தேர்தல் காலத்தில், நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகளில் ஏற்படும் அபாயங்கள் -சுஹாசினி ஹைதர்

 தேர்தல் பிரச்சாரப் பேரணிகள் (Election campaign rallies) மற்றும் ஊடக மாநாடுகள் (media conferences) நுட்பமான வெளியுறவுக் கொள்கை விவகாரங்கள் குறித்து உரத்த அறிக்கைகளை வெளியிடுவதற்கு பொருத்தமான இடங்கள் அல்ல.


21 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் உள்ள தலைவர்கள் ஒரு விதியைப் பின்பற்றுகிறார்கள்: "அனைத்து புவிசார் அரசியலும் உள்ளூர் அரசியல் தான் (All geopolitics is local)" என்பதாகும். அதாவது, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான தலைவர்கள் உள்நாட்டு அரசியலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும், முடிந்தால், வாக்குகளைப் பெறவும் வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குகிறார்கள். இருப்பினும், இந்தியாவில் தேர்தல்கள் வெளியுறவுக் கொள்கை விஷயங்களுடன் ஒன்றிணைவது போல் தெரிகிறது, இது அசாதாரணமானது.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சமீபத்தில் 1974 இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (India-Sri Lanka agreement) குறித்து பேசினர். கச்சத்தீவை இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததற்காக முன்னாள் பிரதமர்களையும் அவர்களது கட்சியையும் அவர்கள் விமர்சித்தனர். இந்த ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறினார். 1974 ஒப்பந்தம் மற்றும் 1976 கடிதப் பரிமாற்றத்தின் நல்ல மற்றும் தீங்குள்ள அம்சங்களை மக்கள் விவாதித்துள்ளனர். கச்சத்தீவை இழந்து எண்ணெய் வளம் மிக்க வாட்ஜ் வங்கியை (Wadge Bank) கைப்பற்றுவது பற்றி பேசுகிறார்கள். அரசாங்க அறிக்கைகள் (government statements), நாடாளுமன்ற விவாதங்கள், தகவல் அறியும் உரிமை பதில்கள் (Right to Information (RTI)) மற்றும் நீதிமன்ற சாட்சியங்கள் ஆகியவை 1974 ஒப்பந்தம் குறித்த ஜெய்சங்கரின் விமர்சனத்திற்கு முரணாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.


இந்த அறிக்கைகள் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், இலங்கையுடனான நீண்டகால உறவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம். இலங்கையில் அடுத்தடுத்து அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இலங்கையுடனான உறவுகள் வலுவடைந்துள்ளன. குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதரவை வழங்கிய பின்னர், தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக பதட்டங்களை உருவாக்குவது விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ள நல்லெண்ணத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம்


50 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தை மீண்டும் திறப்பதற்கான அரசாங்கத்தின் பரிந்துரை, இருதரப்பு உறவுகளில் உள்ள அழுத்தத்தைத் தவிர சர்வதேசக் கேள்விகளை எழுப்புகிறது. 1974 உடன்படிக்கையின் அடிப்படையில் கையொப்பமிடப்பட்ட மற்ற ஒப்பந்தங்களையும் திருத்த முடியுமா? உதாரணமாக, 2014 முதல் பங்களாதேஷுடனான கடல் எல்லை தீர்வு அல்லது பங்களாதேஷுடனான நில எல்லை ஒப்பந்தம் போன்ற இந்தியா தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படலாம். இந்த ஒப்பந்தங்கள் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன மற்றும் கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) போன்ற சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டன.  தேர்தலுக்குப் பிறகும் இதே அணுகுமுறையைத் தொடர்ந்தால் இந்தியாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகலாம். உலக வங்கியால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்துடன் இந்தியா போராடியது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மோடி அரசு பேசி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓராண்டுக்கு முன்னர், இந்தியாவின்  மறுபேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் விவகாரத்தில், நாடுகடந்த ஈடுபாடு


பொதுத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கான (Citizenship (Amendment) Act) விதிகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது. 2019 இல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கை அண்டை நாட்டுடனான உறவுகளை பாதிக்கக்கூடும். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்நாட்டு சட்டம் என்று கூறினாலும், அது வெளியுறவுக் கொள்கையில் தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இந்த நாடுகளில் இருந்து முஸ்லிம்களைத் தவிர்த்து ஆறு குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே குடியுரிமை (திருத்த) சட்டம் ஏற்றுக்கொள்கிறது. அண்டை நாடுகள் இதை பாரபட்சமாக பார்க்கின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகள் இப்போது அதிகம் முக்கியமில்லை என்றாலும், பங்களாதேஷில் ஒரு நட்பு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது.


தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) காரணமாக, பங்களாதேஷைச் சேர்ந்த பலர் நீண்ட காலத்திற்கு நாடற்ற குடிமக்களாக மாறக்கூடும், இது டாக்காவுடனான (Dhaka) உறவுகளை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஆனால், பங்களாதேஷில் தீவிரமாக  போராட்டங்கள் நடந்தன. 2021 ஆம் ஆண்டில் திரு மோடியின் டாக்கா பயணத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த இந்தியாவின் சமீபத்திய முடிவு குறித்து பங்களாதேஷில் உள்ள ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், கொள்கைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் டாக்காவில் உள்ள இந்தியாவின் வெளியுறவு அதிகாரிகளுக்கு கடுமையான வேலை இருக்கும்.


பொதுத் தேர்தலின் போது, வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கத்தால் தூண்டப்பட்ட சர்ச்சைகளைத் தவிர, அரசியல்வாதிகளால் எழுப்பப்பட்ட பிற பிரச்சினைகளும் உள்ளன. சமீபத்தில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control) சீனாவுடனான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் மோடி அரசாங்கத்தை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஏப்ரல் 2020 இல் கட்டுப்பாட்டில் எடுத்த நிலத்தை இன்னும் விட்டு வெளியேறவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அரசாங்கத்திற்கு மற்றொரு பிரச்சினை என்னவென்றால், இந்திய முகமைகளால் நாடுகடந்த படுகொலைகள் என்ற குற்றச்சாட்டானது, தேர்தலில்  சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. சீக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய உளவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அமெரிக்காவில் இந்த கோடையில் தொடங்க உள்ளது. இதேப் போல், "பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு சீக்கிய சமூகத் தலைவரை இந்திய உளவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொன்றனர்" என்று கனடா கூறுவதால், ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய உளவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் இரண்டு பாகிஸ்தானியர்களைக் கொன்றதாக பாகிஸ்தான் கூறுகிறது. மேலும், இந்த வழக்குகளை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள வழக்குகளுடன் இணைக்கிறது. பாகிஸ்தானில் 20 சீக்கிய மற்றும் இஸ்லாமிய பிரிவினைவாத செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதில் இந்திய உளவுத்துறையின் தொடர்பு இருப்பதாக பரிந்துரைக்கும் இங்கிலாந்து ஊடக அறிக்கையை (British media report) அவர்கள் ஆதரிக்கின்றனர். இவர்கள் ஏன் தங்கள் மண்ணில் இருக்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் விளக்க வேண்டும் என்றாலும், கனடா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் எதிர்வினைகள் முற்றிலும் வேறுபட்டவை.


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்ததற்கு முரணாக "பாகிஸ்தானுக்குள் செல்லும் பயங்கரவாதிகளைக் கொல்வது" (kill terrorists that go into Pakistan) அரசாங்கத்தின் கொள்கை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது முரண்படுகிறது. இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் மீதும் இந்தியா கடும் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான தோல்வியுற்ற படுகொலை முயற்சியில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசு கூறுவதை இந்தியா ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. கனடா மற்றும் பாகிஸ்தானைப் போலல்லாமல், பன்னுன் வழக்கில் அமெரிக்க ஆதாரங்களை மறுஆய்வு செய்யவும், ஒரு "உயர்மட்ட" (high-level) விசாரணைக் குழுவை அமைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது. இது, "இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக" (India’s national security interests) என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விவரித்தார்.


விவேகம் முக்கியம்


இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். தேர்தல் பேரணிகள் அல்லது பத்திரிகையாளர் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகள் மூலம் அல்ல. குறிப்பாக நிலம் மற்றும் இறையாண்மை தொடர்பான அதன் அறிக்கைகள் அண்டை நாடுகளால் கவனிக்கப்படுகின்றன என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.


மாற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரைக் காட்டும் 2019 ஆம் ஆண்டின் இந்தியாவின் வரைபடம் அல்லது இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "அகண்ட பாரத்" (Akhand Bharat) என்பதைக் காட்டும் சுவரோவியத்தை நேபாளம் ஆட்சேபித்தது குறித்து இந்தியா ஆச்சரியப்பட்டது. பிரச்சார காலத்தில் வரைபட சர்ச்சைகள் குறித்து கொழும்பு, டாக்கா அல்லது காத்மாண்டுவிலிருந்து எந்தவொரு கருத்து வேறுபாடும் எதிர்பாராததாக இருக்கும். தேர்தல் காலம் குறுகியதாக இருந்தாலும், உள்நாட்டு அரசியலுக்கு இருதரப்பு உறவுகளை சேதப்படுத்துவது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.




Original article:

Share:

'ஒற்றைச் சுகாதாரம்' (‘one health’) என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறை -அஜய் குமார் சூத்

 ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததால்  'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) உருவாக்கப்பட்டது. இந்த அணுகுமுறை மிகப் பெரிய நோய் தாக்குதல்களில் இருந்து மீண்டு வர உதவும்.


COVID-19 போன்ற நோய் தொற்றின் போது  மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிந்தது. நோய் தொற்றுகளின் போது பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகளும் தான்.  உதாரணமாக, கட்டி தோல் நோய் (lumpy skin disease) பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.


அமைச்சரவையின் 'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) குறித்த சமீபத்திய முடிவு ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.


ஜூலை 2022 இல், பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழு (Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council (PM-STIAC)) 'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' உருவாக்க ஒப்புதல் அளித்தது. அப்போதிருந்து, 13 அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research (CSIR)), மருந்துகள் துறை மற்றும் ஆயுஷ், அல்லது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி, அத்துடன் சுகாதாரம், கால்நடை பராமரிப்பு,  சுற்றுச்சூழலும், பாதுகாப்புத் துறையும் இணைந்து இந்த இயக்கத்தை வடிவமைக்க  திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கு இந்த  விரிவான அணுகுமுறையை உருவாக்கினர். தொற்றுநோய்களுக்கு தயாராவதற்கும் அனைவரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வதற்கும் இது உலகின் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.


ஒற்றை சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சகங்கள் ஒப்புக்கொண்டன. இந்த நிறுவனம் நாக்பூரில் உள்ளது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் சுகாதார மேம்பட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11, 2022 அன்று அடிக்கல் நாட்டினார்.


மேலும் ஒரு பயணம்


'தேசிய ஒற்றை சுகாதார இயக்கம்' (‘National One Health Mission’) பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:


1. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புக்கான உத்திகளை உருவாக்குதல்.


2. நோய் வெடிப்புகளுக்கு கூட்டாக பதிலளித்தல்.


3.  ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.


4. தவறான தகவல் பரப்புவதை தடை செய்தல்.

 

வாய் நோய் அல்லது கட்டி தோல் நோய் விலங்குகளை பாதிக்கிறது. இந்த நோய்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கிறது. வன விலங்குகளும் நாய்க்கடி போன்ற நோய் தாக்குதலைகளை  எதிர்கொள்வதால் அவற்றின் பாதுகாப்பை பாதிக்கிறது. இந்த நோய்களுக்கும், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது நிபா போன்ற தொற்றுநோய்களையும்  எதிர்கொள்வதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை.


தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு முழுமையாக தயாராக இருக்க, வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில்  கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் புதிய நோய்களுக்கான சோதனைகள் போன்ற சிறந்த கருவிகளை உருவாக்க வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கும் உலகிற்கும் இந்த கருவிகள் தேவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மருந்துகள் துறை போன்ற துறைகள் இதற்கு உதவும்.


இதைச் செய்வதில் அரசுத் துறைகள், கல்வி மையங்கள் மற்றும் தனியார் துறைகள் முக்கியமானவை. ஒன்றிய  மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வெற்றிக்கு முக்கியமாகும். மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவது இந்த அணுகுமுறையை களத்தில் சிறப்பாக செயல்படுத்த உதவும். செயல்படுத்தலின் போது கற்றுக்கொண்ட பாடங்கள்  பயனுள்ளதாக இருக்கும். ஒற்றை ஆரோக்கியம் என்பது ஒரு இலக்கை விட மேம்படுத்தப்பட்ட  பயணம்.


ஆய்வகங்களின் கணினி கட்டமைப்பு


 உயிரி பாதுகாப்பு நிலைகள் 3 (Biosafety level 3) மற்றும் உயிரி பாதுகாப்பு நிலை 4இல் (Biosafety level 4) இயங்கும் அதிக ஆபத்துள்ள நோய்க்கிருமி ஆய்வகங்களின் தேசிய கணினி கட்டமைப்பு இந்த திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. வெவ்வேறு துறைகளால் நிர்வகிக்கப்படும் இந்த ஆய்வகங்கள், மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் நோய் தாக்குதல்களில் இருந்து மீண்டு வர உதவுகின்றன. இந்த ஆய்வகங்களை ஒன்றிணைப்பதன் மூலம், செலவு மிகுந்த உள்கட்டமைப்பை மிகவும் திறமையாகப் பயன்படுத்தலாம் மற்றும்  பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்தலாம். இது வெளவால்கள், பன்றிகள் மற்றும் மனிதர்களை உள்ளடக்கிய நிபா போன்ற நோய்களை சிறப்பாக சமாளிக்க உதவும்.


நோய்களின் தரவுகளை பகுப்பாய்வு  செய்ய இந்தியா தனது  திறனை  மேம்படுத்த வேண்டும். இந்த நோக்கத்திற்காக  செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), இயந்திர கற்றல் (machine learning) மற்றும் நோய் மாதிரியைப் (disease modelling) பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தொற்றுநோயியல் திறன்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. COVID-19 இன் போது, கழிவுநீரைப் பயன்படுத்தி மரபணு கண்காணிப்பு (genomic surveillance) போன்ற முறைகள் பயனுள்ளதாக இருந்தன. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு நோய்களைக் கண்காணிக்க, விலங்குகள் கூடும் மற்ற இடங்களில் இப்போது  பயன்படுத்த பட்டு வருகிறது. 


‘ஒற்றை ஆரோக்கியம்’ - ஓர் உலகளாவிய கருப்பொருள்


‘ஒற்றை ஆரோக்கியம்' என்பது உலகளாவிய கருப்பொருளாக உள்ளது. ஜி -20 க்கு இந்தியா தலைமை தாங்கியபோது, கண்காணிப்பு, பகுப்பாய்வு மற்றும் உலகளவில் ‘ஒற்றை சுகாதாரம்' நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற சில பகுதிகளில் ஒத்துழைக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.


"ஒற்றை சுகாதாரம்" என்பது நோய்களை மட்டுமல்ல, நுண்ணுயிர் எதிர்ப்பு, உணவு பாதுகாப்பு, தாவர நோய்கள் மற்றும் காலநிலை மாற்றம் எவ்வாறு அனைத்தையும்  பாதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். "ஒற்றை சுகாதாரம்" (One Health’) போன்ற கருப்பொருள்களுக்கு, வெவ்வேறு குழுக்கள் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் பொருள் அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு சாரா நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வணிகங்கள் மற்றும் குடிமக்கள். தெளிவான செயல்திட்டத்துடன் இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது, "ஒரு பூமி, ஒற்றை சுகாதாரம்" மற்றும் "அனைவருக்கும் சுகாதாரம்"  (‘One Earth, One Health’ and ‘Health for All’) போன்ற இலக்குகளை எளிதில் அடைய  உதவும்.


அஜய் குமார் சூட் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆவார்




Original article:

Share:

லடாக் மற்றும் மனிதகுலம் அனைத்தையும் காப்பாற்றுவதற்கான ஒரு யுத்தம் - ஜானகி முரளி

 “காலநிலை மாற்றமானது இமயமலை சுற்றுச்சூழலின் பலவீனத்தின் பெரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது” என்று சோனம் வாங்சுக் கூறுகிறார்.


ரமோன் மகசேசே விருது வென்ற சோனம் வாங்சுக் மார்ச் 6, 2024 அன்று லடாக்கின் லேவில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசினார். தனது 21 நாள் காலநிலை உண்ணாவிரதத்தை அறிவித்த அவர், லடாக் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் உரையாற்றினார்.


இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே 11,500 அடி உயரத்தில் லடாக் அமைந்துள்ளது. இது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ள 97% பழங்குடியினரின் தாயகமாகும். வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு மற்றும் மாசுபாடு போன்ற காலநிலை மாற்ற தாக்கங்கள் உட்பட பல்வேறு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது.


இமயமலைப் பகுதியில் சுமார் 15,000 பனிப்பாறைகள் உள்ளன, அவை மூன்றாம் துருவம் (Third Pole) என்று அழைக்கப்படுகின்றன. இந்த பனிப்பாறைகள் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற நதிகளுக்கு முக்கியமான  நீராதாரமாக இருக்கின்றன. இருப்பினும், புவி வெப்பமடைதல் காரணமாக, இங்குள்ள பனிப்பாறைகள் உருகும் அபாயத்தில் உள்ளன. இது, மலைவாழ் மக்கள் மற்றும் சமவெளியில் வசிக்கும் மக்கள் என இருவரையும் பாதிக்கும்.


அதிகரித்த உள்கட்டமைப்பு 


2008 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (National Action Plan on Climate Change (NAPCC)) ஒரு பகுதியாக இந்த மையம் எட்டு இயக்கங்களைத் தொடங்கியது. அவற்றில் ஒன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Science and Technology) கீழ் வரும் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டம் (National Mission for Sustaining the Himalayan Ecosystem (NMSHE)). இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டத்தின் முக்கிய குறிக்கோள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST)) வலைத்தளத்தின்படி, இமயமலைப் பகுதி காலநிலை மாற்றத்தால் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அறிவியல் பூர்வமாக அளவிடும் திறனை உருவாக்குவதும், இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் சூழ்நிலையை தவறாமல் சரிபார்ப்பதாகும்.


இமயமலைப் பகுதியைப் பாதுகாக்கும் பங்கை இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய திட்டம் (NMSHE) ஏன் மறந்துவிட்டது?


லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. பாலங்கள் கட்டுதல், சாலைகளை அகலப்படுத்துதல், சுரங்கங்கள் அமைத்தல், ரயில்வே, பெரிய சூரிய சக்தி திட்டங்கள், ஆடம்பரமான விமான நிலையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடங்கள் போன்ற பல பெரிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட்டன. சில திட்டங்கள் சோஜிலா சுரங்கப்பாதை (Zojila tunnel), 230 கிலோமீட்டர் நீளம் கொண்ட கார்கில்-ஜான்ஸ்கர் (Kargil-Zanskar) நெடுஞ்சாலை மற்றும் சாங்தாங்கில் 10 ஜிகாவாட் திறன் கொண்ட பெரிய சூரிய சக்தி திட்டம். மேலும், லடாக்கிற்கு முதலீடுகளை ஈர்க்க 2023 (Ladakh (UT) Industrial Land Allotment Policy of 2023) இல் ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.


எல்லைப்புற சாலைகள் அமைப்பு (Border Roads Organisation (BRO)) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (National Highways & Infrastructure Development Corporation Ltd. (NHIDCL)) ஆகியவை இந்த திட்டங்களில் பலவற்றை வழிநடத்துகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) வடகிழக்கில், எல்லைகளுக்கு அருகில், ஜம்மு-காஷ்மீர், லடாக், உத்தரகண்ட் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில் சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்த விரும்புகிறது. இந்த இடங்கள் அனைத்தும் காலநிலை மாற்ற பேரழிவுகளால் ஆபத்தில் உள்ளன.



பேரழிவுகளைக் கண்ட ஒரு பிராந்தியம்


அரசின் திட்டங்களை விரைவாக அங்கீகரித்து செயல்படுத்தும் அரசாங்க அமைப்புகள், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட கடந்த கால பேரழிவுகளிலிருந்து கிடைத்த பாடங்களை ஏன் புறக்கணிக்கின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.


2010 முதல், இமயமலைப் பகுதி பல பேரழிவுகளை எதிர்கொண்டது, இதனால் உயிர் இழப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டில், மேல் இமயமலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு (cloudburst) கேதார்நாத்தில் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது, இதன் விளைவாக 6,000 பேர் இறந்தனர் மற்றும் பல குடியிருப்புகள் முற்றிலும் அழிந்தன. ஜனவரி 2023இல், ஜோஷிமத்தில் (Joshimath) உள்ள ஒரு மலைச்சரிவில் தண்ணீர் பெருகி, நகரத்தின் சில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. நவம்பர் 2023 இல், சில்க்யாரா (Silkyara) சுரங்கப்பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர், இது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


இந்த இயற்க்க பேரழிவுகள் அனைத்தும் நடந்த உத்தரகாண்டில், 2000ஆம் ஆண்டு முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புவியியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்கள் போன்ற நிபுணர்களின் கடுமையான எச்சரிக்கையும் மீறி, இந்த திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய உச்ச நீதிமன்றம்  அமைத்த நிபுணர் குழு,  இமயமலையில் உள்ள புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரிக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியது. 


சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரா-பனிப்பாறை (para-glacial) மண்டலத்தில் நீர்மின் திட்டங்கள் கட்டுவதற்கு நிபுணர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


பேரழிவுகள் நிகழும்போது, கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குடியிருக்கும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தான்  பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், இந்த திட்டங்களை அங்கீகரிக்கும் அரசாங்க அமைப்புகளும் அவற்றை செயல்படுத்தும் நிறுவனங்களும் பெரும்பாலும் இதுபோன்ற பேரழிவுகளின் விளைவுகளைத் தவிர்க்க வேண்டும்.


குறைவான விமர்சனம்


காலநிலை மாற்ற ஆர்வலர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து நிபுணர் குழுக்களை அமைத்திருந்தாலும், அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுவதால் விரக்தியடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் பெரிய திட்டங்களின் ஆபத்து மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற சரியான சோதனைகள் செய்யப்படுவதில்லை.


முன்னேற்றம் என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையையும் அதன் பல்லுயிர் பெருக்கத்தையும் நாம் சேதப்படுத்தக்கூடாது. இமயமலையையும் அதில் வசிப்பவர்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.


வாங்சுக்கின் போராட்டம் லடாக்கிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்தின் எதிர்காலத்திற்குமானது.


ஜானகி முரளி பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்.




Original article:

Share:

உள்ளடக்கம் மற்றும் உரிமைக் கவலைகளுக்குக் கொள்கைப் பதிலை வலியுறுத்தும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI )

 ஒரு முற்போக்கான கொள்கை கட்டமைப்பானது அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஒளிபரப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் (broadcasting ecosystem) அடித்தளமாக இருக்கும். 


இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India’s (TRAI))  தேசிய ஒலிபரப்புக் கொள்கை (National Broadcasting Policy) பற்றிய ஆலோசனைக் கட்டுரை (consultation paper), புதிய உள்ளடக்க விநியோக தளங்கள் (new content delivery platforms), தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவற்றின் தோற்றத்துடன் ஒரு முக்கியமான கட்டத்தில் வந்துள்ளது. ஒளிபரப்பு (broadcasting) மற்றும் டிஜிட்டல் மீடியாவை (digital media) ஒன்றிணைப்பது குழப்பமான விதிகளின் தொகுப்பை முன்னிலைப்படுத்துகிறது. இது அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் விஷயங்களை நியாயமாக வைத்திருப்பதை கடினமாக்குகிறது.


பாரம்பரிய ஒளிபரப்பானது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting (MIB)) விதிகளைப் பின்பற்றுகிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் மீடியா பெரும்பாலும் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் தங்களை கட்டுப்படுத்துகிறது. இந்த பிளவு அனைவரும் நியாயமாக போட்டியிடுவதை உறுதி செய்ய படிப்படியான மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இன்னும் தொலைக்காட்சி அணுகல் இல்லாத நிலையில், ஒளிபரப்புச் சேவைகளை விரிவுபடுத்துவதில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றியும் இந்த நாளிதழ் கூறுகிறது. இது ஒளிபரப்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், இந்த சாத்தியமான தேவையை எட்டுவதற்கு அதிக செலவுகள் மற்றும் சந்தா கட்டணங்கள் தீர்க்கப்பட வேண்டும்.


ஒழுங்குமுறை தலையீடு தேவைப்படும் முக்கியமான பகுதியாக உள்ளடக்க ஒழுங்குமுறை வெளிப்படுகிறது. முன்மொழியப்பட்ட ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா (Broadcasting Services (Regulation) Bill), 2023 உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதற்கான விரிவான அதிகாரங்களை மையத்திற்கு வழங்கினாலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) ஆலோசனைக் கட்டுரை இந்த அம்சத்தில் அமைதியாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பொறுப்பான உள்ளடக்கப் பரவலுக்கான தேவையுடன் கருத்துச் சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கு, நெறிமுறை தரநிலைகளை நிலைநிறுத்தும்போது படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நுணுக்கமான அணுகுமுறை தேவைப்படுகிறது. கொள்கை உருவாக்கத்தில் உள்ள எந்த தெளிவின்மையும் புதுமைகளைத் தடுக்கும் மற்றும் உலகளாவிய உள்ளடக்க மையமாக மாறுவதற்கான இந்தியாவின் விருப்பங்களைத் தடுக்கிறது. மற்றொரு முக்கியமான விடுபட்ட பகுதி குறுக்கு ஊடக உரிமையின் (cross-media ownership) பிரச்சினை ஆகும். பார்வையாளர் அளவீட்டு அமைப்புகளை மறுசீரமைப்பதை கட்டுரை சரியாக வலியுறுத்துகிறது. ஊடக ஒருங்கிணைப்பின் அளவை மதிப்பிட வேண்டிய அவசியத்தை இது கவனிக்கவில்லை. அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க குறுக்கு உரிமையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்னரே எடுத்துரைத்துள்ளது. உள்ளடக்கம், விநியோகம் மற்றும் ஒளிபரப்பு சேனல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஊடகப் பன்மைத்துவம் அல்லது பலதரப்பட்ட உரிமை, வலுவான, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். கருத்துகளின் சந்தையில், வாசகர்கள்  மற்றும் பார்வையாளர்கள் பல்வேறு கருத்துக்களைப் படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் முயல்கின்றனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்பு தேவையான பாதுகாப்புகளை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. துறைக்குள் ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்ய வலுவான கொள்கை தேவை. 


இந்தியாவுக்கு தெளிவான 'தேசிய ஒளிபரப்புக் கொள்கை' (National Broadcasting Policy) தேவை. அதைப் பற்றி பேச இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) ஆலோசனை அறிக்கை  ஒரு நல்ல இடம். கொள்கை வகுப்பாளர்கள் விதிகளை சீரானதாக மாற்றுவது, ஊடகங்களை அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் மாற்றுவது, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் இதை உள்ளடக்க விதிகள் மற்றும் பல்வேறு வகையான ஊடகங்களை வைத்திருப்பவர்கள் போன்ற விஷயங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் இந்தியா ஒரு சிறந்த வீரராக இருக்க விரும்புகிறது. எனவே, நவீன கொள்கையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.




Original article:

Share:

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஆதரிக்கும் சட்டங்கள்

 காலநிலை நெருக்கடி காரணமாக அரசியலமைப்பு உரிமைகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் பரந்த பார்வை ஒரு புதிய சட்ட அணுகுமுறைக்கு வழிவகுக்கும். 


உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பு, அரசியலமைப்பின் பிரிவு 14 ஆனது சமத்துவம் பற்றியும் மற்றும் பிரிவு 21 வாழ்க்கை சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றின் அர்த்தத்தை விரிவுபடுத்தியது. இப்போது, அவற்றில் "காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான உரிமை"  (right against adverse effects of climate change) அடங்கும். வரவிருக்கும் நெருக்கடியை சமாளிக்க அவசர கொள்கைகளின் அவசியத்தை இது காட்டுகிறது. காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றி எந்தச் சட்டமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.  மேலும், அது தொடர்பான பிரச்சினைகளைப் பார்க்க அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பை பரிந்துரைத்தது. ஆனால் சட்டம் இல்லாததால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு காலநிலை மாற்ற விளைவுகளுக்கு எதிராக உரிமை இல்லை என்று அர்த்தம் இல்லை. சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். காலநிலை நெருக்கடி மனித உரிமைகளுடன் எவ்வாறு இணைகிறது என்பதை இது காட்டுகிறது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) உள்ளிட்ட இந்திய நீதிமன்றங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அடிக்கடி தலையிட்டுள்ளன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தியாவில் நிறுவப்பட்டபோது உலகளவில் நிறுவப்பட்ட மூன்றாவது அமைப்பாகும். இருப்பினும், இந்த முடிவுகள் பல தனிப்பட்ட வழக்குகளில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மார்ச் 21 அன்று ஒரு சமீபத்திய தீர்ப்பு சுற்றுச்சூழலைப் பற்றிய பரந்த பார்வையை எடுத்ததுடன், அதை காலநிலை நெருக்கடியுடன் இணைத்தது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு, குறிப்பாக சூரிய சக்திக்கு மாறுவதை இது வலியுறுத்துகிறது. இது, இந்தியாவின் உலகளாவிய காலநிலை மாசுபாடு மற்றும் தீவிர வானிலை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் முக்கியமானது. காலநிலை நெருக்கடியால் பெண்கள் மற்றும் பழங்குடியினர் எவ்வாறு விகிதாசாரமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.


உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. மேலும், இது மேற்கத்திய நீதிமன்றங்களின் முக்கியமான தீர்ப்புகளில் காணப்படும் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும். உதாரணமாக, கடந்த ஆண்டு மொன்டானாவில் (Montana), இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆதரவாக ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார். புதைபடிவ எரிபொருளை உருவாக்க அனுமதிப்பதன் மூலம், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான அரசியலமைப்பு உரிமையை அரசு நிறுவனங்கள் மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இது இரண்டு முக்கிய விஷயங்களை எடுத்துக்காட்டுகிறது: முதலாவதாக, காலநிலை நெருக்கடியை ஒரு மனித உரிமை பிரச்சினையாக அணுக வேண்டிய அவசியமாகும். இரண்டாவதாக, அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு அப்பால் இயற்கையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நெருக்கடியை நாம் பரந்த அளவில் பார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம், சிறியதாக இருந்தாலும், மனிதகுலத்தைக் காப்பாற்ற நாம் போராடும்போது அரசாங்கங்களை பொறுப்புடைமையாக வைக்க குடிமக்களை அனுமதிக்கிறது.




Original article:

Share:

சீனாவுடனான ஜோ.பைடனின் ஈடுபாடு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? -சி.ராஜா மோகன்

 அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் வலுவான இராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அதிகம் சார்ந்திருப்பதால் இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அவற்றுக்கிடையில் முரண்பாடுகளும் உள்ளன. ஆனால். இதில், வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான முரண்பாடுகளும் சிக்கலானவை. 


ஜோ.பைடனின் அரசாங்கம் அதன் சீன இராஜதந்திரத்தை "பொறுப்பான போட்டி" (responsible competition) என்று அழைத்தபோது, இந்தியாவிலும் பிற இடங்களிலும் உள்ள பல ஆய்வாளர்கள் அது செயல்படாது என்று நினைத்தனர். சீனாவால் முடிந்தபோது அதனுடன் இணைந்து செயல்படுவதாகவும், தேவைப்படும்போது அதை எதிர்ப்பதாகவும் நிர்வாகம் கூறியது. சீனாவுடனான வலுவான போட்டி ஆபத்தான மோதலாக மாறுவதைத் தடுக்க தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாக அதிபர் பிடன் கூறினார். இதில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 


இந்திய இராஜதந்திர சமூகத்தில் பலர் போட்டி மற்றும் ஒத்துழைப்பை சமநிலைப்படுத்துவது கடினம் என்று நம்புகிறார்கள். ஒத்துழைப்பில் முன்னுரிமை அளிப்பது அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் என்று அவர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆசியாவில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், சீனாவால் நேரடியாக அச்சுறுத்தப்படவில்லை என்றாலும், சீனாவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு அமெரிக்காவுக்கு காரணங்கள் இருக்கின்றன. இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது மற்றும் இராணுவ சக்தியைக் கொண்ட பெரிய பொருளாதாரங்களாகும். இது ஈடுபாட்டிற்கான உண்மையான கட்டாயங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே முரண்பாடுகளும் உள்ளன.

 

சீனாவை அணுகுதல்


சீனாவின் பொருளாதார சக்தி மற்றும் அமெரிக்காவை ஆசியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான அதன் முயற்சிகள் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இந்த அக்கறை வாஷிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியினரையும் (Democrat Party),  குடியரசுக் கட்சியினரையும் (Republican Party) ஐக்கியப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர்கள் எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் வேறுபடுகிறார்கள். சில குடியரசுக் கட்சியினர் சீனாவை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள விரும்புகிறார்கள். அதன் செல்வாக்கைக் குறைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். டிரம்பின் அணுகுமுறை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், பைடன் சீனாவுடனான "பொறுப்பான போட்டியில்" (responsible competition) கவனம் செலுத்துகிறார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய நிகழ்வுகள் இந்த இருநாடுகளும் எவ்வாறு கட்டவிழ்ந்து வருகிறது என்பதை நமக்குக் காட்டுகின்றன.


முதலில், எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்பதிலிருந்து, கடந்த வாரம், பைடன், சீன தலைவர் ஜி ஜின்பிங்குடன் நீண்ட தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். ஜி20 உச்சி மாநாட்டின் போது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாலியில் (Bali) தொடங்கிய அவர்களின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இது நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தில் (Asia Pacific Economic Cooperation forum) கலந்து கொள்வதற்காக அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, இரு தரப்பினரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தவும், இராணுவ தகவல்தொடர்புகளை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு ஒழுங்குமுறை (regulating artificial intelligence and counter-narcotics) குறித்த விவாதங்களைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டனர்.


இந்த வாரம், அமெரிக்க கருவூலச் செயலர் (US Treasury Secretary), ஜேனட் யெல்லன் நீண்ட காலத்திற்கு சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். சீனாவுடன் தடையில்லா வர்த்தகம் (free trade) மற்றும் நட்பு நாடான பொருளாதார உறவுகளை ஆதரிப்பதற்காக யெல்லன் அறியப்படுகிறார். பெய்ஜிங்கிற்கான அவரது செய்தி இரண்டு மடங்கானது: அமெரிக்கா பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார உறவை விரும்புகிறது. ஆனால், சோலார் பேனல்கள் (solar panels) மற்றும் மின்சார வாகனங்கள் (electricity vehicles) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகளை ஏற்காது. இந்தத் துறைகளில் சீனா தொடர்ந்து அதிக உற்பத்தி செய்தால், அமெரிக்கா புதிய கட்டணங்களை விதிக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.


ஜப்பானை நோக்கிய பார்வை 


 இந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை (Fumio Kishida) வெள்ளை மாளிகைக்கு அதிபர் பைடன் வரவேற்கிறார். பைடன் அதிபராக இருந்தபோது இந்த சிறப்பு வரவேற்பைப் பெற்ற குவாட் (Quad) அமைப்பின் மூன்றாவது தலைவர் கிஷிடா ஆவார். இதில், மற்ற இரு உறுப்பினர்கள் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆவர். ஐரோப்பாவில் மோதல் இருந்தபோதிலும், பைடன் இன்னும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மதிக்கிறார் என்பதை இந்த பயணங்கள் காட்டுகின்றன.


இந்த சந்திப்பின் போது, பைடனும், கிஷிடாவும் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராணுவ மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு, இராணுவ நடவடிக்கைகளில் இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படுவது, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் அதிக ஒத்துழைப்பது மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.


கிஷிடாவின் கீழ், பைடனின் இந்தோ-பசிபிக் திட்டத்திற்கு ஜப்பான் ஒரு முக்கிய திட்டமாக மாறியுள்ளது. சீனா, வட கொரியா மற்றும் ரஷ்யாவைத் தடுக்க அவர்களின் பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை அதிகரிக்கவும், புதிய திட்டங்களைக் கட்டியெழுப்பவும் அவை உறுதியளித்துள்ளன. ஜப்பானின் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அதன் போருக்குப் பிந்தைய அமைதிவாதத்திலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது மற்றும் இது ஆசிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.


ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், AUKUS (Australia, the UK and the US (AUKUS)) முன்முயற்சியில் ஜப்பானும் சேர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. AUKUS ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே மேம்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பை உள்ளடக்கியது. AUKUS இன் முதல் பகுதி வாஷிங்டன் மற்றும் லண்டனில் இருந்து கான்பெர்ராவுக்கு (Canberra) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவதை உள்ளடக்கியது. ஆனால், அணு ஆயுத எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக ஜப்பான் இதனுடன் சேராது.


AUKUS இன் புதிய அவதாரம்


ஆனால், டோக்கியோ AUKUS இன் இரண்டாவது தூணின் ஒரு முக்கிய பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தூண் ஹைப்பர்சோனிக் (hypersonic), நீருக்கடியில், சைபர் (cyber), செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing) போன்ற மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த துறைகளில் சீனாவை விட முன்னணியில் இருக்க ஜப்பான் தனது வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உற்பத்தி திறன்களை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பைடன் நிர்வாகம் ஜப்பான் போன்ற பல நாடுகளை AUKUS போன்ற குழுக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அதன் கூட்டணிகளை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இந்தியா ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் குவாட் (Quad) என்ற இதேபோன்ற குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) போன்ற பெரிய குழுக்கள் ஆசியாவின் அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப போராடுவதால் பன்முக வணிகமுறை (Minilateralism) என்று அழைக்கப்படும் சிறிய குழுக்களை நோக்கிய இந்த மாற்றம் நடந்து வருகிறது


கடந்த ஆண்டு, பைடன் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் தலைவர்களை சந்தித்து, இன்னும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படவும், அவர்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவும் ஊக்குவித்தார். குறைகடத்தி (semiconductors) உற்பத்தியை வலுப்படுத்த தைவான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட "Chip Four” ஏன்ற கூட்டணியையும் பைடன் உருவாக்கினார்.


கிஷிடாவுடனான (Kishida) சந்திப்புக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸுடன் (Ferdinand Marcos) பைடன் மற்றொரு சந்திப்பை நடத்துகிறார். தென் சீனக் கடலில் சீனாவுக்கு சவால் விடும் மார்கோஸை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.


ஆசியாவின் பாதுகாப்பு வலையமைப்பு


புதிய அணுகுமுறை ஆசியாவில் பாதுகாப்பு நெட்வொர்க்குகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நெட்வொர்க்குகள் தடுப்புகளை மேம்படுத்தவும் அமைதியை பராமரிக்கவும் பல்வேறு நாடுகளின் இராணுவ வளங்களை ஒன்றிணைக்கின்றன. உதாரணமாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஜப்பான் கூடுதல் பாதுகாப்புக்கான ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைக்க தென் கொரியாவை இது ஊக்குவிக்கிறது. சமீபத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் (External Affairs Minister) சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சியோல், டோக்கியோ, சிங்கப்பூர், மணிலா மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் கிழக்கு ஆசியாவுடனான தனது ஈடுபாட்டை இந்தியா அதிகரித்தது.


இந்தோ-பசிபிக் பகுதியில், அமெரிக்கா தனது கூட்டணிகளை வலுப்படுத்தவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், ஒத்துழைப்புக்கான சிறிய குழுக்களை உருவாக்கவும், ஆசிய நாடுகளிடையே சுதந்திரமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும்

நோக்கம் கொண்டுள்ளது. இதற்கிடையில், சீனா அமெரிக்காவுடன் நேரடியாக அதன் உறவுகளை மேம்படுத்துவதிலும், ஆசியாவில் அதன் முன்னணி தலைமையை ஒப்புக் கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.


சீனாவின் அண்டை நாடுகளுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளை நாடினாலும், அரசியல் அல்லது பிராந்திய விவகாரங்களில் பெய்ஜிங் அவர்களுடனான உறவுகளை மேம்படுத்தவில்லை. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த போட்டி இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல்பட அதிக சுதந்திரத்தை அளிக்கிறது. ஆசியாவில் ஒரு சீன செல்வாக்கு மண்டலத்தை நிறுவுவதற்கு வாஷிங்டனுடன் ஒரு குறிப்பிடத்தக்க உடன்பாட்டிற்கான பெய்ஜிங்கின் விருப்பம் அதன் அண்டை நாடுகளை தனிமைப்படுத்துகிறது. தற்போது, சீனத் தலைவர்கள் ஆசியாவில் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறிய அறிகுறி உள்ளது.




Original article:

Share:

இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, வளர்ச்சியின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டியிய நேரம் இது -ரஜினி சிங்

 மின்னணுமயமாக்கல் (Digitalisation) மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் (increased formalisation) ஆகியவை இந்தியாவின் திறனை உயர்த்தியதாகத் தெரிகிறது. ஆனால், நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நம்பிக்கை இப்போது உள்ளது.


ஆரோக்கியமான வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், ஏராளமான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) மற்றும் ஆரோக்கியமான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% வளர்ந்ததாகவும், திட்ட மேலாண்மை நிறுவனத்தின் (Project Management Institute (PMI)) உற்பத்தி மார்ச் மாதத்தில் 16 மாத உயர்வான 59.1 ஐ எட்டியதாகவும் சமீபத்திய தரவு காட்டுகிறது. நமது கடன் விகிதம், தரமிறக்குவதற்கான மதிப்பீட்டு மேம்பாடுகளின் அளவீடு, 1.92 ஆக உள்ளது. இது 10 ஆண்டு சராசரியான 1.57 ஐ விட சிறந்தது. ஆனால் இன்னும் கவலைகள் உள்ளன. புதிய நிதியாண்டில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.


2023-24 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது முழு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட 7.6% வளர்ச்சியை தாண்ட வாய்ப்புள்ளது. நுகர்வு வளர்ச்சி இன்னும் குறைவாக இருந்தாலும், வளர்ச்சி முக்கியமாக முதலீட்டால் இயக்கப்படுகிறது. 2018-19ல் தொற்றுநோய்க்கு முன் 7 சதவீதமாக இருந்த நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 3 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்தத் தரவு சிலரை ஆச்சரியப்படுத்தலாம். கார்கள், வீடுகள், நகைகள் மற்றும் பயணம் போன்றவற்றிற்காக பலர் நிறைய செலவு செய்கிறார்கள்.


அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast-moving consumer goods (FMCG)) மற்றும் ஆடைகள் போன்ற குறைந்த விலை பிரிவுகள் நுகர்வோரிடமிருந்து எச்சரிக்கையுடன் செலவழிக்கப்படுகின்றன. இருப்பினும், அமைதியாக இருந்த கிராமப்புற தேவைகள் சிறப்பாக வரத் தொடங்கியுள்ளதால் நம்பிக்கை உள்ளது. நீல்சன் அறிக்கையின்படி (Nielsen report), கிராமப்புறங்களில் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்களின் (FMCG) அளவு வளர்ச்சி முதல் பாதியில் 2.2 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற தேவையை சுட்டிக்காட்டும் இருசக்கர வாகன விற்பனையும் மேம்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருந்தால், ஒட்டுமொத்த நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான பணிநீக்கங்கள் மற்றும் அவை நகர்ப்புற நுகர்வோர் உணர்வுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.


அரசாங்கம் இன்னும் திட்டங்களுக்கு மூலதன செலவுகளில் (capex-Capital expenditure) அதிக கவனம் செலுத்துகிறது. பொருளாதாரம் தொடர்ந்து வளர, தனியார் நிறுவனங்களும் அதிக முதலீடு செய்யத் தொடங்குவது முக்கியம். குறிப்பாக, எஃகு (steel), சிமென்ட் (cement), பெட்ரோ கெமிக்கல்ஸ் (petrochemicals), வாகனம் (automobile), அலுமினியம் (aluminium) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) போன்ற தொழில்களில் அதிக தனியார் முதலீட்டைக் கொண்டுள்ளது. இயந்திரங்கள் போன்ற விஷயங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் கடந்த ஆண்டில் நிறைய ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இப்போது, தொழிற்சாலைகள் அவற்றின் திறனில் சுமார் 74% பயன்படுத்துகின்றன. இது வழக்கமான தொகைக்கு அருகில் உள்ளது. இதன் பொருள் அடுத்த சில மாதங்களில் தனியார் நிறுவனங்கள் திட்டங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவதை நாம் காணலாம். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) சமீபத்திய தரவுகள், தனியார் நிறுவனங்கள் திட்டங்களில் அதிக முதலீடு செய்வது குறித்து யோசித்து வருவதைக் காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, முக்கியமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறையால் வழிநடத்தப்பட்டது. ஏனெனில், விவசாயத் துறை மோசமான பருவமழையின் மோசமான தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதி (hotels), ஆட்டோ (auto), சுகாதாரம் (healthcare), ரியல் எஃகு, இரும்பு & எஃகு, மருந்துகள் மற்றும் நகை விற்பனையாளர்கள் போன்ற சில துறைகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், இரசாயனங்கள், ஜவுளி மற்றும் வைரங்கள் வெளியில் இருந்து குறைந்த தேவை காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டன.


உலகளாவிய மந்தநிலை காரணமாக வணிக ஏற்றுமதி குறைவாக இருந்தாலும், சேவைகள் ஏற்றுமதி வலுவாக இருந்தது. மென்பொருள் சேவைகளைத் தவிர, வணிக ஆலோசனை மற்றும் பயண சேவைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆரோக்கியமான பணப்பரிமாற்றங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிகளால் ஆதரிக்கப்படும், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6-0.7 சதவீதமாகவும், 2024-25ல் 1 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறோம். பொருளாதாரத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) முதலீடுகள் வலுவாக உள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் 5.5 பில்லியன் டாலர் நிகர வெளியேற்றங்களுடன் ஒப்பிடும்போது, 2023-24 ஆம் ஆண்டில் 41 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment (FDI)) 643 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகளாவிய குறியீடுகளில் இந்திய அரசாங்கத்தின் பத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், வலுவான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) முதலீடுகள் 2024-25 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்கங்கள் நிலையற்றதாக இருக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.


நுகர்வோர் விலைக் குறியீட்டின் (consumer price index (CPI)) பணவீக்கம் இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% ஐ விட குறைவாக உள்ளது. இது, சேவைத் துறையில் பணவீக்கம் குறைந்ததே கடந்த 3 மாதங்களில் 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், அதிக உணவு பணவீக்கம் ஒரு கவலையாக உள்ளது. குறிப்பாக காய்கறிகள் (30%), பருப்பு வகைகள் (19%), மற்றும் மசாலாப் பொருட்கள் (14%) ஆகியவற்றில் அதிக பணவீக்கம் உள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண பருவமழை என்று கருதினால், 2023-24 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 5.4% ஆக இருந்த நுகர்வோர் பணவீக்கம் 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 4.8% ஆக குறையும் என்று கணித்துள்ளது. இதில், பணவீக்கம் தொடர்ந்து குறைந்தால், அமெரிக்க பெடரல் வங்கியும் (US Fed) அதற்குள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கினால், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும்.


அதிக வட்டி விகிதங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் சில்லறை கடன் வேகமாக அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்க, இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை ஆபத்தானகாக உயர்த்தியது. இது தனிநபர் கடன் வளர்ச்சியை குறைத்து, அது இன்னும் 18% ஆக உள்ளது. செலவு மற்றும் சேமிப்பு பழக்கங்களில் மாற்றங்கள் மற்றும் எளிதான கடன் அணுகல் காரணமாக இந்த போக்கு தொடரும்.


வங்கிகளின் சில்லறை கடன்கள் இன்னும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த வங்கிக் கடன் வலுவாக இருந்தாலும், வைப்புத்தொகை பெரிதாக வளரவில்லை. இது வங்கிகளுக்கு பணப்புழக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் அவர்களின் நிகர வட்டி வரம்புகளில் அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், வங்கிகளின் சொத்துத் தரம் ஆரோக்கியமாக இருப்பது ஆறுதலான காரணியாகும்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்த ஆண்டு 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணுமயமாக்கல் மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சியை அதிகரித்துள்ளது. அரசாங்கம் இப்போது தரமான வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சாத்தியமான அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பொதுக் கடனைக் குறைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்ற இது ஒரு நல்ல நேரமாகும். ஒரு புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்பதால், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.




Original article:

Share: