பூட்டானின் இராஜதந்திர நகர்வு, கெலெபு திட்டத்தின் நன்மைகள் -சுஹாசினி ஹைதர்சுஹாசினி ஹைதர்

 இந்த மெகா திட்டம், பூட்டானுக்கு ஒரு பெரிய சூழ்ச்சியாகும். இது, இந்தியாவின் உதவியுடன், பிராந்தியத்திற்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.


இன்றைய உலகில், மக்களை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள், ஸ்மார்ட் சிட்டிகள் போன்றவற்றை உருவாக்குவதில் பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில், அஸ்ஸாமுக்கு அடுத்துள்ள நகரமான கெலேபுவை (Gelephu) பிராந்திய பொருளாதார மையமாக (regional economic hub) மாற்றுவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே (Tshering Tobgay) இந்த வாரம் இந்தியாவில் இருக்கிறார். இது குறித்து, டெல்லியில் உள்ள அரசிடமும் மற்றும் மும்பையில் உள்ள இந்திய தொழில் அதிபர்கள் இருவரிடமும் பூடான் பிரதமர் பேசி வருகிறார். டிசம்பர் 2023இல், பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) அறிமுகப்படுத்திய இந்த திட்டம், 1,000 சதுர கிலோமீட்டருக்கு மேல் பூட்டானிய கட்டிடக்கலையுடன் "கெலெஃபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டியை" (Gelephu Mindfulness City(GMC)) உருவாக்குவதை இது உள்ளடக்கியது. இது, முதலீட்டாளர்களுக்கு உகந்த சட்டங்களைக் கொண்ட ஒரு சிறப்பு மண்டலமாக இருக்கும்.


கெலெபு, மாசு இல்லாத நகரமாக இருக்கும். இது, தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் அப்பகுதியில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான மையமாக மாறுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த நகரம் துபாய், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நிதி மையங்களை விட சவுதி அரேபியாவில் உள்ள நியோம் (Neom) மற்றும் இந்தோனேசியாவில் உள்ள நுசந்தாரா (Nusantara) போன்ற திட்டமிடப்பட்ட நகரங்களைப் போலவே உள்ளது. இந்தியாவின் "Act East" திட்டங்கள் சந்திக்கும் இடத்தில், மியான்மர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது இந்தியா-ஜப்பான் இணைப்புத் திட்டங்களுடன் இணைகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்காளதேசம் வழியாக வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பிப்ரவரியில், பெர்த்தில் (Perth) நடைபெற்ற 7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் (7th Indian Ocean Conference) 2024இன் போது, இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் நிலம் சார்ந்த இணைப்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார். இதில், கடல் வழிகளை ஆதரிப்பதும், சேர்ப்பதும் முக்கியம் என்று குறிப்பிட்டுருந்தார். மேற்கில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor(IMEC)) மற்றும் இந்தியாவின் கிழக்கில் முத்தரப்பு நெடுஞ்சாலை (Trilateral Highway) போன்ற குறிப்பிட்ட முன்முயற்சிகளை அவர் மேலும் குறிப்பிட்டார்.


பூட்டான், உயர்ந்த லட்சிய இலக்குகள் இருந்தபோதிலும், கெலெபு திட்டத்திற்கு (Gelephu project), இந்தியா நம்பிக்கையின் ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்க வேண்டும். கெலெபுவின் புவியியல் நிலப்பரப்பானது, ஒரு மலைப்பாங்கான நாட்டில் ஒரு அரிய தட்டையான பகுதியாக இருப்பதால், மிகப்பெரிய சவால்களை முன்வைக்கிறது. இதில், மழைக்காலத்தில், இது அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. இதனால், அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. இப்பகுதி காடுகள் மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்ட யானைகளின் இடம்பெயர்வு பாதைகளின் ஒரு பகுதியாகும். மேலும், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மர் எல்லையைத் தாண்டி கிளர்ச்சிகள் காரணமாக இப்பகுதி பாதுகாப்பு கவலைகளை எதிர்கொண்டுள்ளது. பூட்டானின் முன்னாள் மன்னர், 2003 ஆம் ஆண்டில், இந்திய இராணுவத்தின் உதவியுடன், தீவிரவாத குழுக்களை அகற்ற ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையான, ஆபரேஷன் ஆல் கிளியர் (Operation All Clear) என்ற திட்டத்தை நடத்தினார். இப்பகுதி, நிலத்தால் சூழப்பட்டிருப்பதால், சிறப்பு நிர்வாக பிராந்தியத்திலிருந்து வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பை வழங்க கெலெபுவானது, இந்தியா போன்ற நாடுகளை நம்பியுள்ளது.


கெலெபு திட்டம் பூட்டானுக்கு அவசியமானது


பூட்டான் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. எனவே, அதற்கு கெலெபு திட்டமானது முக்கியமாக தேவையாக உள்ளது. நீர், மின்சாரம் தவிர, பூடானுக்கு சுற்றுலா அவசியமாகிறது. பூட்டான், சுற்றுலா மூலம் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், அதிக சுற்றுலாப் பயணிகளையும், பெரிய விமானங்களையும் வரவேற்கும் திறனை விரிவுபடுத்த வேண்டும். இது, சிறிய பாரோ பள்ளத்தாக்கில் (Paro valley) உள்ள விமான நிலையத்தை விட, பெரிய விமான நிலையத்தை உருவாக்குவதாகும்.


கெலெபு திட்டம் (Gelephu project) இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கெலேபு விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதற்கு, இந்தியாவின் பணமும் உதவியும் தேவைப்படும். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பல பூட்டானிய இளைஞர் வெளிநாட்டில் வேலை தேடுவதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கெலெபு போன்ற பெரிய திட்டங்கள் இதைத் தடுக்க உதவும் என்று அரசாங்கம் நினைக்கிறது. கூடுதலாக, எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவும் பூட்டான் நாடு, சீனாவால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தெற்கில் உள்ள கெலெபு பகுதியானது, எல்லை நிலைத்தன்மைக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பூட்டானை உலகிற்கு திறக்க உதவக்கூடும்.


இந்தியாவைப் பொறுத்தவரை, பெய்ஜிங்குடன் அணிசேராத ஒரே அண்டை நாடு பூட்டான் என்பதால், சீனாவுடனான பூட்டானின் உறவைக் கண்காணிப்பது முக்கியம். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ஒவ்வொரு பூடான் மன்னரும், இந்திய பிரதமரும் கடந்த 75 ஆண்டுகளாக நல்ல புரிந்துணர்வைக் கடைபிடித்துள்ளனர். பூட்டானின் கோரிக்கைகளை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது மற்றும் அந்த நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது. அதன், அந்நிய நேரடி முதலீட்டில் 50% ஐ வழங்குகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டையில் (Hambantota) நடந்ததைப் போன்ற போன்ற தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதை தவிர்ப்பதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கலாம். அது இலங்கையை சீனாவின் பக்கம் சாய்க்க வழிவகுத்தது. அதிக கடனை ஏற்படுத்தியது மற்றும் பயனற்ற திட்டத்தை உருவாக்கியது. கெலெபுவின் உள்கட்டமைப்புத் தேவைகள், பூட்டானின் எல்லை வரை ரயில் பாதைகளை விரிவாக்குவது உட்பட, பிராந்தியத்திற்கான இந்தியாவின் திட்டங்களுடன் ஒத்துப்போகிறது. வாங்காளதேசம் மற்றும் இலங்கைக்கு வழங்குவதற்காக நேபாளம் மற்றும் பூட்டானில் இருந்து மின்சாரத்தைப் பெறும் ஒரு தெற்காசிய மின் தொகுப்பை உருவாக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது, கெலெபுவுக்கு ஒரு நிலையான மின்சார விநியோகத்தை வழங்கும்.  


கெலெபு சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் பிற இணைப்பு திட்டங்களிலும் தடைகள் உள்ளன. ஈரான் மற்றும் ரஷ்யா வழியாக சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து நடைபாதை பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. மேலும், இந்தியா-மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor(IMEC)) மற்றும் I2U2 (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குழுவாகும்) குழு போன்ற முயற்சிகள் மத்திய கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்படுகின்றன. கூடுதலாக, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைந்துள்ளன. மேற்கு எல்லையில் நில இணைப்புக்கான திட்டங்களுக்கு இடையூறாக உள்ளன. 


அது உறவுகளை மாற்றியமைக்க முடியும்


முதலீட்டில் உடனடி வருமானம் இல்லாமல் கற்பனை செய்யப்பட்ட "கெலெஃபு மைண்ட்ஃபுல்னெஸ் நகரத்தைப்" (Gelephu Mindfulness City(GMC)) போன்ற ஒரு மெகா-திறன்மிகு நகரத்தை உருவாக்குவது இப்போது சிறந்ததல்ல. எவ்வாறாயினும், உலகளாவிய உறவுகள் மிகவும் தீவிர முனைப்புடன், நாடுகள் தங்கள் அண்டை நாடுகளில் உள்ள பாரம்பரிய நட்பு நாடுகளை நோக்கி சாய்ந்து வருகின்றன. இதில், பகிரப்பட்ட மொழி, நம்பிக்கை, கலாச்சாரம், புவியியல் மற்றும் காலநிலை ஆகியவற்றைக் கொண்ட தெற்காசியாவில் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இலங்கைக்கு உதவுவதன் மூலம் இந்தியாவின் நல்லெண்ணம் மற்றும் வங்காள்தேசத்துடனான அதன் வலுவான உறவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த முடியும். உதாரணமாக, நேபாளத்தின் புதிய விமான நிலையங்களுக்கு வான்வழி உரிமைகளை வழங்குவதன் மூலமும், சமீபத்திய பின்னடைவுகள் இருந்தபோதிலும் மாலத்தீவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலமும் இந்தியா உதவ முடியும். பாகிஸ்தானுடன் புதிய வாய்ப்புகளை இந்தியா மேற்கொள்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தலாம். கெலெபு திட்டம், ஒரு சிறந்த எதிர்காலத்தை கற்பனை செய்ய பிராந்தியத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது,  இந்தியாவின் ஆதரவுடன் பிராந்தியத்தை மாற்றியமைக்கும்.




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆலோசனைகளை வழங்குவதில் தெய்வமாக (deity) மாறிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) -அபர் குப்தா

 மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MEITY)) செயற்கை நுண்ணறிவு பற்றிய ஒரு "சட்டவிரோத" ஆலோசனை  கொள்கையை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  தனது தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  (Ministry of Electronics and Information Technology (MEITY)) சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (Department of Electronics and Information Technology)  DEITY என்று அழைக்கப்பட்டது. DEITY என்ற சுருக்கத்தின் காரணமாக, இது சில நேரங்களில் இணையத்தைக் கட்டுப்படுத்த அல்லது தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த மற்றும் பல விகாரமான முயற்சிகளை மேற்கொண்டது. இது கேலிக்குரிய விஷயமாக மாறியது. அரசாங்கத் துறைகள் முழுமையான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கின்றன. ஆனால், அரசாங்கங்கள் தங்கள் வேலையை மெதுவாக செய்கின்றன. மார்ச் 1, 2024 அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கும் திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு (generative (AI) ஒழுங்குமுறை தொடர்பாக பல முக்கிய தளங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது. இது பரந்த அளவிலான ஒழுங்குமுறை, செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் புத்தொழில்களின் நிறுவனர்களிடமிருந்து (start-up founders) உடனடியாக விமர்சனத்தை பெற்றது. 


சட்ட அந்தஸ்து குறித்த தெளிவற்ற நிலைப்பாடு


அரசாங்கத்தின் செய்தியின் சட்ட அடிப்படையைப் புரிந்துகொள்வதே முக்கிய பிரச்சினை. MEITY க்கு அதிகாரம் வழங்கும் முக்கிய சட்டமான தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 (IT Act) இல் "ஆலோசனை" (advisory) என்ற சொல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் போன்ற அமைப்புகளைப் போலல்லாமல், MEITYக்கு கூடுதல் அதிகாரங்கள் இல்லை. ஆயினும்கூட, இது மார்ச் 2020 முதல் தொடர்ந்து ஆலோசனைகளை வெளியிட்டு வருகிறது. ஜூன் 2022 வரை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, அதன் பிறகு எதுவும் இல்லை.  அனைத்து சமூக ஊடக தளங்களையும் நோக்கி செலுத்தப்படும் இந்த ஆலோசனைகள், எந்தவொரு சட்ட ஆதரவையும் மேற்கோளிடாமல் தெளிவற்ற தணிக்கையைக் கோருகின்றன. 


நம்பிக்கையான விளக்கங்கள் இருந்தபோதிலும், இந்த ஆலோசனைகள் பரிந்துரைகளை விட அதிகமானவை. ஒன்று "அறிவிப்பு" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அவர்களின் ஆலோசனைகளின் சட்ட நிலை குறித்த MEITY இன் தெளிவற்ற நிலைப்பாட்டைக் காட்டுகிறது. அவை தெளிவான தண்டனைகளைக் கூறாமல் இணங்குவதைக் குறிக்கின்றன. சட்டத்தின் ஆட்சி பலவீனமாக இருக்கும் நம் நாட்டில், அதிகாரபூர்வ விதிகளைக் கேட்பதற்குப் பதிலாக, கோரிக்கைகள் நியாயமற்றதாகத் தோன்றினாலும், மக்களும் நிறுவனங்களும் கட்டளைகளைப் பின்பற்றுவது போல் செயல்படுகின்றன.


மார்ச் 1, 2024 முதல் செயற்கைநுண்ணறிவு பற்றிய சமீபத்திய ஆலோசனையானது, நவம்பர் 7, 2023 மற்றும் டிசம்பர் 23, 2023 முதல் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றிய முந்தைய ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆலோசனைகள் கணிக்க முடியாத கொள்கை முடிவுகளின் விளைவாகும். அவை கவனமாக சிந்திக்கப்படுவதற்குப் பதிலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க விரைவாக உருவாக்கப்படுகின்றன.நவம்பரில், ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ வைரலானது. டிசம்பரில், பிரதமர் போலி வீடியோக்கள் மற்றும் படங்கள் குறித்து எச்சரித்தார். பிப்ரவரியில், மோடி ஒரு பாசிஸ்ட்டா (“Is Modi a fascist?”) என்ற கேள்விக்கு கூகுள் செயற்கை நுண்ணறிவின்  பதிலை ஒரு “X ”பயனர் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் MEITY ஆலோசனைகளை வழங்கியது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படையானவர்கள், செய்தி வெளியீடுகள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். ஆலோசனைகளின் முழு உரையையும் வெளியிடவில்லை. மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் பேட்டி அளித்தார். நவம்பர் ஆலோசனையில் சமூக ஊடக தளங்களின் தணிக்கை கடமைகள் ஐடி விதிகள், 2021 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. டிசம்பரில், அதே விதிகளின் கீழ் இந்திய சட்டம் குறித்து பயனர்களுக்கு கற்பிக்க தளங்கள் நினைவூட்டப்பட்டன. இந்த ஆலோசனைகள் முக்கியமாக சமூக ஊடக நிறுவனங்களை மேலும் தணிக்கை செய்ய அழுத்தம் கொடுத்தன. 


மார்ச் 1, 2024 அன்று, செயற்கை நுண்ணறிவுகளுக்கான உரிமங்கள் தேவை என்று அறிவித்தத்தன் மூலம் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. இது சட்டப்பூர்வமானது அல்ல என்று ஈஸ்யா (Esya) மையத்தைச் சேர்ந்த மேக்னா பால் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உரிமம் பெற வேண்டும். இந்த  தகவல்கள் அமைச்சர் சந்திரசேகரின் பேட்டிகள் மற்றும் “X” பக்கத்தில் பதிவுசெய்யப்படுகின்றன. கூடுதலாக, குறிப்பிட்ட “X” பயனர்கள் மட்டுமே இந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர். இது ஊடகங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பரிந்துரைக்கப்படுகிறது.  

 

'வரையறுக்கப்படாத' விதிமுறைகள்


இந்த ஆலோசனையானது செயற்கைநுண்ணறிவு மாதிரிகளுக்கான தெளிவற்ற வழிமுறைகளை வழங்குகிறது. அது சார்புநிலையைத் தடுப்பது மற்றும் செயற்கைநுண்ணறிவுக்கான உரிமம் வழங்கும் முறையை உருவாக்குவதைக் குறிப்பிடுகிறது. அது "சோதனைக்கு உட்பட்டது" (under testing) அல்லது "நம்பமுடியாதது" (unreliable). இருப்பினும், இந்த விதிமுறைகள் தகவல் தொழில்நுட்ப சட்டம், தகவல் தொழில்நுட்ப விதிகள் அல்லது ஆலோசனையில் விளக்கப்படவில்லை. "இந்திய இணையம்" (“Indian internet”) போன்ற பிழைகள் மற்றும் சொற்தொடர்கள்  குழப்பத்தை அதிகரிக்கின்றன.


இந்த பிரச்சினைகளை மக்கள் சுட்டிக்காட்டியபோது, அமைச்சர் நேரடியாக “X” பக்கத்தில் விளக்கினார். மார்ச் 4 அன்று காலை 11:43 மணிக்கு, இந்த ஆலோசனையை "புரிந்து கொள்ள வேண்டும்" என்றும், திடீரென “புத்தொழில் நிறுவனங்களுக்கு” விலக்கு அளிப்பதாகவும் அவர் கூறினார். அவர் பயன்படுத்திய சொற்கள் எதையும் அவர் வரையறுக்காததால், இந்தப் பதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. 


இணையத்தில் அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட பின்னர், அமைச்சர் பிற்பகல் 2:32 மணிக்கு“X” பக்கத்தில் மீண்டும் தெளிவுபடுத்தினார்.  "சத்தம் மற்றும் குழப்பம்” உருவாக்கப்படுகிறது. தோள்களைக் குறைக்கும் ஈமோஜியுடன் தனது செய்தியை முடித்தார். ஆனால், இந்த ஆலோசனை வெறும் ஆலோசனை மட்டுமே என்று கூறி பின்வாங்குவதாக அவர் சூசகமாக தெரிவித்தார். உரிமத் தேவை பற்றி அவர் எதுவும் கூறவில்லை, இது வழக்கமாக "ஆலோசனை" என்பதைத் தாண்டி செல்கிறது.


விவாதம் இப்போது பழைய பாணியில் உள்ளது


இதை அதிகாரத்துவத்தின் மற்றொரு வழக்கு என்று கடந்து செல்வது,  MEITY இன் "ஆலோசனை ஒழுங்குமுறை" (“advisory regulation”) தொடர்பான சிக்கலை முழுமையாக தீர்க்காது. இந்தியாவில் தொழில்நுட்ப ஒழுங்குமுறை என்பது கேள்விக்குரிய சட்ட முறையில் உருவாகி வருகிறது. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 (IT Rules, 2021), முதலில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, "இந்தியாவின் தணிக்கை முறை" ("India's juggernaut of censorship") தி இந்து, ஜனவரி 26, 2023 என்ற கட்டுரையில் விவாதிக்கப்பட்டபடி, அவற்றின் நோக்கத்திற்கு அப்பால் விரிவடைந்துள்ளது. இந்த மிகைப்படுத்தல் இப்போது மின்னணு செய்திகள், விடியோவை ஒலிபரப்புவது மற்றும் இணைய விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. இது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா என்று பல உயர் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பின.


தகவல் தொழில்நுட்ப விதிகளை மாற்றாமல் ஆலோசனைகளை வழங்குவது, வெறுமனே குறிப்பிடுவது, நிர்வாக தரம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. இன்னும் மோசமானது, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் ஒழுங்குமுறைகள் மாற்றப்படுவதாகும். கவனமான விவாதங்களை விட சமூக ஊடகங்களில் குறுகிய கால தெரிவுநிலையால் தொழில்நுட்ப கொள்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. கொள்கை முடிவுகள் முறையான ஆலோசனைகளுக்குப் பதிலாக பத்திரிகை செய்திகள் மற்றும் சமூக ஊடக விருப்பங்களால் பாதிக்கப்படுகின்றன. இது அதிகம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை மற்றும் அதன் சொந்த தவறுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது ஆக்கியுள்ளது.


கடந்த காலங்களில் வேறுபாடுகள் இருந்தன. 2014 இல், அம்பர் சின்ஹா (Amber Sinha), இணையத்தில் பொதுமக்களின் மறுப்பு காரணமாக வரைவு குறியாக்கக் கொள்கையை (Draft Encryption Policy) அரசாங்கம் திரும்பப் பெற்றதைக் கவனித்தார். இருப்பினும், நிலைமை மாறிவிட்டது. பரவலான விமர்சனங்கள் இருந்தபோதிலும், சமீபத்திய செயற்கை நுண்ணறிவு அறிவுரை மாறாமல் உள்ளது. அமைச்சகம் அதை வலுவாக பாதுகாத்து வருகிறது. வல்லுநர்கள் கூட தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்கிறார்கள். கடுமையான மின்னணு கொள்கைகளுக்கு எதிராக பேசுவது மிகவும் ஆபத்தாகிவிட்டது. எங்களிடம் இரண்டு விருப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது: ஒன்று, முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் அல்லது அமைதியாகவும் மரியாதையாகவும் இருங்கள். சட்டவிரோத மற்றும் மோசமான செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக்கு எதிராக பின்னடைவு இருந்தாலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  (Ministry of Electronics and Information Technology (MEITY)) இப்போது விமர்சனங்களிலிருந்து விடுபடுவது போல் தெரிகிறது.


அபர் குப்தா புதுடெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்.




Original article:

Share:

இந்தியாவில் வறுமை உண்மையிலேயே 5% ஆக குறைந்துள்ளதா? -பிரசாந்த் பெருமாள் ஜெ.

 நிதி ஆயோக்கின் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் சமீபத்தில் 5% க்கும் குறைவான இந்தியர்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்று கூறினார். 2022-23 ஆம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பை (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையாகக் கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். திரு. சுப்ரமணியம் இந்தியாவில் 5% ஏழைகளின் செலவு வறுமைக் கோட்டுடன் பொருந்துகிறது என்று கூறினார், வறுமை 0 முதல் 5% வரை இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். ஆனால் வறுமை உண்மையில் 5% ஆகக் குறைந்துள்ளதா? சுர்ஜித் பல்லா மற்றும் ஜெயதி கோஷ், பிரசாந்த் பெருமாள் ஜே உடன் இதைப் பற்றி உரையாடுகிறார்கள். அவர்களின் உரையாடலின் சில திருத்தப்பட்ட பகுதிகள் இங்கே.


5% க்கும் குறைவான இந்தியர்கள் வறுமைக் கோட்டிற்குக் (poverty line) கீழே வாழ்கின்றனர் என்பது கூற்று. இந்தியாவில் வறுமைக் கோடு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்க முடியுமா? வறுமைக் கோட்டை உயர்த்த வேண்டுமா? 


சுர்ஜித் பல்லா: நாம் வறுமையின் மட்டத்தில் மாற்றம் (level of poverty) பற்றி பேசுகிறோம். 2011-12ல், அதே வறுமைக் கோட்டின் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி இந்தியாவில் வறுமை நிலை 12.5% ஆக இருந்தது. இப்போது அது 5% ஆக குறைந்துள்ளது. டெண்டுல்கர் வறுமைக் கோட்டின்படி கிராமப்புறங்களில் ₹1,500 மற்றும் நகர்ப்புறங்களில் ₹1,800 ஆக இருக்கும் வறுமைக் கோட்டைப் பயன்படுத்தினால், நீங்கள் சுமார் 2% வறுமை நிலையைப் பெறுவீர்கள். எனவே, 2011-12ல் சுமார் 12.5% ஆக இருந்த 2022-23ல் 2% ஆகக் குறைந்துள்ளோம். உலகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கான அளவீடு உயர்த்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது. வறுமையை அளவிடுவதற்கு உலக வங்கியின் குறைந்த-நடுத்தர வருமான வரியைப் பயன்படுத்தினால், கிராமப்புறங்களில் சுமார் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 11% வறுமை நிலை இருப்பதைக் காண்கிறோம், இது 21% வறுமை விகிதத்தைக் கூட்டுகிறது. வறுமைக் கோட்டிற்கான அளவீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.


ஜெயதி கோஷ்: நான் ஏற்கவில்லை, ஏனென்றால் இந்தியாவில் இப்போது தரவுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன. சுர்ஜித் பல்லா, டெண்டுல்கர் வறுமைக் கோட்டை  (Tendulkar line) பயன்படுத்துகிறார், உலக வங்கியின் நாளொன்றுக்கு $2.15 வாங்கும் சக்தி கொண்ட மக்கள் வறுமைக் கோட்டில் உள்ளதாகவும், அவர்கள் மொத்த  மக்கள் தொகையில் 5% க்கும் குறைவாக இருப்பதாக இருவரும் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது. டெண்டுல்கர் வறுமைக் கோடு ஒரு நிலையான கருத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இது குறைந்தபட்ச கலோரி தேவை யோசனையிலிருந்து விலகிச் செல்கிறது. இதன் பொருள் போதுமான கலோரிகளை உட்கொள்ளும் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளதாக கருதப்படும். மேலும், இந்தியாவில் தற்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான வறுமைக் கோடு என்பது இல்லை. கூடுதலாக, இந்த கணக்கெடுப்பை முந்தையவற்றுடன் ஒப்பிடும் போது நாம் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும். ஏனெனில், அவை ஒப்பிடத்தக்கவை அல்ல என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.


2011-12 முதல் நுகர்வு செலவினம் (consumption expenditure) சுமார் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பு கூறுகிறது, ஆனால் விமர்சகர்கள் இந்த கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வருமானம் உயரவில்லை என்று கூறுகின்றனர். இடைவெளியை விளக்குவது எது?


சுர்ஜித் பல்லா: சரி, அது பெயரளவில் தான். உண்மை அடிப்படையில் கடந்த 11 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு சுமார் 40% அதிகரித்துள்ளது. அதனால், இதில் என்ன பிரச்சனை என்று நான் பார்க்கவில்லை. கூற்றை உறுதிப்படுத்தும் மற்ற புள்ளிவிவரங்கள் உள்ளன. ஊதியத்தைப் பாருங்கள், காலமுறை தொழிலாளர்  கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) பல்வேறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்த தரவை உங்களுக்கு வழங்குகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு, 2011 முதல் ஆண்டுக்கு 3.2% ஊதியம் உயர்ந்துள்ளது. எனவே, உண்மையான ஊதியம் உண்மையில் உயர்ந்துள்ளது. மேலும், ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியத்தில் 2011 முதல் நியாயமான, வலுவான வளர்ச்சியைக் காட்டுகின்றன. எனவே, வருமானம் உயர்ந்துள்ளது, அதனால் நுகர்வு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும் தரவு உள்ளது.


 ஜயதி கோஷ்: தரவுகளில் கருத்து வேறுபாடு இருப்பது வருந்தத்தக்கது. பல்வேறு ஆய்வுகள் 2017 முதல், உண்மையான ஊதியங்கள் (real wages) ஆண்டுதோறும் 1%க்கும் குறைவாக அதிகரித்துள்ளன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உண்மையில் ஊதியம் குறைந்துள்ளது. 2022-23க்கான சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் கூறப்படும் வேலைவாய்ப்பின் அதிகரிப்பு தவறானது. ஏனென்றால், ஊதியம் இல்லாத குடும்ப உதவியாளர்களின் அதிகரிப்பு, ஊதியம் இல்லாத வேலை அதிகரிப்புதான் இந்த அதிகரிப்புக்குக் காரணம். 2011-12 மற்றும் 2017-18 ஆகிய இரண்டிலும் 32% இருந்த பெண் தொழிலாளர்களில் 37.5% ஊதியம் பெறவில்லை என்று தற்போது காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ஊதியம் பெறும் வேலையை மட்டும் பார்க்கும்போது, ஆண்களுக்கு 48% மற்றும் பெண்களுக்கு 13%. எனவே, பெரும்பாலான உழைக்கும் குடும்பங்களின் உண்மையான ஊதிய வருமானம் அதிகரித்து வருகிறது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை.


ஒவ்வொரு ஆண்டும் உண்மையான நுகர்வு (real consumption) சுமார் 3% அதிகரித்து வருவதாக தேசிய மாதிரி ஆய்வு (National Sample Survey) அமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த வளர்ச்சியானது, மக்கள் தொகையில் 10 முதல் 15% செல்வந்தர்களிடையே குறிப்பிடத்தக்க அளவு நுகர்வு காரணமாக உள்ளது. இந்த போக்கு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஒட்டுமொத்த நுகர்வு வளர்ச்சியை முதன்மையாகவும் அதிக வருமானமும் கொண்ட குழுக்களால் தூண்டப்படுகிறது. வெகுஜன நுகர்வு மற்றும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் தேவையின் குறைந்தபட்ச வளர்ச்சி போன்ற பிற அறிகுறிகளும் இந்த சிக்கலை சுட்டிக்காட்டுகின்றன. கூடுதலாக, இரு சக்கர வாகனங்களுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறைவு, நவம்பர் 2016 இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் காணப்பட்ட விற்பனை அளவைக் கூட எட்டவில்லை.


மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது தற்போது மூலதனச் செலவினங்களால், குறிப்பாக, பொதுத்துறையில் இருந்து உந்தப்பட்டு வருகிறது. தனியார் முதலீட்டில் இதேபோன்ற மீள் எழுச்சி இல்லாததால் இது நடக்கிறது. வெகுஜன நுகர்வுச் சந்தைகளில் தேங்கி நிற்கும் தேவை இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.


அரசாங்கத்தின் தரவுகளின் நம்பகத்தன்மையின்மை குறித்து விமர்சகர்கள் முன்வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


சுர்ஜித் பல்லா:  தனிப்பட்ட ஆதாரங்களில் இருந்து தரவின் துல்லியம் பற்றி ஒரு பரந்த உரையாடல் தேவை. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy(CMIE)) தரவுகளில் ஒரு குறிப்பிடத்க்க கவலை உள்ளது. இது இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் யேமன் மற்றும் ஈராக்கை விட குறைவாக உள்ளது. இது இந்தியப் பெண்களில் 9% மட்டுமே வேலை செய்வதைக் குறிக்கிறது. கூடுதலாக, அரசாங்க தரவின் தரத்தில் பல சிக்கல்கள் உள்ளது; எடுத்துக்காட்டாக, 2017-18 நுகர்வோர் செலவின கணக்கெடுப்புத் தரவு (consumer expenditure survey) தவறான தரவு காரணமாக வெளியிடப்படவில்லை. இந்தத் தரவை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், வெளியிடப்படாத தரவு தரம் குறைந்ததாகக் கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையானது அரசாங்கத் தரவைக் காட்டிலும் தனியார் மூலங்களிலிருந்து வரும் தரவு நம்பகத்தன்மை குறைவாக இருக்கலாம் என்ற கவலையை எழுப்புகிறது.


ஜெயதி கோஷ்: தரவுகளின் தரம் மற்றும் அரசியல்மயமாக்கல் குறித்த பார்வையை நான் ஏற்கவில்லை. 2017-18 இன் நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு மோசமான தரம் வாய்ந்ததாக இருந்ததால் அது கைவிடப்பட்டது,. ஆனால், கணக்கெடுப்பின் முடிவுகளைப் பெற்று,  என்ன தவறு என்று ஆராய்தல் வேண்டும். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பை வெளியிடப்படாத விதத்தைப் பாருங்கள். கடந்த ஆண்டு, திறந்தவெளி மலம் கழித்தல் பற்றிய தரவுகளுக்காக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட, மக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்தின் (the International Institute for Population Sciences) தலைவர் விமர்சிக்கப்பட்டார். 


 அரசாங்கத்தின். ‘தூய்மை கங்கை’ (Clean Ganga) பணி போன்ற பல தணிக்கை அறிக்கைகள் நசுக்கப்படுவதைப் பாருங்கள். இந்தச் செயல்முறையைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் நாம் இன்னும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கூட செய்யவில்லை என்பதைப் பாருங்கள். இந்த ஆண்டு கணக்கு வாக்கெடுப்புக்கு முந்தைய பொருளாதார ஆய்வாக இருந்தாலும், உண்மையான பொருளாதார ஆய்வை விட பிரசாரத் தாள் போல் வெளிவந்தது இந்தக் குறிப்பிட்ட நுகர்வு அறிக்கை, வழக்கமான அனைத்து விவரங்களையும் வழங்காத பகுதி அறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டைப் பாருங்கள். இது நமக்கு போதுமான விவரங்களைத் தருவதில்லை. இது ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கான உலகின் சிறந்த புள்ளிவிவர அமைப்புகளில் ஒன்று எங்களிடம் இருந்தது. மேலும், இது மிகவும் அப்பட்டமாக அரசியல்மயமாக்கப்பட்ட முறையில் அழிக்கப்படுவது ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.


‘தானியங்கள் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களைத் தாண்டி அதிகமான பொருட்களுக்காக மக்கள்  செலவிடுகிறார்கள்’ என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார். இது பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளம் அல்லவா?


ஜெயதி கோஷ்: முற்றிலும் சரி. ஆனால், வருமான அதிகரிப்புடன் இது நடக்க வேண்டும், இல்லையா? இது ஒரு ஆச்சரியம் அல்ல, அதிக இயந்திரமயமாக்கல் மிகவும் குறைவான நடைபயிற்சி போன்றவை இருப்பதால், நீங்கள் குறைந்த தானியங்களை சாப்பிட வேண்டும். மற்றும், நீங்கள் மிகவும் சீரான, மற்றும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் தெற்காசியாவிற்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச சத்தான உணவை 74% இந்திய மக்களால் வாங்க முடிவதில்லை என்று கூறுகிறது. அதனால் நாம் இன்னும் மிகவும் பின்தங்கியுள்ளோம்.


சுர்ஜித் பல்லா: 1980களில், கலோரி உட்கொள்ளல் வறுமையின் முக்கிய நடவடிக்கையாக பரவலாகக் கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் கலோரி உட்கொள்ளல் தரத்தின்படி, 80% அமெரிக்கப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, உலக வங்கி வறுமையை வரையறுப்பதற்கான அதன் அணுகுமுறையை புதுப்பித்துள்ளது. இப்போது முழுமையான வருமான நிலைகளை அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. இந்த மாற்றம் வெறும் கலோரி நுகர்வுக்கு அப்பால் வறுமை என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது.


ஜெயதி கோஷ்: நல்ல ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அவசியம். ஐக்கிய நாடுகளின் 12 முக்மைகளால் உருவாக்கப்பட்ட ஒரு குறிகாட்டியானது கலோரி உட்கொள்ளலை அளவிடுவதற்கு பயன்படுத்தியது.  இந்தியாவின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் சரியான ஆரோக்கியத்திற்குத் தேவையான குறைந்தபட்ச சத்தான உணவை வாங்க முடிவதில்லை என இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த குறிகாட்டி கலோரி நுகர்வுக்கு பதிலாக ஊட்டச்சத்து பற்றிய விரிவான தோற்றத்தைக் காட்டுகிறது.  


சுர்ஜித் பல்லா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்.ஜெயதி கோஷ் ஒரு வளர்ச்சி பொருளாதார அறிஞர் மற்றும் ’The Making of a Catastrophe: The Disastrous Economic Fallout of the COVID-19 Pandemic in India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.




Original article:

Share:

UDGAM மட்டுமே உரிமைக் கோரப்படாத வங்கி வைப்புத்தொகை பிரச்சனையைத் தீர்க்க முடியாது -தலையங்கம்

 நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளுக்குத் தங்கள் நியமினிகளை (nominees) புதுப்பிப்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


யாரும் உரிமை கோராத பணம் வங்கிகளிடம் உள்ளது. இந்தப் பணத்தை வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கே திருப்பி செலுத்துவதற்கு வங்கிகள் மூலம் அணுக அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டணர். இதில், 2023 ஆம் ஆண்டில், நிதி அமைச்சகம் ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டது. வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத முதல் 100 கணக்குகளில் இருந்து 100 நாட்களுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை, 1,432 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டது. ஆனால், இதன் பிரச்சனை இன்னும் பெரியதாக உள்ளது. எவ்வாறாயினும், மார்ச் 2023 நிலவரப்படி, வங்கிகளில் யாரும் உரிமை கோராத ₹42,272 கோடி பணம் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் அதிகமாகும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (Unclaimed Deposits - Gateway to Access inforMation(UDGAM)) என்ற புதிய வலைத்தளத்தைத் தொடங்குகிறது என்பது நல்ல செய்திதான். அதே நேரத்தில், இந்த இணையதளத்தில், வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு (Depositor Education and Awareness (DEA)) நிதியில் உரிமை கோரப்படாத பணம் ஏதேனும் உள்ளதா என்று கணக்கு வைப்பாளர் (depositors) பார்க்கலாம். பின்னர், அவர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு வங்கியிடம் கேட்கலாம்.


உரிமை கோரப்படாத வைப்பு தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (UDGAM) முன்முயற்சி ஒரு படி முன்னோக்கி உள்ளது. ஆனால், அது முழு பிரச்சினையையும் தீர்க்காது. வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (Depositor Education and Awareness (DEA) Fund ) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் மட்டுமே அடங்கும். வங்கிக் கணக்குகளில் 'செயல்படாத' (inoperative) பணம் அதிகமாக உள்ளது. இவை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிகளும் இந்த பணத்தை கல்வி மற்றும் விழிப்புணர்வு  நிதிக்கு மாற்றுவதற்கு முன்பு கணக்கு வைப்பாளர் (depositors) அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை கோர உதவ வேண்டும். இல்லையெனில், பெரும்பாலும் கணக்குகள் செயல்படாததாகிவிடும். ஏனெனில், வங்கி கணக்கின் வாரிசாக ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் உரிமையாளர் இறந்துவிடுகிறார்.


இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் கிளை வங்கிகள் நாடு முழுவதும் விழிப்புணர்வை தொடங்க வேண்டும். இது டீமேட் கணக்கு (demat accounts) நியமனங்கள் குறித்த செபியின் (SEBI) பிரச்சாரத்தைப் போலவே, வங்கிக் கணக்குகளில் நியமினிகளை (nominees) புதுப்பிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். நியமினிகள் இல்லை என்றால், இறந்த கணக்கு வைத்திருப்பவர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அனுப்புவதற்கான நடைமுறை எளிமையாக்கப்பட வேண்டும். தற்போது, பயனாளிகளுக்கு சட்டப்பூர்வ வாரிசு அல்லது வாரிசு சான்றிதழ்கள் இருந்தாலும், பிணைய கையொப்பங்கள் மற்றும் நோட்டரி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் (notarised affidavits) தேவைப்படும் வெவ்வேறு நடைமுறைகள் வங்கிகளில் உள்ளன. பயனாளிகள் புதிய இடங்களுக்குச் செல்வதாலும், பழைய வங்கிக் கணக்குகளை மூட மறப்பதாலும் பல செயலற்ற கணக்குகள் நடக்கின்றன. இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளை கிளைகளுக்கு இடையே எளிதாக மாற்ற அனுமதித்தால், இந்த சிக்கலை சரிசெய்ய முடியும். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி  “சொந்த கிளை” (home branch) என்ற எண்ணத்திலிருந்து வங்கிகள் விடுபட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், பயனாளிகள் தங்கள் வங்கி நடைமுறைகளில் சிலவற்றை மாற்ற ஊக்குவிக்க வேண்டும். சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு கணக்குகளில் பணத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால், வரிமானத் துறை அவர்களின் அனைத்து கணக்குகளையும் பான் (PAN) எண்களைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும்.


உரிமை கோரப்படாத கணக்குகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பது எல்லா இந்தியர்களுக்கும் மின்னணு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் தொடங்க வேண்டும். ஜன் தன் யோஜனா திட்டத்தின் (Jan Dhan Yojana) வெற்றிக்குப் பிறகு இந்த நிலைமை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, மின்னணு முறைகள் தனிப்பட்ட சேவைகளுடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும். இந்த சேவைகள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது பயனாளிகள் உரிமை கோரப்படாத பணத்தைப் பற்றி கண்டுபிடித்து அதற்கான உரிமைக் கோரல்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும்.




Original article:

Share:

உணவு பணவீக்கமானது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் தேர்வுகளை கட்டுப்படுத்துகிறது - தலையங்கம்

 பணவீக்க விகிதம் மாறாமல் உள்ளது என்பது பணவியல் கொள்கைக் குழுவின் (MPC) நிலைப்பாடு சீராக இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.


பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டால் (Consumer Price Index (CPI)) அளவிடப்படும் சில்லறை பணவீக்கம் 5.1% ஆக இருந்தது. பணவீக்கத்தின் முறை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருளை தவிர்த்த முக்கிய பணவீக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், உணவு பணவீக்கம் அதிகமாக உள்ளது, ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கை விட அதிகமாக உள்ளது. பிப்ரவரியில் அடிப்படை பணவீக்கம் 3.4% ஆகவும், உணவுப் பணவீக்கம் 8.7% ஆகவும் இருந்தது. குறிப்பாக, இறைச்சி மற்றும் காய்கறிகளின் விலைகள் வேகமான வளர்ச்சியின் காரணமாக ஜனவரி முதல் பிப்ரவரி வரை உணவுப் பொருட்களின் விலைகள் சற்று அதிகரித்தன.


இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% ஐ அடைய உணவுப் பணவீக்கம் குறையுமா என்பது பெரும்பாலும் காலநிலை நிலைமைகளைப் பொறுத்தது. உணவுச் சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நரேந்திர மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, ஆனால் இந்தத் தலையீடுகள் உணவுப் பொருட்களின் விலைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பணக் கொள்கை மட்டுமே குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழல் இந்தியப் பொருளாதாரத்தில் மேலும் வலுப்பெறும் ஒரு கொள்கை சவாலை முன்வைக்கிறது. உணவுக் கூடையின் விகிதத்தைக் குறைப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும்.


இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பணவீக்க விகிதம் மாறவில்லை என்பது  நிதிக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee (MPC)) அணுகுமுறை அப்படியே இருக்கும் என்பதைக் குறிக்கிறது. சில நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்கள் செலவு மற்றும் முதலீடு மீதான உயர் உண்மையான வட்டி விகிதங்களின் எதிர்மறையான விளைவுகளை விவாதித்திருந்தாலும், டிசம்பர் காலாண்டில் வலுவான பொருளாதார வளர்ச்சி நிதிக் கொள்கைக் குழுவிற்க்கான இந்த கவலைகளை தற்காலிகமாக குறைத்திருக்கலாம்.




Original article:

Share:

உலகின் 'முதல் முழு தன்னாட்சி பெற்ற' செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளரான Devin செயற்கை நுண்ணறிவைச் சந்திக்கவும் -பிஜின் ஜோஸ்

 கணினி நிரல் எழுதுதல் (coding), பிழைத்திருத்தம் (debugging), சிக்கலைத் தீர்ப்பது (problem-solving) உள்ளிட்ட மென்பொருள் மேம்பாட்டில் டெவின் (Devin)  செயற்கை நுண்ணறிவு  மென்பொருள் பொறியாளர் சில மேம்பட்ட திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே குறிப்பிட்டுள்ளது.


உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளரை (AI software engineer) அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வகமான Applied AI lab, Cognition உருவாக்கியுள்ளது. டெவின் (Devin) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு, சிறந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களால் நடத்தப்பட்ட பொறியியல் நேர்காணல்களில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது. கூடுதலாக,  Cognition கூறியபடி, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பகுதி நேர பணியாளர் தளமான (freelancing platform), Upwork இல் குறிப்பிடப்பட்ட உண்மையான பணிகளை டெவின் (Devin) முடித்துவிட்டது.


Cognition நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்ட பதிவின்படி, "டெவின் (Devin) ஒரு கடின உழைப்பாளி மற்றும் திறமையான குழு உறுப்பினர். மேலும், டெவின் உங்களுடன் வேலை செய்யத் தயாராக உள்ளது அல்லது நீங்கள் சரிபார்க்க வேண்டிய பணிகளை இவற்றின் மூலம் தானாகவே முடிக்க முடியும். மேலும், டெவின் உதவியுடன், பொறியாளர்கள் இன்னும் சுவாரஸ்யமான சவால்களை சமாளிக்க முடியும். இதன் மூலம், பொறியியல் குழுக்கள் பெரிய இலக்குகளை இலக்காகக் கொள்ளலாம்” என்றும் கூறுகிறது.


டெவின் (Devin) என்ன செய்ய முடியும்?


செயற்கை நுண்ணறிவின் முகவர் டெவின், கணினி நிரல் எழுதுதல் (coding), பிழைத்திருத்தம் (debugging), சிக்கலைத் தீர்ப்பது (problem-solving) உள்ளிட்ட மென்பொருள் மேம்பாட்டில் சில மேம்பட்ட திறன்களுடன் வருகிறது. டெவின், அதன் பணிகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும் புதிய சவால்களுக்கு ஏற்ப, இந்த டெவின் அதன் செயல்திறனைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் பயன்படுத்துகிறது. எளிமையான சொற்களில், டெவின் (Devin) தொடக்கத்திலிருந்து இறுதி வரை பயன்பாடுகளை உருவாக்கலாம் மற்றும் தொடங்கலாம். கூடுதலாக, இது அதன் சொந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை கற்பிக்கவும் சரிசெய்யவும் முடியும்.


ஆயிரக்கணக்கான முடிவுகளை எடுப்பதை உள்ளடக்கிய சிக்கலான பொறியியல் பணிகளை டெவின் சுலபமாக கையாள முடியும். நீண்ட கால பகுத்தறிவு மற்றும் திட்டமிடலில் அறிவாற்றலின் முன்னேற்றம் காரணமாக இது சாத்தியமாகிறது. டெவின், ஒவ்வொரு முக்கியமான விவரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், காலப்போக்கில் தானாகவே கற்றுக்கொள்ளவும் மற்றும் அதன் பிழைகளை சரிசெய்யவும் டெவினால் முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.


கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வடிவமைத்த பொறியாளர் பயனருடன் ஒத்துழைக்க முடியும். இது நிகழ்நேரத்தில், அதன் முன்னேற்றத்தைப் பற்றி பயனரைப் புதுப்பிக்கலாம், கருத்துக்களைப் பெறலாம் மற்றும் தேவைப்படும்போது வடிவமைப்புக்கு உதவலாம். 


GitHub இலிருந்து நிஜ உலக மென்பொருள் சிக்கல்களில் (real-world software issues) செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மதிப்பிடும் SWE-Bench அடிப்படை மதிப்பெண்ணைப் பயன்படுத்தி சோதனைகளில், டெவின் 13.86% சிக்கல்களை தானாகவே தீர்த்துள்ளது. முந்தைய சிறந்த மாதிரியை விட இது மிகவும் சிறப்பானது. இது, எந்தவொரு உதவி இல்லாமல் 1.96% சிக்கல்களையும், உதவியுடன் 4.80% சிக்கல்களையும் தீர்த்தது.


டெவின் செயற்கை நுண்ணறிவானது (Devin AI), பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செய்வதன் மூலம் மென்பொருள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் மேம்படுத்த முடியும். மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளைத் தானியக்கமாக்குதல், விரைவாகக் குறியீட்டை உருவாக்குதல், திட்டங்களை விரைவாக முடிக்கச் செய்தல் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.


டெவின் செயற்கை நுண்ணறிவின் (Devin AI) முக்கிய அம்சம் மனித நிரல் எழுதுவோருக்கு பொதுவான ஏற்படும் பிழைகள் மற்றும் முரண்பாடுகளை பெருமளவு குறைப்பது ஆகும். இதன் பொருள், செயற்கை நுண்ணறிவு முகவர் நிரல் எழுதும் நடைமுறைகளில் துல்லியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் மூலம், சிறந்த தரமான மென்பொருள் த யாரிப்புகளை உருவாக்க முடியும்.


இருப்பினும், Devin செயற்கை நுண்ணறிவுக்குப் பின்னால் உள்ள நிறுவனம் Devin ஐ இயக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரி (AI model) அல்லது அதன் தொழில்நுட்ப பிரத்தியேகங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நிரலாக்கத்திற்கு உதவும் பிற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் OpenAI Codex, GitHub Copilot, Polycoder, CodeT5 மற்றும் Tabnine ஆகியவை அடங்கும்.


நிறுவனம், டெவினின் திறன்களை விரிவுபடுத்தியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளர், சிக்கலான தேவைகள் அல்லது மனித உள்ளுணர்வு மற்றும் படைப்பாற்றலை நம்பியிருக்கும் நிகழ்வுகளுடன் போராடக்கூடும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், டெவின் போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளால் மக்கள் வேலை இழக்க வழிவகுக்கும் என்ற கவலைகள் உள்ளன. ஆனால், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து செயல்பட ஒரு புதிய வழியை வழங்குவதன் மூலம் டெவின் மென்பொருள் பொறியாளர்களுக்கு உதவ முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்.


டெவினை உருவாக்கிய Cognition நிறுவனம், ஸ்காட் வூ (Scott Wu) தலைமையில் உள்ளது. Cognition தன்னை பகுத்தறிவில் கவனம் செலுத்தும் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் என்று விவரிக்கிறது. தற்போதைய செயற்கை நுண்ணறிவு கருவிகளை விட சிறந்த செயற்கை நுண்ணறிவு குழு உறுப்பினர்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. "டெவினை உருவாக்குவது ஒரு ஆரம்பம் - எங்கள் மிகப்பெரிய சவால்கள் இன்னும் வெளிவர உள்ளன." டெவின் விரைவில் பொறியியல் திட்டங்களுக்கு பணியமர்த்தப்படும். ஆனால், நிறுவனங்கள் இப்போதைக்கு காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.


பிஜின் ஜோஸ், புது தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக உள்ளார்.




Original article:

Share:

மனித-விலங்கு மோதலை 'அவசரநிலையாக’ அறிவித்ததில் கேரள அரசின் தவறு என்ன ? -சூசன் ஹரிஸ்

 காடுகளில் மனித விலங்கு மோதல்களைக் குறைக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் (Special vigilance committees) மற்றும் விரைவான பதிலளிப்புக் குழுக்கள் (rapid response teams (RRTs)) அமைப்பது நல்ல யோசனை. ஆனால் விலங்குகளை கொல்வது போன்ற  விருப்பங்களுடன் நாம் அவற்றை மாற்றக்கூடாது.


கேரள அமைச்சரவை சமீபத்தில் மனித-விலங்கு மோதலை ஒரு மாநிலம் சார்ந்த பேரழிவாக (state-specific disaster) அறிவித்தது. இதன் பொருள் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Kerala State Disaster Management Authority (SDMA)) இந்த மோதல்களை நிர்வகிக்கவும் நிதி உதவிகளை விரைவாக வழங்கவும் உதவும். கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற பேரழிவுகளில் கடலோர அரிப்பு (coastal erosion), வலுவான காற்று (strong winds), மின்னல் (lightning), குழாய் வடிவிலான நிலச்சரிவு (soil piping) மற்றும் வெப்பத்தாக்கம் (sunstroke) ஆகியவை அடங்கும்.


வெவ்வேறு அதிகாரிகளின் பொறுப்புகளைப் பற்றி நமக்கு போதுமான அளவு தெரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு மட்டங்களில் பல குழுக்களை உருவாக்கும். முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் காடுகள், வனவிலங்குகள், வருவாய், உள்ளூர் சுயாட்சி மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மேம்பாட்டு அமைச்சர்கள் இருப்பார்கள். மேலும், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் உட்பட மேலும் 3 குழுக்கள் அமைக்கப்படும்.


"மனித-விலங்கு மோதல்" (human-animal conflict) என்ற சொல் உள்ளூர் பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்களைக் குறிக்கிறது. உதாரணமாக, கேரளாவின் வயநாட்டில் அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலைப் பற்றி நாம் பேசும்போது, மிகவும் உள்ளூர் மட்டங்களில் நிகழும் குறிப்பிட்ட மோதலைப் பற்றி பேசுகிறோம்.


இது போன்ற குழுக்கள் எப்போதும் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களைக் கருத்தில் கொள்வதில்லை. உள்ளூர் நிலப்பரப்பு, காடுகளுக்கு அருகாமை மற்றும் விலங்குகளுக்கு நீர் அல்லது உணவு கிடைப்பது போன்ற காரணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்த காரணிகள் மனிதர்களை பாதிக்கின்றன, நடுத்தர வர்க்க நகரவாசிகளுடன் ஒப்பிடும்போது ஏழை விவசாயிகள் பெரும்பாலும் அதிக ஆபத்தில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வயநாடு போன்ற இடங்களில், பல உள்ளூர்வாசிகள் இரவில் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். மேலும், சிலர் விவசாயத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.  மோதல்களுக்கு விலங்குகளைக் குற்றம் சாட்டுவது எளிது என்றாலும், சுற்றுச்சூழல் சுற்றுலா, முறைகேடான கட்டுமானம் மற்றும் சட்ட விரோத குவாரி போன்ற காரணிகள் உண்மையில் வனப்பகுதிகளை செல்வந்தர்களுக்கான பாதுகாப்பான இடங்களாக மாற்றுகின்றன. எனவே, பொதுமக்கள் மனித விலங்கு மோதலை எதிர்கொண்டு பாதிக்கப்படுகிறார்கள்.


புவியியல் நிகழ்வுகளுடன் விலங்குகள் வகைப்படுத்தப்படும் விதம் கவலைகளை எழுப்புகிறது. குறிப்பாக, மனித-விலங்கு மோதல்களை ஆராயும்போது. விரிவான உள்ளூர் மதிப்பீடுகள் பெரும்பாலும் இத்தகைய அபாயகரமான சந்திப்புகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறியும். உதாரணமாக, வயநாட்டில் வனத்துறையினரிடம் சிக்கிய புலிகள் அடிக்கடி காயம் அடைந்துள்ளது மற்றும் அவற்றின்  பல பற்களைக் காணவில்லை. அதேபோன்று அண்மையில் இடம்பெற்ற யானைத் தாக்குதல் சம்பவத்திலும் மனிதர்கள் யானை மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலைகளில் மனிதர்களும் பாதிக்கப்படலாம் என்ற உண்மையை இது குறைப்பதற்காக அல்ல, ஆனால் குறிப்பிட்ட தொடர்புகளின் காரணங்களைப் புரிந்துகொள்ள விலங்குகளின் நடத்தையை சூழ்நிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் ஆதரவால் அடிக்கடி தூண்டப்படும் இந்த சம்பவங்களுக்கு பொதுமக்களின் எதிர்வினை "நிரந்தர தீர்வுக்கு" அழைப்பு விடுக்கிறது. இது விலங்குகளை  கூண்டில் அடைத்தல், மற்ற வனப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்தல் அல்லது சம்பந்தப்பட்ட விலங்குகளைச் சுட்டுகொள்ளுதல் போன்ற செயல்களை நோக்கிச் செல்கிறது. இருப்பினும், பல சமயங்களில், தலைமை வனவிலங்கு காப்பாளர் (chief wildlife warden) மற்றும் மாவட்ட வன அதிகாரி (district forest officer (DFO)) தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கிறார்கள். இது விலங்குகள் மனிதர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடினாலும் அவற்றை சுடுவதற்கு எதிராக வாதிடுகிறது.


இருப்பினும், அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய இது போன்ற குழுக்கள், விலங்குகளை விட மனித நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க முனைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட காட்கில் அறிக்கையை (Gadgil report) பலவீனப்படுத்திய உம்மன் வி உம்மன் அறிக்கை (Oommen V Oommen report) போன்ற அறிக்கைகளுடன் இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். கேரளாவில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மனித-விலங்கு மோதல் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறி வருகிறது. ஒவ்வொரு காட்டு விலங்கும் சாத்தியமான அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. இது விலங்குகளைக் கொல்வதால் மட்டுமே மனித பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்ற நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. ஆனால் விலங்குகளுக்காக யார் பேசுகிறார்கள்? நமக்கு வசதியாக இருக்கும் போது மட்டும் வனவிலங்கு பாதுகாப்பில் ஈடுபடுவோமா?


வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக காடுகளுக்குள் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முன்மொழிவு இந்த பிரகடனத்தில் அடங்கும்.  விலங்குகள் பெரும்பாலும் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித குடியிருப்புக்குள் நுழைவதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இந்த செயற்கை நீர் ஆதாரங்களை உருவாக்கும் முறையின் விரிவான திட்டம் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஒரு ஆசிய யானை ஒரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் வரை உட்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. காலனித்துவ கால மரத்தோட்டங்கள் மற்றும் "மஞ்சா கொன்னா" (senna spectabilis) போன்ற ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் இந்த சவால் அதிகரிக்கிறது. அவை இயற்கையான வாழ்விடத்தை மாற்றியமைத்துள்ளன மற்றும் வனவிலங்குகளுக்கு உனவளிக்க முடியாதவை. சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் நாம் பணிபுரியும் போது, ​​நாம் உருவாக்கும் எந்தவொரு புதிய நீர்நிலைகளும் மோதல்களைக் குறைப்பதிலும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.


விலங்குகளிடம் சகிப்புத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு வழியாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவான இழப்பீட்டை வலியுறுத்தி, விரைவான நெருக்கடியைத் தீர்ப்பதை இந்த அறிவிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு குழுக்களை நிறுவுதல், விரைவான பதிலளிப்பு குழுக்களை (rapid response teams (RRTs)) வலுப்படுத்துதல் மற்றும் வன கண்காணிப்பாளர் ரோந்துகளை அதிகரிக்கவும் இது முன்மொழிகிறது. இந்த செயலூக்கமான உள்ளூர் நடவடிக்கைகள், கொலை போன்ற தீங்கான நடைமுறைகளை நாடாமல் மோதல்களைத் தணிக்க உதவும். அனைத்து உயிரினங்களுக்கும் நீதியை ஊக்குவிக்கும் ஒரு சமநிலையை உருவாக்குவதே இதன் நோக்கம். இது, கடினமான சூழ்நிலைகளில் வரையறுக்கப்பட்ட வளங்களுடன் இணைந்து வாழ உதவுகிறது.


எழுத்தாளர் கேரளாவின் கல்பெட்டாவில் உள்ள சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலுக்கான ஹியூம் மையத்துடன் (Hume Centre) இணைந்த ஆராய்ச்சியாளராக உள்ளார்.




Original article:

Share:

செயற்கை நுண்ணறிவு பற்றி அரசின் அறிவுரைகள் மற்றும் அதன் மீதான விமர்சகர்கள் எதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை -அனுபம் குஹா

 ஒழுங்குமுறை நிறுவப்பட்ட உரிமைகளைப் (existing rights) பின்பற்ற வேண்டும், நியாயமற்ற அல்லது நடைமுறைக்கு மாறான கொள்கைகளுக்கு வழிவகுக்கும் மிகைப்படுத்தப்பட்ட தேர்வுகளைத் தவிர்க்க வேண்டும்.


மார்ச் 1 அன்று, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  சைபர் சட்டம் (Cyber Law) மற்றும் தரவுஆளுமைக் குழு மூலம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. இந்த ஆலோசனை இடைத்தரகர்கள் மற்றும் தளங்களை அனுமதிக்கும் உள்ளடக்கத்தில் கவனமாக இருக்குமாறு கூறுகிறது. உள்ளடக்கத்தை நிர்வகிப்பதில் உரிய விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. உள்ளடக்கம் தகவல் தொழில் நுட்ப விதிகள் விதிகள் 2021 ஐ மீறவில்லை என்பதை உறுதி செய்வதேநோக்கமாகக் கொண்டுள்ளது. ஆலோசனை குறிப்பாக பெரிய மொழி மாதிரிகள் (Large language modules (LLMs))  மற்றும் உருவாக்கும் திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைக் குறிப்பிடுகிறது. தகவல் தொழில்நுட்ப விதிகளால் வரையறுக்கப்பட்டுள்ளபடி பயனர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட இந்த தொழில்நுட்பங்கள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.      

IT விதிகளின் விதி 3(1)(b) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது அல்லது IT சட்டத்தில் உள்ள வேறு எந்தச் சட்டங்களையும் மீறுவது போன்ற சட்டவிரோத உள்ளடக்கத்தைப் பகிர பயனர்களை தங்கள் AI கருவிகள் அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த Facebook மற்றும் Twitter போன்ற தளங்களை அரசாங்கம் கோரியது. இந்த அறிவுரையை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். புதிய உள்ளடக்கத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், இது உண்மையில் அனைத்து செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் உள்ளடக்கியது. எந்த உள்ளடக்கத்தை பயனர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தும் கணினி பயன்பட்டார்களும் இதில் அடங்கும். அவை வழங்கும் உள்ளடக்கத்திற்கும் அவை பரிந்துரைக்கும் உள்ளடக்கத்திற்கும் தளங்களே பொறுப்பு என்பதை அறிவுரை தெளிவுபடுத்துகிறது.


கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இன்னும் சோதிக்கப்படுகின்றன அல்லது நம்பகத்தன்மையற்றவை என்று கருதப்படுகின்றன. அவை பயன்படுத்துவதற்கு முன்பு அரசாங்கத்தின் வெளிப்படையான அனுமதியைப் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது. ஆலோசனையின் இந்த பகுதி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் உள்ளார்ந்த தன்மையை புறக்கணிக்கிறது. அனைத்து செயற்கை நுண்ணறிவு அமைப்புகளும், குறிப்பாக இயந்திர கற்றல் ( Machine learning (ML)) மாதிரிகள், ஓரளவு நம்பமுடியாதவை. அவை தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது அவை தவறுகளைச் செய்யலாம். இந்த அமைப்புகளின் சிக்கலானது பெரும்பாலும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை முழுமையாக தணிக்கை செய்வது அல்லது புரிந்துகொள்வது கடினம். ஆலோசனையின் படி, ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கும்  அரசாங்க ஒப்புதல் தேவைப்படும். நன்கு விவாதிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகள்(Large Language Model (LLM)) மட்டுமல்லாமல், பல்வேறு பயன்பாடுகளில் தினசரி பயன்படுத்தப்படும் பரந்த அளவிலான இயந்திர கற்றல் (machine learning) அமைப்புகள் இதில் அடங்கும்.


முதல் மற்றும் இரண்டாவது கோரிக்கைகள், மிகவும் கணிக்கக்கூடிய மற்றும் நியாயமான முறையில், செயற்கை நுண்ணறிவு தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களில் இருந்து மிகை மற்றும் தெளிவற்ற கூக்குரல்களை எழுப்பியுள்ளன. முதல் கோரிக்கை பாதுகாப்பான துறைமுகம் என்ற கருத்தை நீக்குகிறது என்றும், இரண்டாவது கோரிக்கை நடைமுறைக்கு மாறானது மற்றும் செயல்படுத்த முடியாதது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவை  ஒழுங்குபடுத்துவது புதுமைகளைத் தடுக்கும் மற்றும் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை அவசியம் என்று ஒரு எதிர் வாதம் உள்ளது. யார் சிறைக்குச் செல்கிறார்கள், யார் கடன் பெறுகிறார்கள் அல்லது யார் நம்பகமானவர் என்று கருதப்படுகிறார் என்பதைப் பற்றி முடிவெடுக்கும் போது, கணிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். இந்த முடிவுகள் சமூக-தொழில்நுட்ப அமைப்புகளை உள்ளடக்கியது. மேலும், அத்தகைய அமைப்புகளின் பயன்பாடு சமூகத்தை பாதிக்கும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திறம்பட உருவாக்குகிறது என்பதை தொழில்துறை ஒப்புக்கொள்வது முக்கியம். இந்த முடிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கொள்கைகளை நிராகரிப்பதற்கான விருப்பம் இல்லை. இந்த அமைப்புகளின் எந்த அம்சங்களுக்கு ஒழுங்குமுறை தேவை என்பதை தீர்மானிப்பது மற்றும் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பயனுள்ள வழிகளைக் கண்டறிவது உண்மையான சவால். விவாதம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence(AI)) கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பதைப் பற்றியது அல்ல, ஆனால் அதை எவ்வாறு சரியாகச் செய்வது என்பது பற்றியது.


வாதம், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமா என்பது பற்றியது அல்ல, ஆனால் அது எவ்வாறு திறம்பட செய்யப்பட வேண்டும். "செயற்கை நுண்ணறிவு" என்ற சொல் பரந்த மற்றும் துல்லியம் இல்லாதது. இது ஒழுங்குமுறை செயல்முறையை சிக்கலாக்குகிறது. ஒழுங்குமுறை சமூக தாக்கங்களைக் கொண்ட இயந்திர கற்றலின் குறிப்பிட்ட பயன்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். மனித மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த மாதிரிகளைப் பயிற்றுவிக்க பயன்படுத்தப்படும் தரவுகளையும் விவாதம் கருத்தில் கொள்ள வேண்டும்.  விவாதங்கள் இயந்திர கற்றல் பயன்பாடுகளின் உறுதியான எடுத்துக்காட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும், உரிமைகள் மீறல்களைத் தடுப்பதற்கான தெளிவான கொள்கைகளுடன். சில சந்தர்ப்பங்களில், தடைகள் அவசியமாக இருக்கலாம். குறிப்பாக "உணர்ச்சி கண்டறிதல்" (“emotion detection”) அல்லது பொது மற்றும் பணியிடங்களில் முக அங்கீகாரத்தைப் (facial recognition technology) பயன்படுத்துவது போன்ற மனித உரிமைகள் அல்லது கண்ணியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு. பரந்த கருத்துக்களை விட குறிப்பிட்ட மாதிரிகளில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ள ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும்.


கொள்கைகளை உருவாக்கும் போது, அவை என்ன சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அறிவது முக்கியம். உதாரணமாக, சமூக ஊடக தளங்கள் ஜனநாயகத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற கவலை இருந்தால், அவற்றின் பாத்திரங்களை நாம் வேறுபடுத்த வேண்டும். ஒருபுறம், இந்த தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும்போது, அவை ஊடக நிறுவனங்களைப் போலவே செயல்படுகின்றன. அவை அதற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படலாம். 


கொள்கை வகுப்பாளர்கள் தாங்கள் தீர்க்க விரும்பும் குறிப்பிட்ட சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, சமூக ஊடக தளங்கள் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அரசியல் விவாதங்களை இழிவுபடுத்தும் என்று கவலை இருந்தால், உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான தளங்கள் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பவர்கள் போன்ற அவர்களின் பங்கை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சமூக ஊடக நிறுவனங்களை அல்காரிதம்கள் மூலம் விளம்பரப்படுத்துவதிலிருந்து சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முடிவு விவாதத்திற்குரியது. ஆனால், அது வெளியிடப்படும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அவர்களைப் பொறுப்பாக்குவதில் இருந்து வேறுபட்டது. இது பேச்சு சுதந்திரத்தை முடக்கும். ஒவ்வொரு பரிந்துரை முறையையும் ஒழுங்குபடுத்த முயற்சிப்பது நடைமுறைக்கு மாறானது. மேலும், தவறான தகவல்கள் எது என்பதைத் தீர்மானிக்க அரசு அல்லது தனியார் தளங்களை அனுமதிப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது.


  செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை குறித்த விவாதம் பெரும்பாலும் குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருக்கவில்லை. தனித்துவமான சமூக மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் காணவில்லை. இந்த தனித்துவத்தை அடைவதற்கு செயற்கை நுண்ணறிவு கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் பாதிக்கப்படுபவர்களிடையே தீவிர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்த செயல்முறை வெளிப்படையான, முழுமையான ஆலோசனைகளுடன் தொடங்க வேண்டும் மற்றும் உறுதியான சட்டத்தை நோக்கமாகக் கொள்ள வேண்டும். தற்போதைய ஆலோசனையை மறுபரிசீலனை செய்த பிறகு இதுபோன்ற முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.


கட்டுரையாளர் ஐ.ஐ.டி மும்பையில் உள்ள கொள்கை ஆய்வுகளுக்கான அஷாங்க் தேசாய் மையத்தில் (Ashank Desai Centre) செயற்கை நுண்ணறிவு மற்றும் கொள்கை குறித்து பயிற்றுவிக்கும் உதவி பேராசிரியராக உள்ளார்




Original article:

Share: