Showing posts with label BNS. Show all posts
Showing posts with label BNS. Show all posts

காவல்துறை செயல்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள். -அஜய் சிங்ஹால்

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலச் சட்டங்கள் தொடங்கி, தற்போதைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் வரை, இந்த மாற்றங்கள் அனைத்தும் குற்ற விசாரணை, ஆதார மேலாண்மை மற்றும் பொதுமக்கள் நீதித்துறையை அணுகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றி அமைத்து வருகின்றன.


150 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு, ஒரு ஜனநாயக நாட்டிற்காக அல்லாமல், நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் (Colonial laws) உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code (1860)), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure (1898)) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act (1872)) ஆகியவை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. இருப்பினும், காலப்போக்கில் குற்றங்களின் தன்மை மாறிவிட்டது. பாரம்பரியமான குற்றங்களில் இருந்து தற்போது  இணைய மோசடி, திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகள் என குற்றங்கள் உருமாறியுள்ளன.


ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS)), இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா ((Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டம்), மற்றும் பாரதிய சக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய புதிய சட்டங்களைக் கொண்டுவர இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய குற்றவியல் சட்ட சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.





ஹரியானா மாநிலக் காவல் துறைத் தலைவராக (DGP), இந்த மிகப்பெரிய மாற்றத்தை ஒரு நிர்வாகியாக மட்டுமல்லாமல், களத்தில் எனது குழுவினருடன் நேரடியாகப் பணியாற்றிய ஒருவனாகவும் நான் பார்த்திருக்கிறேன். புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஹரியானா மாநிலம் தற்போது முன்னணியில் உள்ளது. மேலும், இந்த மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நான் நேரில் கண்டேன். நாங்கள் எங்களது புலனாய்வு அதிகாரிகளுக்கு மறுபயிற்சி அளித்தோம், பணி நடைமுறைகளை மாற்றினோம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டோம். இந்த மாற்றம் சவாலானதாக இருந்தது, ஆனால் இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு-420 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-318-ஆக மாறியது. அதேபோல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு-302 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-101-ஆக மாறியது. முறையான கல்வியும் பயிற்சியும் குறைவாகப் பெற்ற பல புலனாய்வு அதிகாரிகள், பல ஆண்டுகளாக தாங்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளை மறந்து, புதிய சட்ட விதிகளை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.


இந்த மாற்றத்தின் அளவை முழுமையாகப் புரிந்துகொள்ள, முதலில் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் சவால்களையும், புதிய சட்டங்கள் அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றன என்பதையும் பார்ப்பது அவசியமாகும்.


முடிவற்ற காலதாமதங்களுக்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல்


இந்தியாவின் மிக முக்கியமான குற்றவியல் நீதித்துறைப் பிரச்சினை, வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதம் ஆகும். தற்போது, 5.58 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால், இவற்றை விசாரிப்பதற்காக வெறும் 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக, நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகள் தாமதம் ஆகின்றன. இது பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது. புகழ்பெற்ற இந்தித் திரைப்பட வசனமான "Tarikh pe Tarikh" (வாய்தாவுக்கு மேல் வாய்தா) என்பது வெறும் சினிமா மிகைப்படுத்தல் அல்ல, அந்த வசனம் உண்மைநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.


பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டம், சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தக்கூடிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முயல்கிறது. இதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விசாரணை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு, நீதிபதிகள் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தீர்ப்பை வழங்க வேண்டும். இந்தச் சட்டம் தேவையில்லாத வழக்கு ஒத்திவைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்பூர்வமாகத் தானாகவே பிணை (Statutory bail) பெற தகுதி கிடைத்துவிடும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


வழக்கு விவரம் சார்ந்த காலக்கெடுவை துல்லியமாகப் பின்பற்றுவதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. மின்னணு ஆதாரங்களை நிர்வகிக்கும் அமைப்பான 'e-Sakshya' போன்ற டிஜிட்டல் ஆதாரத் தளங்கள், குற்றக் காட்சிப் பதிவுகளை அவை பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகிய விவரங்களுடன் உருவாக்குகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கிறது, வழக்கைச் சரியாகக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் நீதித்துறை அமைப்பானது குறிப்பிட்ட காலத்திற்குள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்கிறது.


விசாரணைக் கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காணுதல்


குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகளைச் சிறையில் கழிப்பதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த கைதிகளில் ஏறக்குறைய 76% பேரின் உண்மை நிலைமையாகும். இவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கும் 'விசாரணைக் கைதிகள்' ஆவர். இந்தியாவின் புதிய சட்டக் கட்டமைப்பு, காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், கைதிகளுக்கு 'இயல்புநிலை பிணை' (Default bail) வழங்கப்படலாம். இப்போது காவல் நீட்டிப்பு விசாரணைகளுக்கு (Remand hearings) பொதுவாக காணொளி காட்சிமுறை பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒரு குற்றத்திற்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விசாரணைக் கைதி ஏற்கனவே சிறையில் கழித்திருந்தால், அவரை விடுதலை செய்வது குறித்தும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு மனிதனின் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதுடன், நீதிமன்றத் தாமதங்களால் அந்த உரிமை பறிபோகாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றன.


சாட்சி வாக்குமூலத்திலிருந்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வரை 


நீதிமன்றத்தில் நீங்கள் அளிக்கும் சாட்சியமும், உங்களது நினைவாற்றலும் அல்லது பாதுகாப்பும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பையே மாற்றிவிடக்கூடும் என்பதை உணர்ந்து, நீங்கள் நீதிமன்றக் கூண்டில் சாட்சியம் அளிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். முன்பு, நீதிமன்றங்கள் வாய்மொழி சாட்சியங்களை மட்டுமே பெருமளவில் நம்பியிருந்தன. இதனால், சாட்சிகள் மிரட்டப்படும்போதோ அல்லது அவர்கள் தங்களது சாட்சியத்தை மாற்றிப் பிறழ்சாட்சியாக (Hostile witness) மாறும்போதோ, வழக்குகள் பலவீனமடையும் சூழல் இருந்தது.


புதிய சட்டங்கள் தடய அறிவியல் (Forensic) மற்றும் மின்னணு (Electronic) ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. கடுமையான குற்றங்களுக்குத் தடயவியல் விசாரணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் இப்போது நீதிமன்றங்களில் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் அறிவியல்பூர்வமான முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சாட்சிகளின் மனித நினைவாற்றலை மட்டுமே நம்பியிருக்கும் நிலை குறைந்து, ஒட்டுமொத்த ஆதாரங்களும் மிகவும் வலுவடைகின்றன.


ஹரியானாவில், நடமாடும் தடய அறிவியல் குழுக்கள் நேரடியாகக் குற்றப் பின்னணி நடக்கும் இடங்களுக்கேச் சென்றடைகின்றன. குற்றக் களம் (Scene of Crime (SOC)) சார்ந்த நிபுணர்கள், யாருடைய தலையீடும் இன்றித் தனிச்சையாகச் சான்றுகளைச் சேகரிக்கின்றனர். கைரேகைகள், DNA மரபணுச் சோதனை, டிஜிட்டல் தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அழிந்து போவதற்கு முன்பாகவே அவை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவாக்குவதோடு, நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது.

21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை அடையாளம் காணுதல்


ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள், தற்கால இணையவழிக் குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்ற அமைப்புகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது கும்பல் படுகொலைகள் போன்றவற்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை அல்ல. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் இந்த நவீனகால குற்றங்களை நேரடியாகக் கையாள்கிறது. மேலும், இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் கொண்டுவரப்பட்ட முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் இப்போது இந்தச் சட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இதனால், குடிமக்கள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், இத்தகைய உரிமைகளைச் சட்டப்படியே நேரடியாகப் பெற முடிகிறது.


முதல் தகவல் அறிக்கையிலிருந்தே எளிதாக நீதி கிடைக்கச் செய்தல்


பலர் எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்று தெரியாத குழப்பத்தினால், தங்களுக்கு நடந்த குற்றங்களைப் புகாரளிக்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டுகளாக, எல்லை வரம்புகள் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்கு இடையே நிலவி வந்த எல்லைத் தகராறுகள், மக்கள் தங்களுக்குரிய நீதியைத் தேடிச் செல்வதையே முடக்கி வைத்திருந்தன.


'Zero FIR' முறை என்பது, ஒரு குற்றம் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க அனுமதிக்கிறது. 'மின்னணு முதல் தகவல் அறிக்கை' (e-FIR) முறை மூலம் மக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வழியாகப் புகார்களைப் பதிவு செய்ய முடியும். சாட்சிகளுக்கான பாதுகாப்பு, காணொளி காட்சி மூலம் சாட்சியம் அளிப்பது மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாப்பது போன்ற புதிய வசதிகள், மக்கள் அச்சமின்றி நீதி வழங்கும் செயல்பாட்டில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை உறுதி செய்கின்றன.



சிறிய தவறுகளைப் பெரிய குற்றமாகக் கருதாமல் சட்டத்தை மாற்றுவதும் (Decriminalisation) இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் துணையாக நிற்கிறது. சிறிய அளவிலான குற்றங்களுக்கு 'சமூக சேவை' (Community service) செய்வதைத் தண்டனையாக வழங்குவது, ஏற்கனவே கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகளின் சுமையைக் குறைக்கிறது. மேலும், சிறிய தவறுகளைச் செய்தவர்கள்மீது வாழ்நாள் முழுக்க 'குற்றவாளி' என்ற முத்திரை குத்தப்படுவதையும் இந்த முறை தடுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மனிதநேயமிக்க மற்றும் நவீனகாலத்திற்கு ஏற்ற ஒரு நீதித்துறையை உருவாக்க உதவுகின்றன.


ஹரியானா மாநிலம் எவ்வாறு முதலிடத்தை பிடித்தது


சட்ட சீர்திருத்தங்கள் என்பது அவை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. ஹரியானா மாநிலம் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி 94.42 புள்ளிகளைப் பெற்று, புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சாதனை ஏதோ பெயரளவில் மட்டும் நடந்துவிடவில்லை. இது, தொடர்ந்து ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் முதலீடு செய்ததன் விளைவாகும்.


இந்தத் தரவரிசையானது நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது: அவை நிர்வாகச் சீர்திருத்தங்கள், செயல்பாட்டுத் திறன், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் குற்றவியல் நீதி அமைப்புடன் (Interoperable Criminal Justice System (ICJS)) ஒருங்கிணைப்பு ஆகியவை ஆகும். தற்போது ஒவ்வொரு விசாரணை அதிகாரியும் இந்தப் புதிய அமைப்பின்கீழ் பணிபுரிவதோடு, இதற்கான சிறப்பு செயலியையும் (Investigating Officer Mobile Application (I.O. Mobile Application)) பயன்படுத்தி வருகின்றனர். நடமாடும் தடய அறிவியல் பிரிவுகள் (Mobile forensic units), பலப்படுத்தப்பட்ட சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவை இப்போது களத்தில் இருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நேரடியாக உதவி புரிகின்றன.



இந்த மேம்பாடுகள் காவல் துறையின் பணிகளைத் தாண்டி பல நன்மைகளைத் தருகின்றன. மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (Electronic summons), டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மற்றும் காணொளி காட்சி மூலம் விசாரணை (Video conferencing) ஆகியவை நேரம், பணம் மற்றும் மனித உழைப்பை மிச்சப்படுத்துகின்றன. இவை காகிதப் பயன்பாட்டையும் பயணங்களையும் குறைக்கும் அதேவேளையில், செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.


ஹரியானா மாநிலத்தின் மின்னணு அபராதச் சீட்டு (e-Challan) முறை, வெறும் நான்கு மாதங்களில் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வை 8,165 கிலோ வரை குறைத்துள்ளது. மேலும், மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (e-summons) மற்றும் காணொளி வாயிலாக விசாரணைகள் மூலம் ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் 26 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும், காகித ஆவணங்களைக் கையாளுவதிலும் வீணான நேரம் இப்போது மிச்சப்படுத்தப்பட்டு, அந்த நேரம் குற்ற விசாரணை மற்றும் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது


அறிவியல் பூர்வமான முறைகளும், ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணைகளும் இப்போது மிகவும் வலுவடைந்துள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது ஒரு சாதாரண நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல. அது அவர்களின் நெறிமுறை சார்ந்த கடமையுமாகும். மொபைல் தடயவியல் பிரிவுகளைப் (Mobile forensic units) பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதாரங்கள் மிக முக்கியமானவை என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. நீதிமன்ற அழைப்பாணைகளை மின்னணு முறையில் (e-summons) அனுப்புவது சாட்சிகளின் நேரத்தை மதிக்கிறது. மேலும், DNA மரபணுச் சோதனை, குரல் மாதிரிகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் ஆதரவோடு மின்னணு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வது, காவல்துறை தங்களின் வசதியைவிட உண்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுகிறது.


புதிய குற்றவியல் சட்டங்கள் இதற்கான தேவையான வழிமுறைகளையும் கருவிகளையும் வழங்கியுள்ளன. இருப்பினும், இந்தச் சட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினரும், அதாவது காவல்துறை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் ஆய்வகங்கள், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், முழு அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அதேநேரத்தில் நீதியை வழங்குவதில் வேகமும் நியாயமும் சம அளவில் சீராக இருக்கக்கூடிய ஒரு நீதித்துறையை உருவாக்குவதே இறுதி இலக்காகும். நமக்குத் தேவை விரைவான வழக்கு விசாரணைகள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு பயமும் இல்லாமல், முழு நம்பிக்கையோடு நீதிமன்றத்தை நாடி நீதிபெறும் நிலை உருவாக வேண்டும்.


அஜய் சிங்ஹால், ஹரியானா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆவார்.


Original article : New criminal laws overhauling policing and public trust. -Ajay Singhal

Share:

வளரிளம் பருவ உறவுகள் 'குற்றங்களாக' மாறும்போது : போக்சோ (POCSO) சட்டத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியம். -ரோகிணி நாராயணன்

தற்போதுள்ள சட்ட வடிவம், சுரண்டல் நோக்கிலான பாலியல் அத்துமீறல்களையும், வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதில்லை. இதனால், சட்டம் இன்னும் சரியாக அங்கீகரிக்காத சில இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நீதிமன்றங்கள் தள்ளப்படுகின்றன.


குழந்தைகளைப் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காக, கடுமையான மற்றும் தெளிவான விதிகளுடன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (Protection of Children from Sexual Offences Act, 2012 (POCSO)) கொண்டு வரப்பட்டது. இருப்பினும், தற்போது நீதிமன்றங்களுக்கு வரும் பல சிக்கலான வழக்குகள், இந்தச் சட்டத்தின் கடுமையான விதிகளுக்குள் பொருந்தாத வளரிளம் பருவத்தினரின் காதல் உறவுகள் சார்ந்தவையாக உள்ளன.

சட்டத்தின்படி 'பாதிக்கப்பட்டவர்' என்று கருதப்படும் ஒரு பெண், எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, நான் எந்தச் சட்டப் பூர்வமான நடவடிக்கையையும் விரும்பவில்லை என்று கூறி, குற்றவியல் நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்க்கும்போது, குற்றவியல் சட்டம் என்ன செய்ய வேண்டும்?


ஹர்மீத் சிங் vs மாநிலம் (டெல்லி தேசிய தலைநகரப் பகுதி) (Harmeet Singh v. State (NCT of Delhi)) என்ற வழக்கின் விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 17-வயது சிறுமி, தற்போது தகுந்த வயதை அடைந்து, இந்த வழக்கின் மனுதாரரையே (Petitioner) திருமணமும் செய்து கொண்டு, இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகவும் உள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. இதே போன்ற ஒரு பார்வையை சமீபத்திய மாதங்களில் பம்பாய் மற்றும் மேகாலயா உயர்நீதிமன்றங்களும் ‘Vijay Laxman Rotke’ மற்றும் ‘Shri Phrangbatnam Kharkongor’ ஆகிய வழக்குகளில் எடுத்துள்ளன. அதாவது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டம் எந்த மாதிரியான பாலியல் சுரண்டல்களைத் தடுக்க உருவாக்கப்பட்டதோ, அந்த வகையான சுரண்டல்கள் இந்த வழக்குகளின் பின்னணியில் இல்லாததால், நீதிமன்றங்கள் அவற்றின் மீதான சட்டநடவடிக்கைகளை ரத்து செய்தன.


வளரிளம் பருவத்தினரின் சிக்கலான காதல் மற்றும் நட்புரீதியான உறவுகளின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள்மீது ஒரே மாதிரியான சட்டத்தை ஒரே வரியில் திணிப்பது குறித்து நீதிமன்றங்களுக்கு இடையே அதிகரித்து வரும் கவலையை இந்தத் தீர்ப்புகள் வெளிப்படுத்துகின்றன.


மிகவும் கவனமான நீதித்துறை அணுகுமுறை


வழக்குடன் தொடர்புடைய இருதரப்பினரும் பின்னாளில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் சட்டபூர்வ அணுகுமுறை கடுமையான சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஏனெனில், இது மறைமுகமாகக் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதாகவும், பின்னாளில் கட்டாய உறவுகளை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துவிடலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் பின்னாளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காகவே, அனைத்து இளம்பருவ உறவுகளையும் தானாகவே பாதிப்பில்லாதவை என்று கருதிவிட முடியாது.


ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கின் தீர்ப்பை முக்கியமானதாக மாற்றுவது எதுவென்றால், அது ஒரு சமநிலையான மற்றும் கொள்கைரீதியான அணுகுமுறையைக் கண்டறிய முயல்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம், திருமணம் செய்துகொள்வதையோ அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதையோ மட்டுமே வழக்கு நிவாரணத்திற்கான போதுமான காரணங்களாகக் கருதவில்லை. மாறாக, நீதிமன்றங்களுக்கு அது தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது :

முதலாவதாக, சட்டபூர்வமாகப் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறாரா, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறாரா, மற்றும் அவர் எந்தவொரு கட்டாயத்திற்கும், தவறான வழிகாட்டுதலுக்கும் அல்லது ஏமாற்றத்திற்கும் உள்ளாகவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். இரண்டாவதாக, நீதிமன்றங்கள் வழக்கின் உண்மைகளை கவனமாக ஆராய வேண்டும் — அதாவது அந்த உறவு சுரண்டல்மிக்கதாக இல்லாமல் இருதரப்பு சம்மதத்துடன் இருந்ததா, வன்முறை அல்லது கொடுமை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா, மற்றும் இருதரப்பினருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும். மூன்றாவதாக, ஒன்றாக வாழ்வது அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது போன்ற பிற்கால குடும்ப ஏற்பாடுகளைத் தானாகவே ஏற்றுக் கொள்ளக்கூடாது; மாறாக அவை உண்மையானவைதான் என்று நீதிமன்றத்திற்கு நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.


கட்டமைப்புரீதியான பெரும் இடைவெளி


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) நோக்கம் மிகவும் தெளிவானது. ஏனெனில், சுரண்டல் என்பது எப்போதும் வெளியில் தெரிவது இல்லை, மேலும் ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த தீங்கை வெளிப்படுத்தும் திறனை மட்டுமே இந்தச் சட்டம் நம்பியிருக்க முடியாது. இருப்பினும், தற்போதைய சட்டம் சுரண்டல் நோக்கத்துடன் நடக்கும் துஷ்பிரயோகத்தையும், பதின்ம வயதினருக்கு இடையேயான உறவுகளையும் தெளிவாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இதனால், சட்டம் அங்கீகரிக்க மறுக்கும் இந்த இடைவெளியை நீதிமன்றங்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


தற்போதைய சூழ்நிலையை மேலும் கவனிக்கத்தக்கதாக மாற்றுவது என்னவென்றால், 2011-ஆம் ஆண்டின் போக்சோ சட்ட வரைவு (POCSO Bill), 16 முதல் 18-வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரின் சம்மதத்துடன் கூடிய உறவுகளுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. அதில், அந்தச் சம்மதமானது கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல், தேவையற்ற செல்வாக்கு அல்லது சம்மதம் தெரிவிக்க முடியாத நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் வேறு ஒரு அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது. சட்டப்படி 18-வயதுக்குட்பட்ட அனைவருமே 'குழந்தை' என்று வரையறுக்கப்பட்டவுடன், சம்மதம் என்பது சட்டரீதியாகத் தனது முக்கியத்துவத்தை முற்றிலும் இழந்துவிட்டது. இது கொடூரமான துஷ்பிரயோக வழக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காதல் உறவு வழக்குகளிலும் இதே நிலையை உருவாக்குகிறது.


சட்டத்தின் அடுத்தகட்ட  நடவடிக்கை என்னவாக இருக்கும்?


நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை அதிக உணர்வுத்திறனுடன் கையாளத் தொடங்கியிருப்பது ஊக்கமளிக்கிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் தலையீடு என்பது வழக்கமாக ஒரு நபர் குற்றவியல் வழக்கின் நிச்சயமற்ற தன்மையையும் சுமையையும் எதிர்கொண்ட பிறகே கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், அவர்களுக்கு நீதிமன்ற நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே அந்த இளம் வயதினரின் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடும். இந்தச் சிக்கல் ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை என்றால், இதற்கான தீர்வும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.


முதலாவதாக, நாடாளுமன்றம் மிகவும் குறுகிய வரம்பிற்குட்பட்ட 'நெருங்கிய வயது விதிவிலக்கு' (Close-in-age exception) என்ற ஒரு அம்சத்தைப் பரிசீலிக்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் vs அனுருத் (State of UP v. Anurudh) என்ற வழக்கில், இருதரப்பு சம்மதத்துடன் கூடிய உண்மையான பதின்பருவ காதல் உறவுகளுக்காகச் சட்டத்தில் ஒரு "ரோமியோ மற்றும் ஜூலியட்" விதியை (Romeo and Juliet clause) கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து ஆராய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அரசியலமைப்பு அனுபவங்களும் இதில் வழிகாட்டுகின்றன. தென் ஆப்பிரிக்காவின் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான டெடி பியர் கிளினிக் (Teddy Bear Clinic for Abused Children) வழக்கில், அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதின்பருவத்தினருக்கு (Minors) இடையிலான சம்மதத்துடனான நெருக்கத்தைக் குற்றமாக்கும் சட்டங்களை ரத்து செய்தது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பதின்பருவ உறவுகளின் முக்கியத்துவத்தையும், முழுமையான குற்றமயமாக்கல் ஒருவருடைய கண்ணியத்திற்கு ஏற்படுத்தும் தீங்கையும் நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்தியா இத்தகைய ஒரு கட்டமைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாவிட்டாலும், அதற்குப் பின்னால் உள்ள கவலையை நாம் புறக்கணித்துவிட முடியாது.


இரண்டாவதாக, ஹர்மீத் சிங் (Harmeet Singh) வழக்கில் காணப்பட்டதைப் போன்ற விரிவான ஆழமான நீதித்துறை மறுஆய்வு என்பது பல ஆண்டுகள் வழக்கு நடந்த பிறகுதான் கிடைக்க வேண்டும் என்பதில்லை. முழுமையான குற்றவியல் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே — பரஸ்பர சம்மதம், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம், சுரண்டல் கூறுகள் ஏதேனும் உள்ளதா மற்றும் அதன் பின்னணிச் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே மதிப்பீடு செய்வதற்கான ஒரு பரிசீலனைத் தரநிலையை நாடாளுமன்றம் அல்லது காவல்துறையின் வழிகாட்டுதல்கள் உருவாக்கலாம்.


மூன்றாவதாக, எந்தவொரு சுரண்டலும் இல்லாத ஒருசில குறிப்பிட்ட வழக்குகளில், அதற்கான தீர்வு எப்போதும் குற்றவியல் விசாரணையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாகக் கடுமையான குற்றவியல் தண்டனையைப் பயன்படுத்துவதைவிட, சிறுவர் நல நடவடிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் வயதுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களை வழங்குவது சில நேரங்களில் அவர்களுக்குச் சிறந்த பாதுகாப்பையும் மறுவாழ்வையும் அளிக்கக்கூடும் என்கின்றனர்.


நீதிமன்றங்களால்கூட இறுதிப் பூர்வமாக விடையளிக்க முடியாத ஒரு கேள்வி


தனிப்பட்ட வழக்குகளில், மிகக் கடுமையான மற்றும் பொதுவான சட்டங்களின் பிடியிலிருந்து எழும் கடுமையான பாதிப்புகளை நீதிமன்றங்கள் தளர்த்தலாம். ஆனால், பதின்ம வயதினரின் உறவுகளையும், சுரண்டல் நோக்கத்துடனான பாலியல் வன்கொடுமைகளையும், சட்டம் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற பெரிய கேள்விக்கு நீதிமன்றங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. பாராளுமன்றம், இந்தச் சிக்கலை நேரடியாகக் கையில் எடுத்துச் சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, நீதிமன்றங்கள் இதுபோன்ற கடினமான வழக்குகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


ரோகிணி நாராயணன், டெல்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் (Advocate) ஆவார்.





Share:

சட்டத்தால் நிறுவப்பட்ட உரிய செயல்முறை மற்றும் நடைமுறையை எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது? - பிரியா குமாரி சுக்லா


முக்கிய அம்சங்கள்:


• இந்த 79 சட்டங்களில், மசோதாவானது (Bill) நான்கு முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது:


குற்றமற்றதாக்குதல் (Decriminalisation): இந்த மசோதா 805 குற்றங்களுக்கான குற்றவியல் தண்டனைகளை நீக்குகிறது. சிறைத்தண்டனை அல்லது அபராதங்களுக்குப் பதிலாக, இனி இவை எச்சரிக்கைகள் மற்றும் பணரீதியான அபராதங்கள் போன்ற உரிமையியல் நடவடிக்கைகள் மூலம் கையாளப்படும். இந்த மீறல்களுக்கு இனி காவல்துறை நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருக்காது; இருப்பினும், பெரும்பாலான வழக்குகளில் இவை தொடர்ந்து ஒழுங்குமுறைப்படுத்தப்படும்.


நீக்கம் (Omission): இந்த மசோதாவானது 125 குற்றப்பிரிவுகளை நீக்க முன்மொழிகிறது. அவசியமற்ற குற்றங்கள் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவை இனி குற்றங்களாகக் கருதப்படமாட்டாது. பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, ஆனால், ஏற்கனவே பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita (BNS)) என்ற பொதுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட குற்றங்களும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் இருந்து நீக்கப்படுகின்றன. இருப்பினும், அவை பொதுச் சட்டத்தின்கீழ் தொடர்ந்து தண்டனைக்குரிய குற்றங்களாகவே கருதப்படும்.


சமரசம்: முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, முப்பத்தைந்து வகையான குற்றங்கள் சமரசத்தீர்வு செய்யக்கூடியவையாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம், விதியை மீறியவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்தி, நீண்டகால நீதிமன்ற வழக்குகளைத் தவிர்த்துவிட்டு வழக்கை முடித்துக்கொள்ள முடியும். இருப்பினும், இந்தச் சலுகை வழங்கப்பட்டாலும், சட்டத்தின் பார்வையில் இந்தச் செயல்கள் தொடர்ந்து குற்றவியல் தன்மை கொண்டவையாகவே கருதப்படும்.


தண்டனைகளை முறைப்படுத்துதல்: இந்த மசோதாவில் 53 குற்றங்களுக்கான தண்டனைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிறைத்தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற மிகக் கடுமையான மற்றும் பொருத்தமற்ற தண்டனைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், அபராதத் தொகைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


இந்தத் திருத்தங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது. சட்ட மீறல்களை அரசு கையாளும் விதத்தை மிகவும் அறிவுப்பூர்வமாகவும், நியாயமான முறையிலும் மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் கூடிய முயற்சி ஆகும். 




உங்களுக்குத் தெரியுமா?


• தண்டனை விதிமுறைகளை முறைப்படுத்தும் முயற்சியாக, இந்த மசோதா பல்வேறு துறைகளைச் சார்ந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. சட்டத்தின்கீழ் குற்றங்களாகக் கருதப்படும் 1,018 செயல்கள் மற்றும் தவறுகளை, இந்தத் திருத்தங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றமற்றவையாக மாற்றி அவற்றிற்கான தண்டனைகளை முறைப்படுத்துகின்றன.


• வணிகம் மற்றும் தொழில்துறைத் துறையில், இந்த மசோதாவானது தேயிலைச் சட்டம் (Tea Act), கயிறு இழைத் தொழில்துறைச் சட்டம் (Coir Industry Act) மற்றும் சட்டபூர்வ அளவீட்டியல் சட்டம், 2009 (Legal Metrology Act, 2009) போன்ற சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. நகராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, டெல்லி மேம்பாட்டுச் சட்டம் (Delhi Development Act), டெல்லி மாநகராட்சிச் சட்டம் (Delhi Municipal Corporation Act) மற்றும் பாளையங்கள் சட்டம், 2006 (Cantonments Act, 2006) போன்ற சட்டங்களில் இந்த மசோதா மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.


• போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், இந்த மசோதா சில முக்கியச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அவை, மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act), கடலோரக் கப்பல் போக்குவரத்துச் சட்டம் (Coastal Shipping Act) மற்றும் பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய்கள் (நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைப் பெறுதல்) சட்டம், 1962 [Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962] ஆகியவையாகும்.


• இந்த மசோதா, சாதாரண நடைமுறை விதிகளை மீறுபவர்கள்மீது குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. முக்கியமாக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்துச் சட்டங்களான கால்நடை அத்துமீறல் சட்டம் (Cattle Trespass Act), கால்நடை இறக்குமதி சட்டம் (Live Stock Importation Act) மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்கிறது.


• இந்த மசோதா  ‘நீதிமன்ற அபராதம்’  (Fine) மற்றும் 'நிர்வாக அபராதம்' (Penalty) ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தைத் தெளிவுபடுத்துகிறது. நீதிமன்ற அபராதம் என்பது நீதிமன்றத்தால் விதிக்கப்படுபவை, மிகக் குறைந்த தொகையாக இருந்தாலும், இதை விதிக்க முழுமையான குற்றவியல் நீதி நடைமுறை அவசியமாகிறது. இதற்கு நேர்மாறாக, நிர்வாக அபராதம் என்பது உரிமையியல் நடைமுறை சார்ந்த தன்மையுடையது. இவை நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நேரடியாக விதிக்கப்படுபவை. இதனால், சட்ட விதிகளை மிக வேகமாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்த முடிகிறது.


Original Link: Which constitutional article mentions the due process and procedure established by law? 


Share: