இந்தியப் புள்ளியியல் நிறுவன (ISI) வரைவு மசோதா, 2025 குறித்து எழுந்துள்ள கவலைகள் என்னென்ன? -ஷிவ் சகாய் சிங்

இந்தியப் புள்ளியியல் நிறுவனம் சட்டம், 1959-ஐ ரத்து செய்து, இந்தியப் புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2025-ஐ புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) ஏன் வெளியிட்டது? மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? இது நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை எவ்வாறு பாதிக்கும்?


கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா, 2025-ன் வரைவை வெளியிட்டது. இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஏனெனில் இந்த நடவடிக்கை அந்த நிறுவனத்தை ஒரு “பதிவுசெய்யப்பட்ட அமைப்பிலிருந்து சட்டப்பூர்வமான கார்ப்பரேட் அமைப்பாக” மாற்றுவதன்மூலம் அதன் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கம் கொண்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.


இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதாவின் (ISI) முக்கியத்துவம் என்ன?


இந்தியப் புள்ளியியல் நிறுவனம் ((Indian Statistical Institute (ISI)) 1931-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் P.C. மஹலனோபிஸ் என்பவரால் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. அன்று முதல் இது இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் முதலில் 1860-ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் 1932-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1961-ஆம் ஆண்டின் மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் மறுபதிவு செய்யப்பட்டது. ஒரு சங்கமாக இருப்பது நிறுவனத்திற்கு அதன் சொந்த அமைப்பு விதிகள், துணை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வழங்கியது. பாராளுமன்றம் 1959-ஆம் ஆண்டின் இந்தியப் புள்ளியியல் நிறுவன சட்டத்தை இயற்றியது. பின்னர், இந்தியப் புள்ளியியல் நிறுவானத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பல அறிஞர்கள் இந்த நிறுவனத்தின் வேர்களை வங்காள மறுமலர்ச்சியுடன் தொடர்புபடுத்துகிறார்கள், மேலும் இது இந்தியாவின் திட்டமிடல் மற்றும் கொள்கை அமைப்பை வடிவமைக்க உதவியது என்று கூறுகிறார்கள். இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான அடிப்படையாக விளங்கும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organisation - NSSO) இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute - ISI) உருவாக்கப்பட்டது. பி.சி. மஹாலனோபிஸ் தவிர, சி.ஆர். ராவ் மற்றும் எஸ்.ஆர்.எஸ். வரதன் போன்ற சிறந்த அறிஞர்களை இந்தியப் புள்ளியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா முழுவதும் சுமார் 1,200 மாணவர்களையும் ஆறு மையங்களையும் கொண்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில், புள்ளியியல், கணிதம், அளவு பொருளாதாரம், கணினி அறிவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், குறியாக்கவியல் மற்றும் பாதுகாப்பு, தர மேலாண்மை அறிவியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்குகிறது.


கல்வியாளர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?


வரைவு மசோதாவை எதிர்ப்பவர்களின் முதன்மையான கவலை என்னவென்றால், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன நிலை எவ்வாறு  "ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கத்திலிருந்து ஒரு சட்டரீதியான பெருநிறுவன அமைப்பாக" மாறும் என்பதே ஆகும்.


சுமார் 1,500 கல்வியாளர்கள் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (MoSPI) இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களுக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, 1959-ஆம் ஆண்டு சட்டத்தை நீக்கவும், சங்கத்தை கலைக்கவும், மற்றும் சங்கத்தின் பொதுக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அடிப்படை ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வரவும் தெளிவான காரணம் இல்லை என்று வாதிட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில், மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்திலிருந்து ஒரு "சட்டரீதியான பெருநிறுவன அமைப்பாக" மாறுவது சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் அதிகார வரம்பை மீறுவதாகவும் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, நூற்றுக்கணக்கான இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு மனித சங்கிலியை உருவாக்கி, வடக்கு கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தின் பி.டி.சாலை வளாகத்திற்கு அருகில் ஒரு பொதுக் கூட்டத்தையும் நடத்தினர்.


தற்போதைய 1959 சட்டம் (current 1959 Act) கல்வித்துறையின் பிரதிநிதித்துவம் மற்றும் அரசின் அத்துமீறலைத்தடுக்கக்கூடிய பாதுகாப்புகள் உள்ள ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கிறது என்று புதிய வரைவு மசோதா எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால், முன்மொழியப்பட்டுள்ள 2025 மசோதா, பிரிவு 15-ன் கீழ் வரையறுக்கப்பட்ட ஆளுநர்கள் வாரியத்திடம் (Board of Governors - BoG) கட்டுப்பாட்டை வழங்குகிறது, அதில் அரசு பரிந்துரைத்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மேலும், பேராசிரியர்கள் மற்றும் கல்விசார் பங்குதாரர்களின் பங்கைக் குறைக்கிறது. முன்னாள் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) பேராசிரியர் மற்றும் மேற்குவங்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிநிறுவனத்தின் தலைவருமான அபிரூப் சர்க்கார் கூறுகையில், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) அடிப்படை ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பெருநிறுவன நிதி மாதிரிக்கான (corporate funding model) வரைவு மசோதாவின் அழுத்தம், அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியைப் பெறுவதை கடினமாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின் பிரிவு-29, மாணவர் கட்டணங்கள், ஆலோசனை மற்றும் நிதியுதவி பெறும் ஆராய்ச்சி திட்டங்கள் உட்பட "வருவாயை ஈட்டுவதற்கான" வழிகளைப் பட்டியலிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.


மசோதாவை எதிர்ப்பவர்களின் மற்றொரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால், அனைத்து நியமனங்களும் இனிமேல் ஆளுநர் குழுவின் (BoG) மூலம் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர். முன்னதாக, இந்தியப்  புள்ளியியல் நிறுவனத்தின் 33 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பில் 10 பிரதிநிதிகள் (எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஒருவர் பணியாளர் மற்றும் ஒருவர் அறிவியல்சார்ந்த பணியாளர்) — ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருந்தனர். இப்போது, ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஒன்றிய அரசு, நிறுவனம் சார்ந்த நியமனங்களில் அரசியல் ரீதியாகத் தலையிடக்கூடும் என்ற அச்சத்தை புதிய மசோதா எழுப்பியுள்ளது என்று பேராசிரியர் சர்க்கார் கூறினார்.


அரசாங்கம் என்ன சொல்கிறது?


2031-ஆம் ஆண்டில் அதன் 100-வது ஆண்டை நெருங்கும்போது, இந்தியப் புள்ளியியல் நிறுவனமானது (ISI) இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், தலைமை தாங்கும் உலகளாவிய நிறுவனமாகவும் மாற உதவுவதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது. பல ஆண்டுகளாக நான்கு குழுக்கள் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஆய்வு செய்துள்ளன என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியீடு தெரிவித்தது. அவற்றில் கடைசியாக, 2020-ஆம் ஆண்டில் டாக்டர் ஆர்.ஏ. மாஷேல்கர் தலைமையில் அமைந்த குழு, நிர்வாகத்தை மேம்படுத்துதல், கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் போட்டித்தன்மை உடையதாக மாற்றுவது ஆகியவற்றிற்கு முக்கிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்ததாகத் தெரிவிக்கின்றனர்.


அடுத்து என்ன?


இந்தச் சட்டமசோதாவை எதிர்ப்பதற்காக மாணவர்களும் கல்வியாளர்களும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெரும்பாலும் நம்பியுள்ளனர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார், வரைவு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய (புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை) இணை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்களும் பகிரங்கமாக இந்த வரைவுச் சட்டமசோதாவை எதிர்த்ததோடு, இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அதனை எதிர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.


original link:

What are the concerns over the draft ISI Bill, 2025? 


Share:

தமிழ்நாடு அரசு கோயில் நிலங்களின் விற்பனை, பரிமாற்றம், குத்தகை மற்றும் அடமானம் ஆகியவற்றுக்கான விதிகளை வகுத்துள்ளது. -முகமது இம்ரானுல்லா



மத நிறுவனங்களின் அசையாச் சொத்துக்களை (Alienation of Immovable Property) அந்நியப்படுத்துதல் விதிகள், 2025 விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.


கோயில் நிலங்களை விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்தல், குத்தகைக்கு விடுதல் அல்லது அடமானம் வைப்பதற்கு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை வகுத்து, மத நிறுவனங்களின் அசையாச் சொத்துக்களை அந்நியப்படுத்துதல் விதிகள், 2025-ஐ தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.


கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார் மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் ஆஜரான இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் N.R.R. அருண் நடராஜன், புதிய சட்ட விதிகளை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட டிசம்பர் 1, 2025 அன்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததாகக் கூறினார்.


திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 9.74 ஏக்கர் நிலத்தை கல்லூரி பயன்படுத்தி வந்தது, மேலும் கோயிலின் நிலத்திற்கு ஈடாக வேறொரு இடத்தில் ஒரு பெரிய நிலத்தை வழங்கியது. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் (Sri Sivasubramaniya Nadar (SSN)) பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தபோது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 


1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவுகள் 166(1) மற்றும் 34(1) & (3)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி 2025-ஆம் ஆண்டில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இந்த புதிய விதிகள் மே 18, 1960 முதல் நடைமுறையில் இருந்த பழைய வருவாய்த் துறை விதிகளை மாற்றுகின்றன.


புறம்போக்கு நில விதிகள், அதில் பயன்படுத்தப்படும் 'நகர்ப்புறப் பகுதி' என்ற சொல், 2017-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை (Tamil Nadu Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules) விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றன.


2017ஆம் ஆண்டு விதிகளின்படி, "நகர்ப்புறப் பகுதி" என்பது சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (Chennai Metropolitan Development Authority (CMDA)) எல்லைக்குள் உள்ள இடங்களையும், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இடங்களையும் உள்ளடக்கியது. கிராம பஞ்சாயத்துகளாக இருந்தாலும்கூட, இந்த நகர எல்லைகளைச் சுற்றி 8 கி.மீ வரையிலான அருகிலுள்ள பகுதிகளையும் இது உள்ளடக்கியது.


இந்தச் சொல்லின் வரையறை, மற்ற அனைத்து நகராட்சி அமைப்புகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மண்டலங்கள் மற்றும் பேரூராட்சிகளின் கீழ் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. எதிர்காலத்தில் தேவைப்படும் போதெல்லாம் அரசாங்கம் இந்த வரையறையில் கூடுதல் பகுதிகளைச் சேர்க்கலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது.


கோயில் நிலங்களின் விற்பனை மதிப்பு


வரையறையை ஏற்றுக்கொண்ட பிறகு, 2025ஆம் ஆண்டு விதிகள், கோயில் நிலங்களின் மதிப்பு சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றும், விற்பனையைப் பொறுத்தவரை, நகர்ப்புறத்தில் அமைந்துள்ள கோயில் நிலத்தின் விற்பனை மதிப்பு நில மதிப்பில் 225%-ஆக நிர்ணயிக்கப்படும் என்று புதிய விதி கூறுகிறது.


நகர்ப்புறத்திலிருந்து 30 கி.மீ.க்குள் அமைந்துள்ள கோயில் நிலங்களின் விற்பனை மதிப்பு நில மதிப்பில் 275%-ஆகவும், நகர்ப்புறத்திலிருந்து 30-50 கி.மீ.க்குள் உள்ள சொத்துக்களின் விற்பனை மதிப்பு 325%-ஆகவும், நகர்ப்புறத்திலிருந்து 50

கி.மீ.க்கு வெளியே உள்ள கோயில் நிலங்களுக்கு, விற்பனை மதிப்பு நில மதிப்பில் 425% ஆகவும் நிர்ணயிக்கப்படும்.


கோயில் நிலங்களை மாற்றுதல் (Exchange of temple lands)


மற்றொரு அசையாச் சொத்திற்கு ஈடாக கோயில் நிலத்தை வழங்கும்போது, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) சட்டத்தின் பிரிவு 34-ன் கீழ் பரிமாற்றம் செய்ய முன்மொழியப்பட்ட தனியார் நிலம் தெளிவான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு வில்லங்க (encumbrances) சொத்துகள், ஆக்கிரமிப்புகள், வழக்குகள் அல்லது மோதல்கள் இல்லாமல் விண்ணப்பதாரரின் வசம் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.


மாற்றாக வழங்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு, திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதி (Open Space Reserve Area) அல்லது சாலை அமைப்பது, பொது வசதிகள் போன்றவற்றுக்காக உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எந்த நிலமாகவும் இருக்கக்கூடாது. மேலும், பின்வரும் உணர்திற பகுதிகளில் உள்ள நிலங்களை பரிமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்று புதிய விதிகள் கூறுகின்றன அவை:


இடையக மண்டலங்கள் (Buffer Zones)


மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்


யானை/புலி வழித்தடங்கள் (Elephant/Tiger Corridors)


சூழல் உணர்திற பகுதிகள் (Eco-Sensitive Zones)  ஆகும்.


மாற்றாக வழங்கப்படும் நிலம், மாவட்ட முக்கிய சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளுக்கு எளிதாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், மற்ற நிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்ககூடாது என்று விதிகள் கூறுகின்றன. கோயில் நிலத்தின் மதிப்பும், மாற்றாகக் கொடுக்கப்படும் தனியார் நிலத்தின் மதிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும் சூழல்களில், மாற்றப்படும் நிலத்தின் அளவும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


மத நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு, மாற்றாக வழங்கப்படும் நிலத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தால், மதிப்பில் உள்ள வித்தியாசத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட தனியார் நிலம் கோயில் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப பெரியதாக இருக்க வேண்டும்.


அறிவிப்பின் வெளியீடு


ஒரு கோவிலின் நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாற்றவோ, விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ வேண்டுமென்றால், அந்த திட்டத்தின் முழு விவரங்களும் தமிழ்நாடு அரசு அரசிதழிலும் மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும் என்று சட்டப்பூர்வ விதி 5 கூறுகிறது.

முன்மொழியப்பட்ட பரிவர்த்தனை தொடர்பாக ஏதேனும் பரிந்துரைகள்/ஆட்சேபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் ஒரு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் இவற்றை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கோயிலின் அறங்காவலர்களுக்கு உரிய ஒப்புதலுடன் கூடிய ஒரு விரைவு அஞ்சல் அனுப்பப்பட வேண்டும்.

மேலும், விதி 5-ன் கீழ் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் நகல்கள், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்களிலும், சம்பந்தப்பட்ட கோவிலில் ஒரு தெளிவான இடத்திலும், அதிகார வரம்பிற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அறிவிப்பு பலகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிட வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.


Original link:

Tamil Nadu Government frames rules for sale, exchange, lease and mortgage of temple lands.


Share:

நெகிழ்வான எரிபொருள் ஏற்பு வாகனங்களின் நோக்கம் என்ன? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:

 ஒரு நாட்டில் E20 போன்ற எரிபொருள் கலவை அமைக்கப்பட்டவுடன், பெட்ரோலில் எத்தனாலை படிப்படியாக 25–30%-ஆக அதிகரிப்பதைவிட, நெகிழ்வான எரிபொருள் வாகனங்களில் கவனம் செலுத்துவது நல்லது என்பதை உலகளாவிய உதாரணங்கள் காட்டுகின்றன என்று குலாட்டி கூறினார். 2023ஆம் ஆண்டு முதல் அனைத்து புதிய பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கும் E20 எரிபொருள் இணக்கத்தன்மையை இந்தியா கட்டாயமாக்கியுள்ளது.

படிப்படியாக அதிகரித்து வரும் எரிபொருள் கலவைகளால் ஏற்படும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், இதன் காரணமாக பழைய வாகனங்கள் பாதிப்புகளை சந்திக்கலாம். ஒவ்வொரு முறை எரிபொருள் கலவை மாறும்போதும் மறு-அங்கீகாரச் சான்றிதழ் பெறுதல் (re-homologation) மற்றும் மறுசோதனை தேவைப்படும் என்று குலாட்டி கூறினார்.

தற்போது இந்தியாவில் எந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனமும் நெகிழ்வான எரிபொருள் (flex fuel) வாகனங்களை விற்பனை செய்வதில்லை. ஏனெனில், அவற்றின் பாரம்பரிய பெட்ரோல் வாகனங்களைவிட அதிகத் தொகையுடன் உள்ளன. இருப்பினும், டொயோட்டா போன்ற நிறுவனங்கள் நெகிழ்வான எரிபொருளில் இயங்கக்கூடிய மாதிரிகளை உருவாக்கியுள்ளன.

அதிக எத்தனால் கலவைகளுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய குலாட்டி, பிரேசிலின் உதாரணத்தை மேற்கோள் காட்டினார். அந்த நாட்டில் நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. பிரேசிலில், 30% எத்தனால் (E30) கொண்ட பெட்ரோலை விட தூய எத்தனால் (E100) 33% குறைவானதாக மாற்றுகிறது. இது இயற்கையாகவே பட்ஜெட் எண்ணம் கொண்ட நுகர்வோரை E100-ஐத் தேர்ந்தெடுக்க வைக்கிறது.

இந்தியாவில், 2023-ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலவையை (E20) நோக்கிய ஒருதலைப்பட்ச நடவடிக்கை பல கார் உரிமையாளர்களிடையே கவலைகளை அதிகரிக்க செய்தது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டிற்கு முன்பு விற்கப்பட்ட வாகனங்களில் எரிபொருள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டறிந்தனர். இது அத்தகைய எரிபொருள் கலவைக்காக வடிவமைக்கப்படாமல் இருக்கலாம்.

 ஆகஸ்ட் மாதத்தில், பழைய வாகனங்களில் எரிபொருள் செயல்திறனில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் E20 பெட்ரோல் (E20 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனாலை கொண்டுள்ளது) இதனை பற்றிய கூற்றுகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் துறை சங்கம் போன்ற குழுக்களின் ஆய்வுகள் செயல்திறனில் ஒரு சிறிய வீழ்ச்சியை மட்டுமே காட்டுகின்றன என்று அவர்கள் கூறினர். கூடுதலாக, கலப்பு எரிபொருள் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— சோளம், கரும்பு போன்ற பயிர்களின் மீதமுள்ள பகுதிகளை நொதித்தல்  (fermentation) மூலம் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. நொதித்த பிறகு, எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது, இது மாசுபாட்டைக் குறைக்கிறது. மிகவும் பொதுவான கலவை எத்தனால்-10 அல்லது E10 ஆகும். இதில் 10% எத்தனால் உள்ளது.

— இந்திய அரசாங்கம் 2018-ல் "உயிரி எரிபொருள் மீதான தேசிய கொள்கையை" அங்கீகரித்தது. எரிபொருள் கலப்பை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பயோ எத்தனால், பயோடீசல் மற்றும் அழுத்தப்பட்ட உயிர்வாயு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் முக்கியப் பகுதிகளில் எத்தனால் கலப்புத் திட்டம் (Ethanol Blending Programme (EPB)), இரண்டாம் தலைமுறை எத்தனால் உற்பத்தி (காடு மற்றும் விவசாய பயன்பாட்டின் மூலம் பெறப்பட்டது). "இந்தியாவில் தயாரிப்போம் (Make in India)" திட்டத்தின்கீழ் எரிபொருள் சேர்க்கைகளை உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரித்தல், எத்தனால் உற்பத்திக்கான தொடக்கப் பொருளான தீவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் இந்த இலக்குகளை அடைவதற்கான நிதி ஊக்கத்தொகைகள் ஆகியவை அடங்கும்.

original link:

What is the purpose of flex fuel vehicles


Share:

இந்தியாவின் ரயில் போக்குவரத்தில் 41%-ஐ ஏழு வழித்தடங்கள் கையாளுகின்றன: ரயில்வே அவற்றை எவ்வாறு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது? -தீரஜ் மிஸ்ரா

 பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்கும் வழித்தடங்களால் உயர்நிலைப் பாதை வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அத்தகைய வழித்தடங்கள் எவை, அவற்றைக் குறைக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?


மும்பை புறநகர் வழித்தடத்தின் முக்கிய விரிவாக்கமான மகாராஷ்டிராவில் உள்ள 32 கி.மீ பத்லாப்பூர்-கர்ஜத் பிரிவில் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்தை கட்டமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது மும்பை புறநகர் வழித்தடத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது புறநகர் ரயில் திறனை அதிகரிக்கும். இந்தப் பிரிவு 1,238 கி.மீ நீளமுள்ள மும்பை-சென்னை உயர் அடர்த்தி வலையமைப்பில் ஒரு முக்கிய இணைப்பாகும். இது புனே, சோலாப்பூர், குண்டக்கல் மற்றும் அரக்கோணம் வழியாக மும்பையை சென்னையுடன் இணைக்கும் இந்திய ரயில்வேயின் மிகவும் பரபரப்பான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.


ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு (High Density Network (HDN)) அல்லது வழித்தடங்களிலும் கூட்டத்தைக் குறைப்பதற்கான இந்திய ரயில்வேயின் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சரவை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இவை மொத்த வலையமைப்பில் சுமார் 16% ஆகும். ஆனால், மொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதத்தை கையாள்கிறது. இது அதிக அடர்த்தி கொண்ட இந்திய ரயில்வேயின் அடித்தளமாக உள்ளது. அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளுடன், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பை சிறப்பாக நிர்வகிப்பது முக்கியம்.


வழித்தடங்கள்


ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்பு அல்லது HDN என்பது பயணிகள்-சரக்கு வழித்தடங்களால் உருவாக்கப்படுகிறது. அங்கு பெரும்பாலான பிரிவுகளில் ரயில்கள் கொள்ளளவைவிட அதிகமாக இயங்குகின்றன. இது நெரிசல், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களால் ஏற்படும் தாமதம் மற்றும் வலையமைப்பின் செயல்திறனை பாதிக்கிறது. இந்திய ரயில்வேயின் மொத்த 69,181 வழித்தட-கிமீ வலையமைப்பில், அதிக அடர்த்தி கொண்ட வலையமைப்பு 11,051 வழித்தட-கிமீ அல்லது மொத்தத்தில் 15.97 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த பரபரப்பான வழித்தடங்கள் வெவ்வேறு கிலோமீட்டர் வரம்புகளைக் கொண்ட 237 பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.


          


"சரியான திறன் பயன்பாட்டிற்கு" (right capacity utilisation) ஒரு உலகளாவிய அளவுகோல் இல்லை என்றாலும், ரயில்களின் ஓட்டத்தை தடையின்றி வைத்திருக்க ஒரு ரயில் வலையமைப்பு அதன் மொத்த திறனில் 70-80 சதவீதத்தில் செயல்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.


ரயில்வே வாரியத்தின் திட்டமிடல் இயக்குநரகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு (HDN) மொத்தப் பாதையில் 4.60 சதவீதம் மட்டுமே 80 சதவீதத்திற்கும் குறைவாகவே இயங்குகிறது. HDN-ன் 18.89 சதவீத திறன் பயன்பாடு (line-capacity utilisation) 80-100 சதவீதமாகவும், வலையமைப்பின் பயன்பாட்டில் 32.75 சதவீதம் 100-120 சதவீதமாகவும், 29.53 சதவீத வழித்தடம் 120-150 சதவீத பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும், 14.11 சதவீத வலையமைப்பு 150 சதவீதத்திற்கும் அதிகமாக செயல்படுகிறது.


இந்த அறிக்கை, வழித்தடத்தில் உள்ள 237 பிரிவுகளில், 24 பிரிவுகள் (10%) மட்டுமே அவற்றின் திறனில் 80%-க்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. 41 பிரிவுகள் 80-100%-க்கும், 81 பிரிவுகள் 100-120%-க்கும், 58 பிரிவுகள் 120-150%-க்கும், 33 பிரிவுகள் அவற்றின் திறனில் 150%-க்கும் அதிகமாகப் பயன்படுத்துகின்றன.


எடுத்துக்காட்டாக, பத்லாப்பூர்-கர்ஜத்துக்குப் பிறகு வரும் மும்பை-சென்னை உயர்நிலைப் பாதையில் 28 கி.மீ. கர்ஜத்-லோனாவாலா பிரிவில், அதிகபட்ச கொள்ளளவு 40 ரயில்கள் என்றாலும், தினமும் சுமார் 67 ரயில்கள் இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. இதன் விளைவாக திறன் பயன்பாடு 167 சதவீதமாக உயர்ந்தது.


இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த திறன் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது உயர்நிலைப் பாதை வலையமைப்பின் இந்த புள்ளிவிவரங்கள் மிக அதிகம். 2051-ஆம் ஆண்டு வரையிலான ரயில்வேயின் திட்டமிடலை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணமான தேசிய ரயில் திட்டத்தின்படி, மொத்த வலையமைப்பில் 45 சதவீதத்தில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 29 சதவீதம் 70-100 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. 25 சதவீதம் வலையமைப்பு 100-150 சதவீதத்திற்கும் இடையில் இயங்குகிறது. மேலும், ஒரு சதவீத வலையமைப்பு அதன் திறனைவிட 1.5 மடங்கு அதிகமாக அல்லது 150 சதவீதத்திற்கும் அதிகமாக ரயில்களை இயக்குகிறது.


உயர்நிலைப் பாதை வலையமைப்பின் பாதுகாப்பு


உயர்நிலைப் பாதை வலையமைப்பு நாட்டின் நான்கு பக்கங்களையும் உள்ளடக்கியது. ஏழு உயர்நிலைப் பாதை வலையமைப்புகள்: டன்குனி, அசன்சோல், தன்பாத், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் சென்ட்ரல் வழியாக 1,422-கிமீ ஹவுரா-டெல்லி; 2,039-கிமீ ஹவுரா-மும்பை வழியாக காரக்பூர், டாடாநகர், ஜார்சுகுடா, பிலாஸ்பூர், நாக்பூர், பூசாவல் மற்றும் இகத்புரி; சூரத், கோத்ரா, ரத்லாம், நாக்டா, சவாய் மாதோபூர் மற்றும் மதுரா வழியாக 1322-கிமீ மும்பை-டெல்லி; மொராதாபாத், ரோஜா, கோண்டா, கோரக்பூர், கதிஹார், நியூ ஜல்பைகுரி மற்றும் ரங்கியா வழியாக 1,876-கிமீ டெல்லி - கவுகாத்தி; மதுரா, ஜான்சி, பினா, போபால், நாக்பூர், பல்ஹர்ஷா மற்றும் விஜயவாடா வழியாக 2,037-கிமீ டெல்லி-சென்னை; பத்ரக், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக 1,117-கிமீ ஹவுரா-சென்னை; மற்றும் மும்பை-சென்னை வழித்தடமாகும்.


ஹவுரா-டெல்லி வழித்தடத்தில் அல்லது உயர்நிலைப் பாதை வலையமைப்பு  1-ல், 31.34 கிமீ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே திறன் பயன்பாடு 80 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இதேபோல், தங்க நாற்கர (Golden Diagonal) ரயில்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HDN 2 அல்லது ஹவுரா (கொல்கத்தா)-மும்பை வழித்தடத்தில், 85.2 கிமீ பாதை மொத்த ரயில் திறனில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  

  

தங்க நாற்கரப் பாதையின் ஒரு பகுதியான உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 அல்லது டெல்லி-மும்பை வழித்தடம், எந்தவொரு பாதைக்கும் 150 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டிராத இரண்டு உயர்நிலைப் பாதை வலையமைப்புகளில் ஒன்றாகும். மொத்தம் 1224-கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டுடன் நிறைவடைந்தது. மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் (Jawaharlal Nehru Port (JNPT)) முதல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி வரையிலான மேற்கத்திய அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் (Western Dedicated Freight Corridor (WDFC)) சரக்கு ரயில்களைக் கையாள உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 வழியாக செல்கிறது.


உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 அல்லது டெல்லி-குவஹாத்தி வழித்தடம் டெல்லியை வடகிழக்கு மாநிலங்களுடன் மூன்று பெருநகர நகரங்கள் வழியாக இணைக்கிறது. பயணிகளுடன், இந்த பாதை சரக்குகளுக்கான அதிக தேவையையும் காண்கிறது. இந்த வழித்தடத்தில் 96 சதவீத வழித்தட கிமீ பாதை 80 சதவீதத்திற்கும் அதிகமான வழித்தட திறன் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.


இதேபோல், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 அல்லது டெல்லி-சென்னை வழித்தடத்தில் கிட்டத்தட்ட 52 சதவீதமும், உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 அல்லது ஹவுரா-சென்னை வழித்தடத்தில் 50 சதவீதமும், பாதை திறன் பயன்பாட்டில் 120-150 சதவீதத்துடன் நிறைவுற்றதாக உள்ளது. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 அல்லது மும்பை-சென்னை வழித்தடத்தில், 90 சதவீத ரயில்கள் அதன் மொத்த திறனில் 80-120 சதவீதம் வரை இயக்குகின்றன.


ரயில் கூட்டத்தை குறைக்கும் முயற்சிகள் (Decongestion efforts)


தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளுடன், உயர்நிலைப் பாதை வலையமைப்பில் நெரிசல் மிகவும் அதிகரிக்கும் என்று தேசிய ரயில் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இதனால், 2051-ஆம் ஆண்டுக்குள் எந்தப் பிரிவுகளும் 100 சதவீதத்திற்கும் குறைவான திறன் பயன்பாட்டுடன் இயங்காது என்றும், 92 சதவீத வலையமைப்புகள் 150 சதவீதத்திற்கும் அதிகமான திறன் பயன்பாட்டில் இயங்காது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில், 2031-ஆம் ஆண்டுக்குள், மொத்த உயர்நிலைப் பாதை வலையமைப்பில் 50 சதவீதம் 150 சதவீதத்திற்கும் அதிகமான நெரிசலுடனும், 39 சதவீதம் 100-150 சதவீத திறனுடனும், 9 சதவீதம் அதன் திறனில் 70-100 சதவீதத்துடனும் இயங்கும் என்று ஆவணம் காட்டுகிறது.


பல நடவடிக்கைகள் ரயில்கள் சீராக இயங்க உதவுகின்றன. ஆனால், ஒரு நடைபாதையில் கூட்டத்தைக் குறைப்பதற்கான மிக முக்கியமான வழி தண்டவாளங்களை விரிவுபடுத்துவதாகும். இரட்டிப்பாக்குதல், மூன்றுமடங்கு, நான்கு மடங்காக அல்லது ஐந்து அல்லது ஆறு தண்டவாளங்களை உருவாக்குவது போன்ற கூடுதல் பாதைகளைச் சேர்ப்பதாகும்.


ரயில்வே அமைச்சகம் அதன் இரட்டிப்பாக்கத் திட்டங்களின் கீழ் பாதை விரிவாக்கத் திட்டங்களை எடுத்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டில் மொத்தம் 1,983 கி.மீ., 2022-23ஆம் ஆண்டில் 3,185.5 கி.மீ., 2023-24ஆம் ஆண்டில் 2,244 கி.மீ., மற்றும் 2024-25ஆம் ஆண்டில் 2,900 கி.மீ.க்கு மேல் இதுபோன்ற திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தரவு காட்டுகிறது.


இதனுடன், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் (dedicated freight corridors (DFCs)) முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மற்றும் மேற்கு பகுதியில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் 96.4% நிறைவடைந்துள்ளன. இந்த இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உயர்நிலைப் பாதை வலையமைப்பிலிருந்து சில சரக்குப் போக்குவரத்தை நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் ரயில்களுக்கு அதிக இடம் கிடைக்கும்.


ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 11,051 கி.மீ நீளத்தில், 250 கி.மீ. ஒற்றை பாதை, 8,113 கி.மீ. இரட்டை பாதை, 2,040 கி.மீ. மூன்று பாதை, 625 கி.மீ. நான்கு பாதை மற்றும் 23 கி.மீ. பென்டா/ஹெக்ஸா பாதைகள் உள்ளன. இந்த வழித்தடத்தின் 250 கி.மீ.க்கும் அதிகமான பகுதி இன்னும் ஒற்றைப் பாதையாக உள்ள வகைகளில் உயர்நிலைப் பாதை வலையமைப்பின் 4-ல்  மட்டுமே உள்ளன. உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 5 ஆகியவை மட்டுமே penta/hexa  பாதைகளைக் கொண்டுள்ளன. 212 கி.மீ நீளமான நான்கு மடங்கு பாதை உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2-ல் உள்ளது, அதைத் தொடர்ந்து உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1-ல் 187 கி.மீ மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3-ல் 126 கி.மீ. உள்ளன.


தேசிய ரயில் திட்டத்தின்படி, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 1 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 4 ஆகியவை முழு நீளத்திற்கும் மூன்று பாதையாக மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதேபோல், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்குத் தேவையை பூர்த்திசெய்ய உயர்நிலைப் பாதை வலையமைப்பு 2, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 3, உயர்நிலைப் பாதை வலையமைப்பு 6 மற்றும் உயர்நிலைப் பாதை வலையமைப்பு 7 ஆகியவற்றை முழு நீளத்திற்கும் மூன்று அல்லது நான்கு பாதைகளாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.


original link:

Seven corridors handle 41% of India’s rail traffic: How Railways plans to expand them.


Share:

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ல் இருந்து 90-ஆக மாறிய பயணம் : வர்த்தகம், அந்நிய நேரடி முதலீடு, மற்றும் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து… -சித்தார்த் உபாசனி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80-ஐக் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் மற்றொரு முக்கிய அளவை எட்டியுள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த வாரம் 90-ஐ தொட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணிகள் நீண்ட காலமாக உருவாகி வருகின்றன. உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையுடன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நிய செலாவணி சந்தையில் பெருமளவில் தலையிட்டது. இப்போது அந்தத் தலையீட்டைக் குறைத்ததால் ரூபாய்  மதிப்பு வேகமாகக் குறைந்தது என்கின்றனர்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் காரணமாக, கடந்த ஜூலை மாதம் 2022-ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதன்முதலில் 80-ஐத் தாண்டிய பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து. மூன்றரை ஆண்டுகளில் 90-ஐ எட்டியுள்ளது.  இதே காலகட்டத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ((Current Account Deficit (CAD)) 2022 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இருந்த $31 பில்லியனில் இருந்து பெரிதும் குறைந்தது; சில காலாண்டுகளில் உபரியாகவும் (Surplus) மாறியது. ஆனாலும் ரூபாயின் மதிப்பீடு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.

இந்தியா நாட்டின் நடப்புக் கணக்கு இருப்பு முக்கியமாக அதன் சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையால் (goods trade deficit) தீர்மானிக்கப்படுகிறது — இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குச் செலுத்தும் தொகைக்கும், ஏற்றுமதியிலிருந்து ஈட்டும் வருவாய்க்கும் இடையேயான வித்தியாசமாகும். வரைபடம் காட்டுவதுபோல, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சரக்குகள் வர்த்தகப் பற்றாக்குறையை மிக நெருக்கமாகப் பின்பற்றுகிறது. இவற்றுக்கு இடையேயான வித்தியாசம், இந்தியாவின் சேவைகளில் உள்ள உபரி (surplus in services) மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பும் பணத்திலிருந்து (remittances) வருகிறது. ஆனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தக முன்னேற்றங்கள் ரூபாயின் தற்போதைய பலவீனத்திற்குப் பின்னால் இருக்காது என்று இருப்பினும், பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America (BofA)) உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பு இந்தியா மற்றும் ஆசியான் பொருளாதார ஆய்வின் தலைவரான ராகுல் பஜோரியா, இந்தக் குறைபாடுகள் ரூபாயின் சமீபத்திய பலவீனத்திற்கு முக்கியக் காரணமாக இருக்காது என்று கூறுகிறார்.


பஜோரியா, கடந்த புதன்கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டதாவது, இந்தியா தற்போது மூலதனத்தின் வெளிப்பாடு காரணமாக ஏற்பட்ட பலவீனத்தை முக்கியமாகச் சந்தித்து வருகிறது என்றும் இதற்குப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடையாமல் இருப்பது மற்றும் இது போன்ற காரணிகள் முக்கியக் காரணங்கள் என்றும் அவர் கூறினார்.


மூலதனப் பாய்ச்சல் உண்மையில் ஒரு சிக்கல்தான் : அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPIs)) 2025-ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து சுமார் 18 பில்லியன் டாலர்களை வெளியே எடுத்துள்ளனர். பங்கு அல்லாத அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு நேர்மறையாக இருந்தாலும், அவை அதில் பாதியளவு மட்டுமே உள்ளன என்றும் கூறப்படுகிறது. 



தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் இந்த வாரம் கூறியது போல, அந்நிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment (FDI)) நிலைமை நிறைய மாறிவிட்டது.


வளர்ந்த நாடுகளில் அதிக வட்டி விகிதங்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. மேலும், உலகளவில் உள்ளூர் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்ற உந்துதலும் அந்நிய நேரடி முதலீட்டைக் குறைத்துள்ளது. அதே சமயம், விநியோகச் சங்கிலிகள் அதிகமாக உள்ளூர்மயமாக்கப்படுவதால், இந்திய நிறுவனங்களே இப்போது வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்கின்றன. ஏனெனில், வெளிநாடுகளில் பொருள்களை விற்க ஏற்றுமதி மட்டும் போதாது; அந்தச் சந்தையிலேயே உற்பத்தித் தளம் வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது.



இந்த விளக்கப்படம் காட்டுவது போல, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் முந்தைய வெளிநாட்டு முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை 2023 முதல் வேகமாக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 60 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டின் 80 பில்லியன் டாலர்களை எட்டுவதற்கான பாதையில் உள்ளது, இதன் விளைவாக நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு உள்வருகை (net FDI inflow) கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக உள்ளது.


வெளிநாட்டவர்களின் பணத்தை மீண்டும் எடுத்துச் செல்வதையும் (foreign repatriations) மற்றும் இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடுகளையும் (Indian overseas investments) கழித்த பின்னரே நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) கணக்கிடப்படுகிறது.


இந்த அனைத்து காரணிகளும் ரூபாயின் மதிப்பை குறைக்க அழுத்தம் கொடுக்கின்றன. இந்த வீழ்ச்சி மிகவும் வேகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி (RBI) கருதினால், அது அந்நியச் செலாவணியை விற்று அதாவது அதன் விநியோகத்தை அதிகரித்து ரூபாயை வாங்குவதன் (தேவையை உயர்த்துவதன்) மூலம் பரிவர்த்தனை வீதத்தை நிலையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 2024-25 நிதியாண்டில், குறிப்பாக டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரான தேர்தலுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி சுமார் 400 பில்லியன் டாலர் வரை விற்றுவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


இருப்பினும், 2025-26 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் தலையீடு பெரிதும் குறைந்துவிட்டது. சஞ்சய் மல்ஹோத்ரா ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு இது தெளிவாகத் தெரிகிறது. மேலும், நிதியாண்டின் முதல்பாதியில் மொத்த அடிப்படையில் வெறும் 44 பில்லியன் டாலராகவே உள்ளது. இது ரூபாயின் மதிப்பு இழப்பை ரிசர்வ் வங்கி அதிக அளவில் பொறுத்துக்கொள்ளத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று IDFC First வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா கூறுகிறார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் வந்தாலும், ரூபாயின் மதிப்பு செப்டம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு டாலருக்கு 91 ரூபாய் வரை உயரும் என்று கவுரா சென் குப்தா எதிர்பார்க்கிறார்.

மத்திய வங்கியின் தலையீடு வெளிநாட்டு நாணயத்தை நேரடியாக விற்பனை செய்வதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது, முன்னோக்குச் சந்தையில் (forwards market) டாலர்களை விற்பனை செய்வதன் மூலமும் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். இன்று விற்பதால் ஏற்படும் அதே விளைவை இது பரிவர்த்தனை விகிதத்தில் (exchange rate) ஏற்படுத்தும், ஆனால் அதன் தீர்வு ஒரு பிந்தைய, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேதியில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளது, ஏனெனில் இப்போதே டாலர்களை விற்பது ரூபாய் விநியோகத்தைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தும், இது ரிசர்வ் வங்கியின் தற்போதைய வட்டிவிகிதக் குறைப்பிற்கு முரணாக இருக்கும். முன்னோக்கு விற்பனைகள் (Forward sales) தற்போதைய ரூபாய் விநியோகத்தை பாதிக்காததால் இந்தச்  சிக்கலைத் தவிர்க்கின்றன.

"முன்னோக்குச் சந்தை" ("Forward market") என்பது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு பொருளை அல்லது நிதிக் கருவியை வாங்க அல்லது விற்க முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் ஒரு முறைசாரா பங்குச் சந்தைக்கு வெளியே நடைபெறும் வர்த்தக (over-the-counter) சந்தையாகும்.




அக்டோபர் மாத இறுதியில், ரிசர்வ் வங்கியின் (RBI) நிகர முன்னோக்கு நிலை (net forward position) 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக எதிர்மறையாக இருந்தது. இந்த டாலர்கள் அடுத்த ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் ரிசர்வ் வங்கியால் விற்கப்பட வேண்டும். இந்த முன்னோக்கு விற்பனைகளை ஈடுசெய்வதற்காக, நவம்பர் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு செலாவணி இருப்பில் (forex reserves) இருந்த 688 பில்லியன் டாலரில் இருந்து இந்த எதிர்மறைத் தொகையைக் கழிக்கலாம். 64 பில்லியன் டாலர் நிகர ஃபார்வர்ட் நிலையை நீக்கியபிறகு, உண்மையான அந்நியச் செலாவணி கையிருப்பு தோராயமாக 600 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

original link:

Rupee’s journey from 80 per dollar to 90 in 5 charts: on the role of trade, FDI, and RBI



Share:

பலதரப்புவாதம் (multilateralism) என்றால் என்ன? -ஆஷியா பர்வீன்

பலதரப்புவாதம் (multilateralism) என்றால் என்ன?

-ஆஷியா பர்வீன்


உலக ஒருங்கிணைப்பு வளர்ந்து வருவதால், வர்த்தகம், காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க நாடுகள் சர்வதேச அமைப்புகளை அதிகளவில் நம்பியுள்ளன. ஆனால், பலதரப்புவாதம் என்றால் என்ன? அது ஏன் இன்று ஒரு திருப்புமுனையில் இருப்பதாகத் தோன்றுகிறது?

இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற G20 உச்சி மாநாடு, பலதரப்பு ஒத்துழைப்புக்குக் கிடைத்த அரிய வெற்றியாகப் பரவலாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் புறக்கணிப்பு மற்றும் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், G20 தலைவர்கள் உச்சி மாநாட்டு அறிவிப்பை அங்கீகரித்தனர்.


ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எச்சரிக்கைகள் மற்றும் G20-ன் எதிர்காலம் பற்றிய சந்தேகங்களுக்கு மத்தியிலும் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, பலதரப்புவாதத்தின் (multilateralism) யோசனையை எவ்வாறு ஆதரிக்கிறது? மேலும், பலதரப்புவாதம் என்றால் என்ன, அது இருதரப்புவாதம் (bilateralism) மற்றும் ஒருதரப்புவாதத்திலிருந்து (unilateralism) எவ்வாறு வேறுபடுகிறது?


பலதரப்புவாதம் என்றால் என்ன?


சர்வதேச உறவுகளில், பலதரப்புவாதமானது பல நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. இந்த எண்ணம் முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிரபலமடைந்தது. பின்னர், 1920-ஆம் ஆண்டில் சமூக நாடுகள் அமைப்பும் (League of Nations - 1920) 1945-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் (United Nations - 1945) உருவாக வழிவகுத்தது என்கின்றனர்


பலதரப்புவாதம் என்பது தாராளவாத சர்வதேச ஒழுங்கின் (Liberal International Order) ஒரு முக்கியப் பகுதியாகும். இது ஜனநாயகம், திறந்த சந்தை அமைப்புகள், மற்றும் பகிரப்பட்ட விதிகள் போன்ற மதிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது சர்வதேச அமைப்பை ஒழுங்கற்றதாகக் கருதும் இயல்புவாதியின் (realist) கண்ணோட்டத்திற்கு முரணானது.


பலதரப்புவாதம்  என்பது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே தேசியக் கொள்கைகளைத் தற்காலிக ஏற்பாடுகள் மூலமாகவோ அல்லது முறையான நிறுவனங்கள் மூலமாகவோ ஒருங்கிணைப்பது என்று அறிஞர் ராபர்ட் ஓ. கோஹேன் வரையறுத்தார். மற்றொரு அறிஞரான ஜான் ஜெரார்ட் ரக்கீ, பல நாடுகளுக்கிடையேயான தொடர்புகளுக்கு வழிகாட்டும் பரந்த கொள்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


நடைமுறையில், பலதரப்புவாதம் என்பது சர்வதேச சட்டம் அல்லது ஐ.நா அமைப்பு போன்ற நிறுவன கட்டமைப்புகளுக்குள் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. இதன் பொருள், ஐ.நா அல்லது உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகள் மூலம் நாடுகள் செயல்படும்போது, அவை உலகளாவிய பிரச்சினைகளுக்குப் பொதுவான தீர்வுகளைக் காணப் பகிரப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன.


பலதரப்புவாதம் பலவீனமடைந்து வருகிறதா?


பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு உலகின் வளர்ந்துவரும் ஒருங்கிணைப்பு, பலதரப்புவாதத்தில் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியது. வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம், மோதல்கள் மற்றும் புலம்பெயர்வு போன்ற உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கையாள, நாடுகள் பலதரப்பு நிறுவனங்கள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை நம்பியிருக்கத் தொடங்கின.


இத்தகைய பிரச்சினைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும் தீர்வுகளும் தேவைப்படுகின்ற போதிலும், பலதரப்புவாதம் (multilateralism) இப்போது ஒரு முட்டுச்சந்தை அடைந்துவிட்டதுபோல் தெரிகிறது. மாபெரும் நாடுகளுக்கிடையேயான போட்டிகள், உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு, மக்கள்திரள் தேசியவாதம் (populist nationalism) போன்றவை உருவாக்கியுள்ள இக்கட்டான நிலைமையிலேயே இது தெளிவாகத் தெரிகிறது.


இந்தியாவைப் போன்ற நாடுகள் ஏன் சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்களை வலியுறுத்துகின்றன என்பதை இந்தச் சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது. அதே சமயம், காலநிலை மாற்றம், கடன் நிலைத்தன்மை மற்றும் நியாயமான எரிசக்தி மாற்றங்கள் குறித்த G20 மாநாட்டு அறிவிப்பு, உலகத் தலைவர்கள் இன்னும் பலதரப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.


பலதரப்புவாதம் என்பது இருதரப்புவாதம் மற்றும் ஒருதரப்புவாதத்திலிருந்து வேறுபடுகிறது. இருதரப்புவாதம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைக் குறிக்கிறது, அதே சமயம் ஒருதரப்புவாதம் என்பது ஒரு நாடு தனது சொந்த நலன்களைப் பாதுகாக்கத் தனியாகச் செயல்படுவதைக் குறிக்கிறது. உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இருதரப்பு வரிகள் ஒருதரப்புவாதத்தைப் பிரதிபலிக்கின்றன.

original link:

 What is Multilateralism?


Share:

கலாச்சார அடிமைத்தனமா அல்லது சமத்துவக் குடியுரிமையா? மெக்காலேயின் தாராளவாத ஏகாதிபத்தியம். -சுகதா ஸ்ரீனிவாசராஜு

 மெக்காலேயின் கல்வி குறித்த குறிப்பு நிச்சயமாக வரலாற்றை மாற்றியது. ஆனால், அது இந்தியாவை அழிக்கவில்லை அல்லது அதன் கலாச்சாரத்தை அழிக்கவில்லை. மாறாக, மெக்காலே திட்டமிட்டபடி, ஆங்கிலம் ஒரு புதிய இந்திய வர்க்கத்தை உருவாக்கியது.


19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆறாவது ராம்நாத் கோயங்கா விரிவுரையின்போது தெரிவித்த கருத்துக்கள் பலவிதமான விமர்சனங்களைத் தூண்டியுள்ளன.


மோடி, இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்கு ஊக்கமளித்த 1835-ஆம் ஆண்டின் மெக்காலேவின் கல்வி அறிக்கையானது ("Macaulay's 1835 Minute on Education") ஒரு கலாச்சார "அடிமைத்தனத்தின்" மனநிலையை உருவாக்கியதாகக் கூறினார். மேலும், அது இந்தியாவின் கலாச்சார வேர்களிலிருந்து இந்தியாவைத் துண்டித்து, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் அதன் தன்னம்பிக்கையைச் சேதப்படுத்தியது என்றும் அவர் மேலும் கூறினார்.


பிரதமர் நரேந்திரா மோடி அவர்களின் கருத்துக்கள் பலரை வியக்க வைத்தன. குறிப்பாக, இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, திறமையான பணியாளர்கள் மற்றும் உலகளாவிய எழுச்சி ஆகியவை பெரும்பாலும் ஆங்கிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஆங்கிலத்துடன் ஏற்பட்ட தற்செயலான தொடர்பு அதன் முன்னேற்றத்திற்கு உதவியது என்று பலர் நம்புகின்றனர்.


ஆனால், மோடி அவர்கள் தனது அரசு ஆங்கில மொழிக்கு எதிரானதல்ல என்றும் மாறாக இந்திய மொழிகளுக்கு வலுவாக ஆதரவளிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார். ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் தாய்மொழிகளைக் கைவிடாத நாடுகளை  உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்தியாவின் வரலாறு வேறுபட்டிருந்தால் அதன் வளர்ச்சி வேறுபட்டு இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், கடந்தகாலம் மாற்றமுடியாத ஒன்று என்பதால், இது ஒரு "என்னவாக இருந்திருக்கும்" என்ற கேள்வியாகவே உள்ளது. இத்தகைய கற்பனையான கேள்விகள் உண்மையான நிகழ்வுகளைவிட அரசியல் மற்றும் தேசியவாதத்தை அடிக்கடி வடிவமைக்கின்றன.


மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவின் வரலாறுகள் இந்தியாவின் வரலாற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை என்றும் குறிப்பிட்டார். அவற்றின் மொழி மற்றும் கலாச்சாரக் கொள்கைகள் பெரிய வெற்றியையும் தீவிரமான பிரச்சினைகளையும் கொண்டுள்ளன. எனவே, அவற்றை இந்தியாவிற்கு ஒரு சரியான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்


இந்தியாவில் ஆங்கிலம் குறித்த விவாதங்கள் ஒருபோதும் எளிமையாக இருந்ததில்லை, அது சுதந்திரப் போராட்டத்தின் போதும் சரி, சுதந்திரத்திற்குப் பின்னரும் சரி. ஜனநாயகம், தாராளமயம் மற்றும் நவீன தேசம் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தின் மூலமாகவே வந்தன, பின்னர் அவை பிராந்திய மொழிகளுடன் கலந்து, நாடு முழுவதும் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைத் தூண்டியதாகத் தெரிவிக்கின்றனர்.


மிக முக்கியமாக, இந்தியா போன்ற அதிகபட்ச பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், குறிப்பாக துணைத் தேசியவாதங்கள் அல்லது சாதி மோதல்கள் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்தபோது, ​​ஆங்கில மொழியானது பதட்டங்களைத் தணிக்க உதவியுள்ளது. பல ஆண்டுகளாக, கூட்டாட்சி தத்துவம் ஆங்கிலத்தை நம்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற மொழியியல் ரீதியாக சிக்கலான ஒரு நாட்டில் ஆங்கிலம் ஒரு நிலைப்படுத்தும் மொழியாகக் கருதப்படுகிறது.


தென் இந்தியா “இந்தி ஆதிக்கத்தை” எதிர்த்தபோதெல்லாம், ஆங்கில மொழியானது ஜனநாயகத்தை சமநிலைப்படுத்தும் ஒரு கருவியாகச் செயல்பட்டு, மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே தொடர்பை சாத்தியமாக்கியது. ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக தலித்துகள், ஆங்கிலத்தை சாதிப் பாகுபாட்டில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாகப் பார்த்தனர். காங்கிரஸின் தலைவர்கள் மேற்கத்திய உடைகளை எரித்தபோதுகூட, அவற்றை அணியத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் இதனைப் பிரபலமாக வலியுறுத்தினார். பிராந்திய மொழிகள் வளமானவைதான், ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரை, அவற்றில் சாதி அடையாளங்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன — இந்த அம்சம் ஆங்கிலத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 


மெக்காலேயின் காலத்திலும்கூட, ஆங்கில மொழியை இந்தியாவிற்குள் கொண்டு வருவது ஒரு சுலபமான தெரிவாக இருக்கவில்லை. அதை இந்தியர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் கிழக்கத்தியவாதிகளான பிரிட்டிஷ் அறிஞர்களுக்கும், மக்காலே மற்றும் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் போன்ற ஆங்கில ஆதரவாளர்களுக்கும் இடையில்தான் மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு குழுக்களுமே காலனி ஆதிக்கத்தை ஆதரித்தன. ஆனால், இந்தியர்களை அணுகுவது மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது என்றும் தெரிவிக்கின்றனர்


மெக்காலேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜரீர் மசானி குறிப்பிடுகையில், தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டு (1835-ஆம் ஆண்டில் இந்தியா இன்னும் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழ் வரவில்லை), புதிய ஆங்கிலக் கொள்கையை விமர்சித்து ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு எழுதினார். இந்தியர்கள் ஆங்கிலத்தை தங்கள் மதத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதக்கூடும் என்று மில் எச்சரித்தார். மேலும், ஆங்கிலத்தைத் தழுவிய இந்தியர்கள் அரசாங்க வேலைகளைப் பெறுவதற்குத் தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்வார்கள், ஆழமான அறிவிற்காக அல்ல என்றும் அவர் வாதிட்டார்.


மக்கள் தங்கள் தாய்மொழிகளில் சிறப்பாகக் கற்கிறார்கள் என்று அவர் வாதிட்டார். இந்திய மொழிகள், சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளிலிருந்து சொற்களைப் பயன்படுத்தி வளர வேண்டும் என்றார். எனவே, அவருடைய கூற்றுப்படி, சாதாரண இந்தியர்களிடையே அறிவைப் பரப்புவதற்கு கிழக்கத்தியவாதிகளே, மேற்கத்தியவாதிகளைவிட மிகவும் பொருத்தமானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.  மேலும், சொந்தமாக ஆங்கிலம் கற்க வசதி உள்ளவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கற்பிப்பதற்காக பொதுப்பணம் செலவிடப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். இதை மில்லின் கருத்து என்று மசானி விளக்கினார். ஆனால், இந்தியர்களிடையே ஆங்கிலம் கற்க ஏற்கனவே ஒரு வலுவான விருப்பம் உள்ளது என்று மெக்காலே அதற்குப் பதிலளித்தார்.


மெக்காலேயின் குறிப்பின் வரலாற்றையும் அது எவ்வாறு கொள்கையானது என்பதையும் பார்க்கும்போது, மெக்காலே இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, 1834-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லார்ட் பென்டிங்க் ஏற்கனவே ஆங்கிலக் கல்வியை சமூக சீர்திருத்தத்துடன் இணைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. அவர் ராஜா ராம்மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகளுடன் நெருக்கமாகவும் இருந்தார்.


தொடக்கத்தில், இந்தியாவில் ஆங்கிலக் கல்வி என்பது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான ஒரு கருவியாகக் கருதப்பட்டது. ஆனால், மெக்காலேவின் கைகளில், அது ஒருவிதமான “தாராளவாத ஏகாதிபத்தியமாக” மாறியது. ஒரு விக் கட்சி (Whig party) அரசியல்வாதியான மெக்காலே, ஆங்கிலக் கல்வி ஒரு சமத்துவ நோக்கத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நம்பினார். மசானி குறிப்பிட்டதாவது, ரோமானிய குடிமக்கள் ஒருகாலத்தில் தங்கள் ஆட்சியாளர்களுடன் சமமானவர்களாக இருந்தது போல, இந்தியர்களும் இறுதியில் ஆங்கிலேயருக்குச் சமமானவர்களாக மாற வேண்டும் என்று மெக்காலே விரும்பினார். அவருக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஆர்வம் இல்லை என்றும் மாறாக அவரது நோக்கம் அதிக மதச்சார்பற்ற, கலாச்சார மற்றும் அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக மட்டுமே இருந்தது என்றும் கூறப்படுகிறது.


மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே, வங்காள மறுமலர்ச்சி (Bengali renaissance) ஏற்கனவே தொடங்கிவிட்டது. பிரம்ம சமாஜம் (Brahmo Samaj) ஐரோப்பிய அறிவொளி சிந்தனைகளை உபநிடதங்களுடன் (Upanishads) இணைக்க முயன்றது. கிழக்கு மற்றும் மேற்கு சிந்தனைகளை இணைக்கும் ஒரு கலாச்சார இயக்கம் இருந்தது. கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரியில் (Hindu College) (1817) ஏற்கனவே ஆங்கிலம், அறிவியல் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டது. புதிய சமஸ்கிருதக் கல்லூரி அறிவை முன்னேற்றுவதற்குப் பதிலாக மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கும் என்று ராஜா ராம் மோகன் ராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் கூறுகின்றனர்


மெக்காலே, கல்கத்தாவுக்கு வருவதற்கு முன்பே, மெட்ராஸ் மற்றும் மைசூரில் ஓய்வுபெற்ற அரசர்களுடனான சந்திப்புகள், கல்வியைப் பற்றிய அவரது கருத்துக்களை வடிவமைத்தன. மெட்ராஸ் நவாப், ஒரு முறையான கல்வி பெற்றிருந்தால், கர்நாடகத்தை மேம்படுத்துவதில் அவர் ஒரு சிறந்த சொத்தாக இருந்திருக்க முடியும் என்று நவாப் குறித்து எழுதினார். மைசூர் உடையார் அரசனைப் பொறுத்தவரை, கல்வி இல்லாமல் ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுத்து, பின்னர் தோல்வியடைந்ததற்காக அவர்களைத் தண்டிப்பது கொடுமையானது மற்றும் முட்டாள்தனமானது என்று அவர் கூறினார். எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளைத் தடுக்க அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்த அனுபவங்களிலிருந்தும் கருத்துக்களிலிருந்தும் மெக்காலேயின் குறிப்பு (Macaulay’s Minute) வந்தது, இது மறுக்கமுடியாமல் வரலாற்றை மாற்றியது. அது இந்தியாவை அழிக்கவோ அதன் கலாச்சாரத்தை அழிக்கவோ இல்லை. ஆங்கிலம் இன்றும் இருப்பது போலவே, பெரும்பாலும் ஒரு உயர் வர்க்கத்தினரின் மொழியாகவே நீடித்தது. மெக்காலே நோக்கம் கொண்டபடி, அது ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களின் ஒரு புதிய வர்க்கத்தை உருவாக்கியது.


ஸ்ரீனிவாசராஜு, சமீபத்திய நூலான "The Conscience Network: A Chronicle of Resistance to a Dictatorship" -ன் ஆசிரியர் ஆவார்.


original link:

Cultural slavery or equal citizens? The liberal imperialism of Macaulay


Share: