இந்தியாவின் முதல் பேரிடர் தயார்நிலை குறித்த 'நேரடி ஆய்வகம் (Living lab)'. -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?

கணிச்சார், கண்ணூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இது இந்தியாவின் முதல் கிராம பஞ்சாயத்து ஆகும். இங்கே காலநிலை உணர்திறனை அதிகரிப்பதற்கும் மக்களின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும்  நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியான நிலச்சரிவுகளில் மூன்று பேர் உயிரிழந்து 36 ஹெக்டேர் விவசாய நிலம் அழிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு இது ஒரு ஆறுதல் தரக்குரிய செய்தியாக உள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) என்பது உண்மையான உலக அமைப்புகளை ஆராய்ச்சி மற்றும் புதுமையுடன் ஒருங்கிணைத்து தீர்வுகளை உருவாக்கி சோதிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். முதலில் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை, உண்மையான உலக தீர்வுகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம், நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் உட்பட பல பங்குதாரர்களின் ஈடுபாட்டால் குறிக்கப்படுகிறது.


2. இது கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Kerala State Disaster Management Authority (KSDMA)) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரே நோக்கம்  பஞ்சாயத்தில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களை இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக வலுவாக்குவதாகும்.


3. நேரடி ஆய்வக அணுகுமுறை மக்களை நிலையான இயக்க நடைமுறைகள், அவசர உதவி அமைப்பு, வெளியேறும் வழிகள் மற்றும் பாதிப்புகள் பற்றி நன்கு அறிந்தவர்களாக்கியுள்ளது. அதிக உள்ளூர்மயமாக்கல் (Hyperlocalisation) என்றால் எச்சரிக்கைகள் மற்றும் பதில்கள் அந்த இடத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவது.


4. அனைத்து வீடுகளுக்கும் மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை போன்ற தரவுகளைச் சேகரிக்க ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தரவுகளைச் சரிபார்க்கும் மக்கள் வார்டு அளவிலான புலன குழுக்கள் (WhatsApp groups) மூலம் மற்றவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


5. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பஞ்சாயத்தில் உள்ளூர் வானிலை தரவுகளை வழங்க கிராமத்தில் தற்போது ஒரு தானியங்கி வானிலை நிலையம் (automatic weather station) உள்ளது. கிராமத்தின் 13 வார்டுகளிலும் 12 நிலையங்களைச் சேர்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


6. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, தானியங்கி வானிலை நிலையம் ((automatic weather station (AWS)) என்பது வானிலை நிகழ்வுகளை பதிவு செய்யது தானாகவே தகவல்களை சேகரிக்கும் ஒரு நிலையமாகும். ஒரு தானியங்கி வானிலை நிலையம்  காற்று உணரிகள், வெப்பநிலை மற்றும் ஈரப்பத உணரிகள், அழுத்தம் உணரிகள் மற்றும் மழை உணரிகள் போன்ற நான்கு முக்கிய உணரிகளைக் கொண்டுள்ளது.


7. இந்த பஞ்சாயத்தில் விரைவில் நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பும்(early landslide warning system) இருக்கும். ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டடக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CSIR)) இணைந்து ரூர்க்கியால்  உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்டு அடுத்த மாதம் நிறுவப்பட இருக்கும் இந்த அமைப்பு, களத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உணர்திறன் கருவிகளையும் நிலச்சரிவு ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புக்காக செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் மாதிரியையும் (Artificial Intelligence/Machine Learning model) கொண்டிருக்கும்.


8. ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems (EWS)) நிலச்சரிவு நிகழ்வின் சாத்தியக்கூறுகளைக் கணிப்பது, தகவல்களைப் பரப்புவது மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதை சாத்தியமாக்குவது போன்றவைகளை கண்காணிக்கும். இவை பிராந்தியம் சார்ந்ததாகவோ அல்லது தனிப்பட்ட சரிவுகளை இலக்காகக் கொண்டதாகவோ இருக்கலாம்.


9. சூறாவளி போன்ற சில இயற்கை நிகழ்வுகளுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் இந்தியா நல்ல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை செய்துள்ளது. இருப்பினும், நிலச்சரிவுகள் ஒரு பலவீனமான புள்ளியாக இருக்கின்றன. 


குறிப்பிடத்தக்க வகையில், இந்தியப் புவியியல் ஆய்வகத்தின் (Geological Survey of India (GSI)) முன்முயற்சியின் பேரில், தேசிய நிலச்சரிவு முன்கணிப்பு மையம் (National Landslide Forecasting Centre) ஜூலை 2024இல் தொடங்கப்பட்டது. இது நிலச்சரிவுகளுக்கான பேரிடர் எதிர்ப்பு சக்தியில் ஒரு முக்கியமான படிநிலையாகும்.


நிலச்சரிவுகளும் அவற்றால் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகள் 


1. நிலச்சரிவுகள் என்பது பொதுவாக செங்குத்தான சரிவுகளைக் (steep slopes) கொண்ட மலைப்பகுதிகளில் நிகழும் இயற்கை நிகழ்வுகள் ஆகும். ஒரு நிலச்சரிவின் போது, பெரிய அளவிலான பாறைகள், கற்பாறைகள், தளர்வான சேறு, மண் மற்றும் குப்பைகள் போன்றவை மலைப்பகுதிகளில் கீழே சரிந்து, அதிக வேகத்தைப் பெற்று அடிக்கடி தாவரங்கள் அல்லது கட்டடங்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றன.


2. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தூண்டக்கூடிய கடுமையான மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்புடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation (ISRO)) 2023இல் "இந்தியாவின் நிலச்சரிவு வரைபடம்" (Landslide Atlas of India)  என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வரைபடத்தில், வரைபடமாக்கப்பட்ட நிலச்சரிவுகள் கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையிலும் பருவகாலத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்ட்டதாகும்.


3. பனி மூடிய பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் புவியியல் நிலப்பரப்பில் (0.42 மில்லியன் சதுர கிமீ) 12.6 சதவீதம் நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளன. நிலச்சரிவுகளில் 66.5 சதவீதம் வடமேற்கு இமயமலையிலிருந்தும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமயமலையிலிருந்தும், 14.7 சதவீதம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.


4. 2019ஆம் ஆண்டு  ஜூலை மாத நிலவரப்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட நிலச்சரிவு தணிப்புக்காக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நிலப் பதிவு மேலாண்மை அமைப்பை (Land Records Management System (LRMS)) தொடங்கியது. LRMS என்பது நிலச்சரிவு கண்காணிப்பு, விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு/பயிற்சி போன்றவற்றுடன் சரிவு நிலைப்படுத்தலின் பல்வேறு முறைகளின் பயன்பாட்டின் மூலம் நிலச்சரிவு சிகிச்சை நடவடிக்கைகளின் நன்மைகளை வெளிக்காட்ட தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.


5. தேசிய நிலச்சரிவு அபாய மேலாண்மை உத்தியானது (National Landslide Risk Management Strategy) செப்டம்பர் 27, 2019 அன்று இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. 


இந்த உத்தி ஆபத்து வரைபடமாக்கல், கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், விழிப்புணர்வு திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகள், நிலச்சரிவுகளின் நிலைப்படுத்தல் மற்றும் தணிப்பு போன்ற நிலச்சரிவு பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மையின் அனைத்து கூறுகளையும் நிவர்த்தி செய்கிறது.



Original article:

Share:

தி வயர் ஆசிரியர் மீதான தேச துரோக வழக்கு மற்றும் அரசின் கடுமையான நடவடிக்கை குறித்து…

 அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை மிரட்டி, அவர்களுக்கு எதிராக தேசத்துரோகச் சட்டத்தைப் (sedition law) பயன்படுத்தி, ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசாங்கத்தின் வெளிப்படையான கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் ஒரு கொடூரமான முயற்சியாகும்.


ஆபரேஷன் சிந்தூர் குறித்து இணையதளத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக, தேசத்துரோக வழக்கில் பத்திரிகையாளரும் தி வயர் ஆசிரியருமான சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தக் கட்டுரையில், ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட இந்திய விமானப்படை (Indian Air Force) ஜெட்கள் மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் குறித்து இந்தோனேசியாவிற்கான இந்திய இராணுவ இணைப்பாளரின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.  இது பரவலாகப் புகாரளிக்கப்பட்டது. 


இது "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்" இப்போது காவல்துறை வழக்கு நாட்குறிப்புகளில் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 12அன்று, வரதராஜனுக்கு எதிராக எந்தவொரு "கட்டாய நடவடிக்கைகளையும்" எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அசாம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. 


இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி, காவல்துறை வேறு மாவட்டத்தில் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையை (First Information Report (FIR)) பதிவு செய்தது. ஒரு செய்தி அறிக்கைக்காக தேசத்துரோக விதிகளைப் பயன்படுத்துவது, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசு இயந்திரங்களைத் தேர்ந்தெடுத்து நியாயமற்ற முறையில் பயன்படுத்துவது, உரிய நடைமுறை மீறல் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.


1962ஆம் ஆண்டு ஒரு முக்கிய தீர்ப்பில் (கேதர் நாத் சிங் வழக்கு), உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தை விமர்சிப்பது  கடுமையாக இருந்தாலும் கூட  வன்முறை அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் அது தேசத்துரோகமாகாது என்று கூறியது. 


மே 2022இல், நீதிமன்றம் தேசத்துரோகச் சட்டத்தை (இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A) தற்காலிகமாக நிறுத்து வைத்தது. இது இன்றைய சமூகத்திற்கு பொருந்தவில்லை என்று கூறியது. இதை உணர்ந்த அரசாங்கம், நீதிமன்றம் அதை ரத்து செய்வதற்கு முன்பு சட்டத்தை நீக்குவதாகக் கூறியது. இது மறுபரிசீலனை செய்யப்படும்போது புதிய வழக்குகளைப் பதிவு செய்யவோ அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று நீதிமன்றம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது. 


இருப்பினும், 2023ஆம் ஆண்டில், புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​தேசத்துரோகச் சட்டம், பெயர் மாற்றத்துடன்  ‘ராஜ்த்ரோ’ (ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சி) என்பதிலிருந்து ‘தேஷ்த்ரோ’ (தேசத்திற்கு எதிரான துரோகம்) என நிலைநிறுத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, சட்டத்தை தவறாக பயன்ப்படுத்தும் நடைமுறை இன்னும் தொடர்கிறது


ஒரு பத்திரிகையாளர் பல புகார்களுக்கு உட்படுத்தப்படுவதையும், தொடர்ச்சியானமுதல் தகவல் அறிக்கைகளையும் எதிர்கொண்டால், அது அவர்களின் செய்திகளைப் புகாரளிக்கும் மற்றும் சுதந்திரமாகப் பேசும் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும். 


இது நாட்டின் நிர்வாக விவகாரங்களை குடிமகன் அறிந்து கொள்ளும் சுதந்திரத்தையும், தகவலறிந்த சமூகத்தை உறுதி செய்வதற்கான பத்திரிகையாளரின் உரிமையையும் அழிக்கும்" என்று முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மே 2020இல் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியபோது கூறினார். புதிய தேசத்துரோகச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அசாம் அரசு விரைவாகக் கவனிக்க வேண்டும்.



Original article:

Share:

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (AIDC) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரி (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) நீக்கம் ‘பொது நலனுக்கு அவசியம்’ என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வந்து செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


— அமெரிக்காவின் கடுமையான வரிகளால் நெசவுத் துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்கா இந்தியாவின் ஆயுத்த ஆடைகள் (Ready-Made Garments (RMG)) ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக உள்ளது. ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (Apparel Export Promotion Council (AEPC)) அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 33 சதவீதமாக இருந்தது.


— AEPC அறிக்கையின் படி, இந்தியா அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள்: பருத்தி டி-ஷர்ட்கள் (9.71 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகளின் ஆடைகள் (6.52 சதவீதம்); பருத்தியால் செய்யப்பட்ட குழந்தை ஆடைகள் (5.46 சதவீதம்) போன்றவைகளாகும். 


இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று பொருட்கள் உலகளவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தப் பொருட்களில் முறையே 10, 36 மற்றும் 20 சதவீத பங்கை கொண்டுள்ளன என்று ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.


— குறிப்பிடத்தக்க வகையில், வீட்டு ஜவுளிகள் மற்றும் கம்பளங்களும் முக்கியமான ஏற்றுமதி சார்ந்த துறைகளாக உள்ளன. இந்த துறைகளில் முறையே மொத்த விற்பனையில் 70-75 சதவீதம் மற்றும் 65-70 சதவீதம் ஏற்றுமதியை கொண்டுள்ளன. இதில், வீட்டிற்கு தேவையான துணிகள் ஏற்றுமதியில் அமெரிக்கா 60 சதவீதமும், கம்பள ஏற்றுமதியில் 50 சதவீதமும் பங்கு வகிக்கிறது.


— அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 30ஆம் தேதி இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். தொழிலாளர் மிகுதியான துறைகளின் வேதனையை அதிகரிக்கும் வகையில், ட்ரம்ப் இந்தியா மீது மேலும், 25 சதவீத வரிகளை அறிவித்துள்ளார். இந்த கூடுதல் அமெரிக்க வரிகள் ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.


— கடுமையான அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்க அரசின் தலையீட்டை சிட்டிகுரூப் மற்றும் இந்திய நெசவுத் தொழில் கூட்டமைப்பு (Citigroup and Confederation of Indian Textile Industry (CITI)) கோரியுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க வரி விகிதம் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், போட்டியாளர் நாடுகளான வங்கதேசத்துக்கு புதிய அமெரிக்க வரி விகிதம் 20 சதவீதம், இந்தோனேசியா மற்றும் கம்போடியாவுக்கு தலா 19 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம் என்று CITI சுட்டிக்காட்டியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா ?


— இந்தியாவின் நெசவுத் தொழில் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். பருத்தி சாகுபடி முதல் உயர்நிலை ஆடை உற்பத்தி வரை பரந்த மதிப்புச் சங்கிலியைக் கொண்டுள்ளது.


— இந்தியாவின் நெசவு மற்றும் ஆடைத் துறையின் அளவை குறைத்து மதிப்பிட முடியாது. இது தொழில்துறை உற்பத்தியில் 13 சதவீதம், ஏற்றுமதியில் 12 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 2 சதவீதம் பங்களிக்கிறது.


— சீனாவுக்கு அடுத்து, இந்தியா பருத்தி உற்பத்தியில் 2-வது பெரிய நாடாக உள்ளது. உலக உற்பத்தியில் 24 சதவீத பங்கு வகிக்கிறது. பருத்தி (Cotton) சாகுபடியில் சுமார் 60 லட்சம் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தெலங்கானாவில் உள்ளனர்.


— பருத்தி  நெசவுத் தொழில் முழுவதும்  மூலப் பொருளான பருத்தியை நூலாக மாற்றுவது, துணி தயாரிப்பது, சாயமிடுதல் மற்றும் தையல் வரை  45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.



Original article:

Share:

STEM கல்வியானது, மாற்றுத்திறனாளி மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் -ராமகிருஷ்ண ராமசுவாமி

 நிறுவனங்கள் இந்தப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கின்றன மற்றும் ஆய்வகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கான நிதியினை வழங்கத் தவறிவிடுகின்றன. 4% இட ஒதுக்கீடும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.


தேசிய கல்விக் கொள்கை 2020, பின்தங்கிய மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த அணுகல், சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு நேர்மறையான படியாகும்.


 இருப்பினும், பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் இதை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (science, technology, engineering, and mathematics (STEM)) கல்வியில், நல்ல நிதியுதவி பெற்ற நிறுவனங்களில் கூட, நிலைமை இன்னும் மாறவில்லை.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5, இந்தியாவில் 63 மில்லியன் மக்கள் குறைபாடுகள் உள்ளதாக மதிப்பிடுகிறது. இது மக்கள் தொகையில் 5% க்கும் குறைவானது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டை விட இது குறைவு.  இது உலக மக்கள் தொகையில் சுமார் 15% பேர் ஏதேனும் ஒரு வகையான குறைபாடுடன் வாழ்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.


இந்தியாவில் நல்ல அர்த்தமுள்ள சட்டங்களும் உள்ளன. 2009ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், (Right of Children to Free and Compulsory Education Act) மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட 14 வயது வரை இலவசக் கல்விக்கான அணுகலை உறுதி செய்கிறது. 


மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்-2016, (Rights of Persons with Disabilities Act) கணிசமான சிந்தனையுடன் விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது கல்வி நிறுவனங்களின் கடமைகள் மற்றும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை விளக்குகிறது.


நாடு முழுவதும் இந்த யதார்த்தம் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெரும்பாலும் சிறப்புத் தேவைகள் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, உயர்கல்விக்கான அவர்களின் அணுகலும், பல்வேறு படிப்புப் பிரிவுகளில் அவர்களின் வெளிப்பாட்டுத்தன்மையும் குறைவாகவும், கட்டுபடுத்தப்பட்டதாகவும் மாறி வருகிறது.


இட ஒதுக்கீடு விதிமுறைகள்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 4% இடங்களை ஒதுக்குவதை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தக் குழுவின் கீழ் வருகின்றன. எனவே, இந்தச் சட்டம் சரியாபன நடைமுறையில் செயல்படுத்தப்படுவது முக்கியம். முக்கியம். 

இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளில் குருட்டுத்தன்மை மற்றும் குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, இயக்க இயலாமை, பெருமூளை வாதம் மற்றும் தொடர்புடைய குறைபாடுகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு ஆகியவை அடங்கும்.


தற்போது, ​​இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் கல்வி நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், இது நிறுவன ரீதியாக எங்கு பூர்த்தி செய்யப்பட்டாலும், அது மிகவும் நுணுக்கமான அளவில், அதாவது துறைகள் முழுவதும் விரிவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.


 உண்மையில், பெரும்பாலான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கிடைமட்ட ஒதுக்கீடு (horizontal quota) என அழைக்கப்படுவதன் மூலம் சேர்க்கை பெறுகின்றனர். இதன் பொருள், இடங்கள் அவர்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த பாடங்களை எடுப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஏனெனில் அது மற்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.


மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதகமான பல்வேறு நடைமுறைகளை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள். திறமைவாதமானது ஊனமுற்றோர் அல்லாதவர்களுக்கு சாதகமாக இருக்கும் பாகுபாடு ஆகும். 


உயர்கல்வி நிறுவனங்களில் சரியான உள்ளடக்கிய நடவடிக்கைகள் இல்லாததால், பல்வேறு திறன்களைக் கொண்ட மாணவர்கள், STEM பாடங்களில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி வரை ஊக்குவிக்கப்பட்டவர்கள் கூட, பெரும்பாலும் உயர்கல்வி அவர்களுக்கு நெருக்கமாக இருப்பதைக் காண்கிறார்கள்.


கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக மாறுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. வளாகங்கள் முழுமையாக அணுகக்கூடியதாக இருக்க பெரிய முதலீடுகள் தேவை. பெரும்பாலான வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விடுதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடமளிக்க முடியாது. நிர்வாகிகள் தங்கள் வரையறுக்கப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கடினமான தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். 


மேலும், 5% க்கும் குறைவான மாணவர்களுக்கு பயனளிக்கும், வசதிகளுக்கு செலவிடுவது குறைவானதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், இதற்கான உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்காக இத்தகைய நிதி குறைவாக இருக்கும்பட்சத்தில் பரிசீலனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.


வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள், யுனெஸ்கோ வழிகாட்டுதல்கள்படி, தேசிய சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மாற்றுத்திறனாளி நபர்களை உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதும் இவற்றில் அடங்கும். 


கூடுதலாக, அவை கல்வியை அணுகும்படி செய்தல், கல்வியின் வடிவத்தையும் பொருளையும் மாற்றியமைத்தல், மாற்றுத்திறனாளி நபர்களுக்கான கல்வி உரிமையை செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி உரிமையை ஊக்குவித்தல் போன்றவற்றை உறுதி செய்கிறது.


தணிக்கை அணுகல்


கல்வியில் இடஒதுக்கீடு என்பது இந்த உரிமைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உள்ளடக்கியது. மிகவும் அவசரமாகத் தேவைப்படுவது உணர்திறன் மற்றும் பயிற்சி ஆகும். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்ட வளாகங்கள் தேசிய கட்டிடக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். 


ஆனால், இது அரிதாகவே செயல்படுத்தப்படுகிறது. குறைபாடுகள் உள்ளவர்களுக்கான நியாயமான இடவசதியின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, பழைய வளாகங்களுக்கு அணுகல் தன்மைக்கான தணிக்கை தேவைப்படுகிறது. 


வளாகங்கள் பொதுவாக பெரிய அளவில் இருக்கும். பழைய கட்டிடங்களில் மின்தூஙக்கி (lifts) அல்லது சரிவுகள் (ramps) இல்லை மற்றும் கழிப்பறைகளும் அணுக முடியாதவையாக உள்ளன. அத்தகைய சிக்கல்களின் பட்டியல் நீளமானதாக உள்ளது.


வழக்கமான வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாற்காலிகள், மேசைகள் மற்றும் பெஞ்சுகள் நிலையான உயரத்தில் உள்ளன. மேலும், புகை-ஹூட்கள் (fume-hoods) மற்றும் உலைகள் (furnaces) போன்ற ஆய்வக உபகரணங்களுக்கான அணுகல் மோசமாக உள்ளது. STEMஇல் கற்பித்தல் மற்றும் கற்றல் இடங்கள் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு எளிதில் பொருந்தாது.


அறிவியலில் ஆய்வக சோதனைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் உணர்திறன் இரண்டும் தேவை. பலவீனமான இயக்கம் கொண்ட மாணவர்களுக்கான உடல் அணுகல் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் இன்னும் பெரிய சவாலை எதிர்கொள்கிறார்கள். 


ஏனெனில், பெரும்பாலான ஆய்வக பரிசோதனைகள் மற்றும் கற்பித்தல் முறைகள் அவர்களுக்காக வடிவமைக்கப்படவில்லை. தூய கணிதத்தைத் (pure mathematics) தவிர, கிட்டத்தட்ட அனைத்து அறிவியல் படிப்புகளும் ஆய்வக அறிவுறுத்தலை உள்ளடக்கியது. இது பெரும்பாலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களின் சூழலை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு விலக்கானதாக மாற்றுகிறது.


அதே வாய்ப்புகள் மற்றும் அணுகல் கொடுக்கப்பட்டால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களைப் போலவே சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று பரிந்துரைக்க போதுமான சான்றுகள் உள்ளன. சிறப்புத் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறிவியலை வளர்ப்பதில் உதவுகிறது என்பதையும் சான்றுகள் காட்டுகின்றன. 


எடுத்துக்காட்டாக, பார்வைக் குறைபாட்டை சரிசெய்ய வேண்டிய அவசியத்திலிருந்து ஆப்டோமெட்ரி அறிவியல் தொடங்கியது. மேலும் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது செவித்திறன் குறைபாடுள்ள மனைவி மற்றும் தாயாருடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியத்தால் தொலைபேசி உருவானது. பின்னர் இது  பரந்த நன்மைகளைத் தந்தது.


இன்றைய தொழில்நுட்பத்தில், ஆய்வக பரிசோதனைகளை குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு மிகக் குறைந்த கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. பேச்சு-செயல்படுத்தப்பட்ட உபகரணங்கள் (speech-activated equipment), AI மற்றும் மின்னணு அடிப்படையிலான மூலம் இதைச் செய்யலாம். இந்த இடைமுகங்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு காட்சி குறியீடுகளை ஆடியோவாகவோ அல்லது கேட்கும் குறைபாடுள்ளவர்களுக்கு ஆடியோவை காட்சியாகவோ மாற்றுவது போன்றவை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றும்.


இன்றைய யுகத்தில், மக்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும், பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு அடையாளங்கள் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அறிவியல் சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது ஒரு சிறப்புரிமையாக உள்ளத. மேலும் அந்த வாய்ப்பு ஒரு விஞ்ஞானியாக மாற விரும்பும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக,  மனம் அல்லது உடலின் வரம்புகள் காரணமாக இந்த வாய்ப்பு யாருக்கும் மறுக்கப்படக்கூடாது.


ராமகிருஷ்ண ராமசாமி, ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல் துறையில் கௌரவப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share:

அணுசக்தி சட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கு -கே.வி.பிரசாத்

 தற்போதைய பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நன்கு விரிவான விவாதம் தேவை.


இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் (energy security and climate change efforts) ஒரு முக்கியமான நிலைப்பாட்டை விரைவில் கருத்தில் கொள்ள வேண்டும். அணுசக்திச் சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம்-2010 (Civil Liability for Nuclear Damages Act (CLNDA)), மற்றும் அணுசக்திச் சட்டம்-1962 (Atomic Energy Act (AEA)), கடந்த காலங்களில் தீவிர விவாதங்களைக் கண்டது. இந்த முன்மொழிவு விரைவில் நாடாளுமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது இந்தத் திருத்தங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நாடாளுமன்றம் மீண்டும் இந்தப் பிரச்சினையை மறுபரிசீலனை செய்யும்.


அணுசக்திச் சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம் (CLNDA) மற்றும் அணுசக்திச் சட்டம் (AEA) ஆகியவற்றில் முறையே உபகரணங்களின் விநியோகர்கள் மீதான பொறுப்புணர்ச்சி மற்றும் அணுசக்தி துறையில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது குறித்த கடுமையான சிக்கலைத் தீர்க்கும் வகையில் திருத்தம் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் CLNDA அமலாக்கம் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளான பிஜேபி மற்றும் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களுக்கு வழிவகுத்தது.

வரலாற்று சூழல்


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அணுசக்தி விபத்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்தில் இந்தியா எந்த சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்கவில்லை. சர்வதேச உடன்படிக்கைகளின் படி பொறுப்புகளை நிறைவேற்றுவதை அரசாங்கம் விரும்புவதால், நாடாளுமன்றம் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டது.


மாநிலங்களைவில் தேவையான பலம் இல்லாதது, 1984 போபால் எரிவாயு கசிவு, மெக்சிகோ வளைகுடா எண்ணெய் கசிவு மற்றும் ஜப்பானில் ஒரு பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்து ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களின் பயங்கரமான நினைவுகள் விவாதத்தைப் பாதித்தன. 


இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஒரு வாய்ப்பை உணர்ந்து, அணு உலை உபகரணங்களை வழங்குபவர்களுக்கு இழப்பீட்டுத் தடையை உயர்த்துவதற்கும், ஆபரேட்டரின் உடனடி இழப்பீட்டுப் பொறுப்பைத் தாண்டியதற்கும் ஒருங்கிணைந்த அழுத்தம் கொடுத்தது. 


இதன் காரணமாக, இந்தப் பிரிவு தொடக்கத்திலிருந்தே சட்டத்தை பயனற்றதாக்கியது. அணுசக்தி உபகரணங்களை வழங்கும் மேற்கத்திய நாடுகள் இதில் பங்கேற்கவில்லை. பத்தாண்டிற்கு முன்பு அதை மாற்றியமைக்கும் முயற்சி சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மேலும், இதற்கான சர்வதேச பதில் மந்தமாகவே உள்ளது.


2007இல், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது, ​​தனியார் துறை பங்கேற்பை அனுமதிக்கும் வகையில், அணுசக்திச் சட்டத்தை (AEA) திருத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. டாக்டர் ராஜா ராமண்ணா கமிட்டியின் 1997 (Dr. Raja Ramanna Committee) அறிக்கை, சட்டத்தின் மறுஆய்வு (review of the Act) பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கம் அப்போது குறிப்பிட்டது. இப்போது இரண்டு பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தின் செயல்திட்டத்தில் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளன.


கவலைகளை எழுப்புதல்


இந்த ஆண்டு பிப்ரவரியில், சட்டங்களை திருத்துவதற்கான அறிவிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நடவடிக்கை விநியோகர்களின் பொறுப்புணர்வை நீர்த்துப்போகச் செய்யும் என்று கட்சி கூறியது. இது, உள்நாட்டு ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் உபகரண விநியோகர்களைப் பாதுகாக்கிறது. 


காங்கிரஸின் கூற்றுப்படி, இது துணை இழப்பீடு தொடர்பான மாநாட்டைப் பிரதிபலிக்கிறது. இது குடிமக்களின் பாதுகாப்பை சமரசம் செய்து சர்வதேச நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, வெளிநாட்டு பலன்களை, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அணு உலை விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 1999இல் தொடங்கியதாகவும், அத்தகைய சட்டம் தேவை என்றும் கூறினார். அதிபர் பராக் ஒபாமாவின் வருகையுடன் முன்மொழியப்பட்ட சட்டம் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டது என்ற கூற்றுக்களை அரசாங்கம் பின்னர் நிராகரித்தது.


இப்போது, ​​முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்குமா என்பதே முக்கியப் பிரச்சினையாகும். சிறிய மட்டு உலைகளை (small modular reactors) உருவாக்குவதற்கான நடவடிக்கை குறித்து வெளியில் ஒரு தீவிர விவாதம் நடைபெறுகிறது. இதில், பல நாடுகள் இந்த புதிய துறையில் பங்கேற்க போட்டியிடுகின்றன. 

தற்போது, அணுசக்தி நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3% க்கும் சற்று அதிகமாக பங்களிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில், அரசாங்கம் பாராளுமன்றத்திற்குத் தெரிவித்தபடி, 8.8 GW நிறுவப்பட்ட திறன் கொண்ட 24 அணு மின் நிலையங்கள் இந்தியாவில் இருந்தன. 


இது 2000ஆம் ஆண்டுக்குள் 10 GW என்ற முந்தைய இலக்கிற்கு குறைவாக இருந்தது. 2031-32ஆம் ஆண்டுக்குள் திறனை 22.48 GW ஆக உயர்த்த அரசாங்கம் இப்போது திட்டமிட்டுள்ளது. இது 2047-ம் ஆண்டுக்குள் 100 GW என்ற லட்சிய இலக்கையும் கொண்டுள்ளது.


கடந்த காலத்தில், எதிர்க்கட்சி மூன்று முக்கிய பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை மாற்றியது. நூற்றாண்டின் தொடக்கத்தில், காப்புரிமைச் சட்டம், 1970இல் திருத்தத்தை மேற்கொள்ள எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. பின்னர், எதிர்க்கட்சிகள் திருத்ததை ஆதரித்தன. பின்பு திருத்தத்தை கட்டாயமாக்கியது.


 முன்பு, எதிர்க்கட்சி இரண்டு முக்கியமான சட்டங்களைத் தடுத்தது. ஒன்று அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துவதற்கான காப்பீட்டுச் சட்டம் மற்றும் நில எல்லை ஒப்பந்தத்தின் கீழ் வங்காளதேசத்துடன் நிலப்பரப்புகளை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்புதல் ஆகும். 


இறுதியாக, இந்த முன்மொழியப்பட்ட சட்டங்கள் சிறிய அல்லது சலுகைகள் இல்லாமல், அப்போதைய எதிர்க்கட்சி ஆதரவுடன் இயற்றப்பட்டன. அன்றைய அரசாங்கங்கள் தேசிய நலனுக்காகச் செயல்படுவதாக அவர்கள் நம்பியதால், இரு தரப்புத் தலைவர்களும் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எட்ட ஒன்றிணைந்தனர்.


விவாதம் தேவை


இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவையில்லை.


தற்போதைய சிக்கல்கள் விளைவுகளைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முழுமையான மற்றும் சமநிலையான விவாதம் தேவை. இந்த விவாதத்தில் அணுசக்தி தொடர்பான அனைத்து காரணிகளும் இருக்க வேண்டும். சிறிய மட்டு அணு உலைகளை நோக்கிய மாற்றம், அணுக்கழிவுகளை அகற்றுவதில் உள்ள சிக்கல் மற்றும் பிற தொடர்புடைய தலைப்புகளையும் இது உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்த விவாதத்தைத் தொடங்குவதில் எதிர்க்கட்சி முன்னிலை வகிக்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னரே அது தனது முடிவை எடுக்க வேண்டும்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிரமான பிரச்சினை குறித்த விவாதத்தின் போது, ​​கருவூல அமர்வுகளைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரிடம், விதிகளை மாற்றுவது என்பது ஒருவரின் நிலைப்பாட்டை மாற்றுவதைக் குறிக்கக் கூடாது என்று கூறினார்.


கே.வி. பிரசாத் டெல்லியைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் *Indian Parliament Shaping Foreign Policy* என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.



Original article:

Share:

ECI நெருக்கடியில் உள்ள ஒரு ஆணையமாக உள்ளது என்பதே உண்மை. -ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,முகமது ஏ.கான்

 பொதுமக்கள் மற்றும் வாக்காளர் நம்பிக்கை இழப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையமே முழு பொறுப்பாகும்.


இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner (CEC)) சுகுமார் சென் (மார்ச் 21, 1950 முதல் டிசம்பர் 19, 1958 வரை) குறைவாகப் பேசியவர். ஆனால், அவர் ஒரு சிறந்த செயல்திறன் கொண்டவர். அவர் எந்த நினைவுக் குறிப்புகளை (memoirs) வெளியிடவில்லை. 


இருப்பினும், உலகின் மிகப்பெரிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களில் ஒன்றை நடத்திய பெருமை அவருக்கு உண்டு. இப்போது பதவியில் இருப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. வரலாறு உங்கள் வார்த்தைகளையோ அல்லது கூறும் காரணத்தையோ அல்லாமல், உங்கள் பணியை நினைவில் கொள்கிறது.


ஆகஸ்ட் 14, 2025 அன்று உச்ச நீதிமன்றம் பீகாரின் வரைவுப் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான பெயர்கள் மற்றும் காரணங்களை வெளியிடக் கேட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெரும் அம்பலப்படுத்தலுக்குப் பிறகும், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதன் வரலாற்றில் மிகப்பெரிய நம்பகத்தன்மை நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்தால், நெருக்கடி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.


தேர்தல் ஆணையம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏன் நடத்தியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது தன்னைத்தானே தெளிவற்ற முறையில் புகழ்ந்து பேசுவதற்கும், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கும் பொறுப்பை அரசியல் கட்சிகள் மீது சுமத்துவதற்கும், எதிர்க்கட்சித் தலைவரை தவறான சட்டக் குறிப்புகள் மூலம் மறைமுகமாக தாக்குவதற்கும் மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க விரும்பும் செய்தியை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.


நம்பமுடியாத பதில்கள்


பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் குறித்து வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதைச் செய்யத் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்கள் எழுப்பும் வாக்காளர் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதே இதன் நோக்கமாக இருந்திருந்தால், அதையும் செய்யத் தவறிவிட்டது.


இந்திய தேர்தல் ஆணையம் இறுதியில் பாரபட்சமற்றதாகவும் திறமையற்றதாகவும் இருப்பதாக கூறிய எதிர்க்கட்சியின் கூற்றை நிரூபித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், தீவிரமான கேள்விகளுக்கு பலவீனமான மற்றும் நம்பமுடியாத பதில்களை வழங்கியதன் பதிப்புகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.

வீடியோ காட்சிகளைப் பகிராததற்கான தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்த காரணம்  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இரட்டை வாக்குரிமையை அடையாளம் காண்பதற்கு இந்தக் காட்சிகள் அவசியமானது. ஆனால், அது பெண்களின் தனியுரிமையை மீறும் என்ற அடிப்படையில் இதைப் பகிர முடியாது என்று தேர்தல் ஆனணயம் கூறியது.


 இது மிகவும் பலவீனமான வாதம். மற்றொரு உதாரணம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளை ஏன் எழுப்புகிறார்கள் என்றும், தேர்தலுக்கு முன் வாக்குசாவடி நிலை முகவர்களுடன் (Booth Level Agents) வரைவு வாக்காளர் பட்டியல்கள் பகிரப்படும்போது அல்ல என்பதும் தலைமை தேர்தல் ஆணையரின்  கேள்வியாக இருந்தது. 


அதற்கான பதில் என்னவென்றால், வாக்களித்த பின்னரே தேர்தல் மோசடிகள் வெளிப்படுகிறது மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே போலி வாக்காளர் வடிவங்களைக் காண முடியும். இதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இதைப் புரிந்து கொள்ளாதது கவலை அளிக்கிறது.


மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு வழங்கிய  வாக்காளர் பட்டியல் தரவைப் பகிர்ந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது என்பதை தலைமை ஆணையர் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை.


தரவு மறுப்பு


அனுபவத்திலிருந்து இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்தக் கட்டுரையின் முதல் எழுத்தாளர், இந்திய தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டிசம்பர் 27, 2024 அன்று, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவின் வாக்காளர் பட்டியலைக் கேட்டு ECIக்கு கடிதம் எழுதினார். ஜனவரி 17, 2025 அன்று மற்றொரு கடிதத்தை அனுப்பிய பிறகும், ECI கோரிக்கைகளை ஏற்கவில்லை.


தரவுகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததால், எழுத்தாளர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தரவுகளை மறுப்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது மற்றும் எந்த சட்டத்தின் கீழும் அதை நியாயப்படுத்தப்பட முடியாது. 


இதன் விளைவாக, பிப்ரவரி 25, 2025 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதே நாளில், தேர்தல் ஆணையம் அந்தந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEOs) சட்டத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் குறித்து முடிவு செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு (CEO) அறிவுறுத்தியதாகக் கூறியது. உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு, முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசத்தை நிர்ணயித்தது.


உத்தரவின்படி, இந்தக் கட்டுரையின் எழுத்தாளர்கள் மகாராஷ்டிராவில் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) முன் நேரில் ஆஜரானார்கள். அவர்களின் சகாக்கள் ஹரியானாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி முன் ஆஜரானார்கள். மே 22, 2025 அன்று, மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி தனது உத்தரவை பிறப்பித்தார். அதேபோல், ஹரியானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியும் மே 24, 2025 அன்று தனது உத்தரவை பிறப்பித்தார்.


இரண்டு உத்தரவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. அவர்கள் எந்த வாக்காளர் பட்டியலையும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, தேர்தலுக்கு முன்பே தரவு ஏற்கனவே வழங்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) தனது தனது பாதுகாப்பிற்காக அடிக்கடி மீண்டும் மீண்டும் கூறும் அதே வாதமாகும் இதில், சில தகவல்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், மேலும் அதே ஆவணங்கள் அல்லது தகவல்களின் கூடுதல் நகல்களைப் பெற, ஒருவர் விதிகளைப் பின்பற்றி அவற்றை முறையான அதிகாரிகளிடமிருந்து கோர வேண்டும் என்ற ஒரு வரியையும் அவர்கள் சேர்த்தனர்.


பதில் தெளிவாக உள்ளது. கோரிக்கை வைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்களை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு ECI ஒவ்வொரு சாத்தியமான காரணங்களைப் பயன்படுத்தியது. இது அதிகாரத்துவ மொழியைப் பயன்படுத்தி சரியான ஆய்வைத். தடுக்கும் முயற்சியாகும்.


பீகார் SIR விஷயத்தில், ECI இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்தியது. ஆனால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவைப் பகிர மறுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டியிருந்தது மற்றும் ஆதார் உட்பட பல பொதுவான அடையாள ஆவணங்களை விலக்குவதற்கான அதன் முடிவையும் தேர்தல் ஆணையம் நியாயப்படுத்த வேண்டியிருந்தது.


உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 14 அன்று, வாக்காளர் தரவை மறுக்க ECI முன்வைத்த வாதங்களை நிராகரித்தது மற்றும் நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் காரணங்களுடன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இவை அனைத்தும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (Electors Photo Identification Card (EPIC)) தேடக்கூடிய பயன்முறையில் (searchable mode) இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதாரை செல்லுபடியாகும் அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.


வாக்காளர்களின் நம்பிக்கையை இழக்கிறது


செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் வெளிப்படையான தன்மை மற்றும் வாக்காளர்களுக்கு அதன் அர்ப்பணிப்பு பற்றி குறிப்பிட தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அதிக நேரத்தை செலவிட்டார். இருப்பினும், ECI அதன் அடிப்படைக் கடமையைச் செய்யச் சொல்லப்பட வேண்டியதற்கான எந்த விளக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை.


இந்த நெருக்கடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு. அதுவே இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சியைத் தவிர அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.


தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் மலைபோல் நிற்கிறது என்று கூறியதன் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தொடர்பைக் காட்டினார்.


ஆனால், ஜனநாயகத்தில், மக்கள்தான் மலை, தேர்தல் ஆணையம் அல்ல என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.


ரந்தீப் சிங் சுர்ஜேவாலா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆவார். முகமது ஏ. கான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும், ஏஐசிசி சட்டத் துறையின் செயலாளராகவும் உள்ளார்.



Original article:

Share:

பாலின அடையாள அங்கீகாரம் குறித்து . . .

 பாலின அடையாள அங்கீகாரம் (Gender identity recognition) அதிகாரத்துவ தடைகளில் சிக்கக்கூடாது


பியோன்சி லைஷ்ராமுக்கு புதிய கல்விச் சான்றிதழை வழங்குமாறு அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவானது, ஒரே நேரத்தில் தனிமனித நீதி (individual justice) மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் (transgender rights) குறித்த வெளிப்பாடாகும்.


 இது ஒரு எளிய நிர்வாகத் திருத்தமாக இருந்திருக்க வேண்டியது நிலையில், தற்போது அது சட்டப் போராட்டமாக மாறி உள்ளது. இது சட்டத்தில் வேண்டிய விதிகள் இல்லாததால் நிகழ்ந்தது அல்ல, மாறாக சட்டத்தின்  அமலாக்கம் செயலற்ற தன்மை மற்றும் அதிகாரத்துவம் மூலம் அவை தடுக்கப்பட்டதால் நடந்தது. 


NALSA vs இந்திய ஒன்றியம் (NALSA vs Union of India) வழக்கில், உச்ச நீதிமன்றம் பாலினத்தை தனிப்பட்ட அடையாளம் காணும் உரிமையை அங்கீகரித்ததோடு, மாற்றுத்திறனாளிகளை சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தகுதியுடையவராக கருதுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்தக் கொள்கையானது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act) குறியிடப்பட்டுள்ளது. 


இது ஒரு நபரின் தனிபட்ட முறையில் அடையாளம் காணப்பட்ட பாலினத்தை (self-identified gender) அங்கீகரிக்கவும், அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 14 மற்றும் 21வது பிரிவுகளுடன், மாற்றுத்திறனாளிகள் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளத்தை அனைத்து நிறுவன பதிவுகளிலும் தடையின்றி அங்கீகரிக்க உரிமை உண்டு. 


இருப்பினும், அவர்களின் வாழ்க்கைமுறை மிகவும் யதார்த்தமானதுடன், மிகவும் வேறுபட்டது. தனிபட்ட-அடையாளம் (self-identification) குறித்த சட்டம் தெளிவாக இருந்தாலும், உயர் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படாவிட்டால், அதிகாரத்துவ அமைப்புகள் பெரும்பாலும் செயல்படாது. டாக்டர். லைஷ்ராமின் வழக்கில், அவரது பல்கலைக்கழகம் அவரது கல்விப் பதிவேடுகளைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது. இது ஒரு நடைமுறையான தடைகளை மேற்கோள் காட்டியதுடன், தீவிரமான முறையின் சிக்கலை பிரதிபலிக்கிறது. 


நிர்வாகிகள் பெரும்பாலும் சட்டத்தின் உணர்வை மதிப்பதற்குப் பதிலாக நடைமுறையின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வாசிப்பைப் (restrictive reading) பின்பற்ற விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில், பல்கலைக்கழகம் மற்றும் கல்வி வாரியங்கள், அதிகாரத்துவ ஒப்புதல்களின் தொடர்ச்சியில் உள்ள தகுதியான அங்கீகாரத்துடன், ஆரம்பகால சான்றிதழுடன் திருத்தங்கள் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.


திருநங்கைகள் தங்கள் பாலினத்தைத் தாங்களே தேர்வு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் பல அதிகாரிகள் இன்னும் பிறக்கும் போது கொடுக்கப்படும் ஆண்-பெண் என்ற அடையாளத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். 


இது சட்டத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை உருவாக்குகிறது. அதிகாரிகள் பெரும்பாலும் படிப்படியான மாற்றங்கள் அல்லது நீண்ட விளக்கங்களைக் கோருகிறார்கள். இது பாலின அடையாளம் ஆவணங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. 


 டாக்டர் லைஷ்ராமின் போராட்டம், கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கையைப் பயன்படுத்தத் தயங்குவதைக் காட்டுகிறது. இதனால் வழக்கமான விஷயங்களில் திருநங்கைகள் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த சூழ்நிலைகள் ஒரு கடுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன: ஏற்கனவே களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்ளும் திருநங்கைகள், சட்டப்பூர்வமாக தங்களுக்குச் சொந்தமான உரிமைகளைப் பெற அதிக நேரத்தையும் வளங்களையும் செலவிட வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு நேர்மறையான படியாகும். 


இது மற்ற திருநங்கைகளுக்கு உதவக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது மற்றும் கடுமையான நடைமுறைகள் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை மீற முடியாது என்பதை நிர்வாகிகளுக்கு நினைவூட்டுகிறது. சட்ட உரிமைகளுக்கும் அவற்றின் உண்மையான பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க, பாலினத்தை ஒரு தனிப்பட்ட அனுபவமாகப் புரிந்துகொள்வதன் அடிப்படையில், நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரத்துவத்தில் கலாச்சார மாற்றம் இரண்டும் தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.



Original article:

Share: