UGC-CARE இதழ்களின் பட்டியல் ஏன் நிறுத்தப்பட்டது? -ஏ. எம். ஜிகெய்ஷ்

 கல்வி இதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் என்ன? இது தரம் குறைந்த இதழ்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா?


பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு (UGC Consortium for Academic and Research Ethics (UGC-CARE)) பட்டியலை நிறுத்த முடிவு செய்துள்ளது. 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UGC-CARE பட்டியல், தரமான கல்வி இதழ்களின் பட்டியலாகும். UGC-CARE பட்டியல், பத்திரிகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைக்கும் அளவுருக்களால் மாற்றப்படும். இந்த அளவுருக்கள் 8 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை. பங்குதாரர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.


புதிய அளவுருக்கள் என்ன சொல்கின்றன?


"சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கான பரிந்துரை அளவுருக்கள்" (Suggestive Parameters for Peer-Reviewed Journals) என்ற தலைப்பிலான வரைவு அறிவிப்பில் 8 அளவுகோல்களின் கீழ் 36 பரிந்துரைக்கும் அளவுருக்கள் உள்ளன. பத்திரிகையின் ஆரம்ப அளவுகோல்களின் கீழ், வெளியீட்டிற்கு ஒரு கட்டுரையை அனுப்புவதற்கு முன், பத்திரிகை தலைப்பு, சர்வதேச தரநிலை வரிசை எண், கால இடைவெளி, தொடர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மை மதிப்பாய்வு கொள்கை போன்றவற்றைக் கவனிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆசிரியர் குழு அளவுகோல்களின் கீழ், பத்திரிகையின் ஆசிரியர் குழு விவரங்கள் மற்றும் ஆசிரியர் குழு அமைப்பு கிடைக்கச் செய்யப்படுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு விரும்புகிறது. இதேபோல், பரிந்துரைக்கும் அளவுகோல்களின் கீழ் உள்ள பிற அளவுகோல்களில் பத்திரிகை தலையங்கக் கொள்கை, பத்திரிகை தரநிலைகள், பத்திரிகை தெரிவுநிலை மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவை அடங்கும்.


பல்கலைக்கழக மானியக் குழு ஏன் அதைத் திரும்பப் பெற்றது?


UGC-CARE பட்டியலின் நோக்கம், ஆசிரியர் தேர்வுகள், பதவி உயர்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிதி விண்ணப்பங்களுக்கு "நற்பெயர் பெற்ற" பத்திரிகைகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதாகும். UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமாரின் கூற்றுப்படி, கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான பல்கலைக்கழக மானியக் குழு கூட்டமைப்பு பட்டியல் பல விமர்சனங்களை இருந்தன: இதில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் பத்திரிகைகள் என்ன என்பதை தீர்மானிப்பதில் அதிகப்படியான ஒன்றிய அரசின் ஈடுபாடு மற்றும் பட்டியலில் இருந்து பத்திரிகைகளைச் சேர்ப்பதில் அல்லது நீக்குவதில் ஏற்பட்ட தேவையற்ற தாமதங்கள் ஆகியவை அடங்கும். UGC CARE பட்டியலின்படி, தமிழ் போன்ற சில துறைகளில் ஆராய்ச்சி இதழ்களின் கிடைக்கும் தன்மை குறைவாக இருப்பதாக கல்வியாளர்கள் தங்களது கவலைகளை தெரிவித்தனர். முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை தெளிவாக இல்லை என்றும் இந்திய மொழிகளில் மிகவும் மதிக்கப்படும் பல பத்திரிகைகள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் குமார் கூறினார்.


மேலும், புதிய அணுகுமுறை அதிக பணம் வசூலிக்கும் பத்திரிகைகளுக்கு எதிராக போராடவும், கல்வி இதழ்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை பரவலாக்கவும் உதவும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், "இப்போது பத்திரிகைகளை மதிப்பிடுவதற்கும் அவை உயர் நெறிமுறை மற்றும் அறிவார்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கும் நம்பகமான வழிமுறைகளை நிறுவுவதற்கான பொறுப்பை பெற்றுள்ளன. வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கு அவர்கள் தங்கள் சொந்த நிறுவன வழிமுறைகளை உருவாக்க முடியும். மதிப்பீட்டு வழிமுறைகள் UGCயின் பரிந்துரைக்கப்பட்ட அளவுருக்கள் மற்றும் கல்வி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று UGC தலைவர் எம். ஜெகதேஷ் குமார் கூறினார். இந்தப் பரவலாக்கப்பட்ட அணுகுமுறை (decentralised approach) உயர்கல்வி நிறுவனங்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீட்டு செயல்முறைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது என்று குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நிறுவனங்கள் இப்போது பல்வேறு துறைகளின் தனித்துவமான பண்புகளைக் கருத்தில் கொண்டு, புதிய வளர்ந்துவரும் துறைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மதிப்பீட்டு மாதிரிகளை உருவாக்கலாம்.


என்ன பதில் கிடைத்தது?


மாணவர்களும் கல்வியாளர்களும் சமீபத்திய நடவடிக்கை குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை தரமில்லாத கல்வி இதழ்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இந்திய மாணவர் கூட்டமைப்பின் (Students’ Federation of India (SFI)) ஒன்றிய செயற்குழு UGCயின் முடிவை கடுமையாக எதிர்த்தது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SFI கண்டித்தது. இந்தியாவில் கல்வி ஒருமைப்பாடு மற்றும் தரமான ஆராய்ச்சிக்கு பின்னடைவு என்று SFI கூறியது. தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020-ன் கீழ் உயர்கல்வியில் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பரந்த போக்குடன் SFI இந்த முடிவை இணைத்தது. கல்வி சுதந்திரத்திற்கு பரவலாக்கம் முக்கியம் என்பதை SFI ஒப்புக்கொண்டது. ஆனால், ஒன்றிய அரசு மேற்பார்வை இல்லாமல், பத்திரிகை மதிப்பீடுகள் தன்னிச்சையாகவும் நிறுவனங்கள் முழுவதும் சீரற்றதாகவும் மாற்றக்கூடும் என்று எச்சரித்தது.




Original article:

Share:

திறமை பற்றாக்குறை - உலகளாவிய சவால், இந்தியாவின் வாய்ப்பு -ஜோதி விஜ்

 திறமையான தொழிலாளர்களுக்கான தேவை இருப்பைவிட அதிகமாக இருக்கும். முக்கியமான பிராந்தியங்களில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா விரைவாகச் செயல்பட வேண்டும்.


உலகளாவிய தொழிலாளர் சந்தை எதிர்காலத்திற்கு இன்னும் தயாராக இல்லை. எந்த ஒரு நபராலும் எதிர்காலத்தை முழுமையான துல்லியத்துடன் கணிக்க முடியாது. இருப்பினும், 2030-ஆம் ஆண்டில் தேவைப்படும் திறன்கள் இன்றைய திறன்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த சூழ்நிலை முழு உலகிற்கும் ஒரு சவாலை முன்வைக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவிற்கு இது ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.


FICCI-KPMG நடத்திய சமீபத்திய ஆய்வான இந்திய தொழிலாளர் படையின் உலகளாவிய இயக்கம் (Global Mobility of Indian Workforce) 2030-ஆம் ஆண்டிற்குள், திறமையான தொழிலாளர்களுக்கான தேவை இருப்பைவிட அதிகமாக இருக்கும் என்றும், இதனால் 85.2 மில்லியனுக்கு  மேல் திறமை பற்றாக்குறை ஏற்படும் என்றும் கணித்துள்ளது. "இந்த உலகளாவிய திறன் பற்றாக்குறை 2030-ஆம் ஆண்டிற்குள் $8.45 டிரில்லியன் வருடாந்திர வருவாயை அடைய முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக இருக்கும்” என்று ஆய்வு கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலை ஒரு சவாலையும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. $8.45 டிரில்லியனில் ஒரு பெரிய பங்கை விரைவாக அடைவதை இலக்காக வைத்துள்ளது.


இந்த சவாலை எதிர்கொள்ள, குறிப்பிட்ட உத்திகள் தேவைப்படுகிறது. சர்வதேச ஒத்துழைப்பும் முக்கியமானது. முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகள் பணியாளர் இயக்கத்தை மேம்படுத்தவும் பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். தேசிய அளவில், ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த இலக்கை அடைய அரசு, தனியார் துறை மற்றும் பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


புவியியல் பகுதிகள் மற்றும் அவற்றின் தேவைகள்


வளைகுடா ஒத்துழைப்பு குழு (Gulf Cooperation Council (GCC)), ஐரோப்பா (ஐக்கிய ராச்சியம் உட்பட) மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை பணியாளர்கள் இயக்கத்திற்கு மூன்று முக்கியமான பகுதிகள் ஆகும். திறமை பற்றாக்குறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. இது பிராந்தியத்திற்கு ஏற்ப ஒவ்வொன்றும் தனித்துவமான பணியாளர் தேவைகளைக் கொண்டுள்ளன.


இருப்பினும், இந்த மூன்று பிராந்தியங்களிலும் சுகாதாரப் பராமரிப்பு ஒரு பொதுவான தேவையாக இருக்கும். வயதான மக்கள்தொகை மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு தேவைகள் தேவையை அதிகரிக்கின்றன. பொதுவாக, மூன்று பிராந்தியங்களிலும் சேவைத் துறை முக்கியமானதாக இருக்கும்.


 இருப்பினும், வளைகுடா ஒத்துழைப்பு குழு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உற்பத்தி மற்றும் கட்டுமானம் மிக முக்கியமானதாக இருக்கும். தொழில்துறைக்குப் பிந்தைய பழமையான சமூகமாக இருக்கும் ஐரோப்பாவிற்கு சேவைத் துறையில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். புதிய தொழில்களும் உருவாகி வருகின்றன. இந்த அனைத்து பிராந்தியங்களிலும் தானியங்கி தொழில்நுட்பம் (automation), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)), பெரிய தரவு, முன்கணிப்பு பகுப்பாய்வு, இணையம் (internet of things (IoT)), பிளாக்செயின், மேலாண்மை, வள செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திறன்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தடைகள் மற்றும் உத்திகள்


திறமையான தொழிலாளர்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கு பல தடைகள் உள்ளன. ஒரு பெரிய தடையாக ஒழுங்குமுறை மற்றும் குடியேற்ற விதிகள் உள்ளன. சிக்கலான விசா செயல்முறைகள் மற்றும் கடுமையான பணி அனுமதி விதிமுறைகள் திறமையான இடம்பெயர்வை கடினமாக்குகின்றன. மற்றொரு சவால் ஆட்சேர்ப்பு முறைகேடுகள் மற்றும் கடத்தல் ஆகும். நியாயமற்ற பணியமர்த்தல் நடைமுறைகள் மற்றும் மனித கடத்தல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன.


பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தபோது, ​​இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினார். இதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஒன்று கொள்கைத் தடைகள் மற்றும் திறன் பொருத்தமின்மை ஆகும். பல இந்திய பட்டங்கள், குறிப்பாக மருத்துவத்தில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் விளைவாக தகுதிவாய்ந்த நிபுணர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது. மற்றொரு சவால் மொழி மற்றும் கலாச்சாரத் தடைகள் ஆகும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதிலும், வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றுவதிலும் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சவால்கள் அவர்களின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் பாதிக்கின்றன.


இது போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசு பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements (FTAs)) ஒரு முக்கிய படியாகும். இந்திய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் உள்ள நாடுகளுடன் இந்தியா பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கூட்டு இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates (UAE)) தொலைநோக்குப் பார்வை இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மற்ற முக்கியமான முயற்சிகளில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பணியாளர் ஆதரவிற்கான டிஜிட்டல் தளங்கள் அடங்கும். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் (skill development programmes) தொழிலாளர்கள் உலகளாவிய சந்தைத் தேவைகளுக்கு ஏற்ற திறன்களைப் பெற உதவுகின்றன.  வளைகுடா ஒத்துழைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு டிஜிட்டல் ஆட்சேர்ப்புத் தளங்கள், தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்வதிலும், மோசடி செய்பவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.


திறமையான தொழிலாளர்களுக்கான உலகளாவிய தேவையைப் பயன்படுத்திக் கொள்ள, துறைசார்ந்த திறன் பயிற்சி (பணியாளர் பயிற்சி) இலக்கு புவியியல் தேவைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும் மற்றும் வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ப தயாரிப்பு தேவைப்படுகிறது. 


1. துறை சார்ந்த திறன் பயிற்சி - பணியாளர் பயிற்சி இலக்கு பிராந்தியங்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். வளர்ந்து வரும் துறைகளுக்கும் தயாரிப்பு தேவைப்படுகிறது.


2. ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் - ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களில் அதிகாரிகள் கடுமையான விதிகளை செயல்படுத்த வேண்டும். இது சுரண்டல் மற்றும் கடத்தலைத் தடுக்க உதவும்.


3. தகுதிகளை அங்கீகரித்தல் - சர்வதேச ஒத்துழைப்புகள் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது பணியாளர் ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.


4. பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவித்தல் (incentivising public-private partnerships) - ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் துறையை பயிற்சித் திட்டங்களிலும் உலகளாவிய வேலை வாய்ப்புகளிலும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.


5. வட்ட இடம்பெயர்வு மற்றும் இயக்கத்தை ஊக்குவித்தல் (promoting circular migration and mobility) - தற்காலிக வேலை விசாக்கள் மற்றும் சுழற்சி பணியாளர் மாதிரிகள் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தாமல் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க உதவும்.


அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குடியேற்றக் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஐரோப்பா கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தக்கூடும். இதனால் இடம்பெயர்வு மிகவும் கடினமாகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா திறமையான தொழிலாளர்களுக்கு மிகவும் திறந்த நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் இருப்பதாக FICCI-KPMG ஆய்வு கூறுகிறது.


இந்தியாவின் நன்மை


கடுமையான குடியேற்றக் கொள்கைகள் முக்கியமாக சட்டவிரோத இடம்பெயர்வைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசியல் கருத்துக்கள் மாறிக்கொண்டிருந்தாலும், உலகளவில் அதன் திறமையான பணியாளர்களை ஊக்குவிப்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய நன்மை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் அவர்கள் அதிக சட்ட விரோதத்தை எதிர்கொள்ளவில்லை. குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகள் உள்ள இடங்களில்கூட, திறமையான இந்தியத் தொழிலாளர்கள் இன்னும் வேலை வாய்ப்புகளைக் காண்கிறார்கள். இந்த நன்மையைத் தக்க வைத்துக் கொள்ள, இந்திய அரசாங்கம் சட்டவிரோத இடம்பெயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இது இந்தியத் தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் மற்றும் திறமையான தொழிலாளர்களின் நம்பகமான வழங்குநராக இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தும்.


இது இந்தியா விக்ஸித் பாரத் (வளர்ந்த இந்தியா) இலக்கை அடைய உதவும். 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா சமீபத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2030-ஆம் ஆண்டுக்குள் $6.5 டிரில்லியன் முதல் $9 டிரில்லியன் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார். இந்தியா $9 பில்லியனை எட்டுவதற்கான வாய்ப்புகள், அது உணரப்படாத $8.45 டிரில்லியன் உலகளாவிய பொருளாதார ஆற்றலில் எவ்வளவு கைப்பற்ற முடியும் என்பதைப் பொறுத்திருக்கும்.


ஜோதி விஜ், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) தலைமை இயக்குநராக உள்ளார்.




Original article:

Share:

ரிசர்வ் வங்கி பெரிய விஷயத்தைத் தவறவிடுகிறது -குர்பச்சன் சிங்

 ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை தொடர்ந்து 4%-க்கு அருகில் வைத்திருக்க வேண்டும், இந்த இலக்கில் சமரசம் செய்யக்கூடாது.


வருடாந்திர பணவீக்க விகிதம் இப்போது டிசம்பர் 2024ஆம் ஆண்டில் 5.22 சதவீதத்திலிருந்து ஜனவரி 2025 ஆம் ஆண்டில் 4.31 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது உண்மைதான். இது பிப்ரவரி 7 அன்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50 இலிருந்து 6.25 சதவீதமாகக் குறைத்ததை நியாயப்படுத்துகிறது.


ஒட்டுமொத்த நிலைமை வேறுபட்டது. புதிய "குறைந்த" பணவீக்க விகிதம் 4.31% என்பது இன்னும் 4% இலக்கை விட அதிகமாக உள்ளது. மிக முக்கியமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், பணவீக்கம் சில முறை 4%-க்கு அருகில் குறைந்துள்ளது. ஆனால், பணவீக்கம் விரைவாக மீண்டும் உயர்ந்துள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 4% இலக்கைவிட அதிகமாக இருப்பதால், அதிக பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்வது மற்றும் மிக விரைவில் வட்டி விகிதங்களைக் குறைப்பது பணவியல் கொள்கையின் ஒரு பகுதி மட்டுமே.


இரண்டு காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த அமைப்பில் அதிக பணத்தைச் சேர்க்கிறது. முதலாவதாக, அரசாங்கத்திற்கு சமீபத்தில் செலுத்தப்பட்ட பெரிய வரிகள் வங்கிகளில் பணப் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன. வங்கி அமைப்பு சீராக இயங்க இந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும். பணப்புழக்கம் அதிகரிப்பதற்கான இரண்டாவது காரணம் மிகவும் சர்ச்சைக்குரியது.


வங்கிகள் போதுமான பணத்தை வைத்திருந்தால், அவற்றின் மொத்த சொத்துக்கள் அப்படியே இருப்பதால், கடனாக வழங்குவதற்கு குறைவான பணம் மட்டுமே இருக்கும். இருப்பினும், 2023-24ஆம் ஆண்டில் 8.2%-ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2024-25ஆம் ஆண்டில் 6.4% என்ற மெதுவான விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரிசர்வ் வங்கி இதை ஆதரிக்கவில்லை.


வளர்ச்சி காரணி


கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, முந்தைய உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அசாதாரணமானதாக இருந்திருக்கலாம். இவை நிரந்தரப் போக்காக இல்லாமல் இருக்கலாம். இரண்டாவதாக, உயர் வளர்ச்சி என்று அழைக்கப்படுவது 2020-21ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிலிருந்து நீண்ட மீட்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். இரண்டு சந்தர்ப்பங்களிலும், சமீபத்திய 6.4% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகக் குறைவாக இல்லை. எனவே, ரிசர்வ் வங்கி தலையிட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இப்போது உண்மையில் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.


ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை தீவிரமாக அதிகரிக்கக் கூடாது. ஏன்? குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிக கடன் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களால் சரிசெய்ய முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அத்தகைய கொள்கை அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 4% இலக்கை விட அதிகமாக இருப்பதால் இது இப்போது இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்த நீண்ட அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது.


2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்போதைய பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியது.

இருப்பினும், 2019ஆம் ஆண்டின் இறுதியில், பணவீக்கம் 7 ​​சதவீதத்தை எட்டியது. 2020ஆம் ஆண்டிலும், 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட மிகக் கடுமையான ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக வைத்திருந்தது.


உணவுப் பணவீக்கம்


பின்னர், பிப்ரவரி 2022ஆம் ஆண்டில் உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கிய பின்னர், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்ட பிறகு, இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் நாம் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் எண்ணெயை இறக்குமதி செய்தோம். 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் 2024ஆம் ஆண்டின் பெரும்பகுதியிலும், அதிக உணவுப் பணவீக்கத்தைக் கொண்டிருந்து. இருப்பினும், இந்த வகையான பணவீக்கம் தெற்காசியாவிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ பொதுவானதாக இல்லை. இதன் பொருள் சுதந்திர வர்த்தகம் ஓரளவுக்கு உதவியிருக்கலாம் என்பதாகும்.


ஆனால், நடைமுறையில், உணவுப் பொருட்களின் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, அதிக உணவுப் பணவீக்கம் தவிர்க்க முடியாதது.


கடந்த 1-2 மாதங்களில், என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் கவனிக்காமல் விட்டுவிடும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக பணவீக்கத்தை நியாயப்படுத்த எப்போதும் சில காரணம் இருந்து வருகிறது. இந்த முறை காலவரையின்றி தொடரலாம். இது தெளிவான ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.


பணவீக்க முக்கியத்துவம்


ரிசர்வ் வங்கி அதன் அடிப்படை அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து, பணவீக்கத்தை 4 சதவீதத்திற்கு அருகில் நிலையான முறையில் பராமரிப்பது என்ற தனது கடமையை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும். 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் கவனமாக ஆலோசித்த பிறகு இந்த உத்தரவு வந்தது. குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தை பராமரிப்பதில் உள்ள சில பணவியல் சாராத பிரச்சினைகளை அரசாங்கம் கவனித்துக்கொண்டால் நிச்சயமாக அது உதவும்.


எப்படியிருந்தாலும், ரிசர்வ் வங்கியின் உத்தரவு 4 சதவீத பணவீக்க இலக்கைச் சுற்றி கூடவோ குறையவோ 2 சதவீத புள்ளிகளின் சலுகையை அனுமதிக்கிறது. இந்த சலுகை சிறியதாகத் தோன்றலாம். இருப்பினும், இது உண்மையில் 50 (=(2/4).100) சதவீதத்தின் மிகப் பெரிய சலுகையாகும். பணவீக்க விகிதம் பெரும்பாலும் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததால், ரிசர்வ் வங்கி பெரும்பாலும் மறைமுகமாக வெற்றியைக் கோரியுள்ளது. ஆனால் அதுதான் உத்தரவின் உச்ச வரம்பு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இலக்கு விகிதம் அல்ல. 


இது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுப்பது பற்றியது. இதன் பொருள் ரிசர்வ் வங்கியில் ஏதேனும் தீய நோக்கம் இருப்பதாக கூற முடியாது. அதிக பணவீக்கத்தில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, 4 சதவீதம் உகந்த பணவீக்க விகிதமாக இருந்தால், நீண்ட காலத்திற்கு அதிக பணவீக்க விகிதம் பொருளாதாரத்திற்கு ஒட்டுமொத்த இழப்பை உருவாக்குகிறது.


இரண்டாவதாக, மறுபகிர்வு உள்ளது. இது வெவ்வேறு வழிகளில் நிகழ்கிறது. ஒரு முக்கிய விஷயம் இதுதான்: பணவீக்கம் மக்களுக்கு பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கி பயனடைகிறது. ஏனெனில், அது மிகக் குறைந்த செலவில் பணத்தை அச்சிடவோ அல்லது வெளியிடவோ முடியும். இருப்பினும், அதிக பணத்தை அச்சிடுவது அதிக பணவீக்கத்தை ஏற்படுத்தும்.


ரிசர்வ் வங்கி தனது ஈவுத்தொகை வருமானத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தியாவில், பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது இந்த தாக்கம் அதிகரிக்கிறது. இந்த மிகப்பெரிய சுமையானது ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மீது விழும்.  இதனால், கொள்கை அளவில் பெரிய மாற்றம் தேவை.


குர்பச்சன் சிங், ஆசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர். அவர் அசோகா பல்கலைக்கழகம், ISI (டெல்லி) மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளார்.

                      


Original article:

Share:

கத்தார் தொடர்பு

 இந்தியாவின் எல்லை தாண்டிய தொடர்பானது பொருளாதார, இராஜதந்திர ஆதாயங்களைத் தரும்.


இந்தியப் பிரதமர்கள் வருகை தரும் விருந்தினர்களை வரவேற்க விமான நிலையத்திற்குச் செல்வது அரிது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது ஜப்பான் போன்ற ஒரு பெரிய நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு இது வழக்கமாக இருக்கும். அப்படியிருக்க, நரேந்திர மோடியால் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு நீட்டிக்கப்பட்ட இந்த வரவேற்பு ஒரு தனித்துவமானது. கத்தார் பாரசீக/அரேபிய வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய  பகுதி எமிரேட் ஆகும்.  இது டெல்லியின் ஒரு பகுதி மட்டுமே.


ரஷ்யாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பு கத்தார் நாட்டில் உள்ளது. இது பிராந்தியத்தில் இராணுவம், இராஜதந்திரம் மற்றும் அரசியலுக்கான ஒரு முக்கிய மையமாகவும் மாறியுள்ளது. உலகில் சுவிட்சர்லாந்தைப் போலவே, கத்தார் மத்திய கிழக்கில் ஒரு சிறிய ஆனால் செல்வாக்கு மிக்க நாடாகும். 


உலகில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றை கத்தார் சொந்தமாகக் கொண்டுள்ளது, இது அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இது பரந்த எரிவாயு இருப்பு, செல்வம் மற்றும் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கு இடையிலான மோதல்களில் கத்தார் ஒரு மத்தியஸ்தராகவும் செயல்படுகிறது. கூடுதலாக, ஒரு பெரிய அமெரிக்க கடற்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது. இந்தக் காரணிகளால், கத்தாருடன் வலுவான உறவுகளைப் பேணுவது வசதியானது மட்டுமல்ல, அவசியமானதும் ஆகும்.


தாலிபான் மற்றும் ஈரானுடனான கத்தாரின் உறவுகளை இந்தியா தனது சொந்த நலன்களை ஆதரிக்கப் பயன்படுத்தலாம். எனவே, இரு நாடுகளும் ஒரு இராஜதந்திர கூட்டாண்மைக்கான தங்கள் உறவை வலுப்படுத்தத் தேர்ந்தெடுத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.


விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் உட்பட நல்ல வர்த்தக மற்றும் பொருளாதார வாய்ப்புகள் முன்னால் உள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை ஐந்து ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கத்தாரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த இறக்குமதியில் 85% திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) என்பதால், இந்தியா தற்போது சுமார் 10 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. 


கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவும் கத்தாரும் 78 பில்லியன் டாலர் மதிப்புள்ள LNG விநியோகத்திற்கான 20 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதுவரை, கத்தார் இந்தியாவின் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் சுமார் 1.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. 


மேலும், 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது. கத்தாருடன் உறவுகளை வலுப்படுத்துவது இந்தியாவிற்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக சுமார் 800,000 இந்தியர்கள் அங்கு பணிபுரிவதால், கத்தாரின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இந்தியர்கள் உள்ளனர். கடந்த காலத்தில், இந்திய தொழிலாளர்கள் மோசமான நடத்தையை எதிர்கொண்டனர், ஆனால், இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக இது மேம்பட்டுள்ளது. சமீபத்தில், ஒன்பது இந்தியர்கள் உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டனர். ஆனால், இராஜதந்திர முயற்சிகள் அவர்களில் எட்டு பேரை அமைதியாக விடுவிக்க வழிவகுத்தன.


கத்தார் அதன் நெருங்கிய அண்டை நாடுகளிடையே அவ்வளவு பிரபலமாக இல்லை. முஸ்லிம் தீவிரவாத குழுக்களுடன் அது தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை கத்தார் மீது இராஜதந்திர மற்றும் பொருளாதார முற்றுகையை விதித்தன. இருப்பினும், கத்தார் சில ஆண்டுகளுக்குள் மீண்டு வர முடிந்தது. இந்த சர்ச்சையின் போது இந்தியா நடுநிலை வகித்தது. இது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.




Original article:

Share:

உச்ச நீதிமன்றத்தால் 'அரசியலமைப்புக்கு விரோதமானது' என்று அறிவிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 66A என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: 


ரன்வீர் அல்லாபாடியாவின் 'ஆபாசமான' பேச்சு சர்ச்சைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அடுத்த வாரத்திற்குள் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பதிலளிக்கக்கூடும். இது சமூக ஊடகங்களில் பேச்சை ஒழுங்குபடுத்துவதற்கான தற்போதைய சட்டங்கள் மற்றும் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து இந்த பதில் விவாதிக்கும். சமூக மதிப்புகளைப் பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தை உறுதி செய்யவும் சமூக ஊடகத் தளங்களை சட்ட ஆய்வுக்கு உட்படுத்துவதே இதன் குறிக்கோள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• குழுவிற்கு பதிலளிக்க உதவும் வகையில் அமைச்சகம் ஒரு உள் ஆவணத்தைத் தயாரித்தது. இந்த ஆவணத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66A குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பிரிவு 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் "அரசியலமைப்புக்கு முரணானது" என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.


• சமய் ரெய்னா தொகுத்து வழங்கும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘India’s Got Latent’-ல் இணைய பிரபலம் ரன்வீர் அல்லாபாடியாவின் 'ஆபாசமான' கருத்துக்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சையைக் குறிக்கும் வகையில் இது வருகிறது.


• கடந்த வாரம், தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு இந்த விவகாரம் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற பேச்சுகளைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் குழுவிற்கு அனுப்ப ஒரு சுருக்கமான குறிப்பைத் தயாரித்து வருகிறது.


• அமைச்சகத்தின் உள் தகவல் தொடர்பு, அல்லாபாடியா பற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களைக் குறிப்பிட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66A சுட்டிக்காட்டியது.


• அல்லாபாடியாவின் பேச்சு உச்ச நீதிமன்றத்திடமிருந்து கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த பிறகு, அரசாங்கம் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரக்கூடும் என்று டிஜிட்டல் உரிமை ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். இது கருத்துச் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.


உங்களுக்குத் தெரியுமா?:


தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008-ன் பிரிவு 66A மீது அமைச்சகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலில் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் ஒரு பகுதியாக இருந்த இந்தப் பிரிவு, 2008ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இது போன்ற தாக்குதல் அல்லது அவமதிக்கும் செய்திகள், பேச்சு அல்லது தகவல்களை இணையத்தில் தடுக்க உருவாக்கப்பட்டது. இது அரசாங்கத்திற்கு இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.


இருப்பினும், 2015ஆம் ஆண்டில், ஷ்ரேயா சிங்கால் vs இந்திய ஒன்றியம் (Shreya Singhal vs. Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரிவை "அரசியலமைப்புக்கு முரணானது" என்று தீர்ப்பளித்தது. பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டின் நியாயமான வரம்புகளுக்குள் பிரிவு 66A பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது.


• தற்போதைய சட்டங்கள் இதுபோன்ற வழக்குகளை எவ்வளவு சிறப்பாகக் கையாளுகின்றன என்பதை அமைச்சகம் குழுவிடம் தெரிவிக்கும். தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் தேவையா அல்லது 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றங்கள் தேவையா என்பதையும் இது விவாதிக்கும். 

சமூக மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த தளங்களை சட்ட விதிகளின் கீழ் கொண்டு வருவதே இதன் குறிக்கோள். அதே நேரத்தில், அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, படைப்பு வெளிப்பாடு மற்றும் பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.




Original article:

Share:

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-ன் முக்கிய அம்சங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: 


உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க அதிகாரம் கொண்ட லோக்பாலின் உத்தரவை, இது "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறி, ஜனவரி 27 ஆம் தேதி வியாழக்கிழமை  உச்ச நீதிமன்றம்  நிறுத்தி வைத்தது.


முக்கிய அம்சங்கள்:


• ஜனவரி 27 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா காந்த் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


• இந்த வழக்கில் "ஏதோ ஒன்று மிகவும் கவலையளிக்கிறது" என்று நீதிபதி கவாய் கூறினார். மேலும், ஒன்றிய அரசு, லோக்பால் மற்றும் புகார்தாரருக்கு இந்த அமர்வு நோட்டீஸ் அனுப்பியது.


• புகார்தாரரின் அடையாளத்தை மறைத்து, புகார்தாரர் வசிக்கும் பகுதியின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மூலம் அறிவிப்பை அனுப்புமாறு நீதிமன்றம் தனது பதிவாளர் நீதித்துறைக்கு உத்தரவிட்டது. புகார்தாரர் நீதிபதியின் பெயரை வெளியிடவோ அல்லது புகாரின் விவரங்களைப் பகிரவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டது.


• மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 பற்றிய தனது புரிதலின் அடிப்படையில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரமாட்டார் என்று கூறினார். அரசியலமைப்புச் சட்டமும் சில நீதிமன்றத் தீர்ப்புகளும் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

உங்களுக்குத் தெரியுமா? : 


• முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு, ஒரு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிக்கு எதிரான இரண்டு புகார்களின் அடிப்படையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த நீதிபதி ஒரு மாநிலத்தில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிபதியையும், புகார்தாரருக்கு எதிரான வழக்கைக் கையாளும் மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதியையும் செல்வாக்கு செலுத்தியதாக புகார்கள் கூறுகின்றன. இந்த வழக்கு ஒரு தனியார் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் முன்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றியபோது நிறுவனத்தின் வழக்கை கவனித்து வந்தார்  என்று புகார்கள் கூறுகின்றன.


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124-ன் கீழ் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தைப் போலன்றி, உயர் நீதிமன்றம் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்று லோக்பால் உத்தரவு கூறியது. எனவே, சட்டத்தின் பிரிவு 14(1) பிரிவு (f)-ன் கீழ் "எந்தவொரு நபரும்" என்ற வார்த்தையில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சேர்க்கப்படவில்லை என்று வாதிடுவது தவறானது என்று கூறப்பட்டுள்ளது.


• இந்தத் தீர்ப்பு 1991ஆம் ஆண்டு கே. வீராசாமி vs. இந்திய ஒன்றியம் (K Veeraswamy vs Union of India) என்ற தீர்ப்பைக் குறிப்பிட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு பொது ஊழியராகக் கருதப்படுகிறார். இதன் பொருள், அவர்கள் ஊழல் தடுப்புச் சட்டம், 1947-ன் கீழ் உள்ளனர்.


• வீராசாமி தீர்ப்பின்படி, இந்திய தலைமை நீதிபதியை முதலில் கலந்தாலோசிக்காமல் உயர் நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று லோக்பால் அமைப்பு கூறியது.




Original article:

Share:

இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்தம் “மேக் இன் இந்தியா” முயற்சியை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறது? - ஸ்ரேயா சின்ஹா

 இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்தம் (European Free Trade Association (EFTA)) பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் “மேக் இன் இந்தியா” முயற்சியுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது?


அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் மற்றும் உலகளாவிய பொருளாதார உறுதியற்ற தன்மையுடன், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான  இந்தியாவின் கூட்டாண்மை பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு முக்கிய  வாய்ப்பை வழங்குகிறது.


சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த நாடுகளான (EFTA) - சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் - புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துல்லியமான பொறியியல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதால், இந்தியாவின் கண்டுபிடிப்பு சார்ந்த பொருளாதாரத்திற்கு ராஜதந்திர வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன.


எனவே, சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த நாடுகளுடன் உடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும், பிப்ரவரி 10, 2025 அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒரு பிரத்யேக மேசையை இந்தியா திறந்து வைத்துள்ளது. நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய ஆதரவு மையமாகச் செயல்படுவதன் மூலம், வணிக வாய்ப்புகளை உண்மையான நன்மைகளாக மாற்ற சுதந்திர வர்த்தக சங்க ஒப்பந்த மேசை உதவும்.


இருப்பினும், இந்தியா-EFTA வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கு (Trade and Economic Partnership Agreement (TEPA) முன்னால் உள்ள முக்கிய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ன? 


கூட்டாண்மையின் புதிய சகாப்தம் 


EFTA மேசை உருவாக்கம், இந்தக் கூட்டாண்மை வெறும் வர்த்தக ஒப்பந்தத்தைவிட அதிகம் என்பதைக் காட்டுகிறது. இது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சியின் அடிப்படையில் ஆழமான ஒத்துழைப்பை நோக்கிய ஒரு படியாகும்.

EFTA நாடுகளிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பதற்கும், இந்தியாவில் விரிவடையும் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் EFTA மேசை ஒரு முக்கிய இடமாக செயல்படும். இது சந்தை நுண்ணறிவு, ஒழுங்குமுறை வழிகாட்டுதல், நிதி மற்றும் வணிக ஆதரவு மற்றும் உள்நாட்டு கொள்கைகள் மற்றும் முதலீட்டு நடைமுறைகளுக்கு உதவுதல் போன்ற முக்கியமான சேவைகளை வழங்கும்.


முக்கிய வர்த்தகத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க மேசை பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 

TEPA ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இரு தரப்பினரும் குறைந்த கட்டணங்கள், சுங்க செயல்முறைகள், சிறந்த சந்தை அணுகல் மற்றும் நிலையான வர்த்தகத்திற்கான வலுவான கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

ஆற்றலை உணர்ந்து கொள்ளுதல் 


இந்த முயற்சிகள் மார்ச் 10, 2024 அன்று இறுதி செய்யப்பட்ட EFTA உறுப்பு நாடுகளுடனான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை (TEPA) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) 1960-ல் ஆஸ்திரியா, டென்மார்க், போர்ச்சுகல், நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய ராச்சியம் (United Kingdom) ஆகியவற்றால் நிறுவப்பட்டது. 


பல ஆண்டுகளாக, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து 1972-ல் கூட்டணியை விட்டு வெளியேறின. அதைத் தொடர்ந்து 1985-ல் போர்ச்சுகல் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் (European Economic Community (EEC)) இணைந்தது. ஸ்வீடனும் ஆஸ்திரியாவும் 1995–ல் EFTA-விலிருந்து வெளியேறி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.


மீதமுள்ள நான்கு EFTA உறுப்பினர்கள் - சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் - பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். இந்தியாவுடனான அவர்களின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreements (FTAs)) முதல் முறையாக, இந்தியாவுடனான EFTA-ன் கூட்டாண்மை இலக்கு முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்திற்கான சட்டப்பூர்வ உறுதிப்பாட்டை உறுதிசெய்தது.


ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் 2008-ல் தொடங்கி 21 சுற்றுகள் நீடித்தன. 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இறுதி ஒப்பந்தம், EFTA நாடுகள் இந்தியாவில் $100 பில்லியன்களை முதலீடு செய்ய இருப்பதாக உறுதியளிக்கிறது.


 இந்த முதலீடு 15 ஆண்டுகளில் 10 லட்சம் (1 மில்லியன்) வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு ஈடாக, மருந்துகள், ரசாயன பொருட்கள், கனிமங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய வரிகளில் சிறந்த சந்தை அணுகலை இந்தியா EFTA-க்கு வழங்கும்.


அதிகரித்து வரும் பாதுகாப்புவாதம் மற்றும் உலகளாவிய பொருளாதார உறுதியற்ற தன்மையுடன், இந்தக் கூட்டாண்மை இந்தியா அதன் இறக்குமதிகளை பன்முகப்படுத்தவும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும். EFTA மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவு இரு தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது.


“மேக் இன் இந்தியா” முயற்சியை வலுப்படுத்துதல்


இந்தியா-EFTA வர்த்தகம் சீராக வளர்ந்து வருகிறது. இது 2022-23ஆம் ஆண்டில் $18.65 பில்லியனில் இருந்து 2023-24ஆம் ஆண்டில் $24 பில்லியனாக அதிகரித்துள்ளது. வர்த்தக சமநிலை EFTA-க்கு சாதகமாக உள்ளது. தனிப்பட்ட EFTA நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் வலுப்பெற்றுள்ளன. 


இந்தியாவின் சந்திரன் திட்டத்தில் சுவிட்சர்லாந்தின் துல்லிய தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்தது. நான்கு EFTA நாடுகளில், சுவிட்சர்லாந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடாகும். ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2024 வரை இந்தியாவில் $10.72 பில்லியன் முதலீடு செய்துள்ளது.


இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நார்வே மற்றும் ஐஸ்லாந்தின் நிபுணத்துவம், இந்தியாவின் தூய்மையான எரிசக்திக்கு மாறுவதை ஆதரிக்கும். பசுமை இயக்கம், வட்டப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம், கப்பல் கட்டுதல் மற்றும் கடல் உணவு உற்பத்தி ஆகியவற்றில் நார்வே இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும்.


உலகின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான $1.6 டிரில்லியன் மதிப்புள்ள நார்வேயின் இறையாண்மை செல்வ நிதியம், வலுவான தொழில்நுட்ப முதலீடுகள் காரணமாக 2023-ல் $213 பில்லியன் லாபத்தை ஈட்டியது. இது இந்தியாவிற்கு ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்குகிறது.


கூட்டு முயற்சிகள் மூலம் மருந்துகள், ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் இந்தியா முதலீடுகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-EFTA, TEPA வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்கும், குறிப்பாக தொழில்துறை பொருட்கள் மற்றும் சேவைகளில் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த உதவும். இது இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முயற்சியையும் அதிகரிக்கும்.


சவால்களை கண்டறிதல்


இருப்பினும், ஒப்பந்தத்தின் சாத்தியமான நன்மைகள் இருந்தபோதிலும், சில சவால்கள் உள்ளன. விதிமுறைகள் மற்றும் சந்தை அணுகலில் உள்ள வேறுபாடுகள் தடைகளை உருவாக்குகின்றன. மேலும், இந்த ஒப்பந்தம், EFTA நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதியைவிட, இந்தியாவிற்கான EFTA ஏற்றுமதிகளுக்கு சாதகமாக இருக்கலாம். முக்கியமாக, தற்போதுள்ள கட்டண கட்டமைப்புகள் காரணமாக அதிக நன்மை ஏற்படும்.


இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2012-13-ல் $31.74 பில்லியனில் இருந்து 2022-23-ல் $14.8 பில்லியனாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தத்தின் கீழ் கட்டணங்களைக் குறைப்பது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும்.


கூடுதலாக, இந்தியாவிற்கும் EFTA நாடுகளுக்கும் இடையிலான தயாரிப்பு தரம், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளின் வெவ்வேறு தரநிலைகள் வணிக ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலும், விவசாயம் மற்றும் பால் துறைகளுக்கான வரிகளை இந்தியா குறைக்கவில்லை. இது சில EFTA ஏற்றுமதியாளர்களுக்கான நன்மைகளைக் கட்டுப்படுத்துகிறது.


இறுதியாக, அறிவுசார் சொத்துரிமைகள் (intellectual property rights (IPR)) ஒரு கவலையாகவே உள்ளன. EFTA நாடுகள் கடுமையான தரவு பிரத்தியேக விதிகளை விரும்புகின்றன. இது எதிர்கால சவால்களை உருவாக்கக்கூடும்.


இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை இணைப்பது உள்நாட்டு எதிர்ப்பை நிவர்த்தி செய்யவும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்கவும் உதவும். வரி அல்லாத தடைகளைக் குறைப்பதன் மூலமும் கூட்டு தொழில்நுட்பக் குழுக்களை அமைப்பதன் மூலமும் ஒழுங்குமுறை இடைவெளிகளைக் குறைப்பது நிலையான வர்த்தகத்தை சீராக்க உதவும். மேலும், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை ஒப்பந்தத்தை வலுப்படுத்தும். இது நிலையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும், முதலீட்டை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.


இந்தக் கூட்டாண்மை இப்போதுதான் தொடங்குகிறது. ஆனால், இரு தரப்பினரும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் உறுதியளித்துள்ளனர். இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா-இங்கிலாந்து FTA-க்களின் தாமதங்களில் காணப்படும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வர்த்தக சவால்களுடன், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Trade and Economic Partnership Agreement (TEPA)) இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான படியாகும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக (Viksit Bharat) ஆக வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கையும் இது ஆதரிக்கிறது.


(ஸ்ரேயா சின்ஹா ​​விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷனில், புது டெல்லியில் ஒரு ஆராய்ச்சி கூட்டாளியாக [ஐரோப்பா டெஸ்க்] உள்ளார்.)




Original article:

Share: