இந்தியாவில், உழைப்புக்கு மூலதனத்தின் அளவு கவனம் தேவை - ஃபர்சானா அப்ரிடி

 வளர்ந்த இந்தியா (Viksit Bharat) செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, எதிர்காலத்திற்கான பணியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதி திறனுடைய மற்றும் ஆற்றல்மிக்க கொள்கை கட்டமைப்பானது (agile and dynamic policy framework) மிகவும் முக்கியமானது.


2017-18 முதல், இந்தியாவின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதினர் சுமார் 9 கோடி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், முறையான துறை சார்ந்த வேலைகளின் 6 கோடி உயர்ந்துள்ளன. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 லட்சம் வேலைகள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. சமீபத்திய வேலைவாய்ப்பு அதிகரிப்பில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் சுயதொழில் அல்லது முறைசாரா சேவைகள் மூலம் வந்துள்ளன. எனவே, அதிகரித்து வரும் உழைக்கும் வயதினரின் வேலை வாய்ப்புகளின் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.


தீவிர தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் (rapid technological progress), அதிகளவு முறையான துறை சார்ந்த வேலைகளை உருவாக்குவதற்கான சவால் இன்னும் கடினமாகிறது. அனைத்து துறைகளிலும் உற்பத்தி தொழில்நுட்பம் குறைவான அளவு உழைப்பு மிகுந்ததாக மாறி வருவதாக தரவு காட்டுகிறது. அதிக உழைப்பு மிகுந்த உற்பத்தி மற்றும் சேவைகள் உட்பட அதிக மூலதன-தீவிர உற்பத்தியை நோக்கிய மாற்றம், செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சியுடன் வேகமடைய வாய்ப்புள்ளது.


ஆனால், உழைப்பு நிறைந்த பொருளாதாரத்தில் உற்பத்தியின் மூலதன தீவிரம் ஏன் அதிகரித்து வருகிறது? இதில் இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவதாக, தேவை சார்ந்த காரணிகள் (demand-side factors) ஆகும். இந்த காரணிகள் மூலதன-தீவிர நுட்பங்களைப் பின்பற்றுவதை அவசியமாக்குகின்றன. இது குறைந்த செலவில் உற்பத்தித்திறன் மற்றும் மதிப்பை அதிகரிக்க உதவுகிறது. இரண்டாவதாக, விநியோக-பக்க காரணிகள் (supply-side factors) ஆகும். இந்த காரணிகள் திறமையான அல்லது உயர்தர உழைப்பின் கிடைக்கும் தன்மையை பாதிக்கின்றன.


மூலதனம் (capital) அல்லது இயந்திரங்களின் விலை குறைந்தால் (machinery decreases), உற்பத்தியாளர்கள் அதிக மூலதன-தீவிர தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இதில், உற்பத்தித்திறன் மேம்படாவிட்டாலும் இது நிகழலாம். சேவைத் துறையானது, மதிப்புக் கூட்டலில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேவைகளின் வளர்ந்து வரும் பங்களிப்பால் இது பிரதிபலிக்கிறது. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு தேக்கமடைந்துள்ளது.


உண்மையான ஊதியங்கள் அதிகம் அதிகரிக்கவில்லை என்றாலும், உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக மூலதனம் மற்றும் புதிய இயந்திர அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் விலை விரைவாகக் குறைந்து வருகிறது. அதேநேரத்தில், நமது தொழிலாளர் படையில் 10%-க்கும் குறைவானவர்களே முறையான தொழில்நுட்ப அல்லது தொழில் பயிற்சி பெற்றுள்ளனர். நமது படித்த இளைஞர்களில் பெரும்பாலோர் வேலைவாய்ப்புக்குத் தயாராக இருப்பதற்குத் தேவையான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் சான்றுகள் தெரிவிக்கின்றன.


குறிப்பிட்ட திறன்களை ஆதரிக்கும் புதிய தொழில்நுட்பங்களின் வருகையுடன், தேவையற்ற பணிகளின் மதிப்பிழப்பு அல்லது அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த "திறன்-சார்பு தொழில்நுட்ப மாற்றம்" (skill-biased technological change) தொடர்பாக, நிறுவனங்கள் அதிக உற்பத்தி மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான இயந்திர அடிப்படையிலான தொழில்நுட்பங்களை நோக்கி மாறும்போது தொழிலாளர்களுக்கான தேவையைக் குறைக்கிறது. எனவே, புதிய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை நிறைவு செய்யும் திறன்களுடன் நமது தொழிலாளர்களின் திறன்களை தொடர்ந்து புதுப்பித்து மேம்படுத்துவது மிகவும் முக்கியம். 


இந்த சூழ்நிலையில், முறை சார்ந்த துறையில் அதிக தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்க என்ன கொள்கைகளை பின்பற்ற வேண்டும்?


வேலைகளின் இடைவெளியைச் சமாளிக்க ஒன்றிய அரசு இரண்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது. முதலாவதாக, PLI திட்டம் போன்றவற்றின் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் இது கவனம் செலுத்துகிறது. இரண்டாவதாக, தனியார் துறை அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive(ELI)) மற்றும் பிற பயிற்சித் திட்டங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கவும் ஊக்குவிக்கிறது.


தற்போதைய உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டம் முக்கியமாக உயர் மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த தயாரிப்புகளுக்கு உயர் திறன், சிறந்த உழைப்பு ஆகியவை தேவை. இந்தத் திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர திறன், உழைப்பு மிகுந்த வேலை தேவைப்படும் துறைகளில் குறைவாக கவனம் செலுத்துகிறது. PLI பட்ஜெட்டில் 50%-க்கும் அதிகமானவை பெரிய அளவிலான மின்னணுவியல் (electronics), தகவல் தொழில்நுட்ப வன்பொருள் (IT hardware) மற்றும் ட்ரோன் உற்பத்திக்கு (drone manufacturing) ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மருந்துத் தொழில்களில் பெரும்பாலான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் வேலை உருவாக்கும் திறனுக்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை உள்ளது. திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உயர் ரக தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைத் தடுக்கலாம். நமது தற்போதைய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த அல்லது நடுத்தர திறன்களைக் கொண்டுள்ளனர்.


மறுபுறம், ELI திட்டம், முறையான துறையில் வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation(EPFO)) ​​மூலம் அரசாங்க பணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறது. இது உழைப்பு மிகுந்த துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. பணியமர்த்தல் அபாயங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பயிற்சி பெறாத தொழிலாளர்களை பணியமர்த்த இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தக் கொள்கை ஆரம்பச் சுமையை அரசாங்கத்திற்கு மாற்றுவதன் மூலம் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில், மானியம் அல்லது இடமாற்றங்கள் குறுகியகால (சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை) ஆகும். இந்தத் திட்டம் நீடித்த வேலைவாய்ப்பை உருவாக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றது.


காலப்போக்கில் பயிற்சியாளர்களைக் கண்காணிக்க கூடுதல் தரவு தேவை. இந்தத் திட்டம் நிலையான திறனுக்கு வழிவகுக்குமா என்பதை மதிப்பிட இது உதவும். ELI திட்டம் முதலாளிகளை ஆரம்ப மற்றும் தொடர்ச்சியான திறன் இரண்டிலும் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியுமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது. பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இது முக்கியம்.


அதாவது, உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்தத் துறைகளில் தேவையான, பூர்த்தியான திறன்களைக் கொண்ட தொழிலாளர்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்தவும், ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க, உற்பத்தி மற்றும் தொழிலாளர் திறனுக்கான உத்திகளை இணைப்பதை கொள்கை வகுப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை வேலை உருவாக்கத்தில் தடையாக இருக்கும் தேவை மற்றும் விநியோக காரணிகள் இரண்டையும் நிவர்த்தி செய்யும், அதே நேரத்தில் அதிக மதிப்புள்ள உற்பத்தியை நோக்கி பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றத்தையும் தூண்டும்.


தற்போது, ​​ஒவ்வொரு அமைச்சகமும் அதன் சொந்த PLI பட்ஜெட்டைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்களுடன் சிறிய ஒருங்கிணைப்பு உள்ளது. இதன் விளைவாக, திறமையான தொழிலாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால விநியோகம் எங்கிருந்து வரும் என்பதை அவர்கள் வரைபடமாக்குவதில்லை. இதன்மூலம், ELI ஊக்கத்தொகைகளின் கட்டமைப்பை மாற்றலாம். சமமாக இருப்பதற்குப் பதிலாக, சான்றளிக்கப்பட்ட திறன்களின் ஒவ்வொரு மட்டத்திலும் இடமாற்றங்கள் அதிகரிக்கக்கூடும். இது வேலையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு இரண்டையும் ஆதரிக்கும். ELI திட்டத்தின் கவனம் திறன் விநியோகச் சங்கிலிக்கும் மாறக்கூடும். இது ITIகள் போன்ற பயிற்சி நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை மறுசீரமைத்து சலுகைகள் அளிக்கக்கூடும். இந்த சலுகைகள் திறன்களுக்கான எதிர்கால தேவையுடன் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.


அதே நேரத்தில், கடுமையான தொழிலாளர் விதிமுறைகள் என்ற நீண்டகால பிரச்சினையை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த விதிமுறைகள் உழைப்பிற்கான தகுந்த விலையை உயர்த்துகின்றன மற்றும் வணிகங்களை மூலதன-தீவிர தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கின்றன. நெகிழ்வான தொழிலாளர் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான பொறுப்பு மாநில அரசாங்கங்களிடமே உள்ளது.


தகவமைப்பு மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் கொள்கை கட்டமைப்பு மிக முக்கியமானது. வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) இலக்கை ஆதரிக்கும் ஒரு பணியாளர்களை உருவாக்குவதில் அது கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் (production value chain) நாம் முன்னேறும்போது, ​​நமது தற்போதைய மற்றும் எதிர்கால பணியாளர்களின் அளவு மற்றும் தரம் இரண்டிலும் முதலீடு செய்ய வேண்டும்.


எழுத்தாளர் ISI (டெல்லி)-ல் பொருளாதாரப் பேராசிரியராகவும் NCAER-ல் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.


Original article:
Share:

பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைகள் (PM-MITRA) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


• “நீண்ட காலப் போக்குகளைப் பார்த்தால், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 2001 நிதியாண்டில் $11.5 பில்லியனில் இருந்து 2024 நிதியாண்டில் $34.8 பில்லியனாக அதிகரித்துள்ளன. இருப்பினும், இது உலக சந்தையில் 4% மட்டுமே. இந்த விகிதத்தில், பெரிய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்படவிட்டால், 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும்.


• 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய, ஆடைகள் மட்டுமல்லாமல், முழு ஜவுளி மற்றும் ஆடை துறையையும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இதைச் செய்ய, விவசாயம் முதல் ஏற்றுமதி வரை ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள சவால்களைப் பார்க்க வேண்டும்.


• 2024-25ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக பருத்தியை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறக்குமதி 2.6 மில்லியன் பேல்களை எட்டும், அதே நேரத்தில் ஏற்றுமதி 1.5 மில்லியன் பேல்களாக மட்டுமே இருக்கும். இது 2014ஆம் நிதியாண்டில் 11.7 மில்லியன் உச்ச ஏற்றுமதியிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள உச்ச மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee (GEAC)) அனுமதி அளித்த போதிலும், அடுத்த தலைமுறை களைக்கொல்லி சகிப்புத்தன்மை (herbicide tolerant (Ht)) மரபணுமாற்ற விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதிக்காததே இந்த சரிவுக்கு முக்கிய  காரணமாகும்.


• “இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளன, ஆனால் அவர்களில் பெரும்பாலானவை (சுமார் 80%) பரவலாக்கப்பட்ட துறையில் உள்ளன. இதன் விளைவாக, ஏற்றுமதிகள் இருக்கக்கூடியதைவிட மிகக் குறைவாகவே உள்ளன. முக்கியப் பிரச்சினைகள் நவீன தொழில்நுட்பத்தை மெதுவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செயல்பாட்டில் பலவீனமான இணைப்புகள் ஆகும். பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை (Pradhan Mantri Mega Integrated Textile Region and Apparel (PM-MITRA)) திட்டம் ஜவுளி பூங்காக்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அதிக நிலத் தேவைகள் சிறு குறு வணிகங்களுக்கு அதன் வரம்பைக் கட்டுப்படுத்துகின்றன.


• சவால்களை சமாளிக்கவும், 2030-க்குள் T&A ஏற்றுமதியின் லட்சிய இலக்கை அடையவும், இந்தியா ஒரு ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்றி தைரியமான கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும்.


• முதலாவதாக, இந்தியாவின் ஆடைத் துறை fashion-driven தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த மாற்றத்திற்கு உதவ, மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளிலிருந்து (man-made fibres (MMF)) தயாரிக்கப்பட்ட ஆடைகளில் முதலீட்டை ஊக்குவிப்பதும், MMF-ல் தரக் கட்டுப்பாட்டு விதிகள் போன்ற தடைகளை நீக்குவதும் முக்கியம்.


• இரண்டாவதாக, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி மையங்களை உருவாக்க PM-MITRA திட்டம் விரைவாக கண்காணிக்கப்பட வேண்டும். இது துணி மற்றும் ஆடை உற்பத்தியில் அளவிடுதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.


• "மூன்றாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreements (FTAs)) பேச்சுவார்த்தை நடத்துவது,  இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 66 சதவிகிதம் பங்கு வகிக்கும் முக்கிய சந்தைகளுக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும்.


• "நான்காவதாக, பருத்தி உற்பத்தியையும், இழைகளின் தரத்தையும் மேம்படுத்துவது முக்கியம். இந்தியா அதிக அளவில் பருத்தியை உற்பத்தி செய்வதால், ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது, ஆனால் அது அதன் முழு திறனுக்கும் பயன்படுத்தப்படவில்லை.


• இந்த முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா தனது T&A ஏற்றுமதிகளை அதிகரித்து 2030-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் இலக்கை நெருங்க முடியும். இருப்பினும், அரசாங்கம் வலுவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது நடக்கும். இல்லையெனில், அது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.


Original article:
Share:

இந்தியாவின் அணுக் கோட்பாடு என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் எரிசக்தி தேவை வேகமாக அதிகரித்து வருவதாக ஜிதேந்திர சிங் குறிப்பிடுகிறார். 2047-ஆம் ஆண்டுக்குள், மின்சாரத் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 70% மின்சாரம் இன்னும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்தே வருகிறது. இந்த முரண்பாடு இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்போது பொருளாதாரத்தை விரைவாக எவ்வாறு வளர்ப்பது எனும் எரிசக்தி சவாலை எடுத்துக்காட்டுகிறது. நிலையான மற்றும் தன்னிறைவு பெற்ற எரிசக்தி எதிர்காலத்திற்கான இந்தியாவின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அணுசக்தி மாறியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• அணுசக்தி என்பது சக்திவாய்ந்த மின் உற்பத்தி வடிவங்களில் ஒன்றாகும். அங்கு சிறிய அளவிலான எரிபொருளால் மிகக் குறைந்த கார்பன் உமிழ்வுடன் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அணுசக்தியிலிருந்து 70%-க்கும் அதிகமான மின்சாரத்தைப் பெறும் பிரான்ஸ், இந்த தொழில்நுட்பம் குறைந்த கார்பன் எரிசக்தி உத்திக்கு எவ்வாறு முக்கியமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.


• இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களை அதிகமாக நம்பியிருப்பது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கிறது மற்றும் உலகளாவிய விலை மாற்றங்களுக்கு ஆளாக்குகிறது. அதே நேரத்தில், சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, இந்தியா தனது கார்பன் தடயத்தைக் குறைப்பதாக உறுதியளித்துள்ளது.


• வானிலை சார்ந்திருக்கும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போல் இல்லாமல், அணுசக்தி எப்போதும் நம்பகமான மின்சாரத்தை வழங்குகிறது. நீர் மின்சாரம் பருவகால மாற்றங்களையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டாலும், நிலக்கரி தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், அணுசக்தி ஒரு நிலையான மாற்றீட்டை வழங்குகிறது.


• இந்தியாவின் அணுசக்தி உத்தி, ஹோமி பாபாவால் உருவாக்கப்பட்ட மூன்று கட்டத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பெரிய தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி முழுமையான எரிசக்தி தன்னிறைவை அடைவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 2070-ஆம் ஆண்டிற்க்குள் இந்தியா தனது நிகர-பூஜ்ஜிய இலக்கை அடையும் நோக்கில் இந்த இலக்கு இப்போது மிகவும் அவசரமானது.


• தற்போது, அணுசக்தி இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் பங்களிக்கிறது. இந்த எண்ணிக்கை 21 அணுஉலைகள் மொத்தம் 15,300 மெகாவாட் செயல்படுத்தும் பல்வேறு கட்டங்களில் கணிசமாக அதிகரிக்கும்.


• 2023-24ஆம் ஆண்டில், குஜராத்தின் காக்ராபரில் இந்தியா தனது முதல் 700 மெகாவாட் கொண்ட உள்நாட்டு முன்மாதிரி அழுத்த கன நீர் உலையை (Prototype Fast Breeder Reactor (PFBR)) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இது சுயசார்புக்கான ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. நாடு அணு எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பத்திலும் முன்னேறியுள்ளது, முன்மாதிரி அழுத்த கன நீர் உலையை 2024-ல் முக்கியமான சாதனைகளை படைத்தது.


• சிறிய மட்டு உலை (Small Modular Reactors (SMRs)) மற்றும் பாரத் சிறிய உலை (Bharat Small Reactors (BSRs)) ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஒரு முக்கிய வளர்ச்சியாகும். சிறிய மட்டு உலை, ஆராய்ச்சிக்காக அரசாங்கம் ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளது மற்றும் 2033ஆம் ஆண்டிற்குள் குறைந்தது ஐந்து செயல்பாட்டு சிறிய மட்டு உலைகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளது.


• 2047ஆம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி திறனை அடைய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 8.18 GW-லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. இதை அடைய, உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


• ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான சர்வதேச கூட்டாண்மைகள் புத்துயிர் பெற்றுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொவ்வாடாவில் அமெரிக்காவுடன் இணைந்து ஆறு 1208 மெகாவாட் அணுமின் நிலையங்களை அமைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• சுதந்திரத்திற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையம் உருவாக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கியது. 1956ஆம் ஆண்டு, ஆசியாவின் முதல் ஆராய்ச்சி உலையான Apsara, டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre (BARC)) கட்டப்பட்டது. இது இந்தியாவின் வலுவான அணுசக்தி திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது.

• நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், சிறிய மட்டு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ₹20,000 கோடி மதிப்பிலான அணுசக்தி இயக்கத்தை அமைக்கும் என்று கூறினார். மேலும், 2033-ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் ஐந்து உலைகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறிய மட்டு உலைகள் செயல்படும் என்று உறுதியளித்தார்.


• அணு மின் நிலையங்களை நிர்மாணிப்பதிலும் இயக்குவதிலும் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்க அணுசக்தி சட்டம் மற்றும் அணு சேதத்திற்கான குடிமை பொறுப்புச் சட்டத்தை மாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.


• குறிப்பிடத்தக்க வகையில், சூரிய அல்லது காற்று போன்ற புதுப்பிக்கத்தக்கவை போல் இல்லாமல், அணுசக்தியானது தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், வானிலை தொடர்பான குறிக்கீடுகளால் இது எளிதில் பாதிக்கப்படாது.


• சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)), தூய்மையான ஆற்றலுக்கு மாறுவது குறித்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சர்வதேச அமைப்பானது, உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருந்தால் 2050ஆம் ஆண்டளவில் அணுசக்தி இரட்டிப்பாகும் என்று கூறுகிறது. அணுசக்தியின் பிரச்சனை என்னவென்றால், அது பெரியது, விலை உயர்ந்தது, கட்ட நீண்ட நேரம் எடுக்கும். மேலும், ஏதாவது தவறு நடந்தால் அது மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும்.


Original article:
Share:

பசுமை வரவுத் திட்டம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : சுற்றுச்சூழல் அமைச்சகம், காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பசுமை வரவுத் திட்டத்தை (Green Credit Programme (GCP)) தொடங்கியது. சட்ட அமைச்சகத்தின் அச்சங்களை மீறி செயல்படுத்தப்பட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற பதிவுகள் காட்டுகின்றன.


முக்கிய அம்சங்கள்:


• இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தனியார் தொழில்கள் “பசுமை வரவுகளைப்” பெறுகின்றன. இந்த நடவடிக்கைகளில் வனப்பகுதியை அதிகரித்தல், நீர் மேலாண்மை மற்றும் நிலையான விவசாயத்தை மேற்கொள்வது ஆகியவை அடங்கும். தொழில்துறை அல்லது உட்கட்டமைப்பு திட்டங்களால் ஏற்படும் காடழிப்புக்கு ஈடுசெய்வது போன்ற சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளூர் தளத்தில் கடன்களை வர்த்தகம் செய்யலாம்.


• இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற 41 பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 384 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளன.


• தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிவுகளின்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஆகஸ்ட் 18, 2023 அன்று பசுமை வரவு விதிகளின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் அளித்தார். அதை சட்ட அமைச்சகத்தின் சட்டமன்றத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பினார்.


• அக்டோபர் 5, 2023 அன்று, சட்டத்துறை சில மாற்றங்களை பரிந்துரைத்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 பசுமை வரவு விதிகளின் இலக்குகளை ஆதரிக்காமல் போகலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். முன்மொழியப்பட்ட பசுமை வரவு விதிகள் சட்டப்பூர்வமானதா என்பதை, சட்ட விவகாரத் துறையுடன் கலந்தாலோசித்து, அமைச்சகம் சரிபார்க்க வேண்டும்.


• இதற்கான காரணத்தை விளக்கி, சட்ட அமைச்சகத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு வட்டாரம், சந்தை-இணைக்கப்பட்ட பொறிமுறையில் சட்ட அமைச்சகம் இதே போன்ற கண்காணிப்புகளைச் செய்த பின்னர், கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தை உருவாக்க 2023-ல் திருத்தப்பட்ட எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்துடன் இணையாக ஒரு ஒப்பீட்டை வரைந்தது.


• சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்கு பதிலளிக்கும் விதமாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் பசுமை வரவுத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை ஆதரிக்கிறது என்று கூறியது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்குள் பொருந்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• பசுமை வரவுத் திட்டம் (Green Credits Programme (GCP)) கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமல்லாமல், பல்வேறு சுற்றுச்சூழல் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கும் சந்தை அடிப்படையிலான அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் கார்பன் வரவுகளுக்கு இதேபோன்ற அமைப்பு ஏற்கனவே உள்ளது. நிறுவனங்கள் அல்லது நாடுகள் தங்கள் கார்பன் தடத்தைக் குறைப்பதன் மூலம் கார்பன் வரவுகளைப் பெறலாம். பின்னர், இந்த வரவுகளை பணத்திற்காக வர்த்தகம் செய்யலாம். உமிழ்வு தரநிலைகளை அடைய முடியாத நிறுவனங்கள் இந்த வரவுகளை வாங்கி தங்கள் செயல்திறனை மேம்படுத்த பணம் செலுத்துகின்றன.


• 28-வது காலநிலை மாநாட்டில், கார்பன் வரவுகளில் இருப்பதைப் போலவே, சர்வதேச அளவில் பசுமைக் வரவுகளுக்கான சந்தையை உருவாக்கும் நம்பிக்கையில், பிரதமர் மோடி சர்வதேச சமூகத்திற்கு இந்த கருத்தை கூறினார்.


Original article:
Share:

ஆபரேஷன் பிரம்மா மற்றும் இந்தியாவின் பிற மீட்பு நடவடிக்கைகள் -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி 


மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. பிபிசி செய்தி வெளியிட்டுள்ளபடி, மியான்மர் இராணுவம் 1,002 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயிலும், பூகம்பத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதியிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. “ஆபரேஷன் பிரம்மாவின்” (Operation Brahma) கீழ் இந்தியா மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது என்று PTI தெரிவித்துள்ளது.


இந்தியா பல வெற்றிகரமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் மக்களுக்கு உதவியுள்ளன. மேலும், இந்தியர்களை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்துள்ளன. “ஆபரேஷன் பிரம்மா” என்பது அத்தகைய ஒரு பணியாகும். இதைப் பற்றியும் இந்தியாவின் பிற இதே போன்ற நடவடிக்கைளைப் பற்றியும் பார்ப்போம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஆபரேஷன் பிரம்மா


1. மார்ச் 29 அன்று, மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, “ஆபரேஷன் பிரம்மாவின்” கீழ் இந்தியா மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. இந்தியா தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பியது. ஒரு C-130J விமானம் கூடாரங்கள், போர்வைகள், உணவு, நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் மருந்துகளை யாங்கோனுக்கு வழங்கியது. மேலும் இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் விரைவில் கூடுதல் உதவிகளை எடுத்துச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


2. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு மியான்மருக்கு முதலில் உதவிய நாடு இந்தியா என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.


2. ஆபரேஷன் அஜய் (Operation Ajay)


அக்டோபர் 2023-ல், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோசமடைந்ததால், பல நாடுகள் தங்கள் மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வந்தனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்து வர இந்தியா ஆபரேஷன் அஜய் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.


3. ஆபரேஷன் காவேரி (Operation Kaveri) 


ஏப்ரல் 27, 2023 அன்று, சூடானில் போட்டி இராணுவக் குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டதால், இந்தியா தனது குடிமக்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரியைத் தொடங்கியது. இந்திய விமானப்படை C-130J மற்றும் C-17 விமானங்களைப் பயன்படுத்தியது. அதே நேரத்தில் கடற்படைக் கப்பல்களான INS சுமேதா மற்றும் INS தர்காஷ் ஆகியவையும் உதவியது. கார்ட்டூமின் விமான நிலையம் மூடப்பட்டதால், சிக்கித் தவித்த இந்தியர்கள் முதலில் போர்ட் சூடானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பெரிய அளவிலான நடவடிக்கையின் மூலம் 3,800-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டனர்.


4. ஆபரேஷன் கங்கா (Operation Ganga) 


2022-ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியபோது, ​​உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் அழைத்து வர இந்தியா ஆபரேஷன் கங்காவைத் தொடங்கியது. அரசாங்கம் 24×7 உதவி மையங்களை அமைத்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா எல்லைகள் வழியாக மக்கள் இந்தியாவிற்கு வர ஏற்பாடு செய்தது. இந்திய விமானப்படையின் 14 விமானங்கள் உட்பட மொத்தம் 90 விமானங்கள் மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டன.


5. ஆபரேஷன் தேவி சக்தி (Operation Devi Shakti)


ஆகஸ்ட் 2021-ல், தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பிறகு, இந்தியா தனது குடிமக்களையும் ஆப்கானிய கூட்டாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் தேவி சக்தியைத் தொடங்கியது.


6. வந்தே பாரத் மிஷன் மற்றும் ஆபரேஷன் சமுத்திர சேது (Vande Bharat Mission and Operation Samudra Setu)


2020-ஆம் ஆண்டில், கொரோனா ஊரடங்கின் போது, ​​இந்தியா வந்தே பாரத் திட்டத்தைத் தொடங்கியது. இது 1990 குவைத் விமானப் பயணத்திற்குப் பிறகு மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது ஆயிரக்கணக்கான சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர உதவியது. வெளிநாடுகளில் இருந்து குடிமக்களை திரும்ப அழைத்து வர உதவுவதற்காக இந்திய கடற்படை “ஆபரேஷன் சமுத்திர சேது” (கடல் பாலம்) திட்டத்தைத் தொடங்கியது.


7. ஆபரேஷன் ரஹத் (Operation Raahat)


2015-ஆம் ஆண்டில், போரினால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்களையும் வெளிநாட்டு குடிமக்களையும் வெளியேற்றுவதற்காக, இந்திய அரசு ஆயுதப்படைகளின் உதவியுடன் ஆபரேஷன் ராஹத் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதி கடல் வழியாகத் தொடங்கியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்து தொடங்கியது. இந்திய விமானப்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் 41 நாடுகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் 900 வெளிநாட்டினரையும் வெளியேற்றின. விமானப் போக்குவரத்து ஏப்ரல் 9-ஆம் தேதி முடிவடைந்தது.



8. ஆபரேஷன் மைத்ரி (Operation Maitri)


2015-ஆம் ஆண்டு, நேபாளத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை ஆபரேஷன் மைத்ரியைத் தொடங்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. சிக்கித் தவித்த இந்தியர்களை வெளியேற்ற இந்தியா உதவியது. வெளிநாட்டினரை மீட்டது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது. வெளிநாட்டினர் உட்பட 2,200-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

9. ஆபரேஷன் சேஃப் ஹோம்கமிங் (Safe Homecoming)


2011-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் லிபியாவிலிருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மற்றும் கடல் வழிகள் மூலம் நாட்டிற்கு திரும்பி அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சேஃப் ஹோம்கமிங் திட்டத்தைத் தொடங்கியது. சுமார் 15,000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அதே நேரத்தில் 3,000 பேர் அங்கேயே தங்கினர். 2003ஆம் ஆண்டு ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை இந்தியா மீட்டது. இந்த நடவடிக்கையில் 50,000 பேரை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. வெளியேற்றப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை வேறுப்பட்டது. ஆனால், அது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது.


10. ஆபரேஷன் சுகூன் (Operation Sukoon)


2006-ஆம் ஆண்டு லெபனான் போரின்போது இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையே லெபனானில் இருந்து இந்தியர்கள், இலங்கை மற்றும் நேபாள குடிமக்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் சுகூன் தொடங்கப்பட்டது. லெபனானில் உள்ள 10,000 இந்தியர்களில், சுமார் 2,000 பேர் மோதல் மண்டலத்தில் இருந்தனர். மொத்தத்தில், 1,764 இந்தியர்கள், 112 இலங்கையர்கள், 64 நேபாள நாட்டவர்கள் மற்றும் இந்திய வாழ்க்கைத் துணைவர்களுடன் 7 நேபாள நாட்டவர்கள் உட்பட 2,280 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்தியப் படைகள் மற்ற நட்பு நாடுகளிலிருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு மரியாதை நிமித்தமாக உதவியது.


குவைத்திலிருந்து இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.


1. 1990-ல் குவைத்தில் இருந்து இந்தியர்கள் விமானம் மூலம் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.


2. ஈராக் படைகள் குவைத்தை ஆக்கிரமித்த பின்னர் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்த நடவடிக்கை நடந்தது. ஏர் இந்தியா மற்றும் பிற குடிமை விமானங்களின் உதவியுடன் குறைந்தது 1,75,000 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர்.


3. ஒரு குடிமை விமானம் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றியதற்காக ஏர் இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்தது.


ரோஷ்னி யாதவ் தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரதி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original article:
Share:

மக்கள் தொகைக்கு அப்பாற்பட்ட சிந்தனை -எஸ். இருதய ராஜன், யு.எஸ். மிஸ்ரா

 அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதற்கான ஒரே அளவீடாக மக்கள்தொகை அளவைப் பயன்படுத்துவதைத் தாண்டிச் செல்ல வேண்டிய நேரம் இது.


தொகுதி மறுவரையறை மற்றும் நிதி அதிகாரப் பகிர்வு (நிதி வளங்களைப் பகிர்ந்தளித்தல்) பற்றிய விவாதம் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டமன்றங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் அதிகார சமநிலையையும் அச்சுறுத்துகிறது. இந்தியா முழுவதும் வளர்ச்சியில் உள்ள இடைவெளி மக்கள்தொகையில் உள்ள வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் எல்லைகள் மற்றும் நிதிப் பகிர்வை முடிவு செய்யும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை குறைப்பது  நெருங்கி வருகிறது. இது தெற்கு மற்றும் வடக்கில் உள்ள மாநிலங்கள் அரசியல் ரீதியாக எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பது குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.


1951ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை, வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்தியாவில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1951ஆம் ஆண்டில், ஒவ்வொரு தொகுதியும் 7.3 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆனால், 1971ஆம் ஆண்டு வாக்கில், இந்த எண்ணிக்கை ஒரு இடத்திற்கு 10.1 லட்சமாக அதிகரித்தது. 1971ஆம் ஆண்டில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 2026ஆம் ஆண்டு வரை இதே நடைமுறையே இருக்கும். 2026ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில், இடங்களின் எண்ணிக்கை 753 ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு இடமும் சுமார் 20 லட்சம் மக்களைக் குறிக்கும். இந்த மாற்றம் என்பது மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மெதுவான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கக்கூடும். அதே நேரத்தில் தீபகற்ப மாநிலங்களுக்கு குறைவான இடங்கள் இருக்கலாம் என்பதாகும்.


அரசியல் பிரதிநிதித்துவம்


அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த கவலை உண்மையானது. முதலில் 15வது நிதி ஆணையத்தால் இது குறித்து ஆராயப்பட்டது. நிதி எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை தீர்மானிப்பதற்காக அவர்கள் 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை தரவை 2011ஆம் ஆண்டு தரவுகளுடன் மாற்றினர். மக்கள்தொகை அளவிற்கு மட்டும் அல்லாமல், மக்கள்தொகை செயல்திறனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆணையம் பரிந்துரைத்தது. இந்த மாற்றம் மக்கள்தொகை காரணியை 0.15 இலிருந்து 0.27 ஆக அதிகரித்தது.  இது பெரிய மக்கள்தொகைக் கொண்ட ஆனால் மோசமான மக்கள்தொகை வளர்ச்சிகொண்ட மாநிலங்களுக்கும், சிறிய மக்கள்தொகை கொண்ட ஆனால் சிறந்த மக்கள்தொகை கட்டுப்பாடு கொண்ட மாநிலங்களுக்கும் இடையிலான ஒதுக்கீட்டை சமநிலைப்படுத்த உதவுகிறது.


அரசியல் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க மக்கள்தொகை அளவை மட்டும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. தொகுதி மறுவரையறை செயல்பாட்டில் தென் மாநிலங்கள் எந்த இடங்களையும் இழக்காது. அதே நேரத்தில் வட மாநிலங்கள் இடங்களைப் பெறும் என்பதைக் கேட்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த செயல்பாட்டில் பல முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு இடமும் சராசரியாக 20 லட்சம் மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய, ஒரு இடத்திற்கு மக்களின் எண்ணிக்கையில் வரம்பு இருக்க வேண்டியிருக்கலாம். இது மக்கள் தொகை அதிகரிக்கும் போது மக்களவையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.


இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், பிரதிநிதித்துவத்தை மிகவும் சீரற்றதாக மாற்றாமல் இடங்களை எவ்வாறு நியாயமாக விநியோகிப்பது என்பதுதான். மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையை மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்கள்தொகை அடர்த்தியைப் பயன்படுத்துவது ஒரு சாத்தியமான தீர்வாகும். நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும்போது மக்கள் தொகை குறைவாக உள்ள வடகிழக்கில் ஏற்கனவே இப்படித்தான் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. குறைவான மக்கள்தொகைக் கொண்ட பகுதிகளில் அதிக மக்கள்தொகை அடர்த்தி இருக்கலாம். அதே நேரத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் குறைந்த அடர்த்தி இருக்கலாம் என்பதால் இந்த அணுகுமுறை சிறப்பாக செயல்படக்கூடும். கூடுதலாக, விஷயங்களை அப்படியே வைத்திருக்க,  ஒரு இடத்திற்கு மொத்த மக்கள்தொகை முடிவு செய்யப்பட்ட பிறகும் நியாயமான பிரதிநிதித்துவத்தை பராமரிக்க இடங்களின் எண்ணிக்கையை சரிசெய்ய வேண்டியிருக்கும்.


இங்கு முக்கிய யோசனை என்னவென்றால், வளப் பகிர்வு அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிய முடிவெடுப்பதில் மக்கள்தொகை எண்ணிக்கை மட்டுமே காரணியாக இருக்கக்கூடாது. 15வது நிதி ஆணையத்தால் அதிகாரப் பகிர்வு செயல்பாட்டின் போது, ​​இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. மேலும், மக்கள்தொகை காரணியில் "மக்கள்தொகை செயல்திறன்" ("demographic performance") அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு சமநிலையான அணுகுமுறை கண்டறியப்பட்டது. மக்கள்தொகை எண்களைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு முக்கிய கவலை என்னவென்றால், பாலினம் மற்றும் சாதி போன்ற அதன் பண்புகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


 குறிப்பாக ஒதுக்கீடுகளில் இடஒதுக்கீட்டைக் கையாளும்போது, மக்கள்தொகை எண்களை மட்டுமே நம்பியிருப்பது பெரும்பாலும் தவறான தனிநபர் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDGs) குறிகாட்டிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இதை தனிநபர் குழப்பம் (per-capita hangover) என்று அழைக்கிறோம். இது காலப்போக்கில் அல்லது வெவ்வேறு இடங்களில் நிலைமையை அறிவியல் ரீதியாக ஒப்பிடுவதை கடினமாக்குகிறது. மக்கள்தொகையின் பண்புகள் மற்றும் அமைப்பைப் புரிந்துகொள்வது தேவைகள் மற்றும் உரிமைகள் இரண்டையும் மதிப்பிடுவதற்கு மிக முக்கியமானது. மக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் மொத்த மக்கள்தொகையைக் கணக்கிடுவது, அவர்கள் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும்கூட,  அனைவரையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறது.


மக்கள்தொகைக் கண்ணோட்டம்


ஒரு மக்கள்தொகையைப் புரிந்துகொள்வதற்கு, மக்களைக் கணக்கிடுவது மட்டுமல்லாமல், அதன் அனைத்து பண்புகளையும் வேறுபாடுகளையும் பார்க்க வேண்டும். பிரதிநிதித்துவம் மற்றும் வள விநியோகத்திற்கு மக்கள்தொகை ஆய்வுகள் முக்கியம். ஆனால், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க மக்கள்தொகை அணுகுமுறை உதவுகிறது.


Original article:
Share:

இன்றைய இந்தியக் கல்வியை அச்சுறுத்தும் '3Cகள்' -சோனியா காந்தி

 அரசாங்கத்தின் மூன்று முக்கிய கொள்கைகள் கல்வித் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020ஆம் ஆண்டில் மிகுந்த கவனத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதில் அரசாங்கம் உண்மையில் கவனம் செலுத்தவில்லை என்ற உண்மையை இது மறைக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசு கல்வியில் மூன்று விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது, அவை:


1. அதிகாரத்தை மையப்படுத்துதல் (centralisation) - மத்திய அரசுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குதல்.


2. வணிகமயமாக்கல் (commercialisation) - கல்வியில் முதலீடுகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுதல்.


3. வகுப்புவாதமாக்கல் (communalisation) - மத அல்லது கருத்தியல் சார்புகளை பிரதிபலிக்கும் வகையில் பாடப்புத்தகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றுதல்.


வெட்கக் கேடான மையப்படுத்தல்


கடந்த 11 ஆண்டுகளாக, இந்த அரசாங்கம் மையத்தில் அதிக அதிகாரத்தை குவித்துள்ளது. இது கல்வியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களை உள்ளடக்கிய மத்திய கல்வி ஆலோசனை வாரியம், செப்டம்பர் 2019 முதல் கூடவில்லை. ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மூலம் கல்வியில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.  ஆனால், இந்தக் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடன் ஒருமுறைகூட கலந்தாலோசிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பில் மத்திய மற்றும் மாநில கட்டுப்பாட்டின்கீழ் வரும் விஷயங்களில்கூட, மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்க அரசாங்கம் கடுமையாக விரும்பாததை இது காட்டுகிறது.


அரசாங்கம் விவாதத்திற்குத் தயாராக இல்லை. அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அதன் மோசமான நடவடிக்கைகளில் ஒன்று, மாநில அரசுகளை PM-SHRI (PM Schools for Rising India) திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகும். சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan (SSA) திட்டத்தின்கீழ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் இதைச் செய்கிறது.


2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (Right of Children to Free and Compulsory Education (RTE)) செயல்படுத்த உதவுவதற்காக இந்த நிதி பல ஆண்டுகளாக மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள், கல்வி உரிமையைப் பாதுகாப்பதைவிட விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவதைக் காட்டுகின்றன. இது அரசியலமைப்பு மதிப்புகளை தெளிவாக மீறுவதாகும். கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான இருகட்சி நாடாளுமன்ற நிலைக்குழு (bipartisan Parliamentary Standing Committee) கூட, அதன் 363வது அறிக்கையில், சமக்ர சிக்ஷா அபியான் (SSA) நிதியை நிபந்தனையின்றி மாநில அரசுகளுக்கு விடுவிக்கக் கோரியுள்ளது.


2025ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (UGC) அரசாங்கம் கடுமையான வரைவு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், மாநில அரசுகள் தாங்கள் நிறுவிய, நிதியளித்த மற்றும் நடத்தும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் செயல்முறையிலிருந்து அவற்றை நீக்குகின்றன. அதற்குப் பதிலாக, ஆளுநர்கள் (பொதுவாக பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகப் பணியாற்றுபவர்கள்) மூலம் செயல்படும் மத்திய அரசு, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதில் கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்.  இந்த நடவடிக்கை மறைமுகமாக மாநிலங்களிடமிருந்து மத்திய அரசுக்கு அதிகாரத்தை மாற்றுகிறது.  இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அச்சுறுத்துகிறது.


வணிகமயமாக்கல் பிரச்சினை


நரேந்திர மோடி அரசாங்கம் கல்வியை மேலும் வணிகமயமாக்குகிறது. வணிகமயமாக்குவதை வெளிப்படையாக, தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் பின்பற்றுகிறது.


இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கப் பள்ளிகள் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்காக கல்வி உரிமை (RTE) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுப்புறத்திலிருந்தும் ஒரு கிலோமீட்டருக்குள் ஒரு கீழ்நிலை தொடக்கப் பள்ளி (வகுப்புகள் I-V) மற்றும் ஒவ்வொரு சுற்றுப்புறத்திலிருந்தும் மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளி (வகுப்புகள் VI-VIII) இருப்பதை இது உறுதி செய்கிறது. இருப்பினும், RTE பற்றி நேரடியாகக் குறிப்பிடாத தேசிய கல்விக் கொள்கை (NEP), பள்ளி வளாகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பள்ளி வளாகங்கள் பல பொதுப் பள்ளிகளை மூடுவதற்கும் கல்வி தனியார்மயமாக்கலை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். 2014ஆம் ஆண்டு முதல், 89,441 பொதுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  அதே நேரத்தில் 42,944 புதிய தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பல ஏழைக் குழந்தைகள் பொதுக் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டு, விலையுயர்ந்த, மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து தொகுதி மானியங்கள் வழங்கும் பழைய முறையை மாற்றுவதற்காக, மத்திய அரசு உயர் கல்வி நிதி நிறுவனத்தை (Higher Education Financing Agency (HEFA)) அறிமுகப்படுத்தியது.  பல்கலைக்கழகங்கள் இப்போது HEFA-விலிருந்து கடன்களைப் பெற ஊக்குவிக்கப்படுகின்றன. அதை அவர்கள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்த வேண்டும்.  கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 364வது அறிக்கையின்படி, பல்கலைக்கழகங்கள் இந்தக் கடன்களில் 78% முதல் 100% வரை மாணவர் கட்டணம் மூலம் திருப்பிச் செலுத்துகின்றன. இதன் பொருள், பொதுக் கல்விக்கான அரசாங்கத்தின் நிதி குறைப்பானது, மாணவர்கள் அதிக கட்டணங்கள் செலுத்த  வழிவகுக்கிறது.


நமது கல்வி முறைகளில் ஊழல் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இது அதன் வணிகமயமாக்கலின் விளைவாகும். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (National Assessment and Accreditation Council (NAAC)) லஞ்சம் போன்ற ஊழல்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency (NTA)) தோல்விகள் வளர்ந்துவரும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. நிதி முறைகேடு காரணமாக பொதுக் கல்வி நிறுவனங்கள் அதிகக் கவனத்தை எதிர்கொள்கின்றன. ஊழல் மற்றும் நேர்மையின்மையின் இந்த அதிகரிப்பு, கல்வியை அரசியல்மயமாக்குவதிலும் வணிகமயமாக்குவதிலும் அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்புவாதமாக்கல் உள்ளது


மத்திய அரசின் மூன்றாவது கவனம் வகுப்புவாதமயமாக்கலில் உள்ளது. இதன் பொருள் கல்வி முறை மூலம் வெறுப்பைப் பரப்புவது என்ற ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நீண்டகால இலக்கை நிறைவேற்றுவதாகும்.


பள்ளி பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் NCERT பாடப்புத்தகங்கள், இந்திய வரலாறு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை மாற்றும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் முகலாய இந்தியா பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டன. மேலும், இந்திய அரசியலமைப்பின் முகவுரை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து,  அரசாங்கம் அதை மீண்டும் சேர்ப்பதாக உறுதியளித்தது.


நமது பல்கலைக்கழகங்களில், அரசியல் ரீதியாக ஆதரவான பின்னணியைக் கொண்ட பல பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தரம் குறைவாக இருந்தாலும்கூட, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியமான தலைமைப் பதவிகள், அரசாங்கத்தின் கருத்துக்களைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பேராசிரியர் மற்றும் துணைவேந்தர் பதவிகளுக்கான தகுதிகளைக் குறைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கை கல்வி மதிப்புகளைவிட சித்தாந்தத்தைப் பற்றி அதிகம் அக்கறை கொண்ட கல்வியாளர்களை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடந்த பத்து ஆண்டுகளில், நமது கல்வி முறைகளில் பொது சேவை உணர்வு பறிக்கப்பட்டுள்ளது. கல்வியை அணுகக்கூடியதாகவும் நல்ல தரமாகவும் மாற்றுவதில் கல்விக் கொள்கைகள் குறைந்த கவனம் செலுத்தியுள்ளன.


மையமயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கல் மீதான கவனம் நமது மாணவர்களை எதிர்மறையாகப் பாதித்துள்ளது. இந்தியாவின் பொதுக் கல்வி முறைக்கு ஏற்படும் இந்த சேதம் நிறுத்தப்பட வேண்டும்.


சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகவும் (ராஜ்யசபா) காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.


Original article:

Share: