குஜராத்தில் தலைமைத் தணிக்கையாளர் திறந்துவைத்த உள்ளூர் ஆளுகைக்கான சர்வதேச தணிக்கை மையம் என்றால் என்ன? -கோபால் பி கடேஷியா

 இந்தியாவில் சுமார் 2.5 இலட்சம் பஞ்சாயத்துகள் மற்றும் 8,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (urban local bodies (ULBs)) உள்ளன. அவற்றின் தணிக்கையில் நல்ல நடைமுறைகளை மேம்படுத்தி அவற்றின் திறனை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று தலைமைத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு முன்பு கூறியிருந்தார்.


இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) கிரிஷ் சந்திர முர்மு, ஜூலை 18-அன்று ராஜ்கோட்டில் உள்ளாட்சித் தணிக்கைக்கான சர்வதேச மையத்தை (International Centre for Audit of Local Governance (iCAL)) திறந்து வைத்தார். தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் தரவு படி, இந்தியாவில் இது போன்ற முதல் நிறுவனம் இதுவாகும். ராஜ்கோட்டில் உள்ள பொது கணக்காளர் (கணக்கு மற்றும் உரிமை மற்றும் தணிக்கை-1) அலுவலகத்தில் இருந்து இது செயல்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான சர்வதேச தணிக்கை தரநிலைகளை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். 


உள்ளூர் ஆளுகைக்கான சர்வதேச தணிக்கை மையம் (International Centre for Audit of Local Governance (iCAL)) எப்படி வேலை செய்யும்?


தலைமைத் தணிக்கை அலுவலகத்தின் தரவு படி, iCAL என்பது கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றும் தணிக்கையாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கும். நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, சேவைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன மற்றும் தரவுகள் எவ்வாறு தெரிவிக்கப்படுகின்றன என்பதை மேம்படுத்துவதற்கு உள்ளூர் அரசாங்க தணிக்கையாளர்களின் சுதந்திரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. iCAL உள்ளூர் அரசாங்க தணிக்கையாளர்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் அறிவை வளர்ப்பதற்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தும்.

 

தணிக்கையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதிகாரம் அளிப்பதே அவர்களின் குறிக்கோள். iCAL ஒரு அறிவு மையமாகவும் சிந்தனைக் குழுவாகவும் செயல்படும், பயிற்சிப் பட்டறைகள், அறிவுப் பகிர்வு மற்றும் சக பரிமாற்றங்கள் மூலம் அடிமட்ட அளவில் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும். குஜராத்தின் முதன்மை கணக்காளர் ஜெனரல் (தணிக்கை-I) தினேஷ் பாட்டீல், உள்ளாட்சித் தணிக்கைக்கான சர்வதேச மையத்தின் (International Centre for Audit of Local Governance (iCAL)) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  


இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன?


இந்தியாவின் நிர்வாக அமைப்பு மூன்று நிலைகளில் செயல்படுகிறது: ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். கிராமப்புறங்களில், கிராமம், தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் போன்ற பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (Panchayati Raj Institutes) சுயாட்சியைக் கையாளுகின்றன. நகரப் பகுதிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.


முர்முவின் கூற்றுப்படி, உள்ளூர் அரசாங்கங்கள் அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக நிவர்த்தி செய்கிறார்கள். உள்ளூர் அரசாங்கங்களும் அடிமட்ட அளவில் வளர்ச்சித் திட்டங்களுக்கான திட்டமிடலை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், கணக்குகளைப் பராமரிப்பது அவர்களின் கடமையாகும். ஆனால், பல மாநில அரசாங்கங்கள் இந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்ய உள்ளூர் நிதிக் கணக்குகளின் தேர்வாளர் (Examiner of Local Fund Accounts (ELFA)) அல்லது உள்ளூர் நிதிக் கணக்குகளின் இயக்குநரை (Director of Local Fund Accounts (DLFA)) நியமிக்கின்றன. உதாரணமாக, குஜராத்தில், உள்ளூர் நிதிக் கணக்குகளின் தேர்வாளர் (ELFA) நிதித் துறையின் கீழ் சுதந்திரமாக செயல்படுகிறது.


மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி உள்ளாட்சி அமைப்புகளால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ELFA தணிக்கை செய்கிறது. இதேபோல், பல்கலைக்கழகங்கள் போன்ற பிற நிறுவனங்கள் தங்கள் தணிக்கைகளை நடத்துகின்றன. இதற்கிடையில், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் உட்பட அனைத்து நிதிகளையும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம்  தணிக்கை செய்கிறது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலைகளிலும் சரியான கணக்கு பராமரிப்பு மற்றும் தணிக்கைகளை இது மேற்பார்வை செய்கிறது. அதன் தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு முன்முயற்சியின் மூலம், ELFA அல்லது உள்ளூர் நிதிக் கணக்குகளின் இயக்குநருக்கு தலைமை தணிக்கை அலுவலகம் ஆலோசனை மற்றும் உதவி, அவர்களின் தணிக்கை முயற்சிகளை மேம்படுத்துகிறது.


இந்தியாவில் 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் மற்றும் 8,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) இருப்பதாக ஜனவரி மாதம் ராஜ்கோட் வருகையின் போது முர்மு குறிப்பிட்டார். 40 நாடுகள் தங்கள் உச்ச தணிக்கை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளை தணிக்கை செய்வதை, உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகளவில் வரும் நிதி மற்றும் முழுமையான தணிக்கையின் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம்  வலியுறுத்தியது. இந்த அமைப்புகளுக்கு போதுமான நிதி கிடைக்காதது மற்றும் அது எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய கவலைகள் தொடர்கின்றன. 2022-ஆம் ஆண்டு  ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, பல நகராட்சிகள் வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிக்கின்றன மற்றும் உண்மையான செலவினங்களை மதிப்பாய்வு செய்கின்றன. ஆனால் பணப்புழக்க மேலாண்மைக்கு தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் நிதி பகிர்வில் தாமதம் ஏற்படுகிறது. 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடந்த சர்வதேச தணிக்கையாளர் மாநாட்டில், உலகளவில் தணிக்கையாளர்களிடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உச்ச தணிக்கை நிறுவனங்களை (supreme audit institutions (SAIs)) நிறுவன ரீதியாகவும் சர்வதேச தணிக்கை அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் வலியுறுத்தினார். ஒரு கூட்டுத் தளம் உள்ளூர் அரசாங்கங்களில் தணிக்கை நடைமுறைகளை மேம்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார். 


தணிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க ஊழியர்களின் நிதி மேலாண்மை நடைமுறைகள் மற்றும் உள் கட்டுப்பாடுகளைப் புரிந்துகொள்ளும்  திறனை மேம்படுத்துவதன் அவசியத்தை தலைமைத் தணிக்கையாளர் வலியுறுத்தினார். தணிக்கைகளை எளிதாக்குவதற்கும், தணிக்கை கண்டுபிடிப்புகளை நிவர்த்தி செய்வதில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் அதிகாரிகளுடன் திறந்த தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். ராஜ்கோட்டில் உள்ள உள்ளூர் ஆளுகைக்கான சர்வதேச தணிக்கை மையம் இந்த இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தலைமைத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) கிரிஷ் சந்திர முர்மு விளக்கினார்.



Original article:

Share:

சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் : இந்தியா நிலைத்தன்மையைத் தக்கவைத்துள்ளது -Editorial

 பணவீக்கத்தின் போக்கு, குறிப்பாக உணவு ஆகியவற்றின் மீது நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. 


உலகப் பொருளாதாரம் அடுத்து வரும் காலத்தில் சீராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (International Monetary Fund’s World Economic Outlook) ஜூலை புதுப்பிப்பின்படி, வளர்ச்சி 2024-ல் 3.2% ஆகவும், 2025-ல் 3.3% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பு ஏப்ரல் முதல் நிதியின் மதிப்பீட்டைப் பொருத்தது. சர்வதேச நாணய நிதியம், வளர்ந்த பொருளாதாரங்களுக்கு, குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கான அதன் வளர்ச்சி முன்னறிவிப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜப்பானுக்கான அதன் முந்தைய வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கான வளர்ச்சி எதிர்பார்ப்புகளை சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. மறுபுறம், சீனா மற்றும் இந்தியாவிற்கான அதன் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளது.


2024-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று IMF கணித்துள்ளது. இது அவர்களின் முந்தைய மதிப்பீட்டில் இருந்து 0.2 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் தனியார் நுகர்வுக்கான சிறந்த வாய்ப்புகள் காரணமாக மிகவும் நேர்மறையான கண்ணோட்டம் உள்ளது. இந்த பார்வை மற்ற நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது. சமீபத்தில், புதன்கிழமை, ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) இந்தியாவிற்கான அதன் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை 7 சதவீதமாக மீண்டும் உறுதிப்படுத்தியது. பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயத் துறை மீண்டும் வரும் என ஆசிய வங்கி எதிர்பார்க்கிறது. மாறாக, இந்திய ரிசர்வ் வங்கி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. Crisil மற்றும் ICRA ஆகியவை சற்று குறைந்த வளர்ச்சியை, அதாவது 6.8 சதவீதமாகக் கணித்துள்ளன. இந்த கணிப்புகள் பொருளாதார வேகம் வலுவாக இருப்பதாக தெரிவிக்கின்றன. முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​​​இந்தியாவிற்கான அடுத்த ஆண்டுக்கான கண்ணோட்டமும் நேர்மறையானதாகத் தோன்றுகிறது. IMF 6.5 சதவீத வளர்ச்சியை கணித்துள்ளது. அதே நேரத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 7.2 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.  


உலக அளவில், பணவீக்கத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் குறைந்துள்ளதாக உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது பணவீக்கம் அதிகரிப்பதற்கான அதிக கவலையை ஏற்படுத்துகிறது. இது நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்க வழிவகுக்கும். ஜூன் மாதத்தில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (US Federal Reserve) வட்டி விகிதங்களை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தது. இதன் காரணமாக, பணவீக்கம் சீராக அதன் இலக்கை நோக்கி நகர்கிறது என்பதைக் குறிக்கும் நேர்மறையான தரவுகளுக்காக காத்திருக்கிறது. மத்திய வங்கியின் Fed dot-plot இன் படி, மூன்று விகிதக் குறைப்புகள் பற்றிய முந்தைய முன்னறிவிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒரே ஒரு விகிதக் குறைப்பு மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில், ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank) ஜூன் மாதத்தில் வட்டி விகிதங்களைக் குறைத்தாலும், ஜூலை கூட்டத்தில் அவற்றைப் பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான முடிவுகளை எடுப்பதற்கு முன், கூடுதல் பொருளாதார தரவுகளுக்காகக் காத்திருக்கிறது. மறுபுறம், சர்வதேச நாணய நிதியம்  மூலம் அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளபடி, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கிகள் அவற்றின் நாணய மதிப்புகள் பற்றிய கவலைகள் காரணமாக வட்டி விகிதக் குறைப்புகளுடன் கவனமாக நகர்கின்றன. இந்தியாவில், நாணயக் கொள்கைக் குழுவின் (monetary policy committee) இரண்டு உறுப்பினர்கள் விகிதக் குறைப்புகளுக்கு வாதிட்டாலும், எதிர்காலத்தில் கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பணவீக்கப் போக்குகள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால் இந்தத் தயக்கம் ஏற்படுகிறது. 



Original article:

Share:

சுற்றுச்சூழல் விளைவு அறிக்கையின் (environmental impact report) ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்தைச் சேர்ப்பதற்கான நேரம் -ரம்யா கண்ணன்

 2030 முதல் 2050 ஆம் வரையில், காலநிலை மாற்றம் ஆண்டுக்கு 2.5 லட்சம் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக, மாறிவரும் காலநிலையிலிருந்து தெளிவான மாற்றங்களை புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக, நாம் மீண்டும் மீண்டும் வெப்பத்தின் உச்சநிலையை சந்தித்து வருகிறோம். இதில், கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டும் கலந்து மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், கடுமையான மற்றும் அழிவுகரமான வெள்ளத்தை ஏற்படுத்தும் புயல்களை  எதிர்கொண்டு வருகிறோம். இந்த புயல்கள் பரந்த நகர்ப்புறங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கூடுதலாக, சில சமயங்களில் நாம் மிகவும் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்கிறோம். காலநிலை மாற்றம் மனித வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் தெளிவாக பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் காலநிலை மாற்றம் நல்ல ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய கூறுகளைப்  பாதிப்படையச் செய்கிறது என்று கூறுகிறது. சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், சத்தான உணவு வழங்கல், பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை இதில் அடங்கும். காலநிலை மாற்றம் உலகளாவிய ஆரோக்கியத்தில் பல பத்தாண்டுகால முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திறன் கொண்டது.


மேலும், 2030 மற்றும் 2050க்கு இடையில், காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அழுத்தத்தால் மட்டும் ஆண்டுக்கு 2,50,000 கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியத்திற்கான நேரடி செலவுகள் வருடத்திற்கு $2 முதல் $4 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைவான, சுகாதார உள்கட்டமைப்பு உள்ள பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக கருதப்படுவதால், இந்த பிராந்தியங்கள் பெரும்பாலும் வளரும் நாடுகளில் உள்ளன. இதில், தேவையான அடிப்படை கூறுகளை தயார் செய்து சமாளிக்கும் அளவுக்கு திறன் குறைவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.   


உலகளாவிய காலநிலை நெருக்கடி மோசமடைவதால், மனித ஆரோக்கியத்தில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளும் அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த தாக்கங்களிலிருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை, ஆனால் மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இன சிறுபான்மையினர், சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வறுமையில் வாழ்பவர்கள் மிகவும் ஆபத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Sri Ramachandra Institute of Higher Education and Research (SRIHER)) பொது சுகாதார நிபுணர்களால்  சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  அதிக வெப்பத்தில் பணிபுரிவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில், இவர்கள் முன்னர் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டனர்.


காலநிலைத் தடம் (Climate footprint)


இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நன்பர்கள் என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் என்பவரால் ஒரு குறிப்பிடத்தக்க பொது நல வழக்கு (public interest litigation) பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் கூறும் கருத்து எளிமையானது மற்றும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடுகள் (Environmental impact assessments (EIA)) காலநிலை மாற்றத்தின் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான கட்டுமானம் அல்லது மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீடுகள் தேவை என்பதாகும்.


மனுதாரர் இந்த பிரச்சினையில் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டின் (environmental impact assessment (EIA)) காலநிலை மாற்றம் ஏன் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் விளக்கினர். இதற்கான தேவை மிகவும் எளிமையானது. ஒரு குடியிருப்புக்கு அருகில் இரசாயன தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்யப்படும் என்று சுந்தராஜன் விளக்குகிறார். இந்த மதிப்பீடு தொழிற்சாலை சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவிடும். இது நீர், மண் மற்றும் ஒலி மாசுபாடு ஆகியவற்றைக் கவனிக்கும்.  


காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பிடும்போது, கட்டுமானத்தின் முதல் நாள் முதல் தொழிற்சாலையின் ஆயுள் முடியும் வரை ​​அதன் விளைவுகளை ஆரம்பத்தில் இருந்தே மதிப்பீடு செய்ய வேண்டும். கார்பன் தடம் (carbon footprint), பசுமை இல்ல வாயு உமிழ்வு (emissions of greenhouse gases) மற்றும் அருகிலுள்ள சமூகங்களின் ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்பைக் குறைக்க சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இந்த திட்டத்தை ஆவணமாக அரசுக்கு சமர்ப்பிக்கவும். அனுமதி வழங்கலாமா என்பதை முடிவு செய்வதற்கு முன் அரசு அதை மறுபரிசீலனை செய்யும். 


சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பிரிவு அமர்வு இந்த மனு நியாயமானது என்று கூறியது. இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டனர். காலநிலை மாற்றத்தை இனி புறக்கணிக்க முடியாது என்ற உலகளாவிய அங்கீகாரத்தை இது எடுத்துக்காட்டுவதால், இந்த வழக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக மாறும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தயாரிப்பதற்கும் குறைப்பதற்கும் பல நாடுகள் ஏற்கனவே சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த நாடுகளில் பஹாமாஸ், பிரான்ஸ், சிலி, அமெரிக்கா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படும் இந்தியாவும் சட்டங்களை உருவாக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் சுற்றுச்சூழல் ஆதாயங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மேலும் சேதத்தைத் தடுக்க வேண்டும். 



Original article:

Share:

இந்தியாவின் மரம் நடும் திட்டத்தில் உள்ள சிக்கல்கள் -மோகன் சந்திரா பர்கெய்ன்

 பல பிரச்சனைகளைக் கையாள்வதில், போதுமான நிதி, செயலில் உள்ள சமூக பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப பரிசீலனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.


காடுகளின் வளங்களின் மீதான சுரண்டல், கட்டுப்பாடற்ற மற்றும் நிலையான நடைமுறைகளால் காடுகளின் நிலப்பரப்புகளின் சீரழிவுக்கு வழிவகுத்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் காடுகள் அழிந்துவிட்டதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.  


இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபை 2021-2030 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் பத்தாண்டாக (Decade of Ecosystem Restoration) அறிவித்தது. இந்த முயற்சியானது 350 மில்லியன் ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளில் $9 டிரில்லியன் டாலரை உருவாக்குவது மற்றும் வளிமண்டலத்தில் இருந்து கூடுதலாக 13 முதல் 26 ஜிகா டன்கள் வரையிலான பசுமை இல்ல வாயுக்களை பிரித்தெடுப்பதே இதன் இலக்காகும்.


பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் மரம் நடுதல் ஒரு நிரூபிக்கப்பட்ட முறையாகும். காலநிலை தொடர்பான நெருக்கடிகள் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள இது ஒரு பிரபலமான மற்றும் ஈர்க்கக்கூடிய அணுகுமுறையாகும். மரம் வளர்ப்பின் ஒரு முக்கிய அம்சம் உயிரியல் கார்பன் வரிசைப்படுத்தல் (biological carbon sequestration) ஆகும். இந்த செயல்முறை வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை சேமித்து நீக்குகிறது. 


பருவநிலை மாற்றத்திற்கான முக்கிய தீர்வாக மரம் நடுதல் கருதப்படுகிறது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த உலகளாவிய முயற்சியை ஆதரிக்கின்றனர். 


ஜூலை 1950 இல், இந்திய விவசாய அமைச்சர் கே.எம். முன்ஷி, வன மஹோத்ஸவா (Van Mahotsava)  எனப்படும் 'மரங்களின் திருவிழா' திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போதிருந்து, இந்தியா ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் இந்த மரம் நடும் திட்டத்தை கொண்டாடுகிறது. இந்த முயற்சிகள் மக்களை ஊக்குவிப்பதிலும், வனப்பகுதிகளை மேம்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளன. 


 பளிச்சிடும் பிரச்சாரம், கவர்ச்சியான முழக்கங்கள் 


சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கம் உட்பட பல்வேறு முகமைகளின் தலைமையில் மரம் நடும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சாதகமான வளர்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிகள் ஊடக கவனத்தையும் பொது ஈடுபாட்டையும் ஈர்க்க கவர்ச்சியான முழக்கங்கள், மற்றும் தலைப்புச் செய்திகளை ஈர்க்கும் பிரச்சாரங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகள்:


- பல்வேறு இந்திய மாநிலங்களில் ஒரு நாள் மரம் நடும் இயக்கம்.

- உலகப் பொருளாதார மன்றத்தின் "ஒரு டிரில்லியன் திட்டம்" (One Trillion Project).


- "சீனாவின் பெரிய பசுமை சுவர்" (Great Green Wall of China) திட்டம்


-  பாகிஸ்தானின் "10 பில்லியன் மர சுனாமி" (10 Billion Tree Tsunami) திட்டம் அல்லது  "பான் சேலஞ்ச்" (Bonn Challenge), இது 2020 ஆம் ஆண்டளவில் 150 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த மற்றும் அழிக்கப்பட்ட நிலப்பரப்புகளையும் 2030 ஆம் ஆண்டளவில் 350 மில்லியன் ஹெக்டேர்களையும் மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


மேற்படி திட்டங்களினால் வெளிப்படையான நன்மைகள் இருந்தபோதிலும், அவை விமர்சனங்களையும் எதிர்கொள்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட சமூகப் பங்கேற்பு, போதிய நடவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் இன்மை மற்றும் ஒற்றைப் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துதல் ஆகியவை குறைகளில் அடங்கும். இந்த காரணிகள் கார்பன் வரிசைப்படுத்தல் மற்றும் பல்லுயிர் வளர்ச்சிக்கு குறைவான செயல்திறன் கொண்டவையாக உள்ளன. 


மரம் நடும் இயக்கங்களில் உள்ள சிக்கல்


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் சமீபத்திய கவலைகள், மரம் நடும் திட்டங்களில் சூழலியல் மற்றும் உள்ளூர் புறக்கணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. காடழிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, புல்வெளிகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்கள் போன்ற இடங்களில் மரம் நடுவது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஜோசப் வெல்ட்மேன் ஒரு ஆய்வில் கூறியுள்ளார். இது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களை அழிக்கலாம், காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகரிக்கலாம் மற்றும் புவி வெப்பமடைதலை மோசமாக்கலாம் என்றார். 


வில்லியம் பாண்டும் அவரது சகாக்களும் புல்வெளிகளில் மரங்களை நடுவது குறித்து சந்தேகம் எழுப்பினர். இந்த பகுதிகளில் காடுகளை அழிக்கவோ அல்லது சிதைக்கப்படவோ இல்லை என்று அவர்கள் வாதிட்டனர். மாறாக, புல்வெளிகள் உற்பத்தி மற்றும் பல்லுயிர், கால்நடைகள் மற்றும் மக்களை ஆதரிக்கின்றன.


மரக்கன்றுகளை நடுவது மட்டும் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாது. நடவுக்குப் பிந்தைய போதுமான நடவடிக்கைகள் மற்றும் மரங்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பது பெரும்பாலும் இல்லை. குறிப்பாக, அரசு அல்லாத திட்டங்களில், பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, மரங்களை நடுவது எப்போதும் செலவு குறைந்த காலநிலை தீர்வாக இருக்காது. மறுசீரமைப்பு அல்லது மரத் தீவுகளை உருவாக்குதல் போன்ற மாற்று வழிகள் அதிக பலனளிக்கும் மற்றும் செலவு குறைந்ததாக இருக்கும். 


இந்தியாவின் சவால்கள்


2023-ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான கூட்டு அறிவிப்பின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்றிய ஒரே ஜி 20 நாடு இந்தியா என்று கூறினார்.

 

பிப்ரவரி 2024-இல், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, இந்தியா 1.97 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் உறிஞ்சுதலை (carbon sink) அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.  


இந்தியாவில், காடுகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன: 


-  கிட்டத்தட்ட 10 மில்லியன் ஹெக்டேர் காடுகள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளன.  


-  ஏறத்தாழ 27.5 கோடி மக்கள் காடுகளை நம்பி வாழ்கின்றனர்.  


- சுதந்திரம் பெற்றதில் இருந்து, சுமார் 5.7 மில்லியன் ஹெக்டேர் வன நிலம் காடுகள்   அல்லாத நோக்கங்களுக்காக இழக்கப்பட்டுள்ளது.


இந்த சவால்கள் 2030 ஆம் ஆண்டளவில் 26 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த காடுகளை மீட்டெடுப்பது மற்றும் மரம் நடுதல் போன்ற முன்முயற்சிகள் மூலம் வனப் பரப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் இலக்குகளைப் பாதிக்கிறது.


வனவியல் சவால்கள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை எதிர்கொள்ள இந்தியா சமீபத்தில் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்களைச் செய்துள்ளது. இருப்பினும், இந்த மாற்றங்கள் சில உள்ளார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன. வெகுஜன நடவு இயக்கங்கள் மீதான விமர்சனம் இந்த உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தைத் தூண்டியுள்ளது. போதுமான கவனம் செலுத்தப்படாத போதுமான நிதி, செயலில் உள்ள சமூகப் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பக் கருத்தாய்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்.


பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஊக்குவிக்கப்பட்ட சமூக ஈடுபாடு அவசியம். இந்த பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நமது காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்த முடியும். அதிகரிக்கும் முயற்சிகள் மற்றும் பல்வேறு திறன்கள் மூலம் மீள்காடுகளை நாம் உருவாக்க முடியும்.


மோகன் சந்திர பர்கெய்ன் ஒரு முன்னாள் இந்திய வன சேவை அதிகாரி (Indian Forest Service officer) ஆவார்.



Original article:

Share:

அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? -ராகுல் கர்மாகர்

 ஒருவர் இந்தியரா என்பதை இந்த தீர்ப்பாயங்கள் எப்படி முடிவு செய்கின்றன? இதற்கு எல்லைப்புற  காவல் துறை உதவுமா?


ஜூலை 5-ஆம் தேதி அன்று, அஸ்ஸாம் மாநில அரசாங்கம் 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லீம் அல்லாதவர்களின் வழக்குகளை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு (Foreigners Tribunals (FTs)) அனுப்புவதை நிறுத்துமாறு மாநில காவல்துறையின் எல்லைப்புற  பிரிவுக்கு அறிவுறுத்தியது. இந்த முடிவு 2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்தம்)சட்டத்தைப் (Citizenship (Amendment) Act of 2019) பின்பற்றுகிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறப்படும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் போன்ற முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. 


வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunals (FTs)) எப்படி உருவாகின ?


வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் (Foreigners (Tribunals) Order of 1964) ஒரு பகுதியாக, 1964-ஆம் ஆண்டின் வெளிநாட்டினர் (தீர்ப்பாயம்) ஆணையின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு சட்ட அமைப்புகளாகும். வெளிநாட்டினர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இந்த தீர்ப்பாயங்களுக்கு அனுப்ப ஒரு மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை அவை அனுமதிக்கின்றன. தற்போது, ​​தீர்ப்பாயங்கள் அசாமில் மட்டுமே செயல்படுகின்றன. மற்ற மாநிலங்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" ("illegal immigrants") வழக்குகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு தீர்ப்பாயங்களும் ஒரு நீதிபதி, வழக்கறிஞர் அல்லது நீதித்துறை அனுபவமுள்ள குடிமை பணி அதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது. 


2021-ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் அசாமில் 300 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், மாநில உள்துறை  இணையதளத்தின் படி, தற்போது 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் மட்டுமே செயல்ப்பபட்டு வருகின்றன. முதல் 11 தீர்ப்பாயங்கள் 2005-ல், 1983-ஆம் ஆண்டின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் (தீர்ப்பாயங்கள் மூலம் தீர்மானித்தல்) சட்டத்தை  (Illegal Migrants (Determination by Tribunals) Act of 1983) ரத்து செய்வதற்கு முன் நிறுவப்பட்டன.


எல்லைப்புற காவல்துறையின் பணி என்ன?


அஸ்ஸாம் எல்லை காவல் நிறுவனம் (Assam Police Border Organisation) 1962-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஊடுருவல் தடுப்பு (Prevention of Infiltration of Pakistani (PIP)) திட்டத்தின் கீழ் மாநில காவல்துறையின் சிறப்புப் பிரிவின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. இது 1974-ல் ஒரு சுதந்திரப் பிரிவாக மாறியது. இப்போது காவல்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் செயல்ப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு, பாகிஸ்தானின் ஊடுருவல் தடுப்பு திட்டம் வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தடுப்பது ((Prevention of Infiltration of Foreigners (PIF)) என மறுபெயரிடப்பட்டது. 


வெளிநாட்டினரின் ஊடுருவலைத் தடுக்கும் திட்டத்தின் ((Prevention of Infiltration of Foreigners (PIF)) கீழ் இந்த பிரிவுக்கான 4,037 பதவிகளில் 3,153 பதவிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் அசாம் அரசு 884 பதவிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவின் உறுப்பினர்கள் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடு கடத்துகின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படையுடன் இந்தியா-வங்காளதேச எல்லையில் ரோந்து செல்கின்றனர். குறிப்பாக, நதிக்கரை மற்றும் கரி (சாண்ட்பார்) பகுதிகளில் சட்டவிரோத நுழைவுக்கு எதிராக இரண்டு அடுக்கு பாதுகாப்பு   வழங்குகின்றனர். ஆவணங்களின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை தீர்மானிக்க சந்தேகத்திற்குரிய குடியுரிமை வழக்குகளை தீர்ப்பாயங்களுக்கு அனுப்புகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் 'D'  அல்லது சந்தேகத்திற்கிடமான வாக்காளர்களை தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கலாம். மேலும், ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு  தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) வரைவில் இருந்து விலக்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தீர்ப்பாயங்களிடம் முறையிடலாம். 3.3 கோடி விண்ணப்பதாரர்களில் சுமார் 19.06 லட்சம் பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens (NRC))  இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயம்  எவ்வாறு செயல்படுகிறது?


1964-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, ஒரு உரிமையியல் நிதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்களை ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயம் கொண்டுள்ளது. அது மக்களை வரவழைத்து, அவர்களை உறுதிமொழியின் கீழ் சாட்சியமளிக்கச் செய்யலாம் மற்றும் ஆவணங்களைக் கோரலாம். ஒரு அதிகாரி வெளிநாட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு பரிந்துரைக்கும் போது, ​​தீர்ப்பாயம் 10 நாட்களுக்குள் ஆங்கிலத்திலோ அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியிலோ அறிவிப்பை அனுப்ப வேண்டும். நபர் பதிலளிக்க 10 நாட்களும், அவரது வழக்கை ஆதரிக்கும் ஆதாரங்களை வழங்க மற்றொரு 10 நாட்களும் உள்ளன. ஒரு வழக்கை தீர்ப்பாயத்தின் பரிந்துரையைப் பெற்ற 60-நாட்களுக்குள் முடித்து வைக்க வேண்டும். அந்த நபரால் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால், வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் அவர்களை ஒரு தடுப்பு மையத்திற்கு (detention centre) அனுப்பலாம். இது தற்போது அகதிகள் முகாம் (transit camp) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குடியுரிமையை நிரூபிக்க முடியாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படலாம் (deportation).  


சில தீர்ப்பாயகங்களின் ஆணைகள் ஏன் விமர்சிக்கப்படுகிறது ? 


ஜூலை 11 அன்று, உச்ச நீதிமன்றம் 12-ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த  விவசாயி ரஹீம் அலியை வெளிநாட்டவராக அறிவித்த தீர்ப்பாயத்தின் முடிவை இரத்து செய்தது. நீதிமன்றம் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்தது. வெளிநாட்டினர் சட்டமானது, அதிகாரிகளைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமிருந்து குடியுரிமைச் சான்றிதழைக் கோருவதை அனுமதிக்காது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  


செப்டம்பர் 2018-ல், மத்திய அஸ்ஸாமின் மோரிகானில் உள்ள ஒரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார். சில சமயங்களில் மரங்கள் அல்லது மின்கம்பங்கள் போன்ற பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்படுவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான வழக்கு பற்றி தெரியாமல் இருப்பதை வெளிநாட்டு தீர்ப்பாயத்தின்  உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.



Original article:

Share:

இந்தியாவின் வர்த்தகக் கொள்கை : உத்திகள் மற்றும் சவால்கள்

 வர்த்தகக் கொள்கையின் அதிக ஆதரவும் அதிக உறுதியும் ஏற்றுமதியை மேம்படுத்தும்.


இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஜூன் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 2.55% அதிகரித்து $35.2 பில்லியன் டாலரை எட்டியது. இறக்குமதி 5% அதிகரித்து 56.2 பில்லியன் டாலராக இருந்தது. இது மே மாதத்தின் ஏழு மாத அதிகபட்ச நிலையான $62 பில்லியன் டாலரில் இருந்து சற்று குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தக பற்றாக்குறை 9.4% அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த மாதத்தை விட சற்று குறைந்துள்ளது.


மே மாதத்தில் எண்ணெய் பற்றாக்குறை 13 பில்லியன் டாலர்களை எட்டியது. 10 பில்லியன் டாலராக குறைந்தாலும், அது கவலைக்குரியதாகவே உள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி 18.3% சரிந்து 5.5 பில்லியன் டாலராக உள்ளது. இது மே மாத பற்றாக்குறையை விட கிட்டத்தட்ட அதே அளவு குறைவாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக எண்ணெய் விலை கிட்டத்தட்ட மாறாமல் உள்ளது. இது ஏற்றுமதி அளவு குறைவதைக் குறிக்கிறது. ஜூன் மாத எண்ணெய் இறக்குமதி 19.6% அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு தேவை அதிகரிப்பதைக் காட்டுகிறது. 


ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதி 23% உயர்ந்துள்ளது. உலகளாவிய விலைகள் கடந்த ஆண்டை விட சுமார் 9% அதிகரித்துள்ளது. எண்ணெய் பற்றாக்குறை முதல் காலாண்டு வர்த்தக பற்றாக்குறையான $62 பில்லியனில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டை விட 10.9% அதிகம்.


ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதியின் மதிப்பு 38.7% குறைந்துள்ளது. இது 2024-25-ல் இதுவரை இல்லாத அளவுக்கு $3.06 பில்லியனாக குறைந்தது. இருப்பினும் வெள்ளி இறக்குமதி கடுமையாக உயர்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில் அவை 377% ஆக உயர்ந்தன.


இந்தியாவின் தங்கச்சந்தையில் ஏற்படும் இடையூறுகள் பற்றிய கவலைகளை அரசாங்கம் விசாரிக்க வேண்டும். இந்த இடையூறுகளுக்கு GIFT City மூலம் வழங்கப்படும் சலுகை வரி இறக்குமதி காரணமாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது. 


மேலும், இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் தொடர்ந்து சரிவு உள்ளது. இந்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் தொடர்ந்து ஏழாவது மாதமாக குறைந்தது. இந்த விவகாரத்திலும் கவனம் தேவை.


இந்த ஆண்டு இதுவரை எண்ணெய் மற்றும் தங்கம் தவிர்த்து இறக்குமதி கட்டணம் சுமார் 3% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 10% சரிவை சந்தித்தது தற்போது இது முன்னேற்றம் அடந்துள்ளது. ஜூன் மாதத்தில் வளர்ச்சி 7% ஆக அதிகரித்துள்ளது. இது விருப்பமான உள்நாட்டு தேவையில் மீட்சியைக் குறிக்கிறது, இது பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.


இந்தியாவின் வர்த்தகக் கொள்கையானது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பற்றாக்குறையை சரிபார்ப்பதை விட இது மிகவும் முக்கியமானது.  


இந்தியாவின் முதல் 30 ஏற்றுமதி துறைகளில் குறைந்தது 19  துறைகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியடைந்துள்ளன.  ஏப்ரல் மாதத்தில் வெறும் 13 துறைகளில் மட்டுமே முன்னேற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


உலகளாவிய பணவீக்கம் குறைந்து வருகிறது. வட்டி விகிதக் குறைப்புக்கள் தேவையைத் தூண்டும். சர்வதேச நாணய நிதியம் 2024 ஆம் ஆண்டில் தனது வர்த்தக அளவு வளர்ச்சியை (trade volume growth) 3% ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டு 0.3% ஆக இருந்தது.


ஒரு கடினமான தருணத்திற்க்குப் பிறகு ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இத்துறைக்கு போதுமான ஆதாரங்களையும் உறுதியையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இதில் வரி விலக்கு திட்டம் (duty remission scheme) மற்றும் வட்டி சமன்படுத்தும் திட்டம் (interest equalisation scheme) ஆகியவை அடங்கும்.  சிறிய நிறுவனங்களைத் தவிர (இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஆதரவைப் பெறும்) அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கான திட்டத்தை சமீபத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது போன்ற திடீர் கொள்கை மாற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.



Original article:

Share:

கல்வியறிவு விகிதம் அதிகமாக இருந்தாலும், கேரளாவில் உயர்கல்வியின் தரம் ஏன் குறைகிறது? -கே ஏ ஷாஜி

 போதுமான மாணவர்கள் இல்லாததால் தனியார் நிதியுதவி பெறும் பல கல்லூரிகள் விரைவில் மூடப்படும் என்று கேரள உயர்கல்வி கவுன்சிலின் (Kerala Higher Education Council) துணைத் தலைவர் குறிப்பிட்டார்.  


இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், கேரளாவின் பள்ளிக் கல்வி அமைச்சர், வி. சிவன்குட்டி, 99.69% மாணவர்கள் 10-ம் வகுப்பு இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ்  தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.


மாநிலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front (LDF)) அரசாங்கத்தின் ஒரு மிகப்பெரிய சாதனை என்று அமைச்சர் பெருமையுடன் கொண்டாடினார். இது தனிப்பட்ட பெருமை மற்றும் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


புதுப்பிக்கப்பட்ட பொது ஆணையின் அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் பினராயி விஜயனின் தொலைநோக்கு தலைமையையும் அவர் பாராட்டினார்.   


இருப்பினும், புதிய சாதனை படைத்த மகிழ்ச்சி சிறிது காலம் நீடித்தது. ஜூன் மாத இறுதியில் சிவன்குட்டியின் அமைச்சரவை உறுப்பினரான சஜி செரியன் மாநிலத்தின் கல்வித் தரம் குறைந்து வருவதை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களால் சரியாக எழுதவோ படிக்கவோ முடியவில்லை. 


கலாச்சாரம் மற்றும் மீன்பிடி துறைகளை மேற்பார்வையிடும் செரியன், கடந்த காலங்களில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 210 ஐ அடைவதற்கு கடின உழைப்பு தேவை என்று குறிப்பிட்டார்.  இருப்பினும், இப்போது அனைத்து மாணவர்களும் எழுத படிக்கும் திறன் இல்லாமல் கூட, தேர்வில் தேர்ச்சி பெறலாம். மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் கணிசமான சதவீதத்தினர் தங்கள் தாய்மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்று குறிப்பிட்டார்.


அரசாங்கமானது, மதிப்பீடுகளில் மெத்தனமாக இருப்பதாக அவர் கூறினார். ஏனெனில், அரசியல் போட்டியாளர்கள் தேர்வில் தோல்வியுற்ற எவரையும் அரசாங்கத்தின் தோல்வியாகக் கருதுவார்கள்.  


காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி  அரசாங்கத்தை விமர்சிக்க செரியனின் பேச்சைப் பயன்படுத்திய பிறகு, சிவன்குட்டி கேரளாவின் கல்வி முறையைப் பாதுகாத்தார். முன்-தொடக்க, தொடக்க, மேல்-தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை வழங்குவதில் கேரளா சிறந்து விளங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார். சிவன்குட்டி, செரியனின் கருத்து தவறானது என நிராகரித்தார். 


கல்வித் திறமையில் கேரளா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று கூறிய சிவன்குட்டி, பள்ளிக் கல்வி தொடர்பான ஒன்றியத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் மாநிலம் இன்னும் முதலிடத்தில் இருப்பதை நினைவூட்டினார். 


மாநில பொதுக் கல்வி இயக்குநர் (director of public instruction) எஸ்.ஷானவாஸ் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு வெளியானதைக் கேட்டவர்களுக்கு செரியனின் இந்த வெளிப்பாடு ஆச்சரியமாக இல்லை. மார்ச் மாதம் பள்ளி ஆசிரியர்களுடான தனிப்பட்ட சந்திப்பின் போது, ​​மாநிலத்தில் கல்வியின் தரம் குறைந்து வருவது குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளைத் தெரிவித்தார்.


"கேரளாவில் கல்வியின் தரத்தை ஐரோப்பாவுடன் ஒப்பிடும் காலம் போய்விட்டது. இப்போது அது பீகாருடன் ஒப்பிடப்படுகிறது," என்று ஷானவாஸ் தனது உரையில் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுமார் 69,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால், சில மாணவர்கள் தங்கள் பெயர்களைத் தவறு இல்லாமல் எழுதுவது போன்ற அடிப்படைத் திறன்களுக்கு உதவி தேவை என்று அவர் குறிப்பிட்டார். 


ஆசிரியர்களின் வழக்கமான கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கை மாநில அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று சிவன்குட்டி தெளிவுபடுத்தினார். அரசின் கொள்கையானது மாநிலத்தில் கல்வித் தரத்தை பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 


கேரளாவில் உள்ள கல்வித் தரங்கள் UNICEF நிறுவனத்திடம் இருந்து பாராட்டைப் பெற்றுள்ளன. அவை உயர் தேசிய தரவரிசைகளை எட்டியுள்ளன. இந்த தரநிலைகளை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் விளக்கினார். 


செரியனின் கருத்துக்கள் கேரளாவில் ஷானவாஸின் நிலைப்பாட்டை ஆதரித்தன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 60-70% ஆக இருந்து தற்போது 99% ஆக உயர்ந்துள்ளது. 2023ல், மொத்த தேர்ச்சி சதவீதம் 99.70% ஆகும். 


உலகளாவிய கல்வியின் "கேரள மாதிரியானது" (Kerala model), ஒரு காலத்தில் மிகவும் பாராட்டப்பட்டது. பல காரணங்களால் பல ஆண்டுகளாக தரம் குறைந்துள்ளது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், மாநிலத்தில் தொழில்முறை படிப்புகள் கூட தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 


அகில இந்திய  கல்விப் பாதுகாப்புக் குழுவின் (All India Save Education Committee) கேரளா பிரிவின் பொதுச் செயலாளர் எம்.ஷாஜர் கான் என்பவர், ஷாநவாஸ் மற்றும் செரியன் ஆகியோரின் சமீபத்திய வெளிப்பாடுகளைக் குறித்து கருத்துத் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (APJ Abdul Kalam Technological University) இந்த ஆண்டு முடிவுகள் அனைத்தும் மேற்பார்வையிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள், 26 இணைந்த கல்லூரிகளில், இறுதி பிடெக் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 25% குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கல்லூரியில் 28 மாணவர்கள் தேர்வெழுதினர். ஆனால், யாரும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மோசமான கல்வித் தரம், திறமையான மாணவர்கள் பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது, மாநில கல்வித்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை குறைந்ததால், எம்.ஜி. பல்கலையுடன் (MG University) இணைந்த, 14 கல்லுாரிகள், இந்த கல்வியாண்டில் மூடப்பட்டன.


கேரள உயர்கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் ராஜன் குருக்கல் கூறியதாவது: கேரளாவில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் தனியார் நிதியுதவி பெறும் பல கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் நிறுவனங்கள் கூட தங்கள் இடங்களை நிரப்ப முடியாமல் திணறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில், கேரள உயர் நீதிமன்றம், மாநிலத்தின் கல்வித் தரத்தில் சரிவைக் கண்டறிந்தது மற்றும் தேவையான நடவடிக்கைகள் மூலம் தரத்தை பராமரிப்பதன் மூலம் அதிகாரிகள் இதைத் தடுக்க முடியும் என்று பரிந்துரைத்தது.


கல்வியாளரும் எழுத்தாளருமான ஜே.தேவிகா, நமது கல்வி முறை தற்போது குறைந்த தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார். மருத்துவ உதவியைப் பெறுவதற்கு முன், மருத்துவர்கள் அல்லது பல் மருத்துவர்கள் எங்கு படித்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். 


திருமண விளம்பரங்களில் (matrimonial ads) உள்ளவர்கள் தகுதி அடிப்படையிலான சேர்க்கை மூலம் தங்கள் பட்டங்களைப் பெற்றதாகக் குறிப்பிடுவது கவலையளிக்கிறது என்றும் அவர் கூறினார். 


கேரளா உலகளாவிய கல்வியின் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள், அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி,  பள்ளிகளை எளிதாக அணுகுவது மற்றும் அனைத்து பாலினருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் போன்ற காரணிகளே இதற்குக் காரணம். கேரளா பெரும்பாலும் இந்த அம்சங்களில் மற்ற இந்திய மாநிலங்கள் அல்லது வளரும் நாடுகளுடன் மட்டுமல்லாமல், சில வளர்ந்த நாடுகளுடனும் ஒப்பிடப்படுகிறது. 


கேரளாவின் கடந்த கால சாதனைகள் பாராட்டுக்குரியவை என்று தேவிகா குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் இப்போது மாநிலத்தின் கல்வி அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகள் மற்றும் திறமையின்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சிக்கல்கள் கேரளாவின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி உயர் மட்டத்தில் இருந்தாலும், அதன் மெதுவான பொருளாதார வளர்ச்சியை ஓரளவு விளக்கலாம். கேரளாவின் கல்வி அமைப்பில் கணிசமான முதலீடுகள் பலனளிக்கவில்லை என்றால், அது மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று தேவிகா கவலை தெரிவித்தார். 


மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் கல்விக்கான அரசாங்கத்தின் செலவினம் நாட்டிலேயே மிக அதிகமாக இருந்தாலும், கல்வியானது கேரள சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.


கேரளாவில், மாநிலத்தின் மொத்த வருவாய் செலவினத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக கல்வி உள்ளது. மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களைக் கொண்டுள்ளது. மேலும், கல்வித் துறை மாநிலத்தின் மிகப்பெரிய நிறுவனமாக செயல்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 50% க்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இத்தகைய குறிப்பிடத்தக்க முதலீடு விகிதாசார பொருளாதார வளர்ச்சியை விளைவித்ததா என்பது குறித்து இப்போது கவலைகள் உள்ளன. இல்லையெனில், அமைப்பின் உற்பத்தித்திறன் குறைபாட்டிற்கான காரணங்கள் பற்றிய கேள்விகள் உள்ளன.


உயர்கல்வி அமைச்சர் ஆர். பிந்து, அதிக எண்ணிக்கையிலான மலையாளி மாணவர்கள் வெளிநாடு செல்வதை ஆதரித்து, இது உலகளாவிய போக்கு என்று கூறினார். கேரளாவின் மோசமான சமூக-பொருளாதார நிலைமை மற்றும் மாநிலத்தில் உயர்கல்வி தரம் வீழ்ச்சியடைந்து வருவதை ஆதாரமற்றது என்று குற்றம் சாட்டும் கூற்றுக்களை அவர் நிராகரித்தார். 


கல்வி நிபுணர்களின் கூற்றுப்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பரவலான ஆதரவுணர்வு (favoritism) மற்றும் உறவினர்க்களுக்கு தனிச்சலுகை வழங்குதல் (nepotism) ஆகியவை தரம் குறைவதற்கான முக்கிய காரணங்களாகக் காணப்படுகின்றன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI (M)) கட்சி தனது விசுவாசமான ஆதரவாளர்களை குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதாக மீண்டும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.


உயர்கல்வி நிறுவனங்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை விட ஆளும் கட்சிக்கு அரசியல் விசுவாசத்தையே முதன்மைப்படுத்துகின்றன என்றார். அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்க பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதை அடைகிறார்கள். இதன் விளைவாக, கட்சியால் விரும்பப்படும் ஆசிரியர்களும் மாணவர்களும் தகுதியைப் பொருட்படுத்தாமல் நியாயமற்ற நன்மைகளைப் பெறுகிறார்கள்.


CPI (M) மற்றும் அதன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (Students Federation of India (SFI)), இணைந்த அமைப்புகளுடன் சேர்ந்து, கல்வி வளாகங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே குறிப்பிட்ட பிரிவினருக்கு  தனிச்சலுகை வழங்குதலை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்கள் சிறப்பு ஆதரவு மற்றும் தனிச்சலுகைகளின் மூலம் அமைப்பில் நுழைவதைத் தடுப்பதன் மூலம் மாநிலத்தின் கல்வித் துறையை மேம்படுத்த முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 



Original article:

Share: