உலகளாவிய கடல் பனி மூடி ஏன் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது? இதன் பொருள் என்ன? -அலிந்த் சவுகான்

 கடல் பனி என்பது துருவப் பகுதிகளில் சுதந்திரமாக மிதக்கும் பனியைக் குறிக்கிறது. இது பொதுவாக குளிர்காலத்தில் விரிவடைந்து கோடையில் உருகும் போது, ​​சில கடல் பனியானது ஆண்டு முழுவதும் இருக்கும். இது நிலத்தில் உருவாகும் பனிமலைகள் (icebergs), பனிப்பாறைகள் (glaciers), பனிக்கட்டிகள் (ice sheets) மற்றும் பனியடுக்குகளிலிருந்து (ice shelves) வேறுபட்டது என்பதை நினைவில் கொள்க.


பிப்ரவரி 13-க்கு முந்தைய ஐந்து நாட்களில், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் மொத்த கடல் பனியின் அளவு 15.76 மில்லியன் சதுர கி.மீ ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி-பிப்ரவரி 2023ஆம் ஆண்டில் முந்தைய ஐந்து நாள் சாதனையான குறைந்தளவாக 15.93 மில்லியன் சதுர கி.மீ.-ஐ விடக் குறைவு ஆகும். இந்தத் தகவல், அமெரிக்க தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் (National Snow and Ice Data Center (NSIDC)) தரவுகளின் பிபிசி பகுப்பாய்விலிருந்து வருகிறது.


கடல் பனி (Sea ice) என்பது துருவப் பகுதிகளில் சுதந்திரமாக மிதக்கும் பனியாகும். இது பொதுவாக குளிர்காலத்தில் விரிவடைந்து கோடையில் உருகும் நிலையைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில கடல் பனி ஆண்டு முழுவதும் இருக்கும். இது நிலத்தில் உருவாகும் பனிமலைகள், பனிப்பாறைகள், பனிப்படலங்கள் மற்றும் பனியடுக்குகளிலிருந்து வேறுபட்டது ஆகும்.


கடலில் இருக்கும் வெப்பத்தை தக்க வைப்பதன் மூலம் பூமியை குளிர்விப்பதில் கடல் பனி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், மேலே உள்ள காற்று வெப்பமடைவதைத் தடுக்கிறது. எனவே, கடல் பனி மூடி குறைந்தால், அது பூமிக்கு பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


சரிவு 


தற்போது, ​​ஆர்க்டிக் கடல் பனி ஆண்டின் இந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த அளவில் உள்ளது. 1970 காலகட்டங்களின் பிற்பகுதியில் இருந்து செயற்கைக்கோள் பதிவுகளின் அடிப்படையில் அண்டார்டிக் கடல் பனி ஒரு புதிய குறைந்த அளவிற்கு அருகில் உள்ளது. வரலாற்றுப் போக்குகளைக் கருத்தில் கொண்டால் இது ஆச்சரியமல்ல. 1970 கால கட்டங்களின் பிற்பகுதியிலிருந்து, தேசிய பனி மற்றும் பனி தரவு மையம் (NSIDC) ஆண்டுக்கு 77,800 சதுர கி.மீ கடல் பனி இழப்பை மதிப்பிட்டுள்ளது.


1981 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில், செப்டம்பர் மாதத்தில் ஆர்க்டிக் கடல் பனியின் அளவு, அதன் குறைந்தபட்ச அளவை எட்டும்போது, ​​ஒரு பத்தாண்டு காலத்திற்கு 12.2% சுருங்கியது என்று நாசா தெரிவித்துள்ளது.


அண்டார்டிக்கில், நிலைமை வேறுபட்டது. 2015 வரை, கடல் பனி ஒவ்வொரு ஆண்டும் சற்று அதிகரித்து வருகிறது. ஆனால், 2014-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2017-க்கு இடையில், அண்டார்டிக் இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பனியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பர்நிக்கஸ் மரைன் சர்வீஸின் கூற்றுப்படி, இந்தப் பகுதி ஸ்பெயினின் அளவைவிட நான்கு மடங்கு பெரியது. 2018-ம் ஆண்டில், கடல் பனி அளவு மீண்டும் அதிகரித்தது.


2023-ம் ஆண்டில், அதிகபட்சமாக அண்டார்டிக் கடல் பனியானது வரலாற்று ரீதியாக குறைந்த அளவை எட்டியுள்ளது. கடல் பனி மூட்டம் வழக்கத்தைவிட இரண்டு மில்லியன் சதுர கிமீ குறைவாக இருந்தது. இது இங்கிலாந்தின் அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக இருந்தது.


கடந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டைவிட அதிகமாக இருந்தது. ஆனால், 1981-2010 இலிருந்து சராசரியாக அதிகபட்ச அளவை விட 1.55 மில்லியன் சதுர கிமீ குறைவாக உள்ளது.




சரிவுக்கான காரணங்கள்


2025-ம் ஆண்டில் குறைந்த பனி அளவுகள் பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இவற்றில் சூடான காற்று, சூடான கடல் நீர் மற்றும் பனிக்கட்டியை உடைக்கும் பலத்த காற்று ஆகியவை அடங்கும் என்று பிபிசி தெரிவித்துள்ளது.


அண்டார்டிக் கடல் பனியானது, குறிப்பாக பனி உடைக்கும் காற்றினால் பாதிக்கப்படக்கூடியது. ஆர்க்டிக் பனியைப் போலல்லாமல், இது கண்டங்களுக்குப் பதிலாக கடலால் சூழப்பட்டுள்ளது. இதனால், இது அதை மேலும் நகரக்கூடியதாகவும் மெல்லியதாகவும் ஆக்குகிறது. தெற்கு அரைக்கோள கோடையின் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) இறுதியில் வெப்பமான காற்று மற்றும் வெப்பமான நீர் காரணமாக இந்த ஆண்டு நிலைமை மோசமாகிவிட்டது.


அதிக காற்று வெப்பநிலை அண்டார்டிக் பனிப்படலத்தின் விளிம்புகளை உருக வழிவகுத்தது. இது பனியடுக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடலுக்கு மேல் நீண்டுள்ளது. பிரிட்டிஷ் அண்டார்டிக் கணக்கெடுப்பின் (British Antarctic Survey) ஆராய்ச்சி விஞ்ஞானி டாம் பிரேஸ்கர்டில், தொடர்ந்து கடல் வெப்பமயமாதல் இந்தப் பிரச்சினைக்கு பங்களிப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.


நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கும் ஆர்க்டிக்கில், வடகிழக்கு கனடாவில் உள்ள ஒரு பெரிய உப்பு நீர்நிலையான ஹட்சன் விரிகுடாவைச் சுற்றி தாமதமாக உறைபனி ஏற்பட்டதால் கடல் பனி குறைவாகவே இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கடல்கள் குளிர்வதற்கு அதிக நேரம் எடுத்ததால் தாமதம் ஏற்பட்டது.


நார்வே மற்றும் ரஷ்யாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள பேரண்ட்ஸ் கடல் (Barents Sea) மற்றும் அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள பெரிங் கடல் (Bering Sea) ஆகியவற்றைச் சுற்றிலும் பனி உடைந்து சில புயல்களை இப்பகுதி கண்டது.ஆர்க்டிக் பனி பல ஆண்டுகளாக மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறுகிறது. எனவே, புயல்களால் உடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


நார்வேயின் ஸ்வால்பார்ட் போன்ற பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான காற்றின் வெப்பநிலை கடல் பனியை மேலும் இழக்கச் செய்தது.


சரிவு (dip) என்றால் என்ன?


கடல் பனி மூட்டம் குறைவாக இருந்தால், அதிக நீர் சூரியனுக்கு வெளிப்படும். இது அதிக வெப்பத்தை (சூரிய கதிர்வீச்சு) உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இது அதிக வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது. கடல் பனி துருவப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. அதன் பிரகாசமான, வெள்ளை மேற்பரப்பு திரவ நீரைவிட அதிக சூரிய ஒளியை விண்வெளிக்கு பிரதிபலிக்கிறது. கடல் பனி இழப்பு (loss of sea ice) உலகின் பிற பகுதிகளைவிட துருவப் பகுதிகள் வேகமாக வெப்பமடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


கடல் பனி உருகுவது உலகப் பெருங்கடல்களில் நீரின் இயக்கத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உருகும் பனியிலிருந்து வரும் நன்னீர் கடல் நீரில் கலப்பதால் இது நிகழ்கிறது. இதன் விளைவாக, மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை குறைந்து, அதன் அடர்த்தியைக் குறைக்கிறது. இது கடலின் அடிப்பகுதிக்கு நீர் கீழ்நோக்கிச் செல்லும் ஓட்டத்தைக் குறைக்கிறது. இந்த செயல்பாட்டில் மந்தநிலை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உலகளாவிய காலநிலையை சீர்குலைக்கும், கடல் உணவுச் சங்கிலிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பனியடுக்குகளை பலவீனப்படுத்தும்.




Original article:

Share:

இந்தியாவில் கேக் உத்தரவு (gag order) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 யூடியூப் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்ததற்காக பாட்காஸ்டர் (podcaster) ரன்வீர் அல்லாபாடியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து உச்ச நீதிமன்றம் தற்காலிக பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும், நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என் கே சிங் ஆகியோர் முக்கியமான விதிகளை வகுத்தனர். மறு அறிவிப்பு வரும் வரை, அல்லாபாடியாவும் அவரது குழுவினரும் சமூக ஊடகங்களில் எதையும் பதிவிட அனுமதிக்கப்படவில்லை.


              Gag Order :  Gag உத்தரவு (Gag Order) என்பது ஒரு வழக்கு அல்லது நிகழ்வைப் பற்றி பொதுமக்களிடம் பேசுவதைத் தடுக்கும் ஒரு சட்ட உத்தரவு ஆகும். இது, Gag உத்தரவின் நோக்கமானது பாரபட்சத்தைத் தடுப்பதும் சட்டச் செயல்முறையின் நேர்மையைப் பேணுவதுமாகும்.


முக்கிய அம்சங்கள் :


1. அடுத்த விசாரணையில் உதவுமாறு உச்ச நீதிமன்றம் இந்திய அட்டர்னி ஜெனரலைக் (Attorney General for India) கேட்டுக் கொண்டது. இணையவழி உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் உள்ள "வெற்றிடத்தை" இது நிவர்த்தி செய்வதாகும்.


2. அல்லாபாடியாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், பேச்சு சுதந்திரம் குறித்த சில கேள்விகளை Gag உத்தரவு (Gag Order) எழுப்புகிறது. அத்தகைய நிபந்தனை "பேச்சு சுதந்திரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்" (chilling effect on the freedom of speech) என்று கூறிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


3. மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகியதுடன், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) இணைக்க அவர் முயன்றார். மேலும், தனது கைது நடவடிக்கையைத் தடுக்க இடைக்கால உத்தரவையும் அவர் கோரினார்.


4. அவர் கோரிய நிவாரணம் முன்ஜாமீன் பெறுவதைப் போன்றது. இத்தகைய கோரிக்கைகள் பெரும்பாலும் அரசியலமைப்பின் பிரிவு 32-ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது மற்றும் தன்னிச்சையான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாக்கிறது.


5. ஒரே பிரச்சினைக்காக வெவ்வேறு இடங்களில் பல முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்வது பல வழக்குகளில் காணப்படுகிறது. இந்த நடைமுறை ஒரு நபரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம். நீதிமன்றங்கள் பொதுவாக இந்த FIR-களை இணைக்கின்றன அல்லது ஒன்றில் மட்டுமே விசாரணையை அனுமதிக்கின்றன. அதே நேரத்தில், மற்றவற்றை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் மனுதாரர் பல நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டியதில்லை. இறுதியில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ச்சியான பல தண்டனைகளுக்குப் பதிலாக ஒரே தண்டனையை அனுபவிக்கிறார்.


6. ஆனால், உச்ச நீதிமன்றம் இரண்டு நிபந்தனைகளை விதித்தது. முதலாவதாக, அல்லாபாடியா நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவரது பாஸ்போர்ட்டை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக, மறு உத்தரவு வரும் வரை அவர் அல்லது அவரது கூட்டாளிகள் YouTube அல்லது வேறு எந்த ஆடியோ/வீடியோ தளத்திலும் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக்கூடாது.

உங்களுக்கு தெரியுமா? :


1. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 438(2), உயர் நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் ஒருவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடலாம் என்று கூறுகிறது. வழக்கின் குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் நிபந்தனைகளை அமைக்க வேண்டும்.


2. குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிச் செல்வதைத் தடுக்க பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்வதற்காக அதிக தொகையில் ஜாமீன் நிர்ணயிக்கப்படலாம். மற்றொரு பொதுவான நிபந்தனை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான இடைவெளியில் ஒரு காவல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும்.


3. மற்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை விதித்துள்ளன. கூகிள் மேப் பின் (Google map PIN) குறியீட்டைப் பகிர்வது அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிப்பது ஆகியவை இதில் அடங்கும். 2023-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், ஜாமீன் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இத்தகைய கடுமையான ஜாமீன் நிபந்தனைகள் "ஜாமீன் விற்பது" (selling bail) போன்றது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.


4. எவ்வாறாயினும், கைது செய்வதிலிருந்து பாதுகாப்பை வழங்கும் gag உத்தரவு (gag order), ஒரு அசாதாரண நிபந்தனையாகும். ஏனெனில், இது முன் தடையாக செயல்படுகிறது. முன் தடை (prior restraint) என்பது பேச்சு அல்லது வேறு எந்த வெளிப்பாடும் அது நிகழும் முன் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், முன் தடையை விதிக்கும் சட்டங்கள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. வெறுப்புப் பேச்சு வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது என்று நீதிமன்றம் முடிவு செய்யலாம். இதன் பொருள், பேச்சில் முழுமையாக குறுக்கிடுவதைத் தவிர்க்க, gag உத்தரவை (gag order) குறுகிய முறையில் வடிவமைக்க முடியும்.


5. 2022-ம் ஆண்டில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் இருக்கும்போது ஜுபைர் ட்வீட் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு கோரியிருந்தது. இருப்பினும், இந்தக் கோரிக்கையை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது.




Original article:

Share:

கோவில் நிர்வாகம் மற்றும் சமய அறநிலையங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்க மாநிலங்களை எந்த அரசியலமைப்பு விதி அனுமதிக்கிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அனுமதிக்கும் முயற்சியை தமிழக அரசு 2021-ம் ஆண்டில் தொடங்கியது. இந்த முயற்சியின் கீழ், எஸ். பிரபு மற்றும் ஜெயபால் என்ற இரண்டு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இது திருச்சிராப்பள்ளியில் உள்ள குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரண்டாம் நிலை சன்னதிகளில் மட்டுமே சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படுவதாக அவர்கள் இப்போது குற்றம் சாட்டியுள்ளனர். 


2. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த போதிலும், கோயிலின் பிரதான கடவுளான முருகப்பெருமானின் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.


3. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு (Hindu Religious and Charitable Endowments (HR & CE)) அனுப்பியுள்ள முறையான மனுவில், பிரபு மற்றும் ஜெயபால் ஆகியோர் தங்களின் மீது ஏற்பட்டுள்ள அவலநிலையை விவரித்தனர். இதில், தங்களின் நிலைப்பாட்டிற்கு சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ஆதரவு இருந்தபோதிலும், தங்களை முற்றிலுமாக விலக்கி வைப்பது தொடர்கிறது என்று புகார் தெரிவித்தனர்.


4. 2021-ம் ஆண்டில், தமிழ்நாடு பிராமணரல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்தது. கோயில் அர்ச்சகர்கள் பெரும்பாலும் பரம்பரையாகவும் பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாகவும் இருந்த பல நூற்றாண்டுகள் பழமையான மரபிலிருந்து இது ஒரு பெரிய மாற்றமாகும். இந்தக் கொள்கை திராவிட இயக்கத்தின் சமூக நீதிக்கான நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இது மத இடங்களில் சாதித் தடைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், அதன் செயல்பாடானது தொடர்ச்சியான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. தமிழ்நாட்டில் கோவில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த விவாதம் பல்வேறு அரசு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்து உருவாகிறது.


- 1971-ம் ஆண்டில், முதலமைச்சர் கருணாநிதியின் திமுக அரசு தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலைய அறக்கட்டளை (Hindu Religious & Charitable Endowment (HR & CE)) சட்டத்தை மாற்றியது. இது குடும்பங்கள் மூலம் அர்ச்சகர் பதவி வழங்கப்பட்ட முறையை நீக்கியது. இது அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்னும் முறையை அனுமதித்தது.


- 2006-ம் ஆண்டில், அரசாங்கம் அனைத்து தகுதியான நபர்களையும் அர்ச்சகராக தகுதியுடையவர்கள் என்று அறிவித்தது. உச்ச நீதிமன்றம் இந்த முடிவை 2015-ம் ஆண்டில் நிராகரித்தது. அதாவது, கோயில் விதிகள் (ஆகம சாஸ்திரங்கள்) பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், இந்த விதிகள் அரசியலமைப்பு உரிமைகளை மீறக்கூடாது என்றும் அது கூறியது.


- 2009-ம் ஆண்டில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் பூசாரிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அவர் ஆண் பூசாரிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதில், அருள்மிகு துர்க்கை அம்மன் கோவிலில் பூஜை நடத்துவதற்கான பரம்பரை உரிமை தொடர்பாக ஆண் பூசாரிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.


2. குருவாயூர் தேவஸ்வம் வழக்கில் (2004), கோயில் அறக்கட்டளை வாரியத்தில் மத நம்பிக்கை இல்லாதவர்களை நியமிப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரித்தது. N ஆதித்தயன் வழக்கில் (2002), அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள எந்தவொரு வழக்கமும், பிராமணரல்லாதவர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும் தகுதி பெற்றவர்களாகவும் இருந்தால், அவர்கள் கோயில்களில் பூஜை செய்வதைத் தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


3. தமிழ்நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்களை அனுமதித்து, பரம்பரை பூசாரி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டாலும், கோயில் நிர்வாகங்களில் ஆகம மரபு (Agama tradition) இன்னும் தொடர்கிறது.




Original article:

Share:

தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் ‘கூட்டுறவு கூட்டாட்சியின்’ பலவீனத்தைக் காட்டுகிறது. -அர்பிட் கோயல்

 தற்போதைய அமைப்பை ஆதரிக்கும் மக்கள், ஆளுநர்கள் தேசிய ஒற்றுமைக்கு முக்கியம் என்று கூறுகிறார்கள். ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக செயல்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில், இந்த இணைப்பு ஒரு தடையாக மாறிவிட்டது. அது நிகழும்போது, ​​அமைப்பை மறுபரிசீலனை செய்வது அவசியம்.


35 வயது மற்றும் இந்திய குடிமகன் என்ற இரண்டு தகுதி அளவுகோல்களை மட்டுமே கொண்ட ஒரு அரசியலமைப்பு அலுவலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இதற்கு, நிபுணத்துவம் தேவையில்லை. அரசியல் சார்புகளை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை. இது ஒரு டிஸ்டோபியன் கதையும் அல்ல. இந்த முறை இந்தியாவின் ஆளுநர் அலுவலகத்தின் யதார்த்தமான நடைமுறையாகும். இந்த அலுவலகம் ஒரு காலனித்துவ காலத்திலிருந்து நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.


தமிழ்நாட்டில் நடந்து வரும் பிரச்சினையில், ஆளுநர் ஒரு வருடத்திற்கும் மேலாக 12 மசோதாக்களை தாமதப்படுத்தியுள்ளார், இது ஒரு சாதாரணமான மசோதாவும் அல்ல. இது ஒரு பெரிய பிரச்சனையின் அறிகுறியாகும். பஞ்சாப் ஆளுநர் மீதான உச்ச நீதிமன்றத்தின் 2023 தீர்ப்பு இந்த நடைமுறையைத் தடுக்கத் தவறிவிட்டது. ஆளுநர் "முடிந்தவரை விரைவில்" செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் கூறியது. இருப்பினும், இதன் அர்த்தம் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை அது வழங்கவில்லை. இதன் காரணமாக, உறுதியான விதிகளை அமைக்க நீதிமன்றம் ஒரு முக்கியமான வாய்ப்பை தவறவிட்டது.


ஒரு மசோதா மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும்போது, ​​அரசியலமைப்பின் பிரிவு 200 ஆனது ஆளுநருக்கு மூன்று விருப்பங்களை வழங்குகிறது. அவை, ஒப்புதல் வழங்குதல் (granting assent), ஒப்புதலை நிறுத்தி வைத்தல் (withholding assent) அல்லது மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்குதல் (reserving the bill for the president’s consideration) ஆகியவை ஆகும். இருப்பினும், நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் இல்லை. இது இந்த பிரிவின் பரவலான தவறான பயன்பாட்டிற்கு வழிவகுத்தது.


இந்தப் பிரச்சினையின் முக்கிய மூல காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிக்குச் செல்கின்றன. ஆளுநர்கள் பேரரசின் முகவர்களாகக் காணப்பட்டனர். இதனால், உள்ளூர் விருப்பங்களை முடக்கும் பணியில் ஈடுபட்டனர். நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, அரசியலமைப்பு சபையில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதங்கள் இருந்தன. ஆளுநர்களின் அதிகாரங்கள் மற்றும் அவர்கள் நியமிக்கப்படும் விதம் காரணமாக மோதல்கள் ஏற்படலாம் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆளும் கட்சி ஆளுநர் நியமனங்களைக் கட்டுப்படுத்தினால், பாரபட்சமற்றத் தன்மை இழக்கப்படும் என்று பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஹுகும் சிங் எச்சரித்தார். ஒரு மாநிலத்தின் மொழி மற்றும் விவகாரங்கள் தெரியாத வெளியாட்களை நியமிப்பதை அசாமில் இருந்து ரோகிணி குமார் சவுத்ரி விமர்சித்தார். இந்த நடைமுறையை காலனித்துவத்துடன் ஒப்பிட்டார். அதிகப்படியான மத்திய கட்டுப்பாட்டால், கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் என்று ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஹிருதய் நாத் குன்ஸ்ரு எச்சரித்தார். இது இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அவர் கூறினார்.


சுவாரஸ்யமாக, வரைவானது அரசியலமைப்பின் பிரிவு 131 முதலில் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கர் பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரை விரும்பினார். ஆளுநரின் பங்கு அரசியலமைப்பு ரீதியாக மட்டுமே இருந்து நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லாவிட்டால், தேர்வு முறை - தேர்தல் அல்லது நியமனம் - ஒரு பொருட்டல்ல என்று அவர் வாதிட்டார். ஆனால், குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் இந்த சமரசம் பின்னர் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது.


மாநில நிர்வாகத்தில் தலையிடுவதை ஆளுநர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூற முடியுமா? இன்று, பல ஆளுநர்கள் ஓய்வு பெற்ற அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் விசுவாசத்திற்கான வெகுமதியாக நியமிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத வீட்டோ அதிகாரிகளாக (veto players) செயல்படுகிறார்கள். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருக்க முடியுமா? என்பது பற்றி தெளிவான பதில் "இல்லை".


சமீபத்திய ஆண்டுகளில், மாநிலங்களவையில் பல தனியார் உறுப்பினர் மசோதாக்கள் (private member bills) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் ஆளுநர் அலுவலகத்தை ஒழிப்பதையோ (abolish the governor’s office) அல்லது ஆளுநர்களை நியமித்தல் (reform the process for appointing) மற்றும் நீக்குவதற்கான (removing governors) செயல்முறையை சீர்திருத்துவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏப்ரல் 2024-ல், நாடாளுமன்ற உறுப்பினர்  பிரியங்கா சதுர்வேதி ஆளுநர் நியமனங்களை சீர்திருத்துவதற்கான ஒரு மசோதாவை முன்மொழிந்தார். பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மாநில முதல்வர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தேர்வுக் குழுவை அவர் பரிந்துரைத்தார். இந்த மசோதா ஒரு பதவி நீக்க செயல்முறையையும் முன்மொழிந்தது. இருப்பினும், பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட நான்கு மாத காலக்கெடுவை அது கோரியது.


இந்த தனியார் உறுப்பினர் மசோதாக்கள் பெரும்பாலும் சர்க்காரியா ஆணையத்தின் (Sarkaria Commission) 1988 பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும் அவை, செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, பல்கலைக்கழக நியமனங்கள் தொடர்பாக, கேரள ஆளுநர் மாநில அரசுடன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், தெலுங்கானாவில், ஆளுநர் முக்கியமான சுகாதார மசோதாக்களை (healthcare bills) தாமதப்படுத்தியுள்ளார். இந்த சர்ச்சைகள் ஒப்புதலை நிறுத்தி வைப்பதோடு கட்டுப்படுத்தவில்லை, டெல்லியில், துணைநிலை ஆளுநர் முக்கிய சேவைகள் தொடர்பாக மாநில அரசுடன் சண்டையிட்டுள்ளார். மகாராஷ்டிராவில், ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தவ் தாக்கரே பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. இதுபோன்ற இன்னும் பல வழக்குகள் உள்ளன. இந்த மோதல்கள் இந்தியாவின் அரை-கூட்டாட்சி கட்டமைப்பின் (quasi-federal structure) பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன. மேலும், "கூட்டுறவு கூட்டாட்சி" (பிரிவு 256) பலவீனமானது மற்றும் பயனற்றது என்பதை அவை காட்டுகின்றன.


தற்போதைய அமைப்பின் ஆதரவாளர்கள், ஆளுநர்கள் பணி தேசிய ஒற்றுமைக்கு முக்கியம் என்று வாதிடுகின்றனர். மேலும், ஆளுநர் அவர்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான இணைப்பாக செயல்படுகிறார்கள். ஆனால், இந்த இணைப்பு தமிழ்நாட்டைப் போலவே ஒரு முற்றலாக மாறும்போது, ​​அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.


தமிழ்நாடு தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களில் இருந்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்காததை மனுக்கள் சவால் செய்கின்றன. சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகளின் முதற்கட்ட மதிப்பாய்வு, நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் உள்ளிட்ட அமர்வு, ஆளுநர் ரவியின் "பாக்கெட் வீட்டோவைப்" (pocket veto) பயன்படுத்துவதில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் காட்டுகிறது.


இந்த வழக்கு வெறும் சட்டப் போராட்டத்தை விட அதிகம். இது கூட்டாட்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சோதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மசோதா தாமதமாகிறது, குடிமக்கள் தங்கள் உரிமைகளை இழக்கிறார்கள். மேலும், சீர்திருத்தங்கள் சிக்கிக் கொள்கின்றன, இதனால் ஜனநாயகம் பாதிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றிய-மாநில உறவுகளை மாற்றக்கூடும். இருப்பினும், நீடித்த மாற்றத்திற்கு மக்களின் விருப்பம் தேவை.


எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் ஆவார்.




Original article:

Share:

சக்தி திட்டத்தின் கீழ் நாரி அதாலத்தின் முக்கியத்துவம் என்ன? - குஷ்பு குமாரி

 பெண்களுக்கான நீதிமன்றங்களை (நாரி அதாலத்) நிறுவுவதற்கு மாநிலங்களிலிருந்து முன்மொழிவுகளை ஒன்றிய அரசாங்கம் வரவேற்கிறது. இவை தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு (Alternative Dispute Resolution (ADR)) இயக்கமுறையின் கீழ் செயல்படும்.


சமீபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி சமீபத்தில், “நாரி அதாலத்களை” அமைப்பதற்கான திட்டங்களை வரவேற்கும் வகையில், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் ஏற்கனவே அசாம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்பட்டு வருகிறது. இதை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Women and Child Development (WCD)) கீழ் உள்ள நாரி அதாலத் திட்டம், கிராம பஞ்சாயத்து மட்டத்தில் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகள் தொடர்பான குறைகளைத் தீர்க்க உதவுகிறது. ஒவ்வொரு நாரி அதாலத்திலும் கிராம பஞ்சாயத்தால் பரிந்துரைக்கப்படும் 'நியாய சகி'கள் என்று அழைக்கப்படும் 7 முதல் 11 உறுப்பினர்கள் உள்ளனர்.


2. இந்தத் திட்டம் 2023-ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாமில் உள்ள தலா 50 கிராம பஞ்சாயத்துகளில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கியது. 2023-24-ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ₹20 லட்சத்திற்கும் மேல் செயல்படுத்துவதற்காக ஒதுக்கியது. டிசம்பர் 2024-ல், நாரி அதாலத்கள் 1,062 கூட்டங்களை நடத்தி 497 வழக்குகளைப் பதிவு செய்தன.


3. நாரி அதாலத் என்பது பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்புக்காக WCD அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு குடைத் திட்டமான மிஷன் சக்தியின் ஒரு பகுதியாகும். 15வது நிதி ஆணையத்தின் கீழ் சக்தி திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை இயங்குகிறது. சம்பல் (பாதுகாப்பு மற்றும் காபந்திற்காக) மற்றும் சமர்த்யா (அதிகாரமளிப்பதற்காக) இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.


சக்தி திட்டத்தின் கூறுகள்:


4. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ள, சக்தி திட்டம் மாற்றுத்திறனாளிகள், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்டவர்கள், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்புக்கான குறுகியகால மற்றும் நீண்டகால சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


5. நாரி அதாலத் உள்ளூர் மட்டத்தில் பெண்களுக்கு தகராறுகளுக்கான மாற்றுத் தீர்வு (Alternative Dispute Resolution (ADR)) இயக்கமுறையாக செயல்படுகிறது. ADR என்பது பிரச்சனைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்க்க நடுவர் மன்றம், சமரசம் மற்றும் மத்தியஸ்தம் போன்ற மிகவும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. பாரம்பரிய நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலம் எடுக்கும் மற்றும் அதில் நீதி வழங்குவதில் தாமதங்கள் ஏற்படும். ADR முறைகள் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க உதவுகின்றன. இது வழக்கமான சட்ட செயல்முறைக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.


லோக் அதாலத் (Lok Adalats)


1. லோக் அதாலத் என்பது ஒரு மாற்று தகராறு நிவர்த்தி இயக்கமுறையாகும். இதன் நோக்கம் வழக்குகளை சுமுகமாகத் தீர்ப்பது அல்லது சமரசம் செய்வதாகும். 1987-ஆம் ஆண்டு சட்டச் சேவைகள் அதிகாரச் சட்டத்தின் படி (Legal Services Authorities Act, 1987) வழக்குத் தொடுப்பவர்கள் விரைவான நீதி மற்றும் கணிசமாகக் குறைக்கப்பட்ட வழக்குச் செலவுகளின் பலனைப் பெறுகிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது மற்றும் அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது.


2. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority (NALSA)) படி, 1987-ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரச் சட்டத்தின் கீழ், லோக் அதாலத்களின் முடிவு ஒரு குடிமை நீதிமன்ற உத்தரவைப் போலவே கருதப்படுகிறது. தீர்ப்பு இறுதியானது, அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது. லோக் அதாலத்தின் முடிவில் கட்சிகள் திருப்தி அடையவில்லை என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இருப்பினும், சட்ட நடைமுறையைப் பின்பற்றி நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.


3. லோக் அதாலத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படும்போது, ​​நீதிமன்ற கட்டணம் தேவையில்லை. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கு லோக் அதாலத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டால், கட்சியினர் முதலில் செலுத்திய நீதிமன்றக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.


4. 2024-ஆம் ஆண்டில், 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அதே வேளையில், உச்சநீதிமன்றம் ஒரு வார கால சிறப்பு லோக் அதாலத்தை ஏற்பாடு செய்தது. லோக் அதாலத், தானாக முன்வந்து ஒப்புதலுடன் வழக்குகளைத் தீர்ப்பதற்கான எளிய, தொழில்நுட்ப அடிப்படையிலான வழியை வழங்குகிறது என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.


5. தீர்வுக்கு ஏற்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் கருதியது. இதில் திருமண தகராறுகள், சொத்து தகராறுகள், மோட்டார் விபத்து கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு, சேவை மற்றும் தொழிலாளர் தொடர்பான வழக்குகள் அடங்கும். இதுபோன்ற வழக்குகளை விரைவாக தீர்ப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.


6. லோக் அதாலத்கள் இந்திய நீதித்துறை அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. லோக் அதாலத்கள் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கவும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.




Original article:

Share:

மியான்மர், மணிப்பூர் மற்றும் பதற்றமான எல்லைகள் -சஞ்சய் புலிபாக

 மியான்மரில் அரசியல் நிச்சயமற்றத் தன்மை மற்றும் அதன் விளைவாக வரும் அகதிகள் வருகை ஆகியவை வடகிழக்கு இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லை மேலாண்மை ஆகியவற்றைப் பாதித்து, நிச்சயமற்றத் தன்மை மற்றும் பொருளாதார ஈடுபாட்டைப் பேணுவதற்கு தேவையை உருவாக்குகிறது.


வடகிழக்கு இந்தியா நீண்டகால கிளர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய கடந்த பத்தண்டுகளில், பிராந்தியத்தின் பெரும்பகுதி கிளர்ச்சியற்றதாகவே உள்ளது. அமைதியான இந்தக் காலம் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது அரசாங்கத்திற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதித்துள்ளது. ஆனால், மணிப்பூரில் நடக்கும் வன்முறை, கடந்த கால சாதனைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைக் காட்டுகிறது. மியான்மரில் நடக்கும் அரசியல் முன்னேற்றங்கள் இந்த சாதனைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.


பிப்ரவரி 2021-ல், மியான்மர் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் நாட்டை கைப்பற்றியது. இந்த நடவடிக்கை மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒரு மக்கள் ஒத்துழையாமை இயக்கம் (civil disobedience movement) தொடங்கியது. காலப்போக்கில், இந்த இயக்கம் ஆயுதமேந்திய எதிர்ப்பாக மாறியது. மக்கள் பாதுகாப்புப் படைகள் (People’s Defence Forces (PDFs)) இந்த எதிர்ப்பை வழிநடத்தின. PDF-கள் இன ஆயுத அமைப்புகளுடன் (Ethnic Armed Organisations (EAOs)) இணைந்தன. ஒன்றாக, அவர்கள் டாட்மடாவ் (Tatmadaw) என்று அழைக்கப்படும் மியான்மர் இராணுவத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். டாட்மடாவ் தாக்குதல்கள் நாட்டின் பெரும் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை இழந்தது. இழந்த பகுதிகளை மீண்டும் பெறும் முயற்சியில், டாட்மடாவ் படையை நடத்தியது. பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. பல பிராந்தியங்களில் கடுமையான தாக்குதல் நடந்தது. சாகிங் பகுதி, சின் மாநிலம் மற்றும் கச்சின் ஆகியவை வடகிழக்கு இந்தியாவின் எல்லையாக உள்ளன. இந்தப் பகுதிகள் கடுமையான போர்களைக் கண்டுள்ளன.

அகதிகள் இயக்கம்


வடகிழக்கு இந்தியாவில், மிசோ-சின்-குகி போன்ற பல இனக்குழுக்கள் உள்ளன. அந்த குழுக்கள் இந்தியா-மியான்மர் எல்லையின் இருபுறமும் வாழ்கின்றன. அவர்கள் வலுவான சமூகம் மற்றும் குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இன தொடர்புகளை அங்கீகரித்து, இரு நாட்டு அரசாங்கங்களும் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா-பர்மா எல்லையின் இருபுறமும் 40 கிலோமீட்டருக்குள் வசிப்பவர்களுக்காக ஒரு சுதந்திர இயக்க ஆட்சியை (Free Movement Regime (FMR)) ஏற்படுத்தியது. பின்னர், அது 16 கிமீ ஆக குறைக்கப்பட்டது. குறிப்பிட்ட, பகுதிகளில் உள்ள மக்கள் எல்லையை எளிதாகக் கடக்க FMR அனுமதித்தது. விசாக்கள் போன்ற ஆவணங்களை அவர்கள் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இந்த அமைப்பின் கீழ், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன. உள்ளூர் எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேம்படுத்தவும் வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும் எல்லை சந்தைகள் அமைக்கப்பட்டன.


இருப்பினும், எல்லை மண்டலங்களை பொருளாதார மையங்களாக மாற்றும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை மோதல் காரணமாக இது நிகழ்ந்தது. இந்த மோதல் இந்தியாவிற்குள் அகதிகள் பெருமளவில் இடம்பெயர வழிவகுத்தது. அகதிகளின் திடீர் வருகை இந்தியாவின் எல்லை மேலாண்மை உத்திகளை சீர்குலைத்துள்ளது.


அகதிகளுக்கான ஆணையரின் (United Nations High Commissioner for Refugees estimates (UNHCR)) கூற்றுப்படி, டிசம்பர் 31, 2024 அன்று சுமார் 95,600 மியான்மர் அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்த அகதிகளில், சுமார் 73,400 பேர் மியான்மரில் சமீபத்தில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வந்துள்ளனர். மியான்மர் அகதிகள் தொடர்ந்து இந்தியாவிற்குள் நுழையும் நுண்துளை எல்லைகள் வழியாகவே வருகின்றனர். இதனால் சரியான எண்ணிக்கை கிடைப்பது கடினமாகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அகதிகள் வருகை கலவையான எதிர்வினைகளுக்கு வழிவகுத்துள்ளது. மிசோரமில், குடிமைச் சமூக அமைப்புகளும் மாநில அரசும் அகதிகளுக்கு வலுவான ஆதரவைக் காட்டியுள்ளன. ஏனெனில், அவர்கள் இனரீதியான தொடர்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


மறுபுறம், மணிப்பூரில், அகதிகள் வருகை கவலைகளை எழுப்பியுள்ளது. இது இன சமநிலையை சீர்குலைப்பதாக மக்கள் கவலை கொள்கின்றனர். மெய்ட்டெய்-குகி (Meitei-Kuki) இன மோதலில் இது ஒரு முக்கிய காரணியாகவும் மாறியுள்ளது. இந்த கவலைகளை சரி செய்வதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சர் 2023-ல் சுதந்திர இயக்க ஆட்சியை (FMR) ஒழிப்பதாக அறிவித்தார். மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதும் மக்கள்தொகை கட்டமைப்பைப் பராமரிப்பதும் இதன் நோக்கமாகும். நில எல்லை கடக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் மியான்மருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. டிசம்பர் 2024-ல், ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கட்டமைப்பின் கீழ், மணிப்பூர் உட்பட எல்லையிலிருந்து 10 கி.மீ.க்குள் வாழும் மக்கள் இந்தியா-மியான்மர் எல்லையைக் கடக்க முடியும். அவர்கள் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட நுழைவு/வெளியேறும் புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும்.


இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மியான்மர் இடையே பொருளாதார உறவுகளை அதிகரிக்க சுதந்திர இயக்க ஆட்சியை விரிவுபடுத்துவதற்கு பதிலாக, அது கட்டுப்படுத்தப்படுகிறது. மணிப்பூரில் உள்ள ஒரு முக்கிய எல்லை வர்த்தக நகரமான மோரே, சமீபத்திய வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் குறைந்து வருவதால், தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக மோரே மாறும் திறன் இப்போது நிச்சயமற்றதாகத் தெரிகிறது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையை உருவாக்கும் திட்டங்களும் தாமதமாகிவிட்டன.


இந்தியாவைப் போலவே, சீனாவும் மியான்மரில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அங்கீகரிக்கப்படாத இயக்கத்தைத் தடுக்க, சீனா மியான்மருடனான அதன் எல்லையின் முக்கிய பகுதிகளில் வேலி அமைத்துள்ளது. மியான்மரில் உள்ள சில இன ஆயுத அமைப்புகளுடன் (Ethnic Armed Organisations (EAOs)) சீனா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் செயல்படும் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் கும்பல்களை எதிர்த்துப் போராட அவற்றைப் பயன்படுத்தியுள்ளது. சீனா மியான்மரில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளங்களை முதலீடு செய்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவின் (United Nations Security Council (UNSC)) உறுப்பினராக, மியான்மரில் உள்ள பல்வேறு குழுக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு அதிக சுதந்திரம் சீனாவிற்கு உள்ளது.


அவசர தேவைகள்


இந்திய கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மர் எல்லையைத் தாண்டி ஆயுதமேந்திய குழுக்களுடன் உறவுகளை ஏற்படுத்தியுள்ளன. பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்ய இந்த தொடர்புகளை நிறுத்த வேண்டும். மியான்மரில் உள்ள பல்வேறு இன அமைப்புகளுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும். இது நிலைமையை உறுதிப்படுத்தவும் உறவுகளை மேம்படுத்தவும் உதவும். மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. நீண்ட காலத்திற்கு, மியான்மரில், குறிப்பாக மணிப்பூர் மற்றும் மிசோரம் எல்லைகளுக்கு அருகில், சுகாதாரம் மற்றும் கல்வி உட்கட்டமைப்பையும் இந்தியா உருவாக்க வேண்டும். எல்லைக்கு அருகில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது உள்ளூர் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இது மக்கள் இந்தியாவிற்குள் கடினமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் குறைக்கும். மேலும், இந்தியா, மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாடுகளுடன் இணைந்து, அந்த நாட்டில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒரு கூட்டாட்சி ஜனநாயக அரசியலை நோக்கி நகர்த்த ஊக்குவிக்க வேண்டும்.


வங்கதேசத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் மியான்மரில் உள்நாட்டுப் போர் ஆகியவை வடகிழக்கு இந்தியா தனது வெளிப்புற பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்துள்ளன. இந்த சவால்கள் காரணமாக, இந்திய அரசாங்கம் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க அதிக வளங்களை ஒதுக்க வேண்டும். மணிப்பூர் உட்பட எல்லைகளில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தபோதிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். நிலைமைகள் மேம்படும்போது இந்த இலக்கை விரைவில் அடைய இந்தியாவின் கொள்கை கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.


சஞ்சய் புலிபாகா பொலிடியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர். 




Original article:

Share:

எப்போதுமில்லாத நெருக்கம் : இந்தியா-கத்தார் இருதரப்பு நட்புறவு பற்றி…

 கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்தியாவும் கத்தாரும் தங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளன.


கத்தார் அதிபர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்தார். அவரது வருகை இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான ஆழமான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தியது. இரு நாடுகளும் எப்போதும் ஒரே உலகக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்வதில்லை. இருப்பினும், பிராந்திய மற்றும் உலக அரங்கில் ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். கத்தார் இந்தியாவை உலகளவில் அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டும் சக்தியாகக் கருதுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் அனைத்து முக்கிய நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை கொண்டுள்ளது. கத்தாரின் பொருளாதாரத்தில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 


அவர்கள் கத்தாரின் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய பங்களிப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியா கத்தாரை வலுவான செல்வாக்கு கொண்ட ஒரு வளைகுடா சக்தியாகக் கருதுகிறது. கத்தார் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் ஒரு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. கத்தார் பிராந்தியத்தில் புவிசார் ராஜதந்திர பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied natural gas (LNG)) தேவைகளில் 45% வழங்குகிறது. இந்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகம் மொத்த இருதரப்பு வர்த்தகத்தில் பாதியை உள்ளடக்கியது, இதன் மதிப்பு $15 பில்லியன் ஆகும். கத்தார் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை கொண்டுள்ளது. 


இந்த தளம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் விமானப்படைகளையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், கத்தார் ஹமாஸ் மற்றும் தலிபான் போன்ற குழுக்களை நடத்தியுள்ளது. இது பிராந்திய போராளி குழுக்களுடனும் உறவுகளை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியுடனான தனது உறவை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதை அடைய, இந்தியா கத்தார் தலைமையை நம்பியுள்ளது. 2023ஆம் ஆண்டில், எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கத்தார் அமீர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடிவு செய்தார். 


இந்த முடிவு இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவியது. டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் கத்தாரும் உறவுகளை ஒரு ராஜதந்திர கூட்டாண்மையாக மேம்படுத்த முடிவு செய்தன. இந்த முடிவு நீண்ட காலமாக தாமதமானது மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது. இந்தியா ஏற்கனவே வளைகுடா ஒத்துழைப்பு குழுக்களுடன் (Gulf Cooperation Council (GCC)) ஒரு ராஜதந்திர உறவைக் கொண்டுள்ளது. இந்தியா ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு குழுக்களுடன் ராஜதந்திர கூட்டாண்மைகளில் கையெழுத்திட்டுள்ளது. இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்காக இந்தியாவும் கத்தாரும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளிலும் உள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவும் கத்தாரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தங்கள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க ஒப்புக்கொண்டன. கத்தார் இந்தியாவில் $10 பில்லியன்களை முதலீடு செய்யும். இந்த முதலீடு உட்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் பிற துறைகளில் கவனம் செலுத்தும்.


இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான உறவுகள் குறித்து கூட்டு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் கவனம் செலுத்தின. இருப்பினும், அவர்களின் உச்சிமாநாட்டின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது. வளைகுடா பிராந்தியத்தில் நெருக்கடியான காலகட்டத்தில் கத்தார் அமீர் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான மோதல் உறுதியற்ற தன்மை பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை முன்மொழிந்தார். பிராந்திய அமைதி என்ற பெயரில் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். 


இந்தத் திட்டம் பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை அனைத்து வளைகுடா நாடுகளும் எதிர்த்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் அமைதி கவனமாக பார்க்கப்படுகிறது. "இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினை" குறித்து இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அது அவர்களின் சரியான நிலைப்பாடுகளைக் குறிப்பிடவில்லை. இந்த வாரம், அரபு நாடுகள், வளைகுடா ஒத்துழைப்புக் குழு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation (OIC)) ஆகியவை சந்திக்கின்றன. 


காசாவில் தற்போது நிலவிவரும் சவால்கள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்தியா-கத்தார் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளும் இந்தப் பிரச்சினைகளில் பொதுவான நிலையைக் கண்டறிய உதவியிருக்கலாம். அதே நேரத்தில், இந்தியா-கத்தார் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், டெல்லியும் தோஹாவும் (கத்தாரின் தலைநகரம்) வலுவான மற்றும் எதிர்கால இருதரப்பு கூட்டாண்மைக்கு உறுதியளித்துள்ளன.




Original article:

Share:

அரசியலமைப்பின் 75 வது ஆண்டில் கூட்டாட்சி தத்துவம் பலவீனமடைகிறது -மு.க.ஸ்டாலின்

 இந்தியாவின் தேசிய இணையத்தளமான india.gov.in இந்தியா ஒரு  இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக குடியரசு என்றும், கூட்டாட்சி கட்டமைப்பைப் பின்பற்றும் பாராளுமன்ற அரசாங்க அமைப்பைக் கொண்டதாகவும் உள்ளது என கூறுகிறது. இந்தக் கொள்கை நாட்டின் நிறுவனர்களால் அமைக்கப்பட்டது மற்றும் அரசியலமைப்பிலும் இது  பிரதிபலிக்கிறது.


இருப்பினும், 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது. தற்போதைய ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற அமைப்பு ஆகியவற்றின் கொள்கைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.


எனது கட்சி அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கீழ் இந்தியா கண்ட மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு எதிரான எல்லா பிரச்சினைகளுக்கும் நான் செல்லப் போவதில்லை. மத்திய அரசு கல்வியை சிறப்புரிமைப் பெற்ற வகுப்பினருக்கு (privileged class) மட்டுமே கிடைக்கச் செய்து வருவதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, சமீபத்திய வரைவு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிமுறைகள், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் மூலம் நடக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) கீழ் உள்ள தமிழ்நாடு, இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கும்.


சமூக நீதிக்காக நிற்கும் திராவிட மரபில் இருந்து வந்த ஒருவராக, வளர்ச்சி அனைத்து மக்களையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கை கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை இயக்குகிறது.


பல்வேறு கொள்கைகள் மூலம் தமிழ்நாடு கல்வியில் முன்னணி மாநிலமாக மாறியுள்ளது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்துவதன் மூலம் அதன் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், மாநில அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநரின் உரையைப் படிக்க பலமுறை மறுத்து வருகிறார். இது அரசியல் சிதைவையும் அரசியலமைப்பின் மீதான மரியாதையின்மையையும் காட்டுகிறது. இது கூட்டாட்சியை பலவீனப்படுத்துகிறது மற்றும் மக்களின் விருப்பத்தை புறக்கணிப்பதன் மூலம் ஜனநாயகத்தை நேரடியாக சவால் செய்கிறது. வலுவான அரசியல் வரலாறு மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளைக் கொண்ட கட்சியான திமுக, ஆளுநரின் பிடிவாதமான நடவடிக்கைகளை விமர்சித்தபோது அரசியலமைப்பை எதிர்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.


இருப்பினும், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதற்காக, அரசியலமைப்பின்படி, மாநில அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறைகள் நாடு முழுவதிலும் உள்ள திறமையாளர்களுக்கான வழிகளைத் திறக்கின்றன மற்றும் அதன் உயர்கல்வி நிறுவனங்கள் வேலைகளுக்குத் தேவையான திறன்களை வழங்குகின்றன. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தொழில்முறை கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக, வளர்ந்து வரும் எந்தவொரு பொருளாதாரத்திற்கும் தேவையான மனித வளத்தை அரசு உருவாக்குகிறது. மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன், திமுக அரசு மேலும் தொழில்மயமாக்கலுக்கு தேவையான உள்கட்டமைப்பை வழங்கி வருகிறது. இது முதலீடுகளுக்கு, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து மிகவும் விரும்பத்தக்க இடமாக மாற்றியுள்ளது.


சமூக நீதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, இதனால் பல விளிம்புநிலை மக்கள் பாகுபாட்டைக் கடந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவியது. இருப்பினும், இன்று, தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து பாகுபாட்டை எதிர்கொள்கிறது. இது முக்கியமான நிதியை வெளியிட தாமதப்படுத்துகிறது அல்லது மறுக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கான பணம் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கான இழப்பீடு ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக, மாநிலம் நிதிச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.


கடந்த மூன்று ஆண்டுகளில், கல்விக்கான நிதி நீண்ட காலமாகக் குறைக்கப்பட்டுள்ளது அல்லது தாமதமாகியுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும் ஆசிரியர்களின் வேலைகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சமயத்திலும், திமுக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாக மாநிலம் அதிக கல்வியறிவு விகிதங்களை அடைந்துள்ளது. இந்தத் திட்டங்கள் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் தொடர்ந்து படிக்க உதவுகின்றன.


மாநில அரசு பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, ஆனால் மத்திய அரசு அதன் முயற்சிகளை ஆதரிக்கவில்லை. இந்த ஆதரவின்மை மாநிலத்தின் மீது நிதி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், திராவிட மாதிரி மக்கள் இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதாந்திர நிதி உதவி போன்ற பிற இந்திய மாநிலங்களில் பலருக்கு கிடைக்காத சலுகைகளை குடிமக்கள் இன்னும் பெறுகின்றனர்.


மாநிலத்தை தனித்து நிற்க வைக்கும் சமூக நலத் திட்டங்களின் விவரங்களை நான் பட்டியலிட விரும்பவில்லை. நிதி குறைப்பு மூலம் அவற்றைக் கைவிடுவதற்கான நுட்பமான அழுத்தங்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டாலும், அரசாங்கம் அவற்றைக் கைவிடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் என்ற அரசியலமைப்பின் இலக்கைப் பின்பற்றி, இந்த திராவிட மாதிரி அரசாங்கம் அனைவருக்கும் செழிப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைக்கும் அடித்தளமான நமது அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், ஜனநாயகத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்துவதில் மாநில அரசுகளின் முக்கியப்பங்கை நான் வலியுறுத்துகிறேன். அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி அமைப்பை ஆதரிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அதே வேளையில் உள்ளூர் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்க மாநிலங்களை அனுமதிக்கிறது. சமூக நீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் வலுவான கவனம் செலுத்தும் தமிழ்நாடு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த அரசு தலைமையிலான முயற்சிகள் பெரிய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்தியா தனது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்கு பார்வையை அடைய, கூட்டுறவு கூட்டாட்சி மூலம் மத்திய அரசும் மாநிலங்களும் சம அளவில் இணைந்து செயல்பட வேண்டும்.


இந்த முக்கியமான தருணத்தை நாம் கொண்டாடும் வேளையில், இந்தியாவின் வளர்ச்சி நியாயமானதாகவும், நிலையானதாகவும், அனைவருக்கும் பயனளிப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம். குடிமக்களாக, நாம் நீதி, சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் வெற்றியும் நாட்டின் பெருமையை அதிகரிக்கும் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.


திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக உள்ளார்.




Original article:

Share: