யுனெஸ்கோ உலக ஞாபகார்த்த பிராந்தியப் பதிவேட்டில் (UNESCO’s Memory of the World Regional Register) மூன்று இந்திய இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன: அவற்றின் முக்கியத்துவம் என்ன? -திவ்யா

 மூன்று நூல்களும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கிறது என்பதால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.


ராம்சரித்மானஸ் (Ramcharitmanas), பஞ்சதந்திரம் (Panchatantra) மற்றும் சஹ்ருதயலோக-லோசனம் (Sahṛdayaloka-Locana) ஆகிய மூன்று இந்திய இலக்கியப் படைப்புகள் யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்திய பதிவேட்டில் சேர்க்கப்பட்டன. ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழுவின் (Memory of the World Committee for Asia and the Pacific (MOWCAP)) நினைவகத்தின் பத்தாவது கூட்டத்தின் போது இது நடந்தது. மங்கோலியாவின் உலான்பாதரில் இந்த வார தொடக்கத்தில் இந்த சந்திப்பு நடந்தது.


இந்த படைப்புகள் முக்கியமானவை. ஏனெனில், அவை மாறுபட்ட கதைகள் மற்றும் கலை வெளிப்பாடுகளைப் பாதுகாத்து கொண்டாடுகின்றன. இவை நமது பொதுவான மனிதநேயத்தை வடிவமைக்க உதவுகின்றன என்று கலாச்சார அமைச்சகம் திங்களன்று (மே 13) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்த இலக்கியப் படைப்புகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் மற்றும் கலைஞர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த நூல்கள் உலகளாவிய முறையீட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வேட்புமனு செயல்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (Indira Gandhi National Centre for the Arts (IGNCA)) கலாநிதிப்  பிரிவின் துறைத் தலைவர் ரமேஷ் சந்திர கவுர் (Ramesh Chandra Gaur) கூறுகையில், ராமாயணம் மற்றும் ராம்சரித்மானஸ் இந்தியாவில் மட்டுமல்ல, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளன. இந்திரா காந்தி தேசிய கலை மையம் என்பது பட்டியலுக்கான பரிந்துரைகளை அனுப்பும் பொறுப்பு நிறுவனமாகும்.


ராம்சரித்மானஸின் (Ramacharitmanas) இரண்டு கையெழுத்துப் பிரதிகள் UNESCO-வுக்கு அனுப்பப்பட்டன. ஒன்று கோஸ்வாமி துளசிதாஸரால் (Goswami Tulsidas) எழுதப்பட்டது. மற்றொன்று 18ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்டது. இது மேற்கு ஆசியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உரையின் முறையீட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கவுர் கூறுகிறார். பஞ்சதந்திரம் அதன் உலகளாவிய தார்மீக மதிப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், 15-ஆம் நூற்றாண்டின் சஹ்ருதயலோக-லோசனம் (Sahṛdayaloka-Locana) அதன் அழகியல் பங்களிப்புகளுக்காக காஷ்மீர் அறிஞர்களான ஆச்சார்யா ஆனந்தவர்தன் மற்றும் அபிநவகுப்தர் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.


ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழு (Memory of the World Committee for Asia and the Pacific (MOWCAP)) 2004-ல் தொடங்கியது முதல், இந்தியா இதுவரை எந்த பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கவில்லை. தற்போது இந்தியாவின் மூன்று பரிந்துரைகளும் ஏற்கப்பட்டது. 


யுனெஸ்கோவின் உலகின் நினைவகம் (Memory of the World (MOW)) திட்டம் சர்வதேச அளவில் அரிதான மற்றும் அழிந்துவரும் ஆவணப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் அணுகலை வழங்கவும் செயல்படுகிறது. அதன் சாசனத்தின்படி, UNESCO 1992-ல் "கூட்டு மறதியிலிருந்து பாதுகாக்க (to guard against collective amnesia)" முயற்சியைத் தொடங்கியது. அவற்றின் பரவலை உறுதி செய்வதன் மூலம் உலகெங்கிலும் உள்ள விலைமதிப்பற்ற காப்பகங்கள் மற்றும் நூலக சேகரிப்புகளைப் பாதுகாத்தல் உறுதிசெய்யப்படுகிறது.


இந்தத் திட்டம் உலகெங்கிலும் உள்ள முக்கியமான பாரம்பரியத்தை பாதுகாத்து அதற்கு அங்கீகாரம் அளிக்கிறது. இது இந்த பாரம்பரியத்தின் பதிவுகளை வைத்திருக்கிறது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்புகளுக்கு ஒரு சின்னத்தை (logo) வழங்குகிறது. இந்த பொருட்களை நியாயமான முறையில் பாதுகாக்கவும் அணுகவும் உதவுகிறது. மேலும், இது ஆவணப்பட பாரம்பரியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் நிதி திரட்டுவதன் மூலம் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள், பொதுமக்கள், வணிகங்கள் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது.


மே 2023 நிலவரப்படி, சர்வதேச MoW பதிவேட்டில் 494 கல்வெட்டுகள் உள்ளன. இந்தத் தகவல் யுனெஸ்கோ இணையதளத்தில் இருந்து வருகிறது. MoW பதிவு பிராந்திய மட்டங்களிலும் வேலை செய்கிறது. உலக ஆசிய-பசிபிக் கமிட்டியின் நினைவகம் (MOWCAP) சமீபத்தில் மூன்று இந்திய நூல்களை அதன் பட்டியலில் சேர்த்தது. இந்தக் குழு ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து மரபியல், இலக்கியம் மற்றும் அறிவியலில் செய்த சாதனைகள் மீது கவனம் செலுத்துகிறது. 2024 சுழற்சியின் போது, உறுப்பு நாடுகள் பட்டியலில் 20 உருப்படிகளைச் சேர்த்தன. உலான்பாதரில் நடந்த பத்தாவது பொதுக் கூட்டத்தில் இது நடந்தது.


சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பொருட்களும், மலேசியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 2 பொருட்களும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அங்கீகரிக்கப்பட்ட பொருட்களில் சீனாவில் தேநீர்-அருந்தும் வணிகத் தொழில்முனைதல் மற்றும் இந்தோனேசியாவில் சர்க்கரை ஆராய்ச்சி மற்றும் சிமென்ட் உற்பத்தி போன்ற குறிப்பிடத்தக்க வணிக மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த ஆவணங்கள் அடங்கும். பிலிப்பைன்ஸின் பூர்வீக ஹினிலாவோட் மந்திரங்கள் மற்றும் வியட்நாமின் ஒன்பது வம்ச தாழிகளில் வெண்கல அடித்தள நிவாரணங்களில் காணப்படும் ஒன்பது முக்காலிகளின் கிழக்கு ஆசிய புராணக்கதை உள்ளிட்ட பிராந்திய இலக்கிய மரபுகளும் இதில்  உள்ளன. 


2024 சுழற்சி அறிவியல் மற்றும் இலக்கியத்தை (science and literature) முன்னிலைப்படுத்தியது. இது வங்காளதேசத்தைச் சேர்ந்த ரோகியா எஸ் ஹொசைனைக் (Rokeya S Hossain) கௌரவித்தது. அவர் ஒரு அறிவியல் புனைகதை பெண்ணிய எழுத்தாளர். 1905 ஆம் ஆண்டு சுல்தானாவின் கனவு கதையில், வானுார்திகள் (helicopters) மற்றும் சூரியப்பலகம் (solar panels) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவர் கற்பனை செய்தார். சுழற்சியானது ஆஸ்திரேலியாவிற்கும் துவாலுவிற்கும் இடையிலான கூட்டுத் திட்டத்தையும் அங்கீகரித்தது. அவர்கள் அறிவியல் பயணங்களை ஆவணப்படுத்தினர். இந்த பயணங்கள் பவளப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தன. ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழு (Memory of the World Committee for Asia and the Pacific (MOWCAP)) பிராந்தியப் பதிவேடு 1998-ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து 65 பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.




Original article:

Share:

வி.பி.சிங்கின் கொந்தளிப்பான பதவிக்காலம் - ஷியாம்லால் யாதவ்

 1989: அரசியல் தவறுகள் மற்றும் போபர்ஸ் ஊழலால் குற்றச்சாட்டு காரணமாக  ராஜீவ் காந்தி தனது செல்வாக்கை இழந்தார். 


1989ல் வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பதவியில்  நீடித்தார். அவருக்குப் பிறகு, சந்திர சேகர், சிறிது காலம் பிரதமராக பதவியில் நீடித்தார்.

 

1989 மக்களவைத் தேர்தலில், ராஜீவ் காந்தியின் ஊழல்கள் அவரது குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மறைத்தது. 12 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. வி.பி.சிங் கூட்டணி அரசை அமைத்தார். ராஜீவ் காந்தி பின்னர் சந்திரசேகர் பிரதமராக ஆவதை ஆதரித்தார். ஆனால், அளித்து வந்த ஆதரவை வி.பி.சிங் சிறிது காலத்திற்கு பிறகு திரும்ப பெற்றார். 1989 முதல் 1991 வரை, இந்தியாவில் இரண்டு மக்களவைத் தேர்தல்களும் இரண்டு பிரதமர்களும் பதவியில் நீடித்தனர்.

 

1988 டிசம்பரில், ராஜீவ் காந்தியின் அரசாங்கம் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 326-ல் (Article 326) திருத்தம் செய்தது.  இந்த  திருத்தத்தின் மூலம் வாக்களிக்கும் வயதை 21 முதல் 18 ஆகக் குறைத்தது. சுமார் 4.7 கோடி புதிய வாக்காளர்களைச் சேர்த்தது. அவரது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது தேர்தல் சீர்திருத்தம் இதுவாகும். முந்தைய சீர்திருத்தங்களில் 1985ஆம் ஆண்டில் கட்சித் தாவல்  தடை சட்டமும் (the anti-defection law-1985) அடங்கும். நிறுவனங்கள் அரசியல் நன்கொடைகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க 1985ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டத்தையும் (political donations by firms (1985) திருத்தியது. 1988ஆம் ஆண்டில், மத நிறுவனங்கள் தங்கள் நிதியை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க அவர்கள் ஒரு சட்டத்தை இயற்றினார். ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமரானபோது அவருக்கு 40 வயதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் பல இளைஞர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார்.


ராஜீவ் காந்திக்கு தனது நிதியமைச்சர் விபி சிங்குடன் பிரச்சனைகள் இருந்தன. சிங் உயர்மட்ட வணிகர்கள் மீது பல ஊழல் எதிர்ப்பு சோதனைகளுக்கு உத்தரவிட்டார். இந்த தொழிலதிபர்களில் பலர் ராஜீவ் காந்தியின் நண்பர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். "ரெய்டு ராஜ்" (“raid raj”) என்று அழைக்கப்படும் இந்த சோதனைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, ஜனவரி 1987-ல் ராஜீவ், வி.பி.சிங்கை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றினார்.


விபிசிங் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின், போஃபர்ஸ் ஹோவிட்சர் (Bofors howitzer purchase deal) கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைத் தொடங்கினார். இதற்குமுன் ராஜீவ் காந்தி இந்த ஒப்பந்தத்தை தானே நிர்வகித்தார். இதனால் அமைச்சரவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. விபிசிங் ஏப்ரல் 12, 1987 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.


வி பி சிங் vs ராஜீவ் காந்தி


அக்டோபர் 2, 1987 அன்று, விபிசிங் ஜன் மோர்ச்சா என்ற அரசியல் குழுவை உருவாக்கினார். ராஜீவ் அரசில் இருந்து விலகிய அருண் நேருவும், ஆரிப் முகமது கானும் அவருடன் இணைந்தனர். ஜூன் 1988-ல், சிங் அலகாபாத் மக்களவை இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்னர் பல கட்சிகளை ஒன்றிணைத்து 1988 அக்டோபர் 11 அன்று ஜனதா தளத்தை உருவாக்கினார். நாட்டின் எதிர்காலத்தை மாற்ற விதிக்கப்பட்ட தலைவர் என்று பரிந்துரைக்கும் முழக்கத்துடன் எதிர்க்கட்சிகள் சிங்கைச் சுற்றி அணிதிரண்டன.


ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் பிரச்சாரம் செய்தபோது, எல்.கே.அத்வானி தலைமையிலான பாஜக தனது இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தியது. பிப்ரவரி 1, 1986 அன்று பாபர் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்ட பின்னர் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான பிரச்சாரம் வேகம் பெற்றது.


1989 தேர்தல்


1989-ல் 49.89 கோடி இந்தியர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நவம்பர் 22 முதல் 26 வரை மூன்று கட்டங்களாக 529 இடங்களுக்கு சுமார் 62% பேர் வாக்களித்தனர். ஜனதா தளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றன. கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்று, 33 வயதில் மாயாவதியை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. காங்கிரஸ், முன்பை விட குறைவான இடங்களை வென்றாலும், தனிப்பெரும் கட்சியாக இருந்தது.


முந்தைய தேர்தலில் 414 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், அதிர்ச்சியூட்டும் அடியை சந்தித்தாலும், 197 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆந்திராவில் 39 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 28 இடங்களிலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 27 இடங்களிலும், கேரளாவில் 14 இடங்களிலும் வெற்றி பெற்றது.


ராஜீவ் அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை நிராகரித்ததை அடுத்து, ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. சிங் பிரதமராக 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பதவியேற்றார், முன்னாள் ஹரியானா முதல்வர் தேவி லால் துணைப் பிரதமராக இருந்தார்.


மண்டல் கமிஷன் மற்றும் மந்திர்


பத்தாண்டுகளுக்கு முன் ஜனதா கட்சி எதிர்கொண்ட அதே உட்பூசல்களை தேசிய முன்னணியும் எதிர்கொண்டது. தேவிலால் வி.பி.சிங்கை முதுகெலும்பு இல்லாதவர்" (“spineless”) என்று விமர்சித்தார். இது அவரை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. ஆகஸ்ட் 15, 1990 அன்று, வி.பி.சிங் அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டிற்கான (27% reservation for backward classes in government jobs) மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


அக்டோபர் 23, 1990 அன்று, லாலு பிரசாத் யாதவின் ஜனதா தள அரசு, பீகாரின் சமஸ்திபூரில் அத்வானியின் சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ரத யாத்திரையை நிறுத்தி, பாஜக தலைவரைக் கைது செய்தது. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. சிங் நவம்பர் 7, 1990 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார், மேலும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சந்திர சேகர், புதிய சரண் சிங் 


சந்திரசேகர் தலைமையில் ஜனதா தள எம்.பி.க்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கி நவம்பர் 10, 1990 அன்று பதவியேற்றனர். காங்கிரஸ் அவர்களை வெளியிலிருந்து ஆதரித்தது. இருப்பினும், இந்த ஆதரவு நிலையற்றதாக இருந்தது. ராஜீவை பிரதமர் உளவு பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அரசின் நாட்கள் எண்ணப்பட்டன. சந்திரசேகர் மார்ச் 6, 1991 அன்று ராஜினாமா செய்தார். இது மக்களவை கலைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.




Original article:

Share:

இந்தியாவில் உள்ள சில உரையாடற்குழுக்கள் அமெரிக்க அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பற்றி புரிந்து கொள்ளதாதது என்ன? -சி.ராஜா மோகன்

 பொதுவாக ஜனநாயகம் மற்றும் குறிப்பாக இந்திய ஜனநாயகம் பற்றிய விவாதம், அரசியல் தாராளமயத்தைப் பரப்புவதற்காக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பரப்புரையாளர்களால் இயக்கப்படுகிறது என்று கூறலாம். உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது


இந்திய ஊடகங்களின் கூற்றுப்படி, இந்தியாவின் ஜனநாயகம் பலவீனமடைவதைப் பற்றி அமெரிக்கா கவலைப்படுவதாகவும், அதன் தேர்தல்களில் தலையிட விரும்புவதாகவும் தெரிகிறது. இருப்பினும், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய கவலைகள் உள்ளன. ஆனால், இவை இந்தியாவில் பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. அமெரிக்கா தற்போது அதன் அரசியல், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் திசையை மாற்றக்கூடிய ஒரு பொதுத் தேர்தலின் மத்தியில் உள்ளது. ஐரோப்பாவில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஆசியாவில் சீனாவின் விரிவாக்கத்தன்மை மற்றும் அமெரிக்க உள்நாட்டு அரசியலையும் பாதித்துள்ள காசா மோதல் ஆகியவற்றுடன் வாஷிங்டன் போராடி வரும் நேரத்தில் இந்த தேர்தல் வருகிறது.


சீன-ரஷ்ய கூட்டணியை அமெரிக்காவானது திறம்பட எதிர்கொள்ளவில்லை. இந்தக் கூட்டணி ஐரோப்பா (Europe) மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் (NATO allies) உட்பட உலகளவில் அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். கடந்த வாரம், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டார். மேலும், இந்த வாரம், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு நாடுகளுக்கு எதிராக பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவுக்கு இடையே அதிகரித்து வரும் இராஜதந்திர ரீதியான ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.


அமெரிக்காவில் நடக்கும் குறிப்பிடத்தக்க உள்நாட்டு விவாதங்கள் குறித்து இந்தியாவில் மிகக் குறைவான விவாதம் இருப்பது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு நவம்பரில் வரவிருக்கும் தேர்தல்களுடன். இதில், நிறைய மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒருவேளை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவது அமெரிக்காவின் நிரந்தர மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.


எவ்வாறாயினும், எல்லைப் பாதுகாப்பு (border security), குடியேற்றம் (immigration), வர்த்தகம் (trade) மற்றும் இராணுவக் கூட்டணிகள் (military alliances) போன்ற முக்கியமானத் தலைப்புகள் குறித்து விவாதித்த டைம் இதழுக்கு (Time magazine) டிரம்பின் சமீபத்திய நேர்காணல், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்களின் தற்போதைய கருத்துக்களுடன் ஒப்பிடும்போது இந்திய ஊடகங்களில் குறைவான கவனிப்பைப் பெற்றது.


அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தியாளர் சந்திப்புகள் பொதுவாக வாஷிங்டனில் உள்ள தெற்காசிய நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன. வாஷிங்டனில் உள்ள சிறிய கருத்தரங்கம் இந்திய ஊடகங்களில் பெரும் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுகிறது. இந்தியாவில், அமெரிக்கா என்ன நினைக்கிறது என்று விவாதிக்கிறார்கள். ஆனால் அது வாஷிங்டனில் உள்ள யதார்த்தத்திலிருந்து வேறுபட்டது. அமெரிக்கா என்ன நினைத்துக் கொண்டிருக்கக்கூடும் என்பது குறித்து இந்தியாவில் நடக்கும் விவாதங்கள் வாஷிங்டனின் யதார்த்தத்துடன் ஒத்துப்போவதில்லை.


இந்தியத் தேர்தல்களைப் பற்றிய மேற்கத்திய ஊடகச் செய்திகள் கூறுவது என்ன? இங்கே மீண்டும், மேற்கத்திய ஊடகங்களின் இந்தியாவைச் சார்ந்த நிருபர்களின் அறிக்கைகள், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படுகின்றன. வெளிநாட்டுச் செய்திகள் பெரும்பாலும் நிருபர்கள் இருக்கும் நாடுகளைவிட இந்திய ஊடகங்கள் என்ன சொல்கிறது என்பதில் கவனம் செலுத்துகிறது. இது துரதிருஷ்டவசமானது.


தாராளவாத மேற்கத்திய விமர்சகர்களால் இந்திய ஜனநாயகம் குறித்த "எதிர் பிரசங்கங்கள்" (hostile discourse) கூறுவது என்ன? அமெரிக்காவில் இந்தியா பற்றிய விமர்சனம் என்பது ஏராளமான ஊடக நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற சிந்தனைக் குழுக்கள் உள்ளடக்கிய அமெரிக்க கருத்துத் தொழில்துறையின் பரந்த தினசரி வெளியீட்டின் ஒரு சிறிய பகுதியாகும். 

ஜனநாயகம் பற்றிய விவாதம், குறிப்பாக இந்தியாவில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைகள் அரசியல் தாராளமயத்தைப் பரப்ப விரும்பும் மக்களால் வழிநடத்தப்படுகின்றன என்று கூறலாம். எவ்வாறிருப்பினும், மேற்கத்திய நாடுகளின் நலன்கள் பிரதானமாக முதலாளித்துவவாதிகள் (capitalists) மற்றும் பாதுகாப்பைத் திட்டமிடுபவர்களால் (security planners) வடிவமைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை ஆதரிப்பதாகக் கூறுபவர்களிடமிருந்து அல்ல.


இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தாத "இராஜதந்திர தன்னாட்சி" (strategic autonomy) மீதான இந்திய விவாதங்களைப் போலவே, "ஜனநாயகத்தை ஊக்குவிப்பது" (democracy promotion) மற்றும் "ஜனநாயகங்கள் மற்றும் எதேச்சதிகாரங்களுக்கு" (democracies and autocracies) இடையிலான முரண்பாடு என்று கூறப்படுவது ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இயல்பை உண்மையிலேயே பிரதிபலிக்கவில்லை.


சீனாவில் "கம்யூனிசக் கோட்பாடு" (communist doctrine) அல்லது தெஹ்ரானில் "இஸ்லாமிய சர்வதேசியம்" (Islamic internationalism) பற்றிய விவாதங்களுக்கும் இது உண்மையாகும். ஒவ்வொரு நாடும் அதன் உலகளாவிய பொறுப்புகளைப் பற்றி அதன் தனிப்பட்ட பதில்களைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த பதில்களால் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்துடன் வெளிப்புற யதார்த்தங்களால் பாதிக்கப்படுகின்றன.


மேற்கத்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய குறிக்கோளாக ஜனநாயகம் இருந்திருந்தால், அது பாகிஸ்தான் ராணுவத்துடன் இவ்வளவு காலம் கூட்டு சேர்ந்திருக்காது. அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவது வாஷிங்டனின் முன்னுரிமையாக இருந்திருந்தால், இம்ரான்கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பார் அல்லது 1979-ல் இராணுவ புரட்சியாளர் ஜெனரல் ஜியா-உல் ஹக்கால் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்படுவதை நிறுத்தியிருக்கும். அரசியல் தாராளமயம் அதன் மேலாதிக்க சித்தாந்தமாக இருந்திருந்தால், பெய்ஜிங்கை ஒரு வல்லமைமிக்க உலகளாவிய சக்தியாக மாற்றுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாஷிங்டன் உதவியிருக்காது. 1980களில் ஒரு பழங்குடி சமூகத்திற்கு அரசியல் மற்றும் சமூக நவீனமயமாக்கலைக் கொண்டுவர முயன்ற ஆப்கானிய ஆட்சிகளுக்கு எதிராக உலகளாவிய ஜிஹாத்தை அது திரட்டியிருக்காது. நாற்பதாண்டுகளுக்கு முன்னர் சோவியத் கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வேண்டுமென்றே ஊக்குவித்ததில் இருந்து உலகம் இன்றும் பின்னடைவு அடைகிறது.


இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சாதனையை விமர்சிப்பதற்காக அல்ல, மாறாக என்ன சொல்லப்பட்டது மற்றும் உண்மையில் என்ன செய்யப்பட்டது என்பதற்கு இடையேயும், நோக்கங்கள் மற்றும் செயல்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னிலைப்படுத்துவதாகும். அரசியல் மதிப்புகளை விட புவிசார் அரசியல் காரணிகள் மற்றும் பொருளாதார நலன்கள், உலகத்துடனான அமெரிக்கத் தொடர்புகளை பெருமளவில் வடிவமைத்துள்ளன.


அமெரிக்கத் தேர்தல்களைப் பொறுத்தவரை, இந்தியாவோ அல்லது அதன் ஜனநாயகத்தின் வலுவானது அரசியலில் மையப் பிரச்சினைகளால் அல்ல. அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக நட்பு நாடாக இருப்பதால், டிரம்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரி விதிப்பது போன்ற அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும். ரஷ்யா மற்றும் சீனாவிற்கான டிரம்பின் திட்டங்களை இந்தியா தனது சொந்த அதிகார அரசியலில் கருத்தில் கொள்ள வேண்டும். இது அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை பாதிக்கலாம்.


சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான டிரம்பின் முன்மொழிவு இந்தியாவுக்கு கவலையளிக்கிறது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் உயர்மட்ட குழுக்களில் அதன் குடிமக்களும் உள்ளனர். ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதையும் அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, டிரம்பின் கீழ் எந்தவொரு ஜனநாயக வீழ்ச்சியும் இந்தியா உட்பட உலகைப் பாதிக்கும். எனவே, இந்த விவாதங்களில் இந்தியாவானது கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவில் "சர்வாதிகாரம்" (dictatorship) குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த எச்சரிக்கைகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பேரணிகளில் அரசியலமைப்பை அசைப்பதும் தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி கார்டியனில் இந்தியத் தேர்தல்கள் குறித்த தலையங்கங்களைவிட அதிக விளைவுகளாகும். இந்திய ஜனநாயகத்திற்கான உண்மையான போர் நாட்டிற்குள்ளேயே உள்ளது. மேற்கத்திய தலைநகரங்களுடனான விவாதங்களில் அல்ல.


கட்டுரையாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியராகவும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தில் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.




Original article:

Share:

தெற்காசியாவின் 97% இடப்பெயர்வுகள் மணிப்பூரில் நடந்தவை -PRESS TRUST OF INDIA மற்றும் AGENCE FRANCE-PRESSE

 2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல் காரணமாக 69,000 பேர் இடம்பெயர்ந்ததாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இந்த இடம்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை ஆகும். 


2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக 69,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இடப்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 பேர், மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (Internal Displacement Monitoring Centre (IDMC)) அறிக்கை, 2018 க்குப் பிறகு இந்தியாவில் மோதல்கள் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட அதிக இடப்பெயர்வுகள் என்று கூறியுள்ளது.


மே 3, 2023 அன்று, மணிப்பூரின் மலை மாவட்டங்களில் 'பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பு' (Tribal Solidarity March) நடந்தது. தங்களை ஒரு பட்டியல் பழங்குடியினராக (Scheduled Tribe (ST)) வகைப்படுத்த வேண்டும் என்ற மெய்தேய் சமூகத்தின் (Meitei community) கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு (Meitei and the Kuki communitie) இடையே மோதல்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. இந்த பரிந்துரைகள் மெய்தேய் சமூகத்திற்கு "பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக" (Scheduled Tribe) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதாகும். இந்த தகுதிநிலை சிறுபான்மை குழுக்களை ஒதுக்கி வைக்கப்படுவதிலிருந்தோ அல்லது புறக்கணிக்கப்படுவதிலிருந்தோ பாதுகாப்பதற்காகும்.


          மெய்தேய் சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) தகுதிநிலை வழங்குவதற்கான இந்த அங்கீகாரத்தை, குகி சமூகம் உட்பட பிற உள்ளூர் பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிலத் தகராறுகளால் பதட்டங்கள் தூண்டப்பட்டன. மே 3 அன்று சுராசந்த்பூர் மாவட்டத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. வன்முறை பின்னர் இம்பால் கிழக்கு (Imphal East), இம்பால் மேற்கு (Imphal West), பிஷ்னுபூர் (Bishnupur), தெங்னௌபால் (Tengnoupal) மற்றும் காங்போக்பி (Kangpokpi) போன்ற பிற மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் சுமார் 67,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக அறிக்கை கூறுகிறது. விளக்கப்படம்-1 2009 முதல் 2023 வரை இந்தியாவில் உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் காட்டுகிறது. உள்நாட்டு இடப்பெயர்வு என்பது குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் காரணமாக ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மக்களின் கட்டாய நகர்வைக் குறிக்கிறது. இதில், பொதுவாக இடம்பெயர்ந்த மொத்த நபர்களின் எண்ணிக்கையை அல்ல. கூடுதலாக, ஒரே நபர்கள் பல முறை இடம்பெயர்ந்திருக்கலாம்.


பெரும்பாலான இயக்கங்கள், பாதிக்கும் அதிகமானவை, மணிப்பூருக்குள் நிகழ்ந்தன. அதில், ஐந்தில் ஒரு பங்கு அண்டை மாநிலமான மிசோரமுக்கும், சிறிய எண்ணிக்கையிலான இயக்கங்கள் நாகாலாந்து மற்றும் அசாமுக்கும் சென்றன. வன்முறை அதிகரித்ததால், ஒன்றிய அரசு ஊரடங்கு உத்தரவை (curfews) அமல்படுத்தியது. இதன் விளைவாக, இணையம் முடக்கப்பட்டது. பாதுகாப்புப் படைகளை அனுப்பியது. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும்,  மணிப்பூருக்கான ஒரு சமாதானக் குழு நிறுவப்பட்டது. ஆனால் அதன் அமைப்பு பற்றிய கருத்து வேறுபாடுகளால் முயற்சி தடைபட்டது.


          விளக்கப்படம்-2 தற்போது இந்தியாவில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுகிறது. இது, இடம்பெயர்ந்த தனிநபர்களை மையமாகக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் இதுபோன்ற தனிநபர்களை மையமாகக் கொண்டு 0.61 மில்லியன் நபர்கள் இருந்தனர். 2023ஆம் ஆண்டில், மோதல் மற்றும் வன்முறை காரணமாக உலகம் முழுவதும் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மோதல்களின் காரணமாக 22.6 மில்லியன் மக்கள் வெளியேற வேண்டியிருந்தது. இதனால், 2022 மற்றும் 2023-ல் மிகப்பெரிய அதிகரிப்புகள் நிகழ்ந்தன.



வரைபடம் 3-ஆனது, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களின் நாடு வாரியான எண்ணிக்கையைக் காட்டுகிறது.


சூடான் (Sudan), காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of Congo) மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் (Palestinian territories) நடந்த மோதல்களால் 2023ஆம் ஆண்டில் மோதல் காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். 2023 முழுவதும், சூடானில் வன்முறையால் ஆறு மில்லியன் மக்கள் கட்டாய இடம்பெயர்வு அடைந்துள்ளனர். இந்த இடம்பெயர்வு முந்தைய 14 ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் உக்ரைனின் 16.9 மில்லியனுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் இது இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய நகர்வுகளாகப் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும், 2023ஆம் ஆண்டில், மோதலின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு இடப்பெயர்வு நிகழ்வுகளின் எண்ணிக்கை 20.5 மில்லியனாக இருந்தது.


இந்த இடப்பெயர்வுகள் இயற்கை பேரிடர்களாலும் நிகழலாம். அந்த எண்ணிக்கையை நாம் சேர்த்தால், 2023ஆம் ஆண்டின் இறுதியில், பேரழிவுகள் காரணமாக 7.7 மில்லியன் உட்பட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75.9 மில்லியனாக இருந்தது. இது 2022-ன் இறுதியில் கணக்கிடப்பட்ட 71.1 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது.




Original article:

Share:

தேர்தல் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்த விவகாரம் - அமெரிக்கை வி நாராயணன்

 இந்தப் பிரச்சினை ஜனநாயகம் என்றால் என்ன என்பதில் ஆழமாக செல்கிறது.

 

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு வாக்களிப்பது என்பது வெறும்  கடமை அல்ல. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம். தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கின்றன. இது அதிகமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்க உதவும். 


முதலாளிகள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium-sized Enterprises (SMEs)), தேர்தல் நாளில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் அரசியலமைப்பு கொள்கைகளைக் குறிப்பிட்டு இதை ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை சந்தேகிக்கிறார்கள் மற்றும் தனிநபர் சுதந்திரங்களை மீறுவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development (OOCED)) உள்ள பல முன்னேறிய ஜனநாயக நாடுகள் தங்கள் தேசிய தேர்தல்களை வார இறுதிகளில் நடத்துகின்றன.


அமெரிக்காவில், தேர்தல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு  சில  மாகாணங்கள் இதை ஊதிய விடுமுறையாக ஆக்குகின்றன. எவ்வாறாயினும், 'வாக்காளர் வாக்குப்பதிவை அதிகரித்தல்' (‘Increasing Voter Turnout’) குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்  (Princeton University) நடத்திய ஆய்வில், தேர்தல் தினத்தை அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக மாற்றுவது வாக்குப்பதிவை அதிகரிக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. வெறுமனே வாக்கு பதிவு நாளில் விடுமுறை அளிப்பது வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கான ஒரு பயனுள்ள உத்தி அல்ல என்று ஆய்வு முடிவு  கூறுகிறது. 


சமநிலை பிரச்சினை


முதலாளிகள், தேர்தல் நாளை விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் என்பது முக்கியப்  பிரச்னையாக எழுந்துள்ளது. குடிமைக் கடமைக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் இடையிலான சமநிலையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. வாக்களிப்பது கட்டாயம் இல்லை என்றால் வணிகங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கக் கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? இந்தச் சுமையை முதலாளிகள் மீது சுமத்துவது சரியா?


கட்டாய விடுமுறை அறிவிப்பின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதை ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்று இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்று வாதிடுகின்றனர். எனவே, தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பது, இந்த அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றும் வகையில், அவர்கள் வாக்குச் சாவடிகளை அணுகுவதை உறுதி செய்கிறது. மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)), இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM)) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (National Association of Software and Services Companies (NASSCOM)) போன்ற அமைப்புகள் மக்கள் வாக்களிக்க உதவுவது உட்பட பரந்த சமூக இலக்குகளை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டாய விடுமுறைகளை எதிர்ப்பவர்கள் தனிநபர் சுதந்திரம் மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளுக்காக வாதிடுகின்றனர். ஜனநாயகத்தில், வாக்களிக்கலாமா வேண்டாமா என்ற உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கலாமா என்பது உட்பட தங்கள் செயல்பாட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்துவது அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதப்படலாம். குறிப்பாக குறைந்த வளங்களைக் கொண்ட சிறுவணிகங்களுக்கு இந்த நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.  அமெரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடுவது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், தேர்தல்நாள் ஒரு தேசிய விடுமுறை அல்ல, மேலும் வாக்களிப்பதற்கான அட்டவணையை நிர்வகிப்பதற்கு தனிநபர்கள் பொறுப்பு. சில மாகாணங்கள் வாக்களிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய நேரத்தை வழங்கினாலும், இது கூட்டாட்சி மட்டத்தில் நாடு தழுவிய அளவில் கட்டாயப்படுத்தப்படவில்லை.


இந்தியா என்ன செய்ய வேண்டும்?


வெவ்வேறு வணிகத் தேவைகள் மற்றும் கலாச்சார சூழல்களின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் இதேபோன்ற அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா சமீபத்தில் முன்வைத்த ஒரு முன்மொழிவு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வாக்களிப்பதற்கான சான்றுடன் இணைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். இது வாக்காளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கிறது. குடிமை ஈடுபாடு மற்றும் வணிகக் கவலைகளை நிவர்த்தி செய்து முதலாளிகள் முடிவெடுக்க அனுமதிக்கிறது. பணியாளர்கள் வாக்களித்து தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். இது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூகக் கடமைகளை சமநிலைப்படுத்தும்.


முன்னோக்கில்


இறுதியில், தேர்தல் நாள் விடுமுறையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான். மக்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இருவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, வாக்களிப்பில் பங்கேற்க அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும். சட்டமியற்றுபவர்கள் கடுமையான விதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, முதலாளிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தாமல் அதிகமான மக்களை வாக்களிக்க வைக்க ஆக்கப்பூர்வமான வழிகளை சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எந்த அழுத்தமும் இல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கும். முதலாளிகள் தேர்தலுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டுமா என்பது பற்றிய இந்த விவாதம் சிக்கலானது. இது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கியது. வாக்களிப்பது முக்கியமானது என்றாலும், குடிமைக் கடமை மற்றும் வணிகத் தேவைகள் இரண்டையும் மதிக்கும் சமநிலையைக் கண்டறிய வேண்டும். அதைப் பற்றிப் பேசுவதன் மூலமும், நெகிழ்வான யோசனைகளைக் கொண்டு வருவதன் மூலமும், இந்தியா தனது ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே வேளையில், பலதரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


நாராயணன் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி, கட்டுரையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார்.




Original article:

Share:

விளாடிமிர் புடினின் புதிய ஆட்சிக் காலமும் பழைய பிரச்சனையும் : உக்ரைன் போர் குறித்து . . .

 போரின் விளைவுகள் ரஷ்யாவை பாதிக்கத் தொடங்கும் போது விளாடிமிர் புடின் சவால்களை எதிர்கொள்கிறார். 


ரஷ்யாவின் அதிபராக ஐந்தாவது முறையாக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புடின் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று, தனது நீண்டகால பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை நீக்கியது. ஆண்ட்ரே பெலோசோவ், ஒரு இராணுவமல்லாத பொருளாதார நிபுணர், இப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாளராக உள்ளார். இந்த மாற்றம் உக்ரைனில் நடந்த போர் எப்படி ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கடுமையான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக போர்க்காலங்களில் அதன் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது மற்றும் அதன் ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் தொழில்களை பராமரிப்பதில் ரஷ்யா சிரமங்களை எதிர்கொள்கிறது. ஷோய்கு எவ்வாறு போரை நிர்வகித்தார் என்பது பற்றிய விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறையின் கருத்துப்படி, ரஷ்யா போர் குறுகியதாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, ஆனால் அது தொடர்ந்து நீடித்துள்ளது. ஆனால் 2014-ல் கிரிமியாவை (annexation of Crimea) இணைத்ததையும், 2015ஆம் ஆண்டு தொடங்கி சிரியாவில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டையும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஷோய்கு, கிரெம்ளின் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு தொழில்துறை வளாகம் இரண்டிலும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில், ரஷ்யாவிற்கு பிரச்சனைகள் இருந்தன. வாக்னர் குழுவின் மறைந்த தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் கிளர்ச்சி செய்தார். ஆனால், விளாடிமிர் புடின் ஷோய்குவை ஆதரித்தார். இருப்பினும், விளாடிமிர் புடின் உக்ரைனில் வெற்றியை உறுதியளிக்கும் புதிய பதவிக் காலத்தைத் தொடங்குகையில், அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் மாற்றங்களைச் செய்கிறார். இராணுவ இலக்குகளை விரைவாக அடைவதே முக்கியப் பணியாக இருக்கும் என்பதற்காக, ஒரு தொழில்நுட்ப வல்லுநரை அவர் பணியமர்த்தினார்.


போர்க்களத்தில், ரஷ்யாவானது இப்போது மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த வாரம், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை (Kharkiv) குறிவைத்து வடகிழக்கில் புதிய தாக்குதலை நடத்தியது. உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து புதிய ஆயுதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், அது போரினால் சோர்வடைந்த உக்ரைன் இராணுவத்திற்கு ரஷ்ய தாக்குதலைத் தாங்க போதுமானதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விளாடிமிர் புடினின் உடனடி இலக்கு போரில் வெற்றி பெறுவதுதான். ஆனால், வெற்றிக்கான தெளிவான பாதையும் அவரிடம் இல்லை. பொருளாதாரம் மற்றும் ஆற்றல் இணைப்புகளை வலுப்படுத்த விளாடிமிர் புடின் இலக்காகக் கொண்ட மேற்கு நாடுகளுடன், குறிப்பாக ஐரோப்பாவுடனான ரஷ்யாவின் உறவுகளுக்கு இந்தப் போர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழல் ரஷ்யாவை சீனாவுடன் நெருக்கமாக்கியுள்ளது. உள்நாட்டில், விளாடிமிர் புடின் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அதிக கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளார். இதனால், அவர் மக்களின் கருத்து வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளவில்லை. இதுவரை, அரசாங்கம் வழக்கமான மக்களை பொருளாதாரத் தடைகளின் விளைவுகளை உணராமல் பாதுகாத்து வருகிறது. ஆனால் போர் நீடித்தால் அவர்கள் எவ்வளவு காலம் அதைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


உக்ரைன் அதன் கருங்கடல் கடற்படை மற்றும் எல்லை நகரங்களை குறிவைத்து ரஷ்யாவிற்கு எதிராக போராடியது. ரஷ்யாவை பொறுத்தவரை இது போரை அதிக செலவுள்ளதாக மாற்றியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சில சிரமங்கள் இருந்தபோதிலும் தான் வெற்றி பெறுவதாக நம்புகிறார். இருப்பினும், உக்ரைனில் அவரது படைகள் முன்னேறினாலும், அவர் ரஷ்யாவை ஆளுவார். அது உள்நாட்டில் மிகவும் அடக்குமுறை, பொருளாதார ரீதியாக பலவீனமானது, மேற்கு நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் விரோதமான அண்டை நாடுகளுடன் தொடர்ந்து மோதலில் உள்ளது.




Original article:

Share:

குற்றமும் காலமும்: தேர்தல் நேர சிறைப்படுத்துதல் குறித்து . . .

 தேர்தல் நேரத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயக உணர்வை மோசமாக பாதிக்கிறது.


நீதித்துறை முடிவுகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அது விதிகளின் சமமற்ற பயன்பாடாகக் கருதப்படும். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா கட்சிக்கு தலைமை தாங்குகிறார். அவர் சமீபத்தில் ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு இடைக்கால ஜாமீன் பெறுவதாகவும், அதன்மூலம் மே 20-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் பொதுத் தேர்தலின் அடுத்த கட்டங்களில் தனது சொந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய தகுதியுடையவராவார். ஹேமந்த் சோரன் ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். கடந்த வாரம்தான், இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல்கள் முடியும்வரை பிணை வழங்கியதன் மூலம் பொதுத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இந்த முடிவு அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமைதான் இதற்குக் காரணம் என்றாலும், ஜனநாயக தேர்தல்களுக்காக முக்கியத் தலைவர்கள் தேர்தலின்போது பிரச்சாரம் செய்யலாம் என்ற கொள்கையை அது வகுத்தது.


இருப்பினும், ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) தரப்பைக் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த வழக்கை மே 20 முதல் விசாரிக்க நீதிமன்றம் விரும்பியது, ஆனால் அதற்குப் பதிலாக மே 17 அன்று விசாரணையைத் தொடங்க ஒப்புக்கொண்டனர். ஜாமீன் வழங்குவதற்கு முன்பு அரசுத் தரப்பின் ஆட்சேபனைகளைக் கேட்பது சட்டப்படி அவசியம். கெஜ்ரிவால் வழக்கில், தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக ஒரு அரசியல் தலைவரை விடுவிப்பது இதேபோன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட மற்றவர்களைவிட அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் என்ற வாதத்தை நீதிமன்றம் கேட்டு தள்ளுபடி செய்தது.


ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களாக தீர்ப்பு வழங்காததால், அவர் உச்சநீதிமன்றத்தை அணுகுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், அது பிப்ரவரி 28 அன்று தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், மே 3 அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவை நிறைவேற்றியது. இதில், ஒவ்வொரு வழக்கும் தனித்துவமானது. டெல்லி முதல்வர், கலால் வரிக் கொள்கையை உருவாக்க லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதேசமயம், ஹேமந்த் சோரன் ராஞ்சியில் சொத்து வாங்குவதற்காக சட்டவிரோதமாக நிலம் விற்ற பணத்தை வெள்ளையாக்கியதற்காக குற்றம் சாட்டப்பட்டார் (accused of laundering). ஆதாரங்கள் வேறுபடுகின்றன, கெஜ்ரிவாலுக்கு எதிரான சாட்சிகள் மற்றும் ஹேமந்த் சோரனுக்கு எதிரான ஆவணங்கள், அவர்களின் வழக்குகளின் தகுதியை பாதிக்கக்கூடும். 

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 பிணைக்கான கடுமையான விதிகள் மூலம், நீதிமன்றங்கள் ஒரு வழக்கின் ஒட்டுமொத்தக் காரணத்தையும் ஆரம்பத்தில் தீர்மானிக்கின்றன. நிபந்தனைகளுடன் கூடிய சாதாரண பிணை விடுவிப்புகள்கூட அரசியல் குற்றச்சாட்டுகளாக மாறியிருப்பது வருந்தத்தக்கது. தேர்தலின்போது மக்களைச் சிறையில் அடைப்பது சம்பந்தப்பட்ட கட்சிகளை நியாயமற்ற முறையில் பாதிக்கிறது மற்றும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது.




Original article:

Share:

இந்திய அரசியலில் சமூக ஊடகங்களின் தாக்கம் -நீலஞ்சன் சிர்கார், யாமினி ஐயர்

 செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைப்பட்சமாக  செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள்  ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும். 


உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் இளைஞர், "இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு துருவ் ரதி தான் காரணம்" என்கிறார். ஆக்ராவில், இளம் ஜாதவ் ஆண்கள் ரதி மற்றும் உள்ளூர் இணையத்தில் "செல்வாக்கு"
பெற்றவர்களைப் பின்தொடர்வதாகக் கூறுகிறார்கள். மோகன்லால்கஞ்சில் உள்ள ராவத் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்  இளம் ஆதரவாளர்கூட Youtube-ல் ரவிஷை பின்தொடர்வதாக ஒப்புக்கொள்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாயங்களின் விவரங்களை அனைவரும் நினைவில் கொள்ள முடியும்.

இந்தியாவின் முதல் சமூக ஊடக தேர்தல் (social media election) இதுவாகும். சமூக ஊடகங்கள் அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு  வெவ்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உதவிவருகிறது. சில நேரங்களில் இது அரங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விடுகிறது. 


மாறும் வரையறைகள்


சமீபகாலமாக, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும்  சமூக ஊடகங்களை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருகின்றனர். 


பத்தாண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் "வலதுசாரிச் சூழல்" உருவானது. பாரம்பரிய ஊடகங்கள் என்ன செய்தி வெளியிட்டன என்பது குறித்து மக்களிடையே அறிவார்ந்த முரண்பாடு ஏற்படுத்த இந்த ஊடகங்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப ஆண்டுகளில், பாரம்பரிய ஊடகங்கள் அச்சத்தை தீவிரமாகப் பரப்பவில்லை. இருப்பினும், வலதுசாரி சமூக ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரங்களைப் பரப்பவுதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. வெளிப்படையாக இது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியது முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் வரலாற்றை மாற்றி எழுதுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊடக நெறிமுறையை கடக்கத் தொடங்கினர். 


வெறுப்பூட்டும் பேச்சுப் பேரணிகள் அல்லது கலவரங்களை ஏற்பாடு செய்யாமல், சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் எவ்வாறு தூண்டுகிறது என்பதை குணால் புரோஹித், தனது “எச்-பாப்: இந்துத்துவா பாப் நட்சத்திரங்களின் ரகசிய உலகம்  (H-Pop: The Secretive World of Hindutva Pop Stars)” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக பிரதான ஊடகங்கள் பல வலதுசாரிக் கருத்துக்களுக்கு எதிர்க் கருத்து கூறத்தொடங்கிவிட்டன. அது மக்கள் பெறும் தகவல்களைப் பெருக்கியது. பாஜக ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பாஜகவை ஆதரிக்கின்றன. அதிகமான மக்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அலைபேசி மூலம் வெவ்வேறு கருத்துக்களைப் பார்வையிடுகிறார்கள். இது விமர்சனக் குரல்களைக் கேட்கும் வாய்ப்பை அளித்தது. இந்தக் குரல்கள் எந்த அரசியல் கட்சியுடனும் பிணைக்கப்படவில்லை. எனவே பாரம்பரிய ஊடகங்கள் இழந்த நம்பகத்தன்மையைப் மீண்டும் பெற்றன. நாங்கள் பேசிய பலர், இந்தியாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சமூக ஊடகங்கள் மூலம் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைபட்சமாக  செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள்  ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும். 


YOUTUBE மற்றும் FACEBOOK-ல் பயன்படுத்தப்படும் நிரல் நெறிமுறைகளின் (algorithm) அம்சம் என்னவென்றால், பிரபலமடைந்து வரும் கருத்துக்கள் முழுப் பயனர் தளத்திற்கும் பரப்பப்படும். இந்த நிரல் நெறிமுறைகள் கருத்துகளை வேகமாக பகிரச் செய்கின்றன. உதாரணமாக, “இந்தியா சர்வாதிகாரமாக மாறுகிறதா?”  (“Is India becoming a DICTATORSHIP?”) என்று ரதியின் காணொளி கேட்கிறது. இது யூடியூப்பில் ஏற்கனவே 25 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. காணொளியின் சில பகுதிகள் மற்ற சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படுவதால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

 

பயம் காரணமாக பேசத் தயங்கும் வாக்காளர்களுக்கு சமூக ஊடகங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கான இடமாக மாறியுள்ளன. மோகன்லால்கஞ்சில் (Mohanlalganj), ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த, உள்ளூர் INSTAGRAM-ல் ஆதிக்கம் செலுத்துபவரை நாங்கள் சந்தித்தோம். அவர் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், பாஜகவால் மிகவும் விரக்தியடைந்து இருக்கிறார்.  அவர் என்னை நோக்கி "நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன். ஆனால், வெளியே பேசப் பயப்படுகிறேன்" என்றார்.


இருப்பினும், நீண்டகால விளைவுகளை நாம் இன்னும் நெருக்கமாக ஆராய வேண்டும். முதலாவதாக, முறையான கட்சி அமைப்புக்கு வெளியே இப்போது அரசியல் கதைகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில், கட்சிப் பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாக்காளர்களை அரசியல் சித்தாந்தங்களுடன் இணைத்து, அடிமட்டத்திலிருந்து கொள்ககளை உருவாக்கினர். ஆனால், சமூக ஊடகங்கள் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகின்றன. 


சமூக ஊடகங்கள் தலைவர்களை நேரடியாக கதைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது. இது கட்சிகளுக்குள் அதிக மையப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. நிரல்நெறிமுறைகளும் துருவமுனைப்படுத்தலை அதிகரிக்கின்றன. கட்சி கட்டமைப்புகள் மற்றும் மிக முக்கியமாக, பொதுவெளியில் தாக்கம் இன்னும் நிச்சயமற்றது.


எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களின் முக்கிய பங்கேற்பு, அரசியல் பிரச்சினைகளை நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கும் அதன் தொழில்முறை நோக்கத்திலிருந்து பாரம்பரிய ஊடகங்களின் பெரும்பகுதியை முற்றிலுமாக கைவிடுவதோடு அனைத்தையும் கொண்டுள்ளது. நியாயமான விவாதத்திற்கும் இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது எதைக் காட்டுகிறது? 2024 தேர்தல் எழுப்பும் கேள்வி இதுதான்.


யாமினி அய்யர் ஒரு பொதுக் கொள்கை அறிஞர்; நீலஞ்சன் சிர்க்கார், சீனியர் ஃபெலோ, சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்.




Original article:

Share: