புவி வெப்பமடைதல் வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்பை கணிப்பதை கடினமாக்குமா? -ரகு முர்துகுடே

 2100-ஆம் ஆண்டு வரை காலநிலை முன்னறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மனித, நிதி மற்றும் கணக்கீட்டு வளங்களின் செலவுகள் மற்றும் நன்மைகளை மதிப்பீடு செய்வது முக்கியம்.


2023-2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்பமயமாதல் புவி வெப்பமடைதலின் விளைவுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மிக தீவிரமான வெப்ப அலைகள், அழிவுகரமான சூறாவளி மற்றும் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ உள்ளிட்ட உலகெங்கிலும் தீவிரமான வானிலை மாற்றத்தை நாம் காண்கிறோம்.


தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலகம் ஏற்கனவே 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளதாக சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீடு தரவு மற்றும் காலநிலை மாதிரிகளிலிருந்து வருகிறது. 1.5°C வரம்பு சிறிய தீவு மற்றும் வளரும் மாநிலங்களின் கூட்டணிக்கு முக்கியமானது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கணிக்க விஞ்ஞானிகள் மாதிரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.


இந்த முன்னறிவிக்கப்பட்ட விளைவுகள் ஏற்படுவதற்கு வெப்பநிலை 1.5°Cக்கு மேல் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. திட்டமிடப்பட்ட தாக்கங்கள் எப்போது ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கால அளவு முக்கியமானது.


2023-2024-ஆம் ஆண்டின் தீவிர வானிலை, பேரழிவுகளை திறம்பட நிர்வகிக்கும் அளவுக்கு வானிலை மற்றும் காலநிலையை நம்மால் கணிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஏழை மக்கள் இன்னும் தீவிர வானிலை நிகழ்வுகளினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.


2023-ஆம் ஆண்டு எல்நினோவை (El Niño) இளவேனில் பருவம் காலத்தின் (spring season) துவக்கத்தில் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், 2023-2024-ஆம் ஆண்டில் வெப்பமயமாதல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. எல் நினோ பொதுவாக ஒரு சிறிய அளவு புவி வெப்பமடைதலை ஏற்படுத்துகிறது. 2022-ஆம் ஆண்டில் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலையிலிருந்து வரும் நீராவி மற்றும் காட்டுத்தீயில் இருந்து கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) வெப்பமயமாதலை மோசமாக்கியது.


2023-ஆம் ஆண்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்தது. ஆனால், அது எல் நினோ ஆண்டு வறட்சியால் ஏற்பட்டது அல்ல. ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பல வானிலை மையங்கள் 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வலுவான லா நினா உருவாகும் என்று கணித்துள்ளன. 


வானிலை முன்னறிவிப்புகள் பல ஆண்டுகளில் மிகவும் தீவிரமான புயல்களை பருவத்தை பற்றி கணித்துள்ளன. ஆனால், இதுவரை சாதாரணமாகவே இருந்து வருகிறது.


பருவமழை கணிக்க முடியாததாக உள்ளது.  இந்தியாவின் ஒரு சில பகுதிகள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன. மற்ற பகுதிகள் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சந்தித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டில் வழக்கத்தை விட அதிகமாக பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வழக்கமான லா நினா பருவமழை அல்ல. லா நினா ஆண்டு எதிர்பார்த்ததை விட வட இந்தியப் பெருங்கடலில் புயல் உருவாவதற்கான சாதகமான சூழல் இல்லை.


சில வானிலை மையங்கள் இந்தியப் பெருங்கடல் இருமுனையை (Indian Ocean Dipole (IOD)) வலுவாக கணித்துள்ளன. ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.


இது கணிப்புகள் பற்றிய புகார்களின் பட்டியல் மட்டுமல்ல.வெப்பமயமாதலின் இந்த காலகட்டத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்ற எச்சரிக்கை இது. இந்த நிகழ்வுகள் எதிர்கால கணிப்புகள் மற்றும் காலநிலை கணிப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கணிப்புகள் பெரிய சவால்களை ஏற்படுத்தலாம்


எதிர்காலத்தில் கணிப்புகள் கடினமாகலாம். "எதிர்காலத்தைப் பற்றி கணிப்பது கடினமானது" இயற்பியலாளர் நீல்ஸ் போருக்கு (Niels Bohr) அடிக்கடி கூறப்படும் மேற்கோள் பொருத்தமானது. வானிலை மற்றும் காலநிலை கணிப்புகள் இந்த சவாலை நமக்கு நினைவூட்டுகின்றன. மாதிரிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். 


ஆனால் புவி வெப்பமடைதல் கணிப்புகளை கடினமாக்கினால் என்ன செய்வது? இந்த ஆண்டு தவறான கணிப்புகள் வெறும் தற்செயல் நிகழ்வுகளா? அல்லது வரவிருப்பதற்கான எச்சரிக்கையை?


சூறாவளி, பருவமழை, எல் நினோ, லா நினா மற்றும்  இந்தியப் பெருங்கடல் இருமுனையை (Indian Ocean Dipole (IOD)) ஆகியவற்றை வெப்பமயமாதல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பல ஆய்வுகள் கணித்துள்ளன. ஆனால், ஒரு பெரிய கேள்வி உள்ளது. உலகம் ஏற்கனவே 1.5 ° C ஐ விட வெப்பமாக இருந்தால், இந்த இயற்கை வடிவங்கள் இதுவரை எவ்வாறு மாறிவிட்டன என்பதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?


சமீபத்திய வெப்பமயமாதல் காலம், முக்கிய காலநிலை வடிவங்களில் நாம் என்ன மாற்றங்களைக் காணலாம் என்பதை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. காலநிலை மாதிரிகள் அற்புதமானவை. சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி அனைத்து இயற்கை வடிவங்களையும் மீண்டும் உருவாக்க முடியும். ஆனால், அவை சரியானவை அல்ல. வெவ்வேறு மாதிரிகள் பெரும்பாலும் வெவ்வேறு பதில்களைத் தருகின்றன. ஒரே மாதிரியானது கூட அது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து வெவ்வேறு பதில்களைக் கொடுக்க முடியும்.


எடுத்துக்காட்டாக, தற்போதைய தற்போதுள்ள மாதிரிகள் கடந்த 50 ஆண்டுகளில் பருவமழை போக்குகளை துல்லியமாக உருவாக்க முடியாது. இந்த மாதிரிகள் எதிர்கால கணிப்புகளுக்கு நம்பகத்தன்மையற்றவையாகக் காணப்படுகின்றன. நிகழ்காலத்திற்கான துல்லியமான கணிப்புகளை மட்டுமே அவைகளால் செய்ய முடியும். பருவமழை முறைகள் பத்தாண்டிற்கு ஒருமுறை மாறுபடுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. 


காலநிலை மாற்றம் இயற்கையான பத்தாண்டிற்கு ஒருமுறை மாறுபாட்டை நீட்டிக்க முடியுமா, அதை ஒரு உண்மையான போக்காக மாற்ற முடியுமா என்பதும் புரியவில்லை. இந்த செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும் கணிப்புகளை மேம்படுத்தவும்  முக்கியமான கேள்விகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.


கணிப்புகளின் எதிர்காலத்தை கணித்தல்


எதிர்காலத்தில் கணிப்புகளை மேம்படுத்துவதற்கான நம்பிக்கை நிறைய உள்ளது. எனினும், நம்பிக்கை மட்டும் போதாது. ஏற்கனவே சுவாரசியமாக இருந்தாலும் இன்னும் சில பலவீனங்களைக் கொண்ட எங்கள் அமைப்புகளை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சூறாவளி, எல் நினோ, லா நினா மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்ற இயற்கை நிகழ்வுகளின் முன்கணிப்பு வெப்பமயமாதல் தொடர்வதா அல்லது வேகமடைவதால் குறையுமா என்பதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.


பல அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகள் மாதிரிகள் மற்றும் தரவு அமைப்புகளை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த முக்கியமான சவாலை சமாளிக்க செயற்கை நுண்ணறிவு (artificial intelligence(AI)), இயந்திர கற்றல் (machine learning) மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மிகவும் உள்ளூர் மட்டத்தில் நம்பகமான மற்றும் பயனுள்ள ஆரம்ப எச்சரிக்கைகளைப் பெறுவதில் நம்பிக்கையுடன் இருக்க பல காரணங்கள் உள்ளன.


காலநிலை கணிப்புகளுக்கான 2023-ல் இருந்து பாடங்கள்


தற்போது காலநிலை கணிப்புகளை உருவாக்க இதே மாதிரிகளைப் பயன்படுத்துகிறோம். இந்த மாதிரிகள் உமிழ்வு அதிகரிப்பு, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்க செயல்படுத்தும் கொள்கைகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் எதிர்கால காலநிலையைக் கணிக்கின்றன. அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு, இந்த கணிப்புகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை மாதிரிகளில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெப்பமயமாதல் உலகில் இயற்கை மாறுபாடுகள் ஆகியவற்றிலிருந்து வருகிறது.


வெப்பமயமாதலுக்கு இயற்கை அமைப்புகள் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைக் கணிப்பதில் உள்ள சிரமம் அனைத்து கணிப்புகளையும் தொடர்ந்து பாதிக்கும். இந்த மாதிரிகளை மேம்படுத்த, சிறந்த வானிலை மற்றும் காலநிலை கணிப்புகளை மாதிரி புதுப்பிப்புகளாக மொழிபெயர்க்க வேண்டும்.


அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு கணிப்புகளில் கவனம் செலுத்துவது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம். தற்போதைய புவிசார் அரசியல் சிக்கல்கள் மற்றும் சந்தைகள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் அவற்றின் விளைவுகள் அந்தக் கால  எல்லைகளை தாண்டி என்ன நடக்கும் என்பதைக் கணிப்பது கடினமாக்குகிறது.


ஒட்டுமொத்தமாக, 2100-ஆம் ஆண்டு வரை காலநிலை கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க மனித, நிதி மற்றும் கணக்கீட்டு வளங்களின் செலவுகள் மற்றும் நன்மைகளை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்.



Original article:

Share:

சென்னை மகாஜன சபையும் மற்றும் தென்னிந்தியாவில் சமூக, அரசியல் மறுமலர்ச்சியும் -என். சாய் சரண்

 இந்திய தேசிய காங்கிரசின் முன்னோடியாகக் கருதப்படும் சென்னை மகாஜன சபை (Madras Mahajana Sabha), மே 16, 1884 அன்று ஜி.சுப்பிரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரி, பி.ஆனந்த சாருலு, பி.ரங்கையா நாயுடு, பாலாஜி ராவ் மற்றும் சேலம் ராமசாமி முதலியார் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மக்களின் கருத்துக்களையும், தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தென்னிந்தியாவில் சென்னை மகாஜன சபை இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்கியது. இதே போன்ற அமைப்புகள், பிற பகுதிகளில் பூனா சர்வஜனிக் சபா (Poona Sarvajanik Sabha), பம்பாய் மாகாண சங்கம் (Bombay Presidency Association) போன்ற அமைப்புகள் வட்டார அளவில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கு முன், இந்த அமைப்புகள் தேசியவாத போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தன.


சென்னை மகாஜன சபையின் வரலாறு தென்னிந்தியாவில் பொதுக் கருத்து வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் ஆர். சுந்தரலிங்கம், தென்னிந்தியாவில் அரசியலும் தேசியவாத விழிப்புணர்வும், 1852-1891 (Politics and Nationalist Awakening in South India, 1852-1891) என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுவதாவது, "சென்னை மகாஜன சபையின் உருவாக்கம், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய எண்ணற்ற அரசியல் அமைப்புகளை இணைப்பதன் மூலம் ஒற்றுமையை அடைவதற்கான தொழில்சார் உயரடுக்கினரின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். அதே நேரத்தில், சில மாதங்களுக்குப் பிறகு இந்த சங்கங்களின் மாநாட்டை நடத்துவதுடன், அன்றைய முக்கியமான பிரச்சினைகளில் அரசியல் ஒருமித்த கருத்துக்கான முடிவை எட்டுவதற்கான முதல் உறுதியான முயற்சியைக் குறிக்கிறது. 


சென்னை மகாஜன சபையின் உருவாக்கம் 


சுப்பிரமணிய ஐயர், எம்.வீரராகவாச்சாரி, பி.ஆனந்த சாருலு, பி.ரங்கையா நாயுடு, பாலாஜி ராவ் மற்றும் சேலம் ராமசாமி முதலியார் முன்னிலையில் சென்னை மகாஜன சபை மே 16, 1884 அன்று முறையாக தொடங்கப்பட்டது. இந்த புதிய சங்கத்தின் நோக்கங்கள் அதே நாளில் வரையறுக்கப்பட்டன. பாலாஜி ராவ் சென்னை மகாஜன சபைக்கு இரட்டை பொறுப்பை வழங்க திட்டமிட்டார். முதலில், பொதுமக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதே குறிக்கோளாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மக்களின் தேவைகளை துல்லியமாக எடுத்துரைத்து தீர்வுகளை தெரிவிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இரண்டாவதாக, மக்களின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதே முக்கிய நோக்கமாக இருந்தது.  ரங்கையா நாயுடு மற்ற மாகாணங்களில் உள்ள இதேபோன்ற அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார் என்று வரலாற்றாசிரியர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 


சென்னை மகாஜன சபையின் முதல் மாநாடு 1884-ம் ஆண்டு கடைசி வாரத்திலும் 1885-ம் ஆண்டின் முதல் வாரத்திலும் சென்னையில் நடைபெற்றது. இந்திய தேசிய நூலகத்தில் இருந்த முதல் மாநாட்டின் நடவடிக்கைகளின்படி, 21 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு பூர்வீகக் குடிமகனும் இந்த சபையில் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார். மேலும், சென்னை மாகாஜன சபையின் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 


சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக ரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1902-ல் இறக்கும் வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். ஆனந்த சாருலு மற்றும் வீரராகவாச்சாரி ஆகியோர் இணைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


சென்னை மகாஜன சபைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றியது. இந்த அமைப்பின் 36 உறுப்பினர்களில் 19 பேருக்குக் குறையாமல் பல்கலைக்கழகப் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சட்டம், பத்திரிகை அல்லது மருத்துவம் போன்ற சுதந்திரமான தொழில்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்று சுந்தரலிங்கம் குறிப்பிட்டுள்ளார். 


கல்வி, உள்ளாட்சி, பொது நிதி, பொருளாதாரம், பொது சுகாதாரம் மற்றும் இதர ஐந்து துணைக் குழுக்களுடன் சென்னை மகாஜன சபையானது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்பட்டது. இது கள ஆய்வுகளை மேற்கொண்டது மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளின் கவனத்தை ஈர்த்த ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டது. 

காந்தி, காங்கிரஸ், சென்னை மகாஜன சபை 


தேசியவாத போராட்டத்திற்கான அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிய போது சென்னை மகாஜன சபையின் மிகவும் தீவிரமான அரசியல் கட்டமாக மாறியது.  இந்த மாற்றம் மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்தது. காந்தி சுதந்திர இயக்கத்தை வழிநடத்துவதற்கு முன்பே, சென்னை மகாஜன சபையானது அவருடன் தொடர்பு கொண்டிருந்தது. இந்த நேரத்தில், 1896-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சென்னை மகாஜன சபையில் காந்தி உரையாடினார். இந்த உரையாடலுக்குப் பிறகு, சென்னை மகாஜன சபை உறுப்பினர்கள் காந்தியின் வலுவான ஆதரவாளர்களாக மாறினர்.


அமைதியான, நியாயமான வழிகளில் சுயராஜ்யம் பெறுவதை காங்கிரஸ் தனது குறிக்கோளாகக் கொண்டபோது, சென்னை மகாஜன சபையும் அதை ஆதரித்தது. 1929-ஆம் ஆண்டில், காங்கிரசின் லாகூர் அமர்வைத் தொடர்ந்து, சுயராஜ்யம் என்றால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் என்று சென்னை மகாஜன சபை முழுமையாக ஏற்றுக்கொண்டது என்று, ஜூலை 6, 1990 அன்று தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்தி குறிப்பிட்டது. 


காங்கிரசின் வருடாந்திரக் கூட்டத் தொடர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த சென்னை மகாஜன சபை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தது. இது மாகாண காங்கிரஸுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. தெற்கில் மாகாண காங்கிரஸ் குழுக்களை நிறுவுவதிலும் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. சென்னை மகாஜன சபையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான உமாபதி முதலியார் கூறுகையில், "சத்தியமூர்த்தி பவன் கட்டப்படும் வரை, சென்னை மகாஜன சபை வளாகம் மாகாண காங்கிரஸின் தலைமையகமாக செயல்பட்டது. இதில், தலைவர்கள் சென்னை மகாஜன சபை வளாகத்தில் கூடி தேசிய காங்கிரசின் அனைத்து கடிதங்களையும் விவாதித்து கூட்டாக நடவடிக்கை குறித்து திட்டமிடுவார்கள்." மத்திய, மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட காங்கிரசுக்குப் பொருள் மற்றும் நிதி ஆதாரங்களையும் அது விரிவுபடுத்தியது. 


பிரிட்டிஷ் கட்டுப்பாடுகள் 


1931-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் தோல்விக்குப் பிறகு, காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தார். ஜனவரி 4, 1932 அன்று, பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியைக் கைது செய்து.  இந்திய தேசிய காங்கிரஸை சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது.  பின்னர், இரண்டு வாரங்கள் கழித்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், சென்னை மகாஜன சபை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அதன் நிதியைக் கையாள்வதைத் தடை செய்தார். 


ஜனவரி 31, 1932 அன்று தி இந்து நாளிதழில் வெளியான அறிவிப்பின்படி, எம். பக்தவத்சலம், எஸ். வெங்கட்ராமன், சி. வெங்கடரங்கம் நாயுடு மற்றும் சி. ரங்கநாயகுலு மேற்கண்ட நபர்கள் சென்னை மகாஜன சபையின் நிதிப் பொறுப்பில் உள்ளனர் என்றும், மேற்கூறிய நிதிகள் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் குழுவின் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உள்ளூர் அரசாங்கங்கள் நம்புவதற்கு காரணம் உள்ளது. 


 இதன் அடிப்படையில், இரண்டு அமைப்புகளும் சட்டவிரோத அமைப்புகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய நபர்கள் மறு உத்தரவு வரும் வரை மேற்கூறிய நிதியை செலுத்தவோ, வழங்கவோ, மாற்றவோ அல்லது வேறு எந்த வகையிலும் கையாளவோ கூடாது அறிவிக்கப்பட்டிருந்தது. 


பிந்தைய ஆண்டுகள் (Later years)


1942-ஆம் ஆண்டில் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரஸைத் தடை செய்தது. பல்வேறு பிரச்சினைகளில் பொதுமக்களின் கருத்தை மையப்படுத்த, சென்னை மகாஜன சபையின் உறுப்பினர்கள் 1942-ஆம் ஆண்டு மற்றும் 1945-ஆம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு அமைப்புகளை அமைத்தனர். மதுவிலக்கு ஒழிப்பை சென்னை மகாஜன சபை கடுமையாக எதிர்த்தது. இது ஒரு சர்க்கா கிளப்பைத் (charkha club), தொடங்கி, நூற்பு பயிற்சி அளிக்க சில நூற்பு இயந்திரங்களை(charkhas) வாங்கியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


1947-ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, சென்னை மகாஜன சபையானது அரசியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு, சமூக பிரச்சினைகளை மேம்படுத்துவதைத் தவிர, கலாச்சார நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. 140 ஆண்டுகள் பழமையான சென்னை மகாஜன சபை இப்போது அண்ணா சாலையில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு (Tamil Nadu Government Multi-Super-Speciality Hospital) எதிரே உள்ள அதன் கட்டிடத்தில் செயல்படுகிறது.



Original article:

Share:

எல்லை தாண்டிய திவால் சட்டங்களின் நிலை குறித்து -அமோல் பாக்சி

 பலதரப்பு அல்லது இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய வர்த்தகத்துடன் திவால் சட்டங்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை நாம் இணைக்க வேண்டும்.


சர்வதேச வர்த்தகத்திற்கு எல்லை தாண்டிய திவால் சட்டங்கள் (Cross-border insolvency) முக்கியமானவை. ஒரு நாட்டின் சட்ட சுற்றுச்சூழல் அமைப்பில் எல்லை தாண்டி ஒருங்கிணைப்பது வலுவான திவால் சட்டங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த சட்டங்கள் சட்டரீதியான உறுதியை அளிக்கின்றன. அவை எல்லை தாண்டிய செயல்பாடுகளுடன் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் முதலீடுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு பயனளிக்கின்றன. 


மாதிரி சட்டத்தை அமல்படுத்துதல் (Implementing the Model Law) 


எல்லை தாண்டிய திவால்நிலைக்கு நிலையான சட்டங்களை உருவாக்குவது பற்றிய விவாதம் நடந்து வருகிறது. 1990-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐ.நா ஆணையம் (UN Commission on International Trade Law (UNCITRAL)) அதன் மாதிரிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தது. இது நான்கு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 


அணுகல், அங்கீகாரம், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு. இந்தியா உட்பட பல நாடுகள் அதன் சாத்தியமான பலன்களை ஒப்புக் கொண்டுள்ளன. 2016-ஆம் ஆண்டில் திவால் மற்றும் திவால் குறியீடு (Insolvency and Bankruptcy Code (IBC)) வரைவு செய்யும் போது திவால் சட்ட சீர்திருத்தக் குழுவால் இது குறிப்பிடப்பட்டது. மேலும், இது 2022-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் பொருளாதார ஆய்விலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இருப்பினும், மாதிரி சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐ.நா ஆணையத்தின் கூற்றுப்படி, 60 நாடுகள் மட்டுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளன. மற்ற நாடுகள் வேறுவிதமாக நடைமுறைப்படுத்தியுள்ளன. அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு அதைச் சரிசெய்துள்ளனர். சிலர் பரஸ்பர அல்லது பொதுக் கொள்கைக்கான விதிவிலக்குகளைச் சேர்த்துள்ளனர்.

 

இந்தியா இன்னும் மாதிரிச் சட்டத்தை ஏற்கவில்லை. இது பல ஆணைய பரிந்துரைகள் இருந்தபோதிலும். இந்த முடிவு மீண்டும் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய பட்ஜெட்டில் இந்தப் பிரச்னை பற்றிக் குறிப்பிடவில்லை. தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நீதித்துறை உள்கட்டமைப்பு மூலம் திவால் மற்றும் திவால் குறியீடுயின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இது ஆதரவளித்தது. 


தற்போது, ​​இந்தியா வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்துகிறது. இவை எல்லை தாண்டிய திவாலா நிலைகளுக்கான வழக்கு மூலம் வழக்கு ஒப்பந்தங்களை அனுமதிக்கின்றன. இவை தற்காலிகமானவை மற்றும் போதுமானதாக இல்லை.

 

இதற்கு இணையாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)), விரிவான பொருளாதார கார்ப்பரேஷன் ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Partnership Agreements (CEPAs)), ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியா 54-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 


அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights (IPR)) மற்றும் முதலீடுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய கணிசமான வர்த்தகத்தின் மீதான கட்டண / சுங்கவரி அல்லாத தடைகளை குறைக்க அல்லது நீக்குவதற்கான நாடுகளுக்கு இடையிலான ஏற்பாடுகள் தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் என்று அமைச்சகம் விவரிக்கிறது. 


இதேபோல், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகள் மீதான மிகவும் ஒருங்கிணைந்த ஒப்பந்தங்களாக விவரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வர்த்தக வசதி மற்றும் ஒத்துழைப்பு போன்ற பரந்த பகுதிகளை உள்ளடக்குகின்றன. எனவே, இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு திவால் நிலையை கைப்பற்றுகின்றன என்பதை ஆராய்வது  மிகவும் முக்கியமானது.

 

திவால் விதிகள் (Insolvency provisions) 


இருப்பினும், இந்த ஒப்பந்தங்களில் விரிவான எல்லை தாண்டிய திவால் விதிகள் இல்லை. இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) வரம்பிற்குட்பட்டவை. விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) மற்றும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Cooperation Agreement (CECA)) ஆழமான ஒழுங்குமுறை அம்சங்களை உள்ளடக்கியதாகும். 


தற்போது, ​​பெரும்பாலான ஒப்பந்தங்களில் பொதுவான  வர்த்தக தீர்வு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) வர்த்தகத்தை எளிதாக்க உதவுகின்றன என்று கூறினாலும் அவை எல்லை தாண்டிய திவால் சட்டங்களின் தேவைக்கும் வழிவகுக்கும். சர்வதேச வர்த்தகத்திற்கு இந்தச் சட்டங்கள்  முக்கியமானவை. மேலும், ஒரு நிலையான சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை தொடர்புடைய உட்பிரிவுகள் ஒப்பந்தங்களில் ஒருங்கிணைப்பு தேவை. 


மாதிரி சட்டத்தைப் பொறுத்தவரை, நன்கு அங்கீகரிக்கப்பட்டாலும், பல்வேறு பொருளாதார / சட்ட ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் எளிதாக செயல்படுத்தக்கூடிய உகந்த தீர்வாக இது இருக்கிறதா என்பது குறித்து அடிமட்ட அளவிலான தீர்ப்பு வெளியாகவில்லை. சில அறிஞர்களிடமிருந்து மாற்று யோசனைகள் உள்ளன. சர்வதேச ஒப்பந்தங்கள், கட்டமைப்புகள் மற்றும் நெறிமுறைகள் தனிப்பட்ட வழக்குகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்படலாம் என்று குறிப்பிடுகின்றனர். தற்போதுள்ள அமைப்பை நிறைவு செய்யும் போது இவை பயனுள்ளதாக இருக்கலாம். 


  2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை நான்கு புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreements (FTAs)) கையெழுத்திட்ட பிறகு, இந்தியா இப்போது பல நாடுகளுடன் (பொருளாதார ஆய்வு, 2024) இதே போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, மாதிரிச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் திவால் நிலையைச் சேர்க்க முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எல்லை தாண்டிய விதிகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் மற்ற ஒப்பந்தங்களில் ஒருங்கிணைக்கப்படலாம். தற்போது, ​​இந்த ஒப்பந்தங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் நிலைத்தன்மையை நிவர்த்தி செய்கின்றன. 


ஆனால், பெரும்பாலும் திவால்நிலையை கவனிக்கவில்லை. விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Corporation Agreements (CECAs)) மற்றும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் (Comprehensive Economic Partnership Agreements (CEPAs)) ஆகியவை ஆழமான ஒழுங்குமுறை அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தால், ஏன் திவால்நிலையை சேர்க்கக்கூடாது?

 

எல்லை தாண்டிய திவால்நிலையில் கவனம் இல்லாதது இருதரப்பு அல்லது பிராந்திய ஒப்பந்தங்களில் மட்டுமல்ல, முக்கியமான உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) அறிக்கைகளிலும் உள்ளது. வர்த்தகத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி பேசும்போது இந்த அறிக்கைகள் எல்லை தாண்டிய திவால்நிலை பற்றி வெளிப்படையாக விவாதிக்கவில்லை. எனவே, பலதரப்பு அல்லது இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய வர்த்தகத்துடன் திவால் சட்டங்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இணைப்பது முக்கியம். குறிப்பாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் எல்லை தாண்டிய அம்சங்களைச் சேர்க்காமல் முழுமையடையாது.

 

எனவே, சர்வதேச வர்த்தகத்திற்கு வலுவான திவால் சட்டங்கள் எவ்வளவு முக்கியம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) மற்றும் இதே போன்ற ஒப்பந்தங்கள் வர்த்தக நிறுவனங்களிடையே திவால் விளைவுகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். இது இந்தியா கையெழுத்திடும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை வலுப்படுத்தும். 


தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (standard operating procedures (SOPs)) உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது இருக்கலாம். வர்த்தக அமைச்சகம், திவால் மற்றும் திவால் வாரியம் மற்றும் சட்ட வல்லுநர்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுடன் திவால்நிலையை எவ்வாறு இணைப்பது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.  இந்த சிக்கல்களை விரைவாக தீர்க்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது இந்தியாவின் வர்த்தகத்திற்கு அதிக பலன்களை வழங்கும்.

 

அமோல் பாக்சி, புது தில்லியில் உள்ள வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பில் வருகைதரு சக ஊழியராக உள்ளார். 



Original article:

Share:

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த ஆன்லைன் உள்ளடக்கம் (online content) குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம்

 குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான ஆன்லைன் குற்றம் குறித்த சட்டங்களை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

இந்திய உச்ச நீதிமன்றம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் பொருட்களை அணுகுவது அல்லது சேமித்து வைப்பதால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது. இது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டத்தின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை  நோக்கத்துடன் கொண்ட ஆன்லைன் உள்ளடக்கம் (online content) குறித்த சட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அத்தகைய உள்ளடக்கத்தை அணுகி பார்ப்பவர்களுக்கு சட்டம் ஒரு குற்றவாளி மனப்பான்மையைக் கருதுகிறது என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

 

சட்ட நூல்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் இரண்டிலும் "குழந்தை ஆபாசப்படம்" (‘child pornography’) என்ற வார்த்தையைத் தவிர்க்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்த சொல் குற்றத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அதற்கு பதிலாக, பாலியல் உள்ளடக்கத்திற்காக குழந்தைகளை சுரண்டுவதன் தீவிரத்தை சிறப்பாக பிரதிபலிக்க "குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக பொருள்" (Child Sexual Exploitative and Abuse Material (CSEAM)) என்ற வார்த்தையைப் பயன்படுத்த நீதிமன்றம் பரிந்துரைத்தது.  


  இந்தத் தீர்ப்பு, 2000-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் (Information Technology Act, 2000), மற்றும் போக்ஸோ சட்டத்தின் சில விதிகள் குறித்த குழப்பத்தையும் தீர்க்கிறது. இந்த சட்டங்கள் குறித்த வெவ்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மாறுபட்ட விளக்கங்களைக் கொண்டிருந்தன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் உள்ளடக்கத்தைப் பார்த்த ஒருவருக்கு எதிரான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து இந்த வழக்கு வந்தது. அத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்குவதையும் பகிர்வதையும் மட்டுமே சட்டம் குற்றமாக்குகிறது. தனிப்பட்ட முறையில் பார்ப்பது மட்டுமல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 


உச்ச நீதிமன்றம் "ஆக்கபூர்வமான உடைமை" (‘constructive possession’) கொள்கையைப் பயன்படுத்தியுள்ளது. இது போன்ற விஷயங்களை ஆன்லைனில் பார்ப்பது அல்லது காண்பிப்பது குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (Protection of Children from Sexual Offences (POCSO)) சட்டத்தின் பிரிவு 15-ன்  கீழ் "உடைமை" (‘possession’) என்று கூறுகிறது. அத்தகைய உள்ளடக்கத்தை யாரேனும் நீக்கவோ, அழிக்கவோ அல்லது புகாரளிக்கவோ இல்லை என்றால், பகிரும் நோக்கத்தை அனுமானிக்கலாம் என்று நீதிமன்றம் கூறுகிறது. 


குழந்தைகள் சம்பந்தப்பட்ட இணைய குற்றங்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கத்தை குறைக்கும் என்பதால், சில விதிகளை குறுகிய முறையில் விளக்குவதற்கு எதிராக நீதிமன்றம் எச்சரித்தது. இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67பி பிரிவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆன்லைனில் குழந்தைகளை சுரண்டல் மற்றும் பாலியல் வன்முறை செய்வதற்கான பல்வேறு மின்னணு வடிவங்களை தண்டிக்க இந்த பிரிவை "விரிவான ஏற்பாடு" (‘comprehensive provision’) என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 


அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புகாரளிக்க வேண்டிய பொறுப்பை தளங்கள் மற்றும் சமூக ஊடக இடையீட்டாளர்களுக்கு  நீதிமன்றம் நினைவூட்டியது. கூடுதலாக, குழந்தை பாலியல் வன்முறை பொருட்களின் சட்ட மற்றும் நெறிமுறை விளைவுகளை நிவர்த்தி செய்யும் விரிவான பாலியல் கல்வி திட்டங்களை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்தியது. மேலும், உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம்  வலியுறுத்தியது. 



Original article:

Share:

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் அறிவிப்புகள்

 பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இந்தியாவிற்கு சவாலாக இருக்கும்.


பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தில் மூன்று முக்கியப் பகுதிகளை மையமாகக் கொண்டு முக்கியமான சந்திப்புகள் இடம்பெற்றன. பிரதமர் நரேந்திர மோடி குவாட் கூட்டத்தில் கலந்து கொண்டார் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அவர் நியூயார்க்கில் வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தார். அவர் ஐநா நடவடிக்கைகளில் பங்கேற்றார் மற்றும் அதிக இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். நான்கு உறுப்பு நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தாமதமான குவாட் உச்சிமாநாடு எதிர்பார்த்ததை விட முக்கியமானது. குறிப்பாக அமெரிக்க அதிபர் அதிபர் ஜோபைடன் மற்றும் ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது 


இவர்களின் கூட்டறிக்கை, தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக விமர்சித்தது மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தது. இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் ஐ.நா பிரகடனத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.


சீன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான புதிய அறிவிப்புகள் சீனாவை கோபப்படுத்தும். இந்த முயற்சிகளில் பின்வருவன அடங்கும்: குவாட்-கடல் கப்பல் கண்காணிப்பு பணி (Quad-at-Sea Ship Observer Mission) 2025-ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் (மைத்திரி) பயிற்சிக்கான கடல்சார் முன்முயற்சி  (Maritime Initiative for Training in the Indo-Pacific (MAITRI)) கடல்சார் சட்ட உரையாடல் விதிகள் அடிப்படையிலான உத்தரவை ஆதரிக்க உள்ளது. இருப்பினும், பசிபிக் பெருங்கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மற்ற குவாட் நாடுகளுடன் சேர இந்தியா இன்னும் தயாராகவில்லை. அடுத்த ஆண்டு, குவாட் தலைவர் பதவியை இந்தியா ஏற்கும் நிலையில்,  இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படுமா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.


கூடுதலாக, குவாட் தடுப்பூசி முன்முயற்சியின் முந்தைய சவால்களில் இருந்து கற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான "புற்று நோய் மூன்ஷாட்" (Cancer Moonshot) முயற்சிக்கு குவாட் நாடுகள் உறுதியளித்தன.


குறைகமின் கடத்தி உற்பத்திக்கான (semiconductor) இராணுவ கூட்டாண்மை மற்றும் இந்தியாவிற்கு தேவையான ட்ரோன்களைப் வழங்குவது உட்பட பல ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் தங்களின் முன்னேற்றத்தை பற்றி அறிவிக்க முடிந்தது. இருப்பினும், சில பதற்றங்கள் உள்ளன. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சிவில் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டது மற்றும் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த சீக்கிய ஆர்வலர்களுடன் வெள்ளை மாளிகை சந்திப்பு  போன்றவை மோடியின் பயணத்திற்கு முன்பு நடந்தது. இருப்பினும், பன்னூன் வழக்கை (Pannun case) புறக்கணிக்க முடியாது என்பது வாஷிங்டனில் இருந்து வரும் செய்தி தெளிவாக குறிப்பிடுகிறது.


ஐ.நா. மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களுடனான  பிரதமர் மோடியின் சந்திப்பு கவனத்தைப் பெற்றது. அமைதிச் சமாதான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கு சமீபத்திய குறிப்புகள் இதற்குக் காரணம். பிரதமர் மோடி அத்தகைய திட்டத்தைப் பற்றி எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றாலும், ஜெலென்ஸ்கியுடன் அவர் நடத்திய பேச்சுக்கள் இரண்டாவது அமைதி உச்சிமாநாட்டின் சாத்தியக்கூறுகளை மையமாகக் கொண்டிருந்தன.


புலம்பெயர்ந்தோர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியா இப்போது உலகளாவிய தெற்கிற்கான வலுவான குரலாக உள்ளது என்று கூறினார். உலகளாவிய மோதல்கள் தொடர்பான வளரும் நாடுகளின்  பிரச்சனைகளை இந்தியா நிவர்த்தி செய்து வருவதாக அவர் வலியுறுத்தினார். ஐ.நா. "எதிர்கால உச்சி மாநாட்டில்", மனிதகுலத்தின் வெற்றி "கூட்டு பலத்தில் தங்கியிருக்கிறது, போர்க்களத்தில் அல்ல" என்று குறிப்பிட்டார்.


அடுத்த சில மாதங்களில், இந்திய அமைதிக்கான அதன் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் இலக்குகளைப் பின்பற்றுவதற்கும், பயணத்தின் போது வெளியிடப்பட்ட பல அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கும் சவாலாக இருக்கும்.



Original article:

Share:

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் இந்தியா மறுபரிசீலனை கேட்பது ஏன் சரியானது ? - அனுத்தம் பானர்ஜி

 சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் நீரில் 19.48% மட்டுமே இந்தியாவுக்கு பங்கு உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கும் பங்கு உள்ளது.  தற்போது இந்தியா அதன் பங்கை அதிகரிக்க விரும்புகிறது. 


சமீபத்தில், ஒப்பந்தத்தின் பிரிவு XII (3) இன் கீழ் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) "மதிப்பாய்வு செய்யவும்" "மாற்றவும்" இந்தியா முறையாக பாகிஸ்தானுக்கு அறிவித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) மாற்றியமைக்க ஜனவரி 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த நேரத்தில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் பிடிவாத நிலையை இந்தியா மேற்கோள் காட்டியது. 


திருத்தத்திற்கான இந்த கோரிக்கைகள் ஒப்பந்தத்தை மீண்டும் பொது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதன் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். மாற்றத்திற்கான இந்தியாவின் கோரிக்கை இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை காரணமாக பார்க்கப்படக்கூடாது. இதை அடைவதற்கு, ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கான இந்தியாவின் காரணங்களை மதிப்பிடுவதற்கு முன், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) தன்மை, ஒப்பந்தத்துடன் தொடர்புடைய சர்ச்சைகள் மற்றும் தீர்வு முறையைப் புரிந்துகொள்வது அவசியம். 


 சிந்து நதி நீர் ஒப்பந்தமும் மற்றும் சர்ச்சைகளும் 


1960-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக வங்கி இடையே பன்னாட்டு நீர்ப்பாசன ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே, குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்ட முன்னாள் பஞ்சாப் மாகாணத்தில், நதி நீர் வளங்களை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். 


ஆங்கிலேயர்கள் இந்த மாகாணத்தில் பெருமளவில் முதலீடு செய்தனர். கால்வாய்கள் மற்றும் பிற நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை நிர்மாணித்தனர். இப்பகுதியைப் பிரிப்பதன் விளைவாக அதன் நீர்வளங்கள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிரிவினைக்குப் பிறகு கால்வாய் நீர் தொடர்பாக ஒரு குறிப்பிடத்தக்க சர்ச்சை எழுந்தது.  இது மோதலைத் தீர்ப்பதற்கு ஒரு முறையான ஒப்பந்தத்தை அவசியமாக்கியது. 


பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக வங்கியின் அனுசரணையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி அமைப்பின் கிழக்கு பாயும் நதிகளான ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டன. மேற்கு நோக்கி பாயும் சிந்து, செனாப், ஜீலம் நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டன. 


இந்த ஒப்பந்தம் மேற்கு நதிகளில் "ரன்-ஆஃப்-தி-ரிவர்" (“run-of-the-river” (RoR)) நீர்மின் திட்டங்களை உருவாக்க இந்தியாவை அனுமதித்தது. இருப்பினும், இந்த திட்டங்களால் கீழ் நதிக்கரை மாநிலத்தின் உரிமைகளை மாற்ற முடியவில்லை. 


 இந்திய நிலைப்பாடு


"ரன்-ஆஃப்-தி-ரிவர்" (“run-of-the-river” (RoR)) திட்டங்கள் மூலம் மேற்கு நதிகளில் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் குறிப்பிடத்தக்க சேமிப்பு திறன்களைக் கொண்டிருந்தாலும், சில திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்புகள் காரணமாக அவை சர்ச்சைக்குரியதாகிவிட்டன. 


ஜம்மு-காஷ்மீரில் செனாப் ஆற்றில் பக்லிஹார் "ரன்-ஆஃப்-தி-ரிவர்" (“run-of-the-river” (RoR)) நீர்மின் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம். இந்த அணையின் வடிவமைப்புகளுக்கு, குறிப்பாக திட்டத்தின் நுழைவாயில்களை பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவை "தண்ணீரை ஓட விடுவது" (“letting water flow”) என்ற ஒப்பந்தத்தின் உணர்வுக்கு ஏற்ப இல்லை என்று வாதிடுகிறது. 


இறுதியில், நடுநிலை நிபுணர் சம்பந்தப்பட்ட நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஆட்சேபனைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன. இந்தியாவின் நிலைப்பாடு நிலைநிறுத்தப்பட்டது.  இது பாக்லிஹார் ரன்-ஆஃப்-தி-ரிவர் (RoR) நீர்மின் திட்டத்தை முடிக்க வழிவகுத்தது. ஆனால், இதுபோன்ற ஆட்சேபனைகள் வாடிக்கையாகி விட்டன. 


ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் ரட்லே மற்றும் பந்திபோராவில் ஜீலத்தின் கிளை நதியில் உள்ள கிஷன்கங்கா போன்ற மேற்கு நோக்கி பாயும் நதிகளில் இந்தியாவின் பிற திட்டங்களை பாகிஸ்தான் தொடர்ந்து தடுத்து வருகிறது. இந்த திட்டங்களுக்கான வடிவமைப்பு பிரச்சனைகளை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். 


இந்த வழக்கமான ஆட்சேபனைகள் ஒப்பந்தத்தை அரசியலாக்கியுள்ளன. இரு நாடுகளிலும் உள்ள விமர்சகர்களுக்கு இது ஒரு மென்மையான இலக்காக மாறியுள்ளது. மேலும், பொது விவாதங்களில் "ஒப்பந்தத்தை விமர்சிப்பது" பொதுவானதாகிவிட்டது. 


இந்த சூழலில், ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் தற்போதுள்ள ஒப்பந்த விதிகளுடன் ஒத்துப்போகின்றன. இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து மாற்றியமைக்க அழைப்பு விடுத்துள்ளது. 


எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்பதால் இது மிகவும் முக்கியமானது. தற்போது ஒப்பந்தத்தின் கீழ் வராத காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி போன்ற வளர்ந்து வரும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய ஒப்பந்தத்தை மாற்றவும் இந்தியா விரும்புகிறது. 


மிக முக்கியமாக, சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரில் தனது பங்கை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது. தற்போது, இந்த நீர்நிலைகளில் 19.48% மட்டுமே இந்தியாவால் அணுக முடிகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு பெரும்பான்மையான அணுகல் உள்ளது. இந்த நிலைமை மேல் நதிக்கரை இந்தியாவின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில், இது நீரை உகந்த முறையில் பயன்படுத்த மறுக்கப்படுகிறது. 


முன்னோக்கி செல்லும் வழி 


இந்த பிரச்சினையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, மாற்றத்திற்கான இந்தியாவின் அழைப்புகளுக்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக வங்கி ஆகிய அனைத்து பங்குதாரர்களிடையேயும் தீவிர பேச்சுவார்த்தைகள் தேவைப்படும். "வெளியேறும் விதி" இல்லாததால் எந்த நாடும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்பதை இந்தியா புரிந்துகொள்கிறது. மேலும், எந்தவொரு ஒருதலைப்பட்ச மாற்றத்திற்கும் ஒருமித்த கருத்து தேவைப்படும். 


இந்த ஒப்பந்தத்தில் உள்ள உள்ளார்ந்த தகராறு தீர்வு பொறிமுறையையும் இந்தியா அறிந்துள்ளது. இந்த வழிமுறை தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் சச்சரவுகளைத் தீர்க்க அனுமதிக்கிறது. உதாரணமாக, அனைத்து தொழில்நுட்ப கேள்விகளுக்கும் முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆணையர்களைக் கொண்ட இருதரப்பு அமைப்பான சிந்து நதிநீர் குழு ( Indus Waters Commission) பதிலளிக்கிறது. இரு தரப்பினரும் ஒரு முடிவுக்கு வரத் தவறினால், இந்த கேள்விகள் "வேறுபாடுகள்" மற்றும் இறுதியில் "சர்ச்சைகள்" ஆக மாறும். இந்த சர்ச்சைகள் பின்னர் உலக வங்கி அல்லது சர்வதேச நடுவர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுகின்றன. 


ஒப்பந்தத்திற்குள் உள்ள இந்த வலுவான பிரச்சனை தீர்வு அமைப்பு அதன் நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கிறது. திருத்தத்திற்கான அதன் கோரிக்கைகளின் சட்ட தாக்கங்களை இந்தியா புரிந்துகொள்கிறது. எனவே, ஒப்பந்தத்தின் தன்மை மற்றும் தகராறு தீர்வு முறையில் செயல்பட வாய்ப்புள்ளது. 


இருப்பினும், ஒப்பந்தத்தில் காலநிலை தொடர்பான விதிகளை சேர்க்க இந்தியா பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். இவை நிலத்தடி நீர் வழங்கல் குறைந்து வருவது மற்றும் இப்பகுதியில் தற்போதுள்ள நீர்நிலைகளை புதுப்பிப்பது பற்றிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்யக்கூடும். இந்த ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படும் நதிகளில் குறைந்து வரும் நீர் ஓட்டம் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம் போன்ற பிற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் குறித்தும் இந்தியா விவாதிக்கலாம். 


இந்த ஒப்பந்தம் 1960-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்டதிலிருந்து, அதன் தற்போதைய வடிவம் பல முக்கிய பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் அதை மேலும் வலுப்படுத்தும். 


இது சம்பந்தமாக, ஒப்பந்தத்தின் முறையான மதிப்பீடு ஏற்படுவதற்கு முன்பு தற்போதுள்ள இந்த பிரச்சினைகள் முதலில் பிரிவு 1, 1.5 மற்றும் 2 நிலைகளில் விவாதிக்கப்படலாம். இறுதியாக, இரு நாடுகளுக்கும் இடையில் காலநிலை பிரச்சினைகள் ஒரு வழக்கமான விவாதப் பொருளாக மாறுவதை உறுதி செய்வதற்காக சிந்து நதி நீர் ஆணையர்களின் பங்கை விரிவுபடுத்த இந்தியா அழைப்பு விடுக்கலாம். இந்த முயற்சி இந்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக ( Confidence Building Measure (CBM)) மாற்றும். 


அனுத்தமா பானர்ஜி வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட ஹென்றி எல் ஸ்டிம்சன் மையத்தின் முன்னாள் உறுப்பினர்.



Original article:

Share: