இந்தியா கேட் பகுதியில் நடந்த போராட்டம், மாசுபாடு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மீண்டும் வெளிக் கொண்டுவருகிறது. -கண்ணன் கே

 இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. ஆனால், அரசாங்கம் பொதுப் போக்குவரத்தை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் ஊக்குவிக்கிறது? சுத்தமான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை (sustainable transit system) அளவிடுவதில் என்ன சவால்கள் உள்ளன மற்றும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம்?


நமது நாட்டின் தலைநகரில் மோசமடைந்துவரும் காற்றின் தரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தினர். இது நகரத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை ஈர்த்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன உமிழ்வு உள்ளிட்ட பல காரணிகளால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிக்கிறது வருகிறது.


இந்தியா போன்ற நாட்டில், நகர்ப்புற மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் பயனுள்ள பொதுப் போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. இந்த அவசரம் உலக பொதுப் போக்குவரத்து நாளின் கருப்பொருளான "சமூகங்களை இணைத்தல், உமிழ்வுகளை குறைத்தல்" (Connecting Communities, Reducing Emissions) என்ற கருப்பொருளில் எதிரொலிக்கிறது. இது தனியார் வாகனங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க, கூட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.


சர்வதேச பொதுப் போக்குவரத்து சங்கத்தின் (International Association of Public Transport (UITP)) தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று உலக பொதுப் போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது. உலக பொதுப் போக்குவரத்து தினம், அனைவருக்கும் நிலையான, திறமையான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நாளில், இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு, அதனை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பரந்த தாக்கங்கள் ஆகியவற்றை ஆராய்வது முக்கியமானதாக இருக்கும்.


விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதன் தாக்கம்


இந்தியா உலகில் வேகமாக நகரமயமாகி வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 60 கோடி பேர்) 2036-க்குள் நகரங்கள் மற்றும் நகரப்புறங்களில் வாழ்வார்கள் என்று உலகவங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தகைய விரைவான நகரமயமாக்கல் உள்கட்டமைப்பு, நீர்வளங்கள் மற்றும் காற்றின் தரம் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஒரு முக்கிய கவலையாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நகர்ப்புற மாற்றத்தை திறம்பட கையாள்வது 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை அடைவதற்கு முக்கியமானதாக இருக்கும்.


பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நிலையான வளர்ச்சி இலக்கு (Sustainable Development Goal) 11-ஐ அடைவதற்கும் வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது முக்கியம். குறிப்பாக இலக்கு 11.2, அனைவருக்கும் பாதுகாப்பான, குறைவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நிலைத்த போக்குவரத்து அமைப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.


எனவே, பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாக மட்டும் கருதாமல், நகர்ப்புற மாற்றத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சாத்தியமாக்கும் கொள்கைக் கருவியாகப் பார்க்க வேண்டும்.


பொதுப் போக்குவரத்து அமைப்புகளின் முக்கியத்துவம்


நன்கு திட்டமிடப்பட்ட, அணுகக்கூடிய மற்றும் குறைவான நகர்ப்புற பொதுப் போக்குவரத்து வலையமைப்பை நிறுவுவது பல சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது:


சமூக-பொருளாதார நன்மைகள்: முதலாவதாக, பொதுப் போக்குவரத்து, குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வேலை வாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை குறைவானதாகவும், எளிதாகவும் அணுக உதவுவதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைக்க உதவுகிறது.


இரண்டாவதாக, இது தனியார் வாகனங்களின் மீதான சார்புநிலையை குறைக்க உதவுகிறது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, எரிபொருள், நேரம், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் சுகாதாரச் செலவுகளில் கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கிறது.


மூன்றாவதாக, இது பொதுப் போக்குவரத்து மையங்களைச் சுற்றி வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளை ஒன்றிணைப்பதை ஆதரிக்கும் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக் கொள்கையை (Transit-Oriented Development (TOD)) எளிதாக்குகிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள்: தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நபரால் உற்பத்தி செய்யும் பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gas) வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், பொதுப் போக்குவரத்தை நம்பியிருப்பது காற்றின் தரத்தை மேம்படுத்தும் துகள் பொருள் (PM 2.5) மற்றும் புகைமூட்டத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.


பொதுப் போக்குவரத்து, வரையறுக்கப்பட்ட நகர்ப்புற இடத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. விரிவான வாகன நிறுத்துமிடங்களுக்கான தேவையைக் குறைக்கிறது மற்றும் சாலை விரிவாக்கத்தையும் குறைக்கிறது. அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு வலுவான போக்குவரத்து அமைப்பை விரைவாக மாற்றியமைக்க முடியும். எடுத்துக்காட்டாக, மாசுக் கட்டுப்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதல் பயணங்களைச் சேர்க்க டெல்லி மெட்ரோவின் சமீபத்திய முடிவு, பொதுப் போக்குவரத்து எவ்வாறு ஒரு பயனுள்ள எதிர்வினை வழிமுறையாகச் செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.


இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள முயற்சிகளை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது.


நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சிகள்


பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பின்வருவன அடங்கும்:


ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)): 2005-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் நகர்ப்புற நவீனமயமாக்கலுக்கான (urban modernisation) பெரிய அளவிலான தேசிய முயற்சியாகும். இந்தத்திட்டத்தில் தூய்மையான நகர்ப்புற போக்குவரத்து ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இது நகரங்கள் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதி வழங்கியது. அவற்றில் கணிசமான பகுதி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவால் (Compressed Natural Gas-powered) இயக்கப்படும் பேருந்துகளாகவும், ஹைப்ரிட்-மின்சார மற்றும் முழு மின்சார பேருந்துகளாகவும் இருந்தன.


தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை (National Urban Transport Policy (NUTP)): 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பில்லியன் கணக்கான மணிநேரங்களை இழப்பதன் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது மற்றும் வாகனத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறுவதையும், பொதுப் போக்குவரத்திற்கும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முன்னுரிமை அளிப்பதையும் ஆதரிக்கிறது. இந்தத் திட்டம் 'பாதுகாப்பான, மலிவு, விரைவான, வசதியான, நம்பகமான மற்றும் நிலையான  நகர்ப்புற பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


FAME I மற்றும் II (மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்தல்): இந்தத் திட்டங்கள், டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளால் மாற்றுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவதன்மூலம் பொதுப் போக்குவரத்தின் கார்பன் நீக்கத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம் நகர்ப்புற உமிழ்வு மற்றும் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய உதவுகிறன. இந்தத் திட்டங்கள் மின்னேற்ற உள்கட்டமைப்பை (charging infrastructure) அளவிடுவதன் மூலம் பொது போக்குவரத்து இயக்குநர்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவின.


பொலிவுறு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission): 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை ஆதரிக்கிறது. இதில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (Intelligent Transport Management Systems (ITMS)) மற்றும் 'ஒரே நாடு, ஒரே அட்டை' அமைப்பு ஆகியவை அடங்கும். இது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (National Common Mobility Card (NCMC)) எனப்படும் ஒற்றை அட்டை மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்திற்கு பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.


மீதமுள்ள சவால்கள் என்ன?


இருப்பினும், இந்தியாவில் தூய்மையான பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்துவது தனித்துவமான சவால்களுடன் வருகிறது. முதலாவதாக, மெட்ரோ வலையமைப்புகள் மற்றும் விரிவான பேருந்துக் குழுக்கள் போன்ற பெரிய அளவிலான பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க மூலதன முதலீடு தேவைப்படுகிறது.


மேலும், பல மாநில சாலை போக்குவரத்து கழகங்கள் (State Road Transport Undertakings (SRTUs)) தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும், அவற்றின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகளை நம்பியிருப்பதாலும், இத்தகைய திட்டங்களின் நிதி நிலைத்தன்மை நிச்சயமற்றதாகவே உள்ளன.

இரண்டாவதாக, மெட்ரோ நிர்வாகம், மாநகராட்சிகள் மற்றும் சாலை போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், தொடர்ச்சியின்மை மற்றும் கடைசி-மைல் இணைப்பு இடைவெளிகள் ஏற்படுகின்றன.


இறுதியாக, கொள்கைகளில் உள்கட்டமைப்பு சார்பு தெளிவாக உள்ளது. இவை பெரும்பாலும் மேம்பாலங்கள், உயர்த்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சாலை-அகலப்படுத்தும் திட்டங்கள் மூலம் தனியார் வாகனங்களை இடமளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளன. இது பெரும்பாலும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பேருந்துகளுக்கான சிறப்புப் பாதைகள் உள்கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திறமையான பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது.


இதன் விளைவாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பது காற்று மாசுபாட்டின் மோசமடைந்து வரும் பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தலைநகருக்குள் BS-III மற்றும் BS-IV வாகனங்கள் நுழைவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை இது அவசியமாக்கியுள்ளது.


முன்னோக்கிச் செல்லும் வழி


மலிவான, அணுகக்கூடிய மற்றும் நன்கு இணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த கொள்கை தலையீடுகள் தேவைப்படும். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தில் (Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)) கற்பனை செய்யப்பட்டபடி அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையங்களை (Unified Metropolitan Transport Authorities (UMTAs) அமைப்பது, அனைத்து நகர போக்குவரத்தையும் ஒன்றிணைத்து, பல்வேறு வகையான போக்குவரத்தில் சிறந்த திட்டமிடலை உறுதி செய்யும்.


குறிப்பாக, வாகனம் அல்லாத போக்குவரத்திற்கும் (Non-Motorised Transport (NMT)) முறைகள் வழியாக முதல் மற்றும் கடைசி-மைல் இணைப்பில் உள்ள இடைவெளிகளை நீக்குவதில் கவனம் செலுத்தும் கொள்கைகள் தடையற்ற பயண அனுபவத்தை உறுதிப்படுத்த உதவும். மேலும், நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த, சிங்கப்பூர், மிலன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்புகளைக் கொண்ட நகரங்களில் காணப்படுவது போல் வரி அல்லது நெரிசல் வரிகளின் (congestion taxes) வகைகளை விதித்தல் போன்ற புதுமையான பொறிமுறைகள் பொதுப் போக்குவரத்து வளர்ச்சிக்கு நேரடியாக நிதியளிக்க கருத்தில் கொள்ளப்படலாம்.


மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவிகளின் பயன்பாடு மாறும் வழித்தட திட்டமிடல் மற்றும் நிகழ்நேர வாகனக் கண்காணிப்பை செயல்படுத்த முடியும். இது பொதுப் போக்குவரத்தை மிகவும் திறமையாகவும் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் மாற்ற உதவும்.


குறைவான விலையில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் நுட்பத்தை தாண்டி, நடத்தை மாற்றங்களைக் கொண்டுவர நீடித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிகவும் முக்கியமானவை. பொதுப் போக்குவரத்து மற்றும் வாகனம் அல்லாத போக்குவரத்து முறைகளுக்கு மாறுவதால் கிடைக்கும் பொருளாதார, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து குடிமக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.


உதாரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க்கில் இலவச பேருந்து பயணச்சீட்டுகளுக்காக பிரச்சாரம் செய்தார். இது வாக்காளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. பணக்கார நாடுகளில்கூட குறைவான விலையில் பொதுப் போக்குவரத்து தேவைப்படுவதை இது காட்டுகிறது.


இந்தியாவின் வேகமாக வளரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டுடன், நன்கு திட்டமிடப்பட்ட, திறமையான பொது போக்குவரத்து வலையமைப்பு இனி விருப்பத்தேர்வாக இல்லை. அது மாறாக ஏதேனும் வெற்றிகரமான இந்திய நகரத்திற்கு பேச்சுவார்த்தைக்குட்படாத முன்நிபந்தனையாகவும், இந்தியாவின் நிலையான, சமநீதியான மற்றும் திறமையான நகரமயமாக்கலுக்கான முன்னேற்றத்தின் முக்கிய தீர்மானகரமாகவும் இருக்கும்.



Original article:

Share:

இந்து முறைப்படி நடந்த பட்டியல் பழங்குடியினத் தம்பதியரின் திருமணத்தை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் டெல்லி உயர் நீதிமன்றம் அங்கீகரித்தது. -அமால் ஷேக்

 உயர் நீதிமன்றமும் குடும்ப நீதிமன்றமும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் “இந்துமயமாகிவிட்டதா” என்பதைக் குறித்து ஆலோசிக்கவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக் கொண்டன.


இந்தியாவில் உள்ள பட்டியல் பழங்குடி (Scheduled Tribe) சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையேயான திருமணம், இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி நடத்தப்பட்டால், அது 1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (Hindu Marriage Act (HMA)) வரம்பிற்கு உட்பட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 4-ஆம் தேதி தீர்ப்பளித்தது.


"புனித நெருப்பை வணங்குதல், மாங்கல்யம் மற்றும் மெட்டி அணிதல், மற்றும் சப்தபதி (ஏழு அடிகள்) ஆகிய அத்தியாவசிய இந்து சடங்குகளை நடத்தியது, இந்தத் திருமணம் இந்து சடங்குகளின் அனைத்து அடையாளங்களையும் தாங்கி நிற்கிறது என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது" என்று நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.


  இந்து திருமணச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் மூலம் இந்த வழக்கு எழுந்தது. பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் பழங்குடி வழக்கச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்குப் இந்து திருமணச் சட்டம் பொருந்தாது என்றும் கணவர் தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கணவனும் மனைவியும் உண்மையில் இந்து வழக்கங்களின்படி திருமணம் செய்து கொண்டனர் என்ற குடும்ப நீதிமன்றத்தின் கருத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


பழங்குடியினரை நிர்வகிக்கும் சட்டங்கள் யாவை?


இந்து, பௌத்த, சமண மற்றும் சீக்கியர்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் இந்து வாரிசு சட்டம், 1956 மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்களில் குறியிடப்பட்டுள்ளன. ஆனால் சட்டத்தின் பிரிவு 2(2), “இந்த சட்டத்தில் எதுவும் எந்த அட்டவணை இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் பொருந்தாது…மத்திய அரசு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் அறிவித்தால் தவிர” ஒரு தெளிவான விதிவிலக்கை உருவாக்குகிறது. லம்பாடா (பஞ்சாரா) சமூகத்திற்கு இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


இதன் பொருள் என்னவென்றால், இந்தப் பழங்குடிச் சமூகத்தின் உறுப்பினர்கள் அவர்களின் சொந்த பழக்கவழக்கங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அவை, உள்ளூர் சார்ந்தவை மற்றும் குறியிடப்படாதவை. இருப்பினும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 3-ஆனது "வழக்கம்" என்பதை, "நீண்ட காலமாகத் தொடர்ந்து மற்றும் ஒரே சீராகக் கடைப்பிடிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட உள்ளூர் பகுதி, பழங்குடி, சமூகம், குழு அல்லது குடும்பத்தில் இந்துக்களிடையே சட்டத்தின் சக்தியைப் பெற்றுள்ள" ஒன்றாக அங்கீகரிக்கிறது. வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும், அது ஊகிக்கப்பட முடியாது என்பதால், தெளிவான சான்றுகளால் வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.


இந்த வழக்கில் சான்றுகளை நிரூபிக்க வேண்டியதன் சுமை முக்கியமானது.


இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினை, இந்து திருமணச் சட்டத்தின்கீழ் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவின் நிலைத்தன்மையைச் சுற்றி வந்தாலும், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் திருமணம் இந்து திருமணச் சட்டத்தின்கீழ் முறைப்படி நடத்தப்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆலோசிக்க வேண்டியிருந்தது.


இந்துமுறைத்  திருமணமாக எப்படிக் கருதப்படுகிறது?


ஒரு இந்து திருமணம் "ஏதாவது ஒரு தரப்பினரின் வழக்கமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி" நடத்தப்படலாம் என்பதை இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு-7 அங்கீகரிக்கிறது. அத்தகைய சடங்குகளில் "சப்தபதி" அல்லது புனித நெருப்பைச் சுற்றி ஏழு அடிகள் எடுத்து வைப்பது ஆகியவை அடங்கும். ஏழாவது அடி எடுத்து வைக்கப்பட்டவுடன் திருமணம் நிறைவுபெறுகிறது.


"இச்சட்டம் சப்தபதிக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகிறது, ஆனால் இது ஒவ்வொரு இந்து திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கும் கட்டாயமாக்கவில்லை" என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7-ன் நோக்கம் "இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இந்து சமூகங்களிடையே கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, மதிப்பது மற்றும் பாதுகாப்பதாகும்" என்று கூறப்பட்டுள்ளது. 


"அத்தகைய பழக்கவழக்கங்கள் பழமையானவை, உறுதியானவை, தொடர்ச்சியானவை மற்றும் சீரான முறையில் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் ஒரு திருமணத்தின் அத்தகைய செல்லுபடியாகும் தன்மை, சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளைப் பொறுத்தது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


நீதிமன்றங்கள் குறிப்பட்டவை என்ன?


குடும்ப நீதிமன்றத்தின் கருத்துக்களை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இரு நீதிமன்றங்களும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் "இந்துமாயமாகிவிட்டதா" (Hinduised) என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை. மாறாக,  குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா இல்லையா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக்கொண்டன.


நீதிமன்றங்கள் தங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையே பெரிதும் நம்பியிருந்தன. கணவர் தனது திருமணப் படங்கள் திருமணத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டவை என்று வாதிட்டாலும், புகைப்படங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அந்தக் கூற்றை ஆதரிக்கும்படியாக எந்த ஆதாரமும் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் "நிகழ்தகவுகளின் பெரும்பான்மையை" (preponderance of probabilities) அடிப்படையாகக் கொண்டு, புகைப்படங்கள் உண்மையான திருமண சடங்குகளைப் பிரதிபலிக்கின்றன என்றும் நீதிமன்றங்கள் குறிப்பிட்டன.


மனுதாரர்கள் இந்து மதத்திற்கு மாறவில்லை என்ற மேல்முறையீட்டாளரின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மேல்முறையீட்டாளர் லம்பாடா சமூகத்தின் பழக்கவழக்கங்களின்படி திருமணம் நடத்தப்பட்டதாக பிரமாணப் பத்திரத்திலோ அல்லது குறுக்கு விசாரணையிலோ கணிசமாகக் காட்டவில்லை அல்லது நிராகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.


இந்து திருமணச் சட்டத்தின் (பிரிவு 2(2)-ன் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை விலக்குவது அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே என்றும் அவர்கள் தாங்களாகவே இந்து நடைமுறைகளைப் பின்பற்றும்போது குறியிடப்பட்ட சட்டப் பாதுகாப்புகளை அணுகுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது அல்ல என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 


மேலும், அந்தத் தம்பதியினர் கல்வி கற்றவர்கள், பாரம்பரிய பழங்குடி குடியிருப்புகளுக்கு வெளியே வசித்தவர்கள், மற்றும் சமூகரீதியாக ஒருங்கிணைந்தவர்களாகத் தோன்றியவர்கள் என்றும் அமர்வு குறிப்பிட்டது. இந்தக் காரணிகள் அவர்களின் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டது என்ற முடிவை ஆதரிக்கும் வகையில் இருந்தன என்றும் குறிப்பிட்டது.




உச்சநீதிமன்றத்தின் முன்மாதிரி தீர்ப்பு 


இரண்டு நீதிமன்றங்களும், லபீஷ்வர் மஞ்சி எதிர். பிரான் மஞ்சி (2000) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டின. தாங்களாகவே முன்வந்து இந்து மதச்சடங்குகளைப் பின்பற்றும் பட்டியல் பழங்குடியினரைச்  சேர்ந்தவர்கள் இந்து சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு, ஒரு ‘சந்தால்’ இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்திலிருந்து எழுந்தது.  இறந்து போன அந்த ஆணின் மனைவிக்கு வழங்கிய சொத்துக்களை எதிர்த்து, சந்தால் பழங்குடிச் சட்டத்தின்படி, பெண்கள் சொத்துரிமை பெற முடியாது என்று இறந்த ஆணின் உறவினர்  ஒருவர் வாதிட்டார். 


அதற்குப் பிறகு, விசாரணை நீதிமன்றமும் முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும், அக்குடும்பம் ஏற்கெனவே "சிரார்த்தம்" மற்றும் "பிண்டம்" போன்ற சடங்குகளைச் செய்தல், இந்துப் பெயர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கைம்பெண் கடைமைகளைக் கடைப்பிடித்தல் போன்ற இந்து நடைமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் கண்டறிந்தன. “இந்த வழக்கில் எழும் கேள்வி என்னவென்றால், சந்தால் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தரப்பினர் இன்னும் தங்கள் வழக்கமான மரபுகளைத் தொடர்கிறார்களா அல்லது இந்து மயமாக்கப்பட்ட பிறகு இந்துக்களால் பின்பற்றப்படும் வழக்கங்களுக்கு மாற்றிக்கொண்டார்களா…. இந்து வாரிசு சட்டத்தின் பிரிவு 2-இன் உட்பிரிவு 2 இந்தத் தரப்பினரை அந்தச் சட்டத்தின் பொருந்துதலில் இருந்து விலக்குவதாகக் கருத முடியாது.” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பிரிவு 14-ன் கீழ் அந்தக் கைம்பெண் முழுமையான உரிமையாளராவார் என்றும், அவரது சொத்துரிமை செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



Original article:

Share:

பணப் பரிமாற்றத் திட்டங்கள் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் எவ்வாறு உதவுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கியக் குறிப்புகள்:


—"பணம் மற்றும் பொருள்" பரிமாற்றங்களுக்குப் பல நேர்மறையான விளைவுகள் உள்ளன. இலவச உணவுத் திட்டம் பல குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவியது என்பதையும், நேரடித் தலையீடுகள் பலனளிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வேளாண் தொழிலாளர்ளுக்கு நேரடியாகப் பணம் மூலமாகவோ அல்லது மானியங்கள் மூலமாகவோ வழங்கப்படும் உதவிகளுக்கும் இது பொருந்தும்.


— மூன்று பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒன்று, இத்தகைய பரிமாற்றங்கள் நேரடிப் பொருளாதார மற்றும் சமூகப் பலனை வழங்குகின்றனவா; இரண்டு, அவை நிதிச் சமன்பாட்டைப் பாதிக்கின்றனவா; மற்றும் மூன்று, அரசின் பங்களிப்பு பற்றிய சித்தாந்தம்.


— இந்தப் பணப் பரிமாற்றத் திட்டங்கள் கிட்டத்தட்ட 10 கோடி (100 மில்லியன்) பெண்களை உள்ளடக்கியுள்ளன. இது அவர்களைத் தங்கள் கணவர்களைக் குறைவாகச் சார்ந்திருக்கச் செய்து அதிகாரமளித்துள்ளது. இது அவர்கள் பணத்தை அர்த்தமுள்ளதாகச் செலவிட உதவுகிறது. மேலும், இது குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.”


— “இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மூலம்  பெண்களுக்கென்று பாதுகாப்பான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகுவது எளிதாகிறது. மடிக்கணினிகள், மிதிவண்டிகள் அல்லது தையல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டங்கள் சிறந்த கல்வி அல்லது வேலைவாய்ப்புக்கான வழிகளை வழங்குவதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. எனவே, 'பணம் மற்றும் பொருள்' பரிமாற்றங்கள், அவை சரியாக வழிநடத்தப்பட்டால் இந்தத் திட்டங்கள் சரியானவையே.”


— "அரசாங்கங்கள் இத்தகைய வழிகளில் அதிகமாகச் செலவழித்து, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்குக் குறைவாகச் செலவழிக்கும்போது, இந்த செயல்முறையைத் தக்கவைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. இங்கே, நிதிப் பொறுப்பு மற்றும் வரவுசெலவுத் திட்ட மேலாண்மைச் சட்டம், நிதி ஒழுக்கத்தை உறுதி செய்கிறது. ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது செலவு மற்றும் வளர்ச்சிக்கான செலவீனங்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இத்தகைய நிபந்தனையற்ற பண அல்லது பொருள் பரிமாற்றங்கள், ஒரு உள்கட்டமைப்புத் திட்டத்தை விடச் சிறந்ததா என்பதே இங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது."


— "இது நம்மை அரசின் பங்கிற்கு இட்டுச் செல்கிறது. அதன் பங்கு நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதாகும். மேலும், இலவச உணவுத் திட்டம் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எவ்வாறு பயனளித்ததோ, அதுபோலவே பணம் வழங்குவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நேரடி வழியாகவே கருதப்படுகிறது. மாநிலங்களும் மூலதனச் செலவினங்களுக்காக (capex) நிதிகளை ஒதுக்கி வருகின்றன. ஆனால், சில சமயங்களில், நிதி இலக்குகளை அடைய இவை குறைக்கப்பட்டுள்ளன. இது, சமூகத்தில் குறைந்த சலுகை பெற்றவர்களை வறுமை நிலைக்கு மேலே வைத்திருப்பதற்கான செலவாகக் கருதப்படுகிறது."


— “நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கிய திட்டங்கள் பொது நன்மைக்குப் பங்களிக்கின்றன. இருப்பினும், நீண்டகாலத்திற்கு, அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை." 


உங்களுக்குத் தெரியுமா?


— அகராதியில் ‘இலவசம்’ (freebie) என்ற சொல், எந்தச் செலவும் இன்றி வழங்கப்படும் அல்லது விநியோகிக்கப்படும் ஒரு பொருள் அல்லது சேவையைக் குறிக்கிறது. ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், 'இலவசங்கள்' என்ற சொல்லுக்கு எந்தச் செலவும் இல்லாமல் வழங்கப்படும் ஒரு பொது நலத் திட்டமென்கிற  வரையறையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


— இலவசங்களை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது அல்லது தகுதிவாய்ந்த பொருட்களிலிருந்தும், பரந்த மற்றும் நீடித்த நன்மைகளைத் தரும் பிற அரசுச் செலவினங்களிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. இருப்பினும்கூட, பெரும்பாலும் 'தகுதிவாய்ந்த' பொருட்கள் என்று குறிப்பிடப்படும் நலத்திட்டப் பொருட்களுக்கும், இலவசங்கள் அல்லது 'தகுதியற்ற' தயாரிப்புகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.


— இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்கப்படும் உணவு, கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவம், சுகாதாரம் போன்ற தகுதிவாய்ந்த பொருட்களின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவை மனித மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும், அதன்மூலம் தேசியப் பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.



Original article:

Share:

வங்காளத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்படுகிறார்கள். மத்திய அரசு உடனடியாக MNREGA -வை மீண்டும் தொடங்க வேண்டும். -மிருணாளினி பால்

 

MNREGA :  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் -  Mahatma Gandhi National Rural Employment Guarantee Act


நீதித்துறை இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) செயல்படுத்துவது குறித்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை (இந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்டது) எதிர்த்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 26, 2025 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 275 லட்சம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்து, மத்திய அரசை மாநிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் தொடங்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். நவம்பர் 7 அன்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவை மீண்டும் வலியுறுத்தியது. 2022 ஆம் ஆண்டு முதல், மாநில அளவிலான ஊழல் என்று கூறி மத்திய அரசு நிதியை முழுமையாகத் தடை செய்ததால்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் துன்புற்று வந்தனர். தனது உத்தரவில் உயர் நீதிமன்றம் தெளிவாகக் கூறியது: குற்றச்சாட்டுகளான ஊழல் விசாரணைகளை மத்திய அரசு தொடர்வதற்கு சுதந்திரம் உண்டு, ஆனால் அதனால் கிராமப்புற ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது. திட்டத்தின் கீழ் வேலை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது. இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி வேலையை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக, ஜூலை 31 அன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்ததால் எதுவும் மாறவில்லை.


இதற்கிடையில், வங்காள மொழி பேசும் மக்கள் என்பதால், வங்காள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்த பல கவலைக்குரிய கதைகள் செய்திகளில் வெளிவந்துள்ளன. குருகிராமில், வங்காள மொழி பேசும் மக்களின் பெரிய குழுக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தை மீண்டும் நியாயமற்ற முறையில் குறிவைத்ததற்காக பாஜக அரசாங்கத்தை விமர்சித்தார். மேலும், ஷ்ரமஸ்ரீ (Shramashree) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வங்காளத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு ₹5,000 மாத உதவித்தொகை வழங்கப்படும்.


மேற்கு வங்கத்தில் வேலைகள் பற்றாக்குறை காரணமாக, பல ஏழைத் தொழிலாளர்கள் பிழைப்புக்காக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) முழுமையாக முடங்கிய பிறகு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.


இதற்கிடையில், ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தின் சாதகமான உத்தரவுக்குப் பிறகு, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நம்பிக்கை ஏற்பட்டது. புருலியா மாவட்டத்தில் மட்டும், ஜூன்-ஜூலை மாதங்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அந்தந்த தொகுதி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே கணவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறிய பெண்களால் சமர்ப்பிக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் (MGNREGA) பணிகள் தொடங்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இது அவர்களின் குழந்தைகளுக்கு வரவிருக்கும் துர்கா பூஜையை சற்று எளிதாக்கியிருக்கலாம்.


உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தலையீடும், அதன் முந்தைய உத்தரவை உயர்நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியதும் மீண்டும் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், சில பெரிய கேள்விகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். முதலில், ஊழல் விசாரணைகளை ஒரே நேரத்தில் தொடர முடிந்தபோது, ​​MGNREGA-ஐ மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு தயங்குகிறது? மாநில அரசு நெருக்கடியைப் புறக்கணித்து, ஒன்றிய அரசைக் குறை கூறி, சரியான சட்டப் பாதுகாப்பு இல்லாமல் தனது சொந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஏன்?


சில நாட்களுக்கு முன்பு, பானர்ஜி இந்திய அரசியலமைப்பை கையில் எடுத்துக்கொண்டு, அவரைப் பின்தொடரும் மக்கள் கூட்டத்துடன் தெருக்களில் இறங்கினார். தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens(NRC)) மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டத்தை (Citizenship (Amendment) Act(CAA)) செயல்படுத்துவதற்கான ஒரு இரகசிய நடவடிக்கை முதல் சமீபத்திய தற்கொலைகளுக்கான காரணத்துடன் தொடர்புடையது வரை பல்வேறு சர்ச்சைக்குரிய கூற்றுக்களுக்கு மத்தியில், சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) செயல்பாடு மாநிலத்தில் தொடங்கியுள்ளது.


குடியுரிமை இழப்பு மற்றும் வேலை செய்யும் உரிமை இழப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள உரிமைகோரல்களும் கதைகளும் இப்போது தேர்தலுக்கு முந்தைய உரையாடலின் மையத்தில் எப்போதும் இருந்த “இலவசங்கள்” மற்றும் ஊக்கத்தொகைகளை முந்திக்கொண்டு வருகின்றன. நுகர்வோரையும் குடிமக்களையும் ஒன்றாகக் கலந்தது பொதுவான நவீன தாராளவாதத்தின் (neoliberalism) விளைவு. ஆனால் பாதிக்கப்படக்கூடியோருக்கு வாழ்வாதார வழிகளை மறுப்பது — மற்றும் அதை ஒரு வாக்குக்கு ஈடாக மட்டுமே வழங்குவது — “இலவசங்களை” விநியோகிப்பதைவிட மிகவும் பயங்கரமாகத் தோன்றுகிறது. இது அரசியலமைப்பு உரிமைகளை ஊக்கத்தொகைகளாக மாற்றுவதாகத் தெரிகிறது.


எழுத்தாளர் ஒரு அறிஞர், TISS, மும்பை.



Original article:

Share:

ஒரு ஊதியக் குழுவின் பொறுப்பு என்ன? -ரங்கராஜன் ஆர்.

 பொதுத்துறை ஊதிய முறைகள் பல ஆண்டுகளாக எவ்வாறு பரிணமித்துள்ளன? முதல் மத்திய ஊதியக் குழு எப்போது அமைக்கப்பட்டது? பல்வேறு விதிமுறைகள் என்னென்ன? சர்வதேச நடைமுறைகள் என்னென்ன? அரசு எவ்வாறு திறமையானவர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும்?


ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களைத் தலைவராகக் கொண்டு, மத்திய அரசு 8-வது மத்திய ஊதியக் குழுவை (Central Pay Commission (CPC)) அமைத்துள்ளது. இதில், IIM பெங்களூருவில் உள்ள பேராசிரியர் புலக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், இந்திய அரசின் செயலாளரான பங்கஜ் ஜெயின் இந்திய ஆட்சிப் பணி உறுப்பினர்-செயலராகவும் உள்ளனர். இந்தக் குழு 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 



ஊதியக் குழு என்றால் என்ன?


மத்திய அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவின் மூலம் இந்தியாவில் ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட, அவர்களின் பல்வேறு ஊதியக் கட்டமைப்புகள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் பிற சேவை நிபந்தனைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதும், தேவையான மாற்றங்கள் குறித்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதும் இந்த ஊதியக் குழுவின் (CPC - Central Pay Commission) பணியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் முதல் ஊதியக் குழு 1946-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


அதன் பணி வரம்புகள் என்னென்ன?


ஊதியக் குழுக்களின் பணி வரம்புகள் (Terms of Reference - TOR) மத்திய அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகின்றன. 8-வது மத்திய ஊதியக் குழுவின் பணி வரம்புகள், தனது பரிந்துரைகளை அளிக்கும்போது சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதிச் சிக்கனம் (fiscal prudence) தேவை. வளர்ச்சிச் செலவினங்கள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கான போதுமான வளங்களை உறுதி செய்ய வேண்டிய தேவை. பங்களிப்பற்ற ஓய்வூதியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாத செலவு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை வழக்கமாக ஏற்கும் மாநில அரசாங்கங்களின் நிதியில் அதன் தாக்கங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் தற்போதைய ஊதிய அமைப்பு மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியன என்று தெரிவிக்கின்றனர்.  


சர்வதேச நடைமுறைகள் என்ன?


உலகளவில் 1970-ஆம் ஆண்டு வரை, பொதுத்துறைக்கான ஊதிய அமைப்பு, தனியார் வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள இதே போன்ற பணிகளுக்கு அளவுகோல் நிர்ணயிப்பதன் மூலம் சமத்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில், ஊதியத்தைத் தீர்மானிப்பதில் சமத்துவத்திற்குப் பதிலாக திறன்  முக்கியக் கொள்கையாக மாறியிருந்தது. 1990-ஆம் ஆண்டு முதல், செயல்திறனும் ஊக்கத்தொகைகளும், அவற்றின் பெறக்கூடிய தன்மையுடன் சமநிலைப்படுத்துவதோடு, முக்கியக் கொள்கையாகின. தற்போது, பொதுத்துறை ஊதிய அமைப்புகள், பொருத்தமான திறமைகளும் நிபுணத்துவமும் கொண்ட தனிநபர்களைப் பணியமர்த்தவும் தக்கவைக்கவும் பரிணாமம் அடைந்து வருகின்றன, அதே சமயம் பொதுக் கருவூலத்திற்கான மொத்தச் செலவைக் கட்டுப்படுத்தவும் முயற்சித்து வருகின்றன.


உலகளாவிய தரநிலைகளின்படி, பொதுத்துறையில் நியாயமான ஊதியத்தின் முக்கியப் பண்புகள் தெளிவான தத்துவம், திறமையாளர்களை ஈர்க்கும் திறன், உள் சமத்துவம், வெளிப் போட்டித்திறன் மற்றும் தெளிவு ஆகியவை ஆகும். இந்தியாவில், உள்சமத்துவத்திற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், உயர் பதவிகளுக்கான ஊதியத்தைப் பொறுத்தவரை வெளிப் போட்டித்திறன் பின்தங்கியுள்ளது என்கின்றனர்.


பெரிய ஜனநாயக நாடுகளில் பொதுத்துறை வேலைவாய்ப்பின் சில அளவுகோல்களின் ஒப்பீட்டுத் தரவுகள் அட்டவணை 1-ல் சுருக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்வது முக்கியமானது. நம் நாட்டில் பொதுத்துறை வேலைவாய்ப்பும், ஊதியங்களும் வரையறுக்கப்பட்ட திறனுடன் கூடிய மிகப்பெரியவை (gargantuan) என்ற பொதுவான கருத்து நிலவுகிறது என்றாலும், மற்ற முக்கிய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய அனைத்து அளவுகோல்களிலும் குறைவாக உள்ளதைக் காணலாம்.


அடுத்தது என்ன?


ஊதியக் குழுக்களின் பணி வரம்புகளில் (Terms of Reference - TOR) சில முக்கிய அம்சங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. முதலாவதாக, பொதுத் துறையின் ஊதிய அமைப்பை தனியார் துறையுடன் ஒப்பிட மத்திய ஊதியக் குழு தேவைப்படுகிறது. இது முந்தைய ஊதியக் குழுக்களிலும்கூட கவனிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறையில் உள்ள ஆரம்ப நிலை பதவிகளுக்கு, அவற்றின் தனியார் துறை ஊழியர்களைவிட கணிசமாக அதிக ஊதியம் உள்ளது, அதே சமயம் உயர் பதவிகள் மற்றும் நிபுணர் பணிகளுடன் ஒப்பிடுகையில் இது நேர்மாறாக உள்ளது. மத்திய அரசில் மிகக் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளத்திற்கான விகிதத்தை (சுருக்க விகிதம்) ஏழாவது மத்திய ஊதியக் குழுவில் 1:12.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அரசுப் பதவிகளில் குறைந்த ஊதியத் தொகுப்பை ஈடுசெய்யும் வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருப்பினும், திறமையானவர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும், சில உயர் பதவிகள் மற்றும் நிபுணர் பணிகளைப் பொறுத்தவரை இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, கற்றல் மற்றும் மேம்பாடு, பயிற்சி, மற்றும் நெகிழ்வான வேலை மற்றும் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பணிச் சூழல் போன்ற காணப்படாத அம்சங்கள் பணி வரம்புகளின் ஒரு பகுதியாக இல்லை. ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையில் இந்த சிக்கல்களை கவனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இறுதியாக, பொருளாதார நிலைமைகள், நலனுக்காக போதுமான வளங்களை உறுதி செய்ய வேண்டிய தேவை, மற்றும் பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியளிக்கப்படாத செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்படி 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய மசோதா, மத்திய அரசின் மொத்த வருவாய் செலவினமான ₹39.44 லட்சம் கோடியில் ₹2.76 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பரிந்துரைகளை செய்யும் போது பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் தாக்கம் அரசு கருவூலத்தில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், நலத்திட்ட நடவடிக்கைகள் என்பவை காலப்போக்கில் உருவாகும் அரசியல் முடிவுகள் என்பதால் அவ்வப்போது புதிய திட்டங்கள் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகின்றன. இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, நீதித்துறை, கல்வித்துறை மற்றும் அதிகாரத்துவத்தில் இருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆணையம் இந்த தாக்கத்தை மதிப்பிடுவதற்கு பொருத்தமானதாக இருக்காது என்பதால் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுவர, நிதி மற்றும் மனிதவள நிபுணர்களுடன் ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கான அவசியம் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.


ரங்கராஜன் ஆர், ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் தற்போது Officers IAS அகாடமியில் பயிற்சி அளித்து வருகிறார்.



Original article:

Share:

ஒரு ஞான மன்னரைக் கொண்டாடுவது, இந்திய-பூட்டான் உறவுகளின் ஒரு கொண்டாட்டம் -கௌதம் பம்பாவாலே

 இன்று 70 வயதை எட்டிய ஜிக்மே சிங்யே வாங்சுக், மலை இராச்சியத்தின் நவீனமயமாக்கலையும், இந்தியாவுடனான அதன் உறவுகளையும் வளர்க்க உதவியுள்ளார்.


பூட்டானின் முன்னாள் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக், 2025 நவம்பர் 11 அன்று 70 வயதை எட்டுகிறார். தற்போதைய பூட்டான் அரசரின் தந்தையான இவர் பிரபலமாக K4 (வாங்சுக் வம்சத்தின் நான்காவது அரசர்) என அழைக்கப்படுகிறார், அதேநேரம் தற்போது அரியணையில் அமர்ந்துள்ள அவரது மகன் ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்சுக், K5 எனக் குறிப்பிடப்படுகிறார்.


ஜிக்மே சிங்கியே வாங்சுக் தனது மக்களால் மிகுந்த மதிப்பு, வியப்பு, பெருமை மற்றும் பக்தியுடன் போற்றப்படுகிறார், அவர்கள் அவரை போதிசத்துவ அரசர் என்று அழைக்கின்றனர். அவர் 17 வயதிலிருந்து 2006-ஆம் ஆண்டு தனது மகனுக்கு ஆதரவாக விலகும் வரை பூட்டானை ஆட்சி செய்தார்.


அவர் புத்திசாலித்தனமாகவும், நேர்மையாகவும் ஆட்சி செய்ததாலும், பூட்டானை 21-ம் நூற்றாண்டில் வழிநடத்திச் சென்றதாலும், பல வழிகளில் நவீனமயமாக்கியதாலும், அவர் கிட்டத்தட்ட ஒரு புத்தரைப் போலவே மதிக்கப்படுகிறார். இப்போது, ​​அவரது 70-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நவம்பர் 11 அன்று திம்புவில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மலைப்பாங்கான அண்டை நாடான பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு (Thimphu) வருகை தருகிறார்.


இரு நாடுகள், அவற்றின் நெருங்கிய உறவுகள்


பிரதமர் மோடி அவர்கள் எப்போதும் பூட்டானுடனான இந்தியாவின் உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். 2014-ம் ஆண்டில், பிரதமரான உடனேயே, அவர் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றிப் பேசியது மட்டுமல்லாமல், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டானையும் தேர்ந்தெடுத்தார். இப்போதும் கூட, பூட்டான் மக்களுக்கு அவர்களின் மன்னர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன என்பதை பிரதமர் மோடி உணர்ந்து, இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அவர்களுடன் இருப்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அவரது வருகை இந்திய மற்றும் பூட்டான் மக்களுக்கு இடையிலான வலுவான நட்பை தெளிவாகக் காட்டுகிறது.


மன்னராக இருந்த காலத்தில், பூட்டானின் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தியவர் கே4 என்றும் அழைக்கப்படும் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆவார். சுதந்திர இந்தியா தனது நாட்டின் நெருங்கிய நண்பர் என்பதை நன்கு புரிந்துகொண்டு, பூட்டானின் சுதந்திரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு உண்மையான அச்சுறுத்தல்கள் இந்தியாவிலிருந்து அல்ல, வடக்கிலிருந்து வந்தன என்பதையும் அவர் உணர்ந்தார். தனது நாட்டின் சாலை கட்டமைப்பை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் பராமரிக்க இந்தியாவின் எல்லை சாலைகள் அமைப்பை நியமித்தவர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆவார். இன்று, பூட்டான் நிறுவனங்கள் இந்தப் பணியைத் தாங்களாகவே கையாள முடியும், மேலும் அவர்கள் இந்தப் பொறுப்பை சரியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பூட்டானின் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் திறனை மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் அங்கீகரித்தார். இந்த யோசனை பூட்டானுக்கு நிலையான வருமானத்தை உயர்த்தியுள்ளது மட்டுமில்லாமல், அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது.


நீர்மின்சார இராஜதந்திரம்


இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான நீர்மின்சார ஒத்துழைப்பு, பல ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வலுவான மற்றும் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. எனவே, இந்த நட்புறவின் அடையாளமாகவும், குறிப்பிடத்தக்கதாகவும், பிரதமர் மோடி மற்றும் மன்னர் ஜிக்மே கேசர் (K5) ஆகியோரால் இந்தப் பயணத்தின்போது புனாட்சங்சு-II நீர்மின்சாரத் திட்டம் முறையாகத் தொடங்கி வைக்கப்படுவது பொருத்தமானது, அடையாளமானது மற்றும் முக்கியமானது. 1,020 மெகாவாட் திட்டம் சில மாதங்களாக மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இது பூட்டானின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்த உதவுகிறது.


முந்தைய திட்டங்களைப் போலவே, புனாட்சங்சு-II (Punatsangchhu II) இந்திய அரசாங்கத்திற்கும், பூட்டான் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஆரம்ப நிதியை இந்தியா வழங்கியது. இந்த திட்டம் இந்தியாவிற்கு மின்சாரம் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி இந்த முதலீட்டை திருப்பிச் செலுத்துகிறது. மின்சார விகிதங்கள் போட்டித்தன்மை வாய்ந்தவை மற்றும் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சில வருடங்களுக்கும் திருத்தப்படுகின்றன.


இந்த மாதிரி இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் எதிர்காலத்தில், இரு நாடுகளும் இதுபோன்ற நீர்மின் திட்டங்களுக்கு மூலதனத்தின் பிற ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் மூலதனம் இப்போது பெரிய அளவில் கிடைப்பதால், வரவிருக்கும் திட்டங்கள் பூட்டான் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய தனியார் நிறுவனங்களால் கையாளப்படும். குறிப்பிடத்தக்க வகையில், டாடா பவர் மற்றும் அதானி பவர் ஏற்கனவே பூட்டானில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக இருந்தாலும் சரி, உள்கட்டமைப்பு மேம்பாடு முதல் பழைய நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களை மேம்படுத்துவது (renovating monasteries) வரையிலான பெரிய திட்டங்களாக இருந்தாலும் சரி, நீர் மின்சக்திக்கு அப்பாற்பட்ட மேம்பாட்டு உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது.


தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்


தேசியப் பாதுகாப்பு விஷயங்களில் மன்னர் K5 தனது தந்தை மன்னர் K4-ன் வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுகிறார். பூட்டானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ராயல் பூட்டான் இராணுவத்தின் (Royal Bhutan Army (RBA)) தயார்நிலை போன்ற விஷயங்களில் K4 உடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவருக்கு வலுவான புரிதல் உள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவையும் - அதன் உந்துதல்கள், குறிக்கோள்கள் மற்றும் பூட்டான்-சீன உறவுகளுக்கு இவை என்ன அர்த்தம் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார்.


Operation All Clear : "ஆபரேஷன் ஆல் கிளியர்" என்பது டிசம்பர் 2003 மற்றும் ஜனவரி 2004-க்கு இடையில் பூட்டானின் தெற்குப் பகுதிகளில் அசாம் பிரிவினைவாதக் குழுக்களுக்கு எதிராக ராயல் பூட்டான் இராணுவத்தால் நடத்தப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும்


டிசம்பர் 2003-ல் ஆபரேஷன் ஆல் கிளியரை (Operation All Clear) தனிப்பட்ட முறையில் வழிநடத்தியதற்காக K4-க்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். இந்த நடவடிக்கையின்போது, இ​​ராயல் பூட்டான் இராணுவம் (RBA) இந்திய கிளர்ச்சிக் குழுக்களின் பல நூறு உறுப்பினர்களை அகற்றியது. இந்த குழுக்கள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு அருகிலுள்ள பூட்டானின் காடுகளில் தஞ்சம் புகுந்தன. இந்தியாவின் எல்லைப் பகுதியில், இந்திய இராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களை விரைவாகக் கைது செய்தது. பின்னர் இராணுவம் சட்டத்தின்படி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தது.


எனவே, நவம்பர் 11 என்பது பூட்டானின் ஞானி மற்றும் மரியாதைக்குரிய முன்னாள் மன்னரின் பிறந்தநாள் மட்டுமல்ல. திம்புவில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடியின் வருகை அந்த நாளை இந்தியா-பூட்டான் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாகவும் மாற்றுகிறது.


பூட்டானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே, இப்போது புனே சர்வதேச மையத்தில் ஒரு அறங்காவலராக உள்ளார்.



Original article:

Share:

புதிய எல்லைகள் : பிரேசிலில் COP30 பற்றி . . .

 வளரும் நாடுகள் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் முன்னிலை வகிக்க வேண்டும்.


காலநிலை மாற்ற மாநாட்டின் (COP) 30-வது பதிப்பு பிரேசிலின் பெலெமில் (Belém) தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தத்திற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UN Framework Convention on Climate Change (UNFCCC)) அனைத்து உறுப்பினர்களும் உலகளாவிய வெப்பநிலையை 2°C க்கும் குறைவாகவும், "முடிந்தவரை 1.5°C க்கும் குறைவாகவும்" வைத்திருப்பது என்ற பொதுவான இலக்கை நோக்கி உறுதியளித்துள்ளனர். இது இதுவரையிலான முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், உலகளாவிய லட்சியத்தை அதிகரிப்பதற்கும் இது ஒரு சிறந்த தருணமாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, குழப்பமான ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா மீண்டும் விலகியுள்ளது, இருப்பினும் அது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) ஒரு பகுதியாகவே உள்ளது. மேலும், 2017 முதல், இந்த நிலைப்பாடு தீர்க்கமாக மிகவும் முரண்பாடாகத் தெரிகிறது. உமிழ்வு குறைப்பு, காலநிலை நிதி மற்றும் தெளிவான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்க நிர்வாகம் வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் அழுத்தத்தைப் பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, சர்வதேச கடல்சார் அமைப்பின் (International Maritime Organization (IMO)) உறுப்பினர்கள் கப்பல் துறையை புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கான தீர்மானத்தை சமீபத்திய மாதங்களில் விலக்குவதில் இது முக்கியப் பங்கு வகித்துள்ளது. உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான குரல் ஆதரவாளராக இருந்து காலநிலை மாற்றத்தை இனி ஒரு "வாழ்வியல் அச்சுறுத்தலாகப் (existential threat) பார்க்காதவராக பில் கேட்ஸ் மாறியதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் அதை தனது நிலைப்பாட்டிற்கான "சரியான நிரூபணம்" என்று அறிவித்தார். தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முதலீடுகள் புதைபடிவ எரிபொருள் முதலீட்டைவிட அதிகமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவின் தனிமைப்படுத்தல் கொள்கை குறைந்து வருவதாகவும், உலகெங்கிலும் உள்ள வணிகங்களும் எதிர்காலத்தில் தூய்மையான எரிசக்தியில் உள்ளது என்பதை உணர்ந்துள்ளன. ஆனால், சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) உதாரணம் கூறுவது போல், உலகளாவிய முயற்சிகளை சீர்குலைக்கும் வலுவான சக்தி அமெரிக்காவிடம் இன்னும் உள்ளது. பேச்சுவார்த்தையாளர்கள் 12 நாள் சுற்று விவாதங்களைத் தொடங்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டும்.


பிரேசில் அதிபர் வலியுறுத்தியது போல, இந்த COP 'செயல்படுத்துதலில்' (implementation) கவனம் செலுத்துகிறது. உலகின் கூட்டு நடவடிக்கை பாரிஸ் இலக்குகளுக்குத் தேவையானதை எட்டவில்லை என்றாலும், இனிமேல் எதிர்கால விவாதங்கள் தழுவலுக்கான நிதி வழிமுறைகள், வனப் பாதுகாப்பு மற்றும் வலுவான கார்பன் கடன் சந்தைகள் போன்ற முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தீர்க்கமான முடிவுகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் பலதரப்பு செயல்முறையை மேம்படுத்துவது குறித்த புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இருக்கலாம்., ஒருவேளை, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசில் முன்மொழிந்தபடி, ஒரு 'காலநிலை குழு' (climate council) உருவாக்குவது குறித்த விவாதம் இருக்கும். இவை, அனைத்தும் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் பயனற்றதாகக் கருதப்படும் ஒரு செயல்முறைக்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் உறுதியளிக்கின்றன. இருப்பினும், பெரிய வளரும் பொருளாதாரங்களான இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் குறிப்பாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தலைமைத்துவ உரிமை கோருவதற்கான ஒரு வாய்ப்பாகும். அவ்வாறு செய்வதற்கு முந்தைய நிலைப்பாடுகளில், குறிப்பாக நிதி பங்களிப்புகள் தொடர்பாக, அதிக லட்சியமும் சரிசெய்தலும் தேவைப்படலாம். வியத்தகு நகர்வுகளைச் செய்யாமல், இந்த நிச்சயமற்ற ஆனால் முக்கியமான எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள இந்தியா உள் விவாதங்களைத் தொடங்க வேண்டும்.



Original article:

Share: