சீனா-ஆப்பிரிக்கா 2024 உச்சி மாநாடு குறித்து ஒரு முழுமையான பார்வை -ராஜீவ் பாட்டியா

 ஆப்பிரிக்க அரசாங்கங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படுவதை அதிகம் விரும்புகின்றன. சில நாட்களுக்கு முன்னர் நடந்த சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற (Forum on China-Africa Cooperation (FOCAC)) மாநாடு கவனமாக ஆராயப்பட வேண்டும். இந்த மாநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்தியாவுக்கு உள்ளது.  


"ஆப்பிரிக்காவில் சீனாவைப் படிப்பது புதர்களில் ஒரு டிராகனைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது போன்றது அறிஞர் ஜார்ஜ் யூ 1968-ல் கூறினார்.  20-ஆம் நூற்றாண்டில் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. 


கடந்த 24 ஆண்டுகளில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம், ((Forum on China-Africa Cooperation (FOCAC)) இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடல், தொடர்பு மற்றும் திட்டமிடலுக்கான விரிவான மற்றும் பயனுள்ள தளமாக மாறியுள்ளது. சில குறைகள்  இருந்தபோதிலும், ஆப்பிரிக்க நாடுகள் சீனாவுடனான தங்கள் உறவுகளை வலுப்படுத்துவது நன்மையளிக்கும் என்று கருதுகின்றன. 2000-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த முதல் உச்சிமாநாட்டிற்கு பிறகு  தொடங்கிய சீன-ஆப்பிரிக்க  உறவு நன்றாக வளர்ந்துள்ளது. 


அப்போதிருந்து, பெய்ஜிங்கில் ஐந்து மாநாடுகளும், எத்தியோப்பியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா மற்றும் செனகலில் தலா ஒரு மாநாடுகளும் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்திய பெய்ஜிங் உச்சிமாநாடு ஆபிரிக்காவில் அதன் இலக்குகளுக்கான சீனாவின் நிலைத்தன்மையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இலக்குகள் பொருளாதார, அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியானவை. உலகின் எதிர்காலத்திற்கு ஆபிரிக்கா முக்கியமானது என்ற பெய்ஜிங்கின் நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், உலகின் எதிர்காலத்திற்கு ஆப்பிரிக்கா முக்கியமானது என்றும், தங்களை ஆதரிக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. 


முக்கிய கூறுகள் 


சமீபத்திய உச்சிமாநாட்டில் இருந்து 30-பத்தி பெய்ஜிங் பிரகடனத்தை கவனமாகப்பார்த்தால், அதன் முக்கிய கூறுகள் வெளிப்படுகின்றன. 


முதலாவதாக, குறிப்பிடத்தக்க சீன செல்வாக்கைக் காட்டும் ஆவணம் ஆறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது 'பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீனா ஆப்பிரிக்க சமூகத்தை' (’China Africa Community with a Shared Future’) கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (China’s Belt and Road Initiative (BRI)), ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நிகழ்ச்சி கொள்கை 2063 மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா.வின் கொள்கை  2030 இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. உலகளாவிய மேம்பாட்டு முயற்சி (Global Development Initiative (GDI)), உலகளாவிய பாதுகாப்பு முயற்சி (Global Security Initiative (GSI) மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி (Global Civilization Initiative (GCI)) ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, இது சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம், கண்ணோட்டத்தை மதிப்பாய்வு செய்கிறது. 


இரண்டாவதாக, நிர்வாகம், நவீனமயமாக்கல் மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் பரிமாற்றங்களை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் "தங்கள் சொந்த நாகரிகங்களின் பண்புகளை" அடிப்படையாகக் கொண்ட நவீனமயமாக்கலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் "அனைவருக்கும் நன்மை பயக்கும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார உலகமயமாக்கல்" (‘mutually beneficial and inclusive economic globalization’) கொள்கைக்கு ஆதரவு கொடுக்கின்றன. 


உலக நிர்வாகத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் ஆப்பிரிக்காவின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கிறது. "ஆபிரிக்க ஒன்றியம் G20-ல் சேருவதற்கு ஆதரவு கொடுக்கும் முதல் நாடு சீனா என்பதை ஆபிரிக்கா பாராட்டுகிறது" என்று பிரகடனம் குறிப்பிடுகிறது. இரு  நாடுகளும் சமமான மற்றும் ஒழுங்கான பன்முக உலகை உருவாக்க வேண்டும் என்று வாதிடுவதுடன், பாதுகாப்பு குழு உட்பட ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்த தேவையான சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. 


  மூன்றாவதாக, சீனா, ஆப்பிரிக்க மற்றும் ஐ.நா வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பது புதிதல்ல. இது கடந்த காலங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சீனா இப்போது ஆப்பிரிக்க கண்ட சுதந்திர வர்த்தக பகுதியில் (African Continental Free Trade Area (AfCFTA)) முன்னேற்றத்தை ஒப்புக்கொள்கிறது. ஆபிரிக்காவுடன் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் சீனா தயாராக உள்ளது. 


ஆப்பிரிக்காவில் திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியளிப்பது தொடர்பாக, சீனா தனது நிலைப்பாட்டை மாற்றியது. ஆபிரிக்க நாடுகளின் கடன்களை நிர்வகிப்பதில் சர்வதேச நிதிய அமைப்புக்களும் வணிகக் கடன் கொடுத்தவர்களும் பங்கு பெறவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர்.

 

நான்காவதாக, சீனாவின் மூன்று முக்கிய திட்டங்களான உலகளாவிய மேம்பாட்டு முன்முயற்சி (Global Development Initiative (GDI)), உலகளாவிய பாதுகாப்பு முயற்சி (Global Security Initiative (GSI)) மற்றும் உலகளாவிய நாகரிக முன்முயற்சி (Global Civilization Initiative (GCI)) ஆகியவை இப்போது கூட்டு ராஜதந்திர உறவின் மூலம் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு விரிவான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


உதாரணமாக, ஆப்பிரிக்காவின் அமைதி நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு சவால்களுக்கு ஐ.நா நிதியுதவியை அதிகரிப்பதற்கான சீனாவின் ஆதரவை இந்த பிரகடனம் வெளிப்படுத்துகிறது. கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலை ஆழப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளின் அவசியத்தையும் இந்த ஆவணம் வலியுறுத்துகிறது. 


ஐந்தாவதாக, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின், ((Forum on China-Africa Cooperation (FOCAC))) இறுதிப் பகுதி ஆப்பிரிக்க இணைத் தலைவர் பாத்திரத்தை செனகலில் இருந்து காங்கோ குடியரசுக்கு மாற்றுவதை அறிவிக்கிறது. பத்தாவது மாநாடு 2027-ல் காங்கோவில் நடைபெறும் என்பதையும் உறுதிப்படுத்தியது.


மேற்பரப்பிற்கு கீழே, இது ஒரு பழக்கமான முறையைப் பின்பற்றுகிறது

 

பெய்ஜிங் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரை குறித்து சர்வதேச ஊடகங்கள் பல தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இருப்பினும், அவரது பேச்சு கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பழக்கமான முறையைப் பின்பற்றியது. அவர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு  $51 பில்லியன் கடன்கள், மானியங்கள் மற்றும் முதலீடுகளை அறிவித்தார். 

முந்தைய அறிவிப்புகளைப் போலவே வர்த்தகம், பசுமை மேம்பாடு, தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான 10 கூட்டாண்மை நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.


பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 60,000 பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது, 1,000 ஆப்பிரிக்க அரசியல் கட்சி உறுப்பினர்களை சீனாவுக்கு அழைப்பது, 7,000 ஆப்பிரிக்க ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வாக்குறுதிகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த காலங்களைப் போலவே, இந்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை.


100% கட்டண வரிகளுக்கு அனைத்து 33 குறைந்த வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பூஜ்ஜிய கட்டண முறையை பின்பற்ற சீனா முடிவு செய்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், சீனாவிற்கான ஆப்பிரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும். 


சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொடர்பாக, மூன்று முக்கிய முன்னோக்குகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 


முதலாவதாக, ஆபிரிக்காவுடனான தனது உறவை சீனா ஒரு இயற்கையான கூட்டணியாக பார்க்கிறது. சீனா உலகின் மிகப்பெரிய வளரும் நாடு, ஆப்பிரிக்கா அதிக வளரும் நாடுகளைக் கொண்டுள்ளது. சீனா பொருளாதார வெற்றியை அடைந்துள்ளது மற்றும் மேற்கத்திய அணுகுமுறைகளிலிருந்து மாறுபட்ட நவீனமயமாக்கலுக்கான மாற்று பாதையை நிரூபித்துள்ளது. 

 

இரண்டாவதாக, பல ஆபிரிக்கர்கள் சீனாவுடன் நெருங்கிய கூட்டுறவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் பார்க்கின்றனர். எவ்வாறாயினும், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் செயல்முறை பெரும்பாலும் "நன்கொடையாளர்-பெறுநர்" (‘donor-recipient’) மாறும் தன்மையைக் கொண்டுள்ளது என்று ஆப்பிரிக்கா ராஜதந்திர  ஆய்வு மையத்தைச் சேர்ந்த பால் நந்துல்யா சுட்டிக்காட்டுகிறார். இதன் பொருள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சிறிய பங்கு உள்ளது. அதே நேரத்தில் சீனா பெரும்பாலான கொள்கைகளை உருவாக்குகிறது. 


மூன்றாவதாக, அட்லாண்டிக் குழுவின் மைக்கேல் ஷூமன், வளரும் நாடுகளில் சீனாவின் ஆர்வம், ஜி ஜின்பிங்கின் அமெரிக்க எதிர்ப்புக் கருத்துக்களால் பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறார். அமெரிக்க உலகளாவிய செல்வாக்கிற்கு எதிராக சமநிலைப்படுத்துவதற்காக உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் குழுவை உருவாக்குவதை சீனா அதிபர் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று ஷூமன் நம்புகிறார்.


2019-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த ஒரு ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர் மிகவும் நுணுக்கமான பார்வையை வழங்கினார். ஆப்பிரிக்காவில் சீனாவின் பங்கை முற்றிலும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பார்ப்பதற்கு எதிராக அவர் அறிவுறுத்தினார். சுகாதாரம் மற்றும் கல்வியில் சீனா சாதகமான பங்களிப்பைச் செய்து வரும் அதே வேளையில், கண்டத்தில் தனது சக்தியையும் செல்வாக்கையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


 இந்தியாவுக்கு இறக்குமதி 


இறுதியாக, சமீபத்திய சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு ((Forum on China-Africa Cooperation (FOCAC)) மாநாட்டிலிருந்து இந்தியாவிற்கான முக்கிய எடுத்துக்காட்டுகள் என்ன?மூன்று புள்ளிகள் தனித்து நிற்கின்றன:

 

முதலாவதாக, ஆப்பிரிக்காவுடனான உயர்மட்ட உறவை இந்தியா கவனமாக பராமரிக்க வேண்டும். மூன்று இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாடுகளை நடத்திய பின்னர், இந்தியா தனது ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட மாநாட்டு இராஜதந்திரத்தை 2015-ல் நிறுத்தியது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இந்திய எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

 

இரண்டாவதாக, வலுவான வரலாற்று உறவுகள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சுக்கள் முக்கியம். ஆனால், அவை நிதி உதவியால் ஆதரிக்கப்பட வேண்டும். ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா அதிக வளங்களை முதலீடு செய்ய வேண்டும். இது இல்லாமல், ராஜதந்திர மற்றும் வணிக முயற்சிகள் மேற்கொள்ளபட வேண்டும்.  


மூன்றாவதாக, இந்தியா தனது இராஜதந்திர முன்னுரிமைகளில் ஆப்பிரிக்காவின் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆப்பிரிக்காவுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டால், அதற்கேற்ப செயல்பட இந்திய அரசை ஊக்கப்படுத்த வேண்டும். 


இந்தியாவின் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கான நடைமுறைக் கொள்கை விருப்பங்களை பரிந்துரைத்துள்ளனர். இப்போது, ​​முன்னோக்கிச் செல்ல வலுவான அரசியல் விருப்பம் தேவை.

 

ராஜீவ் பாட்டியா (Rajiv Bhatia) கேட்வே ஹவுஸ், தென்னாப்பிரிக்கா. கென்யா மற்றும் லெசோதோவுக்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா உறவுகள்: மாறும் எல்லைகள் (2022) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.



Original article:

Share:

புதிய அமைச்சர்கள் குழு மற்றும் காப்பீடுகளுக்கான வரி மாற்றங்கள் குறித்து..

 சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) குழு கூட்டம் காப்பீட்டு நுகர்வோருக்கு சில நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


2024 பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST))  குழு இரண்டாவது முறையாக கூடியது. இந்த சந்திப்பு செப்டம்பர் 9, 2024 திங்கட்கிழமை அன்று நடந்தது. காப்பீட்டுத் தவணைத் தொகை (insurance premium payments) செலுத்துவதில் 18% மறைமுக வரி குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதை குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் மீதான வரிகளில் மாற்றங்களை விரைவில் பரிந்துரைப்பதற்காக குழு புதிய அமைச்சர்கள் குழுவை உருவாக்குகிறது. குழுவின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்ய நவம்பர் மாதம் மீண்டும் கூட்டம் நடத்த இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் காப்பீட்டுக்கான வரியை வலுவாக ஆதரித்தது குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது. மாநிலங்கள் இந்த வருவாயில் பெரும் பகுதியைப் பெறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், வரியை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் முடிவில் அங்கம் வகிப்பதால், அவர்கள் தங்களது மாநில அமைச்சர்களுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார்.


சரக்கு மற்றும் சேவை வரி  குழு ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி தொடங்கப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று முறை காப்பீடு மீதான வரியை குறைப்பதாக கூறியது. இருப்பினும், ஒவ்வொரு வரி விதிப்பில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாமல் பழைய நிலையே தொடர்கிறது.

 

இந்த முறை, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் வரி குறைப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகை வரி விதிப்பது என்பது நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பது போன்றது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். கூடுதலாக, ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணி கட்சிகளான, தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party (TDP) மற்றும் ஜன சேனா கட்சிகளும், உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான வரிகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. 


தேர்தலுக்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பற்றி பேச வேண்டாம் என்று என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நுகர்வோர் மீது அதிக வரி விதிப்பதாக பலர் இதைப் பார்க்கிறார்கள். 2021-22-ஆம் ஆண்டு மற்றும் 2023-24-ஆம் ஆண்டு இடையில் சுகாதார காப்பீட்டு தவணைத் தொகையிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி  வருவாய் 54% மேல் அதிகரித்துள்ளது.  கடந்த ஆண்டு வரி வசூல் ரூ.8,262 கோடியாக இருந்தது. 


ஆயுள் காப்பீட்டின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் எந்தக் குறைப்பும், குழுக் கொள்கைகள் அல்லது மூத்த குடிமக்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் அல்ல. அது குறைந்த தொகையில் ஆயுள் காப்பீடு  பெறுவதற்கு வழிவகுக்கும். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மக்களுக்கு ஆயுள் காப்பீடு தேவை அதிகமாகிவிட்டது. ஆனால், மருத்துவமனையில் தங்குவதற்கும் காப்பீடு செய்வதற்கும் ஆகும் செலவுகள் இன்னும் அதிகமாகிவிட்டன.


இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகள் இன்னும் போதுமானதாக இல்லை.  ஒரு குடும்ப உறுப்பினரை மட்டுமே பாதிக்கும் ஒரு கடுமையான நோய் ஒரு சராசரி குடும்பத்தை வறுமையில் தள்ளும். ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஆயுள் காப்பீடு கொள்கைகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும். இதனால் இக்கொள்கைகள் குடும்பங்களின்  கடினமான சூழ்நிலைகளில் உதவும். மறுபுறம், காப்பீடாக விற்கப்படும் சந்தை முதலீட்டு தயாரிப்புகளுக்கு அதே நிவாரணம் தேவையில்லாத ஒன்று. 


சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் அறிவுரைப்படி, ஹெலிகாப்டர் சேவைகளுக்கு 'பகிர்வு இருக்கை' (‘shared seat’) அடிப்படையில் 5% ஜிஎஸ்டி இருந்தால் மட்டுமே, காப்பீட்டு  கொள்கைகள்  அதிக தீங்கற்ற வரிவிதிப்புக்கு தகுதியானவை.



Original article:

Share:

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (Farmer Producer Organisations (FPO)) சிக்கல்கள்:

 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்த கொள்கை குழப்பம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். 


சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு 'தேசிய உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை' வரைவு வெளியிடப்பட்ட பின்னர் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organisations (FPO))  சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கள் தங்கள் தயாரிப்பு தரத்தை வெளிப்படுத்த ஒரு 'தேசிய பிராண்டை' உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


இருப்பினும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும்,  அந்த துறையின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஜூலை மாதத்தில் சில உழவர் உற்பத்தியாளர் அமைப்புககளின் செயல்திறன் குறித்து கவலை தெரிவித்து, இடைவெளிகளை அடையாளம் காண மறுஆய்வு செய்ய அழைப்பு விடுத்தார். 


10K கொள்கை (10K policy) முன்முயற்சியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த உழவர் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து சராசரியாக ₹210 கோடி சமபங்கு நிதியை பெற்றுள்ளனர். இது ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு ₹2 லட்சம் மட்டுமே பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் பலர் கடுமையான பாதிப்புகளில் உள்ளதாக தனியார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கொள்கை ஆவணம், உறுப்பினர், அளவு மற்றும் மூலதனத்தை உருவாக்க மூன்று-அடுக்கு கூட்டமைப்பு கட்டமைப்பை வலியுறுத்துகிறது.


10K கொள்கையின் ஒரு மையப் பிரச்சினை என்னவென்றால், விவசாயிகளை ஈர்க்க உள்ளீட்டு கொள்முதல், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தற்போதுள்ள அமைப்புகளை விட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் தற்போதைய நிலையிலிருந்து நிச்சயமற்ற மாற்றுக்கு மாற வாய்ப்பில்லை. திறமையான தலைமை மற்றும் தொழில்முறை முக்கியம். 


தற்போதைய கொள்கைகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின்  (FPO) வெற்றியில் நிபுணர்களை முதலீடு செய்யும் ஒரு அமைப்பை உருவாக்கத் தவறிவிட்டன. நிர்வாக ஆதரவுக்காக ஒரு வள நிறுவனத்திற்கு (‘resource institution (RI)’) மூன்று ஆண்டுகளில்  உருவாக்கத்திற்கு 18 லட்ச ரூபாயும், செயல்படுத்துவதில் 25 லட்சம் ரூபாயும் வரை ஒதுக்கீடு செய்கிறார்கள். விவசாயத்தில் நேரடியாக ஈடுபடாத வள நிறுவனங்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின்  (FPO)  துறையில் நுழைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கூடுதலாக, வள நிறுவனங்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு பல உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை  (FPO)  உருவாக்க முடியும் என்று தெரிகிறது. வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க தொழில்முறை நிதி இணைக்கப்பட வேண்டும். சமூக பங்குச் சந்தைகள் அல்லது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள் மூலமாகவும் மூலதனத்தை திரட்டலாம். 


உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய கொள்கை குழப்பமும் உள்ளது. ஆரம்பத்தில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்  (FPO) கூட்டுறவுகளில் நிர்வாக சிக்கல்களைத் தீர்ப்பதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' என்று கருதப்பட்டன. 


தற்போது, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் கூட்டுறவு அமைப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பல  நிறுவன அமைப்புகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்  (FPO)  திட்டத்தை செயல்படுத்துகின்றன.  இது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு  (FPO) அடையாள நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.  கூட்டுறவுகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்துவது இந்த குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்த பிரச்சினைகள் விரிவான ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.



Original article:

Share:

வங்கதேச இந்துக்களுக்கு புகலிடம் வழங்க இந்தியா விரும்பாதது ஒரு கொள்கை மாற்றத்தை குறிக்கிறது. - தீபக் கே சிங்

 அகதிகளை தாராளமாக உபசரிக்கும் இந்தியா என்ற  சாதனை வரலாற்றில் அடைக்கலம் தர மறுப்பது அகதிகளின் நிலை தொடர்பான 1951-ஆம் ஆண்டில் ஐ.நா உடன்படிக்கை அல்லது அதன் 1967-ஆம் ஆண்டில் நெறிமுறைகளில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தஞ்சம் வழங்குவதற்கான சட்டபூர்வ அடிப்படையை உருவாக்குகின்றன. 


ஆகஸ்ட் 5, 2024 அன்று, ஷேக் ஹசீனா புது தில்லியை அடைந்து, இந்தியாவிற்குள் நுழைய அவசரமாக கோரிக்கை விடுத்தார். அவர் பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு செல்ல, பாதுகாப்பு அளிக்க  இந்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவுடனான அவரது நீண்டகால நட்புறவு மற்றும் வங்கதேசத்தில் உள்ள இந்திய எதிர்ப்பு போராளிக் குழுக்களுக்கு எதிரான அவரது வலுவான நடவடிக்கைகளால் இந்த முடிவு சாத்தியப்பட்டது.  


எவ்வாறாயினும், துன்புறுத்தப்பட்ட வங்கதேச இந்துக்களுக்கு தஞ்சம் வழங்க இந்திய அரசாங்கம் மறுப்பது, உலகெங்கிலும் துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஒரு "இயற்கையான வீடு" (natural home) என்ற அதன் வழக்கமான நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது. வங்கதேசத்தில் நடந்து வரும் மத துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகள் தொடர்கின்றன. இந்து ஆசிரியர்கள் ராஜினாமா செய்கிறார்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இனவெறி  தாக்குதலை எதிர்கொள்கின்றனர். 


ஆகஸ்ட் 5 முதல், வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்கள் மீது 205 தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதில் ஐந்து உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் உள்ளன. வங்கதேச இந்து, பௌத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலின் தலைவர் நீம் சந்திர பௌமிக், 64 மாவட்டங்களில் 52 மாவட்டங்களில் இருந்து காழ்ப்புணர்ச்சி, மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார். 


குறிப்பாக இந்திய அரசாங்கம் சமீபத்தில் இந்திய குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ), 2019  இயற்றிய நிலையில், அடைக்கலம் வழங்க மறுப்பது புதிராக உள்ளது. 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத துன்புறுத்தல் காரணமாக இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க குடியுரிமை திருத்தச் சட்டம் அனுமதிக்கிறது. 


அரசாங்கத்தின்  நிர்ணயம் இந்த சட்டத்தின் பயன்பாட்டை மட்டுப்படுத்தினாலும், அது துன்புறுத்தப்பட்ட வங்கதேச சிறுபான்மையினருக்கு தற்காலிக அடைக்கலம் கொடுத்திருக்கலாம். துன்புறுத்தப்பட்ட இந்த இந்துக்களை அவர்கள் துன்புறுத்துவதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும் அரசாங்கம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 


துன்புறுத்தப்பட்ட இந்த இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன. வங்கதேசம் மற்றும் இந்தியா-வங்கதேச எல்லையில் நிலைமையை கண்காணிக்க மோடி அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 



கிழக்கு  எல்லை பாதுகாப்பு படையின் தலைமையிலான குழு, இந்திய குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். வங்கதேச இந்துக்கள் இந்தியாவுக்குள் நுழைவதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. 


இந்த அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்க மறுப்பது, அகதிகளை ஏற்றுக்கொண்ட அதன் வரலாற்றுடன் கூர்மையாக முரண்படுகிறது. 1951-ஆம் ஆண்டு அகதிகள் நிலை தொடர்பான ஐ.நா. உடன்படிக்கை அல்லது அதன் 1967-ஆம் ஆண்டு நெறிமுறைகளில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தஞ்சம் வழங்குவதற்கான வலுவான அடிப்படையை வழங்குகின்றன. வழக்கமான சர்வதேச சட்டத்தின்படி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது. 


வரலாற்று ரீதியாக, 1951-ஆம் ஆண்டு உடன்படிக்கையில் கையெழுத்திடாத போதிலும், விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னர் மில்லியன் கணக்கான கிழக்கு பாக்கிஸ்தானிய அகதிகளுக்கு இந்தியா புகலிடம் வழங்கியுள்ளது. தஞ்சம் கோரும் தற்போதைய வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு, மொத்தம் சில ஆயிரங்கள் ஆகும். திபெத்தியர்கள் மற்றும் சக்மாக்கள் உட்பட அகதிகளை வரவேற்கும் இந்தியாவின் கடந்த கால நிலைப்பாடு சர்வதேச அளவில் நன்கு மதிக்கப்பட்டது. 


மத சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்ள இந்தியா தற்போது தயக்கம் காட்டுவது ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது. பிராந்தியத்தில் அரசியல் உறுதியற்ற தன்மையுடன், அகதிகள் மீதான கடுமையான நிலைப்பாடு கடுமையான மனிதாபிமான தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் இந்தியாவின் சர்வதேச நற்பெயரை பாதிக்கும்.



Original article:

Share:

இந்தியாவின் நாடாளுமன்றக் குழு அமைப்பு: அதன் தோற்றம், முக்கியத்துவம் மற்றும் சவால்களை வெளிப்படுத்துதல். – திலீப் சந்திரன்

 நாடாளுமன்றக் குழுக்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு அறைகளுக்கு இடையில் குறுக்கு இணைவுக்கான வாய்ப்பை வழங்குகின்றன. அவை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மூலம்  மிக விரிவாக ஆராய உதவுகின்றன.  இந்த குழு அமைப்பின் தோற்றம் எங்கிருந்து வந்தது? 


பாராளுமன்றம், மற்றும் அவற்றின் முக்கியத்துவம் என்ன? 


நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கு முக்கியமான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்களை (Department-related Parliamentary Standing Committees (DRSCs)) அமைப்பதில் தாமதம் குறித்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. 


18–வது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக முக்கியமான குழுக்களின் கட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 


16 மற்றும் 17 வது மக்களவை அமர்வுகளின் போது மசோதாக்களை நிலைக்குழுக்கள் அல்லது தேர்வுக் குழுக்களுக்கு ஆய்வுக்கு அனுப்புவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த குறைப்பு நாடாளுமன்றத்தின் ஜனநாயக செயல்பாட்டை பாதிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.  


நாடாளுமன்றக் குழுக்கள் என்றால் என்ன?, அவை எவ்வாறு அமைக்கப்படுகின்றன? அவற்றின் முக்கியத்துவம் என்ன? 


வால்டர் பகேஹோட், தனது ஆங்கில அரசியலமைப்பு * (1867) புத்தகத்தில், "ஒரு பெரிய கூட்டம் ஒருபோதும் எதையும் செய்யாது"(“A big meeting never does anything”) என்று எழுதினார். இது பாராளுமன்ற அமைப்புகளிலும் குழுக்களின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் காங்கிரஸ் குழுக்களை "சிறிய சட்டமன்றங்கள்" ( ‘little legislatures’) என்று விவரித்தார். மேலும், சட்டமன்றங்களின் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 


பெரிய சட்டமன்றங்களின் சிக்கலான தன்மையை நிர்வகிக்க பாராளுமன்ற குழுக்கள் உதவுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்த முறையை இந்தியா மரபுரிமையாகப் பெற்றது. ஒரு பெரிய பாராளுமன்றத்தின் பணிகளை திறம்பட கையாள அதை மாற்றியமைத்தது.  இந்தியாவில் குழு அமைப்பு 1921-ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம், 1919 இன் கீழ் நிறுவப்பட்ட பொது கணக்குக் குழுவுடன் ( Public Accounts Committee (PAC)) தொடங்கியது. 


1952-ஆம் ஆண்டில் நடந்த முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிலையான ஆலோசனைக் குழுக்கள் ஒழிக்கப்பட்டன. பொது கணக்குக் குழு (PAC), மதிப்பீட்டுக் குழுவுடன் (1950 இல் நிறுவப்பட்டது) மக்களவை சபாநாயகரின் கீழ் செயல்படத் தொடங்கியது. 

இந்தியா ஒரு மரபைப் பின்பற்றுகிறது. இங்கு எதிர்க்கட்சித் தலைவர் பொது கணக்குக் குழுவிற்கு (PAC) தலைமை தாங்குகிறார். 


நிதிக் குழுக்களுக்கு மேலதிகமாக, விதிகள் குழு (Rules Committee ), அலுவல் ஆலோசனைக் குழு (Advisory Committee) (சபாநாயகர் தலைமையில்) மற்றும் அரசாங்க உத்தரவாதக் குழு ஆகியவை நிறுவப்பட்டன.  மூன்றாவது மக்களவையின் போது பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு உருவாக்கப்பட்டது. 


குழு அமைப்பு 1990-ஆம் ஆண்டுகளில் விரிவடைந்தது.  1989-ஆம் ஆண்டில் விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனம் ஆகிய மூன்று துறை நிலைக்குழுக்களை உருவாக்க விதிகள் குழு ஒப்புதல் அளித்தது. இது 1993-ஆம் ஆண்டில் பாராளுமன்ற வினைத்திறன் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக ஒவ்வொன்றும் 45 உறுப்பினர்களைக் கொண்ட 17 துறை சார்ந்த நிலைக்குழுக்களாக (departmental-related standing committees (DRSCs)) விரிவுபடுத்தப்பட்டது. கூட்டணி அரசியலின் எழுச்சி மற்றும் அதிகரித்த சட்டமன்ற இடையூறுகளின்போது இந்த விரிவாக்கம் ஏற்பட்டது. 


ஜூலை 2004ஆம் ஆண்டில், துறை சார்ந்த நிலைக்குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டன. குழுக்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது (மக்களவையின் கீழ் 16 மற்றும் மாநிலங்களவையின் கீழ் 8), மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை 31 ஆக குறைக்கப்பட்டது (மக்களவையில் இருந்து 21 மற்றும் மாநிலங்களவையில் இருந்து 10). 


இரண்டு வகையான குழுக்கள் உள்ளன: நிலைக்குழுக்கள் மற்றும் தற்காலிக குழுக்கள். குறிப்பிட்ட பணிகளுக்காக தற்காலிக குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றை முடித்தவுடன் கலைக்கப்படுகின்றன. மசோதாக்கள் மீதான தேர்வுகள் மற்றும் கூட்டுக் குழுக்கள் முதன்மை தற்காலிக குழுக்கள். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சபையிலும் நிரந்தர நிலைக்குழுக்கள் உள்ளன, அவை ஆண்டுதோறும் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுகின்றன. 


பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் சபையால் நியமிக்கப்படுகிறார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார்கள். 

அவர்கள் சபாநாயகரின் வழிகாட்டலின் கீழ் செயற்படுவதுடன் சபைக்கு அல்லது சபாநாயகருக்கு அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள். நாடாளுமன்றக் குழுக்கள் தங்கள் அதிகாரத்தை பிரிவு 105 (எம்.பி.க்களின் சிறப்புரிமைகள்) மற்றும் பிரிவு 118 (நடைமுறை மற்றும் வணிக நடத்தைக்கான விதிகள்) ஆகியவற்றிலிருந்து பெறுகின்றன. 


குழு அமைப்பு நவீன நிர்வாகத்தின் சிக்கல்களை நிர்வகிக்க உதவுகிறது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விரிவான ஆய்வில் கவனம் செலுத்தவும், நிபுணர் உள்ளீட்டைப் பெறவும் அனுமதிக்கிறது. இந்த அமைப்பு பல்வேறு அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை வளர்க்கிறது. அமைச்சரவையில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. 


குழு முறைமையின் வினைத்திறன் ஒருபுறம் இருந்தாலும், இதில் சவால்கள் உள்ளன. குழுக்களுக்கான குறுகிய பதவிக்காலம், பெரும்பாலும் ஒரு வருடம் மட்டுமே, மற்றும் அவற்றை மறுசீரமைப்பதில் தாமதங்கள் நிபுணத்துவத்தை மட்டுப்படுத்துகின்றன மற்றும் வேலையின் தரத்தை பாதிக்கின்றன. சில குழுக்கள் அரசியல் கருவிகளாக மாறுகின்றன. மேலும், பெரிய அளவிலான வருகையின்மை அதன் செயல்திறனைத் தடுக்கிறது. 


வெங்கடாசலய்யா ஆணையம் 2000 (Venkatachaliah Commission) வளங்கள் இல்லாமை, போதுமான ஊழியர்கள் இல்லாமை மற்றும் நிபுணர் ஆலோசகர்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகளை எடுத்துக்காட்டியது. அவை இன்னும் குழு செயல்பாட்டை பாதிக்கின்றன. நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவர கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்த அமைப்பை மேலும் பாதிக்கிறது. 


தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் மசோதா, 2023 மற்றும் 2020 ஆம் ஆண்டில் நான்கு விவசாயிகள் மசோதாக்கள் போன்ற முக்கியமான மசோதாக்கள் குழு மறுஆய்வு இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. 


இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நிலைக்குழுக்களுக்கு தலைமை தாங்குவதற்கும் பணியாற்றுவதற்கும் நிபுணத்துவம் ஒரு முக்கிய தகுதியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழு உறுப்பினர்களுக்கு பதவிக்காலத்தின் பாதுகாப்பை வழங்குவது அவர்கள் ஆர்வமுள்ள பகுதிகளில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கும். 


நிலையான பதவிக்காலம் மற்றும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கான தெளிவான நடைமுறைகளை உள்ளடக்கிய கேரள சட்டமன்றத்தின் விதிகள் நாடாளுமன்ற நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரியை வழங்குகின்றன. இந்தக் குழுக்களுக்கு 30 மாதங்கள் நிலையான பதவிக்காலம் உள்ளது மற்றும் மசோதாக்களை குழுக்களுக்கு அனுப்புவதற்கான நடைமுறை மற்றும் கால வரம்பு தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் 1980ஆம் ஆண்டிலேயே பத்து  குழுக்களை நிறுவிய நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.



Original article:

Share:

தூய்மை இந்தியா இயக்கம் பாதுகாப்பு மற்றும் கண்ணியம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை எவ்வாறு மேம்படுத்தியது? - ஐயரின் ஸ்வர்த்

 தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்கு முக்கிய பாடங்கள் நான்கு ' Ps'க்கள் என்று அறியப்பட்டன. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவை மிகப் பெரிய, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்று இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 


ஜூலை 23, 2024 அன்று, *நேச்சர்* இதழில் வெளியான ஒரு அறிவியல் அறிக்கை, திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி, குழந்தை மற்றும் குழந்தை இறப்பைக் குறைப்பதில் ஸ்வச் பாரத் மிஷனின் (Swachh Bharat Mission’s (SBM)) தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2014 அன்று செங்கோட்டையிலிருந்து தனது சுதந்திர தின உரையின் போது தூய்மை இந்தியா இயக்கத்தை அறிவித்தார். இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2, 2019-க்குள் திறந்தவெளி மலம் கழிப்பை ஒழிப்பதை தூய்மை இந்தியா இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. இது சுமார் 550 மில்லியன் இந்தியர்களின் நடத்தையை திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்ற முயன்றது. நேச்சர் அறிக்கை திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கழிப்பறைகள் ஆண்டுக்கு 60,000-70,000 கைக்குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றின என்று கூறியது. 


ஆகஸ்ட் 15, 2014 அன்று இந்த அறிவிப்பு முன்னெப்போதும் இல்லாதது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திறந்தவெளி கழிப்பிடத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி உறுதிபூண்டிருப்பது மற்ற நாடுகளுக்கு ஆச்சரியமான செயலாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில் 550 மில்லியன் மக்களின் நடத்தையை மாற்றுவது என்பது மிகவும் தைரியமான இலக்கு. மோடியின் தலைமையின் கீழ், தூய்மை இந்தியா இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்து, கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 


மோடி தனது மாதாந்திர மன் கி பாத் (Mann Ki Baat) வானொலி உரை உட்பட பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி தூய்மை இந்தியா இயக்கத்தை ஆதரிக்க மக்களை ஊக்குவித்தார். கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாதவை (open defecation free (ODF)) ஆக  மாற ஆர்வத்துடன் உழைத்தன மற்றும் அவர்களின் சாதனைகளை கௌரவ யாத்திரை (pride tour) மூலம் கொண்டாடின. 


கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே நட்புரீதியான போட்டி உருவானது. இமாச்சலப் பிரதேசம், கேரளா, உத்தராகண்ட், ஹரியானா போன்ற மாநிலங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலங்களாக மாறி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அக்டோபர் 2, 2019 அன்று, அனைத்து மாநிலங்களும் தங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக அறிவித்துக் கொண்டாலும், நடத்தை மாற்றம் மற்றும் நீடித்த சாதனைகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கவனம் இரண்டாம் கட்டம் வரை தொடர்ந்தது. 


சுகாதாரப் பலன்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட கண்ணியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சேமிப்பு ஆகியவை தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவுகளில் அடங்கும். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைவதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் மருத்துவக் கட்டணம் மற்றும் நேரம் ரூ.50,000 மிச்சமாகிறது என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. 


உலக அளவில் மதிப்புமிக்க பாடங்களை தூய்மை இந்தியா இயக்கம் பகிர்ந்து கொண்டது. 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த 55 சுகாதாரம் மற்றும் துப்புரவு அமைச்சர்களுடன் நிறைவு அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். 


நைஜீரிய நீர் மற்றும் துப்புரவு அமைச்சர் மிகவும் இத்திட்டத்தில் ஈர்க்கப்பட்டு, அவர் நாடு திரும்பியதும் தூய்மையான நைஜீரியா பிரச்சாரத்தைத் தொடங்கினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்கு முக்கிய பாடங்கள், அரசியல் தலைமை (political leadership), பொது நிதியுதவி (public financing), கூட்டாண்மை (partnerships) மற்றும் மக்களின் பங்கேற்பு (people’s participation) ஆகியவை  அடங்கும். அவை உலகெங்கிலும் உள்ள துப்புரவுத் துறையில் பயன்படுத்தப்பட்டு, நிலையான வளர்ச்சி இலக்கு எண் 6: சுகாதாரம் மற்றும் தண்ணீருக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.


உஜ்வாலா (Ujjwala) (சமையல் எரிவாயு சிலிண்டர்கள்), ஜன் தன்(Jan Dhan) (வங்கி கணக்குகள்), ஆவாஸ் யோஜனா(Awas Yojana), ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு(Ayushman Bharat medical insurance scheme) மற்றும் நீர் விநியோகத்திற்காக 180 மில்லியன் வீடுகளை இலக்காகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன்(Jal Jeevan Mission) உள்ளிட்ட பல வெற்றிகரமான அரசாங்க முயற்சிகளில் ஸ்வச் பாரத் மிஷன் ஒன்றாகும். பிரதமர் மோடியின் துணிச்சலான பார்வை மற்றும் அரசியல் தலைமை ஆகியவை இந்த மாற்றத்திற்கான திட்டங்களுக்கு மையமாக உள்ளன.



Original article:

Share:

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இந்தியாவை அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. -அஜய் சௌத்ரி

 கல்வி நிறுவனங்களுக்குள் அதிநவீன ஆராய்ச்சி உடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஜூலை 23, 2024 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (Anusandhan National Research Foundation (ANRF)) தொடங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடித்தளத்தை அமைத்தது. இது ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் தொடங்க உள்ளது. 


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) சட்டம், 2023 இன் கீழ் நிறுவப்பட்டது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக உள்கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா மற்றும் இஸ்ரேலின் முன்மாதிரிகளைப் பின்பற்றி, இந்தியாவை  மேம்பட்ட சமூகமாக மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.  

 

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF)  முக்கிய குறிக்கோள், மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு இடைவெளியை நிவர்த்தி செய்வதாகும். அங்கு 95 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால்,  ஆராய்ச்சி வசதிகள் பெரும்பாலும் இல்லை. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, நிதி வழங்கலை சீராக்கவும், அதிகாரத்துவ தடைகளைக் குறைக்கவும், தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. 




 ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 50,000 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு  4,000 கோடி ரூபாயை அளிக்கும். மீதமுள்ள நிதி தொழில்துறை மற்றும்  அரசு சாரா அமைப்புகளில் இருந்து பெறப்படுகிறது. இது அமெரிக்க மாதிரியைப் போன்றது. 


அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (US National Science Foundation (NSF)) மாதிரியாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) கல்வி நிறுவனங்களில் அதிநவீன ஆராய்ச்சி சூழலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், கல்வித்துறை மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF)  இந்தியாவில் இதேபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க முயல்கிறது. 


இது கல்வி கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இருப்பதை உறுதி செய்கிறது மற்றும் வணிகமயமாக்க தயாராக உள்ள தொழில்நுட்பத்திலிருந்து தொழில்துறை பயனடைகிறது. 


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF)  தொடக்கம் இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாக மாற்ற முற்படும் தேசிய கல்விக் கொள்கை ( National Education Policy (NEP)) 2020 இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இந்தியாவில் 1,168 பல்கலைக்கழகங்கள் மற்றும் 45,473 கல்லூரிகளில் 4.3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். 


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிதியுதவி குறைந்த நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு இடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்தல் மற்றும் தரமான ஆராய்ச்சி உள்கட்டமைப்புக்கான அணுகலை மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. 


தற்போது, பாதுகாப்பு, விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் தனித்தனி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and development (R&D) ) திட்டங்களை  செயல்படுத்துகின்றன. 


இது திறமையின்மைக்கு வழிவகுக்கிறது.  வளங்களை திறம்பட பயன்படுத்தவும், துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை சீரமைக்கவும்  மற்றும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படும். 


அரசு சாரா நிதியை சார்ந்து இருப்பது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு  (ANRF) ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். தொழில்துறை ஈடுபாடு ஆராய்ச்சி சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.  அதே நேரத்தில்  நல்ல ஆராய்ச்சியை ஆதரிக்க முடியும். இந்த அணுகுமுறை பெரும்பாலும் புதுமைகளைத் தடுக்கும் நிதி தாமதங்கள் மற்றும் சிக்கலான ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) குறைந்த தொழில்நுட்ப தயார்நிலை நிலைகளை (Technology Readiness Levels (TRLs) ) ஆதரிப்பதில் கவனம் செலுத்தும்.  அங்கு கல்வி நிறுவனங்கள் குறைந்த மூலதன தேவைகள் மற்றும் அதிக தோல்வி விகிதங்களுடன் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 


அதிக தொழில்நுட்ப தயார்நிலை  ஆராய்ச்சி மற்றும் ஆழமான தொழில்நுட்ப தொடக்கங்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய்  குறித்த அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முயற்சிகளை பூர்த்தி செய்கிறது. இந்த முயற்சிகள் அடிப்படை தொழில்துறை சார்ந்த வளர்ச்சி வரை ஆராய்ச்சியின் முழு நிலையையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  இது ஒரு விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Research and development (R&D) ) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. 


ஒட்டுமொத்தமாக, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்தியாவின் ஆராய்ச்சி திறன்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலமும், இந்தியாவின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாக நிலைநிறுத்துவதற்கும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் திறனைக் கொண்டுள்ளது. 


அஜய் சௌத்ரி, கட்டுரையாளர், தலைவர், தேசிய குவாண்டம் மிஷன்.



Original article:

Share: