ஆள் நடமாட்டம் இல்லாத நிலம் : கச்சத்தீவை வைத்து அரசியல் செய்வது பற்றி . . .

 அதிகாரத்தில் இருப்பவர்கள் அண்டை நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் பிரச்சினைகளை எழுப்பக்கூடாது.  


மார்ச் 31 அன்று, X தளத்தில் திரு. மோடி ஒரு பதிவை பதிவிட்டார். அதில் எப்படி காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவைக் இலங்கைக்கு கொடுத்தது என்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மற்ற கட்சிகளைப் போலவே மாநில பா.ஜ.க.வும் கச்சத்தீவை  மீட்பது பற்றி பேசி வருகிறது. ஆனால், பா.ஜ.க. வின் தேசிய தலைவர்களும் இதுபற்றி பேசுவதால், பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசாங்கமும் (UPA), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) அரசாங்கமும் இந்த தீவை இலங்கையின் ஒரு பகுதியாகவே பார்த்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம்,  ராஜ்யசபாவில், கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (International Maritime Boundary Line (IMBL)) இலங்கைக்கு அருகில் உள்ளது என்று கூறியது. 2013 இல், ஐக்கிய முற்போக்கு அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றிய கேள்வியே இல்லை என்றுக் கூறியது. இந்தியாவுக்குச் சொந்தமான எந்தப் பகுதியும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை என்பதாலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 


 கச்சத்தீவு, பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சர்ச்சைக்குள்ளான பகுதியாகும். 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இது இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்க்கு (International Maritime Boundary Line (IMBL)) வழிவகுத்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கச்சத்தீவு மீதான இறையாண்மைக்கு தீர்வு காணப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இதை உறுதி செய்தது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இது நீதித்துறை மறுஆய்வில் உள்ளதாகவும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.


ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இந்த விஷயத்தை தவறாகக் கையாண்டதா என்பதுதான் தற்போதைய சர்ச்சை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களுக்கு முன், இந்தியத் தலைவர்கள், கச்சத்தீவு மீதான தங்கள் உரிமைக்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right to Information (RTI)) மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன. 1803 ஆம் ஆண்டு முதல் ராமநாதபுர ஜமீன்தாரி ராஜாவின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், வரலாற்று ஆவணங்கள் இந்தியாவின் வழக்கை உறுதியாக ஆதரிக்கவில்லை. மார்ச் 1972 இல் தி இந்து நாளிதழின் ஒரு அறிக்கை, வருடாந்திர தேவாலய திருவிழா 90 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று குறிப்பிடுகிறது. 1974 இல் வெளியுறவுச் செயலர் கேவல் சிங் மற்றும் முதல்வர் மு. கருணாநிதி ஆகியோருக்கு இடையே சென்னையில் நடந்த சந்திப்பு, வரலாற்று உண்மைகள் இலங்கைக்கு சாதகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. இது இந்திய அதிகாரிகளுக்கு கவலையாக இருக்கலாம். 


கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்ற கருத்தை பல உண்மைகள் ஆதரிக்கின்றன. 1874-76ல் இந்திய ஆய்வுக் குழு (Indian survey team) ஒன்று கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டது. 1921 ஆம் ஆண்டு முதல் இலங்கை தீவின் மீது இறையாண்மையைக் கோருகிறது. பாக் வளைகுடாவில் மீன்பிடி பாதையை குறிக்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை மாகாணத்தால் இந்தத் தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க முடியவில்லை. மேலும், 1920களின் நடுப்பகுதியில் இருந்து கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை இந்தியா எதிர்க்கவில்லை.


காங்கிரஸ் கட்சி மற்றும் தி.மு.க.வை விமர்சிப்பவர்கள் நேருவின் கருத்தை "எங்கள் கோரிக்கையை கைவிடுகிறோம்" (giving up our claim) என்பதைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுகின்றனர் அல்லது  அரசியலமைப்பு நிபுணர் எம்.சி. செட்டவால்டினின் (M.C. Setavald's) சாதகமானக் கருத்தை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  ஆவணங்கள் இந்த முடிவு நன்கு அடிப்படையானது என்பதை வெளிப்படுத்துகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் கச்சத்தீவை மீட்பதற்காக அவ்வப்போது குரல் கொடுப்பதில் அர்த்தமுள்ளது. ஆனால், பிரதமர் அதையே செய்ய ஆரம்பித்தால் அது மிகவும் கவலைக்குரியதாக இருக்கும்.  





Original article:

Share:

சூரிய சக்தியின் எழுச்சி : இறக்குமதி செய்யப்டும் சூரிய சக்தி தடுகளைக் (solar panels) குறைத்தல்

 இந்தியாவின் சூரிய சக்தி தொழில்துறை தரத்தில் குறைவு ஏற்படாமல் வளர்ச்சியடைய வேண்டும்.

 

சூரிய சக்தி திட்டங்களை உருவாக்குபவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரிய சக்தி தடுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் சூரிய ஒளிமின்னழுத்த தொகுதிகளின் உற்பத்தியாளர்கள் கட்டாயப் பதிவுக்கான தேவை ஆணை (Approved Models and Manufacturers of Solar Photovoltaic Modules (Requirement for Compulsory Registration) Order, 2019), 2019 என அழைக்கப்படும் இந்தக் கொள்கையானது, தயாரிப்பாளர்கள் தங்கள் உற்பத்தி அமைப்புகளை தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தால் (National Institute of Solar Energy) ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அங்கீகரிக்கப்பட்டால், அவர்கள் இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சூரிய சக்தி தடுகளை உள்நாட்டிலையே உருவாக்கலாம் என்று அர்த்தம். இந்த ஒப்புதல், பிரதமரின் சூரிய கூரை திட்டம் (PM solar rooftop scheme) உட்பட அரசாங்க டெண்டர்களுக்கு நிறுவனங்கள் போட்டியிட அனுமதிக்கிறது.


ஒரு நிறுவனத்தின் உற்பத்தி அமைப்பு அங்கீகரிக்கப்பட்டால், நிறுவனம் தனது சொந்த வளாகத்தில் சூரிய சக்தி தடுகளை உருவாக்கலாம். அந்த நிறுவனம் சூரிய சக்தி தடுகளை இறக்குமதி செய்யவில்லை என்பதை இது காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருப்பது ஒரு பெரிய நன்மையைக் கொண்டுள்ளது. இது நிறுவனம் அரசாங்க ஒப்பந்தங்களில் பங்கேற்க அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் அரசாங்கத்தின் முக்கிய சூரிய ஆற்றல் திட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்த திட்டங்களில் ஒன்றுதான் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமரின் சூரிய கூரை திட்டம் ஆகும். 


அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை உருவாக்குவதன் நோக்கம் சீனாவிலிருந்து இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதாகும். உலகின் 80% சூரிய சக்தி தடுகளை சீனா உற்பத்தி செய்கிறது. இராஜதந்திர உறவுகள் வலுவாக இல்லாத நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து சுமார் 500 ஜிகாவாட் மின்சாரத்தைப் பெற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த ஆண்டுக்குள் சூரிய சக்தியிலிருந்து குறைந்தது 280 ஜிகாவாட் பெறுவது என்பது இந்த இலக்கில் அடங்கும். இந்த இலக்கை அடைய, இந்தியா 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 40 ஜிகாவாட் சூரிய சக்தி திறனை உற்பத்தி வேண்டும். 


கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியா 13 ஜிகாவாட் சூரிய சக்தியை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. COVID-19 தொற்றுநோய் முன்னேற்றத்தைக் குறைத்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 25 ஜிகாவாட் முதல் 40 ஜிகாவாட் வரை உற்பத்தி செய்ய நாடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. எவ்வாறாயினும், இந்த இலக்குகளை அடைவது கடினமாக உள்ளது. ஏனெனில் இந்தியா தனது தொழில்துறையை விட அதிகமான சூரிய சக்தி தடுகள் தேவை. இந்தியாவின் சூரிய சக்தி தேவைகள் நிறைய இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமை உள்நாட்டு சூரிய சக்தி தடுகள் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. அவர்கள் சான்றிதழுக்காக அரசாங்கத்திற்கு பணம் செலுத்த வேண்டும், ஆனால் பெரும்பாலும் மலிவான இறக்குமதி செய்யப்பட்ட சூரிய சக்தி தடுகளால் ஆர்டர்களை இழக்க நேரிடும், குறிப்பாக சீனாவிலிருந்து வரும் சூரிய சக்தி தடுகளால்.


இந்தச் சிக்கலைக் கையாள, அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் மத்திய அரசு தாமதம் செய்தது. இப்போது, இந்தப் பட்டியல் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் என்று முடிவு செய்துள்ளது. இந்தியா, தனது 2030 ஆம் ஆண்டிற்கான சூரிய சக்தி இலக்குகளை எட்ட முடியுமா மற்றும் பெரும்பாலான மக்களுக்கு சூரிய சக்தியை மலிவு விலையில் வழங்க முடியுமா என்பதைப் பொறுத்து வெற்றி அளவிடப்படும். இதன் பொருள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையான தர சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தேசியவாத காரணங்களுக்காக அவர்கள் விலை மற்றும் தரத்தை குறைக்ககூடாது. இந்திய சோலார் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர ஏற்றுமதிக்கு அறியப்பட வேண்டும். இருப்பினும், இந்த இலக்கை அடைவது எளிதானது அல்ல.




Original article:

Share:

தவறாகப் பயன்படுத்தப்படும் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA))

 பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் குறிக்கோள் தெளிவாக இருந்தது. பல பொருளாதாரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பெரிய அளவிலான சட்டவிரோத பணத்தை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டது. பெருகிவரும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்த சட்டவிரோதப் பணம், சட்டப்பூர்வமான பொருளாதாரத்துடன் கலந்தால், உலகப் பொருளாதாரத்துக்குக் கேடு விளைவித்து, நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை பலர் புரிந்துகொண்டனர்.


சட்டத்தின் பின்னணி முக்கியமானது


1988 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்களின் சட்டவிரோத கடத்துதலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டை (United Nations Convention against Illicit Traffic in Narcotic Drugs and Psychotropic Substances) ஏற்பாடு செய்தது. போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலிருந்து பணமோசடியை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநாடு அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஏழு பெரிய தொழில்துறை நாடுகள் ஜூலை 1989 இல் பாரிஸில்  சந்தித்து, பணமோசடி பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை (Financial Action Task Force  (FATF)) உருவாக்கின. 1990 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, அரசியல் பிரகடனம் (Political Declaration) மற்றும் உலகளாவிய செயல் திட்டத்தை (Global Programme of Action) ஏற்றுக்கொண்டது. போதைப்பொருள் பணமோசடியைத் தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அனைத்து உறுப்பு  நாடுகளையும் வலியுறுத்தியது. 


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானத்தைத் தொடர்ந்து, போதைப்பொருள் பணமோசடிக்கு எதிராக இந்திய அரசாங்கம் சட்டங்களை உருவாக்கியது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பரிந்துரைகளைப் பயன்படுத்தி இந்திய சட்டத்தை நிறைவேற்றியது. போதைப்பொருள் கடத்தல் ஒரு எல்லை தாண்டிய பிரச்சினை என்பதை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 10, 1998 அன்று ஒரு சிறப்பு அமர்வை நடத்தியது, உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தியது மற்றும் பணமோசடியை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. இதன் விளைவாக, இந்திய நாடாளுமன்றம் 2002 இல் பணமோசடி தடுப்புச் சட்டத்தை (Prevention of Money Laundering Act in 2002 (PMLA) நிறைவேற்றியது, பின்னர் 2005 ஆம்  ஆண்டு  இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது.


இந்த சட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை முன்னிலைப்படுத்த இந்த சட்டத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வது முக்கியம். அதன் வரலாற்றைப் பார்க்கும்போது, போதைப்பொருள் பணப் பட்டுவாடாவை  தடுப்பதே  சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. 2002 சட்டம் சில குற்றங்களை உள்ளடக்கியது. இந்தக் குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code (IPC)) மற்றும் 1985 ஆம் ஆண்டின் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்துடன் (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்கள் மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பரிந்துரைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும்  பணமோசடியைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், காலப்போக்கில் செய்யப்பட்ட திருத்தங்கள் இந்தியாவின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் தன்மையை மாற்றின.


பணமோசடி பற்றிய சட்டம், பணமோசடி மற்றும் "குற்ற வருமானம்" (“crime proceeds”)  மீது கவனம் செலுத்துகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், குற்றத்தைச் செய்தவர்களும், அதிலிருந்து வரும்  பணத்தைக வைத்து இருப்பவர்களையும், பின்னர் பணத்தை பயன்படுத்துபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.


பணமோசடி தடுப்புச்  சட்டத்தின்  பிரச்சனை என்னவென்றால், அதன் முக்கிய குறிக்கோளுடன் தொடர்பில்லாத பல குற்றங்களை உள்ளடக்கியது. பணமோசடி தடுப்புச்  சட்டத்தின்  முக்கிய குறிக்கோள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடிக்கு எதிராக போராடுவதாகும். இந்தியாவில் பணமோசடி தடுப்புச்   சட்டம் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்த ஐநா தீர்மானத்தில் போதைப்பொருள் பணமோசடி பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கும், நாடுகளின் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்தக் குற்றம் காணப்பட்டது. பணமோசடி தடுப்புச்  சட்டத்தின் அறிமுகம் இதை ஒப்புக்கொள்கிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க கடுமையான சட்டம் தேவை என்று உலகம் முழுவதும் உடன்பாடு ஏற்பட்டது. எனவே, பணமோசடி தடுப்புச்  சட்டத்தின்  முக்கிய நோக்கம், உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து அதிக அளவு சட்டவிரோத பணம் மற்றும் அது உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் பிரச்சனையை சமாளிக்க உருவாக்கப்பட்டது. இந்த சட்டவிரோதப் பணம் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

 

பணமோசடி தடுப்புச் சட்டம்  (Prevention of Money Laundering Act (PMLA))


பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), இந்திய நாடாளுமன்றத்தால் பிரிவு 253 (Article 253) இன் கீழ் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) ஒன்றிய பட்டியலின் 13 வது பிரிவில் இதைப் பற்றி தெளிவாக உள்ளது. எனவே, முன்னர் குறிப்பிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் தொடர்பாக ஒன்றிய  பட்டியல் 253 மற்றும் பிரிவு 13இன் (Item 13) கீழ் உருவாக்கப்பட்ட பணமோசடி தொடர்பான சட்டம் போதைப்பொருள் பணத்தை மட்டுமே குறிவைக்க முடியும். காலப்போக்கில், இந்தச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் அல்லது பிற சிறப்புச் சட்டங்களில் உள்ள குற்றங்களைச் சேர்க்க அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளன. பணமோசடி செய்வது இந்த திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஒன்றோடு தொடர்புடையது என்பதால், அவை பணமோசடி தடுப்புச் சட்டத்தை  அமல்படுத்துவதற்கான அடிப்படையாக அமைகிறது.


முதலில் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் விதிகள் இப்போது அவற்றின் தீவிரத்தை குறைக்காமல் மற்ற குற்றங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, அரசு ஊழியர்களிடையே ஊழலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (Prevention of Corruption Act) 2009 இல் குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பொது ஊழியர்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் போலவே நடத்தப்படுகிறார்கள். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் ஒரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள்.


ஆங்கிலோ-சாக்சன் (Anglo-Saxon) சட்டத்தில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் நிரபராதியாகக் கருதப்படுவார். இருப்பினும், பணமோசடி தடுப்புச் சட்டம் இந்தக் கொள்கையை மாற்றியமைக்கிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது மிகவும் கடினம். பணமோசடி தடுப்புச் சட்டம்பிரிவு 45 (section 45) இன் படி, ஒரு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று நம்பினால் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற முடியும். இதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையில் இருக்கக்கூடும்.


ஜாமீன் விதி  (bail provision)


பணமோசடி தடுப்புச் சட்டத்தில் பிரிவு 45 (Section 45) ஜாமீன் விதி இந்தியாவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. 2018 ஆம் ஆண்டில், நிகேஷ் தாராசந்த் ஷா vs யூனியன் ஆஃப் இந்தியா (Tarachand Shah vs Union of India (2018)) வழக்கில், உச்சநீதிமன்றம், இதை அரசியலமைப்பிற்கு விரோதமானது   மற்றும் சரத்து 14 (Article 14) மற்றும் சரத்து 21 (Article 21) எதிரானது என்று கண்டறிந்தது. ஆனால், பாராளுமன்றம் விரைவாக 2022 இல் திருத்தங்களுடன் அதை மீட்டெடுத்தது, விஜய் மதன்லால் சவுத்ரி இந்தியா இந்திய ஒன்றியம் (A.M. Khanwilkar in Vijay Madanlal Choudhary vs Union of India) என்ற வழக்கில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றம் இந்த விதியை நியாயமானதாகக் கருதியது மற்றும் பணமோசடி தடுப்புச்  சட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது.


இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது. இந்த சட்டம் பணமோசடியைத் தடுப்பதையும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இது குறைவான கடுமையான குற்றங்களையும் உள்ளடக்கியது. அட்டவணையில் குற்றங்களைச் சேர்ப்பது சட்டமன்றக் கொள்கையின் விஷயம் என்று நீதிபதிகள் பரிந்துரைத்தனர். 


பணமோசடி தடுப்புச் சட்டம் வழக்குகளில்  ஜாமீன் வழங்குவதற்கான தற்போதைய நீதித்துறை அணுகுமுறை மிகவும் தொழில்நுட்பமானது.  1978 இல், நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் குடிகண்டி நரசிம்முலு அண்ட் ஓர்ஸ் vs  அரசு வழக்கறிஞர் (Gudikanti Narasimhulu And Ors vs Public Prosecutor) என்ற வழக்கில், ஜாமீன் குறித்து கிருஷ்ண ஐயர் ஒரு முக்கியமான தீர்ப்பை வழன்கினார். தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்றார். அரசியலமைப்பு, பிரிவு 21ன் (Article 21) கீழ், அதை மதிப்புமிக்கதாக பார்க்கிறது. எனவே, நீதிமன்றங்கள் ஜாமீன் மறுக்க முடிவு செய்யும் போது, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது மனிதனையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் (Justice V.R. Krishna Iyer)  காலத்தில் இருந்து ஏ.எம். கான்வில்கர் (Justice A.M. Khanwilkar) வரை உச்ச நீதிமன்றம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 




Original article:

Share:

இந்தியாவை உலக அரங்கில் ஏற்றிய ஓர் உரை -பிரியஞ்சலி மாலிக்

 எழுபது ஆண்டுகளுக்கு முன், நேரு மக்களவையில் ஆற்றிய உரை, உலக அணு ஆயுத ஒழிப்பில் இந்தியாவை ஒரு தலைவராக நிலைநிறுத்தியது. இந்த உரை, பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தை (Partial Test Ban Treaty) கொண்டு வர உதவியது. மேலும், அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய  பங்கைக் கொண்டிருந்தது.


ஏப்ரல் 2, 1954 அன்று, பிரதமர் ஜவஹர்லால் நேரு மக்களவையில் ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார். இந்த உரை அணு ஆயுத ஒழிப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக உலக அளவில் அறியப்பட்டது. 'கேஸ்டில் பிராவோ' (Castle Bravo) என்ற மிக சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்திய பின்னர் இந்த உரை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் வலுவாக இருந்தது. அது, அனைத்து அளவீட்டு கருவிகளையும் உடைத்தது. நேரு தனது உரையில், அணு ஆயுத சோதனையை நிறுத்த "நிலையான ஒப்பந்தத்தை"  (a standstill agreement) பரிந்துரைத்தார். அவரது பேச்சு நடைமுறை சிந்தனை, தொலைநோக்கு அணுகுமுறையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 


இந்தியா அப்போதுதான் சுதந்திரம் அடைந்து தேசத்தை கட்டியெழுப்புவதில் பல சவால்களை எதிர்கொண்டது. வலுவான இராணுவம் அல்லது பொருளாதாரம் போன்ற அதிகாரத்தின் வழக்கமான அறிகுறிகள் அதற்கு இல்லை, மேலும் இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. இப்படி பல சவால்கள் இருந்தபோதிலும், நேரு உலகளவில்  இந்தியாவிற்கான  இடத்தை உறுதியாக நம்பினார். அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியது மட்டுமல்லாமல், இந்த யோசனையை தன்னால் முடிந்த எல்லா இடங்களிலும் பரப்ப கடுமையாக செயலாற்றினார். நேரு தனது உரையின் மூலம் அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் தலைவராக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தினார். பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தை (Partial Test Ban Treaty (PTBT)) உருவாக்க வழிவகுத்த முயற்சிகளை அவர் தூண்டினார். அணு ஆயுதங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாதிடுவதன் மூலம், அவர் அவற்றின் பரவலைக் குறைக்கவும் முடியும் என் நம்பினார். 


முடங்கிய உடன்பாடு


பனிப்போரின் போது ஆயுதக் குறைப்பு பிரச்சினையில் அதன் படிப்படியான அணுகுமுறைக்காக இந்த நிலையான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது. நேரு நான்கு முக்கிய விஷயங்களை முன்மொழிந்தார்: முதலில், அணு ஆயுத சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இரண்டாவதாக, ஐக்கிய நாடுகளின் ஆயதக்குறைப்பு ஆணையம் (Disarmament Commission)  குறுகிய கால சோதனை தடை மற்றும் அணு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் சேமிப்பை தடை செய்யும் நீண்ட கால நோக்கம் ஆகிய இரண்டையும் சமாளிக்க பரிந்துரைத்தது. மூன்றாவதாக, இந்த ஆயுதங்களின் அழிவு சக்தி மற்றும் விளைவுகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையைக் கோருவதன் மூலம் அணுசக்தி நாடுகள் மீது பொது அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. கடைசியாக, அணு ஆயுதங்கள் அச்சுறுத்தலை உலகளவில் அங்கீகரிக்க அழைப்பு விடுத்தது. ஆயுதக் குறைப்பு பற்றிய விவாதத்தை நேரு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆயதக்குறைப்பு ஆணையத்திற்கு அப்பால் விரிவுபடுத்தினார். 


நேருவின் நடவடிக்கைகள், அணு சக்தி நாடுகள் மற்றும் அவற்றின் சோதனைகளால் உலகளவில் ஏற்படுத்தும் ஆபத்தை உணர்த்தியது. தங்கள் சோதனைகளால் ஏற்படும் தீங்குகளை அவர்கள் காண வேண்டும் மற்றும் ஆயதக்குறைப்பிற்க்கு வேண்டிய அழுத்தத்தை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஐ.நா.வில் இந்தியா தனது முயற்சிகளைத் தொடர்ந்தது, இதனால் 1955 ஆம் ஆண்டில், நேரு அணுசக்தி சோதனையை நிறுத்த வேண்டும் என்று வாதிட்டார். மேலும், இந்த பிரச்சினையில் முன்னேற்றத்தை  ஐ.நா. ஆயுதக் குறைப்பு ஆணையத்திற்கு (UN Disarmament Commission) தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். 


இதனுடன், அணு ஆற்றல் மற்றும் அணு வெடிப்புகளின் தாக்கத்தை ஆராய விஞ்ஞானிகளுக்காக 1954 இல் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். இருப்பினும், 1956 இல் சூயஸ் நெருக்கடி (Suez Crisis) மற்றும் ஹங்கேரியப் புரட்சி (Hungarian Revolution) ஆகியவை அறிவியல் மற்றும் உலக விவகாரங்கள் மீதான பக்வாஷ் மாநாடு (Pugwash Conferences on Science and World Affairs) முதல் சந்திப்பைத் தாமதப்படுத்தியது. இருந்த போதிலும், கூடி இருந்த விஞ்ஞானிகளுக்கு ஏற்கனவே பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் (Bertrand Russell) மற்றும் ஜோசப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat) ஆகியோரால் அழைப்பு விடுக்கப்பட்டது.


தார்மீக சக்தி


அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) மற்றும் விரிவான சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Test Ban Treaty) போன்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்று 70 ஆண்டுகள் ஆகிறது. தேசிய நலன்களுக்காக இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்றாலும், அணு ஆயுதக் குறைப்பில் இந்தியாவின் பங்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 1954 இல், இந்தியா பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தது மற்றும் பாண்டுங் மாநாட்டில் இருந்ததைப் போன்ற அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறவில்லை. இருப்பினும், இந்தியாவுக்கு தார்மீக பலம் இருந்தது. 1948 ஆம் ஆண்டு தனது முதல் ஐ.நா உரையில் நேரு கூறியது போல், இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பெரிய படைகள் மற்றும் அணு குண்டுகளைக் கொண்ட சக்திவாய்ந்த நாடுகளைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. இந்த பின்னடைவு அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை வரையறுத்தது.


ஹைதராபாத் மற்றும் கோவாவில் படைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா பின்னர் சவால்களை எதிர்கொண்டாலும், சீனா போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒழுக்கம் மட்டுமே பாதுகாக்காது என்பதை உணர்ந்தது. உலகளாவிய செல்வாக்கைப் பெற அறநெறியைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. நேரு ஆயுதக் குறைப்பை ஆதரித்தார். ஏனென்றால், இந்தியாவின் வளர்ச்சிக்கு வளங்கள் தேவை, ஆயுதங்கள் அல்ல. இருப்பினும், ஒரு பாதுகாப்புத் திட்டம் இருந்தது: 1948 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டம் ஆயுத மேம்பாட்டுத் தேவைகளின் போது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த அனுமதித்தது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் சிற்பியான ஹோமி பாபா அணு ஆயுதங்களை விரும்பினார். அதை நேரு நேரடியாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் முற்றிலும் ஊக்கப்படுத்தவும் இல்லை.


இந்தியாவின் உலகளாவிய பங்கை கோடிட்டுக் காட்டிய மக்களவையில் நேருவின் உரையின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது அணுசக்தி நாடுகளின் பகுதி சோதனை தடை ஒப்பந்தத்தின் (PTBT) பேச்சுவார்த்தையில் செல்வாக்கு செலுத்தியது. 1963 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்தியா இதில் கையெழுத்திட்ட நான்காவது நாடாகும். அணுக் கதிர்வீச்சின் விளைவுகள் பற்றிய கூடுதல் தகவலின் அவசியத்தை இந்த உரை வலியுறுத்தியது மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராக உலகளாவிய கருத்தைத் திரட்டியது. இது அணுசக்தி பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விதிமுறையை நிறுவ உதவியது. 1945 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இன்றுவரையில் அணுசக்தியின் அழிவுகரமான பயன்பாட்டைத் தடுத்தது. அமைதி மற்றும் ஒழுக்கத்திற்கான குரல் என்ற இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை இந்தப் பேச்சு உயர்த்தியது, அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான நேருவின் பார்வையை எதிரொலித்தது. 


பிரியஞ்சலி மாலிக்  'India's Nuclear Debate: Exceptionalism and the Bomb' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.




Original article:

Share:

அரசியல் கட்சிகளுக்கு ஓர் ஆலோசனை : உங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் -கௌசிக் தாஸ் குப்தா

 மக்கள்தொகை ஈவுத்தொகையால் பலனடையும் காலம் முடிந்துவிட்டது என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும். 


இன்னும் இரண்டு மாதங்களில் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் வருமா அல்லது கடமைப் பாதையில் (kartavya path) மாற்று அரசியல் கட்டமைப்பை வாக்காளர்கள் வைப்பார்களா என்பது தெரிந்துவிடும். தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும், ஒன்று தெளிவாக உள்ளது: ஜூன் 4 க்குப் பின்னர் பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் போது, நாடு அதன் மக்கள்தொகை ஆதாயத்தை அறுவடை செய்ய வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே இருக்கும். 2029 ஆம் ஆண்டளவில், உழைக்கும் வயது மக்கள்தொகை உழைக்காத மக்கள்தொகையை விட அதிகமாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு கணிசமாகக் குறையும்.


2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடுகளின் குழுவில் சேர்ப்பது, நாட்டை "விக்சித் பாரத்" (Viksit Bharat) ஆக்குவது, நரேந்திர மோடி அரசாங்கத்தின் விருப்பத்திற்குரிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இந்த விருப்பங்களுடன் நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியும் சண்டையிட முடியாது. எவ்வாறாயினும், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும்போது, இதற்கான கேள்விகள் இவை: நாட்டின் அரசியல் வர்க்கம் நாட்டின் வளர்ச்சி சவாலை மக்கள்தொகை கண்ணோட்டத்தில் பார்க்கிறதா? கிராமங்களை விட்டு வெளியேறும் இளைஞர்கள் நிலையற்ற கிக் வேலைகளில் (gig jobs) வேலை செய்யாமல் இருக்க அரசியல் கட்சிகளிடம் திட்டம் உள்ளதா? அல்லது, நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சிப் புதிரை நிவர்த்தி செய்வதற்கான உறுதியான திட்டம் அவர்களிடம் உள்ளதா என்பதாகும். நாட்டின் தொழிலாளர் சக்தியில் 45 சதவீதத்தைப் பயன்படுத்தி, அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதத்தை மட்டுமே பங்களிக்கும் விவசாயத்தை அதிக உற்பத்தி மற்றும் நிலையானதாக மாற்றுவது எது?


சீனாவின் பொருளாதார வெற்றி என்பது 1980 களின் முற்பகுதியிலிருந்து சுமார் ஒரு பத்தாண்டிற்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் நாடு அதன் மக்கள்தொகை தொகையை அறுவடை செய்த கதையாகும். சீனாவின் உழைக்கும் வயது மக்கள்தொகை அதிகரித்து வந்த காலகட்டம் மனித வரலாற்றில் தொழிலாளர் சக்தியின் மிகப்பெரிய குறுக்கு-துறை இயக்கங்களில் (cross-sector movement) ஒன்றாகும். ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations’ Population Fund (UNPF)) தரவுகளின்படி, "கிராமப்புற-நகர்ப்புற, நகர்ப்புற-நகர்ப்புற புலம்பெயர்ந்தோர் 1982 இல் 7 மில்லியனாக மட்டுமே இருந்தனர். ஆனால், 2017 இல் 244 மில்லியனாக அதிகரித்துள்ளனர்". 1978 ஆம் ஆண்டில், சீனாவின் தொழிலாளர் உழைக்கும் மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று, இத்துறையின் பங்கு 25 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பொருட்கள் உற்பத்தி, உணவு கேட்டரிங், இணைய பொருளாதாரம், தளவாடங்கள் மற்றும் பகிர்வு பொருளாதாரம் போன்ற வாய்ப்புகளை வழங்க சீனா தனது தொழிலாளர் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடு இதனுடன் அறிவியல் மற்றும் கல்வியில் தொடர்ந்து அதிகரித்து வரும் முதலீடும் சேர்ந்தது.

சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனா பொருளாதார பெருக்கத்தின் பெரும்பகுதி காலநிலை மாற்றத்தின் மாறுபாடுகளில் இருந்து அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. மேலும், சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் அதன் விருப்பங்களை அடைவதில் ஜனநாயகம் இல்லாததால் சிக்கலில் உள்ளது என்று வளர்ந்து வரும் அறிஞர் அமைப்பு ஒன்று வாதிட்டுள்ளது. இந்தியாவில், இதற்கு நேர்மாறாக, வேளாண் சட்டங்களின் தலைவிதி கொள்கை வகுப்பாளர்களுக்கு சவாலாக உள்ளது. மாற்றத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அதற்கு பதிலாக, நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், அனைவரின் குரலையும் கேட்பதன் மூலமும், மாற்றுக் கருத்துடையவர்கள் உட்பட, மனித வளங்கள் மற்றும் அறிவு மேம்பாட்டில் முதலீடு செய்வதன் மூலமும், திறன்களை வளர்ப்பதன் மூலமும், உற்பத்தி வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் அது வர வேண்டும்.


ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் (United Nations Population Fund (UNFPA)) மதிப்பீட்டின்படி, 2020 மற்றும் 2030 க்கு இடையில் இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள்தொகை 101 மில்லியனாகவும், இது 2030 மற்றும் 2040 க்கு இடையில் 61 மில்லியனாகவும், 2040 மற்றும் 2047 க்கு இடையில் 21 மில்லியனாகவும் குறையும். இந்த பிரிவிற்கான வேலைகளின் தரம் ஒரு கவலையாக உள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) மற்றும்  மனித மேம்பாட்டு நிறுவனத்தின் (Institute of Human Development) 'இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை' (India Employment Report) ஒரு கவலைக்குரிய போக்கை பரிந்துரைத்தது: "சமீபத்திய ஆண்டுகளில் விவசாயத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு கிட்டத்தட்ட தேக்கமடைந்துள்ளது". இளைஞர் வேலையின்மை 2019 இல் 17.5 சதவீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்திருந்தாலும், அது 2022 இல் 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களிடையேயும், அதிகம் படித்தவர்களிடையேயும் வேலையின்மை அதிகமாக உள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது. இந்த அறிக்கை பற்றிய செய்தித்தாளின் தலையங்கம் (Jobs, still, IE March 28) சுட்டிக்காட்டியதைப் போல, "மக்கள்தொகை குறிப்பிட்ட தொகையை அறுவடை செய்வதற்கு இந்த குழுக்களுக்கு அதிக உற்பத்தி வடிவிலான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். இது ஒரு சவாலாக இருக்கப் போகிறது. ஏனெனில், உற்பத்தி செயல்முறை மூலதனம் மிகுந்ததாகவும், உழைப்பை மிச்சப்படுத்துவதாகவும் மாறியுள்ளது ".


வேலைவாய்ப்பு நிலைமையை நிவர்த்தி செய்ய, பல்வேறு முனைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலையங்கம் அறிவுறுத்துகிறது. கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துதல், உழைப்பு மிகுந்த உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும். கடந்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், அதில் பெரும்பாலானவை சுயதொழில் மற்றும் சாதாரண வேலைகளில் உள்ளன. பல புலம்பெயர்ந்தோர் சமூக பாதுகாப்பு வலைகள் இல்லாததால் கஷ்டங்களை எதிர்கொண்ட போது இந்த போக்கின் அபாயங்கள் தொற்றுநோய்களின் போது முன்னிலைப்படுத்தப்பட்டன.


வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை உருவாக்கும்போது, நாட்டின் இளைஞர்களின் தேவைகளையும், மக்கள்தொகையின் அதற்கான குறிப்பிட்ட தொகையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தையும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 




Original article:

Share:

100 ஆண்டுகளுக்குப் பிறகு வைக்கம் சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறோம் - அர்ஜுன் சென்குப்தா

 600 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகம் இந்தியாவின் பல கோவில் நுழைவு இயக்கங்களில் முதன்மையானது. தேசிய இயக்கத்தின் மத்தியில், அது தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறை பிரச்சினையை முன்வைத்தது.


திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், உள்ள  கோயில் நகரமான ஒன்று ’வைக்கம்’  ஆகும். மார்ச் 30, 1924 இல், மக்கள் அங்கு அமைதியான முறையில் கோவில் நுழைவு போராட்டங்களில் பங்கேற்றனர்.  இந்தியாவில் நடைபெற்ற கோவில் நுழைவு போராட்டங்களில் இதுவே முதல் முறையாகும். தேசியவாத இயக்கம் வலுப்பெறும் போது, சமூக மாற்றங்களை மேற்கொள்வதில் சத்தியாகிரக இயக்கம் கவனம் செலுத்தியது. இது திருவிதாங்கூரில் காந்திய எதிர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது. இப்போது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் அதை நினைவில் கொள்கிறோம்.


20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவிதாங்கூர்


திருவிதாங்கூர் சமஸ்தானம் "நிலப்பிரபுத்துவ, இராணுவவாத மற்றும் இரக்கமற்ற ஆட்சி நிறைந்த அரசாங்க அமைப்பைக் கொண்டிருந்தது" என்று கலாச்சார மானுடவியலாளர் ஏ.ஐயப்பன் கேரள கிராமத்தில் சமூகப் புரட்சித் தொடர்பான, கலாச்சாரத்தில் ஒரு ஆய்வு-1965 (A Study in Culture (1965)) என்ற புத்தகத்தில் எழுதினார். சாதியப் பாகுபாடு என்ற கருத்து தொடுதலின் அடிப்படையில் மட்டுமல்ல, பார்வையின் அடிப்படையிலும் தீண்டாமையாக இருந்தது. கோயில்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சாலைகள் போன்ற எந்த "தூய்மையான" (pure) இடத்திற்கும் தாழ்ந்த சாதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டன.


19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பல சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிகள் முன்னோடியில்லாத சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. முதலாவதாக, கிறிஸ்தவ மிஷனரிகள் சாதிய ஒடுக்குமுறையின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்று தாழ்த்தப்பட்ட சாதிகளில் பெரும் பகுதியினரை மதமாற்றம் செய்தனர். இரண்டாவதாக, 1860 முதல் 1880 வரை மஹாராஜா ஆயில்யம் திருநாள் ராமவர்மாவின் (Maharaja Ayilyam Thirunal Rama Varma) ஆட்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமான, தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தியது.


 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வரலாற்றாசிரியர் ராபின் ஜெஃப்ரியின் கூற்றுப்படி, ”சாதி இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கீழ்சாதி இந்துக்கள், குறிப்பாக ஈழவர்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க படித்த வர்க்கம் உருவானது."  (1860 முதல் 1940 வரை திருவிதாங்கூரில் நடந்த கோவில் நுழைவு இயக்கம் 1976 இல் ’சோசியல் சைண்டிஸ்டில் (Social Scientist) வெளியான ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டது). 


மதம் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்னும் முக்கியமானவை ஆகும். ஆனால், கீழ் சாதியினர் அதே கடுமையான பொருள் மற்றும் அறிவுசார் போராட்டங்களை இனி எதிர்கொள்ளவில்லை. குறிப்பாக, வரலாற்றாசிரியர் மேரி எலிசபெத் கிங் தனது 2015-ல் வெளியான "காந்திய வன்முறையற்ற போராட்டம் மற்றும் தென்னிந்தியாவில் தீண்டாமை" (Gandhian Nonviolent Struggle and Untouchability in South India) என்ற புத்தகத்தில் ஈழவர்கள் திருவிதாங்கூரில் மிகவும் படித்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தீண்டத்தகாத சமூகமாக மாறியுள்ளனர் என்று எழுதினார்.  

ஆனால் அரசாங்க வேலைகள் இன்னும் உயர் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. 1918 ஆம் ஆண்டில், எண்ணிக்கை சிறுபான்மையினரான உயர் சாதி இந்துக்கள், மாநில வருவாய்த் துறையில் 4,000 வேலைகளில் 3,800 வேலைகளை வகித்தனர். இதன் பொருள் என்னவென்றால், கல்வி என்பதே சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறையாக செயல்படவில்லை.   


மேலும், ஒரு சிறிய ஈழவ உயரடுக்கு பிரிவினர் உருவாகத் தொடங்கியபோது, பல சந்தர்ப்பங்களில், சடங்கு பாகுபாடு, பொருள் மற்றும் கல்வி முன்னேற்றத்தை புறக்கணித்தது. உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவிதாங்கூரில் கார் வைத்திருந்த வெகு சிலரில் ஒருவரான ஈழவரான அலும்மூட்டில் சன்னரின் (Aloommootil Channar) கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஈழவர்கள் செல்ல அனுமதிக்கப்படாத சாலையில் வாகனம் சென்றடையும் போதெல்லாம், சன்னார் தனது வாகனத்திலிருந்து இறங்கி நடந்தே செல்ல வேண்டியிருந்தது.  


ஈழவத் தலைவர் டி.கே. மாதவன் 1917இல் தனது தேசாபிமானியில் எழுதிய தலையங்கத்தில் ஆலயப் பிரவேசப் பிரச்சினையை முதன்முதலில் எழுப்பினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, 1920 வாக்கில், அவர் மிகவும் நேரடி முறைகளுக்கு வாதிடத் தொடங்கினார். அந்த ஆண்டு, வைக்கம் கோவிலுக்கு அருகிலுள்ள சாலையில் உள்ள கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகளை அவரே தாண்டிச் சென்றார்.


திருவிதாங்கூரில் உயர்சாதியினரின் போராட்டங்கள் கடுமையாக முன்னேறின. சாதி இந்துக்கள் எதிர்வினை விளைவை ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தின் காரணமாக மகாராஜா சீர்திருத்தங்களைத் தவிர்த்தார்.


இந்திய தேசிய காங்கிரசின் தொடக்கம் இதை முற்றிலும் மாற்றியது. மாதவன் 1921 இல் காந்தியைச் சந்தித்து, கோயில்களுக்குள் நுழைவதற்கான வெகுஜன போராட்டத்திற்கு மகாத்மாவின் ஆதரவைப் பெற்றார். 1923 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அமர்வில், கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியால் (Kerala Provincial Congress Committee) தீண்டாமை எதிர்ப்பை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு மாபெரும் பொதுச் செய்தி இயக்கமும், இந்து கோயில்களையும், எல்லாப் பொதுச் சாலைகளையும் அவர்ண இந்துகளுக்கு திறந்துவிட வேண்டுமென்ற இயக்கமும் தொடங்கின. மதிக்கப்படும் சிவன் கோயிலுடன் கூடிய வைக்கம் முதல் சத்தியாகிரகத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.


வைக்கம் சத்தியாகிரகம்


மாதவனும் பிற தலைவர்களும் ஆரம்பத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளை அவர்ணர்களுக்குத் திறப்பதில் கவனம் செலுத்த இராஜதந்திர முடிவை எடுத்தனர். மார்ச் 30, 1924 அதிகாலையில், "ஒரு நாயர், ஒரு ஈழவர் மற்றும் ஒரு புலையொருவர், கதர் சீருடை அணிந்து, மாலை அணிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து, சாலைகளைப் பயன்படுத்த முயன்றனர்" என்று ஜெஃப்ரி எழுதினார்.


அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். எனவே, மறுநாள் காலை, மேலும் மூன்று பேர் தடைசெய்யப்பட்ட சாலைகளில் நுழைந்து கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 10 அன்று காவல்துறையினர் கைது செய்வதை நிறுத்தி, அதற்கு பதிலாக முழு பகுதியையும் முற்றுகையிடும் வரை இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.


அப்போதிருந்து, செப்டம்பர் வரை, எதிர்ப்பாளர்கள் தடுப்புகளுக்கு முன்னால் அமர்ந்து, உண்ணாவிரதம் இருந்தனர் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடினர். பலமுறை கைது செய்யப்பட்ட பெரியார், சி.ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் வைக்கம் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், எதிர்ப்பு கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. மேலும், சத்தியாகிரகிகள் சாதி இந்துக்களிடமிருந்து அடிக்கடி வன்முறையையும் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டனர்.


ஆகஸ்ட், 1924 இல், திருவிதாங்கூர் மகாராஜா இறந்தார். அதைத் தொடர்ந்து, இளம் மகாராணி சேது லக்ஷ்மிபாய் (Maharani Sethu Lakshmi Bai), அனைத்து கைதிகளையும் விடுவித்தார். ஆனால் ஒரு பெரிய போராட்டக் குழு திருவனந்தபுரத்தில் உள்ள அரச அரண்மனைக்கு அணிவகுத்துச் சென்றபோது, அனைத்து சாதியினரையும் கோயில்களுக்குள் அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார்.


மார்ச் 1925 இல், காந்தி இறுதியாக ஒரு சமரசத்தை ஏற்படுத்த முடிந்தது: கோயில்களைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளில் மூன்று அனைவருக்கும் திறக்கப்பட்டன. ஆனால், நான்காவது (கிழக்கு) சாலை பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இது இறுதியாக 1925 நவம்பரில் செயல்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கம் "கோயிலை மாசுபடுத்தாமல்" தாழ்ந்த சாதியினர் பயன்படுத்தக்கூடிய திசைதிருப்பும் சாலைகளை முடித்தது. கடைசி சத்தியாகிரகி 1925 நவம்பர் 23 அன்று வைக்கத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார்.


மரபு மற்றும் பின்விளைவு


வைக்கம் சத்தியாகிரகம் ஒரு குறிப்பிடத்தக்க இயக்கமாகும், இது 600 நாட்களுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்தியது, இது  சமூக விரோத சக்திகள், காவல்துறை அடக்குமுறைகள் மற்றும் 1924 இல் நகர வரலாற்றில் மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகும். சத்தியாகிரகம் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் இதுவரை கண்டிராத ஒற்றுமையைக் கண்டது. அதன் தொடர்ச்சியான அணிதிரட்டலுக்கு முக்கியமானது.  


ஆனால் இறுதி சமரசம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைவிட பிரம்மாண்டமான முடிவை எதிர்பார்த்திருந்த பெரியார், இந்த விவகாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டார். 


நவம்பர் 1936 இல், திருவிதாங்கூர் மகாராஜா, வரலாற்று சிறப்புமிக்க கோயில் நுழைவு பிரகடனத்தில் (Temple Entry Proclamation) கையெழுத்திட்டார். இது மாநிலத்தின் கோயில்களுக்குள் கடைநிலை சாதிகள் நுழைவதற்கு நீண்ட காலமாக இருந்த தடையை நீக்கியது. இதுவும், காந்திய ஒத்துழையாமை முறைகளை எதிர்ப்புக்கான சக்திவாய்ந்த கருவிகள் என்று நிரூபித்துக் காட்டியதும் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் மாபெரும் வெற்றியாகும். கிங் எழுதியது போல்: "அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், வைக்கம் சத்தியாகிரகம் தீண்டாமை, அணுக முடியாத தன்மை மற்றும் பார்க்க முடியாத தன்மை ஆகியவற்றை இந்தியாவின் அரசியல் பிரச்சினைகளில் முன்னணிக்கு கொண்டு வந்தது."




Original article:

Share:

இந்தியாவில் நரம்பியல் (neuroscience) எவ்வாறு சந்தைப்படுத்தல் உத்திகளை மறுவடிவமைக்கிறது ? -எம். கல்யாணராமன்

 நுகர்வோர் நடத்தையைப் புரிந்துகொள்வது போன்ற வணிக சவால்களைத் தீர்க்க நரம்பியல் (neuroscience) இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் புரிந்துகொள்வதையும் வெளிப்படையாக இருப்பதையும் உறுதிப்படுத்துவது குறித்து நெறிமுறை பரிசீலனைகள் எழுகின்றன.


எலோன் மஸ்க்கின் N1 பதித்தல் (N1 implant), மக்கள் தங்கள் எண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. அன்றாட வாழ்க்கையில் மேம்பட்ட நரம்பியல் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது. இன்று, மனிதனின் பதில்களைப் புரிந்துகொள்ளவும் கணிக்கவும் மூளையை வரைபடமாக்குவது இயல்பானது. இருப்பினும், இது போன்ற உள்வைப்புகள் (implant) நரம்பணுவியலில் அரிதானவை. ஆயுள் காப்பீடு வாங்குபவர்கள் பொதுவாக முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான பிரீமியம் செலுத்துவதை நிறுத்துவது முதல், நுகர்வோர்கள் “வாங்குவதற்கு” (buy) பொத்தானை அழுத்துவதை உறுதி செய்ய இணையவழி விளம்பரம் செய்ய முடியுமா என்பது வரையிலான வணிகச் சிக்கல்களைத் தீர்க்க இந்தியாவில் இது பயன்படுத்தப்படுகிறது.


இந்திய மேலாண்மை கழகம், ராஞ்சியைச் (IIM Ranchi) சேர்ந்த தனுஸ்ரீ தத்தாவின் கூற்றுப்படி, நரம்பியல் நுட்பங்கள் மூளை நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய புறநிலை புரிதலை வழங்குகின்றன. இந்த கருவிகள் விளம்பரங்கள், தயாரிப்புக்கான வடிவமைப்பு மற்றும் கடைகளின் தளவமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன் அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்கும், சோதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 


தரராக்னி கன்சல்டிங்கின் (Tarragni Consulting) தலைமை நிர்வாக அதிகாரி அனில் பிள்ளை, நரம்பணுவியல் நிபுணத்துவம் பெற்றவர். கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளுக்கு வரம்புகள் உள்ளன. ஏனெனில், மக்களின் பதில்கள் அவர்களின் சார்பு மற்றும் அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதன் மூலம் பாதிக்கப்படலாம். உணர்ச்சிகள், உள்ளுணர்வுகள் மற்றும் மயக்க எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் என்று நரம்பியல் சார் சந்தைப்படுத்துதல் / நியூரோமார்கெட்டிங் (Neuromarketing) கூறுகிறது.


மிகவும் துல்லியமான தரவுகளுக்கு சந்தை ஆராய்ச்சியில் நரம்பியலைப் பயன்படுத்த திரு பிள்ளை பரிந்துரைக்கிறார். கேள்வித்தாள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மூளை எவ்வாறு பாதிக்கப்படுகிறது மற்றும் அது என்ன முடிவுகளை எடுக்கும் என்பதைப் பற்றிய நேரடி தகவல்களை சேகரிக்க நரம்பியல் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறது. 


15 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில்  நரம்பியலில் ஒரு பெரிய ஆய்வு இருந்தது. அவர்கள் செயல்பாட்டு காந்த அதிர்வு படிமையாக்கல் (Functional magnetic resonance imaging (fMRI)) எனப்படும் சிறப்பு மூளை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்தனர். இது 9/11 தாக்குதல்களை தூண்டும் விளம்பரங்கள் வாக்காளர்களிடையே அச்சத்தைத் தூண்டியதாக உள்ளது. ஆனால் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடம் மூளை வித்தியாசமாக நடந்துகொண்டது தெரிகிறது. இந்தியாவில், கருத்துக் கணிப்புகள் இப்போது மிகவும் துல்லியமாக இருக்கும் என்று நரம்பியல் சார் சந்தைப்படுத்துதல் / நியூரோமார்கெட்டிங் (Neuromarketing) நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாட்டின் மிகவும் முனைப்படுத்தப்பட்ட அரசியலுடன். முக செயல் குறியீட்டு முறை (Facial Action Coding System(FACS)) பயன்படுத்தி வாக்காளர்களின் எண்ணங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். செயல்பாட்டு காந்த அதிர்வு படிமையாக்கல் (Functional magnetic resonance imaging (fMRI)) பயன்படுத்துவது இந்தியாவிற்கு மிகவும் செலவினம் மிகுந்ததாக இருக்கும் என்று திரு.பிள்ளை குறிப்பிடுகிறார். 


சாதனங்களை இயக்குதல் 


உயிரியல் கருவிகளின் முன்னேற்றம் இந்தியாவிலும் உலகெங்கிலும் நரம்பியல் அறிவியலுக்கு உதவுகிறது. இவற்றில் சில கருவிகள் மலிவாகவும் எளிதாகவும் பயன்படுத்தப்படுகின்றன, இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்று, அணியக்கூடிய கடிகாரங்கள் நிறைய ஆரோக்கிய தகவல்களை வழங்குகின்றன. ஸ்டோரி ப்ரெடிக்ஷனின் இணை நிறுவனர் புனீத் கார்க் கூறுகையில், ஐபால் டிராக்கர் (eyeball tracker) போன்ற ஒரு  நரம்பியல் கருவி (classic neuroscience tool), இப்போது அமேசான் போன்ற தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன.  


வழக்கமான நியூரோமார்க்கெட்டிங் கருவி (neuromarketing tool) என்பது மருத்துவமுறையில் நோயை கண்டறிவதற்கான முதலில் வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியின் மாதிரியாகும். அவை மூளையின் மின் தூண்டுதல்களை அளவிடுபவை மற்றும் பிற வழிகளில் வெப்பத்தின் அளவு வரைபடங்களை உருவாக்குபவை எனப் பரவலாகப் பிரிக்கலாம்: முதல் குழுவில் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (Electroencephalogram (EEG)), குவாண்டிடேட்டிவ் எலக்ட்ரோஎன்செபலோகிராபி (Quantitative Electroencephalography (QEEG)) மற்றும் பிற உள்ளன. 


ஒரு கண் கண்காணிப்பு சாதனம் கவனத்தை அளவிடுகிறது மற்றும் அது எவ்வளவு காலம் நீடிக்கின்றன என்பதைக் காட்டும் வெப்ப வரைபடங்களை உருவாக்குகின்றன. எவ்வாறாயினும், மவுஸ் அசைவுகள் மூலம் ஸ்க்ரோலிங் செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம். மேலும், அனைவருக்கும் விருப்பமானவற்றைக் கிளிக் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. எனவே இத்தகைய வெப்ப வரைபடங்கள் துல்லியமற்றதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நகை வீடியோ விளம்பரத்தில், தயாரிப்பு, மாதிரி, தள்ளுபடி அல்லது கொள்முதல் பொத்தானை பார்வையாளர்களின் ஆர்வத்தை எது ஈர்க்கிறது என்பதை கண் கண்காணிப்பாளர்கள் துல்லியமாகக் குறிப்பிடுகின்றன. இதில், விற்பனையாளர்கள் சிறந்த நுகர்வோர் ஈடுபாட்டிற்காக தங்கள் விளம்பரங்களைச் செம்மைப்படுத்த உதவுகிறார்கள்.


 மூளை உணர்வு மற்றும் பயம் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. EEG ஐப் பயன்படுத்தி அதன் செயல்பாட்டை நாம் அளவிட முடியும். ஒரு விளம்பரம் ஒருவரை நன்றாக உணர வைக்கிறது என்று EEG காட்டினால், நியூரோ சந்தைப்படுத்துநர்கள் (neuro marketers) அந்த விளம்பரம் தங்கள் ஆழ் மனதில் தயாரிப்பை சாதகமாக பாதித்ததாக நினைக்கிறார்கள். இந்த விளைவுகள் நாம் பொருட்களை வாங்க முடிவு செய்யும் விதத்தை பாதிக்கிறது என்று நரம்பியல் கூறுகிறது.


ஆரம்பத்தில் உடல் சிகிச்சை மற்றும் தசை செயல்பாட்டை அளவிடுவதற்கான விளையாட்டுப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட தோல் கடத்தல் சாதனங்கள், இப்போது தோல் ஈரப்பதத்தை அளவிடுவதன் மூலம் உணர்ச்சி விழிப்புணர்வைக் கண்டறிய சந்தைப்படுத்தலில் பயன்படுத்தப்படுகின்றன.  


தோல் கடத்தல் சாதனங்கள் (Skin conductance devices) மலிவானவை ஆனால் மிகவும் பயனுள்ளதாக இல்லை. ஐபால் டிராக்கர்கள் சிறப்பாக செயல்படுகின்றன. EEG கள் 75% வரை பயனுள்ளதாக இருக்கும். இந்த கருவிகளின் நுட்பம் மற்றும் துல்லியம் அதிக செலவுகளுடன் வருகிறது. இருப்பினும், அதிநவீன கருவிகளின் விலை அதிகம். முடிவுகள் 95%க்கும் மேல் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுநர்கள் சிறந்த விருப்பங்களையும் மாதிரி அளவுகளையும் தேர்வு செய்யலாம். சில நேரங்களில், அவர்கள் சாதனங்களின் கலவையைப் பயன்படுத்துகிறார்கள்.


இந்தியாவில், வணிக முடிவுகளுக்கு நரம்பியல் கருவிகளைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மேம்பட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் உள்ளன. சந்தை ஆராய்ச்சி ஆலோசகர்களும் இந்தப் பகுதியில் கவனம் செலுத்துகின்றனர். மேலும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology (IITs)) மற்றும் இந்திய மேலாண்மை கழகங்கள் (Indian Institutes of Management (IIMs)) போன்ற நிறுவனங்கள் ஆராய்ச்சிகான ஆதரவை வழங்குகின்றன. திரு பிள்ளையின் கூற்றுப்படி, இந்த பகுதி, இன்னும் முக்கிய மற்றும் புதுமையான வணிகங்களில் கவனம் செலுத்தினாலும், குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறது.


நியூரோமார்க்கெட்டிங் (Neuromarketing) செலவினம் மிகுந்தது. தொலைக்காட்சி விளம்பரங்களை அதிகம் வாங்கும் பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் நியூரோமார்கெட்டிங்கைப் பயன்படுத்துகின்றன. சில கருவிகள் மற்றவர்களை விட ஒத்த அல்லது சிறந்த வருமானத்தை வழங்குகின்றன. மேலும் அவை பெரும்பாலும் மலிவானவை. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் உலகில், YouTube இன் பிராண்ட் லிப்ட் கணக்கெடுப்பு (YouTube’s brand lift survey) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி விளம்பர செயல்திறனைக் கண்காணிக்கலாம். மேலும், நியூரோமார்க்கெட்டிங் நடத்தையை முன்னறிவிக்கிறது. இப்போதெல்லாம், இணைக்கப்பட்ட தொலைகாட்சிகளில் உள்ள விளம்பரங்களில் செயல்களைக் கண்காணிக்க டொராண்டோ மிசிசாகா பல்கலைக்கழகம் (University of Toronto Mississauga(UTM)) உடன் QR குறியீடுகள் உள்ளன. 


ஆரம்பத்தில், இந்தியாவில் நரம்பியல் (neuroscience) பயன்பாடு முக்கியமாக விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலில் பயன்படுத்தப்பட்டது. அங்கு, அதன் பயன்பாடு பெரும்பாலும் தற்போதைய பிரச்சாரங்களில் செல்வாக்கு செலுத்த மிகவும் தாமதமாக வந்தது. ஆனால் எதிர்கால பிரச்சாரங்களுக்கு தெரிவிக்க முடியும் என்று கார்க் சுட்டிக்காட்டுகிறார். அவரது நிறுவனம் ஒரு பெரிய மொழி மாதிரியை (large language model (LLM)) பயன்படுத்தும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது. ஒரு விளம்பரம் அல்லது திரைப்படம் வெற்றியடையுமா என்பதை இந்த தயாரிப்பு கணித்து, பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஆர்வமாக வைத்திருக்கும் திரைக்கதையின் திறனைச் சரிபார்த்து. 

 

திரு.பிள்ளை அவர்கள் செலவினம் முக்கியம் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், நரம்பியலின் நன்மைகள் சந்தைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டவை என்று வாதிடுகிறார். இது துல்லியமான தரவு தேவைப்படும் சிக்கலான வணிக சவால்களை எதிர்கொள்ள முடியும். அங்கு, முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்திற்கு வழிவகுக்கும்.


இந்திய நுகர்வோர்களின் நடத்தை


நியூரோமார்க்கெட்டிங் என்பது மேற்குலகில் பத்தாண்டுகளாக பழமையானது என்றாலும், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த செயல்பாடு அதிகரித்துள்ளதாக திருமதி தத்தா கூறுகிறார். இந்த நேரத்தில், நரம்பியல் இந்திய நுகர்வோர் நடத்தையின் பல அம்சங்களை அவர்களின் உள்ளுறுப்பு மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளது. 


நடத்தை அறிவியலில் (behavioural science) நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனை நிறுவனமான ஃபைனல் மைல் (Final Mile) நடத்திய ஒரு சுவாரஸ்யமான ஆய்வு, மும்பையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் அல்லது பெண்களை விட இளைஞர்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த சம்பவங்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில், நிலையங்களைத் தாண்டி நடந்ததாகவும், இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இது ஆண்களின் துணிச்சலின் ஒரு கூறைக் குறிக்கிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆபத்தான நடத்தையே இதற்குக் காரணம் என்றும், ரயில் சத்தம் எழுப்புவது விபத்துகளைத் தடுக்கவில்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மக்கள் ரயில்களின் வேகத்தை 40% தவறாக மதிப்பிட்டு, ஆபத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர். கண்டறியப்பட்ட தீர்வுகளில் அத்துமீறி இறந்த உண்மையான மனிதர்களின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர். அவர்கள் ரயில் ஹார்ன் வெடிப்புகளை ஒரு நீண்ட ஒலியிலிருந்து இரண்டு குறுகிய ஒலிகளாக மாற்றினர், ஏனெனில் இசைக் குறிப்புகளுக்கு இடையே உள்ள அமைதியை மூளை கவனிக்கிறது. மூன்றாவது கட்டமாக ரயில் தண்டவாளத்தில் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டது. ஒரு ரயில் வந்து கொண்டிருந்தால், மஞ்சள் நிறம் ஒன்றிணைந்து, ரயிலின் வேகத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் தவறு இருந்தால் மூளை விரைவாகச் சரிசெய்யும். 


இந்திய நுகர்வோர்கள், இந்திய கருப்பொருள்கள் கொண்ட விளம்பரங்களை விரும்புகிறார்கள் என்கிறார் திருமதி தத்தா. ஜூகாட் மூலம் ஒருவர் எதையாவது சாதிக்கும் விளம்பரங்களை நரம்பியல் காட்டுகிறது, இந்தியாவில் நன்றாக வேலை செய்கிறது. 


திரு.பிள்ளை ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கான வணிக சிக்கலைத் தீர்ப்பதில் நரம்பியலில் சந்தைப்படுத்தலின் வேறுபட்ட பயன்பாட்டைப் பற்றி விவாதிக்கிறார். இந்திய நுகர்வோர் குறைந்த விலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தபோதிலும், நியூரோமார்க்கெட்டிங் ஆய்வுகள் வாங்கும் செயல்பாட்டில் "முரண்பாடு" (friction) ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவு இந்தியாவில் நுகர்வோர் தேர்வுகளை விலை மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தை சவால் செய்கிறது. இது ஆழமான, நடத்தை உந்துதல் காரணிகளை பரிந்துரைக்கிறது. 


இந்தியாவில் வாழ்வது என்பது சிக்கலான நடைமுறைகள் மற்றும் அமைப்புகள் மூலம் வழிநடத்துவதை உள்ளடக்கியது. அவற்றைப் புரிந்துகொள்வதற்கும் இணங்குவதற்கும் நிறைய முயற்சி தேவைப்படுகிறது. அப்போதும் கூட, விரும்பிய முடிவை அடைவது எப்போதும் உறுதியாக இல்லை. அரசாங்க வருங்கால வைப்பு நிதி முறையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கு இது குறிப்பாக உண்மை, பலர் அதன் சிக்கலான தன்மையை சான்றளிப்பார்கள்.


திரு.பிள்ளை "செயல்பாட்டு முரண்பாடு" (functional friction) என்று ஒன்றைப் பற்றி விவாதிக்கிறார். அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு இது முக்கியமானது. ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் வெறுப்பை குறைவாக அனுபவிக்கிறார்கள். செயல்பாட்டு முரண்பாடு என்பது உங்கள் முக்கிய இலக்கை அடைவதிலிருந்து உங்களைத் தடுக்கும் ஒரு தடை போன்றது. இந்த விஷயத்தில், சிறந்த காப்பீட்டைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பணம் செலுத்தி, அதைப் பெறுவதே முக்கிய குறிக்கோள். 


வாங்குவதற்கான அழுத்தத்தின் கீழ் இல்லாமல் காப்பீட்டை நாடும் வாடிக்கையாளர்கள் உடல், அறிவாற்றல் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு காப்பீடு வழங்குநர்களிடமிருந்து மிகவும் உணர்திறன் மற்றும் சிறந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இளமையான, ஆர்வமுள்ள மக்கள்தொகை உருவாகி வருவதை திரு பிள்ளை சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் டயர் 1 நகரங்களில் கிடைக்கும் சேவைகளுக்கு எதிராக தங்கள் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட மதிப்பீடு செய்கிறார்கள். இந்த குழு தங்கள் காப்பீடு வழங்குநர்களிடமிருந்து ஒத்த அளவிலான சேவை மற்றும் நுட்பத்தை கோருகிறது.  இந்த பகுதிகளில், குடும்ப உறுப்பினர்கள், இணை பயனாளிகள் மற்றும் குறிப்பாக பெண்கள் காப்பீட்டை வாங்குவதற்கான முடிவெடுக்கும் செயல்முறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நுண்ணறிவுகள் நரம்பியல் அறிவியலிலிருந்து பெறப்படுகின்றன, ஆழமான உரையாடல்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற பிற முறைகள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன, நுகர்வோர் நடத்தையில் நனவான காரணிகளின் குறிப்பிடத்தக்க செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது என்று திரு பிள்ளை வலியுறுத்துகிறார்.


நெறிமுறை சார்ந்த அக்கறைகள்


எலோன் மஸ்க்கின், நியூராலிங்க் (Neuralink), நரம்பியலை (neuroscience) தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. மக்கள் விஷயங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த நியூராலிங்க் தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றி திரு. கார்க் கவலைப்படுகிறார். உள்வைப்புகள் (implant) அவற்றை வைத்திருப்பவர்களை மற்றவர்களால் எளிதில் பாதிக்கச் செய்யலாம் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள். அது தவிர, நரம்பணுவியலின் சாதாரண பயன்பாடுகள் கூட சில கவலைகளை எழுப்பியுள்ளன. ’நியூரோமார்க்கெட்டிங் அறிவியல் மற்றும் வணிக சங்கம்’ (Neuromarketing Science and Business Association (NMSBA)) முதல் நியூரோமார்கெட்டிங் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  நியூரோமார்க்கெட்டிங்கிற்கான ஆரம்ப நெறிமுறைக் குறியீட்டை நியூரோமார்க்கெட்டிங் அறிவியல் மற்றும் வணிக சங்கம் (Neuromarketing Science and Business Association (NMSBA)) உருவாக்கியுள்ளது.  இது தனியுரிமை, ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இந்த விதிகள், தனியுரிமை, ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. நியூரோமார்க்கெட்டிங் பற்றி தாங்கள் எந்த விதிகளையும் உருவாக்கவில்லை என்று ஒரு மின்னஞ்சலுக்குப் பதிலளித்த இந்திய விளம்பரத் தரக் கவுன்சில் (Advertising Standards Council of India) கூறியது.  இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால், தரவு எடுப்பவர்கள் தாங்கள் என்ன ஒத்துக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதை உறுதிசெய்து, அதைச் சாதகமாக்கிக் கொள்ளவில்லை. கணக்கெடுப்புகளில் 18 வயதுக்குட்பட்டவர்களை பயன்படுத்துவது கவலையளிக்கிறது. அவர்களின் பெற்றோரின் அனுமதி எங்களுக்குத் தேவை என்று நியூரோமார்க்கெட்டிங் அறிவியல் மற்றும் வணிக சங்கம் (Neuromarketing Science and Business Association (NMSBA)) கூறுகிறது. 


மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் படிப்பது சந்தை ஆராய்ச்சிக்கு நம்பகமான தரவை வழங்கும். மூளை எவ்வாறு பாதிக்கப்படுகிறது மற்றும் அது என்ன தேர்வுகளை செய்யலாம் என்பதை அறிய நரம்பணுவியல் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் இப்போதெல்லாம் மிகவும் துல்லியமாக இருக்கும் என்று நியூரோமார்க்கெட்டிங் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அரசியல் மிகவும் முனைப்படுத்தப்பட்டதாகவும், கருத்தியல் ரீதியாகவும் மாறியிருப்பதால், வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள அனுமதிக்கிறார்கள்.




Original article:

Share: