கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை தகுதி நீக்கம் செய்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு -உத்கர்ஷ் ஆனந்த்

 44% பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் கொண்ட நபரை மருத்துவக் கல்வியைத் தொடர அனுமதிக்கும் வழக்கில்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


உடல் குறைபாடுகளின் தரநிலைகளின் அடிப்படையில் தனிநபர்களுக்கு கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. ஒரு நபரின் குறைபாடு ஒரு படிப்பை வெற்றிகரமாக முடிப்பதைத் தடுக்கிறதா என்பதை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்கள் (disability assessment boards) மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.


அணுகல்தன்மை குறித்த நீண்ட காலப் பிரச்சினையை எடுத்துரைத்த நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய், அரவிந்த் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியம்,  குறிப்பிட்ட உடல் குறைபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று தீர்மானிக்கிறது.  வாரியம் இவ்வாறு செய்வதைத் தடுக்க போதுமானதாக விதிமுறைகள் இல்லை என்றும் கூறியது.  மேலும், “அளவீடு இயலாமை என்பது, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவதிலிருந்து  குறிப்பிட்ட உடல் குறைபாடு கொண்ட ஒரு நபரை விலக்கிவிடாது என்று நாங்கள் நம்புகிறோம். 


உடல் குறைபாடு உள்ளவர்களை மதிப்பீடு செய்யும் மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியங்கள், நபரின் உடல குறைபாடு  மாற்றுத்திறனாளி தகுதிப்பாட்டிற்குள் வருமா என்பதை நேர்மறையாகப் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்கள் ஒரு நபர் படிப்பைத் தொடர தகுதியற்றவர் என்று முடிவு செய்தால் அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். மேலும், மதிப்பீட்டு வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் ( National Medical Commission (NMC)) உத்தரவிட்டது.


அத்தகைய மேல்முறையீட்டு அமைப்புகளை உருவாக்குவது நிலுவையில் உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்களின் எதிர்மறையான கருத்துக்களை நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளில் முறையீடு செய்யலாம் என அமர்வு உத்தரவிட்டது. இதை நீதிமன்ற தெளிவிற்காக எந்தவொரு முதன்மை மருத்துவ நிறுவனத்திற்கும் அனுப்பலாம். மேலும், அந்த மருத்துவ நிறுவனத்தின் கருத்தின் அடிப்படையில்  அந்த நபருக்கு நிவாரணம் வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும்."


44% பேச்சு மற்றும் மொழி குறைபாடுள்ள நபர் மருத்துவக் கல்வியைத் தொடர முயன்ற வழக்கில் இருந்து இந்த தீர்ப்பு எழுந்தது. 40% க்கும் அதிகமான பேச்சு மற்றும் மொழி குறைபாடு உள்ள நபர்களை மருத்துவப் படிப்புகளில் இருந்து தடுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கடுமையான விதியின் காரணமாக மனுதாரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இந்தத் தீர்ப்பு இந்தியாவில் மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்குகிறது. இது மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை (Medical Education Regulation ) 1997-க்கு சவால் விடுகிறது.  தற்போது 40% அல்லது அதற்கு மேற்பட்ட  குறைபாடு உள்ள நபர்களை மருத்துவ படிப்புகளில் இருந்து விலக்குகிறது. பல்வேறு வகையான குறைபாடுகளை வேறுபடுத்தி பார்க்க தவறியதற்காகவும், ஒரு  நபரின் உண்மையான செயல்திறன் திறனைக் கருத்தில் கொள்ளாததற்காகவும் இந்த விதியை உச்ச நீதிமன்ற அமர்வு விமர்சித்தது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கல்வி முறை மற்றும் பிற துறைகளில் குறைபாடுகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. கடந்த கால நிகழ்வு மற்றும் சதவீதங்களை நாம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு நபரின் உண்மையான திறன்களைப் புரிந்து கொள்ள தனித்தனியாக மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றது.


செப்டம்பர் 18 அன்று ஒரு சுருக்கமான உத்தரவின் மூலம் மனுதாரரை மருத்துவப் படிப்பில் சேர்க்க அனுமதி அளித்தாலும், செவ்வாய்கிழமை தீர்ப்பு அந்த முடிவிற்கான காரணத்தை வழங்கியது. ஒவ்வொரு நபரை தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது. 


இயலாமையின் சதவீதத்தை மட்டுமின்றி, நபரின் திறனில் அதன் தாக்கத்தையும் மதிப்பிடும் வகையில், மதிப்பீட்டு வாரியங்கள் முழுமையான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிபதி விஸ்வநாதன் எழுதிய தீர்ப்பில், “மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியங்கள் ஒரு நபரை நீக்கம் செய்வதற்கான இயலாமை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல் குறைபாடுகளை மட்டும்  பார்க்கும்  ஒரே மாதிரியாக செயல்படும் இயந்திரங்களை போல் செயல்படக் கூடாது என்று விளக்கினார். அத்தகைய அணுகுமுறை அரசியலமைப்பின் 14 மற்றும் 21 (சமத்துவம் மற்றும் கண்ணியம்) மற்றும் நீதி, சமத்துவம் மற்றும் நல்ல மனசாட்சியின் அனைத்து கொள்கைகளுக்கும் முரண்படும்.


ஒரு நபரின் குறைபாடு அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியம் கண்டறிந்தாலும், இந்த முடிவை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும் என்று அமர்வு தெளிவுபடுத்தியது. குறிப்பிட்ட மேல்முறையீட்டு கட்டமைப்புகள் நிறுவப்படும் வரை நீதித்துறை மறுஆய்வு ஒரு விருப்பமாக இருக்கும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது.


மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (Right of Persons with Disabilities Act) 2016, உள்ளடக்கிய விளக்கத்திற்கு அழைப்பு விடுத்த அமர்வு, எதிர்கால விதிமுறைகள் "உள்ளடக்கிய அணுகுமுறையை" பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குப் பதிலாக வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.


மாற்றுத்திறனாளி நபர்களுக்கான அணுகல் மற்றும் பங்கேற்பை எளிதாக்குவதற்கு நிறுவனங்கள் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் உள்ள ஒரு தரநிலையான "முறையான உதவி" குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் உடனான நேர்மறையான தொடர்புக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தை (Union ministry of social justice and empowerment) நீதிமன்ற அமர்வு பாராட்டியது மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பில் இதே போன்ற மாற்றங்களை வலியுறுத்தியது.


தனித்தனி நடவடிக்கைகளில் நீதிமன்ற உத்தரவால் தூண்டப்பட்டு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (Union ministry of social justice and empowerment) ஜனவரி 25, 2024 அன்று தேசிய மருத்துவ ஆணையத்திற்க்கு ஒரு தகவல் அனுப்பியது. இதில் தகவல் தொடர்பு உதவி சாதனங்கள் இயலாமையின் விளைவுகளை குறைக்க உதவும் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளை பரிசீலிக்க தேசிய மருத்துவ ஆணையம் கோரியது.


 விண்ணப்பப் படிவங்களில் குறைபாடுகளை முறையாக வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது. தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களின் குறைபாடுகள் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை இது உறுதி செய்கிறது. மதிப்பீட்டு வாரிய முடிவுகளை முறையீடு செய்ய, மேல்முறையீட்டு அமைப்புகளை நிறுவவும் முன்மொழிந்தது.


40%க்கும் அதிகமான குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை சீராக மறுக்கும் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதியை இந்தத் தீர்ப்பு ஏற்கவில்லை.


"பாகுபாடு குறித்த மனுவை விசாரிக்கும் அரசிலமைப்பு நீதிமன்றம் உண்மையான சமத்துவம் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும். மேலோட்டமான சமத்துவத்தின் முன்கணிப்பால் நீதிமன்றத்தைத் திசைதிருப்பக்கூடாது  என்று அமர்வு குறிப்பிட்டது. தனிப்பட்ட வேறுபாடுகளை அங்கீகரிக்கும் மற்றும் மதிப்பிடும் அமைப்புக்காகவும்  வாதிடுகிறது.


குறைபாடுகள் உள்ள நபர்களை விலக்குவதற்கான காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக அவர்களை வரவேற்கும் சூழலை உருவாக்குவதில் நிறுவனங்களின் பங்கை நீதிமன்றம் எடுத்துக்காட்டியது.  அதில், “அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அணுகுமுறை, மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவது எப்படி  என்பதில் சிறந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வது என ஆராய கூடாது என்றது.


இந்த உள்ளடக்கிய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.  மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டத்தின் நோக்கங்களை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒழுங்குமுறைகளை விளக்குவதற்கு நீதிமன்றத்தை கட்டாயப்படுத்தும் என குறிப்பிட்டது.


இந்தியா மற்றும் உலக அளவில் குறைபாடுகள் உள்ள பல குறிப்பிடத்தக்க நபர்களை இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டியது. அவர்கள் சவால்களை மீறி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். பரதநாட்டிய நடனக் கலைஞர் சுதா சந்திரன், மலையேறும் அருணிமா சின்ஹா ​​மற்றும்  மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர் டாக்டர் சதேந்திர சிங் போன்ற இந்திய சாதனையாளர்களை உதாரணமாகக் குறிப்பிட்டார்.


மேலும்,  நீதிமன்ற அமர்வு அதன் தீர்ப்பின்  முடிவில் வரலாற்று சின்னங்களை குறிப்பிட்டுள்ளது. அதில், "ஹோமர், மில்டன், மொஸார்ட், பீத்தோவன், பைரன் மற்றும் பலர் தங்கள் முழுத் திறனையும் உணர அனுமதிக்காமல் இருந்திருந்தால் இந்த உலகம் மிகவும் ஏழ்மையாக இருந்திருக்கும்" என குறிப்பிட்டது.




Original article:

Share:

கோவாக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் பற்றிய ஓர் ஆய்வு மற்றும் பொது நம்பிக்கை, ஆராய்ச்சி தொடர்பான மூன்று படிப்பினைகள் -ஷைலஜா சந்திரா

 மற்ற நாடுகளில் நடப்பதைப் போல, கல்வியாளர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் ஒரு போக்காக மாறினால், அது சுதந்திரமான ஆராய்ச்சிகளை, குறிப்பாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பாதிக்கும். இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய இழப்பாளர்கள் நுகர்வோர்களாக இருப்பார்கள். அது ஒரு பெரிய கவலையாக இருக்கும்.


கோவிட் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்டு, 'இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் BBV152 கொரோனா வைரஸ் தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பு பகுப்பாய்வு : வட இந்தியாவில் ஓராண்டு வருங்கால ஆய்வின் கண்டுபிடிப்புகள்' (Long-term safety analysis of the BBV152 coronavirus vaccine in adolescents and adults: Findings from a 1-year prospective study in North India) என்ற தலைப்பில் இந்த ஆய்வு மே 2024-ல் ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச இதழான Drug Safety-ல் வெளியிடப்பட்டது. 


வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் பதிவு செய்து கோவாக்சின் தடுப்பூசிகளைப் பெற்ற 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 பெரியவர்களிடமிருந்து தொலைபேசி பதில்களை இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் கோவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்புகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு விசாரணைகள் நடத்தப்பட்டன.


Drug Safety இதழின் ஆசிரியர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research (ICMR)) தலைவரால் "தடுப்பூசி பாதுகாப்பு பற்றிய மறைமுகமான முடிவுகளை ஆதாரங்களால் ஆதரிக்கவில்லை" என்று குற்றம் சாட்டியதால் இந்த சர்ச்சை தொடங்கியது. ஆராய்ச்சி நிறுவனம் அதன் வழிமுறைகளில் குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளது. AESI அல்லது "சிறப்பு ஆர்வமுள்ள பாதகமான நிகழ்வுகள்" (adverse events of special interest(AESI)) என்ற சொல் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் அது கண்டறிந்தது. இந்த வார்த்தைக்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை உள்ளது. இந்த முரண்பாடு முக்கியமானது. 


ஏனெனில், இது மருத்துவ நிகழ்வுகள் பற்றிய தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது என்பதைப் பாதிக்கிறது. ஐ.சி.எம்.ஆர் அந்த ஆய்வறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது. பின்னர் கோவாக்சின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக், பத்திரிகையின் ஆசிரியர்களுக்கு எதிராக "கோவாக்சினின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து அதிர்ச்சி, எச்சரிக்கை மற்றும் தயக்கம்" ஆகியவற்றை ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்தனர். 


600 கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களால் எழுதப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் இருந்து ஒரு பெரிய தாக்கம் குறிப்பிட்டிருந்தது. இதில், அவர்கள் வழக்கை விமர்சித்தனர் மற்றும் சுதந்திரமான ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலுவாக ஆதரித்தனர். 


ஆதரவாக செயல்பட்டவர்கள் கோவிட் தொடர்பான பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சேகரித்து பகிர்ந்து கொள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டனர். "தடுப்பூசியால் இந்த நிகழ்வுகள் ஏற்படுவது இன்னும் தெரியாவிட்டாலும்..." என்ற தகவலைப் பகிர்வதை அவர்கள் வலியுறுத்தினர்.


கல்வி சுதந்திரத்திற்கான ஆதரவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த மாதம், பத்திரிகை சர்ச்சைக்குரிய தலைப்பை நீக்கியது. இது கவலையளிக்கிறது. இதற்கிடையில், பாரத் பயோடெக் நிறுவனம் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. இதனால், ​​​​ஆசிரியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வைக்கிறது.

 

தடுப்பூசி போடப்பட்ட பிறகு மக்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க ஆராய்ச்சியாளர்கள் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தினர். அவர்கள் இந்தத் தரவைத் தொகுத்து, அதை புள்ளிவிவர ரீதியாக பகுப்பாய்வு செய்தனர். மேலும், ஒவ்வொரு நோய் மற்றும் நிலை குறித்தும் நிபந்தனையின் அடிப்படையில் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டன. தடுப்பூசிக்குப் பிந்தைய நிகழ்வுகள் தொடர்பான இந்த ஆராய்ச்சியாளர்களின் குழுவின் முந்தைய பல கட்டுரைகள் வெளிப்படையாக எந்த சர்ச்சையையும் உருவாக்கவில்லை.


இந்த நேரத்தில், இது வியத்தகு தலைப்பு மற்றும் "கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (33%) பங்கேற்பாளர்கள் AESIகளை உருவாக்கியுள்ளனர்" என்ற முடிவும் எச்சரிக்கைக்கு வழிவகுத்திருக்கலாம். 1,000-க்கும் குறைவான நபர்களின் மிகச் சிறிய மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. ஏனென்றால், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும், மக்கள் தொகை மிகவும் அதிகம் வேறுபட்டதாக உள்ளது.


இந்த அத்தியாயம் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது, அவை கட்டுரைக்கு அப்பால் செல்கின்றன. 


முதல் இதழின் ஆசிரியர், தனது தலையங்க முடிவை பாதுகாக்கும் பொறுப்பு பத்திரிகைக்கு இல்லையா? பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நெறிமுறைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறையை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றினர் மற்றும் பத்திரிகையின் சக மதிப்பாய்வாளர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டனர். 


இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டது. இது மிகவும் திறந்ததாக இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையின் திடீர் மாற்றத்திற்கு இப்போது விளக்கம் தேவை. கட்டுரையை விமர்சிப்பதற்குப் பதிலாக, வெளிப்படையான சிக்கல்கள் ஏன் தவறவிட்டன என்பதை பத்திரிகை விளக்க வேண்டும்.


இரண்டாவது கேள்வி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியாவின் தலைசிறந்த அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பற்றியது. ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியைத் திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) பாரத் பயோடெக் உடன் இணைந்து கோவிட்-19க்கான கோவாக்சின் காப்புரிமையின் இணை உரிமையாளராக உள்ளது. இதன் காரணமாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தனது பங்கைப் பற்றி மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஒரு அங்கமான தேசிய வைராலஜி நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வைரஸ் பற்றிய தகவல்களை வழங்கியது. 


2021-ஆம் ஆண்டில், நோய்க்கான மோதல் பற்றிய கவலைகள் இருந்தன. ஆனால், கோவாக்ஸின் பயன்படுத்தப்பட்டதும், இந்திய அறிவியலுக்கு ஒரு பெரிய வெற்றியாகப் பாராட்டப்பட்டதும் இவை மறைந்துவிட்டன. இப்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழக கட்டுரை சர்ச்சையுடன், இந்த பிரச்சனைகள் மீண்டும் வருகின்றன. இந்த வரலாற்றை நினைவூட்டுவது பயனுள்ளதாக இருக்கும்.


மூன்றாவது கேள்வி ஆராய்ச்சியாளர்களை நோக்கி உள்ளது. இது, எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புக்கான ஆலோசனை எளிதானது. எவ்வாறாயினும், யாரை எச்சரிக்க வேண்டும் மற்றும் யார் செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும் என்பதை தீர்மானிக்க கடினமாக உள்ளது. 


கோவாக்சின் அல்லது வேறு ஏதேனும் கோவிட் தடுப்பூசி, கோவிட்-19 அல்லது அதன் மாறுபாடுகளின் தீவிரமான பரவல் காரணமாக மீண்டும் பயன்படுத்தப்படும். அது நடந்தால், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்க தடுப்பூசி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்தின் மாவட்ட சுகாதார நிலையம் தடுப்பூசிகளின் நிர்வாகத்தை நிர்வகிக்கும்.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) பல எச்சரிக்கையான பரிந்துரைகளில், பலர் மேல் சுவாச நோய்த்தொற்றுகள் (upper respiratory infections (URIs)) மீது கவனம் செலுத்துகின்றனர். அவை சிறப்பு ஆர்வமுள்ள பெரும்பாலான பிரச்சனை நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த பரிந்துரைகள் யாருக்காக? பொதுவான மேல் சுவாச நோய்த்தொற்றுகளான இருமல், சளி, சைனஸ் பிரச்சனைகள் மற்றும் தொண்டை வலிக்கு எதிராக யார் எச்சரிக்கையாக இருக்க முடியும்?


முகப்பரு, கிட்டப்பார்வை, முடி உதிர்தல் மற்றும் தோல் பிரச்சினைகள் ஆகியவை பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது இன்னும் அபத்தமானது. எந்தவொரு கொள்கையும் இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும்? சரியாகச் சொல்வதானால், தடுப்பூசியுடன் எந்தவொரு காரணமான தொடர்பையும் கட்டுரையானது தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், அத்தகைய இணைப்புகள் மறைமுகமாகத் தெரிகிறது.இருப்பினும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அறிக்கை மூன்று பெரிய கவலைகளை கோடியிட்டுள்ளது. முதலாவதாக, மற்ற நாடுகளில் நடப்பதைப் போல, கல்வியாளர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் ஒரு போக்காக மாறினால், அது சுதந்திரமான ஆராய்ச்சிகளை, குறிப்பாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பாதிக்கும். மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். 


இரண்டாவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) மற்றும் பல்கலைக்கழகங்கள் மருத்துவ ஆராய்ச்சி முன்மொழிவுகள் பொது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க அல்லது தடுப்பூசி உள்ளிட்ட அத்தியாவசிய பொது சுகாதார சேவைகளை வழங்குவதை பாதிக்காமல் இருக்க நிறுவன ரீதியாக வெளிப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, மருத்துவ ஆராய்ச்சி முறையானது, ஆராய்ச்சி நடைமுறைக்கு சாத்தியமில்லாத முடிவுகளை எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியைத் தொடர்வது இன்றியமையாதது என்றாலும், சம பலத்தில் இருப்பது முக்கியமானது.




Original article:

Share:

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை இந்தியா ஏன் கவனிக்க வேண்டும்? -சி.ராஜா மோகன்

 வரலாற்று ரீதியாக, பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் உள்ள முன்னேற்றங்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் உட்பட தெற்காசியாவின் உள், பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளை வடிவமைக்க நிறைய உதவியுள்ளன


பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவில் தீவிர கவனம் செலுத்துவது, நமது அண்டை நாடுகளிலும் அதைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முன்னேற்றங்களை புறக்கணிக்க வழிவகுக்கிறது. உதாரணமாக, பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் டுராண்ட் எல்லைக்கோட்டின் (Durand Line) சுருக்கமான பார்வையுடன், இந்த வாரம் ராட்கிளிஃப் எல்லைக்கோடு (Radcliffe Line) வழியாக பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் தொடர்பான அனுமானங்களைவிட அதிகமான வெளிப்பாடுகளாக அமையும்.


பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் உள்ள கைபர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்ருதில் உள்ள பஷ்டூன் குவாமி ஜிர்கா (Pashtun Qaumi Jirga), தளத்தில் ஜெய்சங்கருக்கும், பாகிஸ்தானிய சக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை விட நமது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கக்கூடும்.


பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், இருநாடுகளின் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் உள்ள ஆரோக்கியம் பெரும்பாலும் உண்மையான முடிவுகளுடன் பொருந்துவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர அடிப்படையில் ஒன்றுக்கொன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ஒவ்வொரு இராஜதந்திர ரீதியில் நாடுகளின் சந்திப்பும் ஆரோக்கியம், பதட்டம் மற்றும் அச்சம் ஆகியவற்றின் கலவையை ஏற்படுத்துகிறது.


வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இது, பத்தாண்டுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது நாடுகளின் இருதரப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது என இரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ராட்கிளிஃப் எல்லைக்கோட்டில் (Radcliffe Line) இருநாடுகளின் நம்பிக்கை உள்ளது. தற்போது,  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை சில நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுத்தாலும், அவை இருநாடுகளின் உறவின்  தன்மையை கணிசமாக மாற்றாது.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பத்தாண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இது நாடுகள் அல்லது அதற்கு அப்பாற்பட்ட உலகத்திலோ சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்போதாவது, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவ்வப்போது ஏற்படும் இராணுவ நெருக்கடிகள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுசக்தி நிலையை அதிகரிக்கும் அபாயங்கள் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.


கடந்த பத்தாண்டுகளாக, பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் ஏற்பட்ட வரலாற்று தன்மைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் எதிர்மறையான அணு நிலைத்தன்மை உறுதியளிக்கிறது. 1979-ல் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நமது நாடு மற்றும் உலகின் புவிசார் அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வுகளில் ஒன்று ஈரானிய புரட்சியாகும். இந்த புரட்சியின் விளைவாக, தெஹ்ரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவ வழிவகுத்துள்ளது.


ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் உலக நாடுகளை தொடர்ந்து பாதித்து வருகிறது. இது, மேற்குலக நாடுகளுடன் தெஹ்ரானின் மோதலும் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. தற்போது, ​​ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே, அமெரிக்காவின் ஆதரவுடன் போர் நிலவும் அபாயம் உள்ளது. இதனால், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்.


வரலாற்றில் மற்றொரு முக்கிய நிகழ்வு ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு ஆகும். இந்தப் படையெடுப்பு 1978-ல் ஆட்சிக்கு வந்த காபூலில் ஒரு புரட்சிகர ஆட்சியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. அமெரிக்காவும் பாகிஸ்தான் உட்பட அதன் பிராந்திய நட்பு நாடுகளும் சோவியத் படைகளுக்கு எதிராக தீவிர இஸ்லாமிய துணை இராணுவ (இஸ்லாமிய ஜிஹாத்) அமைப்பை நிகழ்த்த ஏற்பாடு செய்தன. இந்த முயற்சி சோவியத் ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றது மற்றும் 1980-களின் இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வழிவகுத்துள்ளது. 


துணைக்கண்டத்தில் இஸ்லாமிய போர்க்குணம் மற்றும் மத தீவிரவாதம் இயல்பாக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ஜிகாத் அமைப்பை தீவிரமாக ஆதரித்துள்ளது. இருப்பினும், இந்த ஆதரவு பாகிஸ்தானுக்குள் தீவிரவாதம் அதிகரிக்க வழிவகுத்தது. 1980-களில் ஜெனரல் ஜியாவுல் ஹக்கின் கீழ் இஸ்லாமியமயமாக்கல் அரசியலால் இந்த உள் பிரச்சினை தூண்டப்பட்டது.


ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சியே ஆப்கன் ஜிஹாத்தின் முக்கிய விளைவாக உள்ளது. செப்டம்பர் 2001-ல் வாஷிங்டன் மற்றும் நியூயார்க்கிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை இயக்கிய அல் கொய்தாவை தலிபான் அமைப்பு ஆதரித்தது. மேலும், இந்த அமைப்பின் தாக்குதல்களால் 2001-ல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க படையெடுப்பிற்கு வழிவகுத்தது. இந்த படையெடுப்பு வன்முறை மத தீவிரவாதத்தை ஒழித்து நவீன ஆப்கானிய அரசை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதன் விளைவாக, ஆகஸ்ட் 2021-ல் காபூலில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.


பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் டுராண்ட் எல்லைக்கோட்டிலுள்ள (Durand Line) பஷ்டூன் பகுதிகளில் தலிபான்கள் திரும்பியதால் உறுதியற்ற தன்மை அதிகரித்துள்ளது. முதலில், தலிபான்கள் மூலம் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முடியும் என பாகிஸ்தான் நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. இதனால், தலிபான்கள் இப்போது தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ராவல்பிண்டி நகருக்கு எதிராக பஷ்டூன் மக்களிடமிருந்து பாரம்பரிய கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்புகின்றனர்.


இரண்டாவதாக, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானுக்கு (Tehrik-e-Taliban Pakistan (TTP)) புகலிடம் வழங்கியதாக காபூல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குழு டுராண்ட் எல்லைக்கோடு (Durand Line) வழியாக பஷ்டூன் நிலங்களுக்குள் தன்னாட்சி மண்டலங்களை உருவாக்க முயற்சிக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள் பாகிஸ்தான் அரசின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கடந்த காலங்களில், ராவல்பிண்டி பகுதிகளில் இஸ்லாமிய போர்க்குணத்தை ஊக்குவித்தது. அதன் தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானின் பஷ்தூன் மக்களின் வாழ்க்கையை கவலைகிடமாக்கியுள்ளன.


 


மூன்றாவதாக, பஷ்தூன் தஹாஃபுஸ் (சுயமரியாதை) இயக்கத்தின் (Pashtun Tahafuz (self-respect) Movement (PTM)) எழுச்சிக்கு நம்மை கொண்டுச் செல்கிறது. இந்த இயக்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையான பஷ்டூன் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அதை தடை செய்துள்ளது. PTM ஆல் கூட்டப்பட்ட பஷ்டூன் குவாமி ஜிர்கா இந்த வாரம் 22 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலுடன் அதன் விவாதங்களை முடித்துக் கொண்டது. 


அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் பஷ்டூன் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று PTM விரும்புகிறது. மேலும், அவர்களது செயற்பாட்டாளர்கள் பல அரசால் ஏற்பாடு செய்த "காணாமல் போகும்" நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும், பஷ்டூன் நிலங்களில் அதன் இயற்கை வள சுரண்டலின் பலன்களை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும், விசா இல்லாத வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் டுராண்ட் எல்லைக்கோடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று பி.டி.எம் விரும்புகிறது. 


அவர்களின் அமைப்பின் தன்மை மற்றும் கருத்தியல் நிலையின் அடிப்படையில், ஆப்கானிய தாலிபான், தெஹ்ரிக் இ தலிபான் மற்றும் பிடிஎம் போன்ற அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை ஆகும். ஆனால், அவர்களுக்கு இதேபோன்ற பல கோரிக்கைகள் உள்ளன. இதில், பிரிக்கப்பட்ட பஷ்டூன் நிலங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார ஒற்றுமையை மறுசீரமைக்க அனுமதிக்கும் ஒரு திறந்த டுராண்ட் எல்லைக்கோடு ஒரு முக்கிய கோரிக்கையாகும். 


இந்த சூழ்நிலை ராவல்பிண்டி பகுதியின் சுதந்திரமான பஷ்துனிஸ்தானின் அரசு பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். பஷ்டூன் பிரிவினைவாதத்தை ஒடுக்கும் வலிமை பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ளது. பஷ்டூன்களைப் பிரிப்பதன் மூலமும், அதன் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமும், மத உணர்வுகளைக் கவர்வதன் மூலமும் அவர்கள் இதைச் செய்யலாம். இருப்பினும், பஷ்டூன் பிராந்தியங்களில் 50 ஆண்டுகால சமூக மாற்றத்தின் எதிர்மறையான விளைவுகளை புறக்கணிக்க முடியாது.


 


பலுசிஸ்தானில் கலவரம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் பணிபுரியும் சீன நாட்டவர்களுக்கு எதிராகவும், பஞ்சாபி குடியேறியவர்களுக்கு எதிராகவும் அதிக வன்முறைகள் காணப்படுகின்றன. அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் அதிருப்தி, பஷ்டூன்கள் மற்றும் பலூச் மக்களிடையே தேசியவாதத்தை தூண்டுகிறது. இந்த சூழ்நிலை பாகிஸ்தானின் மேற்கு எல்லைகளை பல ஆண்டுகளாக நிலையற்றதாக வைத்திருக்கும். பாகிஸ்தானின் நிலைத்தன்மை தவிர்க்க முடியாமல் இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளை பாதிக்கும்.


கடந்த ஐம்பது ஆண்டுகளாக, பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட புவிசார் அரசியல் மாற்றங்கள் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் பிராந்தியத்தில் உள்ள உள்நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச உறவுகள், குறிப்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவுகளும் அடங்கும். இந்த வரலாற்றுப் போக்கில் நாம் இப்போது ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறோம். ராட்கிளிஃப் எல்லைக்கோடு (Radcliffe Line) தொடர்பான இந்தியாவின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அதன் மேற்கு எல்லையில் உள்ள பதற்றத்திலிருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ளும் பாடங்களைப் பொறுத்து அமைகிறது.




Original article:

Share:

மதரஸாக்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு மாநிலங்களை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கேட்டுக்கொள்கிறது : இதில், கேரளா எப்படி வேறுபடுகிறது? -ஷாஜு பிலிப்

 கேரளாவில், அரசியல் தலைவர்கள் ‘தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (National Commission for Protection of Child Rights (NCPCR))’ நடவடிக்கையை விமர்சித்தாலும், இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.


Madrasas :  மதரஸா எனும் அரபி வார்த்தைக்கு கல்வி நிறுவனம் என்று பொருள். மதரஸா கல்வி முறையானது, பழைய பாரம்பரிய முறையில் செயல்படுகிறது.


தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது (NCPCR) சமீபத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், மதரஸா வாரியங்களை "மூட வேண்டும்" என்று பரிந்துரை செய்ததுடன், மதரஸாக்கள் மற்றும் மதரஸா வாரியங்களுக்கு அரசு நிதி வழங்குவதை நிறுத்தவும் அவர்கள் பரிந்துரைத்தனர். கூடுதலாக, மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளை "முறையான பள்ளிகளில்" (formal schools) சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


கேரளாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் என்சிபிசிஆர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டாலும், கேரளாவில் அவை சிறிய விளைவையே ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால், இந்த மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் அரசு நிதியைப் பெறுவதில்லை. மேலும், மதரஸா கல்வியானது, வழக்கமான முறையில் பள்ளிக் கல்வியில் தலையிடாது.


மதரஸா கல்வி வாரியங்கள் (Madrasa education boards) 


கேரளாவில், சன்னி பிரிவுகள் மற்றும் முஜாஹித் போன்ற பல்வேறு முஸ்லீம் குழுக்களுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளால் மதரஸா கல்வி நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. சமஸ்தா கேரளா இஸ்லாம் மாதா வித்யாபயாச வாரியம் (Samastha Kerala Islam Matha Vidyabyasa Board) மற்றும் சமஸ்தா கேரளா சன்னி வித்யாபயாச வாரியம் (Samastha Kerala Sunni Vidyabhyasa Board) ஆகியவை இதன் முக்கிய அமைப்புகளாகும். இந்த வாரியங்கள் பல மதரஸாக்களை மேற்பார்வையிடுகின்றன. இதில், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், கற்பித்தல், தேர்வுகளை நடத்துதல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் மாணவர்களை இடமாற்றங்களும் (transfers) இந்த வாரியங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.


வகுப்பு 1 முதல் 12 வரை இயங்கும் மதரஸாக்கள் பொதுவாக ஒரு மசூதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மதரஸாக்களில், காலை நேரங்களில் வகுப்புகள் 9 மணி வரை நடைபெறுகின்றன. அதன் பிறகு, மாணவர்கள் தங்கள் வழக்கமான கல்விக்காக அருகிலுள்ள பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். சில மதரஸாக்களில் மாலை நேர வகுப்புகளும் உண்டு.


கேரளாவில், மதரஸா கல்வி மத மற்றும் ஒழுக்க போதனைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முஸ்லீம் நிர்வாகத்தின் கீழ் உள்ள சில CBSE பள்ளிகள் வழக்கமான பள்ளி நேரத்திற்கு முன்பாகவே இந்த பள்ளிகளுக்குள் மதரஸா முறையில் கல்வியை கற்பிக்கின்றன. கூடுதலாக, சில ஆங்கில-முறையில் (English-medium schools) மதரஸா கல்வியை வழங்குகின்றன. மேலும், இந்த பள்ளிகளும் மதரஸா கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டில் உள்ள குழந்தைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மதரஸாக்கள் மின்-கற்றல் வசதியையும் (e-learning facility) வழங்குகின்றன.


கேரளா கல்வி வாரியங்கள் (Kerala boards) மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களை இணைத்துள்ளன. இந்த மாநிலங்களில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை அடங்கும்.


ஆசிரியர்களின் சம்பளம் 


கேரளாவில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் மதரஸா கல்வி நிறுவனங்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் மார்க்க கல்வியில் (religious education) தகுதி பெற்றவர்கள் ஆவார். மேலும், அவர்கள் உள்ளூர் மசூதி அல்லது மஹல்லு குழுக்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான நியமனங்கள் மதரஸாக்களுடன் இணைந்த வாரியங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன. அவர்களின் சம்பளம் மஹல்லு அல்லது மஸ்ஜித் குழுக்களால் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் முக்கியமாக பெற்றோரிடம் இருந்து நிதி வசூலிக்கின்றன.

 

அரசின் ஈடுபாடு 


மாநில அரசு மதரஸாக்களை நடத்துவதில்லை. ஆனால், மதரஸாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான நல நிதியை நிறுவியுள்ளது. சச்சார் குழு (Sachar Committee) அறிக்கையின் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பாலோலி முகமது குட்டி (Paloli Muhammed Kutty) தலைமையிலான குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு மதரஸா ஆசிரியர்களுக்கான நல நிதியை அரசு உருவாக்கியது.


இந்த நிதியில் பங்குதாரர்களில் மாநில அரசு, மதரஸா ஆசிரியர்கள் மற்றும் மதரஸா நிர்வாகத்தினர் அடங்குவர். 2018-19ஆம் ஆண்டில், நல நிதி வாரியம் (welfare fund board) நிறுவப்பட்டது. இந்த வாரியத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரும், பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அரசு ஊழியர் ஒரு தலைமை இயக்க அதிகாரியும் இந்த வாரியத்தில் உள்ளனர். இந்த வாரியம் 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த உறுப்பினர்களில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு மதரஸா நிர்வாக சபைகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.


2010-ம் ஆண்டில், மதரஸாக்களின் நல நிதிக்காக மாநில அரசு ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும், மதரஸா ஆசிரியர்களும் மற்றும் நிர்வாகமும் மதரஸா நிறுவனத்திற்கு பங்களிப்பாக மாதம் தலா ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையின்படி, இந்த நிறுவனத்திற்கான வைப்புத்தொகை (deposits) வங்கிகளில் இருந்து அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. 


2015-16ஆம் ஆண்டில், மாநில கருவூலத்தில் வட்டியில்லா வைப்புத்தொகையான (deposits) ஊக்கத் தொகையாக ரூ.3.75 கோடியை மாநில அரசு வழங்கியது. பின்னர், 2021-ம் ஆண்டில், மாநிலத்திடமிருந்து வட்டியில்லா வைப்புத்தொகைக்கான ஊக்கத்தொகையாக மேலும் ரூ.4.16 கோடியை மதரஸா வாரியம் திரும்பப் பெற்றது. தற்போது, ​​வாரியத்தின் கட்டணக் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய கருவூலத்தில் மொத்தம் ரூ.12 கோடி வைப்புத்தொகையாக (deposits) உள்ளது.


ஆசிரியர்கள் ஓய்வூதியமாக என்ன வருவாய் ஈட்டுகிறார்கள் 


தற்போது, 1,800 மதரசா ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,500 முதல் 2,700 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ரூ.50 கட்டணம் செலுத்திய ஆசிரியருக்கு ஓய்வூதியம் ரூ.1,500 ஆகவும், 10 ஆண்டுகளுக்கு ரூ.2,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கேரளாவில் 2.25 லட்சம் மதரஸா ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் 28,000 ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளது. இந்த வாரியம் வீட்டுக் கடன்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான உதவி உட்பட பிற உதவிகளையும் வழங்குகிறது.




Original article:

Share:

'மகசூல்' வேளாண்மைக்கான ஒற்றைக் குறியீடாக இருக்க முடியாது -அஞ்சலி ஜான், அபிஷேக் ஜெயின்

 விவசாயத்தின் வெற்றியானது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக நமது பூமியைப் பாதுகாப்பதற்கும் அதன் திறனால் அளவிடப்படும் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குவதற்கான நேரம் இது.


இந்தியா, பல நாடுகளைப் போலவே, விவசாயத்தை "மகசூல்" மூலம் அளவிடுகிறது. இது ஒரு அலகு நிலத்தின் உற்பத்தியின் அளவு, ஹெக்டேருக்கு கிலோகிராமில் (kilogramme) அளவிடப்படுகிறது. இந்த அளவீட்டு முறை மாற வேண்டும். 


சுதந்திர இந்தியாவில், விளைச்சலில் கவனம் செலுத்தியது, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவு வழங்க பெரிதும் உதவியது. மகசூலுக்கு இந்த முக்கியத்துவம் நிலம் என்பது விவசாயத்திற்கான மிகக் குறைந்த வளம் என்ற எண்ணத்திலிருந்து வந்தது. இருப்பினும், நீர், தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் உழைப்பு போன்ற பிற முக்கிய ஆதாரங்களும் பற்றாக்குறையாகி வருகின்றன. கூடுதலாக, மகசூலை அதிகரிக்க முயற்சிப்பது சில நேரங்களில் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும்.


அதிக மகசூல், பல இழப்புகள் 


பயிர் விளைச்சலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதால், அதன் ஊட்டச்சத்து மதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் அதிக உணவை உற்பத்தி செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council for Agricultural Research (ICAR)) நடத்திய சமீபத்திய ஆய்வில், அதிக மகசூல் தரும் அரிசி மற்றும் கோதுமை வகைகளில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. துத்தநாக (zinc) அளவு அரிசியில் 33% மற்றும் கோதுமையில் 30% குறைந்துள்ளது. இரும்பு அளவு அரிசியில் 27% மற்றும் கோதுமையில் 19% குறைந்துள்ளது. தாவர வளர்ப்பாளர்கள் புதிய தானிய வகைகளின் ஊட்டச்சத்து விவரங்களை பகிர்ந்து கொள்ள தேவையில்லை. இந்த குறைபாடு குறைபாட்டிற்கு முக்கிய காரணியாகிறது. மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றியதாகவும், மூன்றில் இருவருக்கு இரத்த சோகை (anaemic) இருப்பதாகவும் சமீபத்திய தேசிய குடும்ப நல (National Family Health Survey) ஆய்வு அறிக்கை காட்டுகிறது.


மகசூலை அதிகரிப்பது விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மை இல்லை. 1970-களில் இருந்து, உரங்களின் செயல்திறன் 80%-க்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதே மகசூலைப் பெற விவசாயிகள் அதிக உரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


மகசூலில் மட்டுமே கவனம் செலுத்துவது பருவகால பயிர்களுக்கு உதவும் ஆனால், ஆண்டு முழுவதும் உற்பத்தியை உறுதி செய்யாது. வேளாண் விஞ்ஞானிகள் பெரும்பாலும் வெவ்வேறு பயிர்களுக்கு இடையிலான உறவுகளையும் அவற்றை எவ்வாறு இணைக்கலாம் என்பதையும் புறக்கணிக்கிறார்கள். உதாரணமாக, மிளகாய், கத்தரிக்காய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் கரும்புகளை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைப்பதோடு லாபத்தையும் அதிகரிக்கலாம்.


விளைச்சலில் இந்த கவனம் பல்லுயிர் பெருக்கத்தையும் குறைத்துள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியா சுமார் 104,000 அரிசி வகைகளை இழந்துள்ளது, இது விவசாய மீள்தன்மையை பலவீனப்படுத்துகிறது, குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளின் போது. பல உள்ளூர் வகைகள் இந்த நிலைமைகளுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவை.


கூடுதலாக, அதிக மகசூல் தரும் பயிர்களின் நாட்டம், மீள் மற்றும் சத்தான பயிர்களுடன் பயிரிடப்பட்ட பரப்பளவு குறைந்துள்ளது. உதாரணமாக, தினை போன்ற கரடுமுரடான தானியங்களுக்கு பயன்படுத்தப்படும் நிலம் 1950-களில் இருந்து 10 மில்லியன் ஹெக்டேர் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமை முறையே 13 மில்லியன் மற்றும் 21 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. இந்த பன்முகத்தன்மை இழப்பு சராசரி இந்திய உணவில் உள்ள பல்வேறு வகையான உணவுகளை பாதிக்கிறது.


சிறந்த குறிகாட்டிகள்


பல கொள்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் விவசாய முறைக்கு சிறந்த நடவடிக்கைகள் தேவை:


1. உணவு முறை தேசிய ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் முக்கிய இயற்கை வளங்களை நம்பியுள்ளது. எனவே, விவசாயக் குறிகாட்டிகள் விவசாய அமைச்சகம் அல்லது அதன் தொடர்புடைய அமைப்புகளால் அமைக்கப்பட வேண்டும். ஆனால், சுகாதாரம், நீர் மற்றும் சுற்றுச்சூழல் உட்பட தொடர்புடைய அமைச்சகங்களையும் அனைத்து செயல்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.


2. குறிகாட்டிகள் முடிவுகளில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ஊட்டச்சத்து பாதுகாப்பே இலக்கு என்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஹெக்டேருக்கு ஊட்டச்சத்து உற்பத்தியை அளவிடலாம்.


மண் ஆரோக்கியம், நீர் திறன் மற்றும் பண்ணை பல்லுயிர் போன்ற முக்கியமான காரணிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மண் ஆரோக்கிய அட்டைகளில் மண்ணின் கரிம கார்பன் தரவைச் சேர்ப்பது ஒரு முன்னேற்றமாகும். தெலுங்கானாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'சாகு பாகு' (‘Saagu Baagu’) முன்னோடி திட்டம், விவசாயிகளுக்கு நிகழ்நேர தரவு மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் பயிர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் நீர் திறன் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பண்ணைகளில் பயிர் பன்முகத்தன்மையை மட்டுமல்ல, சுற்றியுள்ள பகுதியின் பயிர் பன்முகத்தன்மையைப் பார்க்கும் 'நிலப்பரப்பு பன்முகத்தன்மை மதிப்பெண்ணையும்' நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். கூடுதலாக, வருமான பன்முகத்தன்மையைக் கண்காணிக்க வேண்டும், இது ஊடுபயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு வருமான ஆதாரங்கள் மூலம் பொருளாதார பின்னடைவைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஒற்றைப் பயிரை நம்பியிருக்கும் பகுதிகள் விலை மாற்றங்கள் மற்றும் பூச்சிப் பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படும்.


ஒரு குறிகாட்டியால் மட்டும் விவசாய அமைப்பின் அனைத்து இலக்குகளையும் அடைய முடியாது. மகசூலை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்தியாவுக்கு கடுமையான பஞ்சத்தைத் தவிர்க்க உதவியது. இருப்பினும், இது மட்டுமே இப்போது குறிக்கோளாக இருக்க முடியாது. குறிப்பாக, வளர்ந்து வரும் காலநிலை சவால்கள் மற்றும் குறைந்து வருகின்ற இயற்கை வளங்கள். வேளாண்மை வெற்றியை அளவிடுவதற்கு நமக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை. அது மக்களுக்கு எவ்வளவு ஊட்டமளிக்கிறது, வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 


அபிஷேக் ஜெயின், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆய்வாளர் மற்றும் இயக்குநர்.




Original article:

Share:

உணவு தன்னிறைவு கொண்ட இந்தியா பசி இல்லாத நாடாகவும் இருக்க வேண்டும் -எஸ்.இருதய ராஜன், யு.எஸ்.

 இந்தியாவின் விவசாய முறை மாற வேண்டும். இந்த மாற்றம் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 


நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals) ஒன்று 2030-ஆம் ஆண்டிற்குள் பசி, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். இருப்பினும், அதிகரித்து வரும் பிராந்திய போர்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற காரணிகள் மக்களுக்கு உணவு கிடைப்பதை கடினமாக்குகின்றன. 


மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காத போது உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் பலரால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கும் போது பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. ஒரு நாடு உணவு தன்னிறைவு பெற்ற நாடக மாற அனைவருக்கும் குறைந்த  விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய  ஒரு நல்ல அமைப்பை உருவாக்க வேண்டும். 


இருப்பினும், போதுமான ஊட்டச்சத்து உள்ள உணவை மக்கள் பெற்றாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க தேவையான அனைத்தையும் பெற்றார்கள் என்று கூற முடியாது. பசியற்ற சூழலிலிருந்து நல்ல ஊட்டச்சத்தை உறுதி செய்யும் சூழலுக்கு மாற, பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளின் அதிக விலை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் பல்வேறு குழுக்களிடையே உள்ள உணவு  தேவைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நாம் கவனிக்க வேண்டும். 


வாங்கும் திறன் (purchasing capacity) இல்லாமை 


உலகளவில் பசி இன்னும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில், உலகளவில் 9.4% மக்கள் அல்லது 757 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இருந்தனர். ஆப்பிரிக்கா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது அந்த கண்டத்தில் 20.4% மக்கள் பசியுடன் உள்ளனர். ஆசியா 8.1%, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 6.2%, ஓசியானியா 7.3% மக்கள் பசியுடன் உள்ளனர். ஆசியாவில் 384.5 மில்லியன் மக்கள் பசியுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், ஆப்பிரிக்காவில், 298.4 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர்.

 

2030-ஆம் ஆண்டில், உலகின் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பார்கள். பெரும்பாலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் பாதி-நகரப் பகுதிகள் (semi-urban areas) சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆண்களைவிட பெண்கள் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இருவருக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வருகிறது.


உணவுப் பாதுகாப்பின்மை (food insecurity) பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. மக்கள் போதுமான உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆரோக்கியமான உணவின் விலை மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளில், ஆரோக்கியமான உணவின் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. 2022-ல், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 3.96 வாங்கும் திறன் சமநிலை (purchasing power parity (PPP)) டாலர்களை எட்டியது. இருப்பினும், இந்த செலவு பிராந்தியத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, ஆசியாவில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $4.20 ஆக இருக்கிறது. 


உலகளவில் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாதவர்களின் எண்ணிக்கை 2021-ல் 2.88 பில்லியனில் இருந்து 2022-ல் 2.83 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால், ஏழை நாடுகளில் இன்னும் பலருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. இது 2030-ஆம் ஆண்டிற்குள் பசியை குறைக்கும் இலக்கிற்கு அச்சறுத்தலாக உள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான உணவுகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும். இந்தியா இதை "தாலினோமிக்ஸ்" மூலம் ஆய்வு செய்கிறது.

 

Thalinomics : தாலினோமிக்ஸ் என்பது இந்தியாவில் உணவின் பொருளாதாரத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். மேலும், இது சராசரி குடிமகனுக்கு எவ்வளவு குறைவான விலையில் உணவு கிடைக்கிறது என்பதை அளவிட  இந்த  முறை பயன்படுகிறது.


2011-ஆம் ஆண்டில் கிராமப்புற இந்திய மக்கள்தொகையின் பங்கு உணவுக்காக 100% வருமானம் செலவழித்தாலும்கூட தேவையான உணவின் (cost of a required diet (CoRD)) செலவை வாங்க முடியாமல் 63.3% அல்லது 527.4 மில்லியனாக இருந்ததாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஆரோக்கியமான உணவுகள் அனைவருக்கும் கிடைக்கவும், மலிவு விலையில் கிடைக்கவும் இந்தியாவின் உணவு முறை மாற வேண்டும்.


 உணவு வழங்கல் மற்றும் கிடைக்கும் தன்மையை பாதிக்கும் முக்கிய பகுதிகளை வலுப்படுத்துதல். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுகளில் அனைவருக்கும் உறுதி செய்தல் மற்றும் குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


இந்தியாவில் ஆரோக்கியமற்ற உணவுகள் (Unhealthy diets in India)


இந்திய உணவு முறைகள் பெரும்பாலும் ஆரோக்கியமற்றதாக உள்ளது. அவை EAT-Lancet வழிகாட்டுதல்கள் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரைகளுடன் பொருந்தவில்லை. பல ஏழைகள் ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தெற்காசியாவில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் சராசரி தினசரி வருமானத்தில் 60% ஆரோக்கியமான உணவிற்காக செலவிடுகின்றனர். 


இந்தியாவில் மக்கள் ஆரோக்கியமான உணவு பெறாததற்கு அதிக விலை, ஒரு காரணமாக இருக்கலாம்.  இந்தியாவில் தானியங்கள் போன்ற அடிப்படை உணவுகளுக்கு மானியங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், மக்கள் போதுமான ஆரோக்கியமான உணவை உண்ணாததற்கு அதிக விலை மட்டுமே காரணமாக இருக்காது.


இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பணக்கார 5% இந்திய குடும்பங்கள் கூட புரதச்சத்து நிறைந்த உணவை குறைவாகவே உண்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. உணவுகள் எளிதில் கிடைப்பது, விழிப்புணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மோசமான தரத்திற்கு மற்ற முக்கிய காரணங்களாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 


உலகளாவிய பட்டினி குறியீடு 


உலக அளவிலும், இந்தியாவிலும் நாம் பசியைப் பார்க்கும்போது, ​​மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவை மோசமான தரவரிசையில் உள்ள உலகளாவிய பட்டினி குறியீடு  (Global Hunger Index (GHI)) பற்றி விவாதம் நடந்து வருகிறது. இருப்பினும், இந்த பிரச்சினை அதிக கவனத்தைப் பெறவில்லை. ஏனெனில், GHI பசியைக் காட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால இறப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது. உண்மையான பசி என்பது உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து பிரச்சினைகளை விட அதிகம்.  


ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சதுர உணவையாவது உட்கொள்வதையும் இது குறிக்கிறது. எங்கள் கருத்துக்கணிப்புகள் கடந்த 30 நாட்களில் மக்கள் உண்ணும் உணவின் எண்ணிக்கையைப் பற்றிய புள்ளிவிவரங்களை வழங்குகின்றன. தினசரி உட்கொள்ளும் சராசரி உணவைக் காட்டுகிறது.


தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) சமீபத்திய தரவுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 3.2% பேர் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 60 வேளை உணவுகளை சாப்பிடுவதில்லை. இதற்கு நேர்மாறாக, 50%-க்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதாக தெரிவிக்கின்றனர். 


ஒரு நாளைக்கு இரண்டு  வேளை உணவு கிடைக்காதவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, ​​மக்கள் தொகையில் சுமார் 2.5% பேர் இந்தக் குழுவில் உள்ளதைக் காண்கிறோம். 140 கோடி மக்கள் தொகையில், அதாவது 3.5 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய எண்ணிக்கையாகும்.

 

இந்த ஆண்டு, உலக உணவு தினம், "சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உணவுக்கான உரிமை" (World Food Day this year has the theme ‘Right to foods for a better life and a better future’) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. இந்த கருப்பொருள் பசி இல்லாத உலகின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 


இந்த உலகில் அனைவருக்கும் உணவு உரிமை உள்ளது. இந்தியாவில், உணவு உரிமைக்கான பிரச்சாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், இன்னும் சிலர் உணவு வாங்க முடியாமல் பட்டினி கிடக்கின்றனர். 


இலவச உணவு வழங்குவதற்கு உணவு வங்கிகளை அமைப்பது நல்ல தீர்வாக இருக்கும். இந்த உணவு வங்கிகள் உணவைச் சேகரித்து முறையாக விநியோகிப்பதன் மூலம் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். இந்த அணுகுமுறை யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த உதவும்.


உணவில் தன்னிறைவு மற்றும் பசியற்ற நாடாக இந்திய மாற வேண்டும். போதுமான உணவு உள்ள பகுதிகள் மனிதாபிமான அடிப்படையில் உணவு கிடைக்காதவர்களுக்கு உதவ வேண்டும்.


எஸ்.இருதயா ராஜன், கேரள மாநிலம் புலம்பெயர்வு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவராக இருப்பவர். யு.எஸ். மிஸ்ரா, கேரளாவின் சர்வதேச இடம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (ஐஐஎம்ஏடி) கௌரவ வருகை பேராசிரியராக உள்ளார் 




Original article:

Share: