எண்கள் விளையாட்டு : தூய்மை கணக்கெடுப்பு (Swachh Survekshan ) விருதுகளைப் பற்றி . . .

 பொது சுகாதார மேம்பாட்டிற்கு தடையாக இருக்கும் சவால்களை நாம்  திறம்பட எதிர்கொள்ள வேண்டும். 


தொடர்ந்து எட்டாவது ஆண்டாக தூய்மை கணக்கெடுப்புக்கான விருதுகளை (Swachh Survekshan awards) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் நிகழ்வானது, பொது சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு  விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஏழாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தூர் இப்போது இந்த பெருமையை குஜராத்தின் சூரத்துடன் பகிர்ந்து கொள்கிறது. கடந்த ஆண்டு சூரத் இரண்டாம் இடத்தில் இருந்தது. கடந்த வருடங்களில் சூரத் தொடர்ந்து உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஆச்சரியப்படுவதற்கில்லை. போபால், இந்தூர், சூரத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை பல ஆண்டுகளாகத் தங்கள் உயர் நிலைகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இதில், முதல் 10 இடங்களுக்கு அப்பால் சில மாற்றங்கள் உள்ளன. அகமதாபாத், சண்டிகர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்கள் ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றன. ஆனால் சிறந்த நகரங்களின் நிலைத்தன்மை ஓரளவு தேக்க நிலையைக் குறிக்கிறது.


தூய்மை கணக்கெடுப்பு (Swachh Survekshan) ஒரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டுள்ளது: இது பல துணை வகைகளைக் கொண்டுள்ளது. இது குறைந்த பட்சம் ஒரு பிரிவில் அதிக மதிப்பெண் பெற அதிக நகரங்களை அனுமதிக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் நகரங்களைப் பிரிப்பது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், சில வகைப்பாடுகள் நம்பத்தகுந்தவை அல்ல. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ், ‘தூய்மையான இராணுவ முகாம் நகரமாக’ (Cleanest cantonment town) வென்றது. வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகியவை 'கங்கையில் தூய்மையான நகரம்' (Cleanest Ganga town) என்ற பெருமையை பெற்றுள்ளன. சண்டிகர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நகரம்   (Cities safest for sanitation workers) என்ற பெருமையைப் பெற்றுள்ளது . இந்த அணுகுமுறைக்கு விமர்சனங்கள் உள்ளன. காவிரி அல்லது நர்மதை போன்ற மற்ற நதிகளை ஒட்டிய தூய்மையான நகரங்களுக்கு ஏன் வகைகள் இல்லை என்பது ஒரு கேள்வி. 


இந்த தரவரிசைகளின் முக்கிய குறிக்கோள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்த ஊக்குவிப்பதாகும். இது விளையாட்டில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் பொது சுகாதாரத்தில் வேறுபட்டது. இது ஒரு நகரம் சோம்பேறியாக அல்லது உழைப்பாளியாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. வரலாறு, பொருளாதார நிலைமைகள் மற்றும் அதிகாரத்தின் அருகாமை ஆகியவற்றால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அதே சில நகரங்கள் எப்போதும் முதலிடத்தில் இருப்பதால், சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மற்றவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு குறைவான கவனம் செலுத்தப்படுகிறது. 


எதிர்கால கருத்துக்கணிப்புகளுக்கான ஒரு பரிந்துரையானது, தொடர்ந்து சிறந்து விளங்குபவர்களை சில ஆண்டுகளுக்கு ஓய்வு பெறச்செய்வதாகும். அவர்கள் ஏற்கனவே பயனுள்ள அமைப்புகளை நிறுவியுள்ளனர். இது மற்ற நகரங்களுக்கும் அவற்றின் குறிப்பிட்ட சவால்களுக்கும் கவனம் செலுத்தும். குடிமைச் சுகாதாரம் (civic sanitation) நிலையானதாக இருக்க, அது வெறும் எண்களின் விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்து அரசாங்கம் தலையீடு செய்வது முக்கியம்.




Original article:

Share:

இந்திய காவல்துறைக்கு ஒரு வழக்கு டைரி (case diary)

 காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், காவல்துறை எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


ஜனவரி முதல் வாரத்தில் ஜெய்ப்பூரில் இந்தியா முழுவதிலும் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான மூன்று நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு ஓர் ஆய்வு மற்றும் கற்றல் வாய்ப்பாக இருந்தது. செயல்திட்டத்தின் முக்கிய கவனம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தற்போதைய தலைப்புகளில் இருந்தது.


மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பெரும்பாலான அதிகாரிகளுடன் தனித்தனியாக பேசினார். நாட்டில் சட்ட அமலாக்கத்திற்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம் மற்றும் திறமையான காவல்துறையில் நிர்வாகத்திற்கு அதிக பங்கு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.


பொது கருத்து, கூட்டாட்சி பிரச்சினைகள்


ஆனால் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை காவல்துறை இன்னும் பெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். பொதுமக்களின் பார்வையில் அவர்களின் பிம்பம் தொடர்ந்து மோசமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிர துயரத்தில் இருக்கும் வரை உதவிக்காக காவல் நிலையத்திற்கு செல்ல மாட்டார்கள்.


இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆன பிறகும் கூட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவாக ஒரு அமைப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகள் இருந்தும், நமது காவல்துறையின் நற்பெயரில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில், எந்த ஒரு போலீஸ் கமிஷனும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் உதவாத சில காரியங்களை மட்டுமே செய்துள்ளனர். 


மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான சில மாநிலங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் இந்தியக் காவல் சேவையை (Indian Police Service (IPS)) இந்த மாநிலங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்க்கின்றன. அவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளை வெளியாட்களாகப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மாநிலங்கள், தங்களுக்கு விசுவாசமான நபர்களை முக்கியமான காவல்துறைப் பொறுப்புகளில் பணியமர்த்த விரும்புகின்றன.   இந்த பிரச்சினை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


ஜெய்ப்பூர் மாநாட்டில் இந்த தலைப்பு விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி தெளிவாக இல்லை. அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate(ED)) பங்கு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி நிர்வாகத்தில் அதன் தாக்கம் பற்றிய கவனம் தேவை. சமீபத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இந்த தாக்குதல்கள் புது தில்லிக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவை பாதிக்கலாம். 


தொழில்நுட்ப அறிவு


காவல்துறையினரிடம் தொழில்நுட்பத்தில் அதிக திறன் பெற்றுள்ளனர். முன்பை விட கீழ்மட்டத்தில் படித்த போலீஸ்காரர்கள் அதிகம் இருப்பதே இதற்குக் காரணம். இருப்பினும், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் காவல்துறையில் பணிபுரிவதை மிகவும் மதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. மாறாக, இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால், காவல்துறையில் பணியைத் தேர்ந்தெடுக்க பலரைத் தூண்டுகிறது.


இந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமானது. கான்ஸ்டபிள்களாகவோ அல்லது சப்-இன்ஸ்பெக்டராகவோ வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு  தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வி. இந்த இரண்டு நிலைகளில்தான் மக்கள் நேரடியாக காவல் துறையில் நுழைய முடியும். 


பிரச்சனை என்னவென்றால், இந்திய போலீஸ் சேவையின் (IPS) அதிகாரிகள் அனைவரின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுகிறார்கள். இதனால் கீழ்நிலையில் இருப்பவர்கள் தங்களை நிரூபித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. மற்ற பெரும்பாலான நாடுகளில், நிலைமை வேறு. அங்கு, ஏறக்குறைய ஒவ்வொரு ஆட்சேர்ப்பு செய்பவர்களும் மிகக் குறைந்த தரத்தில் தொடங்கி, தங்கள் வழியில் செயல்படுகிறார்கள். இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் தகுதி பெற்றவர்களும் அடங்குவர்.

 

ஐபிஎஸ் அதிகாரிகளின் புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்திற்கு அதிக மரியாதை இருந்தபோதிலும், தற்போதைய அமைப்புக்கு எதிராக ஒரு வாதம் உள்ளது. உயர் மற்றும் கீழ் பதவிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு பெரிய மாற்றம், காவல் துறையின் தரத்தை மேம்படுத்த உதவும். இந்தியாவின் காவல்துறையின் நம்பிக்கையை அதிகரிக்க, அறிவு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை சாதாரண மனிதனுக்கான உண்மையான  மாற்றார் உணர்வு அறிதலுடன் இணைக்கப்பட வேண்டும்.



இந்த இலக்கு லட்சியமானது, ஆனால், மூத்த காவல்துறை அதிகாரிகள் உண்மையிலேயே மாற்றங்களைச் செய்ய முயற்சித்தால் அதை அடைய முடியும். துரதிர்ஷ்டவசமாக, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வம் இல்லை. போலீஸ் படிநிலை கட்டமைக்கப்பட்ட விதம் இரண்டாம் நிலை காவலர்களுக்கு கல்விக்கான நேரத்தை செலவிடுவதை ஊக்குவிக்காது. இது துரதிர்ஷ்டவசமானது. காவல்துறை இயக்குநர்கள் (DGPs) மற்றும் அவர்களுக்கு உடனடியாகக் கீழ் பணிபுரிபவர்கள் ஏன் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் தங்கள் பணியில் இளையவர்களுக்கு, அவர்களின் அறிவை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும். இந்த அறிவை எவ்வாறு சாமானியர்களுக்கு உதவுவது என்பதையும் கற்பிக்க முடியாதா?  



அரசியல் செல்வாக்கு


காவல் துறை பற்றிய எந்த ஒரு விவாதமும் அதன் அரசியலாக்கம் குறித்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். காவல்துறையைப் பற்றிய அனைத்து விவாதங்களிலும் அரசியல் செல்வாக்கிலிருந்து காவல்துறையைப் பாதுகாப்பது சவாலாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சினை ஜனநாயக அரசாங்க அமைப்புடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது.   அரசியல்வாதிகளின், குறிப்பாக, அடிமட்டத்தில் உள்ளவர்களின் சட்ட விரோதமான கோரிக்கையை பணிவுடன் மறுப்பது ஒரு திறமை. இதை சாதுரியமாக பலரால் செய்ய முடியாது. காவல்துறையின் இந்த நிலை பல ஆண்டுகளாக தொடரும். 


அரசியல் அமைப்பில் பரந்த மாற்றங்கள் ஏற்படும் வரை, காவல்துறைக்கு சுதந்திரம் மற்றும் செயல்பாட்டு சுயாட்சியை அடைவது ஒரு யதார்த்தமற்ற இலக்காகத் தெரிகிறது. முழு அரசமைப்பும் மாறும் வரை, காவல்துறையின் சுதந்திரம் மற்றும் செயல்பாட்டுத் தன்னாட்சியை உறுதி செய்வது ஒரு கனவாகவே உள்ளது. அரசியல் கட்டளைகளைப் பின்பற்றுவதற்காக காவல்துறையை மட்டும் விமர்சிப்பது அடிப்படையில் நேர்மையற்றது.

 ஆர்.கே. ராகவன் மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர். 




Original article:

Share:

வலுவான வருவாய் : நேரடி வரி வசூல் இலக்கு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு பற்றி . . .

 வலுவான நேரடி வரி ரசீதுகள் ஒரு  சாதகமான நிதி நிலைமை மற்றும் மேலும் சீர்திருத்தங்களுக்கான  வாய்ப்புகளை உருவாக்குகின்றன.     

 

ஜனவரி 10 ஆம் தேதி நிலவரப்படி, 2023-24 நிதியாண்டில், அரசாங்கம் அதன் நேரடி வரி இலக்கில் (direct tax collection target) கிட்டத்தட்ட 81% வசூலித்துள்ளது. வசூலான தொகை, ₹14.7 லட்சம் கோடி, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 19.4% அதிகம். மொத்த நேரடி வரி (net direct tax) வசூல் பட்ஜெட் மதிப்பீட்டான ₹17.2 லட்சம் கோடியை தாண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது முழு வருடத்தில் சுமார் 18% வளர்ச்சியைக் குறிக்கும். அரசின் ஒட்டுமொத்த வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். இது எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) வசூல் மற்றும் அதிக வரி அல்லாத வருவாய் காரணமாகும். மத்திய வங்கி ஒரு பெரிய ஈவுத்தொகையை (dividend) வழங்கியுள்ளது.  இருப்பினும், கலால் வரி மூலம் வருவாய் குறைவாக உள்ளது.


நேரடி வரிகள் பகுதியில், கார்ப்பரேட் வரி 12.4% அதிகரித்துள்ளது. தனிநபர் வருமான வரி 27.3% அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வரி வளர்ச்சிக்கு இடையிலான இந்த வேறுபாடு எதிர்காலத்திலும் தொடரலாம். இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை டிசம்பர் 31-ம் தேதிக்குள் 8.2 கோடியாக உயர்ந்துள்ளது. 


அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்து, அதிகமானோர் வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் அரசின் திட்டத்திற்கு இது ஒரு நல்ல செய்தி. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9% என்ற இலக்கை விட இந்த ஆண்டு பற்றாக்குறை சற்று அதிகமாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. வருவாயின் அதிகரிப்பு வரி அமைப்பில் மேலும் மாற்றங்களைச் செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கிறது. இந்த மாற்றங்கள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வரிகளை எளிதாக்கலாம்.


நிறுவனங்கள் செலுத்தும் வெவ்வேறு வரி விகிதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒரு யோசனை. இது கருத்து வேறுபாடுகளைக் குறைக்கலாம். மூலத்தில் கழிக்கப்பட்ட மற்றும் வசூலிக்கப்பட்ட வரி  (Tax deduction and collection at source (TDS and TCS)) ஆகியவற்றுக்கான விகிதங்களைக் குறைப்பது மற்றொரு யோசனை. வெளிநாடுகளில் செலவுகளைக் கண்காணிப்பதற்கான வரியும் இதில் அடங்கும். குறைந்த விகிதங்கள் இருந்தாலும், இந்த வரிகள் வரி அதிகாரிகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்க முடியும். புதிய தனிநபர் வருமான வரி முறையை அதிகமானோர் தேர்வு செய்து வருகின்றனர். இந்த அமைப்பு குறைந்த கட்டணங்கள் மற்றும் குறைவான ஆவணங்களைக் கொண்டுள்ளது.


வரி முறையின் மூலம் சிறந்த வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ள மக்களை அரசாங்கம் ஊக்குவிக்க முடியும். இது ஓய்வூதிய சேமிப்பு மற்றும் உடல்நலக் காப்பீட்டை ஊக்குவிப்பதை உள்ளடக்கியது. உடல்நலக் காப்பீட்டின் மீதான 18% ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட மாற்றமாக இருக்கலாம். இது முக்கியமானது, ஏனெனில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சுகாதாரச் செலவுகள் பெரிய சுமையாக இருக்கும்.


2024-25 இடைக்கால பட்ஜெட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது 2019 தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்டதைப் போல வருமான வரியில் பெரிய மாற்றங்கள் நடக்காமல் போகலாம். எவ்வாறாயினும், வலுவான வருவாய் எண்கள் புதிய அரசாங்கத்தை மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.




Original article:

Share:

இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பற்றிய கார்டியனின் பார்வை -EDITORIAL

 சர்வதேச நீதிமன்றத்தின் இந்த வார விசாரணைகள் மனிதாபிமானப் பாதுகாப்பிற்கும் (humanitarian protection) காஸாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.


இனப்படுகொலையின் வரையறை நேரடியானது: இது ஒரு தேசிய, இன  அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கம் கொண்ட குற்றமாகும். இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும், ஏனெனில் தேவையான சான்றுகளின் தரம் மிக அதிகமாக உள்ளது.  

        

எவ்வாறாயினும், ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் (international court of justice (ICJ)) நீதிபதிகள் இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த தற்காலிக முடிவை மிக விரைவில், ஒருவேளை வாரங்களுக்குள் எடுக்கலாம். தென்னாப்பிரிக்காவால் கோரப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளைத் தீர்மானிக்க, தென்னாப்பிரிக்காவின் வழக்கு நியாயமானதாகத் தோன்றுகிறதா, அவசியமாக நிரூபிக்கப்படவில்லையா அல்லது இனப்படுகொலை நிகழும் அபாயம் உள்ளதா என்பதை மட்டுமே அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் தண்ணீர் விநியோகத்தை மீட்டெடுப்பது அல்லது வன்முறையைத் தூண்டும் அறிக்கைகளுக்கு அபராதம் விதிப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியிருக்கலாம்.


போர்க் குற்றச் சான்றுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களில் பொதுமக்களைக் கொன்று குவிப்பதும், பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்துவதும் அடங்கும். பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் பலர் மக்களை எரிச்சலூட்டும் மற்றும் மனிதநேயமற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேல் தனது  பதிலை முன்வைக்கும். ஆதாரங்களை சவால் செய்வதற்கு பதிலாக, தென்னாப்பிரிக்காவை விமர்சிப்பதே இஸ்ரேலின் உடனடி பதில். தென்னாப்பிரிக்கா ஹமாஸை ஆதரிப்பதாகவும், "இரத்த அவதூறு" (Blood libel) செய்வதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை மாநாட்டைப் (genocide convention) பயன்படுத்துவது தவறு என்று இஸ்ரேலில் உள்ள பலர் நினைக்கிறார்கள். ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹோலோகாஸ்டுக்குப் (Holocaust) பதில், அந்த பயங்கரத்திலிருந்து எழுந்த தேசத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இனப்படுகொலை மாநாட்டைப் பயன்படுத்துவது தவறானது என்று இஸ்ரேலில் பரவலான நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும், தற்காப்பு என்பது இனப்படுகொலைக்கு சமமான செயல்களை நியாயப்படுத்தாது என்று தென்னாபிரிக்கா தெளிவாகக் கூறியுள்ளது. 


பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என குறைந்தது 23,570 பேரைக் கொன்றது, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், உயிர்காக்கும் உதவிகளைத் தடுப்பது போன்ற நிகழ்வுகளை தென்னாப்பிரிக்காவின் வழக்கறிஞர்கள் மேற்கோள் காட்டினர். திரு நெதன்யாகு மற்றும் பிற அமைச்சர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களை மனிதநேயமற்றவர்களாக மாற்றும் அல்லது ஹமாஸ் போராளிகள் மற்றும் குடிமக்களை வேறுபடுத்திப் பார்க்க மறுக்கும் முக்கிய பிரமுகர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, உள்நோக்கத்தின் அதிகப்படியான மற்றும் மறுக்கமுடியாத சான்றுகள் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.  


இஸ்ரேலிய பிரதம மந்திரியும் மற்றவர்களும் அமலேக்கின் பழைய ஏற்பாட்டின் கதையைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கதையில், அமலேக்கிய மக்கள் அனைவரையும் கொல்லும்படி கடவுள் சவுலுக்கு கட்டளையிடுகிறார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் சிலரை "மனித விலங்குகள்" (human animals) என்று அழைத்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், ஒரு முழு தேசமும் பொறுப்பு என்று கூறினார். அப்பாவி பொதுமக்கள் யாரும் இல்லை என்று இஸ்ரேலிய துருப்புக்கள் கோஷமிடுவதை வீடியோக்கள் காட்டுகின்றன. சில சட்டமியற்றுபவர்கள் இன்னும் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகு, அதிகாரத்தை இழக்கும் தருவாயில், நிரந்தரமாக குடிமக்களை இடம்பெயர்க்க இஸ்ரேல் திட்டமிடவில்லை என்றார். இந்தப் போராட்டம் ஹமாஸுக்கு எதிரானது, பாலஸ்தீனியர்களுக்கு எதிரானது அல்ல என்றார். ஆனால் இந்த அறிக்கை நேர்மையற்றதாகத் தோன்றியது, ஒருவேளை முக்கியமில்லை. ஏனென்றால் காஸாவின் பெரும்பகுதி இப்போது வாழத் தகுதியற்றதாகியுள்ளது.


இந்த சூழ்நிலையின் அவசரம் தெளிவாக உள்ளது. இது இனப்படுகொலை மாநாட்டின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் காட்டுகிறது. நாடுகள் இனப்படுகொலை செய்வதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், அதைத் தடுக்கவும் பாடுபட வேண்டும். ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக மியான்மர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் மூலம் காம்பியா இதை முன்னிலைப்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் காம்பியாவின் வழக்கை ஆதரித்தன. இருப்பினும், இஸ்ரேலின் நிலைமையை அவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள உள் அழுத்தங்கள் அதன் நடவடிக்கைகளை மாற்றும் அளவுக்கு வலுவாக இல்லை. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விமர்சித்ததுடன், சீரற்ற குண்டுவெடிப்புகளை ஒப்புக்கொண்டார். ஆயினும்கூட, அவர் இஸ்ரேலுக்கு இராணுவ ஆதரவை நிறுத்தவில்லை. 


இந்த சட்டப்பூர்வ வழக்கை எதிர்த்து போராட இஸ்ரேலின் தேர்வு அதன் அக்கறையை காட்டுகிறது. நீதிமன்றத்தை புறக்கணித்த அதன் கடந்தகால நடவடிக்கைகளிலிருந்து இது வேறுபட்டது. தென்னாப்பிரிக்காவிற்கு ஆதரவாக ஒரு ஆரம்ப தீர்ப்பு இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடையாள தோல்வியாக இருக்கும். சர்வதேச நீதிமன்றம் அதன் முடிவுகளை அமல்படுத்த முடியாது. இருப்பினும், நாடுகள் அல்லது குழுக்கள் பொருளாதாரத் தடைகளுடன் பதிலளிக்கலாம்.   

 

 நீதிபதிகள் என்ன முடிவு எடுத்தாலும், காசாவில் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் துன்பங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியவை. இஸ்ரேலிய அமைச்சர்களின் அறிக்கைகளும் கவலையளிக்கின்றன. இந்த காரணிகள், சட்ட நடவடிக்கைகளை விட, இஸ்ரேலின் நற்பெயரையும் மேற்கத்திய நட்பு நாடுகளுடனான அதன் உறவையும் சேதப்படுத்துகின்றன.




Original article:

Share:

செங்கடலில் நடக்கும் மோதல்கள் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது

 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 105 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிகள் சூயஸ் கால்வாய் வழியாகச் வந்திருக்கலாம் என்று தோராயமான கணக்கீடுகள் காட்டுகின்றன.


2020 மற்றும் 2021 இல் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் சாத்தியமான விநியோக பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.  இந்த சிக்கல்கள் எண்ணெய் கொள்கலன் இயக்கத்தை (container movement) பாதித்தன. யேமனில் உள்ள ஹவுதி போராளிகள் சரக்குக் கப்பல்களைத் தாக்கினால் பிரச்சினைகள் மோசமடையக்கூடும். இந்த கப்பல்கள் செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணிக்கின்றன. அவர்களின் வழித்தடங்களில் வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆசியா (இஸ்ரேல் உட்பட) மற்றும் பிற பகுதிகள் அடங்கும். ஏற்கனவே, இந்திய சரக்குகளை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் சரக்கு மற்றும் எண்ணெய்க்கப்பலும் அடங்கும். இந்த தாக்குதல்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலின் ஒரு பகுதியாகும். இந்த மோதல் தற்போது இஸ்ரேலின் தெற்கே உள்ள பகுதிகளை எட்டியுள்ளது. இந்த நிகழ்வுகளால் இந்தியா எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் நிலைமையை மதிப்பீடு செய்து, ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியை நம்பியுள்ள தொழில்களுக்கான நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும். ஏற்றுமதியாளர்கள் தங்கள் அதிகரித்த கப்பல் மற்றும் காப்பீட்டுச் செலவுகளில் சிலவற்றை ஈடுகட்ட உதவும் வகையில் இந்த நடவடிக்கைகளில் வரிச் சலுகைகள் அல்லது நிதி சலுகைகள் அடங்கும். மதிப்பு அல்லது தொகுதி அடிப்படையில் மட்டும் தாக்கத்தை மதிப்பிடுவது தவறாக வழிநடத்தும் இயந்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகனம் போன்ற துறைகள், மதிப்பு அல்லது அளவின் அடிப்படையில் முக்கியமற்றதாகத் தோன்றும் அத்தியாவசிய உபகரணங்களைச் சார்ந்து இருப்பது மோசமாக பாதிக்கப்படலாம். குறைக்கடத்தி பற்றாக்குறையின் போது உற்பத்தி மற்றும் சரக்கு மேலாண்மை பாதிக்கப்படலாம். உதாரணமாக, ஐரோப்பாவில் இருந்து வரும் உள்ளீடுகள் கடலில் நிறுத்தப்பட்டிருந்தால், கிழக்கு ஆசியாவில் உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து உள்ளீடுகளை சேமித்து வைப்பது மிகவும் பயனற்றதாக இருக்கும்.

எளிய கணக்கீடுகள் கவலைக்குரிய முடிவுகளைக் காட்டுகின்றன. 2023 நிதியாண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதி சூயஸ் கால்வாய் வழியாக வந்தது. இந்த இறக்குமதியின் மதிப்பு 105 பில்லியன் டாலர்கள். ரஷ்யா, காங்கோ, நைஜீரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வருகிறது. ஜனவரி முதல் அக்டோபர் 2023 வரை, இந்தியா தனது எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யாவிடமிருந்து பெற்றது. இது ஒரு நாளைக்கு சுமார் 1.7 மில்லியன் பீப்பாய்கள். மற்ற முக்கிய விநியோகஸ்தர்கள் ஈராக் (அனைத்து விநியோகங்களில் 20%), சவுதி அரேபியா (17%), மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates (UAE)) (6%). இந்த நாடுகள் கப்பல் போக்குவரத்துக்கு செங்கடலை சார்ந்து இல்லை. இருப்பினும், இந்தியாவின் 2% எண்ணெயை வழங்கும் நைஜீரியா அதை நம்பியுள்ளது. பாரசீக வளைகுடா வழியாக இந்தியா அதிக எண்ணெய் பெறுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஐரோப்பாவிற்கு இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிக்கலாம். இது  சரக்கு மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரிக்க காரணமாகும். கச்சா எண்ணெய் விலை இன்னும் சில காலங்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்றுமதிக்கு, மொத்த இரசாயனங்கள் போன்ற பொருட்கள் போட்டித்தன்மை குறைவாக இருக்கலாம். இது ஆப்பிரிக்காவை சுற்றி கப்பல்களை மாற்ற வேண்டிய அவசியம் காரணமாக இருக்கும். 


எளிமையான சொற்களில் கூறுவதென்றால், உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் படி, இந்தியாவின் 25% சரக்கு வர்த்தகம் செங்கடல் வழியாக செல்கிறது. இது ஒவ்வொரு மாதமும் சுமார் $25 பில்லியன் ஆகும். இது அதிக சரக்கு மற்றும் காப்பீட்டு செலவுகளை எதிர்கொள்ளும் பொருட்களின் மதிப்பு. நெருக்கடி நீடிக்கும் வரை இது நீடிக்கும். இந்த மோதலால் கப்பல் செலவுகள் 40-60% வரை உயரக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. காப்பீட்டு பிரீமியங்களும் 15-20% அதிகரிக்கலாம். ஏனென்றால், இப்போது கப்பல்கள் கூடுதலாக 3,000-4,000 கடல் மைல்கள் தூரம் ஐரோப்பாவுக்குப் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (Export Credit Guarantee Corporation) ஆரம்பத்தில் இந்தக் காப்பீட்டுச் செலவினங்களின் அதிகரிப்பை ஈடுகட்ட வேண்டும். இடைபட்ட காலத்தில், உலகளாவிய பிரச்சினைகளுக்கு கப்பல் வழித்தடங்களை குறைவாக பாதிக்கக்கூடிய வழிகளை இந்தியா தேட வேண்டும்.




Original article:

Share:

வாய்ப்புகளை விரிவுபடுத்துங்கள் -மான்சி கேடியா, ரோஹித் பிரசாத்

 தொலைத்தொடர்பு சட்டம் (Telecommunication Act) போட்டியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை மற்றும் சேவைகளை வழங்குவதில் பாரபட்சமின்றி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அங்கீகரிக்கவில்லை. 


தொலைத்தொடர்பு சட்டம் (Telecommunication Act) 2023 பழைய தந்தி சட்டம் (Telegraph Act) 1885 மற்றும் கம்பியில்லாத் தந்தி சட்டத்தை (Wireless Telegraphy Act) 1933 மாற்றுகிறது. தந்தி சட்டம், பல மாற்றங்களுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இந்த புதிய சட்டம் நீண்ட காலம் நீடிக்காது. ஆனால் இது எதிர்கால தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த எதிர்கால தொழில்நுட்பங்களில் மனிதனிடமிருந்து-மனிதனுக்கு (human-machine)  (குரல் அழைப்புகள், செய்தியிடல், வீடியோ அழைப்புகள்), மனிதனிடமிருந்து - இயந்திரத்திற்கு (human-machine) (அணியக்கூடியவை) மற்றும் இயந்திரத்திலிருந்து -இயந்திரத்திற்கு (machine-machine) (தொழில்துறை 4.0) போன்ற பல்வேறு வகையான தகவல்தொடர்புகள் அடங்கும். இந்த தொழில்நுட்பங்கள் கணினிப் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (internet of things) மற்றும் குவாண்டம் கணினிப் பயன்பாடு (quantum computing) போன்ற பிற தொழில்நுட்பங்களுடன் நெருக்கமாக இணைக்கப்படும்.


சட்டம் சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. எவ்வாறாயினும், இது பாதுகாப்பு மற்றும் அவசரநிலைகளுக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இது அதிகாரிகளை பொறுப்பேற்காமல் குடிமக்களின் தனியுரிமையை ஆக்கிரமிக்க அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது. நேர்மறையான பக்கத்தில், சட்டம் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீட்டில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. சரியான பாதை மற்றும் பொதுவான குழாய்கள் மற்றும் கேபிள்கள் தாழ்வாரங்களின் கட்டுமானத்தை மேம்படுத்துகிறது. இது உலகளாவிய சேவைக்கான கடமை நிதி (Universal Service Obligation Fund (USOF)) (இப்போது டிஜிட்டல் பாரத் நிதி) பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது. இவை சரியான திசையில் இரண்டு முக்கியமான, பெரும்பாலும் கவனிக்கப்படாத இலக்குகளில் கவனம் செலுத்துவோம்: போட்டியை ஊக்குவித்தல் மற்றும் கடனால் சுமையாக உள்ள ஒரு தொழிலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வளங்களைத் திரட்டுதல்.


பல நாடுகளைப் போலவே இந்தியாவும் 5G தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கிறது. கவர்ச்சிகரமற்ற பயன்பாடுகள், பணம் சம்பாதிப்பதில் சிரமம் மற்றும் போதுமான உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவை சிக்கல்களில் அடங்கும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை  2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ 42,000 கோடி மற்றும் ரூ 33,000 கோடி செலவழிக்க பகிரங்கமாக உறுதியளித்துள்ளன. ஆனால் இந்த முதலீடுகள் பெரும்பாலும் ஆரம்ப வெளியீடுகளுக்கு மட்டுமே ஆகும். அதன்பிறகு, முந்தைய ஆண்டை விட 30-40 சதவிகிதம் செலவைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர். 5G ஸ்டார்ட்-அப்களில் முதலீடுகள் 2022 இல் $639 மில்லியனிலிருந்து 2023இல் $134.1 மில்லியனாகக் குறைந்துள்ளது. முக்கிய நகரங்களுக்கு அப்பால் 5G இணைப்பு குறைவாகவே உள்ளது என்று அதிக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிக முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, புதிய நிறுவனங்களுக்கு சந்தையைத் திறப்பது மற்றும் போட்டியை மேம்படுத்துவது முக்கியம். 


அலைக்கற்றை பயன்பாட்டின் தொழில்நுட்பம் தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய சட்டத்தின் பிரிவு சரியாக வழங்குகிறது. ஆனால் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதில் சில சிரமம் உள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளை தொழில்நுட்ப வகையால் வேறுபடுத்த முடியாது. குரல் மற்றும் தரவு சேவைகளை (voice and data services) வழங்க தொழில்நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்தலாம். சேவை சந்தையில் எந்தவொரு புதிய முதலீட்டாளரும் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்கு வணிக அடிப்படையில் உள்கட்டமைப்பில் பாரபட்சமற்ற மற்றும் பிரத்தியேக அணுகலைக் கொண்டிருப்பது முக்கியம். புதிய சட்டத்தில், வசதிகளை வழங்குபவர்களுக்கான வழி உரிமை என்ற பிரிவில் வெளிப்படும் உள்கட்டமைப்பைத் துண்டிக்கும் உணர்வு, அங்கீகாரங்கள் குறித்து சட்டப் பிரிவில் வெளியிடப்பட வேண்டும். இலக்கியத்தில் உள்ளீடுகளுக்குச் சமமானவை (முதலீட்டாளரின் சொந்த சில்லறை விற்பனைப் பிரிவில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகள்) மற்றும்/அல்லது வெளியீடுகளின் சமமானவை (முதலீட்டாளரால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள்) ஆகியவற்றை எளிதாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும். அதன் சொந்த சில்லறை வணிகம் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன், செயல்பாட்டுரீதியாக ஒப்பிடத்தக்கது . 2001 ஆம் ஆண்டின் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பு மசோதாவில் (Communications Convergence Bill) முதன்முதலில் கொண்டு வரப்பட்ட செயல்பாட்டு பிரிப்பு (Functional separation) பற்றிய பழைய யோசனையை மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டது.  


செயல்பாட்டு பிரிப்பு (Functional separation) என்பது ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் போலந்து போன்ற பல நாடுகளில் சந்தை செறிவைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஒழுங்குமுறை தீர்வாகும். இருப்பினும், ஒவ்வொரு ஒழுங்குமுறையும் சாத்தியமான அபாயங்களைக் கொண்டுள்ளது. அதற்கு பரிகாரங்கள் மிகவும் தீவிரமானதாக இருந்தால், குறைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் புதுமை போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இத்தாலியின் தன்னார்வ மாற்றங்களின் அணுகுமுறை ஏற்கனவே உள்ள நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தும் உள்கட்டமைப்பு தொழில்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. வரிச் சலுகைகள் அல்லது பிற நிதிப் பலன்கள் மூலம் ஊக்குவிக்கப்படும் போது, தொழில்துறையானது முழுமையாக ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிறப்பு சேவை வழங்குநர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளை எதிர்பார்க்கிறோம். 


கூடுதலாக, உயர்தர டிஜிட்டல் பயன்பாடுகளை (high quality digital applications) இந்தியா ஏற்றுக்கொள்வதற்கு, அது பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் மற்றும் கம்பியில்லா (wireless) இணைப்பிலிருந்து கம்பிவடம் (wireline) இணைப்பு அடிப்படையிலான கட்டிடக்கலைக்கு மாற வேண்டும். புதிய சட்டத்தின் படி, உரிமையின் முக்கியத்துவம் இந்தத் தேவையை அங்கீகரிக்கிறது. செலவுகளைக் குறைக்கும் சாதகமான வணிகச் சூழலை வளர்ப்பதைத் தவிர, நாரிழை உள்கட்டமைப்பை (fibre infrastructure) மேம்படுத்துவது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கணிசமான வளங்களைக் கோரும். அரசாங்கம், உலகளாவிய சேவைக்கான கடமை நிதியைப் (Universal Service Obligation Fund (USOF)) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் கிராமப்புறம் அல்லாத பகுதிகளில் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான தெளிவான நோக்கங்களை அமைக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த போட்டி சூழலில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும்.


இந்தச் சட்டம் முன்பு தேவையில்லாத இரண்டு தனித்தனிச் செயல்களை இணைத்தது போல், தொலைத்தொடர்பு மற்றும் இணையத்திற்கான தனிமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை விரைவில் வரம்பிற்கு உட்படுத்தப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கட்டுப்படுத்தும் யோசனை புதியதல்ல. ஜனவரி 2023 இல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India(TRAI)) ஆலோசனைக் கட்டுரையானது ஒன்றிணைந்த சேவைகளுக்கான துண்டு துண்டான மேற்பார்வையின் சவாலை எடுத்துக்காட்டுகிறது. தனித்தனி உரிமங்கள் மற்றும் தனித்துவமான நிர்வாகத் துறைகள் ஒன்றிணைந்த சேவைகளை நிர்வகிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளதா என்பது குறித்த கேள்விகளை எழுப்பியது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், மிக உயர்ந்த சேவைகளுக்கும் இடையிலான வேறுபாடு மறைந்து வரும் உலகில், அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பூர்த்தி செய்து போட்டியிடுகின்றன. ஒருங்கிணைந்த முன்னோக்கைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. இந்த அணுகுமுறையில் ஒளிபரப்பையும் சேர்த்துக் கொள்வதும் முக்கியம். இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த அரசாங்க பார்வையானது பல்வேறு துறைகளில் உரிமம், தரநிலைகள், பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் செயல்திறனைக் கொண்டு வர முடியும்.  

 

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையின் (India’s digital revolution) தொடர்ச்சியான வளர்ச்சி அதன் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. 2023 இன் தொலைத்தொடர்பு சட்டம், சேவைகளில் போட்டியை ஊக்குவிப்பது, நாரிழை அடிப்படையிலான இணையத்திற்க்கு (fibre-based networks) மாறுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


கேடியா  ICRIER இன் மூத்த அறிஞர் மற்றும் பிரசாத் MDI குர்கானின் பேராசிரியர்.




Original article:

Share:

இமயமலையின் நிலைத்தன்மைக்கு ‘பசுமை சாலைகளின்’ முக்கியத்துவம் - சந்தீப் தம்பே மற்றும் வினோத் பி மாத்தூர்

 பசுமைச் சாலை வழிகாட்டுதல்களை (green road guideline) நடைமுறைப்படுத்துவது அதிக ஆரம்பச் செலவைக் கொண்டிருக்கக்கூடும். இருப்பினும், நீண்ட காலத்திற்கு, அவை செலவு குறைந்ததாக மாறும். ஏனெனில் அவை பராமரிப்பு செலவுகளைக் குறைக்கின்றன. இது அதிக நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை உள்கட்டமைப்பை உருவாக்க பங்களிக்கிறது.


பசுமை வளர்ச்சி (Green growth) என்பது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (environmentally sustainable) மற்றும் சமூக உள்ளடக்கிய வளர்ச்சி (socially inclusive development) ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் பொருளாதார முன்னேற்றம் ஆகும். பசுமை வளர்ச்சியின் முக்கிய குறிக்கோள், சுத்தமான காற்று, நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வை ஆதரிக்கும் வலுவான பல்லுயிரியலை வழங்குதல் உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். இந்திய இமயமலைப் பகுதி (Indian Himalayan Region (IHR)) 13 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது: அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்காளம், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது மக்களுக்கு இயற்கையின் பங்களிப்பு (Nature’s Contribution to People (NCPs))/சுற்றுச்சூழல் சேவைகள் (ecosystem services) நாட்டிற்கு முக்கியத்துவமாக வழங்குகிறது. இமயமலையானது செங்குத்தான நிலப்பரப்பு, பலவீனமான புவியியல், கனமான பருவமழை மற்றும் மண் அரிப்பு, பூகம்பங்கள் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகவும் அறியப்படுகிறது. இந்திய இமயமலைப் பகுதியில் (Indian Himalayan Region (IHR)) உள்ள கொள்கை வகுப்பாளர்கள் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தண்ணீரைச் சேமிப்பதற்கும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைப்பை மாற்றுவதற்கும் பசுமைக் கொள்கைகளை (green policies) தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். பசுமை வளர்ச்சிக்கான இந்த உந்துதல், செழிப்பான காடுகள், தெளிவான வானம், சுத்தமான காற்று மற்றும் சுத்தமான ஆறுகளை பாதுகாப்பது மட்டுமல்ல; இது வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியது.  


சாலைத் துறையில் வாய்ப்பு 


சாலைகள் துறை முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் வளர்ச்சியின் முன்னோடியாக முக்கிய பங்கு வகிக்கிறது. இமயமலையில், பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நல்ல சாலைகள் இருப்பது அவசியம். மலைப் பகுதிகளில் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்க, சாலைகளை அமைத்து பராமரிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், மலைச் சரிவுகளில் புல்டோசர்களைப் பயன்படுத்தி மலை தாவரங்கள், விளைநிலங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பாரம்பரிய கட்டுமான நடைமுறையானது சரிசெய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்த நடைமுறையானது நிலையற்ற சரிவுகளில் ஏற்படுகிறது. பின்னர் மலை மற்றும் பள்ளத்தாக்கு இருபுறமும் நிலச்சரிவு ஏற்படுகிறது.  இந்த நடைமுறை சாலையின் ஆயுட்காலத்தின் போது தொடர்ந்து பழுதுபார்க்கும் செலவுகள் மற்றும் பராமரிப்புக்கு காரணமாகிறது. கூடுதலாக, மோசமாக வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்புகள் பள்ளம் உருவாவதற்கு வழிவகுக்கும். மேலும் சரிவுகளை சேதப்படுத்துகிறது. இந்த பிராந்தியத்தில் கிராமப்புற மற்றும் எல்லைப்புற சாலை உள்கட்டமைப்பு விரிவடைவதால், கொள்கை வகுப்பாளர்கள் பாரம்பரிய சாலை கட்டுமானத்தில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த "பசுமை சாலை" (green road) நடைமுறைகளுக்கு மாற வாய்ப்பு உள்ளது.


'பசுமை சாலைகள்' எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?


பூட்டானில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை கட்டுமான (Environmental Friendly Road Construction (EFRC)) நுட்பங்கள் சுற்றுச்சூழல் நட்பு சாலைகளை உருவாக்க மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன. இந்திய இமயமலைப் பகுதியில் (Indian Himalayan Region (IHR)) உள்ள சாலைகளை இன்னும் நிலையானதாக மாற்ற, இந்த எட்டு கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்: 


"வெட்டி வீசுதல்" (cut and throw) முறையை "வெட்டி எடுத்து செல்லுதல்" (cut and carry) என்று மாற்றவும். இந்த மாற்றமானது பள்ளத்தாக்கு சரிவில் உள்ள தாவரங்களுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைக்கும் மற்றும் பருவமழையால் பலவீனமான சரிவுகள் வெளிப்படுவதைத் தடுக்கும். புல்டோசர்களை எக்ஸ்கவேட்டர்கள் (excavators) மூலம் மாற்ற வேண்டும். மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்களை டிப்பர்களில் ஏற்றி, நிர்ணயிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் தளங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த அணுகுமுறை பள்ளத்தாக்கு பக்க சரிவுகளை பாதுகாக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள தாவரங்களையும் பாதுகாக்கும்.


மீண்டும் பயன்படுத்துவதற்காக தோண்டப்பட்ட உபரிப் பொருட்களைப் பிரித்து, மீதமுள்ள குப்பைகளை பொருத்தமான அப்புறப்படுத்தும் இடங்களுக்குக் கொண்டு செல்லவும். மேலும் அகழ்வாராய்ச்சியின் போது, பயன்மிக்க பொருட்களை சரிவில் அப்புறப்படுத்தாமல் இருக்க பாறைகளை அடுக்கி வைக்கவும். இதன் மூலம் சாலை அமைப்பதற்கு குவாரிகளை நம்பியிருப்பதும் ஓரளவு குறையும்.


சாலை வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் :  படிவுகள் (spoil deposits), தடைகள் (barriers), சுவர்கள், வடிகால் மையங்கள் (drainage points) மற்றும் தொட்டிச் சுவர்கள், கேபியன் சுவர்கள் (gabion walls) மற்றும் உயிர்-பொறியியல் (bio-engineering) நடவடிக்கைகள் போன்ற பிற கட்டமைப்புகளை எங்கு வைக்க வேண்டும் என்பதைக் காட்ட வேண்டும்.


மலைச் சரிவுகளில் வெட்டுவதைக் குறைக்க வேண்டும், குறிப்பாக சரிவுகள் மென்மையானவை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில். மாறாக, தடுப்புச் சுவர்களை அமைத்து, சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். மரங்களை வெட்டுவது என்று வரும்போது, அதை முடிந்தவரை குறைவாக செய்ய வேண்டும். சாலையின் வழியில் உள்ள மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும். இயற்கையான நீர் பாயும் இடங்களில் குறுக்கு வடிகால் அமைப்புகளை வைத்து, விலங்குகளும் அவற்றின் வழியாக செல்ல முடியுமா என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். 


கட்டுப்படுத்தப்பட்ட பாறைவெடிப்பு (Controlled blasting) : மலைச்சூழலைப் பாதுகாக்கவும் சரிவுகளை நிலையற்றதாக மாற்றுவதைத் தவிர்க்கவும் இந்த முறைகளைப் பயன்படுத்தவும். இது மீதமுள்ள சரிவை நிலையாக வைத்திருப்பதோடு, பள்ளத்தாக்கு பக்க சரிவுகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலை அமைப்பதற்கு புவியியல் மற்றும் புவியியல் அம்சங்களைப் பாதுகாப்பது மிக அவசியம்.


மரத்தடிகள் அல்லது கற்பாறைகளைப் பயன்படுத்தி அகழிகள் மற்றும் தடைகளை உருவாக்குங்கள். பள்ளத்தாக்கு சரிவுகளில் அவற்றை 10-15 மீட்டர் இடைவெளியில் வைக்கவும். கீழே உள்ள நீரோடைகளில் நீர் ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பிடிக்க அவை உதவுகின்றன.


செலவு பயன் பகுப்பாய்வு


சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சாலை கட்டுமான முறைகள் சுற்றுச்சூழலுக்கும் நிதிக்கும் நன்றாக வேலை செய்வதாக பூட்டானில் ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த பசுமைச் சாலைகள் பல நன்மைகளை வழங்குகின்றன:


பசுமை சாலைகள் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதுடன் நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்துகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப செலவுகள் பாரம்பரிய சாலைகளை விட அதிகமாக இருந்தாலும், இந்த முதலீடு சிறந்த சாலை தரத்தில் பயன்படுகிறது.


சாலையின் வாழ்நாளில், பராமரிப்பு மற்றும் பருவமழை மறுசீரமைப்புச் செலவுகள் மிகவும் குறைவு. மேம்படுத்தப்பட்ட சாலைத் தரம் வாகன இயக்கச் செலவுகளைக் குறைக்கிறது. இது சாலைகளின் பொருளாதார நன்மைகளை அதிகரிக்கிறது. நிலையான சரிவுகள் கட்டுமானம் தொடர்பான நிலச்சரிவுகள், கற்பாறை வீழ்ச்சிகள் மற்றும் விலையுயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவை ஆகியவற்றைக் குறைக்கின்றன. மேலும் அவை பருவமழை பராமரிப்பையும் குறைக்கின்றன. 


மற்ற பொருளாதார நன்மைகள் குறைவான சாலைத் தடைகள், அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான சமூகங்களின் தேவை குறைவு, தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்கு குறைதல், தனியார் சொத்துக்கள் மற்றும் கலாச்சார தளங்களுக்கு சேதம் குறைதல் போன்ற பல்வேறு பொருளாதார நன்மைகள் உள்ளன. 

 

இந்தப் பசுமைச் சாலை வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது முதலில் விலை உயர்ந்ததாகத் தோன்றினாலும், குறைந்த பராமரிப்புச் செலவுகள் காரணமாக சாலையின் வாழ்நாளில் அவை மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும். இந்திய இமயமலைப் பகுதியில் (Indian Himalayan Region (IHR)) பசுமைச் சாலைக் கொள்கையை ஏற்றுக்கொள்வது, சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் ஒரு நெகிழ்ச்சியான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் உயர்தர சாலை அமைப்பை உருவாக்கும். இந்திய இமயமலைப் பகுதி (Indian Himalayan Region (IHR)) சாலைத் துறையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த, அதற்கு அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் திட்டமிடல், நிதி, வனங்கள், சுற்றுச்சூழல் மற்றும் சாலைத் துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. பன்னாட்டு வங்கிகள் மற்றும் பிற நன்கொடையாளர்கள் நேரியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான (linear infrastructure development) கடன் வழங்கும் செயல்முறைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த இந்த பசுமை வழிகாட்டுதல்களை இணைக்கலாம்.


தம்பே கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், மாத்தூர் இந்திய தேசிய பல்லுயிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்.    




Original article:

Share:

இந்தூர் எப்படி ஆண்டுதோறும் இந்தியாவின் தூய்மையான நகரமாக தேர்தெடுக்கப்படுகிறது ?

 தூய்மை நகர கணக்கெடுப்பின் (Swachh Survekshan)  தரவரிசை தொடங்கும் போது, இந்தூர் 25வது இடத்தில் இருந்தது. அவர்கள் தங்கள் சுகாதாரம் மற்றும் கழிவு சேகரிப்பு அமைப்பை மேம்படுத்தினர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.


இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது. இது மத்திய அரசின் தூய்மை நகர கணக்கெடுப்பின் (Swachh Survekshan)  விருதுகள் 2023 இன் படி மீண்டும் இந்தியாவின் தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு  ஜனவரி 11 அன்று வெளியிடப்பட்டது. 


2016ல் விருதுகள் தொடங்கியபோது, இந்தூர் 25வது இடத்தில் இருந்தது. நகரம் அதன் தரவரிசையை விரைவாக மேம்படுத்தியது மற்றும் அதன் பின்னர் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தரவரிசை என்ன விளக்குகிறது என்பதை பார்ப்போம். இந்தூரின் துப்புரவு அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்பதை பார்க்கலாம். 


முதலில், நம்பர் 1 தரவரிசை என்றால் என்ன ?


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ( Union Housing and Urban Affairs Ministry) தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் விருதுகளை வழங்குகிறது.  இந்த விருதுகள் தூய்மை இந்தியா திட்டத்துடன் தொடங்கியது. அவை இரண்டு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் தூய்மையை அளவிடுகின்றன: குடிமக்கள் கருத்து மற்றும் கள மதிப்பீடு. 


சுகாதாரம் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் தூய்மை இந்தியா திட்ட மேலாண்மை அமைப்பில் (Swachh Bharat Mission Management System (MIS)) தரவைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் தீர்மானிக்கப்படும். பிரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பு, "ஒவ்வொரு வார்டிலும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் நடத்தப்படும் குடிமக்கள் சரிபார்ப்பு மூலம் மாதிரி அடிப்படையில் சரிபார்க்கப்படும்.".


குடிமக்களிடம் கழிவு சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களின் பதில்கள் சரிபார்க்கப்படுகின்றன. இந்த பதில்களை ஆவணப்படுத்த கள மதிப்பீட்டாளர்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீரற்ற முறையில் வருகை தருகின்றனர். ஆய்வு செய்யப்படும் குறிப்பிட்ட சிக்கலைப் பொறுத்து மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் மாறுபடலாம். உதாரணமாக, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தொழில்நுட்ப ஆதரவை மதிப்பிடும் போது, முறைசாரா குப்பை எடுப்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (personal protective equipment (PPE)) கருவிகளை வழங்குதல் போன்ற காரணிகளை மதிப்பீடு கருத்தில் கொள்கிறது. இந்தூரில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்து மறுசுழற்சி செய்யும் வசதி உள்ளது. 


இந்தூர் ஏன் தூய்மையான நகரமாக தரவரிசையில் உள்ளது?


இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் (Indore Municipal Corporation’s (IMC)) தூய்மை இந்தியா திட்ட ஆலோசகர் அமித் துபே பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவிடம் பேசினார். குப்பை சேகரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்கான நிலையான அமைப்பை இந்தூர் உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்த வலுவான அடித்தளம் தான் தேசிய தூய்மைக் கணக்கெடுப்பில் இந்தூர் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. 


இந்தூர் ஆரம்பத்திலேயே கணக்கெடுப்பின் பல்வேறு குறிகாட்டிகளில் கவனம் செலுத்தியது. அவர்கள் சுகாதாரம் மற்றும் கழிவு சேகரிப்பு அமைப்புகளில் மாற்றங்களைச் செய்தனர். இந்த முயற்சிகளை குடிமக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கும் அவர்கள் பணியாற்றினர். இது சிறந்த சுகாதார பழக்கங்களை உருவாக்க உதவியது. 


குப்பைகளை பிரித்து அகற்றுதல்: திடக்கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்கு வழங்கப்பட்ட தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, நகர் நிகம் (Nagar Nigam) இந்தப் பணியை மேற்கொண்டு புதிய யுக்திகளை வகுத்தது.  


2017 ஆம் ஆண்டில், இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் துணை ஆணையராக இருந்த சந்தோஷ் தாகூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். இந்தூரில் குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கினார். நகராட்சி குப்பை வாகனங்கள் செல்லும் பாதைகள் மாற்றப்பட்டன. வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுகளை சேகரிக்க ஆரம்பித்தனர். கழிவுகள் உலர்ந்த மற்றும் ஈரமான வகைகளாக பிரிக்கப்பட்டன. என்ஜிஓக்கள் வீடு வீடாகச் சென்று உதவினார்கள். குப்பைகளை நகராட்சி வாகனங்களில் நேரடியாக கொடுப்பது குறித்து மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பங்கள் இந்தச் சேவைக்கு மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் சேகரிக்க மாட்டார்கள். 


ஆரம்பத்தில், உள்ளூர் குப்பை சேகரிப்பாளர்கள் ('jagirs') மற்றும் பழைய துனி எடுப்பவர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. புதிய அமைப்பு ஏற்கனவே உள்ள அமைப்பை மாற்றியதே இதற்குக் காரணம். 2016 ஆம் ஆண்டில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு குப்பை தொட்டி வீதம் 3,000 குப்பைத் தொட்டிகள் 2.3 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட்டது சுமார் 1,200 குப்பை சேகரிப்பாளர்கள் (garbage collectors) வேலை இழந்தனர். பின்னர், இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் 1,000 குப்பை சேகரிப்பாளர்களை பணியமர்த்தியது. கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான 8,000 புதிய ‘துப்புரவு பணியாளர்களை’ ('Safai Mitras) கொண்ட குழுவில் அவர்கள் இணைந்தனர்.


இந்தூரில் இப்போது தினமும் பல்வேறு வகையான கழிவுகள் சேகரிக்கப்படுவதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் 692 டன் ஈரக் கழிவுகளும், 683 டன் உலர் கழிவுகளும், 179 டன் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுமார் 850 வாகனங்களை நகராட்சி பயன்படுத்துகிறது. இந்த வாகனங்களில் டயப்பர்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற உயிரி கழிவுகளை அள்ள தனித்தனி பெட்டிகள் உள்ளன. வீட்டு வாசலில் ஆறு வகைகளாக கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 


மற்றொரு சவால் மரபு கழிவுகளை கையாள்வது. இது பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படாமல் விடப்படும் கழிவுகள். கணக்கெடுப்பு இலக்குகளை அடைய, இந்தூர் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றி சுத்திகரித்தது. இது தேவகுராடியா மைதானத்தில் (Devguradiya ground) சுமார் ஆறு மாதங்களில் செய்யப்பட்டது. 2019 இல் இந்தூரின் முனிசிபல் கமிஷனர் ஆஷிஷ் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார். தூய்மை இந்தியா திட்டத்தில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டிற்கு, குப்பை கொட்டும் இடத்தில் 75% கழிவுகள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 


இந்தூர் நகரில் பிரிக்கப்பட்ட குப்பைகளைப் பெறத் தொடங்கியதும், அவர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து நிதியைப் பயன்படுத்தினர். சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart city), தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நகராட்சியின் சொத்து வரி வருவாய் ஆகியவை இதில் அடங்கும். இந்த நிதியில், ஒவ்வொரு நிலையத்திற்கும் 4 கோடி செலவில், 10 இடமாற்ற நிலையங்கள் (transfer stations) கட்டப்பட்டன.  இந்த நிலையங்கள் குப்பை கொட்டும் இடத்துக்கு செல்லும் முன் சேகரிக்கின்றன. நகராட்சி அனைத்து ஈரக் கழிவுகளையும் உரமாக மாற்றி விற்பனை செய்தது. 2016 ஆம் ஆண்டில், உலர் கழிவுகளுக்காக தேவகுரடியாவில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.  


சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கு வகித்தன. நகரில் சிறுநீர் கழிப்பறை மற்றும் கழிப்பறைகள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்தனர். திறந்த வெளியில் மலம் கழிக்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இது நடந்தது. தூய்மை நகர கணக்கெடுப்பில் இந்த வசதிகள் இருப்பதும் ஒரு காரணியாகும்.


இந்தூரில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தாகூர் குறிப்பிட்டார். குறிப்பாக குடிசைப் பகுதிகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகில் உள்ள வீடுகளின் தேவைகளை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களுக்கு ஒற்றை வீடு அல்லது சமூக கழிப்பறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தினர். தற்போது இந்த கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


வாகனங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, வாகன உரிமையாளர்களுக்கு 1,000 குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஜன்னல்களுக்கு வெளியே கழிவுகளை வீச வேண்டாம் என்று அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்தது.


முன்னாள் மேயர் மாலினி கவுட், 2018 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், குடிமக்களின் பங்கேற்பு வெற்றிக்கு பெருமை சேர்த்தது. ஒரு வருடத்தில், அவர் குடிமக்களுடன் சுமார் 400 சந்திப்புகளை நடத்தினார். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தூய்மைப் பிரமாணம் (oath of cleanliness) செய்து வைத்தார்.


 மக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி அபராதம் விதிக்கத் தொடங்கியது. சாலையில் எச்சில் துப்புவது, திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது போன்றவற்றுக்கு 250 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். பழக்கமான குற்றவாளிகளைத் தடுப்பதற்கான பிற முயற்சிகள் கடந்த காலத்தில் வேலை செய்யவில்லை என மேயர் குறிப்பிட்டார். பொது அவமானம் ஒரு தடுப்பாக வேலை செய்யும் என்று அவர் நம்பினார். குற்றவாளிகளின் பெயர்களை செய்தித்தாள்களில் வெளியிடுவதும், வானொலியில் ஒளிபரப்புவதற்கும், குற்றவாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் அபராதம் விதிக்கவும் மேயர் ஆணையிட்டார்.   




Original article:

Share: