அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அப்பர் சியாங் நீர்மின் திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? - சுக்ரிதா பருவா

 ஜூலை 8, திங்கட்கிழமை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் செயல்பாட்டாளர்களால் பொது ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட அப்பர் சியாங் நீர்மின் திட்டம் (Upper Siang hydropower project) குறித்து அமைச்சருக்கு ஒரு மனுவை வழங்க மட்டுமே அவர்கள் உத்தேசித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் மாநிலத்திற்கு வருவதற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடை பெற்றது.


அப்பர் சியாங் திட்டம் என்பது அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் நதியில் கட்ட திட்டமிடப்பட்ட 11,000 மெகாவாட் நீர்மின் திட்டமாகும். சியாங் ஆறு திபெத்தில் கைலாஷ் மலைக்கு அருகில் சாங்போ என்ற இடத்தில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி 1,000 கி.மீக்கு மேல் பாய்ந்து, நம்சா பார்வா சிகரத்தைச் சுற்றி வந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் பகுதியில் நுழைகிறது. அசாமில்  அது  பிரம்மபுத்திரா நதி என அழைக்கப்படுகிறது.


2017 ஆம் ஆண்டில், அரசாங்கம் 5,500 மெகாவாட் சியாங் மேல் நிலை-I மற்றும் 3,750 மெகாவாட் சியாங் மேல் நிலை-II திட்டங்களை பெரிய அப்பர் சியாங் (Siang Upper Stage-I) திட்டத்தில் இணைக்க திட்டமிட்டது. இந்த புதிய திட்டமானது, தேசிய நீர்மின்சாரக் கழகத்தால் (National Hydroelectric Power Corporation (NHPC)) நிர்மாணிக்கப்பட உள்ளது, இது 300 மீட்டர் உயரமான அணையை உள்ளடக்கியது, இது கட்டிமுடிக்கப்பட்டாள் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய அணையாக இருக்கும்.


மத்திய மின்சார ஆணையத்தின் நவம்பர் 2022 அறிக்கையின்படி, சியாங் நதிப் படுகையில் மொத்தம் 18,326 மெகாவாட் திறன் கொண்ட 29 நீர்மின் திட்டங்கள் உள்ளன. முன்மொழியப்பட்ட அப்பர் சியாங் திட்டம் இந்த மொத்த திறனில் சுமார் 60% நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருக்கும்.


இந்த அணையானது அதன் நீர்மின் ஆற்றலுக்கு மட்டுமல்ல, சாங்போவில் சீனாவின் நீர்மின் திட்டங்களை எதிர்கொள்ளும் நோக்கில் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தின் மெடாக் கவுண்டியில் 60,000 மெகாவாட் 'சூப்பர் டேம்' (super dam) கட்டுவதற்கான திட்டங்களை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இந்த அணையின் கொள்ளளவு உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள மூன்று கோர்ஜஸ் அணையை (Three Gorges Dam) விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இந்த அணையானது தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, சீனாவின் வடக்குப் பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 


அதேபோல் அப்பர் சியாங் திட்டம் சாத்தியமான குறைக்கப்பட்ட ஓட்ட விளைவுகளைத் தணிக்கும் நீர்த்தேக்கமாக செயல்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 


சுற்றுச்சூழல், சமூக அக்கறைகள்


மூன்று அணை எதிர்ப்பு அமைப்புகள் (Three anti-dam organizations) - சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றம் (Siang Indigenous Farmers Forum (SIFF)), திபாங் எதிர்ப்பு மற்றும் வடகிழக்கு மனித உரிமைகள் (Dibang Resistance, and North East Human Rights) - கட்டாருக்கு ஒரு குறிப்பாணை வழங்க திட்டமிட்டுள்ளன. இது சியாங் மெகா அணை திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் பற்றிய கவலைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. 

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே பல அணைகள் உள்ளதாகவும், அதன் ஆறுகள் பல ஆண்டுகளாக நீர்மின் திட்டங்களுக்கு பயன்படுவதாகும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட சியாங் மெகா அணை, நமது முன்னோர்களின் தாயகத்தில் உள்ள நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும், வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கும், பல்லுயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.


மேல் சியாங் மாவட்டத் தலைமையகமான யிங்கியோங் உட்பட, ஆதி பழங்குடியினரின் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை இடம்பெயர்க்கும் திட்டத்தால் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். 


"பல நூற்றாண்டுகளாக, சியாங்கின் ஆறுகள் மற்றும் அனைத்து பழங்குடி நிலங்களும் நமது பாரம்பரியமாக. நமது வாழ்வாதாரம், கலாச்சார நடைமுறைகள் மற்றும் உயிர்வாழ்வது இந்த நதிகளை சார்ந்துள்ளது. முன்மொழியப்பட்ட புதிய அணை உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை பாதிக்கிறது," என்று குறிப்பிடுகிறார்கள்.


கெட்டே கிராமத்தைச் சேர்ந்த சியாங் பழங்குடி விவசாயிகள் மன்ற (Siang Indigenous Farmers Forum (SIFF)) செயல்பாட்டாளரான கெகாங் ஜொங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டியளிக்கையில். சியாங் பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமங்களில் இத்திட்டத்தின் தாக்கம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். "எல்லா கிராமங்களும் நீரில் மூழ்கினால், நாங்கள் எங்கு செல்வது? பனிப்பொழிவு பகுதிகளுக்கு மேல்நோக்கி செல்ல முடியாது, நாங்கள் பிழைக்க வேண்டும், ஆனால் விவசாயமோ தோட்டமோ இருக்காது," என்று அவர் கூறினார்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது பிரச்சாரத்தின் போது, முதல்வர் பெமா காண்டு இந்தத் திட்டம் குறித்த மக்களின் கவலைகளை எடுத்துரைத்தார். மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த திட்டம் தொடரும் என்று உறுதியளித்தார்.  


புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் எதிர்ப்பு


மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த திட்டம் தொடரும் என்று  முதல்வர் பெமா காண்டு பொதுமக்களுக்கு உறுதியளித்தார். ஆனால், அதிகாரிகள் தங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இது எதிர்ப்பவர்கள் மத்தியில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நீர்மின் திட்டத்தின் (National Hydroelectric Power Corporation (NHPC)) மூத்த அதிகாரிகள் ஜூன் 25 அன்று இட்டாநகரில் அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதல்வர் சௌனா மெய்ன் சந்தித்தனர். அவர்கள் சியாங் வடிநிலத் திட்டங்களை முன்கூட்டியே தொடங்குவது குறித்து விவாதித்தனர்.


மேல் சியாங் மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு பல கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டங்கள் அப்பகுதியில் முன் சாத்தியக்கூறு கணக்கெடுப்புக்கு அடித்தளமிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கணக்கெடுப்பு என்பது ஒரு திட்டத்தின் சாத்தியமான செலவு மற்றும் கொடுக்கப்பட்ட பகுதியில் அதன் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு ஆரம்ப பகுப்பாய்வு ஆகும். தேசிய நீர்மின் திட்டத்தின் (NHPC) சாத்தியக்கூறு ஆய்வுக்காக சியாங் - உகெங் (Ugeng), டைட் டைம் (Dite Dime) மற்றும் பரோங் (Parong) ஆகிய மூன்று தளங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.


கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய நலன் மற்றும் பகுதி மேம்பாட்டிற்காக கணக்கெடுப்பு பணிகளை அவர்கள் அனுமதிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அணையால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மாவட்டத்தில் பொதுமக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பிரச்சாரம் திட்டத்திற்கான ஆதரவை பறை சாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NHPC நிறுவனம்  ரூ.325 கோடி நிறுவன-சமூக பொறுப்புணர்வு  (CSR) நிதியை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்தத் தொகுப்பு வாழ்வாதாரத் திட்டங்களுக்கும், சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்திடப்பட்டு வருகின்றன. 


"இது ஒரு முக்கிய தேசிய நலன் சார்ந்த திட்டமாகும், இதை ஒரு பகுதி மக்கள் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துகிறோம். பல்வேறு நடவடிக்கைகள் நடைபெறுவதற்க்கு முன் சாத்தியக்கூறுகளுக்கான கணக்கெடுப்புகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக. மேல் சியாங் டிசி ஹேகே லைலாங் கூறினார்.


எவ்வாறாயினும், சமூக ஆர்வலர்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் திட்டத்தை வடிவமைப்பதில் எச்சரிக்கையாக உள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டத்தின் விதியால் (Forest (Conservation) Amendment Act) அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்திய எல்லையில் இருந்து 100 கி.மீ.க்குள் இராஜதந்திர திட்டங்களுக்காக வன நிலத்தை மாற்றுவதற்கு இந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.


அப்பர் சியாங் அணையானது (Upper Siang dam) தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக சித்தரிக்கப்படுவதாக ஆர்வலர் பானு தடாக் கூறினார், இது பிராந்தியத்தின் அணை எதிர்ப்பின் வரலாற்றின் காரணமாக சிக்கலாக உள்ளது.



Original article:

Share:

மூன்று அதிர்ச்சிகளுக்குப் பிறகு, 7 ஆண்டுகளில் முறைசாரா துறையில் 16.45 லட்சம் வேலைகள் இழப்பு - ஆஞ்சல் மேகஜின்

 2015-16-க்குப் பிறகு முதல் முறையாக, இணைக்கப்படாத நிறுவனங்களின் வளர்ச்சியில், மூன்று பெரிய வெளிப்புற காரணிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி இந்த தரவு சுட்டி காட்டுகிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை மூன்று முக்கியமான காரணிகளாகும் .


முறைசாரா துறையில் (informal sector) தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2022-23-ல், இது 10.96 கோடியாக இருந்தது. இது 2015-16-ல் 11.13 கோடியாக இருந்ததை விட 16.45 லட்சம் அல்லது சுமார் 1.5-சதவீதம் குறைவாகும். இந்தத் தகவல் 2021-22 மற்றும் 2022-2-3க்கான முறைசாரா நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பில் (Annual Survey of Unincorporated Enterprises (ASUSE)) கண்டறியப்பட்டது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation  (MoSPI)) இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டது. 


மூன்று முக்கிய நிகழ்வுகள் முறைசாரா நிறுவனங்களை எவ்வாறு பாதித்தன என்பதைக் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகள் நவம்பர் 2016-ல் பணமதிப்பிழப்பு, ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம், மற்றும் மார்ச் 2020-ல் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவை இந்த பாதிப்பிற்கு முக்கியமான காரணிகளாகும். இந்த தரவு இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றில் வேலைவாய்ப்பு மீதான தாக்கத்தைக் காட்டுகிறது.


2021-22 மற்றும் 2022-23-க்கான முறைசாரா நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு முறைசாரா நிறுவனங்களில் அதிகரிப்பையும் காட்டியது. அவற்றின் எண்ணிக்கை 16.56 லட்சம் அதிகரித்தது. இது 2015-16-ல் 6.33 கோடியில் இருந்து 2022-23ல் 6.50 கோடியாக உயர்ந்தது.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கோவிட்-19  ஆகிய மூன்று அதிர்ச்சிகள்  முறைசாரா துறையை கடுமையாகப் பாதித்தன. 


பணமதிப்பிழப்பு: இது திடீரென பெரும்பாலான பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கியது. பண பரிவர்த்தனையை பெரிதும் நம்பியிருக்கும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சரக்கு மற்றும் சேவை வரி, இந்த புதிய வரி முறை பல சிறு வணிகங்களை முதல் முறையாக முறையான வரி முறைக்குள் கொண்டு வந்தது. புதிய, சிக்கலான விதிகளைப் பின்பற்றவும் நிர்பந்திக்கப்பட்டனர்.  கோவிட்-19: தொற்றுநோய் தாக்கத்தின் போது, அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது இது பல சிறு வணிகங்களை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. பல சிறிய, பதிவு செய்யப்படாத வணிகங்களை உள்ளடக்கிய முறைசாரா துறை, இந்த மாற்றங்கள் மற்றும் சவால்களை சமாளிக்க மிகவும் போராடியது.  


இந்தியாவின் முறைசாரா துறை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட முதல் பத்து மாநிலங்களில், மகாராஷ்டிரா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் 2015-16 மற்றும் 2022-23க்கு இடையில் முறைசாரா வேலைவாய்ப்பில் அதிகரிப்பைக் கண்டன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்த காலகட்டத்தில் முறைசாரா துறை தொழிலாளர்களில் சரிவைக் கண்டன.  இந்த ஐந்து மாநிலங்கள் அனைத்து முறைசாரா தொழிலாளர்களில் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


2015-16 உடன் ஒப்பிடும்போது 2022-23-ல் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முறைசாரா துறை ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை கண்ட போதிலும். தொற்றுநோய்க்குப் பிறகு சூழல் மாறியது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒப்பிடக்கூடிய புள்ளிவிவரங்கள் இல்லை. இது பொருளாதார நெருக்கடியையும், முறை சார்ந்த துறையில் இருந்து முறைசாரா துறைக்கு சாத்தியமான மாற்றத்தையும் குறிக்கிறது. 


உத்தரப் பிரதேசத்தின் முறைசாரா துறை தொழிலாளர்கள் 2015-16-ல் 1.65 கோடியில் இருந்து 2022-23-ல் 1.57 கோடியாகக் குறைந்தது. எனினும், இது 2021-22-ல் 1.30 கோடியில் இருந்து அதிகரித்தது. மேற்கு வங்காளத்தின் முறைசாரா துறை தொழிலாளர்கள் 2015-16ல் 1.35 கோடியில் இருந்து 2022-23ல் 1.05 கோடியாகக் குறைந்தது. இது 2021-22ல் 1.02 கோடியில் இருந்து சிறிதளவு அதிகரித்தது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை 2022-23-ல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகள் இரண்டிலும் முறைசாரா துறை நிறுவனங்களில் அதிக பங்கைக் கொண்டிருந்தன.  


பாரத ஸ்டேட் வங்கி, தனது ஆராய்ச்சி அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கியின்   மூலதனம், தொழிலாளர்,  ஆற்றல், பொருள் மற்றும் சேவைகள், (K (capital), L (labour), E (energy), M (material) and S (services)- (KLEMS)) தரவு மற்றும் இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு வேலைவாய்ப்பு எண்கள் பரவலாக ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டுள்ளது. நிதியாண்டு 2014-2023-ன் ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் தொழில் மற்றும் சேவைகளில் சுமார் 8.9 கோடி வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்பட்டதாகத் தரவுகள் காட்டுகின்றன. 


இந்தியாவின் பொருளாதாரத்தில் அமைப்புசாராதுறை (unorganised sector) குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்டதிற்கு (Gross Value Added (GVA)) 44 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. இது விவசாயம் அல்லாத நிறுவனங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 


வேலைப் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு விவசாயம் அல்லாத துறை நிறுவனங்களின் தரவு முக்கியமானது. வேலைகளை உருவாக்குவதற்கும் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கும் முறைசாரா துறை முக்கியமானது, குறிப்பாக முறையான துறையில் (formal sector) மந்த நிலை ஏற்படும்  போது இது போன்ற தரவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.



Original article:

Share:

எதிர்க்கட்சிகளைக் குறை கூறுவதைத் தவிர்க்கவும் - மனீஷ் திவாரி

 சட்டமியற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் சொந்தமானது. எதிர்க்கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு. மேலும், இடையூறு  (disruption) என்பது நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய பிரச்சனை அல்ல.


நாடாளுமன்றம் இடையூறுகளை விட அதிக தீவிரமான மற்றும் ஆழமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியை முழுவதுமாக குற்றம் சாட்டுவது நியாயமல்ல. 


நாடாளுமன்றம் போன்ற நமது சட்டமன்ற அமைப்புகளின் வளர்ந்து வரும் சரிவு மற்றும் தேசிய விவாதங்களில் அவற்றின் முக்கியத்துவம் குறைந்து வருவது இரு அவைகளின் தலைவர்களும் பேச வேண்டிய முக்கிய பிரச்சினை. இந்த பிரச்சனை இடையூறுகளால் மட்டுமல்ல. 


முதல் மக்களவையானது, ஒரு ஆண்டில் 135 நாட்கள் கூடியது. 1950-களில் மாநிலங்களவை 93 நாட்கள் கூடியது. 1955 முதல் 1970 வரை, நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 120 நாட்கள் கூடியது. 1971 முதல் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 70 நாட்களாக குறைந்தது. 2019-2024 ஆம் ஆண்டில் 17-வது மக்களவையானது 55 நாட்கள் மட்டுமே கூடியது. நாடாளுமன்ற கூட்ட அமர்வு நாட்களின் இந்த சரிவு தலைமை அதிகாரிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் கவனத்தை பெற வேண்டும். முதல் மக்களவை காலத்தை விட இப்போது சட்டமியற்றும் வேலை குறைவாக உள்ளதா? அல்லது நாடாளுமன்றம் ஆண்டுக்கு நான்கரை மாதங்கள் கூடுவது அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கிறதா? என்ற கேள்வி உள்ளது.


அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை, கட்சித்தாவல் தடைச் சட்டம் (Anti Defection Law) என அறியப்படுகிறது.  அதன் முக்கிய இலக்கான, கட்சித் தாவல்களைத் தடுப்பதை அடையத் தவறிவிட்டது. மாறாக, அது தனிப்பட்ட செயல்களில் இருந்து விலகுவதை மிகவும் பரவலான நடைமுறையாக மாற்றியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், மாநில அரசுகள் எந்த விளைவும் இன்றி கவிழ்ந்துள்ளன. இதற்கிடையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் சட்டமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களின் சட்டமன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் கட்சி கொறடாவால் (whip) கட்டுப்படுத்தப்படுகின்றன.


உலகின் பிற முக்கிய சட்டமன்ற ஜனநாயகங்களைப் போலல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இனி தங்கள் மனசாட்சி, தொகுதி தேவைகள் அல்லது பொது அறிவுக்கு ஏற்ப வாக்களிக்க முடியாது.


முக்கிய பிரச்சினை கருத்து சுதந்திரம் மற்றும் அரசாங்க நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை கண்டறிவதாகும். கருத்து சுதந்திரத்தில் அரசியலமைப்பின் சரத்து 105(1) உத்தரவாதம் அளிக்கும் சட்டமன்ற நிறுவனங்களில் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையும் அடங்கும். அரசாங்க நிலைத்தன்மை சட்டமன்றங்களில் பெரும்பான்மையை பராமரிப்பதை சார்ந்துள்ளது. இது நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் ஜனநாயக செயல்முறையின் பிற பங்குதாரர்களின் கவனத்தைப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் நான் 15-வது மற்றும் 17-வது மக்களவைகளில் இரண்டு தனியார் உறுப்பினர் மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளன.   


1993-ல், நாடாளுமன்றத்திற்கு சட்டமியற்றும் மற்றும் நிதி பணிகளில் உதவ நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் (Parliamentary Standing Committee) உருவாக்கப்பட்டன. 16-வது மற்றும் 17-வது மக்களவைகளில், மதிப்பாய்வுக்காக இந்த குழுக்களுக்கு குறைவான மசோதாக்களே அனுப்பப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் 45 சதவீதம் மட்டுமே நிலைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற குழுக்களின் பங்கில் ஏற்பட்டுள்ள இந்த குறைப்பு கவலைக்குரியது. இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைமை அதிகாரிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களை கவலைப்பட வைக்க வேண்டும்.


நாடாளுமன்றத்தில் இடையூறுகளைப் பற்றி நாம் பேசும்போது, ​​ஹரிவன்ஷின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, இது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய ஒரு தீவிரமான பிரச்சினைகள் இருப்பினும், குறிப்பிட்ட கோபத்தில் கவனம் செலுத்துவது தீர்வு அல்ல.


தற்போதைய ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​ஜூலை 2008-ல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பேசவிடாமல் தடுத்தனர். மேலும், மக்களவையில் கரன்சி நோட்டுகளை அசைத்தனர். இந்த செயல் அவையின் கண்ணியத்தைக் குறைத்துள்ளது. மன்மோகன் சிங் தனது உரையை எழுத்து வடிவில் மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. 


2009-14 ஆம் ஆண்டில், 15-வது மக்களவை பெரும் இடையூறுகளை சந்தித்தது. தற்போதைய ஆளும் கட்சி, அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது, இரண்டு முழு அமர்வுகள் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தது. இது 2010 குளிர்கால அமர்வு மற்றும் 2012 மழைக்கால அமர்வில் நடந்தது. நாடாளுமன்ற அவையில் நடைபெற்ற முதல் இடையூறு 2ஜி தொலைத்தொடர்பு உரிமங்கள் குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) அறிக்கை பற்றியதாக இருந்தது. இந்த காலத்தின் பெரும்பகுதியில் ஜனதா தள (ஐக்கிய) பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. இதனால், அவர்கள் பங்கேற்று நாடாளுமன்ற இடையூறுகளைத் தொடர்ந்தனர்.   


எனது நினைவு சரியாக இருந்தால், "நாடாளுமன்றத் தடை என்பது சட்டப்பூர்வமான நாடாளுமன்ற தந்திரத்தின் ஒரு பகுதி" என்ற கோட்பாட்டை உருவாக்கி அதற்கு மதிப்பு கொடுத்தவர் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த அருண் ஜெட்லி ஆவார். அவர் மேலும் கூறுகையில், "பிரச்சினைகளை புறக்கணிக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்படும் போது நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகத்திற்கு சாதகமாகும்".   


மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவரது மற்ற உறுப்பினர்கள், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் இன்னும் வலுவாக பேசினார். செப்டம்பர் 12, 2012 அன்று, அவர் கூறியதாவது "நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பது மற்ற வடிவங்களைப் போலவே ஜனநாயகத்தின் ஒரு வடிவம் ஆகும்". இது ஒரு கேள்வியை எழுப்புகிறது:  கடந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடத்தை பின்னர் திடீரென்று ஏற்றுக்கொள்ள முடியாததா மாறிவிட்டதா?


தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை இடையூறுகளுக்காக குற்றம் சாட்டுவது நியாயமற்றதாகத் தோன்றுகிறது. அவரது முதல் உரை அரசின் அமைச்சர்களால் தொடர்ந்து குறுக்கிடப்படும்போது, ​​முரண்பாடாகத் தெரிகிறது. இதற்கு முன் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஆளும் கட்சி எப்படி நடந்துகொண்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.



Original article:

Share:

தொடர்ச்சியான உணவுப் பணவீக்கப் (food inflation) பிரச்சினை -தர்மகீர்த்தி ஜோஷி, பங்குரி

 பணவியல் கொள்கையால் (monetary policy) இந்தப் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க முடியாவிட்டாலும், அதன் இலக்குகளை அடைய அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


இந்தியாவில் பணவியல் கொள்கையானது கலப்புப் பொருளாதாரப் போக்குகளைக் கையாண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வலுவாக உள்ளது. இருப்பினும், பணவீக்கம் குறைந்து வருகிறது. உணவுப் பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் நுகர்வோர் விலைக் குறியீடு (consumer price index (CPI)) குறையாமல் உள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறது. தற்போதைய 4.8% பணவீக்கத்தை 4%-ஆகக் குறைப்பதே அதன் இலக்காக உள்ளது. ஆனால், உணவுப் பணவீக்கம் குறையாமல் இந்த இலக்கை அடைய முடியுமா?   


நுகர்வோர் விலைக் குறியீட்டில் (consumer price index (CPI)) உணவு பொருட்களின்  விலை, பணவீக்கத்தில் 40% பங்களிக்கிறது. ஒட்டுமொத்த பணவீக்கமும் உணவு பொருட்களின் ஏற்ற இறக்கங்களை பொறுத்து இருக்கும். வரலாற்று ரீதியாக, ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் 4%-ஆக இருந்தபோது, ​​உணவுப் பணவீக்கம் 4%-க்குக் கீழே இருந்தது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, ஒட்டுமொத்த பணவீக்கம் 4%-க்கும் ஆறு முறை மட்டுமே குறைந்துள்ளது. 2000-2006-க்கு இடையில் சராசரியாக பணவீக்கம் 3.9% ஆக இருந்தது. அந்த காலகட்டத்தில், உணவுப் பொருட்களின் பணவீக்கம் சராசரியாக 2.5%. குறைவாக இருந்தது. 


அதன்பிறகு, 2017-18 மற்றும் 2018-19-ல் சராசரியாக 3.5 சதவீதமாக இருந்தது, ​​இலக்கை விட இரண்டு வருடங்கள் மட்டுமே பணவீக்கம் குறைவாக இருந்தது. அப்போது உணவுப் பணவீக்கம் வெறும் 1 சதவீதமாக இருந்தது. தொற்றுநோய்க்குப் பிறகு உணவுப் பணவீக்கம் சராசரியாக (2020-21 மற்றும் 2023-24 க்கு இடையில்) 6.4-சதவீதமாக உயர்ந்தது. இது ஒட்டுமொத்த  நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கமான (overall CPI inflation) 5.9 சதவீதத்தை விட அதிகமாகும். 


முதல் ஊரடங்கிற்குப் பிறகு 50 மாதங்களில், பணவீக்கம் 4%-க்கு மேல் இருந்தது, மேலும் 39 மாதங்களில் உணவுப் பணவீக்கம் 4%-க்கு மேல் இருந்தது. மொத்த பணவீக்கம் 24 மாதங்களில் 6%-ஐ தாண்டியது, உணவு பணவீக்கம் 28 மாதங்களில் 6%-ஐ தாண்டியது. 2023-24 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 5.4%-ஆகக் குறைந்தாலும், உணவுப் பணவீக்கம் 7.5%-ஆகவும் பின்னர் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 8.7%-ஆகவும் அதிகரித்துள்ளது.


பணவீக்கம் 4-சதவீதமாக குறைவது இப்போது நிலையானதாக இருக்காது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு சராசரி பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. சரசரியான பருவமழை மற்றும் அதிக அடிப்படை உணவு பணவீக்கத்தை குறைக்கும் என்று கருதுகிறது. உணவு பொருட்கள் அல்லாத  பணவீக்கம் குறைவதால் நுகர்வோர் விலைக் குறியீட்டு விலையும் குறைந்துள்ளது. மே மாதத்தில், பணவீக்கம் 3%-ஆகக் குறைந்தது. இது வட்டி விகிதக் குறைப்புகளை அனுமதிக்கக்கூடிய விலைகளில் குறைவான அழுத்தம் இருப்பதை காட்டுகிறது. இது வட்டி விகித குறைப்புகளுக்கான வாய்ப்பை உருவாக்கலாம்.


ஒட்டுமொத்த பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் உணவு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. பணவீக்கக் கணக்கீட்டில் உணவு அதிக எடையைக் கொண்டிருப்பதாலும், அடிக்கடி வாங்கப்படுவதாலும், பணவீக்கம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை அது பாதிக்கிறது.


உணவு பொருட்களின் விலைகள் இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்றனவா? என்று ரிசர்வ் வங்கி ஜனவரி 2024-ல் நடத்திய ஆய்வில் ஆராயப்பட்டது. பெரிய மற்றும் தொடர்ச்சியான உணவு விலை உயர்வுகள் உணவு அல்லாத பணவீக்கத்தையும் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதிக உணவுப் பணவீக்கம் ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. ஏனெனில், உணவு அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது. எங்கள் மதிப்பீட்டின் படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 20% ஏழை மக்கள் பணக்காரர்களான 20%-ஐ விட கிட்டத்தட்ட 0.5%-அதிக பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர். 


உணவுப் பணவீக்கம் எப்போது குறையும்? வரலாற்று ரீதியாக, பருவமழை உணவுப் பணவீக்க குறைவுக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இருப்பினும், காலநிலை மாற்றம் மழைப்பொழிவை மிகவும் கணிக்க முடியாததாக மாற்றியது. இந்த ஆண்டு, வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை சரியான நேரத்தில் தொடங்கினாலும், அதன் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. ஜூன்-30ஆம் தேதி வரை சராசரிக்கும் குறைவாக 11% மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழையின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எவ்வாறாயினும், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தவும், உணவுப் பணவீக்கத்தைக் குறைக்கவும், இந்த பருவத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டும். 


வெப்ப அலைகள் மற்றும் பருவமழை போன்ற போன்ற காரணிகள் அபாயங்களை மேலும் அதிகரித்துள்ளன. வானிலை நிகழ்வுகள் உணவு உற்பத்தி மற்றும் விலைகளை கடுமையாக பாதித்துள்ளது. காலநிலை மாற்றம் இதை கடுமையானதாக மாற்றியுள்ளது. குறிப்பாக, தொற்றுநோய்க்குப் பிறகு. 2022-23 இல், சாதாரண பருவமழை இருந்தபோதிலும், வெப்ப அலைகள் மற்றும் சீரற்ற பருவமழைகள் பணவீக்கத்தை அதிகரித்தன. 2023-24-ஆம் ஆண்டில், புவி வெப்பமடைதலால் மற்றும் எல்-நினோ போன்ற காரணிகள் இந்தியா வரலாற்றில் மிகவும் வறண்ட மாதமாக ஆகஸ்ட் மாதத்தை மாற்றியது. 


பல்வேறு காரணிகள் உணவு பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. வெப்ப அலைகள் நிலத்தடி நீர் மட்டத்தை குறைப்பதன் மூலம் பயிர் விளைச்சலைக் குறைத்துள்ளன. கோதுமை தானியங்களை சேதப்படுத்துகின்றன. மேலும், பூச்சி தாக்குதல்களை ஏற்படுத்துகின்றன. பால் மற்றும் கோழி உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளன. பருவமழையின் சீரற்ற தன்மை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.


கொள்கைகளை காலநிலைக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். ஏனெனில், அதைப் புறக்கணிப்பது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும். உணவு மீதான காலநிலை தாக்கங்களைக் கட்டுப்படுத்த நிதிக் கொள்கை உதவ வேண்டும். விவசாய உள்கட்டமைப்பு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் தேவை. இந்த ஆண்டு வெப்பத்தை எதிர்க்கும் கோதுமை போன்ற காலநிலை எதிர்ப்பு பயிர்களை கொள்கைகள் ஊக்குவிக்க வேண்டும். விவசாய ஆராய்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. ஏனெனில், தற்போதைய முதலீடுகள் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% மட்டுமே பங்களிக்கிறது என்று  2023-ஆம் ஆண்டிற்கான  சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய  கவுன்சிலின் (Indian Council for Research on International Economic Relations (ICRIER))   ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெப்ப அலை தொடர்பான நீர் கிடைக்கும் தன்மைக்கான அபாயங்கள் காரணமாக. நீர்ப்பாசன உள்கட்டமைப்பில் மேம்பாடுகள் தேவை.  அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எனினும், இதுவரை 57-சதவீத வேளாண்மைக்கு மட்டுமே நீர்ப்பாசன வசதி உள்ளது. குளிர்பதன சேமிப்பு மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். உணவு வழங்கலுக்கான அபாயங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும். அது வரை, உணவுப் பணவீக்க அபாயங்கள் உயர்வாகவே இருக்கும் வாய்ப்புள்ளது. பணவியல் கொள்கையால் இந்தப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்றாலும், அதன் இலக்குகளை அடைய அதிக உணவு விலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தாக்கல் செய்யபடவிருக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


ஜோஷி கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (Credit Rating Information Services of India Limited) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர், டாண்டன் மூத்த பொருளாதார நிபுணர், மற்றும் ராஜாத்யக்ஷா பொருளாதார ஆய்வாளர் ஆவார்.



Original article:

Share:

நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளுக்கு வெளியே மாநிலங்கள் சிறப்பு தொகுப்புகளைப் பெற வேண்டுமா? - பிரசாந்த் பெருமாள் ஜே

 பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் சிறப்பு நிதித் தொகுப்புகளுக்கான (special financial packages) கோரிக்கைகளை இக்கட்டுரை விவாதிக்கிறது. இந்த கோரிக்கைகள் மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கக்கூடும். நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளுக்கு வெளியே மாநிலங்கள் சிறப்புத் தொகுப்புகளைப் பெற வேண்டுமா? என்று கட்டுரை கேள்வி எழுப்புகிறது. அருண் குமார் மற்றும் பினாகி சக்ரவர்த்தி இதைப் பற்றி விவாதிக்கின்றனர்.


நிதி ஆணையம் எதன் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது? பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஆணையம் மூலம் ஒதுக்கப்படுவதைத் தாண்டி நிதியைப் பெறுவதற்கான நிர்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?


அருண் குமார் : கடந்த நிதி ஆணையம், வகுக்கக்கூடிய வரித் தொகுப்பில் (divisible tax pool) மாநிலங்களுக்கு 41% வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த 41%க்குள், ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன கிடைக்கும்? வருமானம், மக்கள் தொகை, பரப்பு, காடுகள் மற்றும் சூழலியல், மக்கள்தொகை செயல்திறன் (demographic performance) போன்றவற்றின் அடிப்படையில் ஒரு திட்டம் தீர்மானிக்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில் 15-வது நிதிக் குழுவினால், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாருக்கு அதிக அளவு நிதி கிடைத்துள்ளது. அதே சமயத்தில், கர்நாடகா மற்றும் கேரளா நிதி பங்கில் மிகப்பெரிய சரிவைக் கண்டன. எனவே, வேறுவிதமாகக் கூறினால், நிதி ஆணையம் பயன்படுத்தும் அளவுகோல்களின் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் நிதியின் அளவை மாற்றலாம். 


நிதி ஆணையத்தின், அதிகாரப் பகிர்வு என்பது சட்டப்படி கட்டாயமாகும். இது தவிர, மாநிலங்களுக்கு மீதம் வழங்கக்கூடிய நிதியை மத்திய அரசு முடிவு செய்யும். இங்குதான் அரசியல் சார்ந்த முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசுக்கு நெருக்கமான மாநிலங்கள் அதிக நிதியைப் பெறுகின்றன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. அவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு முக்கியமானது. இதனால், அவர்களுக்கு அதிக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.


பினாகி சக்ரவர்த்தி : நிதி ஆணையப் பரிமாற்றங்கள் விருப்புரிமைக்கு மிகக் குறைந்த அளவே உள்ளன. பிற மத்திய நிதி பரிமாற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே சில விநியோகத்தின் குறிப்பிட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. திட்டங்கள் மற்றும் அவற்றின் வடிவமைப்புகளை நாம் விவாதிக்கலாம். ஆனால், அவை தன்னிச்சையானவை அல்ல. இது நிதி பரிமாற்றங்களுக்கான ஒட்டுமொத்த கட்டமைப்பாகும்.


ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதிக வளங்களை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட மாநிலத்தால் ஒரு குறிப்பிட்ட கோரிக்கை இருக்கும்போது, ​​அந்த மாநிலத்திற்கு அதிக நிதி வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை. இது பொதுவான நடைமுறையாக மாறினால், நிதி விவேகம் பாதிக்கப்படும். எனவே, பெரிய அளவிலான விருப்பமான நிதி பரிமாற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.


நிதி ஆணையம் வருவாய் பற்றாக்குறை மானியங்களை வழங்கியது. ஆந்திரப் பிரதேசத்தின் மத்திய ஆதரவு தேவை கவனமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. பீகாரின் நிலைமை வேறுபட்டது. அதன் தனிநபர் மேம்பாட்டுச் செலவு (per capita development spending) அனைத்து மாநிலங்களின் சராசரியில் 60% க்கும் குறைவாக உள்ளது. பீகாருக்கு கடுமையான நிதித் திறன் பிரச்சினை உள்ளது. நிதி ஆணைய பரிமாற்றங்கள் மற்றும் கூடுதல் மத்திய நிதி ஒதுக்கீடுகள் இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்கவில்லை. 


கூடுதல் மத்திய நிதி உதவிக்கும், மாநிலங்களின் பொருளாதார செயல்திறனுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அதன் நீண்டகால பொருளாதார செயல்திறனை அதிகரிக்குமா? 


அருண் குமார் : ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் பங்கு வகிக்கின்றன. மத்திய அரசிடமிருந்து அதிக நிதி ஒதுக்கீடுகள் பெறுவது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடும். நிர்வாக ஆளுமை ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது வளர்ச்சிக்காக வளங்கள் எவ்வளவு நன்றாக செலவிடப்படுகின்றன என்பதை பாதிக்கிறது. குறைந்த பொருளாதார உள்ள மாநிலங்களில் பெரும்பாலும் நிதி கசிவு அதிகம். பீகாரின் கடன்-வைப்பு விகிதம் (credit-deposit ratio) தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. இதன் பொருள் பீகாரின் சேமிப்புகள் பிற மாநிலங்களுக்கு செலவிடப்படுகின்றன. மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி கிடைத்தாலும், நிதிக்கசிவு கூடுதல் வளங்களை விட அதிகமாக இருக்கலாம்.   


பினாகி சக்ரவர்த்தி : நிதி ஆணையத்தின் வரம்புக்கு அப்பாற்பட்ட வருவாய் பகிர்வு அதிகரித்துள்ளது. இது மத்திய நிதியுதவி திட்டங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. இதைப் பற்றி விவாதிக்க ஒரு பெரிய அரசியல் பொருளாதார கேள்வி உள்ளது. நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் பகுதிகளுக்கு நிதிப்பகிர்வு குறைவான வருவாய் ஈட்டும் பகுதிகளை விட மிக அதிகமாக உள்ளது. இதை நிர்வாக ஆளுமை வேறுபாடுகளால் மட்டும் விளக்க முடியாது. சில மாநிலங்கள் அனைத்து மாநிலங்களின் சராசரியில் 50% மட்டுமே பொது செலவினமாக செலவிடுகின்றன. இதற்கு நிர்வாகம் மற்றும் செலவின தர வேறுபாடுகள் மட்டுமே காரணமல்ல. பிந்தங்கிய பகுதிகளில் மூலதன முதலீட்டிற்கு அதிக வளங்களை வழிநடத்த வேண்டும். இது சமச்சீரான பிராந்திய வளர்ச்சியை அடைய உதவும்.

 

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax(GST)) குடிமக்களுக்கு வரி விதிக்கும் திறனை நீக்கி, மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைப் பெறுவதற்கு மாநிலங்களுக்கு இடையே போட்டியை அதிகரித்துள்ளதா? ஜிஎஸ்டி வரி விதிப்பை மையப்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு இடையே வரிக்கான போட்டி இல்லை. இது நல்லதா கெட்டதா? என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். 


பினாகி சக்ரவர்த்தியின் : 2000-01 ஆம் ஆண்டில் மாநிலங்கள் விற்பனை வரிக்கு ஒரு குறைந்தபட்ச விகிதத்தை அறிமுகப்படுத்தின. மாநிலங்கள் தங்கள் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு கூட்டு வரி (Value Added Tax (VAT) மூலம் பெறுவதால், GST மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைக் குறைத்துள்ளது. மாநிலங்கள் தங்கள் நிதி சுதந்திரத்திற்கு முக்கியமான வரி விகிதங்களை முடிவு செய்ய முடியாது. எனவே, பொது சேவைகளுக்கு வரி விதிக்க மாநிலங்களை அனுமதிக்க ஜிஎஸ்டி அமைப்பில் சில இடங்கள் இருக்க வேண்டும். ஜிஎஸ்டி நெகிழ்வுத்தன்மை மாநிலங்களுக்கு இடையே நிதிச் சுதந்திரத்தை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும். 


அருண் குமார் : மாநிலங்கள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை என்பதால், ஜிஎஸ்டி கூட்டாட்சிக்கு தீங்கு விளைவித்துள்ளது. அசாமின் பிரச்சினைகள் குஜராத்தில் இருந்து வேறுபட்டவை. மாநிலங்களுக்கு பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மற்றும் செலவுத் தேவைகள் உள்ளன. ஜிஎஸ்டி நாடு முழுவதும் அதிக மையப்படுத்தலை கொண்டு வந்துள்ளது. இது நல்லதல்ல. அமைப்புசாரா துறையை (unorganized sector) புறக்கணிக்கும் அதே வேளையில் இது முக்கியமாக ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு உதவியிருக்கிறது. அமைப்புசாரா துறை ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், ஒழுங்கமைக்கப்பட்ட துறை செழித்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க வழிவகுத்தது. முக்கியமாக பின்தங்கிய மாநிலங்களில் உள்ள அமைப்புசாரா துறையின் சரிவு, அந்த பிராந்தியங்களில் குறைவான செயல்திறனுக்கு வழிவகுக்கும். எனவே, ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு இடைநிலைக் கட்டத்திலும் வரி வசூலிக்காமல், விற்பனையின் இறுதி கட்டத்தில் மட்டுமே வரி வசூலிக்க பரிந்துரைக்கிறேன். இது தற்போது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உள்ளீட்டு வரவுகள் தொடர்பான ஊழல் மற்றும் போலி நிறுவனங்களின் இருப்பு போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. லாரிகளை அடிக்கடி காவல்துறையினர் மற்றும் பிற முகமைகள் தடுத்து நிறுத்தி பணம் பறிக்கிறார்கள். நேரடி வரிகளில் இருந்து அதிகம் வசூலிக்க வேண்டும் மற்றும் மறைமுக வரிகளின் வசூலைக் குறைக்க வேண்டும், இது முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கிய மாநிலங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.


அதிக அரசியல் செல்வாக்கு உள்ள மாநிலங்கள், பெரும்பாலும் மற்ற மாநிலங்களின் இழப்பில், மையத்திடம் இருந்து அதிக நிதியைப் பெற முனைகின்றன. மத்திய உதவியின் இந்த விநியோகம் எவ்வளவு நியாயமானது மற்றும் நடுநிலையானது? மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் அரசியல் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க வழி உள்ளதா?


அருண் குமார் : மத்திய அரசின் செலவினத்தில் 70 சதவிகிதம் கட்டாயமானது. அதாவது, அது நிலையானது மற்றும் மாற்ற முடியாது. மீதமுள்ள 30% நெகிழ்வானது மற்றும் ஒன்றிய அரசினால் தீர்மானிக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு எவ்வளவு பணம் தருகிறது என்பது அரசியலைப் பொறுத்தது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்குவதுதான்.


பினாகி சக்ரவர்த்தி : மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, 60% நிதியளிக்கும் போது, ​​மாநிலங்களுக்கு 40% நிதியைக் கேட்கும் போது, ​​விருப்புரிமையின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இது மாநில வளங்களை இணைக்கிறது. எந்தெந்த திட்டங்களை மத்திய அரசு நிர்வகிக்க வேண்டும், எந்தெந்த திட்டங்களை மாநிலங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதை அனைவரும் கலந்துகொள்ளும் தேசிய விவாதங்களை நாம் நடத்த வேண்டும். 14வது நிதி ஆணையம் ஒரு முக்கிய கட்டமைப்பை வழங்கியது. பெரிய பாதிப்புகள் அல்லது தேசிய முக்கியத்துவம் உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், தொலைதூர கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை நடத்துவது இந்த அளவுகோலுக்கு பொருந்தாது. எனவே, அரசியல் சீரமைப்பு குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் குறைந்தவை என்று நான் நம்புகிறேன். பல்வேறு துறைகளில் எங்கு, எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் முழு சுதந்திரம் மத்திய அரசுக்கு உண்டு.


அருண்குமார் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியர். பினாகி சக்ரவர்த்தி National Institute of Public Finance and Policy இல் பணியாற்றுகிறார்.



Original article:

Share:

இந்தியாவின் மின்சார வாகனத் துறையில் எதிர்கால முதலீடுகள் -சப்தபர்ணோ கோஷ்

 மின்சார வாகனத் துறையின் கொள்கையை நீட்டிக்க அரசாங்கம் ஏன் பரிசீலனை செய்கிறது ? மின்சார வாகன துறையில் உள்ளூர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்தியாவின் இலக்குகளுடன் திருத்தப்பட்ட கொள்கை எவ்வாறு ஒத்துப்போகிறது? உள்ளூர்மயமாக்கல் மற்றும் உற்பத்தி அளவு ஆகியவற்றில் கொள்கையின் கவனம் எந்த வழிகளில் போட்டியை அதிகரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் முடியும்?


ஊடக அறிக்கைகளின்படி, அரசு, அதன் மின்சார வாகன கொள்கையை (electric vehicle (EV) policy) விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் பொருள், உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கும், உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்வதற்கும் உலகளாவிய நிறுவனங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கையானது, ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். முன்னதாக, அனுமதி கிடைத்த மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் வசதிகளை அமைப்பவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை கிடைத்தது. புதுப்பிக்கப்பட்ட கொள்கை ஆகஸ்ட் 2024 மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  


மார்ச் மாத கொள்கையின் முதலீடு மற்றும் உள்ளூர்மயமாக்கல் பற்றிய கவனம் என்ன?


மார்ச் மாதம், மின்சார வாகனத் துறையை மேம்படுத்துவதற்கான கொள்கையை இந்தியா அறிவித்தது. இந்திய நுகர்வோருக்கான தொழில்நுட்ப அணுகலை மேம்படுத்துவது மற்றும் அதிகரித்த உற்பத்தி அளவுகள், மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் குறைந்த செலவுகள் மூலம் மின்சார வாகனத் துறையின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். உற்பத்தியில் மதிப்பு கூட்டுதலில் குறைந்தது பாதியாவது ஐந்து ஆண்டுகளுக்குள் உள்நாட்டிலேயே செய்யப்பட வேண்டும் என்று கொள்கை கோரியது. சந்தை நம்பகத்தன்மையை ஆதரிப்பதற்காக, $35,000க்கு மேல் செலவாகும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மின்சார வாகன துறையின் இறக்குமதி வரிகள் 70%-100% இலிருந்து 15% ஆக குறைக்கப்பட்டது.


உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக உள்ள இந்தியா, உள் எரிப்பு இயந்திரங்களில் (internal combustion engines (ICE))  இருந்து மின்சார வாகனங்களுக்கு உலகளாவிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கொள்கை கூறுகிறது. படிப்படியாக இறக்குமதி மாற்றீட்டை (import substitution) அடைவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்திய நுகர்வோருக்கு மின்சார வாகனங்களை மிகவும் மலிவான விலையில் கொடுப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு நிலையான மாற்றத்தையும் உறுதி செய்கிறது.


மின்வாகன சூழலமைப்புக்கு ஏன் முதலீடும் தலையீடும் தேவை?


2022-ல் நிதி ஆயோக் அறிக்கையின்படி,  இந்தியர்களுக்கு வாகனம் வாங்குவது ஒரு "பெரிய முதலீட்டு முடிவாக" உள்ளது. வாகனங்களை சொந்தமாக்குதல், பராமரித்தல், மற்றும் இயக்குவதற்கான சாத்தியமான பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது. இது மொத்த உரிமைச் செலவு (total cost of ownership) என அழைக்கப்படுகிறது. 


செலவுகள் வேகமாக குறைந்தால் மின்சார வாகன ஏற்பு (EV adoption) விரைவாகும் என்று அறிக்கை கூறியது. சில செல் உபகரணங்களை (cell components) உற்பத்தி செய்வதில் இந்தியாவின் குறைபாடுகளை இது குறிப்பிட்டது. CAM NMC 8-10% உற்பத்தி செய்ய அதிக செலவும், எலெக்ட்ரோலைட் 2-3% உற்பத்திக்கும் இந்தியாவில் அதிக செலவாகிறது. சில உதிரி பாகங்களுக்கு பெரிய முதலீடுகள் தேவை. 20-30 GWh ஆலைக்கு பிரிப்பான்கள் (separator), தாமிர தகடு (copper foil), மற்றும் ஆனோடு (anode) செயல் பொருளுக்கு (active material (AAM)) $200-500 மில்லியன் தேவை. பெரிய முதலீடுகளை ஈர்க்க இந்தியா இந்த பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்று அறிக்கை கூறியது.


பைன் & கம்பெனியின் இந்தியா மின்சார வாகன துறையின் அறிக்கை  2023 (Bain & Company’s India EV Report (2023))  இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விற்பனைக்குப் பிந்தைய சேவையானது, இரு சக்கர வாகன மின்சார வாகன பிரிவில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகன  வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவை ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. Ampere with ReadyAssist போன்ற சுயாதீன முறிவு சேவை வழங்குநர்களுடன் உள்ளடக்கிய வணிக மாதிரிகள் கூட்டு சேர்ந்துள்ள வணிக மாதிரிகளின் அளவிடுதல் பற்றிய கவலைகளையும் இது எழுப்பியது.  

  

இந்தியாவின் $100 பில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகன வாய்ப்புக்கு "குறிப்பிடத்தக்க முதலீட்டாளர் ஆதரவு" தேவைப்படும் என்று அறிக்கை கூறியது.  

 

"போட்டித்தளம் மாறிக்கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் ஐந்து அளவுகோல்களைப் பயன்படுத்தி சாத்தியமான சொத்துக்களை மதிப்பிட வேண்டும். இந்த அளவுகோல்கள்:


1. நிலையான போட்டி நன்மைகள்

2. சந்தைக்கு செல்லும் மற்றும் விநியோக திறன்கள்

3. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பிராண்ட் உணர்வு

4. திறமை மற்றும் கலாச்சாரம் 

5. உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி உத்தி


இவை அனைத்தும் அடிப்படை முறையை நிவர்த்தி செய்கிறதா?


மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கை அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முன்னுரிமைகளுக்கு ஒத்ததாக உள்ளது. இந்த நாடுகள் மின்சார வாகன மதிப்புச் சங்கிலி உற்பத்திக்கு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன. ஊக்கத்தொகைகளில் நிலம் (land), உட்கட்டமைப்பு (infrastructure), மூலதன மானியங்கள் (subsidies), நிதி ஆதரவு (financing support), நிதி ஊக்கத்தொகைகள் (fiscal incentives) மற்றும் மானிய பொது பயன்பாடுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. 


சர்வதேச எரிசக்தி முகமையின் 2024க்கான உலகளாவிய மின்சார வாகன கண்ணோட்டம் தொடர்பற்ற ஒன்றைக் குறிப்பிட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மின்சார கார்கள் இன்னும் எரிபொருள் எந்திர வாகனங்களை விட 10% முதல் 50% வரை அதிக விலை உயர்ந்தவைகளாக உள்ளன. விலை வேறுபாடு நாடு மற்றும் கார் வகைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.    


ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தங்கள் மின்சார வாகன பேட்டரி தேவைகளில் முறையே 20% மற்றும் 30% இறக்குமதி செய்கின்றன என்றும் அறிக்கை கூறியது. இது ஒருங்கிணைந்த உற்பத்தி வரிசைகளின் தேவையைக் குறிக்கிறது.


தொழில்துறை வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் (Institute for Studies in Industrial Development) ஓய்வுபெற்ற பேராசிரியர் தினேஷ் அப்ரோல் தனது கருத்துக்களை தி இந்துவுடன் பகிர்ந்து கொண்டார். அந்நிய முதலீடுகள் எப்போதும் எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை என்று அவர் கூறினார். இத்தகைய கொள்கைகள் நடைபெற வேண்டிய உற்பத்தி வகையை நிர்ணயிக்க வேண்டும் என அப்ரோல் நம்புகிறார். இடர் நீக்கம் மற்றும் கடன் நீக்கம் ஆகியவற்றிற்கு மட்டுமே கவனம் இருக்ககூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.


பேராசிரியர் அப்ரோலின் கூற்றுப்படி, அந்நிய நேரடி முதலீடு அதன் முழு திறனை அடைய, வலுவான உள்நாட்டு அடித்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இது முக்கியமான உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்தல், தொழில்நுட்பத்தை மாற்றுதல் மற்றும் உள்ளூர் உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அம்சங்களில் ஒரு முக்கிய நாடாக மாறாமல், நாடுகள் உலகளாவிய உற்பத்தி சங்கிலிகளில் எஞ்சியிருக்கும் உற்பத்தியாளருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.   

 

திரு. அப்ரோல் உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவது மற்றும் முக்கியமான உபகரணங்களை உற்பத்தி செய்வதில் அவர்களின் திறன்களை வலுப்படுத்துவது முக்கியம் என்று பரிந்துரைத்தார். இந்த அணுகுமுறை வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களை உள்ளூர் விநியோக வலையமைப்புகளைப் (domestic suppliers’ networks) பயன்படுத்த ஊக்குவிக்கும், மேலும் நிலையான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும்.



Original article:

Share: