சிறு நகரங்களை மறுபரிசீலனை செய்ய நகர்ப்புற சவால் நிதி பயன்படுத்தப்பட வேண்டும். -பூமா ராமன்

 ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் Smart Cities Mission (சீர்மிகு நகரங்கள் திட்டம்) அனுபவம் காட்டுகிறது என்னவென்றால், பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே அலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


இந்தியா நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு உற்சாகமான மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. ரூபாய் 1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியம் ("Urban Challenge Fund") அறிவிப்புடன், இந்திய அரசு நமது நகரங்களை மறு கற்பனை செய்வதற்கு ஒரு தைரியமான அடி எடுத்து வைக்கிறது. இந்த நிதியம், முதல் ஆண்டுக்கு ரூபாய் 10,000 கோடி ஒதுக்கியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மிக அழுத்தமான சவால்களை சமாளிக்க முயல்கிறது.


நகர்ப்புற சவால் நிதியம் மூன்று அம்சங்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களை பொருளாதார வளர்ச்சியின் உற்பத்தித்திறனான மற்றும் திறமையான மையங்களாக ஆக்குவது; இரண்டாவதாக, அவற்றை ஆக்கப்பூர்வமான வழியில் வளர்த்து மறுவளர்ச்சி செய்வது மற்றும் மூன்றாவதாக, அடிப்படை கட்டமைப்பு, குறிப்பாக நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது. இந்த நிதியம் வங்கிக்கு தகுதியான திட்டங்களுக்கு 25 சதவீத நிதியுதவி வழங்கும், குறைந்தது 50 சதவீத செலவு பத்திரங்கள் (bonds), வங்கி கடன்கள், மற்றும்  பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships (PPP)) போன்ற பிற மூலங்களிலிருந்து வர வேண்டும்.


உலக வங்கி அறிக்கையின் படி, 2036-ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்திய நகரங்களில் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரிவான நகர்ப்புற விரிவாக்கத்தை குறிப்பிடுகிறது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், கடுமையான சவால்களையும் வழங்குகிறது. அதிக கூட்டம், போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாமை, வீட்டு பற்றாக்குறை, மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை டெல்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் முக்கிய கவலைகளாக உள்ளன. நீர், சுகாதாரம், போக்குவரத்து, மற்றும் சுகாதார பராமரிப்பு தேவை நகர்ப்புற அமைப்புகளின் திறனை மீறுகிறது. இது திறனற்ற சேவை வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சேரிகளில் வாழ்கின்றனர். சமூக ஏற்றத்தாழ்வு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் வளர்ச்சி வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். மேலும், மோசமான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் துண்டாடப்பட்ட ஆட்சி திறமையான தீர்வுகளை தடுக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள நீடித்த நகர்ப்புற திட்டமிடல், மலிவு வீட்டுவசதியில் முதலீடுகள், அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துதல், மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் தேவைப்படுகின்றன.


வேகமாக வளர்ந்துவரும் நகர்ப்புற மக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா நகர்ப்புற உள்கட்டமைப்பில் $840 பில்லியன் (ரூ. 70 லட்சம் கோடி) அல்லது சராசரியாக ஆண்டுக்கு $55 பில்லியன் (ரூ. 4.6 லட்சம் கோடி) முதலீடு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிக்கை மதிப்பிடுகிறது. இந்தியாவின் நகர்ப்புற சவாலை எதிர்கொள்ள தேவையானதைவிட வரவு செலவு அறிக்கை ரூ. 10,000 கோடி குறைவாக உள்ளது.


அறிக்கை அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை வழங்குவதற்கு நகர நிறுவனங்களின் திறன்களை விரிவுபடுத்த பரிந்துரைக்கிறது. தற்போது, 10 பெரிய நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவர்களின் மொத்த முதலீட்டு வரவு செலவு அறிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே செலவழிக்க முடிந்தது. தற்போது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நகர அடிப்படை கட்டமைப்பின் 75 சதவீதத்திற்கும் மேல் நிதியளிக்கின்றன. நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் அவர்களின் சொந்த உபரி வருவாய்களின் மூலம் 15 சதவீதம் நிதியளிக்கின்றன. இந்திய நகரங்களின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே தற்போது தனியார் ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.


2011 மற்றும் 2018-க்கு இடையில், நகர்ப்புற சொத்து வரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதமாக இருந்தது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கான சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3-0.6 சதவீதமாக இருந்தது. நகராட்சி சேவைகளுக்கான குறைந்த சேவை கட்டணங்கள் அவற்றின் நிதி நிலைத்தன்மையையும் தனியார் முதலீட்டிற்கான ஈர்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. நடுத்தர காலத்தில், வரிவிதிப்புக் கொள்கை மற்றும் நிதி பரிமாற்ற முறை உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிக்கை பரிந்துரைக்கிறது. இது நகரங்கள் அதிக தனியார் நிதியுதவியைப் பயன்படுத்த அனுமதிக்கும். குறுகிய காலத்தில், தனியார் நிதியுதவியை அதிக அளவில் திரட்டக்கூடிய பெரிய, அதிக திறன் கொண்ட நகரங்களின் தொகுப்பை இது அடையாளம் காட்டுகிறது.


இந்த பரிந்துரைகள் இருந்தபோதிலும், இந்த கட்டுரை அதிக உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவின் சிறிய நகரங்களில் முதலீடு செய்ய வாதிடுகிறது.


இந்தியாவின் நகரங்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுவதைவிட பெரியதாக உள்ளன. நகரங்களுக்கு அருகிலுள்ள பல பகுதிகள் நகர்ப்புறமாக இல்லாமல் கிராமப்புறமாக கணக்கிடப்படுவதால் இது நிகழ்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் மிகவும் துல்லியமான கணக்கீட்டைப் பெற நகரங்களின் பரந்த வரையறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் தொகை 2001 மற்றும் 2011-க்கு இடையில் முந்தையதை விட மெதுவாக வளர்ந்தது. ஏன் என்பதைப் புரிந்துகொள்ள நாம் மேலும், படிக்க வேண்டும். சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவில் பெரிய நகரங்கள் எப்போதும் பொருளாதாரம் வளர முக்கிய காரணம் அல்ல என்று கூறுகின்றன. நகர்ப்புறங்களில் முறையான துறை வேலைகள் குறைவாக இருப்பது, மிகவும் சிறப்பு வாய்ந்த திறன்கள் தேவைப்படுவதைத் தாண்டி, சிலரை நகர வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் ஒதுக்கி வைக்க (exclusionary urbanisation) வழிவகுத்துள்ளது.


இதன் விளைவாக, இந்தியாவில் நகரமயமாக்கல் அதிகமாக உள்ளது. சிறிய நகரங்கள் 2001 மற்றும் 2011-க்கு இடையில் நகரங்களைவிட வேகமான வேகத்தில் வளர்ந்து வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் (Small and Medium Towns (SMS)) குறைந்த உற்பத்தி மற்றும் வாழ்க்கை செலவுகள் உட்பட உற்பத்தியில் அவர்களின் செலவு நன்மைகளை பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்று இப்போது அங்கீகரிக்கப்படுகிறது. இந்த நகரங்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கின்றன மற்றும் அவர்களின் வளர்ச்சி கிராமப்புற வறுமையை குறைப்பதில் நகரங்களின் வளர்ச்சியைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் அத்தியாவசிய சந்தை சேவைகளை வழங்குவதன் மூலமும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையில் இணைப்புகளாக செயல்படுவதன் மூலமும் கிராமப்புற வளர்ச்சியை ஆதரிக்கின்றன. மேலும், கோவிட் பிந்தைய கூட்டு பணி இடங்களை (collaborative workspaces) ஏற்றுக்கொள்ளும் போக்கு தொலைவிலிருந்து பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், புதிய வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாட்டை வளர்ப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். அவை ஒரு நகரத்தின் சமூக அடிப்படை கட்டமைப்பின் மதிப்புமிக்க அங்கங்களாக பார்க்கப்படலாம். அதிக நிலையான மற்றும் முழுமையான பிராந்திய வளர்ச்சிக்கு பங்களிக்கும்.


எதிர்கால வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நகரங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில், இது நுகர்வை அதிகரிக்கும். 2030-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பில் 70 சதவீதம் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023 EY அறிக்கை, சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது, இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை முன்னறிவித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் அடுக்கு 2 நகரங்களில் திறமையான பணியாளர்கள் 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக (2023–2030) வளர்ச்சியை அதிகரிக்கக்கூடும். விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCC) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது, மேலும் 2030-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஒரு முக்கிய GCC மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன, ஆனால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


எதிர்கால வேலை வளர்ச்சியில் 70 சதவீதம் நகரங்களில், குறிப்பாக 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட வளர்ந்து வரும் நகரங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ஆண்டிற்கான இந்தியாவின் நகர்ப்புற காட்சியில் 70 சதவீதம் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதால், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எழுகின்றன. ஜூன் 2023-ஆம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை சிறிய நகரங்களின் திறனை வலியுறுத்தியது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை கணித்தது. உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ஆதரவான கொள்கைகள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் திறமையான பணியாளர்கள் இருப்பதன் மூலம் வளர்ச்சி 11 சதவீதத்திலிருந்து (2019–2023) 14 சதவீதமாக 2023 முதல் 2030-க்குள் அதிகரிக்கக்கூடும். 


விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், வதோதரா மற்றும் கொச்சி போன்ற நகரங்களை உலகளாவிய திறன் மையங்களுக்கு (Global Capability Centres (GCC)) வளர்ந்து வரும் மையங்களாக அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு முக்கிய உலகளாவிய திறன் மையமாக மாறும். குறைந்த செலவுகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக இந்தியாவின் சிறிய நகரங்கள் விரைவான நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு தடையாகவே உள்ளது.


7000-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களுக்கு எதிராக, Metropolises-கள் மற்றும் megapolises உட்பட வெறும் 100 நகரங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. இந்த நகரங்கள் அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அத்தியாவசிய சேவைகளின் வழங்கல், மற்றும் அவசர அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் மிகவும் தேவை உள்ளது.


 இது விவசாயத்திலிருந்து தொழிலாளர்களை மாற்ற உதவுவது மட்டுமல்லாமல், பெரிய நகரங்களில் இடம்பெயர்வு சுமையை குறைக்கவும் உதவும். இந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் ULBs (நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள்) இந்த நகர்ப்புற சவாலை சந்திக்க திறன் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Metropolises:


Metropolises என்பது மிகப் பெரிய மற்றும் முக்கியமான நகரம், பெரும்பாலும் ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் தலைமை நகரம் ஆகும்.


Megapolises:


Megapolises என்பது ஒரு பெரிய, தொடர்ச்சியான நகர்ப்புற மண்டலத்தை உருவாக்கும் நெருக்கமாக இணைக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளின் சங்கிலி ஆகும்.


நகர்ப்புற சவால் நிதியம் (Urban Challenge Fund) பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவதைவிட சிறிய நகர வளர்ச்சியின் பிரச்சினையை சமாளிக்க ஒரு வாய்ப்பாகும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) போன்ற திட்டங்களின் அன்புவங்கள் காட்டுகின்றன. பெரிய நகரங்களில் கவனம் செலுத்துவது தானாகவே, சிற்றலை விளைவை (ripple effect) ஏற்படுத்தாது. பிராந்திய வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


எழுத்தாளர் வாழ்விட மன்றத்தின் (Habitat Forum (INHAF)) இணை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.


Original article:
Share:

வலுவான மாநிலங்கள், வலுவான தேசம் என்ற உணர்வை வளர்ப்பதில் நிதி ஆயோக்-ன் பங்கு. — அகில் குமார்

 வலுவான மாநிலங்கள் ஒரு வலுவான தேசத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மாநிலங்களை தீவிரமாக ஆதரிப்பதன் மூலம் நிதி ஆயோக் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கை முன்னோக்கி செலுத்துகிறது. ஆனால், இந்த அமைப்பு இந்த தொலைநோக்கு பார்வையை எவ்வாறு முன்னேற்றுகிறது?


10-வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது, ​​பிரதமர் நரேந்திர வளர்ந்த இந்தியா என்ற இலக்கை மீண்டும் வலியுறுத்தி, உற்பத்தி மற்றும் சேவைகள், சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்தவும், இந்தியா பல நாடுகளுடன் கையெழுத்திட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப்  (Free Trade Agreements) பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறியவும் மாநில அரசுகளை வலியுறுத்தினார்.


நாம் ஒரே இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சியடைய செய்வது, ஒவ்வொரு நகரத்தையும் வளர்ச்சியடைய செய்வது, ஒவ்வொரு மாநகராட்சியையும் (Nagar Palika) வளர்ச்சியடைய செய்வது மற்றும் ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சியடைய செய்வது என்ற நோக்கம் நமக்கு இருக்க வேண்டும். இந்த வழிகளில் நாம் பணியாற்றினால், வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கு 2047 வரை காத்திருக்க வேண்டியதில்லை" என்று மே 25 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் கூறினார்.


வலுவான மாநிலங்கள் ஒரு வலுவான தேசத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல்வேறு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மாநிலங்களை தீவிரமாக ஆதரிப்பதன் மூலம் நிதி ஆயோக் இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி செலுத்துகிறது. இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் இந்த முதன்மையான கொள்கை சிந்தனைக் குழு இந்த தொலைநோக்குப் பார்வையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது? கூட்டுறவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி முறையை அது எந்த வழிகளில் வளர்க்கிறது? அதன் தொடக்கத்திலிருந்து அது தொடங்கிய குறிப்பிடத்தக்க முயற்சிகள் யாவை?


வலுவான மாநிலங்கள், வலுவான நாடு

கூட்டுறவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதற்கான இரண்டு கொள்கைகளுடன், இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India (NITI Aayog)) 65 ஆண்டுகள் பழமையான திட்டக் குழுவை (Planning Commission) மாற்றி ஒரு பொது கொள்கை சிந்தனைக் குழுவாக ஜனவரி 2015-ல் அமைக்கப்பட்டது. அமைப்பின் நோக்கங்களை வெளிப்படுத்தும் வகையில், ஜனவரி 1, 2015 அன்று இந்திய அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், "கடந்த காலத்திலிருந்து ஒரு முக்கியமான பரிணாம மாற்றம் ஒன்றிய அரசு அனைத்து முடிவுகளையும் எடுத்து மாநிலங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்படும் ஒரு உண்மையான, தொடர்ச்சியான கூட்டாண்மையாக இது இருக்கும்.


இந்த அமைப்பின் இரண்டு அடிப்படைத் தூண்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் விவசாயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் ஆகும்.


ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மேலிருந்து கீழ் செல்லும் அணுகுமுறையை (top-down approach) பின்பற்றி மையப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்பட்ட முந்தைய திட்டக் குழுவைப் போல் இல்லாமல், நிதி ஆயோக் எந்த நிதி அதிகாரமும் இல்லாமல் கீழ்-மேல் மாதிரியை (bottom-up model) பின்பற்ற வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம், அது நிதி ஒதுக்கீட்டை கொள்கை திட்டமிடலிலிருந்து பிரித்து, வளர்ச்சி முன்னுதாரணம் மற்றும் கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மாநிலங்களின் பங்கை மறுவரையறை செய்தது.


அதன் அமைப்பின் அடிப்படையில், நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதமர், அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பில் துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட பிற உறுப்பினர்களும் அடங்குவர். தேசிய வளர்ச்சி கொள்கையை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக துறைகளுக்கு இடையேயான மற்றும் கூட்டாட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஆளும் குழு ஒரு தளத்தை வழங்குகிறது. இந்தக் கட்டமைப்பின் அடிப்படையில், நிதி ஆயோக் பரந்த அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.


சிந்தனைக் குழுவின் (think tank) செயல்பாடுகளை கொள்கை மற்றும் திட்ட கட்டமைப்பு, கூட்டுறவு கூட்டாட்சி, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, மற்றும் சிந்தனைக் குழு, அறிவு மற்றும் புதுமை மையம் எனும் நான்கு பரந்த பகுதிகளாக வகைப்படுத்தலாம். கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்க, இது ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு முதன்மைத் திட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் துணைக் குழுக்களை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்துவதற்காக மாநில அரசுகள், குடிமை சமூக பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் இது பன்முக ஆளுகை மாதிரியை ஏற்றுக்கொண்டது. கொள்கை கண்டுபிடிப்பு மற்றும் தரவுகளில் இந்த அமைப்பு பல யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


கூடுதலாக, நிதி ஆயோக் ஆகஸ்ட் 2030-க்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals (SDGs)) இந்தியாவின் செயல்திறனைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. ஏனெனில், அது மாநிலங்களுக்கிடையே போட்டியை ஊக்குவிப்பதற்காக நிலையான வளர்ச்சி குறியீட்டை அறிமுகப்படுத்தியது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு இந்தியா குறியீட்டு 2023-24 அறிக்கை, இந்தியாவின் கூட்டு மதிப்பெண் 2020-21-ல் 66-ஆக இருந்ததைவிட 2023-24-ல் 71-ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. வறுமையை ஒழித்தல், ஒழுக்கமான வேலை, பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை மற்றும் வாழவதற்கான வசதியை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, இந்தியா பல முக்கிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றங்களைக் கண்டது. அவற்றில் 1 (வறுமை இல்லாதது), 3 (நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு), 6 (தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்), 7 (மலிவு மற்றும் சுத்தமான எரிசக்தி), 9 (தொழில், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு) மற்றும் 11 (நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்) ஆகியவை அடங்கும். முதன்மையான கொள்கை சிந்தனைக் குழுவின் பிற குறிப்பிடத்தக்க முயற்சிகள் பின்வருமாறு:


— சுகாதார செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான சுகாதார விளைவு குறியீட்டில் செயல்திறன்.


— இந்தியாவின் வளர்ந்து வரும் நீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு நீர் மேலாண்மைக் குறியீடு.


— கல்வி விளைவுகளை மேம்படுத்துவதற்கான பள்ளி கல்வி தர குறியீடு. பல்வேறு குறியீடுகள் குறித்த நிகழ்நேரத் தரவுகளைப் பெறுவதிலும், தகவலறிந்த கொள்கை வகுப்பை ஊக்குவிப்பதிலும், பல்வேறு மாநிலங்களுக்கிடையில் போட்டியை வளர்ப்பதிலும் இந்த நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகித்தன.


ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் போட்டி


2018-ஆம் ஆண்டில், 26 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 112 மாவட்டங்களில் (சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பிற) மனித மேம்பாட்டு குறிகாட்டிகளின் வளர்ச்சியின்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நிதி ஆயோக் 'லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை' (Aspirational Districts Programme (ADP)) அறிமுகப்படுத்தியது. இந்த ADP உத்தியின் அடிப்படைக் கொள்கைகள் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் போட்டியாகும் (collaboration, convergence, and competition) ஆகிய மூன்று 'C'கள் ஆகும். மாவட்டங்களின் வெற்றிக் கதைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:


— ஜமுய், பீகார்: அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப தலையீடுகளை மேம்படுத்துதல்.


— மல்காங்கிரி, ஒடிசா:-அங்கன்வாடி அமைப்பின் மாற்றம்.


— விஸியங்கரம், ஆந்திரப் பிரதேசம்: பழங்குடி கர்ப்பிணிப் பெண்களுக்கான விடுதிகள் கட்டுமானம்.


— நந்தூர்பார், மகாராஷ்டிரா: ஊட்டச்சத்து குறைபாட்டைச் சமாளிக்க சிறந்த ஊட்டச்சத்துக்கான மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள்.


அறிவு மற்றும் புதுமை மையமாக அதன் பங்கில், நிதி ஆயோக் 2016-ல் அடல் புத்தாக்கத் திட்டத்தை (Atal Innovation Mission (AIM)) அறிமுகப்படுத்தியது. இது நாடு முழுவதும் புதுமை சூழலியலை வளர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 10,000 அடல் புத்தாக்கத் திட்டங்களில் (Atal Tinkering Labs (ATLs)) 1.1 கோடி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 72 அடல் இன்குபேஷன் மையங்கள் (Atal Incubation Centres - AICs) மூலம் கிட்டத்தட்ட 32,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, நாடு முழுவதும் 110 ஆசைகள் மாவட்டங்களில் 7,100 அடல் புத்தாக்கத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.


இந்த திட்டம் இளைஞர்களின் சிறந்த திறமைகளைக் கொண்டு வருவதிலும், படைப்பாற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதிலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் திறன்களை ஊக்குவிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. அக்னிகுல் விண்வெளி தொழில்நுட்பம் (Agnikul  space tech)  போன்ற பல புத்தொழில் நிறுவனங்கள் AIM-லிருந்து பயன் பெற்றன. நவம்பர் 2024-ல், ஒன்றிய அமைச்சரவை மார்ச் 31, 2028 வரை அடல் புத்தாக்கத் திட்டத்திற்கு ரூ. 2,750 கோடி ஒதுக்கீட்டுடன் அனுமதி வழங்கியது.


அடல் புத்தாக்கத் திட்டத்தை (Atal Innovation Mission (AIM-1.0)) போல் இல்லாமல், AIM 2.0, 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் புதுமை மற்றும் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்புகளை விரிவுபடுத்தும். 15 சதவீத குடிமக்கள் வசிக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், வடகிழக்கு, லட்சிய இலக்கு மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஒரு புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆயோக் இந்தியாவில் திட்டமிடல் எவ்வாறு மிகவும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது என்பதை மாற்றியது, மாநிலங்களை மிகவும் நெருக்கமாக ஈடுபடுத்தியது மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவித்தது. மாநிலங்களுடனான வழக்கமான கலந்துரையாடல்கள் கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்தவும் எதிர்கால சவால்களுக்குத் தயாராகவும் உதவுகின்றன.


Original article:
Share:

மாநிலங்களவைத் தேர்தல்கள் எத்தனை முறை நடத்தப்படுகின்றன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• அசாமில் இரண்டு இடங்களையும் வெல்ல ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக்கும் போதுமான எண்ணிக்கை இல்லை. தமிழ்நாட்டில், திமுக தலைமையிலான ஆளும் கூட்டணியின் கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளுமே இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை.


• அசாமில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் (Asom Gana Parishad (AGP)) மற்றும் பாஜகவின் மிஷன் ரஞ்சன் தாஸின் பதவிக்காலம் ஜூன் 14 அன்று முடிவடைவதால் இரண்டு இடங்கள் காலியாகிவிடும்.

• 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில், ஒவ்வொரு மாநிலங்களவை வேட்பாளரும் வாக்கெடுப்பில் வெற்றிபெற 42 வாக்குகள் தேவைப்படும். 80 சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக: 64, AGP: 9 மற்றும் யுபிபிஎல்: 7) ஒரு இடத்தை வெல்லும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இரண்டாவது இடத்திற்கு நான்கு வாக்குகள் குறைவாக இருக்கும்.


• இரண்டு இடங்களையும் வென்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.


உங்களுக்குத் தெரியுமா?


• மாநிலங்களவை (Council of States) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்த அவை அரசியலமைப்பின்படி அதிகபட்சம் 250 உறுப்பினர்களுடன் வரையறுக்கப்பட்டுள்ளது, இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் 238 பேர் மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். தற்போதைய மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.


•  ஒவ்வொரு மாநிலம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அந்த மாநிலத்தின் சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மற்றும் அந்த யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் குழுவின் (Electoral College) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவையின் தலைவர் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார். அவை நிரந்தர சபையாகும் மற்றும் அவை எப்பொழுதும் கலைக்கப்பட்டது (not subject to dissolution). ஆனால், அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.


Original article:
Share:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) தொடர்பான ஒன்றிய அரசின் திட்டங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• திங்களன்று வெளியிடப்பட்ட ‘நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கையை வடிவமைத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and development (R&D)) முயற்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதி-போட்டித்தன்மையுடன் மாற உதவும் வகையில், தொகுப்பு (cluster-based) அடிப்படையிலான தர சோதனையை விரிவுபடுத்துதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியது.


• 2025-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை  ‘நடுத்தரம்’ என்ற வரையறை விரிவுபடுத்தப்பட்ட பிறகு, குறைந்த கடனுடன் நடுத்தர அளவிலான நிறுவனங்களை ஆதரிப்பதற்கான சமீபத்திய நடவடிக்கைகளிலிருந்து வருகிறது. ஏப்ரல் 1 வரை, நடுத்தர நிறுவனங்கள் என்பது ரூ.50-250 கோடி வரை விற்பனை மற்றும் ஆலை மற்றும் இயந்திரங்களில் ரூ.10-50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்கள் என வரையறுக்கப்பட்டிருந்தன. திருத்தப்பட்ட வரம்புகள்—விற்பனையில் ரூ.100-500 கோடி மற்றும் முதலீட்டில் ரூ.25-125 கோடி அதிக நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்த வகையை விரிவாக்கியுள்ளன.


• நடுத்தர நிறுவனங்கள் நுண்ணிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான முன்னுரிமைத் துறை கடன்களை [priority sector loans] பெறுகின்றன. கூடுதலாக, நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி விகிதங்கள் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சராசரியாக 4% அதிகமாக உள்ளது. இது மூலதனத்தை அதிக விலையாக்குகிறது" என்று அறிக்கை கூறியது.


• நடுத்தர நிறுவனங்கள் சலுகை விகிதங்களில் கடன்களைப் பெற அனுமதிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவன (Ministry of Micro, Small, and Medium Enterprises (MSME)) அமைச்சகத்தின் கீழ் ஒரு பிரத்யேக நிதித் திட்டத்தை அறிக்கை முன்மொழிந்தது. அதிகபட்சமாக ரூ.25 கோடி வரை, ஒரு கோரிக்கைக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை. சந்தை விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் ரூ.5 கோடி வரை முன் அங்கீகரிக்கப்பட்ட வரம்புடன் நடுத்தர நிறுவன கடன் அட்டையை (credit card) அறிமுகப்படுத்தவும் அறிக்கை பரிந்துரைத்தது.


• இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட MSME-களில், நடுத்தர நிறுவனங்கள் 0.3 சதவீதம் மட்டுமே உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், நடுத்தர நிறுவனங்களில் சராசரி வேலைவாய்ப்பு 89 பேர் என அதிகமாக உள்ளது. இது சிறு நிறுவனங்களுக்கு 19 பேரும், நுண் நிறுவனங்களுக்கு 6 பேரும் ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள அனைத்து MSME முதலீட்டிலும் நடுத்தர நிறுவனங்களும் 81 சதவீதத்தைக் கொண்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க, நடுத்தர நிறுவனங்களின் திட்டங்களுக்கு பிரத்யேகமாக நிதியளிப்பதற்காக சுயசார்பு இந்தியா (Self-Reliant India - (SRI)) திட்டத்திற்கு 25-30 சதவீதத்தை ஒதுக்குவதாக அறிக்கை பரிந்துரைத்தது. SRI நிதியத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து ரூ.10,000 கோடி மற்றும் தனியார் பங்கிலிருந்து (private equity) ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-ல் அதன் தொடக்கத்திலிருந்து, மொத்தம் ரூ.4,885 கோடி MSME-களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


•  அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், NITI Aayog-ன் துணைத் தலைவர் சுமன் பேரி திறன் மேம்பாடு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஒன்றாக கவனிப்பது முக்கியம் என்றார். "தொழிலாளர் சந்தையின் பக்கத்தில், பொதுவாக சிறு, மற்றும் குறு நிறுவனங்களுடன் தொடர்புடைய முறைசாரா வேலைவாய்ப்பிலிருந்து, நடுத்தர நிறுவனத் துறையுடன் தொடர்புடைய முறையான வேலைவாய்ப்புக்கு மாற்றம் செய்ய வேண்டும். முறையான வேலைவாய்ப்புடன் தான் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பயிற்சியில் முதலீடு செய்ய ஊக்கம் பெறுகின்றன" என்று பேரி கூறினார்.


•   இந்தியாவின் உச்ச பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவின் (apex public policy think tank) அறிக்கை இந்தியாவில் திறமையான தொழிலாளர் கிடைக்கும் நிலை 55 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டது. தென் கொரியாவில் 88 சதவீதம், அமெரிக்காவில் 85 சதவீதம் மற்றும் ஜப்பானில் 81 சதவீதம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது.


•  குறு, சிறு, நடுத்தர நிறுவனத்தின் சம்பர்க் தரவுத்தளம் (MSME Sampark Portal) மூலம் உண்மையான நேர திறன் வரைவு, தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Entrepreneurship and Skill Development Programme (ESDP)) போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவாக்குதல், மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மானியம் அளிக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை அறிக்கை பரிந்துரைத்தது.


Original article:
Share:

இராஜதந்திரக் கூட்டாண்மையின் வெள்ளி விழா ஆண்டு -பிலிப் அக்கர்மன்

 ஜெர்மன்-இந்தியா கூட்டாண்மை (German-India partnership) என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒன்றாகும், அது சீராக வளர்ந்துள்ளது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


இந்த மாதம், இந்தியாவும் ஜெர்மனியும் ஒரு இராஜதந்திர ரீதியில் நாடுகளின் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளைக் (வெள்ளி விழா) கொண்டாடுகின்றன. இந்த கூட்டாண்மையானது காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. இன்றைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அது இப்போது வலுவாக உள்ளது. ஜெர்மனியின் 'இந்தியாவில் கவனம் செலுத்துங்கள்' (Focus on India) உத்தி இந்த கூட்டாண்மையின் எதிர்காலத்திற்கான திட்டத்தைக் காட்டுகிறது. புதிய ஜெர்மன் கூட்டணி ஒப்பந்தம் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதுடன், ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடுகின்றன. இதில், ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸும் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே ஆரம்பகால தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலும் தனது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசினார். இந்த பேச்சுவார்த்தைகள் ஜெர்மனியும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்பதைக் காட்டுகின்றன. மேலும், தங்கள் கூட்டாண்மையை உருவாக்கி ஒருவருக்கொருவர் நெருக்கமாக ஒருங்கிணைப்போம் என்பதைக் காட்டுகிறது.


இரு நாடுகளின் உறவில் பல முக்கிய பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால், அது முக்கியமாக நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.  அவை, அமைதி (peace), செழிப்பு (prosperity), மக்கள் (people) மற்றும் நமது பூமியின் எதிர்காலம் (future of our planet) ஆகியவை ஆகும்.


பகிரப்பட்ட நோக்கம்


நமது நாடுகளின் வளர்ச்சிக்கு அமைதியும், நிலைத்தன்மையும் அடிப்படையான முன்நிபந்தனைகள் ஆகும். இந்தியாவும் ஜெர்மனியும் அமைதியான, நிலையான மற்றும் விதிகள் அடிப்படையிலான உலகத்தின் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றன. பொதுவாக, நம்பகமான அரசியல் உறவின் மையத்தில் ஒரு தனித்துவமான வடிவம் உள்ளது. இது, அரசுகளுக்கிடையேயான அரசாங்க ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்குகின்றன. இது இருநாடுகளின் உறவுகளை ஒரு விரிவான, உற்பத்தி மற்றும் நோக்கத்துடன் உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் குறிப்பாக செழித்தோங்கியுள்ள ஒரு பகுதி பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்பு ஆகும். தரங் சக்தி பயிற்சியின் (Tarang Shakti Exercise) போது (2024) சூலூர் விமானப்படை நிலையத்தில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு) சூடான தார்ச்சாலையில் (hot tarmac) நின்று, இந்திய மற்றும் ஜெர்மன் விமானிகளின் அபாரமான விமானக் காட்சியை, சிறந்த திறமை, ஒருங்கிணைப்பு மற்றும் குழுப்பணியுடன் காற்றில் விசிட் செய்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஜெர்மன் கடற்படையின் இந்த கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் துறைமுக அழைப்புகள் இந்தோ-பசிபிக் பகுதியை ஜெர்மன் புவிசார் இராஜதந்திர ரீதியில் இந்த பகுதி முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில், நமது பாதுகாப்புத் தொழில்களுக்கு இடையே நெருக்கமான இராஜதந்திர ஒத்துழைப்பையும், நெருக்கமான உறவுகளையும் எதிர்பார்க்கலாம்.

செழிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியைவிட அதிகம். இன்னும் விரிவான அர்த்தத்தில், இது நம் மக்கள் செழிக்க, அர்த்தமுள்ள வேலைகளைக் கண்டறிய மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான வழிமுறைகளை வழங்க அனுமதிக்கிறது. சுமார் 2,000 ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் அவை இந்தியர்களுக்கு 750,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகின்றன.


டெல்லியில் எனது மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று டெல்லி-மீரட் ரேபிட் இரயிலைப் (Delhi-Meerut Rapid Rail) பார்வையிட்டது. இந்த இரயில்கள் உயர் தொழில்நுட்பம் கொண்டவை மற்றும் சிறந்த உள்கட்டமைப்பில் இயங்குகின்றன. அவை, இளம் மற்றும் திறமையான இந்தியர்களால் இயக்கப்படுகின்றன. இந்த ஆபரேட்டர்கள் தேசிய இரயில்வே நிறுவனமான டாய்ச் பான் (Deutsche Bahn) சீருடைகளை அணிவார்கள். டாய்ச் பான் டெல்லியில் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. மேலும், இப்போது அதிகமான இந்திய நிறுவனங்கள் ஜெர்மனியில் உள்ளன. அவை உயர் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் இணைக்கப்படுகின்றன.


இப்போது, ​​உலகளாவிய வர்த்தகம் பெரிய இடையூறுகளை எதிர்கொள்கிறது. இதுபோன்ற போதிலும், நெருக்கமாக இணைக்கப்பட்ட விநியோகக் கோடுகள் நாம் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகின்றன. இது ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்கலாம். இரண்டு பெரிய பொருளாதார சக்திகளான இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (free trade agreement) சாத்தியமாகி வருகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் செழிப்பில் பங்கு வகிக்கின்றன. இதில், இருநாடுகளும் ஒன்றாக முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் சிறந்த அறிவியல் நிறுவனங்களில் பணியாற்றுவதால், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வணிக வாய்ப்புகளாக மாற்ற முடியும்.


மக்களுக்கிடையேயான உறவுகள் (People-to-people ties)


மக்கள் தங்களின் இராஜதந்திரக் கூட்டாண்மையை வாழ்க்கை மற்றும் கதைகளால் நிரப்புகிறார்கள். இப்போது அதிகமான இந்தியர்கள் ஜெர்மனியில் வசிக்கின்றனர். 50,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கு படிக்கின்றனர். அவர்கள் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். சிலர் சில ஆண்டுகள் ஜெர்மனியில் தங்குகிறார்கள். அவர்கள் முதல் வேலைகளைப் பெறுகிறார்கள், தொழில்நுட்ப அனுபவத்தைப் பெறுகிறார்கள், நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களில், பலர் பின்னர் தங்கள் குடும்பங்களைத் கட்டியெழுப்ப இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள். சில இந்தியர்கள் ஜெர்மனியில் தங்கி தங்கள் குழந்தைகளை இங்கே வளர்க்கிறார்கள். இருபது ஆண்டுகளிலும், அவர்கள் இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி வளப்படுத்துகிறார்கள். பல இளம் இந்தியர்கள் ஜெர்மனியில் தங்கள் வாழ்க்கையை இணையவழியில் பகிர்ந்து கொள்கிறார்கள். நான் (பிலிப் அக்கர்மன்) அவர்களில் பலரைச் சந்தித்து அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.


 இந்தியர்கள் ஒரு புதிய இடத்தை எப்படி வீடாக உணர வைக்கிறார்கள் என்பதைப் பார்த்து நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். இளம் இந்தியர்கள் நன்றாக இயைந்து, வெற்றி பெற்று, ஜெர்மன் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பதை நான் காண்கிறேன். இளம், திறமையான இந்தியர்களுக்கு ஜெர்மனி பல வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இன்னும் திறக்கப்படும்.


இந்தியா முழுவதும் நம் மொழியில் வலுவான ஆர்வம் இருப்பதை நான் காண்கிறேன். மேலும், ஆர்வமுள்ள ஒவ்வொரு இந்தியருடனும் நன்கு திறமையான ஜெர்மன் ஆசிரியர்களை இணைக்க புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது சவால், இந்தியாவில் படிக்கவும் வேலை செய்யவும் அதிகமான ஜெர்மானியர்களை ஊக்குவிப்பதாகும். இந்தியாவின் கதையைப் புரிந்துகொள்பவர்கள், இந்தியாவின் பல சுவாரஸ்யமான மொழிகளில் பேசுபவர்கள் மற்றும் வணிக வளாகம் அமைக்க அதிக மக்கள் அங்கு குடியேற வேண்டும். இளைய ஜெர்மானிய மற்றும் இந்திய தலைமுறையினருக்கான எந்தவொரு முதலீடும், அடுத்த 25 ஆண்டுகளில் நமது இராஜதந்திர கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் மக்களுக்கான முதலீடாக இருக்கும்.


பசுமை வளர்ச்சி


நமது பூமியின் சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்த தங்கள் இருநாடுகளின் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. பூமி நமது பகிரப்பட்ட பொதுவான சுற்றுச்சூழல் உயிர்நாடியாகும். இது எதிர்காலத்தில் நமது வாழ்க்கை முறைகளைப் பாதுகாக்கிறது. 2022-ஆம் ஆண்டில், ஜெர்மனி இந்தியாவிற்கு €10 பில்லியன் சிறப்பு கடன்கள் மற்றும் மானியங்களை உறுதியளித்தது. இது 10 ஆண்டுகளில் நடக்கும். இதை இந்தோ-ஜெர்மன் பசுமை மற்றும் நிலையான மேம்பாட்டு கூட்டாண்மை (Green and Sustainable Development Partnership (GSDP)) என்று குறிப்பிடுகிறோம்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல்லுயிர் மற்றும் சிறந்த நகரங்கள் (smart city projects) ஆகியவை பல திட்டங்களில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். இவற்றில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பல்லுயிர் மற்றும் சிறந்த நகரங்கள் அடங்கும். தனியார் நிறுவனங்களும் இந்தப் பகுதிகளில் ஒத்துழைக்கின்றன, இது முக்கியமானது. சமீபத்தில், குஜராத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைப் பார்வையிட்டேன். இந்தத் திட்டங்களின் அளவும் லட்சியமும் அற்புதமானவை. எல்லா இடங்களிலும் சூரிய மின் பலகைகள் மற்றும் காற்றாலைகள் உள்ளன.


ரோட்டார் பிளேடுகள் (rotor blades) போன்ற காற்றாலைகளின் சில பகுதிகள் ஒரு ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் தொழில்நுட்பத்தின் மூலம், இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தை ஆதரிக்க விரும்புகிறோம். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவும் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.


இந்தியாவில் இரண்டு முறை பணியாற்றும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். முதல் முறையாக 2007 மற்றும் 2010 வரை. இரண்டாவது முறையாக இப்போது, ​​2022 முதல் தூதராக இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டுகளில், இந்தியா மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது. எங்கள் இருநாடுகளின் இராஜதந்திர கூட்டாண்மையும் நிறைய வளர்ந்துள்ளது. நாங்கள் ஒன்றாகச் சாதித்ததைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் பெருமைப்படுகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் உணர்கிறேன்.


பிலிப் அக்கர்மேன் இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர்.


Original article:
Share:

எரிசக்தி மற்றும் செயல்திறன் : இந்தியா மற்றும் அதிக எரிசக்தி திறனுக்கான தேவை பற்றி

 செயல்திறனை அதிகரிப்பதன் (increasing efficiency) மூலம் இந்தியா தனது மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்


கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா மின்சார உற்பத்தியில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரைவாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்தியா இன்னும் அதன் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான பற்றாக்குறையான இடைவெளி 2020 நிதியாண்டில் 0.69%-லிருந்து 2024 நிதியாண்டில் சுமார் 5%-ஆக அதிகரித்துள்ளது.


மின்சார விநியோகத்தில் வரம்புகள் இருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வரும்போது, புதிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கும். அதே நேரத்தில், மின் கட்டத்தில் (power grid) அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்க்க இந்தியா முயற்சிக்கிறது. இதன் காரணமாக, அனைத்து பகுதிகளிலும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இது மின் தேவையைக் குறைக்க உதவும். அதிகரித்து வரும் மின் தேவைகளைக் கையாளவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவது வேகமான மற்றும் மலிவான வழியாகும்.


இந்த ஆண்டு இந்தியாவின் முக்கியமான எரிசக்தித் திறன் திட்டமான உஜாலாவின் (efficiency scheme, UJALA) பத்து ஆண்டுகளைக் குறிக்கிறது. எரிசக்தித் திறன் கொண்ட ஒளி உமிழும் டையோடு (light emitting diode (LED)) பல்புகளின் விலையை குறைக்க உஜாலா திட்டம் உதவியது. இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பல்புகளின் விலை சுமார் ₹500 ஆக இருந்தது. இப்போது, ​​அவற்றின் விலை ₹70 மட்டுமே, பல வீடுகளுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது.


இந்த திட்டத்தில் தெருவிளக்கு தேசிய திட்டம் (Street Lighting National Programme) என்று அழைக்கப்படும் மற்றொரு எரிசக்தி சேமிப்பு நடவடிக்கையும் அடங்கும். இந்த திட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் 1.34 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் நிறுவப்பட்டன. இது உச்சபட்ச மின் தேவையை 1,500 மெகாவாட்டிற்கும் அதிகமாகக் குறைக்க உதவியது. ஜனவரி 2025 நிலவரப்படி, அரசாங்கம் சுமார் 37 கோடி எல்.ஈ.டி பல்புகளை விநியோகித்துள்ளது, மேலும் சுமார் 407 கோடிக்கும் அதிகமான விற்பனையை சாத்தியமாக்கியுள்ளது.


சிறிய ஃப்ளோரசன்ட் விளக்குகளுடன் (compact fluorescent lamps) ஒப்பிடும்போது LED பல்புகள் பாதி அளவே மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. ஒளிரும் பல்புகள் (incandescent light bulbs) LEDகளை விட ஒன்பது மடங்கு அதிக மின்சாரம் தேவைப்படுகின்றன. இதன் பொருள் LEDகளைப் பயன்படுத்துவது இந்திய வீடுகளுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது. UJALA திட்டம் மட்டும் இந்தியா $10 பில்லியனுக்கும் அதிகமாக சேமிக்க உதவியுள்ளது. இது 9,500 MW-க்கும் மேற்பட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதைத் தவிர்க்கவும் உதவியது. இது ஒவ்வொன்றும் 500 MW திறன் கொண்ட 19 புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைத் தவிர்ப்பதற்கு சமம்.


2001-ஆம் ஆண்டு எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, இந்தியா மற்ற எரிசக்தி திறன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2000 முதல் 2018 வரை, இந்த மேம்பாடுகள் இந்தியாவிற்கு எரிசக்தி தேவையை 15% குறைக்க உதவியது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency) கூறுகிறது. அவை 300 மில்லியன் டன் CO₂ உமிழ்வையும் தவிர்க்க உதவியது.


இருப்பினும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு நபருக்கு எரிசக்தி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏனென்றால் கோடை காலம் வெப்பமாகி வருவதால் அதிக குளிர்ச்சி தேவைப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு உச்சபட்ச மின் தேவை 250 GW-ஐ எட்டியது. இன்று, சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு, உலகின் மூன்றாவது பெரிய மின் நுகர்வோர் இந்தியா.


இந்தியாவின் பெரும்பாலான ஆற்றல் சுமார் 70% இன்னும் நிலக்கரியிலிருந்தே வருகிறது. 2032-ம் ஆண்டுக்குள் மேலும் 90 GW நிலக்கரி மின்சாரத்தை சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவது வலுவான ஆற்றல் திறன் விதிகள் (energy efficiency mandates) ஆகும். இந்த விதிகள் கட்டிடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSMEகள் என அழைக்கப்படுகின்றன) போன்ற பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


Original article:
Share:

இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் -ஆதித்ய முகர்ஜி, கிருஷ்ணா தங்கிராலா, சங்கல்ப் உத்கட்டா

 இருப்பிடம் இல்லாத e-Zero FIR ஒரு நல்ல முன்னேற்றப் படியாகும்.


மே 19 அன்று, உள்துறை அமைச்சகம் e-Zero FIR என்ற புதிய அமைப்பைத் தொடங்கியது. இந்த அமைப்பு நிதி சைபர் குற்றங்கள் குறித்த புகார்களை முதல் தகவல் அறிக்கையாக (FIR) தானாகவே மாற்றுகிறது.


மக்கள் விரைவாக நீதி பெற உதவும் ஒரு நல்ல நடவடிக்கை இது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் காவல்துறைக்கு ஒரு குற்றம் குறித்த அறிக்கை கிடைக்கும்போதெல்லாம் FIR பதிவு செய்யச் சொல்லியிருந்தாலும், தாமதங்கள் இன்னும் நடக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகள் மற்றும் மெதுவான நடவடிக்கைகள் பல இணைய மோசடி வழக்குகள் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளன. இது நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் தனிநபர்களைப் பாதிக்கிறது.


e-Zero FIR திட்டம் முதலில் டெல்லியில் விசாரிக்கப்படுகிறது. ₹10 லட்சத்திற்கும் அதிகமான நிதி இணையக் குற்றங்கள் குறித்த எந்தவொரு புகாரையும் இது விரைவாக அதிகாரப்பூர்வ FIR ஆக மாற்றும். மக்கள் இந்தக் குற்றங்களை தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் அல்லது 1930 இலவச அழைப்பு மூலம் புகாரளிக்கலாம். இந்த அமைப்பு காவல்துறை முடிவுகளால் ஏற்படும் தாமதங்களை நீக்குகிறது. இது டெல்லி காவல்துறையின் ஆன்லைன் FIR தளத்தை தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அமைப்புடன் இணைக்கிறது. இதனால் வழக்குப் பதிவு விரைவாகவும் எளிமையாகவும் இருக்கும்.


முன்பு, காவல் நிலையங்கள் தங்கள் பகுதிக்கு வெளியே குற்றம் நடந்தால் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுக்க முடியும். ஆனால் இப்போது, ​​அரசாங்கம் இந்த விதியை மாற்றியுள்ளது. இப்போது, ​​குற்றம் எங்கு நடந்தாலும், சைபர் குற்றத்திற்கான FIR-ஐ உடனடியாக பதிவு செய்யலாம்.


மேலும், தானியங்கி FIR பதிவு என்பது சட்டம் அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால், காவல்துறை FIR ஐ பதிவு செய்வதை தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்பதாகும்.


இந்த விரைவான FIR பதிவு பெரிய நிதி இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் வழக்கை முறையாகக் கண்காணிக்க உதவுகிறது. இது ஒரு நல்ல விசாரணைக்குத் தேவையான முக்கியமான ஆதாரங்களை விரைவாகச் சேமிக்கவும் உதவுகிறது.


இந்த மாற்றம் பெரிய இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது திடீரென்று பணத்தை இழக்கும் தொழில் வல்லுநர்கள் அல்லது வணிகங்கள் போன்றவை. அவர்கள் வழக்கமாக பண இழப்பு மற்றும் மெதுவான காவல் துறை வேலை இரண்டையும் சந்திக்கிறார்கள். ஆனால் தானியங்கி FIR பதிவு மற்றும் பணத்தை முன்கூட்டியே தடுக்கும் வாய்ப்புடன், அரசாங்கம் விரைவாக உதவ வேண்டும்.


தற்போது, ​​₹10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்கள் மட்டுமே இந்த தானியங்கி FIR-ஐப் பெறுகின்றன. இந்த வரம்பு அமைப்பைத் தொடங்க உதவுகிறது. ஆனால், சிறிய இழப்புகளுடன் பலரை விட்டுவிடுகிறது. இந்த வரம்பை நீக்குவது அல்லது மாற்றுவது அதிகமானவர்களுக்கு, குறிப்பாக குறைந்த பணம் உள்ளவர்களுக்கு உதவும்.


தவறான முறையில் FIR தொடங்கக்கூடிய போலியான அல்லது மோசமான புகார்களைத் தடுக்க, தானியங்கி அமைப்புக்கு தெளிவான விதிகள் மற்றும் கண்காணிப்புகள் தேவைப்படும்.


இணையக் குற்றங்களைக் கையாள்வதில் உள்ள வழக்கமான சிக்கல்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய e-Zero FIR அமைப்பு ஒரு நல்ல முன்னேற்றமாகும். இது மக்கள் எங்கிருந்தும் குற்றங்களைப் புகாரளிக்க அனுமதிக்கிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையத்தில் விரைவான மற்றும் நியாயமான நீதியை வழங்க டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகிறது.


முகர்ஜி ஒரு பங்குதாரர்; தங்கிராலா ஒரு முதன்மை உறுப்பினர்; மற்றும் உத்கதா ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் & கோ நிறுவனத்தில் உறுப்பினர் ஆவார்.



Original article:
Share:

புதிய நகரங்களை உருவாக்க இந்தியாவிற்கு ஏன் ஒரு தேசிய திட்டம் தேவை? - ஜெகன் ஷா

 நாடு முழுவதும் நகர்ப்புற வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு தெளிவான திட்டம் என்பது மாநிலங்களின் முழு ஆதரவுடன் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஒன்றிணைக்கும் இலக்காக இருக்கலாம்.


ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் ஆதரவு, புதிய நகரங்களை உருவாக்குவதில் மதிப்பைக் காண்கிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த புதிய (பசுமை) நகரங்கள் தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து பொது விவாதம் அதிகம் இல்லை. தற்போதைய அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் இருக்கும் நகரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் இது நிகழலாம். இந்தத் திட்டங்கள் நீர், வீட்டுவசதி, போக்குவரத்து, எரிசக்தி, கழிவு மேலாண்மை மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற துறைகளில் செயல்படுகின்றன. நகர்ப்புற சவால் நிதி மற்றும் "ஆக்கப்பூர்வமான மறுவளர்ச்சி" (“creative redevelopment”) என்ற யோசனை போன்ற புதிய முயற்சிகள் பழைய நகரங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் காட்டுகின்றன . எனவே, இந்தியாவின் எதிர்காலத்தில் புதிய நகரங்கள் என்ன பங்கு வகிக்கின்றன?


2024ஆம் ஆண்டில், 12 புதிய தொழில்துறை திறன் நகரங்கள் (smart cities) அறிவிக்கப்பட்டன. ஆனால் நாட்டில் ஏற்கனவே நிலம் வாங்குதல், திட்டங்களை உருவாக்குதல், உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்ற பல்வேறு கட்டங்களில் பல புதிய நகரங்கள் மற்றும் நகரியங்கள் (townships) உள்ளன. ஆம்பி பள்ளத்தாக்கு, லவாசா மற்றும் நயா ராய்ப்பூர் போன்ற சில இடங்கள் காலியாகி, அவை வளரத் தவறிவிட்டன. மற்றவை நில விலைகளை உயர்த்த மட்டுமே காரணமாகின்றன. ஆனால், வேலைகள் அல்லது வணிகங்களை உருவாக்குவதில்லை. ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற சிலவற்றிற்கு இன்னும் நல்ல முதலீடுகள் கிடைக்கின்றன. ஜேவர் மற்றும் நவி மும்பை விமான நிலையங்கள் பெரிய தேசிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை வேகமாக வளர வாய்ப்புள்ளது. இந்த புதிய நகரங்கள் அனைத்தும் பழைய நகரங்களுக்கு அருகில் உள்ளன. ஆனால், அவற்றுடன் இணைவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லை.


ஒரு புதிய நகரம் காலியான நிலத்தில் உருவாக்கப்படுவதில்லை. அது விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்களை எடுத்து, அவர்களின் கிராமங்களை உள்ளடக்கியது, மற்றும் அவர்களின் வளங்களைப் பயன்படுத்துகிறது. கிராமங்கள் வளரும் நகரங்களுடன் இணையும்போது, ​​அவை ஒன்றாக வளர முடியும்.  அமராவதி நகரம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், நகரங்கள் ஒரு திட்டம் இல்லாமல் வளரும்போது, ​​மக்கள் அலட்சியமாக செயல்படத் தொடங்குகிறார்கள்: தண்ணீர் எடுக்க ஆழமான கிணறுகள் தோண்டுதல், குப்பைகளை எங்கும் வீசுதல், வரி செலுத்தாமல் அரசாங்க உதவியைப் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒரு நகரத்தின் புதிய பகுதிகள் பழைய பகுதிகளைச் சார்ந்து இருந்தாலும் அவற்றை ஆதரிக்காதபோது, ​​மக்கள் "என் சுற்றுப்புறம் இல்லை" (“not in my neighborhood”) என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது நகரங்கள் உயிர்வாழ ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை பாதிக்கிறது.


நகரங்களை உருவாக்குவதற்கான இரண்டு வழிகளுக்கு இடையே ஒரு பெரிய சிக்கல் உள்ளது. மேலும், இவை இது தொடர முடியாது. புதிய பசுமை நகரங்கள் (புதிய நிலத்தில் கட்டப்பட்டது) மற்றும் வளர்ந்து வரும் பழுப்பு நிலப் பகுதிகள் (பழைய நகரங்கள் பெரிதாக வளர்வது) ஆகியவற்றின் சக்தியை இந்தியா ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும். நகர வளர்ச்சிக்கு தேசிய திட்டம் இல்லாததற்கு ஒரு காரணம், நகர விஷயங்களைக் கையாளும் மாநில அரசாங்கங்களில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை.


ஆனால், இந்தியா இனி காத்திருக்க முடியாது. நாடு முழுவதும் நகர வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு வலுவான, தெளிவான திட்டம், மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பது, உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டுவரும். எதிர்காலத்திற்காக பெரிய அளவில் திட்டமிட இதுவே சரியான நேரம் என்பதை பல அறிகுறிகள் காட்டுகின்றன.


முதலாவதாக, கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் உருவாக்கிய வெற்றிகரமான மாதிரிகள் மற்றும் நல்ல யோசனைகளைப் பின்பற்ற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இவை நகரங்களை வரவேற்கத்தக்கதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், பிரச்சினைகளைக் கையாளக்கூடியதாகவும் மாற்ற உதவும் கருவிகள் போன்றவை. இப்போது, ​​இந்த யோசனைகளின் அர்த்தம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.


இரண்டாவதாக, கதி சக்தி தளம் விரைவில் தனியார் வணிகங்களுக்குக் கிடைக்கும். இந்த தளம் கிராமப்புறம் மற்றும் நகரம், வெவ்வேறு தொழில்கள் மற்றும் வெவ்வேறு வருமானம் மற்றும் பின்னணியைக் கொண்ட மக்கள் என அனைத்து பகுதிகளையும் பார்க்கவும் சிறந்த செயல்களைத் திட்டமிடவும் உதவும்.


மூன்றாவதாக, தேசிய கிராம-நகரத் (ரூர்பன்) திட்டம் (National Rurban Mission), நாட்ட மாவட்டத் திட்டம் (Aspirational Districts Programme) மற்றும் பல பிராந்தியத் திட்டங்கள் மூலம் பிராந்திய வளர்ச்சியை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் ஏற்கனவே காண்கிறோம்.


நான்காவது மற்றும் மிக முக்கியமான காரணம் இதுதான்: நகரத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை தோல்வியடைவதை செய்திகள் பெரும்பாலும் காட்டுகின்றன. ஒரு நகரத்தை நடத்துவது கடினம் என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. மேலும், ஒரு திட்டம் இல்லாமல் நகரங்கள் வளரும்போது அது இன்னும் கடினம். நகர மையத்திற்கு அருகில் இருப்பதால் நன்மைகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில், நகரங்கள் விளிம்புகளில் அதிகமாக வளர அனுமதிக்கிறோம். ஆனால், இது நகரங்களை நிர்வகிப்பதை கடினமாக்குகிறது. ஏனெனில், அவர்களால் தங்கள் பழைய அமைப்புகளைக் கூட கவனித்துக் கொள்ள முடியாது. விதிகளை விரும்பாத குழந்தைகளைப் போல, நகரத்தின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.


நகரங்களுக்கு எட்டு மடங்கு அதிகப் பணத்தை செலவிட வேண்டும். ஆனால், தற்போது ​​நம்மிடம் ஏற்கனவே உள்ள பணத்தைக் கூட சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. ஒரு காரணம், பழைய நகரப் பகுதிகளில் முதலீடு செய்வதா அல்லது புதியவற்றில் முதலீடு செய்வதா என்பது குறித்து மக்கள் குழப்பமடைகிறார்கள். நகர மேம்பாட்டுக் குழுக்கள் இருக்கும் இடங்களில், அவர்கள் பெரும்பாலும் நகரத் திட்டங்களை பெரிதாக்குகிறார்கள். இது திட்டமிடப்படாத வளர்ச்சியை ஏற்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், பழைய பகுதிகளை அடர்த்தியாக மாற்றுவதன் மூலமோ அல்லது வளர்ச்சியைக் கையாள அருகிலுள்ள புதிய நகரங்களை உருவாக்குவதன் மூலமோ நகரம் வளர விரும்புகிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். சிறியதாகவும் மக்கள் மற்றும் வணிகங்களால் நிரம்பியதாகவும் இருக்கும் நகரங்கள், அதிகமாகப் பரவியுள்ள நகரங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. இடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த விதிகள் நகரங்களை நிர்வகிப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியம்.


நகரங்களுக்கு சரியான வழியில் பணத்தை செலவிட, பிராந்திய மற்றும் உள்ளூர் திட்டங்களாகப் பிரிக்கக்கூடிய ஒரு தேசிய திட்டம் நமக்குத் தேவை. நல்ல செய்தி என்னவென்றால், இதுபோன்ற ஒன்றை நாம் இதற்கு முன்பு செய்துள்ளோம். ஆனால், வேறு நேரத்தில். 1985-ஆம் ஆண்டு நகரமயமாக்கலுக்கான தேசிய ஆணையம் புதிய யோசனைகளுக்கு ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும். அத்தகைய தேசிய திட்டத்தை உருவாக்க இந்திய அரசியலமைப்பின் பிரிவு 263-ன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான குழுவிற்கு இந்தப் பணி வழங்கப்பட வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களின் வலையமைப்பு, பழைய நகரங்கள் மற்றும் புதிய நகரங்கள் அல்லது காலியான நிலங்கள் மற்றும் கட்டப்பட்ட நிலங்கள் என்ற அடிப்படையில் சிந்திப்பதை நிறுத்தினால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க உதவும்.


ஜெகன் ஷா, The Infravision Foundation அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார்.



Original article:
Share: