நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம்: வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியம் -ராஜீவ் குமார்

 இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வெற்றியானது, இரட்டைப் பதிவுகளை நீக்கி, ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்வதையும், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது.


அரசியல் கட்சிகளிடமிருந்தும் இறுதியில் உச்சநீதிமன்றத்திலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) பயிற்சி நடந்து முடிந்தபிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் இப்போது நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இது சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என குறிப்பிடப்படுகிறது. இந்த முறையானது மக்களுக்கு ஏற்ற மற்றும் நடைமுறை ரீதியாக வலுவான முயற்சியாகக் கருதப்படுகிறது.


ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர் பதிவுகளுடன், டிஜிட்டல் அணுகுமுறை என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் முக்கியமானதுமாகும். வாக்காளர் பட்டியல் இனி ஒரு நிலையான, மாநில வாரியான பதிவாக இல்லாமல் இது இந்தியாவின் தேர்தல்களின் நேர்மையை துல்லியமாக வரையறுக்கும் தேசிய தரவுத்தளமாகும். இருப்பினும், நீதிமன்றங்கள் கவனமாக இருந்தாலும், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.


வீடுகளை மாற்றும் எண்ணற்ற குடிமக்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினை, மோசடி பற்றியது அல்ல, மாறாக அமைப்பின் நடைமுறைத் தவறுகளைப் பற்றியது. பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர் உள்ள ஒரு வாக்காளரான பிரசாந்த் கிஷோர் சம்பந்தப்பட்ட சமீபத்திய வழக்கு, இந்தக் குறைபாட்டை விளக்குகிறது. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவீர திருத்தம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இத்தகைய இரட்டைப் பதிவு விவகாரம் பீகாரில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த வாக்காளரும் வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கத்தை தோற்கடிக்கிறது. இது செயல்முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.


போலியான பதிவுகளை நிர்வகித்தல்


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act (RP)), 1950-ன் கீழ், போலியான பதிவுகள் (duplicate entries) தொழில்நுட்பரீதியாக ஒரு மீறலாக அமைகின்றன. இருப்பினும், அத்தகைய குறைபாடுகள் அரிதாகவே நிகழ்கின்றன. சட்டத்தை மதிக்கும் பல குடிமக்கள், வெறுமனே வசிப்பிடத்தை மாற்றுவதன் மூலம், தற்செயலாக தங்கள் தவறு எதுவும் இல்லாமல் இந்தச் சட்டத்தை மீறியவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என்பது வலுவானதாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்ற தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் ஒரு முறையான, தொழில்நுட்பம் சார்ந்த திருத்த வழிமுறையின் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது.


வாக்காளர் பட்டியல்களின் உண்மைத்தன்மையைப் பராமரிப்பதற்கும், போலிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் 1950-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சட்டம், விதிமுறையை வகுத்துள்ளது. சட்டப்பிரிவு 22(b)-ன் கீழ், ஒரு வாக்காளர் அதே தொகுதிக்குள் வசிக்கும் இடத்தை மாற்றினால், தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer (ERO)) அந்தப் பதிவை பட்டியலின் பொருத்தமான பகுதிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாக்காளர் வேறு தொகுதிக்குச் செல்லும்போது, ​​பிரிவு 23(2)-ன்  புதிய பட்டியலில் சேர்ப்பதை நிர்வகிக்கிறது. விண்ணப்பதாரர் பதிவு செய்ய உரிமை உள்ளவர் என்று தேர்தல் பதிவு அதிகாரி திருப்தி அடைந்தால், புதிய பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயரைச் சேர்க்க உத்தரவிடவேண்டும் என்று அது கட்டளையிடுகிறது. விண்ணப்பதாரர் ஏற்கனவே மற்றொரு தொகுதியின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரி அந்தத் தொகுதியின் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர், அவர் அந்த பட்டியலிலிருந்து விண்ணப்பதாரரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவு வழிமுறைகளைக்  கூறுகிறது.


ஒவ்வொரு வாக்காளரின் பதிவின் தனித்தன்மையை உறுதிப்படுத்த, பிரிவுகள் 17 மற்றும் 18-ம் பல பதிவுகளை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. எந்த நபரும் ஒன்றுக்கும் மேற்பட்டத் தொகுதியில் பட்டியலிடப்படக்கூடாது. அதே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்யப்படக்கூடாது. இந்த விதிமீறல்கள் தேர்தல் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படும். பெரும்பாலும், வாக்காளர் புதிய வசிப்பிடத்தில் பெயரைச் சேர்க்கும்போது, முந்தைய இடத்தில் உள்ள பெயரை ஒரே நேரத்தில் நீக்காமல் விடுவதால், இம்மாதிரியான போலிப் பதிவுகள் ஏற்படுகின்றன.


சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சட்டம் தேர்தல் பதிவு அதிகாரிகள்மீது முதன்மைப் பொறுப்பை வைக்கிறது. பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை துல்லியமாகவும், உடனடியாகவும், ஒரே நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தச் செயல்முறை போலிப்  பதிவுகளைத் தடுப்பதற்கும், தேசிய தேர்தல் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது


படிவம் 8-ல் வசிப்பிட மாற்றம் மற்றும் வாக்காளர் விவரங்களைத் திருத்துவது தொடர்பான மேற்கண்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் படிவம் பதிவுகளை மாற்றுதல் அல்லது திருத்துதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முகவரி மாற்றக் கோரிக்கை நான்கு வகைகளின் கீழ் வரலாம்: 


(I) தொகுதி அல்லது வாக்குச் சாவடியில் மாற்றம் இல்லை.

(II) தொகுதியில் மாற்றம் இல்லை, ஆனால் வாக்குச் சாவடியில் மாற்றம்.

(III) ஒரே மாநிலத்திற்குள் தொகுதியில் மாற்றம்.

(IV) தொகுதி மற்றும் மாநிலம் இரண்டிலும் மாற்றம். 


இரட்டைப் பதிவுகளுக்கான மிகவும் பொதுவான காரணம், ஒரு வாக்காளர் வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த வகை IV  நிகழ்வுகளில்தான் எழுகிறது. புதிய பதிவு அதே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது புதிய ஒன்றை உருவாக்கலாம். உதாரணமாக, பீகார் வாக்காளரின் (பிரசாந்த் கிஷோர்) இரட்டைப் பதிவு வெவ்வேறு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்டிருந்தன. அதேசமயம், இரண்டு பதிவுகளும் ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைப் பகிர்ந்து கொண்ட பல நிகழ்வுகளையும் ஆசிரியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.  


இதுபோன்ற சூழ்நிலைகளில், பழைய பதிவை நீக்கத் தவறியதற்கு  தேர்தல் பதிவு அதிகாரியே முழுப்பொறுப்பு என்று கூறப்படுகிறது. தேசிய வாக்காளர் பட்டியலில் போலிப் பதிவுகள் இருப்பதைத் தடுக்க அவர்களின் உடனடி ஒருங்கிணைப்பு அவசியம். மற்றொரு போலிப் பதிவு ஏற்படுவதற்கான காரணம், வாக்காளர் வேறு இடத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்காமல், புதிய சேர்க்கைக்கான படிவத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. ஒரு தவறான அறிவிப்பு சட்ட மீறலாகும், மேலும் சரிபார்ப்புக்கு பொறுப்பான வாக்காளர் மற்றும் அதிகாரிகள் இருவரும் இங்குப் பொறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


செயல்முறையை விளக்குதல் 


இந்தியாவின் வாக்காளர் பட்டியலின் முதுகெலும்பு என்று தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பு (Election Commission Internet Network (ECINet)) அறியப்படுகிறது. இது புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கும் நாடு தழுவிய முழுமையான டிஜிட்டல் அமைப்பாகும். ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர்களின் பதிவுகளுடன், ECINet என்பது உலகின் மிகப்பெரிய நிலையற்ற தரவுத்தளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு தனித்துவமான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணால் அடையாளம் காணப்படுகின்றனர். இது ஒரு நபருக்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பதிவு மட்டுமே இருக்கும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) போலிப் பதிவுகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்குகிறது. மேலும், முழுக் கண்காணிப்புக்காக வாக்காளரின் புதுப்பிப்பு வரலாற்றையும் சேர்க்கும் வகையில் இதை விரிவுபடுத்த வேண்டும்.


போலிப் பதிவுகளைத் திறம்படக் கண்டறிய உதவும் வலுவான தேடல் மற்றும் சரிபார்ப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (Application Programming Interface (API)) உருவாக்கியதற்காக தேர்தல் ஆணையத்தையும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தையும் பாராட்ட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். எந்தவொரு இரட்டைப் பதிவும் சரிபார்ப்பின்போது மதிப்பாய்வு மற்றும் நீக்குதலுக்கான எச்சரிக்கையைத் தரவேண்டும். அத்தகைய கருவிகள் கிடைப்பதன் மூலம் போலிப் பதிவுகள் உள்ளீடிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி காகித அடிப்படையிலோ அல்லது காகிதமில்லாததாகவோ இருந்தாலும், உண்மையான சவால் என்பது தரவுத்தளத்தின் துல்லியத்திலும் நிர்வாகத்தின் விரைவான பதிலிலும் உள்ளது. டிஜிட்டல் அமைப்பில், போலிப் பதிவுகளைக் கண்டறிதலும் நீக்குதலும் உடனடியாக நடக்க வேண்டும். 


இறுதியில், நகல் உள்ளீடுகளின் பெரும்பாலான வழக்குகள், ஒரே அல்லது வேறுபட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பழைய பதிவுகளை நீக்கத் தவறியதால் ஏற்படுகின்றன. இந்த தொடர்ச்சியான சிக்கல், தொழில்நுட்பக் குறைபாட்டை பிரதிபலிக்கவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடு — தேர்தல் இயந்திரத்திற்குள் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாததால் ஏற்படும் தோல்வி.


முன்னோக்கி செல்லும் வழி


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 என்பது மற்றொரு அதிகாரத்துவ சடங்காக மாறிவிடக்கூடாது. இந்தியாவால், நடைமுறை செயலற்ற தன்மையில் மூழ்கிய மற்றொரு பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைவெளிகள் நிர்வாக ரீதியானவையே தவிர தொழில்நுட்ப ரீதியானவை அல்ல. தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) ஏற்கனவே அதீத திறனைக் கொண்டுள்ளது. மேலும், சரிபார்ப்புக்கென்று  நம்பகமான, அகில இந்திய தரவுத்தளமாகிய ஆதார் தகவல்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது  மேம்படுத்தப்பட வேண்டும்.


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 தொடங்குவதற்கு முன், தேர்தல் தரவுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், தேவைப்படும் மற்றும் போலிப் பதிவுகள்  குறிக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்படவேண்டும். தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாட்டால், இது ஒரு நம்பிக்கைப் புரட்சியாக மாற முடியும். வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்படும் ஒரு புரட்சி என்று அறியப்படுகிறது. மென்பொருள் தலைமையிலான சரிபார்ப்பு, டிஜிட்டல் தணிக்கை பாதைகள் மற்றும் நிகழ்நேர திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் தீர்க்கமாக மாற வேண்டும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது  (Election Commission Internet Network (ECINet)) ஒரு நம்பகமான பொதுப் பயன்பாடாகச் செயல்படவேண்டும். உள்ளுணர்வு கொண்டதாக, குறைபாடுகள் இல்லாத மற்றும் பதிலளிக்கக்கூடியதாக அமைய வேண்டும். நீண்ட வரிசைகள் மற்றும் பதிலளிக்கப்படாத புகார்களுக்குப் பதிலாக  நிகழ்நேர பிரச்சனைகளுக்கான தீர்வு வழிமுறைகள் தேவை என்பன போன்ற கோரிக்கைகள்  வலியுறுத்தப்படுகின்றன.


ஒரு வெளிப்படையான, சுய-திருத்தப் பின்னூட்ட அமைப்பு செயல்பாட்டில் இருக்கும்போது, எதிர்கால வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தங்கள் தேவையற்றவையாகிவிடும். வாக்காளர் பட்டியல்கள் எப்போதும் துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ‘வெறும் சடங்காக சரிபார்த்தல்’ என்பதிலிருந்து ‘வடிவமைப்பு மூலம் சரிபார்த்தல்’  என்ற நிலை நோக்கி நகர முடியும்.


ராஜீவ் குமார், IIT Kharagpur, IIT Kanpur, BITS Pilani, and JNU-வின் முன்னாள் கணினி அறிவியல் பேராசிரியரும், DRDO மற்றும் DSTயின் முன்னாள் விஞ்ஞானியுமாவார்.



Original article:

Share:

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, வாழ்வாதாரங்கள் பறிபோயின -சுஷாந்த மஹாபத்ரா

 ஒடிசாவின் உண்மையான சவால் புயலுக்குப் பிறகு தொடங்குகிறது.


அக்டோபர் 28, 2025 அன்று மோந்தா புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியபோது, ​​ஒடிசா மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் வயல்வெளிகளைச்  சேதமாக்கியது, கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது, ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தப் புயல், பழக்கமான ஒரு கொடூர வடிவத்தை மீண்டும் காட்டியது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. தெற்கு ஒடிசாவின் கஞ்சம், ராயகடா மற்றும் கோராபுட் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் வழியாக நுழைந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகப் பலவீனமடைந்தது.


ஆரம்பகட்ட அறிக்கைகள் மூலம் இப்பகுதி முழுவதும் பயிர் மற்றும் தோட்டக்கலைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கானோரை உடனடியாக வெளியேற்றிய ஒடிசாவின் துரித நடவடிக்கை அம்மாநிலத்தின் தயார்நிலையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ஆனால், இப்போது புயலுக்குப் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பெரிய சவால் ​​ஒடிசா அரசின் முன்னால் உள்ளது.

 

வெப்பமண்டல புயல்களால் ஒடிசா மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் கட்டமைப்பு ரீதியானது. அதன் 575 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை, உலகின் அதிக புயல் தாக்கும் ஆறு பகுதிகளில் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டில், கிட்டத்தட்ட 260 புயல்கள் மாநிலத்தைத் தாக்கியுள்ளன. 1999-ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சூப்பர் புயலிலிருந்து 2013-ல் பைலின் (Phailin), 2018-ல் டிட்லி (Titli), 2019-ஆம் ஆண்டில் ஃபானி (Fani) மற்றும் 2021-ஆம் ஆண்டில் யாஸ் (Yaas) புயல் வரை ஒடிசாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன


ஃபைலின் புயலால் மட்டும் கிட்டத்தட்ட ₹9,000 கோடி மதிப்பிலான  இழப்புகளை ஏற்பட்டது. இதில் கால்நடைகள் மற்றும் விவசாயம் மூலம் கால் பங்கிற்கும் (நான்கில் ஒரு பங்கிற்கும்) அதிகமான இழப்பு ஏற்பட்டது. இறப்புகளைக் கணக்கிடுவது மட்டும் இந்தப் பேரழிவுகளின் பெரிய மற்றும் நீடித்த செலவுகளைத் தவறவிடுகிறது.


உடனடிப் பொருளாதார அதிர்ச்சி விரைவானது மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. மொந்தா புயலினால் ஏற்பட்ட அழிவு என்பது விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடுமையான வருமான இழப்புகள், வர்த்தகர்களுக்கு பணப்புழக்க நெருக்கடிகள் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் விநியோகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஃபானி புயலுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) தலைமையிலான மதிப்பீட்டின்படி விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்வளத்திற்கு சுமார் ₹3,000 கோடி அளவிற்குச் சேதம் ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட ஏழுகோடி கிராமப்புற வேலை நாட்கள் இழப்பால் சுமார் ₹2,700 கோடி மதிப்பிலான ஊதிய இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புயல் ஓய்ந்த பிறகும் பொருளாதார வலி நீண்டகாலம் நீடிக்கிறது. விவசாயிகள் இன்னும் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும், விதைகள் மற்றும் உரங்களை வாங்க வேண்டும், அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன்பு நீர்ப்பாசனத்தை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்கள் காப்பீட்டு உரிமைகோரல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே வலைகள், படகுகள் மற்றும் குளிர்ப்பதன பெட்டிகளை (iceboxes) மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 


இந்த வெளிப்படையான விளைவுகளுக்கு அப்பால், இரண்டாம் நிலை மந்தநிலை பெரும்பாலும் அதிக அழிவை உண்டாக்குகிறது. புயல் பாதித்த மாவட்டங்களில், முறைசாரா வணிகங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதும் கடினமாகிறது. பொதுச் செலவுகள் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து மறுகட்டமைப்புக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால்,  சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் முன்னேற்றம் தாமதமாகிறது. பெரிய புயல்களால் ஒடிசா மாநிலம் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் பல சதவீத புள்ளிகள் சரிவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.


கடந்த இருபது ஆண்டுகளாக, ஒடிசா பேரிடர் மேலாண்மையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Odisha State Disaster Management Authority (OSDMA)) புயல் முகாம்களை விரிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கை வழங்கும் அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது மற்றும் பெருமளவிலான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுவனமயமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை : 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட சூப்பர்-புயலால் கிட்டத்தட்ட 10,000 பேர் பலியானார்கள்; ஃபைலின் புயலின்போது பலி எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்தது; மற்றும் 2021-ஆம் ஆண்டு யாஸ் புயலின்போது இரண்டு பேர் மட்டுமே இறந்தனர். இருப்பினும், உயிர்களைக் காப்பதில் அடைந்துள்ள இந்த முன்னேற்றம் மக்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் பிரதிபலிக்கவில்லை. மறுசீரமைப்பு இன்னும் சாலைகள், வீட்டுவசதி மற்றும் மின்சாரம் போன்ற புலப்படும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


சுற்றுச்சூழல் அழுத்தங்கள் நெருக்கடியை ஆழப்படுத்துகின்றன. உவர்நீர் ஊடுருவலும் அலைகளும் வளமான மண்ணையும் ஈரநிலங்களையும் தரமிறக்கி, சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் இயற்கை வளங்களை அரிக்கின்றன. கடல் மட்டம் உயருதல் உப்புத்தன்மை கொண்ட வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் விவசாயிகளை குறைந்த லாபகரமான பயிர்கள் அல்லது இடம்பெயர்வை நோக்கித் தள்ளுகிறது. பள்ளிப்படிப்பு சீர்குலைவு, குடும்பப் பிரிவினை மற்றும் கிராமப்புற சமூகங்களை பலவீனப்படுத்துதல் போன்ற சமூகச் செலவுகளை  இந்த மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. 


ஒடிசாவின் அடுத்தகட்ட மீட்சியானது, உயிர்களுடன் சேர்ந்து வாழ்வாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயிர் மற்றும் மீன்வளக் காப்பீட்டிற்கு விரைவான, எளிமையான கோரிக்கைகள் தேவைப்படுகிறது. இதன்மூலம் வேளாண்மக்கள் விரைவாக மீண்டும் பயிரிடவோ அல்லது மறுகட்டமைக்கவோ முடியும். அவசரகால கடன் மற்றும் குறுகிய கால கடன் தவணை ஒத்திவைப்புகள் (loan moratoria) அவர்கள் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க உதவும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) நீட்டித்து, கரைகள் மற்றும் குளங்களை மறுகட்டமைப்பதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இயற்கை சார்ந்த பாதுகாப்பும் முக்கியமானது. சதுப்புநிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் அலைத்தடுப்பு அமைப்புகள் அலை ஆற்றலை 90% வரை குறைத்து, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகின்றன. ஒடிசாவில் ஐ.நா ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சதுப்புநில மறுசீரமைப்பு பருவநிலை-சார்ந்த மீன்வளர்ப்பு, சேற்று-நண்டு வளர்ப்பு முதல் அரிசி உற்பத்தியை அதிகரிப்பது போன்ற திட்டங்கள், தகவமைப்பு எவ்வாறு வருமானத்தை நிலைநிறுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. 


நிதி அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவசரகால நிதி, பிராந்திய காப்பீட்டுத் தொகுப்புகள், நெகிழ்வான மத்திய இடமாற்றங்கள் மற்றும் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் கலவையானது, வளங்களை நேரடியாகச் சிறு விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்குச் செலுத்த வேண்டும் என்பது போன்ற பொருளாதார ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

 

ஆசிரியர், (Institute of Chartered Financial Analysts of India (ICFAI)) சமூக அறிவியல் பள்ளி, உயர் கல்விக்கான அறக்கட்டளை அமைப்பில் பொருளாதாரம் கற்பித்து வருகிறார்.



Original article:

Share:

இந்தியாவின் காடுகள் எதிர்காலத்தை தாங்கிப் பிடிக்கின்றன -சி.கே. மிஸ்ரா, சூர்யபிரபா சதாசிவன்

 இந்தியாவின் காடு வளர்ப்பு வரலாறு நீண்டகாலமாக மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அவை சமூக பங்கேற்பு (community involvement), சுற்றுச்சூழல் வடிவமைப்பு (ecological design) மற்றும் நிதி (financing) ஆகும்.


பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த இந்தியா முயற்சிக்கும்போது, ​​காலநிலை விவாதங்களில் காடுகள் (forests) மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. பசுமை இந்தியா திட்டத்திற்கான (Green India Mission (GIM)) புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் மறுசீரமைப்பை ஒரு முக்கிய இலக்காக எடுத்துக்காட்டுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் 25 மில்லியன் ஹெக்டேர் சிதைவடைந்த காடுகள் மற்றும் காடுகள் அல்லாத நிலங்களை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


இந்த முயற்சி மரங்களை நடுவது அல்லது நிலத்தை பசுமையாக்குவது மட்டுமல்ல. 2030 ஆம் ஆண்டுக்குள் 3.39 பில்லியன் டன் CO₂ க்கு சமமான கூடுதல் கார்பன் மூழ்கியை உருவாக்கும் இந்தியாவின் காலநிலை இலக்குடன் இது நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா எவ்வளவு நிலத்தை மீட்டெடுக்கிறது என்பது மட்டுமல்ல, அதை எவ்வாறு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.


தரமான கேள்வி


IIT பம்பாய் மற்றும் BITS பிலானியுடன் இணைந்து IIT காரக்பூர் நடத்திய 2025-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா முழுவதும் உள்ள அடர்ந்த காடுகளின் ஒளிச்சேர்க்கை திறன் 12% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம்? அதிகரித்துவரும் வெப்பநிலை மற்றும் வறண்ட மண் ஆகும். எளிமையாகச் சொன்னால், இந்தியா தனது காடுகளின் பரப்பை அதிகரித்து வந்தாலும், இந்த காடுகள் கார்பனை உறிஞ்சுவதில் குறைவான செயல்திறன் கொண்டதாக மாறி வருகின்றன. இந்த ஆய்வு "இந்தக் கண்டுபிடிப்பு, அதிக மரங்களை நடுவதால் தானாகவே கார்பன் சேமிப்பு அதிகரிக்கும்" (more trees equal more carbon sinks) என்ற பழைய நம்பிக்கையை சிதைக்கிறது. மேலும், காடுகள் மறுசீரமைப்பு, அதிக விதானப் பரப்பைச் சேர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுற்றுச்சூழல் மீள்தன்மையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


புதுப்பிக்கப்பட்ட பசுமை இந்தியா திட்டம் (GIM) முந்தைய முயற்சிகளைத் தொடர்கிறது. 2015 மற்றும் 2021-க்கு இடையில், இந்த திட்டம் 11.22 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் காடு வளர்ப்பை ஆதரித்தது. இந்த நேரத்தில் 18 மாநிலங்களுக்கு ₹575 கோடி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2015-ல் 24.16% -லிருந்து 2023-ல் 25.17% ஆக அதிகரித்தது.


புதிய திட்டம் ஒரு பரந்த அணுகுமுறையை எடுக்கிறது. இது ஆரவல்லி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் இமயமலை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் போன்ற பல்லுயிர் நிறைந்த பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. தேசிய வேளாண் வனவியல் கொள்கை (National Agroforestry Policy), நீர்நிலை முன்முயற்சிகள் (watershed initiatives) மற்றும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) போன்ற பிற அரசு திட்டங்களுடன் முயற்சிகளை இணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், பல பெரிய அளவிலான பணிகளைப் போலவே, உண்மையான சவாலானது கொள்கையை செயல்படுத்துவதாகும்.


இந்தியாவின் காடு வளர்ப்பு வரலாறு நீண்ட காலமாக மூன்று தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அவை, சமூகப் பங்கேற்பு, சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் நிதி ஆகும்.


கிட்டத்தட்ட 200 மில்லியன் இந்தியர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக  காடுகளை நம்பியுள்ளனர். வன உரிமைகள் சட்டம்-2006 (Forest Rights Act) அவர்களின் நிலப்பரப்புகளை நிர்வகிக்கவும், பாதுகாக்கவும் சட்டப்பூர்வமாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் உண்மையில், பல தோட்டக்கலை திட்டங்கள் இந்த சமூகங்களை புறக்கணிக்கின்றன. அவர்களின் சம்மதமும் கூற்றுக்களும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது மற்றும் சட்ட மற்றும் சமூக ஏற்றுக்கொள்ளலைக் குறைக்கிறது. இருப்பினும், சில நேர்மறையான உதாரணங்கள் உள்ளன. ஒடிசாவில், கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் (Joint Forest Management Committees) வன வருவாயைத் திட்டமிடுவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் ஈடுபட்டுள்ளன. சத்தீஸ்கரில், வனத்துறைகள் பல்லுயிர் உணர்திறன் கொண்ட தோட்டங்களை பரிசோதித்து வருகின்றன. மேலும், மஹுவா மரங்களை நட்டு, பழங்குடியினரின் வாழ்வாதாரத்துடன் சுற்றுச்சூழலை சீரமைத்து, தரிசாக கால்நடை தங்குமிடங்களை மீண்டும் உருவாக்குகின்றன.


பூர்வீகமாக மாறுதல்


பல ஆண்டுகளாக, காடு வளர்ப்பு முயற்சிகள் யூகலிப்டஸ் அல்லது அகாசியா போன்ற ஒற்றை வகை மரங்களை நடுவதில் கவனம் செலுத்தின. இந்த மரங்கள் விரைவாக வளரும் ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். அவை நிலத்தடி நீரைக் குறைக்கின்றன, பூர்வீக பல்லுயிரியலைக் குறைக்கின்றன மற்றும் காலநிலை மாற்றத்தால் காடுகளை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகின்றன. பசுமை இந்தியா திட்டத்தின் (GIM) புதிய பதிப்பு பூர்வீக மற்றும் இருப்பிடம் சார்ந்த உயிரினங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.


இருப்பினும்,உள்ளூர் வனத்துறைகள் சிறப்பாக செயல்பட போதுமான திறன்களையும் திறனையும் கொண்டுள்ளனவா என்பதுதான் உண்மையான சவால். இந்தியாவில் ஏற்கனவே உத்தரகண்ட் (Uttarakhand), கோயம்புத்தூர் (Coimbatore) மற்றும் பைர்னிஹாட்டில் (Byrnihat) பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் முன்னணி ஊழியர்களுக்கு சுற்றுச்சூழல் அறிவில் பயிற்சி அளிக்க முடியும். சில மாநிலங்கள் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்துள்ளன. உதாரணமாக, தமிழ்நாடு, மூன்று ஆண்டுகளில் அதன் சதுப்புநிலப் பரப்பை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த முயற்சி கார்பனைச் சேமித்து கடற்கரைகளைப் பாதுகாப்பதில் உதவுகிறது.

ஒருவேளை மிகப்பெரிய தடையாக இருப்பது நிதியாகும். இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) நிதியில் தற்போது சுமார் ₹95,000 கோடியைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் பயன்பாடு சீரற்றதாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி, 2019 மற்றும் 2024-க்கு இடையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் 23% மட்டுமே செலவிட்டது. பசுமை இந்தியா திட்டம் (GIM) வரையறுக்கப்பட்ட நிதியையும் எதிர்கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தைச் (CAMPA) சார்ந்துள்ளது.


முன்னோக்கிச் செல்வதற்கான வழி அதிக பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அதைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது பற்றியது. சில மாநிலங்கள் புதிய நிதி முறைகளை முயற்சித்து வருகின்றன. தீ அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் கார்பன் வரவுகளை உருவாக்க இமாச்சலப் பிரதேசம் ஒரு உயிரிகரிம திட்டத்தைத் (biochar programme) தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம் இந்த ஆண்டு 39 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது. மேலும், கிராம சபைகளை கார்பன் சந்தைகளுடன் எவ்வாறு இணைப்பது என்பதை ஆராய்ந்து வருகிறது.


கட்டுமானத் தொகுதிகள்


பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா முக்கியமான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இது வலுவான சட்டக் கட்டமைப்புகள், கணிசமான நிதி திரட்டல்கள், நிறுவனத் திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளூர் மாதிரிகளைக் கொண்டுள்ளது. இதில் இல்லாதது சரியான ஒருங்கிணைப்பு.


உள்ளூர் சமூகங்களுக்கு தலைமை தாங்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வனத்துறைகள் தோட்ட இலக்குகளை மட்டும் அடைவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். பொது தரவுத்தளங்களை (public dashboards) உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முடியும். இந்தத் தரவுத்தளங்கள், தோட்டங்களின் உயிர்வாழ்வு விகிதங்கள், நடப்பட்ட உயிரினங்களின் வகைகள், நிதிப் பயன்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றிய தரவைக் காட்ட வேண்டும். மரங்களை நடுவதற்கு அப்பால் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA) அதன் பங்கை விரிவுபடுத்த வேண்டும். இதில் பங்கேற்பு திட்டமிடல் மற்றும் நெகிழ்வான மேலாண்மை முறைகள் இருக்க வேண்டும். சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளன. அவர்கள் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் சமூகங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் கருவிகளை உருவாக்க முடியும். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே பசுமை இந்தியா திட்டத்தை (GIM) ஒரு அரசாங்கத் திட்டத்திலிருந்து உண்மையான தேசிய இயக்கமாக மாற்ற முடியும்.


வளர்ந்த இந்தியா 2047-ஐ நோக்கிப் பார்க்கும்போது, ​​காடுகள் வெறும் சுற்றுச்சூழல் கவலை மட்டுமல்ல; அவை எதிர்காலத் மூலதனத்தின் ஒரு வடிவம். 25 மில்லியன் ஹெக்டேர் வன நிலத்தை மீட்டெடுப்பது எளிதானதாக இருக்காது. இருப்பினும், உறுதிப்பாடு, உள்ளடக்கம் மற்றும் தெளிவானத் திட்டமிடல் மூலம், இந்த முயற்சி உலகம் வன மறுசீரமைப்பைப் பார்க்கும் விதத்தை மாற்றும்.


சி.கே. மிஸ்ரா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் செயலர்; சூர்யபிரபா சதாசிவன், சேஸ் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்.



Original article:

Share:

கூட்டு விளைவு : டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து . . .

 தென்கிழக்கு ஆசிய மோசடி தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைந்த பதிலடி தேவை


டிஜிட்டல் மோசடிகளின் (digital scams) பெருகிவரும் அச்சுறுத்தல் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அழைப்பு, இந்திய குடிமக்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது. மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் பறிக்கும் 'டிஜிட்டல் கைது' (digital arrest) மோசடி வழக்குகளுக்கு நீதிமன்றம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இது நடவடிக்கைகளின் நுட்பத்தையும், துணிச்சலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தற்போதைய டிஜிட்டல் மோசடியின் தீவிரமானது வழக்கமான இணையவழி குற்றத்திலிருந்து (cybercrime) வேறுபடுத்துவது, அதன் தொழில்துறை அளவு மற்றும் எல்லை தாண்டிய கட்டமைப்பு ஆகும். தென்கிழக்கு ஆசியா முழுவதும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், குறிப்பாக மியான்மரில், மாநிலக் கட்டுப்பாடு குறைவாக உள்ளது மற்றும் கவலையளிக்கும் வகையில், ஆட்சியானது சிக்கல் நிறைந்ததாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நவீன அடிமைத்தன வலையமைப்பின் செயல்பாட்டு முறை பயங்கரமானது. அதிக சம்பளம் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் போலி வேலை விளம்பரங்கள் மூலம் மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த சலுகைகளில் பல விசா இல்லாத பயணக் கொள்கைகளைப் (visa-free travel policies) பயன்படுத்தி பாங்காக் (Bangkok) வழியாக அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, அவர்கள் எல்லைகளைத் தாண்டி, முதன்மையாக இராணுவ ஆட்சிக்குழுவுடன் இணைந்த எல்லைக் காவல் படைகளால் கட்டுப்படுத்தப்படும் மியான்மரின் பகுதிகளுக்கு கடத்தப்படுகிறார்கள். இந்தப் பகுதிகள் டிஜிட்டல் அடிமைத்தன மையங்களாகச் செயல்படுகின்றன. அங்கு கடத்தப்பட்ட மக்கள், பெரும்பாலும் வன்முறை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை மூலம், சிக்கலான இணையவழி மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதன், முக்கிய மோசடிகளில் ஒன்று "பன்றி இறைச்சி கசாப்பு" (pig butchering) என்று அழைக்கப்படுகிறது. இது காதல் மோசடிகளை போலி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டங்களுடன் இணைக்கிறது. மியான்மரின் உள்நாட்டுப் போர் இந்த நடவடிக்கைகள் வளர ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. 2021-ல் நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் இனப் போராளிகளுக்கு (ethnic militias) அதிக அதிகாரத்தை அளித்தது. இப்போது எல்லைக் காவல் படைகள் என மறுபெயரிடப்பட்ட இந்த போராளிகள், மோசடி மையங்களை நடத்துவது தங்களுக்கு பெரும் லாபத்தைத் தரும் என்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க இந்த மையங்களிலிருந்து "வரிகளை" வசூலிக்கிறார்கள்.

இந்த மோசடிகளில் இருந்து சம்பாதிக்கப்படும் பணம் "ஆள்மாறாட்ட பண மோசடி" (mules) மற்றும் கம்போடியாவின் ஹுயோன் பே போன்ற சந்தேகத்திற்கிடமான நிதி நிறுவனங்கள் மூலம் மோசடி செய்யப்படுகிறது. பின்னர் அது கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுகிறது. இதனால் அதைக் கண்டுபிடிப்பது அல்லது மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் இந்த சர்வதேச வலையமைப்புகளை வழிநடத்துகின்றன என்பதை உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்தியா இரண்டு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்கள் கடத்தப்பட்டு கொடூரமான சூழ்நிலையில் மோசடி தொழிற்சாலைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இந்த கைதிகளால் நடத்தப்படும் மோசடிகளால் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பலநிலை உத்தி தேவை. இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் சேர்ந்து, இந்த மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்த வேண்டும். அவர்கள் இணையக்குற்றம் (cybercrime) உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பிராந்திய திட்டத்தை உருவாக்க இராஜதந்திர முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும். சீனா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு மற்றும் கம்போடியா அரசாங்கத்தின் மீது இந்த மோசடி நடவடிக்கைகளை நிறுத்த வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் இதில் ஈடுபட வேண்டும். இந்தப் பிரச்சினையை அவசர உலகளாவிய நடவடிக்கை தேவைப்படும் ஒரு நவீன அடிமைத்தன வடிவமாக அது அங்கீகரிக்க வேண்டும்.



Original article:

Share:

இந்தியாவில் காலநிலை தாங்குதிறனை எவ்வாறு வலுப்படுத்துவது? -அபினவ் ஜிந்தால், ஷ்வேதா ராய்

 புதுமையான நிதிக் கருவிகளும், அளவுரு தூண்டுதல்களை பயன்படுத்தும் காலநிலை இணைப்பு காப்பீடும் முக்கியமானவை.


2024ஆம் ஆண்டு இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டாக இருந்தது — தொழில்மயமாக்கல் காலத்துக்கு முன்பைவிட 1.55°C அதிகமான வெப்பநிலை இருந்தது. ஆபத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர்களைக் குறைக்கவும், ஐ.நா. பொதுச் சபை அக்டோபர் 13-ஆம் தேதியை சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு (reduce disasters) தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வெப்பநிலை உயர்வு, உயிர்கள், உணவு, நீர் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்கள் வேகமாகப் பெருகும் என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. தெளிவாக, காலநிலை நடவடிக்கை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், செயலற்றத் தன்மை இன்னும் விலை உயர்ந்தது மற்றும் பொது நிதியை பாதிப்படைய செய்யும். வாழ்வாதாரங்களை அழிக்கும் மற்றும் வளர்ச்சி முன்னேற்றங்களை நடுநிலையாக்கும் காலநிலை அதிர்ச்சிகளை அதிகரிக்கிறது. பிரேசில் 30-வது காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக, காலநிலை லட்சியத்தை அதிகரிப்பதோடு, நாடுகள் முன்னோடியில்லாத அளவிலும் வேகத்திலும் தகுதி ஏற்படுத்தல் மற்றும் காலநிலை நெகிழ்ச்சித்திறனுக்கான நிதி திரட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவிலும், காலநிலை தொடர்பான பேரிடர்கள் அவ்வப்போது நடக்கின்றன. 365 நாட்களில் 322 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில், இந்தியா உலகில் 3-வது மிகப்பெரிய எண்ணிக்கையிலான இயற்கை பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொண்டது. வெள்ளத்தைக் கொண்டுவரும் கனமழை மற்றும் அதிகரித்து வரும் வெப்ப அலைகள் தொழில் மையங்களை கடுமையாக தாக்குகின்றன. உற்பத்தியை நிறுத்துகின்றன, உள்கட்டமைப்பை பாதிக்கின்றன மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை அழிக்கின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இதுபோன்ற தொடர்ச்சியான பாதிப்புகள் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன. சுகாதார சேவைகளைப் பாதிக்கின்றன. கல்வியை சீர்குலைக்கின்றன மற்றும் கடன் சுழற்சிகளை அதிகரிக்கின்றன. இதுபோன்ற முன்னோடியில்லாத அளவிலான பேரழிவுகளை நிவர்த்தி செய்வதற்கு உடனடி மற்றும் புதுமையான தீர்வுகள் தேவை.


இந்தியப் பொருளாதாரம் இந்தக் காலநிலை தாக்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, நமது தகவமைப்பு கட்டமைப்புகளும் கொள்கைகளும் அதன் இடத்தில் இருக்க வேண்டும். இதற்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்தியா இந்தப் பிரச்சினையை மிகுந்த தீவிரத்துடனும் அவசரத்துடனும் அணுகுகிறது. இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குக்கான உறுதிப்பாடு, துறைகள் தோறும் முயற்சிகளாலும் திட்டங்களாலும் ஆதரிக்கப்படுகிறது, இதில் கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme - CCTS) போன்ற ஒழுங்குமுறை உந்துதல்கள், காலநிலை நிதி மீதான வரைவு வழிகாட்டுதல்கள், பாராமெட்ரிக் இன்சூரன்ஸ் போன்ற புதுமையான தன்மை அணுகுமுறைகள், பசுமை எஃகு தரநிலை வகைப்பாடு (green steel taxonomy) போன்ற துறைசார்ந்த தீர்வுகள், காலநிலை தாங்குதிறன் வாய்ந்த விவசாயம் மற்றும் பசுமை பத்திர வழிகாட்டுதல்கள் மற்றும் காலநிலை நிதி தரநிலை வகைப்பாடு (climate finance taxonomy) மூலம் தரநிலை அமைப்பை இறுக்குதல் ஆகியவை அடங்கும். இந்த முன்முயற்சிகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் சாதகமான சூழலை அடித்தளமாக அமைக்கின்றன.


புதுமையான நிதிக் கருவிகள்


மற்ற வளர்ந்து வரும் நாடுகளைப் போல, இந்தியா காலநிலை அபாயங்களை கட்டுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியையும் சமநிலையில் வைக்க முயற்சிக்கிறது. காலநிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், வெப்பஅலை, வெள்ளம், வறட்சி, புயல், கடல் நிலை உயர்வு போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க உதவும் நிதி இன்னும் ஆரம்பகட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எளிய மற்றும் விரைவான பணம் செலுத்துவதற்கான அளவுரு காப்பீடுகள்; காலநிலைக்கு ஏற்ற பயிர் மற்றும் கால்நடை பொருட்கள்; நம்பகமான அடையாள அட்டைகள் மூலம் அவசரகால ரொக்கப் பாதைகள்; சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (small and medium enterprises (SMEs)) சலுகை, ஆபத்துக்கு ஏற்ற கடன் கிடைக்கும் தன்மை மற்றும் குளிர்விக்கும் முறைகளில் முதலீடுகள், வானிலை தொடர்பான நிகழ்வுகள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலான பின்னடைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய பயனுள்ள நீர் மேலாண்மை ஆகியவை சில நம்பத்தகுந்த காலநிலை மீள்தன்மை அணுகுமுறைகளில் அடங்கும்.


உலகளவில் பயன்படுத்தப்படும் சில புதுமையான காலநிலை நெகிழ்ச்சி கருவிகளில் பின்வருவன அடங்கும்:


காலநிலை-தாங்குதிறன் கடன் உட்பிரிவுகள் (Climate-Resilient Debt Clauses (CRDCs)) பெரிய காலநிலை பேரிடர் ஏற்பட்டபோது ஒரு நாடு கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த அனுமதிக்கும். இது மீண்டும் மீண்டும் புயல் மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் Caribbean நாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.


பேரிடர் தாமதக் கடன் விருப்பங்கள் (Catastrophe Deferred Drawdown Options (Cat-DDOs)) அவசர காலங்களில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில், விரைவான பணத்தை வழங்குவதற்காக உடனடியாக நிதி வழங்கப்படுகிறது.


முன்னறிவிப்பு அடிப்படையிலான அல்லது எதிர்பார்ப்பு நிதியுதவி (Forecast-based or anticipatory financing) இது முன்-ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகள் முழுவதும் அறிவியல் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் காலநிலை பேரிடர்களின் எதிர்பார்ப்பின் பேரில் நிதிகளை வெளியிடுகிறது; செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இழப்பு மற்றும் சேதத்தைக் குறைக்க இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

காப்பீடு-இணைக்கப்பட்ட பத்திரங்கள் (Insurance-Linked Securities (ILS)) இவை காப்பீடு செய்யப்பட்ட பேரழிவு இழப்புகளைப் பொறுத்து நிறுவன லாபம் அல்லது வட்டி விகிதங்களைவிட அதன் வருமானம் சார்ந்துள்ள முதலீடுகளாகும். மிகவும் பொதுவான காப்பீடு-இணைக்கப்பட்ட பத்திரங்கள் என்பது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பேரிடர் பத்திரங்கள் ஆகும்.


ஒரு நம்பிக்கைக்குரிய கருவி


இந்தியா காலநிலை-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை (climate-linked insurance scheme) ஆராய்ந்து வருகிறது. இது அளவுரு தூண்டுதல்களைப் பயன்படுத்துகிறது, எ.கா., குறிப்பிட்ட மழைப்பொழிவு, வெப்பநிலை, பூகம்பத்தின் தீவிரம், காற்றின் வேகம் வரம்புகள் சில முன் பேரிடர் நடவடிக்கைகள் வரம்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரம்புகளை எட்டும்போது, ​​பணம் தானாகவே செலுத்தப்படும். இது அரசாங்க பேரிடர் நிதிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மக்களுக்கு விரைவாக உதவி கிடைக்கிறது. இந்த வகையான காப்பீடு இந்தியாவின் நாகாலாந்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மேலும், சில அமெரிக்க மாநிலங்கள், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற காலநிலைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியா வலுவான டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இதில் நேரடி நலன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) மில்லியன் கணக்கான பயனாளிகளுக்கு வெற்றிகரமாக வரவு வைக்கப்படுகின்றன, முன்னறிவிப்பு அடிப்படையிலான பண ஆதரவுத் திட்டங்களை செயல்பாட்டுரீதியாக சாத்தியமாக்குகின்றன. உண்மையில், இந்தியாவின் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டு செலுத்துதல்கள் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) திட்டத்தின்கீழ் நேரடி நலன் பரிமாற்றங்கள்  மூலம் அதிகளவில் பணம் அனுப்பப்படுகின்றன. இது பரந்த குழுவிற்கு அளவுரு காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வலுவான வாய்ப்பை  உருவாக்குகிறது.


குறிப்பிடத்தக்க வகையில், உருவாகிவரும் அளவுரு வெப்பத் திட்டங்கள் (emerging parametric heat programs) அதிகாரமற்ற பெண் தொழிலாளர்களுக்கான SEWA-ன் அதிகமான வெப்பத்தால் ஏற்படும் காப்பீடு, பயனாளிகளுக்கு நேரடி வருமான ஆதரவுடன் தானியங்கி தூண்டுதல்களை இணைப்பதற்காக அல்லது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வழிகாட்டப்பட்ட இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்கள் (Heat Action Plans (HAPs)) ஆரம்ப எச்சரிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள், குளிர்வித்தல்/நீர் அணுகல் மற்றும் வெப்ப அலைகளுக்கு முன்பும் போதும் செயல்பாட்டு படிகள் நேரடி நலன் பரிமாற்றங்கள் வழியாக அமைப்பது இந்தியாவில் பயனுள்ள பாராமெட்ரிக் காப்பீட்டு திட்ட செயல்படுத்தலுக்கான தயார்நிலையின் செய்திகளாக இருக்கலாம்.


உலகளாவிய காலநிலை மீள்தன்மை கருவிகள் ஆரம்ப வழிகாட்டுதலை வழங்கக்கூடும் என்றாலும், இந்தியாவில் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப இவற்றை சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா நெகிழ்ச்சியான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு தகவமைப்பு நிதி இடைவெளியை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் மற்றவைகளை பாதுகாக்கும் நிதிக் கருவிகளும் தேவை. காலநிலை மீள்தன்மைக்கான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கி இந்தியா நகரும்போது, ​​காப்பீட்டு மற்றும் நிதி ஒழுங்குமுறை நிறுவனங்கள் காப்பீட்டு பாதுகாப்புகளைக் குறைப்பதிலும், மீட்பு நேரத்தையும் மையமாகக் கொண்டு படிப்படியாக கொள்கைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும், மீட்பு நேரத்தைக் குறைக்கும் அதே வேளையில் அரசாங்க கருவூலத்தின் மீதான சுமையையும் குறைக்கிறது.


கட்டமைப்புகளிலிருந்து நடவடிக்கைக்கு


இந்தியாவில் வலுவான காலநிலை சகிப்புத்தன்மை அமைப்பை உருவாக்குவது சவாலானது. பேரழிவுகள் மற்றும் இழப்புகள் பற்றிய போதுமான தரவு இல்லாதது, உதவிக்கான தெளிவற்ற தூண்டுதல்கள், அரசாங்க உதவி இல்லாமல் அதை மலிவு விலையில் மாற்றுவது, எச்சரிக்கைகள், உதவி தேவைப்படும் நபர்களின் பட்டியல்களை இணைப்பது மற்றும் காலநிலை நிகழ்வுகளின்போது தானாகவே விரைவான ஆதரவை வழங்க ஒற்றைக் கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI))  மற்றும் ஆதார்-இணைக்கப்பட்ட நேரடி நலன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) போன்ற கட்டண முறைகள் ஆகியவை சிக்கல்களில் அடங்கும்.


இருப்பினும், இவை அனைத்திற்கும் பெரிய அளவிலான திட்டமிடல், தொழில்நுட்பம், நோக்கம் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் தெளிவற்ற அவசியத்தைக் குறிப்பிட தேவையில்லை. தனியார் மூலதனமும் அரசாங்க கொள்கைகளுக்கு விருப்பத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும். அதே, நேரத்தில் ஒழுங்குமுறையாளர்கள் விரிவான எளிமைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும். 

காப்பீட்டுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் (பேரழிவு பத்திரங்கள்) ILS cat மற்றும் பாராமெட்ரிக் காலநிலை காப்பீட்டுக்கான சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் ((International Financial Services Centres Authority (IFSCA))) வரைவு கட்டமைப்பை நாடு முழுவதும் சோதனை முறையில் செயல்படுத்துவதன் மூலம், இந்தியா இந்த முனைகளில் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும். இங்கு முக்கிய வழிகாட்டும் சக்தியாக இருக்கக்கூடியது செயல்திறன் மற்றும் அவசரம்.


ஜிந்தால் ஒரு மூத்த ஆசிரியரும் ஆற்றல் பொருளாதார நிபுணரும் ஆவார், மற்றும் ராய் ஒரு முன்னணி வங்கியில் நிலைத்தன்மை மற்றும் காலநிலை ஆபத்து பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.



Original article:

Share:

அமெரிக்காவில் தானியங்கி வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண (EAD) நீட்டிப்புகள் முடிவுக்கு வந்ததால், இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படக்கூடிய தாக்கம். -விதீஷா குந்தமல்லா

 பணி அங்கீகாரம் காலாவதியான பிறகும் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற புலம்பெயர்ந்தோரை அனுமதித்த விதியை இந்த மாற்றம் ரத்து செய்கிறது. எந்த நுழைவனுமதி (விசா) பிரிவுகள் அதிகம் பாதிக்கப்படலாம், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


அமெரிக்காவில் சிறப்புத் தொழிலாளர்களுக்கான H-1B நுழைவனுமதி (விசா)  கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக பல வாரங்களுக்கு முன் உயர்த்தியது. இப்போது  டிரம்ப் தலைமையிலான நிர்வாகமானது, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents (EADs)) தானியங்கி நீட்டிப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.


அக்டோபர் 30 முதல், தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, புதுப்பித்தல் நிலுவையில் இருக்கும்போது, ​​இனி தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security (DHS)) கடந்த அக்டோபர் 29-ஆம் நாள் அறிவித்தது.


ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின்போது நிறுவப்பட்ட விதியானது புலம்பெயர்ந்தோர் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், காலாவதியான பிறகு 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் பழைய விதியை ரத்து செய்கிறது. இது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய நிபுணர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. 


அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் என்றால் என்ன?


அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, குடியுரிமை அல்லது தேசிய வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஊழியர்களும் நாட்டில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பணியமர்த்துவோர் உறுதிசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் (படிவம் I-766/EAD) வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்கும் வழியாகும்.


முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் (Employment Authorization Documents) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களைச் சரியான நேரத்தில் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்களுக்கு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் (US Citizenship and Immigration Services (USCIS)) செயலாக்க தாமதங்களை ஈடுசெய்யும் வகையில் அவர்களின் ஆவணங்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​540 நாட்கள் வரை பணி அங்கீகாரம் தானாகவே வழங்கப்பட்டது.


ஹூஸ்டனைச் சேர்ந்த குடியுரிமை வழக்கறிஞரான ராகுல் ரெட்டி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியது பின்வருமாறு, "உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகிவிட்டால், நீட்டிப்பு செயல்படுத்தப்படும்வரை நீங்கள் 180 நாட்கள் தொடர்ந்து பணியாற்றலாம். ஆனால், நீண்ட தாமதங்கள் காரணமாக, இது 540 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது." என்று கூறினார்.


புதிய விதிமுறை பல விசா வகைகளுக்குப் பொருந்தும், அவற்றில் H-4 (H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள்), L-2 (L-1 விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அல்லது அவர்களின் வெளிநாட்டு கிளையிலிருந்து அமெரிக்க நிறுவனத்தால் மாற்றப்பட்டவர்கள்), மற்றும் குடியேற்ற நிலையைச் சரிசெய்ய வேண்டிய சில விண்ணப்பதாரர்கள் (கிரீன் கார்டுகள்) ஆகிய விசா வகைகள் அடங்கும்


"இந்த விதி இரண்டு முக்கியப் பிரிவு மக்களை பாதிக்கிறது - ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள், தகுதி நிலைக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் H-4 விசா வைத்திருப்பவர்கள்" என்று வழக்கறிஞர் ரெட்டி கூறினார்.


வர்ஜீனியாவைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர் ராஜீவ் கன்னா மேலும் கூறுகையில், இந்தக் கொள்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த "H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் பாதுகாப்பை முற்றிலுமாக நீக்குகிறது". "மிகவும் பாதிக்கப்பட்ட H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு, பிரச்சனை என்னவென்றால், உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் போதெல்லாம், உங்கள் தகுதியும் காலாவதியாகிறது. இது உண்மையில் பலருக்கு உதவவில்லை. ஆனால் எங்களுக்கு கூடுதல் நேரம் கிடைத்தது என்ற நிம்மதியாவது இருந்தது. அதுவும் இப்போது போய்விட்டது." "இந்திய நாட்டினருக்கு, இது மிகவும் கடுமையானது," என்று கூறினார். "பெரும்பாலான பிற நாடுகளுக்கு, கிரீன் கார்டு வரிசை தற்போது உள்ளது. இந்தியர்கள் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர், எனவே இந்த 540 நாள் பாதுகாப்பு ஒரு முக்கியமான கால அவகாசமாக இருந்தது." என்று கருத்து தெரிவித்துள்ளார்


H-4 விசா வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் கொள்கை மாற்றம் பெரிய இடையூறுக்கு வழிவகுக்கும் என்று வழக்கறிஞர் கன்னா கூறினார். சரியான நேரத்தில் நீட்டிப்பு இல்லாமல், அவர்கள் வேலை செய்வதை நிறுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, ஒப்புதல் எப்போது வரும் என்று தெரியாததால், அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்பதை பணியமர்த்துவோர்களிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நிறுவனங்கள் அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்களை பணியமர்த்தும் என்று ரெட்டி கூறினார்.


இதனை ஒப்புக்கொண்ட கன்னா, “இந்திய H-4 மனைவிமார்களில் கணிசமான துணைப்பிரிவு உள்ளது. அவர்களுக்கு வேலை செய்யும் திறன் இல்லாவிட்டால், நிறைய திறமையும் கல்வியும் வீணாகின்றன. தாக்கம் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, ஒரு தொகுப்பு உளவியல் தாக்கமும் உள்ளது, ஆயிரம் வெட்டுகளால் ஏற்படும் மெதுவான மரணம் போன்றது.” என்று கூறினார்.

மாற்றத்திற்கான காரணம் என்ன?


ஒரு வெளிநாட்டவரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிப்பதற்கு முன்பு சரியான "சரிபார்ப்பை" உறுதி செய்ய தானியங்கி நீட்டிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது, ஆனால், பல வழக்கறிஞர்கள் இந்தக் கருத்தில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


"H-4 விசாவில் உள்ளவர்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவொரு பின்வாசல் வழியாகவும் அமெரிக்காவிற்குள் வரவில்லை. எனவே, எந்தவொரு உண்மையான சிக்கலைத் திருத்துவதற்கான முயற்சி என்பதைவிட, ஒரு சாக்குப்போக்காகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது" என்று கன்னா கூறினார். தேசியப் பாதுகாப்பை ஒரு கவலையாக மேற்கோள் காட்டுவது ஆதாரமற்றது என்று கூறினார். “வன்முறையில் ஈடுபடக்கூடியவர். "வன்முறையில் ஈடுபடக்கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகாரத்தைத் தடுக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். அது அபத்தமானது, ஏனென்றால் குற்றங்களைச் செய்ய மக்களுக்கு வேலை அனுமதி தேவையில்லை." என்றும் அவர் வாதிடுகிறார்.


இந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளுமா?


பொதுவாக, இந்த அளவிலான மாற்றங்களுக்குப் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக ஒரு அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம், 60 நாட்கள் ஆகும். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த செயல்முறையைத் தவிர்த்து, இதை "இடைக்கால இறுதி விதியாக" (Interim Final Rule) வெளியிட்டது.


"மாற்றப்பட வேண்டிய ஒவ்வொரு ஒழுங்குமுறையும் அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் காலத்தைக் கடந்து செல்ல வேண்டும்," என்று கன்னா கூறினார். "இந்த இடைக்கால இறுதி விதி அதை முற்றிலுமாகத் தவிர்க்கிறது, இல்லாத ஒரு அவசரநிலையை உருவாக்குகிறது. அவர்கள் அக்டோபர் 29 அன்று  இந்தத் திருத்த விதியை அறிவித்தனர். அடுத்த நாளிலிருந்து உங்களுக்கு இந்தப் பாதுகாப்பு இருக்காது என்று கூறினர். சட்டத்தின்படி நிர்வாகம் இப்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.


ரெட்டி இதை "தெளிவான நடைமுறை மீறல்" என்று அழைத்தார். மேலும், அவரது குழு நீதிமன்றத்தில் இந்த விதியை எதிர்த்து வாதம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். "அவர்கள் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் விண்ணப்பங்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு வேலை அங்கீகார ஆவணத்தை மதிப்பாய்வு செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு முன்பே  கூறியுள்ளது. அவர்களின் திறமையின்மை காரணமாக, இப்போது மாதங்கள் ஆகின்றன. எனவே, அவர்களின் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் தாமதமானால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின்மீது வழக்குத் தொடருமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஏனெனில், நீங்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், குடியேற்றத்துறை வழக்கமாக நீதிபதியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வழக்கை அவசரமாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. 


இது பரந்த குடியேற்றப் போக்குகளுக்கு எவ்வாறு பொருந்துகிறது?


டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் சித்தாந்தம் மற்றும் வாக்குறுதிகளுக்கு ஏற்ப, சட்ட மற்றும் சட்டவிரோத குடியேற்றம் இரண்டையும் கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண பின்வாங்கல் பார்க்கப்படுகிறது.


தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பே புதுப்பித்தல்களுக்கு விண்ணப்பிப்பதும், ஏற்படக்கூடிய வேலை இடையூறுகளுக்குத் தயாராக இருப்பதுமே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிறந்த நடவடிக்கையாக இருக்குமென்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், செயலாக்கத்தை விரைவுபடுத்த சிலர் வழக்குத் தொடர வேண்டியிருக்கலாம் என்றும்  ரெட்டி கூறினார்.



Original article:

Share:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.. -ரோஷ்னி யாதவ்

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) சமீபத்தில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-03 CMS-03 என்ற சக்திவாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த ஏவுதல் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான  சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது? இஸ்ரோவின் மூன்றாம் தலைமுறை ஏவுதல் வாகனக் குறி (Launch Vehicle Mark (LVM3)) என்ற ஏவுதள வாகனத்தில் செய்யப்பட்டுள்ள புதிய 'பாகுபலி' மேம்பாடுகள் என்னென்ன? 


ஏன் செய்திகளில்?


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (ISRO) LVM3-M5 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது. தற்போது இந்திய மண்ணிலிருந்து மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளது. இது இஸ்ரோவின் சீராக மேம்பட்டு வரும் திறன்களின் நிரூபணமாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


முக்கிய  அம்சங்கள் :


1. 4,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை (LVM3-M5) இந்திய மண்ணிலிருந்து தொலைதூரப் புவிநிலைச் சுற்றுப்பாதையில் (Distant Geosynchronous Transfer Orbit (GTO)) இஸ்ரோ முதன்முறையாக நிலைநிறுத்தியுள்ளது.


2. CMS-03 என்ற இந்தச் செயற்கைக்கோள், 4,410 கிலோ எடை கொண்ட, பல-அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite) ஆகும். இது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல் பகுதியிலும் சேவைகளை வழங்கும். இந்தச் செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்குச் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. GSAT-7R என்றும் அழைக்கப்படும் CMS-03 செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டு ஏரியன்-5 ராக்கெட்டில் ஏவப்பட்ட GSAT-7 செயற்கைக்கோளுக்கு மாற்றாக உள்ளது. இது அதன் ஆயுட்காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.


4. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக இந்திய கடற்படையின் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் எல்லை குறித்த விழிப்புணர்வு திறன்களை பகுப்பாய்வு செய்யும்.


5. GSAT-7R இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வலுவான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும்.  இந்தச் செயற்கைக்கோளில் பல தகவல் தொடர்பு அலைவரிசைகளின் வழியாக குரல், தரவு மற்றும் காணொளி இணைப்புகளை ஆதரிக்கும் திறன் கொண்ட கருவிகள் (transponders) உள்ளன. இந்தச் செயற்கைக்கோள் அதிகத் திறன் கொண்ட அலைவரிசையுடன் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படையின் கடல்சார் செயல்பாட்டு மையங்களுக்கு இடையே தடையற்ற மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தும், ”என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.


6. குறிப்பிடத்தக்க வகையில், இஸ்ரோ இதை விட கனமான செயற்கைக்கோளை ஏவியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட GSAT-11 5,800 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருந்தது. ஆனால், அதற்காக ஐரோப்பாவின் ஏரியன்-5 (Ariane-5) என்கிற விண்கலம் பயன்படுத்தப்பட்டது. 3,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள அதன் அனைத்து கனமான செயற்கைக்கோள்களையும் அனுப்புவதற்கு இஸ்ரோ ஐரோப்பிய நாட்டின் விண்காலத்தையே  நம்பியிருந்தது.


7. CMS-03 ஏவுதலின் மூலம், LVM3 ராக்கெட்டின் அதிக எடையைத் தூக்கிச் செல்லும் திறனை இஸ்ரோ நிரூபித்துள்ளது. எனவே, LVM3-M5 ஏவுதல் விண்வெளி திட்டங்களுக்கு வெளிநாட்டு சார்புநிலையைக் குறைப்பதற்கும் வரவிருக்கும் பணிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும். மேலும் சிக்கலான பணிகளைச் செயல்படுத்துவதில் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான  சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.


ஏவு வாகனம் மார்க்-3 (LVM3)


8. முன்னர் GSLV Mk-3 என அழைக்கப்பட்ட LVM3, இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த விண்கலம் ஆகும். இது 8,000 கிலோ வரை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கும், 4,000 கிலோ வரை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டது.


9. LVM3 திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரங்களின் கலவையைப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் OneWeb செயற்கைக்கோள்கள் போன்ற முக்கியப் பணிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, அதிக எடை கொண்ட செயற்கைக்கோளுக்கு இடமளிக்க, இலக்கு வைக்கப்பட்ட சுற்றுப்பாதை குறைவாக இருந்தது (அதன் மிக உயர்ந்த புள்ளியில் சுமார் 29,970 கி.மீ).


10. சந்திரயான்-3 ராக்கெட்டை சுமந்து சென்ற LVM3-M4 ஒப்பிடும்போது இதன் சுமை தாங்கும் திறனை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில்  இஸ்ரோ விண்கலத்தை மாற்றியமைத்தது. அதன் எடை திறனுக்காக இந்த வாகனம் அதன் எடை தாங்கும் திறனுக்காக  'பாகுபலி' என்று அழைக்கப்பட்டது. இந்த வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை C25 நிலையாக இருந்தது. இது 28,000 கிலோ எரிபொருளை சுமந்து 20 டன் உந்துதலை உற்பத்தி செய்தது. இப்போது இது 32,000 கிலோ எரிபொருளை சுமந்து 22 டன் உந்துதலை உற்பத்தி செய்யும் C32 நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ஏவுதள வாகனங்கள்


1. செயற்கைக்கோள்கள் தாங்களாகவே விண்வெளிக்குச் செல்வதில்லை. அவை விண்கலங்கள் அல்லது துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) போன்ற விண்கலங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. பூமியின் ஈர்ப்பு விசையை மீறி, செயற்கைக்கோள்கள் போன்ற கனமான பொருட்களை விண்வெளியில் செலுத்துவதற்குத் தேவையான மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உருவாக்கும் சக்திவாய்ந்த உந்துவிசை அமைப்புகளை விண்கலங்கள் கொண்டுள்ளன.

Knowledge Nugget: India’s heaviest communication satellite — What you must know for UPSC Exam

2. இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Small Satellite Launch Vehicle (SSLV)) என்பது மூன்று திட உந்துவிசை நிலைகளுடன் கட்டமைக்கப்பட்ட மூன்று-நிலை ஏவுதள வாகனமாகும். இது ஒரு முனைய நிலையில் (terminal stage) திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகச் சீரமைப்புத் தொகுதியைக் (Velocity Trimming Module (VTM)) கொண்டுள்ளது. இது செயற்கைக்கோளை நிலைநிறுத்தத் தயாராகும் போது அதன் வேகத்தை சரிசெய்ய உதவுகிறது.

3. துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) என்பது இந்திய செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களின் மூன்றாம் தலைமுறை ஆகும். முதன்முதலில் 1994ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை 50-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான PSLV ஏவுதல்கள் நடந்துள்ளன. அதிக வெற்றி விகிதத்துடன் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (2,000 கி.மீ.க்கும் குறைவான உயரத்தில்) பல்வேறு செயற்கைக்கோள்களை தொடர்ந்து செலுத்துவதால் இது "இஸ்ரோவின் வேலைத்திறன்மிகு குதிரை" (the workhorse of ISRO) என்றும் அழைக்கப்படுகிறது. 

4. புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள், புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் (geosynchronous transfer orbit) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் பொதுவாக புவி சுற்றுப்பாதையில் (geostationary Earth orbit) வைக்கப்படுகின்றன. இது பூமியின் பூமத்திய ரேகைக்கு மேலே 35,786 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுற்றுப்பாதையாகும்.

5. புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள்  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)) அதிக திறன் கொண்டவை. ஏனெனில், செயற்கைக்கோள்களை விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்கு அனுப்புவதற்கு இவை உதவுகிறது. பழைய ஏவுதள வாகனங்களை விட, புதிய ஏவுதள வாகனங்ளில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனைக் கொண்ட கிரையோஜெனிக் இயந்திரங்கள் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை அதிக உந்துசக்தியை  வழங்குகின்றன.

Original article:

Share: