இந்தியாவின் மேற்பரப்பு நீர் வளங்களின் சிக்கல்களைக் கடந்து செல்லுதல் -வீணா ஸ்ரீனிவாசன்

 இந்தியாவின் நீர்வளங்களின் மீது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன.


இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறை ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகிறது — இது விநியோகம், சமத்துவம் மற்றும் அணுகல் போன்ற நூற்றாண்டுகள் பழமையான சவால்களால் மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் கணிக்க முடியாத இடையூறுகளாலும் வடிவமைக்கப்படுகிறது.


பருவநிலை மாற்றமானது வெள்ளம், வறட்சி, மாறிவரும் காலநிலை மற்றும் உருகும் பனிப்பாறைகள் மூலம் இந்தியாவின் பலவீனமான நீர்வள அமைப்புகளில் கடினமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


இருப்பினும், ஆராய்ச்சி மற்றும் நடைமுறை காட்டுவது போல், காலநிலை என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல பாதிப்புகளில் ஒன்றாகும்.                 

                 

சமமற்ற முறையில் பரவியுள்ள வளங்கள்


“இந்தியாவின் நீர் வளங்கள்” என்று ஒன்று அல்லது இரண்டு எண்களைக் கொண்டு விவரிக்க வேண்டும் என்ற யோசனை உள்ளது. ஆனால், அந்த எண்கள் பயனுள்ளவையாக இல்லை. இந்தியாவின் மேற்பரப்பு, நீர் வளங்கள் மாறுபட்ட நிலப்பரப்பு, மழைப்பொழிவு முறைகள் மற்றும் நதி அமைப்புகள் காரணமாக சமமற்ற முறையில் பரவியுள்ளன.


இந்தியா ஆண்டுதோறும் சுமார் 4,000 பில்லியன் கன மீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. இதன் இந்தியா பெறும் மழையிலிருந்து, 1,890 பில்லியன் கன மீட்டர் நிலத்தில் ஊறுவதற்குப் பதிலாக ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் கலக்கிறது. ஆனால், நில வடிவம் மற்றும் சேமிப்பு வரம்புகள் காரணமாக 690 பில்லியன் கன மீட்டர் நிரை மட்டுமே பயன்படுத்த முடியும்.


உதாரணமாக, கங்கை-பிரம்மபுத்ரா-மேகானா நதிப் படுகை நாட்டின் நீர் திறனில் ஏறக்குறைய 60%-ஐக் கொண்டுள்ளது. ஆனால், அதில் கால் பகுதி மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.


மூலம்: நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்ச்சி   அமைச்சகம்.



ஏனெனில் இந்தியாவின் பெரும்பாலான மழை (80%) ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின் போது பெய்யும். இதனால் தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் பருவகால ஆறுகளாக மாறுகின்றன. மேலும், வறண்ட காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில நாட்களில் பலத்த மழை பெய்தாலும், நாம் எத்தனை அணைகள் அல்லது நீர்த்தேக்கங்களைக் கட்டினாலும், முழு நீரையும் சேமித்து பயன்படுத்த முடியாது.


இந்தியாவின் மேற்பரப்பு நீர்நிலைகள், குறிப்பாக ஆறுகள், ஆபத்தில் உள்ளன. ஒருபுறம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர நிகழ்வுகள் மிகக் கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மறுபுறம், பொருளாதார மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் நகரங்கள் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை அதிகரிக்கச் செய்கின்றன மற்றும் அவற்றை மாசுபடுத்தும் கழிவுநீரை உருவாக்குகின்றன.



காலநிலை மாற்றம் தண்ணீரை பாதிக்கிறது.


இந்தியாவின் நீர் வளங்களின்மீது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியான வெப்பமயமாதல் நடவடிக்கைகள் தண்ணீருக்கானத் தேவையை அதிகரிக்கிறது. இருப்பினும், மழைப்பொழிவு போக்குகள் குறைவாகவே உள்ளன. சில நுண்ணறிவு மாதிரிகள், குறிப்பாக மத்திய இந்தியாவில், வலுவான பருவமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கின்றன. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு கங்கை சமவெளி போன்ற இடங்களில் மழை குறைந்து வருவதாகவும், பருவமழை தீவிரமடைவதையும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளின் அதிகரிப்பையும் காட்டுகின்றன..


இமயமலை பனிப்பாறைகள் உருகுவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. தற்போது, ​​பனி உருகுவது வறண்ட காலங்களில் கங்கை போன்ற ஆறுகள்  பாய்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. ஆனால், வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், ஆற்றின் ஓட்டம் முதலில் அதிகரித்து பின்னர் குறையக்கூடும். இந்த சூழல்ஆற்றின் கீழ் படுகையில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.


இருப்பினும், காலநிலை மாற்றம் சிக்கல்தன்மையை அதிகரித்திருந்தாலும், இந்தியாவின் நீர் அமைப்புகளின் மேலாண்மை இன்னும் தேக்க நிலையில் உள்ளது. நமது நாடு இன்னும் எளிய விதிகளை நம்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு ஒப்பந்தங்கள் நிலையான அளவுகளை ஒதுக்கீடு செய்கின்றன, வறண்ட ஆண்டுகளுக்கு சிறிதளவு நெகிழ்வுத்தன்மையுடன், இது குறைபாடுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் கருத்து வேறுபாடுகளால் மோதல்களுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான வடிகால் உள்கட்டமைப்புகள் “100 ஆண்டு புயல்” என்ற கருத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டன. இது ஒவ்வொரு ஆண்டும் 1% சாத்தியமுள்ள மழை நிகழ்வு உருவாகும்  என்ற புள்ளி விவரத்தின் கணிப்பாகும். இப்போது இத்தகைய மழை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் இந்த அமைப்புகள் குறைவான செயல்திறன் கொண்டதாகியுள்ளன.

      

நிலத்தடி நீர் குறைவு


காலநிலை மாற்றம் இந்தியாவின் நீர் அமைப்புகளுக்கு ஒரே அல்லது முதன்மையான அழுத்த காரணி அல்ல. மனித நடவடிக்கைகள் தண்ணீரின் மீது இன்னும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, விவசாயத்திற்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது உணவு மற்றும் வறுமையைக் குறைக்கும் அதே வேளையில் - கடுமையான நீர்பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளது.


மழைக்காலம் முடிவடைந்து பல மாதங்களுக்குப் பிறகும், கோடை காலத்திலும், தீபகற்ப இந்தியாவில் உள்ள பல ஆறுகள் ஏன் தண்ணீரில் நிரம்பி இருந்தன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பதில் அடிப்படை ஓட்டமாகும். மழைக்காலங்களில் மழைநீர் நீர்நிலைகளில் ஊறி, கோடையில் மெதுவாக ஓடைகளில் செல்கிறது. இது பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உயிர்நாடியாக இருந்தது.

இதனால், நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​நிலத்தடி நீர் வேகமாகப் பயன்படுத்தப்படுவதால், வறண்ட காலங்களில் ஆறுகளில் குறைவான நீர் பாய்கிறது. இதனால், பல இந்திய ஆறுகள் வறண்ட காலத்தில் குறைவான தண்ணீரைப் பெறுகின்றன.


நீர் தர சவால்


மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கண்காணிக்கப்பட்ட ஆறுகளில் 46% (603-ல் 279) உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (biochemical oxygen demand (BOD)) அடிப்படையில் மாசடைந்தவையாக அடையாளம் காணப்பட்டன. இது கரிம மாசுபாட்டின் முக்கிய அறிகுறியாகும். கழிவுநீர் சுத்திகரிப்புக்கான (sewage treatment) முதலீடுகளால் இந்த எண்ணிக்கை காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.


2022-ஆம் ஆண்டு NITI ஆயோக் ஆய்வின்படி, நகர்ப்புறங்களில் உருவாகும் மொத்த கழிவுநீரில் 28% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது; 72% கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளது மற்றும் சுற்றுச்சூழலில் நேரடியாக வெளியேற்றப்படுகிறது. உள்நாட்டு கழிவுநீர், பெரும்பாலும் கன உலோகங்கள், கரிம நச்சுகள் மற்றும் இரசாயனங்கள் கொண்ட தொழிற்சாலை வெளியேற்றத்தால் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. 

ஒரு மறைக்கப்பட்ட பிரச்சனை என்னவென்றால், அது பல சிறிய மூலங்களிலிருந்து வரும் மாசுபாடு ஆகும். அதிகப்படியான உரங்கள் பயன்படுத்தப்பட்டு ஆறுகளில் கலக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது.



ஊட்டச்சத்து நிறைந்த ஆறுகளும் நீர்நிலைகளும் தீங்கு விளைவிக்கும் பாசி பூக்கும் (harmful algal blooms) வாய்ப்பை ஏற்படுத்துகின்றன, இது கரைந்த ஆக்ஸிஜனின் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களைக் கொல்கின்றது. மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் மேலும் மாசுபாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை தங்கள் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கவோ அல்லது தொலைதூர நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை இறக்குமதி செய்யவோ கட்டாயப்படுத்துகிறது.


காலாவதியாகி வரும் மேற்பரப்பு நீர் உள்கட்டமைப்பு


இந்தியாவின் அணை உள்கட்டமைப்பு - ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தது- இப்போது காலாவதியாகி வருகிறது. குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களை முன்வைக்கிறது. நாட்டின் பெரும்பாலான பெரிய அணைகள் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டன. பல அணைகள் இப்போது அவற்றின் வடிவமைக்கப்பட்ட காலத்தின் கடந்துவிட்டன அல்லது இறுதி காலத்தை நெருங்கி வருகின்றன.


அணைகள் காலாவதியாகி வருவதால், ​​தேய்மானம், துருப்பிடிக்கும் எஃகு மற்றும் பலவீனமான அடித்தளங்கள் அவற்றின் பாதுகாப்பைக் குறைக்கின்றன. அதே நேரத்தில், மழையினால் வரும் வண்டல்மண் சேர்க்கை, நீர்த்தேக்கத்தை நிரப்புகிறது. இதனால், அது எவ்வளவு தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதைக் குறைக்கிறது. காலநிலை மாற்றம் இந்த பிரச்சனைகளை மோசமாக்குகிறது. அதிக மழை அதிக வண்டலைக் கொண்டுவருகிறது மற்றும் நிரம்பி வழியும் அபாயத்தை அதிகரிக்கிறது.


இந்தியாவில் 5,745 பெரிய அணைகள் உள்ளன. சீனா மற்றும் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.


1,115 அணைகள் கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன; 234 பெரிய அணைகள் 100 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்தியாவின் பெரிய அணைகளில் 80%-க்கும் மேற்பட்டவை 2050-ஆம் ஆண்டுக்குள் பாதிப்படையும் சூழல் உள்ளது. ஏனெனில், சேமிப்புத் தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும். லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் அவற்றின் குறுகியகாலம் காரணமாக இன்னும் ஆபத்தில் உள்ளன.


நிலத்தடி வளங்கள் நேரடி பயன்பாட்டிற்கு மட்டுமல்ல. இந்தியாவின் ஆறுகள் உலக மக்கள்தொகையில் 18%-ஐ ஆதரிக்கின்றன மற்றும் நீர்வாழ் மற்றும் அரை நீர்வாழ் உயிரினங்களின் தனித்துவமான கூட்டங்களை ஆதரிக்கின்றன என்று இந்திய வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது. நதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகள் அணைகளால் பாதிக்கப்படுகின்றன. அவை இயற்கை ஓட்டத்தை மாற்றி மாசுபாட்டைக் கையாளும் திறனைக் குறைக்கின்றன. மேலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் நேரடி மாசுபாட்டாலும் பாதிக்கப்படுகின்றன.


மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?


இந்த அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், சவால்கள் கடக்க முடியாதவை அல்ல.

முதலாவதாக, மேற்பரப்பு நீரை நாம் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். பெரிய முதலீடுகள் இருந்தபோதிலும், கால்வாய் பாசனப் பகுதியின் அளவு குறைந்துவிட்டது. கால்வாய்கள் அல்ல, நிலத்தடி நீர் இப்போது இந்தியாவின் பாசனத்தில் 60%-க்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, அரை வறண்ட மற்றும் வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் காலநிலை மீள்தன்மையை மேம்படுத்த இந்தியாவில் கால்வாய் பாசன முறைகளை மேம்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும்.


கால்வாய் சீரமைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் தானியங்கி மயமாக்கல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பல திட்டங்கள் கடைசி மைல் இணைப்பு இல்லாமல் உண்மையான விவசாயிகளின் வயல்களில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள பிரதான கால்வாய் கிளைகள் அல்லது பக்கவாட்டுகளில் முடிவடைகின்றன. ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நீர் வழங்கல் அதிகார சபைகள் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்களால் சரிசெய்யப்படுகின்றன. ஆனால் ஊழல் இல்லாவிட்டாலும், நீர்வளத் துறைகளில் கடைசி மைல் பாசனத்தை ஒருங்கிணைப்பதற்கான சமூகப் பிரச்சினையைத் தீர்க்க திறன் கொண்டவர்களால் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


ஒரு தொடர்புடைய பிரச்சனை பெரும்பாலான கால்வாய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகும். அணைக்கு அருகில் உள்ள விவசாயிகள், தலைப்பகுதி (head end) சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், நெல் மற்றும் கரும்பு போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை வளர்க்க தங்கள் பங்கை விட அதிகமான நீரை இழுத்துக்கொள்கின்றனர், இதனால் நீர் அரிதாகவே வால் பகுதிக்கு (கடைநிலைக்கு) சென்றடைகிறது. இதைத் தீர்க்க தலைப்பகுதி விவசாயிகளுக்கு தங்கள் வயல்களுக்குள் நீர் வருவதற்கு அதிக கட்டுப்பாடு கொடுப்பது ஒரு பக்கமும், மறுபக்கம் நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களுக்கு மாறுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவதும் தேவை.


இரண்டாவதாக, நமது காலாவதியான உள்கட்டமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். உலக வங்கி நிதியளிக்கும் 'அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்' (Dam Rehabilitation and Improvement Project) கீழ் இந்தியாவில் உள்ள பல அணைகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், வண்டல் மண் மூலம் திறன் இழப்பு ஒரு நல்ல தீர்வாக இல்லை, ஏனெனில், இது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் பெரிய அணைகளை தூர்வாருவது மிகவும் சவாலாக உள்ளது. 

இதைத் தடுக்க, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும், அதனால் வண்டல் மண் மேல்நோக்கிய சிறிய கட்டமைப்புகளில் சிக்கிக் கொள்ளும், அவற்றை அகற்ற முடியும். தற்போது, இருக்கும் முயற்சிகளின் செயல்திறன் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை, எனவே எது வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை.


மூன்றாவதாக, நிலத்தடி நீர் எடுப்பதை நிர்வகிக்க வேண்டும். நமது அமைப்புகள் அதை ஒப்புக்கொண்டாலும் சரியே, நிலத்தடி நீரும் மேற்பரப்பு நீரும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளங்களாகும். நிலத்தடி நீரால் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொள்ளாமல் மேற்பரப்பு நீரை நிர்வகிக்க முடியாது. இந்தியாவில் பெரும்பாலான நீர் பயன்படுத்துபவர்கள், நகர்ப்புறமாகட்டும் கிராமப்புறமாகட்டும், இரு ஆதாரங்களையும் பயன்படுத்துகின்றனர் மற்றும் தங்கள் சொந்த நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மாறி மாறி பயன்படுத்துகின்றனர்.


இதுவரை, பெரும்பாலான அரசாங்க முயற்சிகளின் கவனம் மறு சுழற்சி திட்டங்களில் இருந்தது, அவை வறண்ட இடங்களில் கீழ்நிலை நீர்த்தேக்கங்களுக்குள் வருவதைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளன.


நிலத்தடி நீர் குறைவு இறுதியில் அதிகப்படியான குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் ஏற்படுகிறது. முக்கிய காரணங்கள் இலவச மின்சாரம் மற்றும் அதிக நீர் தேவைப்படும் பயிர்களுக்கு அதிக விலைகள் ஆகும். எனவே, நீர் தேவையை கட்டுப்படுத்த நமக்குத் திட்டங்கள் தேவை. அதன்படி, அடல் ஜல் யோஜனா மற்றும் பஞ்சாபில் “தண்ணீரைச் சேமியுங்கள், பணம் சம்பாதியுங்கள்” (Paani Bachao, Paise Kamao”) போன்ற திட்டங்களால் மெதுவாக மாற்றம் வருகிறது — இருப்பினும் இந்த திட்டம் இன்னும் அடிப்படை சிக்கல்களை தீர்க்கவில்லை.


நான்காவதாக, தரவுகளுக்கான திறந்த அணுகல் நமக்குத் தேவை. இது சிறந்த ஆராய்ச்சி மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு உதவுகிறது. தற்போது, ​​நீர் தொடர்பான பல தரவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், நதி ஓட்டம், வெள்ள அபாயங்கள் மற்றும் நீர்த்தேக்க வண்டல் போன்ற விஷயங்களுக்கு தவறான மதிப்பீடுகள் ஏற்படுகின்றன.


தரவுத்தொகுப்புகள் பொது வெளியில் வெளியிடப்படும்போது, ​​பல மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து தரவை ஆராய்வதால், நீர் அமைப்புகள் பற்றிய நமது அடிப்படை புரிதல் மேம்படுகிறது என்பதை மற்ற நாடுகளின் அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இது சில உயரடுக்கு நிறுவனங்களிடமிருந்து ஆய்வுகளை ஆணையிடுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. திறந்த தரவு சிறந்த அறிவியல் மற்றும் சிறந்த முடிவெடுப்பு என்ற வகையில் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும்.


கூடுதலாக, நமக்கு அடிப்படையான முதன்மை ஆராய்ச்சியும் தேவை. இந்தியாவில் பல நீர் ஆராய்ச்சிகள் கள தரவு அடிப்படையிலானவை அல்ல, மாதிரி அடிப்படையிலானவை மட்டுமே- இது போன்ற காரணிகளால் தான் பல பொறியியல் மதிப்பீடுகள் முக்கியமான சுற்றுச்சூழல் அல்லது சமூக நடத்தைகள் மற்றும் வரம்புகளை பார்க்க தவறவிடுகின்றன. நீரூற்றுகள், இணைப்பு பயன்பாடு, விவசாயிகளின் கூட்டுறவு நடத்தை மற்றும் நீர்வாழ் அமைப்புகளைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியில் நமக்கு அதிக முதலீடு தேவை.


குறுகிய பொறியியல் பகுப்பாய்வுகளுக்கு வெளியே கொள்கை வகுப்பாளர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதும் குறைவாகவே உள்ளது. கொள்கை வகுப்பாளர்களுக்கான ஆராய்ச்சியின் உயர்தர தொகுப்பு தேவைப்படுகிறது.


ஐந்தாவது, உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் நீர்த்தேக்க மேலாண்மை அமைப்புகள் நமக்குத் தேவை. காலநிலை மாற்றம் அதிக மழையைக் கொண்டுவரும். ஆனால், வெள்ளம் காரணமாக ஏற்படும் இறப்புகள் வலுவான புயல்கள், வறுமை மற்றும் பலவீனமான சமாளிக்கும் அமைப்புகள் காரணமாக நிகழ்கின்றன. தொழில்நுட்பம் மட்டும் போதுமானதாக இருக்காது - குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் புரிந்துகொண்டு, நம்ப வேண்டும், செயல்படுத்த வேண்டும். இதற்காக, உள்ளூர் வலையமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் நிர்வாகம் மூலம் வெள்ள எச்சரிக்கைகள் செயல்பட வேண்டும். இந்த அணுகுமுறை ஒடிசாவில் சிறப்பாக செயல்பட்டது. அந்த மாநிலத்தில் 'முன்கூட்டிய எச்சரிக்கை பரவல் அமைப்பு' (Early Warning Dissemination System) 1999-ல் ஒரு மில்லியன் மக்களுக்கு 780-ஆக இருந்த பெரும்புயல்களினால் ஏற்படும் இறப்புகளை 2019-ல் 3.82 ஆகக் குறைக்க உதவியது.


ஆனால் இயற்கைப் பேரழிவுகள் மட்டுமே பிரச்சனை அல்ல. இந்தியாவில் ஏற்படும் மிகப்பெரிய வெள்ளப் பேரழிவுகளில் சில, மனிதனால் உருவாக்கப்பட்டவை - எச்சரிக்கை இல்லாமல் நீர்த்தேக்கங்களில் இருந்து திடீரென தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படுகின்றன. பல நேரங்களில், மழை பெய்யாமல், கோடையில் நீர் மட்டம் குறைந்துவிட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில், அணை நிர்வாகிகள் தண்ணீரை வெளியேற்ற கடைசி நிமிடம் வரை காத்திருக்கிறார்கள். கடந்தகால வெள்ளப் பேரிடர்களின் நேர்மையான பகுப்பாய்வின் அடிப்படையில், நவீன வெள்ள விதிகள், நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் ஸ்மார்ட் நீர்த்தேக்க மேலாண்மை போன்ற சிறந்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட அமைப்புகள் நமக்குத் தேவை.


இறுதியாக, தகவமைப்பு மற்றும் உள்ளடக்கிய நவீன நீர் நிறுவனங்கள் நமக்குத் தேவை. மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகும். துறைகளுக்கு இடையே நீர் தேவையை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு அல்லது செயல்முறை இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியைக் கொண்டுள்ளது. விவசாயம், தொழில் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் ஒட்டுமொத்த படுகை நீர் கிடைப்பைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இதன் விளைவாக, வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான பொருந்தாத தன்மை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கிறது.


மற்றொரு பிரச்சனை என்னவென்றால், நீர்வளப் பொறியாளர்கள், பிற துறைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகும். பெரும்பாலும் இருதரப்புக்கும் வெற்றி தரும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தனிப்பட்ட துறைகள் தங்கள் சொந்த ஆணைகளின்படி கண்டிப்பாக செயல்படுகின்றன. மேலும், குடிமை சமூகத்தின் மீது ஆழமான அவநம்பிக்கை உள்ளது. இது பயனுள்ள உரையாடலைத் தடுக்கிறது.


காலநிலை, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் என பல நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா தகவமைப்பு நீர் மேலாண்மையை  (adaptive water management) ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் பொருள், நிர்ணயிக்கும் முன்னறிவிப்புகளிலிருந்து சூழ்நிலைத் திட்டமிடலுக்கு மாறுவதாகும். அங்கு பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு சாத்தியமான எதிர்காலங்கள் ஆராயப்படுகின்றன. மேலும், இதற்கு ஒருங்கிணைக்கக்கூடிய மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பு  தேவைப்படுகின்றன.


இந்தியாவின் நீர் அமைப்புகள் புதிய மற்றும் அறியப்படாத சவால்களை எதிர்கொள்கின்றன. மக்கள்தொகை வளர்ச்சி, மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் புதிய அரசியல் முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் காலநிலை மாற்றம் விவகாரங்கள் சிக்கலை மேலும் அதிகரிக்கிறன. முக்கியக் குறிக்கோள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றுவது மட்டுமல்ல, வேகமாக மாறிவரும் உலகைக் கையாள நமது அமைப்புகள், கொள்கைகள் மற்றும் அமைப்புகளை மீண்டும் உருவாக்குவதாகும்.


வீணா ஸ்ரீனிவாசன் ஒரு சமூக-நீரியல் நிபுணர் மற்றும் WELL ஆய்வகங்களின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.



Original article:

Share:

சட்டக் கல்லூரிகள் வருகை விதிமுறைகளை எவ்வாறு மாற்ற வேண்டும்? -ஜி.எஸ். பாஜ்பாய்

 சுஷாந்த் ரோஹில்லா தற்கொலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன நிபந்தனையை விதித்தது?

டெல்லி உயர் நீதிமன்றத்தின் சுஷாந்த் ரோஹில்லா தற்கொலை வழக்கு (2025) குறித்த தீர்ப்பு, பல்கலைக்கழகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் நியாயம் மற்றும் பகுத்தறிவு என்ற கட்டமைப்புக்குள் எவ்வாறு ஒழுங்குமுறை அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்கிறது. போதிய வருகைப்பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத ஒரு சட்டக் கல்லூரி மாணவர் 2016-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து இந்த வழக்கின் தீவிரத்தன்மை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. வருகைப்பதிவுக் கொள்கைகள் நியாயமாகவும் விகிதாசாரமாகவும் உள்ளதா என்பது குறித்து ஆராய  நீதிமன்றம் இந்தச் சம்பவத்தை ஒரு பொதுநல விசாரணையாக மாற்றியது. மாணவர்களின் நலன் குறித்த அக்கறை அதிகரித்துவரும் வேளையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, கல்விசார் சுயாட்சி (Academic Autonomy) அரசியலமைப்புச் சட்டத்தின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 


உயர்நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கியப் பிரச்சினை என்ன?


வழக்கு வெறும் வருகைப் பதிவு பற்றியது மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்துவது பற்றியதும்கூட என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் வருகைப்பதிவு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே குறைந்தவுடன், எச்சரிக்கை, ஆலோசனை அல்லது விவாதம் இன்றி, அவர்களைத் தகுதி நீக்கம் செய்தன. இத்தகைய இயந்திரத்தனமான நடைமுறை, செயல்முறை நியாயத்தையும் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் தரநிலைகளையும் மீறுவதாகும்.


இந்தத் தீர்ப்பு, பிரிவு 14-ன் தன்னிச்சையற்ற தன்மைக் கோட்பாடு (doctrine of non-arbitrariness) மற்றும் செயல்முறை நியாயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்புக்கு உட்பட்ட பொது அதிகார அமைப்புகளாகும். அவற்றின் முடிவுகள் நியாயமானதாகவும், சமச்சீரானதாகவும் மற்றும் நீதி தவறாததாகவும் இருக்க வேண்டும். இங்கு நியாயம் என்பது வெறும் நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, பிரிவு 21-ன் கண்ணியம் மற்றும் மனநலப் பாதுகாப்புடன் இணைக்கப்பட்ட அரசியலமைப்பாகும். உரிய நடைமுறை மற்றும் மாணவர்களின் நலனை, கண்ணியத்துடன் கூடிய வாழ்வுக்கான அரசியலமைப்பு உறுதிமொழியின் ஒரு பகுதியாகப் பாதுகாக்கிறது.


வருகை விதிகளைச் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்ததா?


நீதிமன்றம் வருகை விதிமுறைகளை உறுதி செய்தது. ஆனால், கடுமையான அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விதிவிலக்கான வழக்குகளில் 70% வருகை, 65% வரை தளர்த்தப்படலாம் என்ற இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் (Bar Council of India (BCI)) சட்டக்கல்வி விதிகள் 2008 விதி 12-ன் கீழ் உள்ள கருத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், இந்தக் கட்டமைப்பை "மிகவும் கடுமையானது" என்று அழைத்ததுடன், தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), 2020 மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) விதிகள் 2003 ஆகியவற்றின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியது. இந்த இரண்டுமே நெகிழ்வுத்தன்மை மற்றும் கற்றலை மையமாகக் கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. வருகைப் பதிவு கட்டாயமாகப் பின்பற்றப்படும்போது, அது ஒரு விலக்கல் தடையாக (exclusionary barrier) மாறக்கூடுமென்றும் தெரிவித்தது. அந்த விதி செல்லுபடியாகும் என்றாலும், அதை வளைந்துகொடுக்காமல் நடைமுறைப்படுத்தியது விகிதாச்சாரமற்றதாகக்  கருதப்பட்டது. நீக்கம் என்பது கடுமையான கல்வி விளைவுகளைக் கொண்ட ஒரு தீவிர நடவடிக்கையாக நீதிமன்றம் கருதியது.


பல்கலைக்கழகங்கள் இப்போது எதை பின்பற்ற வேண்டும்?


தீர்ப்புக்குப் பிறகு, வாராந்திர வருகைப் பதிவுகள் இணையதளங்கள் அல்லது அறிவிப்புப் பலகைகள் மூலமாகவோ அல்லது மாதாந்திர குறைபாடு அறிவிப்புகள் மாணவர்களுக்கும் அவரது பெற்றோர் / பாதுகாவலர்களுக்கும் தெரிவித்தல்; ஆரம்பகட்ட நடவடிக்கை, ஆலோசனை மற்றும் கூடுதல் வகுப்புகள், வீட்டுப் பணிகள் அல்லது சட்ட உதவிப் பணி போன்ற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வாய்ப்புகள் வழங்குதல் வேண்டும். மருத்துவ அல்லது மனநலப் பிரச்சினைகள் அல்லது சிரமங்களைப் பதிவு செய்தல் மற்றும் அறிவிப்பு மற்றும் தரப்பு நியாயத்தை சொல்வதற்கான வாய்ப்பு வழங்குதல் போன்ற சில நடைமுறைப் படிநிலைகளை வருகை  அடிப்படையில் தேர்வு மறுப்புக்கு முன் கடைப்பிடிக்க வேண்டும். நியாயம் என்பது இறுதி முடிவுக்கு முன் முன்னறிவிப்பு மற்றும் பதிலளிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திருத்தும் முயற்சிகளுக்குப் பிறகும் ஒரு மாணவர் தேவையான வருகையைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் தேர்வு எழுதத் தடை செய்யப்படலாம் என்று உத்தரவிடப்பட்டது. 


இதன் தாக்கங்கள் என்னென்ன?


இந்தத் தாக்கங்கள் நிறுவன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கற்பித்தல் ரீதியாகவும் உள்ளன. பல்கலைக்கழகங்கள் ஆதரவான சூழல்களை வளர்க்க வேண்டும், ஆலோசனையை ஒருங்கிணைக்க வேண்டும் மற்றும் மாணவர் பிரதிநிதித்துவத்துடன் குறை தீர்க்கும் குழுக்களை நிறுவ வேண்டும். விலக்குதல் (Debarment) என்பது இனி முறையற்றதாகவோ அல்லது தானாகவோ இருக்க முடியாது. அவை நியாயமானதாகவும் மற்றும் பிரதிநிதித்துவத்துக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். வழக்கு ஒத்திகைகள், பயிற்சிகள், ஆராய்ச்சி அல்லது சட்ட உதவிப் பணிகள் மூலம் அனுபவமிக்க கற்றல் ஈடுபாட்டிற்காகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். வருகைப்பதிவு என்பது கண்டிப்புக் காட்டுவதாக இல்லாமல், பங்கேற்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். மேலும்,  தேசிய கல்விக் கொள்கையைக் (National Education Policy-2020) கருத்தில் கொண்டு இந்திய வழக்குரைஞர் மன்றம், விதி 12-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. எந்தவொரு சட்டக் கல்லூரியும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைவிட கடுமையான விதிமுறைகளை விதிக்கக்கூடாது என்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.


சுஷாந்த் ரோஹில்லா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, உயர் கல்வி நிர்வாகத்தை அரசியலமைப்பு விழுமியங்களுடன் சீரமைப்பதில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.


ஆசிரியர், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.



Original article:

Share:

இந்தியாவிற்கு ஊட்டச்சத்து மாற்றம் தேவையா? -ஷாம்பவி நாயக்

 செயல்மிகு உணவுகள் (Functional Foods) மற்றும் திறன்மிகு புரதங்கள் (Smart Proteins) என்றால் என்ன? ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது ஏன் அவசியம்? வணிக ரீதியான முறையில் வளர்க்கப்பட்ட  கோழியை (cultivated chicken) அங்கீகரித்த முதல் நாடு எது? திறன்மிகு புரத சுற்றுச்சூழல் அமைப்பு (Smart Protein Ecosystem) எவ்வாறு செயல்படுகிறது? 'ஆய்வக உணவு' (lab-food) பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்வது?"


உணவு மற்றும் ஊட்டச்சத்துடனான சமூகத்தின் தொடர்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த மாற்றம் செயல்பாட்டு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.


செயல்மிகு உணவுகள் என்றால் என்ன?


செயல்மிகு உணவுகள் என்பவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது நோயைத் தடுக்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவுகள் ஆகும். உதாரணத்திற்கு, வைட்டமின் செறிவூட்டப்பட்ட அரிசி அல்லது ஒமேகா-3 சத்து சேர்க்கப்பட்ட பால் போன்றவற்றைக் குறிப்பிடலாம். செயல்பாட்டு உணவுகள், ஊட்டச்சத்து மரபியல் (nutrigenomics) (ஊட்டச்சத்து மரபணுக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய ஆய்வு), உயிரி-செறிவூட்டல் (bio-fortification), 3D உணவு அச்சிடுதல் (3D food printing), மற்றும் உயிரி செயலாக்கம் (bioprocessing) போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.


திறன்மிகு புரதங்கள் என்பவை, பாரம்பரிய உற்பத்தி முறையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்குடன் உயிரித் தொழில்நுட்பத்தைப் (biotechnology) பயன்படுத்திப் பெறப்படும் புரதங்களைக் குறிக்கின்றன. இவற்றில் தாவர அடிப்படையிலான புரதங்கள் (பருப்பு வகைகள், தானியங்கள் அல்லது எண்ணெய் விதைகளிலிருந்து மறுசீரமைக்கப்பட்ட சாறுகள் விலங்கு இறைச்சி மற்றும் பால் பொருட்களைப் பிரதிபலிக்கின்றன). நொதித்தல் மூலம் பெறப்பட்ட புரதங்கள் (நுண்ணுயிர் அமைப்புகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன).  வளர்க்கப்பட்ட இறைச்சி (cultivated meat) (உயிர்வதைச் செய்யாமல் உயிரி உலைகளில் வளர்க்கப்படும் விலங்கு செல்கள்) ஆகியனவாகும்


இந்தியாவிற்கு அவை ஏன் தேவை?


இந்தியாவின் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் சீரற்றதாகவே உள்ளது. இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வளர்ச்சிக் குன்றியவர்களாக உள்ளனர். மேலும், பெரியவர்களுக்கான புரத உட்கொள்ளல் மேம்பட்டிருந்தாலும், நகர்ப்புறம்-ஊரகப்புறம் என்கிற அடிப்படையில் இன்னும் வேறுபாடு நீடிக்கிறது. பொருளாதாரம் வளர்ந்து, குடும்ப வருமானம் அதிகரிக்கும் போது, ​​உணவின் மீதான சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வெறும் பசியாற்றுவதிலிருந்து உண்மையிலேயே ஊட்டமளிப்பதாக மாறுகிறது. இந்த மாற்றம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் கொள்கையில் ஒரு மறுசீரமைப்பைக் கோருகிறது. ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி இலக்குகளை பூர்த்தி செய்ய புரதங்கள், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் (Antioxidants) மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை வழங்குகிறது.


இந்த ஊட்டச்சத்து மாற்றத்தை அடைவதில் உள்ள சவால் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்துவதாகும். சுற்றுச்சூழல் சீரழிவை மோசமாக்காமல் அல்லது காலநிலை மாற்ற தாக்கங்களை ஆழப்படுத்தாமல் இந்தியா உணவு உற்பத்தி முறைகளை அளவிட வேண்டும். எனவே, மீள்தன்மை கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் காலநிலை உணர்வுள்ள உணவு அமைப்பை உருவாக்குவது என்பது நாட்டின் மிகமுக்கியமான கொள்கை அவசியங்களில் ஒன்றாக இருக்குகிறது. செயல்பாட்டு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் நடைமுறைக்கு ஏற்ற மற்றும் அளவிடக்கூடிய தீர்வை வழங்கும் பல முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  அவை இயற்கை உணவுகளை கூடுதலாக வழங்குவதன் மூலமாகவும் உற்பத்தி செயல்முறையை மறுவடிவமைப்பதன் மூலமாகவும் தினசரி உட்கொள்ளும் உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகின்றன.


இன்று இந்தியா எந்த நிலையில் உள்ளது?


செயல்மிகு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் என்பது இந்தியாவின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம் (BioE3) கொள்கையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கருப்பொருள் பகுதிகளாகும். உயிரித்தொழில்நுட்பவியல் துறை (Department of Biotechnology (DBT)) மற்றும் அதன் பொதுத்துறையான உயிரித்தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவி கூட்டமைப்பு (Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) ஆகியவை இந்தத் திட்டம் சார்ந்த நிதியுதவித்  திட்டங்களைத் தொடங்கியுள்ளன.


செயல்மிகு உணவுத் துறையில், விஞ்ஞானிகள் துத்தநாகம் செறிவூட்டப்பட்ட அரிசி (IIRR, ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டது) மற்றும் இரும்புச்சத்து நிறைந்த கம்பு (சர்வதேச வறண்ட வெப்பமண்டலப் பகுதிகளுக்கான பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து) போன்ற உயிரி-செறிவூட்டப்பட்ட பயிர்களை உருவாக்கி வருகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் - டாடா நுகர்வோர் தயாரிப்புகள், ஐடிசி மற்றும் மாரிகோ - செறிவூட்டப்பட்ட பிரதான உணவுகள் மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவு வகைகளில் முதலீடு செய்து வருகின்றன. திறன்மிகு புரத சுற்றுச்சூழல் அமைப்பும் வளர்ந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட திறன்மிகு புரத தயாரிப்பு நிறுவனங்களால் 377-பொருட்கள் (இறைச்சி, முட்டை அல்லது பால்) விற்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குட் டாட் (GoodDot), ப்ளூ ட்ரைப் ஃபுட்ஸ் (Blue Tribe Foods)  மற்றும் ஈவோ ஃபுட்ஸ் (Evo Foods) போன்ற தொடக்க நிறுவனங்கள் தாவர அடிப்படையிலான இறைச்சி மற்றும் முட்டை மாற்றுகளை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. 2024-ஆம் ஆண்டில், சைடஸ் லைஃப் சயின்சஸ் (Zydus LifeSciences) ஸ்டெர்லிங் பயோடெக்கில் 50 சதவீதப் பங்குகளை வாங்கியது. இது நொதித்தல் அடிப்படையிலான புரதப் பிரிவில் அந்நிறுவனம் அடியெடுத்து வைப்பதைக்  குறிக்கிறது. வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்த ஆராய்ச்சிக்காக உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology) உயிரித்தொழில்நுட்பவியல் துறையிடமிருந்து 4.5 கோடி ரூபாய் அளவிலான  மானியத்தைப் பெற்றுள்ளது.


இந்தியாவில் இவ்விரண்டு பிரிவுகளும் வளர்ந்து வந்தாலும், பல இடைவெளிகள் உள்ளன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஒழுங்குமுறைத் தெளிவு இல்லாமை குறிப்பிடப்படுகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) வளர்க்கப்பட்ட இறைச்சி அல்லது துல்லியமான நொதித்தல் புரதங்கள் போன்ற புதிய ஆய்வகரீதியான உணவுகளுக்கு உறுதியான வழிகாட்டுதலை இன்னும் வெளியிடவில்லை. பெரிய அளவிலான நொதித்தல், தரச் சான்றிதழ் மற்றும் நுகர்வோர் சோதனைக்கான உள்கட்டமைப்பு குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


மற்ற நாடுகள் எப்படிச் செயல்படுகின்றன?


1980-ஆம் ஆண்டுகளில், செயல்மிகு உணவுகளின் கருத்தை முதலில் முன்வைத்து, அதன் ஒழுங்குமுறைக்கான கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடாக ஜப்பான் இருந்தது. மறுபுறம், திறன்மிகு புரதங்கள் மிகவும் புதுமையான உணவு வகையாகும். 2020-ஆம் ஆண்டில், வளர்க்கப்பட்ட கோழியின் வணிக விற்பனையை அங்கீகரித்த முதல் நாடாக சிங்கப்பூர் இருந்தது. சீனா அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுப் புரதங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தனது "பண்ணையிலிருந்து முட்கரண்டிக்கு" (Farm to Fork) என்ற உத்தியின் மூலம் நிலையான புரத உற்பத்தியில் அதிக முதலீடு செய்து வருகிறது.


முன்னோக்கிச் செல்லும் வழி என்னவாக இருக்க வேண்டும்?


சுகாதார முன்னணியில், செயல்மிகு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் ஆகியவை இந்தியாவின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு முக்கியப் பங்களிப்பாளர்களாக இருக்கும். பொருளாதாரரீதியாக, உலகளாவிய தாவர அடிப்படையிலான உணவுச் சந்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 85 பில்லியன் டாலர் (ஸ்விட்சர்லாந்து ஒன்றிய வங்கியின் படி  (Union Bank of Switzerland)) முதல் 240 பில்லியன் டாலர் (ஸ்விட்சர்லாந்து கடன் வங்கியின்படி (Credit Suisse)) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வலுவான வேளாண் அடிப்படை மற்றும் விரிவடைந்து வரும் உயிரித்தொழில்நுட்பத் துறையுடன் இந்தியா ஒரு முக்கிய வழங்குநராக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், இந்தத் தொழில்கள் இந்தியாவில் வேளாண்மை, உற்பத்தி மற்றும் தளவாடங்கள் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். சுற்றுச்சூழல் ரீதியாக, உயிரி அடிப்படையிலான புரத உற்பத்திக்கு மாறுவது கார்பன் வெளியேற்றத்தை, நிலச் சீரழிவை மற்றும் நீர் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இருப்பினும், இந்தியா புதுமைகளில் பின்தங்கியிருக்கும் அல்லது சரிபார்க்கப்படாத, தவறாக பெயரிடப்பட்ட தயாரிப்புகளின் மிகுதியான வருகையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. உயிரி உற்பத்திக்கு மாறுவது வேளாண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பெரிய அளவிலான பணியாளர் திறன் மேம்பாட்டைக் கோரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், மோசமான செயல்படுத்தல் முறை ஒரு சில பெரிய நிறுவனங்களிடையே வணிகச் சக்தியைக் குவிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுமக்களின் கருத்து மற்றொரு சவாலாக உள்ளது. மேலும், “ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட” உணவு குறித்த சந்தேகம் வெளிப்படையான தகவல்தொடர்பு மற்றும் பொது நம்பிக்கையின் மூலம் மட்டுமே சமாளிக்க வாய்ப்புள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்  (Food Safety and Standards Authority of India (FSSAI)) கீழ் உள்ள புதிய உணவுகளுக்கான தேசிய ஒழுங்குமுறை கட்டமைப்பு செயல்பாட்டு மற்றும் மாற்று புரத தயாரிப்புகளுக்கான வரையறைகள், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் குறியிடுதல் குறித்து தெளிவான வழிமுறைகளை வழங்க வேண்டும் என்கின்றனர். ஒருங்கிணைந்த கொள்கை ஆதரவை உறுதிசெய்ய அமைச்சகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது.  உயிரி உற்பத்தி உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், துல்லியமான நொதித்தல் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கவும் பொது-தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சி அவசியமாகிறது.  இறுதியாக, உயிரி தொழில்நுட்பத்தின் நன்மைகள் சமூகம் முழுவதும் சென்றடைய உறுதி செய்வதற்கு பொதுக் கல்வி மற்றும் புதிய மதிப்புச் சங்கிலிகளில் வேளாண் தொழிலாளர்களைச் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது.


ஷாம்பவி நாயக் தக்ஷஷிலா (Takshashila) நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கை அமைப்பின் தலைவராகவும், கிளவுட் கிரேட் (CloudKrate) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.



Original article:

Share:

ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, AI 171 விமான விபத்து அறிக்கையை வெளியிடுங்கள். -கேப்டன் ஏ. ரங்கநாதன்

 ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டு நிகழந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்தின் உண்மையான விவரங்களை இந்தியா தெரிந்து கொள்ள வேண்டும்.


 2025ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்த 241 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானமானது சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டதில் 240 பயணிகள் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்த கட்டிடப் பகுதிகளில் இருந்த பத்தொன்பது நபர்கள் உயிரிழந்தனர். வணிக விமானப் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போயிங் 787 ட்ரீம்லைனர் (Boeing 787 Dreamliner)   விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறை. பல்வேறு விமான நிறுவனங்களுடன் 1,175-க்கும் மேற்பட்ட மேற்பட்ட ட்ரீம்லைனர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரம் இயக்கப்படுகின்றன. இந்த விபத்துக்குப் பிறகு, ட்ரீம்லைனர்கள் புறப்படும் போது ஒரு இயந்திரம் கூட பழுதடையாமல் இரண்டு மில்லியன் மணிநேரங்களுக்கும் அதிகமான மணிநேரம் பறந்துள்ளன. விமானப் போக்குவரத்து வரலாற்றில், விமானம் புறப்படும் போது இரண்டு இயந்திரங்களும் பழுதடைவது மிகவும் அரிதான நிகழ்வாகும். நவம்பர் 4-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு UPS MD-11 விபத்து, இயந்திரப் பிரிப்பு காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வாகும். இந்த விபத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board (NTSB)) விளக்கங்களுடன் தொடர்புடைய தகவல்களை தினசரி வெளியிட்டது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்று விமர்சிக்கின்றனர்.


விபத்துக்குப் பிறகு, மின்னணு ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் ஒருவித அச்சத்தை உருவாக்கவும், போயிங் 787 ரக விமானத்தின் பாதுகாப்புத் தரங்களை கேள்விக்குள்ளாக்கவும் தவறான கோட்பாடுகளைப் பரப்பி வருகின்றனர். உண்மையிலிருந்து திசைதிருப்பும் ஒரு பிரச்சாரமே பரப்பப்படுகிறது. மேலும், இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation (MoCA)), இறுதி விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவதன் மூலம் அவர்களின் கைகளில் ஒரு ஆயுதத்தை கொடுத்துவிட்டது. விபத்து நடந்த மறுநாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறியாதவது, விரைவில் ஒரு “வெளிப்படையான” அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து விமான விபத்து அறிக்கைகளைப் போலவே இந்த விபத்து குறித்த அறிக்கையும் நடைமுறையில் காணாமல் போனதுபோல ஆகிவிட்டது என்கின்றனர்.


காலவரிசை: விபத்து 2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் நடந்தது. ஆசிய செய்தி சர்வதேச நிறுவனம் வெளியிட்ட (Asian News International (ANI)) அறிக்கையின்படி, விமான பதிவிகளில் (flight recorders) ஒன்று ஜூன் 13-ஆம் தேதி விமானம் மோதிய கட்டிடத்தின் மாடியில் இருந்து மீட்கப்பட்டது. இரண்டாவது விமான பதிவி ஜூன் 16-ஆம் தேதி கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. டெல்லியில் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வகம் (Aircraft Accident Investigation Bureau (AAIB)) ஆய்வகம் ஜூன் 25-ஆம் தேதிக்குள் தரவைப் பதிவிறக்கம் செய்து விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இந்த அறிக்கை தெளிவற்றதாகதாகவும், தரப்பட்ட பதில்களைவிட அதிக கேள்விகளை உருவாக்கியதாகவும் இருந்தது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


'அச்சுறுத்தல் உணர்வு', ஒரு மர்மமான உத்தரவு


உளவுத்துறையால் அடையாளம் காணப்பட்ட அச்சுறுத்தல் குறித்த தகவலின் அடிப்படையில், இந்திய விமான விபத்து விசாரணைப் பிரிவின் தலைவருக்கு 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் ‘X வகை கமாண்டோ பாதுகாப்பை’ வழங்குவதற்கான உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) உத்தரவு பலரின் கவனத்தை ஈர்க்காத  ஒன்றாகும். இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் 1973-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB)), இங்கிலாந்தின் விமான விபத்து விசாரணைகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். ஆனால், ஒரு விபத்து புலனாய்வாளருக்குக் கமாண்டோ பாதுகாப்பு தேவைப்படுவதை இப்போது தான் முதல்முறை கேள்விப்படுவதாகத் தெரிவித்தார். இந்த உத்தரவு, முதல் விமானப் பதிவுக்கருவி மீட்கப்பட்ட வெறும் மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமக்களுக்கு வெளியிடப்படாத சில உண்மைகள் உள்துறை அமைச்சகத்திற்கும்  விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தெரிந்திருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.




விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளிப்படையாகத் தகவல்களை வெளியிட்டிருந்தால், சுற்றித் திரியும் விசித்திரமான கோட்பாடுகள் மற்றும் ஊகங்களைத் தவிர்த்திருக்கலாம். புறப்படுவதற்கான ஓடுதளத்தில் விமானம் ஓடத் தொடங்கியதில் இருந்து விபத்து நடக்கும் நேரம் வரை, நடந்த வெறும் ஒரு நிமிடம் 40 விநாடிகள் ஓடிய ஏஐ 171 விமானத்தின் காக்பிட் குரல் பதிவுக் கருவியின் (Cockpit Voice Recorder (CVR)) பதிவுகளை நேரடியாக வெளியிட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்கின்றனர். விபத்து குறித்து வெளியான முதற்கட்ட அறிக்கையில் உள்ள, விமானிகளுக்கு இடையேயான உரையாடலில் இருந்து எடுக்கப்பட்ட, “நீ ஏன் அதைச் செய்தாய்... நான் அதைச் செய்யவில்லை” என்ற ஒரு மர்மமான வாக்கியம், அத்தனை ஊகங்களுக்கும் வழிவகுத்தது.


தரவு என்ன காண்பிக்கும்?


முதற்கட்ட அறிக்கையிலிருந்து, துணை விமானி (Copilot) விமானத்தை இயக்கும் விமானியாகவும் (Pilot Flying) தலைமை விமானி (Captain) விமானத்தைக் கண்காணிக்கும் விமானியாகவும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஏர் இந்தியா நடைமுறையின்படி, விமானம் புறப்படும் முடிவு வேகம் அடையும் வரை கேப்டன் உந்துதல் நெம்புகோல்களைக் (thrust levers) கையாள வேண்டும். துணை விமானி கட்டுப்பாடுகளைக் கையாளுகிறார். இந்த வேகத்தின் அழைப்பில் (தானியங்கி அழைப்பு), கேப்டன் தனது கைகளை உந்துதல் நெம்புகோல்களிலிருந்து எடுத்துவிடுவார். முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், காக்பிட் குரல் பதிவுக் கருவியில் பின்வரும் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்: 155 kts சுழற்சி வேகத்தில் (அறிக்கையில் 08:08:35), அழைப்பு 'சுழற்று' என்று இருந்திருக்க வேண்டும். விமானம் தரையிலிருந்து கிளம்பியது (lift-off) என்று 08:08:39 மணிக்கு இருந்ததாகவும், உயரமானி (altimeter) உயரத்தில் அதிகரிப்பைக் காட்டும்போது 'நேர்மறை விகித அழைப்பு' இருந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அழைப்பு கண்காணிக்கும் விமானியான, கேப்டனால் செய்யப்படும். முதற்கட்ட அறிக்கை, எண்.1 எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் மற்றும் எண்.2 எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் இரண்டு வினாடிகளில் ஒன்றன் பின் ஒன்றாக கட்-ஆஃப் (‘Cut-off) நிலைக்கு மாற்றப்பட்டன என்று கூறுகிறது. இது விமான இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துகிறது - எரிபொருள் நிறுத்தும் குழாய்கள் (fuel shut off valves)) மூடப்படும் மற்றும் எரிபொருள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.

விமானப் பயணத்தில் ஒரு முக்கியமான விதி என்னவென்றால், ஒரு பெரிய அவசரநிலை ஏற்பட்டால், துணை விமானியிடமிருந்து கட்டுப்பாட்டை கேப்டன்தான் ஏற்க வேண்டும், துணை விமானி மீண்டும் விமான கண்காணிப்புப் பணிகளுக்குத் திரும்பி, கேப்டன் அழைக்கும் வழக்கத்திற்கு மாறான சரிபார்ப்புப் பட்டியலைச் செயல்படுத்த வேண்டும். AI 171 விபத்தில், 08:08:44 மணிக்கு கேப்டனின் உடனடி அழைப்பு - இரண்டு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டபோது - "கட்டுப்பாடுகள் என்னுடையவை" என்றும், துணை விமானியின் உடனடி பதில் "கட்டுப்பாடுகள் உங்களுடையவை" என்றும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த அழைப்புகள் காக்பிட் குரல் பதிவுக் கருவியில் பதிவு செய்யப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது. விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB)) தனது குழுவில் அனுபவம் வாய்ந்த போயிங் 787 பரிசோதகர் விமானியைக் கொண்டுள்ளது. கட்டாய அழைப்புகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், அனுபவம் வாய்ந்த போயிங் 787 தேர்வாளர் விமானி (examiner pilot) இதை அடையாளம் கண்டிருப்பார். அப்படியானால், 'மின்சார செயலிழப்பு' அல்லது 'மென்பொருள் செயலிழப்பு' (சமூக ஊடகங்களில் கோட்பாடுகள் மற்றும் ஊகங்கள்) காரணமாக இயந்திரங்கள் பழுதடைந்தன என்ற ஊகங்கள் விபத்துக்கான ஒரு காரணியாகக் கருதப்படலாம். போயிங் 787-விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மென்பொருள் அல்லது மின்சக்தி கோளாறு காரணமாக நகர முடியாது. அவை ஸ்பிரிங்-லோடட் சுவிட்சுகள், அவற்றை 'ரன் (Run)' கேட்டிலிருந்து உயர்த்தி, பின்னோக்கி நகர்த்திவிட வேண்டும்.  'கட்-ஆஃப்' கேட்டில் விட வேண்டும். இயந்திரங்களை மீண்டும் இயக்க 'ரன்' நோக்கி நகரும் போது, ​​'கட்-ஆஃப்' கேட்டை, முன்னோக்கி நகர்த்தி, 'ரன்' கேட்டில் விடுவது போன்ற அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். டிஜிட்டல் விமான தரவுப் பதிவி (Digital Flight Data Recorder (DFDR)), அதே போல் காக்பிட் குரல் பதிவுக் கருவியின் ஒலிவாங்கி (இது காக்பிட்டில் உள்ள அனைத்து சுற்றுப்புற ஒலிகளையும் பதிவு செய்யும்) இதை தெளிவாகப் பதிவு செய்யும் என்கின்றனர். போயிங் 787 பரிசோதகர் இதை அறிந்திருப்பார், காக்பிட் குரல் பதிவுக் கருவியின் பதிவுகளைக் கேட்டிருப்பார்.


டிஜிட்டல் விமான தரவுப் பதிவி (Digital Flight Data Recorder (DFDR)) ஒவ்வொரு கட்டுப்பாட்டுக் காலத்தின் இயக்கத்தையும் கட்டுப்பாட்டு விலகல்களையும் பதிவு செய்திருக்கும். புறப்படும்போது மற்றும் இயந்திர செயலிழப்புகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகளை யார் கையாண்டார்கள் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும். வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், காக்பிட் கருவிப்  பலகையில்  எந்த அமைப்புகள் வேலை செய்யும் மற்றும் எந்த அமைப்புகள் வேலை செய்யாது என்பதுதான். மின்கலன் மற்றும் ராம் ஏர் டர்பைன் ((Ram Air Turbine - (RAT)) ஆகியவற்றிலிருந்து வரும் குறைந்த அளவிலான மின்சாரம், கேப்டனின் கருவிகள் பலகம் மற்றும் இயந்திர தீ பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, துணை விமானியின் முன் உள்ள கருவி பலகை செயலிழந்து (blank) போகிறது. துணை விமானியின் முன் தகவல் எதுவும் இல்லாததால், கேப்டன் உடனடியாக கட்டுப்பாடுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேப்டன் கட்டுப்பாடுகளை எடுத்துக்கொண்டார் என்பதை காக்பிட் குரல் பதிவுக்கருவி (Cockpit Voice Recorder - CVR) உறுதிப்படுத்தாவிட்டால், உண்மை நிலை மிகவும் தெளிவாகத் தெரிந்துவிடும். விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவின் (Air Accidents Investigation Branch (AAIB)) தலைவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை புலனாய்வு அமைச்சகம் கருதியதற்கான காரணம் இதுதானா என்கிற கேள்வி எழுகிறது. 


ஏற்படும் சேதம்


உண்மைகளை அடையாளம் கண்டு வெளிப்படையான அறிக்கையை வெளியிட 100 நாட்களுக்கு மேல் ஆகாது. இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஏற்கனவே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. ஒரு விபத்து அறிக்கையை மறைப்பதன் மூலம், அது இந்தக் கருத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும் என்கின்றனர். அமெரிகவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (National Transportation Safety Board (NTSB)), இங்கலாந்தின் விமான விபத்து விசாரணை பிரிவு (Air Accidents Investigation Branch (AAIB) -U.K. மற்றும் போயிங் ஆகியவை DFDR மற்றும் CVR பதிவுகளைப் பற்றி அறிந்திருக்கின்றன. அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் (U.S Federal Aviation Administration) மற்றும் மற்றும் போயிங் 787 விமானம் இயக்கப்படும் நாடுகளில் உள்ள விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள் அனைத்தும் விமானத்தை அங்கீகரித்துள்ளன. விபத்துக்குக் காரணம் 'மின்னியல்/மென்பொருள் பிரச்சினை' என்ற எண்ணத்தை மாதிரி விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். அமைச்சகம் இதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு விமானிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, விமானி அறையில் முழுமையாகப் பணியில் ஈடுபாட முடியாமல் இந்தக் கோளாறுகளால் ஏற்படும்  ஆபத்துகளை எதிர்பார்த்து மனதில் மூழ்கி இருப்பதற்கான அபாயம் இருக்கிறது என்கின்றனர். 


கேப்டன் ஏ. (மோகன்) ரங்கநாதன் ஒரு முன்னாள் விமானப் பயிற்சியாளர் விமானி மற்றும் விமானப் பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். அவர் இந்தியாவின் சிவில் விமானப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (Civil Aviation Safety Advisory Council (CASAC)) முன்னாள் உறுப்பினரும் ஆவார்.



Original article:

Share:

அதிக வெளிப்படைத்தன்மை : இந்தியா மற்றும் வனவிலங்கு மேலாண்மை பற்றி. . .

 வனவிலங்கு மேலாண்மையில் (management of wildlife) உலகளாவிய நம்பிக்கையை இந்தியா வீணாக்கக்கூடாது.


செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (Special Investigation Team (SIT)) குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வனதாரா திட்டம் (Vantara project) குறித்து ஒரு அறிக்கையை வழங்கியது. இந்தத் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்காவாகும். மற்ற நாடுகளிலிருந்து வனவிலங்குகளை வாங்கும்போது மிருகக்காட்சிசாலை அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றியதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறியது. 30,000-க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பராமரிக்க தேவையான அனுமதிகள் மற்றும் சரியான வசதிகள் அதற்கு இருந்தன. எனவே, அதன் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு விமர்சனமும் அல்லது சந்தேகமும் முற்றிலும் "நியாயமற்றது" என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது. இதற்கான முழு அறிக்கையையும் மக்களுக்கு வெளியிடவேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்து, அதன் உத்தரவில் முக்கிய கருத்துகணிப்புகளுடன் ஒரு சுருக்கத்தை மட்டுமே உள்ளடக்கியது. ஒரு உலகளாவிய அமைப்பு சில கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு, ஆபத்தான விலங்குகளை இறக்குமதி செய்ய உயிரியல் பூங்காக்களை அனுமதிக்கும் அனுமதிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இந்தியாவின் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச வனவிலங்கு இயக்கம் குறித்த மிகவும் செல்வாக்கு மிக்க ஒப்பந்தமான அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த மாநாடு (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES)) குழு ஜாம்நகருக்குச் சென்ற பிறகு இது நிகழ்ந்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உடனேயே இந்த வருகை நடைபெற்றது. அதன் விரிவான, பொதுவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரியவரும் தகவல்களின்படி, அனுமதிகள், விலங்குகளின் கொள்முதல், ஜாம்நகரில் உள்ள வசதிகள் ஆகிய அதே பிரச்சினைகளையே விசாரணை செய்தது. CITES குழுவும் வனதாராவின் உள்கட்டமைப்பு மற்றும் விலங்கு பராமரிப்புக்கான நிபுணத்துவத்தைப் பாராட்டியது. அனுமதிகள் தொடர்பான அதன் கருத்துகள் இந்தியாவின் வனவிலங்கு மேலாண்மை முறைமைமீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன, வனதாரா மீது அல்ல.

பல விலங்கு பரிமாற்றங்களுடன் கூடிய அனுமதி குறியீடுகள் ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஏற்பாட்டை எப்போதும் துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்ற கருத்துகணிப்புகளிலிருந்து குழுவின் சந்தேகங்கள் எழுந்தன. எடுத்துக்காட்டாக, செக் குடியரசு பல விலங்குகளை வனதாராவின் கொள்முதல் பிரிவுகளுக்கு "விற்றதாக" கூறியது. ஆனால் வனதாரா இது ஒரு விற்பனை அல்ல என்று மறுத்து, காப்பீடு மற்றும் போக்குவரத்து போன்ற தொடர்புடைய செலவுகளுக்கு மட்டுமே பணம் செலுத்துவதாகக் கூறியது. இந்திய சட்டங்கள் அதன் உயிரியல் பூங்காக்கள் வணிக ரீதியாக விலங்குகளை வாங்க அனுமதிக்காததால் இந்த வேறுபாடு முக்கியமானது. சர்வதேச மாநாடான CITES -ன் முதன்மை நோக்கம் விலங்கு கடத்தலைத் தடுப்பதாகும், மேலும் அமலாக்க அதிகாரங்கள் இல்லாத நிலையில், நாடுகள் தங்கள் வனவிலங்கு சட்டங்களில் காசோலைகளைச் செயல்படுத்தி இணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சைட்ஸ் (CITES) எல்லை தாண்டிய வணிக பரிவர்த்தனைகளைத் தடுக்காது, மாறாக அவை சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் நகர்த்தப்படும் விலங்குகளின் சரியான தடமறியலுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துகிறது. பல சந்தர்ப்பங்களில், குழு இந்தியாவின் அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான தடமறிதலை விசாரிக்க மற்ற நாடுகளின் சக அதிகாரிகளுடன் மேலும் தீவிரமாக பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும் இதே போன்ற கவனிப்புகளைச் செய்திருக்கிறதா என்பது ஊகத்திற்குரிய விஷயம். வெளிப்படைத்தன்மை இல்லாமை மட்டுமே இந்தியாவின் வனவிலங்கு மேலாண்மையில் உலகளாவிய நம்பிக்கையைக் குறைக்கிறது மற்றும் மிக முக்கியமான உயிர்க்கோளங்களுக்கு தாயகமாக இருப்பதால், அது தவிர்க்க முடியாத புகழ் இழப்பாகும்.



Original article:

Share:

நிரூபிக்கும் சுமை : இந்தியா மற்றும் தேர்தல் நேர்மை குறித்து . . .

 வாக்காளர்களின் தேர்வு மட்டுமே இரகசியமானது, அவர்கள் வாக்களித்தார்களா இல்லையா என்பது அல்ல.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தல் நேர்மை குறித்து அவரது கருத்துக்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறைந்தபட்சம், இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் ஒரு குழப்பத்தில் உள்ளன என்பதை அவரது பகுப்பாய்வு நிரூபித்துள்ளது. இதை, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று கூறுகிறது. அதில் ஒரு தொழில்முறை ஆய்வாளர்கள் குழுவின் ஆதரவுடன் ராகுல் காந்தி, ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் "போலி" (fake) என்று கூறினார். அதாவது, இந்த வாக்குகள் ‘இல்லாதவை’ அல்லது ‘நகல் வாக்குகள்’ என்று அவர் கூறினார். 2024 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த ஹரியானாவில் ஒவ்வொரு 8 வாக்காளர்களில் ஒருவர் போலியானவர் என்று கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் கணக்கீடுகளின்படி, மாநிலத்தில் 5.21 லட்சம் போலி வாக்காளர்களும் 93,174 செல்லாத வாக்காளர்களும் இருந்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் மங்கலான அல்லது போலி புகைப்படங்களைக் கொண்ட 1,24,177 வாக்காளர்கள் இருப்பதாக அவர் கூறினார். இந்த கூற்றை நிரூபிக்க, பிற உண்மைகளுடன், ஹரியானாவில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் 22 முறை இடம்பெற்ற பிரேசிலிய மாடல் ஒருவரின் புகைப்படத்தை அவர் மேற்கோள் காட்டினார். முன்னதாக, மொத்தமாக வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் இருந்தன. இது பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வாய்ப்புகளை அதிகரித்ததாகவும், எதிர்க்கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இதில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


தனது தற்காப்பு எதிர்வினையில், ECI சில தொழில்நுட்ப வாதங்களை வைத்தது, ஆனால் அவை காங்கிரஸ் குற்றச்சாட்டுகளின் தகுதி எதுவாக இருந்தாலும் சரி, சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவில்லை. வாக்காளர் பட்டியல்கள் தொடர்பான புகார்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும், மற்ற புகார்கள் தேர்தல் மனுக்கள் மூலம் வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட இந்த வாதம் நடைமுறை ரீதியாக சரியாகத் தோன்றலாம். ஆனால், அத்தகைய நிலைப்பாடு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்கொள்ளும் கடுமையான நம்பிக்கையின்மையைக் குறைக்காது. காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் மோசடிக்கான உறுதியான ஆதாரங்கள் அல்ல, இருப்பினும் அவை நிச்சயமாக முறையான தோல்வியை நிரூபிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் தற்காப்பு எதிர்வினையும், தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் காங்கிரஸின் கூற்றுகளை பொதுமக்களுக்கு மிகவும் நம்பக்கூடியதாகத் தோன்றச் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் பல முறை இடம்பெறும் நபர்கள் உண்மையில் பல முறை வாக்களிக்கவில்லை என்பதை நிரூபிக்க சிறந்த வழி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் செய்யப்பட்ட பதிவை ஒளிபரப்புவதாகும். வாக்காளர் தனியுரிமை மற்றும் இரகசியத்தை மேற்கோள் காட்டி இதை நியாயப்படுத்துகிறது. இருப்பினும், தேர்தல் ஆணையம் காணொலி காட்சிகள், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் பிற தேர்தல் விவரங்களை அணுகுவதில் கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை மட்டுமே கொண்டுள்ளது. வாக்காளர் தனியுரிமை மற்றும் ரகசியத்தை மேற்கோள் காட்டி இதை நியாயப்படுத்துகிறது. உண்மையில், வாக்கு மட்டுமே ரகசியமாக இருக்க வேண்டும். வாக்காளர்களின் அடையாளங்களும் உண்மையில் யார் வாக்களித்தார்கள் என்ற பதிவும் பொதுமக்களுக்குத் வெளிப்படையாக தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கையை வளர்ப்பதற்கான சிறந்த வழி, வாக்காளரின் தேர்வை மட்டும் ரகசியமாக வைத்துக்கொண்டு அனைத்து தகவல்களையும் பொதுவில் வெளியிடுவதாகும்.



Original article:

Share:

விளையாட்டுகளில் திராவிட நெறிமுறையை செயல்படுத்துதல் -உதயநிதி ஸ்டாலின்

 தமிழ்நாடு அரசு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால், விளையாட்டு வீரர்கள் (athletes) மற்றும் இணை-தடகள விளையாட்டு வீரர்களுக்கு (para-athletes) மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதிக பதக்கங்களும் ஆதரவும் கிடைத்துள்ளன.


தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையுடனான (Tamil Nadu Champions Foundation) எனது பயணத்தில், எண்ணற்ற மற்றும் ஊக்கமளிக்கும் விளையாட்டு வீரர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரரான மனோஜின் கதை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் தமிழ்நாடு சிறுதொழில் கழக லிமிடெட் (Tamil Nadu Small Industries Corporation Limited (TANSI)) நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவரிடம் அபரிமிதமான திறமை இருந்தது. ஆனால், சரியான தளம் இல்லாததால் அவர் கவனிக்கப்படாமல் போனார்.



அப்போதுதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அத்தகைய திறமையாளர்களை அடையாளம் காண முதல்வர் அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அறக்கட்டளை மூலம் மனோஜுக்கு நிதி உதவி வழங்கினோம். இன்று, அந்த இளைஞர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். வாக்குறுதியளித்தபடி, விளையாட்டு வீரர்களின் வெற்றிகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். இப்போது, அவருக்கு 3 சதவீத விளையாட்டுத்துறை இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பாதுகாப்பான அரசு வேலை கிடைத்துள்ளது.


கொள்கை மற்றும் நடைமுறையில்


திராவிட ஆட்சி மாதிரியை உருவாக்கிய சித்தாந்த தலைவர்கள், பொது வளங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு சமூகத்தை கற்பனை செய்தனர். விளையாட்டுகளில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வசதிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதைத் தடுக்கும் தடைகளை நீக்குவதே இதன் பொருள். நமது ஆட்சி "எல்லாருக்கும் எல்லாம்" (Ellarukkum Ellam) என்ற பழமொழியைப் பிரதிபலிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, ​​விளையாட்டுக்கான ஒரு தெளிவான திட்டத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். திறமையை முன்கூட்டியே கண்டறிதல், மாநிலம் முழுவதும் விளையாட்டு வசதிகளை உருவாக்குதல், விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதரவை வழங்குதல் மற்றும் தாமதமின்றி அவர்களின் வெற்றிக்கு வெகுமதி அளித்தல் போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும். தமிழ்நாட்டில், இந்தத் தொலைநோக்குப் பார்வை, முன்னெப்போதும் இல்லாத வகையில் உண்மையான விளையாட்டுக் கொள்கைகளாகவும், செயல்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களும் மற்றும் அதன் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. இந்தியாவின் 89 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 34 பேரையும், 2 உலக செஸ் சாம்பியன்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. உலகளவில், இது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் 4 இணை ஒலிம்பிக் (பாராலிம்பிக்) பதக்கம் வென்றவர்களையும், 12 ஒலிம்பிக் வீரர்களையும் கொண்டாடியுள்ளது. இதில் 6 பேர் தடகள மற்றும் களப் போட்டிகளில் அடங்குவர். ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Asian Games), தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 விளையாட்டு வீரர்கள் இந்தியா 28 பதக்கங்களை வெல்ல உதவினார்கள். அதே நேரத்தில், ஹாங்சோ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Hangzhou Para Asian Games), அதன் 18 விளையாட்டு வீரர்கள் 15 பதக்கங்களை வென்றனர். கேலோ இணை விளையாட்டுப் போட்டிகளில் (Khelo Para Games), தமிழ்நாட்டின் பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 42-ல் இருந்து 2025-ல் 74 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களின் எண்ணிக்கை 2023-ல் 77 ஆக இருந்தது 2025-ல் 92 ஆக உயர்ந்தது. இது 20% உயர்வைக் காட்டுகிறது. 2016 முதல் 2021 வரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu) சுமார் ₹800 கோடியை முதலீடு செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தற்போதைய நிர்வாகம் இதை ₹1,945 கோடியாக முதல்லீட்டை உயர்த்தியுள்ளது. இது முதலீட்டில் 143% அதிகரிப்பைக் காட்டுகிறது.


2021 முதல், பல்வகை-விளையாட்டு மாவட்ட மையங்கள் (multi-sport district centres), ஒலிம்பிக் நிறுவனங்கள் (Olympic academies), உயரமான விளையாட்டுப் பயிற்சி மையம் (high-altitude training facilities), ஆறு நகரங்களில் செயற்கை தடங்கள் (synthetic tracks in six towns), சர்வதேச தரத்திலான ஹாக்கி புல்வெளிகள் (international-standard hockey turfs), மிதிவண்டி ஓட்டுவதற்கான அரங்கு (a velodrom) மற்றும் நவீன உட்புற அரங்கங்கள் (modern indoor arenas) உட்பட 28 புதிய விளையாட்டு வளாகங்களை நாங்கள் கட்டியுள்ளோம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பழைய மைதானங்களை நாங்கள் மேம்படுத்தினோம். படிப்படியாகத் திட்டமிடப்பட்ட திட்டங்களின்கீழ், மாநிலம் முழுவதும் 75 தொகுதிகளில் சிறிய விளையாட்டு அரங்கங்கள் (mini stadia) மற்றும் உடற்தகுதி கொண்ட தமிழ்நாட்டை ஊக்குவிக்க நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் (modern gyms) இருக்கும். கிட்டத்தட்ட 60% திட்டங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளன. கலைஞர் விளையாட்டு கருவிகள் திட்டம் (Kalaignar Sports Kit Scheme) ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அனைத்து நகர்ப்புறங்களுக்கும் கிரிக்கெட் மட்டை, கைப்பந்து வலைகள், கபடி பாய்கள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் (gym gear) உள்ளிட்ட 33 வகையான விளையாட்டு கருவிகளை வழங்குகிறது. எங்கள் உள்கட்டமைப்பு திட்டத்தில் துணை-விளையாட்டுகளையும் ஆதரிக்கிறோம். 11 மாவட்டங்களில் அணுகக்கூடிய அரங்கங்களை உருவாக்கி வருகிறோம். மேலும், புதிய மைதானங்களில் தடையற்ற அம்சங்களைச் சேர்க்கிறோம்.

தரவு சார்ந்ததாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்காக தடகள ஆதரவுத் திட்டங்களை (athlete support programmes) நாங்கள் புதுப்பித்துள்ளோம். நாங்கள் பதவியேற்றபோது, ​​ELITE திட்டத்தின் மூலம் 12 விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஆண்டுக்கு நிதியுதவி பெற்றனர். இன்று, சதுரங்க வல்லுநர்களான ஆர். பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் உட்பட 50 சிறந்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிக்காக ஆண்டுக்கு ₹30 லட்சம் பெறுகின்றனர். மிஷன் சர்வதேச பதக்கங்கள் திட்டத்தின் (Mission International Medal Scheme) கீழ், ஆதரிக்கப்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 48-லிருந்து 125-ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் சர்வதேச தகுதி பெற ஆண்டுதோறும் ₹12 லட்சம் வழங்கப்படுகிறது. சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme) 20 வயதுக்குட்பட்ட 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ₹4 லட்சம் உதவித்தொகையுடன் ஆதரவளிக்கிறது.


பொறுப்புடைமைக்கான ஒரு அமைப்பு


ஒலிம்பிக் வீரர்கள் (Olympians) மற்றும் முன்னனி விளையாட்டு வீரர்களின் (sports scientists) உயர்மட்டக் குழுவானது, விளையாட்டு வீரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கிறது. அவர்கள் தெளிவான செயல்திறன் தரநிலைகளை அமைத்து அவற்றை முன்கூட்டியே பகிர்ந்து கொள்கிறார்கள். இணை-தடகள வீரர்களும் அதே அளவிலான ஆதரவையும் ஊக்கத்தொகையையும் பெறுகிறார்கள். 2021 முதல், 4,617 விளையாட்டு வீரர்களுக்கு ₹152 கோடி மதிப்புள்ள ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பத்தாண்டுகாலத்தில் வழங்கப்பட்ட ₹38 கோடியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தங்கத்திற்கு ₹3 கோடியாகவும், வெள்ளிக்கு ₹2 கோடியாகவும், வெண்கலத்திற்கு ₹1 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் விளையாட்டு நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக வழங்கப்படுகிறது. மின்-விளையாட்டு (e-sports) மற்றும் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் (traditional games) உட்பட அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுகளை (Chief Minister’s Trophy games) அறிமுகப்படுத்தினோம். 2023-ல் 4.57 லட்சமாக இருந்த பதிவுகள் 2025-ல் 16.28 லட்சமாக அதிகரித்துள்ளன. இது, ஒவ்வொரு விளையாட்டு வீரரின் சுயவிவரத்தையும் கண்காணிக்கும் ஒரு பிரத்யேக விளையாட்டு மேலாண்மை அமைப்பால் (Games Management System) ஆதரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், போட்டிகள் மூலம் சுமார் 4,000 இளைஞர்களை நாங்கள் அடையாளம் கண்டு, அவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu (SDAT)) விளையாட்டு விடுதிகள், சிறப்பு மையங்கள் மற்றும் STAR நிறுவனங்களில் (STAR academies) சேர்க்கிறோம். வெளிப்படையான இணையவழிப் பதிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திறமையை தேடுதல் ஆகியவை பின்னணி அல்லது இருப்பிடம் காரணமாக எந்த தகுதியான விளையாட்டு வீரரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.


எங்கள் ஆட்சியின் கீழ், விளையாட்டு வீரர்களுக்கு உயிர்நாடியாக இருந்த அரசு வேலைகளுக்கான 3% விளையாட்டுத்துறை சார்பாக இடஒதுக்கீடு புத்துயிர் பெற்றுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் கீழ் மூன்று விளையாட்டு வீரர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், எங்கள் ஆட்சியின் கீழ், 109 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை செய்துள்ளோம்.


முன்னர் பிரதான விளையாட்டுகளில் இருந்து விலக்கப்பட்டிருந்த சமூகங்கள் இப்போது தமிழ்நாட்டின் வெற்றிக் கதையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள உயர் செயல்திறன் டென்னிஸ் (high-performance tennis facility) வசதியில், கிராமப்புற பெண்கள் பயிற்சி மற்றும் போட்டியிட புதிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். எனவே, 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுகளில் (Khelo India Games) தமிழ்நாட்டுப் பெண்கள் டென்னிஸில் மொத்தமுள்ள நான்கு தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினர்.


முக்கியப் போட்டிகளை நடத்துவது தமிழ்நாட்டை விளையாட்டு சுற்றுலாவின் மையமாக நிலைநிறுத்துகிறது. 2022-ம் ஆண்டில், மதிப்புமிக்க 44-வது செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டியை நடத்திய முதல் இந்திய நகரமாக சென்னை ஆனது. இந்தப் போட்டி 186 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஒன்றுகூடி, சுமார் ₹110 கோடி பட்ஜெட்டில் நடத்தப்பட்டன. அதன் பிறகு, மாநிலம் ஸ்குவாஷ் உலகக் கோப்பை (Squash World Cup), ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை (Asian Hockey Champions Trophy), உலக சர்ஃப் லீக் (World Surf League), ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (Asian Junior Athletics Championships), பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) மற்றும் டென்னிஸ் நிபுணர்கள் சங்கம் (ATP) டென்னிஸ் போட்டிகள் மற்றும் இந்தியாவின் முதல் ஃபார்முலா-4 தெரு இரவுப் பந்தயம் (Formula-4 street night race) போன்ற பல நிகழ்வுகளை நடத்தியது.


எதிர்காலத்தை நோக்கி


நாங்கள் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தையும் (Tamil Nadu Centre for Sports Science) அமைத்துள்ளோம், தடகள மேலாண்மைக்கான டிஜிட்டல் தளங்களில் முதலீடு செய்துள்ளோம். மேலும், பயோமெக்கானிக்ஸ், ஊட்டச்சத்து மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அடுத்த கட்டத்தில், சென்னையில் ஒரு உலகளாவிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவோம். நமது விளையாட்டு அறிவியல் வசதிகளை விரிவுபடுத்துவோம், நமது துணை-விளையாட்டு திட்டங்களை வலுப்படுத்துவோம்.


விளையாட்டுகள் வெறும் ஆட்டங்கள் மட்டுமல்ல; அவை சமூகப் பொறியியலின் கருவிகளும் கூட. பகுத்தறிவுவாத மற்றும் சமூக நீதி இயக்கங்களை உருவாக்கிய மாநிலத்தில், விளையாட்டுக்கான திராவிட மாதிரியை உருவாக்குவது மட்டுமே பொருத்தமானது. நமது வெற்றி பதக்கங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குழந்தைகளின் விரிந்த புன்னகைகளிலும் அளவிடப்படுகிறது.


உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வர்.



Original article:

Share: