சுபோஷித் கிராம பஞ்சாயத்து அபியான் (Suposhit Gram Panchayat Abhiyan) என்றால் என்ன?

 முக்கிய அம்சங்கள்



  • இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசாங்கத்தின் மிகப்பெரியளவிலான கவனக் கொள்கை (biggest policy focus) என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியதாவது, "புத்தொழில் திட்டத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு (start-up ecosystem), விண்வெளி பொருளாதாரத்தின் எதிர்காலம் (future of the space economy), விளையாட்டு மற்றும் உடற்பயிற்சித் துறை (sports and fitness sector), நிதி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலை (fintech and manufacturing industry), அல்லது திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் (skill development and internship schemes) என அனைத்து கொள்கைகளும் இளைஞர்களை மையமாகக் கொண்டவை மற்றும் இளைஞர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டவை" என்று குறிப்பிட்டிருந்தார். 


  • ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்கும், வளர்ந்த இந்தியாவின் அடிப்படையான திட்டத்தை உருவாக்குவதற்கும் ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை செயல்படுத்துவதை வலுப்படுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து விளைவுகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'சுபோஷித் கிராம பஞ்சாயத்து அபியான்' (Suposhit Gram Panchayat Abhiyan) திட்டத்தை பிரதமர் தொடங்கினார். 


  • இத்திட்டத்தில் அங்கன்வாடிகளுக்கு இடையே போட்டி நடத்தப்படும். மொத்தம் 1,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த நிதியில் ஒரு பகுதி அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மேம்படுத்த பயன்படுத்தப்படும்.


  • சாஹிப் ஜோராவர் சிங், சாஹிப் ஃபதே சிங் மற்றும் துணிச்சலான சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்ததாகவும், முகலாய சுல்தானகத்தின் அனைத்து சோதனைகளையும் நிராகரித்து, அனைத்து அட்டூழியங்களையும் சகித்துக்கொண்டு, வஜீர் கான் உத்தரவிட்ட மரண தண்டனையை மிகுந்த துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். 


  • குரு அர்ஜன் தேவ், குரு தேக் பகதூர் மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோரின் தைரியத்தை சாஹிப்ஜாதாஸ் நினைவுபடுத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் துணிச்சல் நமது நம்பிக்கையின் ஆன்மீக பலமாக இருந்தது.


உங்களுக்கு தெரியுமா? 


  • இந்தியாவின் மக்கள் தொகையானது முதன்மையான அதிக மக்கள்தொகையை கொண்டுள்ளது. நமது மக்கள்தொகையில் சுமார் 67.3 சதவீதம் பேர் 15-59 வயதுக்குட்பட்டவர்கள். இது மக்கள்தொகையின் நன்மை என்றும், இது இன்னும் முப்பதாண்டுகளுக்கு நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மக்கள் தொகையில் சுமார் 26 சதவீதம் பேர் 14 வயதிற்குட்பட்டவர்களாகவும், 7 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். 


  • 2030-ஆம் ஆண்டில், இந்தியாவின் உழைக்கும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 68.9 சதவீதத்தை எட்டும், சராசரி வயது 28.4 ஆண்டுகள் மற்றும் சார்பு விகிதம் வெறும் 31.2 சதவீதம் ஆகும். முழுமையான மக்கள் தொகை எண்ணிக்கையில், இந்தியா, 1.04 பில்லியன் உழைக்கும் வயதினருடன், உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியாக இருக்கும். 


  • இந்தியாவில் இளம் வயதினர் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் சராசரி வயது சுமார் 28 வயது ஆகும். இந்தியாவும் குறைந்த சார்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு 100 தொழிலாளர்களுக்கும், 40 பேர் மட்டுமே சார்ந்திருப்பவர்கள் (வேலை செய்ய முடியாத அளவுக்கு இளையவர்கள் அல்லது வயதானவர்கள்) ஆவர்.


  • இந்தியாவின் குறைந்த சார்பு விகிதம், அதன் தொழிலாளர்களின் இளைஞர்கள் மற்றும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் புதிய தொழிலாளர்கள் எதிர்பார்க்கப்படுவது இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை அல்லது வரம் என்று அழைக்கப்படுகிறது.


  • இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை ஒரு வாய்ப்பு மற்றும் சவாலாக உள்ளது. ஒருபுறம், இது அதிக எண்ணிக்கையிலான இளம் தொழிலாளர்கள் மற்றும் மனித மூலதனத்துடன் கூடிய குறுகிய காலத்தை நாட்டிற்கு வழங்குகிறது. இதை நன்கு நிர்வகித்தால் வளர்ச்சியை அதிகரிக்கலாம். மறுபுறம், இது ஒரு பெரிய சவாலை உருவாக்குகிறது. நாடு இந்த தொழிலாளர்களை உற்பத்தி வேலைகளுடன் இணைக்க வேண்டும்.


  • இதற்கு மேலும் சவாலாக இருப்பது பொருளாதார மாற்றம் ஆகும். இந்தியா விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து விவசாயம் அல்லாத பொருளாதாரத்திற்கு நகர்கிறது. இது தொழிலாளர் சந்தை பொருத்தத்தை இன்னும் கடினமாக்குகிறது.


  • இது இரண்டு சவால்களை முன்வைக்கிறது. முதலாவதாக, மக்கள் விவசாயத்திலிருந்து உற்பத்தி அல்லது சேவைகளுக்கு வெற்றிகரமாகச் செல்ல புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, விவசாயம் அல்லாத வேலை வாய்ப்புகள் கிராமப்புற இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள நகர்ப்புற மையங்களில் இருப்பதால், தொழிலாளர்களின்  இடத்தை மாற்ற வேண்டும்.





Original article:

Share:

இந்தியப் பொருளாதாரத்தில் மன்மோகன் சிங்கின் பங்களிப்புகள் மற்றும் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சீர்திருத்தங்கள் (LPG) -குஷ்பு குமாரி

 டாக்டர். மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்தார். இந்தியா திவாலாவதைத் தவிர்க்க (brink of bankruptcy) உதவினார்.  


டிசம்பர் 26, வியாழன் அன்று தனது 92-வது வயதில் காலமான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு உலகம் முழுவதும் அஞ்சலி  செலுத்தப்பட்டது. அவர் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின், குறிப்பாக 1990-ஆம் ஆண்டுகளில் (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) கொள்கையின் தலைமை வடிவமைப்பாளராக இருந்தார். இந்தக் கொள்கை இந்தியாவின் பொருளாதாரப் பாதையை மாற்றியது. மன்மோகன் சிங்கிற்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.


முக்கிய அம்சங்கள்: 


1. 1991-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் நிதியமைச்சராக பதவியேற்றபோது, இந்தியா பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே அத்தியாவசிய இறக்குமதிக்கு போதுமானதாக இருந்தது. மன்மோகன், சுதந்திர இந்தியாவில் மிகவும் கடுமையான பொருளாதார சவால்களில் ஒன்றை எதிர்கொண்டார். அவர் 1991-ஆம் ஆண்டில் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தார். இந்த சீர்திருத்தங்கள் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை திறப்பதில் கவனம் செலுத்தியது. இவை சந்தை சார்ந்த கொள்கைகளுடன் இணைந்திருந்தன. 


2. 1991-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் சீர்திருத்தங்கள் தொழில்துறை கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் “உரிமம் ராஜ்” (‘Licence Raj’) தாராளமயமாக்கல் மற்றும் முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்தச் சீர்திருத்தங்கள், இந்தியாவுக்கு முக்கியமான வரவுச்செலவு சமநிலை (balance of payments (BOP)) நெருக்கடியின் போது உதவியது. அந்த நேரத்தில், மூன்று மாத இறக்குமதிகளுக்குப் பதிலாக, நாட்டில் இரண்டு வார இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. 


3. புதிய தொழிற் கொள்கைத் தீர்மானம் பெரும்பாலான வர்த்தக உரிமங்களை நீக்கியது மற்றும் நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளித்தது. அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. இது தொழில்துறையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் குறைக்க உதவியது.

 

தாராளமயமாக்கல் (Liberalisation): இந்த சீர்திருத்தம் 'உரிமம்-அனுமதி ராஜ்' முறை (‘license-permit raj’ system) என்று அழைக்கப்படும் அதிகப்படியான ஒழுங்குமுறை கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. புதிய தொழில் கொள்கையானது சில முக்கியமான தொழில்களைத் தவிர பெரும்பாலான தொழில்களுக்கு உரிமம் வழங்குவதை நீக்கியது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு அனுமதித்தது. இந்தக் கொள்கையானது தனிவல்லாண்மை, கட்டுப்படுத்தும் வணிகச் செயற்பாடுகள் சட்டத்தையும் (Monopolies and Restrictive Trade Practices (MRTP)) மாற்றியது.  அனுமதியின்றி வணிகங்களைத் தொடங்குவது, விரிவுபடுத்துவது அல்லது ஒன்றிணைப்பதை எளிதாக்குகிறது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து வங்கித் துறை மற்றும் மூலதனச் சந்தைகள் தாராளமயமாக்கப்பட்டன.


1991-ஆம் ஆண்டின் நரசிம்மம் குழு அறிக்கையைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளில் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதத்தை (Statutory Liquidity Ratio (SLR)) 38.5%இலிருந்து 25%ஆகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டது. நான்கு ஆண்டுகளில் ரொக்க கையிருப்பு விகிதத்தை (Cash Reserve Ratio (CRR)) 25%லிருந்து 10%ஆகக் குறைப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தது. வங்கி கிளை உரிமம் மற்றும் வட்டி விகிதங்களுக்கான கொள்கையும் தளர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பொருளாதார விரிவாக்கத்திற்கு நிதித்துறை ஆதரவளிக்க முடியும் என்பதை உறுதி செய்தது. இந்த விரிவாக்கம் தாராளமய தொழில் மற்றும் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டது. 


தனியார்மயமாக்கல் (Privatisation): இது வணிகங்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் துறைக்கு மாற்ற வழிவகுத்தது. இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையை 17ல் இருந்து 8 ஆகக் குறைத்தது. இந்த சீர்திருத்தங்கள் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் புதிய நிறுவனங்களை உருவாக்க அனுமதித்தன. இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. பல இந்தியர்கள் வறுமையிலிருந்து தங்களை மீட்டெடுத்தனர். இந்தக் கொள்கை மாற்றங்களின் விளைவாக, கிட்டத்தட்ட 80% தொழில்கள் தொழில்துறை உரிம முறையிலிருந்து நீக்கப்பட்டன. கட்டுப்படுத்தும் வணிகச் செயற்பாடுகள் சட்டமும் (Monopolies and Restrictive Trade Practices (MRTP)) ரத்து செய்யப்பட்டது. நிறுவன விரிவாக்கங்களுக்கான முன் அனுமதியின் தேவை நீக்கப்பட்டது.

 

உலகமயமாக்கல்  (Globalisation): வர்த்தகத் தடைகளைக் குறைப்பதன் மூலமும், மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் உழைப்பின் தடையற்ற ஓட்டத்தை எளிதாக்குவதன் மூலமும் இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதே உலகமயமாக்கலின் முக்கிய நோக்கமாகும். 1991-ஆம் ஆண்டு சீர்திருத்தம் வர்த்தக இறக்குமதி வரிகளைக் குறைத்தது. உயர் முன்னுரிமை தொழில்களில் வெளிநாட்டு தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு தானியங்கி அனுமதி வழங்க அனுமதிக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதற்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வெளிநாட்டில் சோதிப்பதற்கும் அனுமதி மறுத்தது. இந்திய அரசாங்கம் 51 சதவீதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது மற்றும் அதிக முன்னுரிமை தொழில்களில் வெளிநாட்டு தொழில்நுட்ப ஒப்பந்தங்களை எளிதாக்க தடைகளை நீக்கியது. 

1991-ஆம் ஆண்டில் டாக்டர். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது, ​​ "பூமியில் உள்ள எந்த சக்தியும் எந்த நேரத்திலும்  வரும் யோசனையை தடுக்க முடியாது” என்ற விக்டர் ஹ்யூகோவை மேற்கோள் காட்டி வரவு செலவு அறிக்கை உரையை முடித்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தேசமாக, நாம், ராபர்ட் ஃப்ரோஸ்டின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். "ஆனால், நான் ஓய்வெடுப்பதற்கு முன், நான் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.


தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சீர்திருத்தங்களின் (LPG  Reforms) 25-வது ஆண்டு விழாவில் டாக்டர். மன்மோகன்சிங் கூறினார். 


1. ஆகஸ்ட் 1990-ஆம் ஆண்டில், எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இது வரவுச்செலவு நிலையை (balance of payments (BOP)) மோசமாக்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைக்கப்பட்டது. மூலதன வெளியேற்றம் பெருமளவில் இருந்தது. இந்தியா கடனைத் திருப்பிச் செலுத்தும் சாத்தியத்தை எதிர்கொண்டது.


2. இதற்குப் பதிலடியாக, ஜூலை 1, 1991-ஆம் ஆண்டு அன்று அரசாங்கம் ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. ரிசர்வ் வங்கி  அந்நியச் செலாவணியைக் கடனாகப் பெறவும், பணப் பரிவர்த்தனை பிரச்சனையால் ஏற்பட்ட பணப்புழக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் 46 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கிக்கு மாற்றியது. 


3. 1991-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் $1 பில்லியன் குறைந்தது. இது வெளிப்புற பொறுப்புகளில் இயல்புநிலையின் முதல் உண்மையான ஆபத்தை உருவாக்கியது.


4. இந்த நெருக்கடியானது ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. 




Original article:

Share:

திறன் வகுப்பறைகள் (smart classrooms) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் 19 நகரங்களில் மாணவர் சேர்க்கை 22% அதிகரித்துள்ளது.

 இந்த முயற்சி மாணவர்களின் கற்றல் அனுபவங்களையும் வருகையையும் மேம்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஆசிரியர்களின் மேம்பட்ட வசதி மற்றும் திறன் வகுப்பறை (smart classroom)  வசதிகளுக்கான அவர்களின் விருப்பம் ஆகியவை மேம்பட்டுள்ளன என்று IIM-பெங்களூர் ஆய்வு தெரிவிக்கிறது. 


பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகம் (Indian Institute of Management) நடத்திய ஆய்வில், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் (Smart Cities Mission (SCM)) கீழ் திறன் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 22% அதிகரித்துள்ளது. இந்தத் தரவு 2015-16 ஆண்டு முதல் 2023-24 ஆண்டு வரை 19 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

71 நகரங்களில் 2,398 அரசு பள்ளிகளில் 9,433 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான திறன் வகுப்பறை திட்டங்கள் கர்நாடகாவில் 80, ராஜஸ்தானில் 53 உள்ளன. தமிழகத்தில் 23, டெல்லியில் 12, மேற்குவங்கம் 2 இடங்களுடன் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். 


அறிக்கையின்படி, திறன் வகுப்பறை முயற்சி கற்றல் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட  சீர்மிகு நகரங்களில் மாணவர் வருகையை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

 

41 நகரங்களில் மொத்தம் 7,809 இருக்கைகள் கொண்ட டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் கர்நாடகாவின் துமகுரு போன்ற நகரங்களில் டிஜிட்டல் நூலகங்களின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலகங்கள் அத்தியாவசிய கல்வி ஆதாரங்களை வழங்குவதோடு, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக உதவுகின்றன.

 

சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission (SCM)) ஜூன் 2015-ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் முக்கிய உட்கட்டமைப்பு கொண்ட நகரங்களை மேம்படுத்துவதாகும். தூய்மையான மற்றும் நிலையான சூழலை உள்ளடக்கிய குடிமக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணியானது 'திறன் முறைகளை' (smart solutions) பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. 


நவம்பர் 2024 ஆண்டு நிலவரப்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் 91% திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


  2022-ஆம் ஆண்டில், சீர்மிகு நகரங்கள் திட்டம் “ சீர்மிகு நகரங்கள் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை மற்றும் ஆராய்ச்சியை நோக்கி” ((Smart Cities and Academia towards Action and Research (SAAR)) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளம் கல்வியாளர்களையும் அரசாங்கத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய நகர்ப்புற முயற்சிகளை ஆவணப்படுத்துவதும் மற்றும் ஆராய்ச்சி செய்வதும் இதன் நோக்கம். 


SAAR முன்முயற்சியின் கீழ், சீர்மிகு நகரங்கள் இயக்கம் "சமீக்ஷா தொடர்" (Sameeksha Series) என்ற பெயரில் 50 மதிப்பீட்டு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆறு இந்திய மேலாண்மை நிறுவனங்கள், எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மூன்று திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளிகள் மற்றும் 12 சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.




Original article:

Share:

சிறைபிடிக்கப்பட்ட யானைகளை மேலும் கட்டுப்படுத்தும் விதிகள் -சுப்ரா சோட்டி

 சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கான (இடமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள் சில தெளிவற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த தெளிவற்ற விதிகள் யானைகளின் சட்டவிரோத வர்த்தகத்தை எளிதாக்கக்கூடும். 


இந்தியாவில், யானைகள் ஞானம் மற்றும் வலிமையின் புனித சின்னங்களாக மதிக்கப்படுகின்றன. இருப்பினும், தனிநபர்களால் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இதை பிரதிபலிக்கும் வகையில், கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் யானைகளின் வாழ்க்கையை "எட்டர்னல் ட்ரெப்ளிங்கா" ("Eternal Treblinka") என்று ஒப்பிட்டது.  இந்த ஒப்பீடு பிரபலமற்ற நாஜி அழிப்பு முகாம்களைக் குறிக்கிறது. 


மத நோக்கங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்படும் யானைகள் கொடுமையை தாங்கிக் கொள்கின்றன. யானைகள் இயற்கைக்கு மாறான முறையில் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யானைகள் சமூக விலங்குகள், ஆனால் அவை பெரும்பாலும் தனிமைப்படுத்தல் மற்றும் தவறான பயிற்சி முறைகளை எதிர்கொள்கின்றன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), யானைகளுக்கு மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கினாலும், அவை இன்னும் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, சிறையிலேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


புதிய விதிகள் மற்றும் சட்ட ஓட்டைகள் 


மார்ச் 2024இல், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC)) சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கான (பரிமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகளை வெளியிட்டது. தனியாரின் காவலில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், காடுகளில் இருந்து சட்டவிரோதமாக பிடிபடுவதைக் குறைப்பதும் இந்த விதிகளின் முக்கிய குறிக்கோள் ஆகும். யானைகளை எவ்வாறு கொண்டு செல்லலாம் மற்றும் இடமாற்றம் செய்யலாம் என்பதை விதிகள் கோடிட்டுக் காட்டுகின்றன. யானைகளின் உரிமையை மாற்றுவதற்கான நடைமுறையையும் குறிப்பிடுகிறது.


காட்டு யானைகளை கொண்டு செல்வதற்கான அல்லது மாற்றுவதற்கான நடைமுறைகள் மற்றும் காரணங்கள் தெளிவாக இல்லை. இந்த தெளிவின்மை வணிக சுரண்டலுக்கு மேலும் வழிவகுக்கும். உதாரணமாக, ஒரு யானையை இனி ஒரு உரிமையாளரால் பராமரிக்க முடியாது எனில், உரிமையை மாற்றலாம் என்று விதிகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த பரிமாற்றம் வணிக ரீதியானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இதன் விளைவாக, யானைகளை அசையும் சொத்தாக வர்த்தகம் செய்யப்படலாம்.

 

யானைகளை தற்காலிகமாக கொண்டு செல்லவும் விதிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும், தனியாருக்குச் சொந்தமான யானையை மாநில எல்லைகளுக்குள் அல்லது குறுகிய காலத்திற்குள் கொண்டு செல்வதை நியாயப்படுத்த எந்த தெளிவான தேவையும் இல்லை. தனியாருக்குச் சொந்தமான பல யானைகளைக் கொண்ட மாநிலங்கள், மதச் சடங்குகள், திருமணங்கள் அல்லது அரசியல் பேரணிகள் போன்ற நிகழ்வுகளுக்கு அவற்றை குத்தகைக்கு விடலாம்.  


இந்த நடவடிக்கைகள் யானைகளை ஒரு பொருளாக கருதுவதன் மூலம் அவற்றின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.  யானைகளை மதச் செயல்பாடுகள், சுற்றுலா அல்லது பிற வணிக நோக்கங்களுக்காக மாற்றுவது அவற்றைப் பொருளாதாரச் சொத்துகளாக மாற்றுகிறது. இது யானைகளை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதுகிறது. தனியார் யானை உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளை "வாடகைக்கு" வழங்க இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியும். இது காட்டு யானைகளைப் பிடிப்பதை ஊக்குவிக்கும் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


மைக்ரோசிப் (Microchip) தவறான பயன்பாடு மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட பிறப்புகள் 


ஜனவரி 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 2,675 சிறைபிடிக்கப்பட்ட யானைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு தீவிர பிரச்சனையை எழுப்புகிறது. இந்த யானைகள் இறக்கும் போது, ​​அவற்றை மாற்றுவதற்காக காட்டில் இருந்து புதிய யானைகள் பிடிக்கப்படுகின்றன. யானை திட்டம் (Project Elephant) (2002) முயற்சியின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட பெரும்பாலான யானைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டன.  இந்த முயற்சியானது இந்தியாவில் உள்ள அனைத்து சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு பொருந்தும். மேலும், உரிமைச் சான்றிதழ்களுடன் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறந்த யானையிடமிருந்து மைக்ரோசிப்கள் எடுக்கப்பட்டு, சட்ட விரோதமாகப் பிடிப்பதை சட்டப்பூர்வமாக்குவதற்காக காட்டில் பிடிபட்ட யானைக்குள் வைக்கப்படுகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


சிறைபிடிக்கப்பட்ட யானைகளில் மைக்ரோசிப்களை அகற்றி அழிக்க விதிகள் தேவையில்லை. இதை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் செய்ய வேண்டும். விதிகளின்படி யானை இடமாற்றம் அல்லது போக்குவரத்தின் போது இறந்தால் பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை. இது கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமை இடைவெளியை உருவாக்குகிறது. இந்தச் சுழற்சியைத் தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட யானைகளை சட்டப்பூர்வமாக உரிமையாளராக வகைப்படுத்தவும் விதிகள் அனுமதிக்கின்றன.


அதற்கு பதிலாக, தனியார்பராமரிப்பில் உள்ள யானைகளுக்கு மனிதாபிமான, ஆக்கிரமிப்பு இல்லாத பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை தேவைப்படுகிறது. இது வணிகச் சுரண்டலின் சுழற்சியை முறியடிக்கவும், யானைகள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும்.  கோவில்கள், ஊர்வலங்கள், சுற்றுலா போன்றவற்றில் உயிருள்ள யானைகளுக்குப் பதிலாக மின்னணு யானைகளை பயன்படுத்த வேண்டும். காட்டுயானைகளை பாதுகாக்க பொதுமக்கள், கோவில் கமிட்டிகள் மற்றும் அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 


மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம் 


மேலும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு யானைகள் கடத்தப்படுவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அசாமில் உள்ள ஒரு தனியார் உரிமையாளரால் டெல்லி கோவிலுக்கு யானை "பரிசாக" கொடுக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம். துரதிர்ஷ்டவசமாக, புதிய விதிகள் இந்த அழிந்து வரும் விலங்குகளை எளிதாக வர்த்தகம் செய்ய உதவியுள்ளன.

 

ஆகஸ்ட் மாதம், இந்த எழுத்தாளர் மற்றும் பிறரிடமிருந்து அறிக்கைகள் வெளியான பிறகு, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC)) கீழ் யானைத் திட்டம் நடவடிக்கை எடுத்தது. சிறைபிடிக்கப்பட்ட யானைகளை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்வதை எடுத்துக்காட்டும் ஒரு குறிப்பாணையை அது வெளியிட்டது. சிறைபிடிக்கப்பட்ட யானைகள் (பரிமாற்றம் அல்லது போக்குவரத்து) விதிகள் (2024), பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்த குறிப்பாணை வலியுறுத்தியது மற்றும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் மரபணு சுயவிவரங்களை டிஜிட்டல் மயமாக்குவது கட்டாயமாக்கியது. யானை இடமாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், அவை விதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளை முழுமையாக சரி செய்யவில்லை.


துரதிர்ஷ்டவசமாக, சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு போதுமான பாதுகாப்பை சட்டம் வழங்கவில்லை. யானைகளின் நலனில் கவனம் செலுத்தும் மற்றும் வணிகச் சுரண்டலைத் தடுக்கும் தெளிவான விதிகள் இல்லாததால், இந்த முரண்பாடுகள் அனைத்தும் தொடரும். யானைகள் புனித விலங்குகளாக வணங்கப்படுகின்றன. ஆனால், வனவிலங்குகள் மேலும் சுரண்டப்படும்  காட்டு விலங்குகளாகவே இருக்கின்றன.


சுப்ரா சோட்டி சுற்றுச்சூழல் வழக்கறிஞர் மற்றும் இந்தியாவின் ஹ்யூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் (Humane Society International (HSI) ) வனவிலங்கு கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். 




Original article:

Share:

கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு பற்றி…

 புதிய தடுப்புக் கொள்கை (detention policy) ஒரு முக்கியமான பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கிறது. எனினும், அந்த முயற்சி  தோல்வியடைகிறது. 


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance (UPA)) அரசாங்கம் கல்வி உரிமையின் கீழ் பள்ளிக் கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இவற்றில் தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation (CCE)) மற்றும் 8 ஆம் வகுப்பு வரை தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) ஆகியவை அடங்கும். இரண்டு சீர்திருத்தங்களும் குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லாத பள்ளிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சீர்திருத்தங்கள் இறுதித் தேர்வுகள் மற்றும் கடுமையான கல்வித் மதிப்பீடுகளின் அழுத்தத்தை அகற்றின.


தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (CCE) முறை 6 ஆம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்டு முழுவதும் சிறிய, வழக்கமான படிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்தது.  இது ஒரு வருட கால பாடத்திட்டத்தின் அடிப்படையில் அறிவை சோதிக்கும் பாரம்பரிய இறுதி தேர்வுகளை மாற்றியது. இருப்பினும், பல மாணவர்கள் இன்னும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன் இல்லாமல் ஆரம்பப் பள்ளியை முடிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடைநிலைப் பள்ளியை முடிக்கும் நேரத்தில் கூட இந்தத் திறன்களை மேம்படுத்தத் தவறிவிடுகிறார்கள்.


 2019-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் (National Democratic Alliance (NDA)) கற்றல் விளைவுகளில் உள்ள இடைவெளியை கருத்தில் கொண்டு, தடுப்பு இல்லாக் கொள்கையை (no-detention policy) முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது. மேலும், அந்த முடிவை தனிப்பட்ட மாநில அரசுகளுக்கு விட்டுவிட்டனர். தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு முறையும் (CCE) நிறுத்தப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயால் பள்ளிகள் மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதைப் பரிசீலிக்க இயலாது. 


கல்வி அமைச்சகம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையை நீக்கியுள்ளது. புதிய விதிகள் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு முடிவில் இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தத் தேர்வுகள் குழந்தையின் திறனை மதிப்பிடும். ஒரு குழந்தை திறமையற்றதாகக் கண்டறியப்பட்டால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கூடுதல் அறிவுறுத்தலுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்கள். குழந்தை மீண்டும் தோல்வியுற்றால், அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன் எந்தக் குழந்தையையும் வெளியேற்ற முடியாது என்று விதிகள் கூறுகின்றன.


நடைமுறைத் தேவைகள் இந்த விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. கற்றல் விளைவுகளில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மக்கள்தொகை ஈவுத்தொகையிலிருந்து (demographic dividend) பயனடைய ஒரு படித்த, திறமையான மக்கள் தேவை. ஒரு குழந்தைக்கு கல்வி கற்பது என்பது பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்ல, முழு சுற்றுப்புறத்தையும் உள்ளடக்கியது. மோசமான கற்றல் முடிவுகள் சமூகத்தின் கூட்டுத் தோல்வியை பிரதிபலிக்கின்றன. எனவே, அதை சரிசெய்ய வேண்டும்.  இருப்பினும், இந்த கொள்கையை மாற்றுவது மட்டும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானதாக இருக்காது. ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)) மற்றும் பிற தனியார் பள்ளிகள் புதிய விதிகளை எளிதாகப் பின்பற்றலாம். ஆனால், சில மாநிலங்களுக்கு இது அரசியல் பிரச்சினையாக மாறலாம். தனியார் பள்ளிகள் இதை ஒரு காரணமாக பயன்படுத்தி தேர்ச்சி பெறாதா மாணவர்களை வெளியேற்றக்கூடாது. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும். 


புதிய கொள்கையின் எதிர்மறையான விளைவு என்னவென்றால், ஒரு குழந்தை அடுத்த வகுப்பிற்குச் செல்கிறதா அல்லது தடுத்து நிறுத்தப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க ஒரு இறுதித் தேர்வை மீண்டும் கொண்டுவருகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) அல்லது கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination (JEE)) போன்ற தேர்வுகள்  அதிக போட்டித்தன்மை கொண்ட துறைகளுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால், பள்ளி மட்டத்தில் ஒரு இறுதித் தேர்வைப் பயன்படுத்துவது ஒரு பின்தங்கிய படியாகும். 


எடுத்துக்காட்டாக, தேசிய கல்விக் கொள்கை (2020), கூட்டு மதிப்பீடுகளை உருவாக்கும் மதிப்பீடுகளுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சுய மற்றும் சக மதிப்பீடுகளையும் (peer assessments) ஊக்குவிக்கிறது. இது ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்தையும் தனித்துவத்தையும் காட்டும் "முழுமையான பல பரிமாண முன்னேற்ற அறிக்கை" (“holistic, 360-degree, multidimensional progress report card”) என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளிக்கிறது. எனினும், புதிய தடுப்புக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையின் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை.





Original article:

Share:

வரவு செலவுத் திட்டத்திற்கான செயல்பாட்டை அமைத்தல்

 வரவிருக்கும் ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம், முந்தைய வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரச் சூழலில் தாக்கல் செய்யப்படும். 


நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது அரசு தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போதே நடைபெற்று வருகின்றன. செவ்வாய்கிழமையன்று பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்பு இந்த செயல்முறையின் முக்கிய பகுதியாகும்.


வரவிருக்கும் ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம், முந்தைய வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட பொருளாதாரச் சூழலில் தாக்கல் செய்யப்படும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா (அமெரிக்கா) டொனால்ட் டிரம்பை அதன் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. அவர் தனது பொருளாதாரக் கொள்கையை மிகவும் பரிவர்த்தனை, வணிகம், சீரற்ற மற்றும் கணிக்க முடியாததாக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். இந்தியா, அமெரிக்காவிற்கு மிகப் பெரிய சேவை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதாலும், அதன் வெளிப்புறக் கணக்கை சமநிலைப்படுத்த மூலதன அதிகரிப்பை நம்பியிருப்பதாலும், இந்த சவாலான சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.


அரசாங்கத்தின் பொருளாதார முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு  என்னென்ன தேவை உள்ளது? இதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.


முதலாவதாக, மூலதனச் சந்தைகள் அதிக உறுதியை விரும்பும். சவாலான உலகப் பொருளாதாரத்தை ஈடுகட்ட அவர்களுக்கு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய நிதித் திட்டம் தேவை. இது அரசாங்கத்தின் கடன் செலவுகளை பாதிக்கும்.


இரண்டாவதாக, புதிய அமெரிக்க அதிபரின் கருத்துக்களுக்கு ஏற்ப சில சுங்க வரிகளை சரிசெய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். இந்த யோசனை இயல்பாகவே எந்த தவறும் இல்லை. ஆனால், அதை எப்போது, ​​​​எப்படி செய்வது என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது.


வரவு செலவுத் திட்டத்திற்கான முக்கிய சவால், பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சியாகும். முதல் இரண்டு காரணிகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய நிதி ஊக்கம் அல்லது ஏற்றுமதிக்கான வலுவான உந்துதல் இப்போது சாத்தியமாகத் தெரியவில்லை. எனவே, இதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?


பெரிய மாற்றங்களைத் தவிர்த்து, தனியார் முதலீடுகளும், பொருளாதார வளர்ச்சியும் இயற்கையாகவே மீண்டு வருமா என்று காத்திருப்பதன் மூலம் அரசு எச்சரிக்கையுடன் அணுகுமா? இந்த அணுகுமுறை 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்குடன் ஒத்துப்போகிறது.


இலாபத்திற்கும் ஊதியத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்காக, குறைந்த செல்வந்தர்களுக்கு வரிச் சலுகையை வழங்கி, மறுபகிர்வுக் கோணத்தில் பிரச்சினையைத் தீர்க்குமா? போன்ற பிரச்சினையை  தலைமைப் பொருளாதார ஆலோசகர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முன்னிலைப்படுத்தினார்.


இந்த கட்டத்தில், முடிவுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சி மாற்றத்தை விட அரசியலாக மாறுகிறது. வரவு செலவுத் திட்டத்தின் முந்தைய விவாதங்கள் பெரும்பாலும் இந்த விருப்பங்களைப் பற்றிய கருத்துக்களைப் புரிந்துகொண்டு சேகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன.




Original article:

Share:

மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை எவ்வாறு மாற்றியது? -ரோஷன் கிஷோர்

 மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, ​​பொருளாதாரம் இறையாண்மைப் பிரச்சனையில் இருந்தபோது, ​​அதன் போக்கை முற்றிலும் மாற்றினார்.

 

இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றிய அரசியல்வாதியாக மன்மோகன் சிங் நினைவுகூரப்படுவார். நரசிம்ம ராவின் மைனாரிட்டி அரசாங்கத்தின் கீழ் 1991-ஆம் ஆண்டில் அவர் நிதி அமைச்சரானபோது, ​​இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருந்ததால், ஒரு மாத இறக்குமதியை ஈடுகட்ட முடியவில்லை. இதன் விளைவாக, நாடு தனது தங்க இருப்புக்களை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டியிருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில் அதிகப்படியான செலவினங்களால் இந்த கடுமையான பொருளாதார பேரழிவு ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டும் தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்து வந்தன.


நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சிக்கலின் விளைவாக இந்த நெருக்கடி ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசு தலைமையிலான திட்டமிடல் மாதிரி (planning model) வழங்குவதில் தோல்வியடைந்தது. 

அதே நேரத்தில், உரிமம்-ஒதுக்கீடு ராஜ்ஜியம் (Licence-Quota Raj) என்று அழைக்கப்படும் தனியார் வணிகங்கள் பின்வாங்கின. மன்மோகன் சிங் முன்வைத்த புகழ்பெற்ற 1991 பட்ஜெட்டில் தொழில்துறைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் அனைத்தும் மாறத் தொடங்கின. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சீர்திருத்தங்கள் முதலில் தொடங்கியபோது இருந்த எதிர்ப்பைப் போலவே, இந்தியாவில் சீர்திருத்தங்களுக்கு இப்போது பரந்த ஆதரவு உள்ளது. அப்படியானால், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் என்ன சாதித்துள்ளன? இந்த கேள்விக்கு சுருக்கமாக பதிலளிக்க முயற்சிக்கும் ஐந்து விளக்கப்படங்கள் இங்கே உள்ளன.

 

           இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும். பொருளாதார சீர்திருத்தங்களின் போது இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (தற்போதைய டாலர்களில்) இந்தியாவின் பங்கு பற்றிய உலக வங்கியின் தரவு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 1960-ஆம் ஆண்டுகளில் இருந்து படிப்படியாகக் குறைந்துவிட்டது. இந்தத் தரவுகள் கிடைத்த ஆரம்ப காலகட்டம் இது. இது 1991-ஆம் ஆண்டில் அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது. கடந்த முப்பது ஆண்டுகளாக அதன் வளர்ச்சி  வேறுபட்டிருந்தாலும், இந்த பங்கு அதிகரித்து வருகிறது.

 

இந்தியாவில் சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இந்த வளர்ச்சி ஏழ்மையான மக்களைச் சென்றடைந்ததா அல்லது ஒரு சிலரின் கைகளில் குவிந்ததா என்பதுதான் அதிக விவாதத்திற்குரிய கேள்வியாக உள்ளது. இது சம்பந்தமாக, நிலைமை ஓரளவு நேர்மறையானது என்று கூறலாம். 2.15 டாலர் வறுமைக் கோட்டால் அளவிடப்படும் தீவிர வறுமையைக் குறைப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக வறுமை குறித்த உலக வங்கி தரவு (World Bank data) காட்டுகிறது. இருப்பினும், அதிக வருமான நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள வறுமைக் கோடுகளுக்கு வறுமை விகிதங்கள் மிக அதிகமாகவே உள்ளன. இந்த பகுதியில் இன்னும் அதிக வேலை தேவைப்படுகிறது. சீர்திருத்தத்திற்குப் பிந்தைய வளர்ச்சியால், நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கப்பட்ட வருமானம் இல்லாமல், தீவிர வறுமையைக் குறைப்பது கூட சாத்தியமில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


 வறுமை மற்றும் சமத்துவமின்மை பற்றிய கவலைகள் ஒருபுறம் இருக்க, சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் செல்வத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தன. கட்டுப்பாட்டுக்கான நீக்கம் தனியார் வணிகங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. சீர்திருத்தங்கள் தொடங்கி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சியில் இது தெளிவாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மூலதனச் சந்தைகளின் கட்டுப்பாட்டாளருக்குப் பதிலாக நவீனமான SEBI மற்றும் தளர்த்தப்பட்ட IPO விதிகள் 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் Infosysயை பட்டியலிட அனுமதித்தன. இந்த நிகழ்வு இந்தியாவின் சமபங்கு கலாச்சாரத்தை தூண்ட உதவியது.

 

இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நேர்மறை எண்ணம் அந்நிய மூலதனத்தை இந்தியாவிற்குள் ஈர்த்தது. இது, பங்குச் சந்தை ஏற்றத்துடன், வெளிக் கணக்கிற்கு மிகவும் தேவையான நிலைத்தன்மையை வழங்கியுள்ளது. இந்திய இறக்குமதிகள் சீர்திருத்த காலத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது கணிசமாக பெரியதாக இருந்தாலும் இந்த நிலைத்தன்மை நீடித்தது.

 

பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவில் அவர்கள் செய்ய நினைத்த அனைத்தையும் சாதித்துவிட்டன என்று அர்த்தமா? முன்னேற்றம் கட்டுப்படுத்தப்பட்ட முக்கியமான பகுதிகள் இன்னும் உள்ளன. இந்தியா தனது உற்பத்தித் துறையை கணிசமாக உயர்த்த தவறியது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு சீர்திருத்தங்களுக்குப் பிறகு பெரும்பாலும் தேக்க நிலையில் உள்ளது. அதே நேரத்தில், சீனா போன்ற நாடுகள் உற்பத்தி மூலம் வலுவான ஏற்றுமதி வளர்ச்சியால் பயனடைந்துள்ளன.

 

     அமெரிக்காவும் வளர்ந்த நாடுகளும் கூடுதலான பாதுகாப்புவாதியாக மாறி வரும் நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சிறந்த காலகட்டத்தை இந்தியா தவறவிட்டிருக்கலாம் என்ற சில சந்தேகங்கள் உள்ளன. முரண்பாடாக, இந்தியாவின் உற்பத்திக்கான முன்னேற்றம் இல்லாததற்கு பெரும்பாலும் குறைவான சீர்திருத்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. 


ஆனால், இதேபோன்ற தேசியக் கொள்கை சூழலில் சில மாநிலங்கள் இந்த முன்னணியில் மற்றவர்களை விட மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது என்பதும் உண்மை. சீர்திருத்தங்களைப் பாராட்டிய சில பொருளாதார வல்லுநர்கள் இந்தியா உற்பத்தியை விட சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகையில், ஒரு வலுவான உற்பத்தித் துறையை விட லாபகரமான விவசாயம் அல்லாத தீவிரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பெரிய ஆதாரத்தை கற்பனை செய்வது கடினம். 1991-ஆம் ஆண்டில் தொடங்கிய பணிகளை அடுத்த தலைமுறை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைத் தலைவர்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு பகுதியாக உள்ளது.




Original article:

Share: