சதுப்பு நில நிலைத்தன்மைக்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த அணுகுமுறை. - ரேணுகா

 ராம்சர் CoP15-ல், இந்தியா “சதுப்பு நிலங்களை சாதுர்யமாகப் பயன்படுத்துவதற்கான நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்” (Promoting Sustainable Lifestyles for the Wise Use of Wetlands) என்ற தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது. கேள்வி என்னவென்றால், சட்ட அமலாக்கம், நடத்தை மாற்றம் மற்றும் கழிவு நிர்வாகம் ஆகியவை இந்தியா தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்? என்பதுதான். ஆனால், இதைச் சிறப்பாகச் செய்தால், இது இந்தியாவை நிலையான சுற்றுச்சூழல் மேற்பார்வைக்கு ஒரு முன்மாதிரியாக மாற்றும்.


சதுப்புலங்கள் (Wetlands), புவியில் மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை, நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் சூழல்களுக்கு இடையிலான இடைநிலை மண்டலங்களாக (transitional zones) செயல்படுகின்றன. அவை, நிரந்தரமாக அல்லது சில பருவங்களில் மட்டுமே தண்ணீரை வைத்திருக்க முடியும். இந்த நீர் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளை ஆதரிக்கிறது. சதுப்பு நிலங்கள், பல்லுயிர் வளம் நிறைந்தவை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சியில் நடைபெற்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் குறித்த மாநாட்டின் ராம்சர் 15-வது மாநாட்டில் (CoP15), இந்தியா ஒரு தீவிர பங்கைக் கொண்டிருந்தது. சதுப்பு நிலங்களை சாதுர்யமாகப் பயன்படுத்துவதற்கான நிலையான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவது குறித்த தீர்மானத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த தீர்மானமும் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சதுப்பு நிலப் பாதுகாப்பில் நடத்தை மாற்றம் மற்றும் நிலையான நுகர்வு முறைகளின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இது UNFCCC COP 26-ல் இந்தியாவால் தொடங்கப்பட்ட வாழ்க்கைத் திட்டம்-Mission LiFE (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை-Lifestyle for Environment) உடன் இணைகிற., இது இந்தியாவை புவிச் சார்பு நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கிறது. 


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் பெரும் அச்சுறுத்தல்கள்


சதுப்பு நிலங்கள் பூமியின் நிலப்பரப்பில் சுமார் 6 சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கியது. இருப்பினும், அவை கிட்டத்தட்ட 40 சதவீத தாவர மற்றும் விலங்கு இனங்களுக்கு வாழ்விடத்தையும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களையும் வழங்குகின்றன. புயல் அலைகள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகளின் தாக்கத்தைத் தணிப்பதன் மூலம் கடற்கரையோரங்களில் வாழும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அவை இயற்கையான பாதுகாப்பை வழங்குகின்றன. சதுப்பு நிலங்கள் மனிதர்களுக்கு உணவு மற்றும் தீவனம், முக்கியமாக அரிசி மற்றும் மீன் போன்றவற்றை வழங்குகிறது. மேலும், இது மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலிய சுற்றுலா மூலம் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.  


கூடுதலாக, சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை இயற்கைக் கடற்பாசிகளாகச் செயல்படுவதால், அதிகப்படியான மழையை உறிஞ்சி, வெள்ள அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. அவை, மண் மற்றும் உயிரித் திரவங்களில் கார்பனைச் சேமித்து வைப்பதால் அவை பயனுள்ள கார்பன் மூழ்கிகளாகும். இதற்கு அப்பால், மாசுகளை வடிகட்டுதல், தண்ணீரை சுத்திகரித்தல் மற்றும் நீரின் தரத்தை பராமரிக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக அவை பெரும்பாலும் 'நிலப்பரப்பின் சிறுநீரகம்' (kidney of the landscape) என்று அழைக்கப்படுகின்றன. 


சதுப்பு நிலங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், அவை பூமியில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். 1970 மற்றும் 2020-க்கு இடையில், உலகம் அதன் 35%-க்கும் அதிகமான சதுப்பு நிலங்களை இழந்தது. விவசாயத்திற்கான நில மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை சதுப்பு நிலப் பகுதிகள் குறைந்து வருவதற்கு முக்கியக் காரணங்களாகும். மேலும், தொழில்துறை மற்றும் வீட்டுக் கழிவுகள் சதுப்பு நிலங்களை மாசுபடுத்துகின்றன. மேலும், நீடிக்க முடியாத வேளாண் நடைமுறைகள் நீரியியலை (hydrology) சீர்குலைக்கிறது. காலநிலை மாற்றம் மழைப்பொழிவு முறைகளை மாற்றுவதன் மூலமும், மிகவும் தீவிரமான நிகழ்வுகளை ஏற்படுத்துவதன் மூலமும் இந்தப் பிரச்சினைகளை மோசமாக்குகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, ஒரு சர்வதேச சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 


உலகளாவிய சட்ட கட்டமைப்பு : ராம்சார் ஒப்பந்தம் 


ராம்சார் மாநாடு 1971-ல் ஈரானில் உள்ள ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் இது 1975-ல் நடைமுறைக்கு வந்தது. இது ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அமைப்பு, அதாவது சதுப்பு நிலங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்திய முதல் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும். இந்த மாநாடு சதுப்பு நிலங்களுக்கு பரந்த வரையறையை அளிக்கிறது. இது சதுப்பு நிலங்கள், ஃபென்கள், பீட்லேண்ட்ஸ் மற்றும் நீர்நிலைகளை உள்ளடக்கியது. இயற்கையான அல்லது செயற்கையான, நிரந்தரமான அல்லது தற்காலிகமான சதுப்பு நிலங்களும் இதில் அடங்கும். இது மூன்று முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. 1.சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல். 2.ஒரு நாட்டிற்குள் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களின் புத்திசாலித்தனமான பயன்பாட்டை ஊக்குவித்தல். 3.பகிரப்பட்ட சதுப்பு நிலங்கள் மற்றும் புலம்பெயர்ந்த உயிரினங்கள் குறித்த சர்வதேச ஒத்துழைப்பு போன்றவைகள் ஆகும்.


மாநாட்டின் முக்கியக் கொள்கையானது சதுப்பு நிலங்களின் "சாதுர்யமான பயன்பாடு" (wise use) ஆகும். அதாவது "நிலையான வளர்ச்சியின் பின்னணியில் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் புவி அடையக்கூடிய அவற்றின் சுற்றுச்சூழல் தன்மையைப் பராமரித்தல்" போன்றவற்றை உள்ளடக்கியது. 


மாநாட்டில் 172 நாடுகள் உள்ளன. மேலும், நாடுகள் 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில்' (List of Wetlands of International Importance) சேர்ப்பதற்கு சுற்றுச்சூழல், தாவரவியல், விலங்கியல், நீர்நிலை ஆய்வு (limnological) அல்லது நீரியல் முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களை பரிந்துரைக்க வேண்டும். இதன் பட்டியலின்கீழ் 2,544 சதுப்புலங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஒப்பந்த நாடுகள் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் எல்லைகடந்த சதுப்பு நிலங்கள் மற்றும் பகிரப்பட்ட நீர் அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும். சதுப்பு நிலங்கள் மற்றும் அவை சார்ந்த பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் ஒருங்கிணைப்பை இது மேலும் கோருகிறது. 

ராம்சார் CoP15 : புதுப்பிக்கப்பட்ட பொறுப்புகள் 


ஒவ்வொரு ஒப்பந்த நாடுகளின் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் (CoP) சந்திக்கிறார்கள். இந்தக் கூட்டம் கூட்டுறவு என்று அழைக்கப்படுகிறது. கூட்டுறவு 15-ன் கருப்பொருள் "நமது பொதுவான எதிர்காலத்திற்காக சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல்" (Protecting Wetlands for Our Common Future) மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம், பல்லுயிர் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் சதுப்பு நிலங்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. மற்ற சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள், வலுவான நிறுவனங்கள், பரந்த கூட்டாண்மை மற்றும் போதுமான நிதி உதவி ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இது 2025-2034 காலக்கெடுவுடன் சதுப்பு நிலங்கள் மீதான மாநாட்டின் 5-வது உத்திக்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இந்தத் திட்டத்தின் பார்வை என்னவென்றால், சதுப்பு நிலங்கள் மதிப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டு, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டு, ஆரோக்கியமான புவியை ஆதரிக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் நன்மைகளை வழங்க வேண்டும்.


ராம்சார் கூட்டுறவு சங்கம் 15-ல், ”சதுப்பு நிலங்களை சாதூர்யமாகப் பயன்படுத்துவதற்கான நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் இந்தியா ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 30, 2025 அன்று முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஜூலை 30, 2025 அன்று முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தீர்மானம் சதுப்புலங்களைப் பாதுகாப்பதில் தனிநபர் மற்றும் சமூகத் தேர்வுகளின் பங்கை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய கட்டமைப்புகளுடன் சீரமைக்கிறது. கல்வி, விழிப்புணர்வு, ஒத்துழைப்பு மற்றும் முதலீடு மூலம் சதுப்பு நில மேலாண்மையில் நிலையான வாழ்க்கை முறை நடைமுறைகளை தன்னார்வமாக ஒருங்கிணைக்க இது அழைப்பு விடுக்கிறது. 


இந்தியாவில் சதுப்பு நிலப் பாதுகாப்பு


சதுப்பு நிலங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது 16.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 1309 சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 91 ராம்சார் மாநாட்டின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய மக்கள்தொகையில் குறைந்தது 6 சதவீதம் பேர் சதுப்பு நிலங்களை நேரடியாகச் சார்ந்து வாழ்கின்றனர். சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 


சதுப்பு நில விதிகள், 2017, சதுப்பு நில விதிகள், 2010-ஐ மாற்றியது. இந்த விதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அறிவிக்கப்படுகின்றன. சதுப்பு நிலங்களை சதுப்பு நிலமற்ற பயன்பாட்டிற்காக மாற்றுவது, தொழில்துறை ஆக்கிரமிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் மற்றும் வெளியேற்றுதல், கட்டுமானம் மற்றும் வேட்டையாடுதல் போன்ற நடவடிக்கைகளை அவை கட்டுப்படுத்துகின்றன. இந்த விதிகளை செயல்படுத்த, தேசிய சதுப்பு நிலக் குழு மற்றும் மாநில சதுப்பு நில அதிகாரிகள் உருவாக்கப்பட்டனர்.


கொள்கை அடிப்படையில், சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக, நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான தேசியத் திட்டம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில், சதுப்பு நிலப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக திட்டம் சஹ்பகீதாவின் (Mission Sahbhagita) கீழ் சதுப்பு நிலத்தை சேமித்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இது சதுப்பு நிலத்தை ‘அம்ரித் தரோஹர்’ (Amrit Darohar) என்று கருதுகிறது மற்றும் நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை, தொடர்பு, கல்வி, பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு (CEPA) போன்றவை ஆகும். 


இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவில் ஈரநிலங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. பல காரணங்களால் அவை சீரழிந்து வருகின்றன. அனைத்து காரணிகளிலும், சதுப்பு நிலங்களை இழப்பதற்கு விவசாயம் முக்கிய காரணமாக உள்ளது. அதைத் தொடர்ந்து நகரமயமாக்கல் மற்றும் தொழில்கள் முக்கியக் காரணமாகும். பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில், விவசாயம் மற்றும் நகர்ப்புற கட்டுமானத்திற்காக ஈரநிலங்களை மாற்றுதல். கடலோர மாநிலங்களில், நீடிக்க முடியாத மீன்வளர்ப்பு, குறிப்பாக இறால் வளர்ப்பு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவை பல ஈரநிலங்களை சீரழித்துள்ளன. மேலும், நகர்ப்புற மாசுபாடு பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் ஏரி மற்றும் மணிப்பூரில் உள்ள லோக்டாக் ஏரி போன்ற ஈரநிலங்களை கடுமையாக பாதித்துள்ளது. இமயமலை மாநிலங்களில் உள்ள ஈரநிலங்கள் கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், நீடிக்க முடியாத சுற்றுலா மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.  


நடத்தை மாற்றம் தேவை 


சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது மற்றும் காப்பது அவற்றின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக முக்கியமானது. ராம்சார் CoP15-ல் இந்தியாவின் செயல்திறன்மிக்க பங்கு, அதன் தீர்மானத்தின் மூலம், பாதுகாப்பு உரையாடலை முற்றிலும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளிலிருந்து நடத்தை மாற்றம் மற்றும் சமூக பங்கேற்பிற்கு மாற்றுவதற்கான முயற்சியை பிரதிபலிக்கிறது. இருப்பினும், இந்த பார்வையை நிஜமாக்குவதற்கு, இந்தியா ஈரநிலங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும்.


இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க, சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதைக் கடுமையாகக் கையாள வேண்டும். இதற்கு, சதுப்பு நில விதிகள், 2017-ஐ கடுமையாக அமல்படுத்துவது உதவும். பலவீனமான அமலாக்கம், ஒரு உறுதியான கொள்கை கட்டமைப்பு இருந்தபோதிலும் சீரழிவை நீடிக்க அனுமதித்துள்ளது. மேலும், பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு இன்றியமையாதது. ஏனெனில், உள்ளூர் மக்கள் சதுப்பு நிலங்களின் பயனாளிகளாகவும் பாதுகாவலர்களாகவும் உள்ளனர். சதுப்பு நிலங்களின் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மைக்கு ஆதரவாக நீடித்த மற்றும் போதுமான நிதியுதவியும் சமமாக முக்கியமானது. 


சட்ட அமலாக்கம், நடத்தை மாற்றம் மற்றும் சிறந்த கழிவு மேலாண்மை ஆகியவற்றை இணைப்பதன் மூலம், "சதுப்பு நிலங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான" தனது உறுதிப்பாட்டை இந்தியா அடைய முடியும். இந்த அணுகுமுறை நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு ஒரு முன்மாதிரியாகவும் அமையும்.



Original article:

Share:

புலம்பெயர்ந்தோரை அரவணைக்கும் நகரங்களை உருவாக்குதல். — குல்தீப்சிங் ராஜ்புத்

 நகர்ப்புற பொருளாதாரத்திற்கு அவசியமானவர்களாக இருந்தும், இடம்பெயர்ந்தோர் ஏன் நகர்ப்புறத் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள்? நகரங்களை உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக இடங்களாக மாற்றுவது ஏன் நமது காலத்தின் முக்கியமான தேவையாக உள்ளது?


இந்திய நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான மக்களை ஈர்க்கின்றன. வாழ்வாதாரம், வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உள்நாட்டு புலம்பெயர்ந்தோரை ஈர்க்கிறது. 2024-ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி (International Labour Organisation) இந்தியாவில் நகரமயமாக்கல் விகிதம் வரும் ஆண்டுகளில் கணிசமாக உயரும் என்றும், இது இடம்பெயர்வை (migration) அதிகரிக்க செய்யும் என்றும் கூறுகிறது.


இடம்பெயர்வு 2030ஆம் ஆண்டுக்குள் 40 சதவீத நகரமயமாக்கல் வீதத்திற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக நகர்ப்புற மக்கள் தொகை 607 மில்லியனாக இருக்கும். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இடம்பெயர்வு (2020-2021) அறிக்கையின்படி, இடம்பெயர்ந்தோர் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை உருவாக்குகின்றனர் என்றும் நாட்டின் நகர்ப்புறவாசிகளில் 34.6 சதவீதம் பேர் இருப்பதாக மதிப்பிடுகிறது.


இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாளர்கள் மற்றும் குறிப்பாக நகர்ப்புற பொருளாதாரத்திற்கு முக்கியமானவர்களாக மாறியுள்ளனர். இது வளர்ச்சியின் முக்கியமானவர்களாக உருவாகி வருகிறது. கட்டுமானம், தோட்டங்கள், சுரங்கங்கள், உற்பத்தி, விருந்தோம்பல், போக்குவரத்து, வீட்டுவேலை மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் கிக் மற்றும் தளம் சார்ந்த நகர்ப்புற பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் முதுகெலும்பாக அவை அமைகின்றன.


அவர்களின் அத்தியாவசிய பங்களிப்பு இருந்தபோதிலும், இடம்பெயர்ந்தோர் முக்கியமாக நகர்ப்புறத் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் இருந்து விலகியே இருக்கின்றனர். இதன் விளைவாக இலக்கு நகரங்களில் விமர்சன ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். இடம்பெயர்ந்தோர் நகர்ப்புற பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். இருப்பினும், அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

உலகளாவிய நகரங்களில் கண்ணுக்கு தெரியாத இடம்பெயர்ந்தோர்


சமூகவியல் அறிஞர் சசியா சசென் தனது நூலான உலகளாவிய நகரம்: ‘The Global City: New York, London, Tokyo 1991’ என்ற புத்தகத்தில், உலகளாவிய நகர்ப்புறத்தின் ஆதிக்க கதைகளில் அத்தகைய முக்கியமான தொழிலார்கள் பெரும்பாலும் 'கண்ணுக்குத் தெரியாததாக' மாற்றப்படுகிறது என்று வாதிடுகிறார். அவரது பிரபலமான கருத்து 'உலகளாவிய நகரம்' (global city) குறைந்த செலவு, நெகிழ்வான தொழிலாளர் எவ்வாறு உயர் லாபம் தரும் துறைகளை நகர்ப்புற நிர்வாகத்தில் ஒருங்கிணைக்கப்படாமல் ஆதரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்திய நகரங்கள் வளர இடம்பெயர்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களைச் சார்ந்துள்ளன. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் பெரும்பாலும் அவர்களின் இருப்பு, உரிமைகள் மற்றும் பங்களிப்புகளைப் புறக்கணிக்கின்றனர். இது இன்றும் பல நகரங்களில் மற்றும் நியாயமற்ற சூழலாக உள்ளது.


இந்த மறைவு தற்செயலானது அல்ல, மாறாக உலகளாவிய நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று சாசென் விளக்குகிறார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இடம்பெயர்ந்தோரின் வெளியேற்றம் இடம்பெயர்ந்தோரிடையே இந்த முறையான பாதிப்புகளை வெளிப்படையாக அம்பலப்படுத்தியது. இடம்பெயர்ந்தோர் மற்றும் பிற நகர்ப்புற ஏழைகளுக்கு உள்ளடக்கிய மற்றும் பதிலளிக்கக்கூடிய நகர்ப்புற நிர்வாகத்திற்கான அவசரத் தேவையை இது  எடுத்துக்காட்டுகிறது.


இருப்பினும், உலகம் 'புதிய இயல்பு' (new normal) என்று அழைக்கப்படும் நிலைக்கு முன்னேறும்போது, நெருக்கடியின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் புறக்கணிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயனுள்ள உள்ளடக்கத்திற்கான அரசாங்கத்தின் வரைவு தேசிய இடப்பெயர்வு கொள்கை (2021) குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் கொள்கை இடைவெளி சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் (Smart City Mission (SCM)) வெளிப்படையாக தெரிகிறது.


01. ‘உலகளாவிய நகரம்’  (global city) என்பதன் கருத்து என்ன?

சமூகவியல் அறிஞர் சசியா சசென் தனது நூலான உலகளாவிய நகரம்: ‘The Global City: New York, London, Tokyo 1991’ என்ற புத்தகத்தில் இடம்பெறுகிறது. இது உலகளாவிய பொருளாதார அமைப்பில் முக்கிய முனைகளாக செயல்படும் நகரங்களைக் குறிக்கிறது. இந்த நகரங்கள் பெரும்பாலும் நகர்ப்புற நிர்வாகத்தில் ஒருங்கிணைக்கப்படாமல் குறைந்த விலை, நெகிழ்வான தொழிலாளர்களையே நம்பியுள்ளன.


02. 'அறிவார்ந்த வன்முறை' (epistemic violence) என்ற சொல்லை யார் உருவாக்கினார் மற்றும் அதன் அர்த்தம் என்ன?


காயத்ரி ஸ்பிவக்கின் அறிவார்ந்த வன்முறை என்ற கருத்து, பிந்தைய காலனித்துவ விமர்சனத்தில் வேரூன்றியுள்ளது (அறிவார்ந்த என்பது சில நேரங்களில் 'அறிவு தொடர்பான' என்று பொருள்படும்) அறிவார்ந்த வன்முறை உற்பத்தி மற்றும் பிரதிநிதித்துவ மட்டத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் ஓரங்கட்டப்படுதல் (marginalisation) மற்றும் பாகுபாடு காட்டப்படுவதற்கு (discrimination) வழிவகுக்கிறது.


03. 'குறியீட்டு வன்முறை' என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது?


பியர் போர்டியூ முதன்முதலில் குறியீட்டு வன்முறை (symbolic violence) என்ற கருத்தை வரையறுத்தார். இது சமூக விதிமுறைகள் மற்றும் நிறுவன நடைமுறைகளின் மூலம் ஏற்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவத்தை விவரிக்க பயன்படுத்தினார். பெரும்பாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடு காட்டப்படுவதற்கு வழிவகுக்கிறது.


சீர்மிகு நகரங்கள்  (smart cities) ஏன் 'உள்ளடக்கியதாக' இருக்க வேண்டும்?


வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த 'சீர்மிகு' தீர்வுகளான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் 100 நகரங்களை மாற்றுவதற்காக சீர்மிகு நகரங்கள் திட்டம் ஜூன் 2015-ல் தொடங்கப்பட்டது.  பத்திரிகை தகவல் பணியகத்தின் (ஜூன் 2025) தகவலின்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மொத்தம் 8,067 திட்டங்களில் 94 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதில் 1.64 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த பத்தாண்டுகளில், அந்த நிதியில் பெரும் பகுதி, பெருநகரங்கள், மேம்பாலங்கள், விரைவுச் சாலைகள் மற்றும் சொகுசு வளாகங்கள் போன்ற இயற்பியல் உள்கட்டமைப்பு மற்றும் இடம்சார்ந்த மறுவடிவமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நகர்ப்புற வானலைகளை மறுவடிவமைத்து நகர்ப்புறத்தின் அழகியல் பார்வையை முன்னேற்றக்கூடும் என்றாலும், அவை ஒரே நேரத்தில் இடம்பெயர்ந்தோர் போன்ற நகர்ப்புற குழுக்களை ஓரங்கட்டும் பிரத்யேக இடங்களை உருவாக்குகின்றன.


நகர்ப்புற ஏழைகள், குறிப்பாக இடம்பெயர்ந்தோர் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்களை ஓரங்கட்டும்போது, சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் உள்ள முயற்சிகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் உயரடுக்கின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அறிஞர்கள் வாதிட்டனர். இதன் விளைவாக, நகரங்கள் தொழில்நுட்ப ரீதியாக 'திறமையானதாக’ மாறியிருக்கலாம். ஆனால், அவை பெரும்பாலும் சமூகநீதி மற்றும் உள்ளடக்கியதாக மாறத் தவறிவிடுகின்றன. 


ஓரங்கட்டுதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆக்கப்பட்டது 


சீர்மிகு நகரம் என்ற கருத்தின் வளர்ச்சியின் அடிப்படை அனுமானங்களை பகுப்பாய்வு செய்வதன்மூலம் சீர்மிகு நகரத் திட்டத்தையும் ஆராயலாம். காயத்ரி ஸ்பிவாக்கின் 'அறிவார்ந்த வன்முறை' (epistemic violence) கருத்து, காலனித்துவத்திற்குப் பின்னான விமர்சனத்தில் வேரூன்றியது (அறிவார்ந்த என்பது சில நேரங்களில் 'அறிவு அல்லது அறிவுக் கோட்பாட் தொடர்பான' என்று பொருள்படும்). அறிவு அமைப்பின் மூலம் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு பயனுள்ள பார்வையை வழங்குகிறது.


திறமையான, புத்திசாலித்தனமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சீர்மிகு நகரத் திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையின் கட்டுமானம் மற்றும் சட்டப்பூர்வமாக நகர்ப்புறக் கொள்கை உரையாடலில் ஆழமாக உள்ளது. நகர்ப்புற திட்டமிடுபவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சீர்மிகு நகர திட்டம் தொடர்பான தனியார் அமைப்புகள் நகரத்தை எவ்வாறு உணர்கிறார்கள் மற்றும் அதன் 'சரியான' குடிமக்களை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை இது வடிவமைக்கிறது. இதையொட்டி, சீர்மிகு நகரத் திட்டத்தின் அறிவு மாதிரியானது, நகர வளர்ச்சித் திட்டத்தில் இடம்பெயர்ந்தோர், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளின் கண்ணுக்குத் தெரியாததை சட்டப்பூர்வமாக்கும் மற்றும் இயல்பாக்கும் விலக்கு யோசனைகள் மற்றும் அதிகார அமைப்புகளை வடிவமைத்துள்ளது. 


இந்த இயக்கவியல் Pierre Bourdieu-ன் 'குறியீட்டு வன்முறை' (symbolic violence) என்ற கருத்தாக்கத்துடன் எதிரொலிக்கிறது. இது இயல்பான தன்மை மற்றும் பொருத்தமாக மாறுவேடமிட்ட புறக்கணிப்பு அல்லது ஓரங்கட்டல் ஆகும். உடல்ரீதியான வன்முறையைப் போல் இல்லாமல், குறியீட்டு வன்முறை கலாச்சாரம், விதிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு சமத்துவமின்மை மற்றும் நியாயமற்ற நடத்தையை இயல்பானதாகவோ அல்லது தவிர்க்க முடியாததாகவோ காட்டுவதன் மூலம் செயல்படுகிறது. எனவே, நியாயமற்ற முறையில் நடத்தப்படுபவர்கள்கூட இது இப்படித்தான் நடக்கிறது என்று நம்பத் தொடங்கலாம்.


இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகர்ப்புற சமூகப் பாதுகாப்பு, வாக்களிக்கும் உரிமைகள், கல்வி அல்லது பொதுச் சேவைகளிலிருந்து விலக்கப்படும்போது, அது வன்முறையாக பார்க்கப்படவில்லை. மாறாக, வழக்கமான அதிகாரத்துவ கண்காணிப்பு அல்லது நிர்வாக தவிர்க்க முடியாத நிலையாக பார்க்கப்படுகிறது.


நகர்ப்புற குடியுரிமையின் வரையறை


நகர வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை வடிவமைக்கும் விலக்கல் அறிவு அமைப்புகள் நகர்ப்புற குடியுரிமையின் குறுகிய வரையறையை ஊக்குவிக்கின்றன. இது இடம்பெயர்ந்தோரை நகரத்தின் விளிம்புகளில் வைத்திருக்கிறது. நகரங்களில் புலம்பெயர்ந்தோரின் அடையாளம் வர்க்கம், பிராந்திய அடையாளம் மற்றும் நுகர்வு முறைகள் போன்ற காரணிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.


அமிதா பவிஸ்கர் தனது Uncivil City: Ecology, Equity and the Commons in Delhi (2020) என்ற புத்தகத்தில், தற்போதுள்ள வர்க்கம் மற்றும் சாதிய படிநிலைகள், நகரத்திற்கு யார் 'சொந்தமானவர்கள்' என்ற எண்ணத்தை எப்படி ஆழமாக வடிவமைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவரது பகுப்பாய்வில், நகர்ப்புற இடம் நடுநிலையானது அல்லது சமமாக அணுகக்கூடியது அல்ல; இது சமூக சக்தியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 


ஆதிக்கம் செலுத்தும் நகர்ப்புற கற்பனையானது, பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினரால் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இடம்பெயர்ந்தோர் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை சரியான நகர்ப்புற குடிமக்களைக் காட்டிலும் 'வெளியாட்கள்' அல்லது 'ஆக்கிரமிப்பாளர்கள்' என்று பார்க்கிறது. எடுத்துக்காட்டாக, குடிசைப்பகுதிகள் ஏழைகளின் வீட்டுவசதியாக மட்டுமல்லாமல், ஒழுங்கின்மையின் சின்னங்களாகவும் பார்க்கப்படுகின்றன. அதே, நேரத்தில் தெரு வியாபாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நகர்ப்புற பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகித்த போதிலும் ஒரு பாரமாகவே கருதப்படுகிறார்கள். 


இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இவ்வாறு தொழிலாளர்களாக பொறுத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த விதிவிலக்கு கட்டமைப்பானது நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கியதைவிட பெரும்பாலும் இடம்பெயர்ந்த ‘அழகுபடுத்துதல்’ (beautification), ‘சேரியை அகற்றுதல்’ (slum clearance) மற்றும் ‘உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு’ ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கொள்கைகளுக்கு பங்களிக்கிறது. 


உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்


Economic and Political Weekly இதழில் வெளியிடப்பட்ட 'இடம்பெயர்வு, பாலினம் மற்றும் நகரத்திற்கான உரிமை' (2017) என்ற தனது கட்டுரையில், ஆர்.பி. பகத், புலம்பெயர்ந்தோர் ஒரே மாதிரியான குழுவினர் அல்ல என்றும், சிலர், குறிப்பாக புலம்பெயர் பெண்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் சரியாக சுட்டிக்காட்டுகிறார்.


உள்ளடக்கிய கட்டமைப்பு இல்லாத நகரங்களில், புலம்பெயர்ந்த பெண்கள் ஊதிய வேறுபாடுகள், டிஜிட்டல் பிளவுகள், தரவு விலக்கு மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். உண்மையிலேயே உள்ளடக்கிய நகரம், இடம்பெயர்ந்தோரை பங்குதாரர்களாக அங்கீகரித்து, பங்கேற்பு நகர்ப்புறத் திட்டமிடலை உறுதிசெய்து, அவர்களின் சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்கும். இடம்பெயர்ந்தோர் வாழ்வாதாரம் மற்றும் நம்பிக்கையைத் தேடி தங்கள் ஊரக வேர்களையும், குடும்பங்களையும் விட்டுச் செல்கிறார்கள். ஆனால், நகர்ப்புற அமைப்புகளில் அவர்கள் அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் இடையில் இருக்கிறார்கள் மற்றும் 'அடையாள நெருக்கடி' (identity crisis) என்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் மன உளைச்சலாக வெளிப்படுகிறது.


சீர்மிகு நகரங்கள் திட்டம் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இப்போது, ​​நகரங்களை அனைவருக்கும் நியாயமானதாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாக்க, நகரங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதில் ஒரு பெரிய மாற்றம் நமக்குத் தேவை - பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் அமைப்புகளிலிருந்து விலகி, அதற்கு பதிலாக பன்முகத்தன்மை, இயக்கம் மற்றும் ஏழைத் தொழிலாளர்களின் அன்றாட போராட்டங்களை ஆதரிப்பது ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கோருகிறது. நகரங்களை உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக வெளிகளாக மாற்றுவது நமது காலத்தின் முக்கியமான தேவையாகும்.



Original article:

Share:

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (PVTGs) எண்ணிக்கை குறித்து… - குஷ்பு குமாரி

 பழங்குடியினர் விவகார அமைச்சகம், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரிடம் (Registrar General and Census Commissioner of India (RGI)) வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மிகவும் ஒதுக்கப்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை (PVTGs) சேர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு ஏன் முக்கியமானது? இதுவரை அவை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன? இந்திய தலைமைப் பதிவாளரின்  பங்கு என்ன?


தற்போதைய செய்தி?


ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பழங்குடி விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs (MoTA)), இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. ஒப்புதல் அளிக்கப்பட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் தனித்தனியாக பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) முழுவதும் 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் உள்ளன. பழங்குடி குழுக்கள் குறைந்த எழுத்தறிவு நிலைகள், புவியியல் தொலை தூரத்தன்மை, விவசாயத்திற்கு முந்தைய நிலைகள் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டன.


2. 1951ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இருந்து, பட்டியல் சாதிகள் (Scheduled Castes (SCs)) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (STs)) மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் மற்றும் தொடர்புடைய சமூக-பொருளாதார மற்றும் மக்கள்தொகை பண்புகள், அட்டவணைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.


3. அரசியலமைப்பின் பிரிவுகள் 341 மற்றும் 342-ன்படி, அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை 1950 மற்றும் அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) ஆணை 1950-ல் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்  பட்டியல்களின்படி அவை கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்களின் பட்டியல்கள் வேறுபட்டவை மற்றும் அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.


4. முந்தைய 2011-ஆம் ஆண்டு  மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சுமார் 40 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் 'ஒற்றை நுழைவு' (single entry) எனக் கணக்கிடப்பட்டன. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும், பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில பழங்குடி அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் ஏ பி ஓட்டா கூறுகையில், மீதமிருக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள், பெரும்பாலும் பெரிய பட்டியல் பழங்குடியின சமூகங்களுக்குள் இருக்கும் துணைக்குழுக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தனித்தனியாக கணக்கிடப்படவில்லை. இது முக்கிய மக்கள்தொகைக் குறிகாட்டிகள் குறித்த குறிப்பிட்ட தரவு இல்லாததற்கு வழிவகுக்கிறது.


5. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டம் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN)) போன்ற சமீபத்திய முயற்சிகள் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் குறித்த சில தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 28 லட்சம் என்று ஒன்றிய கூறியது.


6. இருப்பினும், இந்த மாதம் மக்களவையில் பழங்குடி விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs (MoTA)) வழங்கிய பதிலின்படி, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் மக்கள்தொகை 45.56 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் (12.28 லட்சம்), மகாராஷ்டிரா (6.2 லட்சம்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (4.9 லட்சம்) ஆகிய குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்  மக்கள்தொகை அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.


7. 2016-ஆம் ஆண்டில், மக்களவையில் பழங்குடி விவகார அமைச்சகம் வழங்கிய பதிலில், நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களை அடையாளம் காண அமைச்சகத்தால் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று கூறியது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரைகள், ஒரு முழுமையான முன்மொழிவுடன், மாநிலத்தில் உள்ள சமூகத்தை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களாக அடையாளம் காண்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்நிபந்தனைகள் ஆகும்.


8. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) சேகரித்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவு, ஒற்றைப் பதிவாகப் பட்டியலிடப்பட்டுள்ள 40 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் மக்கள்தொகை விவரங்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பழங்குடி விவகார அமைச்சகம் விளக்கியது. எனவே, அனைத்து 75 பாதிக்கப்படக்கூடிய குறிப்பாக பழங்குடி குழுக்களுக்கான முழுமையான மக்கள்தொகைத் தரவு கிடைக்கவில்லை. இதனால், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் மாநில வாரியான மக்கள்தொகை சதவீதத்தைக் கணக்கிட இயலாது.


ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முக்கியமானது?


9. தனிமைப்படுத்தல், குறைந்த மக்கள்தொகை மற்றும் தனித்துவமான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பண்புகள் காரணமாக, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடிப்படை சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், சமூக பாகுபாடு மற்றும் வளர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து இடம்பெயர்வதற்கான பாதிப்பு ஆகியவற்றுடன் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு சிறிய அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளது. முடிவெடுப்பதில் அவர்கள் பங்கேற்பதைத் தடுக்கிறது.


10. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அவற்றைக் கணக்கிடுவது, அடிப்படைக் கட்டமைப்புகளை வழங்குவது முதல் கல்வி வரையிலான வளங்களை சிறந்த முறையில் ஒதுக்குவதில் அரசாங்கத்திற்கு உதவும். அரசாங்கங்கள் இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்களை வழங்க இந்த கணக்கெடுப்பு பெரிதும் உதவும். இது நீதித்துறை, திட்டமிடுபவர்கள் மற்றும் அறிஞர்கள் இடம்பெயர்வு, நகரமயமாக்கல், வேலைவாய்ப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவும்.


01. தேபார் ஆணையம் (Dhebar Commission) என்பது என்ன?


தேபர் ஆணையம், 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பின் பிரிவு 339-இன் கீழ் அமைக்கப்பட்டது. இது பழங்குடியினரின் பிரச்சினைகளை விசாரித்து அறிக்கை அளிக்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. 1961ஆம் ஆண்டில் ஆணையம் தனது அறிக்கையில், பழங்குடியினரிடையே, மிகவும் பின்தங்கிய பழங்குடி குழுக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து அதிக உதவி தேவை என்று ஆணையம் தனது 1961 அறிக்கையில் கூறியது. இது ‘பழமையான பழங்குடி குழுக்கள்’ (Primitive Tribal Groups (PTG)) வகையை உருவாக்க வழிவகுத்தது. 2006-ஆம் ஆண்டில், இந்த வகை குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) என மறுபெயரிடப்பட்டது.


02. PM JANMAN திட்டம் என்றால் என்ன?


இது 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களை இலக்காகக் கொண்டு ஜார்க்கண்டின் குந்தியில் ஜன்ஜாதிய கௌரவத் திவாஸ் தினத்தின் போது நவம்பர் 15, 2023 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General and Census Commissioner of India (RGI)) குறித்து..


1. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்திடம் உள்ளது.


2. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியா இணையதளத்தின்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் தற்காலிக அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்தை வழங்குவதற்காக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டம் (Census Act) இயற்றப்பட்டது.


3. மக்கள்தொகையின் அளவு, அதன் வளர்ச்சி போன்றவற்றின் முறையான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக, இந்திய அரசு, மே 1949-ல் உள்துறை அமைச்சகத்தில் தலைமைப் பதிவாளர் மற்றும் முன்னாள் அதிகாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்தது.


4. முக்கிய புள்ளியியல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறித்த தரவுகளை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பின்னர், இந்த அலுவலகத்திற்கு நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தை, (Registration of Births and Deaths Act, 1969) செயல்படுத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.


5. ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயண் தற்போதைய இந்திய தலைமைப் பதிவாளர் ஆவார். அவர் நவம்பர் 1, 2022 அன்று பதவியேற்றார். கடந்த ஆண்டு, அவரது காலம் ஆகஸ்ட் 4, 2026 அல்லது மறு அறிவிப்பு வரும்வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை நீட்டிக்கப்பட்டது.



Original article:

Share:

சரக்கு மற்றும் சேவை வரிக்கு தேவையான சீர்திருத்த முன்வரைவு -ஜியா ஹக்

 ஒரு நல்ல வரி முறை என்பது , வரி செலுத்தவும் வசூலிக்கவும் எளிமையானதாகவும், வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் அளவுக்கு அதிகமாக இல்லாதது மற்றும் திறமையானது ஆகும். இதுவே சரக்கு மற்றும் சேவை வரியின் முக்கிய நோக்கமாக உள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) 2017இல் தொடங்கப்பட்டது. இது ஒரு "நல்ல மற்றும் எளிமையான வரி" (good and simple tax) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடக்க விழாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி சில சிக்கல்கள் இருக்கும் என்றும், அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இப்போது, ​​அதன் ஒன்பதாவது ஆண்டில், அந்த சிக்கல்கள் இன்னும் உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டிய நேரம் இது.


பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய GST விகித அடுக்குகளை எளிமைப்படுத்த பரிந்துரைத்தார். பெரும்பாலான பொருட்களுக்கு இவற்றை 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாகக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூன்று விஷயங்கள் தெளிவாக உள்ளன. முதலாவதாக, அதிகமான வெவ்வேறு விகிதங்களைக் கொண்டிருப்பது GST யோசனையுடன் பொருந்தாது என்பதை மக்கள் உணர்கிறார்கள், எனவே சில விகிதங்களை இணைப்பது அவசியம். இரண்டாவதாக, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தில், ஒரே ஒரு வரி விகிதத்தை மட்டும் வைத்திருப்பது சாத்தியமில்லை. எனவே, சில வெவ்வேறு விகிதங்களைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது.


இரண்டாவதாக, அடுக்குகளை மறுசீரமைப்பதில் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது ஒரு எளிய மறுசீரமைப்பு பயிற்சியாக இருக்காது. மற்ற முக்கியமான பிரச்சினைகள் எழும். அவற்றில் ஒன்று, இழப்பீட்டு வரி மார்ச் 2026 இல் காலாவதியானவுடன் என்ன நடக்க வேண்டும் என்பதுதான்.


மூன்றாவதாக, இந்தியாவின் ஏற்றுமதிகள் மீது 50% அமெரிக்க வரி விதிக்கப்படுவதால், விகிதங்களை மறுபரிசீலனை செய்வது இப்போது தவிர்க்க முடியாதது. விகிதங்களைக் குறைப்பது உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும், ஏற்றுமதிகளில் மிகவும் கவலைப்படும் வீழ்ச்சியைக் குறைக்க உதவும்.


அத்தியாவசிய அன்றாடப் பொருட்களுக்குப் பதிலாக இறக்குமதிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு வரி விதிப்பதில் அதிக கவனம் செலுத்தி, அமைப்பில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இதில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 10.5 மில்லியனாக வளர்ந்துள்ளது.


மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு GSTயை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாநிலங்களுக்கு ஈடுசெய்ய அனைத்து செஸ் பணத்தையும் பயன்படுத்தியதால், மத்திய அரசு மாநிலங்களை விட குறைவான மொத்த GST வருவாயைப் பெற்றுள்ளது. 2016-2017 அடிப்படை ஆண்டை விட மாநிலங்கள் 14% வருவாய் வளர்ச்சியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது.


ஒரு நல்ல வரி என்பது செலுத்துவதற்கும் வசூலிப்பதற்கும் எளிமையாகவும், குறைந்த வசூல் செலவுகளைக் கொண்டதாகவும், மக்கள் அதைத் தவிர்க்க முயற்சிக்கும் அளவுக்கு அதிகமாகவும் இருக்கக்கூடாது. இது திறமையானதாகவும் இருக்க வேண்டும், இது விற்பனை செய்யும் இடத்தில் வசூலிக்கப்படும் வரியாகும். ஒரே பொருளுக்கு இரண்டு முறை வரி விதிப்பதைத் தவிர்ப்பது GSTயின் மற்றொரு நோக்கமாகும். அதனால்தான் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உள்ளீடுகளுக்கு செலுத்தப்பட்ட வரிக்கு கடன் கோரலாம்.

நான்கு அடுக்கு வரி அமைப்பில் உள்ள பொருத்தமின்மையை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். பூஜ்ஜிய மதிப்பிடப்பட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டால் இந்த அமைப்பு ஐந்து அடுக்குகளாக மாறும். பூஜ்ஜிய மதிப்பிடப்பட்ட பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கு சமமானவை அல்ல. பூஜ்ஜிய மதிப்பிடப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு, வணிகங்கள் GSTயை செலுத்துவதில்லை. ஆனால், இதற்கு  உள்ளீட்டு வரி வரவுகளை (input-tax credits) கோரலாம்.


GSTயின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு எளிய வழி, அது உருவாக்கும் வருவாயின் அளவைப் பார்ப்பதாகும். இருப்பினும் மொத்த வருவாய்கள் அதிகம் வெளிப்படுத்தவில்லை. மொத்த வருவாயிலிருந்து வரி செலுத்துவோருக்குத் திரும்பப் பெறப்பட்ட தொகையைக் கழித்தால் நிகர வசூல் மட்டுமே உண்மையான படத்தைத் தருகிறது.


மொத்த வசூல் தொடக்கத்திலிருந்தே மிகவும் வலுவாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6.5% (தற்போதைய விலைகளில் நிதியாண்டு 2024–25 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்), தொற்றுநோய் காலத்தில் தவிர. அவை GSTக்கு முந்தைய அளவை விட மிக அதிகமாக உள்ளன. இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அரசாங்கம் பிப்ரவரி 2024இல் மட்டுமே நிகர வசூல் எண்களை வழங்கத் தொடங்கியது. இந்த எண்கள் ஒரு சிறிய வளர்ச்சியை மட்டுமே காட்டின. பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பிறரின் ஆய்வின்படி, GST தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டுமே அவை GSTக்கு முந்தைய நிலையை அடைந்தன.


மொத்த மற்றும் நிகர வசூல்களுக்கு இடையிலான வேறுபாடு, ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடனாக வழங்கப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதால் ஏற்படுகிறது. இந்தியா ஒரு வர்த்தக பற்றாக்குறை நாடு என்பதால் பணத்தைத் திரும்பப் பெறுவது பெரியது. ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் பல பாகங்கள் மற்றும் கூறுகள் முதலில் இறக்குமதி செய்யப்படுகின்றன. முன்மொழியப்பட்ட மாற்றங்களை இந்த வரி முறைகளை இன்னும் நெருக்கமாகப் படிப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.


பணவீக்கத்தைக் குறைத்து நுகர்வை அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி பொதுவாக அதிக வருவாயை விளைவிக்கும். இருப்பினும், விகிதங்களைக் குறைப்பது மொத்த வருவாயில் இழப்பை உருவாக்கும். எதிர்பார்க்கப்படும் வரி வளர்ச்சி இந்த இழப்பை ஈடுகட்ட முடியுமா என்பது கேள்வி.


2026இல் இது முடிவடைந்த பிறகு இழப்பீட்டு செஸ் வரியை என்ன செய்வது என்பது மற்றொரு பிரச்சினை. மத்திய அரசு அதிலிருந்து சிறிதளவே லாபம் ஈட்டியுள்ளது. முதலில், இது மாநிலங்களுக்கு ஈடுசெய்யப் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது தொற்றுநோய்களின் போது எடுக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படுகிறது. செஸ் நீக்கப்பட்டால், அது ஒன்றிய அரசின் நிதி பரிமாற்றங்களில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கக்கூடும். அதன் எதிர்காலத்தை முடிவு செய்த பின்னரே, GST  சிறந்த செயல்திறன் நுண்ணறிவுகளுடன் ஒரு தூய அமைப்பாக முழுமையாக செயல்பட முடியும்.



Original article:

Share:

இந்தியாவில் உள்கட்டமைப்பு முதலீட்டை நீதித்துறை ஆய்வு எவ்வாறு வடிவமைக்கிறது. -விஷ்ணு பி சுதர்சன், சுகந்தா சோமானி கோபால்

 சில சந்தர்ப்பங்களில், நீதிமன்றங்கள் திட்டங்களில் மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டுள்ளன, கட்டுமானத்தை நிறுத்தியுள்ளன அல்லது அபராதம் மற்றும் மறுசீரமைப்பு செலவுகளை விதித்துள்ளன.


இந்தியாவில் காலநிலை முதலீடு (Climate investing) அதிகளவில் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த மாற்றம் வலுவான சட்ட ஆய்வு மற்றும் அதிக சுற்றுச்சூழல் பொறுப்புத்தன்மையால் இயக்கப்படுகிறது. இந்தியா தனது உள்கட்டமைப்பை விரைவாக தீவிரப்படுத்துகையில் விரைவுச் சாலைகள், விமான நிலையங்கள், தொழில்துறை வழித்தடங்கள் மற்றும் எரிசக்தி திட்டங்களை உருவாக்கி வருகையில், நீதித்துறை ஒரு சக்திவாய்ந்த வீரராக மாறியுள்ளது. மூலதனம் எவ்வாறு, எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதை இது இப்போது வடிவமைக்கிறது.


நீதிமன்றங்களும் (Courts), தீர்ப்பாயங்களும் (tribunals) காலநிலை தொடர்பான மீறல்களுக்கு அதிக கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் சட்ட அபாயங்களை மனதில் கொண்டு திட்டங்களை மறு மதிப்பீடு செய்கிறார்கள். 


இந்த மாற்றம் பொறுப்புணர்வை மேம்படுத்துவதோடு, மட்டுமின்றி மூலதன அமைப்புகள், கடன் மதிப்பீடுகள் மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (Environmental, Social and Governance(ESG)) மதிப்பீட்டு கட்டமைப்பு முதலீட்டாளர்கள் திட்ட அபாயங்கள் மற்றும் ஒழுங்குமுறை நம்பகத்தன்மையை எவ்வாறு மதிப்பிடுகின்றனர் என்பதையும் பாதிக்கிறது.


சட்ட நிலப்பரப்பு, முதலீட்டு மாற்றங்கள் (Legal landscape, investment shifts)

இந்திய நீதிமன்றங்கள் பிரிவு 21-ன் விளக்கத்தை காலநிலை மற்றும் சூழலியல் உரிமைகளை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளன. காலநிலை வழக்குகள் (Climate litigation) அதிக உமிழ்வுகள் அல்லது பல்லுயிர் பெருக்க தாக்கம் கொண்ட துறைகளான போக்குவரத்து வழித்தடங்கள், நகர்ப்புற விரிவாக்கம், எரிசக்தி உற்பத்தி மற்றும் சுரங்க செயல்பாடுகளை அதிகளவில் கவனம் செலுத்துகின்றன. 


இராஜதந்திர பொது நல வழக்குகள் (Strategic Public Interest Litigations(PIL)) மற்றும் தீர்ப்பாய உத்தரவுகள் (tribunal rulings) திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளன அல்லது மாற்றியுள்ளன. இது முதலீட்டாளர்கள் அபாயங்களைக் கணக்கிடுவதையும் நிதி கட்டமைப்புகளை வடிவமைப்பதையும் மறுவடிவமைக்கிறது.


குறிப்பாக, சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் நீதிமன்றங்கள் இப்போது அறிவியல் சான்றுகள், வெளிப்படையான முடிவெடுத்தல் மற்றும் பங்குதாரர்களுடன் உண்மையான ஆலோசனை ஆகியவற்றைக் கோருகின்றன. இதன் காரணமாக, நீதித்துறை மேற்பார்வை உள்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. 


சில சந்தர்ப்பங்களில், நீதிமன்றங்கள் திட்ட வழித்தடங்களில் மாற்றங்களை உத்தரவிட்டுள்ளன, கட்டுமானத்தை நிறுத்தியுள்ளன அல்லது அபராதங்கள் மற்றும் மறுசீரமைப்பு செலவுகளை விதித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் விதிகளை புறக்கணிப்பது என்பது நற்பெயர், சட்ட மற்றும் நிதி அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்ற தெளிவான செய்தியைக் காட்டுகின்றன. 


காலநிலை முதலீட்டை வடிவமைப்பதில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பங்கு 


தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), காலநிலை தொடர்புடைய முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் வடிவமைப்பதிலும் ஒரு வலுவான சக்தியாக மாறியுள்ளது. இது கடற்கரைகள், நதி அமைப்புகள், காடுகள் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் திட்டங்களை நிறுத்தியுள்ளது அல்லது மாற்றியுள்ளது. 


எடுத்துக்காட்டாக, விழிஞ்சம் துறைமுகம், இமயமலை நீர்மின்சாரம் மற்றும் ஆற்றங்கரை மேம்பாடு போன்ற திட்டங்களில் தீர்ப்பாயம் தலையிட்டது. இந்த தலையீடுகள் பங்கு விநியோகங்களை தாமதப்படுத்தி, இடர் மறுவிற்பனைக்கு வழிவகுத்தன.  உதாரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் (Western Ghats) மற்றும் இமயமலை மாநிலங்களில், போதுமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் காலநிலை பாதிப்பு ஆய்வுகள் இல்லாததால் NGT உத்தரவுகள் சாலை, சுரங்க மற்றும் நீர்மின் திட்டங்களை நிறுத்தியுள்ளன அல்லது மாற்றியுள்ளன.


இதன் விளைவாக, நிறுவன முதலீட்டாளர்கள் காலநிலை அல்லது பசுமை மூலதனத்தை (green capital) நிதி வழங்குவதற்கு முன்பு NGT வழக்கு வெளிப்பாடுகளை (litigation disclosures) இப்போது கோருகின்றனர்.


முதலீட்டை பாதிக்கும் விளக்கக் சட்ட வழக்குகள் 


2023இல், டெல்லி உயர்நீதிமன்றம் காலநிலை அபாயங்களை புறக்கணித்த, ஒரு தொழில்துறை வழித்தடத்தை தடை செய்தது. இது $300 மில்லியன் கடன் ஒருங்கிணைப்பையும் நிறுத்தி வைத்தது.


மும்பை கடற்கரை சாலை வழக்கு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் (Coastal Regulation Zone(CRZ)) மீறல்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு கவலைகள் காரணமாக நகராட்சி பத்திர உடன்படிக்கைகளில் (municipal bond covenants) திருத்தங்களுக்கு வழிவகுத்தது.


இமாச்சலப் பிரதேசத்தில், நீர்மின் திட்டங்களுக்கான நிதியை வெளியிடுவதை NGT நிறுத்தியது. பனிப்பாறை தாக்க மதிப்பீடுகள் முடியும் வரை நிறுத்தம் தொடரும்.


NABARD      - National Bank for Agriculture and Rural Development

SIDBI           -  Small Industries Development Bank of India

SEBI            - Securities and Exchange Board of India

BRSR           - Business Responsibility and Sustainability Reporting

மத்திய பிரதேசத்தில் நகர்ப்புற விரிவாக்கம் வெப்ப தீவு விளைவுகளை (heat island effects) புறக்கணித்ததற்காக சவால் செய்யப்பட்டது. இது தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியிலிருந்து (SIDBI) பசுமை நிதி ஒப்புதல்களை தாமதப்படுத்தியது.

அரசாங்க நடவடிக்கைகள் (Government measures)


இந்தியா காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பல இராஜதந்திர முன்முயற்சிகளை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு முயற்சியும் அளவிடக்கூடிய கரிம வாயுவை குறைக்க அளவிடக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.


தேசிய சூரிய சக்தி திட்டம் (National Solar Mission) : சூரிய ஆற்றல் திறன் 2025-ம் ஆண்டுக்குள் 70 GW ஆக விரிவடைந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 120 மில்லியன் டன் CO₂ ஐக் குறைக்கிறது.


FAME-II திட்டம் (மின்சார இயக்கம்) : 7,000 மின்சார பேருந்துகள் மற்றும் 5 லட்சம் மின்சார வாகனங்களை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8–10 மில்லியன் டன் CO₂ ஐக் குறைக்கிறது.


செயல்திறன் அடைதல் வர்த்தக (Perform Achieve Trade Scheme(PAT)) திட்டம் : தொழில்துறை துறைகளில் ஆற்றலைச் சேமிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது 2012 முதல் 2023 வரை 92 மில்லியன் டன் CO₂ ஒட்டுமொத்த சேமிப்பை அடைந்தது.


தேசிய மின்சார இயக்கம் மிஷன் திட்டம் (National Electric Mobility Mission Plan) : 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 950 மில்லியன் டன் CO₂ சேமிக்க முடியும்.


தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் (National Green Hydrogen Mission-2023) : ஒவ்வொரு ஆண்டும் 5 MMT பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது. இது ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 மில்லியன் டன் CO₂ ஐ ஈடுசெய்யக்கூடும்.


முதலீட்டு தாக்கங்கள் (Investment Implications)


காலநிலை நிலைமைகள் ESG அபாயம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மாற்றிக் கொண்டிருக்கிறது. நிதி நிறுவனங்கள் சட்ட உரிய விசாரணையை (legal diligence) பசுமை நிதி தகுதியின் முக்கிய பகுதியாகக் கருதுகின்றன. இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் (SEBI) மேம்பட்ட வணிக பொறுப்புணர்வு மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் (BRSR) விதிமுறைகள் காலநிலை வழக்கு வெளிப்பாடு மற்றும் நிலைத்தன்மை கூற்றுகள் ஆண்டு கோப்புகளில் வெளிப்படுத்தப்பட வேண்டும். நகராட்சி மற்றும் இறையாண்மை பத்திர வெளியீட்டாளர்கள் (Municipal and sovereign bond issuers) காலநிலை சட்ட அபாயங்களை உள்ளடக்கும் வகையில் தங்கள் தகவல் தொகுப்பு அறிக்கையை சரிசெய்கின்றனர். இது காலநிலை பத்திரங்கள் மற்றும் கலப்பு நிதி கருவிகளின் (blended finance instruments) விலை நிர்ணயத்தை நேரடியாக பாதிக்கிறது.


இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் இப்போது சட்ட மற்றும் ஒழுங்குமுறை சுற்றுச்சூழல் அபாயங்களை தங்கள் முதலீட்டு முடிவுகளில் காரணியாகக் கொண்டிருக்கின்றனர். விரிவான சுற்றுச்சூழல் உரிய விசாரணை (environmental due diligence), சமூக ஒப்புதலின் ஆவணங்கள் மற்றும் சட்ட அபாய காப்பீடு மிகவும் பொதுவானவையாகி வருகின்றன.


காலநிலை முதலீட்டிற்கான கண்ணோட்டம் (Outlook for climate investing)


இந்தியா தனது கார்பன் சந்தைகள், பசுமை வகைப்பாடு (green taxonomy) மற்றும் நியாயமான மாற்ற கொள்கைகளை (Just Transition policies) விரிவுபடுத்துகையில், சட்ட அபாயம் மூலதன ஒதுக்கீட்டை அதிகளவில் வரையறுக்கும். முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் தீர்ப்பாயத் தரவு, நீதிமன்ற முன்னுதாரணங்கள் மற்றும் காலநிலை வெளிப்பாடு கட்டமைப்புகளை முதலீட்டு திட்டங்களில் ஒருங்கிணைத்து குறைந்தபட்ச சட்ட இணக்கத்திற்கு அப்பாற்பட்டு மாறிக்கொண்டிருக்கும் நீதித்துறை எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போக வேண்டும்.


இறுதியில், சுற்றுச்சூழல் இணக்கத்தை ஒரு சுமையாகப் பார்க்கக்கூடாது. இது அபாயங்களை நிர்வகிப்பதற்கான ஒரு உத்தியாக இதைப் பார்க்க வேண்டும். நீதித்துறை தலையீடு, அடிக்கடி ஒரு இடையூறாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு சூழலமைப்பின் ஒரு கட்டமைப்பு அம்சமாக அதிகளவில் மாறி வருகிறது. 


இது அனைத்து பங்குதாரர்களையும் மிகவும் பொறுப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட வளர்ச்சியை நோக்கித் தூண்டுகிறது. இது சட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிக்கும் இடையிலான இணைப்பு பொறுப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் குறைந்த கார்பன் எதிர்காலத்திற்கு இந்தியாவின் மாற்றத்தை துரிதப்படுத்தும்.


விஷ்ணு பி சுதர்சன், சுகந்தா சோமானி கோபால் எழுத்தாளர்கள் JSA வழக்கறிஞர்கள் மற்றும் சொலிசிட்டர்கள் ஆவர்.



Original article:

Share: