இங்கிலாந்து மற்றும் இந்திய உறவை மேம்படுத்துதல் - ரிச்சர்ட் மெக்கலம்

 இங்கிலாந்து மற்றும் இந்திய பொருளாதாரக் கூட்டாண்மைக்கான சாத்தியங்கள் பரந்த அளவில் உள்ளன. ஆனால், இதற்கு இரு நாடுகளின் முயற்சிகளும் தேவைப்படும்.


இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் சமீபத்தில் தேர்தல்கள் நடந்தன. இந்த ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற இரண்டாவது பிரதமர் ஆனார். ஜூலை மாதம், ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) சர் கீர் ஸ்டார்மரின் கீழ் தொழிற்கட்சி (Labour Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. இது இங்கிலாந்து மற்றும் இந்திய கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.   


இங்கிலாந்து அரசு இந்தியாவுடன் ஈடுபடுவதற்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுகிறது. தொழிலாளர் கட்சி (Labour Party) இந்தியாவுடன் ஒரு "புதிய இராஜதந்திர கூட்டுறவைத்" தொடர உறுதியளித்துள்ளது. அவர்கள் இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (Free trade Agreement (FTA)) விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். இதில், பாதுகாப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பை இருநாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலர் (Secretary of State for Foreign, Commonwealth, and Development Affairs) டேவிட் லாம்மி இந்தியாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். 


‘2030 ஆம் ஆண்டிற்கான இராஜதந்திர திட்டம்’  வெற்றியடைந்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் 2023-ல் 39 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர பொருளாதாரங்களில் பெரிய முதலீடுகளைச் செய்து வருகின்றன. தற்போது, ​​இந்த முதலீடுகள் சுமார் எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.


எவ்வாறாயினும், இந்த கூட்டாண்மையின் முழுப் பலன்களையும் செயல்படுத்த 2047-ம் ஆண்டிற்கான புதிய வரைபடத்தை ஒப்புக்கொள்ளுமாறு இரு அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


இந்தியா முக்கியமானது மற்றும் அது இப்போது மிகவும் முக்கியமானது


இந்தியாவின் உலகளாவிய நிலை மறுக்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது. அதில், 2023-ல் அதன் மகத்தான வெற்றிகரமான G-20 தலைமைப்பதவி (G-20 Presidency), குறிப்பிடத்தக்க நிலவு தரையிறக்கம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் முதன்மையானது மற்றும் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகியவை இதற்குச் சான்றாகும். பொதுவாக நாம் வழிநடத்தும் அமைப்பான, இங்கிலாந்து இந்திய வர்த்தக அமைப்பு (U.K. India Business Council), இங்கிலாந்து மற்றும் அதன் நிறுவனங்களுக்கு இதை நன்றாகப் புரிந்துகொள்ளவும், இந்திய வாய்ப்பை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புதுப்பிக்கவும் உதவும் பணியில் உள்ளது. இந்தியா வெறுமனே ஒரு சந்தை மட்டுமல்ல, ஒரு இராஜதந்திர பங்குதாரர் ஆவார். இது நம் தொழில்நுட்பச் சங்கிலி (technology chain), திறமைச் சங்கிலி (talent chain) மற்றும் விநியோகச் சங்கிலியின் (supply chain) ஒரு பகுதியாகும்.


இரு நாடுகளிலும் வேலை வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து, சமமான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்பதே இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்திற்கு நாம் தெரிவிக்கும் செய்தியாகும். ஒரு விரைவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free trade Agreement (FTA)) ஒரு மாற்றியாக இருக்கும். இது நாம் உருவாக்கக்கூடிய ஒரு புதிய கட்டமைப்பின் அடித்தளமாகும். மேலும், அந்த கட்டமைப்பின் மையமானது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஒத்துழைப்பு ஆகும். உலகில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவில் ஒரு டாலருக்கு முதலீட்டில் (return on investment (ROI)) சிறந்த வருமானத்தை இந்தியா பெற்றுள்ளது. உதாரணமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் சாதனைகளைக் கவனியுங்கள். கூடுதலாக, இந்திய நிறுவனங்கள் இங்கிலாந்து நிறுவனங்கள் மற்றும் நமது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்க ஆர்வமாக உள்ளன. 


இங்கு நாம் பெரிதாக சிந்திக்கலாம். இரு நாடுகளும் நீண்டகால சுகாதாரப் பாதுகாப்பு கூட்டுறவைக் கொண்டுள்ளன. உலகளாவிய சவாலை எதிர்கொள்ள உயிர்காக்கும் மலேரியா தடுப்பூசிகளை (malaria vaccines) வெற்றிகரமாக உருவாக்குகின்றன. இந்தியாவில் அதிகமான இங்கிலாந்து மருத்துவ பரிசோதனைகளை மேம்படுத்தவும், சுகாதார-பராமரிப்பு ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், அறிவு பரிமாற்றத்தை ஆதரிக்கவும் முடியுமா?


புதுமையான நிலைத்தன்மை தொழில்நுட்பத்தை (innovative sustainability technology) ஆதரிக்க இங்கிலாந்து முதலீடு செய்கிறது மற்றும் இங்கிலாந்து வங்கிகள்  இந்தியாவிற்கு பில்லியன் கணக்கான காலநிலை நிதியுதவியை (climate financing) வழங்குகின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்களுடனான கூட்டாண்மை இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்க முடியும். புதுமையான நாடுகடந்த கல்வி முறைகள் மூலம் இதனை அடைய முடியும். 

 

சீரமைப்பின் முக்கிய பகுதிகள்


கடந்த ஆண்டு, இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் (G2G agreement) செய்யப்பட்டது.  அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்திய இந்த ஒப்பந்தம் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறது. 


பாதுகாப்பு (defence) மற்றும் காப்புத்திறனில் (security) இங்கிலாந்தும் இந்தியாவும் நடைமுறையில் நட்பு நாடுகளாக உள்ளன.


ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்களை இங்கிலாந்து வழங்கியது. இன்று இதன் மதிப்பு வெறும் 2.5% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா, உள்நாட்டுமயமாக்கல், நம்பகமான பாதுகாப்பு தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், முக்கியமான தொழில்நுட்பத்திற்கான அணுகலைப் பாதுகாத்தல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு உற்பத்தி வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இங்கிலாந்தின் மேம்பட்ட பாதுகாப்புத் துறை இந்த பணியை ஆதரிக்க முடியும். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஜனவரி 2024 இல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார். இது, 22 ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் ஆகும்.  


இரு நாடுகளும் தடையின்றி இணையும் மற்றொரு பகுதி போக்குவரத்துத் துறை (mobility) ஆகும். மாணவர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு இந்தப் பகுதியில் உரிமையைப் பெறுவது இன்றியமையாதது. இது நம்பிக்கை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும். இது இந்திய முதலீட்டாளர்களுக்கு இங்கிலாந்து வரவேற்கும் வலுவான செய்தியை அனுப்பும். மேலும், இங்கிலாந்துக்கு போக்குவரத்துத் துறை (mobility) பற்றி சொல்ல ஒரு நேர்மறையான கதை உள்ளது. கடந்த ஆண்டில், வேலைக்காகவோ, கல்விக்காகவோ அல்லது சார்ந்திருப்பவர்களுக்காகவோ இந்திய குடிமக்களுக்கு சுமார் 3,50,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘வாழும் இணைப்பை’ (living bridge) நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். 


முழு திறனையும் பயன்படுத்துதல் (Unlocking full potential) 


மேலே உள்ள யோசனைகள் பனிப்பாறையின் முனை மட்டுமே. இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே ஆழமான பொருளாதார கூட்டாண்மைக்கு பெரும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், இதற்கு இரு நாடுகளின் முயற்சிகளும் தேவைப்படும். இந்தியாவில், வணிகச் சூழலை மேம்படுத்த மேலும் சீர்திருத்தங்களை வரவேற்போம். 


இங்கிலாந்து நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் உறுதிபூண்டுள்ளன மற்றும் அவற்றின் செயல்திறனை பாதிக்காமல் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை ஒருங்கிணைக்க உதவும் கொள்கைகளை வரவேற்கின்றன. எடுத்துக்காட்டாக : ஒரு வசதியான கட்டணம் மற்றும் தரநிலைகள் குறிப்பிடத்தக்க வரவுகளைத் திறக்க உதவும்.  

  

நியாயமான வரிவிதிப்புக் கொள்கைகள் இருப்பது அவசியம். இந்தக் கொள்கைகள் அனைத்து முதலீட்டாளர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இது சமதளத்தை உருவாக்கும். 


இங்கிலாந்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் புதிய அறிவுசார் சொத்துக்களை (Intellectual Property (IP)) இந்தியாவின் நட்பு நாடுகளுடன் கொண்டு வந்து இணைந்து உருவாக்க விரும்புகிறார்கள். கொள்கைகள் தங்கள் அறிவுசார் சொத்துக்களுக்கு (Intellectual Property (IP)) நல்ல பாதுகாப்பு மற்றும் நியாயமான வணிக இழப்பீடு வழங்கினால் இதைச் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.


இதன், ஒப்புதலுக்கான குறுகிய காலக்கெடு மற்றும் அரசாங்கத் துறைகள், மாநிலங்கள் மற்றும் அனுமதிகளுக்கான கட்டுப்பாட்டாளர்கள் முழுவதும் மிகவும் நிலையான, வெளிப்படையான அணுகுமுறை போன்ற வணிக மேம்படுத்துதல்களை எளிதாகச் செய்வதும் முக்கியம்.  


உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்தும் வலுவான இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த இரு அரசாங்கங்களுடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம். 


இந்தியா இன்று மிகவும் பரபரப்பான பொருளாதாரக் கதையாக உள்ளது. நாம் இந்தியாவின் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதிக நன்மைக்காக திறன்களில் இணைவதற்கான சிறந்த நேரமாக இது அமைகிறது. 


 ‘இந்தியாவுடனான உங்கள் நட்பு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு செழிப்பை இருவரும் அனுபவிக்கலாம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது போல, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


ரிச்சர்ட் மெக்கலம், UK India Business Council-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.



Original article:

Share:

பண மசோதா (Money Bill) மீதான தீர்ப்புக்காக இந்தியா காத்திருக்கிறது -சுஹ்ரித் பார்த்தசாரதி

 மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமல் இயற்றப்படும் சட்டங்கள் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதிக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு சட்டம் இயற்றுவதில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.  


வரும் வாரங்களில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பண மசோதாவின் வரையறைகளை நிர்வகிக்கும் முக்கியமான கேள்விகள் மீதான வாதங்களைக் கேட்க உள்ளது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களவையின் ஒப்புதலின்றி இயற்றப்படும் சட்டங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வழக்கு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் எதிர்காலத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகார சமநிலையையும் பாதிக்கும். 


ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நவம்பர் 2019-ல், ரோஜர் மேத்யூ vs சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட்  (Rojer Mathew vs South Indian Bank Ltd) வழக்கில், 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட   நிதிச் சட்டம் (Finance Act, 2017), விசாரணைக்கு உகந்தது என்று கூறியது. பண மசோதாவாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டம், 26 வெவ்வேறு நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் அதிகார வரம்பையும் மாற்றியது. இது அமைப்புகளில் சிலவற்றை நீக்கியது, மற்றவற்றை ஒன்றிணைத்தது, தீர்ப்பயங்களில் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தகுதிகளை நிர்ணயித்தது மற்றும் புதிய விதிகள் உருவாக்கம் உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.


பிரிவுகள் (Articles) மற்றும் வரையறைகள்


ரோஜர் மேத்யூ வழக்கில், மனுதாரர்கள் இந்த மாற்றங்கள் பண மசோதாவாகக் கருத முடியாத அளவுக்கு விரிவாகிவிட்டதாக வாதிட்டனர். இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ், ஒரு மசோதா சட்டமாக மாற, அது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெற வேண்டும்.  அரசியலமைப்பு சட்ட விதி 109-ல்  மட்டும் சில விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களவையின் ஒப்புதலுடன் பண மசோதாக்கள் சட்டமாக மாற அரசியலமைப்பு சட்ட விதி 109-ல் அனுமதிக்கிறது. இந்த மசோதா மீது மாநிலங்கவை பரிந்துரை செய்யலாம்.  இருப்பினும், இந்த பரிந்துரைகள் மக்களவையை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

 

சட்டப்பிரிவு 110(1) பண மசோதா என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது. வரி விதித்தல் அல்லது ரத்து செய்தல், பணம் கடன் வாங்குவதை ஒழுங்குபடுத்துதல், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணத்தைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை மட்டுமே ஒரு வரைவுச் சட்டம் கையாள்கிறது என்றால், அது பண மசோதாவாகக் கருதப்படும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 110(3)-ன் படி,  முன்மொழியப்பட்ட சட்டம் பண மசோதாவா இல்லையா என்பதை மக்களவையின் சபாநாயகர் முடிவு செய்வார். 


ஒரு மசோதா ஒரு பண மசோதாவாக இருக்க, சட்டப்பிரிவு 110(1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள  வரைமுறைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்ட வரையறை தெளிவாகக் கூறுகிறது. ஒரு மசோதா இவற்றைத் தாண்டிய வரைமுறைகளை கொண்டிருந்தால், அது பண மசோதாவாக கருத முடியாது. இருப்பினும், 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டம், கூடுதல் வரைமுறைகளை சேர்க்க முயற்சித்தது.


வழக்கமாக, மாநிலத்தின் நிதித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்ட ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் நிதிச் சட்டம் இயற்றப்படும். இருப்பினும், 2017-ஆம் ஆண்டு  கொண்டுவரப்பட்ட நிதிச் சட்டம், தீர்ப்பாயங்கள் செயல்படும் விதத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பாயங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதை சட்டம் மாற்றியது. அவற்றை நிர்வகிப்பதற்கான விதிகளை உருவாக்க ஒன்றிய அரசின் அதிகாரிக்கு முழு அதிகாரத்தையும்  வழங்கியது.


அரசியலமைப்பு பிரிவு 110(1), நிதிச் சட்டம் தொடர்பான சில பகுதிகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக,  இந்தியத் திரள் நிதியிலிருந்து (Consolidated Fund of India) தீர்ப்பாய உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயித்தது. நிதிச் சட்டத்தின் சில பகுதிகள் பண மசோதா எனக் கருதப்படலாம். இருப்பினும், பெரும்பாலான சட்டங்கள் மற்ற முக்கிய சட்டங்களில் பெரிய மாற்றங்களைச் செய்தது.


அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் 


ரோஜர் மேத்யூ வழக்கில், நீதிமன்றத்தின் பணி மிகவும் எளிமையாக இருந்திருக்க வேண்டும். ஒரு பண மசோதா மூலம் செய்யப்படும் மாற்றங்கள், அலுவலக விதிமுறைகளை மாற்றுவது அல்லது தீர்ப்பாயங்களை ஒழுங்குபடுத்த நிர்வாகத்திற்கு சரிபார்க்கப்படாத அதிகாரம் வழங்குவது போன்றவை முறையற்றதாகக் கருதப்பட வேண்டும். 2017-ஆம்  ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச் சட்டம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.  


இருப்பினும், ஐந்து நீதிபதிகளில்  பெரும்பாலானவர்கள் இந்த சட்டத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டனர். அவர்கள் குறிப்பிட்டது ஆதார் அட்டையில் காலத்தை  (Aadhaar regime) சவால் செய்த கே.எஸ். புட்டசாமி vs யூனியன் ஆஃப் இந்தியா (2018) (K.S. Puttaswamy vs Union of India (2018)) வழக்கில், முந்தைய அமர்வு ஒரு வரைவு சட்டத்தை பண மசோதாவாக அங்கீகரிக்கும் சபாநாயகரின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான தெளிவான விதிகளை வழங்கவில்லை. குறிப்பாக, சட்டப்பிரிவு 110(1)-ல் உள்ள "மட்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை புட்டசாமி வழக்கில்  தவறவிட்டதாக அமர்வு கூறியது.   


நீதிபதி ஏ.கே. சிக்ரி பெரும்பான்மையானோரின் கருத்தை கே.எஸ். புட்டசாமி வழக்கில் ஏற்றார். ஆதார் சட்டத்தின் பிரிவு 7 ஒரு பண மசோதா என்று கருத்துக்கூறி வழக்கை முடித்தார். ஏனெனில், இது மானியங்கள், சலுகைகள் மற்றும் இந்தியாவின்   திரள் நிதியிலிருந்து (Consolidated Fund of India) நிதியளிக்கப்பட்ட சேவைகளைக் கையாள்கிறது. இதில் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவலின் அடிப்படையில் பதிவு செய்தல், தகவல்களைச் சேகரிப்பதற்கு முன் தனிநபர்களிடமிருந்து ஒப்புதல் பெறுதல், குற்றங்கள் மற்றும் தண்டனைகளை உருவாக்குதல், செயல்முறையை நிர்வகிக்க ஒரு சட்டப்பூர்வ அதிகாரத்தை நிறுவுதல் போன்ற ஆதார் சட்டத்தின் பல பகுதிகளை நீதிபதி ஏ.கே. சிக்ரி கருத்தில் கொள்ளவில்லை. 


சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், இந்த விஷயங்கள் பிரிவு 110(1) இல்  குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை. ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்போது "மட்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஆராய வேண்டும். அவர்கள் வழங்க உள்ள தீர்ப்பு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், ரோஜர் மேத்யூவு வழக்கிற்கு முன்னும் பின்னும், ராஜ்யசபா புறக்கணிக்கப்பட்ட மற்ற பல வழக்குகள் உள்ளன. 


நிதிச் சட்டம், 2019 (Finance Act, 2019), பண மசோதாவைப் பயன்படுத்தி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, (PMLA) 2002)-ல் பெரிய மாற்றங்களைச் செய்தது. இந்த மாற்றங்கள்: ”குற்றத்தின் வருமானம்"  (proceeds of crime) என்பதன் வரையறையை மாற்றுதல், அமலாக்க இயக்குனரகத்திற்கு கைது,  தேடுதல் மற்றும் பறிமுதல்  போன்ற கடுமையான அதிகாரங்களை வழங்குதல், விஜய் மதன்லால் சவுத்ரி vs யூனியன் ஆஃப் இந்தியா (2022) (Vijay Madanlal Choudhary vs Union of India) வழக்கில், இந்த மாற்றங்கள் பலவற்றை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும், செய்யப்பட்ட  மாற்றங்கள் பண மசோதா மூலம் செல்லுபடியாகுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.


மாநிலங்களவையின் பங்கு


ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வானது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ரோஜர் மேத்யூ வழக்கில், நமது தேசம் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்மைத்துவத்திற்கு ஒரு அங்கமாக மாநிலங்களவை இருக்க வேண்டும் என்று  அதன் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சுட்டிக்காட்டினார். 


அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு மாநிலங்களவை மிகவும் முக்கியமானது. மாநிலங்களவையை புறக்கணிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்க்க முடியாது. நமது கூட்டாட்சி அமைப்பில், ஒரு மசோதாவை பண மசோதாவாக அங்கீகரிக்கும் சபாநாயகரின் முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்யலாம் என்றுநீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.


மாநிலங்களவை அடிப்படை நிர்வாகத்திற்கான நிதியை அரசாங்கத்தின் தேவைகளைத் தடுக்காது என்பதை உறுதிப்படுத்த பண மசோதாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் சட்டமன்ற செயல்பாடுகளை சரிபார்ப்பதில் மாநிலங்களவையின் பங்கை புறக்கணிக்க பண மசோதாவைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை தவறாக வழி வழிநடத்துவதாகும். இந்த நடைமுறையை நீதிமன்றம் அனுமதித்தால், அது நமது ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்.


சுஹ்ரித் பார்த்தசாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.



Original article:

Share:

தனியார் ஆலோசனை : ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023 பற்றி . . .

 முக்கியமான விவாதங்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு, கொள்கை உருவாக்கும் செயல்பாட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது. 


ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா (Broadcasting Services (Regulation) Bill), 2023 குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனிப்பட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அதற்கான ஒரு முன் வரைவை வெளியிட்டனர். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்கள் மட்டுமே புதிய முன்மொழிவுகளைப் பெற்றனர்.  கடுமையான விதிமுறைகளின் கீழ், பங்குதாரர்கள் பெற்ற  புதிய முன்மொழிவுகளின் ஒவ்வொரு நகலிலும் "கசிவுகள்" ஏதேனும் இருந்தால் அடையாளம் காணக்கூடிய தனித்துவமான அடையாளக்குறி (watermark) வழங்கப்பட்டுள்ளது. 


பல இந்தியர்களைப் பாதிக்கும் சட்டங்களை உருவாக்குவதில் பொது ஆலோசனைகள் என்ற பகுதி, ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது அரசாங்கத்தின் 2014 நாடாளுமன்றத்திற்கு முந்தைய ஆலோசனைக் கொள்கையால் (Pre-Legislative Consultation Policy) அங்கீகரிக்கப்பட்டது. இது சட்டமியற்றும் முன் விரிவான பொது வெளிப்பாட்டைப் (public outreach) பரிந்துரைத்தது. தற்போது பழைய முறையை நிறுத்திவிட்டு, ஒரு சில பங்குதாரர்களை மட்டுமே கலந்தாலோசிக்கிறார்கள்.


மசோதாவின் முந்தைய வரைவை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினாலும், அதற்கான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவில்லை. மேலும் ஒரு சில பங்குதாரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது.  இந்த அணுகுமுறை ஆன்லைன் படைப்பாளர்கள் (online creators), ஊடகத் துறையின் பெரும்பகுதியினர் மற்றும் ஊடகச் சமூகத்தை சார்ந்துள்ளோர் போன்ற நபர்களைப் புறக்கணிக்கிறது. இந்த குழுக்கள் ஊடக ஒழுங்குமுறை குறித்து அதிக அக்கறைக் கொண்டுள்ளன. இந்த மசோதா ஏற்கனவே விரிவடைந்துள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பை  மேலும் விரிவுபடுத்தும். இந்த கட்டமைப்பு, செய்தி மற்றும் பொழுதுபோக்குகளில் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டை ஊக்கப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021 (IT Rules, 2021), இயற்றப்பட்டதிலிருந்து ஸ்ட்ரீமிங் தளங்களின் (over-the-top (OTT)) மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன .


 இந்தச் சூழலில், பல அமைச்சகங்களில் பொதுவான பிரச்சினையாக இருப்பது பொதுக் கலந்தாய்வு (public consultation) என்ற முறை இல்லாதது ஆகும். முக்கிய கொள்கை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், யார் கருத்துச் சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கும் திட்டமிட்ட உத்தியாக இருக்கலாம். இந்த செயல்முறை கவலைக்குரியது. ஊடக ஒழுங்குமுறையில் உள்ள கார்ப்பரேட்  நிறுவன பங்குதாரர்களின் நலன்கள், புதிய படைப்பாளிகள், வர்ணனையாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் நலன்களிலிருந்து பெரும்பாலும் வேறுபடுகின்றன. அவர்கள் ஒளிபரப்பு மசோதாவால் பாதிக்கப்படுவார்கள். மற்ற பங்குதாரர்களின் கருத்துக்களை அறியாமலோ அல்லது அவற்றுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இல்லாமலோ, உள்ள இந்த முன்மொழிவின் தரம் மற்றும் அதன் தன்மை மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. 


பொதுமக்களின் நம்பிக்கைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் விரைவான மற்றும் எளிமையான கொள்கைகளை உருவாக்கும் முறைகளைப் அரசாங்கம் நிறுத்த வேண்டும். இத்தைகைய முறை சர்ச்சைக்குரிய விவாதங்கள்  மற்றும் சட்டங்களுக்கு வழிவகுக்கும்.  



Original article:

Share:

திறன்களை பயனுள்ளதாக மாற்றுவதற்கு கல்வியே முக்கியமானது - தலையங்கம்

 இந்தியாவின் இளம் வயதினரின் (15-29 வயது) திறன் நெருக்கடி, கல்வி முறையின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மேலும், சிறந்த திறன் முயற்சிகளால் இந்தக் குறையை ஈடுசெய்ய முடியாது.


படித்த இளைஞர்களிடையே தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற  பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிதிநிலை அறிக்கை முயற்சிக்கிறது. எதிர் காலத்தில் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund (EPF))  பங்களிப்பை செலுத்துவதன் மூலம்,  புதிய தொழிலாளர்களின் பயிற்சிக்கு மானியம் அளிக்கும்  மூன்று திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.


நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஊக்கத்தொகை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கக்கூடாது என்று விளக்கினார். மாறாக, இயந்திரங்களுக்கு மேல் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்கும் சிறிய முயற்சியாக  பார்க்க வேண்டும். இந்த முயற்சி, வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் புதிய பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க  வேலை வாய்ப்புகளை வழங்கும்.


 இந்த நடவடிக்கைகள் வேலைகளின் அளவு மற்றும் தரம்  ஆகிய இரண்டையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவை.  அதேசமயம், 2019-ஆம் ஆண்டு முதல் இந்திய தொழிலாளர்களின்  அனுபவம், தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. ஆனால், உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்கள்  உயரவில்லை. ஏனென்றால், பல தொழிலாளர்கள் விவசாயம், கட்டுமானம் அல்லது சுயதொழில் போன்ற குறைந்த உற்பத்தி வேலைகளுக்குத் திரும்பியுள்ளனர். 


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (Employees' Provident Fund (EPF)) விரிவுபடுத்துவதில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்தச் சலுகைகளில் இருந்து பயனடைய நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் பங்கு பெற வேண்டும். இந்தத் திட்டங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கூடுதலாக, பயிற்சித் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, திறமையான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு பயனளிக்கும்.


எவ்வாறாயினும், இந்தியாவின் இளம் வயதினரின் (15-29 வயது) திறன் நெருக்கடி கல்வி முறையின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மேலும், சிறந்த திறன் முயற்சிகளால் இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், திறமையான வேலைகளுக்கு சிறந்த படித்தவர்கள் இல்லை. 


இதன் விளைவாக, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது கடினமாக இருப்பதாக கருதினால், தொழில்துறையினர் அதற்குப் பதிலாக தானியங்கி முறையை தேர்வு செய்யலாம். இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி (India Employment Report), இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்றவர்களை விட ஆறு மடங்கு அதிகமாகவும், படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களுடன் ஒப்பிடும்போது பட்டதாரிகளுக்கு ஒன்பது மடங்கு அதிகமாகவும் உள்ளது. நடுத்தர அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் கல்வி முறை இந்தியாவின் உற்பத்தித்திறனையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தாது. எதிர்காலத்தில் வரக்கூடிய   நெருக்கடியை எதிர்கொள்ள மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.


நிதிநிலை அறிக்கை முன்மொழிவு ஒரு சில இடர்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். முதலாவதாக, முதலாளிகள் தொழிலாளர்களின்  அடிப்படை சுதந்திரத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. இதற்கான வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மானியங்களைப் பெறுவதற்காக போலியான பதிவுகளை சந்தேகிக்கும் அளவுக்கு அதிகமாக உருவாக்கக்கூடாது. ’உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ (Know Your Customer(KYC)) தொழில்நுட்பம் அத்தகைய மோசடியைத் தடுக்க உதவும். மானியத் திட்டங்கள் வணிகம் செய்வதை கடினமாக்கினால் அவை பயனுள்ளதாக இருக்காது.



Original article:

Share:

கனிமங்களுக்கு வரி விதிக்கும் மாநிலங்களின் உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு -சன்யா சிங்

 கனிம வள வரிவிதிப்பு சூழலில் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவைப் புரிந்துகொள்வதில் நிதி கூட்டாட்சி (Fiscal federalism) ஒரு முக்கியமான கருத்தாகும்.


கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் & Anr. vs M/S Steel Authority of India & Anr (Mineral Area Development Authority & Anr. v. M/S Steel Authority of India & Anr) வழக்கின் தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)), 1957 மூலம் நிறுவப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை மீறி, கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.   


இந்தத் தீர்ப்பு, மாறுபட்ட கருத்துடன், கனிமப் பிரித்தெடுப்பதைப் (mineral extraction) பொறுத்தவரையில், உரிமைத் தொகை (royalty) வழங்குவதை சட்டப்பூர்வமாக வகைப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, உரிமைத் தொகை (royalty) என்பது கனிம உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு வரி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. இந்த வேறுபாடு இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கனிம வளங்களில் இருந்து வருவாயை ஈட்டும் திறனை இது  பாதிக்கிறது.


பெரும்பான்மையான கருத்து, உரிமைத் தொகை என்பது ஒரு வரி அல்ல என்பதாகும். இதன் மூலம் கனிம உரிமைகள் மீதான மாநில வரிவிதிப்பு மீதான நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது. மாறாக, உரிமைத் தொகை ஒரு வரியாக செயல்படுகிறது என்றும், கனிம வளர்ச்சியில் நாடாளுமன்றத்தின் பரந்த ஒழுங்குமுறை அதிகாரம் இந்த பகுதியில் மாநில வரிவிதிப்பைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது என்றும் மாறுபட்ட கருத்து வாதிடுகிறது. மாறுபட்ட கண்ணோட்டங்கள், குறிப்பாக, இயற்கை வள மேலாண்மை தொடர்பானவை இந்தியாவில் நிதிக் கூட்டாட்சியின் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.  

 

வழக்கின் பின்னணி


இந்தத் தீர்ப்புக்கு வழிவகுத்த வழக்கில் பல முறையீடுகள் மற்றும் ரிட் மனுக்கள் (writ petition) இருந்தன. இவை, கனிம நிலங்கள் மீதான மாநில வரிகளின் செல்லுபடியை சவால் செய்தன. இந்தியா சிமெண்ட் லிமிடெட் vs தமிழ்நாடு மாநிலம் (India Cement Ltd. vs. State of Tamil Nadu) 1990-ம் ஆண்டு வழக்கின் ஒரு முக்கிய குறிப்பானது, இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்  கீழ் விதிக்கப்பட்ட உரிமைத் தொகை, வரியாகக் கருதப்படும் என்று முடிவு செய்தது. கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  


இந்தத் தீர்ப்பு பின்னர் மேற்கு வங்க மாநிலம் vs கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (State of West Bengal vs Kesoram Industries Ltd) 2004 வழக்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அங்கு நீதிமன்றம் உரிமைத் தொகை ஒரு வரி அல்ல என்று தெளிவுபடுத்தியது.


இந்தியா சிமென்ட் வழக்கு, உரிமைத் தொகை வழங்களுக்கு செஸ் விரியை விதிக்கும் தமிழக அரசின் முயற்சியைச் சுற்றியே உள்ளது. உரிமைத் தொகை வளங்கள் ஒரு வரிக்கு நிகரானவை. இதனால், மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலத்தின் திறனைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியது. இது அடுத்தடுத்த சட்ட சவால்களில் மறுபரிசீலனை செய்யப்படும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.

சிக்கலை மறுபரிசீலனை செய்தல் மற்றும் தற்போதைய தீர்ப்பு


தற்போதைய வழக்கில், பல்வேறு மாநில அரசுகள் கனிம உரிமைகள் மீதான வரிகளை விதிக்கும் சட்டமியற்றும் தகுதி குறித்து இந்தியா சிமென்ட் (India Cement) மற்றும் கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் (Kesoram Industries) வழக்குகளில் முரண்பட்ட விளக்கங்களைக் கேட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநிலங்களின் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கள் கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிப்பதைத் தடுக்காது என்பதை வலியுறுத்துகிறது.   


கூட்டாட்சி மற்றும் சட்டமன்றத் திறன்  


கனிம வள வரிவிதிப்பு சூழலில் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவைப் புரிந்துகொள்வதில் நிதிக் கூட்டாட்சி ஒரு முக்கியமானக் கருத்தாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இது ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் இரண்டும் தங்கள் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படை இந்தியாவில் கூட்டாட்சிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்திய இந்திய அரசுச் சட்டம் (Government of India Act), 1935-ல் இருந்து அறியலாம்.


தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பிற்கான அடித்தளத்தை அமைத்து, கூட்டாட்சி மற்றும் மாகாண பட்டியல்களாக பாடங்களை ஒரே மாதிரியாகப் பிரிப்பதற்கு சட்டம் வழங்கியது. தற்போதைய தீர்ப்பு ஒன்றிய மற்றும் மாநில அதிகாரங்களை சமநிலைப்படுத்தும் வரலாற்று நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. மாநிலங்கள் தங்கள் வளங்களின் மீது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இது உறுதி செய்கிறது.


ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சட்டமன்ற அதிகாரங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதுதான் இந்தச் சட்டப் போரில் முக்கியப் பிரச்சினை ஆகும். இது அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஏழாவது அட்டவணையானது, அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் மாநிலங்களுக்கு வரிகளை விதிக்கக்கூடிய விதிமுறைகளைப் பட்டியலிடுகிறது.


ஒன்றியப் பட்டியலின் பிரிவு 54-ன் கீழ் இயற்றப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)), 1957, கனிம ஒழுங்குமுறைக்கான விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. எவ்வாறாயினும், மாநிலப் பட்டியலில் உள்ள நுழைவு 50, நாடாளுமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வரம்புக்கும் உட்பட்டு கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தற்போதைய தீர்ப்பு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (MMDR) அத்தகைய வரம்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் மாநிலங்கள் தங்கள் வரிவிதிப்பு அதிகாரங்களை இந்த பிரிவின் கீழ் பயன்படுத்த அனுமதிக்கிறது.


நிதி கூட்டாட்சி (Fiscal federalism) இரண்டு நலன்களை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சுரங்கம் போன்ற தொழில்களை ஒழுங்குபடுத்த ஒன்றியம் விரும்புகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்ட விரும்புகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative federalism) என்பது பொதுவான இலக்குகளை அடைய ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இதற்கு ஒரு உதாரணம் கனிம வளர்ச்சி ஆகும். இந்த ஒத்துழைப்பிற்கு, வருவாயை உருவாக்க மாநிலங்களின் அதிகாரத்துடன் ஒழுங்குபடுத்தும் ஒன்றியத்தின் அதிகாரத்தை சமநிலைப்படுத்த வேண்டும். தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் கனிம வளங்களை நிலையானதாக மேம்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.


மாநில வரி வசூலில் தாக்கங்கள்


கனிம உரிமைகளுக்கு வரி விதிக்கும் மாநில அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது பல தாக்கங்களைக் கொண்டுள்ளது.


மாநிலங்களுக்கான மேம்பட்ட வருவாய் : கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் இப்போது வரிகளை விதிப்பதன் மூலம், அவற்றின் வருவாயை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதில், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இது நிதித் திறனை அதிகரிக்க அவற்றின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியும்.


ஒழுங்குமுறை தெளிவு (Regulatory Clarity) : இந்த தீர்ப்பு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவை வழங்குகிறது. இது மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் கனிம உரிமைகள் மீதான வரிவிதிப்பிலிருந்து மத்திய அரசால் கையாளப்படும் கனிமங்களின் ஒழுங்குமுறையை பிரிக்கிறது. இந்தப் பிரிப்பு அதிகார வரம்பு மோதல்களைத் தடுக்க உதவுகிறது.


கூட்டாட்சியை வலுப்படுத்துதல் : இந்தத் தீர்ப்பு மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், இது அரசியலமைப்பிற்குள் மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசின் அதிக தலையீடு இல்லாமல் மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும்.


தீர்ப்பின் பகுப்பாய்வு


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியலமைப்பு விதிகள், முந்தைய வழக்குச் சட்டங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (MMDR) ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்கிறது.


தீர்ப்பின் முக்கிய விதிமுறைகள் பின்வருமாறு:


உரிமைத் தொகையின் தன்மை (Nature of Royalty) : உரிமைத் தொகை என்பது கனிமங்களைப் பிரித்தெடுக்கும் உரிமைக்கான கட்டணமே தவிர வரி அல்ல என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. எனவே, கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரம் அப்படியே உள்ளது.


பட்டியல் II-ன் பிரிவு 50 : நீதிமன்றம் பிரிவு 50 ஐ பரந்த அளவில் விளக்கியது. இதன் பொருள் கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிக்கலாம். நாடாளுமன்றம் விதித்துள்ள வரம்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் மாநிலங்களின் வரிவிதிப்புத் திறனை மறைமுகமாகக் கட்டுப்படுத்தவில்லை எனவும் கூறியது.


அரசியலமைப்புத் தத்துவம் (Constitutional Philosophy) : 


இந்த தீர்ப்பு அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கொள்கை ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளின் தெளிவான பிரிவை உருவாக்குகிறது. இந்த பிரிவின் நோக்கம் அதிகாரத்தை சமநிலைப்படுத்துவதும், ஒன்றிய அரசு அதிகாரத்தை மீறுவதைத் தடுப்பதும் ஆகும்.  


கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், இந்திய சட்டத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. முந்தைய தீர்ப்புகளில் இருந்து உருவான குழப்பங்களை தீர்ப்பதன் மூலம், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி கொள்கைகளை நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு மாநிலங்களின் நிதித் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள கனிம வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், வரி விதிப்பதற்கும் தெளிவான கட்டமைப்பையும் வழங்குகிறது. மாநிலங்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, ​​இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளின் நிர்வாகத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.



Original article:

Share:

உக்ரைன் போர் ஏன் இந்தியாவையும் ஐரோப்பாவையும் ஒன்றுக்கொன்று முக்கியமானதாக ஆக்குகிறது? -சி. ராஜா மோகன்

 சமீபத்திய பத்தாண்டுகளில், இந்தியா, ஐரோப்பிய புவிசார் அரசியலில் அதிக கவனம் செலுத்தவில்லை. இருப்பினும், உக்ரைனில் அமைதி செயல்முறையை ஆதரிப்பது முக்கியமானதாக இருக்கலாம். உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் தாக்கங்களைக் கொண்டுள்ளது.


அடுத்த மாதம் உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் பயணம், ஐரோப்பிய பாதுகாப்புக்கான இந்தியாவின் அணுகுமுறையை மறுசீரமைப்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான அரசியல் போட்டிகள் நவீன இந்தியா மற்றும் ஆசியாவின் பரிணாமத்தை வடிவமைத்திருந்தாலும், சமீபத்திய பத்தாண்டுகளில் இந்தியாவின்  இராஜதந்திர உத்திகளில் இருந்து  ஐரோப்பிய புவிசார் அரசியல்  வீழ்ச்சியடைந்துள்ளது. 

 

எவ்வாறாயினும், உக்ரைனில் நடந்த போர், இந்தியாவின் சர்வதேச செயல்திட்டத்தில் ஐரோப்பா பற்றிய கேள்வியை சரியான இடத்தில் வைத்துள்ளது. இந்தியாவின் பொது உரையாடல் உக்ரைன் பிரச்சினையை மேற்கத்திய நாடுகளின் "அழுத்தப் புள்ளியாக" (pressure point) அல்லது ரஷ்யாவுடன் ஒற்றுமைக்கான ஒரு தருணமாகக் கருதுகிறது. அதற்குப் பதிலாக, உக்ரைனில் நடக்கும் போரை, ஐரோப்பிய அமைதி மற்றும் பாதுகாப்புடன் நீண்டகாலமாக மீண்டும் ஈடுபடுத்துவதற்கான ஒரு இன்றியமையாததாக இந்தியா பார்க்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா தனது அரசியல் மற்றும் இராஜதந்திர தொடர்புகளை ஐரோப்பாவுடன் அதிகரித்துள்ளது. ஐரோப்பா ஒரு முக்கிய பொருளாதார பங்குதாரர் மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தின் முக்கிய ஆதாரம்  ஆக உள்ளது. இப்போது, ​​இந்தியா இந்த தொடர்புகளுக்கு ஒரு இராஜதந்திர ரீதியாக கவனம் சேர்க்க வேண்டும். 


கடந்த பத்தாண்டுகளில் மற்றும் பல ஆண்டுகளாக, இந்தியா ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளை நோக்கிய தனது உத்தியை சரிசெய்துள்ளது. அது மத்திய கிழக்கிற்கான அணுகுமுறையையும் மறுசீரமைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் முன்னோக்குகளில் இந்த மாற்றங்களில் ஐரோப்பா சேர்க்கப்படவில்லை. பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து, ஐரோப்பாவை அமைதியானதாகக் கருத இந்தியாவுக்கு சில காரணங்கள் இருந்தன.  


ஐரோப்பா மீதான இந்தியாவின் "இராஜதந்திர ரீதியில்லாத" (non-strategic) சிந்தனை ஐரோப்பாவின் "வணிகவாதத்தால்" (mercantilism) வலுப்படுத்தப்பட்டது. ஐரோப்பா ஒரு வலுவான உலகளாவிய தலைமையாக இருக்க விரும்பியது, ஆனால் அது வர்த்தகம் மற்றும் வணிகத்தில் அதிக கவனம் செலுத்தியது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உலக அரசியலைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.


பனிப்போரின் முடிவில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களால் இரஷ்யா ஏமாற்றப்பட்டதாக உணர்கிறது. அது இப்போது ஐரோப்பிய பாதுகாப்பு ஆணையில் (European security order) மாற்றங்களைக் கோருகிறது. ரஷ்யா தனது இலக்குகளை அடைய கடுமையான உத்திகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது. 


இதற்கிடையில், படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனுக்கு உதவிய அமெரிக்கா, நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பதில் கடுமையான உள் பிளவுகளை எதிர்கொள்கிறது. குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் உக்ரைனுக்கான தற்போதைய அணுகுமுறையில் உடன்படவில்லை. சில உறுப்பினர்கள் மோதலை அதிகரிக்க விரும்புகிறார்கள்.


இரஷ்யாவிற்கு எதிராக தங்கள் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு ஐரோப்பா அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், ஆசியாவில் கவனம் செலுத்த அமெரிக்காவை விடுவிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள பலர் விரும்புகிறார்கள். 


மாறிவரும் அமெரிக்காவுடன் ஐரோப்பா ஒரு சவாலை எதிர்கொள்கிறது. ரஷ்யாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த உள் பிளவுகளால் இந்த பிரச்சினை மிகவும் சிக்கலானது. வரலாற்று ரீதியாக நடுநிலை வகித்த இரண்டு நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் NATO-இல் இணைந்துள்ளன. ரஷ்யாவினால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை உணர்ந்ததால் அவர்கள் இதைச் செய்துள்ளனர். ஆனால் இரண்டு NATO உறுப்பு நாடுகள் ஹங்கேரி மற்றும் துருக்கி, உக்ரேனில் போரைக் கையாள்வதில் தங்கள் சொந்த பாதைகளைத் தொடர முயன்றனர்.


பல ஐரோப்பிய அரசியல் கட்சிகள் (இடது மற்றும் வலது இரண்டும்) மாஸ்கோவுடன் ஒரு சமரசத்திற்கு ஆதரவாக உள்ளன.  


மேற்கண்ட குறிப்பிட்ட விஷயங்களை இன்னும் மோசமாக்கும் வகையில், உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யாவை ஆதரிப்பதற்காக சீனாவை எப்படி விமர்சிப்பது என்று அவை போராடுகின்றன. அதே நேரத்தில், மாஸ்கோவை நிறுத்துமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பா கேட்டுக்கொள்கிறது. சுருக்கமாக, ஐரோப்பா கடுமையான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்கிறது. ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பு திறன்களை உருவாக்குவதே இதற்கு தீர்வாக இருக்கும். இருப்பினும், இதற்கு நேரம் எடுக்கும் மற்றும் ஒற்றுமை மற்றும் தீவிர அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.


ஐரோப்பா போருக்கு திரும்புவது இந்தியாவிற்கு பல பொருளாதார சவால்களை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு சவால்களையும் சிக்கலாக்கியுள்ளது. ரஷ்யாவுடனான அதன் உறவு மேற்கு நாடுகளில் அரசியல் ஆய்வுக்கு உட்பட்டிருந்தால், மாஸ்கோவுடனான பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் உறவுகளும் ஐரோப்பாவுக்கான அதன் இராஜதந்திர பயணங்களும் இந்தியாவின் பாதுகாப்பு கணக்கீட்டில் புதிய நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளன.


எவ்வாறாயினும், உக்ரைன் மோதலை வேறொருவரின் பிரச்சினை என்று இந்தியா நிராகரிக்கவில்லை. உக்ரைன் மீதான உலகளாவிய இராஜதந்திரத்தில் அது முன்னணியில் இல்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மாஸ்கோ பயணமும், அடுத்த மாதம் கியேவுக்கு அவர் திட்டமிட்ட பயணமும் உக்ரைனில் இந்தியாவின் அமைதி இராஜதந்திரத்தை தீவிரப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.   


உக்ரைன் போர் ஒரு உடன்பாட்டிற்குத் தயாராக இல்லை என்று சில ஆய்வாளர்கள் கூறுவார்கள். மாஸ்கோ (Moscow) மற்றும் கியேவ் (Kyiv) இரண்டும் இப்போது இரண்டரை வருடங்களாக இருக்கும் மோதலுக்கு அதிக விலை கொடுக்கின்றன என்றாலும், அமைதிக்காக பெரிய நகர்வுகளை மேற்கொள்ள இரு நாடுகளும் தயாராக இல்லை.  மாஸ்கோவும் உக்ரைனும் அமெரிக்கத் தேர்தல்களின் முடிவை எதிர்நோக்கியுள்ளன. இது உக்ரேனில் போர் மற்றும் அமைதியை உருவாக்கும் ஒரு பெரிய மாறுபாட்டை உருவாக்கும். 


உக்ரைனில் அமைதிக்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா தனது அரசியல் மற்றும் இராஜதந்திர மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டுமா? எந்தவொரு இந்திய அமைதிக்கான முயற்சியின் தாக்கமும் ஓரளவு இருக்கும் என்று சந்தேகம் கொண்டவர்கள் கூறுவார்கள். ஆனால், இந்தியப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான போரின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, சமாதான முன்னெடுப்புகளை ஒரு வரையறுக்கப்பட்ட வழியில் ஆதரிப்பது பயனுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளில் அதன் புதிய நட்பு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மட்டுப்படுத்துவது இந்தியாவின் நீண்ட கால நலனுக்கானது. ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் முக்கிய பயனாளியாக சீனா எப்போதும் இருக்கும் என்பதை நமது பிராந்தியத்தில் பெரும் சக்தி மோதலின் வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது.  


உக்ரைனில் இந்தியாவின் அமைதி இராஜதந்திரம் மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய பாதுகாப்புடன் இந்தியாவின் இராஜதந்திர மறு-ஈடுபாட்டை (strategic re-engagement) நோக்கிய ஒரு முக்கியமான படியாக இருக்கும். இது நீண்ட இந்தோ-ஐரோப்பிய புவிசார் அரசியல் விதிமுறையின் முடிவைக் குறிக்கிறது. காலனித்துவ காலத்தில், இந்திய இளவரசர்கள் தங்கள் நடவடிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க துணைக்கண்டத்தில் ஐரோப்பிய போட்டியைப் பயன்படுத்த முயன்றனர். பரந்த பிரிட்டன் (Great Britain) தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், இந்திய தேசியவாதிகளின் பிரிவுகள் ஐரோப்பிய சக்திகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து இங்கிலாந்து ஆட்சியைத் தோற்கடிக்கச் செய்தன. உதாரணமாக, ஏகாதிபத்திய ஜெர்மனி, 1915-ல் காபூலில் இந்தியாவின் முதல் தற்காலிக அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளித்தது. 


முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் போட்டி சக்திகளைத் தோற்கடிக்க பிரிட்டன் இந்தியப் படைகளை நம்பியிருந்தது. முதல் போரில் ஒரு மில்லியன் இந்திய வீரர்களும், இரண்டாவதாக போரில் இரண்டு மில்லியன் வீரர்களும் கலந்து கொண்டனர். பனிப்போர் மற்றும் பனிப்போருக்குப் பிந்தைய நூற்றாண்டு ஐரோப்பாவுடனான இந்தியாவின் குறைவான இராஜதந்திர ஈடுபாட்டைக்  கண்டது. ஐரோப்பாவில் நிலவும் மோதல்கள் உக்ரைனில் போர் நிறுத்தத்துடன் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கு கட்டமைக்கப்படுவதற்கு சிறிது காலம் ஆகும். சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய சக்திகள் இப்போது ஐரோப்பிய பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஐரோப்பிய புவிசார் அரசியலில் இந்தியா இன்னும் அதிக பங்குகளைக் கொண்டுள்ளது. 



Original article:

Share: