பருத்தி மீதான இறக்குமதி வரி ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? -M. சௌந்தரிய பிரீதா

 இந்த வரி விதிப்பு (levy) முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்து வருகிறதா?


தற்போதைய செய்தி: பருத்தி (Cotton) என்பது நெசவுத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாகும். இது இந்தியாவில் ஏறக்குறைய 60 லட்சம் உழவர்களால் பயிரிடப்படுகிறது. உற்பத்தி குறைவின் காரணமாக, ஒன்றிய அரசு  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய 11% இறக்குமதி வரியை திரும்ப பெற்றுள்ளது. எனினும், கடந்த ஆண்டு வரி இருந்தபோதும் பருத்தி இறக்குமதியில் அதிகரிப்பு காணப்பட்டது. ஆகஸ்ட் 18 அன்று அரசு, தற்போதைய பருத்தி பருவம் முடியும் (செப்டம்பர் 30) வரை வரியை திரும்பப் பெறுவதாக அரசாங்கம் கூறியது.


வரி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் இறக்குமதி வரி (import duty) அறிவிக்கப்பட்டது. அப்போது நாடு ஆண்டுக்கு 350 லட்சம் பருத்தி மூட்டைகள்  (bales) பருத்தி உற்பத்தி செய்து கொண்டிருந்தது. தேவை 335 லட்சம் பருத்தி மூட்டைகளாக  இருந்தது. நாடு பருத்தியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் இறக்குமதிகளும் இருந்தன. இந்த வரி பருத்தி உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டது.


நெசவுத் தொழிலின் மூலப்பொருள் (பருத்தி) பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, அரசு எல்லா வகையான பருத்தியையும் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 30, 2022ஆம் ஆண்டு வரை இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது. பின்னர், இந்த விலக்கை அக்டோபர் 31, 2022 வரை நீட்டித்தது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சியின் (Global Trade Research Initiative) படி, பருத்தி இறக்குமதி 107.4% அதிகரித்து. 2023-2024நிதியாண்டில் $579.2 மில்லியன் இருந்த நிலையில் 2024-2025 நிதியாண்டில் $1.20 பில்லியன் ஆக உயர்ந்தது.


தற்போதைய நிலைமை என்ன?


ஒட்டுமொத்த உள்நாட்டு பருத்தி உற்பத்தி 294 லட்சம் பருத்தி மூட்டைகளாக குறைந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது. தேவை 318 லட்சம் பருத்தி மூட்டைகளாக உள்ளது. 2024-2025 பருத்தி பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) பருத்தி உற்பத்தி கடந்த பருத்தி பருவத்தை விட ஏறக்குறைய 20 லட்சம் பருத்தி மூட்டைகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதிகளும் ஏறக்குறைய 40 லட்சம் பருத்தி மூட்டைகளுடன் அதிகபட்சமாக இருக்கக் கூடும். 


முக்கிய விநியோகம் ஆஸ்திரேலியா ($258.2 மில்லியன்), அமெரிக்கா ($234.1 மில்லியன்), பிரேசில் ($180.8 மில்லியன்) மற்றும் எகிப்து ($116.3 மில்லியன்) ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India) நடப்பு பருத்தி பருவத்தில் உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) ஏறக்குறைய 100 லட்சம் பருத்தியை ரூ.37,500 கோடி செலவில் வாங்கியுள்ளது. 


மேலும், சந்தையில் 73 லட்சம் பருத்தி மூட்டைகளை விற்றுள்ளது. அக்டோபர் 1 அன்று தொடங்கும் 2025-2026 பருத்தி பருவத்திற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை  8% அதிகரித்துள்ளது. வட மாநிலங்களின் உழவர்கள் அக்டோபரில் பருத்தியை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களின் உழவர்கள் தீபாவளிக்குப் பிறகு பருத்தியை வழங்கத் தொடங்குவார்கள்.


வரி நீக்கம் எதைக் குறிக்கிறது?


இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியில் சுமார் இரண்டு லட்சம் பருத்தி மூட்டைகள் (bales) மட்டுமே செப்டம்பர் 30-க்கு முன்பு வந்து சேரும் என்பதால், ஏற்கனவே வரவிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி, வரி இல்லாமல் இந்தியாவிற்கு வரும். பல உலகளாவிய தர அடையாளங்கள் (brands) பருத்தி இறக்குமதியாளர்கள் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் சில அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களிடமிருந்து மட்டுமே பருத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன. 


முன்னதாக, சர்வதேச சந்தையில் ஆடை ஏற்றுமதியாளர்கள் போட்டியிடும்போது, ​​வரி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு வரி விதிப்பு இல்லாமல் அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.


இருப்பினும், பருத்தி உழவர்கள் இந்த பார்வைகளுடன் முழுமையாக உடன்படவில்லை. தமிழ்நாட்டின் திருவாரூரில் பருத்தி பயிரிடும் ரவிசந்திரன் கூறுகையில், வரி நீக்கம் உழவர்களை பருத்தி பயிரிடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது என்றார். அரசிடமிருந்து எந்த ஆதரவும் பெறாத பருத்தி உழவர்களுக்கு இறக்குமதி வரி நீக்கம் உதவாது என்று ஒன்றுபட்ட உழவர்கள் முன்னணியின் (Samyukta Kisan Morcha) தென்னிந்திய அமைப்பாளர் குருபூர் சாந்தகுமார் கூறினார்.


நீண்டகால தீர்வு என்ன?


இந்தத் துறை அரசாங்கத்திடமிருந்து இரண்டு முக்கிய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறது. முதலாவதாக, மூலப்பொருள் கொள்முதலைத் திட்டமிடுவதற்கு உதவும் ஒரு நிலையான கொள்கையை அது விரும்புகிறது. இரண்டாவதாக, பருவம் இல்லாத காலத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வரியை நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான உழவர்கள் அந்த நேரத்தில் தங்கள் விளைபொருட்களை விற்றுவிடுவார்கள்.


நெசவு ஆலைகள் உச்ச பருவத்தில் பருத்தி வாங்க எடுக்கும் கடன்களுக்கு 5% வட்டி தள்ளுபடியை எதிர் பார்க்கின்றனர். ஆலைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME)) அலகுகள், போதுமான நிதியைப் பெற்றிருந்தால், தேவையான பருத்தியை அவர்களால் ஈடுகட்ட முடியும். அதனால் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) நடவடிக்கைகளுக்கு தனியாக செலவிட வேண்டியதில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.



Original article:

Share:

இந்திய தேர்தல் ஆணையமானது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது -பி.டி.டி. ஆச்சாரி

 வாக்காளர் பட்டியலில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தும் புகாரை கவனமாக ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு கடமை உள்ளது.


சமீபத்திய வாரங்களில் நடைபெற்ற இரண்டு முக்கிய செய்தியாளர் சந்திப்புகள் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளன. முதலாவது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) ராகுல் காந்தி, ஆகஸ்ட் 7, 2025 அன்று புது தில்லியில் உரையாற்றியது. அங்கு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பெங்களூர் மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றப் பிரிவில் வாக்காளர் பட்டியலைக் கையாளும் குறிப்பிட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார். அதில் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும், ‘தந்தையின் பெயர்’ அதில் ‘xyz’ என்றும், வீட்டு எண் ‘0’ என்றும் கொடுக்கப்பட்டு உள்ளது. 


இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) ஆவணங்களை ஆறு மாதங்களுக்கும் மேலாக, தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு அவரது குழுவினரால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த வெளிப்பாடுகள் இந்திய குடிமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. அவை உண்மையாக இருந்தால், முழு தேர்தல் முறையும் நம்பகத்தன்மையை இழந்துவிடும். மேலும்,  இந்தியாவின் ஜனநாயகம் இனி உண்மையானதாக இருக்காது.


ECI இன் நிலைப்பாடு அசாதாரணமானது


இரண்டாவது செய்தியாளர் சந்திப்பு, புது தில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் அவரது மற்ற உறுப்பினர்களால் ஆகஸ்ட் 17, 2025 அன்று நிகழ்த்தப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (LoP) எழுப்பிய பிரச்சினைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தலைமைத் தேர்தல் ஆணையரின் சந்திப்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் புகார் குறித்து பல அடிப்படை கேள்விகள் புறக்கணிக்கப்பட்டதால், அவை குடிமக்களுக்கு தெளிவை அளிக்கவில்லை. 


தேர்தல் ஆணையமானது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்  தனது கூற்றுக்களின் விவரங்களை ஒரு பிரமாணப் பத்திரத்துடன் வழங்க வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது, தேர்தல் ஆணையத்தின் இந்த அசாதாரண நிலைப்பாடாகப் பார்க்கப்பட்டது. அதுவும் அரசியல் குழப்பத்தில் தன்னை இணைந்திருப்பதைக் காட்டுகிறது. இது நீண்ட காலமாக அரசியல் கட்சிகளை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதைக் காட்டுகிறது.


இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஒரு உயர் அரசியலமைப்பு அமைப்பாகும். இது வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை மேற்பார்வையிடுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கும் இது பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரிவு 324 இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ECI க்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது. 


அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியான சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 324 என்பது தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ECI பெறக்கூடிய அதிகாரங்களின் முக்கிய மையமாகும். இருப்பினும், அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.


எதிர்க்கட்சித் தலைவருக்கு (LoP) இறுதி எச்சரிக்கை விடுப்பது பிரிவு 324 அல்லது தேர்தல் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. அரசியல் வாதங்களில் பங்கேற்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கடமையும் அல்ல.


பெங்களூருவில் நடந்த சம்பவம், வாக்காளர் பட்டியல்களில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) உருவாக்கிய நடைமுறைச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ராகுல் காந்தியின் வெளிப்பாடுகள் பொருந்தவில்லை என்பது உண்மைதான்.

 இந்தச் சட்டமும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளும், பல அடுக்கு ஆய்வு மற்றும் பொது ஆய்வு மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான நியாயமான நடைமுறைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், தேர்தல் சட்டங்கள் தேர்தலைப் பற்றி ஒரு இறுதி முடிவு இருப்பதாகக் கருதுகின்றன. எனவே, ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகளை இந்தச் சட்டங்களால் கையாள முடியாது.


இருப்பினும், இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி. அர்த்தமற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் சட்டப் பிரமாண வாக்குமூலங்களுக்கான கோரிக்கை மூலம் அதை எதிர்ப்பதற்கான முயற்சிகள் பயனற்றவை. சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு மகத்தான அதிகாரங்களை வழங்குகிறது. இதனால், அது பட்டியல்களைத் தயாரித்து நியாயமான முறையில் தேர்தலை நடத்தும். 


சட்டப்பிரிவு 324, அந்த அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துவதற்கான பொறுப்புகள் மற்றும் கடமைகளைக் குறிக்கிறது. எனவே, ஒரு குடிமகன், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் கடுமையான முறைகேடுகளை முன்னிலைப்படுத்தி புகார் அல்லது வெளிப்படுத்தினால், அதை கவனமாக ஆராய்ந்து, இந்த தேர்தல் அமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்வது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமையாகும். 


80 வாக்காளர்கள் ஒரே முகவரியில் எப்படிப் பதிவு செய்ய முடியும்? இருப்பினும், அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் அவர்கள் வாக்களித்தனர். இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. ஒருவர் வழக்கமாக அந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க முடியும். இதன் பொருள் அந்த இடத்தில் நிரந்தரமாக தங்குவது என்பதாகும். இந்த 80 பேரும் நிரந்தரமாக ஒரே முகவரியில் வசிக்கிறார்களா?


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு ஒரு வழியினை வழங்குகிறது. இந்த பட்டியல்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் திருத்தப்படலாம் அல்லது ஒரு சில தொகுதிகள் அல்லது அதன் ஒரு பகுதிக்கான சிறப்புத் திருத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை ECI பதிவு செய்ய வேண்டும் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 21). வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 இன் விதி 25, ஆண்டுதோறும் திருத்தங்கள் இரண்டு வகைகளாக இருக்கலாம்: அவை சாதரண திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்பதாகும். சில நேரங்களில் அவை பகுதி சுருக்கமாகவும் பகுதி தீவிரமாகவும் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.


பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)


இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (SIR) இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஈடுபட்டுள்ளது. உண்மையில், சட்டமோ அல்லது விதிகளோ "சிறப்பு தீவிர திருத்தம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. "தீவிர திருத்தம்" மற்றும் "சிறப்பு திருத்தம்" என்பதற்கு தனித்தனி விதிகள் உள்ளன.


எழுத்தாளரின் கூற்றுப்படி, SIR சில சட்ட சிக்கல்களைக் கொண்டுள்ளது. சில சிறப்புத் திருத்தம் எந்த நேரத்திலும் செய்யப்படலாம் அதேசமயம், தகுதித் தேதியான ஜனவரியில் மட்டுமே தீவிரத் திருத்தம் செய்ய முடியும். ஆனால், இது சில தொகுதிகள் அல்லது அதன் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


பீகார் விஷயத்தில், SIR ஜூலை 1 ஐ தகுதித் தேதியாகப் பயன்படுத்துகிறது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 14(b) க்கு எதிரானது. ஜனவரி 1 தகுதித் தேதியாக இருக்கும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. தகுதித் தேதி என்பது வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் அல்லது தயாரித்தல் தொடங்கும் நாளாகும்.


பீகாரில் மேலும் 7 லட்சம் பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மர்மம்


சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விளைவாக பீகாரில் நிலவும் குழப்பமான சூழல்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் தீவிர திருத்தம் செய்வது முரண்பாடானது. 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 25(2) தீவிர திருத்தம் என்றால் பட்டியலைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும் என்றும் விதி 8, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. 


பதிவு அலுவலர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு மாத காலத்திற்குள் சென்று கணக்கெடுப்பு நடைமுறைகளை நடைமுறைக்கு ஏற்ப முடிக்க முடியுமா என்பது சந்தேகேமானதாக உள்ளது. இது மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணக்கெடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது. தேர்தல் ஆணையத்தின் விருப்பத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவில், பெயர்கள் மற்றும் அவை நீக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிடுமாறு ECI க்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.


பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (SIR) பிறகு வாக்காளர் நீக்கம் : பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன


தற்போதைய வார்த்தைகள்

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சக்திவாய்ந்த அரசியலமைப்பு அதிகாரம் கொண்டதாகும். ஆனால், அதன் அதிகாரங்கள் வரம்பற்றவை அல்ல. அரசியலமைப்பு எந்தவொரு நபருக்கோ அல்லது அதிகாரத்திற்கோ முழுமையான அதிகாரங்களை வழங்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அதிகாரங்களை உருவாக்கியது.


”A.C. ஜோஸ் vs சிவன் பிள்ளை மற்றும் பிறர்-1984” (A.C. Jose vs Sivan Pillai and Others) வழக்கில், நீதிபதி எஸ். முர்தாசா ஃபசல் அலி குறிப்பிட்டதாவது, தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அதன் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பின்பற்றி, அவர்கள் அரசியல் சிக்கல்களையோ அல்லது அரசியலமைப்பு நெருக்கடியையோ ஏற்படுத்தக்கூடிய அசாதாரண வழிமுறைகளை வெளியிடக்கூடும் என்று கூறினார். இது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது ஒரு அரசியலமைப்பு நெருக்கடியைக் கூட ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தவறான பயன்பாடு தேர்தல் செயல்முறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.


பி.டி.டி. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.



Original article:

Share:

கற்பனையான நீதி : சமூக ஊடகங்களின் செயல்பாடு குறித்து . . .

 நீதிமன்றங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவை, அரசின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அனுமதிக்கக்கூடாது.


சமூக ஊடகங்களில் பேச்சை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கருத்துச் சுதந்திரத்தின் மீதான சட்ட வரம்புகளை பயன்படுத்தி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்க முயல்கிறது. மாற்றுத்திற்னாளிகளுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட அவமதிப்பு கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கவலையளிக்கும் போக்கைக் கொண்டுள்ளன. 


அரசியலமைப்பு உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த நீதித்துறை அரசை ஊக்குவிக்கிறது. விரும்பத்தகாத நகைச்சுவை தொந்தரவாக இருக்கலாம். அதை, நீதிமன்றங்கள் மூலமாகவும், நிர்வாக ஆட்சிமுறை மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக கருதுவது, ஒரு தவறான நீதி உணர்வை உருவாக்குகிறது. பேச்சுக்கு காவல்துறை அதிகாரத்தை விரிவுபடுத்துவது எப்போதும் தீங்கு விளைவிக்கும். 


அரசியல் குழுக்கள், தங்களுக்குப் பிடிக்காத கலை மற்றும் அரசியல் பேச்சை அடக்குவதற்கு அரசின் அமைப்புகள் மூலம் கண்காணிக்க தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண குடிமக்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த கருத்து தணிக்கை செய்யப்படும்போது, ​​முக்கியமான உண்மைகளும் கருத்துக்களும் இழக்கப்படுகின்றன. 


திறந்த விவாதம் இல்லாமல் ஒரு ஜனநாயகம் சிறப்பாக செயல்பட முடியாது. மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் கீழ் வாழக்கூடாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்தியாவை சமூக ரீதியாக முன்னேற உதவும் விஷயங்களை ஆராய்வதில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்சார் கடமைகளை நிறைவேற்ற முதல் தகவல் அறிக்கைகளை (first information reports) கையாளுகின்றனர்.


சமீபத்திய ஆண்டுகளில், ஒன்றிய அரசாங்கம், முறைப்படி மற்றும் முறைசாரா முறையில், பிரச்சனைக்குரிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) மற்றும் சமூக ஊடக நிறுவனங்களை, அரசாங்கத்தால் கண்டறியப்பட்ட பயனர் உள்ளடக்கத்திற்கு எதிராக தொடர அனுமதிக்கும் அந்த விதிகளில் திருத்தம் மூலம் இணையப் பேச்சு கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. 


திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025), அரசாங்கம் புதிய வழிமுறைகளை வெளியிட்டது. இவை அதன் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், இதற்கான நோக்கங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சும், விவாதமும் இந்தியாவில் குற்றமாக்கப்படுகின்றன. 


பின்தங்கிய குழுக்களுக்கு உண்மையிலேயே அநீதி இழைக்கப்படும்போது நீதி தேடுவதற்கான சட்டப்பூர்வ வழிகளை வழங்குகிறது. ஆனால், நிர்வாகத்திற்கு இன்னும் அதிக அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானது. அடிப்படை நிலையில், "பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல்" (misuse of freedom of speech) என்று குறிப்பிடும் நீதித்துறை அறிக்கைகள் தங்கள் பங்கை தவறாகப் புரிந்துகொள்வது போல் தெரிகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் கேள்விக்கு இடமில்லாத ஆட்சியாளர்களைப் போல செயல்படாமல், அரசியலமைப்பின் கீழ் உள்ள உரிமைகளைப் பாதுகாப்பதே அவர்களின் கடமையாக இருக்க வேண்டும்.



Original article:

Share:

இந்திய இறால் துறை ஏன் ஈக்வடாரில் முதலீடு செய்ய வேண்டும்? -எம் கிருஷ்ணன்பத்ரி & நாராயணன் கோபாலகிருஷ்ணன்

 டிரம்ப் வரிவிதிப்புகள் ஒரு பெரிய ஏற்றுமதித் துறையை மோசமாக பாதித்துள்ளன. ஈக்வடாரில் முதலீடு செய்வது ஒரு மாற்றாக இருக்கலாம்.


ஆகஸ்ட் 6-ஆம் தேதி, டிரம்ப் நிர்வாகம் பல இந்திய இறக்குமதிகளுக்கு புதிய 25 சதவீத வரியை அறிவித்தது. இது கடல் உணவுகள் உட்பட பல பொருட்களின் மீதான மொத்த வரியை 50 சதவீதமாக உயர்த்தியது.


முந்தைய பரஸ்பர வரிவிதிப்பைத் தொடர்ந்து வரும் புதிய வரி, அமெரிக்காவிற்கான இந்திய கடல் உணவு ஏற்றுமதியை லாபமற்றதாக மாற்றியுள்ளது. 2024 நிதியாண்டில், இந்தியா சுமார் $2.5 பில்லியன் மதிப்புள்ள கடல் உணவுகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது இறால் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 92 சதவீதம் ஆகும்.


இந்த அதிக வரி, 2030-ஆம் ஆண்டுக்குள் கடல் உணவு ஏற்றுமதியில் $18 பில்லியனை எட்டும் இலக்கை நிர்ணயித்த கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திற்கு (Marine Products Exports Development Authority (MPEDA)) ஒரு பெரிய பின்னடைவாகும். இந்தியாவின் மிகப்பெரிய கடல் உணவு சந்தையான அமெரிக்காவிற்கு முன்னர் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிக மதிப்புள்ள இறால்களை இந்திய உள்நாட்டு சந்தையால் உள்வாங்க முடியாது. 2016-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) முழுமையாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டிலிருந்து சிறிய முதலீடு மட்டுமே உள்ளது. இந்த இடைவெளி வெளிநாட்டு FDI என்ற ஒரு புதிய திட்டத்தைப் பார்ப்பது அவசியமாக்குகிறது.


இந்திய நிறுவனங்களுக்கான ஒரு நடைமுறை வழி, சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகளில் இறால் வளர்ப்பு வணிகங்களில் முதலீடு செய்வது அல்லது வாங்குவது. இது புதிய வரிகளை எதிர்கொள்ளாமல் அமெரிக்கா போன்ற பெரிய சந்தைகளுக்கு விற்க உதவும். இறால் உற்பத்தியில் உலகளாவிய முன்னணியில் உள்ள ஈக்வடார், மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாகும்.


ஈக்வடார், சிறந்த பங்குதாரர்


ஈக்வடாரின் இறால் தொழில், தீவன உற்பத்தி மற்றும் புழு நிலை (விதை) முதல் பதப்படுத்தல் வசதிகள் மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகள் வரை அனைத்திற்கும் நன்கு நிறுவப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளைக் கொண்டுள்ளது. இது இந்திய முதலீட்டாளர்களுக்கு புதிய சூழலமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள செயல்பாடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது, இதனால் நேரமும் முதலீட்டு ஆபத்தும் கணிசமாகக் குறைகிறது.


ஈக்வடாரில் பிற நன்மைகளும் உள்ளன. உலக இறால் தொழிலில் இந்தியாவும் ஈக்வடாரும் மிகக் குறைந்த விலை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இதன் பொருள் இந்திய நிறுவனங்கள் இதேபோன்ற பொருளாதார அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில் செலவு குறைந்த உற்பத்தியில் தங்கள் திறன்களைப் பயன்படுத்தலாம்.



ஈக்வடார் அமெரிக்க டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்துகிறது. இது ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய நிதி அமைப்பை உருவாக்குகிறது மற்றும் நாணய அபாயங்களை நீக்குகிறது. அரசியல் நிலைத்தன்மை சில நேரங்களில் ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்றாலும், இறால் தொழில் ஈக்வடாரின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது மற்றும் வலுவான அரசாங்க ஆதரவைப் பெறுகிறது.


இந்திய நிறுவனங்கள் இப்போது ஈக்வடாரில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளன. ஈக்வடார் தொழில் தொழில்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைப்பு கட்டத்தில் உள்ளது. இது இராஜதந்திர கையகப்படுத்துதல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஜப்பானியக் கூட்டு நிறுவனமான மிட்சுய் & கோ போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. மீன்வளர்ப்பில் தங்கள் நிபுணத்துவத்துடன், இந்திய முதலீட்டாளர்கள் ஈக்வடாரின் பாதி-தீவிர (semi-intensive) அமைப்புக்கு பயனுள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர முடியும். இது இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும்.





மீன்வளர்ப்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈக்வடார் அரசாங்கம் மிகவும் ஆதரிக்கிறது. அதன் சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கின்றன மற்றும் பாதுகாக்கின்றன, 100 சதவீதப் பங்கு உரிமையையும், இலாபங்களையும் மூலதனத்தையும் சுதந்திரமாக மாற்றவும் திருப்பி அனுப்பவும் உரிமையை வழங்குகின்றன. இருப்பினும், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முன் நிலைமையை கவனமாக படிக்க வேண்டும். பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சாத்தியமான சமூக மோதல்கள் போன்ற வணிகம் செய்வதன் மறைக்கப்பட்ட செலவுகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். விவசாய மாதிரிகளில் உள்ள வேறுபாடுகளும் முக்கியம். இந்தியா முக்கியமாக மேம்பட்ட விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அதேநேரத்தில் ஈக்வடார் பாதி-தீவிர (semi-intensive) அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. இந்த வேறுபாடு ஒத்துழைப்பு மற்றும் புதுமைக்கான சவாலாகவும் வாய்ப்பாகவும் இருக்கலாம்.


அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைத்து, நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய, இந்தியாவிற்கு ஒரு துணிச்சலான உத்தி தேவை. ஈக்வடாரின் செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட இறால் தொழிலில் முதலீடு செய்வதன் மூலம், இந்திய நிறுவனங்கள் வரிகளைத் தவிர்க்கலாம், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தலாம் மற்றும் உலக சந்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்தலாம். நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இந்திய வர்த்தக சபைகள் மற்றும் பெருநிறுவன வணிகக் குழுக்கள் இந்தியாவின் ஏற்றுமதி உத்தியை மறுவடிவமைக்கவும், உலகளாவிய இறால் சந்தையில் அதன் பங்கைப் பாதுகாக்கவும் இதை ஒரு வலுவான வாய்ப்பாகக் கருத வேண்டும்.


எம். கிருஷ்ணன், முன்னாள் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர், ICAR, மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மும்பை. கோபாலகிருஷ்ணன் புது தில்லியில் உள்ள CSEP அமைப்பின் மூத்த உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share:

இந்தியா, மந்தமான வளர்ச்சியிலிருந்து உலகை மீட்டெடுக்க உதவும் நிலையில் உள்ளது : பிரதமர் மோடி

 எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறினார்.


சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற அணுகுமுறையால், மெதுவான வளர்ச்சியை உலகம் கடக்க இந்தியா உதவும் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.


தனது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று மோடி விளக்கினார். சட்டத்தை எளிமையாக்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவைவரி (GST) சீர்திருத்தங்களின் அடுத்த கட்டம் தீபாவளிக்குமுன் நிறைவடையும் என்றும், விலைகளைக் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.


தூய எரிசக்தி, குவாண்டம் தொழில்நுட்பம், மின்கல சேமிப்பு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இது, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கை ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.


கடந்தகால சாதனைகளில் தான் திருப்தி அடையவில்லை என்றும், இந்த மனநிலை அரசாங்கத்தின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இயக்குகிறது என்றும் அவர் கூறினார்.


இந்தியாவில் சீர்திருத்தங்கள் அழுத்தம் அல்லது நெருக்கடியால் ஏற்படுவதில்லை. மாறாக, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையால் ஏற்படுகின்றன என்று பிரதமர் கூறினார். அரசாங்கம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும்.


இந்த அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை தேவையை அதிகரிக்கவும், தொழில்களுக்கு ஊக்கமளிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்க்கை முறையை எளிதாக்குதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் இரண்டையும் மேம்படுத்தவும் உதவும்.


எதிர்க்கட்சிகள் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும், சமீபத்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது அரசாங்கம் தொடர்ந்து சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது என்று அவர் மேலும் கூறினார்.


சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற யோசனையால் வழிநடத்தப்படும் இந்தியா, மெதுவான வளர்ச்சியிலிருந்து உலகம் மீள உதவும் நிலையில் உள்ளது.


உலகளாவிய சூழலில், இந்தியாவின் பொருளாதாரத்தின் வலிமை தெளிவாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.


இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு விரைவில் சுமார் 20 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடந்த பத்தாண்டுகளில் அடையப்பட்ட பொருளாதார நிலைத்தன்மை காரணமாக இந்த வளர்ச்சியும் வலிமையும் சாத்தியமாகும். நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய நிறுவனங்கள் மூலதனச் சந்தைகளில் இருந்து சாதனை நிதி திரட்டுகின்றன. வங்கிகள் முன்பைவிட வலுவாக உள்ளன. பணவீக்கம் குறைவாக உள்ளது. வட்டி விகிதங்களும் குறைவாக உள்ளன என்று மோடி விளக்கினார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு வலுவாக உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் SIPகள் மூலம் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்கிறார்கள்.


ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருக்கும்போது, ​​நேர்மறையான விளைவுகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்.


2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா வலுவாக நகர்ந்து வருவதாகவும், இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படை ஒரு சுயசார்பு இந்தியா என்றும் பிரதமர் மேலும் கூறினார். இதற்காக, நாடு வேகம், அளவு மற்றும் நோக்கம் போன்ற மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.


பிரபலமாகப் பயன்படுத்தப்படும் "பேருந்தை தவறவிடுதல் (Missing the Bus)" என்ற பதத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, வாய்ப்புகள் பயன்படுத்தப்படாவிட்டால் அவை கடந்து சென்றுவிடும் என்பதை விளக்கிய மோடி, இந்தியாவின் முந்தைய அரசாங்கங்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் இதுபோன்ற பல வாய்ப்புகளைத் தவறவிட்டதாகக் கூறினார்.


2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக மோடி கூறினார். வாய்ப்புகளை இழப்பதற்குப் பதிலாக, நாடு வழிநடத்தவும் முன்னேறவும் முடிவு செய்தது.


இந்தியா தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6G தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகள் இப்போது விரைவாக நடந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ₹50,000 கோடியாக இருந்தது. இன்று, அவை ஆண்டுதோறும் ₹1.2 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளன.


இந்தியா மெட்ரோ பெட்டிகள், ரயில் பெட்டிகள் மற்றும் விசைப்பொறி எந்திரங்களையும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.


100 நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா விரைவில் மற்றொரு மைல்கல்லை எட்டும் மற்றும் இது தொடர்பான ஒரு முக்கிய நிகழ்வு ஆகஸ்ட் 26 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.



Original article:

Share:

ஆற்றல் திறன் கண்காணிப்புக் குழுவை மேம்படுத்துதல் -ரிச்சா மிஸ்ரா

 புதிய விதிகளின் கீழ், எரிசக்தி திறன் பணியகம் (Bureau of Energy Efficiency (BEE)) இப்போது தணிக்கைகளை மேற்கொண்டு, விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அபராதங்களை விதிக்கலாம்.

எரிசக்தி பாதுகாப்பு சட்டம், 2001-ன் கீழ் விதிகளை வலுப்படுத்த, மின்சார அமைச்சகம் வரைவு எரிசக்தி பாதுகாப்பு (இணக்க அமலாக்க) விதிகள், 2025-யை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் எரிசக்தி திறன் பணியகத்திற்கு (BEE) கூடுதல் அதிகாரங்களை வழங்கும்.


எரிசக்தி திறன் பணியகம் (BEE) மீறல்களைக் கண்டறிதல், சரிசெய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்றவற்றை செய்ய முடியும். மேலும், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின்கீழ் உள்ள அதிகாரிகளுக்கு முன் வழக்குகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.


இந்த ஒழுங்குமுறை மாற்றம் தொழில்களை தங்கள் செயல்பாடுகளில் எரிசக்தி செயல்திறனைப் பின்பற்றத் தூண்டும். அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு, விதிகளைப் பின்பற்றுவது இனி விருப்பமாக இருக்காது. இது அவர்களின் செலவுகள் மற்றும் சந்தை நற்பெயரை நேரடியாகப் பாதிக்கும்.


ஆனால், ஒரு கேள்வி உள்ளது: 2025-ஆம் ஆண்டின் வரைவு விதிகள் எரிசக்தி-தீவிர துறைகளுக்கான இணக்க செயல்முறையை எவ்வாறு மாற்றும்?


எரிசக்தி பயன்பாடு நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுவதையும், சரியாக அறிக்கையிடப்படுவதையும், தேவைப்படும்போது சரி செய்யப்படுவதையும் உறுதிசெய்ய நிறுவனங்கள் என்ன அமைப்புகளை உருவாக்க வேண்டும்? வலுவான அமலாக்கம் இந்தியா எரிசக்தி திறன் மற்றும் காலநிலை இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேற உதவுமா?


அனைத்து துறைகளிலும் எரிசக்தியை திறமையாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் கோருவதற்கும் எரிசக்தி பாதுகாப்பு சட்டம் (Energy Conservation Act), 2001 நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எரிசக்தி திறன் பணியகத்தையும் (BEE) உருவாக்கியது.


அதிகாரமளிக்கும் செயல்


Teamlease Regtech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ரிஷி அகர்வால், வரைவு விதிகள் சிமென்ட், எஃகு, ஆட்டோமொடிவ் மற்றும் உற்பத்தி போன்ற எரிசக்தி சார்ந்த துறைகளுக்கான செயல்முறையை மாற்றும் என்று கூறினார். முன்னதாக, அறிக்கையிடல் தன்னார்வமாக இருந்தது. ஆனால், இப்போது எரிசக்தி திறன் பணியகம் (BEE) தணிக்கைகள், ஆய்வுகள் மற்றும் ஆய்வக சோதனை மூலம் தரநிலைகளை அமல்படுத்தும். BEE மீறல்களைக் கண்டறிந்து, அறிவிப்புகளை வெளியிட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் (SERCs) கீழ் உள்ள தீர்ப்பளிக்கும் அதிகாரிகளிடம் வழக்குகளை சமர்ப்பிக்க முடியும். இது ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது.


சட்டம் இப்போது ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதால், இது அதிக ஒழுங்குமுறை கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார். நிலையான இலக்குகளை நோக்கி நகரும் நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு எரிசக்தி செயல்திறனை மையமாகக் கொள்ளத் தள்ளப்படும்.


பிரிவு 13A (எரிசக்தி சார்ந்த துறைகள்)-ன் கீழ் உள்ள நிறுவனங்கள், பிரிவு 14-ன் கீழ் உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள், பிரிவு 14(e), 14(n), 14(x)-ன் கீழ் நியமிக்கப்பட்ட நுகர்வோர் மற்றும் சட்டத்தின் கீழ் உள்ள பிற நிறுவனங்களுக்கு விதிகள் பொருந்தும். உற்பத்தி மற்றும் தயாரிப்புகளில் எரிசக்தி பயன்பாடு குறித்த சோதனைகளை அவர்கள் அதிகரிக்கின்றனர். வாகனத் துறைக்கான பெருநிறுவன சராசரி எரிபொருள் திறன் (Corporate Average Fuel Efficiency (CAFE)) விதிமுறைகள் இதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.


நிறுவனங்கள் இதற்கு இணங்கவில்லை என்றால், அவர்கள் ₹10 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும். இது மத்திய எரிசக்தி பாதுகாப்பு நிதிக்குச் செல்லும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் நிறுவனத்தின் இருப்பிடத்தின் அடிப்படையில் வழக்குகளைக் கையாளும். இது அதிகார வரம்பை தெளிவுபடுத்துகிறது. இதன் பொருள் நிறுவனங்கள் கடுமையான இணக்கத்தைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அபராதங்கள், நற்பெயர் இழப்பு அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்க தங்கள் செயல்பாடுகளில் எரிசக்தி செயல்திறனைச் சேர்க்க வேண்டும்.


இந்த விதிகள் இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய 2070 இலக்கையும், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (NDCs) இலக்குகளையும் ஆதரிக்கின்றன. அவை செயல்திறன், சாதனை மற்றும் வர்த்தகம் (Perform, Achieve, and Trade (PAT)) scheme)) திட்டம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு கட்டிடக் குறியீடு (Energy Conservation Building Code (ECBC)) மூலம் ஆற்றல் பாதுகாப்பை ஊக்குவிக்கின்றன. இந்த தரநிலைகளை பூர்த்திசெய்ய நிறுவனங்கள் பயனுள்ள கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலைப் பயன்படுத்த வேண்டும். இது பொருளாதாரம் முழுவதும் திறமையான எரிசக்தி பயன்பாட்டிற்கான வலுவான அமைப்பை உருவாக்க உதவும் என்று அகர்வால் கூறினார்.


முன்மொழியப்பட்ட விதிகளைப் பின்பற்ற, எரிசக்தி-தீவிர தொழில்களுக்கு நிகழ்நேர கண்காணிப்பு, துல்லியமான அறிக்கையிடல் மற்றும் விரைவான திருத்த நடவடிக்கைக்கு வலுவான அமைப்புகள் தேவை.


உபகரணங்கள் மற்றும் அலகு மட்டங்களில் ஆற்றல் பயன்பாட்டைக் கண்காணிக்க IoT-இயக்கப்பட்ட சென்சார்கள் மற்றும் எரிசக்தி மேலாண்மை அமைப்புகளைப் பயன்படுத்துவது ஒரு நல்ல நடைமுறையாக இருக்கலாம். இந்த கருவிகள் PAT, CAFE அல்லது ECBC போன்ற தரநிலைகளிலிருந்து விலகல்களைக் கண்டறிய உதவுகின்றன மற்றும் மீறல்கள் நிகழும் முன் விரைவான திருத்தங்களை அனுமதிக்கின்றன. வெவ்வேறு ஆலைகள் மற்றும் துணை நிறுவனங்களிலிருந்து தரவை இணைக்க ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் அறிக்கையிடல் அமைப்பும் அமைக்கப்பட வேண்டும். இந்த தானியங்கி அமைப்புகள் பின்னர் ஆற்றல் செயல்திறன் தரவை BEE இணக்கத் தேவைகளுடன் இணைக்கலாம், கையேடு பிழைகளைக் குறைக்கலாம் மற்றும் ஒழுங்குமுறை சமர்ப்பிப்புகளை எளிதாக்கலாம்.


காலநிலை உறுதிமொழிகள்


இந்த விதிகளின் வெற்றி, அவை எவ்வளவு சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. பல நிபுணர்களின் கூற்றுப்படி, வலுவான அமலாக்கம் இந்தியாவின் ஆற்றல் திறன் மற்றும் காலநிலை இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.


இதுவரை, இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலும் சுய அறிக்கையிடலைச் சார்ந்துள்ளது. இது சீரற்ற இணக்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்கும் வழிவகுத்தது. எரிசக்தி திறன் பணியகத்திற்கு (BEE) விதிகளைச் செயல்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது பொறுப்புணர்வைக் கொண்டுவரும், மீறல்களைத் தடுக்கும் மற்றும் அமைப்பில் ஒழுக்கத்தை உருவாக்கும்.


வலுவான அமலாக்கம் ஆற்றல் பயன்பாடு குறித்த மிகவும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் தரவு சேகரிப்பை மேம்படுத்தும். இது கொள்கை வகுப்பாளர்கள் சிறந்த இலக்கு தீர்வுகளை வடிவமைக்க உதவும். விதிகள் தன்னார்வ எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளிலிருந்து கட்டாய செயல்திறனுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நீண்ட காலத்திற்கு, இது ஆற்றல் வீணாவதைக் குறைக்கும், நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியா அதன் காலநிலை உறுதிப்பாடுகளுடன் தொடர்ந்து பாதையில் இருக்க உதவும்.


இந்த விதிகள் முறையாக செயல்படுத்தப்பட்டால், அவை தொழிற்சாலைகளையும் நியமிக்கப்பட்ட நுகர்வோரையும் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தத் தூண்டும், இது புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான தேவையை அதிகரிக்கும். வழக்கமான அறிக்கையிடல், மூன்றாம் தரப்பு தணிக்கைகள் மற்றும் கடுமையான சோதனைகள் சந்தை ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள், குறிப்பாக கடமைப்பட்ட நிறுவனங்களிடையே, மிகவும் நம்பகமான மற்றும் இணக்கமான வாங்குபவர்களின் குழுவைக் கொண்டிருப்பதன் மூலம் பயனடைவார்கள்.


இணங்காத நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதங்கள் மத்திய எரிசக்தி பாதுகாப்பு நிதிக்குச் செல்வதால், மாநிலங்கள் அதிக ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. இதில் 90 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், மத்திய நிதியிலிருந்து இந்தப் பணத்தை அணுகுவது மெதுவான மற்றும் கடினமான செயல்முறை என்பதால் மாநிலங்கள் கவலைப்படுகின்றன.


இந்தியா போன்ற வேகமாக வளர்ந்துவரும் மற்றும் எரிசக்தி தேவைக் கொண்ட பொருளாதாரத்திற்கு, எரிசக்தி திறன் மிகவும் முக்கியமானது. முன்மொழியப்பட்ட விதிகள், அமல்படுத்தப்பட்டால், எரிசக்தி திறன் விதிமுறைகள் மற்றும் புதைபடிவ எரிபொருள் அல்லாத பயன்பாட்டுக் கடமைகளை வலுப்படுத்துவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவையை அதிகரிக்கலாம்.


உலகளவில், வலுவான இணக்கம், 2070-ஆம் ஆண்டுக்குள் அதன் பாரிஸ் ஒப்பந்த உறுதிமொழிகளையும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கையும் அடைவதில் இந்தியாவின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். அமலாக்கம் வலுவடையும்போது, ​​இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுடன் எரிசக்தி செயல்திறனை சிறப்பாக சீரமைக்க முடியும், இது ஒட்டுமொத்த உமிழ்வு தீவிரத்தை குறைக்க உதவும்.


Original article:

Share:

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTGs) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இறுதி செய்யப்பட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) தனித்தனியாக கணக்கிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) முழுவதும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் உள்ளன. அவை குறைந்த கல்வியறிவு நிலைகள், புவியியல் தொலைதூரத்தன்மை, விவசாயத்திற்கு முந்தைய தொழில்நுட்ப நிலை மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டன.

— 40 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் 'ஒற்றை நுழைவு' (single entry) என திட்டமிடப்பட்டுள்ளன மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பரந்த பட்டியல் பழங்குடியினர் (STs) பிரிவின் கீழ் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக, முந்தைய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்த 40 குழுக்கள் அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குகுடியினர் ஒரு பகுதியாக இருந்ததால் கணக்கிடப்பட்டன.


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் மக்கள்தொகையில் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றாகும். எனவே அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக-பொருளாதார குறிகாட்டிகள் குறித்த ‘ஒருங்கிணைந்த தரவுத்தளம்’ (consolidated database) இருப்பது அவசியம் என்று அமைச்சகம் கூறியது.


— ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில பழங்குடி அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் A B Ota, 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் 40 பேர் குடியரசுத்தலைவரின் உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் உள்ளன என்றார்.


— பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN)) திட்டம் போன்ற சமீபத்திய முயற்சிகள் சில தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ள போதிலும், ‘தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் கணக்கீட்டை நிறுவனமயமாக்குவதன் அவசியம் குறித்து வளர்ந்து வரும் ஒருமித்த கருத்து உள்ளது’ என்று Ota கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா:


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு என்பது வழக்கமான பட்டியல் பழங்குடியினர்களை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படும் பட்டியல்  பழங்குடியினர்கள் அல்லது பட்டியல் பழங்குடியினர்களின் ஒரு பிரிவின் துணை வகைப்பாடு ஆகும். அழிந்து வரும் பழங்குடி குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு பட்டியல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.


— 1960-61ஆம் ஆண்டில், தேபார் ஆணையம், பட்டியல் பழங்குடியினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்தது. இது ‘பழமையான பழங்குடி குழுக்கள்’ (Primitive Tribal Groups (PTG)) வகையை உருவாக்க வழிவகுத்தது. 2006-ஆம் ஆண்டில், இந்தக் குழுவிற்கு புதிய பெயர் வழங்கப்பட்டது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்  என மறுபெயரிடப்பட்டது.


— நவம்பர் 2023-ல், பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டில் PM-JANMAN திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (PVTGs) வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களின் ஊரகப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு சாலைகள், சுகாதார மையங்கள் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை விஷயங்களை விரைவாக வழங்குவதே இதன் இலக்காகும். இது ஒன்பது அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


— திட்டம் தொடங்கப்பட்டபோது, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை 28 லட்சம் என்று ஒன்றிய அரசு கூறியது. பழங்குடியினர் விவகார அமைச்சகமும் (Ministry of Tribal Affairs (MoTA)) மாநிலங்களும் PM Gati Shakti அலைபேசி செயலியைப் பயன்படுத்தி ஊரகப் பகுதிகள் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரித்தன. இது அங்கு எத்தனை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள் வசிக்கிறார்கள், எதன் அடிப்படை சேவைகள் அல்லது வசதிகள் இல்லை என்பதைக் கண்டறிய அவர்களுக்கு உதவியது.


— அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த மாதம் மக்களவையில் பழங்குடியினர் விவகார அமைச்சக அளித்த பதிலின்படி, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள் தொகை 45.56 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள்தொகை அடிப்படையில் மத்தியப் பிரதேசம் (12.28 லட்சம்), மகாராஷ்டிரா (6.2 லட்சம்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (4.9 லட்சம்) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.



Original article:

Share: