ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா இணையவழி உள்ளடக்கத்தை எவ்வாறு தணிக்கை செய்யலாம்? -ரோஹித் குமார்

 வரைவு ஒளிபரப்பு மசோதா,2024 (draft Broadcasting Bill, 2024) -க்கு  தீவிர மறுபரிசீலனை தேவைப்படுகிறது. குறைந்தபட்சம், இது சட்டமாக மாற்றப்படுவதற்கு முன்பு பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் முழுமையான விவாதம் தேவைப்படுகிறது. இந்த சட்டம் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களைப் பற்றியது மட்டுமல்ல, இது இணையத்தின் எதிர்காலம் மற்றும் அதில் உள்ள டிஜிட்டல் குடிமக்களைப் பற்றியது.


ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2024 (Broadcasting Services (Regulation) Bill, 2024) இன் வரைவு பதிப்பு சமீபத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தொழில்துறையைச் சேர்ந்த ஒரு சில பங்குதாரர்களிடையே விநியோகிக்கப்பட்டது. இந்த மசோதா தற்போது பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு பயன்படுத்தப்படும் விதிமுறைகளை இணையத்திற்கும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள வழிகாட்டுதல்களை ஒருங்கிணைக்கவும், ஒளிபரப்பாளர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது அனைத்து முக்கிய செல்வாக்கு செலுத்துபவர்கள் (major influencers), உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் (content creator) மற்றும் இணையவழி அரசியல் விமர்சனையாளர்களை (political commentators online) உள்ளடக்கியது மற்றும் இது  பேச்சை ஒழுங்குபடுத்தவும் (regulate speech) முயற்சிக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அது இந்தியாவில் படைப்பாற்றல் சுதந்திரத்தை பெரிதும் பாதிக்கும் மற்றும் இணையவழி கருத்துச் சுதந்திரத்தைக் (online freedom of expression) கட்டுப்படுத்தும்.


தற்போது, டிஜிட்டல் ஊடகங்கள் (digital media), படைப்பாளர்களுக்கும் விமர்சனையாளர்களுக்கும் அரசாங்கக் கொள்கைகளை ஆராய்ந்து பொறுப்பு வகிப்பதற்கான ஒரு முக்கியமான மாற்று இடமாக செயல்பட முடியும் என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டியுள்ளன. இது முக்கிய ஊடகங்களில் தவறான கருத்து வேறுபாடான குரல்களால் இது இயக்க அனுமதிக்கும் மற்றும் முக்கியமான பிரச்சினைகளைச் சுற்றி எதிர்மறையான கதையாடல்களை ஒழுங்கமைக்க உதவும். இவை அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான ஜனநாயகத்திற்கு இந்த விஷயங்கள் முக்கியமானவை. ஒலிபரப்பு சேவைகள் மசோதா (Broadcasting Services Bill) இந்த செயல்முறையை சீர்குலைக்கலாம். 


இந்த வரைவு மசோதா, டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்களை உள்ளடக்கிய "ஒளிபரப்பாளர்" (broadcaster) என்ற சொல்லை மறுவடிவமைக்கிறது. அவர்கள், "முறையாக" (systematically) செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை சமூக ஊடக தளங்களில் உரை (text), காணொலி (video) அல்லது ஆடியோ (audio) மூலம் ஒளிபரப்பு செய்பவர்கள் என வரையறுக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், YouTube, Twitter, வலைப்பதிவு இணையதளங்கள் (blogging portals) அல்லது பாட்காஸ்ட்களில் (podcasts) நடப்பு விவகாரங்கள் மற்றும் சமூக-அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் விமர்சனையாளர்கள் அனைவரும் இந்த மசோதாவின் கீழ் வருவார்கள்.


குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் அல்லது பார்வையாளர்களைக் கொண்ட டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்கள், அரசாங்கத்திற்கு அறிவிக்கவும், ஒரு திட்டக் குறியீட்டிற்கு இணங்கவும், குறை தீர்க்கும் செயல்திட்டத்தை அமைக்கவும் மற்றும் மூன்று அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பைக் கடைபிடிக்கவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது. வரலாற்று நிகழ்ச்சிகள் போன்ற தற்போதைய விவகாரங்கள் இல்லாத உள்ளடக்கத்திற்கு, ஒளிபரப்பாளர்கள் தாங்கள் அமைக்கும் உள்ளடக்க மதிப்பீட்டுக் குழுவிடமிருந்து முன் சான்றிதழைப் பெற வேண்டும். நிகழ்ச்சி குறியீட்டின் மீறல்கள் (violations of the Programme Code) குறித்து பயனர்கள் புகார் அளிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. அபராதம் விதிக்கவும் (penalties), ஒளிபரப்பாளர்களை ஒளிபரப்பு செய்ய உத்தரவிடவும் (order broadcasters to go off-air) அல்லது ஒளிபரப்புகளை தடை செய்யவும் (even ban transmissions) மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இறையாண்மை (sovereignty), பாதுகாப்பு (security), பொது ஒழுங்கு (public order), கண்ணியம் (decency), ஒழுக்கம் (morality) அல்லது வெளிநாட்டு உறவுகளின் (foreign relations) நலன்களுக்காக இதைச் செய்யலாம்.


மேற்கண்ட தேவைகளில் சில தீங்கற்றதாகவும், தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பாளர்களை சமப்படுத்தும் முயற்சியாகவும் தோன்றினாலும், இந்த பார்வை முக்கியமான சிக்கல்களைக் கவனிக்காமல் மற்றும் தொலைக்காட்சிக்கும் இணையத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளைப் புறக்கணிக்கிறது. தொலைக்காட்சி ஒரே நேரத்தில் பலருக்கு ஒளிபரப்பப்படும் நேரடி ஒளிபரப்பைப்  பயன்படுத்துவதைப் போல் இல்லாமல், இணைய உள்ளடக்கத்தின் (internet content) தேவை அடிப்படையிலானது மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, அவர்கள் ஏன் அதே வழியில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. சமூக மற்றும் அரசியல் விமர்சகர்களை ஒழுங்குபடுத்த அனுமதிப்பது மற்றும் அரசாங்கத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குவது கடுமையான தணிக்கைக்கு வழிவகுக்கும். தற்போது, ​​தகவல் தொழில்நுட்ப விதிகள் (Information Technology (IT) Rules), 2021-ன் பகுதி III க்கு அரசியலமைப்புச் சவால்கள், ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் மேற்பார்வையை வழங்க முயற்சித்ததால், நீதிமன்றங்களால் இந்த விதிகளை நிறுத்தி வைக்க வழிவகுத்தது.


மூன்றாவதாக, தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் (TV broadcasters) குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் கொண்டுள்ளனர். இருப்பினும், பல இணைய விமர்சனையாளர்கள் சிறிய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் (smaller-scale content creators) மற்றும் சுதந்திரமான பத்திரிகையாளர்கள் (independent journalists), தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களைப் போலவே அவர்களுக்கும் அதே விதிமுறைகளைப் பயன்படுத்துவது நியாயமற்ற சுமைகளை உருவாக்கலாம். இது செலவுகளை கணிசமாக அதிகரிக்கலாம் மற்றும் அவை உள்ளடக்கத்தை சந்தைக்கு கொண்டு வரும் வேகத்தை குறைக்கலாம்.


மசோதாவின் 2023 பதிப்பு, இந்திய குடிமக்கள் அல்லது இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒளிபரப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மசோதாவின் தற்போதைய வரைவு இதை முற்றிலும் மாற்றுகிறது. இதில், ​​உலகளாவிய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் (global content creators), செய்தி வெளியீட்டாளர்கள் (news publishers) மற்றும் விமர்சனையாளர்களை (commentators) உள்ளடக்கியிருக்கலாம். உதாரணமாக, ஜான் ஆலிவர், ட்ரெவர் நோவா மற்றும் ஃபரீத் ஜகாரியா போன்ற வெளிநாட்டு செல்வாக்கு செலுத்துபவர்கள் ஆகியோர் அடங்குவர். பத்திரிகையாளர்கள் அல்லது இந்தியாவில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட விமர்சனையாளர்கள் தங்கள் இருப்பை இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதுடன், மூன்று அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பை பின்பற்ற வேண்டும். இணையத்தின் உலகளாவிய தன்மையைப் பொறுத்தவரை, இந்த ஏற்பாடு எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


சமூக ஊடக இடைத்தரகர்களுக்கான (social media intermediaries) புதிய கடமைகளை இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது. அவர்கள், இப்போது தங்கள் தளங்களில் ஒளிபரப்பாளர்கள் பற்றிய தகவலுக்கான அரசாங்க கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000 (Information Technology (IT) Act-2000) மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules) ஏற்கனவே இடைத்தரகர்களின் குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை அமைக்க வேண்டும். அவர்கள் அரசாங்க உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் குறிப்பிடப்பட்ட உள்ளடக்கத்திற்கான அறிவிப்பு மற்றும் அவற்றை அகற்றுதல் முறையை நிர்வகிக்க வேண்டும். இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களைச் சேர்ப்பது மற்றும் அவர்களின் பாதுகாப்பான துறைமுகப் பாதுகாப்புகளை அச்சுறுத்துவது குழப்பத்தை உருவாக்கும். இது பேச்சு சுதந்திரத்தின் மீது சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.


இணையத்தின் உலகளாவிய, பரவலாக்கப்பட்ட தன்மை காரணமாக இணையத்தில் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவது உள்ளார்ந்த சவால்களை முன்வைக்கிறது. பாரம்பரிய ஊடகங்களைப் போலல்லாமல், இணையம் அதிக எண்ணிக்கையிலான படைப்பாளிகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களை உருவாக்குகிறது. மேலும், இந்த உள்ளடக்கத்தின் பரவல் தேசிய எல்லைகளை மீறுகிறது. இதற்கான அதிகார வரம்பை அமலாக்குவதை சிக்கலானதாகவும் பெரும்பாலும் நடைமுறைக்கு மாறானதாகவும் ஆக்குகிறது. கடுமையான விதிமுறைகளை விதிக்கும் முயற்சிகள், தற்போதைய மசோதாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (Ministry of Information and Broadcasting(MIB)) குறிப்பிடுவதைப் போல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சிகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். போலிச் செய்திகள் (fake news) அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் (harmful content) குறித்து அரசாங்கம் கவலைப்பட்டால், அது வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000 (IT Act-2000) ஏற்கனவே அத்தகைய உள்ளடக்கத்தைக் உள்ளீடுவதற்கும், இதை அகற்றுவதற்கும் ஒரு அமைப்பை வழங்குகிறது.


வரைவு ஒளிபரப்பு மசோதா-2024 க்கு (draft Broadcasting Bill-2024) தீவிர மறுபரிசீலனை தேவை. குறைந்தபட்சம், இது சட்டமாக மாற்றப்படுவதற்கு முன்பு பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் முழுமையான விவாதம் தேவைப்படுகிறது. இந்த சட்டம் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களைப் பற்றியது மட்டுமல்ல, இது இணையத்தின் எதிர்காலம் மற்றும் அதில் உள்ள டிஜிட்டல் குடிமக்களைப் பற்றியது.



Original article:

Share:

உத்தரகாண்ட் முதல் வயநாடு வரை : பசுமை மாற்றத்துடன் (green transition) அரசியலை சமநிலைப்படுத்துதல் -விக்ரம் எஸ் மேத்தா

 தலைவர்கள் தேசிய பாதுகாப்பு  மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகளுடன் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டும்.


நிலைத்தன்மைக்கான மாற்றம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக கையாள்கிறது. இந்த மாற்றத்திற்கும் நமது வர்த்தகக் கொள்கைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. கூடுதலாக, நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்கும் நிலையான வளர்ச்சிக்கான நெறிமுறை இலக்குகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. 


பசுமை ஆற்றல் மாற்றம் (green energy transition) முக்கியமாக பசுமை மின்சாரத்திற்கு மாறுவதை பற்றி குறிப்பிடுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான ஆற்றலுக்கு நகரும் வேகமும் அளவும் போக்குவரத்து, தொழில், கட்டிடங்கள் மற்றும் வீடுகளை மின்மயமாக்குவதைப் பொறுத்தது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் கையாளப்படுவதால், பசுமை எரிசக்தி மாற்றத்தை திறம்பட செயல்படுத்துவதில் இருவருக்கும் பொறுப்பு உள்ளது.


ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  (Ministry of New and Renewable Energy) அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் 500-ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை உருவாக்குவதே இந்த அமைச்சகத்தின் இலக்காக உள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் 50-ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை ஏலம் விடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் 2023-ல் இந்த இலக்கை கிட்டத்தட்ட 25% தாண்டியது. 


மேலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் மின் அமைச்சகம், அதன் ஒழுங்குமுறை நிறுவனங்களான-ஒன்றிய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)), ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity Regulatory Commission (CERC)), ஒன்றிய பரிமாற்ற பயன்பாடு (Central Transmission Utility (CTU)), மற்றும் மின்சக்தி அமைப்பு செயல்பாடு உற்பத்தி  நிறுவனம் (Power System Operation Corporation Ltd (POSCO)) ஆகியவை ஆகிய பல ஒழுங்குமுறை நிறுவனங்களுடனும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இணைந்து செயல்ப்பட்டு வருகிறது.


அதிக வேலை தேவைப்படுகிறது. பரிமாற்ற இணைப்பு (Transmission connectivity) போதுமானதாக இல்லை. அளவை அதிகரிக்க, கட்ட அளவிலான ஆற்றல் சேமிப்பு (grid-scale energy storage) தேவை. செலவுகள் மற்றும் தொழில்நுட்பம் மேம்பட்டாலும், இது நீண்ட கால பிரச்சினையாகவே உள்ளது. பசுமை நிதி வரம்புக்குட்பட்டது மற்றும் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டும் செயல்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் இருந்தாலும், "பொறுமையான" பசுமை மூலதனத்தின் (“patient” green capital) பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் 6-7 ஆண்டுகளுக்குள் லாபத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், 25 ஆண்டு கால நிர்ணயத்துடன் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். 


மாநில அரசுகளைக் கருத்தில் கொள்ளும்போது ஆற்றல் மாற்றம் மாறுபாடுகளுடன் உள்ளது. தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் விரைவாக முன்னேறியுள்ளன. அவர்கள் ஆதரவு கொள்கைகள், சாதகமான புள்ளிவிவரங்கள் மற்றும் செயலில் உள்ள உண்மையான உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturer (OEM)) ஆகியவற்றிலிருந்து பயனடைகிறார்கள். ஹரியானா ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஆனால், குறைந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை  திறம்பட பயன்படுத்தாததே இதற்குக் காரணம். ராஜஸ்தான் நிதி நெருக்கடியில் உள்ளது மற்றும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்ல தேவையான ஊக்குவிப்புகளை வழங்குவதில் சிரமம் உள்ளது. மாநிலங்கள் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு ஒரே மாதிரியான முறையை பின்பற்றுவதில்லை. வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வேகத்தில் முன்னேற்றமடைகின்றன.

 

இறுதியில், இந்த மாற்றம் அனைவரையும் பாதிக்கும் என்பதால், அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒன்றியஅரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் உள்ளனர். இதை அடைவதற்கு ஏற்கனவே உள்ள கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும்.


வர்த்தகக் கொள்கை தேசிய நலன்களை ஆதரிக்க வேண்டும். இருப்பினும், தேசிய நலனுக்கான பல்வேறு அம்சங்களை எவ்வளவு முக்கியத்துவம்  அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது சவாலான பணியாகும். ஆற்றல் மாற்றத்தில், இது ஒரு கொள்கை சிக்கலை உருவாக்குகிறது. குறிப்பாக சுத்தமான எரிசக்தி சந்தையில் சீனாவின் முக்கிய பங்கு காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது.


சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency (IEA)) கூற்றுப்படி, 2023-ல் சேர்க்கப்பட்ட புதிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 63% சீனாவில் உள்ளது. சீனா உலகளவில் 473 ஜிகாவாட்டில்  298 ஜிகாவாட்டை  சேர்த்தது. பாலிசிலிக்கா, செதில்கள், செல்கள் மற்றும் தொகுதிகள் உட்பட சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் விநியோகச் சங்கிலியில் இது வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. சீனாவும் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த சோலார் பேனல்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது. எடுத்துக்காட்டாக, சீன சோலார் பேனல்கள் அமெரிக்காவை விட 85% மற்றும் தென்கிழக்கு ஆசியாவை விட 55% மலிவானவை என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவிக்கிறது.


இந்திய உற்பத்தியாளர்கள் குறைவான சீன தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடற்ற பயன்பாட்டை கொண்டிருந்தால், சுத்தமான எரிசக்தி மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கு இடையேயான செலவு இடைவெளி குறையும். இது சுத்தமான ஆற்றலுக்கான மாற்றத்தை துரிதப்படுத்தும். இருப்பினும், புவிசார் அரசியல் காரணங்களால் இந்த யோசனை நடைமுறையில் இல்லை. இந்தியா சீனாவை அதிகம் நம்பியிருக்க முடியாது. ஏனெனில் அது தேசிய பாதுகாப்பு அபாயங்களை உருவாக்கலாம். இதே போன்ற பிரச்சனை, குறைவான வெளிப்படையானது என்றாலும், பொருளாதார வளர்ச்சியுடன் நிலையான தன்மையை சமநிலைப்படுத்துகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கார்பன் மீது விதிக்க திட்டமிட்டுள்ள கார்பன் வரிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது சிக்கல் எழுகிறது.


தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் நிலையான தன்மையை சமநிலைப்படுத்துவதே நமது தலைவர்களுக்கு மிக பெரிய சவாலாகவுள்ளது. அவர்கள் வர்த்தகம் மற்றும் காலநிலை கொள்கைகளை சீரமைக்க வேண்டும்.


உலகம் ஒரு நெறிமுறை சிக்கலை எதிர்கொள்கிறது. புவி வெப்பமடைதல் ஒவ்வொரு நாளும் வெப்பம்மடைகிறது. உதாரணமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ. சமீபத்தில், லடாக்கின் தலைநகரான லேயில் 11,000 அடியில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை எட்டியதால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. தற்போது, ​​கனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை நாடு எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றத்தின் மனித மற்றும் பொருளாதார செலவுகள் அதிகரித்துள்ளன. எவ்வாறாயினும், நமது நிர்வாக கட்டமைப்புகள் இன்னும் காலாவதியான, சுய சேவை தேசியவாத அணுகுமுறைகளில் சிக்கித் தவிக்கின்றன.


"தேசிய நலன்கள் வெற்றிக்காக எப்போதாவது சமரசம் செய்யப்படுகின்றன." இறையாண்மையுள்ள அரசுகளின் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் (Henry Kissinger) ஒருமுறை எழுதினார்.


இருப்பினும், புவி வெப்பமடைதலை குறுகிய பார்வையில் பார்க்கக்கூடாது. மாறாக, மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் கூட்டுறவு நிர்வாகத்தின் (cooperative governance) பரந்த சூழலில் நாம் அதை கவனமாக  கருத்தில் கொள்ள வேண்டும். 


எழுத்தாளர், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின்  (Centre for Social and Economic Progress (CSEP)) தலைவராக உள்ளார். 



Original article:

Share:

ஹிரோஷிமா தினம் : முக்கியத்துவம் மற்றும் வரலாறு

 ஜப்பானிய நகரத்தின் மீது குண்டு வீசப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினம் (Hiroshima Day) அனுசரிக்கப்படுகிறது. உலக அமைதி மற்றும் ஆயுதக் குறைப்புக்கான முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


'லிட்டில் பாய்' (Little Boy) என்று பெயரிடப்பட்ட முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமாவில் வீசப்பட்டது. இந்த குண்டுவீச்சு நகரத்தை அழித்து 70,000-80,000 மக்களைக் கொன்றது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா முதல் முறையாக அணுகுண்டைப் பயன்படுத்தியது. இந்த அணுகுண்டு பெரும் இழப்பு மற்றும் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. இந்த குண்டுவீச்சின் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன.


இந்த சோகமான நிகழ்வை  நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் 79 வது ஆண்டு நிறைவில், உலக அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, கதிரியக்க தனிமங்களின் பிளவு பண்புகள் முதல் முறையாக பேரழிவு ஆயுதத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. எனோலா கே (Enola Gay) என்ற பி-29 குண்டுவீச்சு விமானத்தால் ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9, 1945 அன்று, அமெரிக்கா "ஃபேட் மேன்" (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது வீசியது.


1939-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹிட்லரின் போலாந்து படையெடுப்புடன் தொடங்கியதை இந்த  கொடூரமான முடிவை இந்த குண்டுவீச்சு குறித்தது. இரண்டாம் உலகப் போர் பல சித்தாந்தங்களின் மோதலால் வகைப்படுத்தப்பட்டது. ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லரின் (Adolf Hitler) ஆட்சி, இத்தாலியில் பெனிட்டோ முசோலினியின் (Benito Mussolini)  ஆட்சி, ஜப்பானில் ஜெனரல் ஹிடெகி டோஜோ (Hideki Tojo), போர்ச்சுகலில் அன்டோனியோ சலாசர் (Antonio Salazar), அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோனின் (Juan Peron) மற்றும் ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் (Francisco Franco) ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சிகள் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளால் எதிர்க்கப்பட்டன.


சில நாடுகள் சர்வாதிகார ஆட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய, அதே வேளையில் மற்ற நேச நாடுகள் ஜனநாயக ஆட்சி மற்றும் தன்னாட்சிக்கு உறுதிபூண்டன. மே 1945-ஆம் ஆண்டு ஜெர்மனி சரணடைந்த போதிலும், செப்டம்பர் 1943-ஆம் ஆண்டு இத்தாலி சரணடைந்த போதிலும், ஜப்பான் மீது அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அமெரிக்கா உணர்ந்தது.


இத்தாலி மற்றும் ஜெர்மனி சரணடைந்த பின்னர் போர் பசிபிக் பெருங்கடலுக்கு மாறியது, அமெரிக்கா ஜப்பானை எதிர்த்துப் போராடியது. டிசம்பர் 7, 1941-ஆம் ஆண்டு பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல், போரை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தது. 353 ஜப்பானிய இம்பீரியல் விமானப்படை விமானங்களால் இந்த தளம் தாக்கப்பட்டதில் 2,404 பேர் கொல்லப்பட்டனர்.


1945-ஆம் ஆண்டு முதல் பாதியில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. பிப்ரவரி 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா இவோ ஜிமா மீது படையெடுத்து கைப்பற்றியது. இதில் 30,000 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா, ஒகினாவா மீது படையெடுத்தது, இதன் விளைவாக சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர். இந்த இழப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்களால் ஜப்பானின் விமானப்படை மற்றும் கடற்படை கடுமையாக குறைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) நடந்து கொண்டிருந்தது.


ஜூலை 16, 1945-ஆம் ஆண்டு, நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் 'கேஜெட்' என்று புனைப்பெயர் கொண்ட ஏவுகணை புளூட்டோனியம் சாதனத்தின் வெற்றிகரமான வெடிப்புக்குப் பிறகு, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) பகவத்கீதையை மேற்கோள் காட்டி, "இப்போது நான் மரணமாகிவிட்டேன்" (Now I have become death) என்று கூறினார். ஓப்பன்ஹைமரின் வார்த்தைகள் ஜெனரல் எல்.ஆர்.க்ரோவ்ஸால் என்பவரால் பதிவு செய்யப்பட்டன.


இந்த திட்டத்தின் வெற்றி அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியை அளித்தது. இந்த புதிய ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இராஜதந்திர விவாதங்கள் தொடங்கின. ஜூலை 26, 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை போட்ஸ்டாம் (Potsdam) மாநாட்டில் நிபந்தனையற்ற சரணடைதலுக்காக ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தன.


அணுகுண்டுகளைப் பயன்படுத்த முடிவு செய்வதற்கு முன்னர் பிற விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. டோக்கியோவின் கடற்கரையில் ஒரு ஆர்ப்பாட்டம் அல்லது அக்டோபர் 1945-ஆம் ஆண்டு, ஒலிம்பியா என்று பெயரிடப்பட்ட ஜப்பான் மீதான முழு அளவிலான படையெடுப்பு ஆகியவை இதில் அடங்கும். அதிபர் ஹாரி ட்ரூமனின் தனிப்பட்ட விருப்பங்களும் இந்த முடிவில் செல்வாக்கு செலுத்தின. ட்ரூமன் முதலாம் உலகப் போரில் பணியாற்றினார் மற்றும் இரண்டாம் உலகப் போரில் குடும்ப உறுப்பினர்களை இழந்தார். நீடித்த அமைதிக்காக சரணடையும் நிபந்தனையை  கோரும் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் மரபையும் அவர் முன்னெடுத்துச் சென்றார். 


பின்பு, ட்ரூமன் நிர்வாகம் ஆகஸ்ட் 3, 1945-ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்தது. இது போட்ஸ்டாம் அறிவிப்பை ஜப்பான் நிராகரித்ததை தொடர்ந்து நடந்தது. அமெரிக்க பத்திரிகையாளரான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) தனது 'நவீன மனிதன் காலாவதியானவன்' (Modern Man is obsolete) என்ற கட்டுரையில் அணு ஆயுதப் போரின் தொடக்கங்களைப் பற்றி விவாதித்தார்.  இந்த கட்டுரை ஆயுதக் குறைப்பு மற்றும் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கான எதிர்கால இராஜதந்திர முயற்சிகளில் செல்வாக்கு செலுத்தியது.


இன்று, உலகளவில் சுமார் 13,400 அணு ஆயுதங்கள் உள்ளன, 2,000 க்கும் மேற்பட்ட அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் ஆயுதக் குறைப்பு முயற்சிகள் 1946-ஆம் ஆண்டு அணுசக்தி மற்றும் அதன் அமைதியான பயன்பாடு குறித்த ஐ.நா ஆணையத்துடன் தொடங்கியது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation of Nuclear Weapons (NPT)), விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) மற்றும் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (Treaty on Prohibition of Nuclear Weapons (TPNW)) உள்ளிட்ட பல அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.


ஜெனீவாவில் நடைபெறும் ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கிறது. உலகளாவிய, அணு ஆயுதக் குறைப்பை இந்தியா ஆதரிக்கிறது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை இந்தியா கோருகிறது.


  அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT), விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) மற்றும் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (TPNW) ஆகியவை  இந்தியாவின் குறிப்பிடத்தக்க கொள்கை முடிவுகள். 1968-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT), ஐ.நா பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களை (அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா) மட்டுமே அணுசக்தி சக்திகளாக அங்கீகரிக்கிறது. மற்ற நாடுகள் அணு ஆயுதம் இல்லாத நாடுகளாக மட்டுமே அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானதாக இந்தியா கருதுகிறது.


மேலும், அணு ஆயுத சோதனைகளை தன்னார்வமாகவும் தன்னிச்சையாகவும் நிறுத்தி வைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாமல் உலகின் பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்தியா ஆதரிக்கிறது.  


அணுகுண்டு வீச்சில் இருந்து தப்பிய ஹிரோஷிமாவில் உள்ள ஜென்பாகு (Genbaku) தற்போது ஹிரோஷிமா அமைதி நினைவுச்சின்னமாக செயல்படுகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மே 27, 2016 அன்று ஜென்பாகு டோமிற்கு சென்று, ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஹிபாகுஷாவை (Hibakusha) சந்தித்தார். ஜென்பாகு குவிமாடம் மற்றும் ஜப்பானிய மக்கள் மீது அணு கதிர்வீச்சின் தொடர்ச்சியான தாக்கம் ஆகியவை அணு ஆயுதப் போரின் கொடூரங்களின் வாழும் நினைவூட்டல்களாக உள்ளன.



Original article:

Share:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய மசோதாவும் அதன் நிலையற்றத் தன்மையும் -அமிதாப் சின்ஹா

 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (National Disaster Management Authority (NDMA)) எந்த நிர்வாக அல்லது நிதி அதிகாரங்களும் இல்லை. இதனால், எந்தவொரு முடிவும் உள்துறை அமைச்சகத்தின் மூலமே செயல்படுத்த வேண்டும். இந்த செயல்முறை திறமையற்றதாகவும் மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுவதாகவும் உள்ளது.


பேரிடர் மேலாண்மை சட்டத்தை (Disaster Management Act), 2005  திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளுவதற்கு  மேற்கொள்ளும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த கொண்டுள்ளது.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) பங்கு மற்றும் பொறுப்புகளை விரிவுபடுத்த மசோதா பல முன்மொழிவுகளை முன்மொழிகிறது. பேரிடர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழிகாட்டுவதும்,  பேரிடர்களை கையாள்வதில் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் இந்த ஆணையம்  உதவவும் என மசோதா பரிந்துரைக்கிறது.


இருப்பினும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) அந்தஸ்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த மசோதா நிவர்த்தி செய்யவில்லை. இது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், அரசு நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, அதற்கு அதிக நிதி மற்றும் மனித வளங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (Disaster Management Act) உருவாக்கப்பட்டது. இருப்பினும், 1998-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒடிசா சூப்பர் சூறாவளியிலிருந்து (Odisha super cyclone) இந்த யோசனை பரிசீலனையில் இருந்தது. 


பேரிடர் மேலாண்மை சட்டம் மாநில அளவில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (State Disaster Management Authority (SDMA)) உருவாக்க வழிவகுத்தது. இது தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management (NIDM)) ஆகியவற்றையும் உருவாக்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) என்பது பேரிடர் தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனம் ஆகும். இந்த சட்டத்தை 2009-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை (National Disaster Management Policy) மற்றும் 2016-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் (National Disaster Management Plan) ஆகியவற்றால் பின்பற்றப்பட்டன.


இந்த கட்டமைப்பு பேரிடர்களை கையாள்வதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) போன்ற அமைப்புகளுக்கு முன்பை விட தற்போது அதிக பொறுப்புகளும்,  அதிகாரங்களும் தேவைப்படுகின்றன.


பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கான திருத்த மசோதா பல முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது:


நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்கள்


பேரிடர் மேலாண்மைக்கான நிறுவன அமைப்பானது மாவட்ட அளவில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் (district disaster management authorities) பேரிடர் மேலாண்மைக்காக செயல்படுகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய பெருநகரங்களின் சிறப்புத் தேவைகளை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. அத்தகைய நகரங்களில், அனைத்து மாநிலத் தலைநகரங்கள்  மற்றும் மாநகராட்சிகளைக் (municipal corporation) கொண்ட நகரங்கள், இப்போது முனிசிபல் ஆணையர் (municipal commissioner) தலைமையில் ஒரு நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையமும் இருக்கும். நகர்ப்புற வெள்ளம் போன்ற நகர அளவிலான பேரழிவுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்க இது உதவும்.


மாநில பேரிடர் மீட்புப் படை (State Disaster Response Force (SDRF)) : 


பல மாநிலங்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) போன்ற மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) உருவாக்கியிருந்தாலும், 2005 சட்டத்தில்  மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) கட்டாயமாக்கப்படவில்லை. இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு மாநிலமும் மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) உருவாக்கி அவற்றை பராமரிக்க வேண்டும் என்று இந்த மசோதா முன்மொழிகிறது.


தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (NCMC) : 


கேபினட் செயலாளரின் தலைமையிலான, பேரிடர்கள் உட்பட அனைத்து வகையான தேசிய அவசரநிலைகளையும் கையாளுவதற்கு  தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவானது (NCMC) செயல்பட்டு வருகிறது. இந்த மசோதா  தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக்கு (NCMC) சட்ட அந்தஸ்தை வழங்குவதுடன், இது "தீவிரமான அல்லது தேசிய பாதிப்புகளுடன்" (serious or national ramifications) பேரிடர்களை கையாள்வதற்கான முக்கிய அமைப்பாக இது உருவாகிறது. 


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட பங்கு :

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) பங்கு மற்றும் பொறுப்புகள் கணிசமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், வளர்ந்து வரும் பேரிடர்களின் அபாயங்கள் உட்பட, நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு தொடர்பான அபாயங்கள் முழுவதையும் அவ்வப்போது கணக்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பேரிடர் தரவுத்தளங்கள்


இது பேரிடர் மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு மற்றும் தயார்நிலை திட்டங்கள் பற்றிய விவரங்களுடன் ஒரு தேசிய பேரிடருக்கான  தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) குறிப்பிடுகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (SDMA) மாநில அளவிலான தரவுத்தளங்களையும் உருவாக்க வேண்டும்.


இழப்பீடுகள் : 


பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தரநிலை நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பரிந்துரைக்க வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது. உயிர் இழப்புகள் (loss of lives), வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் (damage to homes and property), வாழ்வாதாரத்தை இழந்தால் (loss of livelihoods) இழப்பீடு தொகைகள் குறித்த பரிந்துரையும் இதில் அடங்கும்.


மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள்


பேரிடர்கள் தொடர்பான வரையறையை இந்த மசோதா தெளிவுபடுத்த விரும்புகிறது. உண்மையான சட்டத்தின் மூலம், பேரிடர்களை "எந்தவொரு பகுதியிலும் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களால் எழும் பேரழிவுகள் (calamity), விபத்துகள் (mishap), பெரும் ஆபத்து (catastrophe) அல்லது கடுமையான நிகழ்வு (grave occurrence)" என்று விவரித்தது. "மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள்" சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சூழ்நிலைகளை உள்ளடக்குவதில்லை என்று மசோதா குறிப்பிடுகிறது. உதாரணமாக, கலவரம் ஏற்பட்டு உயிர் இழப்பு, துன்பம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டால், இந்த சட்டம் பொருந்தாது.


துணைத் தலைவர் இல்லாதது


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைவராக பிரதமர் தலைமை வகிக்கிறார். கேபினட் அமைச்சராக இருக்க வேண்டிய துணைத் தலைவர், தினசரி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவராவர். இருப்பினும், துணைத் தலைவர் பதவி சுமார் பத்தாண்டுகளாக காலியாக உள்ளது. இந்தத் திருத்த மசோதா, தலைவர் அல்லது துணைத் தலைவர் தினசரி நடவடிக்கைகளைக் கையாளுவதற்கு உறுப்பினரை நியமிக்க அனுமதிப்பதன் மூலம் இந்த நிலையை சட்டபூர்வமாக்குகிறது.


மசோதாவில் கவனிக்கப்படாத பிரச்சினைகள்


அதன் வளர்ந்து வரும் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். அதை அரசு துறையாகவோ அல்லது முழு அளவிலான அமைச்சகமாகவோ உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆண்டு முழுவதும் செயலில் உள்ளது மற்றும் மாநில அரசுகள் மற்றும் அவற்றின் முகமைகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்போது, ​​தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) முக்கிய அமைச்சகமான உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்த ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது.


துணைத் தலைவர் இல்லாமல், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) தலைமைத்துவம் மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களைச் சமாளிக்கத் தேவையான அரசியல் பலமும் இல்லாமல் போய்விட்டது.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் இல்லை. ஒவ்வொரு சிறிய முடிவும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் செல்ல வேண்டும், இது திறமையற்றது மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NDMA) உயர்மட்டத்தில் மிகக் குறைந்த பணியாளர்களான மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த காலத்தில், இது ஆறு முதல் ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதில், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட வகை பேரிடருக்கு பொறுப்பானவர்கள் ஆவார்.


இந்தத் திருத்த மசோதா இப்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. சில விதிகள், குறிப்பாக மாநில அளவிலான மாற்றங்களை பாதிக்கும் விதிகள், எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும்.  



Original article:

Share:

$30-டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கிய பயணம் -ராகுல் அலுவாலியா, ஹர்ஷித் ரகேஜா

 விரைவான பொருளாதார வளர்ச்சியை இந்தியா இலக்காகக் கொள்ள வேண்டும். இதை அடைய, தனியார் துறையை உள்ளடக்கிய தாராளமய கொள்கைகளை (liberal policies) இந்தியா பயன்படுத்த வேண்டும். வருமான சமத்துவமின்மை (income inequality) குறித்த விமர்சனங்களால் இந்திய  தனது இலக்குகளிலிருந்து பின்வாங்கக்கூடாது.

 

இந்தியாவின் 7%-க்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் போன்ற கருத்துகளை மக்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். 21-ஆம் நூற்றாண்டு “இந்தியாவின் நூற்றாண்டாக” (‘India’s century’) இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பல நாடுகள் இந்தியாவின் தற்போதைய காலகட்டத்தில் இருந்தன. வளர்ந்த நாடு என்ற நிலைக்கு முன்னேற அந்த நாடுகள் தவறிவிட்டன. இந்தியா இதைத் தவிர்க்க, 2047-க்குள் $30-டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேகமான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வளர்ச்சி தனியார் துறையை உள்ளடக்கிய தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். வருமான சமத்துவமின்மை (income inequality) குறித்த விமர்சனங்களால் இந்திய  தனது இலக்குகளலிருந்து பின்வாங்கக்கூடாது.


இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள்தொகையின் சாத்தியம்


வறுமையைக் குறைப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியே சிறந்த வழியாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991-வரை, வறுமைக் குறைப்பை ஏற்படுத்தும் சமத்துவ கொள்கைகள்  அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவின் வறுமை விகிதம் 50%-ஆக இருந்தது. 1991-க்குப் பிறகு, இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கியபோது, ​​2011-ல் வறுமை விகிதம் சுமார் 20%-ஆகக் குறைந்தது. இந்த காலகட்டத்தில், இந்தியாவின் வளர்ச்சி 35கோடி  மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவியது.


1991-க்கு முன்பிருந்ததை விட இன்று இந்தியா சமத்துவமின்மையில் உள்ளதா? கினி குணகத்தின் (gini co-efficient) தரவு சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. இருப்பினும், இன்று அதிகமான இந்தியர்கள், குறிப்பாக பொருளாதார வளர்ச்சியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்கிறார்களா? ஆம். வேகமாக வளர்ந்து வரும் எந்தவொரு பொருளாதாரத்திலும், சிலர் குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்குவார்கள். இது பொருளாதார வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும் மற்றும் புதிய வணிகங்களை ஊக்குவிக்கிறது. இந்த செல்வ உருவாக்கம் அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த நேர்மறையான தாக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


1990-களின் பொருளாதார சீர்திருத்தங்களின் ஆரம்ப நன்மைகள் உணரப்பட்டுள்ளன. 2000 முதல் 2010 வரை, தகவல் தொழில்நுட்பத்தின் சேவைகளின் முன்னேற்றம் காரணமாக இந்தியா வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சி பணக்கார நடுத்தர வர்க்கத்தை உருவாக்க வழிவகுத்தது. இருப்பினும், இந்தியாவின் தொழில்துறையில்  46% இன்னும் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இந்தத் துறை குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே பங்களிக்கிறது. கூடுதலாக, இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (FLFPR)) வெறும் 37% ஆகும். இது மற்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் விகிதங்களை விட குறைவாக உள்ளது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துவதை விட அதிகமாக மறைக்கிறது. 2019 ஆம் ஆண்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 26% ஆக இருந்தது. மேலும் COVID-19-க்குப் பிறகு, பல பெண்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலைக்குத் திரும்பியுள்ளனர். சீனா, வியட்நாம் மற்றும் ஜப்பான்  போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 60% முதல் 70% வரை இருக்கும். இந்தியா எங்கு முன்னேற வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.


950-மில்லியனாக இருக்கும் இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையில், தற்பொழுது பாதி பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதால், நியாயமான வேலை வாய்ப்புகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது? 'ஆசியப் புலிகள்' (‘Asian Tigers’) என்று அழைக்கப்படும் தென் கொரியா, தைவான், ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகியவை 1960-1990 வரை குறைந்த திறன் கொண்ட, உழைப்பு மிகுந்த உற்பத்தியில் கவனம் செலுத்தி, ஏற்றுமதிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தன. அவர்களின் பொருளாதாரக் கொள்கையானது ஏற்றுமதியால் இயக்கப்படும் விரைவான தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தியது. ஏற்றுமதியை அதிகரிக்க,  தங்களிடம் உள்ள பலத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.  வெளிப்படைத்தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.  எடுத்துக்காட்டாக, இந்தியா தனது ஏற்றுமதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 1990-ல் 7%-ல் இருந்து 2013-ல் 25% ஆக உயர்ந்தது.  இன்று, உலக உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக சீனா+1 (China+1) ஏற்றுமதியை அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அதிக வரி விதிப்பை தவிர்க்க வேண்டும். 


நடுத்தர வருமானப் பொறி  (middle-income trap)


அதிக இறக்குமதி கட்டணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் போட்டியிலிருந்து தொழில்களைப் பாதுகாக்க முயற்சித்தால், பாதுகாப்பை அதிகம் நம்பியிருக்கும் திறனற்ற உற்பத்தியாளர்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. உதாரணமாக, சீனாவில் இருந்து பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிய கைபேசி தயாரிப்பாளருக்கு கட்டணங்கள் காரணமாக அதிக செலவுகள் ஏற்படும். இது அவர்களின் கைபேசிகளின் விலையை அதிகமாக்கி, இந்திய ஏற்றுமதியை பாதிக்கும். குறிப்பாக நடுத்தர வருமானப் பொறியின் (middle-income trap) சவாலை எதிர்கொள்ளும் இந்தியா இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும்.


1960-ல், 101 நடுத்தர வருமான பொருளாதாரங்கள் இருந்தன. 2018-ஆம் ஆண்டளவில், அவற்றில் 23 மட்டுமே அதிக வருமானம் கொண்ட நாடுகளாக மாறியது. குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடான இந்தியா, நடுத்தர வருமான நிலைக்கு முன்னேறி, அதைத் தாண்டிச் செல்வது எவ்வளவு சவாலானது என்பதை இது காட்டுகிறது. குறைந்த வருமான உள்ள தொழில்களில் பல்வேறு நன்மைகளை இழந்து உயர் தொழில்நுட்பத் துறைகளில் போட்டியிடுவதால், நாடுகள் பெரும்பாலும் நடுத்தர வருமான சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றன.


இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலை எதிர்கொள்கிறது: குறைந்த அளவிலான தொழில்களில் வளர பெரிய தொழிலாளர் சக்தியை பயன்படுத்தவில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய பாதையை வழங்கியது. ஆனால், அதற்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. இது ஒரு பிரச்சனையாக மாறியது. உற்பத்தியில் முன்னேற்றம் பெரும்பாலும் வலுவான, குறைந்த தொழில்நுட்பத் தொழில்களை உருவாக்கத் தொடங்குகிறது. இந்தத் தொழில்களுக்குத் தரம் மற்றும் அளவை உறுதிசெய்யக்கூடிய திறமையான மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவை. குறைந்த-தொழில்நுட்ப உற்பத்தியை வெற்றிகரமாக இயக்குவது, பின்னர் மிகவும் சிக்கலான பணிகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்க உதவுகிறது.


இந்தியாவின் சமூகத் துறையும் குடிமை சமூகமும் தொழிற்சாலைகளை அடிமை உழைப்பு தொழிற்சாலைகள் என்று முத்திரை குத்துவது தீங்கு விளைவிக்கும். பணியாளர் நலனுக்காக அதிக செலவு செய்யுமாறு முதலாளிகளை கட்டாயப்படுத்துவது வேலை தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக வேலை இழப்புக்கு வழிவகுக்கும். இது விவசாய வேலைகளைத் தவிர வேறு சில வேலை வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு முக்கியமானது.


நடுத்தர வருமான சிக்கல்களை தவிர்க்க, தனியார் வணிக நிறுவனங்கள் வளரக்கூடிய சந்தை சார்ந்த பொருளாதாரம் இந்தியாவுக்குத் தேவை. அரசாங்கம் அனைத்திலும் தலையிடக்கூடாது, தொழிற்சாலை வேலைகள் பற்றிய கருத்துக்கள் தடையாக இருக்கக்கூடாது. இந்த அணுகுமுறை குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என அழைக்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் வணிகச் சூழலை மேம்படுத்த இந்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். வணிகத்தை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் தாமதமின்றி தொடர வேண்டும்.


ஒரு திரள் தலைமையிலான  தொழில்துறை மாதிரி (cluster-led industrial model)


இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். சீனா மற்றும் வியட்நாமில் உள்ளதைப் போன்ற தொழில்துறை திரள்களை (industrial clusters) உருவாக்க வேண்டும். இந்தக் திரள்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ஈர்க்கும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போது, ​​இந்திய மாநிலங்கள் மின்சாரம், தளவாடங்கள் மற்றும் நிதியுதவிக்கு அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன. கூடுதலாக, பங்களாதேஷ், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. ஒழுங்குமுறைச் சுமை புதிய வணிகங்களைத் தொடங்குவதையும், ஏற்கனவே உள்ள செயல்முறைகளை விருவப்படுத்த வேண்டும். மற்ற நாடுகளும் இது போன்ற சவால்களை எதிர்கொண்டன. இந்த சிக்கல்களைத் தீர்க்க, தொழில்துறை வளர்ச்சிக்கான திரள் அடிப்படையிலான அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதிரியில், உற்பத்திக்கான சிறந்த சூழலை உருவாக்க குறிப்பிட்ட பகுதிகளில் விதிமுறைகள் தளர்த்தப்படவேண்டும்.

 

  குறைந்த திறன் கொண்ட உற்பத்தியை அதிகரிக்க தனியார் துறையின் பலத்தையும் அதன் சொந்த சீர்திருத்தக் கவனத்தையும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். இதில் மின்னணு தொகுப்பு (electronics assembly) மற்றும் ஆடை போன்ற துறைகள் அடங்கும். இது இந்தியர்களுக்கு பல வேலைகளை உருவாக்க முடியும். முன்னேற்றத்தைக் கண்காணிக்க, மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு, நகரமயமாக்கல், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கின் குறைவு போன்ற குறிகாட்டிகளைப் பார்க்க வேண்டும். 2047-க்குள் $30-டிரில்லியன்  பொருளாதாரமாக மாறும் இலக்கை நோக்கி நகர்கிறோமா என்பதை தீர்மானிக்க இவை உதவும்.


ராகுல் அலுவாலியா பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் (Foundation for Economic Development) நிறுவனர்-இயக்குநராக உள்ளார்.  ஹர்ஷித் ராகேஜா, பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் தகவல் தொடர்பு மேலாளராக உள்ளார்.



Original article:

Share:

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 'ஏழைகளைக்' கணக்கிடுதல் -ஜி.சி.மன்னா, டி.முகோபாத்யாய்

 ஏழை மக்களை இலக்காகக் கொண்ட ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.


தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) 2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பின்

(Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மக்கள் உட்கொள்ளும் உணவு  பொருட்களின் அளவுகள் மற்றும் மதிப்புகள் பற்றிய தரவுகளை  வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு (HCES) சேகரித்தது. இந்த பகுப்பாய்வு உட்கொள்ளும் உணவின் அளவை அவற்றின் மொத்த கலோரி மதிப்பாக மாற்றுகிறது மற்றும் ஏழை குடும்பங்களின்  சராசரி தனிநபர் கலோரி உட்கொள்ளலை (per capita per day calorie intake)  ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான சராசரி தனிநபர் தினசரி கலோரியுடன் ஒப்பிடுகிறது.  


அளவீட்டு அணுகுமுறை


இந்த பகுப்பாய்வு யார் 'ஏழை' என்பதை வரையறுத்தல் மற்றும் ஊட்டச்சத்து அளவை அளவிடுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்களை சரி செய்கிறது.


இந்தியாவில், லக்டவாலா (Lakdawala), டெண்டுல்கர் (Tendulkar,) மற்றும் ரங்கராஜன் குழுக்கள் (Rangarajan Committees) போன்ற குழுக்கள் ஏழைகளை 'வறுமைக் கோட்டிற்கு' (poverty line’ (PL)) கீழே உள்ளவர்கள் என்று வரையறுத்துள்ளன. வறுமைக் கோடு  என்பது வறுமைக் கோட்டுக் கூடையில் (poverty line basket (PLB)) உள்ள உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை ஒரு குடும்பம் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் தொகையாகும்.


லக்டவாலா குழு (Lakdawala Committee) வறுமைக் கோட்டின் நிலையை கிராமப்புறங்களுக்கு ஒரு நாளைக்கு தனிநபருக்கு 2,400 கிலோகலோரி மற்றும் நகர்ப்புறங்களுக்கு ஒரு நாளைக்கு 2,100 கிலோகலோரி என்ற கலோரி அளவுகோல்களின் அடிப்படையில் நிர்ணயித்தது. டெண்டுல்கர் கமிட்டி (Tendulkar Committee) வறுமைக் கோட்டினை  வரையறுக்க கலோரி விதிமுறைகளைப் பயன்படுத்தவில்லை. ரங்கராஜன் குழு (Rangarajan Committee) உணவு, உடை, வீட்டுவசதி, போக்குவரத்து, கல்வி மற்றும் பிற உணவு அல்லாத செலவுகளுக்கான நெறிமுறை நிலைகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டினை வரையறுத்தது.


இந்த பகுப்பாய்வு முறை முதலில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தேவையான சராசரி தினசரி தனிநபர் கலோரி தேவையை (per capita calorie requirement (PCCR)) கணக்கிடுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR))ன் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய (2020) அறிக்கையிலிருந்து, வெவ்வேறு வயது-பாலின-செயல்பாட்டு (age-sex-activity) வகைகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. 


தினசரி தனிநபர் கலோரி தேவையானது வெவ்வேறு வயது-பாலின-செயல்பாட்டு வகைகளில் சாரசரி கலோரி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (periodic labour force survey), 2022-23லிருந்து மதிப்பிடப்பட்ட நபர்களின் விகிதத்தை இவை பிரதிபலிக்கின்றன.


ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை மாதாந்திர தனிநபர் செலவு (monthly per capita expenditure (MPCE)) அடிப்படையில் மக்கள் 20 பிளவுபட்ட வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் மக்கள்  உள்ளனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் வீட்டு உபயோகம் மற்றும் செலவு ஆய்வுகளை (Household Consumption and Expenditure Surveys (HCES)) பயன்படுத்தி, 2022-23-ஆம் ஆண்டிற்கான தரவைப் பயன்படுத்தி சராசரி தனிநபர் தினசரி கலோரி உட்கொள்ளல் மற்றும் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு  ஆகியவற்றை பகுப்பாய்வு மதிப்பிடுகிறது. இந்த நாடு தழுவிய தரவுகளிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட தினசரி கலோரியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.


உணவுக்கான சராசரி தனிநபர் செலவு என்பது  ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க, ஒரு குடும்பம் உணவுக்காக செலவிட வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் குறிக்கிறது. இந்த வரம்பு, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் குறிப்பிட்ட மாதாந்திர தனிநபர் செலவு (monthly per capita expenditure (MPCE) வரம்புகளைப் பெற நுகர்வோர் விலைக் குறியீட்டைப் (Consumer Price Index) பயன்படுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விலை வேறுபாடுகள்  சரிசெய்யப்படுகிறது.


ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 'ஏழைகள்' அல்லது பின்தங்கிய மக்களின் விகிதம் இந்த மொத்த மாதாந்திர தனிநபர் செலவு (MPCE)  வரம்புகளுக்குக் கீழே உள்ளவர்களை அடிப்படையாகக் கொண்டது. தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் ஜூலை 2020-ஆம் ஆண்டு, மார்ச் 1, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, 'ஏழை' அல்லது பின்தங்கிய மக்களின் தேசிய சராசரி விகிதம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  விகிதங்களின் சராசரியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இந்த ஆய்வு வீட்டு கலோரி உட்கொள்ளலைக் கணக்கிட (HCES) சில தோராய மதிப்புகளைப் பயன்படுத்துகிறது. 


தனிநபர் கலோரி தேவை, இந்தியாவில் கிராமப்புறங்களில் 2,172 கிலோ கலோரி மற்றும் நகர்ப்புறங்களில் 2,135 கிலோகலோரி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டு விலைகளில், அகில இந்திய மாதாந்திர தனிநபர் செலவு (MPCE) வரம்பு கிராமப்புறங்களில் ₹2,197 ரூபாய் மற்றும் நகர்ப்புறங்களில் ₹3,077  ரூபாய் ஆகும். ஏழைகளின் விகிதம் கிராமப்புறங்களில் 17.1% ஆகவும், நகர்ப்புறங்களில் 14% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


உணவு அல்லாத செலவினங்களின் மதிப்பு, ஏழைகளுக்கு  5% க்கு பதிலாக 10% என எடுத்துக்கொண்டால், செலவின வரம்பு கிராமப்புறங்களுக்கு ₹2,395 ஆகவும், நகர்ப்புறங்களுக்கு ₹3,416 ஆகவும் செல்கிறது. இந்த மாற்றம் கிராமப்புற இந்தியாவில் 23.2% ஆகவும் நகர்ப்புற இந்தியாவில் 19.4% ஆகவும் அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டைப் பொறுத்தவரை, கிராமப்புற இந்தியாவில் மிக ஏழ்மையான ஐந்து சதவீதத்தினரின் சராசரி தனிநபர் கலோரி 1,564 ஆகும். அடுத்த ஐந்து சதவீதத்தினருக்கு இது 1,764 கிலோகலோரி ஆகும். நகர்ப்புற இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஏழ்மையான ஐந்து சதவீதத்தினருக்கு 1,607 கிலோகலோரி மற்றும் அடுத்த ஐந்து சதவீதத்தினருக்கு 1,773 கிலோ கலோரி ஆகும். இவை அனைத்தும் தனிநபர் கலோரி தேவையை விட குறைவாக உள்ளன. ஏழைகளுக்கான சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. ஏழைகளை இலக்காகக் கொண்ட ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த முடியும்.


ஜி.சி. மன்னா,  Institute for Human Development, New Delhi இல் பேராசிரியராக உள்ளார்.  முகோபாத்யாய், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் ஆவார்.


Original article:

Share: