎன்ஏ புளூபிரிண்ட்) ஆய்வு செய்து, ஒரு நிலையான இந்திய மனித மரபணுவைக் குறிப்புக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும்.  இந்தியா, முதன்முதலில் 2006 இல் மனித மரபணுவை (human genome) வரிசைப்படுத்தியது. இந்த சமீபத்திய முயற்சி இந்தியாவின் விரிவான வரைபடத்தை உருவாக்குவது போன்றது. இந்த வரைபடம் அனைத்து அரசியல் அலகுகளையும் முக்கிய அம்சங்களையும் காட்டுகிறது. இது பொதுவான உலக மரபணு வரைபடம் அல்ல. 10,000 பேர் நூறுகோடி மக்களுக்கு பிரதிநிதி ஆகி விடமாட்டார்கள்.  இந்த, திட்டத்தின் முக்கிய பயன்பாடு நோய்களை எதிர்த்துப் போராடுவதாகும். 2009 இல்,  மரபியல் வல்லுநர்கள் ஒரு தொடர்பைக் கண்டறிந்தனர். அவர்கள்  மயோசின் பிணைப்பு புரதம்சி கார்டியாக்3 (Myosin binding protein C, cardiac3 MYBPC3)  என்ற புரதத்தை இந்தியர்களுக்கு இதய செயலிழப்பு (heart failure) அபாயத்துடன் ஒப்பிடட்டனர்.  4% இந்திய வம்சாவளியைக் கொண்ட மக்கள் இந்த மரபணு மாறுபாட்டைக் கொண்டுள்ளனர்.  இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.


இந்தியாவில் கிட்டத்தட்ட 4,500 மக்கள்தொகைக் குழுக்கள் உள்ளன. சாதி மற்றும் திருமணத்தின் அடிப்படையில் ஒரே சாதிக்குள் ஒழுங்கமைத்த அதன் நீண்ட வரலாறு உள்ளது. இதில் சில அரிய மரபணு மாறுபாடுகள் தப்பிப்பிழைத்துள்ளன. இந்த மாறுபாடுகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் இந்த நடைமுறைகள் இல்லாவிட்டால் காலப்போக்கில் மறைந்திருக்கலாம். 2003 ஆம் ஆண்டில், மனித ஜீனோம் திட்டம் (Human Genome Project) கிட்டத்தட்ட $3 பில்லியன் செலவில் 'மனித மரபணுவை' (human genome) வெளியிட்டது. இது ஒரு நம்பிக்கையூட்டும் சகாப்தத்தைக் குறித்தது, மரபணுவின் மர்மங்களை நாம் அவிழ்த்துவிட்டோம், ஒவ்வொரு பிரச்சனைக்குரிய மரபணுவையும் ஒரு குறிப்பிட்ட நோயுடன் இணைத்து, வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளின் எதிர்காலத்தை கற்பனை செய்துகொண்டோம்.


ஜீனோம் இந்தியா திட்டத்தின் (Genome India Project)  விளம்பரமும் இதே போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததைக் காட்டுகின்றன. ஒரு சில நோய்கள் ஒரு மரபணுவால் மட்டுமே ஏற்படுகின்றன. கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அரிய மரபணுக்களைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டாலும், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. சிகிச்சைகள் கிடைக்கும்போது, அவை தேவைப்படுபவர்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, நமது மரபணுக்களைப் புரிந்துகொள்வது உண்மையில் அவை எவ்வளவு சிக்கலானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) 10,000க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் அது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் கண்டுபிடிப்புகள் கல்வி வட்டங்களுக்குள் மட்டும் இருக்கக்கூடாது. இது விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், நெறிமுறையாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒத்துழைப்பு இந்தியாவிற்கு அதன் மரபணு வேறுபாடு பற்றி மேலும் அறிய உதவும்.




Original article:

Share: