பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்தியா-ஈரான் உறவுகளை மேம்படுத்துகிறது -ராஜீவ் அகர்வால்

 எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும்.


16-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவின் கசானில் அக்டோபர் 22-24, 2024 வரை நடந்தது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு நாடுகளும் தொடக்க கால உறவுகளைப் பகிர்ந்து கொண்டன. ஈரான் இப்போது காசாவில் போரில் ஈடுபட்டுள்ளது.  இந்த பதற்றத்தை குறைக்க இந்தியாவின் உதவியை ஈரான் கோருகிறது. இந்தியா அமைதி பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறது.  பல நாடுகள் மோதலைத் தீர்க்க இந்தியாவின் உதவியை விரும்புகின்றன. ஏனென்றால், இந்தியாவனது, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது.


சாத்திய கூறுகள்


பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்தார். சந்திப்பின் போது, ​​இருதரப்பு உறவில் வலுவான மற்றும் பயன்படுத்தப்படாத திறனை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்கை பெசெஷ்கியான் பாராட்டினார். காசா மோதலை குறைக்க இந்தியா உதவ முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 2023-ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) மற்றும் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா)  பிரிக்ஸ்ல் ஈரான் இணைய உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் சபாஹார் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் (International North-South Transport Corridor (INSTC)) இணைந்து பணியாற்றுவது பற்றியும் ஆலோசித்தனர்.


எவ்வாறாயினும், இந்தியாவிற்கான ஈரானின் முக்கியத்துவம், சபஹர் துறைமுகம் மற்றும் அது வழங்கும் இணைப்பு விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பரந்த இருப்பு காரணமாக ஈரான் மிகவும் முக்கியமானது.  அதன் மொத்த எண்ணெய் இருப்பு 209 பில்லியன் பீப்பாய்கள் மற்றும் இயற்கை எரிவாயு 33,988 பில்லியன் கன மீட்டர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.


 இது 2021-ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கு ஆசியாவின் 24% மற்றும் உலகின் 12% எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் மற்றும் காசா போர் இருந்தபோதிலும், மே 2024-ஆம் ஆண்டில் ஈரான் ஒரு நாளைக்கு 3.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்தது. மார்ச் 2024-ஆம் ஆண்டில், அது ஒரு நாளைக்கு 1.61 மில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்தது.




நெருக்கமான கூட்டாண்மைக்கான விருப்பங்கள்


சபஹர் துறைமுகம் சமீபகாலமாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மே 13, 2024 அன்று, இந்தியாவும் ஈரானும் துறைமுகத்தை இயக்குவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சபஹர் துறைமுகம் இந்தியாவின் காண்ட்லா மற்றும் மும்பை துறைமுகங்களுக்கு விரைவான மற்றும் எளிதான வழியை உருவாக்குகிறது. இது ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே அமைந்துள்ளதால், பாரசீக வளைகுடாவில் மோதல்களால் ஏற்படும் இடையூறுகளிலிருந்து இந்தியாவின் வர்த்தகத்தைப் பாதுகாக்கிறது.


கூடுதலாக, சபாஹர் மற்றும் சஹேதான் நகருக்கு இடையே 700 கிமீ தொலைவில் உள்ள இரயில் இணைப்பு விரைவில் ஈரானின் இரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜஹேதானில் இருந்து சராஞ்சிற்கு சாலை இணைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை எளிதாக அனுப்ப உதவும்.


எரிசக்தி விநியோகம் ஒத்துழைப்புக்கான மற்றொரு முக்கியமான பகுதியாகும். மே 2019-ஆம் ஆண்டுக்கு முன், ஈரான் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 12% வழங்கியது. இருதரப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளதால், ​​ஈரானில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி மீண்டும் தொடங்கப்படலாம். இது இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான புதிய சாத்தியக்கூறுகளைத் உருவாக்குகிறது.


1993-ஆம் ஆண்டு முதல் ஈரான்-ஓமன்-இந்தியா எரிவாயு குழாய் பற்றி தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. மே 2022-ஆம் ஆண்டில், ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் கடலுக்கு அடியில் எரிவாயு குழாய்கள் மற்றும் ஒரு எண்ணெய் வயலை தங்கள் கடல் எல்லையில் உருவாக்க ஒப்புக்கொண்டன.  இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்த குழாய்கள் இந்தியாவிற்கும் நீட்டிக்கப்படலாம்.


ஈரானுடனான நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பால் இந்தியாவும் பயனடையலாம். இரு நாடுகளும் 2001-ஆம் ஆண்டில் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், ஈரான் மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில், ஈரான் குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. ஈரான் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதமேந்திய ட்ரோன்களை வழங்குகிறது. மேலும், இந்தியா குறைவான விலையில் மற்றும் பயனுள்ள ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை உருவாக்க ஆர்வமாக உள்ளது. இது ஈரானை சாத்தியமான  நட்பு நாடாக மாற்றுகிறது.


பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஈரானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை நடத்தலாம் மற்றும் உளவுத்துறை பகிர்வு வழிமுறைகளை உருவாக்கலாம். கூடுதலாக, ஈரானிய துறைமுகங்களைப் பார்வையிடுவதன் மூலமும், பாரசீக வளைகுடாவில் ஆதரவு வசதிகளை அமைப்பதன் மூலமும் இந்தியா பயனடையலாம்.


இந்தியாவின் இராஜதந்திர முக்கியத்துவம் 


இந்தியாவும் ஈரானும் இணைந்து பல பலவற்றை சாதிக்க முடியும். இரு நாடுகளும் தாங்கள் ஏற்கனவே அதிக நேரத்தை இழந்துவிட்டதை தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் இஸ்ரேல் போன்ற மோதல்களைக் கொண்ட நாடுகளுடன் தனித்தனியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இந்தியாவின் திறன், இந்த   இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த உதவும்.  கூடுதலாக, உக்ரைன் போரின் போது ரஷ்யாவுடன்  இந்தியா கையாள்வது போன்ற தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் சுதந்திரமாக செயல்படும் இந்தியாவின் அணுகுமுறை, ஈரானுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


இருப்பினும், சில நேரங்களில் தவறான கருத்துக்கள் இந்த உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, ஈரானின் உச்ச தலைவர் செப்டம்பர் 16 அன்று இந்திய முஸ்லீம்களின் துன்பங்களை காசாவில் உள்ள மக்களுடன் ஒப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் இந்தியாவை பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய கருத்துக்களால் சீர்குலைக்க முடியாத அளவுக்கு இருதரப்பு உறவும் மதிப்புமிக்கது என்பதை இரு நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.


பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மேற்கு ஆசியாவில் இந்தியா தனது தொடர்புகள் மற்றும்  இராஜதந்திர கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஈரான் தனது சமீபத்திய இராஜதந்திர சாதனைகளை தொடர விரும்புகிறது மற்றும் இந்தியாவை ஒரு முக்கியமான நட்பு நாடக பார்க்கிறது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சமீபத்தில் நடந்த கூட்டம் இரு நாடுகளும் ஒன்றாக முன்னேற தேவையான வேகத்தை வழங்கலாம்.




Original article:

Share:

இந்தியாவின் தற்போதைய பேரிடர் மேலாண்மை முயற்சிகள் - டெனெட்டி கிருஷ்ண பிரசாத், அக்ரிமா குப்தா, அம்ரித் மகாபத்

 பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மையில் உள்ள அமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கலாம்.

 

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, (Disaster Management (Amendment) Bill) அறிமுகப்படுத்தப்பட்டது. இது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் (2005) பல்வேறு மாற்றங்களை செய்தது. இது பேரிடர்  தடுப்பு, தயார்நிலை, தணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதற்கான இந்தியாவின் முதன்மைச் சட்டமாகும். பேரழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் மாற்றங்களைச் செய்ய தயாராகும் போது, ​​தற்போதைய அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை கவனத்தில் கொள்வது  முக்கியம். 


உலக நிலப்பரப்பில் 2.4% கொண்ட இந்தியா, உலக மக்கள்தொகையில் சுமார் 17.78% ஆகும். இது வளங்கள் மீது அழுத்தத்தைத் உருவாக்குகிறது மற்றும் பேரழிவு அபாயங்களை அதிகரிக்கிறது. 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயறக்கை பேரிடர்கள் காரணமாக 2.5 மில்லியன் இந்தியர்கள் இடம்பெயர்ந்ததாக ஜெனீவாவில் உள்ள உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (Internal Displacement Monitoring Centre)  தெரிவித்துள்ளது. இந்தியாவின் 33.6% கடலோரப் பகுதி கடல் அரிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளன.  குறிப்பாக, ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.  இந்தியாவின் மேற்கு கடற்கரையில் புயல்கள் அடிக்கடி உருவாகுகின்றன என்பதை அறிவியல் அறிக்கைகளின் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. கோடை காலத்தில் உருவாகும் புயல்களும், அவை ஏற்படுத்தும் சேதங்களும் பெரும் பிரச்சனையாக உள்ளது. 


பேரழிவுகள், மனித பாதிப்பு மற்றும் நிதி மூலதனம் இரண்டையும் பாதிக்கிறது. செப்டம்பர் 2024-ஆம் ஆண்டில், ஒன்றிய  அரசின் ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒன்றிய குழு,  ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் ₹6,880 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையை மேம்படுத்துவது மக்களுக்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்பதை இது காட்டுகிறது.

 

நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாமை 


இந்தியாவில், பெரும்பாலான பேரிடர்கள் வெவ்வேறு அமைப்பில் உள்ள அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. நிலநடுக்கங்களை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (National Center for Seismology) (பூமி அறிவியல் அமைச்சகம், இந்திய அரசு) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) ஆகியவை பொறுப்பு வாய்ந்த முகமைகளாகும். மறுபுறம், சுரங்கத் துறை (Department of Mines) சுரங்கப் பேரழிவுகளைக் கையாளுகிறது. இந்த முகமைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்  தாமதம் ஏற்படுத்துகிறது. 


பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அவர்கள் இப்போது தங்கள் தேவைக்கேற்ப  பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கலாம். தேசிய செயற்குழு (National Executive Committee (NEC)) மற்றும் மாநில செயற்குழு (State Executive Committee (SEC)) ஆகியவற்றின் அதிகாரத்தை இந்த சட்டத்திருத்தம் பறிக்கிறது. தேசிய செயற்குழு  மற்றும் மாநில செயற்குழு ஆகியவை பேரிடர் மேலாண்மையை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கான  சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால், திட்டங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பங்கு இல்லை.  இதனால், பேரிடர் மேலாண்மையின் செயல்திறன் பாதிக்கலாம்.


திறமையான அதிகாரப்பரவல் இல்லாமை 


பேரிடர் நிதி நிர்வாகத்தில் மாநில அளவிலான மாற்றங்கள் தேவை என்று 15-வது நிதி ஆணையம் கூறுகிறது. தற்போதைய, அமைப்புகள் உள்ளூர் அவசரநிலைகளைக் கையாளும் மாவட்ட அதிகாரிகளின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி அதிகாரம் இல்லை. அரசியலமைப்பில் இது தொடர்பாக குறிப்பிடபட்டிருந்தாலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.79% மட்டுமே நகராட்சிகள் செலவிடுகின்றன.


2014 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் வெப்ப அலைகளின் காரணமாக 5,000 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். புவி வெப்பமடைதல் வெப்ப அலைகளை மோசமாக்குகிறது. குளிர் அலைகளைப் போலவே, வெப்ப அலைகளையும் பேரழிவுகளாக இந்தியா அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும்  உள்ள வெவ்வேறு காலநிலை  வேறுபாட்டின் காரணமாக அடுத்தடுத்து வந்த நிதி ஆணையங்கள் குளிர் அலைகளுக்கு நிதியளிப்பதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும், குளிர் அலைகள் பேரழிவுகளாகக் கருதப்படுகின்றன.  இந்த வகைப்பாடு வெப்ப அலைகளை நிர்வகிப்பதற்கான நிதி மற்றும் வளங்களை அதிகரிக்க உதவும்.


மாநிலத் தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள நகரங்களில் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை நிறுவுவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஆகியோர் இந்த ஆணையத்தில் இடம் பெறுவர்.  மேலும், மாநில அரசு தேவைக்கேற்ப கூடுதல் உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். கொள்கை அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் ஆகிய இரண்டையும் கொண்ட நிபுணர்களின் முயற்சிகளை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த அதிகாரிகளுக்கு முறையான நிதி மற்றும் சுதந்திரம் கிடைத்தால், நகர்ப்புறங்களில் நிலைத்தன்மையை பெரிதும் மேம்படுத்த முடியும். 


பின்பற்ற வேண்டிய சர்வதேச உதாரணங்கள் 


  நார்வே, டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு முன்மாதிரியாக செயல்படக்கூடிய உயர் மட்ட பரவலாக்கத்தை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, டென்மார்க்கில், உள்ளூர் அரசாங்கங்கள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 36.5% சமூக சேவைகளுக்காக செலவிடுகின்றன. இது உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்கவும் புதிய யோசனைகளை முயற்சிக்கவும் அனுமதிக்கிறது. 


இந்த மசோதா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (National Disaster Management Authority (NDMA)) பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளை முடிவு செய்வதற்கும், ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை பணியமர்த்துவதற்கும் அதிகாரத்தை வழங்குகிறது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு நேர்மறையான படியாகும்.  ஆனால், இதில் இன்னும் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும்.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6% முதல் 8% வரை பேரிடர் மேலாண்மைக்கு செலவிட்டது. இந்த முதலீடு ஜப்பானை பேரழிவை எதிர்கொள்ளும் உலகளாவிய முன்னணி நாடாக மாற்றியது. இதனால் ஜப்பான் நாடு இயற்கை அபாயங்களைக் கையாளவும் பொருளாதார சக்தியாக வளரவும் உதவியது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் டோக்கியோவில் உள்ள ஜி-கேன்ஸ் (G-Cans project) திட்டமாகும். இந்த திட்டம் வெள்ளத்தை தடுக்க சுரங்கங்கள் வழியாக உபரி நீரை வெளியேற்றுவதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 


புது டெல்லி உட்பட இந்தியா முழுவதும் உள்ள பெரிய நகரங்களுக்கு ஜி-கேன்ஸ் போன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்படலாம். இந்த திட்டங்கள் அதிக மழைப்பொழிவு  ஏற்படும் போது அன்றாட  வாழ்க்கைக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கும். கூடுதலாக, தேவையான இடங்களில் நிலத்தடி கேபிள்களைப் பயன்படுத்துவது புயல்களின் போது மின்சார சேவைக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.


அவசர நிகழ்வுகள் தரவுத்தளத்தின் (Emergency Events Database (EM-DAT)) படி, சர்வதேச பேரிடர் தரவுத்தளம், சூறாவளி புயல்கள் மற்றும் வெள்ளம் 2019-ஆம்  ஆண்டு முதல் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தியா தனது முழு திறனை அடைய, அதன் பெரிய மக்கள்தொகையை அதிகம் பயன்படுத்த வேண்டும். பேரழிவுகள் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு சமூகத்தின் திறனையும் பலவீனப்படுத்துகின்றன. மறுகட்டமைப்பு மற்றும் மீட்பு பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

14-வது நிதி ஆணையத்தின் கீழ்  ₹61,220 கோடி ரூபாய் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 15-வது நிதிக் குழு அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படைக்கு ₹1.28 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.  இதில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது.


பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கும். ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், இந்தியாவில் பேரழிவை எதிர்கொள்வதற்கான வலுவான அரசியல் ஆதரவு மற்றும் அதை செயல்படுத்துவதற்கு தலைமையின்  முக்கியத்துவத்தை சுட்டிகாட்டுகிறது.


கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி மக்களவையில் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அக்ரிமா குப்தா கிருஷ்ண பிரசாத் தென்னெட்டியின் கொள்கை மற்றும் பாராளுமன்ற அலுவலகத்தை வழிநடத்துபவர் மற்றும் 2022-23 ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமன்ற உதவியாளராக (Legislative Assistant to Members of Parliament (LAMP)) இருந்துள்ளார்.




Original article:

Share:

வருவாய் எதிர்விளைவுகள்: சரக்கு மற்றும் சேவை வரிகளின் வருவாய் நிலைகள்

 பண்டிகை காலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வரவுகள் வளர்ச்சியின் முக்கிய குறியீடு ஆகும்.


இந்த நிதியாண்டில், சரக்கு மற்றும் சேவை வரிகளின் வருவாய் நிலைகள் மிகவும் நிலையற்றதாக உள்ளது. இருப்பினும், இதுவரை ஏழு மாதங்களில் மூன்று மாதங்களில் மறைமுக வரியின் (indirect tax) மூலம் அதிக வரி வசூலிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் முதன்முறையாக ₹2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. மொத்த வரவுகள் 12.4% ஆகவும், நிகர வரவுகள் 15.5% ஆகவும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மொத்த வருவாய் ₹1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தத் தொகை இதுவரை பதிவு செய்யப்பட்ட பதிவான தரவுகளின் அடிப்பையில் மூன்றாவது பெரிய தொகை ஆகும். 


முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 10.3% அதிகமாகும். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி வரவுகளில், வரி அமல்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வரி வருவாய் இதுவாகும். சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் அதிகரிப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி இல்லை. ஜூன் மாதத்தில், மொத்த வருவாயின் வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.3%-ஆக குறைந்துள்ளது. இது மேலும் சரிவடைந்து, செப்டம்பரில் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.5% ஆக குறைந்தது.

 

வரவு செலவுத் திட்ட இலக்கை அடைய மறைமுக வரிகளை வரும் மாதங்களில் மிக விரைவாக அதிகரிக்க வேண்டும். இருப்பினும், நேரடி வரிகள் மற்றும் வரி அல்லாத வருவாய்கள் சிறப்பாக செயல்படுவதால் பெரிய அளவில் ஆபத்துகள் இல்லை. வருவாய் மற்றும் மூலதன செலவுகளும் கடுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, ஒரு மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் முந்தைய மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி என்பது நுகர்வு மீதான வரியாகும். கடந்த மாத வருவாய், பண்டிகைக் காலத்திற்கான தனியார் நுகர்வு நிலைகளை குறிக்கிறது. இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பித்ரு பக்ஷா (Pitru Paksha) எனப்படும் 16 நாள் காலம் காரணமாக குறிப்பிடத்தக்க கொள்முதல் குறைந்திருக்கலாம். 


ரிசர்வ் வங்கி அதன் அக்டோபர் வெளியிட்ட அதன் செய்திக்குறிப்பில், சரக்கு மற்றும் சேவை வருவாயில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரத்தில் மந்தமான வேகத்தைக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டது.  இருப்பினும், பண்டிகைக் காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. எவ்வாறாயினும், நவம்பர் மாத வரி வருவாய்கள், நல்ல நிலையை  ஏற்படுத்தும். கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையின் காரணமாக வரி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆரம்ப கார் விற்பனை தரவு K- வடிவ நிலைமையை குறிக்கிறது. இதன் பொருள் விலையுயர்ந்த விளையாட்டு பயன்பாடு  சார்ந்த வாகனங்களின் (Sports Utility Vehicle (SUV)) விற்பனை விரைவாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனை சீரான நிலையில் உள்ளது. இந்த நிலை எப்படி இருந்தாலும்,  சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் (GST Council)  தொடர்ந்து வரி விகித மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.  இதில் சிமென்ட், காப்பீடு போன்ற பொருட்களின் மீதான வரி குறைப்பும் அடங்கும்.  இந்த மாற்றங்கள் விற்பனை அளவை அதிகரிக்கவும் மற்றும் வருவாய் இழப்புகளை சரி செய்ய பெரிதும் உதவும்.




Original article:

Share:

இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன? -திகேந்தர் சிங் பன்வார்

 இந்த ஆண்டு உலக நகரங்கள் தினத்தின் (World Cities Day)  கருப்பொருள் என்ன? இந்தியாவின் விரைவான நகரமயமாக்கலுக்கு எது வழிவகுத்தது? காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை நகர்ப்புற வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன?


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 உலக நகரங்கள் தினம் (World Cities Day) கொண்டாடப்படுகிறது. உலகின் நகர்ப்புற மக்கள் தொகை 4.7 பில்லியனை எட்டியுள்ளது. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 57.5% ஆகும். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக நகரங்கள் தினத்தின் கருப்பொருள் "இளைஞர்கள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்: நகர்ப்புற நிலைத்தன்மைக்காக உள்ளூர் நடவடிக்கையை ஊக்குவித்தல்’ என்பதாகும்.


நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 


பருவநிலை மாற்றம் காரணமாக இந்திய நகரங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன என்று ஐ.நா கோடிட்டுக் காட்டுகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) முன்னேற்றம் ஏற்பட்டாலும், நகரங்கள் இன்னும் வறுமை, சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை எதிர்த்து போராடி கொண்டிருக்கின்றன. உலகளாவிய தெற்கில், வேகமான நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் காரணமாக இந்தப் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் மிகக் குறைவான வீடுகளைக் கொண்டிருக்கின்றன. சுத்தமான நீர், குறைவான சுகாதார தேவை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைகளால் நகரங்கள் அதிக அச்சறுத்தல்களை சந்திக்கின்றன.


இந்திய நகரமயமாக்கல் பற்றி 


இந்தியாவின் நகரமயமாக்கல் மேற்கத்திய நாடுகளில் இருந்து வேறுபட்டது. மேற்கில், நகரமயமாக்கல் தொழில்மயமாக்கலுக்குப் பிறகு ஏற்பட்டது. இது கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்த  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. காலனிகளில் இருந்து பெரும் செல்வத்தைப் பெற்றதால் நகரங்களும் வளர்ச்சி அடைந்தன. காலனித்துவ ஆட்சியின் போது, இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு இந்தியா $45 டிரில்லியன் வழங்கியதாக பொருளாதார நிபுணர் உத்சா பட்நாயக் குறிப்பிட்டார். 


இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் நகரமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடியால் இயக்கப்படுகிறது.  மக்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி, கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கும், நகரங்களில் இருந்து வேறு நகரங்களுக்கும் இடம் பெயர்கின்றனர். கோவிட்-19 தொற்றின் போது, ​​நகர்ப்புற திட்டமிடல் மீதான பிரச்சனை தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில்,  தலைகீழ் இடம்பெயர்வு போக்குகள் உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகின்றன.

 

இந்தியாவில்  உள்ள நகர்ப்புற சவால்கள் என்னென்ன? 


2021-ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறதாதல், இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை குறித்த துல்லியமான தரவு இல்லை.  இந்திய மக்கள் தொகையில் 40% பேர் நகர்ப்புறங்களில் சுமார் 9,000 நகரங்களில் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மோசமான நகர்ப்புற திட்டமிடல், காலநிலை மாற்றம்,  அதிக அளவிலான இடம்பெயர்வு, அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் சமூக பிளவுகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல சவால்களை இந்திய நகரங்கள் எதிர்கொள்கின்றன. 


நகர்ப்புற திட்டமிடல் நிறுவனங்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவதாக, அவர்களின் திட்டங்கள் பெரும்பாலும் காலாவதியானவை மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இல்லை. 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து, அகமதாபாத், டெல்லி, சூரத் மற்றும் மும்பை போன்ற பல நகரங்கள் தொழில்மயமாக்கல் காரணமாக பல்வேறு வேலைவாய்ப்புகளை  இழந்தன. இதனால், பல தொழிலாளர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.  தற்போது, ​​இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 40% பேர் நகர்ப்புற குடிசை பகுதிகளில் (slums) வாழ்ந்து வருகின்றனர்.


இரண்டாவதாக, திட்டமிடல் பெரும்பாலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. காலநிலை மாற்றம் இந்திய நகரங்களையும் கடுமையாக பாதிக்கிறது. இது அதிக மாசு,  வெள்ளம் மற்றும் "வெப்ப தீவு விளைவு" (‘heat island effect’) போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில், எட்டு நகரங்கள் தேசிய தலைநகர் பகுதியை சுற்றியுள்ளன.


கூடுதலாக, நகரமயமாக்கல் ஒரு காலத்தில் சமூக மற்றும் மதப் பிரச்சினைகளின் அடிப்படையில் நடுநிலையாக இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், இந்திய நகரங்கள் இப்போது இந்த பகுதிகளில் மிகவும் பிளவுபடுகின்றன. மேலும், சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.  பிரத்தியேக வளர்ச்சிகள் பணக்காரர்களுக்கு உதவுகின்றன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுக்கு அடிப்படை வீடுகள் இல்லாத நிலை உள்ளது.  உதாரணமாக, குருகிராமில் உள்ள DLF இன் "The Dahlias" திட்டம், தங்குமிடம் இல்லாத இரண்டு கோடி நகர்ப்புற இந்தியர்களுக்கு முற்றிலும் மாறாக ₹100 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குகிறது. பெரும்பாலான நகர வேலைகள் (சுமார் 90%) முறைசாரா துறையில் உள்ளன. பொதுவாக நகர்புறங்களில் வேலை பாதுகாப்பு ( job security) இல்லை.


74-வது அரசியலமைப்பு திருத்தம் இருந்தபோதிலும், பெரும்பாலான இந்திய நகரங்கள் இன்னும் ஜனநாயகமற்ற குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற திட்டமிடல் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இது பொதுவாக அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக, 12-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 18 செயல்பாடுகளில் மூன்றிற்கும் குறைவான பொறுப்புகள் மட்டுமே நகர்ப்புற அரசாங்கங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், நகரங்கள் அரசாங்கத்திடம் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% மட்டுமே பெறுகின்றன. உலக நகரங்கள் தினத்தை நாம் கொண்டாடும் போது, ​​இந்த சவால்கள் நமக்கு வலுவான தேசிய தீர்வுகள் தேவை என்பதைக் காட்டுகின்றன.


திகேந்தர் சிங் பன்வார், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர்.




Original article:

Share:

சர்தார் படேல் : இந்தியாவின் இரும்பு மனிதரை நினைவுகூர்தல் -ரோஷினி யாதவ்

 அக்டோபர் 31-ம் தேதி, தேசிய ஒற்றுமை தினத்தை (National Unity Day) முன்னிட்டு, நவீன இந்தியாவை வடிவமைப்பதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பைப் பிரதிபலிப்போம். மேலும், அவரது எழுச்சியூட்டும் சில மேற்கோள்களைச் சரிபார்க்கத் தவறாதீர்கள். 


சர்தார் படேல் என்று பொதுவாக அழைக்கப்படும் வல்லபாய் ஜாவர்பாய் படேல் இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஒரு பாரிஸ்டர் மற்றும் ஒரு அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் படேல் முக்கிய பங்கு வகித்தார்.


படேல் அக்டோபர் 31, 1875-ம் ஆண்டில் பிறந்து, குஜராத்தில் வளர்ந்தார். ஒரு வழக்கறிஞராக, கெடா, பர்தோலி மற்றும் போர்சாத் ஆகிய இடங்களில் வன்முறையற்ற குடிமை ஒத்துழையாமை இயக்கங்களின் போது பல விவசாயிகளை விடுவிக்க உதவினார். இந்தப் பணி அவரை குஜராத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. பின்னர், அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் ஊக்குவித்தார் மற்றும் இன்றும் அவர் ஒரு உத்வேகமான நபராகத் தொடர்கிறார்.


சர்தார் வல்லபாய் படேல் - 'இந்தியாவின் இரும்பு மனிதர்'  


இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் படேலின் பங்களிப்பு 


சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக, சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒருங்கிணைத்து வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ​​1947-ம் ஆண்டின் இந்திய சுதந்திரச் சட்டத்தின் (Indian Independence Act) கீழ் இந்திய சமஸ்தானங்களை சுதந்திரமாக அறிவித்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் ஒரு சவாலை முன்வைத்தனர். இந்தச் சட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிகாரத்தை நிறுவியது. இது, இறுதியில் பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது.

 

"மாநிலங்களின் பிரச்சனை மிகவும் கடினமானது, உங்களால் மட்டுமே அதை தீர்க்க முடியும்" என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்தியாவில் சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பு பிரச்சனையை எதிர்கொண்டபோது சர்தார் வல்லபாய் படேலிடம் கூறினார்.


சுதேச சமஸ்தானங்களின் பிரச்சினை சிக்கலானதாகவும், தீர்வு காண்பதற்கு சவாலானதாகவும் இருந்தது. இளவரசர்கள் பெரும்பாலும் பயனற்றவர்களாகவும், திறனற்றவையாகவும் இருக்க, ஒருபுறம் பிரிட்டிஷாரால் பெருமளவில் செல்லம் கொடுக்கப்பட்டதோடு, மறுபுறம் தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதில், எதிர்பாராத விதமாக ஆங்கிலேயர்கள் வெளியேறுவதாக அறிவித்தபோது, ​​பல இளவரசர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவிக்க இது சரியான நேரம் என்று கருதினர். மற்றவர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கிக்கொண்டனர்.


இருப்பினும், தனது இராஜதந்திர முயற்சிகள் மூலம், படேல் சுதேச மாநிலங்களை இணைப்பதைப் பாதுகாத்தார். இந்த பிராந்தியங்களை நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புடன் சீரமைத்தார். 


"1947-ம் ஆண்டு காலத்தில், படேல் தொடர்ச்சியான மதிய உணவு விருந்துகளை நடத்தினார். அங்கு இந்தியாவின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் காங்கிரசுக்கு உதவுமாறு வலியுறுத்தினார்" என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது “காந்திக்குப் பின் இந்தியா” (India after Gandhi) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.


படேல் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு நாடுகளை இணைப்பதற்கான அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில், அவர் நட்புரீதியாக  ஆலோசனைகளை வழங்கினார். மற்றவற்றில், அவர் ஆட்சியாளர்களை நியாயமானவர்களாக இருக்க வற்புறுத்தினார். ஹைதராபாத் விஷயத்தில் கூட பலத்தை பயன்படுத்தினார். அவரது அரசியல் நுண்ணறிவு மற்றும் நடைமுறை திறன்கள் மிகவும் மதிக்கப்பட்டன. இந்த குணங்கள் 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசு பிரதேசங்களை இந்திய ஒன்றியத்தில் இணைப்பதில் முக்கியத்துவம் பெற்றவை. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பின் போது, ​​படேல் இந்திய இராணுவத்தின் உண்மையான உச்ச தளபதியாக செயல்பட்டார்.


நிர்வாகத்தில் சர்தார் படேலின் பங்களிப்பு 


இந்தியாவை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியுடன், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல், அகில இந்திய சேவைகள் எனப்படும் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். நவீன அனைத்திந்திய சேவை அமைப்பை (modern all-India services system) நிறுவுவதில் அவர் முக்கிய தலைவராக இருந்தார். இதன் காரணமாக, அவர் "இந்திய அரசு ஊழியர்களின் ஆதரவாளன்" (patron saint of India’s civil servants) என்று நினைவுகூரப்படுகிறார்.


“நமது அதிகாரத்துவம் அல்லது ராணுவ நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகள் எதுவாக இருந்தாலும் சரி, நமது ஆட்சியின் தொடர்ச்சிக்காக அவர் வலுவாக நின்றது சர்தார் படேலின் பெருமையாகும்” என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார்.


படேலின் 143-வது பிறந்தநாளில், ஒற்றுமை சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிலை உலகிலேயே மிக உயரமானது. இது சர்தார் சரோவர் அணையிலிருந்து 3.2 கிமீ கீழ்நோக்கி நர்மதா நதியில் சாது தீவில் உள்ளது. பத்மபூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி.சுதர் என்பவரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசு நடத்தும் சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட் நிறுவனத்துடன் (Sardar Sarovar Narmada Nigam Ltd) இணைந்து லார்சன் அண்ட் டூப்ரோ (Larsen and Toubro) நிறுவனத்தால் கட்டப்பட்டது. படேல் பாரம்பரியமான வேட்டி மற்றும் சால்வை அணிந்து நர்மதா நதிக்கு மேலே நிற்பதை இந்த சிலை சித்தரிக்கிறது. அதன் உயரமான 182 மீட்டர் குஜராத்தில் உள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு செய்யப்பட்டது.


அரசியலமைப்பில் சர்தார் படேலின் பங்களிப்பு  


அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly) அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள் பற்றிய ஆலோசனைக் குழுவின் தலைவராக, அரசியலமைப்பின் முக்கிய பிரிவுகளை வடிவமைப்பதில் படேல் முக்கிய பங்கு வகித்தார். இந்த பிரிவுகள் அடிப்படை மற்றும் சிறுபான்மை உரிமைகள் மீது கவனம் செலுத்தியது. உரிமைகளும் கடமைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.


ஜூலை 12, 1991 அன்று, குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், சர்தார் வல்லபாய் படேலுக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விருது அவரது பேரன் விபின் தயாபாய் படேலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்டது.


நாம் வாழும் சமூகம் நம் முன்னோர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தனிநபர்கள் வளரவும், அவர்களின் திறனை அடையவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அனுமதிக்கும் கட்டமைப்பை உருவாக்க அவர்கள் கடுமையாக உழைத்தனர். சர்தார் படேலின் சில மேற்கோள்கள் நம் தேசத்தைப் பற்றிய அவரது கருத்துக்களை பிரதிபலிக்கின்றன.


பண்பைக் கட்டியெழுப்ப இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வலிமையை வளர்ப்பது. மற்றொன்று, இந்தப் போராட்டத்தால் வரும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது. பொதுவாக, இந்த இரு வழிகள்  தைரியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.


இளைஞர்கள் மற்றும் பெண்கள் வலுவான குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தேசத்தின் மகத்துவம் அதன் மக்களின் தன்மையை பிரதிபலிக்கிறது. அந்த குணம் சுயநலத்தால் கறைபட்டால், மக்கள் செழிக்கவோ, பெரிய காரியங்களை சாதிக்கவோ முடியாது. சுயநலம் வாழ்க்கையில் அதன் இடத்தைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த தேவைகளையும் தங்கள் குடும்பத்தின் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும், அது மட்டுமே வாழ்க்கையின் மையமாக இருக்க முடியாது.




Original article:

Share:

காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) என்றால் என்ன? இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது?

 தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) என்பது மாசுபாடு பற்றிய பொதுவான புரிதலை எளிதாக்க உதவும். 


தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் (நவம்பர் 1) புதுதில்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI)  351  என்ற நிலையில் இருந்தது.  தேசிய தலைநகரில் பட்டாசுகளுக்கு தடை இருந்தபோதிலும், நகரின் பல்வேறு பகுதிகளில் விதிமீறல்கள் காணப்பட்டன. 


குளிர்காலத்தின் ஆரம்பம்  மற்றும் குளிர், நகரத்தை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான காற்று, சாலை தூசி மற்றும் வாகன மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிப்பு போன்ற காரணிகளும் ஆண்டுதோறும் இந்த முறை காற்றின் தரம் குறைவதற்கு பங்களிக்கின்றன. 


கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மற்றும் தீபாவளி நாட்களில் 24 மணி நேர சராசரியில் காற்றின் தரம் மோசமாக இருந்தது. ஆனால், தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை நேரங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளதால், சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட மாசு அளவுகள் அதிகரிக்கவில்லை.


தீபாவளிக்கு அடுத்த நாளில், காற்றுத் தரக் குறியீடு (AQI) 339 ஆனது கடந்த ஆண்டு (நவம்பர் 13, 2023 அன்று) 358-ஆக இருந்ததை விட சிறப்பாக இருந்தது.  இந்த நிலைக்கு பல காரணிகள் பங்களித்தன.  அதில் மிக முக்கியமானது வானிலை நிகழ்வாகும்.  காலை 9 மணியளவில் காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வீசியது. மாசுக்கள் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.


டெல்லியில் AQI கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது? 


காற்றுத் தரக் குறியீடு (AQI)  என்பது காற்றின் தரத்தைக் குறிக்கும் எண். காற்றுத் தரக் குறியீடு (AQI) அதிகமாக இருந்தால், காற்று மோசமாக இருக்கும். காற்றின் தரக் குறியீடு ஆறு வகைகளாக உள்ளது. அவை,


  • 'நன்று' (0-50)

  • 'திருப்திகரமானவை' (50-100) 

  • 'மிதமான மாசுபட்டவை' (100-200) 

  • 'மோசம்' (200-300) 

  • 'மிகவும் மோசம்' (300-400)  

  • 'கடுமையானவை' (400-500)


வண்ண-குறியிடப்பட்ட காற்றுத் தரக் குறியீடு (AQI)  இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், இது பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் காற்றின் நிலை மற்றும் அதன் தீவிரத்தின் அடிப்படையில் நிலைமையை எதிர்த்துப் போராட அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 


AQI என்றால் என்ன, அது மாசுபாட்டை எவ்வாறு கணக்கிடுகிறது? 


தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. காற்றுத் தரக் குறியீடு (AQI) காற்று மாசுபாடு  பற்றிய பொதுவான புரிதலை எளிதாக்க உதவும். மருத்துவ வல்லுநர்கள், காற்றின் தர நிபுணர்கள், கல்வியாளர்கள், வழக்ககறிஞர் குழுக்கள் ஆகியோரை உள்ளடக்கியது. தொழில்நுட்ப ஆய்வு கான்பூர் ஐ.ஐ.டிக்கு வழங்கப்பட்டது. ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் நிபுணர் குழு (Expert Group) காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI))  திட்டத்தை பரிந்துரைத்தது. 


சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒரு பகுதியான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரத் தரவை, காற்றுத் தரக் குறியீடு (AQI)  ஒரே எண்ணாக மதிப்பீடு செய்கிறது.  அளவிடப்பட்ட மாசுபடுத்திகளில் PM 10, PM 2.5, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்றவை அடங்கும். 


பாதிக்கப்பட்ட காற்றில் ஆறு அல்லது எட்டு மாசுபடுத்திகள் உள்ளன. மேலும், இந்த மாசுபடுத்திகள் ஒவ்வொன்றும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த அளவு மனித ஆரோக்கியத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தது.  இந்த அளவுகளில் மோசமான நிலை, காற்றின் தரம் என்று வழங்கப்படுகிறது.  எனவே உங்களுக்கு ஆறு வெவ்வேறு எண்கள் மற்றும் ஆறு வெவ்வேறு வண்ணங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த தாக்கத்தைக் குறிக்க இது ஒரு ஒற்றை நிறம், ஒரு ஒற்றை எண்ணை குறிப்பிடுகிறது.  நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் இந்த நிலைகளை மதிப்பிடுகின்றன. 


PM 2.5 மற்றும் PM 10 போன்ற மாசுபடுத்திகளின் தாக்கம் என்ன? 


மிகவும் தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளில் துகள்கள் (particulate matter(PM)) 2.5 போன்ற சிறிய அளவிலான துகள்கள் உள்ளன. இது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட வளிமண்டல துகள்கள் (அல்லது மனித முடியின் விட்டத்தில் சுமார் 3 சதவீதம்). இது சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் கண் பார்வை நிலையை குறைக்கிறது. துகள்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியுடன் மட்டுமே கண்டறிய முடியும். 


அவற்றின் அளவு காரணமாக, பி.எம் 2.5 துகள்கள் மூக்கு மற்றும் தொண்டையை எளிதில் கடந்து சுற்றோட்ட அமைப்பில் எளிதாக நுழைய முடியும். இந்த துகள்கள் ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும். 


AQI அரசாங்கக் கொள்கையை எவ்வாறு பாதிக்கிறது? 


காற்றின் தர அளவுகளின் அடிப்படையில், டெல்லி போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்கங்கள் சில நடவடிக்கைகளை அறிவிக்கின்றன. குறிப்பாக டெல்லி என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் அவசரகால நடவடிக்கைகளுக்காக தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP))  நிறுவப்பட்டுள்ளது.  முன்னதாக, இது விடுதிகள், உணவகங்கள் மற்றும் திறந்த உணவகங்களில் தந்தூரி செயல்பாடுகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர் அமைப்புகள் (அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர) உள்ளிட்ட நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டிற்கு தடை விதிக்க வழிவகுத்தது. தனியார் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.




Original article:

Share: