வரவு செலவு அறிக்கை 2025-26: ஒரு நம்பிக்கைக்குரிய முதல் படி, ஆனால் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் -ஷிஷிர் குப்தா, ரிஷிதா சச்தேவா

 2000 முதல் 2020 வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள்தொகையின் நகர்ப்புற பங்கு தொடர்ந்து அதிகரித்ததால் இந்த காலகட்டத்தில் தனிநபர் நகர்ப்புற வருமானம் கிராமப்புறங்களை விட மெதுவாக வளர்ந்ததை இது சுட்டிக்காட்டுகிறது.


உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டுப் பொருளாதாரம் இருந்த காலகட்டத்தில், பிப்ரவரி 1, 2025 அன்று ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 6.4% ஆகவும், 2025-26 நிதியாண்டில் 6.3-6.8% ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை விட மிகக்  குறைவான வளர்ச்சியாகும். வருமான வரி குறைப்பு மூலம் தேவை ஊக்குவிப்புக்கு (demand stimulus) அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், முன்மொழியப்பட்ட நகர்ப்புற சீர்திருத்தங்கள், உத்தேச சீர்திருத்தங்கள் பற்றி போதுமானதாக இல்லை. இந்திய நகரங்கள் மற்றும் பெரு நிறுவனங்களை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுவதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும். இவை நகர்ப்புறங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% பங்களிக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தேசிய உற்பத்தியில் 40% மற்றும் ஏற்றுமதியில் 55% உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் பெரிய வணிகங்களில் நடப்பதால், இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.


"நகர்ப்புற வளர்ச்சி" என்பது முக்கிய வளர்ச்சித் தூண்களில் ஒன்றாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. உலகம் முழுவதும், நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றாகச் செல்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், நகரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது இப்போது முன்னெப்போதையும் விட தற்போது முக்கியமானது. 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகர்ப்புற பங்கு 52-55%-க்கு இடையில் அதிக மாற்றம் இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில், இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தது.  தனிநபர் நகர்ப்புற வருமானம் (per capita urban income) கிராமப்புற வருமானத்தை விடமெதுவாக வளர்ந்தது. 


இருப்பினும் நகரங்கள் கிராமப்புறங்களை விட மூன்று மடங்கு அதிக உற்பத்தித்திறன் கொண்டவை.  நகர உற்பத்தித்திறன் குறைந்தால், அது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். நகர்ப்புற வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் நகரங்களில் குறைந்த வாழ்க்கைத் தரம் ஆகும்.  எடுத்துக்காட்டாக, நகராட்சி கழிவுகளில் 95% சேகரிக்கப்பட்டாலும், அதில் 50% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் (litre per capita per day (lpcd)) 135-150 ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு லிட்டர் என்ற அளவுகோலுடன் ஒப்பிடும்போது நீர் கிடைக்கும் தன்மை சுமார் 115 lpcd ஆகும். மேலும், விலை-வருமான விகிதம் (price-to-income ratio (PTI)) கொண்ட  சராசரி வருமானம் ஈட்டும் குடும்பத்தினரால் 950 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கான விலை நமது நகரங்களில் 11 ஆக உள்ளது.  இது 5 மலிவு விலை அளவுகோலுக்கு மாறாக உள்ளது.


போதுமான சேவை வழங்கல்  இல்லை


துணை-உகந்த சேவை (Sub-optimal service) வழங்கல் பல காரணிகளால் ஏற்படுகிறது.  நிதி பற்றாக்குறை அதில் ஒரு முக்கிய காரணியாகும். இந்திய நகரங்கள் நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு செலவழிக்க வேண்டிய தொகையில் கால் பகுதியை செலவிடுகின்றன. நகர உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல திட்டமாக, ₹1 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund) உருவாக்குவது என்ற மைய அரசின் யோசனை உள்ளது. இந்த நிதி, பணத்தை திறமையாகப் பயன்படுத்துதல், தெளிவாகத் திட்டமிடுதல் மற்றும் சேவைகளை மேம்படுத்த நிலையான நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


திடக்கழிவு மேலாண்மை (solid waste management (SWM)) தொடர்பான 27 பெரிய நகராட்சிகளின் செலவுகள் மற்றும் விளைவுகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்வில், 19 நகராட்சிகள் வழக்கத்தை விட அதிக செலவுகளை செய்துள்ளன. ஆனால், தூய்மை இந்தியா திட்டத்தின் தரவரிசையின் கீழ் இதில் உள்ள நகராட்சி எதுவும் சரியான  தரநிலை பெறவில்லை. தூய்மை சேவைகளில் ஏற்பட்ட மறுபாடுகளுக்கு 23% செலவினங்கள் காரணமாகும். மீதமுள்ளவை நிலையான தலைமை, குடிமக்களின் ஈடுபாடு போன்ற பணவியல் சாராத பரிமாணங்களால் ஏற்படுகின்றன. இதனால், அதிக வளங்களுடன், சிறந்த செலவினத் திறனுக்கான தேவையும் உள்ளது.


குடிமை சேவைகளின் போதுமான விநியோகம் இல்லாதது மட்டுமல்லாமல், இந்திய நகரங்கள் அதிக வீட்டு விலைகளால் பாதிக்கப்படுகின்றன. உலகளவில், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையின் அளவோடு இணைந்து நகர்கிறது. இந்தியா தற்போது, “அரை-வெளிப்படையான” (semi transparent) நாடுகளின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் அதன் 11 விலை-வருமான விகிதம் (PTI) இந்த வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துப்போகிறது. அரை-வெளிப்படையான சந்தைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நம்பகமான மற்றும் கடுமையான நில பயன்பாட்டு திட்டமிடல் இல்லாததும், அதன் மோசமான செயல்படுத்தலும் ஆகும். 


வீட்டுவசதியை மிகவும் மலிவு விலையில் வழங்க, இந்தியா மேம்படுத்தக்கூடிய நிலத்தை வெளிப்படையான முறையில் தெரிவிக்க வேண்டும். இது புதிய ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்களுக்கு சந்தையில் நுழைய அனுமதிப்பதன் மூலம் போட்டியை அதிகரிக்கும். அதிக போட்டி விலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் வீடுகள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இது அடுத்த கேள்வியை எழுப்புகிறது, இந்த சீர்திருத்தங்களை யார் செயல்படுத்துவார்கள்? மேற்கூறிய அனைத்தும் மூன்றாம் அடுக்கின் (Third tier) கீழ் வருவதால், தெளிவான பதில் மாநகராட்சிகள் இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும். 


இருப்பினும், உண்மையில், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஒரு நகராட்சி ஆணையரின் சராசரி பதவிக்காலம் வெறும் 10 மாதங்கள் மட்டுமே என்பதால், இவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. மேயர்கள் மற்றும் ஆணையர்களுக்கான நிலையான அமைப்பிலிருந்து தொடங்கி, நிர்வாக சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளது.


ஒருங்கிணைப்பு விளைவு பகுதியை அதிகப்படுத்துதல்


சவால் நிதி (Challenge Fund), ஒரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 8,000 நகரங்கள் மற்றும் மாநகரங்களில், நகர்ப்புற புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை எவை? மாநில தலைநகரங்களுடன் இணைந்து மில்லியன் கணக்கான நகரங்களின் ஒருங்கிணைப்பு விளைவை அதிகப்படுத்துவது ஒரு நல்ல தேர்வாகும். இந்த நகரங்கள் ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியை அதிகரின்றன மற்றும் ஒருங்கிணைப்பு விளைவை அதிகரிக்க முடியும். இந்த நகரங்களின் குழு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% ஆகும் அவை பெரும்பாலான மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களாக உள்ளன. மேலும், அவை வெவ்வேறு பகுதிகளில் பரவியுள்ளன. 


முற்றிலும் புதிய நகரங்களை உருவாக்குவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.  அதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள அதிக திறன் கொண்ட நகரங்களை மேம்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறையாகும். குருகிராம் ஒரு பெரிய பொருளாதார மையமாக மாற 20 ஆண்டுகள் 1991-2011 வரை எடுத்தது. இந்தக் காலகட்டத்தில், அதன் மக்கள் தொகை 2,00,000-லிருந்து 1-மில்லியனாக வளர்ந்தது. 


நிலம், அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியில் இருந்து திறமையான தொழிலாளர்களை அணுகுவது போன்ற சிறந்த சூழ்நிலைகள் இருந்தபோதிலும் இது நடந்தது. புதிய நகரங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, பொருளாதார ஆற்றலுடன் ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துவது நகர்ப்புற வளர்ச்சியை அதிகரிக்க விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.


நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவதோடு, இறக்குமதிகள் மீதான அடிப்படை சுங்க வரியையும் (Basic Customs Duty BCD)) ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை குறைத்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் போட்டியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரசாயனங்கள், மருந்துகள், லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைப்பதன் மூலம், சராசரி கட்டண விகிதம் 13% இருந்து 10.5% ஆகக் குறைந்துள்ளது. அதிக கட்டணங்கள் செலவுகளை உயர்த்துகின்றன. 


இதனால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், இது உள்நாட்டு நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான விலையை அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணைவது கடினம். உதாரணமாக, இந்தியாவில் ஆப்பிள் போன்களின் இறக்குமதிக்கு இதே அளவிலான வரி விதிக்கப்படுவதால், அதன் விலை 20% அதிகமாக உள்ளது. இருப்பினும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தொடர்புடைய கட்டணங்கள் 1-3% வரை இருக்கும். 


பல தயாரிப்புகள் மீது விதிக்கப்படும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியை (Agriculture Infrastructure Development Cess (AIDC)) நீக்குவதும் முக்கியமான படியாகும். இது முன்பு இருந்தது போலவே பயனுள்ள பாதுகாப்பு விகிதத்தை பராமரிக்க உதவும். இறுதியாக, 2014 முதல் 2019 ஆம் ஆண்டு தொழில் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 


இருப்பினும், முன்னேற்றத்திற்கு நிறைய வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழுவை முன்மொழிந்துள்ளது. இருப்பினும், உண்மையான  தாக்கத்தை ஏற்படுத்த, இதை ஒரு நிலையான காலக்கெடுவிற்குள்  செயல்படுத்தப்பட வேண்டும்


இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் முக்கிய பகுதிகளை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதற்கு இந்த வரவு செலவு அறிக்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆனால், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. 

ஷிஷிர் குப்தா ஒரு மூத்த ஆய்வாளராகவும், ரிஷிதா சச்தேவா சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில்  (Centre for Social and Economic Progress) ஒரு கூட்டு ஆராய்ச்சி யாளராக உள்ளார்.




Original article:

Share:

உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தியா -பூஜா ராமமூர்த்தி

 மற்ற நாடுகளின் கருத்துகளையும் கேட்க கற்றுக்கொண்டால் உலகளாவிய தெற்கின் 'குரலாக' இருப்பதற்கான இந்தியாவின் விருப்பம் நிறைவேறும். 


ஜனவரி 2025-ல், ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, அவர் இன்றைய இந்தியா தனது கருத்துக்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்கிறது என்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுவாக எழுப்புவதாக பிரதமர் கூறினார். ஆகஸ்ட் 2024-ல், 3-வது உலகளாவிய தெற்கு குரல் உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களை வழிநடத்த விரும்புவதாகக் கூறினார். இந்த சீர்திருத்தங்கள் வளரும் நாடுகள் ஒரு நியாயமான உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க உதவும் என்று ​​பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


வளரும் நாடுகளின் நலனுக்காகப் போராடுவதில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை எது பாதித்துள்ளது? மேலும், ஒரு பயனுள்ள உலகளாவிய வளர்ச்சி கூட்டாளியாக மாறுவதற்கு மாற்றத்தை நாடு எவ்வாறு பாதிக்க முடியும்?


இந்தியாவின் அணுகுமுறை அணிசேரா இயக்கத்திலிருந்து (Non-Alignment Movement (NAM)) வேறுபட்டது. இது காலனித்துவ நீக்கம் அல்லது மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. உலகளாவிய தெற்கில் தனது பங்கை விரிவுபடுத்தும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பாரம்பரிய நட்புநாடுகளுடனும் இந்தியாவின் உறவை வலுப்படுத்துகிறது. முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஜனவரியில் இந்தியாவுக்கு பயணம்செய்தார். இது வளர்ந்துவரும் உறவுகளைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2024-ல், பிரதமர் நரேந்திர மோடி போலந்துக்கு பயணம், புதிய கூட்டணிகளை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் வாதம்


சீனாவின் பதில், வளர்ந்துவரும் உலகளாவிய சக்தியை இந்தியா எதிர்கொள்ள முயற்சிப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவில் அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியைக் காட்டுகின்றன. சீனா ஏற்கனவே வலுவான இருப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலீடு செய்கிறது. சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த தொழில்மயமான நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றன. ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட்  (India, Japan, Australia, and the United States (Quad)) கூட்டாண்மை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இந்தோ-பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி கதையின் ஒரு பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது முழுமையாக எதுவும் வெளியிடப்படவில்லை. 


இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாக தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பல உலகளாவிய தெற்கு நாடுகள் தற்போதைய பொருளாதார காரணிகளால் அதிருப்தி அடைந்துள்ளன. இந்த நாடுகள் கடன் மற்றும் கடுமையான நிபந்தனைகளுடன் போராடுகின்றன. அவர்கள் மற்றொரு சீனாவையோ அல்லது ஒரு புதிய மேற்கத்திய நிறுவனத்தையோ விரும்பவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்தியா உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு பலமாக செயல்பட முடியும். இருப்பினும், இதில் வெற்றிபெற வலுவான செயல்கள் மற்றும் திட்டங்களுடன் இந்தியா ஆதரவளிக்க வேண்டும்.


இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்


முதலாவதாக, இந்தியா ஒரு புதிய வளர்ச்சி ஒத்துழைப்பு முறையை வலியுறுத்த வேண்டும். இந்த அணுகுமுறையை உலகளாவிய வடக்கில் உள்ள நாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடாது. வளரும் நாடுகளுடன் சமமான கூட்டாண்மைகளை இந்தியா ஊக்குவிக்கிறது. பாரம்பரிய உலக சக்திகளிடமிருந்து வேறுபட்டு இருக்க விரும்புகிறது. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் சில நேரங்களில் வேறுபட்ட அணுகுமுறையைக் காட்டுகின்றன. இந்தியா பெரும்பாலும் "முதலில் இந்தியா" என்ற உத்தி மூலம் தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.


உலகளாவிய தெற்குப் பகுதியில் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இந்தியா சமீபத்தில் “உலகளாவிய மேம்பாட்டு ஒப்பந்தத்தை” (Global Development Compact) அறிவித்தது. இந்தத் திட்டம் இந்தியாவின் சொந்த அனுபவங்கள் மற்றும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் தனித்துவமான நாடாகவும் உள்ளது. இந்தியா தனது அறிவைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், உலகின் பிற தென் நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா தனது நாட்டிற்குள் எதிர்கொண்டு வரும் சவால்களைத் தீர்க்க உதவும். நாடுகள் தங்களை சமமாக நடத்தும் நட்புநாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இந்தியா இதைச் செய்யத் தவறினால், அது உண்மையான நாடாகக் கருதப்படுவதற்குப் பதிலாக ஒரு மேலாதிக்க சக்தியாகக் கருதப்படலாம்.


இரண்டாவதாக, வளர்ச்சி சவால்களைத் தீர்ப்பதில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இந்தியா கவனம் செலுத்துகிறது. சர்வதேச நிகழ்வுகளில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (Lifestyle For Environment)  மூலம் நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சி மக்கள் குறைந்த நுகர்வு வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது.  இது முக்கியமானது என்றாலும், இந்தியா தனது அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும். மனித வளங்கள் மற்றும் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது எதிர்கால நிலைத்தன்மை சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க உதவும். திறன் இந்தியா (Skill India) மற்றும் பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டங்கள்,  போன்ற இந்தியாவின் முன்முயற்சிகள் உலகளாவிய தென் நாடுகளுக்கு பயனளிக்கும். இந்த நாடுகளும் தங்கள் உள்நாட்டு தொழில்களை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தியாவின் திறன் மேம்பாட்டு முயற்சிகள் முக்கியமாக இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (Indian Technical and Economic Cooperation (ITEC)) திட்டத்தில் கவனம் செலுத்துகின்றன. இந்த திட்டம் குறுகிய கால, துறை சார்ந்த பயிற்சி  நடத்துகிறது. இருப்பினும், நீண்ட கால தாக்கத்திற்கு, நாடுகள் தங்கள் சொந்த நிறுவனங்களை உருவாக்க இந்தியா உதவ வேண்டும். இது ஒரு வலுவான பணியாளர்களை உருவாக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடனான (micro, small and medium enterprises (MSMEs)) அனுபவத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் அறிவைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தலாம். டிஜிட்டல் உட்கட்டமைப்பு, காலநிலை மற்றும் எரிசக்தி தீர்வுகள் மற்றும் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஒத்துழைப்பிற்கான முக்கிய பகுதிகளாகும்.


முன்னால் உள்ள இலக்கு


இறுதியாக, இந்தியா மேலும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 2023-ல், G-20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்த போது, ஆப்பிரிக்க ஒன்றியம் G-20-ல் நுழைவதை ஆதரித்தது. இது உலகளாவிய நிறுவனங்களை அதிக பிரதிநிதித்துவப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டியது. முதலில், இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்புக்காக தற்போதுள்ள நிறுவன வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இவற்றில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற அனுபவமிக்க நாடுகளும் அடங்கும். இருப்பினும், நீண்ட காலத்திற்கு, சர்வதேச ஒத்துழைப்புக்காக இந்தியா அதன் சொந்த வலுவான உள்நாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். முத்தரப்பு கூட்டாண்மைகள் மற்றும் புதிய உலகளாவிய ஈடுபாடுகள் ஆகியவை செயல்படுத்துவதன் மூலம் கற்றல் செயல்முறையாக பார்க்கப்பட வேண்டும். இந்த ஒத்துழைப்புகளிலிருந்து இந்தியா அனுபவத்தைப் பெற வேண்டும். மேலும், இந்தியா தலைமையிலான உலகளாவிய முயற்சிகளை விரிவுபடுத்த அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும்.


இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க விரும்புகிறது. அது நிறைவேற பிற நாடுகளின் கருத்துக்களையும் கேட்க  வேண்டும். கடந்த காலத்தில், இந்தியா அணிசேரா இயக்கத்தை (Non-Aligned Movement (NAM)) வழிநடத்தியபோது, ​​வளரும் நாடுகளுக்கு ஒரு புதிய, மூன்றாவது வழி இருப்பதை உலகிற்குக் காட்டியது. அது போன்ற ஒரு வாய்ப்பை இந்தியா இப்போது தவறவிடக்கூடாது.


பூஜா ராமமூர்த்தி புதுதில்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் (Centre for Social and Economic Progress (CSEP)) ஒரு இணை உறுப்பினராக உள்ளார்.




Original article:

Share:

புதுமையான தொழில்நுட்பங்கள் பொதுமக்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வடிவமைக்கின்றன? -தீரஜ் சிங்

 இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கணிசமாக மாறி வருகிறது. நவீன பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாள்வதில் தனியார் துறை இப்போது பெரிய பங்கை வகிக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் உத்திக்கான கூட்டாண்மைகளை உள்ளடக்கிய தனியார் பாதுகாப்பின் பங்கு விரிவடைந்துள்ளது. இது பாரம்பரிய பொதுப் பாதுகாப்பு சேவைகளை நிறைவு செய்கிறது. வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொது சேவைகள் பெரும்பாலும் முடியாத நகரங்களில் இந்த மாற்றம் அதிகமாகக் காணப்படுகிறது.


சைபர் குற்றத் தடுப்பு (cybercrime prevention), சிறந்த கண்காணிப்பு (better surveillance) மற்றும் சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு (healthcare and infrastructure) போன்ற துறைகளுக்கான பாதுகாப்புத் தீர்வுகள் போன்ற துறைகளில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்க இலக்குகளை ஆதரிப்பதில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்கள் இரண்டும் வகிக்கும் முக்கிய பங்கை சைபர் பாதுகாப்பு முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு செயல்படுத்தையில், பொது-தனியார் கூட்டாண்மை முக்கியத்துவம் பெறுகிறது. பயங்கரவாதம், கிளர்ச்சி, சைபர் குற்றம் மற்றும் பொருளாதார குற்றங்கள் போன்ற வளர்ந்து வரும் உள் பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதை இந்த ஒத்துழைப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


இந்தியாவில் உள் பாதுகாப்பு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உள்துறை அமைச்சகம் (ministry of home affairs (MHA)) வழிவகுக்கிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. G7 நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த காவல்துறை-மக்கள் தொகை விகிதம், நீதிமன்ற வழக்குகளில் அதிக நிலுவைகள் மற்றும் குறைந்த தண்டனை விகிதங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சிக்கல்கள் சட்ட அமலாக்கத்தின் மீது அழுத்தத்தை  குறிப்பாக வேகமாக நகரமயமாக்கப்படும் பகுதிகளில் ஏற்படுத்துகின்றன.


உள்நாட்டு பாதுகாப்பு திட்டங்களுக்கு அரசாங்கம் நிதியை அதிகரித்திருந்தாலும், பயன்படுத்தப்படாத நிதி மற்றும் மெதுவான பொது கொள்முதல் செயல்முறைகள் போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த சவால்களை சமாளிக்க, அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து வலுவான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.


தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பொதுப் பாதுகாப்பை மாற்றி வருகின்றன. அவை சட்ட அமலாக்க மற்றும் அவசரகால பதிலளிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குகின்றன. தொழில்நுட்பமானது பதிலளிப்புக்கான நேரங்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்பதை அனுமதிக்கிறது. இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஸ்மார்ட் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் (Smart surveillance and monitoring systems) : நவீன கண்காணிப்பு அமைப்புகள் பாரம்பரிய CCTV அமைப்புகளை விட கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.  உயர்-வரையறை கேமராக்களை செயற்கை நுண்ணறிவு (AI) வழிமுறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த அமைப்புகள் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை தானாகக் கண்டறிவதை செயல்படுத்துகின்றன. இது சட்ட அமலாக்கத்தை விரைவாகச் செயல்படுத்தவும், குற்றங்கள் நிகழும் முன்பே தடுக்கவும் அனுமதிக்கிறது.


ரோபாட்டிக்ஸ் (Robotics) : ரோபோட்டிக்ஸ் பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும். இது ஒரு பயன்பாடான கழிப்பறையை சுத்தம் செய்தல், மேலும் அங்கு ரோபோக்கள் மனித கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளைக் கையாளும். மற்றொரு பயன்பாடு ஆபத்தான பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களுக்கான முகப்பு சுத்தம் செய்தல் ஆகும். வணிக ஹோட்டல்களின் பெரிய திறந்தவெளி பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளுக்காக ரோபோக்கள் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பில், பெரிய திறந்தவெளிகள் அல்லது நச்சு வாயுக்கள் உள்ள பகுதிகளில் பயன்படுத்த ரோபோக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அவை ரோந்துப் பணிக்கு நகரும் கேமரா சென்சார்களாகச் செயல்படும், நிலையான காவலர்களுக்குப் பதிலாக இருக்கும்.


சிசிடிவி கேமராக்கள் (CCTV cameras) : பொது இடங்கள், வணிகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் குற்றச் செயல்களைத் தடுப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளுடன் விசாரணைகளுக்கு மதிப்புமிக்க கருவியாகவும் செயல்படுகின்றன.


வான்வழி கண்காணிப்புக்கான ட்ரோன்கள் (Drones for aerial surveillance) : ட்ரோன்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களைக் கொண்டுள்ளன. அவை நேரடி வீடியோ ஊட்டங்களை வழங்குகின்றன. இது தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் மதிப்பீடுகளுக்கு அவற்றை அவசியமாக்குகிறது.


புவியியல் தரவு பகுப்பாய்வு (Geospatial data analysis) : புவியியல் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems (GIS)) குற்றத் தரவு, போக்குவரத்து முறைகள் மற்றும் பிற அளவீடுகளை ஒருங்கிணைக்கிறது. அவை பேரிடர் தயார்நிலைக்கு உதவுகின்றன மற்றும் தகவலறிந்ததை முடிவெடுப்பதை செயல்படுத்துகின்றன.


முக அங்கீகார அமைப்புகள் (Facial recognition systems) : இந்த அமைப்புகள் பொது நிகழ்வுகளில் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதில் உதவுகின்றன. இருப்பினும், அவை தனிப்பட்ட உரிமை தொடர்பானவற்றிலும் சில சிக்கல்களையும் எழுப்புகின்றன. மேலும், வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அவசியமாக்குகின்றன.


2. குற்றத் தடுப்புக்கான முன்கணிப்பு காவல் (Predictive policing for crime prevention : முன்கணிப்பு பகுப்பாய்வு (Predictive analytics) என்பது குற்றத் தடுப்புக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது கடந்த கால குற்றப் பதிவுகள் மற்றும் சமூக ஊடக செயல்பாடு போன்ற பெரிய தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்கிறது. குற்றங்கள் நடக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண இந்த முன்கணிப்பு மாதிரிகள் உதவுகின்றன. இது அதிகாரிகள் முன்கூட்டியே வளங்களை நிலைநிறுத்தி குற்றங்களைத் தடுக்க அனுமதிக்கிறது.


குற்ற வெப்ப வரைபடங்கள் (Crime heatmaps) : குற்றத் தரவுகளின் காட்சி பிரதிநிதித்துவங்கள் சட்ட அமலாக்கத்திற்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காண உதவுகின்றன. இது அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் வளங்களை மையப்படுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக, சமூக பாதுகாப்பு மேம்படுகிறது.


நடத்தை பகுப்பாய்வு கருவிகள் (Behavioral analysis tools) சாத்தியமான குற்றவாளிகளின் செயல்களை ஆய்வு செய்கின்றன. இது ஆரம்பகால தலையீடு மற்றும் மறுவாழ்வுக்கு உதவுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்த கருவிகள் மீண்டும் மீண்டும் குற்றங்களை (மீண்டும் குற்ற விகிதங்கள்) குறைக்கின்றன.


3. மேம்படுத்தப்பட்ட அவசரகால தகவல் தொடர்பு அமைப்புகள் : அவசரகாலங்களின் போது திறமையான தகவல் தொடர்பு மிக முக்கியமானது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொது பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் திறனை பெரிதும் மேம்படுத்தியுள்ளன.


AI- இயங்கும் அனுப்புகை அமைப்புகள் (AI-powered dispatch systems) : இந்த அமைப்புகள் தீவிரத்தின் அடிப்படையில் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. முக்கியமான வழக்குகள் விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்கின்றன.

அவசரநிலைகளைப் புகாரளிப்பதற்கான மொபைல் பயன்பாடுகள் : பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் பயனர்கள் சம்பவங்களை எளிதாகப் புகாரளிக்க உதவுகின்றன. அவை பயனர்கள் புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பிக்க அனுமதிக்கின்றன. இந்த செயலிகள் மூலம் பயனர்கள் அதிகாரிகளுக்கு விரைவாக எச்சரிக்கை செய்யலாம்.


பேரிடர் எச்சரிக்கை அமைப்புகள் (Disaster alert system) : இந்த அமைப்புகள் உடனடி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தானியங்கி எச்சரிக்கைகளை அனுப்புகின்றன. இது, சரியான நேரத்தில் வெளியேற்றங்களைச் செயல்படுத்துகின்றன மற்றும் உயிர்களைக் காப்பாற்றுகின்றன.


2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா நகரும்போது, ​​வலுவான உள் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். பாரம்பரிய மற்றும் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த முயற்சியில் பொது-தனியார் கூட்டாண்மைகளும் முக்கியமானதாக இருக்கும்.  அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், ஆதரவான கொள்கைகளை உருவாக்குவதன் மூலமும், தனியார் துறை பொதுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவ முடியும். இது இந்தியாவின் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும்.


இந்தக் கட்டுரையை SIS Ltd இன் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் சிங் எழுதியுள்ளார்.        


Original article:

Share:

நடுத்தர வர்க்கத்தினருக்காக, வரி குறைப்புகளுக்குப் பதிலாக ஒன்றிய வரவு செலவு அறிக்கை எதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்? -ஹிமான்ஷு

 பொருளாதார மந்தநிலை தீவிரமாக இருந்தது. இதைச் சரிசெய்ய, பொதுச் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. இது ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்க உதவும்.


பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் நேரத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய வரவு செலவு அறிக்கை வருகிறது. முன்பு போலல்லாமல், அரசாங்கம் இறுதியாக இந்த மந்தநிலையை ஒப்புக்கொள்கிறது. ஒரு நாள் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாக மதிப்பிட்டுள்ளது. இதில் முக்கிய பிரச்சினையானது, தேக்கமடைந்து வருவதால் ஏற்படுவது அல்லது குறைந்து வருவது வருமான மந்தநிலை ஆகும். சுயதொழில் செய்பவர்களின் வருமானத்தில் ஏற்படும் குறைந்து வரும் ஆதாரங்களையும் இந்த ஆய்வு வழங்கியது. 


கூலித் தொழிலாளர்களுக்கு, உண்மையான ஊதியங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக தேக்க நிலையில் உள்ளன. இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க பட்ஜெட் யோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது புதிய யோசனைகளை முன்வைக்கவில்லை. அதற்கு பதிலாக, வரவு செலவு அறிக்கையின் நடவடிக்கைகள் பொருளாதார யதார்த்தத்தை அல்லாமல், அரசியல் நடைமுறைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. டெல்லி மற்றும் பீகாரில் வரவிருக்கும் தேர்தல்களும், ஆளும் கட்சியின் முக்கிய வாக்காளர்களான நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்த வேண்டிய அவசியமும் பொருளாதாரத்தின் போராட்டங்களை விட, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத்தில் மிகவும் முக்கியமானதாகிவிட்டன.


பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மொத்த தேவையை அதிகரிக்க பொது செலவினங்களில் அதிகரிப்பு தேவைப்பட்டது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. இதில், பணவீக்கம் நான்கு-ஐந்து சதவீத வரம்பில் உள்ளது. 7.3 சதவீத செலவினங்களின் வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட குறைவாக உள்ளது. வட்டியை செலுத்துதல்கள், அதாவது உறுதியளிக்கப்பட்ட செலவினங்களைத் தவிர்த்து, அரசாங்க செலவினங்களில் வளர்ச்சி கடந்த ஆண்டைப் போலவே 5.9 சதவீதம் மட்டுமே ஆகும். 


மறுபுறம், அரசாங்கத்தின் மொத்த மற்றும் நிகர வரி வருவாய் பெயரளவு அடிப்படையில் 10.9% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ₹1 லட்சம் கோடி வரி நிவாரணம் உள்ளது. செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் நிதிநிலை அறிக்கையாகப் இருப்பதற்குப் பதிலாக, இது ஒரு எச்சரிக்கையான மற்றும் பழமைவாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது. அனைவருக்கும் வருமானத்தை உயர்த்த அரசாங்கம் அதிகமாக செலவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இது வருகிறது.


அடுத்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை 4.4 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு அனுமதித்திருந்தாலும், நிதிச் செலவுக்காக தேவைப்படும் திட்டங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கான உண்மையான செலவினக் குறைப்புகளால் இது அடையப்பட்டுள்ளது. பட்ஜெட் மதிப்பீடுகள் பல முக்கியமான அமைச்சகங்களில், திருத்தப்பட்ட செலவினம் கடந்த ஆண்டு பட்ஜெட் செய்யப்பட்டதை விடக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. பட்ஜெட் அறிவிப்புகளின் போது அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டாலும், உண்மையான செலவினம் குறைவாக இருப்பதால் இது சில காலமாக ஒரு பொதுவான போக்காக இருந்து வருகிறது.


கிராமப்புற மேம்பாட்டுக்கான செலவு கவலை அளிக்கிறது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகளை விட ரூ.3,654 கோடி ரூபாய்  குறைவு. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தைப் பொறுத்தவரை, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.4,224 கோடி ரூபாய் குறைவு ஆகும். கிராமப்புறங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக துயரத்தை எதிர்கொண்டுள்ளன. 

மேலும், வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாகும். முக்கிய திட்டங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு இந்த குறைவான செலவு சிக்கலை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE SCHEME(MGNREGA)) நிலைமையும் இதேபோன்றது. குறைந்த ஊதியம் மற்றும் உற்பத்தி வேலைகள் இல்லாததால் போராடும் பலருக்கு MGNREGA அவசியமாக உள்ளது. பணவீக்கம் மற்றும் உயரும் ஊதியங்கள் இருந்தபோதிலும், MGNREGA-க்கான நிதி செலவினம் கடந்த ஆண்டைப் போலவே ரூ.86,000 கோடியாகவே உள்ளது. இந்தத் தொகை உண்மையில் 2023-24 ஆம் ஆண்டில் MGNREGA-க்கான செலவினத்தை விடக் குறைவு.  இது ரூ.89,368 கோடி ரூபாயாக இருந்தது.


அதிக நேரம் பேசப்பட்ட மற்றொரு நெருக்கடி நிறைந்த துறை வேளாண் துறை ஆகும். வேளாண்மையில் கூட, வருமானம் தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்து வருகிறது என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. வேளாண்மையைப் பொறுத்தவரை, பெயரளவு செலவுக்கான உண்மையில் கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட குறைவாக உள்ளது. வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட செலவு ரூ.1,27,290 கோடியாகும். இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டான ரூ.1,31,195 கோடிக்கு எதிரானதாகும்.


தேக்கமடைந்த அல்லது குறைந்து வரும் வருமானம் கொண்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு உதவ, நடுத்தர வர்க்கத்தின் மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்குகளையும் வழங்குகிறது. தேவையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய உத்தியாக இது தெரிகிறது. இது நல்வாழ்வுக்கான நடுத்தர வர்க்கத்தினருக்கு செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், பொருளாதாரத்தில் பலவீனமடைந்து வரும் நுகர்வுக்கான தேவையை மீண்டும் உயிர்ப்பிப்பதில் உண்மையான தாக்கம் நிச்சயமற்றதாக உள்ளது.


அரசாங்கத்தின் முடிவு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், ஊடகங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள் என்று கவனம் செலுத்தின. இருப்பினும், கிராமப்புறங்கள், வேளாண்மை மற்றும் முறைசாரா வணிகங்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்மையில் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். நிதிச் செலவினங்களை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, ​​இது ஒப்பீட்டளவில் பணக்காரர்களுக்கு பணப் பரிமாற்றத்தைத் தவிர வேறில்லை. இது அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பெரும்பான்மையினருக்கு பயனளிக்கும். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர்கள் மீது அரசாங்கம் தனது ஆதரவை வைப்பது இது முதல் முறை அல்ல. சில வழிகளில், இது முதல் மந்தநிலையின் போது பெருநிறுவனத் துறைக்கு அரசாங்கம் வழங்கிய உதவியைப் போன்றது.  


அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வரி மானியங்களை வழங்கியது.  இருப்பினும், இந்தப் பணம் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக அவர்களின் இருப்புநிலைக் குறிப்பைச் (balance sheets) சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, அரசாங்கம், குறிப்பாக தலைமைப் பொருளாதார ஆலோசகர், பெருநிறுவனத் துறையின் மீது ஏமாற்றமடைந்துள்ளார். முதலீட்டை அதிகரிப்பதற்கு அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் மானியங்களைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்கவும் ஊதியங்களைக் குறைக்கவும் செய்தனர்.


கடந்த நான்கு ஆண்டுகளில், பல நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு வகையான கடன்களை, பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் இல்லாமல், பெற்றுள்ளனர். சமீபத்திய வரிச் சலுகையுடன், அவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக தங்கள் கடன்களையும் அடமானங்களையும் செலுத்தத் தேர்வு செய்யலாம். நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரத்தை ஆதரிப்பார்களா அல்லது சில நிறுவனத் துறைகளைப் போல ஏமாற்றமடைவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நிதிப் போராட்டங்களை எதிர்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு இந்த வரவு செலவு அறிக்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் எங்கே உள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.


எழுத்தாளர் ஒரு இணைப் பேராசிரியர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் பணிபுரிகிறார்கள்.




Original article:

Share:

தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையம் (National Commission for Safai Karamcharis) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


1. இந்த ஆணையம் 1994-ஆம் ஆண்டு தேசிய சஃபாய் கரம்சாரிகள் ஆணையச் சட்டம் (National Commission for Safai Karamcharis Act), 1993-ன் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டில் காலாவதியாகி, இந்த ஆணையத்தை சட்டப்பூர்வமற்றதாக மாற்றியது. இருந்தபோதிலும், கையால் துப்புரவு செய்பவர்களைப் பணியமர்த்தப்படுவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 இயற்றப்பட்ட பிறகு அதன் நோக்கம் விரிவடைந்தது.


2. அதன் முக்கிய பணிகளில் ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட செயல் திட்டங்களை பரிந்துரைப்பதும் அடங்கும். இந்த திட்டங்கள் துப்புரவு பணியாளர்களுக்கான நிலை, வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை  பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வுக்கான திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை ஆய்வு செய்து மதிப்பீடு செய்வதிலும் இது கவனம் செலுத்துகிறது.


3. கூடுதலாக, துப்புரவு பணியாளர்களுக்கான திட்டம் (programs) மற்றும் திட்டங்கள் (schemes) செயல்படுத்தப்படாததை விசாரிப்பதும் இதன் பணியாகும். இது துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்துவதையும் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. கடந்த 15 ஆண்டுகளில், டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் போது 94 பேர் இறந்துள்ளனர். இதற்கான பதிவுகள் கிடைக்கக்கூடிய 75 வழக்குகளில், ஒன்று மட்டுமே தண்டனைக்கு வழிவகுத்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.


2. கையால் துப்புரவு செய்யும் பணி (Manual scavenging) என்பது சாக்கடைகள் அல்லது செப்டிக் தொட்டிகளில் இருந்து மனித கழிவுகளை கையால் அகற்றும் நடைமுறையாகும். இந்தியா இந்த நடைமுறையை கையால் துப்புரவு செய்பவர்களாக பணியமர்த்தல் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (Manual Scavengers and their Rehabilitation Act, 2013 (PEMSR)) மூலம் தடை செய்தது. இந்தச் சட்டம், மனித மலத்தை கைமுறையாக சுத்தம் செய்ய, எடுத்துச் செல்ல, அப்புறப்படுத்த அல்லது கையாள எந்தவொரு நபரையும் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.


3. 2013-ஆம் ஆண்டில், கையால் துப்புரவு செய்பவர்களின் வரையறை, செப்டிக் தொட்டிகள், பள்ளங்கள் அல்லது இரயில் பாதைகளை சுத்தம் செய்யப் பணியமர்த்தப்பட்டவர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இந்த சட்டம் கையால் துப்புரவு செய்வதை "மனிதாபிமானமற்ற நடைமுறை" (dehumanizing practice) என்று அங்கீகரிக்கிறது. மேலும், "கையால் துப்புரவு செய்பவர்களால் அனுபவிக்கப்பட்ட வரலாற்று அநீதி மற்றும் அவமானத்தை" சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது.


4. இந்தச் சட்டத்தின் மோசமான அமலாக்கம் மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை சுரண்டுவதால் இந்தியாவில் இந்த நடைமுறை இன்னும் உள்ளது. மும்பையில், செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வசூலிக்கிறது. இருப்பினும், திறமையற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மிகவும் குறைவான அளவில் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் அவர்களை சட்டவிரோதமாக ரூ.300-500 தினசரி ஊதியத்தில் பணியமர்த்துகிறார்கள்.

 


Original article:

Share:

அதிக வருவாய் ஈட்டும் ஒரு பெரிய இரயில்வே மண்டலத்தைப் பிரிக்க மத்திய அமைச்சரவை ஏன் ஒப்புதல் அளித்தது? -தீரஜ் மிஸ்ரா

 புதிய தென் கடற்கரை இரயில்வே மண்டலம் (new South Coast Railway Zone) இந்திய ரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இந்த நடவடிக்கை பல காரணங்களுக்காக முக்கியமானது.


ஜனவரி தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரை இரயில்வே தலைமையகத்திற்கு (South Coast Railway headquarters) அடிக்கல் நாட்டினார்.


2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் தெற்கு கடற்கரை இரயில்வே (South Coast Railway (SCoR)) மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்தது. தெற்கு கடற்கரை இரயில்வே (SCoR) இந்திய இரயில்வேயின் 18-வது மண்டலமாக இருக்கும். இதன் அதிகார வரம்பு கிழக்கு கடற்கரை இரயில்வே மற்றும் தெற்கு மத்திய இரயில்வே மண்டலங்களின் சில பகுதிகளைக் கொண்டுள்ளது.


இந்திய இரயில்வேயின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பகுதிகளில் ஒன்றான வால்டேர் இரயில்வே பிரிவை (முன்னர் கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருந்தது) அமைச்சரவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. அதன் காலனித்துவ காலப் பெயரை மேற்கோள் காட்டி, அரசாங்கம் முதல் பகுதியை விசாகப்பட்டினம் இரயில்வே பிரிவு என்று மறுபெயரிட்டு புதிய மண்டலத்தின் கீழ் சேர்த்தது.


இரண்டாவது பகுதி, ஒடிசாவின் ராயகடாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு புதிய பிரிவாக மாறும்.  இது கிழக்கு கடற்கரை இரயில்வேயின் கீழ் இருக்கும்.


ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் அட்டவணை 13 இன் 8வது பிரிவின் படி, இந்திய இரயில்வே ஒரு புதிய ரயில்வே மண்டலத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது.


பிப்ரவரி 27, 2019 அன்று, மத்திய அரசு ஒரு புதிய இரயில்வே பிரிவை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்தப் பிரிவு ஆந்திரப் பிரதேசத்தில் செயல்பாடுகளுக்கான ஒரு இரயில்வே உத்திக்கான மையமாகச் செயல்படும் என்ற நோக்கம் கொண்டது. இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 28, 2019 ஆம் ஆண்டு  முதல் அமைச்சரவை முடிவில் சில மாற்றங்களுடன் இந்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.


ஒரு மூத்த ரயில்வே அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “இது பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்கும்.  இதனுடன், விசாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணபட்டணம் போன்ற முக்கிய துறைமுகங்களுக்கான தளவாடங்களை மேம்படுத்தும்.  இந்த மண்டலம் திருப்பதி மற்றும் ஆந்திராவின் பிற கலாச்சார அடையாளங்களுக்கு சுற்றுலாவை அதிகரிக்கும்.”


ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு தனி இரயில்வே மண்டலம் வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இருந்தபோதிலும், மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே அதிகார ஒற்றுமை ஏற்பட்ட பின்னரே அது நிறைவேறியது. 2024-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஆந்திராவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP), மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு பகுதியாகும்.


தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் என்ன பிரிவுகள் அடங்கும்?


இது தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடன் ஆந்திராவின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கும். அதன் முக்கிய பிரிவுகளில் விஜயவாடா பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து), குண்டூர் பிரிவு (தெற்கு மத்திய இரயில்வேயிலிருந்து) மற்றும் வால்டேர் பிரிவின் ஒரு பகுதி, அதாவது விசாகப்பட்டினம் பிரிவு ஆகியவை அடங்கும்.


இது முன்னாள் வால்டேர் பிரிவின் சில பகுதிகளை உள்ளடக்கும், இதில் பலாசா-விசாகப்பட்டினம்-துவாடா, குனேரு-விஜியநகரம், நௌபாடா சந்திப்பு-பரலகேமுண்டி, பொப்பிலி சந்திப்பு-சாலூர், சிம்ஹாசலம் வடக்கு-துவாடா பைபாஸ், வடலபுடி-துவாடா, மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை-ஜக்காயபாலம் ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவுகள் அடங்கும், மொத்தம் சுமார் 410 கி.மீ. ஆகும்.


வால்டேர் பிரிவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு புதிய பிரிவு உருவாக்கப்படும். இதில் கோட்டவலசா–பச்சேலி, குனேரு–தெருவலி சந்திப்பு, சிங்கப்பூர் சாலை–கோராபுட் சந்திப்பு, மற்றும் பராலகேமுண்டி–குன்பூர் இடையேயான பிரிவுகளும் அடங்கும்.  இந்தப் பிரிவுகளின் மொத்த நீளம் சுமார் 680 கி.மீ. ஆகும். புதிய பிரிவின் தலைமையகம் ராயகடாவில் இருக்கும்.


வால்டேர் பிரிவு (Waltair division) ஏன் முக்கியமானது?


வால்டேர் பிரிவு இரயில்வேக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது முதன்மையாக அதன் சரக்கு போக்குவரத்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் சுரங்க மற்றும் எஃகு தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி, கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway (ECoR)), 2023-24 நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் இந்திய இரயில்வேயின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. ஏப்ரல் 1, 2023 ஆண்டு  முதல் மார்ச் 25, 2024 ஆண்டு வரை, ECoR 250 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, 2022-23 நிதியாண்டில் நிறுவப்பட்ட சாதனையை முறியடித்தது.


இதில், தெற்கு கடற்கரை இரயில்வேயின் (ECoR) குர்தா சாலை பிரிவு 156.17 மில்லியன் டன்களையும், அதைத் தொடர்ந்து வால்டேர் பிரிவு 74.66 மில்லியன் டன்களையும், சம்பல்பூர் பிரிவு 19.20 மில்லியன் டன்களையும் பங்களித்தது. இது, தொடர்ந்து ஐந்தாவது முறையாக 200 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதல் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் மண்டலமாகவும் தெற்கு கடற்கரை இரயில்வே (ECoR) ஆனது.




Original article:

Share:

இந்தியாவின் பசுமை எரிசக்தி வழித்தடம் (GEC) முன்முயற்சி என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


1. நிறுவனம் தளத்தில் உள்ள பணியாளர்களுக்கு (site personnel) 24 மணி நேரமும் பாதுகாப்பைக் கோருகிறது. சுமார் 1,200 தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, பிற மாநிலங்களிலிருந்து திறமையான தொழிலாளர்களை லடாக்கிற்கு கொண்டு வர வேண்டிய அவசியமும் உள்ளது. கூடுதலாக, சீன எல்லைக்கு அருகிலுள்ள இடத்திற்கு அதிக பரிமாண கனரக உபகரணங்களை கொண்டு செல்ல ஒரு பெரிய சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு தேவைப்படுகிறது.


2. பனிச்சரிவு ஏற்படக்கூடிய லடாக் பகுதியிலிருந்து ஹரியானா வரை மின் இணைப்பை அமைப்பது நடைமுறைக்கு ஏற்றதா என்பது குறித்து ஒரு பெரிய கேள்வி உள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இந்த திட்டத்திற்கு கூடுதல் செலவுகள் தேவைப்படும். 2023 ஆம் ஆண்டில், பசுமை எரிசக்தி வழித்தடம் (Green Energy Corridor (GEC)) திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்காக சுமார் ₹8,300 கோடியை அங்கீகரித்தது. இருப்பினும், இந்த திட்டம் நிதி ரீதியாக சாத்தியமா என்பது குறித்து அதிகாரிகள் ஆரம்பத்தில் கவலைகளை எழுப்பியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆவணங்கள் காட்டுகின்றன.


3. இதற்கிடையில், தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்படவுள்ள 13 ஜிகாவாட் (gigawatt (GW)) சூரிய மற்றும் காற்றாலை போன்ற கலப்பின பூங்காவிற்கான டெண்டர் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடோடி கால்நடை மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு நிலத்தை நம்பியிருப்பதால், பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.


4. இராஜதந்திர பரிசீலனைகள் (Strategic considerations) : மின் பரிமாற்றத் திட்டத்தைக் கையாளும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation of India Ltd), அதன் விரிவான திட்ட அறிக்கையில் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் பணி இடையூறுகளுக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டியது.


5. தொழில்நுட்ப, தளவாட சவால்கள் : லடாக்கின் அதிக சூரிய கதிர்வீச்சு மற்றும் குறைந்த வெப்பநிலை திறமையான சோலார் ஒளிமின்னழுத்த (photovoltaic (PV)) உற்பத்திக்கு ஏற்றது. ஆனால், அதன் புவியியல் தனித்துவமான சவால்களையும் முன்வைக்கிறது. இது -45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து, கடுமையான பனிப்பொழிவுடன், டிரான்ஸ்மிஷன் உபகரணங்கள் (transmission equipment) தீவிர வானிலையைத் தாங்க சிறப்பு எஃகு பயன்படுத்தும். இது சிறப்பு அடித்தளங்கள் மற்றும் பனிச்சரிவுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் வலுப்படுத்தப்படும்.


6. நிதி நம்பகத்தன்மை (Financial viability) : முழு திட்டத்தின் வெற்றியும் பாங் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் திட்டமிடப்பட்ட 12 GWh பேட்டரி சேமிப்பைப் பொறுத்தது. இந்த சேமிப்பு பரிமாற்ற அமைப்பின் செயல்திறனை 35% இலிருந்து 76% ஆக அதிகரிக்கும். தற்போது, ​​இந்தியாவில் 1 GWh க்கும் குறைவான பேட்டரி சேமிப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகளுக்கான விநியோகச் சங்கிலியின் பெரும்பகுதி சீனாவால் கட்டுப்படுத்தப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. ஆகஸ்ட் 2020ஆ-ம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) வழிமுறைகளைப் பெற்ற பிறகு, மின் பரிமாற்றத் திட்டம் திட்டமிடப்பட்டது. லடாக்கில் 7.5 GW சூரிய சக்தி பூங்காவிற்கான விரிவான திட்டத்தை உருவாக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆவணங்களின்படி, இந்திய சூரிய ஆற்றல் கழகத்துடன் (Solar Energy Corporation of India (SECI)) கலந்தாலோசித்து இது செய்யப்பட இருந்தது.


2022-ஆம் ஆண்டுக்குள், இந்தத் திட்டம் 9 GW சூரிய சக்தி, 4 GW காற்றாலை மின்சாரம் மற்றும் 12 GWh பேட்டரி சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. இந்த கலப்பின பூங்கா ஹரியானாவின் கைதாலில் உள்ள தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும். இது தற்போதுள்ள லடாக் மின் கட்டமைப்பு மற்றும் லே-கார்கில்-அலுஸ்டெங் மின் இணைப்புடன் இணைக்கப்படும். இது ஜம்மு-காஷ்மீருக்கு நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்யும்.




Original article:

Share: