தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் குறித்து . . . -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மற்றும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக "பாஜக செய்தித் தொடர்பாளர் போலப் பேசியதாக" குமார் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி, அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சிகளிடமிருந்து அதிகரித்து வரும் கேள்விகளை எதிர்கொண்ட குமார், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (Lok Sabha Leader of Opposition) ராகுல் காந்தியிடம் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை (allegations of vote theft) பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் (apologise to the nation) என்று கேட்டுக் கொண்டார்.


அரசியலமைப்பின் பிரிவு 324(5)-ல் கூறப்பட்டுள்ளபடி, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியைப் போலவே அதே வழியில் மற்றும் அதே அடிப்படையில் பதவியில் இருந்து நீக்கப்படலாம். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் (Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) பிரிவு 11, இந்த செயல்முறையை விளக்குகிறது.


பிரிவு 324(5) உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கமுடியாது என்றும், ஆனால் அதே செயல்முறையின் அடிப்படையில் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்றும் கூறுகிறது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பணி நிபந்தனைகள் அவர் நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கு பாதகமாக மாற்றப்படக்கூடாது" என்று கூறுகிறது.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துரைக்கும் வரை வேறு எந்த தேர்தல் ஆணையரையோ அல்லது பிராந்திய ஆணையரையோ பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் இது குறிப்பிடுகிறது.


தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை (EC) பதவி நீக்குவதற்கான காரணங்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் பிரிவு 11-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, CEC மற்றும் ECகளின் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலத்தை குறிப்பிடுகிறது.


நீதிபதிகள் விசாரணைச் சட்டம், 1968, பிரிவு 3, "ஒரு குழுவால் ஒரு நீதிபதியின் தவறான நடத்தை அல்லது இயலாமை குறித்து விசாரணை செய்தல்" என்பதைக் கையாள்கிறது. ஒரு நீதிபதியை நீக்குவதற்காக குடியரசுத் தலைவரிடம் ஒரு உரையை முன்வைக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று அது கூறுகிறது. (அ) மக்களவையில் முன்மொழியப்பட்ட அறிவிப்பில் (மசோதா), குறைந்தது நூறு உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். (ஆ) மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட அறிவிப்பில் குறைந்தது ஐம்பது உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.


இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அல்லது தலைவர் இரண்டு வழிகளில் செயல்படலாம் என்று சட்டம் மேலும் கூறுகிறது. அவர் முதலில் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு நபரையும் கலந்தாலோசிக்கலாம். அவருக்குக் கிடைக்கும் எந்தவொரு ஆவணங்களையும் அவர் ஆராயலாம். அவ்வாறு செய்த பிறகு, அவர் தீர்மானத்தை ஒப்புக்கொள்ளலாம் அல்லது அதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.


தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சபாநாயகர் அல்லது அவைத் தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானத்தை நிலுவையில் வைத்து, பின்னர் இந்த தீர்மானத்தை ஆராய ஒரு குழுவை அமைப்பார்கள். இந்தக் குழு விரைவில் அமைக்கப்பட்டு இதில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். நீதிபதியை நீக்கக் கோருவதற்கான காரணங்களை ஆராய்வதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.


இந்த குழு உறுப்பினர்களில் ஒருவர் “உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்”. மற்றொரு உறுப்பினர் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். மூன்றாவது உறுப்பினர் சபாநாயகர் அல்லது அவை தலைவர் ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநராகக் கருதும் நபராக இருக்க வேண்டும்.


இந்தக் குழு “விசாரணை நடத்த முன்மொழியப்பட்ட நீதிபதிக்கு எதிராக திட்டவட்டமான குற்றச்சாட்டுகளை உருவாக்கும்” மற்றும் மேலும் அத்தகைய குற்றச்சாட்டுகள் “அத்தகைய ஒவ்வொரு குற்றச்சாட்டும் அடிப்படையாகக் கொண்ட காரணங்களின் அறிக்கையுடன் சேர்ந்து நீதிபதிக்குத் தெரிவிக்கப்படும். மேலும் இந்த குழுவால், இது தொடர்பாக குறிப்பிடப்படக்கூடிய நேரத்திற்குள் எழுத்துப்பூர்வ வாத அறிக்கையை முன்வைக்க அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படும்.”


ஒரு பதவி நீக்கத் தீர்மானம் வெற்றிபெற, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேர் அதை ஆதரிக்க வேண்டும். கூடுதலாக, இதற்கு ஆதரவான வாக்குகள் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் 50%-க்கும் அதிகமாக இருக்கவேண்டும். நாடாளுமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், நீதிபதியை அல்லது இந்த வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்கிறார்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்திய அரசியலமைப்பின் பகுதி XV தேர்தல்களைப் பற்றி பேசுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்களை வழங்கவும், மற்றும் அதன் சாத்தியமான தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியதை குறிப்பிடவும், பிரிவுகள் 324 முதல் 329 வரை குறிப்பிடுகிறது.


பிரிவு 324 : ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான அனைத்து தேர்தல்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது மற்றும் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது.

பிரிவு 325 : மதம், இனம், சாதி, பாலினம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் எந்தவொரு நபரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்க முடியாது என்று கூறுகிறது.


பிரிவு 326 : மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் இருக்கும் என்று கூறுகிறது.


பிரிவு 327 : இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவ்வப்போது அத்தகைய சட்டங்களை இயற்றலாம்.


பிரிவு 328 : ஒரு மாநிலத்தின் சட்டமன்றமும் தேர்தல்கள் குறித்து சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சட்டங்கள் மாநில சட்டமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள முடியும். மாநிலமும் அவ்வப்போது அத்தகைய சட்டங்களை இயற்றலாம்.


பிரிவு 329 : தேர்தல்கள் தொடர்பான விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று இந்தப் பிரிவு கூறுகிறது.


Original article:

Share:

இந்தியாவின் ஊரகப் பகுதிகள் ஏன் மாதவிடாய் சுகாதார முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கின்றன? -ரிஷிகா பிரியதர்சி, ஆதித்யா அன்ஷ்

 நகர்ப்புற இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் அதே வேளையில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் சுகாதாரமான பொருட்களை பெறுவதில் தொடர்ந்து சிரமப்படுகின்றனர். உடல்நலக் கோளாறுகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துதல் மற்றும் தொழில்துறையில் பங்கேற்பு இல்லாமைக்கு வழிவகுக்கிறது. இந்த இடைவெளியை விரைவாக சரிசெய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்


நகர்ப்புற இந்தியாவில் உள்ள பெண்களைப் போல் இல்லாமல், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பெண்கள் இன்னும் தொற்றுகள் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை மோசமான மாதவிடாய் பராமரிப்பு காரணமாக எதிர்கொள்கின்றனர். இந்த சுகாதார சவால்கள் நகர்ப்புற மற்றும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளுக்கு இடையிலான சுகாதார அணுகலில் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.


பீகாரில், 40 வயதான லலிதா என்ற பெண், பாதுகாப்பான மாற்று வழிகள் என்னவென்று தெரியாமல், கிழிந்த துணியை தனது மாதவிடாய் காலத்தை நிர்வகிக்க பல ஆண்டுகளாக செலவிட்டார். அவரது கதை அரிதானதோ புதியதோ அல்ல: இந்தியாவின் ஊரகப் பகுதியில்  மில்லியன் கணக்கான பெண்கள் இன்னும் சுகாதாரமான பொருட்கள் கிடைக்காமல் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகள் முதல் மோசமான மாதவிடாய் பராமரிப்புடன் தொடர்புடைய சிகிச்சையளிக்கப்படாத மகளிர் மருத்துவ பிரச்சினைகள் வரை, நகர்ப்புற மற்றும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளுக்கு  இடையே வெளிப்படையான சுகாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் - 5வது (National Family Health Survey (NFHS)) தரவுகளை பகுப்பாய்வு செய்த ஒரு ஆய்வில், இந்தியாவில் இளம் பருவப் பெண்களில் 42% மட்டுமே மாதவிடாய் காலத்தில் சுகாதார முறைகளைப் பயன்படுத்துவதாகவும், அவர்களின் பிரத்தியேகப் பயன்பாடு உத்தரபிரதேசத்தில் 23% முதல் தமிழ்நாட்டில் 85% வரை வேறுபடுவதாக கண்டறிந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பீகாரில், பெரும்பாலான மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஆனால், ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் 56% பேர் மட்டுமே தங்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புற பகுதிகளில் சுத்தமான முறைகளை 75%-ஆக உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.


பல கிராமப்புற குடும்பங்கள் கடுமையான பணப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால், மாதவிடாய் காலத்தில் சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிளுக்கு இடையிலான வேறுபாடு தொடர்கிறது என்று பஞ்சாபின் பிளாக்ஷா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கரண் பப்பர் கூறினார்.


விளிம்புநிலை சமூகங்களிடையே இந்தப் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது: உதாரணமாக, ஒடிசாவின் கியோஞ்சர் மற்றும் அங்குல் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் ஜுவாங்ஸ் இனக்குழுவில், 85% பெண்கள் மாதவிடாயின்போது இன்னும் பழைய துணியையே நம்பியுள்ளனர். 2023-ஆம் மேற்கொள்ளபட்ட ஆய்வின்படி, சந்தைகளில் இருந்து நீண்டதூரம், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் அதிக செலவுகள் ஆகியவை பாதுகாப்பான மாற்றுகளுக்கு ஒரு தடையை உருவாக்குகின்றன. 71% பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், மூன்றில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது. பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் மத அல்லது சமூக நிகழ்வுகளில் சேருவதைத் தடுக்கும் சமூகத் தடைகள் நிலைமையை மோசமாக்குகின்றன.


புறக்கணிப்பின் விலை


மோசமான மாதவிடாய் சுகாதாரம் என்பது தனியாக இல்லை. இது பள்ளி இடைநிற்றல் விகிதங்கள், பணியிடத்தில் பங்கேற்பு குறைதல் மற்றும் நாள்பட்ட இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளுக்கு முக்கிய காரணியாக உள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான தஸ்ராவின் ஆய்வின்படி, இந்தியாவில் 23% பெண்கள் மாதவிடாய் காலம் தொடங்கியவுடன் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார்கள். போதுமான கழிப்பறைகள் அல்லது சுகாதாரப் பொருட்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும். இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 4,00,000 கழிப்பறைகளைக் கட்டும் இலக்கை அரசாங்கம் அடைந்தாலும், இது ஒரு முழுமையான தீர்வை வழங்கவில்லை என்றும், முக்கிய நபர்கள் மற்றும் குழுக்கள் கழிப்பறைகளை தொடர்ந்து சுத்தம் செய்து, சரி செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசு சாரா நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


பொருளாதார காரணிகள் இந்த சவாலை மேலும் ஆழப்படுத்துகின்றன. "வரையறுக்கப்பட்ட, பெரும்பாலும் நிலையற்ற வருமானம் உள்ள ஒரு குடும்பத்திற்கு, தேர்வு இரண்டு வகையான மாதவிடாய் பட்டைகளுக்கு இடையில் இல்லை; அது ஒரு மாதவிடாய் பட்டை பொதியை வாங்குவதற்கும், காய்கறிகள் மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இடையிலான தேர்வாகும். இது மாதவிடாய் பட்டைகளை அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருளாக ஆக்குகிறது," என்று பப்பர் கூறினார். பெண்களின் நிதி சுயாட்சியின்மை -- அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் பணம் கேட்க வேண்டியிருக்கிறது -- வாங்குவதற்கு மேலும் சிரமங்களைச் சேர்க்கிறது.


கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவிற்கு இடையேயான வேறுபாடுகள் NFHS-5 (2019-21) அறிக்கையில் தெளிவாகத் தெரிகின்றன: இது, கிராமப்புற இந்தியாவில் இளம்பெண்களிடையே மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பொருட்கள் (சானிட்டரி நாப்கின்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், டாம்பான்கள் மற்றும் மென்ஸ்ட்ரூவல் கப்கள்) பயன்பாடு வெறும் 43% மட்டுமே இருப்பதாகவும், நகர்ப்புறங்களில் இது 68% ஆக இருப்பதாகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளியை வெளிப்படுத்துகிறது. சுகாதாரமான மாதவிடாய் பொருட்களைப் பயன்படுத்துவதில் கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி, மத்தியப் பிரதேசம் (36 சதவீத புள்ளிகள் இடைவெளி), ஒடிசா (26 சதவீத புள்ளிகள்), உத்தரப் பிரதேசம் (23 சதவீத புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் (21 சதவீத புள்ளிகள்) உள்ளிட்ட பல மாநிலங்களில் 20 சதவீத புள்ளிகளுக்கு மேல் உள்ளது, இது பிராந்திய வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.


மருத்துவக் கண்ணோட்டத்தில், கொச்சியிலுள்ள சன்ரைஸ் மருத்துவமனையில் கருத்தரிப்பு மருத்துவத்தில் நிபுணரும், மகப்பேறு மருத்துவருமான அபி கோஷி கூறுகையில், கேரளா போன்ற மாநிலங்களில், மாதவிடாய் சுகாதாரம் மோசமாக இருப்பது அரிதாக இருந்தாலும், உடல்நல அபாயங்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிடுகிறார். "மகப்பேறு மருத்துவர்கள் அவ்வப்போது மட்டுமே பிறப்புறுப்பு ஒவ்வாமை [சானிட்டரி பேட்களால் ஏற்படக்கூடியவை] மற்றும் யோனி தொற்றுகள், பொதுவாக பாக்டீரியா அல்லது பூஞ்சை இயல்புடையவை, போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இந்த இரண்டு வகையான தொற்றுகளை வேறுபடுத்துவது, சிகிச்சையின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கியமானது." மேலும், நீண்ட நேரம் சுத்தமில்லாத அல்லது ஈரமான துணியைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார். "இது ஒரு சூடான, ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது, இது பூஞ்சைகள், குறிப்பாக ஈஸ்ட், அதிகமாக வளர சிறந்த நிலையை உருவாக்கி, பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கிறது."


செலவு, கிடைக்கும் தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்ற மூன்று தொடர்புடைய சிக்கல்களை பப்பர் எடுத்துக்காட்டுகிறார். இந்தப் பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மேலும், ஒன்றையொன்று மோசமாக்குகின்றன. குறைந்த விழிப்புணர்வு உணரப்பட்ட மதிப்பைக் குறைக்கிறது. இது தேவையைக் குறைக்கிறது. விநியோகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் அணுகலை இன்னும் கடினமாக்குகிறது.


மனித விலை மகத்தானது. தனி, செயல்பாட்டு கழிப்பறை இல்லாத, ஓடும் நீர்வசதி மற்றும் முறையான அப்புறப்படுத்தல் அமைப்பு இல்லாத பள்ளியில் மாதவிடாய் ஏற்பட்டால் ஒரு பெண் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். சிறிய பிரச்சனைகளுக்குக் கூட நம்பிக்கை இழக்கிறார். அந்தப் பெண்ணிற்கு எளிய தீர்வு வீட்டிலேயே இருப்பதுதான் என்று பப்பர் மேலும் கூறுகிறார்.


பெண்கள் ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறும்போது, அவர்கள் படிப்பில் 25% பின்தங்குகிறார்கள். மேலும், பலர் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள். இது அவர்களின் எதிர்கால வருமானத்தைப் பாதிக்கிறது மற்றும் அவர்களை வறுமையில் வைத்திருக்கிறது. தேசத்தைப் பொறுத்தவரை, இது நமது பெண் தொழிலாளர் பங்களிப்பை நசுக்குகிறது. மேலும், மனித மூலதனத்தின் ஒரு பெரிய தொகுப்பைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது என்று பப்பர் கூறுகிறார்.



சுழற்சியை உடைத்தல்


மாதவிடாய் சுகாதாரம் (menstrual health) ஒரு பொதுப் பிரச்சினையாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மனித உரிமைகள் பிரச்சினையாகவும், மாதவிடாய் வறுமை பொருளாதார இடைவெளிகளை விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கிறது. 2011-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியது. இதன் மூலம் மாதவிடாய் பட்டைகளை விநியோகிக்கவும், கல்வி விழிப்புணர்வுத் திட்டங்களை ஏற்பாடு செய்யவும், பட்டைகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிந்தது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயால் மாதவிடாய்ப் பொருட்களின் விநியோகம் கணிசமாகப் பாதிக்கப்பட்டது.


அசாம் மற்றும் திரிபுராவில் இந்தியாவின் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2017 முதல் 2021 வரை தொடர்ந்து மாதவிடாய் பட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகள் அதிகரித்துள்ளன. 15–19 வயதுடைய பெண்கள் அதிகமாக இப்போது மாதவிடாய் பட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பட்டை பயன்பாடு 10.6% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பயன்பாடு 13.8% அதிகரித்துள்ளது.


இந்தியாவில் மாதவிடாய் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் பற்றிய தவறான எண்ணங்கள் பள்ளி மாணவிகளை வகுப்பறைகளுக்கு வரவிடாமல் எவ்வாறு தடுக்கிறது?


மாதவிடாய் குறித்த பொருட்களை வழங்கும் குஜராத்தை தளமாகக் கொண்ட தொடக்க நிறுவனமான மென்ஸ்ட்ரூபீடியாவின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான அதிதி குப்தா, கல்வி மாற்றத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் என்று கூறுகிறார். கல்வி மற்றும் விழிப்புணர்வுதான் இதைச் செய்வதற்கான வழியாகும். பெண் வளர்ந்து தாயாகும்போது, தன் குழந்தைகளுக்கு நன்றாகக் கல்வி கற்பித்து கொடுப்பாள். இது களங்கம் மாதவிடாய் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்துவிடும் என்று அவர் கூறுகிறார். மென்ஸ்ட்ரூபீடியா அனைத்து இந்திய பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட சித்திரக்கதை புத்தகங்களுடன் (comic books) 14 மில்லியன் சிறுமிகளைச் சென்றடைந்துள்ளது. இது அணுகலை உறுதி செய்கிறது.


காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில், பெண்களுக்கு மாதவிடாய் பற்றிக் கற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு மாதவிடாய் பட்டைகள் வழங்கவும் We the Change என்ற அரசு சாரா நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்" என்கிறார் குப்தா. ஆனால், பட்டைகள் வழங்கல் இன்னும் பலவீனமாக உள்ளது என்றும், சமூகத் தடைகள் விரைவாக மாறாது என்றும் அவர் கூறுகிறார். பெண்களின் ஆரோக்கியம் இன்னும் ஒரு தடையாகவே உள்ளது. பருவக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. மேலும், அவை நன்றாக எழுதப்படவில்லை. இவை அனைத்தும் மனப்பான்மையை நேரடியாகப் பாதிக்கின்றன.


டாக்டர் கோஷி, நகர்ப்புற முன்னேற்றத்திலிருந்து பெறப்படும் பாடங்களை ஊரக பகுதிகளில் பயன்படுத்த முடியும் என்று கருதுகிறார். முதலாவதாக, பள்ளிகளில் மகளிர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார மருத்துவர்களால் நடத்தப்படும் வழக்கமான இளம் பருவத்தினர் மற்றும் பாலியல் சுகாதாரக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அமர்வுகள் மாதவிடாய் ஆரோக்கியத்தைப் பற்றி விவாதிப்பதிலும் பொருத்தமான தீர்வுகளைத் தேடுவதிலும் பெண்கள் அதிக நம்பிக்கையுடன் உணரும் ஒரு ஆதரவான சூழலை உருவாக்க உதவுகின்றன. இரண்டாவதாக, சுகாதாரப் பட்டைகளை அகற்றுவதன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வின் வளர்ச்சி, மக்கும் பட்டைகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி பட்டைகள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளின் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.



Original article:

Share:

மெட்ராஸ் மாகாணம் 1,59,798 சதுர மைல் பரப்பளவில் பரவியிருந்தபோது… -டி. சுரேஷ் குமார்

 அப்போது பெரிய மாகாணத்தில் 21 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இவற்றில், மூன்று மாவட்டங்கள் வழக்கமான தென்மேற்கு பருவமழையால் சூழப்பட்டன.



150 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மெட்ராஸ் மாகாணம் 1,59,798 சதுர மைல் பரப்பளவைக் கொண்டிருந்தது. இது தென்னிந்தியாவின் ஒரு பெரிய பகுதியாகும். அதன் கிழக்கு கடற்கரை வங்காளத்தின் ஒரிசாவிலிருந்து கன்னியாகுமரி (Cape Comorin) வரை நீண்டிருந்தது. மேற்கில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் பூர்வீக மாநிலங்களுடன் கூடிய குறுகிய நிலப்பரப்பு கன்னியாகுமரி முதல் கொச்சின் வரை கடற்கரையை உருவாக்கியது. கொச்சிக்குப் பிறகு, மெட்ராஸ் பிரதேச கடற்கரை தொடர்ந்தது. இது 1871-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அறிக்கையின் VI-ஆம் அத்தியாயம் இந்தப் பகுதியின் புவியியல் மற்றும் மக்கள்தொகையை விளக்குகிறது. தீபகற்பத்தின் மையத்தில் நாக்பூர் நாடு, பெரார், நிஜாமின் பிரதேசங்கள் (பொதுவாக டெக்கான் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் மைசூர் மாகாணம் இருப்பதாக அது கூறுகிறது. மைசூரின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்தது. மாகாணம் சுமார் 1,600 மைல் கடற்கரையைக் கொண்டிருந்தது. அதன் மலைத்தொடர்கள் மேற்குக் கடற்கரையில் கன்னியாகுமரியிலிருந்து வடக்கு நோக்கி நீண்டுள்ளது. இதன் உயரம் 4,000 முதல் கிட்டத்தட்ட 9,000 அடி வரை இருக்கும்.


இந்த மாகாணத்தில் ஒரு காலத்தில் 21 மாவட்டங்கள் இருந்தன. இவற்றில், மூன்று மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழையிலிருந்து போதுமான மழையைப் பெற்றன. மற்ற பதினெட்டு மாவட்டங்களுக்கு காற்றின் ஈரப்பதத்திலிருந்து தண்ணீரைச் சேகரிக்கவும், அவற்றை விநியோகிக்கவும் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் தேவைப்பட்டன. சில வடக்கு மாவட்டங்களில், மழைப்பொழிவு மற்றவற்றைவிட வழக்கமாக இருந்தது. பல மாவட்டங்களில், கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மற்றும் தென்மேற்கு பருவமழையால் நிரம்பி, போதுமான இயற்கை மழைப்பொழிவு இல்லாத பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்பட்டன.


கர்நாடக மாகாணப் பகுதி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:


  • வடக்குப் பகுதி: பென்னார் நதியிலிருந்து கண்டிகாமா நதி வரை, நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதி வரை இருந்தது.


  • மத்திய பகுதி: கோலேரூன் நதியிலிருந்து பென்னார் நதி வரை, திருச்சிராப்பள்ளி (திருச்சி), செங்கல்பட்டு, வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காடு, சென்னை மற்றும் நெல்லூர் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது.


  • தெற்குப் பகுதி: திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி மற்றும் தஞ்சை, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.


1799 மற்றும் 1801-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆங்கிலேயர்கள் இந்த மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.


1859-60-ஆம் ஆண்டில், சென்னை நகரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களும் ஒரே மாவட்டமாக இணைக்கப்பட்டன. இருப்பினும், கடல் சுங்க வருவாய் வசூல் தனித்தனியாக வசூலிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு சுமார் பத்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.


1870ஆம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டம் மீண்டும் பிரிக்கப்பட்டது. அதே நேரத்தில் சென்னை நகரம் கடல் சுங்க சேகரிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.


செங்கல்பட்டு மாவட்டம் முதலில் 1763ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பிடமிருந்து பெறப்பட்டது. அவருக்கும் அவரது தந்தைக்கும் கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய சேவைகளுக்கு ஈடாக செங்கல்பட்டு வழங்கப்பட்டது. இந்த மானியம் பின்னர் 1765ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசால் உறுதிப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த மாவட்டம் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஜாகிர் (Jaghire) என்று அழைக்கப்பட்டது.


சென்னை நகரத்தின் இடம் 1640-ஆம் ஆண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் சந்ததியினரிடமிருந்து மானியம் மூலம் பெறப்பட்டது. இந்த மானியம் பின்னர் முகலாய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.


1792ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினம் ஒப்பந்தத்தின் மூலம் சேலம் மாவட்டம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.


திப்பு சுல்தானின் இறுதித் தோல்விக்குப் பிறகு, 1799-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவரது பிரதேசம் ஆங்கிலேயர்களான நிஜாம் மற்றும் மைசூரின் உரிமையாளரான மைசூர் மகாராஜா இடையே பிரிக்கப்பட்டது.

முன்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த நீலகிரி மலைகள், 1868-ஆம் ஆண்டு சட்டம் I-ன் கீழ் ஒரு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.


மெட்ராஸ் மாகாணத்திற்க்குள், ஆறு தெளிவான மொழி எல்லைகள் இருந்தன. வடகிழக்கு மாவட்டமான கஞ்சத்தில், ஒரியா பேசும் மக்கள் குழு இருந்தது. வடக்கு சர்க்கார்களிலும், கர்னூல், கடப்பா, வட ஆற்காட்டின் சில பகுதிகள், நெல்லூர் மற்றும் பெல்லாரியின் சில பகுதிகள் போன்ற நிஜாமின் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் ஒரியா பேசப்பட்டது.


தமிழ், மெட்ராஸுக்கு வடக்கே சில மைல்களில் இருந்து தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியின் தெற்கு முனை வரை உள்ள மாவட்டங்களில் பொதுவான மொழியாக உள்ளது. மலையாளம், திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் மாவட்டங்களின் பூர்வீக மாநிலங்களின் மொழியாக உள்ளது. துளு, தெற்கு கனரா மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படுகிறது; மற்றும் கன்னடம், பெல்லாரி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் தெற்கு கனரா மாவட்டங்களின் சில பகுதிகளில் பேசப்படுகிறது. இந்த ஆறு திராவிட மொழிகளைத் தவிர, சில மாவட்டங்களில் உள்ள மலைவாழ் பழங்குடிகள் தங்களுக்கே உரிய பேச்சு வழக்குகளைப் பயன்படுத்துகின்றனர்,” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


1871 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மாகாணத்தில், சுமார் 11,610,000 பேர் தெலுங்கு பேசினர்; 1,176,000 பேர் தமிழ் பேசினர்; மற்றும் 1,899,000 பேர் கன்னடம் (கனரீஸ்) பேசினர். 2,324,000 பேர் மலையாளத்தை தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர்; 29,400 பேர் துளு பேசினர்; மற்றும் 6,40,000 பேர் ஒரியா மற்றும் மலைவாழ் மக்கள் மொழிகளைப் பேசினர்.



Original article:

Share:

அதிகரித்து வரும் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்தியில் மருந்துத் துறை வரிவிதிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. -ANI

 இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தையாகும். மேலும், புதிய வரிகள் முழுத் துறையையும் பாதிக்கலாம்.


மருந்துகள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றாகும். ஆனால் ஃபிட்ச் மதிப்பீடுகள், ஒரு புதிய அறிக்கையில், அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்தால் இந்தத் தொழில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பொதுவாக தற்போதைய அமெரிக்க வரிகளுக்கு குறைவான வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனால், மருந்துத் தொழில் இன்னும் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளால் ஆபத்தில் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

உயிரியல் மருந்துகளை உருவாக்கும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட், அதன் வருவாயில் சுமார் 40% அமெரிக்காவிலிருந்து வருவதால், மிகவும் பாதிக்கப்படக்கூடியது. அதன் பெரும்பாலான தயாரிப்புகள் இந்தியா மற்றும் மலேசியாவில் தயாரிக்கப்படுகின்றன.


மருந்து ஏற்றுமதிக்கான அமெரிக்க உயர் வரிகள் பயோகானின் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று ஃபிட்ச் எச்சரித்தது. போட்டி நிறைந்த சந்தையில், அதன் மருந்துகளுக்கான தேவை சீராக இருந்தாலும், நிறுவனம் அதிக செலவுகளை நுகர்வோருக்கு மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆகஸ்ட் 7, 2025 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியையும், ஆகஸ்ட் 27 முதல் ரஷ்ய எண்ணெய் தொடர்பான இறக்குமதிகளுக்கு 25% வரியையும் விதிக்க வாஷிங்டன் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.


இந்த வரிகள் ஏற்கனவே பல இந்தியத் தொழில்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளன. ஆட்டோமொபைல்கள் மற்றும் இரசாயனத் துறைகளும் ஆபத்தில் உள்ளன. ஆட்டோமொபைல் பாகங்கள் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது, அதன் விற்பனையில் சுமார் 20% அமெரிக்காவிலிருந்து பெறுகிறது. இருப்பினும் அதில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள உற்பத்தி  அமைப்புகளிலிருந்து வருகிறது.


உலகளாவிய ஆட்டோமொபைல் துறையின் கட்டணங்களால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனத்தின் பார்வையை நேர்மறையானது என்பதிலிருந்து "நிலையானது" என்று மாற்றியுள்ளதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து அதன் வருவாயில் சுமார் 10-12% சம்பாதிக்கும் பயிர் பாதுகாப்பு நிறுவனமான UPL நிறுவனமும் பாதிக்கப்படலாம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இணையான வரிகளை, இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களுக்கும் விதிக்க வாய்ப்புள்ளது.


உற்பத்தியைவிட அதிகமானவற்றை வரிகள் பாதிக்கின்றன. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் 30–40% ஆகும். மேலும், இது அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட உதவுகிறது. இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தினால், இந்த நிறுவனங்கள் தங்கள் வருவாயில் சுமார் 10% இழக்க நேரிடும் என்று ஃபிட்ச் மதிப்பிடுகிறது. இருப்பினும், அரசாங்க ஆதரவு அவர்களுக்கு நிலையான கடன் மதிப்பீடுகளை பராமரிக்க உதவும்.


தற்போது, ஐடி சேவைகள், சிமென்ட், தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாடுகள் போன்ற துறைகளில் வரிகளின் ஒரு சிறிய நேரடி தாக்கத்தை மட்டுமே ஃபிட்ச் எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தியாவில் வரிகள் மற்ற ஆசிய நாடுகளைவிட அதிகமாக இருந்தால், 2026-ஆம் ஆண்டுக்கான 6.5% என்று கணகிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது.



Original article:

Share:

நகர்ப்புற மற்றும் கிராமப்புற செலவினம் இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துகிறது, முதலீடு பின்தங்கியுள்ளது -ANI

 ஜூலை மாதத்தில் நகர்ப்புற தேவை அதிகரித்ததற்கு காரணம், பயணிகள் வாகன விற்பனை அதிகரிப்பு, பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வசூல் சிறப்பாக இருந்ததே ஆகும்.


சமீபத்திய பொருளாதார தரவுகளைக் கண்காணிக்கும் கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி (Goldman Sachs report), முதலீட்டு வளர்ச்சி இன்னும் சீரற்றதாக இருந்தாலும், இந்தியாவின் மாதாந்திர நுகர்வு செயல்பாடு வலுவடைந்துள்ளது.


ஜூலை மாதத்தில் அதிக வாகன விற்பனை மற்றும் பெட்ரோல் தேவையுடன் நகர்ப்புற நுகர்வு அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது மொத்த ஜிஎஸ்டி வசூலும் மேம்பட்டது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 7.5% என்ற அளவில் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் விமானப் பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தகுந்த உயர்வைக் கண்டது, இதற்குக் காரணம் சுதந்திர தினத்தன்று விடுமுறை பயணங்கள் தான்.


கிராமப்புற மறுமலர்ச்சி


கிராமப்புறங்களில், ஒட்டுமொத்த செயல்பாடு மேம்பட்டது. கடந்த ஆண்டைவிட டிராக்டர் பதிவுகள் சுமார் 14% மற்றும் விவசாய ஏற்றுமதிகள் சுமார் 13% அதிகரித்தன. கிராமப்புற வருமானங்களும் அதிகரித்தன, மே மாதத்தில் உண்மையான விவசாய ஊதியங்கள் 4.5% அதிகரித்தன. இது எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கோல்ட்மேன் சாக்ஸின் கூலிப்படி, நல்ல குளிர்கால பயிர் அறுவடைகள், குறைந்த உணவு பணவீக்கம் மற்றும் அதிக நலத்திட்ட செலவுகள் வரும் மாதங்களில் கிராமப்புற நுகர்வுக்கு மேலும் உதவக்கூடும்.


ஆனால், வானிலை பிரச்சினைகள் குறித்தும் அறிக்கை எச்சரித்தது. பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை ஜூலை மாதத்தில் காய்கறி விலைகளில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.




கலப்பு முதலீடுகள்


நுகர்வு அதிகரிப்பைப் போலன்றி, முதலீட்டு செயல்பாடு கலவையான முடிவுகளைக் காட்டியது. பருவமழை காரணமாக ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி கடுமையாகக் குறைந்தது. ஆனால், ஆட்டோமொபைல் மற்றும் எஃகு உற்பத்தி அதிகரித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, எஃகு உற்பத்தி 11 சதவீத வளர்ச்சியுடன் வலுவாக இருந்தது.


போக்குவரத்து சீரற்ற வடிவங்களைக் காட்டியது. டீசல் தேவை அதிகரித்தது. ஆனால், துறைமுக சரக்கு இயக்கம் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. கோல்ட்மேன் சாக்ஸின் முதலீட்டு குறியீடு 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியுடன் சிறிது மந்தநிலையைக் காட்டியது. இது முந்தைய காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்தது.


ஒட்டுமொத்தமாக, வீட்டு மற்றும் கிராமப்புற செலவினங்கள் இன்னும் வளர்ச்சியை ஆதரிப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் குறிப்பிட்டார். ஆனால், முதலீட்டு செயல்பாடு பருவகால காரணிகள் மற்றும் துறை சார்ந்த சிக்கல்களால் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.



Original article:

Share:

இந்தியாவின் அணுசக்தி கோட்பாடு என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


  • அணு ஆயுத நாடுகள் இதுவரை அணு ஆயுத தடையை பின்பற்றி வருவது நிம்மதி அளிக்கிறது. ஆனால், அணு ஆயுதங்களின் 80வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், இந்த தடை எதிர்பாராத வழிகளில் பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுத அச்சுறுத்தல்களால் நிரம்பிய சமீபத்திய வார்த்தைப் போர், உலகளாவிய நிலைத்தன்மைக்கு கவலை அளிக்கிறது.


  • அமெரிக்காவும் ரஷ்யாவும் (சோவியத் யூனியனின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றியது) பனிப்போரின்போது வல்லரசுகளாக இருந்தன. இருவரும் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர். அக்டோபர் 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, அவர்கள் ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒப்புக்கொண்டனர். இது Mutual assured destruction (MAD) கோட்பாட்டிற்கு வழிவகுத்தது, அதாவது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது இரு தரப்பினரையும் அழிக்கும் என்பதாகும்.


  • அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் 1970-ல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty (NPT)) அறிமுகப்படுத்தின. இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், அது உலகை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. அவை: அணு ஆயுத நாடுகள் (அமெரிக்கா, USSR/ரஷ்யா, UK, பிரான்ஸ், சீனா) அணு ஆயுதம் தயாரிக்காத நாடுகள் என்பதாகும். இதில் அணு ஆயுதங்களை உருவாக்கும் விருப்பத்தை கைவிட வேண்டியிருந்தது.


  • அணு ஆயுதம் அல்லாத நாடுகளுக்கு  அணு தொழில்நுட்பத்தை அணுகவும், அணு ஆயுத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது. அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு பாடுபடுவதாகவும் அணு ஆயுதங்கள் உறுதியளித்தன. ஆனால், இந்த இலக்கு நிறைவேற்றப்படவில்லை. இதில் இரண்டு முக்கிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன:


  1. பிராந்திய மோதல்களைத் தீர்க்க அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது (எடுத்துக்காட்டாக, 1999 கார்கில் போரின்போது பாகிஸ்தான் அவ்வாறு செய்ததற்காக எச்சரிக்கப்பட்டது).


  1. அணு ஆயுதம் இல்லாத நாடுகள் முறையான அனுமதியின்றி தங்கள் இறையாண்மையை மீறாது.


  • 1991 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, பெரிய அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால் 2022-ல், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து, அதன் அணு ஆயுதத் திறனைப் பயன்படுத்துவதைக் குறித்தது. இது ஐரோப்பாவின் எல்லைகளைப் பாதுகாத்த 1975-ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒப்பந்தங்கள் (Helsinki Accords) போன்ற கடந்தகால ஒப்பந்தங்களை பலவீனப்படுத்தியது.


  • ஜூன் 2025-ல், இஸ்ரேல் (NPT-ன் ஒரு பகுதியாக இல்லாதது) அணு ஆயுதம் அல்லாத நாடான ஈரானை தாக்கியது. ஈரான் அதன் NPT வாக்குறுதியை மீறி ரகசியமாக அணு ஆயுதங்களை வாங்கப் போகிறது என்று கருதியது.


  • இப்போது மிகப்பெரிய ஆபத்து அமெரிக்க-ரஷ்ய உறவுகளின் முறிவு உள்ளது. இரு நாடுகளும் இன்னும் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. ரஷ்யாவில் 5,459 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,177 அணு ஆயுதங்களும் உள்ளன (அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, 2025 படி).


  • ஒரு சிறிய அணு ஆயுதப் போர் கூட ஏராளமான மக்களைக் கொல்லக்கூடும். 2019ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் முதல் சில மணி நேரங்களுக்குள் சுமார் 91.5 மில்லியன் இறப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அதன் பிறகு, கதிரியக்க பாதிப்பானது உலகளாவிய குளிர்ச்சி நிலைமைகளை இன்னும் மோசமாக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


  • அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation Treaty (NPT)) அணு ஆயுத பரவலைத் தடுப்பது, அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஆயுதக் குறைப்பை நோக்கிச் செயல்படுவது உள்ளிட்ட குறிக்கோள்களை உடையது.


  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1968-ல் உருவாக்கப்பட்டது. ஜனவரி 1, 1967-ஆம் ஆண்டுக்கு முன்பு அணு ஆயுதங்களை உருவாக்கி சோதனை செய்த நாடுகள் மட்டுமே அணு ஆயுத நாடுகளாக அங்கீகரிக்கப்படுகின்றன என்று அது கூறுகிறது. இவை அமெரிக்கா, ரஷ்யா (முந்தைய சோவியத் ஒன்றியம்), இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படவில்லை.


  • உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், இந்தியா கையெழுத்திடவில்லை.



Original article:

Share:

கடுமையான மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறி (Acute encephalitis syndrome (AES)) பற்றி… -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


"மூளை உண்ணும் அமீபா" (brain-eating amoeba) என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி-யால் (Naegleria fowleri) அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic meningoencephalitis) ஏற்படுகிறது. இது வெதுவெதுப்பான, நன்னீர் மற்றும் மண்ணில் காணப்படும் ஒரு சுதந்திரமான அமீபா ஆகும். மேலும், இது மூக்கு வழியாக உடலில் நுழையும்போது மக்களை பாதிக்கிறது. இந்த ஆண்டு, கேரளாவில் எட்டு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், ஆகஸ்ட் 14 அன்று கோழிக்கோட்டின் தாமரச்சேரியில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.


மாவட்டத்தின் வெவ்வேறு கிராமங்களில் இருந்து பதிவாகிய மூன்று வழக்குகளில் பொதுவான காரணி எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


மெனிங்கோஎன்செபாலிட்டிஸின் (meningoencephalitis) மூலக்கூறு நோயறிதலைச் செய்தபோது, நெக்லேரியா ஃபோலேரியைத் தவிர, மற்றொரு இனமான அகந்தமோபாவும் (Acanthamoeba) நோயை ஏற்படுத்துகிறது என்று ஆதாரங்கள் தெரிவித்தன. 


இந்தியாவில் PAM-ன் முதல் வழக்கு 1971-ல் பதிவாகியது, மற்றும் கேரளாவில் முதல் வழக்கு 2016-ல் பதிவாகியது. 2016 முதல் 2023 வரை, மாநிலத்தில் எட்டு வழக்குகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு, கேரளாவில் 36 நேர்மறை வழக்குகள் மற்றும் ஒன்பது இறப்புகள் இருந்தன.


PAM - Primary Amoebic Meningoencephalitis (PAM) : முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM)


உலகளவில் நோயின் இறப்பு 97 சதவீதமாக இருந்தால், கேரளாவால் அதை 25 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. இந்தியாவில் பதிவான அனைத்து பாதிப்புகளும் ஜூலை 2024 வரை நோயாளியின் மரணத்திற்கு வழிவகுத்தன. கோழிக்கோடு மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நோயிலிருந்து தப்பிய முதல் இந்தியன் ஆனார். உலகில் PAM நோயால் பாதிக்கப்பட்ட 11-வது அறியப்பட்ட நபரும் இவரே.


கேரளாவில் வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று, மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறிக்கான (acute encephalitis syndrome (AES)) அதிக பரிசோதனையுடன் தொடர்புடையது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் ஏற்படக்கூடிய ஒரு நிலை, அத்துடன் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிற காரணிகளால் ஏற்படக்கூடிய தன்மையின் அடிப்படையில் உள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் திடீரென வழக்குகள் அதிகரித்தபோது, அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் வழக்குகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறப்பு சிகிச்சை நெறிமுறை மற்றும் நிலையான இயக்க நடைமுறையை மாநிலம் வெளியிட்டது. இந்தியாவில் அவ்வாறு செய்த முதல் மாநிலமாக இது ஆனது.


உங்களுக்குத் தெரியுமா :


PAM-ன் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். பின்னர், நோயாளி ஒரு கழுத்து விறைப்பு, குழப்பம், வலிப்புத்தாக்கங்கள், மாயத்தோற்றங்கள் மற்றும் கோமா நிலைக்குச் செல்லலாம்.


இந்த நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு பயனுள்ள சிகிச்சையைக் கண்டுபிடிக்கவில்லை. தற்போது, மருத்துவர்கள் மருந்துகளின் கலவையுடன் இதற்கு சிகிச்சை அளிக்கின்றனர். இவற்றில் ஆம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் ஆகியவை அடங்கும்.


அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Contro(CDC)), ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. உலக வெப்பநிலை அதிகரிப்பதால், நெய்க்லீரியா ஃபோலேரி தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று அது கூறுகிறது. ஏனெனில், அமீபா சூடான நன்னீர் உடல்களில் செழித்து வளரும். இது 46°C வரை வெப்பநிலையில் சிறப்பாக வளரும். சில சந்தர்ப்பங்களில், இது அதிக வெப்பநிலையில்கூட உயிர்வாழும்.



Original article:

Share:

பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள் -ரோஷ்னி யாதவ்

 பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின விழா உரையானது 103 நிமிடங்கள் நீடித்தது, இது இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரின் சுதந்திர தின உரையிலும் மிக நீளமானதாகும். பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு 88 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலையை விரிவாக விளக்கியதோடு, தொழில்நுட்பம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 



முக்கிய அம்சங்கள் :


1. பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) : பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்காக பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனாவைத் (Pradhan Mantri Viksit Bharat Rojgar Yojana(PM-VBRY)) தொடங்கினார். இது ரூ.1 லட்சம் கோடி திட்டமாகும். இதன் கீழ், தனியார் நிறுவனங்களில் வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசாங்கம் ரூ.15,000 வழங்கும் திட்டமாகும்.


PM-VBRY பல்வேறு துறைகளில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது மற்றும் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகளுக்கு நிதி நன்மைகளை வழங்குகிறது.


2. சுதர்சன் சக்ரா மிஷன் (Sudarshan Chakra Mission) : பிரதமர் மோடி சுதர்சன் சக்ரா திட்டத்தையும் அறிவித்தார். இது ஒரு பெரிய பாதுகாப்பு தொடர்பான முயற்சியாகும். இந்தியாவின் பாதுகாப்புத் தளங்கள், பொதுமக்கள் பகுதிகள் மற்றும் மத இடங்களை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம்.


"எதிரிகளின் எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க சக்திவாய்ந்த ஆயுத அமைப்பை உருவாக்க இந்தியா மிஷன் சுதர்சன் சக்ராவைத் தொடங்க உள்ளது," என்று அவர் கூறினார். 2035-ம் ஆண்டுக்குள் அனைத்து பொது இடங்களும் நாடு தழுவிய பாதுகாப்புக் கவசத்தால் மூடப்படும் வகையில், சமீபத்திய தொழில்நுட்பக் கருவிகளை ஒருங்கிணைக்க அரசு நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


3. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் : தீபாவளிக்குள் சரக்கு மற்றும் சேவை வரியில் (Goods and Services Tax (GST)) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தச் சீர்திருத்தங்கள், சாமானியர்களுக்கு ‘கணிசமான’ வரிச் சலுகை அளிக்கும் என்றும், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.


மோடி தனது உரையில், ஜிஎஸ்டி முறை இப்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றும், சீர்திருத்தங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்றும் மோடி கூறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டியின் அடிப்படை சீரமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


4. 2047-க்குள் அணுசக்தியில் பத்து மடங்கு உயர்வு : இந்தியா 10 புதிய அணு உலைகளை விரைவாகச் செய்து வருவதாகவும், 2047-க்குள் அதன் அணுசக்தித் திறனை பத்து மடங்கு அதிகரிக்க உறுதியளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


அரசாங்கம் 2047-ம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி திறனை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 8.18 GW-ல் இருந்து பெரிய அதிகரிப்பாகும். இதை அடைவதற்காக, உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, வளர்ந்த இந்தியாவுக்கான (Viksit Bharat) அணுசக்தி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது COP 21-ல் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பஞ்சாமிர்த் காலநிலை செயல் திட்டத்துடனும் (Panchamrit climate action plan) இணைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்கவை போலல்லாமல், அணுசக்தியானது தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கான நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், வானிலை தொடர்பான குறுக்கீடுகளுக்கு இது எளிதில் பாதிக்கப்படாது.


5. ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் மற்றும் ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதம் : பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய அமெரிக்கா விதித்த வரிவிதிப்புகளின் பின்னணியின் மத்தியில், பாதுகாப்பு, விண்வெளித் துறை, முக்கியமான தாதுக்கள், எரிசக்தி, குறைமின்கடத்திகள் முதல் உரம், மருந்து உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு என அனைத்துத் துறைகளிலும் தன்னம்பிக்கைக்கு மோடி அதிக அழுத்தம் கொடுத்தார். ஒரு வளர்ந்த இந்தியாவின் அடித்தளமும் ஒரு தன்னம்பிக்கையான பாரதமாகும்" (the bedrock of a Viksit Bharat is also a self-reliant Bharat) மற்றும் ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் சுதந்திரம் கேள்விக்குறியாகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


6. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் : இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் (semiconductor chips) சந்தைக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.  குறைமின்கடத்தி திட்ட (semiconductor mission) முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார். மேலும், ஆறு புதிய அலகுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.


பெரும்பாலான நவீன குறைக்கடத்திகள் ஒருங்கிணைந்த சுற்றுகள், அவை 'சிப்ஸ்' (chips) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகச் சிறிய மின்னணு சுற்றுகளின் தொகுப்புகள். அவற்றில் டிரான்சிஸ்டர்கள், டையோட்கள், மின்தேக்கிகள், மின்தடையங்கள் மற்றும் பல இடைத்தொடர்புகள் அடங்கும்.


குறைமின்கடத்திகள் முக்கியமாக சிலிக்கானால் ஆனவை. அவை மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளன. இந்த டிரான்சிஸ்டர்கள் சிறிய மின் சுவிட்சுகள் போல செயல்படுகின்றன. படங்கள், ரேடியோ அலைகள் மற்றும் ஒலிகள் போன்ற தரவுகளை செயலாக்க அவை ஆன் மற்றும் ஆஃப் செய்கின்றன.


குறைமின்கடத்திகள் மின்னணு சாதனங்களின் இன்றியமையாத அங்கமாகும். தகவல்தொடர்பு, கணினி, சுகாதாரம், இராணுவ அமைப்புகள், போக்குவரத்து, சுத்தமான ஆற்றல் மற்றும் எண்ணற்ற பிற பயன்பாடுகளில் முன்னேற்றங்களைச் செயல்படுத்துகிறது.


7. உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வுப் பணி : பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு அபாயங்களை எடுத்துரைத்தார். 


8. பிரத்யேக சீர்திருத்த பணிக்குழு : அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை (next-generation reforms) முன்னெடுத்துச் செல்ல பிரத்யேக சீர்திருத்த பணிக்குழுவை (Reform Task Force) உருவாக்குவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணிக்குழுவின் ஆணை பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது, சிவப்பு நாடாவை விலக்குவது, நிர்வாகத்தை நவீனமயமாக்குவது மற்றும் 2047-க்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான கோரிக்கைகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவதாகும்.


இந்தியா குறைமின்கடத்தி திட்டம் மற்றும் ஜிஎஸ்டி


1. இந்திய குறைமின்கடத்தி திட்டம் 2021-ல் தொடங்கப்பட்டது. இது உள்நாட்டு குறைக்கடத்தி தொழிலை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திர முயற்சியாகும். உள்நாட்டில் குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது மற்றும் புதுமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது இதன் இலக்காகும்.


2. இந்திய குறைமின்கடத்தி திட்டம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.


சரக்கு மற்றும் சேவை வரி


1. சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) என்பது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதார மற்றும் வரிவிதிப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.


2. இது 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய வரி முறையை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும், அங்கு மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் பலவிதமான வரிகளை வசூலித்தன. இந்த முறையை சீரானதாக மாற்றுவதே ஜிஎஸ்டியின் நோக்கமாகும்.


3. ஜிஎஸ்டி என்பது அடிப்படையில் ஒரு நுகர்வு வரியாகும், மேலும் இது இறுதி நுகர்வு புள்ளியில் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பயன்படுத்தப்படும் கொள்கை, இலக்கு கொள்கையாகும். இது மதிப்பு கூட்டலின் மீது விதிக்கப்படுகிறது மற்றும் வரி விலக்குகளை வழங்குகிறது. இதன் விளைவாக, இறுதி நுகர்வோர் மீதான வரிச்சுமையை அதிகரிகக் கூடிய வரி மீது வரி என்று அழைக்கப்படும் அடுக்கடுக்கான விளைவைத் தவிர்க்கிறது.



Original article:

Share: