தண்டனை குறைப்புக்கான சட்டம் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• சில வகையான குற்றவாளிகளுக்கு விதிவிலக்குகளுடன், பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Suraksha Sanhita (BNSS)) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (Code of Criminal Procedure (CrPC)) ஆகிய சட்டங்களின் கீழ், தண்டனை முடிவதற்கு முன்பே கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு.


• நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மறுபரிசீலனையில்: ஜாமீன் வழங்குவதற்கான கொள்கை மற்றும் உத்தி குறித்த" (In Re: Policy Strategy for Grant of Bail) வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. சிறைகளில் நெரிசல் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க நீதிமன்றமே 2021-ல் தொடங்கிய ஒரு தானாக முன்வந்த வழக்கு இது.


• உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பை எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த தீர்ப்பு மாற்றியது. 2013-ஆம் ஆண்டு முதல் இரண்டு தனித்தனி தீர்ப்புகளில், மாநிலங்கள் தாங்களாகவே தண்டனைகளைக் குறைக்க முடியாது என்றும், கைதிகள் முதலில் தண்டனைக் குறைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உங்களுக்குத் தெரியுமா?:


• தண்டனை குறைப்புக்கான சட்ட அதிகாரம் (power of remission) என்பது ஒரு குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு தண்டனைக் காலத்தைக் குறைக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின், பிரிவு 473 (மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432) மாநில அரசாங்கங்களுக்கு "எந்த நேரத்திலும்" தண்டனைகளை குறைக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. தண்டனையிலிருந்து விடுதலை அளிப்பதற்கு முன் நிபந்தனைகளை நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு. 

நிபந்தனைகளை விதிக்கலாமா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்யலாம். குற்றவாளி வழக்கமான இடைவெளியில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கலாம்.


—இந்த நிபந்தனைகளில் ஏதேனும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், மாநிலங்கள் வழங்கப்பட்ட தண்டனை விலக்கை ரத்து செய்து, பிடியாணை (warrant) இல்லாமல் குற்றவாளியை மீண்டும் கைது செய்யலாம் என்று விதி கூறுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவுகள் கீழ் தண்டனைகளைக் குறைக்கும் குடியரசுத்தலைவர்   மற்றும் ஆளுநரின் அதிகாரத்திலிருந்து வேறுபட்டது.


• மாநில அரசாங்கத்தின் தண்டனை விலக்கு அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றை BNSS-ன் பிரிவு 475 (மற்றும் CrPC இன் பிரிவு 433A)-ன் கீழ் காணலாம். ஆயுள் தண்டனை அனுபவித்து மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும்வரை அரசு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது.


• BNSS-ன் பிரிவு 475 மற்றும் CrPC-ன் பிரிவு 433A ஆகியவை விடுதலை வழங்குவதற்கான மாநிலத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன. ஆயுள் தண்டனை அனுபவித்து மரண தண்டனைக்குரிய குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிக்கும் வரை அரசு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது.


• ஒரு குற்றவாளி அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கும்போது தண்டனை விலக்கு தொடங்குகிறது என்று BNSS மற்றும் CrPC கூறுகின்றன. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் தகுதி நிபந்தனைகளை பரிந்துரைக்கும் நிவாரணக் கொள்கைகளைக் கொண்டிருப்பதால், நிவாரண விண்ணப்பம் எப்போது அவசியமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




• தேசிய குற்றப் பதிவுப் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் 131.4% கைதிகள் உள்ளனர். மொத்த கொள்ளளவு 4,36,266-ஆக இருந்த நிலையில், 5,73,220 கைதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இந்த எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான கைதிகள் (75.8%) இன்னும் விசாரணைக் கைதிகளாகவே தங்கள் வழக்குகளில் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.




Original article:

Share:

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 101(4) என்ன கூறுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


. அமிர்தபால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act (NSA)) கீழ் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 2023 முதல் திப்ருகார் சிறையில் உள்ளார். 2024-ஆம் ஆண்டு, சிறையில் இருந்தபோதே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அவரது வருகை 2% மட்டுமே இருந்ததாக PRS சட்டமன்ற ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.


• கடந்தகால விடுப்பு விண்ணப்ப அறிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவதற்கான பொதுவான காரணமாக அவர்களின் சொந்த அல்லது சில உறவினர்களின் நோய்களை பட்டியலிடுகின்றன. இருப்பினும், உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாகவும் விடுப்பு கோரியுள்ளனர். அவர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


• 2023-ஆம் ஆண்டில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கோஷி நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய் சிறையில் இருந்ததால், நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான 23 அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி கோரினார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


• ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 60 நாட்களுக்கு மேல் வராவிட்டால் அந்த இடத்தை காலியாக உள்ளதாக சபை "அறிவிக்க" வேண்டும். இந்தப் பிரச்சினை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால், அமிர்தபால் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாததால் தனது இடத்தை இழக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.


உங்களுக்குத் தெரியுமா?:


• நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு உறுப்பினரும் அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் அனைத்து கூட்டங்களுக்கும் வராமல் இருந்தால். அந்த உறுப்பினரின் இருக்கை காலியாக இருப்பதாக அவை அறிவிக்கலாம். இருப்பினும், 60 நாட்கள் என்பது "சபை ஒத்திவைக்கப்பட்ட அல்லது தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்ட எந்தவொரு காலகட்டத்தையும்" கணக்கில் எடுத்துக்கொள்ளாது.


• நடைமுறையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அடிப்படையில் மட்டுமே வராத காலம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, அமிர்தபால், மக்களவையின் ஒரு கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றபோது அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் அசாமில் மாநிலத்தில் காவலில் வைக்கப்பட்டார். இதுவரை அவர் தவறவிட்ட அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது.


• இருப்பினும், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பிரிவு 101-(4) செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் விளைவாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை இழந்ததாகவும் ஒரு நிகழ்வு கூட தனக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.


• பிரிவு 101(4)-ல் உள்ள முக்கியமான சொற்றொடர் "சபையின் அனுமதியின்றி" (without permission of the House) என்பதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வராததற்கான ஒப்புதலைப் பெற்றால் தங்கள் இருக்கை  இழப்பதைத் தவிர்க்கலாம். நீண்ட நாட்கள் வராததற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். அவர்கள் அதை “சபை அமர்வுகளில் உறுப்பினர்கள் வராதது குறித்த குழுவுக்கு” அனுப்புகிறார்கள். நாடாளுமன்றக் குழு இதுபோன்ற பிரச்சனைகளைக் கையாளுகிறது.


• ஒவ்வொரு விடுப்பு விண்ணப்பத்திலும் குழு பரிந்துரைகளை வழங்குகிறது. பின்னர், அவை சம்பந்தப்பட்ட சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. இருப்பினும், நடைமுறையில், விண்ணப்பங்கள் அரிதாகவே நிராகரிக்கப்படுகின்றன. "ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அமிர்தபால், சிறையில் இருக்கிறார். ஜாமீன் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் குழுவிற்கு கடிதம் எழுதவும், அவையில் பங்குபெறாமல் இருப்பதற்கு அனுமதி கோரவும் அவருக்கு முழு உரிமையும் உள்ளது" என்று ஆச்சாரி கூறினார்.




Original article:

Share:

“CAMPA” மற்றும் ஈடுசெய்யும் காடு வளர்ப்பு என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) ₹13.86 கோடியை தவறாகப் பயன்படுத்தியதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியது.


2019-2022 காலகட்டத்தில் இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் (சமீபத்திய தணிக்கை அறிக்கை, உத்தரகாண்டின் வனப் பிரிவுகளால் ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.


நிதி கிடைத்த ஒரு வருடத்திற்குள் அல்லது இரண்டு வளரும் பருவங்களுக்குள் காடு வளர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று CAMPA வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை 37 வழக்குகளில் சிக்கல்களைக் கண்டறிந்தது. இந்த வழக்குகளில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுசெய்யும் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதி அனுமதி பெற்ற பிறகும் இது நடந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. காடுகள் மதிப்புமிக்க இயற்கை வளங்கள் ஆகும். அவை பல சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் கார்பன் பிரித்தெடுத்தல், நிரை மறுசுழற்சிப்படுத்துதல் மற்றும் மண் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். வளர்ச்சி மற்றும் தொழில்துறை தேவைகள் காரணமாக, காடுகள் அளிக்கப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மொழியில் கூறப்படுவது போல், "காடுகள் அல்லாத பிற விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது" என்று அழைக்கப்படுகிறது.


2. காடு வளர்க்கப்பட்ட நிலம் உடனடியாக காடாக மாறாது. மரங்கள் வளர்ந்து நன்மைகளை வழங்க சில காலம் தேவைப்படும். இந்த தாமதம் வனப் பொருட்கள் மற்றும் சேவைகளை இழக்க வழிவகுக்கிறது. இவற்றில் மரம், மூங்கில், எரிபொருள் மரம் மற்றும் விதை பரவல் ஆகியவை அடங்கும். ஒரு புதிய காடு இதே போன்ற நன்மைகளை வழங்க குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் ஆகும். இந்த தாமதத்தை ஈடுசெய்ய, சட்டம் 50 ஆண்டுகளுக்கு இழந்த காடுகளின் நிகர தற்போதைய மதிப்பை (Net Present Value (NPV)) கணக்கிட வேண்டும் என்று கோருகிறது. வன நிலத்தைப் பயன்படுத்தும் பயனர் நிறுவனங்கள் (User agencies) இந்தத் தொகையை செலுத்த வேண்டும்.


3. பயனர் நிறுவனங்கள் (User agencies) என்று அழைக்கப்படும் தனியார் நிறுவனங்கள், தாங்களாகவே காடு வளர்ப்பை மேற்கொள்வதில்லை. அதற்கு பதிலாக, மாநில அரசு அந்த பணியை மேற்கொள்கிறது. இருப்பினும், பயனர் நிறுவனம் முழு செலவையும் ஏற்க வேண்டும். இதில் காடு வளர்ப்புக்கான நிலத்தை வாங்குவதும் அடங்கும். காடு வளர்ப்புக்குப் பிறகு, மாநில அரசு நிலத்தை பராமரிப்புக்காக வனத்துறையிடம் ஒப்படைக்கிறது.


4. எனவே, ஒரு நிறுவனம் வன நிலத்தை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்பினால், புதிய மரங்களை நடுவதற்கு பணம் செலுத்த வேண்டும். நிகர தற்போதைய மதிப்பு (NPV) மற்றும் சில கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.


5. CAMPA இந்தப் பணத்தைக் கையாள உருவாக்கப்பட்டது. வன நிலத்தைப் பயன்படுத்தும் நிறுவனம் அல்லது நிறுவனத்திடமிருந்து காடு வளர்ப்பு இழப்பீட்டுப் பணம் மற்றும் NPV-ஐ மாநில அரசு சேகரிக்கிறது. இந்தப் பணம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், ஒன்றிய அரசு அதை மரங்களை நடவு செய்வதற்காக அல்லது தொடர்புடைய திட்டங்களுக்காக மாநில அரசுக்கு திருப்பி அனுப்புகிறது.


6. இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிச் சட்டம், (Compensatory Afforestation Fund Act 2016) ஒன்றிய அளவில் தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தையும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் மாநில இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தையும் அமைத்தது. இது ஒரு தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியையும் (Compensatory Afforestation Fund (CAF)) உருவாக்கியது மற்றும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் தனித்தனி மாநில இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிகளையும் உருவாக்கியது.


7. 1980களில் இருந்து ஈடுசெய்யும் காடு வளர்ப்பு என்ற யோசனை இருந்து வருகிறது. இது வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act of 1980) 1980-லிருந்து  உருவானது. இது வன நிலத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்கியது. 1990-கள் மற்றும் 2000-களில் கோதவர்மன் வழக்கின் விசாரணைகளின்போது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் இது நடைமுறைபடுத்தப்பட்டது.


1996-ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற வன அதிகாரியான கோதவர்மன் திருமுல்பாட் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். பின்னர், நீதிமன்றம் வன நிலத்தின் அர்த்தத்தை விரிவுபடுத்தியது. இப்போது, ​​அரசாங்க பதிவுகளில் காடாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிலமும், அது யாருடையது அல்லது எப்படி வகைப்படுத்தப்பட்டது என்பதைப் பொருட்படுத்தாமல், காடாகக் கருதப்பட்டது. சேதமடைந்த காடுகளை மீட்டெடுக்க பணம் செலுத்தவும் தீர்ப்பில் கோரப்பட்டது. இந்த தீர்ப்புகள் CAMPA-ஐ நிறுவ உதவியது.


8. மாநிலங்கள் பயனர் நிறுவனங்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதியில் (Compensatory Afforestation Fund (CAF)) செலுத்துகின்றன. பின்னர், இந்தப் பணம் மாநில CAF-களுக்கு அவர்களின் உரிமையின்படி வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும், மாநிலங்கள் தங்கள் பங்கில் 90% மட்டுமே பெறுகின்றன. மீதமுள்ள 10% நிர்வாகச் செலவுகளுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.


வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act, 2006)


1. 2006-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் (Recognition of Forest Rights) Act), வன நிலம் மற்றும் வன வளங்கள் மீதான அவர்களின் வரலாற்று உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் பழங்குடியினர் மற்றும் வனவாசி சமூகங்களுக்கு அதிகாரம் வழங்கியது.


2. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் வலைத்தளத்தின்படி, வன உரிமைகள் சட்டமானது சுய சாகுபடி மற்றும் வாழ்விட உரிமைகளை வழங்கியது. இவை பொதுவாக தனிநபர் உரிமைகளாகக் கருதப்படுகின்றன; மேய்ச்சல், மீன்பிடித்தல் மற்றும் காடுகளில் நீர்நிலைகளை அணுகுதல் போன்ற சமூக உரிமைகள், பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கான (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) வாழ்விட உரிமைகள் மற்றும் நிலையான பயன்பாட்டிற்காக எந்தவொரு சமூக வன வளத்தையும் பாதுகாக்க, மீண்டும் உருவாக்க அல்லது நிர்வகிக்கும் உரிமை ஆகியவை அடங்கும். இது சமூகத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேம்பாட்டு நோக்கங்களுக்காக வன நிலத்தை ஒதுக்குவதற்கான உரிமைகளையும் வழங்குகிறது.


3.  இந்தச் சட்டம் கிராம சபை மற்றும் உரிமையாளர்கள் பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள், காடுகள், நீர்நிலைகள் மற்றும் பிற உணர்திறன் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு பொறுப்பானவர்கள் என்று கூறுகிறது. மேலும், இந்த வளங்கள் அல்லது பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நிறுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம், பழங்குடி சமூகத்தை பாதிக்கும் உள்ளூர் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முக்கியமான முடிவுகளை எடுப்பதில் கிராம சபைக்கு உதவும் அதிகாரத்தை வழங்குகிறது.




Original article:

Share:

தொழில்துறையின் வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் பிரதமரின் அமெரிக்கப் பயணம் -சந்திரஜித் பானர்ஜி

 பிரதமரின் சுருக்கமான பயணம் மற்றும் அதன் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் இந்தியா-அமெரிக்க பொருளாதார உறவை அதிகரிக்க உதவும்.


பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுருக்கமான மற்றும் அதிகாரப்பூர்வ பயணம் பல வழிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் அவர்களின் பொருளாதார உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்த வருகை இரு நாட்டு தரப்பிலும் உள்ள தொழில்களுக்கு பல நன்மைகளைத் தந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


இந்திய தொழில்துறையைப் பொறுத்தவரை, இந்த முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை, இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் அதிக ஈடுபாடு கொள்ளவும், அதன் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேம்படுத்தவும், பாதுகாப்புத் துறையில் அதன் பங்கை அதிகரிக்கவும் உதவும்.


வர்த்தக உந்துதலை நோக்கி


முதலாவதாக, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement (BTA)) முதல் கட்டத்தைத் தொடங்க ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதில், வர்த்தக தடைகளைக் குறைத்து, ஒழுங்குமுறை தொடர்பான செயல்முறைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். இது இந்தியாவை அவர்களின் விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கவும் உதவும். 2030-ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டுவதே இதன் இலக்கு ஆகும். இந்த இலக்குதான் லட்சியமானது என்றாலும், குறிப்பாக துறைசார் துணை இலக்குகள் மற்றும் எளிமையான எல்லை தாண்டிய நடைமுறைகள் இதனுடன் சாத்தியமானதாகும்.

இரு நாட்டு தரப்பினரின் வரிகளையும் நிவர்த்தி செய்ய ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொழில்துறை பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு உழைப்பு மிகுந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. விவசாயப் பொருட்களும் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தத் திட்டம் இரு நாடுகளிலிருந்தும் ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் உட்பட பசுமை முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சியும் இதனுடன் உள்ளது.


இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) 2020-ம் ஆண்டில் தனது அறிக்கையில் இந்த இலக்கை அங்கீகரித்துள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்தகம் (pharma), ஆடைகள் மற்றும் ஜவுளி (garments and textiles) போன்ற துறைகள், திட்டம்-500 (Mission-500)-க்கான கூட்டு உறுதிப்பாட்டால் பலனடையும் என்று நம்புகிறது.


அமெரிக்க சந்தை ஏற்கனவே இந்திய ஏற்றுமதிகளுக்கு ஒப்பீட்டளவில் திறந்திருக்கும் நிலையில், நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும். குறிப்பாக, இந்தியாவிற்கு அதிக அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை இது எளிதாக்கும்.


ஒரு தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான கவனம்


இரண்டாவதாக, அமெரிக்கா-இந்தியா உறவை மாற்றுதல் உத்திக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் (Transforming the Relationship Utilizing Strategic Technology (TRUST)) இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர  மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இது தனியார் நிறுவனங்கள் தங்கள் அரசாங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.


TRUST முன்முயற்சியானது பாதுகாப்பு (defense), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), குறைக்கடத்திகள் (semiconductors), குவாண்டம் கம்ப்யூட்டிங் (quantum computing), உயிரி தொழில்நுட்பம் (biotechnology), ஆற்றல் மற்றும் விண்வெளி (energy and space) உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சி, முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை (innovation and technology collaborations) வலுப்படுத்தும்.


கூடுதலாக, INDUS புதுமை முயற்சி (INDUS Innovation initiative) மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


AI பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக வளர்ந்து வருகிறது. AI உள்கட்டமைப்பு குறித்த அமெரிக்க-இந்திய சாலை வரைபடம் (U.S.-India Roadmap) தரவு மையங்கள், கணினி சக்தி மற்றும் AI மாதிரிகளில் முதலீடுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி இந்திய AI தொடக்க நிறுவனங்களுக்கு அதிக நிதி வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இது நிதி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் பெரிய முதலீடுகளை ஈர்க்கக்கூடும். இந்த முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய தெற்குலக நாடுகளுக்கும் வளர்ச்சியை ஆதரிக்கும்.


மூன்றாவதாக, பாதுகாப்புத் துறை முயற்சிகள் இந்தியா-அமெரிக்க இராஜதந்திர கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றன. இது அதிகரித்த தொழில்நுட்ப பரிமாற்றங்கள், கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு மூலம் நிகழ்கிறது. இந்த ஆண்டு, அமெரிக்க-இந்திய முக்கியப் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான 10 ஆண்டு கட்டமைப்பு தொடங்கப்பட்டது. இது அவர்களின் பாதுகாப்பு உறவில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளின் கூட்டு உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் இதில் எட்டப்பட்டன.


ஈடுசெய் விதிகள் (offset clauses) சேர்க்கப்பட்டால், இந்தியத் தொழில்கள் வருகையின் போது அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களிலிருந்து பெரிதும் பயனடையலாம்.



          ஈடுசெய் விதிகள் : ஒப்பந்தங்களில் உள்ள ஈடுசெய் உட்பிரிவுகள், பொதுவாக வர்த்தக ஒப்பந்தங்களில் காணப்படுகின்றன. இதில் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்கள், குறிப்பாக பாதுகாப்பு கொள்முதல் ஆகியவை அடங்கும். எந்த இழப்பீடுகளையும் ஈடுசெய்ய ஒரு ஈடுசெய் விதி (offset clause) ஒப்பந்தத்தில் சேர்க்கப்படலாம்.


நான்காவதாக, எரிசக்தி ஒத்துழைப்பு ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்த விரும்புவதால், நீண்டகால நாடுகளின் இராஜதந்திர இணைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. உலகளாவிய எரிசக்தி நிலைத்தன்மை மற்றும் மலிவு விலையை மேம்படுத்த ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை நாட்டு தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியாவின் 2025-26 மத்திய பட்ஜெட்டில் சிறிய மட்டு உலைகளை (small modular reactors (SMRs)) உருவாக்குவதில் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றும் திட்டங்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா லட்சிய நிகர-பூஜ்ஜிய இலக்குகளைக் (net-zero goals) கொண்டிருப்பதால், அதன் பெரிய இயற்கை எரிவாயு இருப்புக்களுடன் அமெரிக்கா நம்பகமான எரிசக்தி விநியோகர்களாக இருக்க முடியும். இந்தக் கூட்டாண்மை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்.


ஐந்தாவது, இரு நாடுகளும் கூட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுடன் இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) முன்னேற்றுவதாக உறுதியளித்துள்ளன. இரு நாடுகளும் இந்த பிராந்தியங்களில் பன்முக ஏற்பாடுகளில் இணைகின்றன. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்தக்கூடும். இது இரயில்வே, சாலைகள், திறன்மிகு நகரங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்கள் போன்ற பகுதிகளில் இந்திய தொழில்களின் அதிக பங்கேற்புக்கு வழிவகுக்கும். இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் கடலுக்கடியில் கேபிள்கள் திட்டம் பற்றிய குறிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சேவை ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.




உயர் கல்வியில் இணைப்புகள்


ஆறாவது, கல்வியில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் முடிவு செய்தனர். இதில் இந்தியாவில் அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுவதும் அடங்கும். இந்த நடவடிக்கை இந்திய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு பயனளிக்கும். கூடுதலாக, சட்டப்பூர்வ இயக்கம் சீராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த உந்துதலைத் தொடர இரு நாட்டு அரசாங்கங்களுடனும் இணைந்து பணியாற்ற இந்திய தொழில்துறை (Indian industry) உறுதிபூண்டுள்ளது. அவர்கள் வணிக சார்பு கொள்கைகளுக்காகவும், செயல்படுத்தலில் தொழில்துறை கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதற்காகவும் வாதிடுகின்றனர். ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான சீர்திருத்த உணர்வோடு, இந்த வருகையின் நன்மைகளை முழுமையாக உணர முடியும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை உயர் வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்த உதவும். சுருக்கமாக, நரேந்திர மோடியின் அமெரிக்க வருகை, ஒரு தொழில்துறை கண்ணோட்டத்தில், வெறும் இராஜதந்திர திட்ட வெற்றியைவிட அதிகமாகும். இது உலகளாவிய கூட்டாண்மைகளைப் பயன்படுத்தி பொருளாதார சக்தியாக மாறுவதற்கான ஒரு திட்டமாகும். இந்தியா அதன் இராஜதந்திர கூட்டணி நாடுகளுடன் இணைந்து புதுமைகளை உருவாக்கி செழிக்க முடியும்.


சந்திரஜித் பானர்ஜி இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.




Original article:

Share:

தெற்கின் அசௌகரியம் : பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வரைவு விதிமுறைகள் குறித்து . . .

 ஒன்றியத்திலிருந்து வழங்கப்பட்ட சட்டம், மாநிலங்களின் முழுமையான சட்டங்களை விட அதிக அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடாது.


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) அதன் வரைவு விதிமுறைகள் (draft regulations) குறித்து கருத்து தெரிவிக்க ஒரு வாரத்திற்கும் குறைவான காலக்கெடு மீதமுள்ள நிலையில், பாஜக ஆளாத மாநிலங்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு மாநாட்டில், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை விதிமுறைகளை கடுமையாக எதிர்த்தன. இந்த விதிகள் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும், மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைக் கட்டுப்படுத்தும் என்று அவர்கள் வாதிட்டனர்.


இது இரண்டாவது கூட்டம் ஆகும். முதலாவது பெங்களூருவில் நடந்தது, அங்கு இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பங்கேற்றன. அதே நேரத்தில், பஞ்சாப் மாநிலம் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில், முக்கிய எதிர்க்கட்சிகள்கூட ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில பிராந்திய கட்சிகள் தனிப்பட்ட முறையில் கவலைகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை (Vice-chancellor) தேர்ந்தெடுப்பதிலும் நியமிப்பதிலும் கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் யுஜிசியின் திட்டம் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில் (search-cum-selection committees) வேந்தர் (பொதுவாக ஆளுநர்), யுஜிசி தலைவர் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் ஆகியோரின் பரிந்துரையாளர்கள் இடம்பெறுவார்கள் என்று இந்த புதிய விதிகள் முன்மொழிகின்றன. இந்த நிபுணர் குழுக்களை உருவாக்குவதற்கு அவை பொறுப்பாக இருந்தபோதிலும், இந்த மாற்றம் மாநில உயர்கல்வித் துறைகளை செயல்முறையிலிருந்து நீக்குகிறது.


பின்னர் இந்தக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலில் இருந்து வேந்தர் அவர்கள் துணைவேந்தரை நியமிப்பார். இந்த அமைப்பு "தெளிவின்மையை நீக்கி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது" (eliminates ambiguity and ensures a more transparent process) என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறுகிறார். இருப்பினும், இந்த அதிகார மையப்படுத்தலை மாநிலங்கள் எதிர்க்கின்றன. இது பல மாநில பல்கலைக்கழகங்களை, குறிப்பாக தமிழ்நாட்டில் தலைமை இல்லாமல் இருப்பதைச் செய்துள்ளது.


புதிய விதிமுறைகள் கல்வித் தரத்தை பலவீனப்படுத்தும், வணிகமயமாக்கலை அதிகரிக்கும் மற்றும் கல்வியில் அதிக அரசியலைக் கொண்டுவரும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பது குறைந்துவிடும் என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதே நேரத்தில், மாநிலங்கள் மற்றொரு கவலையை எழுப்பியுள்ளன. அரசு நடத்தும் உயர்கல்விக்கான பெரும்பாலான நிதிச் சுமையை அவர்கள் இன்னும் சுமந்து கொண்டிருக்கும்போது, ​​பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து அவர்கள் ஏன் விலக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.


கல்விக்கு அப்பால், ஒரு பெரிய அரசியலமைப்பு பிரச்சினை உள்ளது. இது மத்திய-மாநில உறவுகளை கேள்விக்குள்ளாக்குகிறது. மத்திய சட்டத்தின் (central law) கீழ் மத்திய அரசால் இயற்றப்பட்ட விதிகள் ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீற முடியுமா?


இந்த சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்கள் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு உயர் மட்டக் குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அவர்கள் நீதிமன்றத்தில் இந்த புதிய சட்ட வரைவு தொடர்பாக சில விதிமுறைகளை சவால் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இது பிரச்சினை அரசியல் ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும் மாறி வருவதைக் காட்டுகிறது. இந்த கவலைகளை யுஜிசி புறக்கணிக்கக்கூடாது. புதிய விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன், கூட்டாட்சி எதிர்ப்பு விதிகளை வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.




Original article:

Share:

நீதிபதிகளின் குழப்பம் : நீதித்துறை மற்றும் அதன் பொறுப்புடைமை குறித்து . . .

 பொறுப்புத்தன்மை (accountability) மற்றும் சுதந்திரம் (independence) ஆகிய இரண்டும் நீதிபதிகளுக்கு சம முக்கியமானதாக இருக்க வேண்டும்.


உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் என்ற லோக்பாலின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அதற்கு தடை விதித்ததும் வெறும் சட்டக் கேள்வியை எழுப்புவதில்லை. இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொறுப்புத் தன்மை இரண்டையும் பாதிக்கிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Corruption Act) ‘பொது ஊழியர்கள்’ (public servants) என்ற வரையறைக்குள் வந்தாலும், அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் லோக்பாலுக்குப் பதில் அளிக்கும் பட்சத்தில் நீதித்துறை சுதந்திரம் பாதிக்கப்படும் என்று பலர் நம்புவதால், நீதிமன்றமும், அரசு சட்ட அதிகாரிகளும், மூத்த வழக்கறிஞர்களும் லோக்பாலின் முடிவை கவலையளிப்பதாகக் கண்டனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.


 லோக்பாலின் கருத்தானது, முதல் பார்வையில் தவறானது போல் தெரிகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதன் அதிகார வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதற்கான எந்தவொரு தெளிவான வழிகாட்டுதல் எதுவும் இல்லை. 

கடந்த மாதம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக்பால், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி (CJI) மீதான ஊழல் புகாரை தள்ளுபடி செய்தது. லோக்பால் சட்டம், 2013, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்காது என்று அது கூறியது. நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் சட்டத்தில் உள்ள "நபர்கள்" என்ற குறிப்பு, அரசியலமைப்பால் நிறுவப்பட்டதால் உச்ச நீதிமன்றத்திற்கு பொருந்தாது.


இருப்பினும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து லோக்பால் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தது. மாநில சட்டங்களால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் சட்டப்பூர்வ அமைப்புகள் என்று அது கூறியது. எனவே, அவற்றின் நீதிபதிகள் லோக்பால் சட்டத்தின் பிரிவு 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி "நபர்கள்" என்ற வரையறையின் கீழ் வருகிறார்கள்.


”கே. வீராசாமி vs இந்திய ஒன்றியம்-1991” (K. Veeraswami vs Union of India) வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் முக்கிய கவலையாக இருந்தது. இந்திய தலைமை நீதிபதியை (CJI) கலந்தாலோசிக்காமல் நீதிபதிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிபதிகள் பொது ஊழியர்கள் என்றும் அது கூறியது.


இந்தக் கொள்கையைப் பின்பற்றி, லோக்பால் தலைமை நீதிபதிக்கு ஒரு புகாரை அனுப்பியது. லோக்பாலின் தீர்ப்பு மதிப்பாய்வில் இருக்கும்போது, ​​ஒரு நீதிபதி மீது நம்பகமான ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் அதன் பொறுப்புத் தன்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.


தற்போது, ​​நீதிமன்றம் அத்தகைய வழக்குகளை ஒரு உள் செயல்முறை மூலம் கையாளுகிறது. ஒரு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை நீதிபதி அல்லது குடியரசுத் தலைவரிடம் புகார் வந்தால் மட்டுமே இந்த செயல்முறை தொடங்குகிறது. குற்றச்சாட்டுகள் உண்மையாகத் தோன்றினால், பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். நீதிபதியை ராஜினாமா செய்யச் சொல்லலாம், நீதித்துறைப் பணி மறுக்கப்படலாம் அல்லது நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படலாம்.


சில வழக்குகளில், நீதிபதிகள் ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்கள். இருப்பினும், ஊழல் சம்பந்தப்பட்டதா என்பது உட்பட, இடமாற்றத்திற்கான காரணம் ஒருபோதும் வெளிப்படுத்தப்படுவதில்லை. தற்போதைய அமைப்பு போதுமானதா அல்லது அதன் மேற்பார்வையின் கீழ் சுதந்திரத்தனமான வழக்குத் தொடரலை உள்ளடக்க வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். நீதித்துறைக்கு பொறுப்புத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டும் சமமாக முக்கியம் என்பது இங்கு தெளிவுப்படுத்தியுள்ளது.




Original article:

Share:

கடன் உத்தரவாதங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? - ஹிமாத்ரி சேகர் சக்ரபர்த்தி, பவுலோமி பட்டாச்சார்யா

 அபாயங்கள் இருப்பதால், அரசாங்க ஆதரவு தானாகவே இருக்கக்கூடாது. மாறாக, அது தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.


"குழந்தைக்குப் உணவூட்டுங்கள், குழந்தையைப் பாதுகாத்திடுங்கள், பெரியவரை விடுவியுங்கள்" என்ற பழமொழி பெரும்பாலும் குழந்தைத் தொழில் வாதத்தை ஆதரிக்கப் பயன்படுகிறது. புதிய தொழில்கள் போட்டியிடும் அளவுக்கு வலுவாக மாறும் வரை அரசாங்கப் பாதுகாப்பு தேவை என்பதை இந்தக் கருத்து அறிவுறுத்துகிறது.


தொற்றுநோய், சாத்தியமான போர்கள் மற்றும் வர்த்தக இடையூறுகள் போன்ற உலகளாவிய சவால்களால், பல நாடுகள் தங்கள் சொந்தத் தொழில்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.


கடந்த சில பட்ஜெட்களில், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (2020), ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் (Scheme India Seed Fund S12020) போன்ற உத்தரவாதங்களுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது. உழவர் கடன் அட்டை திட்டம், ஆத்மநிர்பார் பாரத் அபியான் கடன் உத்தரவாதத் திட்டம் (2020) போன்றவை அதிக சுமை கொண்ட துறைகளை ஆதரித்தல், சிறு வணிகங்களுக்கு உதவுதல், விவசாயிகளுக்கு உதவுதல் மற்றும் பெண் தொழில்முனைவோரை அவர்களின் வளர்ச்சியில் ஊக்குவித்தல் போன்ற பணிகளை செய்கிறது.


சமீபத்திய பட்ஜெட் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை ₹5 கோடியில் இருந்து ₹10 கோடியாக நீட்டித்துள்ளது. எவ்வாறாயினும், கடன் வழங்கும் செயல்முறைகளில் அரசாங்க ஆதரவு உத்தரவாதங்கள் ஒரு விதிமுறையாக மாறுமா என்பது சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் அரசாங்க ஆதரவுடன் பாதுகாக்கப்பட்ட கடன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு இடையே இத்தகைய கடன்களில் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. உத்திரவாதங்கள் என்பது சமீப காலங்களில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் எந்தவொரு சமகால நிதிச் சேதத்தையும் தவிர்க்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு தந்திரமாகும். பணப் புழக்கம் இல்லை. ஆனால், நலிவடைந்த நிறுவனங்களின் பணப்புழக்கம் மற்றும் கடன் அளவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கம் சில வணிகங்களுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன்களின் சதவீதம் குறைந்து வருவதை அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. சுவாரஸ்யமாக, வங்கிகள் இந்த வாராக் கடன்களை ஈடுகட்ட குறைந்த பணத்தையும் ஒதுக்குகின்றன, ஒருவேளை அவை தங்கள் கடன் வாங்குபவர்களை அதிகமாக நம்புவதால் இருக்கலாம்.


தொற்றுநோய்க்குப் பிறகு விநியோகச் சங்கிலி சிக்கல்கள் தணிந்திருக்க வேண்டும் என்பதால், அரசாங்கக் கடன் உத்தரவாதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதனால் அதன் தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்தாத ஆபத்து அதிகமாக இருந்தாலும், பெரிய நிறுவனங்களின் மீது கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டுமா?


கவனம் செலுத்தும் பகுதிகள்


முதலாவதாக, பொதுத்துறை வங்கிகள், குறிப்பாக பாதுகாக்கப்பட்ட கடன்களைக் கண்காணித்தல், சரிபார்த்தல் மற்றும் அறிக்கையிடுவதற்கு வலுவான அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்த சோதனைகள் பலவீனமாக இருந்தால், கடன் வாங்குபவர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை முறையாக மதிப்பிடாமல், உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் உத்தரவாதம் இல்லாத கடன்களை வழங்குவதன் மூலம் வங்கிகள் தேவையற்ற அபாயங்களை எடுக்கக்கூடும்.


இரண்டாவதாக, அரசாங்கம் ஒரு ஆபத்தை எடுக்கிறது, ஏனெனில் அது ஆதரிக்கும் கடன் வாங்குபவர்கள் எதிர்காலத்தில் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அரசாங்கம் இழப்புகளை ஈடுகட்ட வேண்டியிருக்கும்.


மூன்றாவதாக, உத்தரவாதங்கள் உண்மையில் தகவல் இடைவெளியைக் குறைக்கவும், சிறு வணிகங்களுக்கு கடன்களைப் பெறுவதற்கான அதிக செலவுகளைக் குறைக்கவும் உதவியதா என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். அரசாங்க உத்தரவாதக் கடன்களைப் பயன்படுத்தும் போது, நிதி ​​திரட்டல் மற்றும் பணப்புழக்கக் கணக்கியல் உட்பட நிதிப் பதிவுகளின் தரத்தை மேம்படுத்துவதும் முக்கியம்.


மேலும், அரசாங்க ஆதரவு எப்போதும் கொள்கைகளிலிருந்து வரக்கூடாது. மாறாக, அது தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். குறிப்பாக, தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் போது, தனியார் கடன் சந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும்போது இலக்கு வைக்கப்பட்ட அரசாங்க உத்தரவாதங்கள் உதவும். நிதி நிறுவனங்கள் குறைந்த மூலதனத்தை வழங்கும் பகுதிகளில் இது முக்கியமானது. கூடுதலாக, பெருநிறுவன நெறிமுறைகள், நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ பாணிகள் போன்ற மென்மையான காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவாதங்களில் பல, தனியார் சலுகைகளைவிட சமூக நலன்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அவை சமூகத்திற்கு நேர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றன.


எடுத்துக்காட்டாக, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் திட்டங்களை அரசாங்கம் ஆதரிக்கலாம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நிறுவனங்கள் அதிக செலவு செய்ய ஊக்குவிக்கலாம். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க உதவுவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் உத்தரவாதங்களை வழங்கியுள்ளன. 


இருப்பினும், இந்த நிறுவனங்கள் தோல்வியடைந்தால், வங்கிகள் அரசாங்கத்திடம் பணம் செலுத்தக் கேட்கலாம். இது நிதி சிக்கல்களை உருவாக்கக்கூடும். இந்த அபாயத்தைக் குறைக்க, பெரிய நிறுவனங்களுக்கான எதிர் உத்தரவாதங்களையும் அரசாங்கம் பரிசீலிக்கலாம்.


நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act), ஒரு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5%-க்கு மேல் உத்தரவாதங்களை வழங்குவதை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் மறைமுக அல்லது முறைசாரா ஆதரவு என்பதற்கு தெளிவான வரையறை இல்லை. நிதி பற்றாக்குறையை குறைக்க, உள்கட்டமைப்பில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக அரசாங்கம் உத்தரவாதங்களைப் பயன்படுத்துகிறது. நிதி அறிக்கையிடல் மற்றும் கணக்கியலுக்கு உத்தரவாதங்கள் சவால்களை உருவாக்குகின்றன. இதை நிவர்த்தி செய்ய, சாத்தியமான பட்ஜெட் விளைவுகளையும் அவற்றின் சாத்தியக்கூறுகளையும் தெளிவாகக் காண்பிப்பது முக்கியம். இதில் பட்ஜெட் கணக்குகளில் பொறுப்பைச் சேர்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க இது உதவுகிறது.


சக்ரபர்த்தி IIM லக்னோவில் உதவி பேராசிரியராகவும், பட்டாச்சார்யா IIT கான்பூரில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராகவும்  உள்ளார்.

 



Original article:

Share:

மேகாலயா சுயாட்சி குழுவின் தேர்தலில் 371-வது சட்டப் பிரிவு விவாதம் மையப் புள்ளியாக உள்ளது. -டேவிட் லைட்ப்லாங்

 அரசியலமைப்பின் பகுதி XXI-ன் கீழ் பிரிவு 371, மேகாலயாவைத் தவிர வடகிழக்கு பகுதியில் உள்ள ஆறு மாநிலங்கள் உட்பட சில மாநிலங்களுக்கு சில இடைக்கால மற்றும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.


மேகாலயாவில் காசி ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் குழு (Khasi Hills Autonomous District Council (KHADC)) மற்றும் ஜெய்ந்தியா ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட குழு (Jaiñtia Hills Autonomous District Council (JHADC)) தேர்தல்களுக்கான பிரச்சாரம் புதன்கிழமை நிறைவடைந்தது. பிப்ரவரி 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


அரசியலமைப்பின் 371-வது பிரிவு சில மாநிலங்களுக்கு சிறப்பு மற்றும் இடைக்கால அதிகாரங்களை வழங்குகிறது. இருப்பினும், மேகாலயா 1972-ல் ஒரு மாநிலமாக மாறியதிலிருந்து 6-வது அட்டவணையின் கீழ் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது. மற்ற வடகிழக்கு மாநிலங்களைப் போல் இல்லாமல், மேகாலயா பிரிவு 371-ன் கீழ் சிறப்பு விதிகளைக் கொண்டிருக்கவில்லை.


தேர்தலுக்கு முன்பு, பிரிவு 371 ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியது. மக்கள் கட்சியின் குரல் (Voice of the People Party (VPP)) விவாதத்திற்கு தலைமை தாங்கியது. பிரிவு 371 6-வது அட்டவணையை விட காசி மற்றும் ஜெயின்டியா பழங்குடி உரிமைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் என்று வாதிட்டது. பூர்வீக நில உரிமைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளைப் பாதுகாக்க அதிக அரசியலமைப்பு சுயாட்சி அவசியம் என்று VPP தலைவர் தீவிர மில்லர் பசாயாவ்மொயிட் கூறினார்.


மேகாலயாவில் 371-வது பிரிவை அமல்படுத்தும் திட்டம் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயகக் கட்சி தலைவர்கள் இது சட்ட குழப்பத்தையும் நிர்வாக சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்று எச்சரித்தனர்.


காங்கிரஸ் தலைவர் ரோனி வி. லிங்டோ, 6-வது அட்டவணை ஏற்கனவே பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்கிறது என்று வாதிட்டார். "குழப்பத்தை உருவாக்கும் தேவையற்ற அரசியலமைப்பு மாற்றங்கள் தேவையில்லை" என்று அவர் கூறினார்.


UDP தலைவர் பால் லிங்டோவும் இந்த திட்டத்தை நிராகரித்தார். 6-வது அட்டவணை மற்றும் பிரிவு 371 ஆகியவை ஒன்றாக வேலை செய்ய முடியாது என்று அவர் கூறினார். இரண்டையும் பயன்படுத்த முயற்சிப்பது, அதிகார வரம்பு மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

6-வது அட்டவணை, பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளை நிர்வகிக்க அதிகாரங்களை வழங்குகிறது.


நான்கு மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகள் தன்னாட்சி பெற்ற மாவட்டங்களாக நிர்வகிக்கப்படுகின்றன. அவை மாநிலத்தின் நிர்வாகத்தை தாண்டி செயல்பட முடியாது. மேலும், தன்னாட்சி மாவட்டங்களை மறுசீரமைக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.


முன்னர் குறிப்பிட்டபடி, அரசியலமைப்பின் பகுதி XXI-ன் கீழ் பிரிவு 371, சில மாநிலங்களுக்கு சில இடைக்கால மற்றும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கில் உள்ள பல மாநிலங்கள் அதன் கீழ் தனித்தனி விதிகளைக் கொண்டுள்ளன. ஆனால், மேகாலயா இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இந்த விதிகள் இந்த மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள் தொகை அல்லது தனித்துவமான கலாச்சார அடையாளங்களைக் கொண்டவை. அதே, நேரத்தில் நாட்டின் பெரிய கட்டமைப்பில் அவற்றின் ஒருங்கிணைப்பை உறுதி செய்கின்றன.




மேகாலயா தவிர பிற மாநிலங்களுக்கு இது என்ன உள்ளது


உதாரணமாக, பிரிவு 371-A நாகாலாந்துக்கு சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது. இது மத மற்றும் சமூக நடைமுறைகள், வழக்கமான சட்டங்கள் மற்றும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை பாதுகாக்கிறது.


பிரிவு 371-C மணிப்பூருக்கு சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது. அதன் நிர்வாகம் மற்றும் நிலம் மற்றும் அதன் வளங்கள் தொடர்பான சட்டங்கள் மீது சுயாட்சியை உறுதி செய்கிறது.


பிரிவு 371-E சிக்கிம் மாநிலத்திற்கு நிலம் மற்றும் வளங்கள் மீதான அதன் உரிமைகளையும் அதன் தனித்துவமான கலாச்சார அடையாளத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.


இதேபோல், பிரிவு 371-F மிசோரம் மாநிலத்திற்கு சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது. அதன் சமூக மற்றும் வழக்கமான சட்டங்களின் பாதுகாப்பு, குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்கிறது.


பிரிவு 371-G ஆந்திர பிரதேசத்தின் மத மற்றும் சமூக நடைமுறைகள், வழக்கமான சட்டங்கள் மற்றும் குடிமை மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.


மேகலயாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது


மேகாலயாவில் தன்னாட்சி குழு தேர்தல்களுக்கு முன்னதாக, பிரிவு 371 ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியது. பொதுமக்களின் கருத்து கடுமையாக பிரிக்கப்பட்டது. பிரிவு 371 பழங்குடி உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் வலுப்படுத்தும் என்று ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். எதிர்ப்பாளர்கள் இது நடைமுறைக்கு மாறானது என்றும் ஆட்சியை சீர்குலைக்கும் என்றும் வாதிடுகின்றனர்.




மக்கள் கட்சியின் குரல் மேகாலயாவிற்கு அதிக சுயாட்சியை வலுவாக ஆதரித்துள்ளது. அவர்கள் பிரிவு 371-ஐ ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். பசாயாவ்மொயிட்டின் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய சர்ச்சை காசி தாய்வழி பழக்கவழக்கங்களுக்கு அவர் சவால் விடுத்தது. 


பாரம்பரியமாக, காசி குழந்தைகள் தங்கள் தாயின் குடும்பப் பெயரை எடுத்துக்கொள்கிறார்கள். தந்தையர் தங்கள் பெயர்களை வழங்க உரிமை இருக்க வேண்டும் என்று பசாயாவ்மொயிட்டை வாதிட்டார். காசி ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தந்தையின் குடும்பப்பெயரைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பட்டியல் பழங்குடி (ST) சான்றிதழ்கள் வழங்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை பசாயாமோயிட் கடுமையாக எதிர்த்தார். "காசிஸ் என்று அழைக்கப்படுவதற்கான அவர்களின் உரிமையை யாராவது பறிக்க முயன்றால் நான் என் குழந்தைகளுக்காகப் போராடுவேன்" என்று அவர் கூறினார்.


காசி சமூகத்தினரிடையே அவரது கருத்துக்களுக்கு ஆதரவும் விமர்சனமும் கிடைத்துள்ளன. மேகாலயா வாக்குப்பதிவுக்கு இறுதி நாட்களில் பிரிவு 371 மற்றும் காசி அடையாளம் குறித்த விவாதம் ஒரு முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் தன்னாட்சி குழுக்கள் மற்றும் நிர்வாகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.




Original article:

Share: