ஏன் நல்ல வானிலைச் சூழலில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்? - ராம்நாத் கோவிந்த்

 காலநிலை மாற்றம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இதற்கு நாம் கவனமாகச் சிந்தித்து அதைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த பிரச்சினையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


தற்போது, இந்தியா அதன் பொதுத் தேர்தல்களை நடத்துகிறது. இது பல காரணங்களுக்காக ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நிலையில், இந்த தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை மட்டும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு இந்த தேர்தலை ஆதரிக்கிறது. பல நாடுகளில் தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உலகளாவிய நிகழ்வுகளை வித்தியாசமாக பாதிக்கும். ஆனால், இந்தியத் தேர்தல்தான் ஜனநாயகத்தை கணிசமாக மேம்படுத்தும்.


காலத்தின் தேவையின் அடிப்படையில், வெளிப்படையாக, தேர்தல்களை முடிந்தவரை தகுதியுடைய அனைத்து மக்களையும் பங்கேற்பதாக மாற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் பற்றிய விழிப்புணர்வானது, வாக்காளர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கும், தொலைதூர இடங்களில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ததற்கும் பாராட்டப்பட வேண்டும். இதில், சிவில் சமூக அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் வாக்களிக்கும் உரிமை பற்றியும் மற்றும் கடமை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை உருவாக்கியுள்ளன.


முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் காட்டியுள்ளனர். இந்த பங்கேற்பு மிகுந்த திருப்திகரமானதாக உள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கும்போது வெப்பமான வானிலையை பார்வையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒரு பெரிய சவாலாகக்  குறிப்பிடுகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்தனர். குளிர்ந்த காலநிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஜனநாயக செயல்பாட்டில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்றிருப்பார்கள்.


இப்போது வானிலையானது ஒரு பெரிய விஷயமாக உள்ளது. 17வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் ஜூன் 16ம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல்கள் திட்டமிடப்பட வேண்டும். இதில், தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பு சில வாரங்களுக்குள் நடக்க வேண்டும். எனவே, தேர்தல் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தேர்தலானது நீண்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வெப்பமான பகுதியாக இருக்கும். தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிடும் போது வானிலையை கருத்தில் கொள்கிறது. ஆனால், அது ஜூன் 16 வரையிலான காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.


ஏப்ரல் மாதத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department (IMD)) பல மாவட்டங்களில் வெப்ப அலைகள் பற்றி எச்சரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது விரைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  (National Disaster Management Authority (NDMA)) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health & Family Welfare (MoHFW)) அதிகாரிகளுடன் ஒரு பணிக்குழுவை உருவாக்கினர். ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதத்தின் விளைவுகளைச் சரிபார்ப்பதுதான் இந்த பணிக்குழுவின் முக்கிய பணியாக உள்ளது. அவர்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆலோசித்து திட்டமிடுகிறார்கள். வாக்குப்பதிவின் போது வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்துகிறது. வாக்குச்சாவடிகளில் நிழற்குடை, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளிதுள்ளன. ஆனால், அவை தேர்தலின் ஒரு பகுதியை மட்டுமே கையாள்கின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வெப்பத்தையும் தூசியையும் தாங்கிக் கொண்டு வெளியில் பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுக்கூட்டங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மயங்கி விழுவதைப் பற்றி கேள்விப்பட்டது திடுக்கிடும் செய்தியானாலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வெளிப்படையான ‘வாக்காளர் ஆர்வமின்மை’ பிரச்சாரத்தின் போது தொடங்கலாம். வாக்குச் சாவடி அமைப்புகள் பாராட்டுக்குரியவை என்றாலும், கிராமப்புற வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் பயணிக்கத் தயக்கம் காட்டலாம்.


இந்தியாவில் கோடைக்காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை காணப்படுகிறது. சில இடங்களில், இது 45 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும். மே மற்றும் ஜூன் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் போது இந்த தீவிர வானிலையானது பொதுவானதாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் புவி வெப்பமடைதல் காரணமாக, இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும்.


எனவே, வாக்காளர்கள், பிரச்சாரகர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு, தேர்தல் நேரம் குறித்து விவாதிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.


வானிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்கான அட்டவணையை பரிந்துரைக்க வேண்டிய நேரம் இது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நான் (இராம்நாத் கோவிந்த்) தலைமை வகிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட பணிகளில் இந்தத் தலைப்பு ஒரு பகுதியாக இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேர்தல் கால அட்டவணையைப் பற்றி என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது, ஆனால் அது கமிட்டி பரிந்துரைத்ததில் இருந்து வேறுபட்டது. நான் எனக்காகவே பேசுகிறேன், கமிட்டியின் ஒரு பகுதியாக அல்ல. காலநிலை மாற்றம் என்பது அனைவரின் கவனம் தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சினை என்று நான் நம்புகிறேன். அதைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், குறிப்பாக ஜனநாயகத்திற்காக. வானிலை நன்றாக இருக்கும் போது அதிக மக்கள் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும், இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கு உதவும்.


கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.




Original article:

Share:

இந்தியாவின் முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குப் பெட்டியை எவ்வாறு பெற்றனர்? -சக்ஷு ராய்

 தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிக்கான வடிவம் மற்றும் சிறப்பம்சங்களை நிர்ணயித்தது. ஆனால் அவை சுமுகமாக செல்லவில்லை.


மக்களவை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது, இது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த கட்டம் முடிந்ததும், 543 மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குபதிவு நிறைவடைந்திருக்கும். அடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், மே 13 ஆம் தேதி அனைத்து தொதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.


அனைத்து இந்தியர்களுக்கும் வாக்குரிமை எப்படி கிடைத்தது


நம் நாட்டில் தேர்தல் என்பது சிக்கலான வரலாற்றைக் கொண்டது. அவற்றில் ஒன்றுதான் வயது வந்தோரின் வாக்குரிமை பற்றிய பேச்சு. காலனித்துவ ஆட்சியின் போது, ​​பலருக்கு படிக்கத் தெரியாது, அரசியல் குழுக்கள் இல்லை என்றும், அரசாங்கத்திற்கு கடினமாக இருக்கும் என்றும், அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பது வேலை செய்யாது என்றும் நிர்வாகிகள் கருதினர். நாம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் இதைப் பற்றி அதிகம் பேசினர். மக்களுக்கு படிப்பறிவு இல்லாத காரனத்தினால், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது நியாயமாக இருக்காது என்று நினைத்தனர். இறுதியில், வயது வந்த அனைவரும் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் என்று முடிவு செய்தனர்.


விவாதங்களின் போது, ​​அரசியல் நிர்ணய சபை செயலகம் 1947ல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியது. ஆர்னிட் ஷானி (Ornit Shani), தனது "இந்தியா எப்படி ஜனநாயகமானது" (How India Became Democratic) என்ற புத்தகத்தில், செயலகம் எடுத்த கவனமான நடவடிக்கைகளை விளக்குகிறார். அவர் கூறுகிறார், “பிரிவினையின் கொடூரமான சோகத்தின் பின்னணியில் உலகளாவிய உரிமையின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை உருவாக்கி, இறுதியில் வளமான அரசியல் கற்பனை தேவைப்படும் அரசியலமைப்பை எதிர்பார்த்து இந்திய மக்கள்தொகையில் 49% பேர் சேர்க்கப்பட்டது, அவர்களில் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.”


1950-ல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான சட்டங்களை இயற்றியது. மேலும் பல காரணிகள் முதல் தேர்தலை தாமதப்படுத்தியது. தேவையான சட்டங்களை இயற்றுதல், மாநிலங்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்துதல், பீகாரில் வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை இதில் அடங்கும். அந்த ஆண்டு நவம்பரில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நவம்பர்-டிசம்பர் 1951 இல் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.


இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு செயல்முறை விவரங்களை இறுதி செய்து கொண்டிருந்தது. 1932 ஆம் ஆண்டின் இந்திய வாக்குரிமைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது, அக்குழு வயது வந்தோர் வாக்குரிமையை ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்த இந்த குழு பரிந்துரைத்தது. ஒவ்வொரு பெட்டியும் ஒரு தனித்துவமான நிறம் அல்லது சின்னத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வண்ணங்கள் / சின்னங்களை வேட்பாளர்களுக்கு எவ்வாறு ஒதுக்குவது மற்றும் வாக்குச் சாவடிகளின் வடிவமைப்பு மற்றும் இடம் குறித்த வழிகாட்டுதல்களையும் அது வழங்கியது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி எழுத்தரும் 1,000 வாக்காளர்களைக் கையாளலாம், ஆனால் அதற்கு மேல் முடியாது என்று விதி கூறுகிறது.


தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது. வாக்குப்பெட்டி ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் அளவிலும் இருக்க வேண்டும் என்று கூறுயது. பெட்டியின் மேற்புறத்தில் உள்ள ஸ்லாட் ஒரு ரூபாய் நோட்டின் அளவிலான வாக்குச் சீட்டை பொருத்தும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. பெட்டிகள் 20 கேஜ் எஃகு மூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆனையம் கட்டளையிட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான முதல் பொதுத் தேர்தலுக்கு சுமார் 19 லட்சம் எஃகு வாக்குப் பெட்டிகள் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிட்டு இருந்தது. இந்த பெட்டிகளை தயாரிக்க 6,000 டன் எஃகு தேவைப்பட்டது. ஒப்பிடுகையில், ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்க்கு 7,300 டன் இரும்பு தேவைப்படது.


நாடு முழுவதும் உள்ள பல உற்பத்தியாளர்களின் வடிவமைப்புகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் (Godrej and Boyce) உற்பத்தி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் (Allwyn Metal Works) மற்றும் கல்கத்தாவைச் சேர்ந்த புங்கோ ஸ்டீல் பர்னிச்சர் (Bungo Steel Furniture) ஆகியவை இதில் அடங்கும். கோத்ரேஜ் வடிவமைத்த வாக்குப் பெட்டிகள் ஒரு தனித்துவமான பூட்டுதல் தொழில்நுட்ப முறையக் கொண்டிருந்தன. இந்த தொழில்நுட்பமானது ஒரு முத்திரையை உடைக்காமல் பெட்டிகளை சேதப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தது. இதன் விளைவாக, கோத்ரெஜ் பெரும்பாலான வாக்குப் பெட்டிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றனர். பீகாரில், கோத்ரெஜ் தங்கள் பெட்டிகளுக்கும் தங்கள் போட்டியாளருக்கும் இடையிலான விலையில் உள்ள வித்தியாசத்தை மாநில அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்தது.


இருப்பினும், அனைத்து உற்பத்தியும் சீராக நடக்கவில்லை. ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் வாக்குச் சீட்டைச் செருகுவதற்கான பிளவின் அளவில் தவறு செய்து விட்டது. ஒரு ரூபாய் நோட்டின் அளவுள்ள வாக்குச் சீட்டைச் செருகுவதற்கு பதிலாக மடித்து வைக்கலாம் என்று அவர்கள் கருதினர். தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் இந்த வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது, மேலும் ஆயிரக்கணக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் தவறை உணர்ந்ததும், வாக்குச் சீட்டுகளை பெட்டியின் உள்ளே போடுவதற்க்காக பெட்டியின் துளையை பெரிதாக்க உத்தரவிட்டனர்.


பங்கோ ஸ்டீல் பர்னிச்சர் பல்வேறு மாநிலங்களுக்கு போதுமான வாக்குப் பெட்டிகளை தயாரிக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, மெட்ராஸ் மாகானம் மட்டுமே எஃகு மற்றும் மர வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்தியது. இதில் மரப்பெட்டிகள் சிறைக்கைதிகளால் செய்யப்பட்டவை.



வாக்குகளைப் பெறுதல்


வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்கும் வகையில் வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை கொண்டு குறியிடவும் தொடங்கியது. 1957 ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, ​​தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி வாக்குப் பெட்டிகளைப் பயன்படுத்துவதில் இருந்து அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு பெட்டியைப் பயன்படுத்துவதற்கு மாறியது. வாக்குப்பெட்டிகளின் சேதமடையாத தன்மை பற்றிய கவலைகளையும் இது பகிரங்கமாக எடுத்துரைத்தது. இருப்பினும், தேர்தல்களில் பலத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், சில பிராந்தியங்களில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் வாக்குச்சீட்டு திணிப்பு போன்ற சம்பவங்கள் வழக்கமாகிவிட்டன. தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை கைப்பற்றுவதை கிரிமினல் குற்றமாக ஆக்கியது, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது.


பொதுத் தேர்தல்களில் பாரம்பரிய வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படாது. தேர்தல் ஆணையம் இப்போது குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது. வாக்குப்பெட்டி வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தாலும், அந்தக் காலத்தில் நிறுவப்பட்ட கொள்கைகள் இன்னும் நாட்டில் பொதுத் தேர்தல்களுக்கு வழிகாட்டுகின்றன.


எழுத்தாளர் ஒரு சட்டமன்றக் கண்ணோட்டத்தில் சிக்கல்களை பகுப்பாய்வு செய்கிறார் மற்றும் PRS சட்ட ஆராய்ச்சியில் பணியாற்றுகிறார்.




Original article:

Share:

மகாத்மாவைத் தேடி -ஜே.என்.சின்ஹா

 சம்பாரனின் பாரம்பரியத்தை ஆராய்வது மற்றும் காந்திய மதிப்புகளின் மறுமலர்ச்சிக்கான நம்பிக்கையை மீண்டும் கொண்டுவருவது.


வடக்கு பீகாரில் குளிர்காலத்தின் நடுப்பகுதியான சூழ்நிலையில், கல்வி சார்ந்த அர்ப்பணிப்பு காரணமாக நான் இங்கு சம்பாரனில் இருக்கிறேன். சம்பாரன்  பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இடமாக உள்ளது. இந்த இடம் வேத காலத்திலிருந்து நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, துறவிகள், தத்துவவாதிகள், மன்னர்கள் மற்றும் சமீபகாலமாக, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் என இந்த நிலம் பல முக்கிய நபர்களை ஈர்த்துள்ளது.


18 ஆம் நூற்றாண்டில், வணிகர்கள், பண்ணைக்காரர்கள் மற்றும் செல்வத்தை தேடுபவர்கள் (fortune seekers) போன்ற பல ஐரோப்பியர்கள் இங்கு வந்தனர். அவர்கள், இங்கு குடியேறி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தனர். ஆனால், சம்பாரன் பகுதியில் உள்ள மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே கிளர்ந்தெழுந்தனர். 1917-ல் நடைபெற்ற காந்தியின் சத்தியாகிரகம் 1947 -ல் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.


ஆம், எல்லாவற்றின் மையத்திலான மோதிஹாரியில் (Motihari) இருக்கிறேன். இந்த பகுதி இமயமலையின் அடிவாரத்தில் நீண்டுள்ளது. இது கந்தக் ஆறு (Gandak River) மற்றும் அதன் சிறிய ஆறுகளில் இருந்து தண்ணீரைப் பெறும் தட்டையான, வளமான நிலத்தின் ஒரு பெரிய நிலப்பகுதியாகும். கூடுதலாக, இது நிறைய தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நகரில் மோதி ஜீல் (Moti Jheel) என்ற மிகப்பெரிய ஏரி அமையப்பெற்றுள்ளது.


மோதிஹாரி நகரத்தின் அதிகாரத்துவ பகுதியானது ஒரு மாவட்டத்திற்கு பெரியதாக உள்ளது. இது பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும், காலனித்துவ காலத்திலிருந்து ஒரு அதிர்வை அளிக்கிறது. இங்கு, புதிதாக நிறுவப்பட்ட மகாத்மா காந்தி மத்தியப் பல்கலைக்கழகமானது (Mahatma Gandhi Central University) நமது காலத்தின் மிகச்சிறந்த சமாதான தூதுவர்களில் ஒருவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இன்னும் கட்டப்பட்டு வருகிறது. அதனால், அதன் திட்டங்கள் அனைத்தும் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அதன் மையப்பகுதியானது நன்கு பராமரிக்கப்படுகிறது. 


அறிவியலும், சமூகமும் என்ற கருத்தரங்கில் காந்தியின் பார்வையைப் பற்றிப் பேசினேன். காலனித்துவம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய போராட்டவாதிகளில் ஒருவரான காந்தி, மனிதகுலத்தின் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றாதவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும், அவரது நெருங்கிய நண்பர்கள் இங்கு கௌரவிக்கப்படுவதில்லை. மேலும், ஐம்பது ஆண்டுகளாக இந்த பகுதியில் காந்தி தாக்கப்பட்ட வரலாற்றை பல்கலைக்கழகம் கற்பிக்கவில்லை, மேலும் அவர் முக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்த பல பாடங்களை உள்ளடக்கவில்லை. நான் குழம்பிவிட்டேன்!


பல்கலைக்கழகமானது இந்த கடுமையான முரண்பாட்டை நிவர்த்தி செய்து, மகாத்மா காந்தி எதிர்பார்த்த மனித குல முன்னேற்றத்திற்கான ஒரு மாற்று மாதிரியை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய மையமாக உருவாக முயற்சிக்கும் என்று நான் நம்புகிறேன்.


காந்தியின் காலம் தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது நம் உலகம் பிரச்சினைகள் நிறைந்துள்ளது. இதில், மோதிஹாரியில் வாழ்க்கை ஒரு விதிவிலக்காக உள்ளது. பொதுவாக, குழப்பமான போக்குவரத்து மற்றும் அழுக்கு மற்றும் கழிவுப் பொருள் குவியல்கள் குவிந்து கிடக்கின்றன. புகழ்பெற்ற மோதி ஜீல் (Moti Jheel), நகரத்தின் நடுவில் உள்ள ஒரு பெரிய ஏரியானது, ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்திருக்கலாம். ஆனால் அது பரிதாபகரமான நிலையில் உள்ளது. அடாவடித்தனமாக ஏரியை ஆக்கிரமிப்பு செய்வது நிலைமையை மோசமாக்குகிறது. மக்கள் அதை அலட்சியமாகப் பார்க்கிறார்கள். இது காந்திக்கு வருத்தத்தை அளித்திருக்கும்.


இந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கமும் சமூகமும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. நாம் மகாத்மா காந்தியிடமிருந்து கற்றுக்கொண்டு, இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க தன்னார்வ சேவை மற்றும் அகிம்சைவழி எதிர்ப்பு போன்ற எளிய தீர்வுகளைப் பயன்படுத்தலாமா?


எனது பயணத்தின் போது, உள்ளூரில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு சொற்பொழிவு வழங்குகிறேன். இது எளிமையானது ஆனால் ஊக்கமளிக்கக்கூடியது. குறிப்பாக, சத்தியாக்கிரக நாட்களில் காந்தி பயன்படுத்திய அதே மேசையிலிருந்து காந்தியைப் பற்றி பேசுவதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். பார்வையாளர்கள் சிறியவர்கள், ஆனால் ஆர்வமுள்ளவர்கள், ஊடகங்கள் சமூக அக்கறையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மையத்தில், வயதான தலைவரும், காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் பள்ளி மாணவியும் காந்திய மதிப்புகளை பிரதிபலிக்கிறார்கள். காந்தியைப் போற்றும் கல்வியாளர்களையும் மற்றவர்களையும் நான் சந்திக்கிறேன். மேலும், அவர் அதிக சுதந்திரத்திற்கு வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.


மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் இந்தப் பணியைத் தொடரும் வகையில் உள்ளது. புவி கலாச்சார விஷயங்களில் பரிசோதனை செய்வதற்கும் புதுமைப்படுத்துவதற்கும் இது சரியான சூழலைக் கொண்டுள்ளது.




Original article:

Share:

பிரதமரின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது -துஷ்யந்த் தேவ்

 பிரதமர்  அனைவருக்கும் முன்மாதிரியாக இல்லா விட்டால், இந்திய ஜனநாயகம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும்.


நாட்டில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அரசியல் கட்சிகளின் அறிக்கைகளைப் பற்றி பேசுகிறார்கள். தங்கம், தாலி போன்ற மக்களின் சொத்துக்களைப் பறித்து சிறுபான்மை சமூகத்திற்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேர்தலின் போது சொல்லப்படும் கதைகளை காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் பிரதமரும், அவரது ஆலோசகர்களும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.





இரண்டு கட்சிகளின்  தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம்


'நியாய் பத்ரா' (‘Nyay Patra’) என்ற தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவர்கள் வெற்றி பெற்றால் அவற்றைப் பற்றி காங்கிரஸ் என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்தும் அது பேசுகிறது. நியாயம், சிறுபான்மையினர், முதியவர்கள், ஊனமுற்றோர், LGBTQIA+ மக்கள், சுகாதாரம், இளைஞர்கள், கல்வி, விளையாட்டு, பெண்களுக்கு உதவுதல், விவசாயிகள், தொழிலாளர்கள், கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம், வரிகள் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாத்தல் போன்ற பல தலைப்புகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

 

'செல்வம்' (‘wealth’) பற்றிய பிரிவில், வணிகங்கள் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பொருளாதாரம் வேகமாக வளர்ந்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (gross domestic product (GDP)) இரட்டிப்பாக்க காங்கிரஸ் விரும்புகிறது. 'நலத்திட்டம்' (‘welfare’) பற்றிய பகுதியில், அனைவருக்கும் நன்மை செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. பணம் சம்பாதிப்பது அனைவருக்கும் உதவ வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், ஏழை மக்களுக்கு உதவுவது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். 


நவ சங்கல்ப் பொருளாதாரக் கொள்கை (Nav Sankalp Economic Policy) அனைவருக்கும் பொருளாதாரத்தை நியாயமானதாக மாற்றவும், அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவரவும் முயற்சிக்கும். 'நியாயம்' என்பதன் கீழ், "எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த பலர் இன்னும் பின்தங்கியுள்ளனர். அவர்கள் இந்திய மக்கள்தொகையில் 70% இருந்தாலும், அவர்களுக்கு சரியான வேலை  வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அனைத்து சாதிகளையும் கணக்கெடுக்கும், அவர்கள் எவ்வளவு வசதியானவர்கள் எனக் கணக்கிட்டு, பின்னர் அவர்கள் சிறப்பாக செயல்பட உதவ இந்த தகவலைப் பயன்படுத்துவோம். சிலரிடம் பணம் வாங்கி ராபின் ஹூட் போன்றவர்களுக்கு கொடுக்கும் திட்டம் காங்கிரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


இந்த அறிக்கை அரசியலமைப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை பிரதிபலிக்கிறது.  இந்திய இறையாண்மை (sovereign),  சமத்துவம் (socialist), மதச்சார்பற்ற (secular), ஜனநாயக (democratic), குடியரசாக (republic) இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்கிறது. முகப்புரை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானம் (Preamble is the basic structure) என்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.


அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 39 (Article 39), ஆண், பெண் என அனைத்துக் குடிமக்களும் நலமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது. சமூக வளங்களின் கட்டுப்பாடு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதையும், பொருளாதாரம் செல்வந்தர்களுக்கு நியாயமற்ற முறையில் சாதகமாக இருக்கக்கூடாது என்பதையும் இது வலியுறுத்துகிறது.


 பிரிவு 38 (Article 38), மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது மற்றும் வருமானம், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிறது. 


பிரிவு 46 (Article 46) குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


பிஜேபி பொது  சிவில் சட்டத்தை விரும்புகிறது. இது பிரிவு 44 (Article 44) இன் கீழ் ஒரு வழிகாட்டுதல் கொள்கையாகும் (Directive Principle). இது உண்மையாக இருந்தால், பிரதமரும் பாஜகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆதரிக்க வேண்டும். மக்களை குழப்பும் வகையில் தேர்தல் அறிக்கையை தவறாக விமர்சிப்பது வருத்தமளிக்கிறது.


‘சங்கல்ப் பத்ரா’ (‘Sankalp Patra’) என்று அழைக்கப்படும் பாஜகவின் தேர்தல் அறிக்கை, ‘10 ஆண்டுகால ஆட்சி மற்றும் விகாஸ்’ என்று தொடங்குகிறது. அது 'கரிப் பரிவார் ஜன்' பற்றி பேசுகிறது மற்றும் பிஎம் கரீப் கல்யாண் அன்னா யோஜனாவின் (PM Garib Kalyan Anna Yojana) கீழ் 2020 முதல் 80+ கோடி குடிமக்கள் இலவச ரேஷன்களைப் பெறுகிறார்கள் என்று குறிப்பிடுகிறது. அக்கட்சி குடிமக்கள் கணக்குகளுக்கு நேரடியாக ₹34 லட்சம் கோடியை மாற்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  34 கோடிக்கும் மேலான குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தின் கீழ் ₹5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர் என்றும், 4 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) மற்றும் பிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வாக்குறுதிகள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன் தொடர்வது போன்ற மற்ற வாக்குறுதிகள், முகவுரையில் உள்ள இலக்குகளுக்கான பாஜகவின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. இதனால், காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிப்பதில் பிரதமரும், பா.ஜ.க.வும் கடைசியில்தான் வரவேண்டும்.


தேர்தல் அறிக்கையை நிர்வகிக்கச் சட்டம் இல்லை


2013 ஆம் ஆண்டில், எஸ். சுப்பிரமணியம் பாலாஜி எதிராக தமிழ்நாடு அரசு & ஆர்எஸ் வழக்கில் (S. Subramaniam Balaji v. Government of Tamil Nadu & Ors), தேர்தல் அறிக்கைகளை நிர்வகிக்கும் சட்டம் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் உள்ளீடுகளுடன் வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். ஆகஸ்ட் 12, 2013 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24, 2015 அன்று "தேர்தல் அறிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு வழிமுறைகளை" வெளியிட்டது. 


தேர்தல் அறிக்கைகளில் உள்ள வாக்குறுதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (Representation of the People Act) பிரிவு 123 இன் கீழ் ஊழல் நடைமுறையாக கருதப்படவில்லை என்றாலும், இலவசங்களை வழங்குவது வாக்காளர்களை இன்னும் திசைதிருப்பும் மற்றும் நியாயமான தேர்தல்களை பாதிக்கும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.


மார்ச் 16, 2024 அன்று, தேர்தல் ஆணையம் மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct (MCC)) வெளியிட்டது. சாதிகள், மதங்கள் அல்லது சமூகங்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகளை மோசமாக்கும் நடவடிக்கைகளில் இருந்து கட்சிகளையும் வேட்பாளர்களையும் தடுக்கும் "பொது நடத்தை" என்பதன் கீழ் உள்ள விதிகளும் இதில் அடங்கும். மற்ற கட்சிகளை விமர்சிப்பது அவர்களின் கொள்கைகள், கடந்தகால செயல்கள் மற்றும் வேலை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் அல்ல. சரிபார்க்கப்படாத கூற்றுகளின் அடிப்படையில் விமர்சிப்பதும் அனுமதிக்கப்படாது. மேலும், வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளை தூண்டுவதும், தேர்தல் சட்டத்தின் கீழ் எந்தவொரு ஊழல் நடைமுறைகள் அல்லது குற்றங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.


1996 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியது. வாக்காளர்களை கவர மத உரைகளைப் பயன்படுத்துவது ஒரு ஊழல் நடைமுறை என்று அது கூறியது. அது மேற்கோள் காட்டிய ஒரு உதாரணம் பால் தாக்கரேவின் ஒரு அறிக்கை. இந்து மதத்தை பாதுகாக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். எனவே முஸ்லிம்களின் வாக்குகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தமானது, அப்படியே இருக்கும் என்றது அந்த அறிக்கை.


1996-ல் உச்ச நீதிமன்றம், இந்து மதத்தைப் பாதுகாப்பது மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளைப் புறக்கணிப்பது போன்ற பால்தாக்கரேயின் அறிக்கையைப் போன்று வாக்காளர்களை பாதிக்கும் வகையில் மதப் பேச்சுகள் ஊழல் நடவடிக்கைகள் என்று தீர்ப்பு வழங்கியது. 2017 ஆம் ஆண்டில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 123 ஐ (Section 123) நீதிமன்றம் விளக்கியது. டாக்டர். நீதிபதி தாகூரின் கருத்துப்படி, மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையிலான எந்த மேல்முறையீடும் இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது. மேலும், அது ஊழலாகக் கருதப்படும். எனவே, இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு மேல்முறையீடும் ஊழல் நடைமுறையாகக் கருதப்படும்..


எதிர்க்கட்சிகளையும், சிறுபான்மை சமூகத்தையும் பிரதமர் விமர்சித்தார். தமக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களிடம்  கேட்காதது அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அவரது விமர்சனம் காட்டுகிறது. அவரது அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன. உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட ஊழல் நடவடிக்கைகளுக்கும் அவை சமம். பிரதமர் நடத்தை விதிகளை எழுத்திலும் உணர்விலும் நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும். அவர் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தவில்லை என்றால், புனிதமான ஜனநாயகம் பாதிக்கப்படும்.


இருந்தபோதிலும், சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  அரசியலமைப்பால் வழங்கப்பட்ட கடமையாகும். இந்த கடமையில் தேர்தல் ஆணையம் கணிசமாக தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தோல்வி, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பில்  குறைபாடுள்ளது என்பதைக் காட்டுகிறது.


துஷ்யந்த் தவே மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் முன்னாள் தலைவர்.




Original article:

Share:

இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை (Indian Defence University) செயல்படுத்துவதற்கான நேரம் இது - கரம்பீர் சிங்

 போரின் தன்மை மாறாததாக இருந்தாலும், அதன் மாறிவரும் தன்மையானது இராணுவக் கல்வி (military education) மற்றும் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தேவையான கல்விசார் முன்னேற்பாடு (academic preparation) ஆகியவற்றின் மீது அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது.


பண்டைய கிரேக்க சிந்தனையாளரான துசிடிடிஸ் (Thucydides), “எந்த நாடு அதன் அறிஞர்களுக்கும் அதன் வீரர்களுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துகிறதோ, அதன் சிந்தனை கோழைகளாலும் போர் முட்டாள்களாலும் செய்யப்படும்” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. பல நாடுகள் தங்கள் ஆயுதப் படைகளை புத்திசாலித்தனமாக மாற்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்களைக் (defence universities) கொண்டுள்ளன. உதாரணமாக, இந்த பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தானில் இரண்டும், சீனாவில் மூன்றும் உள்ளன. ஆனால், ஒர் அறிக்கையானது சீனாவில் 60 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இராணுவத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவுக்கு இன்னும் அதன் சொந்தமாக பாதுகாப்பு பல்கலைக்கழகம் இல்லை, இது மேலும் கவலையளிக்கிறது.


தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி


போரின் தன்மையானது, எப்போதும் ஒரே மாதிரியானது. ஆனால், அது தற்போது மிகவும் சிக்கலானதாகி வருகிறது. இராணுவக் கல்வியும், அதனுடன் தொடர்புடைய பயிற்சியும் முக்கியமானதாக்க வேண்டும். இது இன்றைய, போர்கள் குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில், கணிக்க முடியாத மற்றும் குழப்பமான தன்மையை கொண்டுள்ளது. நிச்சயமற்ற தகவல்கள் மற்றும் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளில் கூட இராணுவ அதிகாரிகள் முடிவுகளை வழங்க வேண்டும். அவர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) அமைப்பு மூலம் அதிகாரமளிக்கப்படுகிறார்கள். இந்த கல்வியானது அவர்களின் தொழில்வல்லுநர்களின் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு தலைமைகளையும் அதிக பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதால் அவர்களின் திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) எவ்வாறு மாறிவிட்டது என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஏனெனில், இது போர்கள் காட்சிபடுத்துதலில் இந்தியா என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது. கோல்ட்வாட்டர்-நிக்கோல்ஸ் பாதுகாப்பு மறுசீரமைப்புச் சட்டம் (Goldwater-Nichols Defense Reorganization Act), 1986 பரந்த அளவிலான கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் (wide-ranging structural reforms) கொண்டுவரும்போது, அமெரிக்க இராணுவத்தின் தொழில்வல்லுநரான 'ஐக்' ஸ்கெல்டன் என்பவர் தொழில்முறை இராணுவக் கல்விக்கு பெரும் அளவில் பங்களித்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் அளித்த அறிக்கையானது அமெரிக்க ஆயுதப் படைகளில் இராணுவக் கல்வியை கணிசமாக சீர்திருத்த உதவியது. கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட கற்றல் சார்ந்த இலக்குகளில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. இதில், கல்விக்கான தெளிவான இலக்குகள், சிறந்த ஆசிரியர்கள், கூட்டு அதிகாரிகளுக்கு இரண்டுகட்ட அமைப்பு பயிற்சி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராஜதந்திரத்திற்கான ஆய்வுகளுக்கு ஒரு புதிய நிறுவனம் ஆகியவற்றை அது பரிந்துரைத்தது. இது முக்கியமானது, ஏனென்றால் இந்தியா தனது இராணுவ பயிற்சியுடன் என்ன செய்ய விரும்புகிறதோ அதைப் போன்றது.


மெதுவான முன்னேற்றம்


இந்திய ஆயுதப்படைகளுக்கு கல்வியில் சிறந்து விளங்குவதில் தொடங்கி வலுவான கல்வி முறை தேவைப்படுகிறது. குறிப்பாக, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1967 ஆம் ஆண்டு தலைமைப் பணியாளர் குழுவினால் பாதுகாப்புச் சேவைகள் பல்கலைக்கழகத்திற்கான (Defence Services University) யோசனை பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், 1982 இல், பணியாளர் குழுவின் தலைவர்களால் (Chiefs of Staff Committee(COSC)) உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University (IDU)) போன்ற ஆயுதப் படைகளுக்கு ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.


சுமார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கார்கில் மோதலை அடுத்து, இதைப் பற்றி ஆராய டாக்டர் கே.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, மே 2010 இல், குர்கானில், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (Indian Defence University in Gurgaon) அமைக்க தற்காலிக ஒப்புதல் கிடைத்தது. 2017-18-ஆம் ஆண்டில் சில சாதகமான அறிக்கைகள் இருந்தபோதிலும், இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (Indian Defence University(IDU)) நிறுவுவதற்கான முன்னேற்றம் மெதுவாக உள்ளது.


இந்தியாவின் ஆயுதப் படைகளால் நடத்தப்படும் பல உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில்வல்லுநர்கள் பயிற்சியின் வளமான மற்றும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. இருப்பினும், அவர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (Professional Military Education (PME)) கட்டமைப்பு மற்றும் இராஜதந்திர சிந்தனைக்கான பல ஒழுங்குமுறை அணுகுமுறைகள் இல்லை. பட்டப் படிப்புகளுக்கான பல்கலைக்கழகங்களுடன் ஆயுதப் படைகள் இணைந்திருந்தாலும், இது உகந்த தீர்வாகாது. இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகமானது (IDU) இந்தியாவின் தொழில் வல்லுநர்களுக்கான இராணுவக் கல்வி (PME) அமைப்பில் உள்ள இத்தகைய குறைபாடுகளை இராணுவம் மற்றும் சிவில் சேவைகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் நன்கு தகுதியான ஆசிரியர்களின் மூலம் உயர் இராணுவக் கல்வியின் மைய நிறுவனத்தை வழங்குவதன் மூலம் நிவர்த்தி செய்யும். உண்மையில், இந்தக் கோட்பாட்டை நடைமுறையுடன் இணைக்கும்.


பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் அதன் கல்லூரிகள் மற்றும் அதன் மூலம் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களிடையே வேறுபடும். ஆனால், அறிவியல் மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டிலும் தேசிய பாதுகாப்பு (national security) மற்றும் இராணுவம் (defence) தொடர்பான பல்வேறு பாடங்களை உள்ளடக்க வேண்டும்.


இது சரியான யோசனை 


இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குஜராத்தில், ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University (RRU)) நிறுவப்பட்டதால், எங்களுக்கு இனி இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) தேவையில்லை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த ஒப்பீடு நியாயமானதல்ல, ஏனெனில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) ஆகியவை வேறுபட்டவை. ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகமானது (RRU), இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (IDU) செய்வதைப் போல பாதுகாப்புக் கல்வியில் கவனம் செலுத்தவில்லை. மேலும், அதன் பாடத்திட்டம் போர் மற்றும் திட்டங்களை நிர்வகிப்பதற்கான இராணுவத் தேவைகளைப் பற்றியது மட்டுமல்ல.


இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) தாமதப்படுத்துவது என்பது பாதுகாப்பு, இராஜதந்திர கலாச்சாரம் மற்றும் இராணுவ சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு நாம் தயாராக இல்லை என்பதாகும். நாம் விரைவில் இந்திய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை (IDU) ஆரம்பிக்க வேண்டும். அதையொட்டி கூட்டு இராணுவக் கல்வியை ஆரம்பிக்க முடியும் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க உதவும்.


அட்மிரல் கரம்பீர் சிங், PVSM, AVSM, இன் (ஓய்வு), கடற்படையின் 24 வது தலைவராகவும், புதுடெல்லியின் தேசிய கடல்சார் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.




Original article:

Share:

செல்வந்தர்களை ஏழைகளாக்காமல் ஏழைகளை செல்வந்தர்களாக்குங்கள் -பிரவீன் சக்ரவர்த்தி

 கடந்த இருபது ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு இந்தியாவில் மட்டுமல்ல,  உலகம் முழுவதும் காணப்படுகிறது.


காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட்டது. அன்றிலிருந்து இன்று வரை, தேர்தல் விவாதங்களில் 'மறுபகிர்வு' (‘redistribute’) என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. செல்வத்தை மறுபங்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் அறிக்கை கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். மக்களிடமிருந்து தங்கம் மற்றும் தாலியை எடுத்துக்கொள்வது, புதிய வரிகளைச் சேர்ப்பது மற்றும் ஏழை சிறுபான்மையினருக்கு இவற்றை வழங்குவது ஆகியவை அடங்கும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், தேர்தல் அறிக்கையில் உண்மையில் 'மறுபகிர்வு' (‘redistribute’), 'தாலி’ (mangalsutras’) அல்லது 'செல்வ வரி' (‘wealth tax’) குறிப்பிடப்படவில்லை. இது 48 பக்கதேர்தல் அறிக்கையில் இந்த வார்த்தைகளில் ஒன்று கூட இடம் பெறவில்லை.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தலில், இல்லாத வார்த்தைகள் அதிகம் பேசப்படுகிறது.

 

இது இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளியைப் பற்றி விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த இடைவெளி கடந்த இருபது வருடங்களாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் அதிகமாகிவிட்டது. இதற்கு எந்த அரசியல் கட்சி காரணம் என்று விவாதிப்பது பலனளிக்காது. சமூகத்தை அனைவருக்கும் சமமானதாகவும், நியாயமானதாகவும் மாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிவதே முக்கியம்.


பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை இரண்டு வழிகளில் தீர்க்கலாம்:


பணக்காரனை ஏழையாக்குதல்: இதன் பொருள் பணக்காரனின் செல்வத்தைக் குறைப்பது.


ஏழைகளை பணக்காரர் ஆக்குதல்: இது ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாகும். மாற்றாக, இரண்டு அணுகுமுறைகளின் கலவையும் பயன்படுத்தப்படலாம்.


 பணம் நிலையானது என்று நினைக்கிறீர்களா அல்லது எல்லோரும் பயனடையும் அளவுக்கு வேகமாக வளராது என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், சமூக செயல்பாட்டாளர்கள் பரேட்டோ கொள்கை ("Pareto Optimum") என்ற கருத்தை குறிப்பிடுகின்றனர். இந்த கருத்தின் படி, மற்றவரை மோசமாக்காமல் ஒருவரை மேம்படுத்துவது சாத்தியமில்லை. வளர்ந்த நாடுகள் (மெதுவான வளர்ச்சியுடன்) பெரும்பாலும் சமத்துவமின்மையைக் குறைக்க இந்தப் பாதையைப் பின்பற்றுகின்றன. வேகமாக வளரக்கூடிய வளரும் நாடுகள், மாற்று அணுகுமுறையைக் கொண்டுள்ளன. அவர்கள் Pareto Optimum-ஐ கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சிந்தனை வேறுபாடு சமூகங்கள் சமத்துவமின்மையை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன என்பதை எடுத்து காட்டுகிறது.

 

சுருக்கமாக, செல்வத்தை சமமாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமா என்பதைச் சுற்றியே விவாதம் நடைபெறுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அவற்றின் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் தத்துவக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் தங்களுக்கான பாதைகளை தேர்வு செய்கின்றனர். 


'அமைப்பை சரி செய்யுங்கள்'


செல்வ வரி (wealth tax) என்ற கருத்து செல்வத்தை மிகவும் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு மறுபகிர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த யோசனை பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா போன்ற நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை நியாயமாக சம்பாதித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அவர்களின் செல்வம் தவறாக சம்பாதித்திருக்கலாம் என்பதற்காக வரி விதிப்பது சமத்துவத்தை உறுதிப்படுத்தாது. "தவறாக சம்பாதித்தது" (ill-gotten) என்ற சொல் நியாயமற்ற அல்லது சட்டவிரோதமாக பெறப்பட்ட செல்வத்தைக் குறிக்கிறது. இந்தச் செல்வத்தின் மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, அப்படிக் குவிக்க அனுமதிக்கும் மூல காரணத்தை (ஊழல் அமைப்புகள்) நாம் கவனிக்க வேண்டும்.


பரம்பரை வரி நியாயமானதாகத் தோன்றலாம், ஏனெனில் அது பணக்காரக் குழந்தைகளை ஏழைக் குழந்தைகளை விட பெரிய நன்மையுடன் வாழ்க்கையைத் தொடங்குவதைத் தடுக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதாக இருக்க வேண்டும்.  செல்வந்தர்களுக்கு வரி விதிப்பதால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மேலும்  முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தலாம் இல்லை என்றால் முதலீட்டாளர்கள் வேறு நாட்டிற்கு சென்று விடுவார்கள். பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் இந்தியாவில், பணக்காரர்களை செல்வம் குறைந்தவர்களாக்குவதற்குப் பதிலாக முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்துவது முக்கியம்.


இந்தியாவில், "வேலையில்லா வளர்ச்சி" (jobless growth) என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. இதன் பொருள் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், அது போதுமான வேலைகளை உருவாக்கவில்லை அல்லது மக்களின் வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கையையும்  பெரிதாக மேம்படுத்தவில்லை  என்பதாகும்.


ஜூலை 2022-ல் தி இந்து நாளிதழில் 'ஜிடிபி யாருடையது' (‘Whose GDP is it anyway’) என்ற தலைப்பிலான கட்டுரையில், 1980களுடன் ஒப்பிடும் போது, ​​பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் வளரும் போது, ​​அது மிகக் குறைவான வேலைகளை உருவாக்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், நவீன பொருளாதார மாதிரிகள் செயல்திறனுக்காக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக பணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.  பொருளாதார சமத்துவமின்மையை குறைக்க, வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த போக்கை சமநிலைப்படுத்த முடியும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள சில வாக்குறுதிகள், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்கான உரிமையை வழங்குதல், நிறுவனங்களுக்கு பணியமர்த்துவதற்கான ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை நம்பியிருக்கும் செயல்பாடுகளை ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. 


சமத்துவமின்மைக்கு பங்களிக்கும் மற்றொரு காரணி நியாயமற்ற வரி முறையாகும். வரியாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 64 ரூபாய் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடமிருந்து வருகிறது. முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி போன்ற மறைமுக வரிகள் மூலம் வருகிறது. அதே நேரத்தில் 36 ரூபாய் மட்டுமே பணக்கார நிறுவனங்களிடமிருந்து வருகிறது. இதன் பொருள் ஏழைகள் பொருளாதார ஆதாயங்களை இழப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதிக வரிகளையும் செலுத்துகிறார்கள். அதனால்தான் சரக்கு மற்றும் சேவை வரியை எளிமையாக்கி, வரியை குறைத்து, புதிய நேரடி வரிக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதை  சரி செய்ய முடியும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது.


ஏழைகள் பொருளாதார வளர்ச்சியால் பயனடையும் வரை நலத்திட்டங்களுடன் அவர்களுக்கு உதவுவது முக்கியம். பொருளாதாரத்தை வேகமாக வளர்ப்பதன் மூலமும், அதிக வரிகளை வசூலிப்பதன் மூலமும், நலன்புரி விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலமும் இந்த திட்டங்களுக்கு நிதியளிக்க முடியும்.


பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை, சாதாரண மக்களுக்கு வரிகளைக் குறைப்பது மற்றும் ஏழைகளுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சலுகைகள், பாதுகாப்பு வலைகள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற  புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவே சமத்துவமின்மையைக் குறைக்க பணக்காரர்களை ஏழைகளாக்காமல், ஏழைகளை பணக்காரர்களாக மாற்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


(பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் முக்கிய உறுப்பினர்)



Original article:

Share:

பெங்களூருவில் தண்ணீருக்கான போராட்டம் -அலங்க்ரிதா கேரா, சாலி ரானே

 சமீபகாலமாக பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது உள்நாட்டில் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் விநியோகம் தடைபடுவதாலும், தண்ணீர் லாரிகள் தண்ணீரின் விலையை 80 சதவீதம் உயர்த்தியுள்ளது. குடியிருப்புவாசிகள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். அவர்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன.


பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை மோசமான நிர்வாகத்தால் மட்டும் ஏற்படவில்லை. புவியியல் சிக்கல்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கலும் இதற்குக் காரணம்.


இயற்கை நன்னீர் ஆதாரங்கள் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெங்களூரு வரலாற்று ரீதியாக அதன் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஏரிகள் மற்றும் குளங்களை நம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீர்நிலைகளில் ஒரு பகுதி மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. மிக முக்கியமாக நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது, ஏனெனில் அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீர் எடுக்கும் அளவிற்கு மழை நீரானது நிலத்திற்குள் செல்வதில்லை. காவிரியில் இருந்து வரும் தண்ணீர் பெங்களூருவின் தண்ணீர் தேவையை 50% மட்டுமே பூர்த்தி செய்கிறது. மீதமுள்ளவை 50% நீரானது நிலத்தடி நீரையே நம்பியுள்ளன, ஆனால் நிலத்தடி நீரானது வேகமாக குறைந்து வருகிறது. நகரத்தில் உள்ள 11,000 ஆழ்துளை கிணறுகளில் 800 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை, மேலும் தொடர்ந்து செயல்படும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக சீரற்ற மழைப்பொழிவு நகரின் நீர் ஆதாரங்களை மேலும் மோசமாக்கியுள்ளது.


பெங்களூருவில் நடப்பது விரைவில் மற்ற இந்திய நகரங்களிலும் நடக்கலாம். எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவதைத் தடுக்க, நாம் இப்போது நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தண்ணீரைக் குறைவாக பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்பானது தண்ணீரைச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரங்களை ஏற்பாடுசெய்யலாம், ஸ்மார்ட் மீட்டர் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் பொதுமக்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் மேலான்மையை சிறப்பாக நிர்வகிக்க பொறியியல் தீர்வுகளும், வீட்டில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்த மக்களுக்கு உதவும் நீர் காற்றூட்டக் கருவிகள் (water aerators) பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கலாம்.


மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற தற்கால தீர்வுகள் பரவலாக செயல்படுத்தப்பட வேண்டும். மழைநீரை சேகரித்து கசிவுநீர் குழிகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பம் போன்ற சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி முறையாக நிர்வகிக்கும்போது, நீர் தட்டுப்பாட்டை குறைக்க உதவும்.


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை நன்னீர் ஆதாரங்களுக்கான தேவையைக் குறைக்கும். தற்போது, பெங்களூருவின் கழிவுநீரில் சுமார் 77% சுத்திகரிக்கப்படுகிறது, ஆனால் அதில் பெரும்பாலானவை மீண்டும் பயன்படுத்தப்படவில்லை. முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை ஊக்குவிப்பது ஒரு நல்ல செயலாகும். கழிவுநீரை மூலத்திலேயே சுத்திகரிக்கும் இந்திரா வாட்டர் போன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். முறையான கழிவு நீர் குழாய் மேலாண்மை மற்றும் பராமரிப்பும் அவசியம். சோலினாஸ் இன்டகிரிட்டி (Solinas Integrity) ரோபோ போன்ற தொழில்நுட்பம், நீர் மற்றும் கழிவுநீர் குழாய் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கிறது.


நகரங்கள் தொலைதூர நீர் ஆதாரங்களை குறைவாக நம்பியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பெங்களூருவை எடுத்துக் கொள்ளுங்கள். இது 90 கி.மீ தூரத்திலும், 300 மீட்டர் உயரத்திலும் உள்ள காவிரி நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெறுகிறது. இந்த தண்ணீரை வெளியேற்றவே தினமும் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.3 கோடி செலவிடப்படுகிறது. நிலையான நகர்ப்புற திட்டமிடல், ஏரி பாதுகாப்பு, ஆழ்துளை கிணறு மேலாண்மைக்கான நடவடிக்கைகள், நிலத்தடி நீரை நிரப்புதல் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகள் ஆகியவை மீண்டுவர இன்றியமையாதவை.


பெங்களூருவின் நிலைமையை அனைத்து இந்திய நகரங்களும் கவனிக்க வேண்டும். பல நகரங்கள் இதேபோன்ற தண்ணீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இதைச் சமாளிக்க, நகர நிர்வாகங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் (startups), ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


சைலி ரானே ஃபெலோ, ஏ.சி.டி ஃபார் என்விரான்மென்ட். அலங்க்ரிதா கேரா, ACT ஃபார் என்விரான்மென்ட், இயக்குநர்.




Original article:

Share: