சீனாவைத் தடுப்பதில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் -அசோக மோடி

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு நிபுணத்துவத்தை அதிகளவில் நம்பியுள்ளது. குறிப்பாக  சீனாவின் நிபுணத்துவத்தை சார்ந்துள்ளது.


சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்திய அதிகாரிகள் அதிக விசா வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்திய வணிகங்களுக்கு அவர்களின் உதவி அவசியம் தேவை. இதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டு துறையின் செயலாளரானா ராஜேஷ் குமார் சிங் இந்திய நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று சீன மற்றும் இந்திய தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க திறன் இடைவெளி இருப்பதாக நிறுவனங்களின் கூற்றை ஏற்றுக்கொண்டார்.


வேலூரைச் சேர்ந்த காலணி உற்பத்தியாளர் ஒருவர் இந்த இடைவெளியை விளக்கினார். சீன வல்லுநர்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று அவர் கூறினார். இந்தியத் தொழிலாளர்கள் 100 பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் அதே வளங்களைக் கொண்டு சீனர்களால் 150 பொருட்களைத் தயாரிக்க முடியும் என்றார்.


சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக விசா வழங்குவதற்கான அழைப்பை இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஆதரிக்கிறார். 


இந்திய வணிகங்கள், காலணி மற்றும் ஜவுளி முதல் பொறியியல், மின்னணுவியல் வரை, சீனாவிலிருந்து இயந்திரங்களை வாங்கியுள்ளன.  இருப்பினும், சீன தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியின்றி அவர்களால் இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்ய முடியாது. இயந்திரங்கள் செயலிழந்து கிடப்பதையும், ஏற்றுமதி ஆர்டர்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் இந்திய தொழில் சங்கங்களின் தலைவர்கள் தொடர்ந்து அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறார்கள். கௌதம் அதானியின் சோலார் உற்பத்தி நிலையமும் சீனத் தொழிலாளர்களுக்கான விசாக்களுக்காகக் காத்திருக்கிறது.


இந்தியாவின் குறிப்பிடத்தக்க திறன் பற்றாக்குறையை ஒப்புக்கொள்வது அவசியம்.  எளிமையான, உழைப்பு மிகுந்த வேலைக்கு கூட நிறைய சிறப்பு அறிவு தேவை என்பதற்கான தெளிவான சான்றுகளைக் காண்பது அரிது.. சீனா கடந்த 40 வருடங்களாக இந்த நிபுணத்துவத்தில் முன்னேரியுள்ளது. இது உலகின் உற்பத்தி மையமாக சீனாவை மாற்றியது. சீன வல்லுநர்கள் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெருவார்கள். இருந்த போதிலும், சர்வதேச நிபுணர்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி சீன நிபுணர்களை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்பாடு சிக்கலாக உள்ளது. உலகத் திறன் வரிசையில் மிகக் குறைந்த படிகளில் இந்தியா கால் பதிக்க சீன வல்லுநர்கள் உதவ முடியும். இந்த முன்னேறும் வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


சீனர்களுக்கு அதிக விசா வழங்குவதற்கான வாக்குறுதியை அரசாங்கம் ஏற்கனவே தாமதப்படுத்தி வருகிறது. இந்த தருணத்தில் உண்மையான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பரிதாபகரமான நிலையில் இந்தியக் கல்வி உள்ளது. இப்படிப் பேசினாலும் உலகமே இந்தியாவுக்காகக் காத்திருக்கவில்லை. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி இல்லாமல், வேலை செழிப்பு நன்றாக இருக்காது. உள்நாட்டுக் கல்வியும் பெருமளவில் மேம்படுத்தப்பட வேண்டும். இது சீனாவிற்கும் பொருந்தும்.  


விசா வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல்


2019ஆம் ஆண்டில், 200,000 சீனர்கள் விசாவைப் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை கனிசமாக குறைந்தது. சீனர்கள் விசா நிபந்தனைகளை மீறியதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்தியாவின் வரிச் சட்டங்களை ஏய்ப்பதற்காகவும் மேலும் அவர்கள் பணமோசடி செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டு, சீனப் பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கை 2,000 ஆகக் குறைந்தது. பாதுகாப்பு சார்ந்த மனநிலை வேரூன்றியுள்ளது. இந்த ஆண்டு, சீன எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்களுக்கு 1,000 விசாக்கள் கூட வழங்கவில்லை


வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகள் சாதகமான கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும், ஒரு கேபினட் அமைச்சர், பெயர் குறிப்பிடாமல் எதிர்பார்ப்புகளைத் தீர்த்தார். சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிகர்களுக்கு பரிசீலிக்கப்பட்ட பின்னரே விசா வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இந்த பரிசீலனைக்கு பயண நிபந்தனைகள் மீறப்படாது என்ற உத்தரவாதம் தேவை. 


சக்திவாய்ந்த தேசிய பாதுகாப்பு வாதம் "தற்சார்பு இந்தியா" (Atmanirbhar Bharat) என்ற வார்த்தையில் உள்ளது. இந்த வார்த்தையின் அர்த்தம் தற்சார்பு இந்திய உற்பத்தியின் பொற்காலம். இந்திய அதிகாரிகள் தன்னம்பிக்கையைத் தூண்டுவதன் முரண்பாட்டை உணரவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் வெளிநாட்டு நிபுணத்துவத்தைச் சார்ந்துள்ளது. இந்த நிபுணத்துவத்தின் பெரும்பகுதி சீனாவிலிருந்து வருகிறது.  

வெளிநாட்டு அறிவை ஒருங்கிணைத்தல்


கிழக்கு ஆசியாவின் பொருளாதார வரலாறு, வெளிநாட்டு அறிவு முக்கியமானது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. ஆனால், போதுமான கல்வியறிவு பெற்ற மக்கள் இருந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும். பலவீனமான இந்தியக் கல்வி வெளிநாட்டு நிபுணத்துவத்தை அவசரமாக்குகிறது. 1980களில், கொரிய வணிகங்கள் வெளிநாட்டு இயந்திரங்களை வாங்கினார்கள். அவர்கள் இந்த இயந்திரங்களை அகற்றி, தலைகீழ் பொறியியல் செய்தனர். அந்த நேரத்தில், கொரியா கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வலுவான கல்வியைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக, அவர்களுக்கு மிகக் குறைந்த மனித உதவி தேவைப்பட்டது. இந்த இயந்திரங்கள் மூலம் வெளிநாட்டு அறிவைப் பெற்றனர். 

 

1980களின் முற்பகுதியில் சீனா தனது விரைவான வளர்ச்சியைத் தொடங்கியது. அந்த நேரத்தில், சீனாவின் கல்வி முறை கொரியாவைப் போல வலுவாக இல்லை. இருப்பினும், கம்யூனிஸ்ட் காலத்தில், சீன ஆரம்பக் கல்வி தரமானதாக இருந்தது. இது சீனாவின் விரைவான வளர்ச்சிக்கான களத்தை அமைத்தது. இது, 1981 இல் உலக வங்கி அறிக்கையால் கணிக்கப்பட்டது. 


உள்நாட்டுத் திறன்களை அதிகரிக்க, டெங் சியாபிங் (Deng Xiaoping) மூத்த கொள்கை வகுப்பாளர்களை சர்வதேச ஆய்வுப் பயணங்களுக்கு அனுப்பினார். உலக அறிவை சீனாவிற்கு கொண்டு வர வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அவர் அழைத்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவின் இந்த கலவையானது சக்திவாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டது. இது சீனாவை உலகின் முன்னணி உற்பத்தி மையமாக மாற உதவியது.  


இந்தியாவும் அதிகப் பள்ளிகளைக் கட்டி அதிக குழந்தைகளைச் சேர்த்து கல்வியை வழ்ங்கியது. இருப்பினும், கற்றல் விளைவுகளின் ஆய்வுகள் இந்த பள்ளிகள் குழந்தைகளுக்கு குறைவான திறம்பட கல்வியைக் கற்பித்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. 


ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி அறிஞரான எரிக் ஹனுஷேக் (Eric Hanushek), இந்தியப் பள்ளி மாணவர்களில் 15% பேர் மட்டுமே சர்வதேச பொருளாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களைப் பெற்றுள்ளனர் என்று கூறுகிறார். மாறாக, 85% சீனக் குழந்தைகள் இந்தத் திறன்களைக் கொண்டுள்ளனர். 


சீனா தனது கல்வி முறையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 2018 முதல், சீனப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Organisation for Economic Co-operation and Development (OECD)) நடத்தப்படும் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டத்தின் (Programme for International Student Assessment (PISA)) ஆய்வில்  உலகத் தரம் வாய்ந்த கற்றல் நிலைகளை அடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.


இந்தியா 2009 இல் சர்வதேச மாணவர் மதிப்பீட்டில் (Programme for International Student Assessment (PISA)) பங்கேற்றது, ஆனால் மோசமான செயல்திறன் காரணமாக விலகியது.


சிவப்பு ராணி இனம் (Red Queen race)


லூயிஸ் கரோலின் (Lewis Carroll’s) த்ரூ த லுக்கிங் கிளாஸ் (Through the Looking Glass) நாவலில் சிவப்பு ராணி கற்பித்த ஒரு அடிப்படைப் பாடத்தை சீனா கற்றுக் கொண்டு அதன் படி செயல்படுகிறது. ஒரே இடத்தில் இருக்க உங்களால் முடிந்தவரை இரண்டு மடங்கு வேகமாக ஓட வேண்டும். நீங்கள் முன்னேற அதை விட வேகமாக ஓட வேண்டும். சீன பல்கலைக்கழகங்கள் உலகின் சிறந்தவை, குறிப்பாக கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறப்பாக உள்ளன. சீன விஞ்ஞானிகள் தொழில்துறை முன்னேற்றத்துடன் தொடர்புடைய பல்வேறு பயன்பாட்டு அறிவியல்களில் முன்னேற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் தொழில்நுட்பத்தில் சீனா உலகில் முன்னணியில் உள்ளது மற்றும் செயற்கை நுண்ணறிவில் முன்னேறி வருகிறது.


சுருக்கமாகச் சொன்னால், உலகளாவிய தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது. இந்த சாதனை மேற்கத்திய தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தலைவர்கள் தங்கள் தோல்வியுற்ற கல்வி முறைகளைச் சரிசெய்வதற்கு பதிலாக, சீன இறக்குமதிகளுக்கு எதிராக நியாயமற்ற போட்டியைக் கூறி வர்த்தக தடைகளை சுமத்துகின்றனர். இருப்பினும், அத்தகைய பாதுகாப்புவாதம், "தொழில்துறைக் கொள்கை" என்று கட்டமைக்கப்பட்டாலும் கூட, அவர்களின் கல்வி முறைகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது.


சீனாவின் முன்னுதாரணத்திலிருந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை. பொருளாதார வல்லுநர்கள் ரோஹித் லம்பா மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர் உழைப்பு மிகுந்த தயாரிப்புகளின் பெரிய உலகளாவிய சந்தைக்கான இந்திய வேலைகளை உருவாக்குவதில் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதற்குப் பதிலாக, தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட சேவை ஏற்றுமதியில் இந்தியா வேலைகளை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த முன்மொழிவு உயர்தர இந்தியப் பல்கலைக்கழகக் கல்வியின் சிறிய அடித்தளத்தை புறக்கணிக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் சீரழிவு குறித்த வரலாற்றாசிரியர் முகுல் கேசவனின் உருக்கமான விவரிப்பு நமக்கு நினைவூட்டுவது போல, இந்தியா, அதன் சில சிறந்த நிறுவனங்களை அகற்றி வருகிறது.


இந்தியாவின் யதார்த்தம்


கோவிட்-19 ஆண்டுகளில் தொழில்நுட்பம் தொடர்பான சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் வேகம் குறைந்துள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழக பட்டதாரிகள் கூட வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆதரவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை நிரலாக்கப் பணிகளில் (basic coding roles) முன்பு பணியாற்றிய பல நபர்கள் இப்போது கிக் பொருளாதாரத்தில் (gig economy) வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். 2023 இல் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக இருந்த IT வேலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை ஒரு பில்லியன் மக்கள் மற்றும் 600 மில்லியன் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சிறியது. 


இந்த நிலை இருந்தபோதிலும், Financial Times இன் மார்ட்டின் வுல்ஃப் (Martin Wolf), இந்தியா, உலகப் பொருளாதார வல்லரசாக மாறுவதற்கான பாதையில் இருப்பதாக கணித்துள்ளார். இந்தியா தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் அதன் பரந்த மக்களுக்கு கண்ணியமான வேலைகளை வழங்குவதற்கும் போராடுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவும் "சீனா-பிளஸ்-ஒன்" வாய்ப்பை (China-plus-one window) இழந்துவிட்டது. இந்த வாய்ப்பை மெக்சிகோ மற்றும் வியட்நாம் பயன்படுத்திக் கொண்டன. மெக்சிகோ மற்றும் வியட்நாமின் சாதகமான இருப்பிடம் மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவை சீன தயாரிப்புகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டபோது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவியது. பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் இரசாயனங்கள் தவிர்த்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவை தவிர்த்து வருகின்றனர்.  இந்தியாவின் உழைப்பு மிகுந்த உற்பத்தி ஏற்றுமதிகள், உலக சந்தைகளில் 1.3% மட்டுமே. இது வியட்நாமின் பங்கை விட குறைவு.


வெளிநாட்டு நிபுணர்கள் இந்தியாவிற்க்கு வருவதை தேசிய பாதுகாப்பு மற்றும் தற்சார்பு நம்பிக்கை ஆகியவைத் தடுக்க இந்தியா அனுமதிக்கக்கூடாது. இந்த நிபுணர்களுக்கான விசாக்கள் தடுக்கப்பட்டால், இந்தியா முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பை இழக்க நேரிடும். பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வியில் நாடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. மேலும், ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சனைகள், உழைப்பு மிகுந்த உற்பத்தி ஏற்றுமதிக்கான இந்தியாவின் வாய்ப்புகளை அச்சுறுத்துகின்றன.  


இந்தியா தனது உலகளாவிய நிலையைப் பற்றி கனவு காண்பதற்குப் பதிலாக அதன் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். உலகளாவிய போட்டி அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கண்ணியமான வேலைகளுக்காக காத்திருப்பதால் அதிக வாய்ப்புகள் இழக்கப்படும். 

 

அசோகா மோடி சமீபத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.



Original article:

Share:

வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமா? - ஹேப்பிமான் ஜேக்கப்

 1990-களில் இருந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களின்  செல்வாக்கு வெளிநாட்டு உறவுகளில் மெதுவாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு கொள்கைகளில் மாநிலங்களை இணைக்க வேண்டுமா என்ற கருத்து மீண்டும் எழுந்துள்ளது.


வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) சமீபத்தில் கேரள அரசாங்கத்தை "வெளிநாட்டு ஒத்துழைப்புக்காக" ஒரு செயலரை நியமித்ததற்காக விமர்சித்தது. "வெளிநாட்டுச் செயலரை" (“external cooperation”) நியமிக்க கேரளா அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியது. 


வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுக்குப் பங்கு இல்லை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. வெளியுறவு, சர்வதேச சட்டம், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் குடியுரிமை ஆகியவை ஒன்றிய பட்டியலில் (Union list) இடம் பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 246-(1) இன் படி, இந்த விவகாரங்கள் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 253-வது பிரிவு இந்தப் பிரச்சினைகளில் சட்டங்களை இயற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் அளிக்கிறது.


கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில்  மாகாணங்கள் சில வெளிநாட்டு விவகாரங்களைக் கையாள முடியும். இந்திய அரசியலமைப்பு மாநிலங்கள் இதைச் செய்ய அனுமதிக்கவில்லை. மேலும், பிரிவு 293(1) மாநிலங்களின் கடன் வாங்கும் சக்தியைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது அவர்கள் சுதந்திரமாக வெளிநாட்டுக் கடன்களைப் பெறமுடியாது.


1990-களில் இருந்து, பல மாநிலங்கள் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. செயல்திறன் மிக்க தலைமை மற்றும் வலுவான தொழில்துறை தளங்களைக் கொண்ட மாநிலங்கள் வெளிநாட்டு வர்த்தக இராஜதந்திரத்தில் இந்த போக்கை தொடர்ந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது,  மாநிலத்தின் பொருளாதாரத் திறனை வெளிப்படுத்துவதற்காக துடிப்பான குஜராத் (Vibrant Gujarat) திட்டத்தை தொடங்கினார். இந்த நடவடிக்கை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை இதுபோன்ற முயற்சிகளைத் தொடங்க தூண்டியது.


 ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தின் வெளிநாட்டுப் பொருளாதார ஈடுபாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏப்ரல் 2015-ல், அவர் ஒன்றிய அரசின் சார்பாக சீனாவில் ஒரு உயர்மட்டக் குழுவை வழிநடத்தினார். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ₹40,232 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் வளர்ச்சிக் கடன்களுக்காக நேரடியாக உலக வங்கியை அணுகியுள்ளன. 1997-ஆம் ஆண்டில், உலக வங்கியிடமிருந்து நேரடியாக கட்டமைப்பு சரிசெய்தல் (adjustment loan) கடனைப் பெற்ற முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசமாகும்.


2017-ஆம் ஆண்டில், முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இருதரப்பு அதிகாரப்பூர்வ மேம்பாடு உதவிக்காக (Official Development Assistance (ODA)) பங்குதாரர்களிடமிருந்து நேரடியாக கடன் வாங்க நிதி அமைப்பில் முன்னேற்றமடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு அனுமதித்தது. அதே ஆண்டு, மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (Mumbai Trans Harbour Link project) திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற்றது.


இப்போது, ​​பல இந்திய மாநிலங்களில் உலக வணிக அமைப்பின் குழுக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian (NRI)) குழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான துறை உள்ளது. 1996 முதல், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கேரளாவில் வசிக்காத கேரள மக்கள் விவகாரங்கள் (non-resident Keralites affairs (NORKA)) துறை உள்ளது. மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும், வெளிநாடுகளில் சொந்த அலுவலகங்களை அமைக்கவோ அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரிகளை நியமிக்கவோ முடியாது.


வெளியுறவுக் கொள்கை விவாதங்களில் மாநிலங்களை ஈடுபடுத்த ஒன்றிய அரசு முயற்சித்துள்ளது. 2000-ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்ய தேசிய ஆணையத்தை  அமைத்தது. மாநிலங்களைப் பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன், ஒன்றிய மாநிலங்களுக்கு இடையேயான சபை (Inter-State Council (ISC)) கலந்தாலோசிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.


2014-ல் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரானபோது, ​​வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்கள் அதிக செல்வாக்கு செலுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. 2013 அக்டோபரில், டெல்லியில் உள்ள தலைவர்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள மக்களையும் வெளியுறவுக் கொள்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். நவம்பர் 2015-ல், வெளியுறவு அமைச்சகம், வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டார். இந்திய அதிகாரிகளுக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை எளிதாக்குவதற்காக வெளியுறவு அமைச்சகம் 2014-ல் மாநிலப் பிரிவை உருவாக்கியது.  


2017-ஆம் ஆண்டில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பல்வேறு வெளியுறவு அமைச்சகச்  சேவைகளை வழங்குவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் 'விதேஷ் பவன்' (Videsh Bhavan’) அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது, ​​ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் வெளியுறவு அமைச்சக கிளைச் செயலகங்கள் உள்ளன. ஆனால், அவை வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.


மாநிலப் பிரிவில் மாநிலப் பிரதிநிதிகள் இல்லை. மாநிலங்கள் தங்கள் கவலைகளைத் தெரிவிக்க உதவும்  மாநிலங்களுக்கு இடையேயான சபை (Inter-State Council (ISC)) செயல்படவில்லை. தாராளமயமாக்கலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் ஒத்துழைப்புக்கான செயலாளரை கேரளா நியமித்தது குறித்த சர்ச்சை தேவையற்றது.  வெளியுறவுக் கொள்கையில் இந்திய மாநிலங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்துவது என்பது பற்றிய உரையாடல்களை மீண்டும் தொடங்க வேண்டும்.



Original article:

Share:

இரயில் பட்ஜெட்டின் மூலதன-செலவு (capex) வரவேற்பை அதிகரிக்கிறது, ஆனால் கவலைகளும் உள்ளன -தலையங்கம்

 இரயில்வே அதிக சரக்குகளை ஈர்க்க வேண்டும் அதே நேரத்தில் பயணிகள் பயணத்திற்கான சிறந்த தேர்வாகவும் மாற வேண்டும்.


சமீபத்திய ஆண்டுகளில் ரயில்வேயின் நிதிநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில்வேக்கு மத்திய அரசு தனது மொத்த பட்ஜெட் ஆதரவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ரயில்வே இப்போது வெளிக் கடன்களை குறைவாக சார்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூலதனச் செலவில் 77 சதவீதம் அதிகரித்துள்ளது, 2024 நிதியாண்டில் ₹2.6 லட்சம் கோடியாக உச்சத்தை அடைந்தது, இந்த முதலீட்டின் கவனம் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை நவீனமயமாக்குவதற்கு உதவுகிறது. சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்களிப்பை உயர்த்துவதற்கான இந்த முயற்சி (2007-08 ல் 52 சதவீதமாக இருந்தது, இப்போது வெறும் 30 சதவீதம்) சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை அதிகரிக்க சில காலம் எடுக்கும்.


பட்ஜெட் நிதியாண்டுக்கான ஆதரவை ₹2.55 லட்சம் கோடியாக அதிகரிக்கிறது. இது 2024 நிதியாண்டில் ₹2.43 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ₹17,000 கோடியாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டிற்கான வெளிநாட்டுக் கடன்கள் ₹10,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முதலீடு மற்றும் திட்டச் செயல்பாட்டின் மீதான வருமானத்திற்கான அளவுகோல்கள் இருக்க வேண்டுமா என்பது முக்கிய கவலை. தற்போது, ​​சரக்கு வருவாயில் எந்த முன்னேற்றமும் இல்லை.


பொருட்களின் வருவாய் வளர்ச்சிக்கான கணிப்பு (growth projection in goods earnings) 6 சதவீதம். அதாவது, கடந்த நிதியாண்டில் ₹1.64 லட்சம் கோடியாக இருந்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ₹1.74 லட்சம் கோடியாக உயரும். இந்த கணிப்பு மிதமானதாக தோன்றுகிறது. 2024 நிதியாண்டிற்க்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, இந்த ஆண்டுக்கான இலக்கான ₹1.75 லட்சம் கோடி பட்ஜெட் திட்டத்திற்குக் கணிசமாகக் குறைவாக இருந்ததால் இது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.


பயணிகளின் வருவாயில் 9.5% அதிகரிப்பு, ₹80,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு சேவைகள் பயணிகளின் பயணத்தை ஆதரிப்பதில் சற்று குறைவான அழுத்தம் இருப்பதாகக் கூறுகிறது. இருப்பினும், இரயில்வே இன்னும் அதிகமான சரக்குகளை ஈர்க்க வேண்டும், அதே நேரத்தில்  பயணத்திற்கான உயர்நிலை விருப்பமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.


PRS இன் பகுப்பாய்வின்படி, கார் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கு 2014 நிதியாண்டில் 1.5% ஆக இருந்து இன்று 16% ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், கடந்த பத்தாண்டுகளில் சரக்கு அளவுகளில் நிலக்கரியின் பங்கு 43% ஆக மாறாமல் உள்ளது. இரும்புத் தாது மற்றும் சிமெண்ட் ஆகியவை முறையே 15% மற்றும் சரக்கு அளவுகளில் 9% ஆகும். கன்டெய்னரைஸ் செய்யப்பட்ட அளவுகள் 7-8% என்ற அளவில் நிலையானதாக உள்ளது. 


கதி சக்தி (Gati Shakti) டெர்மினல்கள் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் வளர்ச்சி அதிக மதிப்புள்ள போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்டி-மாடல் (multi-modal) இணைப்பை வேறு வழிகளில் மேம்படுத்த முடியுமா என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.


திட்டச் செயலாக்கம் தொடர்பான தலைமை கணக்காய்வரின் தணிக்கைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதைத் தவிர, பாதுகாப்பு ஒரு கவலையாக உள்ளது. புதிய லைன்கள் மற்றும் ரோலிங் ஸ்டாக் (பயணிகள் பெட்டிகள்) ஆகியவற்றில் முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால், சிக்னலிங், தகவல் தொடர்பு பணிகள் மற்றும் டிராக் புதுப்பித்தல் ஆகியவற்றில் குறைந்த முதலீடுகளே உள்ளது.


எளிமையாகச் சொன்னால், ரயில்வேயால் அதன் மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்க முடியாது. அதன் வருவாய் சுமார் 2.75 லட்சம் கோடி ரூபாய் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டுகிறது, இதில் சுமார் 2,800 கோடி ரூபாய் மீதமுள்ளது. ரயில்வேக்கு நல்ல வருவாய் கிடைக்காவிட்டால், பட்ஜெட்டில் மூலதன செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.  இயக்க செலவுகளில் மூன்றில் இரண்டு பங்குகள் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு அளிக்கப்படுகிறது இந்த சுமையைக் குறைப்பதற்கு எளிதான தீர்வுகள் எதுவும் இல்லை. உண்மையில், ரயில்வேக்கு முக்கியமான பாதுகாப்பு பணியாளர்கள் தேவை. இறுதியாக, ரயில்வேயில் முதலீடு செய்வது பொருளாதார வருவாயைத் தருகிறது, ஆனால் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதில் செயல்திறன் முக்கியமானது.



Original article:

Share:

ஐ.நா. வரி பேச்சுவார்த்தைகள் குறித்து கார்டியன் கருத்து: தொழிற்கட்சி கடந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரிக்க வேண்டும் -தலையங்கம்

 ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டன் ஒரு வரி புகலிடமாக மாறியது, அப்போது ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் எகிப்திய நிலத்தில் ஒரு இங்கிலாந்து நிறுவனம் வர்த்தகம் செய்து  சட்டத்தில் ஒரு ஓட்டையை உருவாக்கியது பற்றிய வழக்கை முடிவு செய்தது. 1929-ஆம் ஆண்டின் முடிவு, வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் நிறுவனங்களை அமைக்க அனுமதித்தது. மேலும் அவை பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் இங்கிலாந்து குடியிருப்பாளர்களாகக் கருதப்படாது. ஏனெனில் அவை வெளிநாட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, அவை வெளிநாட்டில் இணைக்கப்பட்டிருந்ததால் வரிவிதிப்பிலிருந்து பாதுகாக்கப்படலாம். அந்த தீர்ப்பு, குறைந்தபட்ச பெருநிறுவன வரி (corporate tax) மற்றும் அதிகபட்ச இரகசியத்தை வழங்க நாடுகள் போட்டியிடும் வரி புகலிடங்களின் ஒரு "கடல் கடந்த உலகத்தை" (offshore world) உருவாக்குவதை நோக்கி நகர்ந்தது.


இந்த அமைப்பு விரைவில் முடிவுக்கு வரலாம். அடுத்த மூன்று வாரங்களில், 193 ஐ.நா. உறுப்பு நாடுகள் நியூயார்க்கில் சந்தித்து உலகளாவிய வரி விதிகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாநாட்டிற்கான வரைவு விதிமுறைகளை விவாதிக்கும். ஆப்பிரிக்கக் குழுவின் தலைமையிலான பல நாடுகள், அவை நிகழும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி விதிக்கும் உரிமையை விரும்புகின்றன. இது இயற்றப்பட்டால், பன்னாட்டு நிறுவனங்கள் இலாபங்களை மறைத்து வைக்கும் வரி புகலிடங்களாக செயல்படுவது மட்டும் அல்லாமல், ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி உண்மையான வேலைகளைச் செய்யும் இடங்களில் வரி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்த நாடுகளை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் மரபைக் காண முடியும்.


கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய வரி ஆய்வகம் (EU Tax Observatory), 2022 ஆம் ஆண்டில், நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வெளியே சம்பாதித்த லாபத்தில் 35%, 1 டிரில்லியன் டாலரை வரி புகலிடங்களுக்கு மாற்றியுள்ளன, அரசாங்கங்கள் ஆண்டுதோறும் 240 பில்லியன் டாலர் முதல் 600 பில்லியன் டாலரை இதனால்  இழக்கின்றன. 2023 ஆம் ஆண்டில், ஏழு பெரிய அமெரிக்க மருந்து நிறுவனங்கள் $40 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய லாபத்திற்கு அமெரிக்காவில் வரி செலுத்தவில்லை. பணக்கார நாடுகள் இத்தகைய வரி விதிப்புக்கு உடந்தையாக உள்ளன. பெருநிறுவன இலாபங்கள் பெருகிய போதிலும், உலகெங்கிலும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பயனுள்ள வரி விகிதங்கள் 1975ல் இருந்து மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க பணத்திற்காக ஏங்கும் ஏழை நாடுகள்தான் மிகப்பெரிய இழப்பாளர்களாக உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் வரி இழப்புகள் (47 பில்லியன் டாலர்) அவற்றின் பொது சுகாதார வரவு செலவுத் திட்டங்களில்  (public health budgets) பாதிக்கு சமம்.


ஐக்கிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் நடவடிக்கைகளை முறியடிக்க முயன்ற போது ஐ.நா, வரி பேச்சுவார்த்தைகள் முறையற்ற முறையில் தொடங்கின. இந்த நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரி விதிகளை நடத்தும்போது பணக்காரர்களுக்கு ஆதரவான, பெருநிறுவன-நட்பு (corporate-friendly) வழியை விரும்பின. அதன் 2019 முன்மொழிவுகள் 80% "மறுபகிர்வு செய்யப்பட்ட இலாபங்களை" (redistributed profits) பணக்கார நாடுகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இழக்கும் நிலையில் இருந்தன. அந்த அணுகுமுறை வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகள் மீதான கோபத்தை அதிகரிக்க வழிவகுத்தது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 

(Joseph Stiglitz) சுட்டிக்காட்டியதைப் போல: "வரி தவிர்ப்பு உலகெங்கிலுமான அரசாங்கங்களை அவற்றின் குடிமக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதில் இருந்து தடுத்துள்ளது, இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு பங்களிப்பு செய்வது  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 3,000க்கும் குறைவானவர்களே கிட்டத்தட்ட 15 டிரில்லியன் டாலர் வைத்திருக்கிறார்கள். இது ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ஒன்றியம் ஒருங்கிணைந்த வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (annual GDP) சமம்."   


பணக்கார நாடுகள் இப்போது ஐ.நா. செயல்முறையில் ஈடுபடுகின்றன. இந்த குழப்பத்திற்கு இங்கிலாந்துக்கு ஒரு வரலாற்று பொறுப்பு உள்ளது. அதன் வெளிநாட்டு பிரதேசங்கள் மற்றும் பல நாடுகளின் அமைப்புகளின் வலையமைப்புடன், உலகளாவிய பெருநிறுவனவரி (corporate tax) இழப்பில் கிட்டத்தட்ட கால் பகுதிக்கு இது பொறுப்பாகும். வரி நீதி வலையமைப்பின் (Tax Justice Network) தலைமை நிர்வாகி அலெக்ஸ் கோபாம் (Alex Cobham), வரி ஏய்ப்புக்கு எதிரான அவர்களின் வலுவான நிலைப்பாட்டிற்காக தொழிலாளர் அமைச்சர்களைப் பாராட்டினார். அவர்கள் இப்போது "முந்தைய அரசாங்கத்தின் கொள்கையைத் தொடர்வார்களா மற்றும் ஐ.நா.வின் முயற்சிகளைத் தொடர்ந்து விரக்தியடையச் செய்வார்களா?" என்று அவர் கேட்கிறார்.  அவர்கள் உலக அரங்கில் இங்கிலாந்துக்கு ஒரு புதிய போக்கைக் உருவாக்குவார்களாக மற்றும் வரி துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிப்பவர்களா? சலுகை பெற்ற ஒரு சிலரின் இலாபங்களை விட கொள்கைகள் முன்னுரிமை பெறுகின்றன என்பதை அரசாங்கம் காட்ட வேண்டும் என்கிறார். 



Original article:

Share:

நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரியைக் (long-term capital gains (LTCG) tax) கணக்கிடுவதில் குறியீட்டு என்றால் என்ன? பட்ஜெட்டில் குறியீட்டு நன்மையை அகற்றுவது அதிக வரி செலுத்துவீர்கள் என்று அர்த்தமா? -சுகல்ப் சர்மா

 புதிய கொள்கையால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என்று அரசு கூறுகிறது. மூதாதையர் சொத்துக்களை பராமரித்து வருபவர்கள் அதிக வரி செலுத்த தேவையில்லை என்று  அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், வீட்டு மனை (real estate) சார்ந்த பரிவர்த்தனைகளில் கருப்புப் பணம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 


நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி (long-term capital gains (LTCG) tax) மாற்றங்கள் மிகவும் சர்ச்சைக்குரியதாகிவிட்டன. ஒரு முக்கிய மாற்றம் குறியீட்டு பலனை (indexation benefit) அகற்றுவதாகும். இந்த முடிவு 2024 மற்றும் 2025-க்கான ஒன்றிய பட்ஜெட்டின் ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பு பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரசாங்கம் பல அறிக்கைகளை வெளியிட்டது. இந்த மாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும் அரசு கூறுகிறது.


குறியீட்டின் கருத்து என்ன, நீண்ட கால மூலதன ஆதாயங்கள் கணக்கீடு மற்றும் வரிவிதிப்பு ஆட்சியில் தொடர்புடைய மாற்றங்களிலிருந்து குறியீட்டு நன்மையை அகற்றுவதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?  


குறியீடு  (indexation) என்றால் என்ன? 


குறியீடு என்பது ஒரு சொத்து அல்லது முதலீட்டின் அசல் கொள்முதல் விலையை பணவீக்கத்தைக் கணக்கிடும் செயல்முறையாகும். எளிமையாக, பணவீக்கத்தின் அடிப்படையில் ஒரு சொத்தின் விலையை அது வைத்திருந்த காலத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது. பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. ஒரு சொத்து விற்கப்படும்போது அல்லது முதலீடு திரும்பப் பெறப்படும்போது, ​​கையகப்படுத்தல் செலவைக் கணக்கிடுவது, வைத்திருக்கும் காலத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது. 


பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட கையகப்படுத்தல் செலவு குறியீட்டு விலை கையகப்படுத்தல் (cost of acquisition) என்று அழைக்கப்படுகிறது. ஒரு சொத்து  சொத்தின் ஆதாயம் அல்லது அந்த சொத்தில்  ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கிடப் பயன்படுகிறது. இந்த குறியீட்டு விலையில் கணக்கிடப்படும் வருமானம், கொள்முதல் விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆதாயங்களைக் காட்டிலும் மிகவும் யதார்த்தமானதாகக் கருதப்படுகிறது.


குறியீடு இல்லாமல், குறிப்பாக நீண்ட காலமாக வைத்திருக்கும் சொத்துகளுக்கு, அறிக்கையிடப்பட்ட ஆதாயங்கள் மிக அதிகமாகத் தோன்றலாம். ஆனால், துல்லியமாக இருக்காது. ஏனென்றால், சொத்தின் மதிப்பில் பணவீக்கத்தின் தாக்கம் கருதப்படுவதில்லை. சொத்துக்களின் விற்பனை அல்லது மீட்பின் ஆதாயங்கள் குறியீட்டு இல்லாமல் வரி விதிக்கப்பட்டால், வரி விகிதம் அப்படியே இருக்கும் எனக் கருதி, வரித் தொகை அதிகரிக்கும்.


அரசு இப்போது என்ன செய்தது?


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 2024-25-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் புதிய நீண்ட கால மூலதன ஆதாய விதிகள், சொத்து, தங்கம் மற்றும் பட்டியலிடப்படாத பிற சொத்துக்கள் மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களை  கணக்கிடுவதற்கான குறியீட்டு பலனை நீக்கியது. புதிய நீண்ட கால மூலதன ஆதாய விதிகள் வரி விகிதம் 20%-சதவீதத்திலிருந்து 12.5%-சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


2001-ஆம் ஆண்டுக்கு முன் வாங்கிய சொத்துக்களுக்கு, ஏப்ரல் 1, 2001 நிலவரப்படி அவற்றின் நியாயமான சந்தை மதிப்பின் அடிப்படையில் கையகப்படுத்தல் செலவு இருக்கும். பழைய நீண்ட கால மூலதன ஆதாய விதிகள் அதே கொள்கையைப் பயன்படுத்தியதால் இந்த விதிவிலக்கு உள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பரம்பரை சொத்து அல்லது சொத்து மீதான அதிகப்படியான வரிகள் தடுக்கப்படும் என அரசு கூறுகிறது.


புதிய முடிவு மூலதன ஆதாய வரி முறையை எளிதாக்கும் என்றும் பெரும்பாலான வரி செலுத்துவோரை பாதிக்காது என்றும் அரசாங்கம் கூறுகிறது. பல்வேறு சொத்துக்களுக்கு வெவ்வேறு வரி விகிதங்களை நீக்குவது வரி செலுத்துவோர் மற்றும் வரி அதிகாரிகளுக்கு விஷயங்களை எளிதாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.


மக்களை பதட்டமடையச் செய்தது எது,  அமைதிப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள அரசாங்கத்தைத் தூண்டியது எது? 


குறிப்பாக குடியிருப்பு வீட்டுமனை துறை (residential real estate sector) தொடர்பாக, குழப்பமும் அச்சமும் இருந்தது. இந்த மாற்றங்கள் சொத்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயங்கள், வரியை பெருமளவில் அதிகரிக்கும் என்று மக்கள் கருதினர். இதற்கு தீர்வு காணும் வகையில், நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் விளக்கம் அளித்தது. புதிய முடிவு மூலதன ஆதாய வரி விதிகள், குறியீட்டு பலன் இல்லாவிட்டாலும், பெரும்பாலான சொத்து விற்பனையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.


குறியீடு இல்லாமல் புதிய வரி விகிதம் பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று வருமான வரித்துறை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது. வீட்டு மனை வருமானம் பொதுவாக வருடத்திற்கு 12-16% ஆகும். இது பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது. பணவீக்கத்திற்கான குறியீடு 4-5% ஆகும். இதன் பொருள் பெரும்பாலான மக்கள் வரிகளை சேமிப்பார்கள்  என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானம் வருடத்திற்கு 9-11%-க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே பழைய வரி விகிதம் சிறப்பாக இருக்கும் என்று வருமான வரித்துறை கூறியது. இருப்பினும், வீட்டு மனைத்துறையில்  இத்தகைய குறைந்த வருமானம் ‘யதார்த்தமற்றது மற்றும் அரிதானது’ என்று கருதப்படுகிறது.


புதிய வரி விகிதங்களை பற்றி வருமான வரித்துறை கூறியது:

  

- 5 ஆண்டுகளாக வைத்திருக்கும் சொத்துக்கு, சொத்தின் மதிப்பு 1.7 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரித்திருந்தால், புதிய வரி விகிதம் சிறப்பாக இருக்கும்.  

- 10 ஆண்டுகளாக வைத்திருக்கும் சொத்துக்கு, மதிப்பு 2.4 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரித்திருந்தால், புதிய வரி விகிதம் சிறந்தது.

- 2009-10-ல் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு 4.9 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரித்திருந்தால், புதிய நீண்ட கால மூலதன ஆதாய விதிகள் வரி விதிப்பு சிறப்பாக இருக்கும்.


பணமாற்ற சலுகைகள் மாறாமல் இருக்கும் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியது. பிரிவு 54-EC பத்திரங்களில் மூலதன ஆதாயங்கள் முதலீடு செய்யப்பட்டால் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் குடியிருப்பு விட்டு மனை வாங்க அல்லது கட்ட மூலதன ஆதாயங்கள் பயன்படுத்தப்பட்டால், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


அரசின் விளக்கங்கள் பங்குதாரர்களை திருப்திப்படுத்தியுள்ளதா?


பல்வேறு தொழில்முனைவோர் மற்றும் ஆய்வாளர்கள் குறியீட்டு இல்லாத புதிய வரி முறை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளனர். 3-5 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சொத்துக்களை வைத்திருக்க விரும்பாததால், இரண்டாம் நிலை சந்தையில் அதிக விலைக்கு விட்டு மனைகள் விற்கப்படும் என்று தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.


 ஒரு சொத்தை ஒரு குறிப்பிட்ட நபர் நீண்ட காலமாக வைத்திருந்தால், அதன் மதிப்பு வருடத்திற்கு 10-12% அதிகரித்து இருந்தால், புதிய வரியின் கீழ் அந்த நபர் அதிக வரி செலுத்துவர். 3 முதல் 5 ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்திற்கு சொத்தை வைத்திருப்பது எளிதாக விற்க உதவும். மூலதன மதிப்பு மதிப்பீட்டிற்கு குறுகிய கால இருப்பு 3-5 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று ஜே.எல்.எல் இந்தியாவின் இயக்குனர் ரோஹன் சர்மா இந்த வார தொடக்கத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.


சில எதிர்க்கட்சியினர் மற்றும் தொழில்துறை பார்வையாளர்கள் புதிய ஆட்சி  கொண்டுவந்த இந்த வரிமுறை குறித்து கவலைகளை தெரிவித்தனர். சொத்து பரிவர்த்தனைகளில் பணத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். விற்பனையாளர்கள் தங்கள் வரியை குறைக்க பணபத்திரத்தில் பரிவர்த்தனை மதிப்பைக் குறைக்க வலியுறுத்தலாம்.


புதிய நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி முறையில், மூதாதையர் என்பது ஜூலை 2024-ல் பழைய ஆட்சி முடிவடையும் வரை குறியீட்டுப் பலனைத் தொடர்வதைக் குறிக்கும். இது 2001-க்கு முன்பு வாங்கிய சொத்துகளைப் போன்ற சொத்துக்களின் தற்போதைய நியாயமான சந்தை மதிப்பை அடிப்படையாகப் பயன்படுத்துவதை குறிக்கிறது. எவ்வாறாயினும், புதிய நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி விகிதத்தை 7.5 சதவீத புள்ளிகளால் குறைப்பது மூதாதையர் வழங்கிய சொத்துக்களுக்கு நல்ல மதிப்பை தரும் என்று அரசாங்கம் கூறுகிறது.



Original article:

Share:

விடுவிக்கப்பட்ட நபரின் 'மறக்கப்படுவதற்கான உரிமை' (right to be forgotten) குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவு : அந்த உரிமை என்ன?, இதற்கு முன்பு நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்பளித்தன?

 மறக்கப்படுவதற்கான உரிமையை (right to be forgotten) பரிந்துரைக்கும் சட்டரீதியான கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. இந்த உரிமையின் வரையறைகளை வடிவமைக்கும் ஒரு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.


கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த வழக்கின் முடிவு இந்தியாவில் "மறக்கப்படுவதற்கான உரிமையை" (right to be forgotten) பாதிக்கும். இந்த உரிமை ஐரோப்பிய தகவல் தனியுரிமை ஒழுங்குமுறையில் "அழிப்பதற்கான உரிமை" (right to erasure) என்றும் அழைக்கப்படுகிறது. மறக்கப்படும் உரிமை என்பது அடிப்படை உரிமையா என்பதை உச்ச நீதிமன்றம் இப்போது தீர்மானிக்க வேண்டும். அப்படியானால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிற அடிப்படை உரிமைகளுடன் இந்த உரிமை எவ்வாறு தொடர்புடையது என்பதையும் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.


இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உரிமைக்கான வழக்கின் சவாலை மறுஆய்வு செய்யும். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது எனவும், பிப்ரவரி 27 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் இந்திய கானூன் என்ற சட்டத் தேடல் இணையதளத்திற்கு ஒரு தீர்ப்பை நீக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு 2014-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி தொடர்பான வழக்கில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. விடுவிக்கப்பட்ட நபர், சட்ட போர்ட்டலில் பகிரங்கமாக கிடைக்கும் தீர்ப்பில் தனது பெயர் இருப்பதால் தனக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி 2021-ல் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.


மறக்கப்படுவதற்கான உரிமை (right to be forgotten) என்ன?


மறக்கப்படுவதற்கான உரிமை (right to be forgotten) என்பது ஒருவரின் டிஜிட்டல் தடத்தை அகற்றுவதுடன், இணையத் தேடல்களில் தோன்றும் தகவல்களும் இதில் அடங்கும். இந்தத் தகவல் தனியுரிமைக்கான உரிமையை மீறும் போது இது பொருந்தும். மே 2014-ல், ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பயன்பாடு மற்றும் விளக்கம் தொடர்பான விஷயங்களில் மிக உயர்ந்த நீதிமன்றமான ஐரோப்பிய ஒன்றியத்தின் லக்சம்பேர்க்கை தளமாகக் கொண்ட நீதிமன்றம் (Court of Justice of the European Union (CJEU)), மறக்கப்படுவதற்கான உரிமை இருப்பதை உறுதிப்படுத்தியது.


"கூகிள் ஸ்பெயின் வழக்கு" (Google Spain case) என்று பொதுவாக குறிப்பிடப்படுவதில், சமூக பாதுகாப்பு கடன் காரணமாக அவரது சொத்தை கட்டாயமாக விற்பனை செய்வது தொடர்பான 1998 முதல் கூகிள் தகவல்களை அகற்ற வேண்டும் என்று ஸ்பெயின் வழக்கறிஞர் மரியோ கோஸ்டெஜா கோன்சலஸின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


அடிப்படை உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய சாசனத்தின் பிரிவு  7 ஆனது, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான மரியாதை மற்றும் பிரிவு 8 ஆனது, தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆய்வின் "கடந்து சென்ற காலத்தின் தரவு போதுமானதல்ல, பொருத்தமற்றது அல்லது அதிகப்படியானதாகத் தோன்றும்" தரவை அகற்றுவதற்கான தனிப்பட்ட கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.


தகவல் சார்ந்த சுயநிர்ணயம் (Informational self-determination) என்பது ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்தவும் உள்ள உரிமையாகும். இந்த உரிமை இப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின், பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation (GDPR)) பிரிவு 17 அழிக்கும் உரிமையை விவரிக்கிறது. மறக்கப்படுவதற்கான உரிமை (right to be forgotten) ஒரு முக்கியமான தீர்வு. இது "பழிவாங்கும் ஆபாசத்தால்" (revenge porn) பாதிக்கப்பட்டவர்களுக்கும் இணையவழியில் தனிப்பட்ட வழக்குகள் உள்ளவர்களுக்கும் உதவுகிறது.


இந்தியாவில் உரிமை எவ்வாறு விளக்கப்படுகிறது?


இந்தியாவில், மறக்கப்படுவதற்கான உரிமையை பரிந்துரைக்கும் சட்டரீதியான கட்டமைப்பு எதுவும் இல்லை. இருப்பினும், அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட வேண்டியதில்லை. நீதிபதி கே.எஸ்.புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (Justice K S Puttaswamy vs Union of India) வழக்கில் 2017-ம் ஆண்டு தீர்ப்பு வரை, இதில் உச்ச நீதிமன்றம் தனியுரிமைக்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக வெளிப்படையாக அங்கீகரித்தது. அதை வாழ்வதற்கான உரிமை (right to life), சமத்துவத்திற்கான உரிமை (right to equality) மற்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை (right to freedom of speech and expression) ஆகியவற்றுடன் இணைத்தனர்.


நீதிபதி எஸ்.கே.கவுல் அவர்களின் புட்டசாமி தீர்ப்பில் ஒருமித்த கருத்து மறக்கப்படுவதற்கான உரிமையைக் குறிப்பிடுகிறது. நீதிபதி கவுல், இந்த உரிமை "ஒரு நபரின் கடந்த காலத்தின் அனைத்து அம்சங்களையும் அழிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல” என்று நீதிபதி கவுல் குறிப்பிடுகிறார். தனது தனிப்பட்ட தரவு இனி செயலாக்கப்பட அல்லது சேமிக்கப்பட விரும்பாத ஒரு நபர், தனிப்பட்ட தரவு / தகவல் இனி தேவையில்லை. மேலும், இது பொருத்தமற்றது அல்லது தவறானது மற்றும் முறையான நலனுக்கு சேவை செய்யாத கணினியிலிருந்து அதை அகற்ற முடியும் என்பதே இதன் பொருள்.


மறக்கப்படுவதற்கான உரிமை (right to be forgotten) மீறப்படுவதற்கான (violated) சரியான காரணங்களின் பட்டியலை நீதிபதி கவுல் வழங்கினார். இவற்றில் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துதல், சட்டபூர்வ கடமைப்பாடுகளுக்கு இணங்குதல், பொது நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு பணியை நிறைவேற்றுதல். பொது சுகாதாரம், பொது நலன், அறிவியல், வரலாற்று அல்லது புள்ளியியல் ஆராய்ச்சி அல்லது சட்ட உரிமைகோரல்களை நிறுவுதல், உடற்பயிற்சி செய்தல் அல்லது பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.


இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்பளித்துள்ளன?


பல தனிமைப்படுத்தப்பட்ட மனுக்களில், பெரும்பாலும் நீதிமன்ற தீர்ப்புகளில் உள்ள தகவல்களை பதிவு செய்ய நீதிமன்றத்தின் அனுமதியைக் கேட்டு, நீதிமன்றங்கள் இந்த உரிமை தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.


1994-ம் ஆண்டு இராஜகோபால் vs தமிழ்நாடு அரசு (Rajagopal vs State of Tamil Nadu) வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் "தனியாக அனுமதிக்கப்படுவதற்கான உரிமை" (right to be let alone) என்பது பற்றி கூறுகிறது.


ஒரு குடிமகனுக்கு அவர்களின் சொந்த தனியுரிமை மற்றும் அவர்களின் குடும்பத்தின் தனியுரிமையைப் பாதுகாக்க உரிமை உண்டு. திருமணம், இனப்பெருக்கம், தாய்மை, குழந்தை பெற்றெடுத்தல் மற்றும் கல்வி தொடர்பான தனியுரிமை இதில் அடங்கும். இந்தத் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், குடிமகனின் அனுமதியின்றி இந்த விஷயங்களைப் பற்றிய தகவல்களை யாரும் வெளியிட முடியாது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனியுரிமைக்கான உரிமைக்கும், நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற பொதுப் பதிவுகளை வெளியிடுவதற்கும் இடையே வேறுபாட்டைக் காட்டியது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொதுப் பதிவேடு (right to privacy) விஷயமாக மாற்றப்பட்டால், தனியுரிமைக்கான உரிமை இனி பொருந்தாது என்று கூறியது. இது பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் பிறரின் கருத்துக்கு சரியான தலைப்பாக மாறும்.


சமீபத்தில் பல உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இந்த தீர்ப்புகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.


2017-ம் ஆண்டு, தரம்ராஜ் பானுசங்கர் தவே vs குஜராத் அரசு வழக்கில் (Dharamraj Bhanushankar Dave vs State of Gujarat), மனுதாரர் குஜராத் உயர்நீதிமன்றத்தை ஒரு கொலை மற்றும் கடத்தல் வழக்கில் விடுவிக்கப்பட்ட விவரங்களை நீக்குமாறு கேட்டுக் கொண்டார். நீதிமன்ற உத்தரவுகள் பொது களத்தில் இருக்க அனுமதிக்கப்படுகின்றன என்று கூறி, அவருக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


இருப்பினும், [பெயர் திருத்தப்பட்டது] vs பதிவாளர் ஜெனரல் ([Name Redacted] vs The Registrar General), கர்நாடக உயர் நீதிமன்றம் 2017-ல் ரத்து செய்யப்பட்ட வழக்கில் மனுதாரரின் பெயர் பாதுகாக்கப்படும் என்பதை உறுதி செய்தது. மறக்கப்படுவதற்கான உரிமை குறித்த நீதிமன்றம் தீவிரமாக விவாதிக்கவில்லை என்றாலும்,  மேற்கத்திய நாடுகளில், பொதுவாக பெண்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்குகளில் அவர்கள் இதை ஒரு விஷயமாக பின்பற்றுகின்றன.


2021-ம் ஆண்டில், அமெரிக்க சட்ட மாணவர் ஜோராவர் சிங் முண்டி சம்பந்தப்பட்ட தீர்ப்பை தேடல் முடிவுகளிலிருந்து (search results) நீக்க அனுமதிப்பதன் மூலம் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு குற்றவியல் வழக்குக்கு கூட மறக்கப்படுவதற்கான உரிமையை நீட்டித்தது. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட சுங்க வழக்கில் முண்டி விடுவிக்கப்பட்டார். வழக்கின் விவரங்களை எடுத்துக்கொள்வது முக்கியம் என்று உயர்நீதிமன்றம் கூறியது. மனுதாரருக்கு ஏற்படக்கூடிய "சரிசெய்ய முடியாத பாரபட்சம்" (irreparable prejudice) குறித்து அவர்கள் கவலைப்பட்டனர். மனுதாரரின் சமூக வாழ்க்கை மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு சாத்தியமான தீங்கு இதில் அடங்கும்.


2020-ம் ஆண்டில் ஒரிசா உயர்நீதிமன்றம், "பழிவாங்கும் ஆபாசம்" (revenge porn) சம்பந்தப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கை விசாரித்தபோது, "இணையவழியில் மறக்கப்படுவதற்கான சட்ட சாத்தியக்கூறுகள் பரவலான விவாதம் தேவை" என்று கூறியது.


மறக்கப்படுவதற்கான உரிமையை (right to be forgotten) அமல்படுத்துவது சவாலானது என்று உயர்நீதிமன்றம் கூறியது. இது நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை உள்ளடக்கியது. இந்த பிரச்சினைக்கு நிறுவனங்களுக்கான தெளிவான எல்லைகள் மற்றும் இந்திய சட்டத்தில் இதுவரை கவனிக்கப்படாத நுட்பமான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தேவை.



Original article:

Share:

Kargil@2025 : தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த வாஜ்பாய் எடுத்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் -சி.உதய் பாஸ்கர்

 எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், வெளிப்படைத்தன்மையில் முதலீடு செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமும் வாஜ்பாய் முதல் பெரிய அடியை எடுத்து வைத்தார். கார்கிலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தேசிய பாதுகாப்பு அமைப்பை (national security edifice) சீர்திருத்துவதற்கான திட்டங்களை தெரிவிக்க வேண்டும்.

 

கார்கில் போரின் 25-வது ஆண்டு நினைவு நாளான ஜூலை 26 அன்று, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பால் ஏற்பட்ட மகத்தான இராஜதந்திர சிக்கல்களை எதிர்கொண்டு அசாதாரண வீரத்தை வெளிப்படுத்திய துணிச்சலான இதயங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இமயமலை உயரத்தில் உள்ள த்ராஸைத் (Dras) தேர்ந்தெடுத்தது இந்த முக்கியமான சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருந்தது.


1999-ம் ஆண்டின் நடுப்பகுதியில் நடந்த கார்கில் போரானது ஒரு வெற்றியின் நிகழ்வா அல்லது அதிக மனித செலவில் இந்திய நிலப்பரப்பில் இருந்து பாகிஸ்தான் வீரர்களை, இந்திய ஆயுதப்படைகள் வெளியேற்றிய நிகழ்வா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகும். இருப்பினும், பிரதமர் மோடி அந்த போரின் மிக முக்கியமான அம்சத்தை எடுத்துரைத்தார். "கார்கிலில், நாங்கள் போரை வென்றது மட்டுமல்லாமல், உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமைக்கான நம்பமுடியாத உதாரணத்தையும் முன்வைத்தோம்" என்று அவர் கூறினார். மேலும், பாஜக தலைமையிலான முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோர் இந்த முயற்சிக்கு தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கார்கில் போரானது, பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை, ஒவ்வொன்றும் விரிவான விவாதத்திற்கு தகுதியானவை. ஆனால், சில அம்சங்கள் குறிப்பாக முக்கியமானவை. பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில், இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட முதல் அவசரச் சூழ்நிலை இதுவாகும். இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தன மற்றும் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தன. அவர்கள் பிரதேசத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஆனால் தீவிரமான வழக்கமான போரில் ஈடுபட்டனர். 


போரின் ஆரம்ப கட்டங்களில் ஐ.நா.வில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளால் சில பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், பின்னோக்கிப் பார்த்தால், இரு தரப்பினரும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தனர் என்பதும், அபாயகரமான பேரழிவுக்கான விரிவாக்கம் நிகழவில்லை என்பதும் தெளிவாகிறது. பிரதமர் வாஜ்பாய் கவனமாக முடிவெடுத்தார். அதிக மனிதச் செலவு ஏற்பட்டாலும் இந்தியா ஊடுருவும் நபர்களை அகற்றும். எனினும், இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டவோ, பாகிஸ்தானுக்குள் போரை நடத்தவோ இல்லை. இந்த முடிவு கார்கில் போர் ஒரு வரையறுக்கப்பட்ட இராணுவ நோக்கத்தைக் கொண்டிருந்தது என்பதை உலக சமூகத்திற்கு உறுதிப்படுத்தியது.


இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் போர் கார்கில் ஆகும். இது குடிமக்களின் விழிப்புணர்வையும், உணர்ச்சிகரமான தேசியவாதத்தையும் அதிகரித்துள்ளது. கேப்டன் விக்ரம் பத்ராவின் (Captain Vikram Batra) போர் முழக்கம், "இந்த இதயம் அதிகம் விரும்புகிறது" (Yeh Dil Mange More) இப்போது எங்கள் கூட்டு நினைவகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் கார்கில்@25 பற்றிய முக்கிய குறைபாடுகளைப் பற்றி சிந்திக்க ஒரு நல்ல நேரமாகும். இது, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பகுதிகளை நாம் குறிப்பாக ஆராய வேண்டும்.


பல ஆண்டுகளாக, கார்கில் போரின் நேர்த்தியான அச்சை விவரிக்கும் நியாயமான தகவல்கள் குவிந்துள்ளன. பின்னோக்கிப் பார்த்தால், இராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு உணர்வு, குறிப்பாக இராணுவம் மற்றும் விமானப்படைக்கு இடையேயான கூட்டு உணர்வு விரும்பத்தக்கது என்று கூறலாம். பல தனிப்பட்ட கணக்குகள் இந்த குறைபாடுகள் மற்றும் பலவற்றை உறுதிப்படுத்துகின்றன. 


பாகிஸ்தானின் பார்வையில், கார்கில் ஒரு சூதாட்டம் ஆகும். இது ஜெனரல் முஷாரப்பால் இரகசியமாக திட்டமிடப்பட்டது. இது இராஜதந்திர ரீதியாக துணிச்சலானது ஆனால், விவேகமற்றது. பாகிஸ்தான் வீரர்களின் திருட்டுத்தனமான ஊடுருவலுக்கு சரியான நேரத்தில் உளவுத்துறை தகவல்கள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. சில கணக்குகள் தோல்விக்கான பொறுப்பை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (RAW)) மீது சுமத்தியுள்ளன. இருப்பினும், மற்றவர்கள் இந்த கருத்தை எதிர்க்கிறார்கள். ஆனால், போர் மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மோடி அரசாங்கத்திற்கு முக்கியமாக உள்ளன. 


ஏப்ரல் 1999-ல் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் வாஜ்பாய் அரசாங்கம் ஒரு நம்பிக்கை அரசாங்கமாக இருந்தது. இருப்பினும், போரின் வெற்றிகரமான விளைவு அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க தேர்தல் ஆதரவைப் பெற உதவியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கார்கில் போரின் போது ஏற்பட்ட தோல்விகளுக்குப் பொறுப்பேற்றதற்காக பிரதமர் வாஜ்பாய் நிரந்தரப் புகழுக்கு உரியவர்.  "கற்க வேண்டிய பாடங்களை" ஆய்வு செய்ய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவை அவர் நியமித்தார். இந்திய ஆட்சிக்கு இது ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையாகும். தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் விரிவான காலவரிசை குறிப்பிடத்தக்கது.    


பிரதமர் வாஜ்பாய் ஜூலை 29, 1999 அன்று கார்கில் மறுஆய்வுக் குழுவை (Kargil Review Committee (KRC)) அமைத்தார். இந்த குழுவின் அறிக்கை 1999 டிசம்பரில், அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. கார்கில் மறுஆய்வுக் குழுவானது (Kargil Review Committee (KRC)) ஒரு விசாரணையை நடத்துவதற்காக அமைக்கப்படவில்லை. மாறாக, நிகழ்வுகளின் வரிசையை ஆராய்வதற்கும் எதிர்காலத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் அமைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியது.


அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாஜ்பாய் ஏப்ரல் 17, 2000 அன்று தேசிய பாதுகாப்பு முறையை முழுமையாக மறுஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை (Group of Ministers (GoM)) அமைத்தார். கார்கில் மறுஆய்வுக் குழுவின் (KRC)  பரிந்துரைகளை ஆய்வு செய்யவும், அவற்றை செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட திட்டங்களை உருவாக்கவும் இந்த குழு அறிவுறுத்தப்பட்டது. அமைச்சர்கள் குழு தனது முதல் கூட்டத்தை ஏப்ரல் 27, 2000 அன்று நடத்தியது. மேலும், புலனாய்வு கருவி (intelligence apparatus), உள்நாட்டு பாதுகாப்பு (internal security), எல்லை மேலாண்மை மற்றும் (உயர்) பாதுகாப்பு மேலாண்மை (border management and (higher) management of defence) குறித்து நான்கு பணிக்குழுக்களை (Task Forces (TF)) அமைத்தது.


இந்த,  பணிக்குழுக்களுக்கு தலைமை தாங்க அரசாங்கத்திற்கு வெளியே இருந்து துறை வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஜி.சி.சக்சேனா (G.C.Saxena), என்.என்.வோரா (N.N.Vohra), மாதவ் கோட்போலே (Madhav Godbole) மற்றும் அருண் சிங் (Arun Singh) ஆகியோர் அடங்குவர். காலாவதியான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை சீர்திருத்தும் பயிற்சியின் ஒரு பகுதியாக ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அருண் சிங்கை அழைப்பதில் வாஜ்பாய் குழுவுக்கு எந்த தயக்கமும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. 


2000 செப்டெம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிக்குழுக்களும்  தமது கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் சமர்ப்பித்தன. இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. திருத்தப்பட்ட பதிப்புகள் பொது களத்தில் வைக்கப்பட்டன. இருப்பினும், வாஜ்பாய் அரசாங்கத்தின் கவனம் 9/11 மற்றும் டிசம்பர் 2000-ல் நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பிற நிகழ்வுகளால் திசை திருப்பப்பட்டது. எனவே, அமைச்சர்கள் குழு  பணிக்குழுக்களின்  பரிந்துரைகளை அமல்படுத்துவது முழுமையடையவில்லை.


கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா இரண்டு முறை எதிரிகளிடம் சிக்கியது வருத்தமளிக்கிறது. முதல் நிகழ்வு நவம்பர் 2008-ல் மும்பையில் நடந்தது, இரண்டாவது நிகழ்வு ஜூன் 2020-ல் கால்வானில் நடந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் சீர்திருத்துவதற்கும், வெளி மற்றும் உள்நாட்டில், கால அவகாசம் எடுக்கும். பிரதமர் வாஜ்பாய் வெளிப்படைத்தன்மையில் முதலீடு செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலமும் குறிப்பிடத்தக்க நகர்வை எடுத்து வைத்தார். காங்கிரஸ் அரசாங்கத்தைத் தாக்க எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தினாலும் (ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் "சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு" (Coffin Gate) குறித்து நினைவில் கொள்கிறீர்களா?). பிரதமர் மோடி இந்த வேலையைத் தொடர முடியுமா என்பதும், பாஜகவில் மரியாதைக்குரிய முன்னோடியாக இருந்த அதே அணுகுமுறையைப் பயன்படுத்த முடியுமா? என்பதுதான் இப்போது கேள்வி ஆகும்.


தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தவோ அல்லது அரசியலாக்கவோ கூடாது. ஆனால், தற்போதைய உள்நாட்டு அரசியலில் இதுதான் நடக்கிறது. திராஸ் (Dras) பயணத்தின் போது பிரதமர் மோடி இந்த போக்கு குறித்து கவலை தெரிவித்தார். எனக்கு கட்சி (பாஜக) அல்ல, நாடுதான் முக்கியம் என்று அவர் கூறினார். அவரது மூன்றாவது பதவிக்காலத்தில், மோடி முன்னுதாரணமாக வழிநடத்த வேண்டும். அவ்வாறு செய்யாதது கார்கிலில் நாட்டின் வீரர்களின் தியாகத்தை அவமதிப்பதாகும். 



Original article:

Share: