இந்தியாவின் புதிய கார்பன் வரவுத் திட்டம் குறித்த தெளிவற்ற நிலை -ஏ.என். கணேசமூர்த்தி

இந்தத் திட்டம், தொழில்துறை மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


2026-ஆம் ஆண்டு ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் கார்பன் வரவு (Carbon Credit) திட்டத்திற்காக ₹20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியான முக்கிய கொள்கை அறிவிப்பு, தற்போது மக்களிடையே குழப்பத்தையும் பல்வேறு கருத்துக்களையும் உருவாக்கியுள்ளது. கனரகத் தொழிற்சாலைகளுக்கான தெளிவான அரசுத் திட்டத்திற்கும், இது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரமாக அமையும் என்கிற வளரும் கருத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு நிலவுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு என்பது தொழிற்சாலைகளில் கார்பனைப் பிடித்து, பயன்படுத்தி மற்றும் சேமிக்கும் தொழில்நுட்பமான (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) முறையை மேம்படுத்துவதற்காகவா? அல்லது நிலையான விவசாய முறைகள் மூலம் வேளாண் தொழிலாளர்கள் கார்பன் வரவு வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டமா? என்பதுதான் முதன்மையான கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இது தொழிற்சாலைகளுக்கான (CCUS) திட்டம் என்றே குறிப்பிடுகின்றன, ஆனால் பல ஊடகச் செய்திகள் இது வேளாண் தொழிலாளர்களுக்கானது எனத் தெரிவித்து வருகின்றன.


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) என்பது எளிதில் குறைக்க முடியாத மாசுக்களை வெளியிடும் தொழிற்சாலைகளை மையமாகக் கொண்டது என்பதே இதன் முதல் விளக்கம் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology (DST) வெளியிட்ட "கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வழிமுறை" (R&D Roadmap for CCUS) என்ற ஆவணமே இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு முக்கிய அடிப்படையாகும். இந்த ஆவணம் மின்சாரம், எஃகு, சிமெண்ட், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இரசாயனங்கள் போன்ற இலக்கு துறைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் அதிக செறிவூட்டப்பட்டவை, அளவிடக்கூடியவை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் மட்டும் எளிதில் குறைக்க முடியாதவை என்பதால் இவை "கடினமானவை" என அழைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்த அல்லது பூமிக்கடியில் சேமித்து வைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்காக ஐந்து ஆண்டுகளில் ₹20,000 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


பட்டியலில் இல்லை


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilization, and Storage (CCUS)) துறைகளின் பட்டியலில் விவசாயம் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை. பசுமை இல்ல வாயுக்களின் (Greenhouse Gases) ஆதாரமாக விவசாயத்தை இந்த வழிகாட்டி திட்டவரைவு அங்கீகரித்தாலும், அது வெறும் கணக்கீட்டுப் பதிவிற்காக மட்டுமே செய்யப்படுகிறது. பண்ணை உமிழ்வுகள் பரவலாகவும், உயிரியல் சார்ந்ததாகவும் இருப்பதோடு, கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பிடிப்பதற்கு ஏற்றதாக இல்லாததாலும், விவசாயம் இதிலிருந்து தெளிவாக விலக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, புதிய தொழிற்சாலை உமிழ்வுகளைத் தடுக்கும் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பத்தையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றும் 'கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம்' (Carbon Dioxide Removal (CDR)) முறையையும் இந்த வரைபடம் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதில் மண் கார்பன் சேமிப்பு, ‘Biochar’ மற்றும் வன விவசாயம் போன்ற நடைமுறைகள் மூலம் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்களைப் பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கும் முக்கிய நபர்களாகச் சித்தரிக்கும் மற்றொரு கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்தத் திட்டவரைவு பெரும்பாலும் தொழில்துறை சார்ந்ததாக இருந்தபோதிலும், ஊடகங்கள் மற்றும் சமூக விவாதங்களின்படி, அரசாங்கத்தின் நிதிநிலைத் திட்ட ஆதரவு வேளாண் தொழிலாளர்கள் மீளுருவாக்கம் செய்யும் விவசாய முறைகளை மேற்கொண்டு கார்பன் சந்தைகளில் (Carbon markets) இணைய உதவும் என்றும், இதன் மூலம் விவசாய நிலங்கள் பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்யும் தீர்வுகளாக மாறும் என்றும் நம்பப்படுகிறது.


குழப்பத்தின் அடிப்படை காரணம்


இந்த விளக்கமானது இரண்டு வெவ்வேறு கருத்துக்களை ஒன்றிணைத்துக் குழப்பிக் கொள்வதுபோல் தோன்றுகிறது. நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு  (CCUS) நிதியானது தொழிற்சாலைகளில் வெளியாகும் கார்பனைப் பிடிப்பதற்கானது. ஆனால், இந்தியாவின் தன்னார்வ கார்பன் சந்தை (Voluntary Carbon Market) என்பது முற்றிலும் வேறுபட்டது. இதில் விவசாயம் மற்றும் வனத்துறை சார்ந்த திட்டங்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாங்குபவர்களுக்கு கார்பன் வரவுகளை (Carbon Credits) வழங்கத் தொடங்கிவிட்டன. வேளாண் தொழிலாளர்களுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர்கள், இயற்கை சார்ந்த கார்பன் வரவுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைக் குறிப்பிடுகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், மண்ணின் கார்பன் அளவை மேம்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மாதிரிகளை ஏற்கனவே சோதித்து வருகின்றன. நிதிநிலைத் திட்டத்தில் "கார்பன் வரவுத் திட்டம்" என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதே இந்தக் குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாம், இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (Department of Science and Technology (DST)) வரைவுத்திட்டத்தின்படி அதன் விரிவான திட்டம் தொழில்துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.


விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தக் குழப்பமானது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியையும், சிறந்த கொள்கை உருவாக்கத்திற்கான வாய்ப்பையும் காட்டுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை Department of Science and Technology (DST) தயாரித்த வரைபடம் தொழில்நுட்பரீதியாக வலுவான மற்றும் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆவணமாக இருந்தாலும், நிதி ஒதுக்கீட்டில் (Budget) பொதுவாகப் பயன்படுத்தப்படும் "Carbon Credit" என்ற வார்த்தையை உபயோகித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாய கார்பன் வரவுகள் குறித்து விவாதிக்கும்போது "திட்டம்" (Programme) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டது, வேளாண் தொழிலாளர்களுக்கான நிதி உதவி பெறும் ஒரு திட்டத்தை அனைவரும் எதிர்பார்க்க வழிவகுத்தது. விவசாய அமைச்சகம் நீண்டகாலமாக மண்வளம் மற்றும் காலநிலைக்கேற்ற விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான் என்கின்றனர். ஒரு முறையான கார்பன் விவசாயத் திட்டம் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்தாலும், அதற்குத் தனியான கொள்கை, நிதி மற்றும் அமைப்புகள் தேவை. இது அதிக செலவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் தொடர்பான முயற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் கூறப்படுகிறது.


எதிர்பார்ப்புகளைச் சரியாகக் கையாளுவதற்கு அரசாங்கம் இந்த வேறுபாட்டைத் தெளிவாக விளக்க வேண்டும். குறிப்பாக, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக் குறைப்பதற்கு ₹20,000 கோடி மதிப்பிலான கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்துறை மிக முக்கியமானது என்றாலும், இந்தியாவின் மொத்தக் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேற்றத்தில் சுமார் கால் பகுதியை அதுவே உருவாக்குகிறது. எனவே, இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை அடைவதற்கு இந்தத் திட்டத்தின் வெற்றி அவசியமாகிறது. 


அதேநேரத்தில், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கார்பன் வரவுகள் (காற்றில் உள்ள கரியமில வாயுவை குறைப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை ஊக்கத்தொகை) குறித்த வலுவான கருத்துருவாக்கம் ஒரு பெரிய இணையான வாய்ப்பைக் காட்டுகிறது. இந்தியாவின் பரந்த விவசாய நிலங்கள் கார்பனை உறிஞ்சுவதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன. விவசாயத்திற்காக ஒரு நம்பகமான உள்நாட்டு கார்பன் சந்தையை உருவாக்க, தனித்துவமான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கை கொண்டு வரப்பட்டால், அது வேளாண் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை தேவை.


தற்போதைய விவாதங்கள் இந்தியாவின் காலநிலை உத்தியில் (climate strategy) ஒரு முக்கியமான தருணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 2026-ஆம் ஆண்டு நிதிநிலைத் திட்டத்தில், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பம் மூலம் தொழில்துறை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க ₹20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'வேளாண் தொழிலாளர்களுக்கான கார்பன் வரவு' (farmer carbon credit) என்ற யோசனைக்கு இந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றாலும், இது தன்னார்வ கார்பன் சந்தையில் அதிகரித்து வரும் ஆர்வத்தையும், இதற்கென ஒரு தனி கொள்கையின் அவசியத்தையும் காட்டுகிறது. வருங்காலத்தில், அரசாங்கம் தொழில்துறை மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டு முக்கிய துறைகளையும் தெளிவாகப் பிரித்து, அதே நேரத்தில் இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளித்து முன்னேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. தற்போதைய குழப்பம் இவை இரண்டையும் ஒன்றாகக் கலப்பதாலேயே ஏற்படுகிறது. இருப்பினும், ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்பதை இது உணர்த்துகிறது.


அர்கல்குட் என்.கணேஷமூர்த்தி, தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) மற்றும் இந்திய மண் அறிவியல் சங்கத்தின் (ISSS) கௌரவ உறுப்பினர் (Fellow) ஆவார். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIHR) முன்னாள் மேனாள் விஞ்ஞானி (Emeritus Scientist) ஆவார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர்.



Original Link: A bit of a blur over India’s new carbon credit plan 


Share:

சராவதி நீர்மின் திட்டம்: எரிசக்தி மாற்றத்திற்காக கொடுக்கப்படும் விலை. - ஜி. டி. சதீஷ்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையவுள்ள நீர்மின் திட்டத்திற்கு (hydroelectric project) எதிரான போராட்டங்கள் இப்பொழுது புதிய வேகமெடுத்துள்ளன.


இந்த மாத தொடக்கத்தில், சராவதி நீரேற்ற மின் திட்டத்திற்காக (Sharavathi Pumped Storage Hydroelectric Project) வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான பல்லுயிர் பெருக்க மண்டலமான 'சராவதி சிங்கவால் குரங்கு வனவிலங்கு சரணாலயத்தில்' இத்திட்டத்தை செயல்படுத்த மாநில வனவிலங்கு வாரியம் அளித்த அனுமதியை எதிர்த்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நீதிமன்ற உத்தரவு, 2017-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை எதிர்த்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.


கர்நாடக மின் கழகம் (Karnataka Power Corporation Limited (KPCL)) சராவதி நதிப் பள்ளத்தாக்கில் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த நதி அரபிக்கடலை அடைவதற்கு முன்னதாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாக சுமார் 130 கி.மீ தூரம் பாய்கிறது. ஏற்கனவே இந்த நதியின் குறுக்கே நான்கு முக்கிய மின் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், இது அந்த மாநிலத்தின் முதன்மையான நீர்மின் ஆதாரமாக (hydropower source) விளங்கி வருகிறது.


கர்நாடக மின் கழகம் (KPCL), ஒரு நாளைக்கு 18,000 மெகாவாட் வரை உயரும் உச்சகட்ட மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தத் திட்டத்தின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் (non-fossil fuel) திறனை 50 சதவீதமாக  உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு, மத்திய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)) தூய்மையான எரிசக்திக்கு மாறப் பரிந்துரைத்துள்ளதால் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இருப்பினும், இத்திட்டத்திற்கான செலவு 2017-ஆம் ஆண்டில் சுமார் ₹4,800 கோடியாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ₹10,240 கோடியாக அதிகரித்துள்ளது.


மேலும், இந்தத் திட்டம் மாநில வனவிலங்கு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய வனவிலங்கு வாரியத்திடமிருந்து (National Board for Wildlife (NBWL)) கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்றிருந்தாலும், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (Forest and Environmental Clearances) இறுதி அனுமதிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.


சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகள்


கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில நிபந்தனைகளுடன் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. தொடக்கத்தில், கர்நாடக மின் கழகம் (KPCL) இந்தத் திட்டத்திற்காக 16,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை 7,000 முதல் 8,000 மரங்களாகக் குறைக்க வேண்டும் என்று வாரியம் பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஷிவமொக்கா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர்வாசிகள், விவசாய அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல கூட்டங்களை நடத்தியுள்ள அவர்கள், இத்திட்டத்தினால் காடுகளுக்கும், அப்பகுதிக்கே உரிய 'சிங்கவால் குரங்கு' (Lion-tailed Macaque) போன்ற அழிந்துவரும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளனர். சமீபகாலங்களில் பெய்த கனமழையின் போது நிலச்சரிவுகளை நேரில் கண்ட இப்பகுதி மக்கள், சுரங்கப்பாதை அமைப்பது தங்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர். மேலும், மின்சாரக் கம்பிகள் அமைப்பதற்காக கூடுதல் காடுகள் அழிக்கப்படலாம் என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் அகிலேஷ் சிப்ளி உள்ளிட்ட மனுதாரர்கள், வனப்பகுதி அல்லாத செயல்பாடுகளைத் தடை செய்யும் சட்டங்களை இத்திட்டம் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.


மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF)) மண்டல அலுவலகத்தில் வனத்துறை துணை ஆய்வாளர் ஜெனரலாகப் பணிபுரியும் பிரனீதா பால் சமர்ப்பித்த கள ஆய்வு அறிக்கை, இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்கின்றனர். புதிய சாலைகளை அமைப்பதும், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்துவதும் பசுமை மாறா சதுப்பு நிலக்காடுகளை முற்றிலுமாக அழித்துவிடும் என்றும், மரங்களை வெட்டுவது சிங்கம் போன்ற வால் கொண்ட குரங்குகள் (lion-tailed macaques) மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த அறிக்கையைத் தங்கள் வாதங்களுக்கு மிக முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.


பொதுமக்களிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு,  கர்நாடகா மின் கழகம் (KPCL) பிரதிநிதிகள், அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில் ஷிமோகா மற்றும் உத்தர கன்னடா ஆகிய பகுதிகளின் சில இடங்களில் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசுவதற்காகக் கூட்டங்களை நடத்தினர். இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஒரு குழு அதிகாரி மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், எரிசக்தி உற்பத்திக்காக நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தி, இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.


தொடர்ச்சியான போராட்டம்


இருப்பினும், கர்நாடகா மின்கழகத்தின் முயற்சிகள் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கடும் எதிர்ப்பு நிலவிய காரணத்தால், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEF) அந்த இடத்தை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அனுப்பியது. அந்த நிபுணர் குழு அளித்த அறிக்கையில், இந்தத் திட்டத்தால் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நன்மைகளைவிட, அதனால் ஏற்படப்போகும் சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல், சூழலியல் மற்றும் சமூக பாதிப்புகளே மிக அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.


சட்டரீதியான பின்னடைவுகளும், நிபுணர் குழுவின் எதிர்மறையான அறிக்கையும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பவர்களுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மின் கழகம் நீதிமன்றத்திலும், தேசிய வனவிலங்கு வாரியத்திலும் (NBWL) மேற்கொள்ளப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


Original Link: Sharavathi Hydroelectric Project: The cost of energy transition 


Share:

'மெட்ராஸ்' என்ற மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என்று மாற்றியபோது ஏற்பட்ட அரசியல் பரபரப்பு - டி. ராமகிருஷ்ணன்

1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, 'தைப்பொங்கல்' திருநாளை முன்னிட்டு இந்த புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.


2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி, கேரளாவின் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist) (CPI(M))) தலைமையிலான அரசு சமர்ப்பித்த அம்மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைக்கப்படும் "கேரளம்" என்று மாற்றுவதற்கான கோரிக்கைக்கு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இது போன்ற ஒரு மாற்றம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது; அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, "மெட்ராஸ்" மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.


இராஜதந்திரி மற்றும் எழுத்தாளருமான ஆர். கண்ணன் தனது 'The DMK Years' என்ற புத்தகத்தில் "சிலிர்ப்பூட்டும் தருணம்" (moment of frisson) என்று குறிப்பிட்ட அந்த நிகழ்வு, ஜூலை மாதம் 18-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டு அரங்கேறியது. தமிழகத்தில் 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த நான்கு மாதங்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. அன்றுதான் தமிழக சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


1961-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே, காங்கிரஸ் அரசாங்கம் சட்ட மேலவை மற்றும் சட்டப்பேரவையில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அதிகாரப்பூர்வ தமிழ் வழித் தொடர்புகளில் "சென்னை" என்ற பெயர் மாநிலத்தின் தலைநகரைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், மாநிலத்தைக் குறிக்க "தமிழ்நாடு" என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், அப்போதைய தொழில் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மாநிலத்தைக் குறிப்பிடும்போது "தமிழ்நாடு" என்றே குறிப்பிட்டிருந்தார்.


இருப்பினும், இந்தப் பெயர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகம் அறியப்படாத பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாளன்று, அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமைச் செயலகத்தில் "தமிழக அரசு - தலைமைச் செயலகம்" என்ற புதிய நியான் மின்விளக்குப் பலகையைத் திறந்து வைத்து, இந்தப் பெயர் மாற்றும் நடைமுறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.


பிற மொழியினருக்கு உதவும் வகையில் பெயர் பலகைகளில் ஆங்கிலத்திற்கு இரண்டாம் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அப்போதைய கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் பரிந்துரைத்தார். இந்த மாற்றம் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் கனவை நனவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், "தமிழகம்" என்ற சொல் பண்டைய இலக்கண நூல்களில் இல்லை என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மு. கருணாநிதி, இச்சொல் சிலப்பதிகார காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார் என்று 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழில் ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு வருடத்திற்குப் பிறகு, பெயர் மாற்றம் தொடர்பான சட்டவரைவை (Draft Bill) மத்திய அரசு கருத்து கேட்பதற்காக திமுக அரசுக்கு அனுப்பி வைத்தது. தொடக்கத்தில், தமிழில் மாநிலத்தின் பெயர் "தமிழ்நாடு" என்பதற்குப் பதிலாக "தமிழ்நாட்" (Tamil Nad) என்று இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இருப்பினும், முன்னாள் கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களின் ஆலோசனையின் பேரில், அதன் எழுத்துக்கூட்டு "தமிழ்நாடு" (Tamil Nadu) என மாற்றப்பட்டது. இதனை ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு அப்போதைய சட்டத்துறை அமைச்சர் எஸ். மாதவன் அவர்கள் உறுதிப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏழு மாதங்களுக்குப் பிறகு, மெட்ராஸ் மாநிலத்தின் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் விவாதத்திற்கும் ஒப்புதலுக்கும் வந்தபோது எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்தன. நவம்பர் மாதம் 21-ஆம் தேதி மதியம் 3:18 மணிக்கு, துணை சபாநாயகர் ரகுநாத் கேசவ் காடில்கர், மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவானை மசோதாவைத் தாக்கல் செய்ய அழைத்தார், ஆனால் அவர் அங்கு இல்லை; அவருக்குக்கீழ் பணிபுரியும் அமைச்சர்களும் அவையில் இல்லை. அமைச்சர்களின் இந்த வருகையின்மையை துணை சபாநாயகர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் பதிவு செய்தார். அப்போது, சேலம் தொகுதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் க.ராஜாராம், தென்காசி தொகுதி காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகம் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யட்டும் எனப் பரிந்துரைத்தார். மற்றொரு திமுக உறுப்பினரான வெ. கிருஷ்ணமூர்த்தி (நெய்வேலி/நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி), மசோதாவைத் தாக்கல் செய்யக்கூட அமைச்சர்கள் அவையில் இல்லையே என்று இந்தச் சூழலைக் கடுமையாக விமர்சித்தார்.


பம்பாய் மத்திய தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் சட்டப் பேராசிரியருமான ஆர்.டி. பண்டாரே, சட்ட அமைச்சர் பி. கோவிந்த மேனன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். இருப்பினும், சட்ட அமைச்சர் வேறொருவருக்காகப் பணியாற்ற விரும்புவதாகத் தனக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதாதவரை இதனை அனுமதிக்க முடியாது என்று துணை சபாநாயகர் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மசோதாவை நகர்த்த முன்வந்தபோது, காடில்கர் அவையை ஒத்திவைத்தார்.


சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோது, ஒடிசாவின் பாலசோர் தொகுதியைச் சேர்ந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சமரேந்திர குந்து (இவர் பின்னர் 1977-79 ஜனதா அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்), அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்கள் எவ்விதத் தயாரிப்பும் இன்றி வந்திருப்பதும், அவையை முறையாக மதிக்காமல் இருப்பதும் அவமானம் என்று சாடினார். அவர்களைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கோரியபோது, மக்களவையில் கடும் கூச்சலும் குறுக்கீடுகளும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


அப்போது, ஹிரேந்திரநாத் முகர்ஜி (கொல்கத்தா–வடகிழக்கு) என்று அழைக்கப்படும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ஹிரேன் முகர்ஜி அவர்கள் உரையாற்றி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். 1952-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தனது நீண்டகால அனுபவத்தில் இது போன்ற ஒரு சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக மத்திய சட்டமன்றத்தோடு தொடர்புடைய ஒருவரிடம் தான் ஆலோசித்ததாகவும், இதற்கு முன்னுதாரணம் ஏதும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியதாகவும் முகர்ஜி தெரிவித்தார்.


"மெட்ராஸ் மாகாணத்தை" "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றக்கோரி எழுந்த கோரிக்கையின் பின்னணி


சபை ஒத்திவைக்கப்பட்ட துணைச் சபாநாயகரின் முடிவைக் குறிப்பிட்ட அந்த அனுபவம் வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர், இது அரசாங்கத்தின் அரசியல் கருத்துக்களுக்கு எதிரானதல்ல, மாறாக அதன் செயல்பாட்டு முறையிலுள்ள அதிருப்தியையே காட்டுவதாகக் கூறினார். மேட்டூர் தொகுதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கந்தப்பன் பேசுகையில், அந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நேரத்தில் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் யாரும் அவையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு மற்றும் சட்டத்துறைக்கான இணை அமைச்சர்களும் மற்ற அமைச்சர்களும் அங்கு இருந்தபோதிலும், மசோதா அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருவேளை விருப்பம் இருக்குமானால், அதை விவாதத்திற்கு எடுப்பதில் அவர்களுக்கு என்ன தடை இருந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.


நாடாளுமன்றத்தில் மீண்டும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது சமரேந்திர குந்து அவர்கள், அவையை மிகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் நடத்தியதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தின்மீது சற்றும் அக்கறை காட்டாதது தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்களும் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கமும் அவையின் தனிச்சலுகைகளையும் உரிமைகளையும் முழுமையாகத் தங்கள் வசப்படுத்திக்கொண்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.


இந்திரா காந்தியை கடுமையாக விமர்சிப்பதில் பெயர்பெற்ற கோத்ரா தொகுதி பிரதிநிதி பிலூ மோடி (Piloo Mody), காங்கிரஸ் அரசாங்கத்தைத் தீவிரமாகச் சாடினார். காலப்போக்கில் நாட்டில் ஒரு சர்வாதிகாரப் போக்கு உருவாகியுள்ளதாகவும், நாடாளுமன்றம் அதன் முதன்மையான அதிகார மையமாகத் திகழ்வதற்குப் பதிலாக வெறும் அரசாங்கத்தின் கருவியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அரசாங்கம் நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பதோடு, நாடாளுமன்றத்திடம் இருந்து அதிகாரத்தைப் பெறுவதற்குப் பதிலாக, தன்னை அதற்கு அப்பாற்பட்ட தனி அமைப்பாகக் கருதுவதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 1967-ஆம் ஆண்டில் எஸ். கே. பாட்டிலை வீழ்த்தி ‘Giant Killer’ என்று புகழ்பெற்ற பம்பாய் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சம்யுக்த சோசலிசக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், இது தொடர்பாக உரிமை மீறல் அறிவிப்பாணை (Breach of Privilege) ஒன்றைச் சமர்ப்பித்தார், ஆனால் அது அவையின் தலைவரால் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


சவான் அவர்கள் மாநிலங்களவையில் இருந்த காரணத்தினால்தான், இந்த மசோதாவை முதன்முதலில் தாக்கல் செய்யவேண்டிய நேரத்தில் அவரால் அவையில் இருக்க முடியாமல் போனது என்று விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவையில் இல்லாதது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் சுபாக் சிங் மற்றும் உள்துறை இணை அமைச்சர் வி.சி. சுக்லா ஆகியோர் மன்னிப்பு கோரினர். இந்த அமைச்சர்களின் வருகையின்மையை ஒரு "பிழை" (lapse) என்று குறிப்பிட்ட சிங், "இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று சபையில் உறுதியளித்தார்.


1956-ஆம் ஆண்டிலேயே மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டாலும், அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டதாக சுக்லா தெரிவித்தார். பின்னர், ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி, 1961-ஆம் ஆண்டு, இனிவரும் காலங்களில் அனைத்து அதிகாரப்பூர்வ தமிழ் வழித் தொடர்புகளிலும் "மெட்ராஸ் மாகாணம்" என்பதற்குப் பதிலாக "தமிழ்நாடு" என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. இந்த சட்ட மசோதாவின் பின்னணியை விளக்கிய சுக்லா, அரசாங்கம் சட்டமன்றத்தின் விருப்பத்தையே பின்பற்றியதாகக் கூறியதோடு, இது தொடர்பாக கண்டப்பன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் "துரதிர்ஷ்டவசமானவை" என்றும் குறிப்பிட்டார்.


மேனன் அவர்கள், ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பதிலாக ஒரு சாதாரண சட்டத்தின் மூலமாகவே ஏன் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விளக்கினார். 1967-ஆம் ஆண்டு ஐ.சி. கோலக் நாத் மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் (I.C. Golak Nath vs. State of Punjab case) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்ட சட்ட அமைச்சர், "மெட்ராஸ்" என்ற பெயர் "தமிழ்நாடு" என்று மட்டுமே மாற்றப்படுவதாகவும், இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 31A-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் குறைக்கவோ அல்லது பாதிக்கவோ செய்யாது என்றும் தெளிவுபடுத்தினார்.


முரசொலி மாறன் (திமுக), இந்த மசோதாவிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளாகத் தங்கள் மாநில மக்கள் "தங்களது நீண்டகால வரலாறு மற்றும் மொழியின் செழுமையான பாரம்பரியத்தால் புனிதமடைந்த ஒரு பெயரைத் தங்கள் மாநிலத்திற்குச் சூட்ட வேண்டும்" என்று விரும்பி வந்ததாகக் குறிப்பிட்டார்.


நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற அந்த சட்டமசோதா மீதான விவாதத்தின்போது பேசிய சவான், முந்தைய நாள் விவாதத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய அவர், ஆலோசனைகளின் போது முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் மற்றொரு 'இசைநயமிக்க' பெயரைப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் "அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய" ஒரு பெயரையே தேர்ந்தெடுக்குமாறு தாம் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் அவையினரிடம் தெரிவித்தார். மேலும், ஒரு தமிழ் அறிஞர் தனது வேண்டுகோளுக்கு ஏற்ப சுமார் 15 நிமிடங்கள் தமிழில் உரையாற்றியதை நினைவுகூர்ந்த சவான், தமிழ் மிகவும் இனிமையான மற்றும் இசைநயமிக்க மொழி என்று புகழாரம் சூட்டினார். இந்தப் பெயர் மாற்றத்தை தேசியப் பெருமிதத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், இந்தப் புதிய பெயர் அந்த மாநிலத்தை தேசிய ஒருமைப்பாட்டிற்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர உதவும் என்றும் குறிப்பிட்டார்.


மறுநாள் 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் அந்த விவாதத்தில் பங்கேற்று இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அப்போது அவர், தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவதை மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுங்கட்சி உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


இந்தச் செய்தித்தாள், 1968-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வெளியிட்ட தலையங்கத்தில், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திற்கு மக்களவை ஒருமனதாக ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டியதோடு, மாநிலம் தனக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பதை வெளியார் யாரும் எதிர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி, சென்னை அரசு எஸ்டேட்டில் உள்ள அப்போதைய சிறுவர் திரையரங்கில் (பின்னர் கலைவாணர் அரங்கம் என மறுபெயரிடப்பட்டது) மாநிலப் பெயர் மாற்ற விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அண்ணாதுரை, அந்நிகழ்வில்தான் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றினார். டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு நாளிதழில் வெளியான  செய்தியின்படி, அவர் பேசத் தொடங்கியபோது மக்கள் எழுந்து நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது "தமிழர்கள் தமிழர்களாக வாழ" வழிவகை செய்யவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் மாநிலத்திற்குத் தேவையான அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரவும் வலியுறுத்தியாதாகக் கூறப்படுகிறது.


டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, தைப்பொங்கல் திருநாளில், 'தமிழ்நாடு' என்ற புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.


Original Link: An uproar that marked the State’s name change from ‘Madras’ to ‘Tamil Nadu’ 


Share:

"நெகிழ்வான அனல் மின் உற்பத்தி" (thermal power generation) என்பதன் பொருள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


2025-ம் ஆண்டில், இந்தியா 44 ஜிகாவாட்-க்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் சேர்க்கப்படுவதால், இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy (RE)) திறன் அளவு 262 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. தற்போது, ​​இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 51%-க்கும் அதிகமான பங்கை புதுப்பிக்கத்தக்க ஆற்றலே கொண்டுள்ளது.


ஆனால், வளர்ந்து வரும் இந்த பசுமை ஆற்றலை மின் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது கடினமாக உள்ளது. இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority (CEA)) தலைவர் கன்ஷியாம் பிரசாத், அனல்மின் நிலையங்கள் (thermal power plants) அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இயங்குவதை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் தற்போது முன்மொழியப்படுவதாகக் கூறினார்.


இருப்பினும், இத்துறையைச் சார்ந்த தொழில்துறை வல்லுநர்கள் இதை முழுமையாக ஏற்கவில்லை. மின் நிலையங்களை குறைந்த மின்சுமையில் (lower loads) இயக்குவது, அவற்றில் உள்ள கொதிகலன்கள் (boilers) மற்றும் விசையாழிகளைப் (turbines) பாதிக்கக்கூடும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், இது இயந்திரங்களின் தேய்மானத்தையும் அதிகரிக்கக்கூடும். காலப்போக்கில், இது அந்த மின்உற்பத்தி நிலையங்களின் ஆயுட்காலத்தையே குறைக்கக்கூடும். இந்த அபாயங்களை நிதிசார் ஊக்கத்தொகைகள் மட்டும் முழுமையாகச் சமாளிக்க முடியாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இது குறிப்பாக நாட்டில் உள்ள பழமையான அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை, இந்தக் கவலை மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


அதிகபட்ச சூரிய ஒளி நேரங்களில், நிலக்கரி மின் நிலையங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரங்களில்தான், குறிப்பாக சூரியன் மறைந்த பிறகு சூரிய மின் உற்பத்தி விரைவாக அதிகரிக்கும் என்றும், சூரியன் மறைந்த பிறகு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள பல நிலக்கரி மின் நிலையங்களுக்கு இந்த செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை இல்லை.


எரிசக்தி சிந்தனைக் குழுவான எம்பர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, சூரிய மின் உற்பத்தியில் ஏற்படும் இழப்பின் காரணமாக, 2025 மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 2.3 டெராவாட்-மணி (TWh) சூரியசக்தி மின் உற்பத்தியை இழந்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 14 லட்சம் வீடுகளுக்கு ஒரு வருடத்திற்கு மின்சாரம் வழங்கப் போதுமானதாகும்.


இதன் நிதித் தாக்கமும் குறிப்பிடத்தக்கது. இந்த மின் உற்பத்திக் குறைப்பின் விளைவாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.75 பில்லியன் முதல் ரூ. 6.9 பில்லியன் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று எம்பர் அறிக்கை தெரிவித்தது. குறிப்பாக, அவசரகால சூழ்நிலைகளின்போது மின் உற்பத்தி குறைக்கப்படும்போது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.


இது தவிர, கடந்த ஆண்டு மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், அதிகரித்து வரும் பசுமை மின் உற்பத்தியானது நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டு வரம்புகளுடன் மோதியதால், சூரிய ஒளி உச்சத்தில் இருந்த நேரங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பெருமளவில் குறைக்கப்பட்ட சிக்கலை சமீபத்திய மத்திய மின்சார ஆணைய (CEA) அறிக்கை ஒரு முக்கியப் பிரச்சினையை எடுத்துக்காட்டியுள்ளது.


இந்தியாவின் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் கணிசமான பகுதி, 55% குறைந்தபட்ச தொழில்நுட்பச் சுமைக்கு (minimum technical load (MTL)) கீழே செயல்பட இயலாது என அந்த அறிக்கை தெரிவித்தது. குறைந்தபட்ச தொழில்நுட்பச் சுமை (MTL) என்பது, ஒரு அனல் மின் நிலையம் நிறுத்தப்படாமல் பாதுகாப்பாக இயங்கக்கூடிய மிகக் குறைந்த நிலையான உற்பத்தி அளவாகும்.


தற்போது தெரிந்து கொள்ளும் நிலை :


இந்தியா, மின் உற்பத்தி நிலையங்கள், விநியோகப் பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் மொத்த நுகர்வோரை இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய மின்கட்டமைப்பை இயக்குகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையில் சமநிலையின்மை ஏற்பட்டால், அமைப்பின் நிலை பாதிக்கப்படுகிறது. அமைப்பின் நிலையானது அனுமதிக்கப்பட்ட வரம்பு 49.900 ஹெர்ட்ஸ் – 50.050 ஹெர்ட்ஸ் ஆகும். இருப்பினும், கடந்த ஆண்டு மே மாதத்தில், அமைப்பின் நிலை இந்திய மின்சாரக் கட்டமைப்பு குறியீட்டின் (Indian Electricity Grid Code (IEGC)) இயக்க வரம்பிற்கு மேல் கிட்டத்தட்ட 20% நேரம் இருந்ததாக சமீபத்திய மத்திய மின்சார ஆணைய (CEA) அறிக்கை கூறியது. சூரிய மின் உற்பத்தி நேரங்களில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்த உயர் அதிர்வெண் நிலைமைகள், உபரி விநியோகத்தின் அழுத்தத்தைப் பிரதிபலித்தன.


மூன்றாம் நிலை துணை இருப்பு சேவைகளுக்கான (Tertiary Reserve Ancillary Services (TRAS)) விரிவான நடைமுறையின்கீழ், அவசரகால சூழ்நிலைகளின் போது மின் உற்பத்தி குறைக்கப்படும்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்உற்பத்தி நிலையங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. மின்சாரச் சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஆற்றல் கட்டண விகிதத்தில் அவர்களுக்குப் பணம் செலுத்தப்படுகிறது. இந்த இழப்பீடு மின் அமைப்பு முழுவதும் பகிரப்பட்டு, மின்சாரக் கட்டணங்கள் மூலம் மறைமுகமாக நுகர்வோருக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, உற்பத்தி செய்யப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு நுகர்வோர் பணம் செலுத்த நேரிடுகிறது.                   


Original Link: What is the concept of “flexible thermal power generation? 


Share:

'Nor’westers' (வடமேற்கு புயல்கள்) என்பவை எவை? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :

கரஞ்சியா (Karanjia) துணைப்பிரிவின்கீழ் வரும் இரண்டு பஞ்சாயத்துகள், பலத்த காற்றுடன் கூடிய தொடர்ந்து கனமழை, இடியுடன் கூடிய புயல் மற்றும் மின்னலால் கடுமையாகத் தாக்கப்பட்டன. இதனால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன, கூரை வீடுகளும் சேதமடைந்தன. 


உயிரிழப்புகள் குறித்து முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கவலை தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு அவர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும் (ex gratia) முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்தார்.


மயூர்பஞ்ச் (Mayurbhanj) மாவட்ட ஆட்சியரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள சூழலை ஆய்வுசெய்து சேதங்களின் அளவை மதிப்பிடுவார்கள். இந்த மதிப்பீட்டிற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.


உங்களுக்குத் தெரியுமா?


தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) பாடப்புத்தகங்களின்படி, அதிக காற்றழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த காற்றழுத்தப் பகுதிக்கு காற்று நகர்வதே 'காற்று' (Wind) என்று அழைக்கப்படுகிறது.


காற்றைப் பரவலாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:


நிரந்தரக் காற்றுகள் (Permanent winds) : வர்த்தகக் காற்றுகள் (Trade winds), மேற்குக் காற்றுகள் (Westerlies) மற்றும் கிழக்குக் காற்றுகள் (Easterlies) ஆகியவை நிரந்தரக் காற்றுகளாகும். இவை ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையில் தொடர்ந்து வீசுகின்றன.


பருவக்காலக் காற்றுகள் (Seasonal winds) : இக்காற்றுகள் வெவ்வேறு பருவங்களில் தங்கள் திசையை மாற்றிக்கொள்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் வீசும் பருவக்காற்றுகளைக் (Monsoons) குறிப்பிடலாம்.


உள்ளூர்க் காற்றுகள் (Local winds) : இக்காற்றுகள் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே வீசுகின்றன. இவை நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்திலோ அல்லது ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்திலோ வீசுகின்றன. நிலக்காற்று (land breeze) மற்றும் கடல்காற்று (sea breeze) ஆகியவை இதற்கு உதாரணங்களாகும். 'லூ' (Loo) எனப்படும் வெப்பக்காற்று மற்றொரு உதாரணமாகும்.


தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) பாடப்புத்தகங்களின்படி, வெப்பக் காலப் பருவத்தின் ஒரு தனித்துவமான அம்சம் 'லூ' (Loo) காற்று ஆகும். இவை வட மற்றும் வடமேற்கு இந்தியாவில், பகல் நேரங்களில் வீசும் பலத்த, வேகமான, வெப்பமான மற்றும் வறண்ட காற்றுகளாகும். சில நேரங்களில் இவை மாலை நேரம் வரையிலும் தொடர்ந்து வீசக்கூடும். இக்காற்றுகள் மீது நேரடியாக மோதுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். வட இந்தியாவில் மே மாதத்தில் புழுதிப் புயல்கள் (Dust storms) ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்றாகும். இப்புயல்கள் வெப்பநிலையைக் குறைப்பதன் மூலமும், லேசான மழை மற்றும் குளிர்ந்த காற்றைக் கொண்டுவருவதன் மூலமும் தற்காலிக நிவாரணத்தை அளிக்கின்றன. இக்காலமே, பலத்த காற்றுகள், கனமழை மற்றும் பெரும்பாலும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய இடியுடன் கூடிய புயல்கள் ஏற்படுவதற்கான பருவமாகவும் திகழ்கிறது. மேற்கு வங்கத்தில், இப்புயல்கள் 'கால் பைசாகி' (Kaal Baisakhi) என்று அழைக்கப்படுகின்றன. கோடைக்காலத்தின் இறுதியில், குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், பருவமழைக்கு முந்தைய சாரல் மழைப்பொழிவு சாதாரணமாகிவிடுகிறது. குறிப்பாகக் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. இவை மாம்பழங்கள் விரைவாகப் பழுக்க உதவுவதால், பெரும்பாலும் 'மாம்பழச் சாரல்' (Mango showers) என்று குறிப்பிடப்படுகின்றன. 


கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தெற்கு நேபாளம், பூட்டான் மற்றும் வங்காளதேசம் பகுதிகளில் உருவாகும் வடமேற்குக் காற்றுகள், சூறாவளிக் காற்றுடன் கூடிய மிகவும் கடுமையான இடியுடன் கூடிய புயல்களாகும். இந்த கோடையில் வடமேற்குக் காற்றுகளின் செயல்பாடு குறைவாக இருந்தபோதிலும், ஏப்ரல் மற்றும் கோடை மாதங்களின் தொடக்கத்தில் அவ்வப்போது நிகழ்வுகள் ஏற்பட்டன.


கோடையின் ஆரம்பகால மாதங்களான மார்ச் மற்றும் ஏப்ரலில், இந்தப் பகுதிகளில் பகல் நேரங்களில் நிலப்பரப்பு வெப்பமடைவது, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் துணை இமயமலை மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனத்தைத் (convection) தூண்டுகிறது.


இந்த வெப்பச்சலன மேகங்கள் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் நோக்கி நகரும்போது, ​​வங்காள விரிகுடாவில் நிலவும் வெப்பமான, ஈரப்பதமான காற்றுடன் வடமேற்குக் காற்றுகள் கலந்து, குறிப்பிடத்தக்க காற்றுத் தொடர்ச்சியின்மையை ஏற்படுத்துகின்றன. மேலும், உள்ளூர் மலைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி, கடல் காற்றுடன் இணைந்து, இடியுடன் கூடிய மழை மேகக் கூட்டங்கள் உருவாகுவதற்கு உகந்ததாக அமைகின்றன. இந்த இடியுடன் கூடிய புயல் நிகழ்வுகள் பொதுவாக பிற்பகலில் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும்.



Original Link: What are Nor’westers? 


Share:

புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடரானது, புள்ளிவிவரம் மீதான நம்பகத் தன்மையை மேம்படுத்துகிறதா? - புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல. அது நிதிசார் விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது மற்றும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, அடிப்படை ஆண்டு (base year) மாறும்போது, ​​பொருளாதார வளர்ச்சியின் தரவுகள் அதற்கேற்ப மாறக்கூடும். ஆனால், இந்தப் புதிய தொடர் ஒரு வலுவான கேள்விக்கான பதிலையும் அளிக்கிறதா? இதன் பொருள், இந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக, நிலையானதாக மற்றும் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதா என்பதைக் காட்டுகிறதா?


இன்று உலகளாவிய பொதுக் கடன் அதிகரித்து வரும் சூழலிலும், அதே நேரத்தில், நிதி நிலைத்தன்மை குறித்த கவலைகள் பெருகி வரும் நிலையிலும், 'கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்' (debt-to-GDP ratio) போன்ற பேரியல் பொருளாதாரக் குறியீடுகள், பொருளாதார நிலைத்தன்மை குறித்த மிக முக்கியமான மதிப்பீட்டை வழங்குகின்றன. நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட 'நிதி ஆரோக்கியக் குறியீடு-2026' (Fiscal Health Index (FHI)), சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய 'நிதி கண்காணிப்பு அறிக்கையை' (Fiscal Monitor) மேற்கோள் காட்டி, ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்த பத்தாண்டின் முடிவில் உலகளாவிய பொதுக் கடன், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 100%-ஐ எட்டக்கூடும்.


இந்தச் சூழலில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றுவது என்பது வெறும் ஒரு தொழில்நுட்பரீதியான மேம்படுத்தலைவிட, அதற்கு பரந்த முக்கியத்துவம் உள்ளது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடு அளவிடப்படும் கட்டமைப்பையும், நிதிசார் அளவீடுகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு விளக்கப்படும் முறையையும் இது மாற்றக்கூடும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடப்படும் ஒரு முக்கியச் செய்தி மட்டுமல்ல, இது பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இது நிதி விகிதங்களை வடிவமைக்கிறது, பணவியல் கொள்கையை பாதிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை ஆண்டு மாற்றப்படும்போது, ​​பொருளாதார வளர்ச்சியின் தரவுக்கான விளக்கமும் மாறக்கூடும்.


புதிய தரவுத் தொகுப்புகள் கூறுவது என்ன?


2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், பொருளாதாரத்தின் மாறிவரும் வேகத்தைப் பிரதிபலிக்கின்றன. கடந்த மாதம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நாட்டின் பொருளாதார உற்பத்தியைப் பற்றிய விரிவான மற்றும் முழுமையான கண்ணோட்டத்தை வழங்குவதற்கான மூன்று முக்கியமான தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது.


முதலாவதாக, 2025-26 நிதியாண்டிற்கான தனது இரண்டாவது முன்மதிப்பீட்டை அமைச்சகம் வெளியிட்டது. திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டின்படி, 2025-26 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2024-25 நிதியாண்டில் பதிவான 7.1 சதவீதத்தைவிடச் சற்று அதிகமாகும். அடிப்படை ஆண்டு மாற்றத்திற்குப் பிறகும் பொருளாதார வளர்ச்சி நிலையாகவே நீடித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


இரண்டாவதாக, 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) (அக்டோபர்-டிசம்பர் 2025) மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களை இந்த அமைச்சகமானது வெளியிட்டது. இந்த ஆண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) 8.6 சதவீதம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் மட்டும், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 84.54 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பிரதிபலிக்கிறது. பொருளாதாரச் செயல்பாடுகள் ஆண்டு முழுவதும் வலுவாகவே இருந்துள்ளன என்பதை இந்தக் காலாண்டுத் தரவுகள் காட்டுகின்றன.


மூன்றாவதாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரில் (GDP series) பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு முறையிலான மாற்றங்களை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி எவ்வாறு புதிய அடிப்படை ஆண்டின்கீழ் மாறுபட்ட முறையில் அளவிடப்படுகிறது என்பதை இந்தக் குறிப்பு விளக்குவதால், இந்தப் புள்ளிவிவரங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று இந்தக் குறிப்பு விளக்குகிறது..


திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு (revised base year) ஏன் தேவைப்பட்டது?


அடிப்படை ஆண்டு (Base Year) என்பது, பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கி, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஆண்டாகும். இருப்பினும், பொருளாதாரங்கள் காலப்போக்கில் மாற்றமடைகின்றன. ஒரு பழைய அடிப்படை ஆண்டை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தினால், அதன் விளைவாகக் கிடைக்கும் ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும்.


2011-12 மற்றும் 2022-23-க்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு தெளிவான மாற்றத்திற்கு உள்ளானது. 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதால் வணிகங்கள் மேலும் முறைப்படுத்தப்பட்டன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் (Digital payment systems) கணிசமாக அளவில் வளர்ந்தன. ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) இந்தியர்களிடையே அனைத்துப் பிரிவுகளிலும் விரும்பப்படும் பணப்பரிவர்த்தனை முறையாக மாறியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வேகமாக விரிவடைந்து, தூய்மையான ஆற்றல் மூலங்களை நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது.


இந்த முன்னேற்றங்கள் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளிலும் ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தன. மேலும், பெருந்தொற்று ஆண்டுகள் (2019-20 மற்றும் 2020-21) உற்பத்தி மற்றும் தேவையைச் சீர்குலைத்தன. இதன் காரணமாக, பொருளாதாரத்தை அளவிடுவதற்கான ஒப்பீட்டு ஆண்டுகளாக இந்த ஆண்டுகள் பொருத்தமானவையாக அல்ல.


எனவே, 2022-23-ஐ புதிய அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுப்பது, பெருந்தொற்றுக்குப் பிந்தைய, நிலையான ஒரு பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள் புதிய துறைகளையும் மாறிவரும் போக்குகளையும் மிகவும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இருப்பினும், இதில் ஒரு முக்கியமான வரம்பு உள்ளது. பழைய மற்றும் புதிய அடிப்படை ஆண்டை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி விகிதங்களை நேரடியாக ஒப்பிட முடியாது. திருத்தப்பட்ட பழைய தரவுத் தொடர் வெளியிடப்படும் வரை, பொது விவாதங்கள் புதிய தரவுகளிலிருந்து மிக விரைவாக நீண்டகால முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


திருத்தப்பட்ட தொடரின் ஒரு முக்கிய பலம், அது அதிக தரவு மூலங்களைப் பயன்படுத்துவதாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு பெரும்பாலும் கணக்கெடுப்புகளுக்கு இடையேயான வெளிப்புறகணிப்புகளைச் (extrapolations) சார்ந்திருந்தது. இது குறிப்பாக முறைசாரா மற்றும் பதிவு செய்யப்படாத துறைகளுக்குப் பொருந்தியது. புதிய கட்டமைப்பு, பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வருடாந்திர தரவைப் பயன்படுத்துகிறது. முறைசாரா நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் பெரும் பங்கை வழங்கும் ஒரு நாட்டிற்கு, இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.


இப்போது நிர்வாகத் தரவுகள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி தரவுகள், மாநிலங்கள் முழுவதும் தனியார் பெருநிறுவனங்களின் உற்பத்தியைப் பகிர்ந்தளிக்க உதவுகின்றன மற்றும் காலாண்டு மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு (Public Financial Management System (PFMS)) அரசாங்கச் செலவினங்களை மிகவும் சரியான நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இ-வாகன் தரவுத்தளத்திலிருந்து (e-Vahan portal) பெறப்படும் வாகனப் பதிவுகூட, நுகர்வை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


பதிலீட்டு விகிதங்களிலிருந்து உயர்-அதிர்வெண் டிஜிட்டல் பதிவுகளுக்கு (high-frequency digital records) மாறும் இந்த மாற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. இருப்பினும், இது புதிய கேள்விகளையும் எழுப்புகிறது. நிர்வாகத் தரவுகள் முக்கியமாக முறைசார்ந்த பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதால், முறைசாரா அல்லது ரொக்க அடிப்படையிலான பரிவர்த்தனைகள் போதுமான அளவு பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.


பொருளாதாரம் மேலும் முறைசார்ந்ததாக மாறும்போது, அளவிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கக்கூடும். தரவுப் பதிவு முறைகள் மேம்படுவதன் காரணமாக இது நிகழக்கூடும். இதன் பொருள், உண்மையான உற்பத்தி எப்போதும் அதிகரித்துள்ளது என்பதல்ல. எனவே, உண்மையான வளர்ச்சிக்கும் மேம்பட்ட புள்ளிவிவரத் தெளிவுக்கும் இடையிலான வேறுபாடு, புதிய தரவுகளின் பகுப்பாய்வுக்கு முக்கிய மையமாக உள்ளது.


பணவாட்டக் கட்டமைப்பின் விரிவாக்கம்


மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று, மிக முக்கியமானவற்றில் ஒன்றாகவும் பணவாட்டக் கட்டமைப்பின் (deflation framework) விரிவாக்கமாகும். முன்னதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் சுமார் 180 விலைக் குறியீடுகளைச் சார்ந்திருந்தன. இப்போது, திருத்தப்பட்ட தொடரானது 600-க்கும் மேற்பட்ட நுணுக்கமான, பொருள்-நிலை பணவாட்டக் காரணிகளைப் பயன்படுத்துகிறது.


இது ஏன் முக்கியமானது? உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் எவ்வளவு சிறப்பாக அளவிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது. பணவீக்கம் மோசமாக அளவிடப்பட்டால், உண்மையான வளர்ச்சியின் எண்ணிக்கைகள் துல்லியமற்றதாகிவிடும். முன்னர், பெரிய நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) அல்லது மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index (WPI)) போன்ற ஒட்டுமொத்தக் குறியீடுகளுக்குப் பதிலாக, இப்போது தனிப்பட்ட கூறுகள் குறிப்பிட்ட துணைக்குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, காய்கறி நுகர்வைச் சரிசெய்ய காய்கறி விலைகள் குறைக்கின்றன. ஆடைச் செலவினங்களைச் சரிசெய்ய ஆடை விலைகள் குறைக்கின்றன. இயந்திரங்கள், இயந்திரங்களுக்கென பிரத்யேகக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. கட்டுமானம், விரிவான உள்ளீட்டு-நிலை விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது.


இது துறைகளுக்கிடையேயான சிக்கல்களைச் சரிசெய்கிறது. அதாவது, ஒரு துறையில் ஏற்படும் கடுமையான விலை உயர்வு, மற்ற துறைகளில் உண்மையான வளர்ச்சியை தவறாகப் பாதிக்கக்கூடும். இந்த மாற்றம் அந்தப் பிரச்சனையைச் சரிசெய்கிறது. இந்தச் சீர்திருத்தம் தொழில்நுட்பரீதியானது. ஆனால் அதன் ஒட்டுமொத்த தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.


வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை மூலம் முரண்பாடுகளைக் குறைத்தல்


தேசிய கணக்கியலில், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) உற்பத்தி மற்றும் செலவின அணுகுமுறைகளுக்கு இடையிலான புள்ளிவிவர வேறுபாடு ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொடரானது வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை (Supply and Use Table (SUT)) கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது. இந்தக் கட்டமைப்பு மொத்த வழங்கல், மொத்தப் பயன்பாட்டுடன் ஒப்பிடுகிறது. இது, மொத்த வழங்கல் உற்பத்தி மற்றும் இறக்குமதிகள் அடங்கும். மொத்தப் பயன்பாட்டில் நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அடங்கும். இது தரவுத்தொகுப்புகளுக்கு இடையேயான முரண்பாடுகளைக் குறைக்க உதவுகிறது. இந்த அணுகுமுறை தரவுகளுக்குள் நிலைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துகிறது.


2025-26 நிதியாண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடரின் ஒரு முக்கிய தாக்கமானது நிதி விகிதங்களைப் பாதிக்கும். நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை அத்தகைய விகிதங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்த விகிதங்களில், பற்றாக்குறையானது கடன் தொகுதியாகவும் (numerator), மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பகுதியாகவும் (denominator) இருக்கும். மறுஅடிப்படைப்படுத்தல் (rebasing) அல்லது சிறந்த அளவீடு காரணமாக பகுதி அதிகரிக்கும்போது, உண்மையான பற்றாக்குறை அல்லது கடன் மாறாமல் இருந்தாலும்கூட, விகிதம் தானாகவே குறைகிறது. இது பகுதி விளைவு (denominator effect) என்று அழைக்கப்படுகிறது.


நிதிப் பற்றாக்குறை-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:


  • தொகுதி – நிதிப் பற்றாக்குறை. இது ஓர் ஆண்டில் அரசாங்கம் வாங்கும் கடனைக் குறிக்கிறது. 


  • பகுதி – மொத்த உள்நாட்டு உற்பத்தி. இது பொருளாதாரத்தின் அளவைக் குறிக்கிறது.


கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்:


  • தொகுதி – மொத்த பொதுக் கடன்.

  • பகுதி      – மொத்த உள்நாட்டு உற்பத்தி.


இதற்கு ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அரசாங்கக் கடன் 100 ஆகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 ஆகவும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 50 சதவீதம் ஆகும். இப்போது, மேம்பட்ட அளவீட்டின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 220-ஆக உயர்த்தப்படுகிறது என்றும், கடன் 100 ஆகவே நீடிக்கிறது என்றும் ஒரு உதாரணமாகக் கொள்வோம். அரசாங்கம் ஒரு ரூபாய் கூட திருப்பிச் செலுத்தாத போதிலும், இந்த விகிதம் சுமார் 45 சதவீதமாகக் குறைகிறது.


காகிதத்தில், நிதி நிலைமை வலுவாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், எதுவும் மாறவில்லை. இதனால்தான் புள்ளிவிவர மேம்பாட்டை நிதி ஒருங்கிணைப்பு என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. உண்மையான ஒருங்கிணைப்பு என்பது அதிக வருவாய், கட்டுப்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் குறைந்த கடன் வாங்குதல் போன்ற வருவாயிலிருந்து வருகிறது. ஒரு பகுதியை (denominator) பொதுவாக அதிகரிப்பதால் மட்டும் இது வந்துவிடுவதில்லை.


சந்தைகள் மற்றும் தரமதிப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, கடன் வாங்கும் போக்கும், வட்டி செலுத்துதலை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திறனுமே முக்கியமானவை. மறுஅடிப்படைப்படுத்தலால் (rebasing) ஏற்படும் குறைந்த விகிதம், நிலைத்தன்மை குறித்த கேள்வியை மாற்றுவதில்லை. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) புதிய அடிப்படையுடன் சீரமைக்கப்படும்போது, அவை இதேபோன்ற சரிசெய்தல்களை எதிர்கொள்ளும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட கடன் வாங்கும் வரம்புகள் இயல்பாகவே மாறக்கூடும்.


பணவியல் கொள்கையைப் பொறுத்தவரை, இதன் தாக்கங்கள் பொதுவாக முக்கியமானவை. மிகவும் துல்லியமான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறதா அல்லது வேகம் குறைகிறதா என்பதை இந்திய ரிசர்வ் வங்கி புரிந்துகொள்ள உதவுகிறது. மேம்பட்ட தரவுகள் பணவீக்க மதிப்பீடு மற்றும் வட்டி விகித முடிவுகளை மேம்படுத்துகின்றன.


திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன செய்கிறது?, என்ன செய்யவில்லை?


திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரானது, இந்தியா தனது பொருளாதாரத்தை அளவிடும் முறையை மேம்படுத்துகிறது. இது மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் முறைசாராத் துறையை மிகவும் சீராகக் கண்காணிக்கிறது. இது மிகவும் விரிவான விலைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பணவீக்கம் சரிசெய்தல்களை மிகவும் துல்லியமாகவும், உண்மையான வளர்ச்சி மிகவும் கவனமாகவும் அளவிடப்படுகிறது.


மேலும், வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளின் (Supply and Use Tables) பயன்பாடு, உற்பத்தி மற்றும் செலவின மதிப்பீடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) போன்ற நிர்வாக அமைப்புகள் மிகவும் சரியான நேரத்தில் தரவுகளை வழங்குகின்றன. காலாண்டு மற்றும் ஆண்டு எண்ணிக்கைகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எளிமையாகச் சொன்னால், அளவீட்டுக்கான கணக்கீடுகள் மிகவும் துல்லியமாகியுள்ளது.


ஆனால் ஒரு சிறந்த அளவீடு, அதன்மீது நிற்கும் நபரை மாற்றிவிடுவதில்லை. மேம்பாடுகளுக்குப் பிறகும்கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியால் யார் பயனடைகிறார்கள் என்பதைக் காட்டுவதில்லை. அது சமத்துவமின்மை, வீட்டில் செய்யப்படும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் அல்லது உற்பத்தியின் சுற்றுச்சூழல் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதில்லை. மேலும், இன்றைய 7 சதவீத வளர்ச்சி விகிதம் நாளை போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதற்கும் அது உத்தரவாதம் அளிப்பதில்லை.


ஒரு பொருளாதாரம் எவ்வளவு உற்பத்தி செய்கிறது என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடுகிறது. ஆனால், அந்த உற்பத்தி எவ்வளவு நியாயமாகப் பகிரப்படுகிறது என்பதை அது அளவிடுவதில்லை. இந்தப் புதிய தொடர் புள்ளிவிவர நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. ஆனால் அது மட்டுமே ஒரு வலுவான கேள்விக்குப் பதிலளிப்பதில்லை. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதா? என்பதுதான்.



Original Link: Does the new GDP series strengthen statistical credibility?


Share: