பூமியின் பழமையான சுற்றுச்சூழல் அமைப்புகளான மழைக்காடுகள், காலநிலை இலக்குகளுக்கு எவ்வாறு முக்கியமானவை? -அபினவ் ராய்

     வெப்பமண்டல காடுகள் (Tropical forests) வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும், நீர்நிலைகளைப் பாதுகாக்கும், பிராந்திய காலநிலைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் பல நூற்றாண்டுகளாக அதிக அளவு கார்பனைச் சேமிக்கும் முக்கிய பல்லுயிர் பகுதிகளாகும் (biodiversity regions). வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility (TFFF)) போன்ற முயற்சிகள் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதுகாக்க முயல்கின்றன?


இந்தியாவின் காற்று மாசுபாடு மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலைகளில் (public health emergencies) ஒன்றாக மாறி வரும் நிலையில், சர்வதேச காலநிலை நிதி குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) என்ற யோசனை ஒரு அரிய மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாகத் தோன்றுகிறது.


ஆனால், வெப்பமண்டல (tropical) அல்லது துணை வெப்பமண்டல மழைக்காடுகள் (subtropical rainforests) என்றால் என்ன?, காடழிப்பு விகிதத்துடன் நிதி ஆதரவை இணைப்பதன் மூலம் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (TFFF) எவ்வாறு காலநிலை தணிப்பை ஆதரிக்கிறது? மேலும் பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையத்தை (TFFF) மிகவும் பயனுள்ளதாக்க முடியுமா? இந்தக் கேள்விகளை ஆராய்வோம்.


வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) மற்றும் அதன் முக்கியத்துவம்


வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையத்தின் (TFFF) யோசனை முதன்முதலில் துபாயில் COP28  பிரேசில் மாநாட்டில் முன்மொழியப்பட்டது மற்றும் கடந்த மாதம் பெலெமில் COP30 மாநாட்டில் முறையாகத் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி 70-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல வன நாடுகளுக்கு (Tropical Forest Countries (TFC)) நீண்டகால, செயல்திறன் அடிப்படையிலான நிதி ஆதரவை வழங்கும். இதன் மூலம் 1 பில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் அவற்றின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான பரந்த இலைக் காடுகளை (tropical and subtropical moist broadleaf forest (TSMBF)) பராமரித்து மீட்டெடுப்பதற்கு உதவும்.


இருப்பினும், 0.5% அல்லது அதற்கும் குறைவான காடழிப்பு விகிதத்தைக் கொண்ட வெப்பமண்டல வன நாடுகளுக்கு (TFC) மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த முயற்சி 125 பில்லியன் டாலர் மூலதனத் தளத்தை அடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், காடழிப்பு மற்றும் பேரழிவுக்கு சரி செய்த பிறகு, வெப்பமண்டல வன நாடுகள் (TFC) ஏற்கனவே உள்ள காடுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு $4 என்ற நிலையான வருடாந்திர கட்டணத்தைப் பெறும்.

பெறப்பட்ட மொத்த நிதியளவும் குறைந்தது 20 சதவீதம் இந்தக் காடுகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு (Indigenous Peoples and Local Communities (IPLC)) செலவிடப்படும். இந்த சமூகங்கள் உலகின் மீதமுள்ள அப்படியே உள்ள காடுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை (54 சதவீதம்) வைத்திருக்கின்றன. அவர்கள் உலகின் 28 சதவீத நிலத்தை நிர்வகிக்கிறார்கள் அல்லது சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்டுள்ளனர். இந்த நிலம் பூமியின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 40% ஐ உள்ளடக்கியது. மேலும், அவை நல்ல சுற்றுச்சூழல் நிலையில் உள்ளன.


கார்பன் உறிஞ்சும் வெப்பமண்டல காடுகள்


வெப்பமண்டல மழைக்காடுகள் 23.5°வடக்கு (கடகரேகை) மற்றும் 23.5°தெற்கு (மகரரேகை) அட்சகோடுகளுக்கு இடையில் அமைந்துள்ளன. உலகளவில், இவற்றின் பரப்பளவு மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, நியூ கினியா தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

இந்தியாவில், வெப்பமண்டல மழைக்காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகள், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் குழுக்கள், அசாமின் மேல் பகுதிகள் மற்றும் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. சில சமயங்களில் இன்னும் உயரமாக வளரும். இந்தப் பகுதி வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், தாவரங்கள் மரங்கள், புதர்கள் மற்றும் கொடிகள் உள்ளிட்ட பல அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளன.


குறிப்பாக, வெப்பமண்டல காடுகள் உலகின் முக்கிய பல்லுயிர் மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும். அவை மக்களின் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன. ஒளிச்சேர்க்கை, நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய காலநிலைகளை ஒழுங்குபடுத்துதல் மூலம் கார்பன் பிரித்தெடுப்பதற்கு அவை மிகவும் முக்கியமானவை. வெப்பமண்டல காடுகள் நீண்ட காலத்திற்கு கார்பனை சேமிக்கின்றன. அவை இந்த கார்பனை பல நூற்றாண்டுகளாக வைத்திருக்க முடியும்.


அமேசான் மழைக்காடுகள்


தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் (6.7 மில்லியன் சதுர கி.மீ) உலகின் அனைத்து வெப்பமண்டல மழைக்காடுகளிலும் சுமார் 40 சதவீதத்தையும், அதன் நிலப்பரப்பு பல்லுயிர் பெருக்கத்தில் 25 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 47 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 2.2 மில்லியன் பேர் சுமார் 300 வெவ்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவர்.

மேலும், அமேசான் மழைக்காடுகளில் சுமார் 150-200 பில்லியன் டன் கார்பன் சேமிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள் நீராவிப்போக்கு மூலம் ஒவ்வொரு நாளும் 20 பில்லியன் டன் தண்ணீரை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. இந்த செயல்முறை பிராந்திய மற்றும் உலகளாவிய கார்பன் மற்றும் நீர் சுழற்சிகளை நிலைநிறுத்த உதவுகிறது.


காங்கோ படுகை (Congo Basin) அல்லது 'ஆப்பிரிக்காவின் நுரையீரல்' (lungs of Africa)


இதேபோல், காங்கோ படுகை உலகின் இரண்டாவது பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளைக் (tropical rainforest) கொண்டுள்ளது. இது 'ஆப்பிரிக்காவின் நுரையீரல்' (lungs of Africa) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படுகை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இயற்கை கார்பன் மூழ்கியாகும். இது ஒவ்வொரு அமேசான் மழைக்காடுகளை விட அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுகிறது.


காங்கோ படுகையின் காடுகள் 90.9 பில்லியன் டன்களுக்கு மேல் கார்பனை சேமித்து வைத்துள்ளன. இந்த அளவு எரிசக்தித் துறையிலிருந்து (energy sector) ஆண்டுதோறும் உலகளாவிய CO₂ வெளியேற்றத்தை விட பத்து மடங்கு அதிகம். 2020-ம் ஆண்டில், இந்தக் காடுகள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகள் ஆண்டுக்கு $1.15 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டன.


இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்


இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வெப்பமண்டல மழைக்காடுகள் உலகின் எட்டு பல்லுயிர் பெருக்க 'வெப்பமான முக்கிய இடங்களில்' (hottest hotspots) ஒன்றாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு தரவு பட்டியலில் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என பட்டியலிடப்பட்டுள்ள குறைந்தது 325 உயிரினங்களுக்கு அவை தாயகமாக உள்ளன. அதன் உள்ளூர் தன்மை காரணமாக, அதாவது, பூமியில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு தாயகமாக இருப்பதால், இப்பகுதி உலகளவில் முக்கியமானதாக உள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிட்டத்தட்ட 650 மர சிற்றினங்கள், இருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை காட்டுகிறது. இவற்றில், 352 சிற்றினங்களில் 54% உள்ளூர் இனங்கள் ஆகும். இப்பகுதியில், 179 நீர்நில வாழ்வன சிற்றினங்களில் 65% உள்ளூர் வாழ் உயிரினங்கள். 157 ஊர்வன சிற்றினங்களில் 62% உள்ளூர் வாழ் உயிரினங்கள், மற்றும் 219 மீன் சிற்றினங்களில் 53% உள்ளூர் வாழ் உயிரினங்கள் அடங்கும்.


மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் கிட்டத்தட்ட 650 மர இனங்களில், 352 (54%) உள்ளூர், நீர்வீழ்ச்சிகள் (179 இனங்கள் வரை, 65% உள்ளூர்), ஊர்வன (157 இனங்கள், 62% உள்ளூர்) மற்றும் மீன்கள் (219 இனங்கள், 53% உள்ளூர்) என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்திய பருவமழையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்திய பருவக்காற்றை பாதிக்கின்றன. அவை ஒரு தடையாகச் செயல்பட்டு மழை பெய்யும் தென்மேற்குப் பருவக்காற்றை இடைமறிப்பதன் மூலம் மழைப்பொழிவைப் பாதிக்கின்றன.


பல சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவற்றைச் சார்ந்திருப்பதால், இந்தக் காடுகள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆதரிக்கின்றன. சுற்றுச்சூழல் செயல்பாடுகளைத் தவிர, அவை எரிபொருள் விறகு, மரக்கட்டைகளை வழங்குகின்றன, மண் வளத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மண் அரிப்பைத் தடுக்கின்றன.


பழங்குடி மக்கள் நிலத்தைப் பாதுகாக்கும் இடங்களில் காடழிப்பு முறையானது கடுமையாகக் குறைகிறது. அமேசான் பிராந்தியத்தில் சுமார் 23 சதவீதம் பூர்வீக பிரதேசமாகும். இதில் பெரும்பகுதி பழைய மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த காடுகள் கணிசமான அளவு கார்பன்-டை-ஆக்சைடை சேமித்து வைக்கின்றன. பிரேசிலிய அமேசான் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற காடழிப்பு காரணமாக அதன் பரப்பளவில் 5,000 சதுர கி.மீ.க்கும் அதிகமாக இழந்து வருகிறது. இருப்பினும், பழங்குடி மக்களால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காடழிப்பானது பாதுகாப்பற்ற பகுதிகளை விட 80 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.


எடுத்துக்காட்டாக, அஷானின்கா பழங்குடியினரின் (Ashaninka tribe) அமோனியா பிரதேசத்தில், சுமார் 0.03 சதவீத பரப்பளவு நிலம் மட்டுமே காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மற்ற பிராந்தியங்களுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்படுகிறது. கயாபோ மற்றும் யனோமாமி போன்ற பழங்குடியினர் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நில அபகரிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் அரசாங்கங்களிடமிருந்து தங்கள் நிலங்களின் மீது சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்றனர். செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும்போது, ​​இந்த பூர்வீக நிலங்கள் பச்சைத் தீவுகள் போலத் தெரிகின்றன. ஏனெனில், அவை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பெரிய அளவிலான காடழிப்புக்கு எதிராக அவை வலுவான தடைகளாகச் செயல்படுகின்றன.


கோண்ட் சமூகம் (Gond community) 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியப் பழங்குடி மக்களில் ஒன்றாகும். முக்கியமாக மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் உயிர் வாழ்விற்காக காடுகளை நம்பியுள்ளனர். சமீபத்தில், தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் தங்கள் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்த முடிவு செய்தனர். அதற்கு பதிலாக மரங்களைக் காப்பாற்றவும், அவற்றின் புனித சூழலைப் பாதுகாக்கவும் தங்கள் இறந்தவர்களை புதைக்கும் முறையை  தேர்ந்தெடுத்துள்ளனர்.


காலநிலை பேச்சுவார்த்தைகள் தகவமைப்பு உத்திகளை வலியுறுத்துவதால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வெற்றிகரமான பாதுகாப்பு நடைமுறைகள், வேறு இடங்களில் பிரதிபலிக்கக்கூடிய மதிப்புமிக்க மாதிரிகளை வழங்குகின்றன.


வன இழப்பைக் கட்டுப்படுத்துதல்


குளோபல் வன ஆய்வு அறிக்கை-2024 (Global Forest Watch (GFW)), மொத்த வெப்பமண்டல காடுகளின் இழப்பில் சுமார் 50 சதவீதத்தை காட்டுத்-தீ ஏற்படுத்தியதாகவும், 6.7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. 2024-ம் ஆண்டானது உலகளவில் பதிவான வெப்பமான ஆண்டாகவும் இருந்தது. மேலும், எல்-நினோவின் இருப்பு இந்த காட்டுத் தீயை மேலும் தீவிரப்படுத்தியது.  இதனால், இதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாகிவிட்டது.


வன இழப்புக்கான பிற முக்கிய காரணங்கள், வணிக ரீதியான மற்றும் மாற்று சாகுபடி ஆகிய இரண்டும் கொண்ட விவசாய நடைமுறைகளாகும். கிளாஸ்கோவில் நடந்த COP26 (2021) மாநாட்டில், 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் 2030-ம் ஆண்டுக்குள் வனஇழப்பை (forest loss) நிறுத்தி, மாற்றியமைக்க உறுதியளித்தனர். இருப்பினும், சமீபத்திய மதிப்பீடுகள் உலகம் இந்த இலக்கை சரியான நேரத்தில் அடையத் தவறிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.


எனவே, காலநிலை மாற்ற தாக்கங்களைத் தணிப்பதிலும், நமக்கு முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதிலும் அவற்றின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்தக் காடுகளைப் பாதுகாப்பதற்கு பகிரப்பட்ட உலகளாவிய முயற்சிகள் தேவை. வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) போன்ற முயற்சிகளை வலுப்படுத்துவது உலகளாவிய வன வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காக இருக்கும்.


மேலும், எதிர்கால விவசாயக் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்தல், நிலையான வேளாண் காடுகளை ஊக்குவித்தல், மனிதனால் ஏற்படும் காட்டுத் தீயைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும்.


அபினவ் ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் புவியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.


Original link:

How rainforests, Earth’s oldest ecosystems, are critical to climate goals?


Share:

சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையின் அடித்தளத்தை அகற்றுதல் -சுஹ்ரித் பார்த்தசாரதி


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் ஓர் அமைப்புக்கு, வனசக்தி பற்றிய உச்சநீதிமன்றத்தின் மறுஆய்வு ஒரு  கவலையளிக்கும்  பின்னோக்கிய நடவடிக்கையாகும்.


நவம்பர்  மாதம் 18-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு, இந்திய  வணிக நில நிறுவனங்களின் கூட்டமைப்பு (Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI)) vs வனசக்தி வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் 2:1 பெரும்பான்மை தீர்ப்பின் மூலம், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை சட்டவிரோதமானது என அறிவித்த தனது மே மாதத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய அந்தத் தீர்ப்பு, நீதிமன்றத்தின் கடுமையான சொற்களைக் கண்டிப்பான நடவடிக்கையாக மாற்றியதால் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது, நீதிபதி உஜ்ஜல் பூயனின் கடுமையான மாற்றுக்கருத்துடன், நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பு முக்கியமான முன்மாதிரிகளை தவறாகப் புரிந்துகொண்டதாகவும், பின் தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் சில சமயங்களில் பொது நலனுக்குப் பயன்படும் என்பதை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுகிறது.


இந்த நடவடிக்கை எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது என்று முதலில் நாம் ஆச்சரியப்படலாம். இதற்கு நீதிமன்றம் ஒரு சுழல் தர்க்கத்துடன் பதிலளிக்கிறது. அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்துப்படி, பின்னோக்கிய அனுமதிகளை முற்றிலும் மறுப்பது பொது நலனைப் பாதிக்கலாம் என்று தெரிவித்தார். ஏனெனில், இது அனுமதியின்றி தொடங்கி கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தவோ அல்லது இடிக்கவோ அரசாங்கத்தை கட்டாயப்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளார்.  இந்த வழியில், சட்டவிரோதச் செயலே அதை பின்னர் அங்கீகரிப்பதற்கான காரணமாக மாறுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அந்த மீறலை அனுமதி பெறுவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றை, அது சட்டத்தை மீறினாலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் விதிகள் நெகிழ்வானதாக மாற்றப்பட்டுள்ளன.

நியாயமான தீர்ப்பை ரத்து செய்தல்


சுமார் ஐம்பது ஆண்டுகளாக, உச்ச நீதிமன்றம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமையை வலுவாக ஆதரித்து வருகிறது. பல தீர்ப்புகளில், இந்த உரிமையை, வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 21-உடன் இணைத்துள்ளது. சுற்றுச்சூழல் அபாயங்கள் நிச்சயமற்றதாக இருந்தாலும் கூட அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாட்டை நீதிமன்றம் ஒரு கட்டாய விதியாக கருதியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் இரண்டையும் பாதிக்கிறது என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிரான உரிமையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், தலைமுறைகளுக்கு இடையிலான சமபங்கு மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றை அரசியலமைப்பு மதிப்புகளாகவும் எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய பிரகடனங்கள் பெரும்பாலும் மிகவும் உயர்வானதாக இருந்ததால், இந்த சட்டப்பகுதியானது நீதிமன்றத்தின் மிகவும் முற்போக்கான சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், சுருக்கமான கோட்பாடுகள் நம்மை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இட்டுச் செல்லும் என்பதால் நிஜ உலகின் மீறல்களுக்கு அவை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தப்படாவிட்டால், அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்


இதை விடவும் கவலைக்குரியது என்னவென்றால், நீதிமன்றம் தனது சொந்த, நல்ல காரணத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தானே மாற்றியமைக்கும்போது அனைத்தும் சிதைந்து போகின்றன. CREDAI அமைப்பு குறித்த தீர்ப்பில் உள்ள கவலை இதுதான். அது விதிகளை மீறுவதைத் தண்டிப்பதற்குப் பதிலாக, விவாதிக்கக்கூடிய ஒன்றாக மாற்றிவிடுகிறது, அவ்வாறு செய்வதன் மூலம், அது சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையின் அடிப்படையையே பலவீனப்படுத்துகிறது.


இதன் முக்கியக் கூறு என்னவென்றால், இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள் சில பெரிய அல்லது குறிப்பிட்ட தொழில்துறை மற்றும் வளர்ச்சிக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்குகின்றன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environment Impact Assessment (EIA)) விதிகள் 2006-ஆம் ஆண்டு முதலில் கடுமையான தேவைகளை அமல்படுத்தியது.  2017-ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேலையைத் தொடங்கிய அல்லது அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிய திட்டங்கள், மார்ச் மாதம் 14-ஆம் தேதி, 2017-ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள், முன்தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது. பின்னர், 2021-ஆம் ஆண்டில், அமைச்சகம் ஒரு புதிய 'நிலையான செயல்பாட்டு நடைமுறையுடன்' (Standard Operating Procedure - SOP) ஒரு "அலுவலக குறிப்பாணையை" வெளியிட்டது. இது 2017-ஆம் ஆண்டின் காலக்கெடுவைத் தவறவிட்ட திட்டங்கள் கூட அபராதம் மற்றும் பிற செலவுகளைச் செலுத்தி சீரமைக்கப்பட  அனுமதி அளித்தது. ஆனால், இவை இரண்டும் தற்போது நீர்த்துப்போகும்படியாகச் செய்யப்பட்டுள்ளன.


அசல் தீர்ப்பின் அடிப்படை


நீதிபதி ஏ.எஸ். ஓகா அவர்களின் தீர்ப்பு, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டின் இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு அடிப்படைத் தத்துவங்களுக்குத் திரும்பி, இந்தப் பிரச்சினையை இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டத்தின் பெரிய வரலாற்றில் வைத்தது. இது ஸ்டாக்ஹோம் மாநாடு (1972) முதல் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் (1986) வரையிலும், பின்னர் 1994ஆம் ஆண்டு மற்றும் 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) விதிகள் வரையிலும் உள்ள நிகழ்வுகளை இணைத்தது. இவை அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டனவே தவிர, மீறல்களுக்கு மன்னிப்பு வழங்கவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance - EC) பெறுவது என்பது வெறும் சடங்கு அல்ல; அது சட்டத்தின் ஒரு முக்கியப் பகுதி என்று இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது. எந்தவொரு திட்டமும் தொடங்குவதற்கு முன், நிரந்தர சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்காக, பொது விசாரணை, அறிவியல் ஆய்வுகள், நிபுணர் மதிப்பாய்வுகள் மற்றும் நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல்கள் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையில் அடங்கும். முன்கூட்டிய சுற்றுச்சூழல் அனுமதி (EC) ஒரு திட்டம் சூழலியல் எல்லைகளுக்குள் சாதியமா என்பதைச் சரிபார்க்கிறது மற்றும்

பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.


முந்தைய தீர்ப்பு, முக்கிய கடந்தகால முடிவுகளை நம்பியிருந்தது, எடுத்துக்காட்டாக, காமன் காஸ் vs இந்திய ஒன்றியம் (Common Cause vs Union of India) (2017), அதில் நீதிமன்றம் ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிப்பது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும், மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெளிவாகக் கூறியது. மேலும், சுரங்க குத்தகை புதுப்பித்தலுக்குக் கூட முன்கூட்டியே ஒப்புதல் தேவை என்று வலியுறுத்திய எம்.சி. மேத்தா (M.C. Mehta cases) வழக்குகளையும் அது மேற்கோள் காட்டியது. வேலை தொடங்குவதற்கு முன் சட்டம் அறிவியல் சோதனைகளைக் கோரினால், அத்தகைய சோதனைகள் இல்லாமல் கட்டப்பட்ட திட்டங்களை பின்னர் பின்தேதியிட்ட அனுமதி மூலம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது


நீதிபதி ஓகா, ஒன்றிய அரசின் செயல்முறையையும் எடுத்துரைத்தார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள முன்தேதியிட்ட ஒப்புதல்களுக்கு அனுமதிக்கும் விதியானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அரசு வழக்கறிஞர்கள் தெளிவாக உறுதியளித்தனர். இந்த உறுதிமொழி அதிகாரப்பூர்வமாகப் பதியப்பட்டு நீதிமன்றத்தால் நம்பப்பட்டது. எனவே, அரசு தனது சொந்த உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டின் குறிப்பாணையோ இதற்கு நேரெதிராகச் செயல்பட்டது. அதாவது, காலக்கெடுவைத் தவறவிட்டவர்களும் முன்தேதியிட்ட ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில், விதிகளை அரசு தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.


துரதிர்ஷ்டவசமாக, மறுஆய்வுத் தீர்ப்பு இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு, ஒரே ஒரு குறுகிய கேள்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: முன்கூட்டிய ஆய்வைச் செயல்படுத்துவது ஏற்கனவே சட்டத்தை மீறியவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துமா? இதைச் செய்வதன் மூலம், சட்டக் கொள்கையிலிருந்து வசதிக்கு கவனத்தை மாற்றுகிறது. இது தெளிவான பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கை என்று நீதிபதி பூயன் கூறுகிறார்.


பெரும்பான்மை நீதிபதிகளின் அணுகுமுறையில் உள்ள பல முரண்பாடுகளை மாற்று நீதிபதியின் மாறுபட்ட கருத்து சுட்டிக் காட்டுகிறது. முந்தைய தேதியிட்ட சுற்றுச்சூழல் அனுமதிகளை நிராகரிப்பதற்கான முக்கிய காரணம், சட்டங்கள் தீங்கைத் தடுப்பதற்காகவே உள்ளனவே தவிர, அதிலிருந்து தப்பிக்க உதவுவதற்கு அல்ல என்பதை அது வலியுறுத்துகிறது. தவறு நிகழ்ந்த பிறகு விதிவிலக்கு காட்டுவது, நீதிமன்றம் பல ஆண்டுகளாகக் கட்டமைத்த பாதுகாப்புகளைப் பலவீனப்படுத்துகிறது.


சட்டத்தை மீறுவதால் ஏற்படும் விளைவுகளைப் போக்க முடியும் என்றால், அதற்குக் கட்டுப்படுவதற்கான தூண்டுதல் எதுவும் இருக்காது. திட்ட உருவாக்குநர்கள், அரசு மற்றும் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக அபராதங்கள் மூலம் தங்கள் மீறல்களைச் சாதாரணமாக ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன், சுற்றுச்சூழல் அனுமதி (EC) இல்லாமலேயே தங்கள் பணிகளைத் தொடரலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்கின்றனர். அடிப்படையில், சட்டவிரோதச் செயல்கள் வெகுமதி அளிக்கப்படுகின்றன. மேலும், இந்தத் தவறு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறது என்ற காரணத்தைக் கொண்டே சட்டம் வளைக்கப்பட வேண்டும் என்ற நியாயப்படுத்துதலும் முன்வைக்கப்படுகிறது.


இந்த மறுஆய்வுத் தீர்ப்பு, சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையை பலவீனப்படுத்தி, பொதுமக்கள் கருத்து கேட்பு, நிபுணர் ஆய்வு மற்றும் அறிவியல் மதிப்பீடு ஆகியவற்றை பெரும்பாலும் சம்பிரதாயமாக ஆக்குகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவது ஒரு விருப்பமாகவே கருதப்படுகிறது. விதிகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்று கருதுவதால், மாநில அரசின் ஒழுங்குபடுத்தும் அதிகாரமும், சட்டத்தை மீறுவோரைத் தடுக்கும் அமலாக்கத்தின் விளைவும் குறைகிறது என்றும் கூறப்படுகிறது. 


ஆனால், இந்தத் தீர்ப்பின் மிக மோசமான விஷயம், அது கொடுக்கும் செய்திதான். காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நேரத்தில் உச்சநீதிமன்றமே “பொறுப்பு” என்ற கருத்தை இன்னும் பலவீனப்படுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்னதமாக இருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளும் ஒரு நிறுவனத்துக்கு,

இந்த மறு ஆய்வுத் தீர்ப்பு மிகுந்த கவலையளிக்கும் பின்னடைவாகவே உள்ளது.

நீதிமன்றம் இப்போது இந்தச் சவால்களை மீண்டும் ஆராய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, ​​இரண்டு அறிவிப்புகளும் செல்லுபடியாகுமா என்பது மட்டுமல்ல, இந்தியாவின் சட்டத்தின் ஆட்சியில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆபத்தில் உள்ளது என்பதை அது நினைவில் கொள்ள வேண்டும்.


சுஹ்ரித் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி  பெற்று வருகிறார்.


original link:

Share:

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் கம்பியில்லா கண்காணிப்பு அமைப்பு (WMO) ஆகியவற்றின் செயல்பாடுகள் என்ன? இணைய தாக்குதல்களைத் தவிர்ப்பதில் அவற்றின் பங்கு என்ன? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— ஏமாற்றுதல் (Spoofing) என்பது விமானத்தின் அமைப்பை ஏமாற்ற போலி சிக்னல்களை அனுப்பி, தவறான நிலை, நேரம் அல்லது வழிசெலுத்தல் தரவை ஏற்படுத்துவதாகும். வலுவான ரேடியோ சிக்னல்கள் செயற்கைக்கோள் சிக்னல்களைத் தடுக்கும்போது அல்லது சீர்குலைக்கும்போது குறுக்கீடு அல்லது முடக்கம் (jamming) ஏற்படுகிறது.


— பல ஆண்டுகளாக, விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள் - குறிப்பாக மோதல் மண்டலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.


— வயர்லெஸ் கண்காணிப்பு அமைப்பு (Wireless Monitoring Organization (WMO)) என்பது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு (Wireless Planning & Coordination (WPC)) பிரிவில் உள்ள ஒரு அமைப்பாகும். இது ரேடியோ அலைக்கற்றையை நிர்வகிக்கிறது மற்றும் குறுக்கீடுகளிலிருந்து விடுபடுவதை உறுதி செய்கிறது. இந்தியாவின் வான்வெளியில் குடிமை விமான போக்குவரத்து சேவைகளையும் இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வகிக்கிறது.


— இந்தியாவில் சமீபத்திய மாதங்களில் உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (Global Positioning System (GPS)) மற்றும் உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு (Global Navigation Satellite System (GNSS)) ஏமாற்றுதல் மற்றும் குறுக்கீடு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் டெல்லி விமான நிலையத்தைச் சுற்றி இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்ததாக அறியப்படுகிறது. டெல்லியில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் நான்கு ஓடுபாதைகள் உள்ளன.


-டெல்லி விமான நிலையத்தைச் சுற்றி உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பை ஏய்த்தல் (GPS Spoofing) மற்றும் ஜிஎன்எஸ்எஸ் குறுக்கீடு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளுக்கு மத்தியில், "விமானப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒருமைப்பாட்டைப் பராமரிக்க" இதுபோன்ற சம்பவங்கள் நடந்த 10 நிமிடங்களுக்குள் புகாரளிக்குமாறு விமான நிறுவனங்கள், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை டிஜிசிஏ நவம்பர் 10 அன்று கேட்டுக் கொண்டது.

— விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், முடக்கச் செயலி (ransomware) மற்றும் தீங்குநிரல் (malware) போன்ற உலகளாவிய சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று அமைச்சர் கூறினார். இந்த அச்சுறுத்தல்களிலிருந்து அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க இந்திய விமான நிலைய ஆணையம் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக என்று அமைச்சர் தெரிவித்தார்.

— இந்த நடவடிக்கைகள் தேசிய முக்கியமான தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (National Critical Information Infrastructure Protection Centre (NCIIPC)) மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன. நிலையான புதுப்பிப்புகள் மூலம் இணைய பாதுகாப்பு வலுவாக உள்ளது. அச்சுறுத்தல்கள் உருவாகும்போது, புதிய பாதுகாப்புகள் சேர்க்கப்படுகின்றன என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நாயுடு கூறினார். 

உங்களுக்குத் தெரியுமா?

— நாவிக் அல்லது இந்திய விண்மீன் கூட்டத்துடன் வழிசெலுத்தல் (Navigation with Indian Constellation (NavIC)) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation (ISRO)) உருவாக்கிய தன்னிறைவு மற்றும் சுதந்திரமான செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பாகும்.

— இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் பல மோசடி வகைகளை பட்டியலிடுகிறது, அவை டிஜிட்டல் கைது, வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் மற்றும் காதல் அல்லது டேட்டிங் மோசடிகள் ஆகும்.

— தகவல் தொழில்நுட்ப (Information Technology (IT) Act) சட்டம், 2000-ன் பிரிவு 70B-ன் விதிகளின் கீழ், இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இணையப் பாதுகாப்பு சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்கான தேசிய அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு சம்பவங்களை கட்டுப்படுத்துவதிலும், சம்பவ மறுமொழி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு

குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இணைய சம்பவங்களைக் கையாளுதல், பாதிப்புகளைச் சரிசெய்தல் மற்றும் இணையப் பாதுகாப்பை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் முக்கிய அமைப்பாகும்.

— சைபர் ஸ்வச்தா கேந்திரா கணினிகள் (Cyber Swachhta Kendra) மற்றும் சாதனங்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் பாட்நெட் நிரல்களைக் (botnet programs) கண்டறிந்து நீக்குகிறது. இது தீங்குநிரல் (malware) பகுப்பாய்விற்கான இலவச கருவிகளை வழங்குகிறது, அமைப்புகள் மற்றும் சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது.

Original article link:

What are the functions of the Airports Authority of India (AAI) and Wireless Monitoring Organization (WMO)? What are their roles in avoiding cyber attacks?


Share:

நிதிக் குழுவின் பொறுப்பு மற்றும் செயல்பாடு என்ன? -குஷ்பூ குமாரி


முக்கிய அம்சங்கள்:

— 12-வது நிதிக் குழு முதல் 14வது நிதிக் குழு வரையிலான நிதிக் குழு மற்றும் நிதி அல்லாத ஆதாரங்களில் இருந்து மானியங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. 15-வது நிதிக் குழுவின் காலத்தில் அவை சிறிதளவு அதிகரித்தன.

— ஒன்றிய அரசிலிருந்து மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பணத்தில் வரிப் பகிர்வு, நிதி மற்றும் நிதி அல்லாத மானியங்கள் அடங்கும். சமீபத்திய நிதிக் குழு காலகட்டங்களைப் பொறுத்தவரை, ஒன்றிய மற்றும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த வருவாய் வரவுகளுடன் (combined revenue receipts) ஒப்பிடும்போது இவற்றின் போக்குகளை நாம் கருத்தில் கொள்ளலாம்.

— ஒருங்கிணைந்த வருவாய் ரசீதுகளுடன் ஒப்பிடும்போது ஒன்றிய வரிகளில் மாநிலங்களின் பங்கு 13-வது நிதிக் குழுவின் காலத்தில் சராசரியாக 15 சதவீதத்திலிருந்து 14-வது நிதிக் குழுவின் காலத்தில் 19.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 4.25 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.

— பரிமாற்றத்திற்குப் பிறகு, மாநிலங்களின் பங்கு 4.23 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது மொத்த வருவாய் வரவுகளில் 63.85 சதவீதத்திலிருந்து 68.08 சதவீதமாக அதிகரித்தது. இதனால், மாநிலங்கள் இப்போது ஒன்றிய அரசைவிட அதிக பங்கைக் கொண்டுள்ளன.

— இருப்பினும், மாநிலங்களின் மொத்த வருவாய்கள் அவற்றின் சொந்த வருவாய் மற்றும் ஒன்றிய அரசிலிருந்து வரும் அனைத்து பரிமாற்றங்கள், நிதி பரிமாற்றங்கள் உட்பட ஒரு சிறிய சரிவைக் கண்டன. மாநிலங்களுக்கான நிதி சிறிதளவு குறைந்துள்ளது.

— ஒருங்கிணைந்த வருவாய் வரவுகளுடன் ஒப்பிடும்போது மாநிலங்களின் மொத்த வருவாய் வரவுகள் 14-வது நிதிக் குழுவின் காலத்தில் 68.08 சதவீதத்திலிருந்து 15வது நிதிக் காலத்தில் 67.39 சதவீதமாகக் குறைந்துள்ளன. ஏறக்குறைய 0.70 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.

— 15வது நிதிக் குழு, காலாண்டில் வரிப் பகிர்வின் பங்கை 1.05 சதவீதப் புள்ளிகள் குறைத்து 18.2 சதவீதமாகக் குறைத்ததே இதற்குக் காரணம், இது நிதி மற்றும் நிதி அல்லாத மானியங்களின் பங்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பால் பெருமளவில் ஈடுசெய்யப்பட்டது.  இதனால் மொத்த பரிமாற்றங்கள் ஒருங்கிணைந்த வருவாய்களில் 0.23 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்துடன் மட்டுமே குறைந்தன. 14வது நிதிக் குழுவின் காலத்தில் 37.72% ஆக இருந்த மாநிலங்களின் சொந்த வருவாய் பங்கு, 15வது நிதிக் குழு காலத்தில் 37.35%-ஆக, 0.47 சதவீத புள்ளிகள் குறைந்தது.

— ஒரு மாநிலத்தின் நிதி இடம் முக்கியமாக அதன் சொந்த வருவாய் மற்றும் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் மொத்த நிதியைப் பொறுத்து இருக்கும்.

— 14வது மற்றும் 13வது நிதிக் குழு காலங்களை ஒப்பிடுகையில், அதிக வருமானம் கொண்ட மாநிலங்களின் நிதி இடம் அப்படியே இருந்தது. ஏனெனில் ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்ட அதிக பரிமாற்றங்கள் அவற்றின் சொந்த வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியால் சமநிலைப்படுத்தப்பட்டன. இருப்பினும், அதிக வருமானம் கொண்ட மாநிலங்களுக்கு 14வது நிதிக் குழுக் காலத்துடன் ஒப்பிடும்போது 15வது நிதிக் குழுக் காலத்தில் குறைவான நிதி இருந்தது.

— எதிர்காலத்தில், சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி 2.0 விகிதக் குறைப்புகளாலும், சரக்கு  மற்றும் சேவை வரி இழப்பீட்டு வரி முடிவுக்கு வந்ததாலும் மாநிலங்களின் இந்த வரி வருமானம் குறையக்கூடும்.

— 16வது நிதிக் குழு இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு இடையே நிதி எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை சரிசெய்திருக்கும் என்று நம்புகிறோம். கூடுதல் வரிகளை அதிகரிப்பதை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும். பல்வேறு சவால்களைச் சமாளிக்க ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் அதிக வளங்கள் தேவை.

— இதற்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய்கள் அதிகரிக்க வேண்டும். இது சமத்துவத்திற்கும் பங்களிப்புக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் ஒரு நியாயமான பரிமாற்ற முறையால் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

— இந்திய அரசியலமைப்பின் 268 முதல் 293 வரையிலான பிரிவுகள், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே நிதி அதிகாரங்களின் பகிர்மானத்தை நெறிப்படுத்துகின்றன. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை (பிரிவு 246) மத்திய – மாநிலங்களுக்கு இடையே வரி அடிப்படையைப் பிரித்துக் காட்டுகிறது.

— பிரிவு 280-ன் கீழ், நிதிக்குழுவிற்கு, வரிப் பகிர்வு மற்றும் மானிய உதவி உள்ளிட்ட அரசுகளுக்கிடையேயான நிதியை விநியோகிக்க பரிந்துரைக்கும் பிரத்யேக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

— பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற பல கூட்டாட்சி நாடுகளில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​செலவின அதிகாரத்தின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பெரும்பாலும் அதிக சுயாட்சியை அனுபவிப்பதாகக் கருதப்பட்டாலும், பிரிக்கக்கூடிய வரிக் குழுவிற்கு வெளியே வரும் ஒன்றிய அரசு கூடுதல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை நம்பியிருப்பது குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, 2011-12ஆம் ஆண்டில் 88.6 சதவீதமாக இருந்த பிரிக்கக்கூடிய வரித்தொகை 2021-22-ஆம் ஆண்டில் 78.9 சதவீதமாகக் குறைந்தது.

— தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களில் (Centrally Sponsored Schemes (CSS)) கடுமையான நிபந்தனைகள் இருப்பதாக புகார் கூறுகின்றன. திட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு அதிகப் பங்கு இல்லை என்றாலும், மாநிங்களுக்கு ஒன்றிய அரசு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும். இது மாநிலங்களுக்கு இடையே நியாயமற்ற வேறுபாடுகளை அதிகரித்துள்ளது.

original link:


Share:

பெண்களின் ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஸ்வஸ்த் நாரி பரப்புரை எவ்வாறு குறிக்கிறது? -ஷாம்னா தச்சம் போயில்


நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் (Sashakt Parivar Abhiyaan (SNSPA)) பிரச்சாரத்தின்கீழ் இந்தியா மூன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி பெரும்பாலும் முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைப்பு, வெகுஜன அணிதிரட்டல் மற்றும் திறமையான டிஜிட்டல் பயன்பாடு போன்ற காரணிகளால் வந்ததுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் இறுதியில் பாலினம், நீதி மற்றும் பொறுப்புணர்வு பற்றிய கேள்விகளை கணினி வடிவமைப்பு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கும்? 


சமீபத்தில், இந்தியாவின் ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் மூன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றுள்ளது. ஆனால் உண்மையான சாதனை விருதுகளைவிட மிகப் பெரியது. இந்தப் பிரச்சாரம் பல்வேறு சுகாதார தளங்கள் மூலம் 11 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தது. 19.7 லட்சம் சுகாதார முகாம்களை நடத்துதல் மற்றும் ஒரு மாதத்திற்குள் 3.21 கோடிக்கும் அதிகமான மக்களை ஒரே சுகாதாரத் தளத்தில் பதிவு செய்தது. இந்தியா இப்போது பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது என்பதில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.


இந்த பிரச்சாரம் நம்பிக்கையுடன் இருப்பதற்கு தெளிவான காரணங்களை அளிக்கிறது. இது பெரிய எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, சுகாதாரப் பராமரிப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதில் உண்மையான முன்னேற்றங்களையும் உள்ளடக்கியது. இந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பார்ப்போம்.


பெண்களின் ஆரோக்கியத்திற்கான இந்தியாவின் ஒருங்கிணைந்த அணுகுமுறை


முதலாவதாக, 20 அமைச்சகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைப்பு, "அரசாங்கத்தின் முழு" ஈடுபாட்டைக் குறிக்கிறது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கான வழக்கமான அமைதியான அணுகுமுறையிலிருந்து விலகுவதைக் குறிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை சுகாதார நிபுணர்கள் நீண்டகாலமாக கூறிவருவதை அங்கீகரிக்கிறது. பெண்களின் நல்வாழ்வை ஊட்டச்சத்து, சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல் அல்லது சமூக நல அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாது.


இரண்டாவதாக, இந்தப் பிரச்சாரத்தின் பெருமளவிலான சமூக அணிதிரட்டல் 5 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சாயத்து பிரதிநிதிகள், 1.14 கோடி மாணவர்கள், 94 லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் 5 லட்சம் பிற சமூக உறுப்பினர்களை உள்ளடக்கியது — பரவலாக்கப்பட்ட மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நோக்கிய ஒரு அடிப்படையான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. மேலிருந்து கீழாக இறங்கும் வழங்கல் மாதிரிகளைப் போலல்லாமல் — அவை பெண்களை செயலற்ற பயனாளிகளாக மட்டுமே நிலைநிறுத்துகின்றன — இந்த “முழு சமூக அணுகுமுறை” கட்டமைப்பு ஈடுபாடு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பல்வேறு மையப்புள்ளிகளை உருவாக்குகிறது.


குறிப்பாக, சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்தக் குழுக்கள் எப்போதும் பெண்கள் எவ்வாறு ஒழுங்கமைப்பது, பணத்தை நிர்வகிப்பது மற்றும் ஒன்றாகப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்ள உதவியுள்ளன. இந்தத் திறன்கள் இப்போது அவர்கள் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பெறவும் உதவும்.


மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவது என்னவென்றால், இந்த பிரச்சாரம் டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பயன்படுத்தி அனைவருக்கும் சுகாதாரத் தகவல்களையும் சேவைகளையும் கிடைக்கச் செய்கிறது என்பதுதான். ஒரு வாரத்தில் 10 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்காக இணைய வழியில் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில், நீண்ட தூரம், பயணச் சிரமங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் போன்ற சவால்களை சமாளிக்க நன்கு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் கருவிகள் பெண்களுக்கு உதவும் என்பதை இந்த பிரச்சாரம் காட்டுகிறது.



பெண்கள் சுகாதாரத்தில் டிஜிட்டல் திருப்பம்


பெண்களின் சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்தியாவின் பயணம் 2000-களின் நடுப்பகுதியில் வேகமாக செயல்படத் தொடங்கியது. இது கையேடு, காகிதப் பதிவுகளிலிருந்து சுகாதார சேவைகளை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் தரவைப் பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளுக்கு மாறியது. பல ஆண்டுகளாக, தாய்வழி சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்த இந்தியா தானியங்கி தொலைபேசி குரல் பதில் அமைப்புகள் (Interactive Voice Response Systems (IVRS)), குறுந்தகவல் சேவை (SMS), தொலைமருத்துவம் மற்றும் நடமாடும் சுகாதார பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. முக்கியமாக, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மக்களின் பொருளாதார – சமூக நிலை மற்றும் கல்வியறிவு அளவுகளை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன.


2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு (Mother and Child Tracking System (MCTS)), கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான டிஜிட்டல் பதிவேடுகளை உருவாக்கும் முதல் முயற்சியாகும். இது நோய்த்தடுப்பு அட்டவணைகள் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு வருகைகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார (Reproductive and Child Health (RCH)) தரவுத்தளத்தை உருவாக்க வழிவகுத்தது. இது பல தனித்தனி சுகாதார திட்டங்களை ஒரு டிஜிட்டல் அமைப்பாக இணைத்தது.


டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக 2016-ல் தொடங்கப்பட்ட கில்கரி மொபைல் சுகாதாரத் திட்டம் (Kilkari mobile health programme), மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு ஊட்டச்சத்து, கூடுதல் உணவு, கர்ப்ப பராமரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 18 வார கர்ப்பம் முதல் குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை இந்தியில் வாராந்திர 72 தானியங்கி குரல் செய்திகளை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைச் சென்றடைகிறது.


இதற்கிடையில், பொது அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட eSanjeevani தொலைதூர மருத்துவ தளம், 2020 முதல் 100 மில்லியனுக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி, பெண்களே பெரும்பான்மையான பயனாளிகளாக உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெண் நோயாளிகளுடன் தொடர்புடையவை.


2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் (National Digital Health Mission), பின்னர் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (Ayushman Bharat Digital Mission (ABDM)) என்று அழைக்கப்பட்டது, சுகாதார தரவுகளுக்கான முழுமையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவதை இது வேகப்படுத்தியது. கோவிட்-19 தொற்றுநோய் தொலைதூர மருத்துவம், டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள் மற்றும் சுகாதார பயன்பாடுகளை இயல்பாக்க உதவியது. Co-WIN தளம் அரசாங்கம் பெரிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டங்களை எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதைக் காட்டியது. சமீபத்திய, ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் (Sashakt Parivar Abhiyaan (SNSPA)) பிரச்சாரம் போன்ற பெண்கள் சுகாதாரத் பிரச்சாரங்களில் இந்த அமைப்புகள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.




இருப்பினும், தாக்க மதிப்பீடு (impact assessment) என்ன சொல்கிறது?


சுகாதாரப் பராமரிப்பை டிஜிட்டல் மயமாக்குவது உண்மையான முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, mMitra குரல் செய்தி சேவையின் மீதான ஆராய்ச்சி, டிஜிட்டல் அமைப்புகள் தாய்மார்கள் சரியான நேரத்தில் அதிக தடுப்பூசிகளைப் பெற உதவுகின்றன. தானியங்கி நினைவூட்டல்களை அனுப்புதல், தவறவிட்ட அளவுகளைக் குறைத்தல், இரத்தப்போக்குக்கான மருத்துவர் வருகைகளை ஆதரித்தல் மற்றும் மருத்துவமனை பிரசவத்தை ஊக்குவிக்கிறது.


முன்கள சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தும் கைபேசி சுகாதார செயலிகள் கர்ப்பிணிப் பெண்களின் வீட்டு வருகைகளை 15.7% ஆகவும், பிரசவத்திற்குப் பிந்தைய வருகைகளை 12% ஆகவும் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அவை சுகாதாரக் கல்வி மற்றும் வழக்கமான பரிசோதனைகளுக்கும் உதவுகின்றன. இந்தப் பயன்பாடுகளிலிருந்து வரும் நிகழ்நேரத் தரவு, அதிகாரிகள் சேவைகளில் உள்ள இடைவெளிகளைக் காணவும் வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் உதவுகிறது.


இருப்பினும், தாக்க மதிப்பீடு முக்கிய சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஆதார் அடிப்படையிலான அங்கீகார அமைப்புகள் சூழல் மற்றும் மக்கள்தொகையைப் பொறுத்து அங்கீகார தோல்வி விகிதங்களுடன் கணிசமான விலக்கை உருவாக்கியுள்ளன. தொழில்நுட்ப அணுகல் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி மேலும் புதிய வடிவிலான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இப்போது, ​​மகப்பேறு சலுகைகளைப் பெறுவது தகுதி பெறுவதை மட்டுமல்ல, சிக்கலான டிஜிட்டல் சரிபார்ப்பு படிகளைக் கையாளும் திறனையும் சார்ந்துள்ளது.


குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு, கைரேகை அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகார முறைகள் வீக்கம், கையால் செய்யப்பட்ட வேலைகளால் நேரும் தேய்மானம் அல்லது கிராமப்புற சுகாதார மையங்களில் மோசமான இணைப்பு காரணமாக சவால்களை எதிர்கொள்கின்றன. டிஜிட்டல் மயமாக்கல் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activist (ASHA)) மற்றும் துணை நர்சிங் மருத்துவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவர்கள் ஒரே நேரத்தில் நேரடி பராமரிப்புப் பணி செய்வதோடு, பல்வேறு தளங்களில் அதிக அளவிலான தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


தரவு, வழிமுறைகள் மற்றும் அணுகல் ஆகியவற்றின் சந்திப்பில் பெண்கள்


ABDM சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை, தரவைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. தரவைப் பாதுகாப்பதற்கான தெளிவான விதிகள் இல்லாமல், உடல்நலம் மற்றும் மகப்பேறுத் தகவல்களை தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைப்பது அந்தத் தரவின் தவறானப் பயன்பாட்டிற்கு அல்லது எதிர்பாராத பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும்.


ஹரியானாவின் மாநில அளவிலான முயற்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தனித்துவமான “கர்ப்ப அடையாள எண்” (pregnancy ID) வழங்கி அதை மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதார (Reproductive and Child Health (RCH)) தரவுத்தளத்துடன் இணைக்கும் திட்டமாக இது இருந்தது. இது பாலினத் தேர்வு கருக்கலைப்பைக் கண்காணிப்பதற்கும், தாய்மை சுகாதார சலுகைகளை உறுதி செய்வதற்கும் கொண்டுவரப்பட்டாலும், பெண்களின் மகப்பேறு வாழ்க்கையை ஒரே நேரத்தில் பாதுகாக்கவும் ஒழுங்குபடுத்தவும் டிஜிட்டல் உள்கட்டமை எப்படிப் பயன்படுத்தப்பட முடியும் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.


சிறிய முன்னோடித் திட்டங்களிலிருந்து நாடு தழுவிய டிஜிட்டல் முறைக்கு மாறுவது சுகாதாரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்கியுள்ளது. தொடர்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்கள் சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபடுவதற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளது. இது தனித்துவமான சுகாதார அடையாள எண்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் இணைக்கப்பட்ட சுகாதார வசதிகளைப் பயன்படுத்தி தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்பு மூலம் (national digital health ecosystem) செய்யப்படுகிறது.


இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சாதன உரிமை மற்றும் டிஜிட்டல் திறன்களில் உள்ள வேறுபாடுகள், தெளிவற்ற செயற்கை நுண்ணறிவு முடிவுகள், வெவ்வேறு தளங்களை இணைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பில் உள்ள தோல்விகள் ஆகியவை பெண்களுக்கு நியாயமான அணுகலை பெறத் தடுக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் கருவிகள் மூலம் பெண்களின் சுகாதார அணுகலை பெரிதும் மேம்படுத்த முடியும். ஆனால், அதே நேரத்தில் அவை ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் தொடர செய்யலாம்.


டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் வெறும் நுட்பத்தில் அல்ல, உள்ளடக்கத்தில் உள்ளது.


இருப்பினும், டிஜிட்டல்மயமாக்கலை இந்தியப் பெண்களின் குறுக்கிடை பாதிப்புகளை (intersectional vulnerabilities) மையப்படுத்திய உள்ளடக்கிய அணுகுமுறையாக மறுவடிவமைத்தால், மிகவும் முற்போக்கான பாதை சாத்தியமாகும்.

இதற்கு பெண் பயனர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட குறைந்த தொழில்நுட்பம் கொண்ட, பன்முக அணுகலுக்கு (SMS, WhatsApp Chatbots & IVR) முன்னுரிமை அளிக்க வேண்டும்; செயல்படுத்தக்கூடிய ஒப்புதல், குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். சமூக சுகாதார பணியாளர்களை மாற்றுவதற்குப் பதிலாக ஆதரிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activist (ASHA)) அறிக்கையிடுவதற்கு மட்டுமல்லாமல், உறுதியான ஆதரவு (advocacy) மற்றும் உரிமைகோரல் உருவாக்கத்திற்கும் தரவைப் பயன்படுத்த முடியும்.


இறுதியில், டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலம் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பொறுத்தது அல்ல. மாறாக பாலினம், பொறுப்பு போன்ற பிரச்சினைகள் அமைப்பில் எவ்வளவு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து இருக்கும்.


டிஜிட்டல் மயமாக்கல் அதிகாரத்தை மறுபகிர்வு செய்து, சுயாட்சியைப் பாதுகாத்து, அது ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் தீவிரமாகக் குறைக்கும்போது மட்டுமே பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் - இது இப்போது ஸ்வஸ்த் நாரி, சஷாக்த் பரிவார் அபியான் போன்ற முன்முயற்சிகள், பெரிய அளவிலான முயற்சிகளை நீடித்த, நேர்மறையான மாற்றங்களாக மாற்ற இந்தியா தயாராக உள்ளது என்பதைக் காட்டுகின்றன.

Original link


Share:

தேசிய முக்கிய கனிம திட்டம் (NCMM) என்பது என்ன? -குஷ்பூ குமாரி


முக்கிய  அம்சங்கள்:


— இந்த உயர் வலிமை கொண்ட அரிய மண் காந்தம் (Rare-Earth Permanent Magnet (REPM) பரந்த அளவிலான தொழில்நுட்பங்களுக்கு மிக முக்கியமானவை. இவை மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் முதல் மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைப் பயன்பாடுகள் வரை தேவைப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் உற்பத்தி ஒரு சில நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளது. இந்தக் காந்தங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தி மற்றும் செயலாக்கம் இரண்டிலும், சீனா மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்படுத்துகிறது.


— சீனாவின் இந்த ஆதிக்கம், மற்ற நாடுகளைவிட அதற்கு ஒரு சாதகமான நிலையை வழங்குகிறது, மேலும் வர்த்தகப் பதட்டங்களின்போது இது ஒரு செல்வாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா அறிவித்த வரிகளுக்குப் பதிலடியாக, சீனா காந்தங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை ஏப்ரல் மாதத்தில்  விதித்த போது இது தெளிவாகத் தெரிந்தது.


— இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் அரசின் முயற்சியால், அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவை தீவிரமாக அதிகரித்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அரிய மண் நிரந்தர காந்தங்களின் நுகர்வு இரட்டிப்பாகும் என்று அரசு மதிப்பிடுகிறது. இருப்பினும், இந்தியா தற்போது அதன் அரிய மண் நிரந்தர காந்தங்களுக்கான (REPM) தேவைகள் அனைத்தையும் ஏறக்குறைய இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் உற்பத்தி (Rare-Earth Permanent Magnet (REPM) திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (Million Tonnes Per Annum (MTPA)) ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) உற்பத்தி திறனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது போட்டி ஏல செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். ஒவ்வொன்றும் 1,200 (Million Tonnes Per Annum (MTPA)) வரை தகுதியுடையதாக இருக்கும்.


— இந்தத் திட்டம் குறிப்பாக "உருகிய அரிய-மண் நிரந்தர காந்தங்கள்" (sintered rare-earth permanent magnets) மீது கவனம் செலுத்துகிறது. இவை முதன்மையாக நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் (Neodymium Iron Boron (NdFeB)) காந்தங்கள் ஆகும். இவை மிகவும் வலிமையானதாகவும் வணிக ரீதியாக அதிகம் தேவைப்படுபவையாகவும் கருதப்படுகின்றன.


— இந்த காந்தங்கள், நியோடைமியம் (Nd) மற்றும் பிரசியோடைமியம் (Pr) போன்ற இலகுவான அரிய-மண் தனிமங்களை, இரும்பு (Fe) மற்றும் போரான் (B) உடன் இணைத்து, அவற்றின் வலுவான காந்தப் பண்புகளுக்காகப் பயன்படுத்துகின்றன. அதிக வெப்பநிலைகளில் காந்தநீக்கலுக்குள்ளாகும் திறனை மேம்படுத்த, டைஸ்பிரோசியம் (Dy) மற்றும் டெர்பியம் (Tb) போன்ற கனமான அரிய-மண் தனிமங்களையும் இவை பயன்படுத்துகின்றன.


— இந்தக் காந்தங்களின் உற்பத்தி, சுரங்கத் தொழில் (mining), பயன்சேர்ப்பு (beneficiation), செயலாக்கம் (processing), பிரித்தெடுத்தல் (extraction), அரிய மண் ஆக்ஸைடாகச் சுத்திகரித்தல் (refining to rare earth oxide), ஆக்ஸைடுகளை உலோகமாக மாற்றுதல் (conversion of oxides to metal), பிறகு உலோகத்தை உலோகக் கலவையாக மாற்றுதல் (metal to alloy), மற்றும் இறுதியாக காந்த உற்பத்தி (magnet manufacturing) போன்ற பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.


— புதிய திட்டம், ஒருங்கிணைந்த அரிய மண் காந்தம் (REPM) உற்பத்தி வசதிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள், அரிய பூமி ஆக்சைடை உலோகமாக மாற்றுவது, உலோகத்தை கலவையாக மாற்றுவது மற்றும் கலவையை அரிதான பூமி நிரந்தர காந்தமாக மாற்றுவது ஆகிய இறுதி மூன்று நிலைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகிறது.


— இந்தியா தற்போது இந்தக் காந்தங்களுக்கு சீனாவைப் பெரிதும் சார்ந்துள்ளது. 2024-25 காலகட்டத்தில், இந்தியா 53,000 டன்களுக்கும் அதிகமான அரிய மண் நிரந்தர காந்தங்களை இறக்குமதி செய்தது, அதில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சீனாவில் இருந்து வந்தவை.


— சீனாவைத் தவிர, ஜப்பான் மற்றும் வியட்நாம் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இந்தக் காந்தங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் உலக சந்தையில் அவற்றின் பங்கு குறைவாகவே உள்ளது. இதற்கிடையில், சில நிறுவனங்கள் தங்களுக்குத் திறன் இருப்பதாகக் கூறினாலும், இந்தியாவில் வணிக ரீதியிலான உற்பத்தி எதுவும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் ஒரு நீண்ட மற்றும் சவாலான பயணத்தில் ஒரு ஆரம்ப நிலையிலயே உள்ளது.


— சீனாவின் அளவோடு ஒப்பிடுகையில், ஒரு வருடத்திற்கு 6,000 மெட்ரிக் டன் என்ற திட்டத்தின் கொள்ளளவு குறைவாகவே தெரிகிறது. உட்டாவைத் (Utah) தளமாகக் கொண்ட அறிய மண் பரிமாற்றங்கள் நிறுவனம், சீனா வருடத்திற்கு தோராயமாக 2,40,000 டன் அரிய மண் நிரந்தர காந்தங்களை (REPM) உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடுகிறது. 


— அரிய மண் நிரந்தர காந்தங்கள் (REPM) தயாரிப்பதற்குத் தேவையான சில அரிய ஆக்ஸைடுகளை இந்தியா உற்பத்தி செய்தாலும், கனமான அரிய ஆக்ஸைடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை. அணுசக்தி துறையின்கீழ் உள்ள இந்தியன் அரிய மண் லிட் (Indian Rare Earths Limited (IREL)) நியோடைமியம்-பிரசியோடைமியம் (NdPr) ஆக்ஸைடுகள் போன்ற சில தேவையான லேசான அரிய ஆக்ஸைடுகளை உற்பத்தி செய்வதாகத் தெரிவிய்கிகின்றனர்.


— சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான பல உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாதம், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ‘குவாட்’ அமைப்பானது (Quadrilateral Security Dialogue (QUAD)), முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் முக்கியமான கனிமங்களுக்கான செயல் திட்டம் (Critical Minerals Action Plan) முன்வைக்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது.


இந்தியாவால் எடுக்கப்பட்ட முயற்சிகள்


— இந்தியா தனது தேசிய முக்கிய கனிம ஒன்றியத் திட்டத்தை (National Critical Mineral Mission - NCMM) ஏழு ஆண்டுகளுக்கு (2024-25 முதல் 2030-31 வரை) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. 16,300 கோடி ரூபாய் திட்டமிடப்பட்ட நிதிநிலை திட்டத்துடன், இந்தத் திட்டம், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் முக்கியமான கனிமங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் முக்கிய கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கனிமங்களை ஆராய்வது, சுரங்கத் தொழில், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வது வரையிலான முழுமதிப்புச் சங்கிலியிலும் தொழில்நுட்பம், விதிமுறைகள் மற்றும் நிதியுதவியை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


— 2023 ஆம் ஆண்டில், இந்தியா 30 கனிமங்களை "மிக முக்கியமானவை" (critical) என்று அடையாளம் கண்டது. அதே ஆண்டில், லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை தனிமங்கள் போன்ற முக்கியமான மற்றும் உத்தியியல் கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவதற்காக, 1957-ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)) சட்டத்தையும் அரசாங்கம் திருத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்து, நாடு முழுவதும் உள்ள 34 முக்கிய கனிமத் தொகுதிகளை அரசாங்கம் ஏலம் விட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா?


— குவாட் (QUAD) அமைப்பின் மிக முக்கியமான கனிமங்களுக்கான முன்முயற்சி, பல்வகைப்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. "முக்கியமான கனிமங்களைச் செயலாக்குவதற்கும், சுத்திகரிப்பதற்கும், அதன் வழிவந்த பொருட்களின் (derivative goods) உற்பத்திக்கும் ஏதேனும் ஒரு நாட்டையே சார்ந்திருப்பது, நமது தொழில்களைப் பொருளாதார அச்சுறுத்தல், விலை மோசடி மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவற்றிற்கு ஆளாக்குகிறது என்றும் இது நமது பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


— 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கரிதான் முதல் தொழிற்புரட்சிக்கு ஆற்றலை அளித்தது. எண்ணெய் மற்றும் அதன் துணை பொருட்கள் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு (கார்கள் மற்றும் விமானங்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்) மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உலகளாவிய செழிப்புக்கும் எரிபொருளாக அமைந்தது. இப்போது, நீண்ட 21-ஆம் நூற்றாண்டு, முக்கியமான கனிமங்களின் யுகமாக (critical minerals age) இருக்கப் போகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தீரஜ் நாயர் குறிப்பிடுகிறார். 

Original link:

What is the National Critical Mineral Mission (NCMM)?


Share: