பழங்குடியின மக்களுக்கான ஒன்றியத்தின் தொடர்பு கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும். ஆனால் அது எளிதல்ல.

 பழங்குடியின மக்கள் அடிப்படை ஆவணங்களைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு திட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆதார் (Aadhaar) மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் (Ayushman Bharat cards) அடங்கும். இந்தத் திட்டங்கள் வன உரிமைகள் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் நில உரிமைகளைப் பெறவும் உதவுகின்றன. கூடுதலாக, அவை ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கான அணுகலை வழங்குகின்றன.


ஜூன் 15 அன்று, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு தொலைத்தொடர்பு திட்டத்தைத் தொடங்கியது. இது பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் சுமார் 1 லட்சம் கிராமங்களை மையமாகக் கொண்டது. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) மற்றும் தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA)) ஆகிய இரண்டு நலத்திட்டங்களை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.


பழங்குடியினருக்கு ஆதார் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள், வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமைகள், ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகள் போன்ற முக்கிய ஆவணங்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது ஏற்கனவே உள்ள திட்டங்களில் சேரவும் அவர்களுக்கு உதவுகிறது. பழங்குடி மக்களுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், "சமூக அணிதிரட்டல் மூலம் பங்கேற்பு நிர்வாகத்தை" (participatory governance through community mobilisation) ஊக்குவிப்பதும் இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள்களாகும். இந்த இலக்குகள் மிகவும் நேர்மறையானவை. இருப்பினும், சவால்கள் இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், பழங்குடியின மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டில், அரசாங்கம் PM JANMAN ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி DAJGUA திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டம் 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், பல பழங்குடி மக்கள் இன்னும் இந்தத் திட்டங்களிலிருந்து பயனடையவில்லை. இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், கடினமான புவியியல் சூழ்நிலைக் காரணமாக சில பகுதிகளை அடைவது கடினம். குறிப்பாக பழங்குடி குழுக்களில் மற்றொரு கடுமையான பிரச்சினை நிலமின்மை ஆகும். நவம்பர் 2024ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தப் பிரச்சினையை எழுப்பினார். பழங்குடியினர் பகுதிகளில் நிலம் வழங்க உதவுமாறு நிதி ஆயோக்கை அவர் கேட்டுக் கொண்டார்.


மற்றொரு சவால் என்னவென்றால், பழங்குடி மக்கள் பெரும்பாலும் இந்தத் திட்டங்களை அணுகத் தேவையான ஆவணங்களைப் பெற முடியாது. உதாரணமாக, அக்டோபர் 2024ஆம் ஆண்டில், புனேவில் உள்ள பல கட்கரி ஆதிவாசி மக்கள் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமப்படுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. பழங்குடி துணைத் திட்டங்களின் (Tribal Sub Plans (TSP)) கீழ் சலுகைகளைப் பெற இந்த ஆவணங்கள் தேவை. 1984ஆம் ஆண்டில் டிம்பே அணை (Dimbhe Dam) கட்டப்பட்டதால் அவர்கள் இடம்பெயர்ந்த பிறகு அவர்களின் கிராமம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.


சுதந்திரம் பெற்றதிலிருந்து, அணைகள், சுரங்கங்கள், வனவிலங்கு சரணலாயங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் உருவாக்கம்  காரணமாக மில்லியன் கணக்கான பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் தனித்துவமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்ய, அரசியல் செயல்களை விட நல்லாட்சி முக்கியமானது. இந்த மக்கள் தொடர்பு பிரச்சாரம் இதன் முதல் படியாக இருக்கலாம்.


Original article:

Share:

2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை -ரோஷ்னி யாதவ்

 சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை, 2024-ஆம் ஆண்டில் சிறந்த நடைமுறை-நிலை கிராஃபிக் சுகாதார எச்சரிக்கை அடையாளங்களைக்  கொண்ட நாடுகளில் இந்தியாவை அடையாளம் காட்டுகிறது. இந்த அறிக்கை எதைப் பற்றியது?


தற்போதைய செய்தி என்ன?:


புகையிலை பயன்பாடு உலகின் மிகப்பெரிய சுகாதார ஆபத்துகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றில் 7 மில்லியனுக்கும் அதிகமானவை புகையிலையை நேரடியாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து வந்தவை என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Health Metrics and Evaluation (IHME)) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதிக புகையிலை நுகர்வு சவாலை சமாளிக்க, மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட உதவும் ஒரு பயனுள்ள வழியாக சுகாதார எச்சரிக்கைகள் உள்ளன. அதனால் தான் உலக சுகாதார அமைப்பின் 2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கையின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். இது புகையிலையின் ஆபத்துகள் குறித்து மக்களை எவ்வாறு எச்சரிப்பது என்பது பற்றிப் பேசுகிறது.




முக்கிய அம்சங்கள்:


1. 2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கை, உலக சுகாதார அமைப்பால் Bloomberg தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஆறு நிரூபிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு MPOWER புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இது கவனம் செலுத்துகிறது.


2. புகையிலை கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பு மாநாடு (WHO Framework Convention on Tobacco Control (WHO FCTC)) மற்றும் அதன் வழிகாட்டுதல்கள், புகையிலை கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் நாடுகள் அடித்தளத்தை வழங்குகின்றன. இதை உண்மையாக்க உதவும் வகையில், உலக சுகாதார அமைப்பு MPOWER நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.


3. WHO FCTC-இல் உள்ள புகையிலைக்கான தேவையைக் குறைப்பதற்கான பயனுள்ள தலையீடுகளை நாடு அளவில் செயல்படுத்துவதில் MPOWER நடவடிக்கைகள் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. MPOWER நடவடிக்கைகள் -


M– புகையிலை பயன்பாடு மற்றும் தடுப்புக் கொள்கைகளைக் கண்காணித்தல்;


P– புகையிலை புகையிலிருந்து மக்களைப் பாதுகாத்தல்;


O– புகையிலையை விட்டு வெளியேற உதவி வழங்குதல்;


W– புகையிலையின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தல்;


E– புகையிலை விளம்பரத்தில் தடைகளை அமல்படுத்துதல்; மற்றும்


R– புகையிலை பொருட்களுக்கான வரிகளை உயர்த்துதல் ஆகும்.


4. 2007 ஆம் ஆண்டில் 9 நாடுகளுக்கு மட்டுமே இந்த நடவடிக்கைகள் தேவைப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 110 நாடுகள் இந்த நடவடிக்கைகளைக் கோருகின்றன. இந்த விதிகள் இப்போது உலக மக்கள்தொகையில் 62% பேரைப் பாதுகாக்கின்றன. மேலும், 25 நாடுகள் எளிய பேக்கேஜிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன.


2025-ஆம் ஆண்டு உலகளாவிய புகையிலை தொற்றுநோய் அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்


1. 2025 அறிக்கை W அளவீட்டில் கவனம் செலுத்துகிறது (புகையிலையின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கிறது) மேலும் 6.1 பில்லியன் மக்கள் சிறந்த நடைமுறை மட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு MPOWER நடவடிக்கையால் பாதுகாக்கப்படுவதால், பல நாடுகள் புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது.

சுகாதார எச்சரிக்கைகளும் பொது ஊடக பிரச்சாரங்களும் ஒரு விரிவான புகையிலை கட்டுப்பாட்டு ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது சிறப்பாக செயல்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

2. நான்கு நாடுகள் இப்போது முழுமையான MPOWER அடையாளத்தை அடைந்துள்ளன. மேலும், ஏழு நாடுகள் ஒரே ஒரு நடவடிக்கை மட்டுமே குறைவாக உள்ளன. அதே நேரத்தில் 40 நாடுகள் இன்னும் சிறந்த நடைமுறை அளவில் எந்த MPOWER நடவடிக்கையும் இல்லை.

3. இந்த அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் படமுள்ள சுகாதார எச்சரிக்கைகளில் ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படுத்துகிறது. இது உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

4. அறிக்கையின் படி, இந்தியா 2024-ஆம் ஆண்டில் சிறந்த நடைமுறை அளவிலான சுகாதார எச்சரிக்கை  அடையாளங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

5. அனைத்து MPOWER நடவடிக்கைகளிலும், சிகரெட் பெட்டிகளில் பெரிய அளவிலான கிராஃபிக் சுகாதார எச்சரிக்கைகள் 2007ஆம் ஆண்டு  முதல் மிகவும் மேம்பட்டுள்ளன. அதிகமான நாடுகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன. மேலும், அதிகமான மக்கள் இப்போது வலுவான எச்சரிக்கைக் கொள்கைகளால் மூடப்படுகிறார்கள். மேலும், இந்த எச்சரிக்கைகளின் சராசரி அளவு 2007ஆம் ஆண்டில் 28% இலிருந்து 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 60% ஆக அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு முதல், இந்தியா இரண்டு துறைகளில் சிறந்து விளங்குகிறது: மக்கள் புகையிலையை விட்டு வெளியேற உதவுதல் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்தல் ஆகும். வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற பிற துறைகளிலும் இது உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிகரெட் பெட்டிகளில் மிகப் பெரிய சுகாதார எச்சரிக்கைகள் உள்ளன. இது பெட்டியின் 85%-ஐ உள்ளடக்கியது. 10 நாடுகளில் மட்டுமே பெரிய எச்சரிக்கைகள் உள்ளன. டாக்டர் விநாயக் மோகன் பிரசாத், உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் தலைவர் தலைவராக உள்ளார். 

6. 'W' நடவடிக்கையில், இந்தியா 2016ஆம் ஆண்டு முதல் மிக உயர்ந்த குழுவில் உள்ளது. 'E' நடவடிக்கையில், இந்தியா நேரடி மற்றும் மறைமுக புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் நல்கைகளை (sponsorships) தடை செய்துள்ளது.

7. உலக சுகாதார அமைப்பின் அறிக்கை புகையிலை கட்டுப்பாட்டில் முன்னேற்றத்தை பராமரிக்கவும் துரிதப்படுத்தவும் நடவடிக்கை தேவை என்று எச்சரித்துள்ளது. ஏனெனில், அதிகரித்து வரும் தொழில்துறை தலையீடு புகையிலை கொள்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை சவால் செய்கிறது.

8. குறிப்பிடத்தக்க வகையில், புகையிலை வரி என்பது இந்தியாவில் குறைந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட MPOWER நடவடிக்கையாகும்.

உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டுக்கான ப்ளூம்பெர்க் பரோபகார விருதுகள் (Bloomberg Philanthropies Awards for Global Tobacco Control)

  1. புகையிலையை விட்டு வெளியேற பலருக்கு உதவியதற்காக உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டுக்கான 2025 ப்ளூம்பெர்க் தொண்டு நிறுவன விருதை வென்ற ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


உலக புகையிலை இல்லா தினம்

புகையிலையின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நுகர்வோரை அந்தப்பழக்கத்தை விட்டுவிட ஊக்குவிக்கும் பயனுள்ள கட்டுப்பாட்டு கொள்கைகளை ஊக்குவிக்கவும், உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) கடைப்பிடிக்கிறது. 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் "புகையிலை தொழில்துறை தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்" ஆகும். இது ஆக்கிரமிப்பு புகையிலை சந்தைப்படுத்தலில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்கவும் எதிர்கால அடிமைத்தன விகிதங்களைக் குறைக்கவும் அரசாங்கங்களை அழைக்கிறது.


  1. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு செல் (National Tobacco Control Cell), திங்கள்கிழமை (ஜூன் 23) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற உலக புகையிலை கட்டுப்பாட்டு மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

  2. இந்தியாவுக்கு புகையிலை நிறுத்துதலை ஊக்குவிப்பதற்கான 'O' வகை விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மற்ற நாடுகளில் மொரிசஸ், மெக்ஸிகோ, மான்டினேக்ரோ, பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.

புகையிலைக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் (Measures taken by India to fight against Tobacco)

  1. இந்தியா தொலைக்காட்சி, வானொலி, அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்கள் உட்பட அனைத்து ஊடக வடிவங்களிலும் புகையிலை விளம்பரம், ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவியை (tobacco advertising, promotion and sponsorship (TAPS)) கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

  2. பொழுதுபோக்கு ஊடகங்களில் புகையிலை பயன்பாட்டின் சித்தரிப்பைக் கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு 2012-ஆம் ஆண்டில் புகையிலை இல்லாத திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி விதிகளை (Tobacco-Free Films and Television Rules) அறிமுகப்படுத்தியது. இது சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய தளங்களில் கவனம் செலுத்துகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா அனைத்து உட்புற பொது இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்துள்ளது. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகள் உள்ளன உணவகங்கள்/குடிப்பழக்க வசதிகள்/இரவு கிளப்புகளிலும் விமான நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களிலும் குறிப்பிட்ட புகைபிடிக்கும் அறைகள் உள்ளன.

  1. அதிகமான மக்கள் டிஜிட்டல் ஒளிப்பரப்புத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு மாறுவதால், இந்தியா தனது புகையிலை கட்டுப்பாட்டு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. மே 31, 2023 அன்று உலக புகையிலை இல்லா தினத்துடன் இணைந்து, அரசாங்கம் 2012 சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இது over-the-top ஒளிப்பரப்புத் தளங்களுக்கும் அதன் பாதுகாப்பை விரிவுபடுத்தியது. இந்த நடவடிக்கையுடன், டிஜிட்டல் ஒளிப்பரப்பு உள்ளடக்கத்திற்கு குறிப்பாக புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக இந்தியா ஆனது.

  2. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியா பொது சுகாதாரத்திற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, வளர்ந்து வரும் ஊடக நுகர்வு போக்குகளுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றியமைப்பதில் முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இருப்பினும், தற்போதைய தேசிய TAPS தடையை விற்பனை இடங்களில் புகையிலை விளம்பரத்தை தடை செய்வதன் மூலமும் புகையிலை தொழில்துறை நிதியுதவியை முழுமையாக தடை செய்வதன் மூலமும் மேலும் வலுப்படுத்த முடியும்.

முதல் 10 மிகப்பெரிய புகையிலை உற்பத்தி நாடுகள் (Top 10 largest tobacco-producing countries)

  1. புகையிலையின் சுகாதார அபாயங்கள் குறித்த பரவலான விழிப்புணர்வு இருந்தபோதிலும், மூல புகையிலை தொழில் தொடர்ந்து செழித்து வளர்கிறது. 2022ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 5.8 மில்லியன் டன்கள் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. இதில் சீனா இந்த உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது என்று ஸ்டேடிஸ்டா (Statista) கூறுகிறது.

  2. அதே ஆண்டில், இந்தியாவும் பிரேசிலும் முறையே சுமார் 0.8 மில்லியன் மற்றும் 0.7 மில்லியன் டன்கள் பதப்படுத்தப்படாத புகையிலையை உற்பத்தி செய்தன என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) கூறுகிறது.

  3. 2023 ஆம் ஆண்டின் படி உலகின் முதல் 10 மிகப்பெரிய புகையிலை உற்பத்தி நாடுகள்:

தரவரிசை

நாடு

பதப்படுத்தப்படாத புகையிலை உற்பத்தி (மெட்ரிக் டன்கள்)

1

சீனா (பிரதான நிலப்பகுதி)

2,296,700

2

இந்தியா

769,671

3

பிரேசில்

683,469

4

இந்தோனேசியா

238,806

5

ஜிம்பாப்வே

236,815

6

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

196,160

7

பாகிஸ்தான்

151,858

8

டான்சானியா ஐக்கிய குடியரசு

122,859

9

அர்ஜென்டினா

107,880

10

கொரியா மக்கள் ஜனநாயக குடியரசு

87,427

4. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தி செய்யப்படாத புகையிலை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக உள்ளது. இதன் உற்பத்தி அளவு 770,000 டன்கள் ஆகும்.

Original article:

Share:

சுபாஷ் சுக்லா, ஆக்சியம்-4 திட்டம் குறித்து…

 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபாஷ் சுக்லாவின் கட்டணப் பயணம், மனித விண்வெளிப் பயணம் பற்றி மேலும் அறிய நமக்கு உதவும்.


ஜூன் 25, 2025 மதியம், இந்தியாவின் சுபாஷ் சுக்லா மூன்று பிற விண்வெளி வீரர்களுடன் NASA-வின் புளோரிடா விண்வெளி துறைமுகத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு Axiom-4 வணிக பணியின் ஒரு பகுதியாக புறப்பட்டார். 1984-ஆம் ஆண்டில் ராகேஷ் சர்மாவுக்கு பிறகு ஒரு இந்தியர் சுற்றுப்பாதை விண்வெளிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஜூன் 26-ல் டிராகன் பணியாளர் கேப்சூல் ISS-உடன் வெற்றிகரமாக இணைந்தால், சுக்லா ISS-ல் பயணம் செய்யும் முதல் இந்தியர் ஆவார். அடுத்த இரண்டு வாரங்களில், அவரும் ISS பணியாளர்களும் Axiom-4 பணி கொண்டு வந்த பரிசோதனைகளின் தொகுப்பை நிகழ்த்துவார்கள். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (Indian Space Research Organisation (ISRO)) எட்டு பரிசோதனைகளும் அடங்கும். சுக்லா, 2027-ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயண பணியான ககன்யனில் பறக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக உள்ளார். தற்போதைக்கு, விண்வெளித் துறை Axiom-4-ல் சுக்லாவின் இருக்கையை வாங்க ரூ.548 கோடி செலவழிப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்தவில்லை. 


ககன்யான் திட்டத்திற்காக அரசாங்கம் ₹20,200 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திரு. சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பணம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பயணம் மற்றும் அவருக்கும் அவரது துணைப் பணியாளர் பிரசாந்த் நாயருக்கும் மேம்பட்ட பயிற்சியை உள்ளடக்கியது. இது மனித விண்வெளிப் பயணம் மற்றும் அத்தகைய பணிகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பது பற்றி இந்தியா நிறைய கற்றுக்கொள்ள உதவும். இந்த அறிவு எதிர்கால விண்வெளி வீரர் பயணங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், விண்வெளித் துறை மற்றும் இஸ்ரோ இன்னும் இந்தப் பயணம் ஏன் முக்கியமானது, அது என்ன நன்மைகளைத் தரும் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும்.


ராகேஷ் சர்மா மற்றும் சுக்லாவின் விமானங்களுக்கு இடையில் விண்வெளி பயணம் கணிசமாக மாறிவிட்டது. இன்றைய பணயங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை மற்றும் அதிக கோரிக்கைகளைக் கொண்டவை. Axiom என்பது NASA மற்றும் SpaceX-உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனமாகும். மேலும், இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்க்கான வணிக பணிகளுக்கு இருக்கைகளை விற்பனை செய்கிறது. இருப்பினும், எலோன் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான மோதலின் காரணமாக, ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் குழு விண்வெளி வீரர் குழுக்களை நாசா தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது.


ட்ரம்பின் கட்டணங்களின் விளைவுகள் மற்றும் அவர் 2026-க்கு முன்மொழிந்த முக்கிய பட்ஜெட் கருத்தில் கொண்டு, அவரது முன்னோடி ஜோ பைடன் இந்தியாவுடனான உறுதிமொழிகளை மதிக்கும் விருப்பமும் தெளிவாக இல்லை. சர்வதேச விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டுக்குள் செயல்படுவதை நிறுத்திவிடும். மாறிவரும் இந்த விண்வெளி உலகில், இந்தியாவின் விண்வெளித் திட்டம் பல மாற்றங்களை எதிர்கொள்கிறது. நாசா மற்றும் ப்ளூ ஆரிஜின் (Blue Origin) போன்ற அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த எதிர்கால பயணங்களில் இந்தியாவின் ககன்யான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளன. 


தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது விண்வெளி பயணங்களுக்கான ஆதரவை சமநிலைப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. தனியார் விண்வெளித் துறையை ஆதரிக்க விரும்புவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அதன் முயற்சிகள் இதுவரை போதுமானதாக இல்லை. ஆனால், நாடு வணிக மற்றும் பொதுத்துறை தேவைகளை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், விண்வெளி பயண சேவைகளின் பொருத்தமான வழங்குநராக அது இருக்க வேண்டும். இந்திய அரசு தனியார் துறையை ஆதரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், அதன் முயற்சிகள் இதுவரை போதுமானதாக இல்லை. சுக்லா திரும்பியதும், இஸ்ரோ அதன் அடுத்த பெரிய சவாலில் கவனம் செலுத்தும். மேலும், மக்கள் அதிலிருந்து இன்னும் அதிகமான தகவல்களை எதிர்பார்ப்பார்கள்.  


Original article:

Share:

சாதிவாரி கணக்கெடுப்பு முறை மாற்றப்பட வேண்டுமா? -K.நாராயணன் உன்னி

 மக்கள்தொகை கணக்கெடுப்பின் (Census) இரு கட்டங்கள் என்னென்ன? ஒன்றிய அரசின் கூற்றுப்படி, வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கீடு ஏன் சேர்க்கப்பட்டுள்ளது? ஓரங்கட்டப்பட்டவர்களை முக்கிய பணிகளுக்கு கொண்டுவர உதவும் தரவுகளை வழங்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் என்னென்ன?


ஒன்றிய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும், அதில் சாதி பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இத்தகைய தரவு சேகரிப்பு பணியை, ஏற்கனவே உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்முறையை மறுசீரமைப்பதன் மூலம் மேலும் பயனுள்ளதாக மாற்ற முடியுமா?


மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது?


மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம், வீடுகளை பட்டியலிடுதல் (house-listing) என அழைக்கப்படுகிறது. இது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இந்த கட்டத்தில் நாட்டில் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்பு அலகுகளும் பட்டியலிடப்படும். இந்த நிலை, நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பு அலகுகளையும், வீடுகள் மற்றும் வீடுகளின் பல பண்புகளையும் பட்டியலிடுகிறது.


இரண்டாம் கட்டம் மக்கள்தொகை கணக்கீடு கட்டம் (population enumeration phase) என அழைக்கப்படுகிறது. இது 2027-ஆம் ஆண்டில் நடத்தப்படும். இந்த கட்டத்தில் மக்கள்தொகையின் பல முக்கிய சமூக-பொருளாதார சிறப்பியல்புகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். சாதி பதிவு செய்யப்படுவதும் இந்த கட்டத்தில்தான்.


சாதி ஏன் பதிவு செய்யப்படுகிறது?


ஒரு நபரின் சாதியை பதிவு செய்வது கடைசியாக 1941-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் செய்யப்பட்டது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தரவுகளை செய்யல்பட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை. எனவே உண்மையில், சாதி  பற்றிய தரவுகளை வழங்கிய கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு 1931-ஆம் ஆண்டில் நடந்தது. இது இப்போது எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு காலாவதியாகிவிட்டது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டவர்களையும் பின்தங்கியவர்களையும் முக்கிய பணிகளுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுக்கும் ஒரு நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தரவு சேகரிப்புக்கான ஒரு முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாளின் வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்களை மறுசீரமைப்பதன் மூலம், மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ள நோக்கங்களை அடைய மிகவும் பயனுள்ள தரவுகளை எளிதாகக் கிடைக்கச் செய்ய முடியும்.


கேள்வித்தாள்களில் உள்ள பிரச்சனைகள் என்னவென்ன?


2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரைவு கேள்வித்தாள்களில் சேர்க்கப்பட்ட கேள்விகள் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அப்படியே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, சாதி பற்றிய கேள்வி பட்டியல் சாதியினரிடம் (Scheduled Castes) மட்டுமே கேட்கப்பட்டது.


இந்த கேள்வியை பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) தவிர மற்ற அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றுவதன் மூலமும், மின்னணு தரவு சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் மென்பொருளில் ஏற்படும் மாற்றங்களுடன், சாதிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க முடியும். சாதிகள் பற்றிய தரவு சேகரிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் இந்த கட்டுரையின் எல்லைக்குள் இல்லை. குறிப்பிட்ட சாதிகள் பற்றிய தகவல்களை கல்வியறிவு நிலை; திருமண வயது; தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள்; நபரின் நிலை  முக்கிய தொழிலாளி, விளிம்பு தொழிலாளி அல்லது தொழிலற்றவர்; வேலை தேடுதல்/வேலைக்கு கிடைக்கக்கூடிய நிலை; தொழிலாளர்களின் தொழில்/தொழில் துறையின் பொதுவான வகைப்பாடு; பிறந்த இடம்/முந்தைய வசிப்பிடம்; மற்றும் குழந்தை பிறப்பு மற்றும் உயிர்வாழ்வு பற்றிய தரவுகள் ஆகியவற்றின் மூலம் கண்டறிய முடியும்.


'தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள்' (mother tongue and other languages known) பற்றிய தரவு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பு மற்றும் அதன் பரந்த வகைப்பாடு பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், "வேலை தேடுகிறாரா/வேலைக்கு கிடைக்கிறதா” எனும் கேள்விக்கான பதிலைப் பயன்படுத்தி பெறப்படும் வேலையின்மை பற்றிய தரவு கருத்தியல் பிரச்சனைகள் தரவு சேகரிப்பில் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், வேலையில்லாதவராக வகைப்படுத்தப்படுவதற்கு ஒருவர் எவ்வளவு காலம் வேலை தேட வேண்டும்/கிடைக்க வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. 1981-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், அது ஒருபோதும் பயனுள்ள தரவை வழங்க முடியாது.


மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் 'குழந்தை பிறப்பு மற்றும் உயிர்வாழ்வு' (child births and survival) பற்றிய தகவல்கள் கடுமையான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. 1981-ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட இந்த கேள்விகள் தங்கள் பயனை இழந்துவிட்டன. ஏனெனில்,  இதே போன்ற தகவல்கள் தேசிய குடும்ப நல ஆய்வுகள் (National Family Health Surveys) மூலம் சிறப்பாக சேகரிக்கப்படுகின்றன. இந்த கேள்விகளிலிருந்து நம்பகமான சாதி வாரியான தரவுகளைப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.


குடியேற்றம் (migration) பற்றிய தகவல் சில சாதியினர் குடியேற்றத்திற்கு அதிகம் ஆளாகிறார்களா என்பதை மதிப்பிடுவதற்கு முக்கியமான அம்சமாக இருக்கலாம். ஆனால், முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்புகளின் தரவுகள் காட்டுவது என்னவென்றால், அதிகமான குடியேற்றவாசிகள் கணக்கிடப்படவில்லை அல்லது குடியேற்றவாசிகளாக பதிவு செய்யப்படவில்லை.


எனவே, சாதியை வகைப்படுத்த கிடைக்கும் ஒரே தகவல்கள் கல்வி, திருமண வயது மற்றும் பொருளாதார செயல்பாட்டில் பங்கேற்பு ஆகியவற்றில் மட்டுமே உள்ளன.


மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு கூறிய நோக்கங்களை நோக்கி நகர்வதற்கு உதவும் பிற தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு சேகரிக்கிறது என்ற போதிலும், அதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள் மற்றும் செயல்முறையில் சில கடுமையான மறுசீரமைப்புகள் தேவைப்படும்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள் எவ்வாறு மறுசீரமைக்கப்பட வேண்டும்?


வீடுகள் பட்டியலிடுதல் கட்டத்தின் முக்கிய நோக்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நேரத்தில் மக்கள் வசித்து வரும் அல்லது வசிக்க வாய்ப்புள்ள அனைத்து குடியிருப்பு அலகுகளின் (units) பட்டியலைத் தயாரிப்பதாகும். இந்த கட்டமைப்பு தேவையின்படி புதிய கணக்கீட்டு தொகுதிகளை (enumeration blocks) உருவாக்க உதவுகிறது மற்றும் கணக்கெடுப்பாளர்களின் பணிச்சுமையை சமநிலைப்படுத்த உதவுகிறது. 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் இந்த கட்டத்தில் வீட்டின் தரம், குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.


ஆனால், 1981-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்த கேள்விகள் இரண்டாம் கட்டத்தில், அதாவது மக்கள்தொகை கணக்கீட்டு கட்டத்தில் நடத்தப்படும் குடும்ப அட்டவணையில் (household schedule) இருந்தன.


இந்த கேள்விகளை வீடுகள்-பட்டியல் அட்டவணையிலிருந்து குடும்ப அட்டவணைக்கு மாற்றுவது, வீட்டின் தரம், வசதிகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்களை மக்கள்தொகையின் பிற அம்சங்களுடன் இணைப்பதை எளிதாக்கும். வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் மக்கள்தொகை கணக்கீட்டு கட்டங்களுக்கு இடையே ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை இடைவெளி இருப்பதால், வீட்டு எண், குடும்பத் தலைவரின் பெயர் போன்றவற்றின் அடிப்படையில் தகவல்களை இணைப்பது பிழைகளை ஏற்படுத்தலாம். இத்தகைய பிழைகள் தரவுகளின் நம்பகத்தன்மையை கடுமையாக பாதிக்கலாம். குறிப்பாக, சிறிய சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வீட்டுப் பட்டியல் அட்டவணையிலிருந்து இந்தக் கேள்விகளை நீக்குவது, கணக்கெடுப்பாளர்கள் குடியிருப்பு, பகுதி குடியிருப்பு அல்லது குடியிருப்பு அல்லாத அனைத்து வகையான கட்டிடங்களையும் பட்டியலிடுவதிலும், அவற்றில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலும் சிறப்பாக கவனம் செலுத்த அனுமதிக்கும். சிறந்த வீட்டுப் பட்டியல் தரவு மக்கள் தொகை கணக்கெடுப்பின் துல்லியத்தை மேம்படுத்தும். பெரும்பாலான மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் அதிக விடுபட்ட விகிதங்களைக் கொண்ட நகர்ப்புறங்களில் இது மிகவும் முக்கியமானது.


இத்தகைய இணைப்புகள் அல்லது கேள்விகளின் இடமாற்றம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அல்லது 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் திட்டமிடலிலும் (கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக) ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தத் தரவு இல்லையென்றால், "மின்சாரம் இல்லாத குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களின் கல்வியறிவு விகிதம் என்ன, அது மற்றவர்களை விட மிகக் குறைவாக உள்ளதா?" அல்லது "நகரங்களில் எத்தனை சதவீத தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வசிக்கிறார்கள்?" போன்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முடியாது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரியாக பிரிக்கப்பட்ட இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். அப்போதுதான் தரவுகள் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை அடையாளம் காணவும், அவற்றுக்கிடையேயான இடைவெளிகளை அளவிடவும் உதவும். இந்த புள்ளிகளில் பலவற்றில் துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினமாக இருந்தாலும், தரம் சரியானதாக இல்லாவிட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்புதான் இப்போது கிடைக்கும் சிறந்த தேர்வாகும்.


சில கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டுமா?


தேவையற்ற கேள்விகளை நீக்குவதன் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிமையாக்க வேண்டும். குடும்பத்திற்கு கிடைக்கும் வசதிகள் அல்லது அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் சொத்துக்கள் பற்றிய பல கேள்விகள் இப்போது தேவையற்றதாக இருக்கலாம். உதாரணமாக, கைபேசிகள் அல்லது கணினிகளின் உரிமை இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல முக்கியமானதாக இருக்காது. இதேபோல், வீடுகளின் வங்கிக் கணக்குகளை அணுகுவது குறித்த கேள்விகள் தவிர்க்கப்படலாம். குறுகிய கேள்வித்தாள் கணக்கெடுப்பாளர் கேள்விகளுக்கு மேலும் துல்லியமான பதில்களைப் பெறுவதில் கவனம் செலுத்த உதவும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் பல்வேறு சாதிகள் மற்றும் பழங்குடியினர் பற்றிய தரவுகளை சேகரித்து வருகிறது. இருப்பினும், இந்தத் தரவு கொள்கைகள் அல்லது திட்டங்களைத் திட்டமிடுவதற்கு மிகவும் பின்தங்கிய சாதிகள் அல்லது பழங்குடியினரை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து சாதி வாரியான தரவு, இடஒதுக்கீடு சதவீதத்தை தீர்மானிப்பதற்கு மட்டுமல்லாமல், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் திறம்பட பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.


ஆசிரியர் ஓய்வு பெற்ற இந்திய புள்ளியியல் சேவை அதிகாரி மற்றும் துணைப் பதிவாளர் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.


Original article:

Share:

காரணம் மற்றும் விளைவு: மனித உரிமைகள், குடியுரிமை வழக்குகள்

 அரசாங்கங்கள் குடியுரிமை வழக்குகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து பாதுகாக்க வேண்டும்.


துன்புறுத்தப்பட்ட நபர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க நீதிமன்றங்கள் தலையிட்டதன் மூலம், இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சமூகத்தின் சில பிரிவுகள் எதிர்கொள்ளும் குடியுரிமை தொடர்பான கவலைகள் மீண்டும் வெளிசத்திற்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க நீதிமன்றங்கள் தலையிட்டுள்ளன. இந்த வழக்குகளில் எழும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளன. June 24, 2025 அன்று, உச்ச நீதிமன்றம் Jaynab Bibi என்பவரின் நாடு கடத்தலை தடை செய்தது. அவர் முதலில் அசாமில் உள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தாலும் (Foreigners' Tribunal), பின்னர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தாலும் "வெளிநாட்டவர்" என்று முத்திரை குத்தப்பட்டார். 


தலைமுறை தலைமுறையாக அசாமில் வசித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், அனைத்து ஆவணங்களையும் வழங்கியவராகவும் இருந்தபோதிலும், அவர் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு நிலையை நோக்கி செல்லவேண்டியிருந்தது. நீதிபதிகள் K.V. விஸ்வநாதன் மற்றும் N. கோடீஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் மாதம் அடுத்த விசாரணைக்கு வரும் வரை அவருக்கு எதிராக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. ரக்ஷந்தா ரஷீத் வழக்கில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் ஒன்றிய உள்துறை செயலாளரிடம் 63 வயதான பெண்னை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வர உத்தரவிட்டது. 


ஏப்ரல் மாதம் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் குடிமக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். பாகிஸ்தான் குடிமகனான ரஷீத், கடந்த 38 ஆண்டுகளாக ஜம்முவில் வசித்து வந்தார். மேலும், அவருக்கு நீண்டகால நுழைவு இசைவும் (long-term visa) இருந்தது. 1996-ஆம் ஆண்டு குடியுரிமை பெறுவதற்கான அவரது விண்ணப்பம் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.


உயர் நீதிமன்ற நீதிபதி ராகுல் பாரதி தனது உத்தரவில், மனித உரிமைகள் மனித வாழ்க்கையின் மிகவும் புனிதமான கூறு என்றும், ஒரு வழக்கின் நன்மை தீமைகளை ஆராயாமல் நீதிமன்றம் அவர்களின் ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள் (Save Their Souls) போன்ற பதிலளிக்க வேண்டிய தருணங்கள் உண்டு என்றும் கூறினார். இவை காலப்போக்கில் முறையாக தீர்மானிக்கப்படலாம். 


Bibi அவர்களின் வழக்கறிஞர்கள் 2024-ஆம் ஆண்டு (Md. Rahim Ali @ Abdur Rahim VS The State Of Assam) வழக்கை குறிப்பிட்டனர். அதில் அசாமில் உள்ள மக்கள் பெரும்பாலும் சரியான ஆதாரங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் என்று தவறாக சந்தேகிக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது. வலுவான சந்தேகம் உண்மையான சட்ட ஆதாரங்களை மாற்ற முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ஒருவரை வெளிநாட்டவர் என்று அழைப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய சரியான செயல்முறையை அது விளக்கியது. 


2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்த) சட்டம் (Citizenship (Amendment) Act) ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு முஸ்லிம் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கியது.  இது மதத் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மற்றவர்களைப் புறக்கணிப்பதால் பலர் தனிச்சையானதாகவும் (arbitrary) குறுகியதாகவும் கருதுகின்றனர். 


யோகி ஆதித்யநாத் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற உயர்மட்ட பாஜக தலைவர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான அறிக்கைகள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளன. அவர்களில் சிலர் சரியான ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் (United Nations Universal Declaration of Human Rights) வாக்குறுதியளிக்கப்பட்டபடி, அரசாங்கங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தனிநபரின் கண்ணியத்தை நிலைநிறுத்த வேண்டும். மேலும், நீதிமன்றங்களால் நினைவூட்டப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ தேவையில்லாமல் ஒவ்வொரு நபரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்..



Original article:

Share: