சுதேசிப் பொருட்கள் மீதான வளர்ந்துவரும் விருப்பம் தற்சார்பு இந்தியா (Atmanirbhar Bharat) இலக்குகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது? — ரித்விகா பட்கிரி

 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகரித்துவரும் விருப்பமும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஆத்மநிர்பர் பாரத் மற்றும் சுதேசி தொலைநோக்கு பார்வைகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன? தொழில் புரட்சியின் வரலாறு, இந்தியாவின் உற்பத்தித் துறையின் எதிர்காலப் போக்கையும், சுதேசிப் பொருட்களின் நீடித்த மதிப்பையும் புரிந்துகொள்ள ஏன் இன்றியமையாதது?


அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீது அதிக வரி மற்றும் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போட்டி காரணமாக அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'சுதேசி' பார்வை ஆகியவை புதுப்பிக்கப்பட்ட வேகத்தைப் பெறுவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகப்படியான விருப்பத்திலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிகாட்டி செயலியான மேப்பில்ஸ் (Mappls) போன்ற உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் இது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த மாதம் நாட்டு மக்களிடையே தீபாவளியையொட்டி ஆற்றிய 'மன் கி பாத்' உரையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுகையில், பண்டிகைக் காலத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அல்லது சுதேசி பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (Confederation of All India Traders (CAIT)) கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலத்தில், இதுவரை இல்லாத அளவில் 6.05 டிரில்லியன் விற்பனைப் பதிவாகியுள்ளது. இதில் 87 சதவீத வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களைவிட இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) இயக்கம் 2014-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது. இது, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்க ஈர்க்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) உற்பத்தியின் பங்கு 2013-14 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுக்கு இடையில் தேக்கமடைந்துள்ளது. இது 17.2 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக மட்டுமே சற்று அதிகரித்துள்ளது. 


இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் சுதேசிப் பொருட்களின் வரலாற்றை, தொழிற்புரட்சியின் வரலாறு மற்றும் அதன் பின்விளைவுகள் மூலம் மேலும் புரிந்துகொள்ளலாம்.


1750-ஆம் ஆண்டுகளில், கிரேட் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், டச்சு குடியரசு மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஐந்து முக்கிய ஐரோப்பிய காலனித்துவ சக்திகளாக இருந்தன. இருப்பினும், 1850-ஆம் ஆண்டு காலகட்டதில், பிரிட்டன் தன்னை "உலகின் தொழில் பட்டறையாக (workshop of the world)" மாற்றிக் கொண்டு, நிகரற்ற காலனித்துவ பேரரசாக உருவெடுத்தது.


இந்தக் காலகட்டத்தை இரண்டு முக்கிய முன்னேற்றங்கள் வரையறுத்தன. முதலாவது, சுமார் 1750 முதல் 1914-ஆம் ஆண்டு வரை நடந்த தொழில் புரட்சி ஆகும். இந்தக் காலகட்டம், கிரேட் பிரிட்டனில் தொடங்கிய விரைவான தொழில்நுட்ப மாற்றத்தால் குறிக்கப்பட்டது. 1750-ஆம் ஆண்டுக்குமுன், பிரிட்டனின் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.  அங்கு சுமார் 80-சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் உள்ள சிறிய பண்ணை வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.


உற்பத்தி சிறிய அளவிலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட தன்மையுடன் இருந்தது. இது வண்டிகள், ஆலைகள், தறிகள் போன்ற அடிப்படைக் கருவிகளைச் சார்ந்து இருந்தது. இந்தக் கருவிகள் மனிதர்கள், விலங்குகள் அல்லது நீராழிகளால் (waterwheels) இயக்கப்பட்டன. பிறப்பால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் செல்வம் மற்றும் சமூகநிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கடுமையான வர்க்க அமைப்பில் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 


தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரே ஒரு நிகழ்வு என்று எதுவும் இல்லை. இருப்பினும், நிலக்கரி, இரும்பு, பருத்தி மற்றும் கம்பளி ஆகிய தொழில்கள் புரட்சியின் முதல் அலையைக் கண்டன. நீராவி சக்தி மற்றும் மின்சாரத்தின் பயன்பாடு தொழிற்சாலைகளில் வேலையின் தன்மையையும் மாற்றியது. மேம்பட்ட வாழ்க்கை தரம் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களின் விளைவாக இக்காலத்தில் பிரிட்டனின் மக்கள் தொகையும் பெருமளவு அதிகரித்தது.


ஜவுளி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதுடன், உற்பத்தியையும் குறிப்பிட்ட இடங்களில் குவித்தது. வேலை தேடி தொழிலாளர்கள் இந்தப் பகுதிகளுக்கு நகர்ந்ததால், மான்செஸ்டர் மற்றும் லண்டன் போன்ற நவீன நகரங்கள் மற்றும் பட்டணங்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதன் விளைவாக, தொழில்துறைக்கு முந்தைய கிராமப்புற பிரிட்டன் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டது.


'செல்வச் சுரண்டல்'  பிரிட்டனின் மாற்றத்திற்கு உதவியது


பிரிட்டனின் மாற்றத்தை வடிவமைத்த மற்றுமொரு குறிப்பிடத்தக்க செயல்முறை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் வெளிநாட்டு வர்த்தகமுமாகும். மேற்கு ஐரோப்பிய சக்திகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள தங்கள் காலனிகளிலிருந்து பெரும் பொருளாதார உபரியை அபகரித்துக் கொண்டன. இது அவற்றின் சொந்த தொழில்துறை மாற்றத்திற்கு கணிசமாக உதவியது. இந்தச் செல்வச் சுரண்டல் ஐரோப்பிய குடியேற்றங்கள் முழுவதும் முதலாளித்துவத்தின் பரவலுக்கும் வழிவகுத்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த செயல்முறையானது "செல்வச் சுரண்டல்" (Drain of Wealth) என்று வரையறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆர்.சி. தத் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட இந்த "செல்வச் சுரண்டல்" என்ற சொல் இந்தியாவின் கூடுதல் செல்வங்கள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டதைக் குறிக்கிறது.


பொருளாதார வல்லுநர்களான பிரபாத் பட்நாயக் மற்றும் உத்சா பட்நாயக் ஆகியோரும் இந்தச் சுரண்டலுக்கு உள் மற்றும் வெளிப் பரிமாணங்கள் இரண்டையும் கோடிட்டுக் காட்டினர். உள் பரிமாணம் என்பது நிலவரி உட்பட வாடகை மற்றும் வரிகள் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து பொருளாதார உபரியைப் பிரித்தெடுப்பதைக் குறிக்கிறது. சுதந்திரமான இந்திய உற்பத்தியாளர்கள் நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். அதேசமயம், குத்தகைதார வேளாண் தொழிலாளர்கள், ஜமீன்தாரர்கள் அல்லது நிலப்பிரபுக்களுக்கு வரியைச் செலுத்தினர். பின்னர், அவர்கள் அதை காலனித்துவ அரசுக்குச் செலுத்தினர். மறுபுறம், வெளிப் பரிமாணம் என்பது ஏற்றுமதிகள் மூலம் இந்தியாவின் பொருளாதார உபரியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்படுவதை உள்ளடக்கியது.


இந்தியாவின் கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்களின் சரிவு


இருப்பினும், இந்த ஏற்றுமதிகளின் மூலம் கிடைத்த வருமானம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிர்வாக மற்றும் இராணுவச் செலவுகள் போன்ற "தாய்நாட்டுச் செலவினங்களுக்காக" (home charges) பயன்படுத்தப்பட்டது. இதனால், இந்திய ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் சொந்த வரிப் பங்களிப்பிலிருந்தே பணம் வழங்கப்பட்டதால், இந்தக் காலனித்துவ வர்த்தக முறைமை தனித்துவமானதாக இருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட துணி வகைகளைப் போன்ற மலிவான பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் பெரிதும் விற்கப்பட்டன. இது உள்ளூர் கைவினைஞர்களான நூல் நூற்பவர்கள் மற்றும் நெசவாளர்களைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அமியா குமார் பாக்சி போன்ற அறிஞர்கள் கூற்றின்படி, இதன் விளைவாக உள்ளூர் கைவினைக் கலைகள் பெரிய அளவிலான தொழில்மயமாக்கலை இழந்தன என்றும் கூறப்படுகிறது. 

இவ்வாறாக, இந்தியாவின் கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் சுரண்டல் நிறைந்த காலனித்துவக் கொள்கைகளின் சுழற்சியின் கீழ் வீழ்ச்சியடைந்தன. ஒருபுறம், இந்திய உற்பத்தியாளர்கள் காலனித்துவ அரசுக்கு அதிக வரிகளைச் செலுத்தினர் மற்றும் அதே வரிகளில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களின் ஏற்றுமதிக்கான தொகையைப் பெற்றனர். ஆனால், உண்மையில் பலன்கள் அனைத்தும் காலனித்துவ அரசுக்கே சென்றன.


மறுபுறம், மலிவான பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தையில் நிறைந்து, உள்ளூர் உற்பத்தியாளர்களைப் இடம்பெயரச் செய்தது. "செல்வச் சுரண்டல்" அல்லது திரட்டப்பட்ட உபரி, பிரிட்டனின் தொழில்மயமாக்கலுக்கு உதவியது. ஏறக்குறைய 150 ஆண்டுகளாக ஆசிய ஜவுளிகளுக்கு எதிரான பிரிட்டனின் கடுமையான பாதுகாப்புவாதக் கொள்கை, பிரிட்டிஷ் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமை மற்றும் இறக்குமதி மாற்றீட்டைத் (import substitution) தூண்டியது என்று பிரீட்ரிக் லிஸ்ட் போன்ற அறிஞர்கள் வாதிட்டனர். எனவே, பிரிட்டனின் வெளிநாட்டுக் காலனித்துவக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாமல், தொழில் புரட்சியின் வரலாறு  முழுமையடையாது.


காலனித்துவ இந்தியாவில் பாரம்பரிய கைவினைத் தொழில்துறையின் வீழ்ச்சி கிராமப்புற பொருளாதாரத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார வரலாற்றாசிரியர் தீர்த்தங்கர் ராய் (Tirthankar Roy) கூற்றுப்படி, 1800-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகையில் சுமார் 15-20 சதவீதம் பேர் நூற்பு மற்றும் நெசவு, தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, உலோக வேலை, தரை விரிப்புகள் மற்றும் கம்பளம் தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தொழில்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தவில்லை. பெரிய அளவிலான தொழிற்சாலைகளாகவும் ஒழுங்கமைக்கப்படவில்லை. மாறாக, அவை வீடுகளுக்குள்ளேயே குவிந்திருந்தன மற்றும் குடும்ப உழைப்பால் நடத்தப்பட்டன. இதனால், அவை இயல்பில் பாரம்பரியமானவையாக இருந்தன என்றும் கூறப்படுகிறது. 


காலனித்துவ ஆட்சியின்போது இந்தியப் பொருளாதாரத்தின் தொழில்துறை நீக்கம் என்பது, தொழில்நுட்ப பழமை மற்றும் காலனித்துவ கொள்கைகளால் ஏற்பட்ட பாரம்பரிய தொழில்களின் வீழ்ச்சியாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பிரிட்டனுடனான நெருங்கிய பொருளாதார உறவு, இந்தியாவில் ஜவுளி ஆலைகள் போன்ற சில நவீன தொழில்களை நிறுவ உதவியது என்றாலும், ஒட்டுமொத்த தாக்கம் எதிர்மறையாகவே இருந்தது. பல கைவினைஞர்கள் தங்கள் கைத்தொழில்களைக் கைவிட்டு, வேளாண்மையில் நிலையற்ற வேலையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. 


இருப்பினும், பாரம்பரிய தொழில்களில் வேலைவாய்ப்பு குறைந்தமைக்குக் காரணம் தொழில்துறை நீக்கம் மட்டுமல்ல என்று சில பொருளாதார வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வர்த்தகமயமாக்கல் செயல்முறையின் விளைவாக பாரம்பரிய தொழில்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டதாகவும், அது குறைந்த செயல்திறன் கொண்ட தொழில்களை வெளியேற்றியதாகவும், அதேசமயம் உற்பத்தித்திறன் கொண்டவை பிழைத்துக்கொண்டன என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.


வேலைவாய்ப்பில் ஏற்பட்ட பாலின ரீதியான மாற்றத்தின் மூலமாகவும் இது விளக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள தொழில்களில் பெண்களின் வேலைவாய்ப்பு 1881-ஆம் ஆண்டில் 40 சதவீதத்திலிருந்து 1971-ஆம் ஆண்டில் 13 சதவீதமாகக் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. வர்த்தகமயமாக்கல்  கொள்கையின்படி, குடும்பம் ஒரு உற்பத்தி அலகாகத் தனது முக்கியத்துவத்தை இழந்தபோது, பெண்கள் தொழிலாளர்கள் பாரம்பரியத் தொழில்களில் இருந்து வெளியேறினர். மேலும், அவர்களுக்குப் பதிலாக ஆண் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் விளக்கப்படுகிறது.

 

விடுபட்டுள்ள நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்


இந்தியாவுக்குரிய கிராமப்புறப் பொருளாதாரத்தின் தன்மையை, தொழிற்புரட்சி, பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டுச் சந்தைச் சக்திகள் ஆகியவை மாற்றியமைத்தன. இதனால், பாரம்பரியத் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன, மேலும் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு அதிகரித்தது. இந்த மாற்றத்தின் விளைவு இன்றும் இந்தியாவின் உற்பத்தித் துறையை வடிவமைக்கிறது. இது ஒரு கட்டமைப்பு இரட்டைவாதத்தால் வகைப்படுத்தப்படுகிறது: அதாவது, பெரிய முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஏராளமான சிறிய, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட முறைசாரா அலகுகள் ஆகியவை இணைந்து இருப்பதுடன், மிகச் சில நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இதுவே "காணாமல் போன நடுத்தர நிறுவனங்கள்" (missing middle) என்ற நிகழ்வாக அறியப்படுகிறது. 

'மேக் இன் இந்தியா' போன்ற முயற்சிகள் இருந்தபோதிலும், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) உற்பத்தியின் பங்கு பெரும்பாலும் தேக்கமடைந்துள்ளது. இந்த காலனித்துவ மற்றும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவைச் சமாளிக்க, "விடுபட்டுள்ள நடுத்தர நிறுவனங்களை" வலுப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டை வளர்த்தல் மற்றும் இந்தியாவின் தொழில்துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறை இணைப்புகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில் கொள்கைக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


ரித்விகா பட்கிரி, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original article:

Share:

'ஜன கண மன' விவகாரம் : தாகூர் ஏன் இயற்றினார்? எப்படி தேசிய கீதமாக மாறியது? -தீபனிதா நாத்

 இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில், கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, ‘ஜன கண மன’ பாடலை ‘பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான வரவேற்புப் பாடல்’ என்று கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்தப் பாடலுடன் கடந்த 100 ஆண்டுகளாக தொடர்புடைய ஒரு கட்டுக்கதையை தெளிவுபடுத்துவோம்.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பிரிட்டிஷ் அதிகாரிகளை வரவேற்க ‘ஜன கண மன’ எழுதியதாகக் கூறினார். அவரது கருத்து பலரை வருத்தப்படுத்தியது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தது.


ஆனால், ஹெக்டே இதை முதலில் சொல்லவில்லை. தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வில், சில அரசியல்வாதிகள், ஒரு சில அறிஞர்கள் மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு கூறிய கூற்றுகளை விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி  மீண்டும் கூறினார். இந்தியாவின் தேசிய கீதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்து எழுதப்பட்டது என்றும், ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து பேசுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.


பத்தாண்டுகளுக்கு முன்பு, அப்போது ராஜஸ்தான் ஆளுநராக இருந்த பாஜக தலைவர் கல்யாண் சிங், ‘ஜன கண மன அதிநாயக்’ என்ற சொற்களை ‘ஜன கண மன மங்களதாயக்’ என மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார், முன்னது “ஆட்சியாளருக்கு ஜே” என்று மொழிபெயர்க்கப்படுவதாகவும், பிந்தையது “செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருபவரை” நினைவூட்டுவதாகவும் வாதிட்டார்.


படைப்பாளருக்கான பாடல்


மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், இந்தியாவின் தேசிய கீதம் 'Bharoto Bhagyo Bidhata' என்ற பெரிய கவிதையின் ஒரு பகுதியாகும். இது முதன்முதலில் 1911ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த டெல்லி தர்பார் என்ற பெரிய நிகழ்வில் பாடப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் துணைவியார் ராணி மேரி ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.


இந்தப் பாடல் பிரிட்டிஷ் மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்ற வதந்திகளுக்கு தாகூர் பதிலளித்தார். தெளிவுபடுத்த விரும்பிய தனது ஆசிரியர் புலின் பிஹாரி சென்னுக்கு எழுதிய கடிதத்தில், "ஐந்தாவது, ஆறாவது அல்லது எந்த ஜார்ஜும் காலங்காலமாக மனிதகுலத்தின் விதியை வடிவமைக்க முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.

“இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவரை, உயர்வு தாழ்வு அனைத்திலும் வழிகாட்டியை, மக்களுக்கு வழி காட்டுபவரை… ‘ஜன கண மன’ பாடலில் நான் வாழ்த்தினேன்” என்று நவம்பர் 20, 1937 அன்று எழுதப்பட்டு, காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டது.


உண்மையில், கவிதையின் சில பகுதிகள் ஒரு மனிதனை நோக்கி அல்ல. மாறாக, ஒரு தெய்வீக சக்தியை தெளிவாக நோக்கிச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. காலங்கள் தோறும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த கடினமான பாதையில் மனித வரலாற்றை வழிநடத்தும் நித்திய சாரதியே நீங்கள் என்று கவிதையின் மூன்றாவது சரணம் கூறுகிறது.


ஒரு கட்டுக்கதையை முடிவுக்குக் கொண்டுவருதல்


நாட்டின் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான மறைந்த பேராசிரியர் சப்யசாச்சி பட்டாச்சார்யா, 2011ஆம் ஆண்டு வெளியிட்ட தமது Rabindranath Tagore: An Interpretation’ என்ற நூலில், தாகூரிடம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்புப் பாடல் எழுதுமாறு கேட்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அவர் மறுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தக் கவிதையை எழுதினார் என்று குறிப்பிடுகிறார்.


இந்தியாவின் எதிர்காலத்தை பாதித்த மன்னராக ஐந்தாம் ஜார்ஜை மதிப்பதற்குப் பதிலாக, அவரை கடவுள் போன்ற நபராகக் கருதுவது தாகூருக்கு அபத்தமானது மட்டுமல்ல, அவரை அவமதிப்பதாகவும் இருந்தது என்று பட்டாச்சார்யா எழுதுகிறார்.

இந்தப் பாடலைப் பற்றிய தவறான கதையை நிறுத்த வேண்டும் என்று பட்டாச்சார்யா கூறுகிறார். “இந்தப் பாடல் டிசம்பர் 11, 1911 அன்று எழுதப்பட்டது என்பது பதிவில் உள்ளது. டிசம்பர் 12, 1911 அன்று, டெல்லி தர்பார் கிங் ஜார்ஜ் V ஐ கௌரவிக்க மாநாடு கூடியது. வெளிப்படையாக, டிசம்பர் 11 அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை அடுத்த நாள் நிகழ்வுக்காக எழுதப்பட்டிருக்க முடியாது,” என்று பட்டாச்சார்யா எழுதுகிறார்.


‘ஜன கண மன’ பாடல் முதன்முதலில் டிசம்பர் 28, 1911 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் 27-வது அமர்வில் பாடப்பட்டது. அடுத்ததாக, இந்தப் பாடல் 1912ஆம் ஆண்டு ஆதி பிரம்ம சமாஜத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பாடப்பட்டது.


“பாடல் அவர்களது சங்கீத சுவடியான பிரம்ம சங்கீத் பட்டியலில் சேர்க்கப்பட்டது,” என்று பட்டாசாரியா எழுதுகிறார். “அவர் அதை காங்கிரசுக்காகவும் எழுதவில்லை. அது அவரது படைப்பாளருக்கு, நாட்டின் விதியின் பாதுகாவலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்ப்பா” என்று வரலாற்றாசிரியர் கூறுகிறார்.


ஒரு கீதம் பிறக்கிறது


1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்லினில் நடந்த சுதந்திர இந்தியா மையத்தின் தொடக்க விழாவில் தாகூரின் இசையமைப்பான ஜன கண மனவைப் பயன்படுத்த முதலில் முடிவு செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.


அந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸின் மூவர்ணக் கொடி சுதந்திர இந்தியாவின் கொடியாக மாறும் என்றும், தாகூரின் 'ஜன கண மன' தேசிய கீதமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தாகூரின் பாடலையும் முகமது இக்பாலின் 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' பாடலையும் நேதாஜி விரும்பினார். இருந்த போதிலும், நேதாஜிக்கு எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்ததாக கூறப்படுகிறது.


 இந்தியாவின் அனைத்து பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'ஜன கண மன' தேசிய கீதத்திற்கு சிறந்த தேர்வாகக் கருதப்பட்டு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்று அப்போது அங்கிருந்த நேதாஜியின் நெருங்கிய நண்பரான என்.ஜி. கன்புலே, ‘Ganpuley’s Memoirs: Author of Netaji in Germany’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.


1942ஆம் ஆண்டு ஹாம்பர்க்கில் நடந்த இந்தோ-ஜெர்மன் கலாச்சார சங்கத்தின் தொடக்க விழாவில் தேசிய கீதம் முதன்முதலில் முழு இசைக்குழுவுடன் பாடப்பட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். இது குறித்த கிராமபோன் பதிவுகளும் தயாரிக்கப்பட்டன. அவை இன்னும் கிடைக்கின்றன.


தாகூரின் பாடல் ஜனவரி 24, 1950 அன்று அரசியலமைப்பு சபையில் இறுதி அங்கீகாரத்தை அடைந்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், 'ஜன கண மன' இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் என்றும், தேவைப்பட்டால் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் வார்த்தை மாற்றங்களுடனும் இருக்கும் என்றும் அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலுக்கு 'ஜன கண மன’ பாடலுக்கு  இணையான மரியாதை  வழங்கப்படும் என்று டாக்டர் ராஜேந்திர பிரசாத்  கூறினார்.



Original article:

Share:

டொனால்ட் டிரம்ப் உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை மாற்றியமைக்கிறார். -ராகேஷ் சூட்

 உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை அமெரிக்கா வடிவமைத்துள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் நடவடிக்கைகள் இப்போது அந்த ஒழுங்கின் முடிவுக்கு ஒரு வினையூக்கியாக மாறினால் அது முரண்பாடாக இருக்கும்.


இன்று, உலக அணுசக்தி ஒழுங்குமுறை ஒரு விசித்திரமான முரண்பாட்டை வழங்குகிறது. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஏற்பட்ட அணுகுண்டுவீச்சுக்குப் பிறகு, கடந்த 80 ஆண்டுகளாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. உலகளாவிய அணு ஆயுதக் களஞ்சியங்கள் 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்த அதிகபட்ச எண்ணிக்கையான 65,000 குண்டுகளில் இருந்து இன்று 12,500-க்கும் கீழாகக் குறைந்துவிட்டன. மேலும், 1960-ஆம் ஆண்டில் இருந்து 1980-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இன்று மொத்த எண்ணிக்கை ஒன்பதாகவே உள்ளது.  அவற்றில் ஐந்து (அமெரிக்கா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ் மற்றும் சீனா) அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) நடைமுறைக்கு வருவதற்கு முன்பே சோதனை செய்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர். மற்ற நான்கு நாடுகள் (இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வட கொரியா) பின்னர் தங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கின.


பின்னோக்கிப் பார்க்கையில், இவை ஈர்க்கக்கூடிய சாதனைகளாகத் தோன்றலாம். ஆனால், யாரும் கொண்டாடத் தகுந்த ஒன்றல்ல. உண்மையில், உலக அணுசக்தி ஒழுங்கு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது என்பதே பரவலான உணர்வு. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் உலக அணுசக்தி ஒழுங்கின் மூன்று கூறுகளையும் பலவீனப்படுத்தக்கூடும் என்கின்றனர்.


'அணுசக்தி சோதனைகள்' மீண்டும் தொடங்குதல்


அக்டோபர் 30-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்குடனான பூசான் சந்திப்பிற்குச் செல்லும் வழியில், டிரம்ப் 'ட்ரூத்’ சமூக வளைத் தளத்தில் (Truth) தளத்தில் "மற்ற நாடுகளின் சோதனைத் திட்டங்கள் காரணமாக, நமது அணு ஆயுதங்களைச் சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு நான் போர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்தச் செயல்முறை உடனடியாகத் தொடங்கும்" என்று அறிவித்தார். "ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது, சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் 5 ஆண்டுகளுக்குள் சமமாக இருக்கும்" என்றும் அவர்  கூறினார்.


இந்தச் செய்தி ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கியது என்பது தெளிவாக இருந்தாலும், டிரம்ப் 'அணு வெடிப்பு சோதனை'யைக் குறிப்பிடுகிறாரா அல்லது அணு ஆயுத அமைப்புகளைச் சோதிப்பதைக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகவில்லை. இரண்டாவதாக, அணு ஆய்வகங்கள் (லாஸ் அலமோஸ் (Los Alamos), லாரன்ஸ் லிவர்மோர் (Lawrence Livermore) மற்றும் சாண்டியா (Sandia) மற்றும் நெவாடா (Nevada) சோதனை வசதிகள் போர் துறையின் கீழ் இல்லாமல், எரிசக்தித் துறையின்  கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.


சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை புதிய அணு ஆயுதங்களை வடிவமைத்து உருவாக்கி வருகின்றன என்பது இரகசியம் அல்ல. அக்டோபர் மாத இறுதியில், ரஷ்யா ஒரு அணுசக்தி மூலம் இயங்கும் க்ரூஸ் ஏவுகணையை (பியூரெவெஸ்ட்னிக் - Burevestnik) சோதனை செய்தது. அது 14,000 கிலோமீட்டர் பயணித்து இலக்குகளைத் தாக்கக்கூடியது என்ற தகவல் வெளியானது. அதையடுத்து ஒரு வாரம் கழித்து, நீருக்கடியில் இயங்கும் அணுசக்தி மூலம் இயங்கும் டார்பிடோவை (torpedo) (போஸிடான் - Poseidon) சோதனை செய்தது. சீனா தற்போது அதிவேக ஏவுகணைகளைச் சோதித்து வருகிறது. மேலும் 2021-ஆம் ஆண்டில், ஒரு அணுசக்தி திறன் கொண்ட அதிவேக சறுக்கு வாகனத்தை (hypersonic glide vehicle) ஒரு ராக்கெட்டில் சுமந்து சென்று சோதனை செய்தது. அது பூமியைச் சுற்றி வந்து எதிர்பாராத திசையில் இருந்து இலக்கை அணுகும் திறன் கொண்டது. ஆனால், அது ஒரு செயற்கைக்கோள் ஏவுகணையாக அனுப்பப்பட்டது.


அமெரிக்கா புதிய போர்க்கப்பல்களைத் தயாரித்து வருகிறது - ஒரு மாறுபடும் விளைச்சல் கொண்ட B61-13 ஈர்ப்பு குண்டு (gravity bomb), ட்ரைடென்ட் II D-5 ஏவுகணைக்கான குறைந்த விளைச்சல் கொண்ட W76-2 போர்க்கப்பல், அதேநேரத்தில் அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய கப்பல் ஏவுகணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


இருப்பினும், அவை வெடிப்புச் சோதனையைத் தவிர்த்துவிட்டன. ரஷ்யா கடைசி வெடிப்புச் சோதனை 1990-ஆம் ஆண்டில் நடத்தியது. அதேசமயம் அமெரிக்கா 1992-ஆம் ஆண்டில் சோதனைகளுக்குத் தடை விதித்தது. 1993-ஆம் ஆண்டில், அமெரிக்கா தேசிய அணுசக்தி பாதுகாப்புக் கழகத்தின் (National Nuclear Security Administration) கீழ் போர்க்கப்பல் நவீனமயமாக்கல், ஆயுட்கால நீட்டிப்பு மற்றும் போர்க்கப்பல் வடிவமைப்பில் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக  இருப்பு பராமரிப்பு மற்றும் மேலாண்மை திட்டம் (Stockpile Stewardship and Management Programme) என்கிற அமைப்பை உருவாக்கியது. அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஒரு விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்திற்கான (CTBT - Comprehensive Test Ban Treaty) பேச்சுவார்த்தைகளை ஜெனிவாவில் தலைமை தாங்கினார். சீனா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக, 1996-ஆம் ஆண்டில் தங்கள் அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளை முடித்துக்கொண்டன.


முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தத்திற்கு (CTBT) ஏன் ஒரு வரையறை இல்லை?

 

இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், 187 நாடுகள் கையெழுத்திட்ட போதிலும் CTBT நடைமுறைக்கு வரவில்லை. தேவையான ஒப்புதல்களில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், எகிப்து மற்றும் ஈரான் அவ்வாறு செய்யவில்லை. ரஷ்யா 2023-ஆம் ஆண்டில் அதன் ஒப்புதலை திரும்பப் பெற்றுக்கொண்டது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா அதில் கையெழுத்திடவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் 1998-ல் அணு ஆயுதச் சோதனை நடத்தி, அதன் பிறகு தாமாக முன்வந்து தற்காலிகத் தடையைக் கடைப்பிடிக்கின்றன. மேலும், வடகொரியா 2006 மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆறு சோதனைகளை நடத்தியது. இன்றைய புவிசார் அரசியலைக் கருத்தில் கொண்டு, முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருண்டதாகவே தெரிகின்றன.


இரண்டாவதாக, முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் "எந்தவொரு அணு ஆயுத சோதனை வெடிப்பு அல்லது வேறு எந்த அணு வெடிப்பையும் மேற்கொள்ளக்கூடாது" என்று கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்கா இந்த விதிமுறைகளை வரையறுப்பதை எதிர்த்தது. அதற்குப் பதிலாக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் 'விளைவில்லா அணு பரிசோதனை' (zero-yield-tests) குறித்து தனிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டது.  இது, தன்னிறைவான மீத்திறன் சங்கிலித் தொடர் வினை (self-sustaining supercritical chain reaction) உருவாக்காத ஹைட்ரோ-அணு சோதனைகளை  அனுமதித்தது. 


அமெரிக்கா ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு சோதனைகளையும், ரஷ்யா 727 சோதனைகளையும் நடத்தியதால், அவற்றுக்கு போதுமான தரவுத் தளம் இருந்தது. ஆனால், வெறும் 47 சோதனைகள் நடத்திய சீனாவும் இந்தப் புரிதலுடன் ஒத்துழைத்தது. இதனால், முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தமானது அணு ஆயுதங்களை அல்லாமல், அணு-வெடிப்பு சோதனைகளை மட்டுமே சட்டவிரோதமானதாக்கியது. இதுவே, இந்தியா அதில் ஒருபோதும் சேராததற்குக் காரணம் என்கின்றனர்.


2019–20 ஆகிய காலக்கட்டத்தில், ரஷ்யா மற்றும் சீனா ‘அமெரிக்காவின் விளைவற்ற (zero-yield) தரத்துக்கு ஒவ்வாத வகையில் குறைந்த அளவு அணு பரிசோதனைகளை (low-yield nuclear tests) நடத்தி இருக்கலாம்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பிட்டது. இருப்பினும், CTBT அமைப்பால் இது மறுக்கப்பட்டது. 89 நாடுகளில் பரவியுள்ள 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களைக் கொண்ட அவர்களின் கண்காணிப்பு வலையமைப்பு எந்த சீரற்ற செயல்பாட்டையும் கண்டறியவில்லை என்று அறிவித்தது.


நவம்பர் 2-ஆம் தேதி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக இருந்தார், இந்த முறை சோதனையிடும் நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவையும் சேர்த்தார். அதே நாளில் ஃபாக்ஸ் நியூஸில் (Fox News) அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) ஒரு விளக்கம் அளித்தார். அமெரிக்க சோதனைகளை அமைப்பு சோதனைகள் (systems-tests) என்று அழைத்தார். "இவை அணு வெடிப்புகள் அல்ல. இவற்றை நாம் அணுக்கரு சாரா வெடிப்புகள் என்று அழைக்கிறோம்," என்று அவர் கூறினார். இருப்பினும்,ல் டிரம்ப்பின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 


வடிவமைக்கப்பட்டு வரும் புதிய குறைந்த-உற்பத்தி திறன் கொண்ட போர்க்குண்டுகள் அவற்றை அதிக அளவில் பயன்படுத்தக்கூடியதாக ஆக்குகின்றன மற்றும் புதிய அமைப்புகள் (ஹைப்பர்சோனிக்ஸ், க்ரூஸ் மற்றும் ஆளில்லா அமைப்புகள்) இரட்டைத் திறன் கொண்ட அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' (golden dome) போன்ற ஏவுகணைப் பாதுகாப்புகளுக்கான புதிய ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. இதற்கிடையில், சைபர் மற்றும் விண்வெளி களங்களில் உள்ள புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை சமாளிக்க கொள்கை மாற்றங்கள் பரிசீலனையில் உள்ளன. இது வரும் காலங்களில் அணு ஆயுதத் தடை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்கின்றனர். 


அமெரிக்க-ரஷ்யா ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான புதிய இராஜதந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New Strategic Arms Reduction Treaty (START), அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராஜதந்திரப் படைகளை 700 ஏவுகணைகள் மற்றும் 1,550 போர்முனைகளாகக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 4, 2026-ஆம் ஆண்டு காலாவதியாக உள்ளது. பேச்சுவார்த்தைக்கும் எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. சீனா எந்த ஆயுதக் கட்டுப்பாட்டிற்கும் ஒரு தரப்பாக இல்லை, மேலும் அதன் அணு ஆயுதக் களஞ்சியம் 300-க்குக் குறைவாக இருந்த நிலையில், தற்போது 600 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் 1,000-ஐத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆரம்பகால அணு ஆயுதப் போட்டி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வெடிப்புச் சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. 


ரகசிய சோதனைகள் தொடர்பான டிரம்பின் குற்றச்சாட்டுகளை ரஷ்யாவும் சீனாவும் மறுத்துள்ளன. ஆனால், அமெரிக்கா வெடிப்புச் சோதனைகளை மீண்டும் தொடங்கினால் அவர்களும் பின்பற்றுவார்கள். சீனா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும். ஏனெனில் வெறும் 47 சோதனைகளுடன் (அமெரிக்காவால் நடத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில்), மீண்டும் தொடரப்படும் சோதனைகள் புதிய வடிவமைப்புகளைச் சரிபார்க்கவும் தரவுகளைச் சேகரிக்கவும் உதவலாம்.


இந்தியா ஒரு தன்னார்வ தடையைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் வெடிப்புச் சோதனை மீண்டும் தொடங்கினால், 1998-ல் ஒரு முறை மட்டுமே சோதிக்கப்பட்ட அதன் அதிகரித்த பிளவு மற்றும் வெப்ப அணுசக்தி வடிவமைப்புகளைச் சரிபார்க்க இந்தியா நிச்சயமாக சோதனையை மீண்டும் தொடங்கும். சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தான் பின்பற்றும், ஆனால் ஆபரேஷன் சிந்தூரின் (Operation Sindoor) போது காணப்பட்ட சீனாவுடனான அதன் வளர்ந்துவரும் ராஜதந்திர ரீதியான தொடர்புகளைக் கருத்தில் கொண்டால், இது இந்தியாவிற்கு எந்தவிதச்  சிக்கலையும் ஏற்படுத்தாது என்கின்றனர்.


முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) நடைமுறையில் இல்லாவிட்டாலும், அது ஒரு விதிமுறையை உருவாக்கியது. ஆனால் வெடிப்புச் சோதனையை மீண்டும் தொடங்குவது அதன் அழிவுக்கு வழிவகுக்கும். இது அணு ஆயுத ஆர்வலர்களைப் பின்பற்றவும், (Nuclear Non-Proliferation Treaty (NPT)) தலைமையிலான அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்பாட்டு விதிகளின் சரிவைக் குறிப்பதாக அமைந்துவிடும். 


பயன்பாட்டிற்கு எதிரான தடை அப்படியே இருக்க வேண்டும்.


உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை வடிவமைப்பதில் அமெரிக்கா மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால், டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகள் அதன் அழிவுக்கு வினையூக்கியாக மாறினால் அது முரண்பாடாக இருக்கும். தற்போதைய உலகளாவிய அணு ஆயுத ஒழுங்குமுறை 20-ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் மூலம் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை.  21-ஆம் நூற்றாண்டின் பிளவுபட்ட புவிசார் அரசியலைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய அணுசக்தி ஒழுங்கை உருவாக்குவதும், அவற்றின் பயன்பாட்டிற்கு எதிரான தடை அப்படியே இருப்பதை உறுதி செய்வதும் தற்போதைய சவாலாக இருந்து வருகிறது.


"தற்போதைய அணு ஆயுத அபாயங்கள் ஏற்கனவே ஆபத்தான அளவில் உள்ளன" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தவறான கணிப்புகள் அல்லது பதற்றமடைவதற்கு (escalation) வழிவகுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். ஆனால், எந்த நாடும் உடன்படுவதாயில்லை. 


ராகேஷ் சூட் ஒரு முன்னாள் தூதர் ஆவார் மற்றும் தற்போது கவுன்சில் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் அண்ட் டிஃபென்ஸ் ரிசர்ச் (CSDR)-ல் தகைசால் பேராசிரியர் ஆவார்.



Original article:

Share:

துணை-மாநில காலநிலை நடவடிக்கையின் தமிழ்நாடு மாதிரி -சுப்ரியா சாஹு, ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி

 மாநிலத்தின் 'கீழ்-மேல்' அணுகுமுறையில், மாவட்ட அளவிலான கார்பன் நீக்க திட்டங்களும் (decarbonisation plans), நிகழ்நேரக் கண்காணிப்பும் உள்ளூர் மற்றும் துணை-உள்ளூர் மட்டங்களில் காலநிலை நடவடிக்கைகளை வடிவமைக்க உதவுகின்றன.


காலநிலை நடவடிக்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தமிழ்நாட்டின் அணுகுமுறை, கொள்கைகள் செயல்படுத்தப்படும் இடத்தில், சமூகங்கள் பங்கேற்கும் மற்றும் முடிவுகளை அளவிடக்கூடிய இடத்தில் திறமையுள்ள தலைமை தொடங்கப்பட வேண்டும். இந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர, மாநிலம் அனைத்து காலநிலை தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க இந்தியாவின் முதல் பிரத்யேக அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியது. அதாவது, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (Tamil Nadu Green Climate Company (TNGCC)) ஆகும். அவை நான்கு முக்கிய பணிகளானவை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (Tamil Nadu Climate Change Mission (TNCCM)), பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission (GTNM)), தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் (Tamil Nadu Wetlands Mission (TNWM)) மற்றும் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission (TN SHORE)) ஆகும். இந்தப் பணிகள் மூலம், உமிழ்வைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், வாழ்வாதார மீள்தன்மையை வலுப்படுத்தவும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) செயல்படுகிறது.


நிகர பூஜ்ஜிய இலக்கு, முன்னோடி மாவட்டங்கள்


2070-க்கு முன்னர் தமிழ்நாட்டை நிகர பூஜ்ஜிய இலக்காக மாற்றும் நோக்கத்துடன், 2005 முதல் 2019 வரை அனைத்து துறைகள் மற்றும் துணைத் துறைகளிலிருந்தும் வருடாந்திர உமிழ்வை உள்ளடக்கிய விரிவான பசுமை இல்ல வாயு (Greenhouse Gas (GHG)) பட்டியலை தமிழ்நாடு மாநிலம் வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலம் விரிவான நிகர பூஜ்ஜிய பாதையையும் உருவாக்கியுள்ளது.


பசுமை இல்ல வாயு சரக்கு பட்டியலின் கண்டுபிடிப்புகள் நேர்மறையான போக்குகளைக் காட்டுகின்றன. இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், 2019-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உமிழ்வில் 7% மட்டுமே தமிழ்நாடு பங்களித்தது. மேலும், 2005 மற்றும் 2019-க்கு இடையில், அதன் உமிழ்வு தீவிரத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 60% குறைத்தது.


இந்த முன்னேற்றம் பல முக்கிய துறைகளின் இலக்குக்கான தலையீடுகளை பிரதிபலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரைவான வளர்ச்சி, மேம்பட்ட எரிசக்தி திறன், தொழில்துறை கார்பன் நீக்கம் மற்றும் அனைத்து பொது போக்குவரத்தையும் மின்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய மின்சார இயக்க திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இன்று, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் சுமார் 60% ஆகும். இது மாநிலத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 30% பங்களிக்கிறது.


2070-க்கு முன்னர் நிகர பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக, கீழிருந்து மேல் மட்டத்திற்கு காலநிலை நடவடிக்கை திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் மாவட்ட அளவிலான கார்பன்நீக்கத் திட்டங்களையும், வாசுதா அறக்கட்டளையுடன் (Vasudha Foundation) இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்நேர காலநிலை நடவடிக்கை கண்காணிப்பனையும் (Climate Action Tracker) மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்ளூர் நிர்வாகத்தில் காலநிலை நடவடிக்கைகளை நேரடியாக இணைக்கிறது. நீலகிரி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு முன்னோடி மாவட்டங்களுக்கான கார்பன்நீக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த மாவட்டங்கள் 2050-ம் ஆண்டுக்குள் (நான்கு மாவட்டங்களில்) திட்டமிடப்பட்ட உமிழ்வுகளில் 92% வரை குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. இதில், சுத்தமான எரிசக்தி தழுவல், சிறந்த இயக்க மாற்றம், மேம்பட்ட தொழில்துறை செயல்திறன் மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. 2050-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு சமமான கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுக்கும் ஆற்றலும் அவற்றுக்கு உண்டு.


இந்த நான்கு மாவட்டங்களுக்கான காலநிலை செயல் திட்டங்கள் மற்றும் கார்பன் நீக்க இலக்கு பாதைகள், வரலாற்று மற்றும் தற்போதைய காலநிலை தரவுகளின் அடிப்படையில் விரிவான காலநிலை மாறுபாடு மதிப்பீடு மற்றும் நூற்றாண்டின் இறுதிவரை மதிப்பீடுகளை முன்னிறுத்தி விரிவான மாவட்ட அளவிலான பசுமை இல்ல வாயு உமிழ்வு சரக்குகளை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வு என்னவென்றால், பசுமை இல்ல வாயுக்கள் நான்கு மாவட்டங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் தடையின்றி விடப்பட்டால், 2100-ம் ஆண்டுக்குள் வெப்பமான நாட்களின் எண்ணிக்கை சுமார் 95% கணிசமாக அதிகரிக்கும். மழைப்பொழிவும் கணிசமாக அதிகரிக்கும், இதனால் ஈரப்பதமான பருவமழை உருவாகும். இது குறிப்பாக பிராந்தியத்தை, பாதிக்கப்படக்கூடிய நீலகிரி மாவட்டத்தை பாதிக்கும்.


பொறுப்பான காரணிகள்


நீலகிரியில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரம் சாலைப் போக்குவரத்து ஆகும். அங்குள்ள மொத்த உமிழ்வில் இது சுமார் 43% பங்களிக்கிறது. கோயம்புத்தூரில், இது சுமார் 36% பங்களிக்கிறது. அதைத் தொடர்ந்து குடியிருப்பு எரிசக்தி பயன்பாடு அடுத்த முக்கிய ஆதாரமாகும். நீலகிரியில் 20% உமிழ்வும், கோயம்புத்தூரில் 12% உமிழ்வும் இது பங்களிக்கிறது. விருதுநகரில் சிமென்ட், சாலைப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை எரிசக்தி ஆகியவை அதிக பசுமை இல்ல வாயு வெளியேற்ற பங்களிப்பாளர்களாக உள்ளன. அவற்றின் பங்களிப்புகள் முறையே 37%, 20% மற்றும் 16% ஆகும். இராமநாதபுரத்தில், பொது மின்சார உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி (முறையே 28% மற்றும் 12%) ஆகியவை பங்களித்தன.


உமிழ்வுப் பாதைகளை அடிப்படையாகக் கொண்டு, திட்டங்கள் கார்பன் உமிழ்வின் முக்கிய இயக்கிகளை அடையாளம் காண்கின்றன. பின்னர் அவர்கள் 2025-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் உடனடியாகத் தொடங்கத் தயாராக உள்ள திட்டங்களின் (shovel-ready projects) பட்டியலை முன்மொழிகின்றனர். இந்தத் திட்டங்கள் மின்சார இயக்கம் (electric mobility), கழிவு மேலாண்மை (waste management), வன மறுசீரமைப்பு (forest restorations) மற்றும் தொழில்துறை கார்பன்நீக்கம் (industrial decarbonisation) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டப் பட்டியலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், மிதமான சூழ்நிலையில்கூட நீலகிரி மாவட்டம் 2030-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும். ராமநாதபுரம் ஒரு தீவிரமான சூழ்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும், இதற்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படும். கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகியவை அதிக தொழில்மயமாக்கப்பட்டவை என்பதால், 2055-ம் ஆண்டுக்குள் மட்டுமே நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும்.


இந்த அணுகுமுறை காலநிலை மாற்றத்தை ஒரு வரம்பாகக் கருதாமல், இயற்கையையும் மக்களையும் பாதுகாக்கும் வளர்ச்சியைத் தொடர ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் இதே போன்ற திட்டங்கள் விரைவில் தயாரிக்கப்படும்.


காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு என்பது ஒரு எளிய முன்மாதிரியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் எதையாவது அளவிடும்போது, ​​அதைச் செய்ய முடியும். இது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்படையான அமைப்பை உருவாக்குகிறது. இந்த அமைப்பு திட்டமிடல் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உதவுகிறது. இது ஒவ்வொரு மாவட்டமும் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அதன் உத்திகளை மேம்படுத்தவும் உதவுகிறது. நான்கு முன்னோடி மாவட்டங்களில் திறம்பட செயல்படுத்துவதை ஆதரிப்பதற்காக ஒரு தனித்துவ திட்ட மேலாண்மை பிரிவு அமைக்கப்படுகிறது. செயல் கண்காணிப்பு மற்றும் செயல் திட்டங்களை https://tnclimatetracker.tn.gov.in  எனும் இணையத்தளத்தில் அணுகலாம்.


பிற திட்டங்கள், சமூக கவனம்


தமிழ்நாடு பல முக்கிய முயற்சிகளைக் கொண்டுள்ளது. இதில் பெரிய அளவிலான காடு வளர்ப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். மாநிலத்தில் இப்போது ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்ட 20 சதுப்புநிலங்கள் உள்ளன. இது அதன் மொத்த நிலப்பரப்பில் 30%-ஐயும் பாதுகாத்துள்ளது. அதன் 1,068 கிலோமீட்டர் கடற்கரையில், தமிழ்நாடு பெரிய சதுப்புநில மற்றும் கடல்சார் மறுசீரமைப்பு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இந்த முயற்சிகள் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர வாழ்வாதாரங்களை ஆதரிக்கின்றன.


விவசாயம், கால்நடைகள் மற்றும் கழிவுகளை உள்ளடக்கிய எரிசக்தி மற்றும் தொழில்துறைக்கு அப்பால் கவனத்தை விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு அதன் குறைந்த கார்பன் மாற்றத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது.


சமூகங்கள் இந்த மாற்றத்தின் முக்கியக் கட்டமாக வைக்கப்பட்டு, காலநிலை நடவடிக்கைகளை ஒரு பங்கேற்பு செயல்முறையாக மாற்றுகின்றன. உள்ளூர் மற்றும் துணை உள்ளூர் மட்டங்களில் இன்று மேற்கொள்ளப்படும் தேர்வுகள் மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும். தமிழ்நாட்டின் அனுபவம், காலநிலை தலைமைத்துவம் என்பது இனி லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது பற்றியது அல்ல, மாறாக முன்னேற்றத்தைக் காணக்கூடிய, சரிபார்க்கக்கூடிய மற்றும் பங்கேற்புடன் கூடிய அமைப்புகளை உருவாக்குவது பற்றியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்தியா அதன் நிகர-பூஜ்ஜிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வருகையில், தமிழ்நாட்டின் மாதிரியானது, உள்ளூர் கண்டுபிடிப்புகள் மற்றும் சான்றுகள் சார்ந்த நிர்வாகம் மூலம் தேசிய நோக்கத்தை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதைக் காண்பிப்பதன் மூலம் ஒரு மதிப்புமிக்க திட்டத்தை இது வழங்குகிறது.


சுப்ரியா சாஹு, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆவார். ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி, வசுதா அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் ஆவார்.



Original article:

Share:

அவசர புதுப்பிப்பு : இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) குறித்து . . .

 இந்தியா தனது நுகர்வோர் விலைக் குறியீட்டை அவசரமாகத் திருத்த வேண்டும்.


அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கத் தரவு, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index(CPI)) புதுப்பிப்பு போதுமான அளவு வேகமாக நடக்காது என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் வெறும் 0.25% ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி 2012-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவு என்பதை தரவு காட்டுகிறது. முதலில், இது ஒரு செய்தியாகத் தெரிகிறது. ஆனால் இதை கவனமாகப் பார்த்தால், இந்த கடுமையான வீழ்ச்சி விலை நிலைகளில் உண்மையான வீழ்ச்சிக்கு பதிலாக ஒரு புள்ளிவிவர முரண்பாடு என்பதை வெளிப்படுத்துகிறது. உணவு மற்றும் பானங்கள் பிரிவில் அக்டோபரில் விலைகள் 3.7% குறைந்துள்ளன. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) தற்போதைய தொடரின் வரலாற்றில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இருப்பினும், இது குறைந்ததற்கு முக்கியக் காரணம் உணவு விலைகள் மலிவாக மாறியதால் விலைகள் குறையவில்லை, மாறாக கடந்த ஆண்டு அக்டோபரில் உணவுப் பணவீக்கம் 9.7%-ஆக இருந்தது. இந்த உயர் அடிப்படை, சந்தைகளில் காய்கறி விலைகள் சமீபத்தில் அதிகரித்து வந்தாலும், அக்டோபர் 2025-ல் உணவுப் பணவீக்கம் எதிர்மறையாக இருப்பதை உறுதி செய்தது. உணவு மற்றும் பானங்கள் பிரிவு ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீட்டில் கிட்டத்தட்ட 46% தன்மையை கொண்டுள்ள நிலையில், உணவு பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த புள்ளிவிவர முரண்பாடு முழுக் குறியீட்டையும் கீழே இழுத்ததற்கு காரணமாக அமைந்தது. உண்மையில், எரிபொருள் மற்றும் மின்பொருட்கள், வீட்டுவசதி, புகையிலை மற்றும் இதர பிரிவுகள் என கிட்டத்தட்ட அனைத்து முக்கிய துணைப் பிரிவுகளிலும் பணவீக்கம் கடந்த ஆண்டைவிட இந்த அக்டோபரில் அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் தாக்கம் இதுவரை ஆடை மற்றும் காலணி பிரிவில் மட்டுமே காணப்பட்டது. உணவுப் பொருட்களைத் தவிர பணவீக்கம் கடந்த ஆண்டைவிடக் குறைவாக இருந்த ஒரே பிரிவு இதுதான். இவை அனைத்தும் பணவீக்க அளவீடு எவ்வளவு சாய்வாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது 2012-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டிருப்பதால் பழமையானது மட்டுமல்ல, மதிப்பீடுகள் இப்போது சரியானவை இல்லை; அவை தெளிவுபடுத்துவதைவிட அடிக்கடி குழப்பம் தருகின்றன. CPI மற்றும் உண்மை வாழ்க்கை இடையிலான இந்த விலகலை, செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கணிப்பு பணவீக்க விகிதம் 7.4% என்று கூறியிருந்தது என்பதன் மூலம் இது CPI அறிக்கையிடும் அளவை விட மிகவும் வேறுபட்டது என சிறப்பாகப் புரிந்துகொள்ளலாம்.


இந்த அவசர புதுப்பிப்புக்குப் பிறகு, அளவிடப்பட்ட பணவீக்கத்திற்கும் மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதற்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் மட்டுமல்ல, வட்டி விகிதங்களை என்ன செய்வது என்று தீர்மானிக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) அதன் அளவுகோலாகப் பயன்படுத்துவதாலும் இது அமைகிறது. விகிதங்களை அப்படியே வைத்திருக்க வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய இந்தக் குழு டிசம்பரில் கூடும். ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் ஏற்பட்ட தற்காலிகத் தேவை அதிகரிப்பால் தெளிவற்ற வளர்ச்சித் தரவுகளுடன் இது போராட வேண்டியிருக்கும். புள்ளிவிவர முரண்பாடுகளால் சூழப்பட்ட பணவீக்கத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்வது துல்லியமான கொள்கை வகுப்பை மிகவும் கடினமாக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) புதிய தொடர் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தயாராக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவு சிறந்தது.



Original article:

Share:

தமிழ்நாட்டின் சீர்திருத்தங்கள் திருநங்கைகளின் சுகாதாரப் பராமரிப்பை மாற்ற முடியுமா? -ராஜலட்சுமி ராம்பிரகாஷ்

 தமிழ்நாடு உள்ளடக்கிய, உரிமை அடிப்படையிலான சுகாதார அமைப்பை உருவாக்குவதில் என்ன படிப்பினைகளை வழங்குகிறது?


தற்போதைய செய்தி:


ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டின் முக்கிய கொள்கையான “எவர் ஒருவரும் விடுபடக் கூடாது (Leave no one behind)”, மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்த அரசாங்கங்களை வலியுறுத்துகிறது. இருப்பினும், திருநங்கைகள் மலிவு விலையில் தரமான சுகாதாரப் பராமரிப்பை பெறுவதில் குறிப்பிடத்தக்க தடைகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். சுகாதாரம், கண்ணியம் மற்றும் சமூக உரிமைகளை மதிக்கும் பொது சுகாதாரக் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களை உருவாக்குவதன் மூலம், சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் தமிழ்நாடு ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளது.


திருநங்கைகள் ஏன் சுகாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றனர்?


திருநங்கைகள் பல்வேறு, ஒன்றுடன் ஒன்று இணைந்த தடைகளை எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, திருநங்கை சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற மருத்துவ வழங்குநர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்; அவர்கள் பெரும்பாலும் பால்வினை நோய்கள் அல்லது பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைகள் மட்டுமே கையாள அனுமதிக்கப்படுகின்றனர். இது வாழ்நாள் முழுவதுமான விரிவான சுகாதாரத் தேவைகளை புறக்கணிக்கிறது. இரண்டாவதாக, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து முறையாக விலக்கப்படுவதால் பலருக்கு நிலையான வருமானம் அல்லது காப்பீடு இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, சுகாதார அமைப்புகளில் களங்கம் மற்றும் பாகுபாடு, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான குறைந்த விழிப்புணர்வு ஆகியவை தேவையற்ற சுகாதாரச் சூழலை உருவாக்கி, சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்க செய்து விடுகின்றன. இதன் விளைவாக, பல திருநங்கைகள் மருத்துவ உதவியை பெற அதிக நேரம் காத்திருக்கிறார்கள் அல்லது மருத்துவ உதவி பெறுவதை முற்றிலும் தவிர்க்கின்றனர்.


தமிழ்நாடு என்ன செய்தது?


திருநங்கைகளை உள்ளடக்கிய சுகாதாரப் பராமரிப்பில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. 2008-ஆம் ஆண்டு முதல், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, இந்தியாவின் முதல் திருநங்கை நல வாரியத்தின் ஆதரவுடன் பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகளை வழங்கி வருகிறது. 2019 திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், மாநிலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு அரசு மருத்துவமனையில் இத்தகைய சேவைகளை கட்டாயமாக்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு தொடங்கியது. சமூகத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாட்டின் தேசிய சுகாதார இயக்கம் 2018ஆம் ஆண்டில் பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகளை (Gender Guidance Clinics (GGCs)) அமைத்தது. ஒரே இடத்தில் பல்வேறு வகையான பராமரிப்புகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டில், 8 மாவட்டங்களில் பாலினத்தை உறுதிப்படுத்தும் இலவச நடைமுறைகளை வழங்கும் பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகள் உள்ளன. ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2024 வரை, 7,644 திருநங்கைகள் இந்த மருத்துவமனைகளைப் பயன்படுத்தினர். பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், நோயாளிகளை மரியாதை, நியாயம், தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவுப்படுத்துகிறது.


தமிழ்நாடு காப்பீட்டுத் திட்டத்தை எவ்வாறு விரிவுபடுத்தியுள்ளது?


தமிழ்நாடு 2022-ஆம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS-PMJAY)) பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சையை ஒருங்கிணைத்துள்ளது. முன்னர் மருத்துவமனை பட்ஜெட்டுகள் மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த சேவைகள் இப்போது யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் ஐந்தாண்டு (2022ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுவரையிலான) கொள்கையின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அனைவருக்குமான சுகாதார காப்பீட்டில் திருநங்கை பராமரிப்பை உள்ளடக்கிய முதல் தெற்காசிய நாடாக இந்தியா திகழ்கிறது. மத்திய அரசின் 2022ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆயுஷ்மான் பாரத் TG பிளஸ் திட்டம் (PMJAY-Ayushman Bharat TG Plus scheme) 50-க்கும் மேற்பட்ட இலவச நடைமுறைகளை வழங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டின் திட்டம், இப்போது 4-வது ஆண்டில், மிகவும் மேம்பட்டதாக உள்ளது.


சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, மாநில அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS-PMJAY)) சேர்க்கைக்கானஆண்டு வருமான வரம்பான ₹72,000-ஐ நீக்கியது. சவால்கள் பணத்திற்கு அப்பாற்பட்டவை, களங்கம், பாகுபாடு மற்றும் குடும்ப நிராகரிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, திருநங்கைகள் தங்கள் பெயரில் குடும்ப அடையாள அட்டை இல்லாமல் இந்தத்திட்டத்தில் சேர அனுமதித்தது.  வரவிருக்கும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 5,200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் 12 பொது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் அல்லது ஹார்மோன் சிகிச்சைகளை செய்து கொண்டனர். இந்தத் திட்டத்திற்கு ரூ.43.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இது பல திருநங்கைகளுக்கு விலையுயர்ந்த தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிக மருத்துவக் கட்டணங்களைத் தவிர்க்க உதவுகிறது.


கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இந்த மாதிரியை எவ்வாறு வலுப்படுத்தியுள்ளன?


2019-ஆம் ஆண்டு திருநங்கைகள் சட்டம் (பிரிவு 15) விரிவான சுகாதாரப் பராமரிப்பை கட்டாயமாக்குகிறது. மேலும் தமிழ்நாடு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அக்டோபர் 2024-ல், தேசிய சுகாதார இயக்கம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பால் புதுமையினர் (LGBTQIA+) வலையமைப்புகளுடன் இணைந்து, உலக திருநங்கைகள் சுகாதார தரநிலைகள் பராமரிப்புக்கான தொழில்முறை சங்கம், பதிப்பு 8-ல் பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தது.


திருமணம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதமாற்ற சிகிச்சை மற்றும் பாலினங்களுக்கு இடையேயான அறுவை சிகிச்சைகளைத் தடை செய்தல், கோவிட்-க்குப் பிறகு பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகளை மீண்டும் திறப்பது, காவல்துறை துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் சமூகத்தில் பழக்கவழக்கக் குறைபாடுகளை குறைத்தல் போன்ற தீர்ப்புகள் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் திருநங்கைகளின் உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மனநலப் பராமரிப்புக் கொள்கை (Tamil Nadu Mental Health Care Policy) மற்றும் 2025 திருநங்கைகளுக்கான மாநிலக் கொள்கை ஆகியவை சுகாதாரம், கல்வி மற்றும் சொத்துரிமைகளை மேலும் உறுதிப்படுத்துகின்றன.


தமிழ்நாடு ஏன் தனித்து நிற்கிறது?


பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் - உலகளாவிய சுகாதாரத்திற்கான சர்வதேச நிறுவன ஆய்வு, தமிழ்நாட்டின் முன்னேற்றம் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஆதரவான சூழலிலிருந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சுயமரியாதை மற்றும் சமூக சமத்துவக் கொள்கைகளில் உறுதியாக உள்ள மாநிலம், பரவலான பாலின மற்றும் சாதி பாகுபாட்டை தீவிரமாக எதிர்கொண்டாலும், தொடர்ந்து மாற்றத்தக்க சமூக சீர்திருத்தங்களுக்கான முக்கிய இடமாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவிலிருந்து, பாலியல் மற்றும் பாலின பன்முகத்தன்மை கொண்ட நபர்களுக்கு மரியாதைக்குரிய தமிழ் சொற்களை ஏற்றுக்கொண்ட 2022 அரசு இதழில் சமீபத்திய வெளியீடு வரை, திருநங்கை அடையாளங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் போட்டிகள் இருந்தபோதிலும், இரு முக்கிய அரசியல் கட்சிகளும் திருநங்கை சமூகத்தை ஆதரிப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.


என்ன சவால்கள் உள்ளன?

திருநங்கைகளை உள்ளடக்கிய சுகாதாரப் பராமரிப்புக்கு தமிழ்நாடு ஒரு அளவுகோலை நிர்ணயித்திருந்தாலும், சவால்கள் இன்னும் உள்ளன.


விரிவான முதன்மை முதல் மூன்றாம் நிலை பராமரிப்பு வழங்குவதற்கும், பிரத்யேக சுகாதார கையேட்டை வெளியிடுவதற்கும், மருத்துவர்களின் திறன்களை தொடர்ந்து உருவாக்குவதற்கும், அவர்களை பொறுப்புணர்வாக இருக்க வைப்பதற்கும், "அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நன்மை அளிக்கக்கூடிய தொகுப்புகளில் மனநலத்தை படிப்படியாகச் சேர்ப்பதற்கும், குறைதீர்க்கும் வழிமுறைகளை நிறுவுவதற்கும், ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பல்வேறு துறைகள் வழியாக சமூக சார்புகளை எதிர்கொள்வதற்கும் பாலின வழிகாட்டுதல் மருத்துவமனைகள் (Gender Guidance Clinics (GGCs)) விரிவடைய வேண்டும். திருநங்கை சமூகங்களை அவர்களுக்கான சுகாதாரத் திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஈடுபடுத்துவது அவசியம்.


தொடர்ச்சியான முயற்சியும் அர்ப்பணிப்பும் மட்டுமே தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய மாதிரியை திருநங்கைகளுக்கான நீடித்த சமத்துவமாக மாற்றும்.


ராஜலட்சுமி ராம்பிரகாஷ், பிஎச்டி, உலகளாவிய சுகாதார ஆராய்ச்சியாளர், சுகாதாரக் கொள்கை அமைப்புகள் மற்றும் பாலின சமத்துவத்தின் குறுக்குவெட்டுகளில் சிறப்பு ஆர்வம் கொண்டவர்.



Original article:

Share: