காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி:


பல ஆண்டுகளாக விவாதத்தின் மையப் பொருளாக இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் தொடர்ந்து துரிதப்படுத்தப்படுகிறது. உலகளாவிய வெப்பநிலை 'மிகுவளர்ச்சிப் புள்ளி’ (tipping points) நோக்கி தொடர்ந்து நகர்கிறது மற்றும் பசுமை இல்ல வாயு செறிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்கின்றன. இந்த சூழலில், காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2025-ஆம் ஆண்டின் (Climate Change Performance Index 2025) கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்வது முக்கியமானது. ஏனெனில், இது காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்வதில் பல்வேறு நாடுகளின் முயற்சிகளின் படத்தை வழங்குகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI)) என்பது ஒரு தன்னிச்சையான கண்காணிப்பு கருவியாகும். இது 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) காலநிலை தணிப்பு செயல்திறனை கண்காணிக்கிறது. இது சர்வதேச காலநிலை அரசியலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட நாடுகளின் காலநிலை தணிப்பு முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை ஒப்பிடுவதை சாத்தியமாக்குகிறது. இது 2005-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.


2. CCPI ஜெர்மன்வாட்ச் (Germanwatch), CAN இன்டர்நேஷனல் மற்றும் நியூ கிளைமேட் இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது. ஜெர்மன்வாட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு ஒவ்வொரு நாட்டின் செயல்திறனையும் நான்கு வகைகளில் மதிப்பிடுகிறது:


(i) பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் (ஒட்டுமொத்த தரவரிசையில் 40%),


(ii) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (20%),


(iii) ஆற்றல் பயன்பாடு (20%) மற்றும்


(iv) காலநிலை கொள்கை (20%) போன்றவையாகும்.


3. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு, ஒவ்வொரு நாடும் பாரிஸில் நிர்ணயிக்கப்பட்ட காலநிலை இலக்குகளை அடைவதற்காக வெளியேற்றங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் பயன்பாடு ஆகிய பகுதிகளில் எந்த அளவிற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுள்ளது என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறது.


2025-ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின் சிறப்பம்சங்கள்


1. 2025-ஆம் ஆண்டு, காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (Climate Change Performance Index (CCPI)), முதல் மூன்று நிலைகள் காலியாக உள்ளன. 2025-ஆம் ஆண்டில் காலநிலை மாற்ற தணிப்பிற்கான அனைத்து அளவுகோல்களிலும் ஒரு நாடும் 'மிக உயர்ந்த' தரவரிசையில் இல்லை.


2. 2025-ஆம் ஆண்டில் டென்மார்க் CCPI குறியீட்டில் முதல் நாடாக (4-வது இடத்தில்) தனது தரவரிசையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகையில் மிக உயர்ந்த மதிப்பீட்டையும், பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் மற்றும் காலநிலை கொள்கையில் உயர்ந்த மதிப்பீட்டையும், ஆற்றல் பயன்பாட்டில் நடுத்தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.


3. இந்த ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் டென்மார்க்கை அடுத்து நெதர்லாந்து 5-வது இடத்திலும் ஐக்கிய இராச்சியம் 6-வது இடத்திலும் உள்ளன.


2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (Climate Change Performance Index (CCPI)) முதல் இடத்தைப் பிடித்த முதல் 10 நாடுகள்:


2025-ஆம் ஆண்டு தரவரிசை 

நாடு

2025-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த CCPI மதிப்பெண்

1

2

3

4

டென்மார்க்

78.37

5

நெதர்லாந்து

69.6

6

ஐக்கிய இராச்சியம்

69.29

7

பிலிப்பைன்ஸ்

68.41

8

மொராக்கோ

68.32

9

நோர்வே

68.21

10

இந்தியா

67.99


4. உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 90%-க்கும் அதிகமானவற்றுக்கு காரணமான 64 நாடுகளில், 22 நாடுகள் மட்டுமே 2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அதே நேரத்தில் 42 நாடுகள் பின்தங்கியுள்ளன.


5. குறிப்பிடத்தக்க வகையில், G20 நாடுகள் உலகின் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களில் 75%-க்கும் மேற்பட்டவற்றிற்கு காரணமாக உள்ளன. G20 அமைப்பில் 14 நாடுகள் குறைந்த அல்லது மிகக் குறைந்த CCPI மதிப்பெண்ணைப் பெற்றுள்ளன; எனினும், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை தனிநபர் குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களுடன் சரியான பாதையில் உள்ள இரண்டு G20 நாடுகளாகும்.


6. இதற்கு நேர்மாறாக, சீனா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates (UAE)) மற்றும் பல நாடுகள் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளன.


2025-ஆம் ஆண்டு காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் (Climate Change Performance Index (CCPI)) கடைசி இடத்தில் உள்ள 10 நாடுகள்:


2025-ஆம் ஆண்டு தரவரிசை

நாடு

2025-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த CCPI மதிப்பெண்

67

ஈரான் இஸ்லாமிய குடியரசு

17.47

66

சவுதி அரேபியா

18.15

65

ஐக்கிய அரபு அமீரகம்

19.54

64

ரஷ்ய கூட்டமைப்பு

23.54

63

கொரிய குடியரசு

26.42

62

கனடா

28.37

61

கஜகஸ்தான்

33.43

60

சீன தைபே

34.87

59

அர்ஜென்டினா

35.96

58

ஜப்பான்

39.23


2025-ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (CCPI) குறித்து இந்தியாவின் பார்வை

1. இரண்டு நிலைகள் கீழே சரிந்து, இந்தியா 2025 CCPI-ல் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. முதன்மை சாதனையாளர்களில் தொடர்ந்து இருக்கிறது. இந்தியா பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் மற்றும் ஆற்றல் பயன்பாடு வகைகளில் முன்னணி தரவரிசையிலும், காலநிலை கொள்கையில் நடுத்தர தரவரிசையிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தரவரிசையில் குறைந்த இடத்தில் உள்ளது.

2. இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கையில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான சூரிய மின் நிலையங்கள் மற்றும் கூரை சூரிய மின் திட்டத்தின் (Rooftop Solar Scheme) அமலாக்கம் மூலம் இது நடந்துள்ளது. இந்த ஊக்கமளிக்கும் சாதனைகள் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் நிலக்கரியை சார்ந்தே உள்ளது மற்றும் நிபுணர்கள் அதன் படிப்படியான நீக்கம் மிகவும் மெதுவாக நகர்வதாக நம்புகின்றனர்.

Nexus அறிக்கை

1. உயிரி பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் குறித்த அரசுகளுக்கிடையிலான அறிவியல்-கொள்கை தளம் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES)) உலகளாவிய அறிவியல் நிபுணர்களின் குழுவாகும். இது கடந்த ஆண்டு உயிரி பன்முகத்தன்மை, நீர், உணவு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. இது Nexus அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.

2. இது இந்த பல நெருக்கடிகளுக்கிடையிலான தொடர்புகளைப் பார்க்கும் முதல் வகையான அறிக்கையாகும். இந்த குழு காலநிலை மாற்றம், உயிரி பன்முகத்தன்மை இழப்பு, உணவு பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, மற்றும் ஆரோக்கிய அபாயங்கள் போன்ற ஐந்து முக்கிய சவால்களை ஆய்வு செய்தது .

3. Nexus அறிக்கை அடையாளம் காணப்பட்ட ஐந்து உலகளாவிய சவால்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை எடுத்துக்காட்டியது. அனைத்து சவால்களுக்கும் பதில்கள் ஒத்திசைக்கப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும். இதனால் இவற்றில் ஏதேனும் ஒன்றில் எடுக்கப்படும் நேர்மறை நடவடிக்கைகள் மற்றவற்றில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். இது தற்போதைய அணுகுமுறைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

4. உதாரணமாக, உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் ஒரு நேர்மறை நடவடிக்கையாகும். இது நிலம் மற்றும் நீர் வளங்கள் மற்றும் உயிரி பன்முகத்தன்மை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

5. அறிக்கையில், பல்வேறு துறைகளில் பயன்களை வழங்கும் ஒத்திசைவான அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வது முக்கியமானது என்று வாதிடப்படுகிறது. இத்தகைய பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக, காடுகள், மண் மற்றும் கண்டல் காடுகள் போன்ற கார்பன் நிறைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டமைப்பது, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் அபாயத்தைக் குறைக்க உயிரியல் பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பது, நிலையான ஆரோக்கியமான உணவு முறைகளை ஊக்குவிப்பது, மற்றும் முடிந்தவரை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைச் சார்ந்திருப்பது ஆகியவை அடங்கும்.

Original article:
Share:

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பான வாதங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்களுக்கான கூட்டுக் குழுவின் தலைவருமான பி.பி. சவுத்ரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், தற்போதைய மசோதாக்களின் கீழ் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான ஆரம்ப காலக்கெடு 2034ஆம் ஆண்டு என்று கூறினார். தேர்தல்களை நடத்த வரைவுச் சட்டத்தைத் தாண்டி கூடுதல் நடவடிக்கைகளை குழு பரிந்துரைக்கலாம். அதாவது இதில் ஆக்கபூர்வமான அல்லது நேர்மறையான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டை பரிந்துரைப்பதும் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.




முக்கிய அம்சங்கள்:


  • தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலத்தையும் யூனியன் பிரதேசத்தையும் பார்வையிட ஒப்புக்கொண்டதாக சவுத்ரி கூறினார். இந்த செயல்முறை சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதுவரை, அவர்கள் உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.


  • கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை விரைவாக சவுத்ரி தலைமையிலான குழுவிற்கு அனுப்பப்பட்டன. இது வெவ்வேறு மக்கள் மற்றும் குழுக்களுடன் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று வருகிறது.


  • மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான ஒரு முறை திட்டத்தை வரைவுச் சட்டம் பரிந்துரைக்கிறது. இருப்பினும், எதிர்காலத்தில் அவற்றை ஒத்திசைவில் வைத்திருப்பதற்கான வழிகளையும் குழு பரிந்துரைக்கலாம் என்று சவுத்ரி கூறினார்.


  • இதில் விவாதிக்கப்படும் ஒரு முக்கிய யோசனை "ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு" ("constructive vote of no-confidence.") ஆகும். ஜெர்மனியில் இருப்பது போன்ற ஒரு விதியைக் கொண்டுவருவது. அங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தை அகற்ற விரும்பினால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவை அவர்கள் காட்ட வேண்டும்.


  • முதல் ஒரே நேரத்தில் தேர்தல்கள் எப்போது நடக்கும் என்று கேட்டபோது, ​​குழு அதைப் பற்றி விவாதிக்கும் என்று சவுத்ரி கூறினார். ஆனால், இறுதி முடிவு பாராளுமன்றத்திடம் உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இதுபோன்ற முதல் தேர்தல் 2034ஆம் ஆண்டில் நடக்கக்கூடும் என்று அவர் கூறினார்.


  • அரசியலமைப்பு (நூற்று இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024, மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2024 ஆகியவை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


  • இந்த மசோதாக்களை டிசம்பர் 17, 2024 அன்று சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தினார். முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

  • கூட்டாட்சி முறையைப் பற்றிப் பேசுகையில், 1994ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி முறையை அரசியலமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக உறுதிப்படுத்தியதாகக் கூறப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் அப்படியே இருக்கும் என்பதால், இந்த மசோதாக்கள் இந்த யோசனைக்கு எதிராகச் செல்லவில்லை.


  • முன்னாள் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22வது சட்ட ஆணையம், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து அரசியலமைப்பில் ஒரு புதிய பகுதியைச் சேர்க்க பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது, ​​அரசியலமைப்பின் பகுதி XV தேர்தல்களைப் பற்றி கூறுகிறது. இதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் அனைத்து பெரியவர்களும் வாக்களிப்பது ஆகியவை அடங்கும். ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கான விதிகளுடன், பகுதி XVA எனப்படும் புதிய பிரிவைச் சேர்க்க ஆணையம் பரிந்துரைக்கலாம்.


Original article:
Share:

உலகளாவியத் தெற்கிற்கான ஒரு T20 அமைப்பு: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா தலைமையிலான கூட்டணியை வழிநடத்துதல் குறித்து… -நிருபமா ராவ்

 சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு தற்காலிக நடவடிக்கைகளிலிருந்து நிரந்தர அமைப்புக்கு நாம் மாற வேண்டும்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும், இந்தியாவின் இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், உலகத் தெற்கில் உள்ள பல நாடுகள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஒரு கடுமையான உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. அவை பயங்கரவாதம் என்பது ஒரு முறை மட்டுமே ஏற்படும் அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு தொடர்ச்சியான போர் என்பதை வெளிப்படுத்துகின்றன. நெருக்கடியின் போது இந்தியா வலுவான இராணுவத் திறன்களையும் அமைதியான இராஜதந்திரத்தையும் காட்டியது. இருப்பினும், உலகம் எதிர்வினையாற்றிய விதம், பயங்கரவாதத்தை விரைவாகவும் நியாயமாகவும் சமாளிக்க உலக அமைப்பு இன்னும் போராடுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தச் சூழ்நிலை, இந்தியா தலைமையிலான T20  பயங்கரவாதத்திற்கு எதிரான இருபது என்ற புதிய குழுவை உருவாக்கும் யோசனைக்கு வழிவகுத்தது.


பஹல்காம் தாக்குதல் துணிச்சலானதாகவும் வன்முறையாகவும் இருந்தது. இது பொதுமக்களின் கோபத்திற்கும் இந்தியாவில் அரசியல் ஒற்றுமைக்கும் வழிவகுத்தது. அச்சுறுத்தல்கள் வளரும் முன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உத்தியை பிரதிபலிக்கும் ஒரு வேகமான மற்றும் கவனம் செலுத்திய இராணுவ நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் இருந்தது. இந்தப் பணி அதன் இராணுவ இலக்குகளை அடைந்தது. ஆனால், சர்வதேச அரசியலைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது.


அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற சில நாடுகள் அமைதியாகவோ அல்லது வெளிப்படையாகவோ இந்தியாவை ஆதரித்தன. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) போன்ற சர்வதேச அமைப்புகள் யாரையும் குறை கூறாமல் "கட்டுப்பாடு" மற்றும் "பேச்சுவார்த்தை" மட்டுமே கேட்டன. எதிர்பார்த்தபடி சீனா பாகிஸ்தானை ஆதரித்தது. நெருங்கிய கூட்டாளியாக இருந்த ரஷ்யா, பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது.


இது ஒரு பொதுவான மற்றும் ஏமாற்றமளிக்கும் முறை. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய அமைப்புகள் ஐ.நா., நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) மற்றும் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மன்றம் போன்றவை பெரும்பாலும் பலவீனமாகவோ, அரசியல் போட்டிகளால் சூழப்பட்டோ அல்லது தெற்காசியா, ஆப்பிரிக்கா அல்லது மத்திய கிழக்கு போன்ற இடங்களில் பயங்கரவாதத்தின் அன்றாட யதார்த்தங்களுடன் முழுமையாகப் பொருந்தாத மேற்கத்தியக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாகவோ உள்ளன.


பயங்கரவாதத்திற்கு எதிரான இருபது என்ற T20-ன் யோசனை, உலகம் பயங்கரவாதத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதற்கும் சில பிராந்தியங்களில் அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கும் இடையிலான பொருத்தமின்மையிலிருந்து வருகிறது. இந்தியா தலைமையில் 20 நாடுகளின் குழுவை உருவாக்குவது குறித்து இது பரிந்துரைக்கிறது. ஏனெனில், இது அடிக்கடி மற்றும் சிக்கலான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உலகளாவிய தெற்கிலிருந்து வரும் நாடுகளைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளில் இந்தோனேசியா, நைஜீரியா, கென்யா, எகிப்து, மாலி, பிஜி, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகள் அடங்கும். இந்தியாவைப் போலவே, அவை பெரும்பாலும் உலகளாவிய அமைப்புகளின் போதுமான உதவி இல்லாமல் அரசு ஆதரவு மற்றும் சித்தாந்த பயங்கரவாதத்தை கையாள்கின்றன.


T20-ன் குறிக்கோள், தற்போதைய அமைப்புகள் செய்வதை நகலெடுப்பது அல்ல, மாறாக விரைவான நடவடிக்கை, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய தெற்கில் கவனம் செலுத்துவதன் மூலம் அவற்றை ஆதரிப்பதாகும். இது ஒரு கூட்டு பணிக்குழு, பயிற்சித் திட்டங்கள், தீவிரமயமாக்கலைத் தடுப்பதற்கான முயற்சிகள் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை அம்பலப்படுத்த கூட்டு பொது அறிக்கைகள் மூலம் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வதில் செயல்படும். சைபர் பயங்கரவாதம், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் நிதியளிக்கப்பட்ட பயங்கரவாதம் போன்ற புதிய வகையான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒரு நிரந்தர குழுவையும் உருவாக்கும்.


இந்தியா பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாண்டு வருவதாலும், பயங்கரவாத அனுபவத்தையும், மற்ற நாடுகளிடம் மரியாதையையும் கொண்டிருப்பதாலும் இந்த முயற்சியை வழிநடத்த நல்ல நிலையில் உள்ளது. மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் பயங்கரவாதத்தை அவ்வப்போது ஏற்படும் தாக்குதல்களாகவோ அல்லது ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாகவோ பார்க்கின்றன. அதே நேரத்தில் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் அதைத் தொடர்ந்து மற்றும் தலைமுறைகளாகக் கையாளுகின்றன. மேலும், மேற்கத்திய கூட்டணிகள் பெரும்பாலும் ஒரு சார்புடையதாகவோ அல்லது இராணுவ நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்துவதாகவோ பார்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் உலகளாவிய தெற்கில் அமைந்துள்ள ஒரு T20 அதிக தார்மீக மதிப்பு மற்றும் நடைமுறை தாக்கத்தை ஏற்படுத்தும்.


இது போன்ற ஒரு குழுவிற்கு இது சரியான நேரம். சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக பெரிய சர்வதேச அமைப்புகள் போராடுவதால், Quad, I2U2 மற்றும் ASEAN போன்ற சிறிய குழுக்கள் மிகவும் பயனுள்ளதாகிவிட்டன. T20 இந்தப் போக்கைப் பின்பற்றுகிறது மற்றும் ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புகிறது.  இது மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பார்வையில் இருந்து பயங்கரவாதத்தில் கவனம் செலுத்தும்.


T20 UN அல்லது FATF போன்ற குழுக்களை மாற்ற முயற்சிக்காது. அதற்கு பதிலாக, இது ஒரு வழிகாட்டியாக செயல்பட்டு விரைவான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும். உலகளாவிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் நாடுகளுக்கு இது குரல் கொடுக்கும். இது கூட்டு வலிமையைச் சேர்ப்பதன் மூலம் ராஜதந்திரத்தையும் ஆதரிக்கும். இறுதியாக, இது இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும், தரவு, டிஜிட்டல் கருவிகள், வலுவான சமூகங்கள் மற்றும் தீவிரமயமாக்கலை நிறுத்துவதற்கான வளர்ச்சி சார்ந்த முயற்சிகளைப் பயன்படுத்தும்.


T20 என்ற கருத்து முக்கியமானது. ஏனெனில், அது அனைவரையும் உள்ளடக்கியது. எத்தியோப்பியா, கஜகஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உலகளாவிய கவனத்தை ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால், அவை பயங்கரவாத தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன. T20 இந்த நாடுகளுக்கு அவர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் உளவுத்துறை மதிக்கப்படும், மற்றும் அவர்களின் பிரச்சனையை ஏற்றுக்கொள்ளும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது பெரும்பாலும் பெரிய நாடுகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் பெரும்பாலான உலகளாவிய அமைப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது.


இந்தியாவும் இதனால் ஆதாயமடைகிறது. இராணுவ மோதல்களில் ஈடுபடாமல் இந்தியா உலகளாவிய தலைமையைக் காட்ட T20 அனுமதிக்கும். இது இந்தியாவை ஒரு பொறுப்பான மற்றும் சுறுசுறுப்பான உலகளாவிய நாடாக காட்ட உதவுகிறது மற்றும் உலகளாவிய தெற்கின் தலைவராக அதன் பிம்பத்தை ஆதரிக்கிறது. இந்தியாவின் வலுவான அனுபவம், தொழில்நுட்பம் மற்றும் இராஜதந்திர அணுகலுடன், T20 அலுவலகத்தை நடத்துவதற்கும், பயிற்சி மையங்களை நடத்துவதற்கும், புது தில்லியில் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வழிநடத்துவதற்கும் இது மிகவும் பொருத்தமானது.


அருகிலுள்ள அச்சுறுத்தலுக்கு இந்தியாவின் விரைவான எதிர்வினை ஆபரேஷன் சிந்தூர் ஆகும். ஆனால், விரைவான தாக்குதல்கள் போதாது என்பதே பெரிய பாடம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்குத் தேவையானது நீண்டகால, நிலையான அமைப்பு. T20 அமைப்பு தான் அந்த தீர்வு. இது இன்றைய காலத்திற்கு சரியான யோசனை. மேலும், ஸ்ரீநகரில் இருந்து சுரபயா வரை ஒவ்வொரு புதிய பயங்கரவாத தாக்குதலும் இப்போது அது ஏன் தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.


இந்தியா இப்போது அடுத்த கட்டத்தை எடுக்க வேண்டும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத உலகளாவிய மோதலில் தினசரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தியாவைப் போலவே மற்றவர்களையும் வழிநடத்தவும் வேண்டும்.


நிருபமா ராவ் எழுத்தாளர் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர்.



Original article:
Share:

குடும்பங்களின் பன்முகத்தன்மை: திருநங்கைகளின் கூட்டுப் பெற்றோர் முறைக்கு கேரள உயர் நீதிமன்றம் ஆதரவளிக்கிறது

 இது அரசியலமைப்பில் உள்ள மதிப்புகளை ஆதரிக்கிறது, நிஜ வாழ்க்கை அனுபவங்கள், மேலும் பெற்றோரைப் பற்றிய புதிய சிந்தனை வழியை வழங்குகிறது.


கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான ஒரு நேர்மறையான நடவடிக்கையாக, கேரள உயர்நீதிமன்றம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு திருநங்கை தம்பதியினரை அவர்களின் குழந்தையின் பெற்றோராக சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்த திருநங்கை 2023ஆம் ஆண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.  மேலும் அவரும் அவரது துணையும் "தந்தை" அல்லது "தாய்" போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தாமல் கூட்டுப் பெற்றோராக (co-parents) பட்டியலிட விரும்பினர். தங்கள் குழந்தை பின்னர் ஆவணங்கள் அல்லது பள்ளி சேர்க்கைகளில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் இதை விரும்பினர்.


பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள், 1999ஆம் ஆண்டில் நீதிமன்றம் இது ஒரு "அரிதான மற்றும் சிறப்பு" ("rare and special") வழக்கு என்று கூறியதால், வடிவமைப்பை மாற்றவில்லை என்றாலும், "தந்தை" மற்றும் "தாய்" என்பதற்குப் பதிலாக பாலின-நடுநிலை வார்த்தையைப் பயன்படுத்தி பிறப்புச் சான்றிதழை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. சில சந்தர்ப்பங்களில், நியாயமும் நீதியும் கடுமையான சட்ட விதிகளுக்கு முன், வர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த முடிவின் மூலம், குடும்பம், பாலினம் மற்றும் பெற்றோராக இருப்பது பற்றி நாம் சிந்திக்கும் விதத்தை நீதிமன்றம் விரிவுபடுத்தியது.


ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு மத்திய அரசு ஊழியர் தனது வளர்ப்பு குழந்தைகளைப் பராமரிக்க மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதித்தது. பாரம்பரிய குடும்பங்களிலிருந்து வேறுபட்ட குடும்பங்களும் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக சலுகைகளுக்கு தகுதியானவை என்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் கூறினர். அத்தகைய "பாரம்பரியமற்ற" குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்க சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று அவர்கள் கூறினர்.


இருப்பினும், அதே நீதிமன்றம் பின்னர் பால் புதுமையினர் (LGBTQIA+) நபர்களுக்கு பொது அல்லது கூட்டு தத்தெடுப்பு உரிமைகளை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தது. பாலின புதுமையினர் உண்மையான அன்பு மற்றும் பாகுபாடு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்த விஷயங்களை சட்டமியற்றுபவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று அது கூறியது. திருநங்கைகளுக்கு உரிமைகளை வழங்கிய 2014 NALSA தீர்ப்பு மற்றும் ஒரே பாலின உறவுகளுக்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்த 2018 நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்பு போன்ற முந்தைய முன்னேற்றங்களுக்குப் பிறகு இந்த முடிவு ஏமாற்றமாகக் கருதப்பட்டது.


இந்த சூழ்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு தனித்து நிற்கிறது. இது தற்போதைய சட்ட அமைப்பின் கீழ் பால் புதுமையினர் (LGBTQIA+) பெற்றோரை ஆதரிக்கிறது மற்றும் குழந்தையின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. அரசியல்வாதிகள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய கண்ணியம் தாமதிக்கப்படக்கூடாது என்றும் அது உறுதியாகக் கூறுகிறது.


கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஒரு பெண் தனது பெண் துணையிடமிருந்து தனது விருப்பத்திற்கு மாறாகப் பிரிக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் "ஒரு குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கான" அவரது உரிமையை ஆதரித்தது. "தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம்" என்ற யோசனை இப்போது பால் புதுமையினர் (LGBTQIA+) சட்டத்தில் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அது கூறியது.  ஆழமாக வேரூன்றிய சார்புகள் இன்னும் இருக்கும் ஒரு சமூகத்தில், இத்தகைய நீதிமன்றத் தீர்ப்புகள் வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய நேர்மறையான மற்றும் சிந்தனைமிக்க புரிதலைக் காட்டுகின்றன. அனைவருக்கும் உரிமை என்பது பொதுவானது என்ற கருத்தை அவர்கள் அமைதியாகவும் வலுவாகவும் ஆதரிக்கிறார்கள். பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு சிறப்பு சலுகையாக அல்லாமல், மாறாக அனைத்து அடையாளங்களையும் உள்ளடக்கிய ஒரு அடிப்படை உண்மையை  உறுதிப்படுத்துகின்றன.


Original article:
Share:

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஒரு சமூகத்தின் மறுவடிவமைப்பு -வர்கீஸ் கே.ஜார்ஜ்

 புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மக்கள்தொகை மாற்றங்களின் சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை துரிதப்படுத்தும்.


மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களின் குழுவாகும். அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள ‘நாம் மக்கள்’ (We the People) என்பதில் உள்ளதைப் போல, "மக்கள்" என்ற சொல் ஒரு அரசியல் சமூகத்தைக் குறிக்கிறது. மக்கள்தொகையை வெவ்வேறு குழுக்களாக எண்ணி வரிசைப்படுத்துவது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தொழில்நுட்ப பணி மட்டுமல்ல. இது மக்களை ஒரு முக்கியமான வழியில் ஒரு அரசியல் சமூகமாக மாற்ற உதவுகிறது. இந்த சமூகம் அவர்கள் தங்களை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களின் இந்தக் கருத்தை மிகவும் பாதிக்கும், அது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். இது 2021-ல் நடக்கவிருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்திய COVID-19 தொற்றுநோயைப் போன்றது.


ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொத்த மக்கள்தொகையைக் கணக்கிடுகிறது. இது வெவ்வேறு பிரிவுகள் மற்றும் பண்புகளின் கீழ் இதைச் மேற்கொள்கிறது. இதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள், பட்டியல் வகுப்பினர்கள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (ST), பொருளாதார செயல்பாடு, கல்வியறிவு மற்றும் கல்வி, வீடு மற்றும் வீட்டு வசதிகள், இடம்பெயர்வு, பிறப்பு விகிதங்கள் மற்றும் இறப்பு விகிதங்கள் ஆகியவை அடங்கும். இது நாட்டின் சமீபத்திய நிர்வாக வரைபடத்தையும் பதிவு செய்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏற்கனவே உள்ள யதார்த்தத்தை மட்டுமே படம்பிடிக்கிறது. ஆனால் நிலையான வகைகளின் கீழ் மக்களைப் பதிவு செய்யும்போது, ​​அது மாறி புதிய யதார்த்தங்களையும் உருவாக்குகிறது.


நாம் அவர்களை ஆவணப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் இயற்கை மற்றும் இயல்பான மக்கள்தொகையின் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சென்னை அல்லது மும்பை போன்ற நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிகமான மக்கள் இந்தி பேசுகிறார்கள்.


அதே காலகட்டத்தில், பல புலம்பெயர்ந்தோர் கேரளாவிற்குள் வந்து வெளியேறியுள்ளனர். ஆனால் சரியான எண்ணிக்கையை புரிந்துகொளவது கடினம். பிறப்பு, இறப்பு, இடம்பெயர்வு, மொழி பயன்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற இந்த வடிவங்கள் அரசியலைப் பாதிக்கின்றன. அவற்றைப் பதிவு செய்வதுகூட இந்த அரசியல் விளைவுகளை பாதிக்கலாம்.


மக்கள்தொகை போக்குகள் அரசியலுடன் எவ்வாறு இணைகின்றன என்பது பற்றிய ஆய்வு அரசியல் மக்கள்தொகையியல் (political demography) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் துறை இன்னும் உலகில் எங்கும் நன்கு வளர்ச்சியடையவில்லை.

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினை


ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களுக்கு இடையே நாடாளுமன்ற இடங்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதை இந்தியா மாற்றும். 2026-க்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்ட பிறகு இந்த மறுபகிர்வு நடக்கும் என்று அரசியலமைப்பின் பிரிவு 81 கூறுகிறது. தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமானது. இருப்பினும், இது மிகவும் முன்னதாகவே செய்யப்பட்டிருக்கலாம். பொதுவாக, 2026-க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031-ல் இருக்கும். புதிய தொகுதி மறுவரையறை (new delimitation) அதன் பிறகு நடக்கும்.


2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமானதால், இப்போது தொகுதி மறுவரையறை செயல்முறை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நடக்கும். அனைத்து தரவுகளும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும். அதாவது இதை முன்பைவிட மிக வேகமாக செயலாக்க முடியும். முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளை செயலாக்க மூன்று ஆண்டுகள் வரை ஆனது.


கடந்த காலத்தில், தொகுதி மறுவரையறை ஆணையங்கள் (Delimitation Commissions) தங்கள் பணியை முடிக்க பல ஆண்டுகள் ஆனது. ஆனால் இந்த முறை, செயல்முறை மிகவும் வேகமாக இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 2029 பொதுத் தேர்தலில் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற விதிமுறையை பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும், இதில் அமையும் என எதிர்பார்க்கலாம்.


நாடாளுமன்ற இடங்களை மறுபங்கீடு செய்வதற்கான ஒரே அளவுகோலாக மக்கள் தொகைப் பங்கீடு (population distribution) இருந்தால் என்ன நடக்கும்? சில மாநிலங்கள் மக்கள்தொகையில் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன, ஆனால் பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு, இதற்கு நேர்மாறானது உண்மை. மெதுவான மக்கள்தொகை வளர்ச்சி ஆனால் வலுவான பொருளாதார வளர்ச்சி. மக்கள் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களிலிருந்து சிறிய மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள் டெல்லி NCR பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர், இது மையப்பகுதியில் அமைந்துள்ளது.


இந்த இயக்கம் மக்கள்தொகை போக்குகள் மற்றும் பொருளாதார காரணங்கள் இரண்டுடனும் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் சிறந்த வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், அவர்கள் கடினமான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.


வலுவான பொருளாதார வளர்ச்சி உள்ள பகுதிகள் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களை ஈர்க்க முனைகின்றன. அதே நேரத்தில், இந்த பிராந்தியங்களில் உள்ள உண்மையான மக்கள் தொகை விகிதம் மாறி வருகிறது.


மாநிலங்களுக்கு இடையே நாடாளுமன்ற இடங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரே அடிப்படையாக மக்கள் தொகை மட்டுமே மாறினால், அரசியல் அதிகாரம் மாறும். அது வலுவான பொருளாதாரங்கள் மற்றும் குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்ட பகுதிகளிலிருந்து விலகிச் செல்லும். பலவீனமான பொருளாதாரங்கள் மற்றும் அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட பகுதிகளை நோக்கி நகரும். அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்று கவலைப்படும் மாநிலங்களுடன் நியாயமான தொகுதி மறுவரையறை பற்றி பேசப்போவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த பிரச்சினையில் அதன் கருத்துக்களை அது தெளிவாகப் பகிர்ந்து கொள்ளவில்லை.


சாதி, வருவாய் பகிர்வு காரணிகள்


2027 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய பிற தொடர்புடைய காரணிகள் உள்ளன. இந்த காரணிகள் மக்கள்தொகை தரவை மறுவடிவமைப்பதில் பங்கு வகிக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, அனைத்து சாதிகளும் தனித்தனியாக கணக்கிடப்படும். இதுவரை, பட்டியல் வகுப்புகள் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) மட்டுமே தனித்தனியாக கணக்கிடப்பட்டன.


கடைசியாக சாதி கணக்கெடுப்பு 1931-ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது செய்யப்பட்டது. அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பல கூற்றுக்கள் மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் தாக்கத்தை கணிப்பது கடினம். இருப்பினும், இட ஒதுக்கீட்டில் 50% வரம்பை நீக்குவதற்கு இன்னும் அதிகமான கோரிக்கைகள் இருக்கும் என்பது உறுதி. அடுத்த தொகுதி மறுவரையறை நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கும் என்று கூறியுள்ளது.


தாராளவாத ஜனநாயகத்தில், தனிப்பட்ட குடிமகன் மக்களின் அடிப்படை அலகாகக் காணப்படுகிறார். ஆனால் அரசியலமைப்பை நாம் கூர்ந்து கவனித்தால், குழு அடையாளங்களும் (group identities) ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காண்கிறோம். இது தேசிய இயக்கத்தின் போதும் பின்னர் நாடு எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது என்பதிலும் உண்மையாக இருந்தது. இந்தியாவின் ஒற்றுமை மூன்று வழிகளில் திட்டமிடப்பட்டது. அவை மதங்கள், சாதிகள் மற்றும் பிராந்தியங்களின் ஒற்றுமை. இது "தேசிய ஒற்றுமை, ஒரு முப்பரிமாண பார்வை" (தலையங்கப் பக்கம், அக்டோபர் 6, 2023) என்ற கட்டுரையில் விளக்கப்பட்டது.


அதே நேரத்தில் மற்றொரு வளர்ச்சி நடக்கிறது. இந்த சூழலில் இது முக்கியமானது. 16-வது நிதி ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும், வெவ்வேறு மாநிலங்களுக்கும் இடையில் வருவாயை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியது. இந்த ஆணையம் ஏப்ரல் 1, 2026 முதல் தனது பணியைத் தொடங்கும். தற்போது, ​​அது பல்வேறு பங்குதாரர்களுடன் விவாதங்களை நடத்தி வருகிறது. அது அக்டோபர் 31, 2025-க்குள் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய நிதி ஆணையத்தால் உருவாக்கப்பட்ட வருவாய் பகிர்வு முறை பல மாநிலங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 16-வது நிதி ஆணையத்தின் அறிக்கை அதன் நேரம் காரணமாக இன்னும் முக்கியமானதாக இருக்கும். சமூகக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழும் காலகட்டத்தில் இது வெளியிடப்படும்.


மக்கள்தொகையில் இருந்து ஒரு மக்களுக்கான மாற்றம் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் அரசியலால் அடையப்படுகிறது. இந்திய அடையாளங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவுகள் முக்கிய நிர்ணயம் செய்கின்றன. காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் 1881-ஆம் ஆண்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில், அதன் இந்திய குடிமக்களின் கடுமையான மத மற்றும் சாதி பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவுகள் அன்றிலிருந்து இந்தியாவில் அரசியலை வடிவமைத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் முயற்சிகளும் இந்த வகைகளைப் பிரித்தல், தொகுத்தல் அல்லது மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துகின்றன. மக்கள்தொகையை நிர்வகிப்பது பல அம்சங்களை உள்ளடக்கியது. இது மொத்த மக்களின் எண்ணிக்கை, அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உள்ளடக்கியது. சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி மூலம் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதிகளில் எதுவும் அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டவை அல்ல. குறிப்பாக கல்வி, ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சினையாகத் தனித்து நிற்கிறது.


அரசியல் உத்திகளுடன் ஒருங்கிணைந்தது


பாரதிய ஜனதா கட்சி (BJP) மக்கள் தங்களை இந்தியர்களாக எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்க விரும்புகிறது. தற்போதைய மக்கள்தொகை மாற்றங்களில் அது ஒரு நடுநிலையான பங்களிப்பாளராக மட்டும் இல்லை. மக்கள்தொகை அடிப்படையில் தேர்தல் எல்லைகள் தொடர்பான அதன் விதிமுறைகளை மீண்டும் வரையப்பட்டால், அது BJP வலுவாக இருக்கும் பகுதிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும். இது அதன் அரசியல் போட்டியாளர்களை பலவீனப்படுத்தும்.


பாலினம் மற்றும் சாதி ஆகியவை முக்கியமான தேசிய காரணிகள் ஆகும். தொகுதி மறுவரையில் இவற்றைச் சேர்ப்பதன் மூலம், BJP பிராந்திய மோதல்களுக்கு அப்பால் விவாதத்தை நகர்த்த முடியும். இது புதிய அரசியல் குழுக்களை உருவாக்க உதவும்.


காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்றன. அவர்கள் பிராந்திய கோரிக்கைகளை தேசிய இலக்குகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும். சாதிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மத்திய இந்தியாவில் செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் இது BJP உடனான அதன் போட்டியை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


தேசிய அடையாளம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து BJPக்கு வலுவான யோசனை உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மீண்டும் வரையறுப்பது அதற்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும். இருப்பினும், BJP அனைத்து சாதிகள், பிராந்தியங்கள் மற்றும் மதங்களை ஆதரிக்கும் ஒரு உண்மையான தேசியக் கட்சியாக இருக்க விரும்பினால், அதை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.


Original article:
Share:

உணவுப் பாதுகாப்பிற்காக விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் -மே-எலின் ஸ்டெனர், எலிசபெத் ஃபாரே

 2026-ம் ஆண்டில் சர்வதேச பெண் விவசாயி ஆண்டு (International Year of the Woman Farmer), மீள்தன்மை கொண்ட விவசாய (resilient agricultural) வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.


ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2026-ஆம் ஆண்டை பெண் விவசாயிகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்தது. இது, 100-க்கும் மேற்பட்ட இணை பங்குதாரர்களின் (co-sponsors) ஆதரவைப் பெற்றது. இந்தத் தீர்மானம், உலகளாவிய விவசாயத்தில் பெண்களின் இன்றியமையாத பங்கைக் கொண்டாடும் அதே வேளையில், சொத்துரிமை மற்றும் சந்தை அணுகல் உள்ளிட்ட அவர்களின் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


விவசாயத்தில் பெண்கள் குறித்த ஒரு கருத்தரங்கின் முக்கிய நுண்ணறிவுகளை இந்தக் கட்டுரை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள ராயல் நார்வேயன் தூதரகம் (Royal Norwegian Embassy) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (WFP)) ஏற்பாடு செய்தன. இந்திய அரசும் பங்கேற்று இதற்கான வழிகாட்டுதலை வழங்கியது. ஆறு மாதகால விவாதங்களில் இருந்து கிடைத்த கண்டுபிடிப்புகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. சுமார் 200 பங்கேற்பாளர்கள் இந்த கருத்தரங்குகளில் பங்கேற்றனர். அவர்கள் வெவ்வேறு துறைகள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். விவசாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் ஒன்றாக ஆராய்ந்தனர்.


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில புள்ளிகள் ENACT எனப்படும் கூட்டுத் திட்டத்திலிருந்து வந்தவை. இது இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் பாலின மாற்ற அணுகுமுறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் காலநிலை தகவமைப்புத் திறனை மேம்படுத்துவதைக் (Enhancing Climate Adaptation of Vulnerable Communities) குறிக்கிறது. இது அஸ்ஸாமில், நாகோன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டம் அஸ்ஸாம் அரசாங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தால் (World Food Programme (WFP)) வழிநடத்தப்படுகிறது.


சிறு விவசாயிகளை, குறிப்பாக பெண்களை ஆதரிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இது அவர்களுக்கு காலநிலை தொடர்பான தகவல்களை அணுக உதவுகிறது. இது அவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்கவும், காலநிலை சவால்களை எதிர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் மாற அனுமதிக்கிறது.


இந்த திட்டத்திற்கு நார்வே அரசு நிதியளிக்கிறது. இந்த நிதி உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஆதரிக்கும் நார்வேயின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதையும், உணவு உற்பத்தியில் அவர்களின் பங்கை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


உரிமை, கட்டுப்பாடு மற்றும் அணுகல்


உலகளாவிய உணவு விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்களின் பங்களிப்பு காரணமாக உற்பத்தி செய்யப்படுகிறது. வளரும் நாடுகளில், உணவு உற்பத்தியில் 60% முதல் 80% வரை பெண்களின் பொறுப்பு ஆகும். தெற்காசியாவில், அவர்கள் விவசாயத் தொழிலாளர் திறனில் 39% உள்ளனர். விவசாயத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதை இந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன. இருப்பினும், அவர்கள் இன்னும் பல தடைகளையும் சமத்துவமின்மைகளையும் எதிர்கொள்கின்றனர்.


இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான பெண்கள் விவசாய நிலத்தை வைத்திருக்கிறார்கள். விவசாயப் பணியாளர்களில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கும் போதிலும் இது நிகழ்கிறது. பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான பெண்களில் சுமார் 80% பேர் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இருப்பினும், நில உரிமையாளர்களில் 14% பேர் மட்டுமே பெண்கள் ஆவர். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey) இன்னும் குறைவான எண்ணிக்கையைக் காட்டுகிறது. இதில், 8.3% பெண்கள் மட்டுமே நிலத்தை வைத்திருக்கிறார்கள்.


இந்தியாவில் பெண் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு பெரும்பாலும் சொந்தமாக நிலம் இல்லை என்பதாகும். இது அவர்களுக்கு கடன்கள் பெறுவதையோ அல்லது வங்கிகள் மற்றும் பிற நிதி சேவைகளைப் பயன்படுத்துவதையோ கடினமாக்குகிறது. விவசாயத் திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் பற்றிய வழக்கமான தகவல்கள் விவசாயிகளுக்குத் தேவை. ஆனால், மொபைல் போன்கள் போன்ற தொழில்நுட்பங்களை பெண்கள் குறைவாகவே அணுகுகின்றனர். இது இந்தத் தகவலைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பிரச்சினைகள் பெண்கள் தங்கள் பண்ணைகளில் முதலீடு செய்வதையும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் தடுக்கின்றன.


சில உதவிகள் நுண்நிதி (microfinance) மற்றும் சுயஉதவி குழுக்களிடமிருந்து (self-help groups) வருகின்றன. ஆனால், இந்தக் கடன்கள் பொதுவாக பெரிய முதலீடுகளுக்கு மிகச் சிறியவை.


இந்திய அரசு சிறு பெண் விவசாயிகளுக்கு உதவுகிறது. இது அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. மகிளா கிசான் சஷக்திகரன் பரியோஜனா திட்டம் (Mahila Kisan Sashaktikaran Pariyojana program) பெண்களின் திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் அவர்களுக்கு அதிக வளங்களைப் பெற உதவுகிறது. வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை-திட்டம் (Sub-Mission) விவசாய இயந்திரங்களின் விலையில் 50% முதல் 80% வரை மானியங்களை வழங்குகிறது. மேலும், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் பட்ஜெட்டில் 30% பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பெண் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


மீள்தன்மைக்கான அதிகாரமளித்தல்


காலநிலை மாற்றம் பெண் விவசாயிகளை அவர்களின் வீட்டுப் பொறுப்புகளை அதிகரிப்பதன் மூலமும், விவசாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களின் வெளிப்பாட்டை உயர்த்துவதன் மூலமும் விகிதாசாரமாக பாதிக்கிறது. "எங்கள் பகுதியில் வானிலையில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் புதிய பயிர் வகை வெள்ள சேதத்தைத் தாங்கும். இந்தப் பயிர்கள் நீருக்கடியில்கூட உயிர்வாழும். சிறந்த அறுவடை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்கிறார் நாகானில் உள்ள ரோஹா கிராமத்தைச் சேர்ந்த நிர்மலி போரா ஹசாரிகா.


பெண் விவசாயிகளுடன் ஈடுபடுவதன் மூலம், கிராமம் மற்றும் சமூக மட்டங்களில் காலநிலை தகவமைப்புக்கான பிரதிபலிப்பு மாதிரிகளை உருவாக்க முடியும்.


விவசாயத்தில் உள்ள பெண்கள் கருத்தரங்குகள் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட யோசனைகளை உருவாக்கின. ENACT திட்டம் முக்கியமாக பெண் விவசாயிகளை தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிபுணர்களுடன் இணைக்கிறது. இது நாகான் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒவ்வொரு வாரமும் பயனுள்ள விவசாய மற்றும் காலநிலை ஆலோசனைகளை அனுப்புகிறது.


மேலும், காலநிலை தகவமைப்பு தகவல் மையங்கள் வீடியோ அழைப்புகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் உதவுகின்றன. இவை விவசாயம் மற்றும் வாழ்க்கை சம்பாதிப்பதற்கான வழிகள் குறித்து பெண் விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துகின்றன. நிபுணர் அறிவு, விவசாய பல்வகைப்படுத்தல், வானிலை மற்றும் தகவல் எச்சரிக்கைகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சமூக நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை இணைப்பதன் மூலம் எவ்வளவு பெரிய தாக்கங்கள் ஏற்படலாம் என்பதை இந்த எடுத்துக்காட்டு காட்டுகிறது.


இந்த திட்டம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இவற்றில் வேளாண்மைத் துறை (Department of Agriculture), மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம் (State Rural Livelihoods Mission) மற்றும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் (Departments of Meteorology and Environment) அடங்கும். இந்த திட்டம் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டமைப்புகள் காலநிலை-எதிர்ப்பு பயிர் வகைகளை வழங்க உதவுகிறார்கள்.


கிராமப்புற சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் மக்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக்கூடியவை. அபாயங்களுக்கான பதில்கள் சமூகத்தின் தேவைகள் மற்றும் திறன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ENACT திட்டம் வெள்ளத்தைத் தாங்கும் நெல் வகைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது வாழ்வாதார பல்வகைப்படுத்தல் மற்றும் சந்தை இணைப்புகளை உருவாக்குவதையும் ஆதரிக்கிறது. இந்த நடவடிக்கைகள் வெள்ளத்தால் ஏற்படும் பயிர் சேதத்தைக் குறைக்கவும், சத்தான உள்ளூர் பயிர்வகைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. மகளிர் விவசாயக் குழுக்கள் சமூக அடிப்படையிலான ஸ்மார்ட் விதை உற்பத்தி முறையில் (smart seed production system) பங்கேற்கின்றன. இது திட்டத்தை மேலும் நிலையானதாக மாற்ற உதவுகிறது.


மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்


கொள்கை வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் பெண் விவசாயிகளின் குறிப்பிட்ட தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதைச் செய்ய, பாலினத்தை மையமாகக் கொண்ட விரிவான தரவு நமக்குத் தேவை. இந்தத் தரவு பெண்களின் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்க உதவும். இந்தத் தீர்வுகளில் விவசாயக் கருவிகளை மறுவடிவமைப்பு செய்தல், நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சேமிப்பு அல்லது கடன் நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


பெண் விவசாயிகளுக்கு பயனளிக்கும் மற்றும் பெண்களால் நடத்தப்படும் விவசாய மதிப்புச் சங்கிலிகளில் வலுவான கவனம் செலுத்தப்பட வேண்டும். இதில் பெண்களின் நிதி மற்றும் தகவல் அணுகலை மேம்படுத்துவதும் அடங்கும். இது பெண்களின் சுயஉதவி குழுக்கள் போன்ற அவர்களின் கூட்டு முயற்சிகள் மற்றும் நெட்வொர்க்குகளை ஆதரிப்பதையும் குறிக்கிறது.


2026-ஆம் ஆண்டை சர்வதேச பெண் விவசாயி ஆண்டாக மாற்ற ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. இது வலுவான மற்றும் நீடித்த விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். இது பாலின சமத்துவத்தையும் ஆதரிக்கும். பெண்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்து ஆதரிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பெண்களின் பங்களிப்பு இருக்கும்.


மே-எலின் ஸ்டெனர் இந்தியாவிற்கான நார்வேயின் தூதர் ஆவார். எலிசபெத் ஃபௌர் இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதி மற்றும் தேசிய இயக்குநர் ஆவார்.


Original article:
Share:

செயல்முறையை இறுக்குங்கள் : இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் செயல்முறைகள் பற்றி . . .

 வாக்காளர் பட்டியல் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றிய நியாயமான கவலைகளை ECI சரிசெய்ய வேண்டும்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார். இந்த கவலைகள் மகாராஷ்டிராவில் 2024 சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.


இதில், சில குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒன்று, பொதுத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு. மற்றொன்று, வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்காளர்களுடைய வாக்குப்பதிவு ஆகும். மூன்றாவது பிரச்சினை, ஒன்றிய அரசு 1961 தேர்தல் நடத்தை விதிகளை மாற்றியது. இந்த மாற்றம் வாக்குப்பதிவு செயல்முறையின் சிசிடிவி காட்சிகளை அணுகுவதை கட்டுப்படுத்த 1961 தேர்தல் நடத்தை விதிகளை ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது போன்ற குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளன.


தேர்தல் ஆணையர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 2023 உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றாததற்காக ஒன்றிய அரசை அவர் விமர்சித்தார். தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்திய தலைமை நீதிபதியையும் சேர்க்க அந்தத் தீர்ப்பு பரிந்துரைத்திருந்தது.


கடந்த காலங்களில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. இருப்பினும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்புகள் இருந்ததால், இந்தக் கவலைகளில் பல நெருக்கமான பரிசோதனையின் போது நிலைத்திருக்கவில்லை.


இப்போது, ​​காங்கிரஸ் ஒட்டுமொத்த தேர்தல் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அது ஆழமான மற்றும் அடிப்படையான பிரச்சினைகளை எழுப்புகிறது. இந்தப் பிரச்சினைகள் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.


பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைப் பற்றிய தி இந்துவின் முதற்கட்ட பகுப்பாய்வு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களில் தீவிரமான அதிகரிப்புக்கு முன்னுதாரணங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்களில் 39 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், 2014-ஆம் ஆண்டிலும் இதே போன்ற அதிகரிப்புகள் காணப்பட்டன. ஏறக்குறைய நான்கு மில்லியன் வாக்காளர்களின் அதிகரிப்பு ஒரு பெரிய எண்ணிக்கையாகும் மற்றும் ECI ஆனது சரிபார்ப்பதற்காக வாக்காளர் பட்டியலின் இயந்திரம் படிக்கக்கூடிய தரவை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவின் அதிகரிப்பு அசாதாரணமானது என்ற குற்றச்சாட்டு குறித்து, இந்த வாதத்தில் வலுவானதாகவோ அல்லது நம்பத்தகுந்ததாகவோ இல்லை. இது தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், மாலை 5 மணிக்குப் பிறகு வாக்களிப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) தரவு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India (ECI)) செயலி மூலம் பகிரப்படும் தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் முற்றிலும் துல்லியமாக இல்லை. ஏனெனில், இவை தேர்தல்களின்போது வாக்கு எண்ணிக்கைகளை கைமுறையாக உள்ளிடுவதைச் சார்ந்தது (entered manually during elections) மற்றும் துல்லியமான இயந்திர எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது முரண்பாடுகள் இருக்கலாம். ஒவ்வொரு வாக்கு சாவடியிலிருந்தும் படிவம் 17-C தரவு மூலம் இறுதிப் புள்ளி விவரங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் வெளியிடப்படும் என்பதால், தற்காலிக வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை நம்புவது தவறாகும். எவ்வாறாயினும், ECI-ன் பதிலுக்கு தகுதியான மற்றொரு கருத்து உள்ளது. CCTV காட்சிப் பதிவுகளைத் தக்கவைத்தல் மற்றும் புகார்களை ஆராய கட்சிகள் மற்றும் அவர்களின் வேட்பாளர்களுக்கு அணுகலை வழங்குதல். வாக்காளர் பட்டியல்களை புதுப்பிக்கும் செயல்முறை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு அரசியல் கட்சிகளை ஈடுபடுத்த வேண்டும். புகார்களை எழுப்ப அவர்கள் முடிவுகள் வரும்வரை காத்திருக்கக்கூடாது.  இறுதியில், தேர்தல் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். இதில் வாக்காளர் பட்டியலை தெளிவாகப் பகிர்வது மற்றும் சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வுக்குக் கிடைக்கச் செய்வது ஆகியவை அடங்கும்.



Original article:
Share: