இந்தியாவின் வேளாண்துறையை எல்லோருக்கும் திறந்துவிடுவது, அத்துறைக்கு கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் -மன்பிரீத் சிங் பாதல்

 இந்தியா தனது விவசாய அமைப்புகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்கு திறக்க வேண்டும் என்ற அழுத்தம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களது சொந்த விவசாயத்தை நிதியுதவி செய்து கொண்டிருக்கவில்லை என்றால் மட்டுமே நியாயமானதாக இருக்கும்.


வேளாண் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது என்று சொல்வதும், சிறு விவசாயிகளின் குடும்பங்கள் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றன என்று கூறுவதும் போதாது. இந்த புள்ளிவிவரங்கள் கதையின் முழு அளவையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே, இந்தியாவின் விவசாய மற்றும் கிராமப்புறங்களை அறியாதவர்களுக்கு, இந்தத் தரவு ஒரு பெரிய நிகழ்வை மறைக்கிறது.


ஒரு விவசாயியாகவும் முன்னாள் நிதியமைச்சராகவும் நான் இதைச் குறிப்பிடுவதாவது, திறந்தவெளி விவசாயத்தின் விளைவுகள் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டவை. இதில், சமூக நிலைத்தன்மையானது ஆபத்தில் உள்ளது. மற்றும் இது நாம் தயாராக இல்லாத ஒரு கலாச்சார எழுச்சியை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, 250 மில்லியன் மக்கள் நேரடியாக விவசாயத்தை சார்ந்துள்ளனர். மேலும், 700 மில்லியன் இந்தியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயம் மற்றும் கிராமப்புறத் துறையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். வேளாண் துறையைப் பாதுகாப்பது என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல. இது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். இது பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலைத்தன்மையை பராமரிப்பதற்கு மிகவும் முக்கியமானது.


வேளாண் மானியம் (subsidy) மற்றும் வரிவிதிப்புகள் (tariffs) பற்றிய வாதம் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பகுதியிலும், விதிமுறைகளும் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. ஆனால், பிரச்சினை அப்படியே உள்ளது. இந்தியாவில் MSP இருந்தால், அமெரிக்காவில் ERP, PLC, ARC மற்றும் DMC உள்ளன. இவற்றைப் பற்றி மேலும் விளக்குகிறேன்.


ERP என்பது MSPக்கு இணையான பயனுள்ள ஒரு குறிப்பு விலையாகும் (Reference Price). அமெரிக்காவில், சந்தை விலைகள் இந்த நிலைக்குக் கீழே விழுந்தால், விவசாயிகள் அரசாங்கத்திடமிருந்து நேரடி பணம் பெறுகிறார்கள். மேலும், இது விலை இழப்பு பாதுகாப்பு (Price Loss Coverage (PLC)) என்று அழைக்கப்படுகிறது. PLC மற்றும் வேளாண் இடர் பாதுகாப்பு (Agriculture Risk Coverage (ARC)) இரண்டும் கோதுமை மற்றும் சோளம் முதல் சோயாபீன் மற்றும் பருத்தி வரை 22 முக்கியப் பயிர்களை உள்ளடக்கியது. இந்த அமைப்புகள் விவசாயத்திற்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவை பால்வள வருவாய் பாதுகாப்பு (Dairy Margin Coverage (DMC)) திட்டத்தின் கீழ் பால் துறைக்கும் நீட்டிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வேளாண் கொள்கை (Common Agricultural Policy (CAP)), விலைகள் தலையீட்டு அளவைவிடக் குறையும்போது, அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் போலவே செயல்படும்போது, பணம் வழங்கப்படுகின்றன.


இந்தியாவில், அரசாங்கம் MSP-யில் பயிர்களை கொள்முதல் செய்தாலும், அமெரிக்காவில் அரசாங்கம் பயிர்களை கொள்முதல் செய்வதில்லை, மாறாக விலைகள் குறைந்தபட்சத்தைவிடக் குறைவாக இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்துகிறது. இந்தியாவில் கல்வியறிவு நிலைகள் மற்றும் பல்வேறு EU மற்றும் US கொள்கைகளில் சேர தேவையான ஆவணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய விவசாயிகளை இந்த அமைப்புகளுக்கு மாறச் சொல்வது அதிகாரத்துவத்தின் மற்றொரு அடுக்கைச் சேர்க்கும். இந்தியாவில் US மற்றும் EU மாதிரிகளை செயல்படுத்த பல ஆண்டுகள் அல்லது பல காலங்கள் ஆகும்.


அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் சொந்த வேளாண் துறைகளுக்கு மானியம் வழங்காவிட்டால், அதன் வேளாண் வழிமுறைகளை அகற்றி, சர்வதேச சந்தை சக்திகளுக்குத் திறக்க இந்தியா மீதான அழுத்தம் நியாயமானதாக இருக்கும். அமெரிக்கா சுமார் 20 பில்லியன் டாலர்களையும் EU சுமார் 50 பில்லியன் டாலர்களையும் விவசாய மானியங்களுக்கு செலவிடுகிறது. உண்மையில், இந்த மானியங்களில் பல மறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் MSP அமைப்பு மிகவும் வெளிப்படையானது.


அமெரிக்க மானியங்களின் கவனம் பெரிய வேளாண் சார்ந்ததாக உள்ளது. அதே நேரத்தில், இந்திய வேளாண் கொள்கை சிறு விவசாயிகளை மையமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளில் சந்தை நிலைப்படுத்தல், வருமான பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், இந்தியா சிறு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது. கிராமப்புற பொருளாதாரத்தின் நிலையான மேம்பாட்டை உறுதி செய்வதும் ஆகும். ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் வருமான ஆதரவு, சுற்றுச்சூழல் இலக்குகள், காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை நோக்கமாகக் கொண்டுள்ளன.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியில், 80 சதவீத மானியங்கள் பெரிய பண்ணைகளுக்குச் செல்கின்றன. அதே நேரத்தில் இதற்கு நேர்மாறாக இந்தியாவில், 80 சதவீத மானியங்கள் சிறு மற்றும் நடுத்தர வேளாண்களுக்குச் செல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அதன் சமீபத்திய பட்ஜெட் திட்டங்களில், சிறு விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம், அமெரிக்க மாதிரியிலிருந்து விலகி, இந்திய மாதிரிக்கு நெருக்கமான ஒன்றைப் பின்பற்றி செயல்படுத்துகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கையில் (CAP) சமீபத்திய ஏற்பாடு 2021-2027-ஆம் ஆண்டிற்கான 387 பில்லியன் யூரோக்கள் ($451 பில்லியன்) ஆகும். மேலும் சமீபத்தில் கடந்த மாதம், பெரிய விவசாயிகளிடமிருந்து சிறிய விவசாயிகளுக்கு ஆதரவை மாற்றும் முயற்சியில், ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 1,00,000 யூரோக்கள் என்ற வரம்பை அவர்கள் முன்மொழிந்தனர். அதாவது ஒரு விவசாயிக்கு ஒரு கோடி மானியம் என்ற உச்சவரம்பைக் குறிக்கிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, உண்மையான பிரச்சினை நியாயமான மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒப்பந்தங்களை வைத்திருப்பதுதான். இந்திய MSP தெளிவானது, வெளிப்படையானது மற்றும் இந்திய சூழலை மையமாகக் கொண்டது போலவே, CAP, ERP, PLC, ARC மற்றும் DMC ஆகியவற்றின் அமைப்புகள் அமெரிக்க மற்றும் EU சூழல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணோட்டம் பொருளாதாரத்திலிருந்து மட்டுமல்ல, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சாரத்திலிருந்தும் வருகிறது. அமெரிக்கா மற்றும் EU மானியங்கள் சந்தையை தங்களுக்கு சாதகமாக சிதைக்கும்போது, முழு வேளாண் துறையையும் அனைவருக்கும் இலவசமாகத் திறப்பது ஒரு வகையான சமச்சீரற்ற போரை உருவாக்கும். இது இந்திய சமூகத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஏற்படும் எழுச்சி மிகப்பெரியதாக இருக்கும்.


இந்த நிலைப்பாடு மிக உயர்ந்த மட்டங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், "எங்களுக்கு, எங்கள் விவசாயிகளின் நலன் முதன்மையானது. இந்தியா அதன் விவசாயிகள், பால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இந்த நிலைப்பாட்டிற்கு தான் தனிப்பட்ட முறையில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பதாகவும், ஆனால் அதற்குத் தயாராக இருப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.


எழுத்தாளர் பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சர் ஆவார்.



Original article:

Share:

புத்தகத்துடன் தேர்வெழுதும் CBSE திட்டம் மற்றும் மாணவர்கள் மீதான அதன் தாக்கம் -விதீஷா குந்தமல்லா

 நினைவாற்றல் சார்ந்த தேர்வுகளைவிட திறந்த புத்தகத் (open-book) தேர்வுகள் எப்போதும் எளிதானவை அல்ல. இந்த முறை இந்தியாவிற்குப் புதியதல்ல, ஆனால் இதைப் பயன்படுத்துவது சில சவால்களைச் சந்தித்துள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), 2026-27 கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பில் திறந்த புத்தகத் தேர்வு முறைகளை (open-book assessments (OBE)) தொடங்க உள்ளது. பல ஆசிரியர்கள் இந்த யோசனையை ஆதரிப்பதாக ஒரு ஆய்வு முடிவு காட்டியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ஜூன் மாதம் CBSE நிர்வாகக் குழு இந்தத் திட்டத்தை அங்கீகரித்தது. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியலுக்கும் 2023 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதிரி ‘திறந்த புத்தகத் தேர்வுகள்’ நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை திறந்த புத்தகத் தேர்வு முறைகளின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் இந்திய வகுப்பறைகளில் அவற்றின் பங்கு பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.


திறந்த புத்தகத் தேர்வுகள் என்றால் என்ன?


திறந்த புத்தகத் தேர்வு, மாணவர்கள் தேர்வின் போது நினைவாற்றலை மட்டும் சார்ந்து இருப்பதற்கு பதிலாக, பாடப்புத்தகங்கள், வகுப்பு குறிப்புகள் அல்லது பிற குறிப்பிட்ட பொருட்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.


இதிலுள்ள சவால் என்பது எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவது, பொருளைப் புரிந்துகொள்வது, மற்றும் அதைப் பிரச்சினைக்கு பயன்படுத்துவது ஆகும். உதாரணமாக, ஒரு அறிவியல் கட்டுரையில், உண்மைகள் உங்கள் முன்னால் இருக்கலாம், ஆனால் உண்மையான சோதனை என்பது அவற்றை ஒன்றிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே ஆகும். இந்தத் தேர்வுகள் மாணவர்கள் வெறுமனே அவற்றை மீண்டும் சொல்வதற்குப் பதிலாக, யோசனைகளை திறம்பட விளக்க முடியுமா என்பதை மதிப்பிடுகின்றன.


உலகளவில் ‘திறந்த புத்தகத் தேர்வு’ முறையின் வரலாறு என்ன?


திறந்த புத்தகத் தேர்வுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஹாங்காங் 1953-ல் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியது.


2004-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிங்-யின் சான் மற்றும் குவோக்-வை முய் ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முதல் முறையாக திறந்த புத்தகத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவற்றைப் பற்றி நேர்மறையான கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆழமாகத் தயாராகவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.


பல மாணவர்கள் கேள்விகளைப் படித்து தேவையான விஷயங்களைக் கண்டுபிடிக்க 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டதாக ஆய்வு காட்டுகிறது. அவர்கள் பெரும்பாலும் பயிற்றுவிப்பாளரின் கையேடுகளுடன் தொடங்கி, பின்னர் ஒன்று அல்லது இரண்டு பாடப்புத்தகங்களுக்குச் சென்றனர். சிலர் விரிவுரையாளரின் குறிப்புகளின் குறுகிய பதிப்புகளை உருவாக்கினர் அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க "தயார் செய்யப்பட்ட மாதிரி" புத்தகங்களைப் பயன்படுத்தினர்.


1951 மற்றும் 1978-ஆம் ஆண்டுக்கு இடையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் பல்வேறு பல்கலைக்கழக பாடநெறிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளை சோதித்தன. அவர்கள் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் விரிவுரை குறிப்புகளைப் பயன்படுத்த அனுமதித்தனர். 


Towards Excellence இதழில் மம்தா மற்றும் நிதின் பிள்ளை எழுதிய 2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில், திறந்த புத்தகத் தேர்வுகள் ஒரே மாதிரியான ஒட்டுமொத்த முடிவுகளைக் கொண்டிருந்தன என்று கூறப்பட்டுள்ளது. அவை மாணவர்கள் மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்துக்களை நன்கு புரிந்துகொள்ள உதவியது. பலவீனமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர். மேலும், பாரம்பரியத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது சோதனைகள் வெவ்வேறு திறன்களை அளவிடுகின்றன.


ஆரம்பகால சோதனைகளுக்குப் பிறகும், முக்கியமான பள்ளித் தேர்வுகளில் திறந்த புத்தகத் தேர்வுகள் இன்னும் அசாதாரணமான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் GCSEகள் அல்லது US SATகள் போன்றவை மூடிய புத்தகத் தேர்வு முறைகளைப்  பயன்படுத்துகின்றன.


கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இது சிறிது காலத்திற்கு மாறியது. பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் திறந்த புத்தகத் தேர்வு திறந்த வலைத் தேர்வுகளை அறிமுகப்படுத்தின. ஆனால் அவர்கள் இந்த முறைக்கு பழக்கப்படாததால் பல மாணவர்கள் முதலில்  கடினமாக இருப்பதாக உணர்ந்தனர்.


இந்தியாவில் திறந்த புத்தகத் தேர்வு ஒரு புதிய கருத்தா?


2014-ஆம் ஆண்டில், CBSE திறந்த உரை அடிப்படையிலான மதிப்பீட்டை (Open Text-Based Assessment (OTBA)) அறிமுகப்படுத்தியது. இது மனப்பாடம் செய்வதைக் குறைக்கும். இது 9-ஆம் வகுப்பு இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கும், 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளுக்கும் பொருளாதாரம், உயிரியல் மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. தேர்வுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாணவர்கள் குறிப்புப் பொருட்களைப் பெற்றனர்.


2017-18 வாக்கில், CBSE OTBA-ஐ நிறுத்தியது. அதன் முக்கிய நோக்கமான திறன்களை வளர்க்க உதவவில்லை என்று கூறியது.


கல்லூரிகளில் திறந்த புத்தகத் தேர்வுகள் மிகவும் பொதுவானவை. 2019-ஆம் ஆண்டில், ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் அவற்றின் பயன்பாட்டை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகரித்தது.


தொற்றுநோய் காலத்தில், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் திறந்த புத்தகத் தேர்வுகளைப் பயன்படுத்தின. IIT டெல்லி, IIT இந்தூர் மற்றும் IIT பம்பாய் ஆகியவையும் அவற்றை இணைய வழியில் நடத்தின.


டெல்லி பல்கலைக்கழகம் தனது முதல் திறந்த புத்தகத் தேர்வை ஆகஸ்ட் 2020-ல் நடத்தியது. இத்தேர்வுகளை கடைசியாக மார்ச் 2022-ல் நடத்தியது. இது ஜனவரி 2022-ல் உடல் தகுதித் தேர்வுகளுக்குத் திரும்பியது. ஆனால், நவம்பர் 2021-ல் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் ஒரு சுற்று அனுமதித்தது.


சமீபத்தில், கேரளாவின் உயர்கல்வி சீர்திருத்த ஆணையம், உள் அல்லது நடைமுறைத் தேர்வுகளுக்கு மட்டுமே திறந்த புத்தகத் தேர்வுகளைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.


‘திறந்த புத்தகத் தேர்வு’ முறைகளை பற்றி ஆராய்ச்சி என்ன சொல்கிறது?


2000-ஆம் ஆண்டு நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், திறந்த புத்தகத் தேர்வுகள் (OBEs) எழுதும் மாணவர்கள் குறிப்புகளை நினைவில் கொள்வதைவிட அவர்களின் சொந்த கருத்துக்களை இணைப்பதே அதிக வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டது. இந்த வடிவம் ஒரு புத்தகத்தில் சரியான பக்கத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக ஆழமான சிந்தனையை ஊக்குவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


புவனேஸ்வரில் உள்ள AIIMS-ல், மருத்துவ மாணவர்கள் திறந்த புத்தகத் தேர்வு முறைகளின்போது குறைவான மன அழுத்தத்தை உணர்ந்ததாக ஆராய்ச்சி காட்டுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டு 98 மாணவர்களை உள்ளடக்கிய இந்தியாவை தளமாகக் கொண்ட மற்றொரு இணையவழி முன்னோடி ஆய்வில், 78.6% பேர் தேர்ச்சி பெற்றனர். கருத்து தெரிவித்த 55 பேரில், பெரும்பாலானவர்கள் இந்த வடிவம் "மன அழுத்தம் இல்லாதது" என்று கூறினர், ஆனால், பலர் மோசமான இணைய வசதியை ஒரு பெரிய பிரச்சனையாகக் குறிப்பிட்டனர்.


டெல்லி பல்கலைக்கழகத்தில், தனஞ்சய் ஆஷ்ரி மற்றும் பிபு பி. சாஹூ ஆகியோரின் ஆய்வில், தேவையான திறன்களில் சிறப்பு பயிற்சி இல்லாவிட்டாலும், திறந்த புத்தகத் தேர்வு முறைகளில் மாணவர்கள் சிறப்பாக மதிப்பெண் பெற்றதைக் கண்டறிந்தனர். நிர்மா பல்கலைக்கழகத்தில் மம்தா மற்றும் நிதின் பிள்ளை ஆகியோரின் ஆராய்ச்சி, உண்மையான முன்னேற்றத்திற்கு குறிப்பிட்ட பயிற்சி தேவை என்று பரிந்துரைத்தது. விடைகளைத் தேடுவதற்குப் பதிலாக, ஒரு கேள்வியைப் புரிந்துகொள்வது, கருத்துகளை பகுப்பாய்வு செய்வது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பது போன்றவை இதில் அடங்கும்.


CBSE இப்போது ‘திறந்த புத்தகத் தேர்வு’ முறைக்கு ஒப்புதல் அளிப்பது ஏன்?


இந்த மாற்றம் பள்ளிகள் மாணவர்களை சோதிக்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 திறந்த புத்தகத் தேர்வுகளை குறிப்பாகக் குறிப்பிடவில்லை. ஆனால், கருத்துக்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, திறன்கள் மற்றும் புரிதலில் அதிக கவனம் செலுத்த பரிந்துரைக்கிறது. மாணவர்கள் கருத்துக்களைக் கற்றுக்கொள்வது, விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அந்த அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்குவதே இதன் நோக்கம்.


பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பும் (National Curriculum Framework for School Education (NCERT)) இதை ஆதரிக்கிறது. தற்போதைய தேர்வுகள் முக்கியமாக நினைவாற்றலைச் சோதிக்கின்றன, சில சமயங்களில் மாணவர்களிடையே பயத்தை உருவாக்குகின்றன என்று அது கூறுகிறது. இதை மேம்படுத்த, வெவ்வேறு கற்றல் பாணிகளுக்கு ஏற்ற, பயனுள்ள கருத்துக்களை வழங்க மற்றும் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் தேர்வு முறைகளை இது பரிந்துரைக்கிறது.



Original article:

Share:

மண் வளத்தை மீட்டெடுக்க இந்தியா பழுப்புப் புரட்சி 2.0யை மேற்கொள்ள வேண்டும். -முரளி கோபால், அல்கா குப்தா

 பால்பண்ணைத் துறையில் அமுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, பரவலாக்கப்பட்ட, கிராமப்புற கூட்டுறவு முறையைப் பயன்படுத்தி, பண்ணைக் கழிவுகளை மண்ணை மேம்படுத்தும் கரிமப் பொருட்களாக மாற்ற வேண்டும்.


வேளாண் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நாடு 350-500 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது. இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை எரிக்கப்படுகின்றன அல்லது தவறான முறையில் அழுக விடப்படுகின்றன.  இதனால் கடுமையான காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் மண்ணில் கரிம கார்பன் இழப்பு ஏற்படுகிறது. பால் துறையில் அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் வெற்றியிலிருந்து கற்றுக்கொண்டு, வேளாண் கழிவுகளை உரம், மண்புழு உரம் மற்றும் பயோகரி போன்ற மண்ணை வளப்படுத்தும் பொருட்களாக மாற்ற இந்தியா ஒரு பரவலாக்கப்பட்ட கிராமப்புற கூட்டுறவு மாதிரியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஹிராலால் சவுத்ரி தொடங்கிய முதல் பழுப்புப் புரட்சி, விசாகப்பட்டினத்தின் பழங்குடிப் பகுதிகளில் தோல் மற்றும் காபியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது. பழுப்புப் புரட்சி 2.0 இந்தியாவின் மண் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நீண்டகால உணவு உற்பத்தியைப் பராமரிக்கவும், கிராமப்புற வேலைகளை உருவாக்கவும், உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக இந்தியாவின் காலநிலை இலக்குகளை ஆதரிக்கவும் உதவும். AI அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் கார்பன் வரவு திட்டங்களைப் பயன்படுத்துவது செயல்முறையை திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், பொருளாதார ரீதியாக நிலையானதாகவும் மாற்றும்.





மண் வளம் குறையும்


இந்தியாவின் மண் வளம் கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வருகிறது. முக்கியமாக மண்ணில் உள்ள இயற்கை கரிம அளவு குறைந்துள்ளதால், இந்த சரிவு அதிக உள்ளீடு, தீவிர விவசாயம் மற்றும் ஒற்றைப் பயிர் சாகுபடியுடன் தொடங்கியது. இந்தியாவின் பெரும்பாலான வேளாண் நிலங்களில் இப்போது நீண்டகால உற்பத்தித்திறனுக்குத் தேவையான அளவைவிட குறைவான கரிமப் பொருட்கள் உள்ளன என்று ஆராய்ச்சி காட்டுகிறது.


இதைத் தீர்க்க, ஒரு தேசிய இயக்கமாக "பழுப்புப் புரட்சி 2.0" பரிந்துரைக்கப்படுகிறது. வயல் பயிர்கள் (அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி மற்றும் கரும்பு போன்றவை), தோட்டக்கலை (காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் கிழங்குகள்), எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் (தேங்காய், பாக்கு, எண்ணெய், பனை, தேயிலை மற்றும் காபி போன்றவை) ஆகியவற்றிலிருந்து அதிக அளவு பயிர் எச்சங்கள் மற்றும் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நிலையான விவசாயத்தை மீட்டெடுக்க இந்தக் கழிவுகளிலிருந்து வரும் கரிம உள்ளடக்கம் மீண்டும் மண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படும்.


அமுல் போன்ற கூட்டுறவு மாதிரியைப் பயன்படுத்த இந்த திட்டம் பரிந்துரைக்கிறது. இது அமைப்பை உள்ளடக்கியதாக மாற்றும் மற்றும் உள்ளூர் பகுதிகளிலிருந்து தேசிய அளவில் விரைவாக வளர அனுமதிக்கும்.


வேளாண் கழிவுகள் மற்றும் ஆபத்துகள்


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 முதல் 990 மில்லியன் டன் பயிர் எச்சங்கள் மற்றும் விவசாயக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. பல மாவட்டங்களில், இந்தக் கழிவுகளில் 40%-க்கும் அதிகமானவை பழங்கள், காய்கறிகள் மற்றும் பிரதான பயிர்களிலிருந்து வருகின்றன. சில தோட்டக்கலைப் பகுதிகளில், இது 70% வரை அடையலாம்.


தற்போது, இந்த உயிரியலில் 20%-க்கும் குறைவானது முறையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை வெளிப்படையாக எரிக்கப்படுகின்றன, கொட்டப்படுகின்றன அல்லது நிர்வகிக்கப்படாமல் விடப்படுகின்றன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் கரிமங்களை இழக்க வழிவகுக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.


தோட்டப் பயிர் கழிவுகள் மற்றொரு வகை கழிவுகள் ஆகும். இது மிக மெதுவாக உடைந்து நீண்ட காலத்திற்கு உருவாகலாம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை உருவாக்குகின்றன.


வேளாண் கழிவுகளை மோசமாக நிர்வகிப்பதால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வட இந்தியாவில், விவசாயிகள் பெரும்பாலும் மீதமுள்ள பயிர் எச்சங்களை எரிக்கின்றனர்.  இது நுண்ணிய துகள் பொருள் (PM2.5), விஷ வாயுக்கள் மற்றும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் போன்ற அதிக அளவு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுகிறது.


உதாரணமாக, ஒரு டன் நெல் வைக்கோலை எரிப்பதால் சுமார் 3 கிலோ துகள் பொருள், 60 கிலோ கார்பன் மோனாக்சைடு மற்றும் 1,460 கிலோ கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவு சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு உற்பத்தியாகிறது.


கழிவு நீர்நிலைகளில் சேரும்போது, அது யூட்ரோஃபிகேஷனை ஏற்படுத்துகிறது. [யூட்ரோபிகேஷன் (Eutrophication) என்பது நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ், குவிந்து, நீரின் தரத்தை பாதிக்கும் ஒரு செயல்முறையாகும். இது பொதுவாக விவசாய நிலங்களில் இருந்து வரும் உரங்கள், கழிவுநீர், அல்லது கழிவு கிடங்குகளில் இருந்து வெளியேறும் நீர் ஆகியவற்றால் நீர்நிலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது]. அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த மாசுபாடு காற்று மற்றும் நீர் இரண்டையும் பாதிக்கிறது. கிராமப்புற சுகாதாரம், பொருளாதாரத்தை சேதப்படுத்துகிறது மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது.





கொள்கை கவனம் ஏன் மாற வேண்டும்?


தற்போதைய கொள்கைகள் வேளாண் கழிவுகளை உயிரி எரிபொருள்கள் அல்லது மதிப்புமிக்க உயிர்வேதியியல் பொருட்களுக்கான தொழில்துறைப் பொருளாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கரிமக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியப் பங்கை அவை பெரும்பாலும் கவனிக்கவில்லை.


வேளாண் கழிவுகளை அதிக மதிப்புள்ள தொழில்துறை பொருட்களாக மாற்றுவது விரைவான பொருளாதார நன்மைகளைத் தரும். ஆனால் கழிவுகளின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதற்கு ஏற்றது. இந்த அணுகுமுறை மண்ணை மேம்படுத்தப் பயன்படுத்தக்கூடிய கரிமப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளும்.


மண்ணில் இயற்கை கரிம இழப்பு எதிர்கால பயிர் விளைச்சலைக் குறைக்கிறது. வேளாண்மையின் முறையை அச்சுறுத்துகிறது, கிராமப்புற வருமானத்தைக் குறைக்கிறது மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு மதிப்பு சேர்க்கும் வாய்ப்புகளைத் துண்டிக்கிறது. நீண்டகாலத்திற்கு, மண்வளம் புறக்கணிக்கப்பட்டால், வேளாண் கழிவுகளின் தொழில்துறை பயன்பாடுகூட தோல்வியடையும். 


அமுல் மாதிரி


பால்வளத் துறையில் அமுலின் வளர்ச்சி, பழுப்புப் புரட்சி 2.0-ஐ வளர்ப்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தை வழங்குகிறது.


அமுல் கிராம அளவிலான பால் உற்பத்தியாளர்களை, உறுப்பினர்களுக்குச் சொந்தமான இலாபப் பகிர்வு அமைப்பாக ஒன்றிணைத்தது. இந்த அமைப்பு உள்ளூர் மக்களை பங்கேற்க அனுமதித்தது. அதே நேரத்தில் பெரிய அளவிலான செயல்பாடுகளிலிருந்து பயனடையவும் அனுமதித்தது.


வேளாண் கழிவு மறுசுழற்சிக்கும் இதேபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்தலாம். உள்ளூர் மறுசுழற்சி கூட்டுறவு நிறுவனங்கள் உரம், மண்புழு உரம் மற்றும் உயிரிக்கரி போன்ற பொருட்களை சேகரித்து, அறிவியல் ரீதியாக செயலாக்கி, சந்தைப்படுத்தலாம். இந்த உற்பத்தியில் பெரும்பகுதியை உள்ளூர் மண்ணுக்குத் திருப்பி அனுப்பலாம், மேலும் கூடுதல் பொருட்களை சந்தையில் விற்கலாம்.


தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (எஸ்ஏயூக்கள்) மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்கள் (கேவிகேக்கள்) போன்ற நிறுவனங்கள் வழங்கலாம். இதில் கிராமப்புற தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாடு முழுவதும் உட்பொதிக்கப்பட்டிருக்கும். கூட்டுறவு அமைப்புகள், பகிரப்பட்ட நிதி, தரக் கட்டுப்பாடு மற்றும் தயாரிப்புக் கண்காணிப்பை நிர்வகிக்கும்.


அறிவியல் முன்னேற்றங்கள், AI ஒருங்கிணைப்பு


புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த மாதிரி மிகவும் பயனுள்ளதாகவும் திறமையாகவும் மாற முடியும்.


விரைவான உரமாக்கல், மேம்படுத்தப்பட்ட மண்புழு உரமாக்கல் மற்றும் மட்டு உயிரிசார் அலகுகள் மக்கள் இந்த முறையைப் பின்பற்றுவதையும் உயர்தர மண் திருத்தங்களை உருவாக்குவதையும் எளிதாக்குகின்றன.


செயற்கை நுண்ணறிவு மற்றும் IoT தளங்களைப் பயன்படுத்துவது மண்ணின் ஆரோக்கியத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், உரம் உற்பத்தியை மேம்படுத்தவும், உயிரி பொருட்களின் இயக்கத்தை மிகவும் திறம்பட திட்டமிடவும் உதவுகிறது.


இந்த தரவு சார்ந்த முறைகள் கார்பன் கடன் திட்டங்களுக்கான வெளிப்படையான கண்காணிப்பையும், தயாரிப்பு தரத்தை உறுதி செய்வதையும், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்குவதையும் அனுமதிக்கின்றன.


பிரவுன் புரட்சி 2.0 தேசிய விவசாய முன்னுரிமைகளுடன் பொருந்த வேண்டும் மற்றும் சமீபத்திய நிபுணர் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும்.


ICAR மற்றும் NAAS ஆகியவை பண்ணைக் கழிவுகளை பிராந்திய-குறிப்பிட்ட மறுசுழற்சி செய்தல், உரமாக்கல் மையங்கள் அல்லது கூட்டுறவுகளை அமைத்தல் மற்றும் மண்ணின் கரிம கார்பனில் நிரூபிக்கப்பட்ட அதிகரிப்புகளின் அடிப்படையில் சலுகைகளை வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.


"வேளாண் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குதல்" போன்ற அரசாங்க வழிகாட்டிகள், சோதிக்கப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை விவரிக்கின்றன, அவற்றில் பல கூட்டுறவு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.


கொள்கை பரிந்துரைகள்


பழுப்புப் புரட்சி 2.0 ஐ அடைய, ஒவ்வொரு விவசாய மாவட்டத்திலும் கூட்டுறவு அடிப்படையிலான வேளாண் கழிவு சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் அலகுகளுக்கு வலுவான விதிகள் மற்றும் சரியான நிதியுதவி கொள்கையில் இருக்க வேண்டும். உழவர்கள் உயிரிப்பொருட்களைச் சேகரித்து செயலாக்குவதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் போன்ற பொருளாதார நன்மைகளைப் பெற வேண்டும். சிறிய உரம் தயாரித்தல் மற்றும் உயிரி கரி அலகுகளுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் அவற்றின் மேலாண்மை KVK மற்றும் வேளாண் விரிவாக்கத் திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். திறந்தவெளி எரிப்பு மற்றும் கவனக்குறைவான கழிவுகளை அகற்றுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும். சிறந்த மாற்று வழிகளைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு சரியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.


இந்திய மற்றும் சர்வதேச காலநிலை நிதிகளைப் பயன்படுத்தி மண்ணில் கார்பனை சேமித்து வைப்பதற்காக விவசாயிகளுக்கு தேசிய கரிம கார்பன் கடன் பதிவேடு வெகுமதி அளிக்க வேண்டும். AI அடிப்படையிலான கண்காணிப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய வேண்டும். வேளாண் கழிவு மறுசுழற்சி மண் சுகாதார அட்டை திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு திட்டங்களுடன் விவசாயிகளுக்கு அவர்களின் மண் நிலை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட உரத்தின் நன்மைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.


ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் மற்றும் உழவர்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி திறமையான தொழிலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.


இராஜதந்திர நன்மைகள்


பழுப்புப் புரட்சி 2.0, மண் ஆரோக்கியத்தையும் வளத்தையும் மீட்டெடுப்பதையும், மண் அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்க உதவுவதையும், நீண்டகாலத்திற்கு பயிர் விளைச்சலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வறட்சி மற்றும் வெள்ளங்களுக்கு வேளாண்மையை மேலும் தாங்கும் திறன் கொண்டதாக மாற்றும்.


சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் மில்லியன் கணக்கான கிராமப்புற வேலைகளை உருவாக்கும். இது உழவர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் விலையுயர்ந்த உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.


சுற்றுச்சூழல் ரீதியாக, இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம், நீர் தரம் மற்றும் பல்லுயிரியலை மேம்படுத்தலாம் மற்றும் காலநிலை தொடர்பான நன்மைகளுக்கான இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்தலாம்.


தொழில்நுட்பரீதியாக, நிலையான வேளாண்மைத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முன்னணி எடுத்துக்காட்டாக இது செயல்படும்.


நிலைத்தன்மை, சமூக உள்ளடக்கம்


சுருக்கமாக, பழுப்புப் புரட்சி 2.0, உள்ளூர், உள்ளடக்கிய மற்றும் கூட்டுறவு முயற்சிகள் மூலம் விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை இந்திய மண்ணில் மீண்டும் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு சிறிய அல்லது எளிதான கொள்கைத் தேர்வல்ல. ஆனால், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு கிராமப்புற செழிப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான மற்றும் நீண்டகால உத்தி. இந்த இயக்கத்திற்கு முன்னுரிமை அளித்து அதை விரிவுபடுத்துவதற்கு வலுவான தேசியத் தலைமை தேவை. அவ்வாறு செய்வதன் மூலம், அறிவியல் நிலைத்தன்மையை சமூக உள்ளடக்கத்துடன் இணைப்பதில் இந்தியா மீண்டும் ஒரு உலகளாவிய முன்மாதிரியை அமைக்க முடியும்.


முரளி கோபால் வேளாண் நுண்ணுயிரியலில் முதன்மை விஞ்ஞானியாகவும், உடலியல், உயிர்வேதியியல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடு தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.


அல்கா குப்தா கேரளாவின் காசர்கோட்டில் உள்ள ஐசிஏஆர்-மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் நுண்ணுயிரியலில் முதன்மை விஞ்ஞானியாக உள்ளார்.



Original article:

Share:

நாய்களும் சட்டங்களும் : தெரு நாய்கள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி…

 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விலங்குகளுக்கான தங்குமிடங்கள் மற்றும் கருத்தடை திட்டங்களுக்கு நிதி தேவை


ஆகஸ்ட் 11, 2025 அன்று, உச்ச நீதிமன்றம் தெரு நாய்கள் பிரச்சினையில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான உத்தரவை பிறப்பித்தது. டெல்லி மற்றும் அருகிலுள்ள நகரங்கள் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நிரந்தரமாக தங்குமிடங்களில் வைத்திருக்கவும், தங்குமிட திறனை விரைவாக அதிகரிக்கவும் அது கூறியது. அரசாங்க நடவடிக்கை மெதுவாக உள்ள இடங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயாராக இருப்பதை இது காட்டுகிறது.


டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 நாய் கடி வழக்குகள் பதிவாகின்றன. மேலும், ரேபிஸ்  பாதிப்புகள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளவர்களை பாதிக்கிறது.


இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 உடன் முரண்படுகிறது. இந்த விதிகள் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆரோக்கியமான நாய்கள் கால்நடை மருத்துவரால் ஆபத்தான முறையில் ஆக்ரோஷமானது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அவற்றை நிரந்தரமாக அகற்றவோ அல்லது நீண்டகாலத்திற்கு வைத்திருக்கவோ முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


ABC விதிகள் சிறப்பாக செயல்படவில்லை. கருத்தடை இயக்கங்கள் ஒழுங்கற்றதாகவும், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான 70% திட்டங்களை எட்டாததாலும் நகரங்களின் நாய்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நாய்களை அவற்றின் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புவதால், குழந்தைகள் விளையாடும் நெரிசலான இடங்களிலும், குப்பைகள் குவியும் இடங்களிலும் பெரிய நாய் கூட்டங்கள் தங்கியுள்ளன.


நாய்களை நீண்ட காலத்திற்கு தங்குமிடங்களில் வைத்திருப்பது போன்ற பிற முறைகளை நகரங்கள் முயற்சிப்பதையும் விதிகள் தடுக்கின்றன. இப்போது, விதிகள் அப்படியே இருந்தால், நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றும் அதிகாரிகள் விதிகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். ஆனால் அவர்கள் விதிகளைப் பின்பற்றினால், நீதிமன்றத்தைப் புறக்கணித்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படலாம்.


கொள்கை வகுப்பாளர்கள் இந்த மோதலை காலாவதியான சட்டங்களை சரிசெய்ய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் நகரங்கள் சிறியதாக இருந்தபோது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இயற்றப்பட்டது. இன்றைய பெரிய மற்றும் நெரிசலான நகரங்களால் பெரிய தெருநாய் எண்ணிக்கையைக் கையாள முடியாது. சிலர் இன்னும் தெருவில் உள்ள நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்து  நகர்ப்புற வாழ்க்கையின் யதார்த்தத்தை புறக்கணிக்கிறது.


இவற்றை ஒரு புதிய  சட்டம் மூலம் தத்தெடுக்கக்கூடிய நாய்கள், கருணைக்கொலை செய்யப்பட வேண்டிய ஆக்ரோஷமான அல்லது மிகவும் நோய்வாய்ப்பட்ட நாய்கள், முறையான தங்குமிடங்களில் தங்கக்கூடிய நாய்கள் என்று தெளிவாகப் பிரிக்கப்பட வேண்டும்.


நகரங்களில் நாய் கட்டுப்பாட்டிற்கு நகராட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். தங்குமிடங்களுக்கான குறைந்தபட்ச பணியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு தரநிலைகளை அமைக்க வேண்டும். மேலும், நோய்களைக் குறைப்பதற்கு நிதியை இணைக்க வேண்டும். உள்ளூர் அமைப்புகள் தங்குமிடங்களை உருவாக்கவும், பெரிய அளவிலான கருத்தடை திட்டங்களை இயக்கவும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிலையான நிதியைப் பெற வேண்டும். கால்நடை கல்லூரிகள் தங்குமிட மருத்துவத்தை பற்றி புரிதலை வளர்க்க வேண்டும். இதில் போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர். இத்தகைய ஆதரவு இல்லாவிட்டால், டெல்லி அதன் நாய் பிரச்சனையை, நகரின் எல்லையில் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட, புலப்படாத ஆனால் கொடூரமான நாய் தங்குமிடங்களாக மாற்றும் அபாயத்தில் உள்ளது.



Original article:

Share:

வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய கட்டுக்கதையை அம்பலப்படுத்துதல் -அரோலிப்சா தாஸ், உபைத் முஷ்டாக்

 வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (Employment Linked Incentive (ELI)) இந்தியாவின் வேலையின்மை நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக இருந்தாலும், கொள்கையின் வடிவமைப்பு தொழிலாளர் சந்தையில் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தலாம்.


ஜூலை 1, 2025 அன்று, அரசாங்கம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஆதரிக்கும் வகையில் ₹99,446 கோடி செலவில் வேலைவாய்ப்பு இணைப்பு ஊக்கத் திட்டத்தை (ELI) அங்கீகரித்தது. இருப்பினும், இது தொழிலாளர் சந்தையில் மூலதன-தொழிலாளர் சமச்சீரின்மை, முறையான-முறைசாரா துறைப் பிரிவு, மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கும் வேலைத்திறனுக்கும் இடையேயான தொடர்ச்சியான பொருத்தமின்மை ஆகியவை பெரும்பாலான தொழிலாளர்களை, குறிப்பாக குறைந்த திறன் கொண்டவர்களையும் முறைசாரா தொழிலாளர்களையும் புறக்கணிக்கின்றன என்று கடுமையான கவலைகளை எழுப்புகிறது.


திட்டத்தில் சிக்கல்கள்


வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டம் தொழிலாளர் சந்தைக்கு ஒரு முதலாளி-மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் (employer-centric approach) பிரதிபலிக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, குறிப்பாக உற்பத்தித் துறையில், முதலாளிகளுக்கு நிதி ஊக்கத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் என்பது மானிய மூலதனத்தைப் போலவே தெரிகிறது. இது ஏற்கனவே உள்ள மூலதன-உழைப்பு சமச்சீரற்ற தன்மையை (capital-labour asymmetries) ஊக்குவிக்கக்கூடும். இதன் விளைவாக, இது தொழிலாளர்களைவிட முதலாளிகளின் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த வழிவகுக்கும். இது ஏற்கனவே உள்ள அதிக ஊதிய இடைவெளிகளை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இது திட்டத்தின் நன்மைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் முறைசாரா மற்றும் குறைந்த திறமையான பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.


இந்தியாவின் தொழிலாளர் சந்தை நெருக்கடியின் மையத்தில் வேலைகள் பற்றாக்குறை மட்டுமல்ல, கடுமையான திறன் பொருந்தாத தன்மையும் உள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, பட்டதாரிகளில் 8.25% பேர் மட்டுமே தங்களின் தகுதிக்கு ஏற்ற பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. 53% பட்டதாரிகளும், 36% முதுகலைப் பட்டதாரிகளும் குறைந்த திறன் அல்லது தொடக்கத் தொழில்களில் குறைந்த வேலையில் உள்ளனர். இந்த மோசமான சீரமைப்பு ஊதிய விளைவுகளில் மேலும் பிரதிபலிக்கிறது: சிறப்புப் பணிகளில் உள்ள பட்டதாரிகளில் 4.2% பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். அதே சமயம் குறைந்த திறன் வேலைகளில் கிட்டத்தட்ட 46% பேர் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இந்த புள்ளிவிபரங்கள் இந்தியாவின் கல்வி-வேலைவாய்ப்பு இணைப்புத்திட்டத்தின் (education-to-employment pipeline) திறமையின்மையை மட்டும் வெளிப்படுத்துகிறது. ஆனால், தொழில்துறை கோரும் திறன்கள் தொழிலாளர்களுக்கு இல்லாத ஒரு தொழிலாளர் சந்தையில் முதலாளியை மையமாகக் கொண்ட ஊக்கத்தொகைகளின் பயனற்ற தன்மையும் உள்ளது. இந்திய இளைஞர்களில் 4.9% (15-29 வயது) மட்டுமே முறையான தொழிற்கல்வி பெற்றுள்ளனர். வலுவான திறன் பயிற்சி திட்டங்கள் இல்லாமல், ELI திட்டம் வேலைகளுக்குத் தயாராக இல்லாத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளுக்கு பணத்தை வழங்குகிறது.


இத்திட்டமானது, ஏற்கனவே முறையான பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட துறைகள்/நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆர்வம் காட்டுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு (Employee’s Provident Fund Organisation (EPFO)) உதவுகிறது. இது திட்டத்தை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது என்றாலும், சமூகப் பாதுகாப்பு, முறையான ஒப்பந்தங்கள் அல்லது வேலைப் பாதுகாப்பு இல்லாத முறைசாரா வேலைகளில் பணிபுரியும் 90% தொழிலாளர்களை இது விட்டுவிடுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த வரம்பு மற்றும் விலக்கு முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான இடைவெளியை மேலும் மோசமாக்கக்கூடும். முறையான துறை அரசாங்க உதவியையும் பணத்தையும் பெறுகிறது. அதே நேரத்தில் முறைசாரா துறை புறக்கணிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், குறைந்த ஊதியம் பெறும், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களைப் புறக்கணித்து, பெரும்பாலும் பெரிய, பணக்கார நிறுவனங்களுக்கு அரசாங்கப் பணத்தை வழங்குவதன் மூலம் சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும். முறைசாரா துறையில் அரசின் கணிசமான முதலீடு, புதிய தொழிலாளர் சந்தையில் நுழைபவர்களில் பெரும்பாலோரை தொடர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் முறைசாரா பணியாளர்களைத் தவிர்த்து விடுகிறது.


மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டம் மறைமுக வேலையின்மையை (disguised unemployment) இயல்பாக்கும் - மக்களுக்கு வேலைகள் இருக்கலாம். ஆனால், உண்மையில் பயனுள்ள வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். இது விவசாயம் மற்றும் முறைசாரா சேவைகளில் அடிக்கடி நிகழ்கிறது. இது குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வழிவகுக்கிறது. சில நிறுவனங்கள் மானியப் பணத்தைப் பெறுவதற்காக பழைய வேலைகளை ‘புதிய வேலைகள்’ என்றும் அழைக்கலாம்.


உற்பத்தியில் இந்தத் திட்டத்தின் சிறப்பு கவனம் ஒரு துறைசார்ந்த பார்வையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. பொருளாதார மாற்றத்திற்கு உற்பத்தி மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், அதிகரித்த தானியங்கி மற்றும் தீவிர மூலதனத்தின் காரணமாக இந்தியாவில் அதன் வேலைவாய்ப்பு நெகிழ்ச்சித்தன்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று, உற்பத்தி மொத்த வேலைவாய்ப்பில் 13%-க்கும் குறைவாகவே பங்களிக்கிறது. அதே, நேரத்தில் விவசாயம் மற்றும் சேவைகள் இணைந்து ஏறக்குறைய 70% பணியாளர்களைப் பயன்படுத்துகின்றன. நீட்டிக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மூலம் உற்பத்திக்கு விகிதாசாரமற்ற சலுகைகளை வழங்குவதன் மூலம், இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத்  திட்டம் தொழிலாளர் தொகுப்பின் பெரிய பிரிவுகளை, குறிப்பாக பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை ஓரங்கட்டக்கூடும். இதன், காரணமாக அவர்கள் குறைந்த திறன் சேவைகள் அல்லது விவசாயத்தில் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக ஏற்படக்கூடும். இந்தத் துறைசார் ஏற்றத்தாழ்வு, உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் முதன்மை இயந்திரமாக இருக்கும் என்ற காலாவதியான அனுமானத்தைக் குறிக்கிறது.


இதற்கு மாற்று என்னவாக இருக்க முடியும்?


ELI திட்டம் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இருந்தாலும், அது தொழிலாளர் சந்தையில் உள்ள கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தும் என்று கொள்கை வடிவமைப்பு சுட்டிக்காட்டுகிறது. முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு, வேலை தரத்தை மேம்படுத்துதல் அல்லது சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் இல்லாததையும் இது எடுத்துக்காட்டுகிறது. திறன் மேம்பாடு மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் முதலீடு குறைந்த திறமையுள்ள தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். மேலும், குறுகியகால வேலைவாய்ப்பு உருவாக்கத்திலிருந்து நீண்டகால நிலையான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறனை நோக்கி அதிக முயற்சிகள் மாற்றப்பட வேண்டும். தொழிலாளர் உரிமைகள் மற்றும் பேரம் பேசும் சக்தியில் சமரசம் செய்யாமல் இதைச் செய்ய வேண்டும். இறுதியாக, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது வேலைகளின் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, அது  அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மற்றும் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் (sustainable development strategy) கொண்டிருக்க வேண்டும்.


அரோலிப்சா தாஸ் மற்றும் உபைத் முஷ்டாக் ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள SRM-பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர்கள்.



Original article:

Share:

நீதி மற்றும் சமத்துவம்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பாலின பாகுபாடு குறித்து…

 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் தேவைப்படும் நபர்களுக்கு அதை மறுக்கக் கூடாது.


இயல்பான நீதியின் கொள்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்போது, அவை ஒரு குறிப்பிட்ட சமூக நோக்கத்தை நிறைவேற்றுகின்றன அல்லது ஒரு குறிப்பிட்ட தவறை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (National Organ and Tissue Transplant Organization (NOTTO)) சமீபத்திய ஆலோசனை, மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண் நோயாளிகள் மற்றும் இறந்த நன்கொடையாளர்களின் உறவினர்கள் பயனாளிகளாக முன்னுரிமை பெறுவார்கள் என்று கூறுகிறது. இது பாலின வழக்கத்தை மீண்டும் எழுதும் பாதையில் செல்கிறது. NOTTO-வின் 2013-23 வரை பத்தாண்டு கால தரவு குறிப்பிடுவதைப் போல பாலின வேறுபாடு உள்ளது. NOTTO-வின் அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில், உறுப்பு தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் (63%) பெண்கள் உள்ளனர். இருப்பினும், குறைவான பெண்களே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பெற்றனர். உதாரணமாக, இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 24% பேரும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 47% மட்டுமே பெண்கள் இருந்தனர். 2023-ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் பெண்கள் 37% மட்டுமே இருந்தனர். அதே நேரத்தில் கல்லீரலைப் பொறுத்தவரை, பெண்களின் பங்கு 30% ஆகும். கணைய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 26% பேர் மட்டுமே பெண்கள் இருந்தனர். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 56,509 உயிருள்ள உறுப்புகளில் 36,038, பெண்கள் தானம் செய்துள்ளனர். ஆனால், 17,041 பெண்கள் மட்டுமே மாற்று அறுவை சிகிச்சை பெற்றனர். இந்த நியாயமற்ற இடைவெளியை சரிசெய்ய, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை புள்ளிகளை வழங்க NOTTO பரிந்துரைத்தது.


இந்த நடவடிக்கை நிச்சயமாக பாராட்டத்தக்கது என்றாலும், இது செயல்முறை சிக்கல்களால் பாதிக்கப்படலாம். தற்போது, உறுப்பு ஒதுக்கீட்டு நெறிமுறைகள், ஆரோக்கிய அடிப்படையில் தவிர, ஒரு பெறுநரை மற்றொருவருக்கு முன்னுரிமை அளிக்க அனுமதிக்கவில்லை. எனவே, பெண்கள் மற்றும்/அல்லது முந்தைய உறுப்பு தானம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. NOTTO ஆலோசனைக்குப் பிறகு, 'நெருங்கிய உறவினர்கள்' என்ற வரையறையில் யாரைச் சேர்க்க வேண்டும், மற்றும் 1995 முதல் உடல் உறுப்பு தானம் செய்த அனைத்து குடும்பங்களும் பயனாளிகளாகக் கருதப்படுவார்களா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. 


 முக்கியமாக, இந்தியாவில் உறுப்புதான மோசடிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுவதால், இது முறைகேடான ஒதுக்கீடுகளை எளிதாக்கும் மற்றொரு முறைகேடான வழியாக மாறிவிடுமோ என்ற அச்சம் செயல்படுத்துபவர்களிடையே இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், குறிப்பாக ஆணாதிக்க விதிமுறைகளால் வடிவமைக்கப்பட்ட சமூகத்தில் மிகவும் உள்ளடக்கமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், நல்லதைப் பாதுகாக்காமல், தேவையற்றவற்றுடன் தூக்கி எறிவது பொருத்தமற்றது. NOTTO இதை ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுவது, செயல்படுத்தலில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளை உள்ளடக்குவது முக்கியம். மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைச் சட்டத்தின் கீழ் சரியான செயல்படுத்தலை உறுதி செய்வது மற்றும் குறைவாக உள்ள உறுப்பு வளத்திற்கு அணுகலை விரிவாக்குவது முக்கியம் என்றாலும், முதன்மையாக, உடல்நல அளவுருக்களின் அடிப்படையில் உறுப்பு தேவை அதிகமாக உள்ள எவருக்கும் மறுக்கப்படக்கூடாது என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடிப்பது அவசியம்.



Original article:

Share:

பீகாரின் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் இந்தியா முழுவதும் அதன் அரசியல் தாக்கங்கள்: தரவுகள் -வர்கீஸ் கே. ஜார்ஜ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன், நிதிகா பிரான்சிஸ்

 பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் தங்கள் மாநிலத்தில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.


பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) புலம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த இடம்பெயர்வு நாடு முழுவதும் தெரியும். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், இந்த இடம்பெயர்வை பதிவு செய்ய அதிக அதிகாரப்பூர்வ தரவு இல்லை. கடைசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-ஆம் ஆண்டில்  நடந்தது. 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 15 ஆண்டுகளின் இந்த இடம்பெயர்வு முறைகளைப் (migration patterns) பதிவு செய்யும். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் மாற்றுத் தரவுத் (Proxy data) தொகுப்புகள் மற்றும் சமீபத்திய மாதிரி ஆய்வுகள் உள்ளன.


பீகார் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே சிறப்பு தீவிர திருத்த நோக்கங்களில் ஒன்றாக இந்திய தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இடம்பெயர்ந்தோர் வாக்களிக்கும் உரிமைகள் குறித்த கவலை தவறானது. இடம்பெயர்ந்தோர் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு அல்ல. தற்போது, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்க வேண்டும். பீகாரின் சிறப்பு தீவிர திருத்தம் என்பது குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில் யார் எங்கு வாக்களிக்கலாம் என்பதைக் கண்டறியும் ஒரு சோதனையாகும். மக்கள்தொகை கணக்கியல் (demographic accounting) மற்றும் பொறியியல் இரண்டிலும் இந்த சோதனை பீகாரை மாநில தேர்தலைவிட பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்.


தொகுதிகளின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவது தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு வழியாகும். பீகாரைச் சேர்ந்த ஒரு குடிமகன் பீகாரில் வாக்களிப்பதும், மகாராஷ்டிரா அல்லது கேரளாவில் வாக்களிப்பதும் தேசிய அரசியலில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். வசிப்பிடம் மற்றும் வாக்களிப்பு தொடர்பான சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மக்கள்தொகை மாற்றங்களின் அரசியல் தாக்கத்தை விரைவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.


மக்கள்தொகை அதிகமான இடங்களிலிருந்து குறைவான இடங்களுக்கு நகர்கிறார்கள்; மேலும், அவர்கள் மோசமான பொருளாதார வாய்ப்புள்ள இடங்களிலிருந்து சிறந்த வாய்ப்புள்ள இடங்களை நோக்கி நகர்கிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அந்த நேரத்தில் எங்கு, எத்தனை பேர் இடம்பெயர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய மாற்றுத் தரவுகளும் (Proxy data) இதை ஆதரிக்கின்றன. சரியான எண்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், மக்கள் எங்கு செல்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்பதற்கான பொதுவான போக்கைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு நமக்கு உதவுகிறது.


பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கையின்படி, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திலிருந்து முதல் குறிப்பு வருகிறது. இந்த ஆய்வறிக்கையில் ஒரு பின்னடைவு பகுப்பாய்வு, முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணத்திற்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவிற்கு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளுடன் வரும் பயணிகளின் எண்ணிக்கையை, அவர்களின் புறப்படும் நிலையங்களின் அடிப்படையில் காட்டுகிறது. மாநிலத்தின் எல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் இந்த முறையைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்கிறார்கள். அதே, நாளில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, எல்லையைப் பகிர்ந்துகொள்ளாத மாநிலங்களுக்கு இடையிலான முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணம் இடம்பெயர்வுக்கு வலுவான மாற்றாக மாறுகிறது. முன்பதிவு செய்யப்படாத பயணசீட்டுகளைக் கொண்ட பயணிகளில் 50% பேர் மகாராஷ்டிராவிலிருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து 12.3% பேர் குஜராத்திலிருந்தும் 5.4% பேர் கர்நாடகாவிலிருந்தும் வருகிறார்கள் - இரண்டும் (விளக்கப்படம் 1-ல்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு இடம்பெயர்ந்தோரை அனுப்பும் முதல் ஐந்து மாநிலங்களில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளன. ஒவ்வொன்றும் மொத்த இடம்பெயர்ந்தோரில் 7%-க்கும் அதிகமாக உள்ளனர்.


மற்றொரு அளவீடு சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கும் நடப்புக் கணக்கு இருப்புகளுக்கும் உள்ள விகிதமாகும். ஒரு நடப்புக் கணக்கு, பொதுவாக வணிகங்களால் இயக்கப்படுவது, சேமிப்புக் கணக்கு அளிக்காத அம்சங்களை வழங்குகிறது. குறைந்த சேமிப்பு-நடப்புக் கணக்கு விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோரை ஈர்க்கும் உயர் பொருளாதார செயல்பாடுகளைக் கொண்ட நகரங்களாகும். எடுத்துக்காட்டாக, மும்பை (0.56), டெல்லி (2.24) மற்றும் பெங்களூரு (2.21) ஆகியவை தேசிய சராசரியான 3.72-ஐ விட மிகக் குறைந்த விகிதங்களைக் கொண்டுள்ளன.


இதற்கு நேர்மாறாக, ஒப்பீட்டளவில் அதிக சேமிப்பு-நடப்புக் கணக்கு (savings-to-current account) விகிதங்களைக் கொண்ட நகரங்கள் வரையறுக்கப்பட்ட பொருளாதார செயல்பாடுகளைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் பல மாவட்டங்கள் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளன. இது சாத்தியமான வெளியேற்ற இடப்பெயர்வைக் குறிக்கிறது. வரைபடம் 2, 2017-18 முதல் 2022-23 வரை சேமிப்புக் கணக்கு வைப்புகளுக்கும் நடப்புக் கணக்கு வைப்புகளுக்கும் உள்ள மாவட்ட அளவிலான சராசரி விகிதத்தைக் காட்டுகிறது. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பல தெற்கு தலைநகரங்களும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற தொழில்துறை மையங்களும் நீல நிறத்தில் தனித்து நிற்கின்றன. இது சாத்தியமான உள்நுழைவு இடப்பெயர்வைக் (in-migration)  குறிக்கிறது.


2024ஆம் ஆண்டு  நவம்பர்-டிசம்பர் மாதங்களில்  நடத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வில், சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த தொழிலாளர்களில் 35% பேர் பீகாரிலிருந்தும், 20% பேர் ஒடிசாவிலிருந்தும், 16% பேர் வடகிழக்கிலிருந்தும் வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.(படம் 3).

மற்றொரு தரவுத் தொகுப்பும் இதே போக்கைக் காட்டுகிறது. தொற்றுநோய் ஊரடங்கின்போது, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்தனர். பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த பகுப்பாய்வு, தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் பெரும்பாலான (30%) பயணிகள் பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதை காட்டுகிறது.


பீகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பயிற்சி பற்றி என்ன தரவு காட்டுகிறது

இந்த இடம்பெயர்ந்த மக்கள் ஒரு படிப்படியான செயல்முறையின் மூலம் தாங்கள் குடியேறும் மாநிலங்களில் (host States) நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறுகிறார்கள். ஆனால், வசிப்பிட விதி அமலாக்கம் இந்த செயல்முறையை துரிதப்படுத்தக்கூடும். அரசியல் தன்மை மற்றும் தேர்தல் இயக்கவியல் மக்கள்தொகையின் மாறும் அமைப்புக்கு ஏற்ப பதிலளிக்கிறது. டெல்லி மற்றும் மும்பையில், இந்தி பேசும் பகுதியிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோர் இப்போது ஒரு தீர்மானகரமான அரசியல் தொகுதியாக உள்ளனர். மேலும், கட்சிகள் அதற்கேற்ப பதிலளிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திலும், அதிகமான இந்திய மக்கள் அங்கு இடம்பெயர்ந்ததால், இந்திய பின்னணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெற்றனர். பீகார் சிறப்பு தீவிர திருத்த அரசியல், பீகார் மாநில எல்லைகளைத் தாண்டி பல்வேறு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆதாரம்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister (EAC-PM)) அறிக்கை மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு.

Original article:

Share: