நந்தலால் போஸ் -ரோஷினி யாதவ்

 இந்திய அரசியலமைப்பிற்கு நந்தலால் போஸின் பங்களிப்பு என்ன?  

 

இன்று, டிசம்பர் 3, நந்தலால் போஸின் பிறந்தநாள். அவர் நவீன இந்திய கலையின் முன்னோடிகளில் ஒருவராகவும், நவ-வங்காள பள்ளியில் ஒரு முக்கிய நபராகவும் அங்கீகரிக்கப்பட்டவர். நந்தலால் போஸ் மற்றும் அவரது குழுவினர் சாந்திநிகேதனில் இந்திய அரசியலமைப்புக்கான விளக்கப்படங்களை உருவாக்கினர்.


முக்கிய அம்சங்கள்:


1. நந்தலால் போஸ் டிசம்பர் 3, 1882-ஆம் ஆண்டில் பீகாரில் உள்ள முங்கரில் பிறந்தார். அவர் நவீன கலையின் மிகச்சிறந்த விரிவுரையாளர்களில் ஒருவரானார். நந்தலால் போஸ் அபனீந்திரநாத் தாகூரால் வழிகாட்டப்பட்டவர் மற்றும் அவரது தனித்துவமான "இந்திய பாணி" (Indian style) ஓவியத்திற்காக பிரபலமானார். 1922-ஆம் ஆண்டில் சாந்திநிகேதனில் உள்ள கலா பவன் பல்கலைக்கழத்தில் முதல்வரானார். 

 

2. அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் போஸ் முக்கிய பங்கு வகித்தார். அதனால், அவர் தனது சகாக்களால் மிகவும் பாராட்டப்பட்டார் மற்றும் அவர் செய்ததைப் போலவே இயற்கை மற்றும் பல்வேறு கலை மரபுகளிலிருந்து உத்வேகம் பெற அவரது மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

 

சாதாரணமான அல்லது அசாதாரணமான எல்லா வடிவங்களிலும், நான் முழு உலகத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும், உண்மையான மற்றும் கற்பனையான மற்றும் உண்மையான யதார்த்தத்தின் வாழ்க்கை தாளத்தை (பிராணச்சந்தா) நாடுகிறேன் என்று நந்தலால் போஸ் கூறினார்.


3. நந்தலால் போஸ் ஜப்பானிய நிஹோங்கா மரபுகள், முகலாய மற்றும் ராஜஸ்தானி சிறு உருவங்கள், பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அஜந்தா குகைகளில் உள்ள சுவரோவியங்கள் உட்பட பல கலை பாணிகளால் ஈர்க்கப்பட்டார்.

1938-ஆம் ஆண்டு ஹரிபுரா அமர்வில் (Haripura session), வாயில்கள் மற்றும் பந்தல் பந்தல் ஆகியவற்றை அலங்கரிக்க போஸ் காட்சி அரங்குகளை (pandal pavilion) உருவாக்கினார். இந்த அரங்குககள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி சாதாரண மக்களுக்கு நன்கு தெரிந்த கிராமக் காட்சிகளை சித்தரித்தன. போஸ் ஹரிபுராவில் பல மாதங்கள் தங்கி, உள்ளூர் மக்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கவனித்து, பல ஓவியங்களை உருவாக்கினார்.

4. ஆங்கிலேய ஆட்சியின் போது, ​​இந்தியாவின் கலை மரபுகள் பலவீனமடைந்தன.  நந்தலால் போஸ் தனது கலை மற்றும் கல்வி மூலம் தேசத்தின் கலாச்சார சுதந்திரத்திற்கு புத்துயிர் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

5. 1953-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளைப் பெற்றார். தேசிய நவீன கலைக் கலைக்கூடத்தில் அவரது 6,800 க்கும் மேற்பட்ட படைப்புகள் உள்ளன. நந்தலால் போஸ் ஏப்ரல் 16, 1966-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதனில் காலமானார். 

6. 1976-ஆம் ஆண்டில், தொல்பொருள் மற்றும் கலை கருவூலம் சட்டம் (Antiquities and Art Treasures Act) 1972ன் கீழ் நந்தலால் போஸின் படைப்புகளை "கலை கருவூலங்கள்" (art treasures) என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அங்கீகரித்துள்ளது. தொல்பொருட்கள் என வகைப்படுத்தப்படாவிட்டாலும், அவரது படைப்புகள் அவற்றின் கலை மற்றும் அழகியல் முக்கியத்துவம் காரணமாக மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டன.

1. இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். இது மிகவும் செழுமையாக விளக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு 22 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் கையால் வரையப்பட்ட படங்களைக் கொண்டுள்ளது. இதில் நந்தலால் போஸ் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட விரிவான படங்கள் உள்ளன.

2. ஓவியங்கள் மற்றும் விளக்கப்படங்கள், வரிசையாக வைக்கப்படும் போது, ​​இந்திய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களின் கதையைச் சொல்கின்றன. இவை சிந்து சமவெளி நாகரீகம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. இந்த விளக்கப்படங்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காட்சிகளும் அடங்கும்.

3. பாலைவனத்தில் ஒட்டகங்கள் முதல் இமயமலை வரை இந்தியாவின் பல்வேறு புவியியலை விளக்கப்படங்கள் காட்டுகின்றன. "இந்த படங்கள் நந்தலால் போஸின் இந்திய வரலாற்றின் பார்வையை பிரதிபலிக்கின்றன. அவர் அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மட்டும் விளக்கவில்லை. இந்தியாவின் வரலாற்றை அவர் பார்த்தபடியே முன்வைத்தார்.  சில அறிஞர்கள் இந்த வரிசையுடன் உடன்படவில்லை என்றாலும், அது பொதுவானதைப் பிரதிபலித்தது என கலை வரலாற்றாசிரியர் ஆர். சிவா குமார் விளக்கினார்.

4. அரசியலமைப்பின் முன்னுரைப் பக்கத்தில் பியோஹர் ராம்மனோகர் சின்ஹா ​​வரைந்த சிக்கலான வடிவங்கள் உள்ளன. அவர் அந்தப் பக்கத்தில் கையெழுத்திட்டார். அசோகரின் சிங்க தலைநகரான தேசிய சின்னத்தை தீனாநாத் பார்கவா வரைந்தார்.

5. சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட காளை முத்திரை, அரசியலமைப்பின் முதல் சித்திரப் பிரதிநிதித்துவம் ஆகும். இது பகுதி I: இந்தியா அல்லது பாரதம், மாநிலங்களின் ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ளது.  பகுதி II: குடியுரிமை பகுதியில் ஒரு அமைதியான அமைப்பில் பிரார்த்தனை செய்யும் ஆண் சந்நியாசிகளுடன் ஒரு துறவியின் காட்சியைக் கொண்டுள்ளது.


6. அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதி III இல், கலைஞர்கள் இராமாயணத்தை உத்வேகத்திற்காகப் பயன்படுத்தினர். இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு ராமர், லட்சுமணன் மற்றும் சீதை  மீண்டும் நாடு திரும்புவதை அவர்கள் ஒரு படமாக வரைந்தனர். மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் பற்றிய பகுதி IV மகாபாரதத்தில் இருந்து ஒரு காட்சியுடன் தொடங்குகிறது. அர்ஜுனும் கிருஷ்ணனும் போருக்கு முன் பேசுவதை இது காட்டுகிறது.


7. பகுதி V இல், புத்தரை முக்கிய நபராகக் கொண்ட ஒரு துறவியின் காட்சி உள்ளது. அமைதியான சூழலில் சீடர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சூழப்பட்டிருக்கிறார்.


8. பகுதி VI இல், 24வது சமண தீர்த்தங்கரரான மகாவீரர், தியானத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் வண்ணமயமான படம் உள்ளது.


9. பகுதி VII அசோகர் யானை மீது அமர்ந்து புத்த மதத்தைப் பரப்புவதைக் காட்டுகிறது. பகுதி IX, இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் மன்னர் விக்ரமாதித்யாவின் அரசவையைக் காட்டுகிறது. அவரை கலைகளின் புரவலராகக் காட்டுகிறது.


10. பகுதி XIII மகாபலிபுரத்திலிருந்து சிற்பங்களையும், கங்கை பூமிக்கு இறங்குவதையும் காட்டுகிறது.


11. மைசூர் மன்னரான திப்பு சுல்தானுக்கு அடுத்தபடியாக, அரசியலமைப்பின் ஒரே முக்கிய பெண் நபரான ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாயை பற்றி  பகுதி  XVI காட்டுகிறது. XV பகுதியில் சத்ரபதி சிவாஜி மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


12. பகுதி XIX இல், சுபாஷ் சந்திர போஸ் ஒரு மலை பின்னணியில் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் உறுப்பினர்கள் முன்னே அணிவகுத்துச் செல்கின்றனர். காந்தி தண்டி யாத்திரைக்கு அணிவகுப்புக்கு தலைமை  தாங்கியது மற்றும்  கலவரத்தால் பாதிக்கப்பட்ட நவகாளிக்கு பயணம் செய்வது போன்ற காட்சிகளில்  இரண்டு முறை இடம் பெற்றுள்ளார்.




Original article:

Share:

காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில் உள்ளூர் நடவடிக்கைகள் - ரம்யா நடராஜன், ஜெய் அசுந்தி

 உலகளாவிய ஒருமித்த கருத்தும், நிதியுதவி பெறுவதும் கடினமானதாக இருந்தாலும், உள்ளூர் மற்றும் தேசிய முயற்சிகள் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன.


பல மணிநேர தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) 29வது COP மாநாடு, 2035-ஆம் ஆண்டுக்குள் காலநிலை நிதிக்காக, வளர்ந்த நாடுகளுக்கு ஆண்டுக்கு $300 பில்லியன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இது வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியை விட குறைவாக உள்ளது. இது தற்போதைய உலகளாவிய காலநிலை தொடர்பான பிரச்சனையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.


ஒருமித்த கருத்து இல்லை 


வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியளிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  வளரும் நாடுகளுக்கு உதவுவது, புதை படிம எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவது மற்றும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை விரைவாக அடைவது போன்ற அவர்களின் சொந்த முயற்சிகளை அதிகரிப்பது இதில் அடங்கும். இருப்பினும், இந்த யோசனையை செயலாக மாற்றுவது சவாலானது. இது COP மாநாடு கூட்டங்களில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. வளர்ந்த நாடுகள் தங்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் புதைபடிவ எரிபொருட்களையே நம்பியுள்ளன மற்றும் நிகர பூஜ்ஜிய இலக்குகளை தாமதப்படுத்துகின்றன. 


இது காலநிலை தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதில் உள்ள பல சவால்கள் இந்த உடன்பாட்டை எட்டுவதை கடினமாக்குகின்றன. புதைபடிவ எரிபொருள் நாடுகளின் வலுவான செல்வாக்கு, குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வளர்ந்த நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை பெரிதும் நம்பியுள்ளன. பருவநிலை மாற்றத்தை மறுக்கும் தலைவர்களின் மறுதேர்தலும் தடைகளை உருவாக்குகிறது.  காலநிலை மாற்றம் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. வளரும் நாடுகள் மற்ற நாடுகளை விட அதிகமாக பாதிக்கப்படும். இந்த காரணிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தை அடைவதை கடினமாக்குகின்றன.


உலகளாவிய பேச்சுவார்த்தைகள் பயனற்றவை அல்ல. வெற்றிகள் அரிதாக இருந்தாலும் அவை மிக முக்கியமானவை.  உதாரணமாக, 1989-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறை (Montreal Protocol) ஓசோன் படலத்தைப் பாதுகாக்க உதவியது. குளிரூட்டியில் பயன்படுத்தப்படும் குளோரோ புளோரோ கார்பன்கள் (chlorofluorocarbons) போன்ற சில இரசாயனங்களையும் இது நீக்கியுள்ளது. இந்த இரசாயனங்கள் ஓசோன் படலத்தின் சிதைவுக்கு முக்கிய காரணமாகும். 2005-ஆம் ஆண்டில்  நடைமுறைக்கு வந்த கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol), பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முதல் உலகளாவிய நெறிமுறையாகும். 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒரு இலக்கை நிர்ணயித்தது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேசிய இலக்குகள் புதுப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம் (Glasgow Climate Pact) இழப்பு மற்றும் சேத நிதியை அறிமுகப்படுத்தியது. பின்னர் வெவ்வேறு நாடுகளும் தங்கள் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை அறிவித்தன. இவை 29வது COP மாநாடு கூட்டங்களின் முக்கியமான சாதனையாகும்.


பனிப்பாறைகள் விரைவாக உருகும் நிலையில் உள்ளன. ஆனால், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மெதுவாக உள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை இன்னும் சில ஆண்டுகளில் தாண்டிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், வேறு ஒரு ஆய்வு 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை ஏற்கனவே தாண்டியிருக்கலாம் என்று கூறுகிறது.  இந்த வரம்பை மீறுவது இயற்கை பேரழிவுகள் மற்றும் வெப்ப அழுத்தம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவியல் சான்றுகள் எச்சரிக்கின்றன. இந்த சிக்கல்கள் ஏற்கனவே உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சில மாற்றங்கள் கணிக்க முடியாதவை மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.. கூடுதலாக, உலகளாவிய நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நாம் அடைந்த பிறகும் பூமியின் காலநிலை மாறிக்கொண்டே இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், நிகர பூஜ்ஜியத்தை அடைய நீண்ட காலம் ஆகும். இதனால், காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


இந்தியாவின் முயற்சிகள் 


உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5-2 டிகிரி செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதா அல்லது போர்களைத் தொடங்கும் அரசியல் ஆக்கிரமிப்பாளர்களை கண்டிப்பதா என்பதில் விரைவாகச் செயல்பட வேண்டும். ஆனால், தற்போதைய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் தேவையை விட மிக மெதுவாக நடக்கிறது. எனவே, இந்த வெவ்வேறு செயல் விகிதங்களை நாம் எவ்வாறு சரிசெய்யலாம்? தேசிய மற்றும் துணை தேசிய அளவிலான முயற்சிகளில் கவனம் செலுத்துவதே தீர்வாக இருக்கும்.  இந்தியாவில், சர்வதேச காலநிலை நிதி குறைவாக இருக்கும் என்று கருதி, தூய எரிசக்தி மாற்றத்திற்காக பல கொள்கைகள் மற்றும் நிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல சவால்களைக் கொண்ட வளரும் நாடாக, இந்தியா முக்கியமாக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க இணை பலன்கள் அணுகுமுறையைப் (co-benefits approach) பயன்படுத்துகிறது. உதாரணமாக, பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) வீடுகளுக்கு கூரை சோலார் பேனல்களை நிறுவ மானியங்களை வழங்குகிறது. இது ஆற்றல் வறுமையை நிவர்த்தி செய்யவும் மற்றும் ஆற்றல் அணுகலை மேம்படுத்தவும் உதவும். 


பிரதம மந்திரியின் புதுமையான வாகன மேம்பாட்டுத் திட்டமானது (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE)) முயற்சியானது பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் லாரிகள் அடங்கும். முன்முயற்சி கொள்முதல் மானியங்களை வழங்குகிறது மற்றும் சார்ஜிங் உட்கட்டமைப்பை ஆதரிக்கிறது. இந்த முயற்சிகள் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான போக்குவரத்துக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 


செயல்திறன், அடைதல் மற்றும் வர்த்தகத் திட்டம், விரைவில் இந்திய கார்பன் சந்தையால் மாற்றப்படும். ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முதலீடுகளைக் கொண்டுவர உதவுகிறது. பாரிஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, அதன் உமிழ்வு தீவிரத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யூனிட்டுக்கு CO2 உமிழ்வை) குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.  உமிழ்வைக் குறைப்பதுடன், காலநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களிலும் மற்றும்  தகவமைப்பு உத்திகளிலும் கவனம் செலுத்துகின்றன.  விவசாயம், வனம், நீர்வளம் மற்றும் பேரிடர் அபாயத்தைக் குறைத்தல் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தி,   பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த உத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


உலகளாவிய ஒப்பந்தம் மற்றும் நிதியுதவி இன்னும் கடினமாக இருந்தாலும், உள்ளூர் மற்றும் தேசிய நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. COP கூட்டமைப்பு வெறும் விவாதங்களில் கவனம் செலுத்தாமல், நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  லைஃப் திட்டத்தின் (Mission LiFE) மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கும், கவனத்துடன் நுகர்வுகளைப் பின்பற்றுவதற்கும், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கும், தீவிர வெப்பத்தைக் கையாள பயனுள்ள திட்டங்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் தேவை.


ரம்யா நடராஜன், ஆராய்ச்சி அடிப்படையிலான சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி. ஜெய் அசுண்டி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.




Original article:

Share:

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துங்கள் - மோகன் ஆர் லவி

 அதிகமான கட்டணங்கள், தீவிரமான செயலாக்கத்தைப் பாதிக்கிறது.


சமீபத்தில், கொள்கை ஆராய்ச்சி மையம் (Centre for Policy Research ), '‘The GST Story — Whither Next?’' என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியது.  ஜிஎஸ்டி நடைமுறையில் அரவிந்த் சுப்பிரமணியன், ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் முக்கிய பங்காற்றியவர்கள்.  ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சுப்பிரமணியன், ஜிஎஸ்டி சட்டத்தின் தற்போதைய நிலையை விமர்சனத்துடன் சுருக்கமாகக் கூறினார். 


ஜிஎஸ்டி கவுன்சில் தன்னை, தேவை அடிப்படையிலான விகிதக் குறைப்புக் குழுவாக மாற்றிக் கொண்டுள்ளது என்றும், ஜிஎஸ்டியின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, வருவாயை மேம்படுத்த, குறிப்பிட்ட ஜிஎஸ்டி விகிதங்களை அதிகரிப்பதில் கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியன் கருதினார்.  வருவாய் அதிகரித்தால் தான், இழப்பீட்டுற்கான செஸ் தேவை குறையும் என்றார். 


இழப்பீட்டு செஸ் (compensation cess) என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து,  செஸ் அளவு மற்றும் அது விதிக்கப்பட வேண்டிய காலம் குறித்து மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. 


ஜிஎஸ்டி செஸ் விகிதங்களை (GST cess rates) ஒருவர் உன்னிப்பாகக் கவனித்தால், பல விகிதங்கள் இருக்கும் என்று சுப்பிரமணியன் குறிப்பிட்டார். 


வரி பயங்கரவாதம் என்று அவர் விவரித்தது குறித்தும் அவர் கவலைகளை எழுப்பினார் மற்றும்  ஜிஎஸ்டியின் கீழ் அதிகப்படியான வரி கோரிக்கைகள் அதிகமாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.


வரி தொடர்பான பிரச்சினைகள் எப்போதுமே இந்திய அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, இந்த பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 


கூடுதலாக, ஜூலை 1, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, முன்பு மத்திய மற்றும் மாநிலங்களால் தனித்தனியாக நிர்வகிக்கப்பட்ட 16 மறைமுக வரிகள் மற்றும் செஸ்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவின் வரி கட்டமைப்பை சீராக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.  இதன் விளைவாகவே ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறை ஏற்பட்டது என்றார். 


வரி அடுக்குகள் 


தற்போது, ஜிஎஸ்டி அமைப்பில் ஐந்து வரி அடுக்குகள் உள்ளன.  அவை,     

0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகும். ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் செஸ் உள்ளது. ஜிஎஸ்டி ஒரு குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தம் மற்றும் இந்திய பொருளாதாரக் கொள்கையில் ஒரு மைல்கல் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், அமைப்பின் சிக்கலான தன்மை மற்றும் ஆக்கிரமிப்பு வரி செயலாக்கத்தின் அதிகரிப்பு ஆகியவை அவசர கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகளாக உள்ளன என்று அவர் எச்சரித்தார். 


சுப்பிரமணியன் எழுப்பிய எந்த ஒரு கருத்தையும் மறுப்பது கடினம். குறிப்பாக, வருவாய் ஈட்டும் நோக்கில் மட்டுமே ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பும் நிலையை, முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும். 


ஜிஎஸ்டி சட்டங்களின் அடிப்படை கருத்துக்களை அறியாத சில வரி மதிப்பீட்டு அதிகாரிகள் இன்னும் உள்ளனர். சில சந்தர்ப்பங்களில், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடையும் விருப்பத்துடன் மட்டுமே இவர்கள் தீவிர மதிப்பீடுகளைச் செய்கிறார்கள்.


மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) அதன் அதிகாரிகளுக்கு சில பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஆனால், வழங்கப்பட வேண்டிய பயிற்சியின் அளவைக் கருத்தில் கொண்டு இன்னும் நிறைய மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. 


பல சந்தர்ப்பங்களில், ஜிஎஸ்டி சட்டத்தின் விதிகளின்படி, ஜிஎஸ்டி மதிப்பீடுகளை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். 


மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் 


வரி செலுத்துவோர் குறைவாக மாற்றப்பட்ட ஒரு பகுதி இருந்தால், நாடு முழுவதும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை நிறுவுவதிலும், அவற்றில் தகுதியான உறுப்பினர்களை நியமிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


தீர்ப்பாயங்கள் மார்ச் 2025-ஆம் ஆண்டுக்குள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை ஏராளமான வழக்குகளால் நிரம்பும், அவை விசாரிக்கப்படுவதற்கும் மற்றும் தீர்ப்பளிக்கப்படுவதற்கும் நீண்ட நேரம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நீண்ட காத்திருப்பு பல வரி செலுத்துவோரை இதில் தீர்த்து வைக்கும்படி கட்டாயப்படுத்தலாம். இதன் மூலம் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்யலாம்.


இந்தியா அவசர அவசரமாக ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது மற்றும் கடந்த ஏழு ஆண்டுகளில் சட்டத்தில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்துள்ளது. வரி செலுத்துவோர்கள் இந்த ரோலர்-கோஸ்டர் சவாரியில் பொறுமையாக உயிர் பிழைத்துள்ளனர்.


ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் CBIC ஆகியவை ஜிஎஸ்டி சட்டத்தை மறுபரிசீலனை செய்து அதை எளிமைப்படுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஜிஎஸ்டிக்கு "அடுத்து எங்கே" என்ற கேள்விக்கான பதிலாக இது இருக்க வேண்டும். 


மோகன் ஆர் லவி , கட்டுரையாளர் மற்றும் பட்டயக் கணக்காளர் (chartered accountant) ஆவார்.




Original article:

Share:

இங்கிலாந்தின் துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மசோதா என்ன சொல்கிறது ? அது இந்திய சட்டத்துடன் எப்படி ஒப்பிடப்டுகிறது? - அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 இங்கிலாந்து பாராளுமன்றம் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது நோயுற்ற நோயாளிகள் தங்கள் சொந்த வாழ்க்கையை துணையோடு முடித்துக் கொள்ள உதவி கோர அனுமதிக்கிறது.


நவம்பர் 29 அன்று இங்கிலாந்து பாராளுமன்றம் துணையோடு  வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் (assisted dying) மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. "சுதந்திர வாக்களிப்பு" முறையில், எம்.பி.க்கள் கட்சிக் கொள்கையைப் பின்பற்றாமல் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.  இறுதியில், 38 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் 330க்கு 275 என்ற பெரும்பான்மையுடன் மசோதா ஆதரிக்கப்பட்டது.


மரணம் அடையும் நிலையில் உள்ள நோயாளிகள் அபாயகரமான நோய்களிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் போன்றோர்கள் தங்கள் சொந்த துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோருவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது. இந்த மசோதா இப்போது "பொது மசோதாக் குழுவிற்கு" அனுப்பப்படும். இது பாராளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, முன்மொழியப்பட்ட திருத்தங்களை அனுமதிக்கும். பின்னர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸுக்கு (House of Lords) அனுப்பப்படும். அங்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு மேலும் மாற்றங்கள் செய்யப்படலாம்.


துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? மசோதாவில் வழங்கப்பட்ட நடைமுறை என்ன? இது இந்தியாவின் சட்டத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?


இங்கிலாந்தின் தற்போதைய நிலை


துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளுதல்  என்பது ஒரு நோயாளி ஒரு மருத்துவரின் உதவியுடன் தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் செயல்முறையாகும். கருணைக்கொலை என்பது ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவரின் தீவிர ஈடுபாட்டை உள்ளடக்கியது.  இதன்படி, இங்கிலாந்தில் உள்ள சட்டம் எந்த விதமான உதவியால் மரணமடைவதையோ அல்லது கருணைக்கொலையையோ அனுமதிக்காது. தற்கொலை அல்லது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் செயல்முறைக்கு  14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


2013-ஆம் ஆண்டு முதல், இங்கிலாந்தில் இறப்பதை அனுமதிக்க குறைந்தபட்சம் மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், இந்த பிரச்சினையில் நாடு ஒரு சிக்கலான மற்றும் மாறுபட்ட விவாதத்தைக் கண்டது.


தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, வாழ்க்கையின் இறுதிக் கவனிப்பானது, அவர்களின் வலி போன்ற அறிகுறிகளை சரியாக நிர்வகிக்காது என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். மனிதாபிமான வழியில் தங்கள் சொந்த துன்பங்களை எப்போது முடிவுக்குக் கொண்டுவருவது என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிப்பதன் மூலம், இச்சட்டம் நோயாளிக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய சட்டங்கள் தற்கொலைகளைத் தடுக்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இருப்பினும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் தங்கள் சொந்த மரணத்தில் கையொப்பமிட வற்புறுத்தப்படவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ உதவும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.  இறப்பதற்குப் பதிலாக, வாழ்நாள் முடிவடையும் வரை பராமரிப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.


மசோதா என்ன சொல்கிறது?


ஆரம்பத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட தீவிர நோய்வாய்ப்பட்ட நபர் மற்றும் அத்தகைய முடிவை எடுக்கும் மன "திறன்" கொண்ட ஒரு நபர் மட்டுமே இத்தகைய மரணத்தை கோர முடியும் என்று மசோதா கூறுகிறது. இதில் நோயாளி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், கோரிக்கைக்கு முன் 12 மாதங்கள் இங்கிலாந்து வசிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.


இந்த மசோதா, "சிகிச்சையால் குணப்படுத்த முடியாத" "மோசமான நோய்", அல்லது "நியாயமாக 6 மாதங்களுக்குள் எதிர்பார்க்கக்கூடிய மரணத்தை நோக்கியுள்ளவர்" போன்றோர்கள் இதன் வரம்பிற்குள் வரலாம். இதில்  குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது "மனநல கோளாறு" உள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது.


துணையோடு இறக்கும் கோரிக்கையை முன்வைக்கும் நபர், "மருத்துவர்" முன்னிலையில் "முதல் அறிவிப்பில்" கையொப்பமிட வேண்டும். அத்தகைய உதவியை வழங்கத் தயாராக இருக்கும் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர்  மற்றும் மற்றொரு மருத்துவர் "முதல் மதிப்பீட்டை" மேற்கொள்வார். நோயாளி உதவியால் இறப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்கிறாரா? அல்லது தானாக முன்வந்து அவ்வாறு செய்துள்ளாரா? என்ற நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதாக மருத்துவர் என்பதை உறுதிசெய்து, அவர்கள் கோரிக்கையை இரண்டாவது "சுயாதீன மருத்துவரிடம்" பரிந்துரைப்பார்கள். அவர் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் விரிவான ஆலோசனைக்குப் பிறகு  முடிவை எடுப்பார்.


இதை ஒருங்கிணைக்கும் மருத்துவரின் (coordinating doctor's) மதிப்பீட்டில், சுயாதீன மருத்துவர் (independent doctor) உடன்படவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் மருத்துவர், இதை மற்றொரு சுயாதீன மருத்துவரிடம் அனுப்ப உத்தரவிடலாம்.  இருப்பினும், இதை ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.


ஒருங்கிணைப்பு மற்றும் சுயாதீன மருத்துவர்கள் இருவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், அது லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அங்கு கோரிக்கையை வழங்குவதற்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். நோயாளி மற்றும் இரண்டு மருத்துவர்களை நீதிமன்றம் கேட்டு விசாரிக்க முடியும்.  நீதிமன்றம் கோரிக்கையை மறுத்தால், நோயாளி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் முடிவை மேல்முறையீடு செய்யலாம்.  உயர் நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றம் கோரிக்கையை வழங்கினால், அடுத்தக்கட்ட நடைமுறை தொடரும். 14 நாட்களுக்குப் பிறகு, மருத்துவர்கள், இறப்பதற்கான கோரிக்கையை உறுதிப்படுத்த நோயாளியின் "இரண்டாவது அறிவிப்பில்" கையொப்பமிட அனுமதிக்கப்படுவார்.


ஒருங்கிணைக்கும் மருத்துவர், அல்லது நியமிக்கப்பட்ட பயிற்சியாளர், நோயாளிக்கு "அங்கீகரிக்கப்பட்ட பொருளை" கொடுப்பார். இந்த பொருளைப் பற்றிய விவரங்கள் தனி விதிமுறைகளில் கோடிட்டுக் காட்டப்படும்.


பொருளைப் பெறுபவர் தாங்களாகவே அதைப் பயன்படுத்த முடிவு செய்ய வேண்டும் மற்றும் அதை நிர்வகிப்பதற்கான இறுதி நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது.  ஒருங்கிணைப்பு மருத்துவர் அதை நிர்வகிக்க அனுமதிக்கப்படவில்லை.


இந்தியாவில்  செயலற்ற கருணைக்கொலை 


2018-ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை" என்பது இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாகும் என்று கூறியது. மேலும், "செயலற்ற கருணைக்கொலை" (Passive euthanasia) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. செயலற்ற கருணைக்கொலை என்பது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிர் ஆதரவை நிறுத்துவதாகும். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவ தலையீடு இல்லாமல் இயற்கையாக இறக்க முடியும். இது துணையோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மசோதாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

செயலற்ற கருணைக்கொலையை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. 


வழிக்காட்டுதல்களின் படி, ஓர் உயிலில் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பமிடப்பட வேண்டும் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்,  தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவக் குழு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் பிரதிநிதித்துவத்துடன் மற்றொரு வெளி மருத்துவக் குழு ஆகியயோரிடமிருந்து ஒப்புதல்கள் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது.


இருப்பினும், 2019-ஆம் ஆண்டில் இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் (Indian Society of Critical Care Medicine) வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.  அவை இந்த வழிகாட்டல்கள் சிக்கலானவை மற்றும் செயல்பட முடியாதவை என்று குறிப்பிட்டன. ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான காலக்கெடுவை அறிமுகப்படுத்தவும், நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்தவும் 2023-ஆம் ஆண்டில் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை மாற்றியமைத்த போதிலும், இந்த வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நாடு முழுவதும் அவை செயல்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.


ஆகஸ்ட் 2024-இல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் போலவே இருந்தன. இவை நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவியை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் விருப்பமுள்ள அனைவரும் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




Original article:

Share:

நிலச் சீரழிவு பூமியின் திறனை எவ்வாறு அச்சுறுத்துகிறது. -அலிந்த் சௌஹான்

 UNCCD இன் படி, நிலச் சீரழிவு என்பது விளைநிலங்கள், காடுகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளிட்ட நில வகைகளின் உற்பத்தித் திறன்களின் தன்மை இழத்தல் ஆகும். நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, நிர்வகிக்கப்படுகிறது  மற்றும் நில மேலாண்மை நடைமுறைகள் போன்ற அழுத்தங்களால் இது நிகழ்கிறது.


நிலச் சீரழிவு பூமியின் உயிர்களைத் தக்கவைக்கும் திறனைப் பாதிக்கிறது. இதற்கு தீர்வு காணத் தவறினால் எதிர்கால சந்ததியினருக்கு பல சவால்களை உருவாக்கும் என ஐ.நாவின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும், ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் சீரழிகிறது. மொத்தம் 15 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.  இது அண்டார்டிகாவை விட பெரியது. பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Convention to Combat Desertification (UNCCD)) மற்றும் ஜெர்மனியின் காலநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் UNCCD மாநாட்டின் 16 வது அமர்வுக்கு சற்று முன்பு வெளியிடப்பட்டது.


நிலச் சீரழிவு மனிதர்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் எதிர்மறையாக பாதிக்கிறது. இது உணவு உற்பத்தியை குறைக்கிறது.  இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மோசமான சுகாதாரம், நீர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களையும் பரப்புகிறது. நிலச் சீரழிவால் ஏற்படும் மண் அரிப்பு சில சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும்.


நிலச் சீரழிவினால் நீர் அமைப்புகளும் பாதிக்கப்படுகின்றன.  அரிக்கப்பட்ட மண் மூலம் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கடத்தப்படுகின்றன. இவை,  நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. நீர்வாழ் உயிரினங்களுக்கும் இந்த வளங்களை நம்பியுள்ள உள்ளூர் சமூகங்களுக்கும் இவை  தீங்கு விளைவிக்கிறது.


நிலச் சீரழிவு காலநிலை மாற்றத்திற்கும் பங்களிக்கிறது.  பூமியில் நிலம் சீரழிவு நடைபெறும் போது, ​​கார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டு, புவி வெப்பமடைதலை மோசமாக்குகிறது.


நிலச் சீரழிவு கடந்த பத்தாண்டுகளில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் திறனை 20% குறைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. முன்னதாக, இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் மனிதனால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உறிஞ்சின.


நிலச் சீரழிவின் முக்கிய இயக்கிகளான, அதிகப்படியான இரசாயன பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் தண்ணீரை திசைதிருப்புதல் போன்ற நீடித்த விவசாய முறைகள் ஆகும். இந்த நடைமுறைகள் காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் நில மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். நீடித்த நீர்ப்பாசனம் நன்னீரைக் குறைக்கிறது. அதே நேரத்தில் அதிகப்படியான உரப் பயன்பாடு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


காலநிலை மாற்றமும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது நிலச் சீரழிவை மோசமாக்குகிறது. புவி வெப்பமடைதல், அதிக மழைப்பொழிவு மற்றும்  அதிக வெப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது நிலச் சீரழிவுக்கு பங்களிக்கிறது என்று IPCC குறிப்பிட்டுள்ளது.


விரைவான நகரமயமாக்கல் மற்றொரு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வாழ்விட இழப்பு, மாசுபாடு மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கு வழிவகுக்கிறது.  இவை அனைத்தும் நிலச் சீரழிவுக்கு பங்களிக்கின்றன.


நிலச் சீரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. தெற்காசியா, வட சீனா, உயர் சமவெளி மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் வறண்ட பகுதிகள் இதில் அடங்கும். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறண்ட நிலங்களில் வாழ்கின்றனர். இது ஆப்பிரிக்காவின் முக்கால் பகுதியை உள்ளடக்கியது.


நிலச் சீரழிவு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை மிகவும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த நாடுகள் வெப்பமண்டல மற்றும் வறண்ட பகுதிகளில் அமைந்துள்ளன. இத்தகைய பகுதிகளில் நிலச் சீரழிவின் விளைவுகளைக் கையாளும் திறன் குறைவாகவே உள்ளது.




Original article:

Share:

இந்தியாவில் உள்ளாட்சி சுயாட்சியை வலுப்படுத்த நியாயமான மற்றும் முறையான தேர்தல்கள் குறித்து . . . -திலீப் பி.சந்திரன்

 இந்தியாவில் உள்ளாட்சி சுயாட்சியை ஜனநாயகமயமாக்குவதற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அவசியம். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையங்களின் பங்கு என்ன? இது தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன?


உத்தரகண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், அதன் ஐந்தாண்டு பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது.  இந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை பொறுப்பேற்குமாறு மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது. இந்த ஏற்பாடு அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும். ஆனால், புதிய தேர்தல் நடத்தினால் அது விரைவில் முடிவுக்கு வரும்.


இந்தியாவில் நகர்ப்புற நிர்வாகத்தின் முதுகெலும்பாக இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சில கேள்விகள் நம் கவனத்தை ஈர்க்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் செயல்முறை என்ன? உள்ளாட்சித் தேர்தலை வழிநடத்தும் அரசியல் சாசன விதிகள் என்ன? 


இந்தியாவில் உள்ளாட்சி சுயாட்சியை ஜனநாயகப்படுத்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முன்நிபந்தனையாகும்.  1993-ஆம் ஆண்டின் 73 வது மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள், நகர்ப்புற (நகராட்சிகள்) மற்றும் கிராமப்புற (பஞ்சாயத்துகள்) பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கின. மேலும், இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியாயமான மற்றும் வழக்கமான தேர்தல்களை நடத்த மாநில தேர்தல் ஆணையங்களை (State Election Commissions (SECs)) நிறுவுவதற்கான விதிகளை அரசியலமைப்பில் சேர்த்தன.  


மாநில தேர்தல் ஆணையம் என்பது  அரசாங்கத்தின் மூன்றாவது அடுக்கு நிர்வாகத்திற்கான தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இவை கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிர்வாகங்களுக்கான தேர்தலை நடத்துகிறது.  


73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் அரசியலமைப்பில் பகுதி IX மற்றும் பகுதி IXA ஐ அறிமுகப்படுத்தின.  இது பஞ்சாயத்துகளின் கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் (பிரிவு 243 முதல் 243O) மற்றும் நகராட்சிகள் (243P முதல் 243ZG வரை) ஆகியவற்றைக் கையாள்கிறது.  பகுதி IX இல் உள்ள பிரிவு 243K மற்றும் பகுதி IXA இல் உள்ள பிரிவு 243ZA முறையே பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல் தொடர்பானவற்றைக் குறிப்பிடுகிறது.


கூட்டமைவு 


இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) பிரிவு 324-இன் கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் தகுதிகள் அல்லது பதவிக்காலம் குறித்து வெளிப்படையாக குறிப்பிடவில்லை. அதேபோல், மாநில தேர்தல் ஆணையர்களின் (State Election Commissioners (SEC)) தகுதிகள், சேவை நிபந்தனைகள் அல்லது பதவிக்காலம் ஆகியவற்றை அரசியலமைப்பு குறிப்பிடவில்லை.


பிரிவு 243K மாநில தேர்தல் ஆணையர்கள் தொடர்பான பின்வரும் விதிகளை உள்ளடக்கியது:  


  • மாநில தேர்தல் ஆணையர் (SEC) சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநரால் நியமிக்கப்படுவார். 


  • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொருத்தமான சட்டங்களையும் விதிகளையும் உருவாக்க மாநில சட்டமன்றங்களுக்கு அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது.  

  • மாநில தேர்தல் ஆணையர் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைப் போலவே குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே நீக்கப்பட முடியும். மாநில தேர்தல் ஆணையரின் பணி நிபந்தனைகளை, அவர்கள் நியமனம் செய்த பிறகு அவர்களுக்கு எதிராக மாற்ற முடியாது.


  • சட்டப்பிரிவு 243K(2)ன் கீழ், மாநில தேர்தல் ஆணையரின் நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் குறித்து மாநில சட்டமன்றங்கள் முடிவு செய்யும்.


பணிகள்  


ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில தேர்தல் ஆணையத்தை அமைப்பதற்காக அரசியலமைப்பில் 243K மற்றும் 243ZA ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்கள் மற்றும் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை மேற்பார்வையிடவும், வழிநடத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதே அதிகாரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உண்டு. இந்த அதிகாரங்கள் அரசியலமைப்புப் பிரிவு 243K மற்றும் 243ZA(1) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையங்கள் உள்ளூர் தேர்தல்களை மேற்பார்வையிடுகிறது. அதே நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தேசியளவில் தேர்தல்களைக் கையாளுகிறது. இருவருக்கும் அந்தந்த களங்களுக்குள் தேர்தல் நடத்தை அதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளது.


2006-ஆம் ஆண்டில், கிஷன்சிங் தோமர் Vs முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் அகமதாபாத் வழக்கில் (Kishansing Toamar Vs Municipal Corporation of Ahmedabad) உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவது போலவே மாநில தேர்தல் ஆணையங்களின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) சமமான அந்தஸ்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கு (SEC)உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




தேர்தல் தொடர்பான சவால்கள்  


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடும் அதிகாரத்தை மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு வழங்கினாலும், சில மாநிலங்களில் அத்தகைய அதிகாரங்களின் உண்மையான அளவில் மாற்றம் பெறவில்லை.  உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், மாநில தேர்தல் ஆணையங்கள் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடங்களை ஒதுக்குவது போன்ற விஷயங்களுக்கு மாநில அரசுகளைச் சார்ந்துள்ளன. மேலும், தேர்தல்களை நடத்துவதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாதது ஒரு முக்கியமான செயல்பாட்டு தடையாக கண்டறியப்பட்டுள்ளது. 


மேலும், மேற்கு வங்கத்தில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களின் போது, தேர்தல்களை நடத்துவதில் மாநில அரசிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு இல்லாதது, தேர்தல்களை படிப்படியாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வது போன்ற விஷயங்களில் மாநில தேர்தல் ஆணையம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியது.  தேர்தலை படிப்படியாக நடத்துவது, பாதுகாப்பை மதிப்பீடு செய்வது தொடர்பான சட்டப் போராட்டம் போன்றவை உச்ச நீதிமன்றம் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 


சில மாநிலங்களில், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் மாநில செயலகத்திற்குள் அமைந்துள்ளது மற்றும் முழுநேர அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் மாநில தேர்தல் ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படும் அமைப்புகள் என்ற அரசியலமைப்பு பார்வைக்கு ஒத்துப்போகவில்லை. கூடுதலாக, மாநில தேர்தல் ஆணையர்களின் நிலை மற்றும் பதவிக்காலம் மாநிலங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது.  அதே நேரத்தில், போதுமான நிதி மற்றும் ஊழியர்கள் இல்லாதது செயல்பாட்டுக்கு சிரமங்களை உருவாக்குகிறது.  


அகில இந்திய மாநிலத் தேர்தல் ஆணைய அமைப்பு (All India State Election Commissions Forum) நாடு முழுவதும் மாநில தேர்தல் ஆணையங்களின் பங்கு மற்றும் நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உள்ளூர் அரசாங்கங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்கான தளத்தை வழங்குகிறது. தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகள் பற்றிய விவாதங்களையும் இது அனுமதிக்கிறது. கூடுதலாக, இது புதிய முயற்சிகள் பற்றிய தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.


மாநில தேர்தல் ஆணையர்களின் 30-வது தேசிய மாநாடு 2024 மார்ச் 15 முதல் 17 வரை பீகாரில் உள்ள போத்கயாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, ​​பங்கேற்பாளர்கள் மின்-வாக்களிப்பு, ஒரு நாடு, ஒரே தேர்தல் மற்றும் பிற தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தனர். இந்த அமைப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தியது. உள்ளாட்சித் தேர்தல்களின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதே இதன் முக்கிய இலக்காகும்.

 

இந்த சூழலில், தொகுதிகளின் எல்லை நிர்ணயம் (delimitation of constituencies) மற்றும் இடஒதுக்கீட்டின் சுழற்சி (rotation of reservation) போன்ற அனைத்து நிரப்பு அதிகாரங்களையும் மாநில அரசாங்கங்களின் தலையீடு இல்லாமல் அவை சுதந்திரமாக செயல்பட உதவும் என்று வாதிடலாம். 


இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Second Administrative Reforms Commission) சுதந்திரமாக தகுதியான நபர்களை மாநில தேர்தல் ஆணையர்களாக நியமிக்க ஒரு கொலீஜியத்தை உருவாக்க பரிந்துரைத்தது. இது நாடு முழுவதும் நியமன செயல்முறையில் சீரான மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.  


மேலும், மாநில தேர்தல் ஆணையங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இடையேயான ஒத்துழைப்பு, அவற்றின் தனித்துவமான அதிகார வரம்புகளைப் பராமரிக்கும் அதே வேளையில், அதன் செயல்பாட்டுத் தன்மையை வளர்ப்பதற்கும், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதற்கும் உதவும். அகில இந்திய மாநில தேர்தல் ஆணைய மன்றம், நிறுவன சவால்களை அடையாளம் காண்பதில் தனது திறனை நிரூபித்துள்ளது மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் சுதந்திரமான செயல்பாட்டில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான தளமாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதும் நாடு முழுவதும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்த உதவும்.




Original article:

Share: