இந்தியா-EFTA வர்த்தக ஒப்பந்தம் நீண்ட கால, பன்முக ஒத்துழைப்புக்கான வழியைத் திறக்கிறது - கர்ட் ஜாகர்

 இது சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கான ஒரு வணிக ஒப்பந்தம் மட்டுமல்ல. நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான ஒரு பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நட்பு நாடுகளின் அடித்தளமாகும்.


ஆகஸ்ட் 23, 2023 அன்று, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்தது. இந்த பணி இந்தியாவின் விண்வெளி சக்தியாக எழுச்சியைக் குறித்தது மட்டுமல்லாமல், புதுமைக்கான அதன் வளர்ந்து வரும் திறனையும் எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய வர்த்தகம், ஒத்துழைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் எவ்வாறு லட்சிய இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதை இந்த பணி எடுத்துக்காட்டுகிறது. இந்தக் காரணிகள் நாடுகளை புதிய உயரங்களுக்குக்  செல்கின்றன என்பதற்கும் இது ஒரு சான்றாகும். அதே கொள்கை விண்வெளி ஆய்வுக்கு அப்பால் பொருந்தும், நிபுணத்துவம், முதலீடு மற்றும் புதுமைகளைப் பயன்படுத்தும் பொருளாதார கூட்டாண்மைகளுக்கும் நீண்டுள்ளது.


ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (European Free Trade Association (EFTA)) சேர்ந்த நான்கு நாடுகளான ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. EFTA நாடுகள் சிறிய சந்தைகளைக் கொண்டிருந்தாலும், அவை மேம்பட்ட தொழில்நுட்பங்களில் உலகை வழிநடத்துகின்றன மற்றும் முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களாக உள்ளன. ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (EFTA) தொழில்கள் துல்லியமான பொறியியல் முறை (precision engineering), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy), மருந்துகள் (pharmaceuticals) மற்றும் நிதி சேவைகள் (financial services) போன்ற துறைகளில் வலுவாக உள்ளன. இந்தத் துறைகள் இந்தியாவின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் புதுமை சார்ந்த பொருளாதாரத்துடன் பொருந்துகின்றன. EFTA-ன் பலங்கள் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றம், நிலைத்தன்மை முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆதரிப்பதில் அதை ஒரு மதிப்புமிக்க கூட்டணி நாடாக ஆக்குகின்றன.


சமீபத்தில் கையொப்பமிடப்பட்ட ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (EFTA) – இந்தியா வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (Trade and Economic Partnership Agreement (TEPA)) நீண்டகால ஒத்துழைப்புக்கு வழி வகுக்கிறது. பிப்ரவரி 10 அன்று, இந்தியாவில் EFTA வாய்ப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம், இது ஒரு முக்கிய படியைக் குறித்தது. இது எளிய வர்த்தக வசதிக்கு அப்பாற்பட்டது. இது ஒரு லட்சிய கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. இரு தரப்பினரும் பெரியதாக சிந்திக்கவும், உயர்ந்த இலக்கை அடையவும், வழக்கம் போல் வணிகத்திற்கு அப்பால் செல்லவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) முறையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதன் தாக்கம் ஏற்கனவே தெரியும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பேச்சுவார்த்தைகளின் முடிவு மட்டுமல்ல, இது கூட்டணி அமைப்பின் ஒரு புதிய நூற்றாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் உள்ள வணிகங்கள் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகின்றன. இதில் குறைந்த கட்டணங்கள், எளிமையான சுங்க நடைமுறைகள், வலுவான அறிவுசார் சொத்து பாதுகாப்புகள் மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளுக்கான கட்டமைப்பு ஆகியவை அடங்கும். EFTA வணிகங்கள் இந்தியாவில் நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தயாராகி வருகின்றன. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தல் மற்றும் 1 மில்லியன் வேலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (TEPA) பகிரப்பட்ட இலக்குகளை அவர்கள் நினைவில் கொள்கிறார்கள்.


100-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கத்தின் (EFTA) வணிகங்கள் இந்தியாவிற்கு வருகை தந்து, அது வழங்கும் வாய்ப்புகளை ஆராய இந்த வாரத்தில் வேகம் தெளிவாகியுள்ளது. வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (TEPA) திறன் மற்றும் பலன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த EFTA நாடுகள் மேற்கொண்ட திட்டமிட்ட முயற்சிகளின் விளைவாக இத்தகைய செயலில் ஆர்வம் உள்ளது. நிகழ்வுகள் மற்றும் வெளிநடவடிக்கைகள் அதிக ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைக்க உதவியுள்ளன.


இந்த வாய்ப்புகளை முடிவுகளாக மாற்றுவதில் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கத்தின் (EFTA) வாய்ப்புகள் முக்கியமானது. கூட்டாண்மைகளை எளிதாக்குவது முதல் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வழிநடத்துவது வரை, புதிய சந்தையின் சிக்கல்களை வழிநடத்தும் வணிகங்களுக்கு EFTA-ன் வாய்ப்பு ஒரு முக்கியமான வளமாக இருக்கும்.


வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) ஆனது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் இந்தியா ஆகிய இரண்டையும் வர்த்தக ஒப்பந்தங்களின் பாரம்பரிய பகுத்தறிவுக்கு அப்பால் செல்ல அனுமதிக்கிறது. EFTA-ஐப் பொறுத்தவரை, அதிநவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்துடன் பகிர்ந்து கொள்வதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரிய அளவிலான முதலீடு மற்றும் ஒத்துழைப்பை வரவேற்க முற்போக்கான மற்றும் நிலையான நிலைமைகளை உருவாக்குவதாகும்.


EFTA-இந்தியா கூட்டாண்மை தனித்துவமானது. ஏனெனில், அது நீண்ட காலத்திற்கு கவனம் செலுத்துகிறது. இது சந்தை அணுகலை மேம்படுத்துவது மட்டுமல்ல. மாறாக, இதற்கான நம்பிக்கை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர வளர்ச்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நீடித்த உறவுக்கான அடித்தளத்தை இது உருவாக்குகிறது. EFTA இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பொருளாதாரங்கள், சமூகங்கள் மற்றும் சூழல்களுக்கு பயனளிக்கும் இணைப்புகளை உருவாக்க உதவுகிறது.


ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (European Free Trade Association (EFTA)) திறப்பு விழாவைக் கொண்டாடும் வேளையில், இது ஒரு நம்பிக்கைக்குரிய பயணத்தின் ஆரம்பம் மட்டுமே என்பதை நினைவில் கொள்கிறோம். இந்திய  சந்திரன் திட்டத்திற்கு (India’s moon mission) சுவிஸ் துல்லிய தொழில்நுட்பம் முக்கியமானது. இதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நார்வே மற்றும் ஐஸ்லாந்தின் நிபுணத்துவம் இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கு உதவும். ஒரு உருமாறும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணி நாட்டை உருவாக்குவதற்கு தொடர்ச்சியான முயற்சி தேவைப்படும். புதிய வாய்ப்புகளை உருவாக்க, புதுமைகளை இயக்க மற்றும் நமது சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கம் (European Free Trade Association (EFTA)) உறுதிபூண்டுள்ளது.


எழுத்தாளர் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.




Original article:

Share:

லா நினாவின் குளிரூட்டும் விளைவு (cooling effect) ஜனவரிமாத வெப்பநிலையைக் ஏன் குறைக்கவில்லை? -அலிந்த் சவுகான்

 ஜனவரி 2025-ம் ஆண்டில், உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டியது. இது கடந்த 19 மாதங்களில் இது 18 வது முறையாகும். டிசம்பர் 2024-ம் ஆண்டில் தொடங்கிய லா நினா கட்டம் (La Niña phase) வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் தரும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். இருப்பினும், இது நடக்கவில்லை.


கடந்த மாதம் இதுவரை பதிவானதிலேயே மிகவும் வெப்பமான நிலை ஜனவரி மாதமாகும். உலகளாவிய சராசரி மேற்பரப்பு, காற்று வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலையைவிட (1850-1900 சராசரி) 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இது கடந்த வாரம் ஐரோப்பாவின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (Copernicus Climate Change Service (C3S)) அறிவித்தது. வெப்பமண்டல பசிபிக் பகுதியில் லா நினா நிலைமைகளின் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய வெப்பநிலையில் அவற்றின் தற்காலிக குளிரூட்டும் விளைவு (temporary cooling effect) இருந்தபோதிலும் வெப்பநிலையின் சாதனை அளவை எட்டியுள்ளது என்றும் அது கூறியது.


ஜனவரி 2025-ம் ஆண்டில், உலகளாவிய சராசரி மேற்பரப்பின் காற்றின் வெப்பநிலை கடந்த 19 மாதங்களில் 18 வது முறையாக 1.5°C வரம்பைத் தாண்டியது. இது, டிசம்பர் 2024-ம் ஆண்டில் தொடங்கிய லா நினா கட்டம், விஷயங்களை குளிர்விக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பினர். இருப்பினும், இது நடக்கவில்லை.


கோப்பர்நிக்கஸின் காலநிலை விஞ்ஞானி ஜூலியன் நிக்கோலஸ், ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ்ஸிடம் பேசியதாவது, "இது ஒரு சிறிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது." விஞ்ஞானிகள் குளிரூட்டும் விளைவை அல்லது குறைந்தபட்சம் உலக வெப்பநிலையில் ஒரு தற்காலிக தடையை எதிர்பார்த்தனர். இருப்பினும், இந்த விளைவு தோன்றவில்லை.


முதலில், லா நினா (La Niña) என்றால் என்ன?


லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவின் (El Niño Southern Oscillation (ENSO)) மூன்று கட்டங்களில் ஒன்றாகும். ENSO என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு காலநிலை நிகழ்வு ஆகும். இது மேலே உள்ள வளிமண்டலத்தையும் பாதிக்கிறது. ENSO-ல் ஏற்படும் இந்த மாற்றங்கள் உலகளாவிய வளிமண்டல சுழற்சியை பாதிக்கின்றன. இது உலகம் முழுவதும் வானிலையை பாதிக்கிறது.


ENSO மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. இது, சூடான (எல் நினோ), குளிர் (லா நினா) மற்றும் நடுநிலையைக் கொண்டுள்ளது. இந்த கட்டங்கள் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கின்றன.


நடுநிலைக் கட்டத்தில், கிழக்கு பசிபிக் பெருங்கடல் (தென் அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில்) மேற்கு பசிபிக் பகுதியைவிட (பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில்) குளிர்ச்சியாக இருக்கும். காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுவதால் இது நிகழ்கிறது. இந்த காற்று சூடான மேற்பரப்பு நீரை இந்தோனேசியாவை நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாக, கீழே இருந்து குளிர்ந்த நீர் அதன் இடத்தைப் பிடிக்க உயர்கிறது.


எல் நினோ கட்டத்தில், இந்த காற்றுகள் பலவீனமடைகின்றன. இதன் பொருள் தென் அமெரிக்க கடற்கரையிலிருந்து குறைந்த சூடான நீர் விலகிச் செல்கிறது. இதன் விளைவாக, கிழக்கு பசிபிக் வழக்கத்தை விட வெப்பமாகிறது.


இதற்கு நேர்மாறானது லா நினா கட்டத்தில் நிகழ்கிறது. வர்த்தக காற்று வழக்கத்தை விட வலுவாகிறது. அவை, மேற்கு பசிபிக் பகுதிக்கு அதிக அளவு தண்ணீரைத் தள்ளுகின்றன.


எல் நினோ ஏற்படும் போது, ​​உலகளாவிய வெப்பநிலை உயர்கிறது. லா நினாவின் போது, ​​அவை குறைகின்றன. இருப்பினும், பிராந்திய விளைவுகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. சில பகுதிகள் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் வெப்பமான மற்றும் குளிரான வெப்பநிலையை அனுபவிக்கக்கூடும்.


ஒவ்வொரு எல் நினோ மற்றும் லா நினா கட்டமும் வேறுபட்டவை. இரண்டு லா நினா சுழற்சிகளும் சரியாக ஒரே மாதிரியானவை அல்ல. அவை தீவிரம், கால அளவு மற்றும் அவை பாதிக்கும் பகுதிகளில் வேறுபடுகின்றன. இதன் விளைவாக, இந்த கட்டங்கள் எப்போதும் உலக வெப்பநிலையை ஒவ்வொரு முறையும் ஒரே வலிமையுடன் மாற்றுவதில்லை.


தற்போது நடைபெற்று வரும் லா நினா சுழற்சி பலவீனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் தாமதமான வருகையின் காரணமாக இருக்கலாம். செப்டம்பர் 2024-ம் ஆண்டில் லா நினா உருவாகும் என்று நிபுணர்கள் ஆரம்பத்தில் கணித்திருந்தனர். ஆனால் அது டிசம்பர் வரை வெளிப்படவில்லை. பல பிற காரணிகளும் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) அறிக்கையின்படி, "எல் நினோ தெற்கு அலைவின் (El Niño Southern Oscillation (ENSO)) நிகழ்வுகள் வடக்கு அரைக்கோள குளிர்காலத்தில் உச்சத்தை அடைகின்றன. லா நினா வலுப்பெற அதிக நேரம் இல்லை." பலவீனமான லா நினா பொதுவாக வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


மேலும், லா நினா கட்டத்தின் வருகை இருந்தபோதிலும், வெப்பத்தைத் தடுக்கும் வளிமண்டல கார்பனின் அதிகரிப்பு முந்தைய ஆண்டுகளின் ஏற்கனவே உயர்ந்த அளவைவிட அதிகமாக உள்ளது. தி கான்வர்சேஷனின் (The Conversation) அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு வலுவான லா நினா கூடுதல் மழையைக் கொண்டுவருகிறது. இது அதிக தாவர வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து அதிக கார்பனை உறிஞ்சுகின்றன.


வளிமண்டலத்தில் தூசிப் படல செறிவு (aerosol concentration) அல்லது இடைநிறுத்தப்பட்ட துகள்களின் (suspended particles) குறைவு வெப்பநிலையை வெப்பமாக வைத்திருக்க உதவியிருக்கலாம். ஏனெனில், சில பகுதிகளில் சுத்தமான காற்று தூசிப் படலங்களைக் குறைத்துள்ளன. தூசிப் படலங்கள் பொதுவாக குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளன. அவை, சூரிய கதிர்வீச்சை மீண்டும் விண்வெளியில் சிதறடிக்கின்றன. அவை மேக உருவாக்கத்தையும் பாதிக்கின்றன. இது சூரிய ஒளி எவ்வளவு உறிஞ்சப்படுகிறது அல்லது பிரதிபலிக்கிறது என்பதைப் பாதிக்கிறது.


குறிப்பாக, மிகவும் வெப்பமான ஜனவரி மாதம் நீண்ட கால வானிலை முறைகளை முன்னறிவிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், உலகளாவிய வெப்பநிலையைக் குறைப்பதில் இயற்கை குளிர்ச்சி நிலைகள் (natural cooling phases) குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.


இதைத் தடுக்க, பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) உமிழ்வை நாம் கணிசமாகக் குறைக்க வேண்டும். 2024-ம் ஆண்டில், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு அளவுகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவை எட்டியது என்று C3S கூறுகிறது.




Original article:

Share:

இந்திய மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் பதவியின் ராஜினாமாவிலும் நியமனத்திலும் ஆளுநரின் பங்கு என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


1. சிங் சனிக்கிழமை மாலை இம்பாலில் இருந்து டெல்லிக்குச் சென்றார். இந்த வாரம் தேசிய தலைநகருக்கு இது அவரது இரண்டாவது பயணமாகும். அவர் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் தனியாக இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.


2. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு சந்திப்பை நடத்தினார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் அங்கு இருந்தார். சிங் ஞாயிற்றுக்கிழமை மதியம் மீண்டும் இம்பாலுக்கு, பாஜகவின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் சம்பித் பத்ராவுடன் அவர் விமானத்தில் திரும்பினார்.


3. ஞாயிற்றுக்கிழமை மாலை, சிங், பத்ரா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த பிற மூத்த பாஜக தலைவர்கள் ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்தனர். அந்தக் அமைச்சரவைக் குழுவில் அமைச்சர்கள் பிஸ்வஜித் சிங், சபம் ரஞ்சன் சிங், கோவிந்தாஸ் கோந்தோஜம் மற்றும் பசந்தா சிங் ஆகியோர் அடங்குவர். இந்தக் கூட்டத்தின் போது, ​​சிங் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.


4. திங்கட்கிழமை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, மணிப்பூரில் புதுப்பிக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளின் போது அவரது ராஜினாமா வந்துள்ளது.


5. மணிப்பூரைச் சேர்ந்த பல பாஜக எம்எல்ஏக்கள் பைரனின் தலைமையின் மீது அதிருப்தி அடைந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மணிப்பூர் நெருக்கடியை கட்சி தலைமையிலான ஒன்றியம் கையாண்ட விதத்திலும் அவர்கள் வருத்தமடைந்தனர். இதனால், இந்த எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.


6. தனது ராஜினாமா கடிதத்தில், ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையாக ஐந்து முக்கிய விஷயங்களை சிங் எடுத்துரைத்தார். இதில், மாநிலத்தின் ”பிராந்திய ஒருமைப்பாடு” (territorial integrity) பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ”சட்டவிரோத குடியேறிகள்” (illegal immigrants) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான ”போராட்டம்” தொடர வேண்டும் என்றும் அவர் விரும்பினார். கூடுதலாக, திருத்தப்பட்ட ”சுதந்திர இயக்க ஆட்சியை” (Free Movement Regime) பயோமெட்ரிக் சோதனைகளுடன் வைத்திருக்கவும் ”இந்தோ-மியான்மர் எல்லை கட்டுமானத்தை” (Indo-Myanmar border construction) தொடரவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பிரச்சினைகள் இவைகளாகும்.


உங்களுக்குத் தெரியுமா? :


1. சிங் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தபோது, ​​சட்டமன்றத்தை இடைநிறுத்தி வைக்க அவர் பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இது சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தனது மாற்றீட்டில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு நேரம் கொடுக்கும். இருப்பினும், எந்தவொரு தலைவருக்கும் பெரும்பான்மையான கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டியிருக்கலாம்.


2. அரசியலமைப்பின் பிரிவு 356, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. இது நடக்கவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும்.


3. குகி-சோ குழுக்களும் அவர்களது சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்களும் மாநிலத்தில் இன மோதலுக்கு சிங்கைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த எம்எல்ஏக்களில் பாஜகவைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவர். இதில், இருவர் அமைச்சர்களாகப் பணியாற்றுகின்றனர். இதற்கான மோதல் மே 3, 2023 அன்று தொடங்கியது.


4. திங்கட்கிழமை தொடங்கவிருந்த மணிப்பூர் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருடன் திருப்புமுனை ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமை மாற்றத்தைக் கேட்டிருந்தனர். ஆனால், அவர்களின் முறையீடுகள் புறக்கணிக்கப்பட்டன. சட்டமன்ற அமர்வின்போது "முன்னோடியில்லாத மற்றும் கடுமையான நடவடிக்கையை" எடுக்க அவர்கள் தயாரானார்கள். காங்கிரஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை (no-confidence motion) ஆதரிக்க அவர்கள் திட்டமிட்டனர்.


5. மே 3, 2023 அன்று, மணிப்பூரில் இன வன்முறை வெடித்தது. இது இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மையான குழுவான மெய்டெய் (Meitei) மற்றும் சுற்றியுள்ள மலைகளைச் சேர்ந்த குகி-சோ பழங்குடி சமூகத்திற்கு (Kuki-Zo tribal community) இடையில் இருந்தது.




Original article:

Share:

அணுசக்தி திட்டங்கள் (Nuclear Energy Mission) மற்றும் சிறிய மட்டு உலைகள் (Small Modular Reactors) எப்படி இருக்கிறது? -ரோஷ்னி யாதவ்

 2025-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சிறிய மட்டு உலைகளின் (SMRs) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புதிய அணுசக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை எவ்வாறு இயக்கும் மற்றும் சிறிய மட்டு உலைகளை (SMR) தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வெளியுறவுக் கொள்கை கருவியாக நிலைநிறுத்தும்?


அணுசக்தித் துறையை விரிவுபடுத்த அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, 2025-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், அது ஒரு அணுசக்தி திட்டத்தை அறிவித்தது. இதில், இந்த திட்டம் சிறிய மட்டு உலைகளின் (Small Modular Reactors(SMR)) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதுடன், அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் இந்த உலைகளில் குறைந்தது ஐந்து உலைகளையாவது செயல்பட வைக்க அரசாங்கம் இலக்கை நிர்ணயித்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், சிறிய மட்டு உலைகளின் (Small Modular Reactors(SMR)) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ₹20,000 கோடி மதிப்பிலான அணுசக்தி திட்டத்தை அரசாங்கம் அமைக்கும் என்றும், 2033-ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்து சிறிய மட்டு உலைகள் (SMR) செயல்பாட்டுக்கு வரும் என்றும் உறுதியளித்தார்.


2. அணுமின் நிலையங்களை உருவாக்குவதிலும், இயக்குவதிலும் தனியார் துறையின் பங்களிப்பை விரைவுபடுத்துவதற்காக அணுசக்திச் சட்டம் (Atomic Energy Act) மற்றும் அணுக்கரு உலை விபத்து இழப்பீடுச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) ஆகியவற்றில் திருத்தம் செய்வதாகவும் நிதி அமைச்சர் உறுதியளித்தார்.


3. குறிப்பிடத்தக்க வகையில், சூரிய சக்தி அல்லது காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் போலல்லாமல், அணுசக்தி நிலையான மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்குகிறது. மேலும், இது தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் இவை, வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாது.


4. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (International Atomic Energy Agency (IAEA)) சுத்தமான எரிசக்தி மாற்றங்கள் குறித்து அரசாங்கங்களுக்கு அறிவுறுத்துகிறது. இது, உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைய உதவுவதற்கு அணுசக்தி 2050-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது. இருப்பினும், அணுசக்தி திட்டத்திற்கு பெரிய சவால்கள் உள்ளன. இவை பெரியளவிலும், விலை அதிகமாகவும் மற்றும் இதை உருவாக்க நீண்டநேரம் எடுக்கும் எனவும் சில சவால்கள் உள்ளன. இருப்பினும், ஏதாவது தவறு நடந்தால், அது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். 


சிறிய மட்டு உலைகள் (Small Modular Reactors(SMR))


1. இந்திய அரசாங்கம் சிறிய மட்டு உலைகளின் (SMR) உள்நாட்டு வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. இவை, சில நேரங்களில் பாரத் சிறிய மட்டு உலைகள் (SMR) என்று அழைக்கப்படுகின்றன. இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக ₹20,000 கோடி மதிப்பிலான புதிய பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிறிய உலைத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்க இலக்கு வைத்துள்ளது. தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாகவும், தொழில்நுட்பம் தலைமையிலான வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக சிறிய மட்டு உலைகளை (SMR) ஒருங்கிணைக்கவும் இந்தியா இந்த சிறிய உலை இடத்தில் ஒரு தலைமைத்துவ இடத்தைப் பெற முயற்சிக்கிறது.


2. சிறிய மட்டு உலைகள் (SMR) மேம்பட்ட சிறிய அணு உலைகளாகும். ஒவ்வொரு அலகும் 30 MWe முதல் 300 MWe (மெகாவாட் மின்சாரம்) வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற வழக்கமான அணு உலைகள் பொதுவாக 500 MW அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.


3. சிறிய மட்டு உலைகள் (SMR) எளிமையான மற்றும் மட்டு வடிவமைப்பைக் (modular design) கொண்டுள்ளன. அவற்றின் கூறுகளை நேரடித் தளத்தில் கட்டுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சாலையில் கட்டமைக்க முடியும். இதனால், இதன் செலவுகளைக் குறைக்கிறது மற்றும் நெகிழ்வான பயன்பாட்டை அனுமதிக்கிறது. இதன் விளைவாக, சிறிய மட்டு உலைகள் (SMR) சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் ஈர்க்கக்கூடியதாக மாறிவிட்டன.


4. பல வகையான சிறிய மட்டு உலைகள் (SMR) உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், இவற்றில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை, அணுக்கரு பிளவுகளிலிருந்து வரும் தீவிர வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வகையும் வெவ்வேறு குளிரூட்டியைப் பயன்படுத்துகிறது. இந்த குளிரூட்டிகள் லேசான நீர், உயர் வெப்பநிலை வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


5. இருப்பினும், மிகவும் பொதுவான வகையானது இலகுவான நீர் உலைகள் (light water reactor) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கட்டப்படும் பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே இருக்கின்றன. அவை குளிரூட்டலுக்கு தண்ணீரையும் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, லேசான நீர் SMR-களை வடிவமைத்து அங்கீகரிப்பது எளிது. தற்போதைய அணுசக்தி விதிமுறைகள் முக்கியமாக நீர்-குளிரூட்டப்பட்ட உலைகளை அடிப்படையாகக் கொண்டவை.


6. தற்போது, ​​இரண்டு சிறிய மட்டு உலைகள் (SMR) திட்டங்கள் உலகளவில் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளன. ஒன்று, ரஷ்யாவில் உள்ள மிதக்கும் மின் அலகு Akademik Lomonosov ஆகும். இது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை, ஒவ்வொன்றும் 35 MWe (மெகாவாட் மின்சாரம்) திறன் கொண்டது. இந்த அலகு மே 2020-ல் வணிக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கியது. மற்றொன்று சீனாவில் HTR-PM ஆகும். இது ஒரு ஆர்ப்பாட்ட SMR திட்டம் போன்றது. இது டிசம்பர் 2021-ம் ஆண்டில் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு டிசம்பர் 2023-ம் ஆண்டில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.


SMR-களில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கு


1. சிறிய மட்டு உலைகளுக்கான (SMR) உலகளாவிய உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் சேர இந்தியா விரும்புகிறது. இதை ஆதரிக்க, அரசாங்கம் நிறுவனங்களின் ஆதரவை வழங்குகிறது. தற்போதுள்ள பட்ஜெட் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க முக்கிய கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறது.


2. இதற்கான முதல் முக்கிய கொள்கை அணுசக்தித் துறைக்குள் ஒரு தனிப் பிரிவை உருவாக்குவதாகும். தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இந்த அணுகுமுறை விண்வெளித் துறையில் செய்யப்பட்டதைப் போன்றது, இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது.


3. இரண்டாவதாக செயல்படுத்தல், 1962-ம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தமாகும். தற்போது, ​​இந்தச் சட்டம் அணுசக்தியில் இந்திய தனியார் துறை நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட பங்களிப்பை மட்டுமே அனுமதிக்கிறது. இதில், தனியார் நிறுவனங்கள் உபகரணங்களை மட்டுமே வழங்க முடியும். ஆனால் அணுசக்தி நிலையங்களை இயக்க முடியாது.


4. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தனியார் துறைக்கு ஒரு பெரிய பங்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை, தனியார் நிறுவனங்கள் அணு மின் நிலையங்களை இயக்கவும், சிறிய மட்டு உலை (SMR) துறையில் நுழையவும் அனுமதிக்கும். தற்போது, ​​அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Ltd. (NPCIL)) மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் (National Thermal Power Corporation (NTPC) Ltd) மற்றும் நேஷனல் அலுமினிய கம்பெனி லிமிடெட் (NALCO) போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் சில கூட்டு முயற்சிகள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.


5. மூன்றாவதாக செயல்படுத்தல், அணுக்கரு உலை விபத்து இழப்பீடுச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act), 2010-ம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றங்களாக இருக்கலாம். இந்தச் சட்டம் முதலில் அணுசக்தி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இது அவர்களுக்கான இழப்பீடையும் ஒதுக்குகிறது மற்றும் இழப்பீட்டிற்கான நடைமுறைகளை அமைக்கிறது.


6. GE-Hitachi, Westinghouse மற்றும் Areva போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், இந்த விதிகளை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஒரு தடையாகக் கருதுகின்றன. இந்தச் சட்டம் இயக்குபவர்கள் மீது மட்டும் பொறுப்பை வைக்காமல் உபகரண விநியோகர்கள் மீது பொறுப்பை வைக்கிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது வெளிநாட்டு விற்பனையாளர்கள் இந்தியாவின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் அவர்கள் நிதிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.




Original article:

Share:

டிரம்ப் ICC-க்கு எதிரான தடைகளை அங்கீகரிக்கிறார்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court (ICC)) என்றால் என்ன? -ராய்ட்டர்ஸ்

 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court(ICC)) பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கை நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தடைகள் அமெரிக்க குடிமக்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (International Criminal Court(ICC)) விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்களை குறிவைக்கின்றன. அவை, இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளை விசாரிப்பவர்களுக்கும் பொருந்தும்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இந்த முடிவைக் கண்டித்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஐ.சி.சியின் கைது வாரண்டிற்கு இந்த நடவடிக்கை ஒரு பிரதிபலிப்பாகும்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court(ICC)) பற்றிய சில தகவல்கள் :


இந்த நீதிமன்றம் 2002-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றை விசாரிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மேலும், இதில் உள்ள உறுப்பு நாடுகள் இந்தக் குற்றங்களைத் தாங்களாகவே விசாரிக்க விரும்பாதபோது அல்லது முடியாமல் இருக்கும்போது இந்த நீதிமன்றம் தானாக விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதில், உறுப்பு நாடுகளின் குடிமக்கள் அல்லது உறுப்பு நாடுகளின் பிரதேசத்தில் மற்றவர்களால் செய்யப்படும் குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க முடியும். இந்த அமைப்பில், 125 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில், 2025-ம் ஆண்டிற்கான நீதிமன்றத்தின் பட்ஜெட் சுமார் 195 மில்லியன் யூரோக்கள் ($202 மில்லியன்) ஆகும்.


பல பிராந்தியங்களில் உள்ள வழக்குகளை ஐ.சி.சி விசாரித்து வருகிறது. இவற்றில் பாலஸ்தீன பிரதேசங்கள், உக்ரைன் மற்றும் உகாண்டா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் அடங்கும். லத்தீன் அமெரிக்காவில் வெனிசுலாவிலும், ஆசியாவில் மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸிலும் உள்ள வழக்குகளை ஐ.சி.சி விசாரித்து வருகிறது.


இதன் அடிப்படையின்படி, ஐ.சி.சி 32 வழக்குகளை கையாண்டுள்ளது. சில வழக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நபர்கள் உள்ளனர் என்றும் கூறுகிறது. ஐ.சி.சி நீதிபதிகள் குறைந்தது 60 கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளனர்.


ஐசிசி நீதிபதிகள் 11 தண்டனைகள் மற்றும் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹேக் (Hague) நகரில் உள்ள ஐசிசி தடுப்பு மையத்தில் (ICC detention center) 21 பேர் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 31 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களின் இறப்புகள் காரணமாக 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.


11 தண்டனைகளில், 6 வழக்கு நீதிமன்றத்தின் முக்கிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன. அவற்றில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். மீதமுள்ள தண்டனைகள் சாட்சிகளை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன. தண்டனை பெற்ற ஆறு பேரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு, மாலி மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க போராளித் தலைவர்கள் (African militia leaders) ஆவார்.


சிறைத்தண்டனைகள் ஒன்பது முதல் 30 ஆண்டுகள் வரை இருந்தன. இதன் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை ஆகும்.


ஐ.சி.சி நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மோதலில் கொலை, துன்புறுத்தல் மற்றும் பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களுக்கு அவர் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


நெதன்யாகுவின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர் யோவ் கல்லண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் என்றும் அழைக்கப்படும் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கும் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. மாஸ்ரிக்கான வாரண்டில், அக்டோபர் 7, 2023 அன்று காசா போரைத் தூண்டிய இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களின் போது கொலை, கற்பழிப்பு மற்றும் பணயக்கைதிகள் பிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.


இஸ்ரேலியத் தலைவர் இந்த முடிவை யூத-விரோதமானது என்று கூறி நிராகரித்தார். குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் தவறானவை என்று அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த பட்டியலில் உள்ளார். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக அவர் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 2023-ல், நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு, கிரெம்ளின் அதை அர்த்தமற்றது என்று கூறியது. உக்ரைன் படையெடுப்பின்போது அதன் படைகள் கடுமையாக தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மாஸ்கோ பலமுறை மறுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில், ஐசிசி வழக்கறிஞர் மூத்த ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் தலைவர்களுக்கும் கைது வாரண்ட்களை கோரியிருந்தார். இருப்பினும், அந்தக் கோரிக்கைகள் நீதிபதிகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.


இந்த நீதிமன்றம் பல ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற சில நாடுகள் உறுப்பினர்களாக இல்லை. அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட எந்தவொரு வழக்குகளுக்கு ICC பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


மியான்மர் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், சில எல்லை தாண்டிய குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்தக் குற்றங்கள் ஓரளவு ஐ.சி.சி உறுப்பினரான வங்கதேசத்தில் நடந்தன. நாடுகடத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை குற்றங்களில் அடங்கும். இதன் விளைவாக, வழக்கறிஞர்கள் முறையான விசாரணையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.


இஸ்ரேலும் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை. அதன், அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், பாலஸ்தீன பிரதேசங்கள் 2015-ம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினராகின. இதன் காரணமாகவும் நீதிபதிகளின் தீர்ப்பின் காரணமாகவும், நீதிமன்றம் சாத்தியமான போர்க்குற்றங்களை விசாரிக்க முடியும். இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகளின் நடவடிக்கைகளும் காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.




Original article:

Share:

வரவு செலவு அறிக்கை 2025-26: ஒரு நம்பிக்கைக்குரிய முதல் படி, ஆனால் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் -ஷிஷிர் குப்தா, ரிஷிதா சச்தேவா

 2000 முதல் 2020 வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள்தொகையின் நகர்ப்புற பங்கு தொடர்ந்து அதிகரித்ததால் இந்த காலகட்டத்தில் தனிநபர் நகர்ப்புற வருமானம் கிராமப்புறங்களை விட மெதுவாக வளர்ந்ததை இது சுட்டிக்காட்டுகிறது.


உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டுப் பொருளாதாரம் இருந்த காலகட்டத்தில், பிப்ரவரி 1, 2025 அன்று ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 6.4% ஆகவும், 2025-26 நிதியாண்டில் 6.3-6.8% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை விட மிகக்  குறைவான வளர்ச்சியாகும். வருமான வரி குறைப்பு மூலம் தேவை ஊக்குவிப்புக்கு (demand stimulus) அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நகர்ப்புற சீர்திருத்தங்கள், உத்தேச சீர்திருத்தங்கள் பற்றி போதுமானதாக இல்லை. இந்திய நகரங்கள் மற்றும் பெரு நிறுவனங்களை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுவதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும். இவை நகர்ப்புறங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% பங்களிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தேசிய உற்பத்தியில் 40% மற்றும் ஏற்றுமதியில் 55% உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் பெரிய வணிகங்களில் நடப்பதால், இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.


"நகர்ப்புற வளர்ச்சி" என்பது முக்கிய வளர்ச்சித் தூண்களில் ஒன்றாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. உலகம் முழுவதும், நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாகச் செல்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், நகரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது இப்போது முன்னெப்போதையும் விட தற்போது முக்கியமானது. 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில், இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது.  தனிநபர் நகர்ப்புற வருமானம் (per capita urban income) கிராமப்புற வருமானத்தை விடமெதுவாக வளர்ந்தது. 


இருப்பினும் நகரங்கள் கிராமப்புறங்களை விட மூன்று மடங்கு அதிக உற்பத்தித்திறன் கொண்டவை.  நகர உற்பத்தித்திறன் குறைந்தால், அது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். நகர்ப்புற வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் நகரங்களில் குறைந்த வாழ்க்கைத் தரம் ஆகும்.  எடுத்துக்காட்டாக, நகராட்சி கழிவுகளில் 95% சேகரிக்கப்பட்டாலும், அதில் 50% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் (litre per capita per day (lpcd)) 135-150 ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு லிட்டர் என்ற அளவுகோலுடன் ஒப்பிடும்போது நீர் கிடைக்கும் தன்மை சுமார் 115 lpcd ஆகும். மேலும், விலை-வருமான விகிதம் (price-to-income ratio (PTI)) கொண்ட  சராசரி வருமானம் ஈட்டும் குடும்பத்தினரால் 950 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கான விலை நமது நகரங்களில் 11 ஆக உள்ளது.  இது 5 மலிவு விலை அளவுகோலுக்கு மாறாக உள்ளது.


போதுமான சேவை வழங்கல்  இல்லை


துணை-உகந்த சேவை (Sub-optimal service) வழங்கல் பல காரணிகளால் ஏற்படுகிறது.  நிதி பற்றாக்குறை அதில் ஒரு முக்கிய காரணியாகும். இந்திய நகரங்கள் நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு செலவழிக்க வேண்டிய தொகையில் கால் பகுதியை செலவிடுகின்றன. நகர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல திட்டமாக, ₹1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund) உருவாக்குவது என்ற மைய அரசின் யோசனை உள்ளது. இந்த நிதி, பணத்தை திறமையாகப் பயன்படுத்துதல், தெளிவாகத் திட்டமிடுதல் மற்றும் சேவைகளை மேம்படுத்த நிலையான நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


திடக்கழிவு மேலாண்மை (solid waste management (SWM)) தொடர்பான 27 பெரிய நகராட்சிகளின் செலவுகள் மற்றும் விளைவுகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்வில், 19 நகராட்சிகள் வழக்கத்தை விட அதிக செலவுகளை செய்துள்ளன. ஆனால், தூய்மை இந்தியா திட்டத்தின் தரவரிசையின் கீழ் இதில் உள்ள நகராட்சி எதுவும் சரியான  தரநிலை பெறவில்லை. தூய்மை சேவைகளில் ஏற்பட்ட மறுபாடுகளுக்கு 23% செலவினங்கள் காரணமாகும். மீதமுள்ளவை நிலையான தலைமை, குடிமக்களின் ஈடுபாடு போன்ற பணவியல் சாராத பரிமாணங்களால் ஏற்படுகின்றன. இதனால், அதிக வளங்களுடன், சிறந்த செலவினத் திறனுக்கான தேவையும் உள்ளது.


குடிமை சேவைகளின் போதுமான விநியோகம் இல்லாதது மட்டுமல்லாமல், இந்திய நகரங்கள் அதிக வீட்டு விலைகளால் பாதிக்கப்படுகின்றன. உலகளவில், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையின் அளவோடு இணைந்து நகர்கிறது. இந்தியா தற்போது, “அரை-வெளிப்படையான” (semi transparent) நாடுகளின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் அதன் 11 விலை-வருமான விகிதம் (PTI) இந்த வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துப்போகிறது. அரை-வெளிப்படையான சந்தைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நம்பகமான மற்றும் கடுமையான நில பயன்பாட்டு திட்டமிடல் இல்லாததும், அதன் மோசமான செயல்படுத்தலும் ஆகும். 


வீட்டுவசதியை மிகவும் மலிவு விலையில் வழங்க, இந்தியா மேம்படுத்தக்கூடிய நிலத்தை வெளிப்படையான முறையில் தெரிவிக்க வேண்டும். இது புதிய ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்களுக்கு சந்தையில் நுழைய அனுமதிப்பதன் மூலம் போட்டியை அதிகரிக்கும். அதிக போட்டி விலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் வீடுகள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இது அடுத்த கேள்வியை எழுப்புகிறது, இந்த சீர்திருத்தங்களை யார் செயல்படுத்துவார்கள்? மேற்கூறிய அனைத்தும் மூன்றாம் அடுக்கின் (Third tier) கீழ் வருவதால், தெளிவான பதில் மாநகராட்சிகள் இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும். 


இருப்பினும், உண்மையில், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஒரு நகராட்சி ஆணையரின் சராசரி பதவிக்காலம் வெறும் 10 மாதங்கள் மட்டுமே என்பதால், இவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மேயர்கள் மற்றும் ஆணையர்களுக்கான நிலையான அமைப்பிலிருந்து தொடங்கி, நிர்வாக சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளது.


ஒருங்கிணைப்பு விளைவு பகுதியை அதிகப்படுத்துதல்


சவால் நிதி (Challenge Fund), ஒரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 8,000 நகரங்கள் மற்றும் மாநகரங்களில், நகர்ப்புற புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை எவை? மாநில தலைநகரங்களுடன் இணைந்து மில்லியன் கணக்கான நகரங்களின் ஒருங்கிணைப்பு விளைவை அதிகப்படுத்துவது ஒரு நல்ல தேர்வாகும். இந்த நகரங்கள் ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியை அதிகரின்றன மற்றும் ஒருங்கிணைப்பு விளைவை அதிகரிக்க முடியும். இந்த நகரங்களின் குழு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% ஆகும் அவை பெரும்பாலான மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களாக உள்ளன. மேலும், அவை வெவ்வேறு பகுதிகளில் பரவியுள்ளன. 


முற்றிலும் புதிய நகரங்களை உருவாக்குவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.  அதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள அதிக திறன் கொண்ட நகரங்களை மேம்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறையாகும். குருகிராம் ஒரு பெரிய பொருளாதார மையமாக மாற 20 ஆண்டுகள் 1991-2011 வரை எடுத்தது. இந்தக் காலகட்டத்தில், அதன் மக்கள் தொகை 2,00,000-லிருந்து 1-மில்லியனாக வளர்ந்தது. 


நிலம், அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியில் இருந்து திறமையான தொழிலாளர்களை அணுகுவது போன்ற சிறந்த சூழ்நிலைகள் இருந்தபோதிலும் இது நடந்தது. புதிய நகரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பொருளாதார ஆற்றலுடன் ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துவது நகர்ப்புற வளர்ச்சியை அதிகரிக்க விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.


நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு, இறக்குமதிகள் மீதான அடிப்படை சுங்க வரியையும் (Basic Customs Duty BCD)) ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை குறைத்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் போட்டியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரசாயனங்கள், மருந்துகள், லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைப்பதன் மூலம், சராசரி கட்டண விகிதம் 13% இருந்து 10.5% ஆகக் குறைந்துள்ளது. அதிக கட்டணங்கள் செலவுகளை உயர்த்துகின்றன. 


இதனால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், இது உள்நாட்டு நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான விலையை அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணைவது கடினம். உதாரணமாக, இந்தியாவில் ஆப்பிள் போன்களின் இறக்குமதிக்கு இதே அளவிலான வரி விதிக்கப்படுவதால், அதன் விலை 20% அதிகமாக உள்ளது. இருப்பினும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தொடர்புடைய கட்டணங்கள் 1-3% வரை இருக்கும். 


பல தயாரிப்புகள் மீது விதிக்கப்படும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியை (Agriculture Infrastructure Development Cess (AIDC)) நீக்குவதும் முக்கியமான படியாகும். இது முன்பு இருந்தது போலவே பயனுள்ள பாதுகாப்பு விகிதத்தை பராமரிக்க உதவும். இறுதியாக, 2014 முதல் 2019 ஆம் ஆண்டு தொழில் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 


இருப்பினும், முன்னேற்றத்திற்கு நிறைய வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழுவை முன்மொழிந்துள்ளது. இருப்பினும், உண்மையான  தாக்கத்தை ஏற்படுத்த, இதை ஒரு நிலையான காலக்கெடுவிற்குள்  செயல்படுத்தப்பட வேண்டும்


இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் முக்கிய பகுதிகளை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதற்கு இந்த வரவு செலவு அறிக்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆனால், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. 

ஷிஷிர் குப்தா ஒரு மூத்த ஆய்வாளராகவும், ரிஷிதா சச்தேவா சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில்  (Centre for Social and Economic Progress) ஒரு கூட்டு ஆராய்ச்சி யாளராக உள்ளார்.




Original article:

Share:

உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தியா -பூஜா ராமமூர்த்தி

 மற்ற நாடுகளின் கருத்துகளையும் கேட்க கற்றுக்கொண்டால் உலகளாவிய தெற்கின் 'குரலாக' இருப்பதற்கான இந்தியாவின் விருப்பம் நிறைவேறும். 


ஜனவரி 2025-ல், ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, அவர் இன்றைய இந்தியா தனது கருத்துக்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறது என்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுவாக எழுப்புவதாக பிரதமர் கூறினார். ஆகஸ்ட் 2024-ல், 3-வது உலகளாவிய தெற்கு குரல் உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களை வழிநடத்த விரும்புவதாகக் கூறினார். இந்த சீர்திருத்தங்கள் வளரும் நாடுகள் ஒரு நியாயமான உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க உதவும் என்று ​​பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


வளரும் நாடுகளின் நலனுக்காகப் போராடுவதில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை எது பாதித்துள்ளது? மேலும், ஒரு பயனுள்ள உலகளாவிய வளர்ச்சி கூட்டாளியாக மாறுவதற்கு மாற்றத்தை நாடு எவ்வாறு பாதிக்க முடியும்?


இந்தியாவின் அணுகுமுறை அணிசேரா இயக்கத்திலிருந்து (Non-Alignment Movement (NAM)) வேறுபட்டது. இது காலனித்துவ நீக்கம் அல்லது மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. உலகளாவிய தெற்கில் தனது பங்கை விரிவுபடுத்தும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பாரம்பரிய நட்புநாடுகளுடனும் இந்தியாவின் உறவை வலுப்படுத்துகிறது. முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஜனவரியில் இந்தியாவுக்கு பயணம்செய்தார். இது வளர்ந்துவரும் உறவுகளைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2024-ல், பிரதமர் நரேந்திர மோடி போலந்துக்கு பயணம், புதிய கூட்டணிகளை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் வாதம்


சீனாவின் பதில், வளர்ந்துவரும் உலகளாவிய சக்தியை இந்தியா எதிர்கொள்ள முயற்சிப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவில் அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியைக் காட்டுகின்றன. சீனா ஏற்கனவே வலுவான இருப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலீடு செய்கிறது. சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த தொழில்மயமான நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றன. ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட்  (India, Japan, Australia, and the United States (Quad)) கூட்டாண்மை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி கதையின் ஒரு பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது முழுமையாக எதுவும் வெளியிடப்படவில்லை. 


இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாக தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பல உலகளாவிய தெற்கு நாடுகள் தற்போதைய பொருளாதார காரணிகளால் அதிருப்தி அடைந்துள்ளன. இந்த நாடுகள் கடன் மற்றும் கடுமையான நிபந்தனைகளுடன் போராடுகின்றன. அவர்கள் மற்றொரு சீனாவையோ அல்லது ஒரு புதிய மேற்கத்திய நிறுவனத்தையோ விரும்பவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்தியா உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு பலமாக செயல்பட முடியும். இருப்பினும், இதில் வெற்றிபெற வலுவான செயல்கள் மற்றும் திட்டங்களுடன் இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.


இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்


முதலாவதாக, இந்தியா ஒரு புதிய வளர்ச்சி ஒத்துழைப்பு முறையை வலியுறுத்த வேண்டும். இந்த அணுகுமுறையை உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடாது. வளரும் நாடுகளுடன் சமமான கூட்டாண்மைகளை இந்தியா ஊக்குவிக்கிறது. பாரம்பரிய உலக சக்திகளிடமிருந்து வேறுபட்டு இருக்க விரும்புகிறது. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் சில நேரங்களில் வேறுபட்ட அணுகுமுறையைக் காட்டுகின்றன. இந்தியா பெரும்பாலும் "முதலில் இந்தியா" என்ற உத்தி மூலம் தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.


உலகளாவிய தெற்குப் பகுதியில் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இந்தியா சமீபத்தில் “உலகளாவிய மேம்பாட்டு ஒப்பந்தத்தை” (Global Development Compact) அறிவித்தது. இந்தத் திட்டம் இந்தியாவின் சொந்த அனுபவங்கள் மற்றும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் தனித்துவமான நாடாகவும் உள்ளது. இந்தியா தனது அறிவைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், உலகின் பிற தென் நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா தனது நாட்டிற்குள் எதிர்கொண்டு வரும் சவால்களைத் தீர்க்க உதவும். நாடுகள் தங்களை சமமாக நடத்தும் நட்புநாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இந்தியா இதைச் செய்யத் தவறினால், அது உண்மையான நாடாகக் கருதப்படுவதற்குப் பதிலாக ஒரு மேலாதிக்க சக்தியாகக் கருதப்படலாம்.


இரண்டாவதாக, வளர்ச்சி சவால்களைத் தீர்ப்பதில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இந்தியா கவனம் செலுத்துகிறது. சர்வதேச நிகழ்வுகளில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle For Environment)  மூலம் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சி மக்கள் குறைந்த நுகர்வு வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது.  இது முக்கியமானது என்றாலும், இந்தியா தனது அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும். மனித வளங்கள் மற்றும் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது எதிர்கால நிலைத்தன்மை சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும். திறன் இந்தியா (Skill India) மற்றும் பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டங்கள்,  போன்ற இந்தியாவின் முன்முயற்சிகள் உலகளாவிய தென் நாடுகளுக்கு பயனளிக்கும். இந்த நாடுகளும் தங்கள் உள்நாட்டு தொழில்களை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியாவின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் முக்கியமாக இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC)) திட்டத்தில் கவனம் செலுத்துகின்றன. இந்த திட்டம் குறுகிய கால, துறை சார்ந்த பயிற்சி  நடத்துகிறது. இருப்பினும், நீண்ட கால தாக்கத்திற்கு, நாடுகள் தங்கள் சொந்த நிறுவனங்களை உருவாக்க இந்தியா உதவ வேண்டும். இது ஒரு வலுவான பணியாளர்களை உருவாக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடனான (micro, small and medium enterprises (MSMEs)) அனுபவத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் அறிவைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தலாம். டிஜிட்டல் உட்கட்டமைப்பு, காலநிலை மற்றும் எரிசக்தி தீர்வுகள் மற்றும் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஒத்துழைப்பிற்கான முக்கிய பகுதிகளாகும்.


முன்னால் உள்ள இலக்கு


இறுதியாக, இந்தியா மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 2023-ல், G-20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்த போது, ஆப்பிரிக்க ஒன்றியம் G-20-ல் நுழைவதை ஆதரித்தது. இது உலகளாவிய நிறுவனங்களை அதிக பிரதிநிதித்துவப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டியது. முதலில், இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்புக்காக தற்போதுள்ள நிறுவன வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற அனுபவமிக்க நாடுகளும் அடங்கும். இருப்பினும், நீண்ட காலத்திற்கு, சர்வதேச ஒத்துழைப்புக்காக இந்தியா அதன் சொந்த வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். முத்தரப்பு கூட்டாண்மைகள் மற்றும் புதிய உலகளாவிய ஈடுபாடுகள் ஆகியவை செயல்படுத்துவதன் மூலம் கற்றல் செயல்முறையாக பார்க்கப்பட வேண்டும். இந்த ஒத்துழைப்புகளிலிருந்து இந்தியா அனுபவத்தைப் பெற வேண்டும். மேலும், இந்தியா தலைமையிலான உலகளாவிய முயற்சிகளை விரிவுபடுத்த அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.


இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க விரும்புகிறது. அது நிறைவேற பிற நாடுகளின் கருத்துக்களையும் கேட்க  வேண்டும். கடந்த காலத்தில், இந்தியா அணிசேரா இயக்கத்தை (Non-Aligned Movement (NAM)) வழிநடத்தியபோது, ​​வளரும் நாடுகளுக்கு ஒரு புதிய, மூன்றாவது வழி இருப்பதை உலகிற்குக் காட்டியது. அது போன்ற ஒரு வாய்ப்பை இந்தியா இப்போது தவறவிடக்கூடாது.


பூஜா ராமமூர்த்தி புதுதில்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் (Centre for Social and Economic Progress (CSEP)) ஒரு இணை உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share: