இந்தியாவின் முதலாவது விண்வெளி சுற்றுலா பயணி கோபி தோட்டகுரா (Gopi Thotakura) : விண்வெளி சுற்றுலா (space tourism) என்றால் என்ன? -Explained Desk

 விண்வெளி சுற்றுலா (space tourism) சமீபகாலமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு   ஊடகங்களின் அறிக்கை படி, 2023 இல், விண்வெளி சுற்றுலா சந்தையின் மதிப்பு $848.28 மில்லியன்.  


தொழில்முனைவோரும், விமானியுமான கோபி தோட்டகுரா (Gopi Thotakura), சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் ஆவார். அவர் Blue Origin இன் NS-25 திட்டத்தில் (NS-25 mission of Blue Origin) இணைகிறார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) ப்ளூ ஆரிஜினையும் (Blue Origin) தொடங்கினார்.


தோட்டகுரா 6 பேர் கொண்ட  பயணக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இருப்பினும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த பயணம்  வெற்றி பெற்றால், விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவின் (Rakesh Sharma) 1984 ஆம் ஆண்டு சல்யூட் 7 விண்வெளி நிலையத்திற்கான பயணத்திற்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராக கோபி தோட்டகுரா இருப்பார்.


விண்வெளி சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில், இதன் மதிப்பு $848.28 மில்லியன் மற்றும் 27,861.99 ஆம் ஆண்டில் $2032 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிக செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற சவால்கள் அதன் விரிவாக்கத்தைத் தடுக்கலாம். 


யார் இந்த கோபி தோட்டகுரா?


அமெரிக்காவில் உள்ள எம்ப்ரி-ரிடில் வான்வழி அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Embry-Riddle Aeronautical University) பட்டம் பெற்ற தோட்டகுரா,  Blue Origin நிறுவனத்திற்காக வணிக ரீதியாக ஜெட் விமானங்களை இயக்குகிறார். ஒரு செய்திக்குறிப்பின்படி, பைலட் மற்றும் விமானியான கோபி, வாகனம் ஓட்டுவதற்கு முன்பு பறக்க கற்றுக்கொண்டார். ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஆரோக்கிய மையமான ப்ரிசர்வ் லைஃப் கார்ப்பின் இணை நிறுவனரும் ஆவார். புஷ் விமானங்கள், ஏரோபாட்டிக் விமானங்கள், கடல் விமானங்கள், கிளைடர்கள் மற்றும் சூடான காற்று பலூன்கள் போன்ற பல்வேறு விமானங்களை கோபி பைலட் செய்வதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சர்வதேச மருத்துவ ஜெட் பைலட்டாகவும் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் பயணியான கோபி தோட்டகுரா சமீபத்தில் கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அடைந்தார்.


விண்வெளி சுற்றுலா (space tourism) என்றால் என்ன?


அன்னே கிரஹாம் மற்றும் ஃபிரடெரிக் டோப்ருஸ்கேஸ் ஆகியோரால் தொகுக்கப்பட்ட 'விமான போக்குவரத்து: ஒரு சுற்றுலா பார்வை' (‘Air Transport: A Tourism Perspective’) புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, விண்வெளி சுற்றுலா என்பது விமான துறையின் ஒரு பகுதியாகும். இது சுற்றுலாப் பயணிகளை விண்வெளி வீரர்களாகவும், பொழுதுபோக்கு, ஓய்வு அல்லது வேலை காரணங்களுக்காக விண்வெளிக்கு அழைத்து செல்கிறது.

 

விண்வெளி சுற்றுலாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: துணை சுற்றுப்பாதை  (sub-orbital)  மற்றும் சுற்றுப்பாதை (orbital). துணை-சுற்றுப்பாதை விமானங்கள் கார்மன் கோட்டிற்கு (Kármán line) அப்பால் பயணிகளை அழைத்துச் செல்கின்றன. இது பூமியிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது மற்றும் விண்வெளியின் விளிம்பைக் குறிக்கிறது. பயணிகள் அங்கு சில நிமிடங்கள் செலவழித்து திரும்பி வருகிறார்கள்.


தோட்டகுரா (Thotakura) விண்வெளி சுற்றுலா செல்வது என்எஸ் -25 திட்டத்தின் (NS-25 mission) ஒரு பகுதியாகும். இது ஒரு துணை சுற்றுப்பாதை ஆகும். அவரும் அவரது குழுவினரும் விண்வெளி சுற்றுலாவுக்காக Blue Origin தயாரித்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலமான நியூ ஷெப்பர்டைல் (New Shepard)  பயணம்  செய்வார்கள்.


ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் (Space X’s Falcon 9 ) 9 செப்டம்பர் 2021 இல் நான்கு பயணிகளை 160 கிமீ உயரத்திற்கு அழைத்துச் சென்றது. பூமியை மூன்று நாட்கள் சுற்றி வந்தன. விண்கலம் கார்மான் கோட்டைத் தாண்டிப் பறந்தது. தரையில் இருந்து சுமார் 1.3 மில்லியன் அடி உயரத்தில் பயணிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர்.


சவால்கள் என்ன?


தற்போது, விண்வெளி சுற்றுலாவின்  செலவு உயர்ந்துள்ளது. ஒரு பயணி, பொதுவாக குறைந்தது ஒரு மில்லியன் செலுத்த வேண்டும். ஆனால் இந்த செலவினம் பலருக்கு மிகவும் அதிகமாக இருக்கும்.

 

ராக்கெட்டுகள் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை மேல் வளிமண்டலத்தில் வெளியிடுவதால் விண்வெளி சுற்றுலா சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


2022 ஆம் ஆண்டில், லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (University College London (UCL)), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology (MIT)) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், ராக்கெட் ஏவுகணைகளில் இருந்து வெளிவரும் சூட் உமிழ்வுகள் வளிமண்டலத்தை வெப்பமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர்.


விண்வெளி சுற்றுலாவில் பாதுகாப்பு மற்றொரு கவலையாக உள்ளது. நவம்பர் 2023 நிலவரப்படி, 676 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர், அவர்களில் 19 பேர் இறந்துள்ளனர் என்று வானியல் இதழின் அறிக்கை கூறுகிறது. 3% விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளிப் பயணத்தின் போது இறந்துள்ளனர். கடுமையான பாதுகாப்பு தரநிலைகள் இருந்தபோதிலும் அதிக இறப்பு விகிதத்தைக் காட்டுகிறது.




Original article:

Share:

குஜராத்தில் மின் ஆட்டோக்களுக்கு (e-autos) மாறுதல் : சுத்தமான காற்று, அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும் - மாதவ் பாய் & கௌஸ்துப் கோசவி

 மின் வாகங்களுக்கு மாறுவதினால் ஏற்படும்  நன்மைகளைப் பற்றி ஓட்டுநர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மினேற்று மையங்கள் (charging stations) மற்றும் பழுதுபார்ப்பு நிலையங்களுக்கு (service centers) அரசு அதிக பணம் செலவழிக்க வேண்டும்.


இந்திய நகரங்களில் போக்குவரத்துக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கியமானவை. பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தவும், குறைவான தனியார் வாகனங்களை பயன்படுத்தவும் அவை மக்களுக்கு உதவுகின்றன. குஜராத்தில், 2014ல் இருந்து 4,73,023 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 முதல் 23% பதிவுகள் அதிகரித்துள்ளன. இவற்றில், 66,448 குறிப்பிட்ட உமிழ்வு தரநிலைகளை பாரத் நிலை I, II, III அல்லது IV பூர்த்தி செய்கின்றன. இந்த தரநிலைகள் வாகனங்கள் காற்றை எவ்வளவு மாசுபடுத்துகின்றன என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. குஜராத்தில், இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் 430 மெட்ரிக் டன் (MT) கார்பன் மோனாக்சைடு (carbon monoxide (CO)), 66 MT துகள்கள் (particulate matter (PM)) மற்றும் 451 MT நைட்ரஜன் ஆக்சைடு (nitrogen oxide (NOx)) ஆகியவற்றை வெளியிடுகின்றன. இது குஜராத்தில் மொத்த கார்பன் மோனாக்சைடு  (CO) வெளியேற்றத்தில் 17% ஆகும். இந்த ஆட்டோக்கள் அனைத்தும் மின்சார வாகனமாக இருந்தால், இந்த உமிழ்வை வெகுவாகக் குறைக்கலாம்.


கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க ஆட்டோ-ரிக்ஷாக்கள் முக்கியமானவை மற்றும் நெரிசலான நகர்ப்புறங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.  மின்சாரத்தினால் இயங்கும் ஆட்டோக்கள் மாறுவது சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பயனளிப்பதோடு, நீண்ட காலத்திற்கு பொருளாதார நன்மைகளையும் வழங்கும்.  WRI India நடத்திய ஆய்வில், அழுத்தப் பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas (CNG)), பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களுடன் ஒப்பிடும்போது மின்-ஆட்டோக்கள் குறைந்த மொத்த உரிமையாளர் செலவை  (total cost of ownership (TCO)) கொண்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தை அதன் வாழ்நாளில் வாங்குதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செலவுகளும் இதில் அடங்கும்.     


உதாரணமாக, குஜராத்தில், சிஎன்ஜி ஆட்டோ ரிக்ஷாவுக்கு ஒரு கிலோமீட்டருக்கு மொத்த உரிமையாளர் செலவு  (total cost of ownership (TCO))  100 கி.மீ பயணத்திற்கு ரூ.4.60 ஆகும். இதற்கு நேர்மாறாக, ஒரு மின் -ஆட்டோ (e-auto), இந்தியாவில் விரைவான மின்சார வாகன உற்பத்திக்கான FAME  (Faster Adoption and Manufacturing of Hybrid  Electric Vehicles in India) மற்றும் குஜராத் மாநில அரசின் மானியம் என மொத்தம் ரூ 1 லட்சம் மானியங்களைக் கணக்கிட்ட பிறகு, கணிசமாக குறைந்த மொத்த உரிமையாளர் செலவு ஒரு கி.மீ.க்கு ரூ 2.8 ஆக உள்ளது. 


 ICE ஆட்டோக்கள் தினமும் 100-150 கி.மீ செல்ல முடியும், மின்-ஆட்டோக்கள் நீண்ட பயணங்களுக்கு நல்லது என்பதைக் காட்டுகிறது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 200முதல் 750வரை சம்பாதிக்கிறார்கள், எனவே மின்-ஆட்டோக்கள் அவர்களுக்கு அதிக வருமானம் ஈட்ட உதவும்.


குஜராத்தில் பலருக்கு மின்-ஆட்டோ பயன்படுத்த தடைகள் உள்ளன. மின்-ஆட்டோக்கள் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது மற்றும் அவற்றை சார்ஜ் செய்ய போதுமான இடங்கள் இல்லை என்பதும் இந்த பிரச்சனைகளில் சில. மேலும், பல ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மின்-ஆட்டோக்கள் பற்றிய நல்ல விஷயங்களை உணரவில்லை. அதாவது, அவை இயங்குவதற்கு குறைந்த விலை மற்றும் குறைந்த சத்தம் போன்றவை. அதிகமான சார்ஜிங் இடங்கள் தேவை மேலும், பேட்டரிகளை மாற்றி மின்-ஆட்டோக்களை இயக்குவதற்கும் அதிக மின் நிலையங்கள் முக்கியம். இவை அனைத்தையும் ஏற்பாடு செய்வதன் மூலம், மின்-ஆட்டோக்களுக்கான உதிரிபாகங்களைப் பெறவும், அவற்றை பழுது நீக்க தெரிந்தவர்களைக் கண்டறியவும் உதவும்.


குஜராத் மின்சார வாகனக் கொள்கை 2021 மின்சார வாகனங்களை வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்குகிறது. இது அதிக மின்சார வாகனங்களை தயாரிப்பதையும், மாநிலத்தில் அவற்றை சார்ஜ் செய்வதற்கான இடங்களை அமைப்பதையும் ஊக்குவிக்கும். மின்சார வாகனங்களில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தேசிய கொள்கையுடன் குஜராத்தின் கொள்கை பொருந்துகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குஜராத் மற்ற மாநிலங்களிடமிருந்து கற்றுக்கொண்டு மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை எளிதாக்க முடியும். 


குஜராத்தின் மின்சார வாகனைக்  கொள்கையானது ஜூலை 2025க்குள் 70,000 மின்-ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மின்-ஆட்டோக்கள் நகர்ப்புற இயக்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. வழக்கமான ஆட்டோரிக்ஷாக்களை விட அவை காற்று மாசுபாடு இல்லாமலும் அமைதியாகவும் இயங்கும். கூடுதலாக, அவை எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளை குறைக்கின்றன.




Original article:

Share:

உலகளவில் விமானப் போக்குவரத்து எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடை (CO₂) வெளியிடுகிறது? -ஹன்னா ரிச்சி

 உலகெங்கிலும் உள்ள அனைத்து CO₂ உமிழ்வுகளில் விமானப் போக்குவரத்தின் பங்கு 2.5% ஆகும். இருப்பினும், இதுவரை கணக்கிடப்பட்ட புவி வெப்பமடைதலின் அளவு சுமார் 4% க்கு இதுவே காரணமாகும்.  


விமானம் பறப்பதால் நிறைய கார்பனை வெளியிடுகிறது. ஆனால், இது உலகளவில் உள்ள அனைத்து கார்பன் உமிழ்வுகளிலும் 2.5% மட்டுமே. இது எப்படி சேர்க்கிறது? உலகளவில் பெரும்பாலான மக்கள் விமானத்தில் பறக்க மாட்டார்கள். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10% பேர் மட்டுமே மக்கள் விமானத்தில் பறக்கிறார்கள். ஆனால், சில சமயம் வருமானம் அதிகரிக்கும் போது, அதிகமான மக்கள் பறக்கத் தொடங்குவார்கள். 


கடந்த 50 ஆண்டுகளில், சிறந்த தொழில்நுட்பம்  காரணமாக அதிகமான மக்கள் பறக்க விரும்புவதால் விமானமானது கார்பன் உமிழ்வின் அளவை நிறைய மாற்றியுள்ளன. "காயா அடையாளம்" (Kaya identity) என்று அழைக்கப்படும் ஒன்றைப் பயன்படுத்தி மொத்த CO2 உமிழ்வை அடிக்கடி விளக்குகிறோம். மக்கள் எண்ணிக்கை, அவர்களின் வருமானம், ஆற்றலுடன் பொருளாதாரம் எவ்வளவு திறமையானது மற்றும் எவ்வளவு கார்பன் ஆற்றல் உற்பத்தி செய்கிறது போன்ற காரணிகள் இதில் அடங்கும். விமான உமிழ்வுகளுக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள இதே யோசனையைப் பயன்படுத்தலாம்.    


இந்த கட்டுரை விமான தேவை, செயல்திறன் மற்றும் காலநிலை மாற்றத்தில் அதன் தாக்கம் காலப்போக்கில் எவ்வாறு மாறிவிட்டது என்பதை ஆராய்கிறது. இது Candelaria Bergero, David Lee மற்றும் பலரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. விமானங்கள் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதைக் கண்டறிய, நாம் மூன்று விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்: எத்தனை கிலோமீட்டர் தூரத்திற்கு விமானங்கள் பறக்கின்றன, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அவை எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, அவை எவ்வளவு கார்பன் எரிபொருளை எரிக்கின்றன. மொத்த கார்பன் உமிழ்வைக் கண்டறிய இவற்றில் கிடக்கும் எண்களைப் பெருக்க வேண்டும். 

 

விளக்கப்படம் 1, 1990 முதல் முக்கியமான நடவடிக்கைகளின் போக்குகளைக் காட்டுகிறது. தொற்றுநோய் காலத்தை கருத்தில் கொள்ளாமல், 2019 வரையிலான தரவுகளில் கவனம் செலுத்துவோம். 1990 மற்றும் 2019 க்கு இடையில், பயணிகள் மற்றும் சரக்கு தேவை இரண்டும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், பயணிகள் 8 டிரில்லியன் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தனர். இது, ஒரு ஒளி ஆண்டுக்குச் சமமாகும்.

அதே நேரத்தில், விமானங்கள் இரண்டு மடங்கு ஆற்றல் திறன் கொண்டது. 1990 இல் ஒரு பயணிகள்-கிமீ பயணம் 2.9 மெகாஜூல் (MJ) ஆற்றலைப் பயன்படுத்தியது. 2019 இல், இது 1.3 MJ ஆக பாதியாகக் குறைந்தது. இந்த செயல்திறன் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய விமானங்கள் மற்றும் அதிக 'பயணிகள் சுமை காரணி' (passenger load factor) ஆகியவற்றிலிருந்து வந்துள்ளது. கடந்த காலத்தை விட காலி இருக்கைகள் குறைவாகவே காணப்படுகின்றன. 


காலப்போக்கில் மக்களின் பறப்பதற்கான தேவை எவ்வாறு மாறியுள்ளது, விமானங்கள் எவ்வாறு திறமையாக மாறியுள்ளன, பறப்பது காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரை பேசுகிறது. இது இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பயன்படுத்துகிறது. ஒன்று கேண்டலேரியா பெர்ஜெரோ (Candelaria Bergero) மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது. மற்றொன்று டேவிட் லீ (David Lee) மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது ஆகும்.


 எரிபொருளின் கார்பன் செறிவு (carbon intensity) என்பது, அதாவது ஒரு யூனிட்டுக்கு வெளியிடப்படும் CO2 அளவு மாறாமல் இருந்தது. 1990 இல் பயன்படுத்தப்பட்ட நிலையான ஜெட் எரிபொருளை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நிலைமை சீரடையவில்லை. உலகின் எரிசக்தித் தேவைகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உயிரி எரிபொருள்கள் மற்றும் பிற மாற்றுகளால் பூர்த்தி செய்யப்படுகிறது. 


பறக்கும் ஆற்றல் திறன் இருமடங்கு அதிகமாகி, ஒரு யூனிட் ஆற்றலுக்கு வெளிப்படும் கார்பன் மாறாமல் இருந்தால், ஒரு கிமீ பயணிக்கும் கார்பன் செயல்திறன் இருமடங்கு அதிகமாக உள்ளது. 1990 ஆம் ஆண்டில், ஒரு பயணிகள்-கிலோ மீட்டருக்கு 357 கிராம் CO2 ஐ வெளியிடும். 2019 வாக்கில், இது 157 கிராமாக பாதியாகக் குறைந்தது. தேவை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் CO2 உமிழ்வை எவ்வாறு பாதித்தன?  


மேம்பட்ட செயல்திறன் இருந்தபோதிலும், தேவையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்த CO2 உமிழ்வு இன்னும் அதிகரித்துள்ளது. விமானப் பயணத்திற்கான தேவை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விமானப் போக்குவரத்து இரண்டு மடங்கு திறமையானதாக மேம்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கார்பன் உமிழ்வு இரட்டிப்பாகியுள்ளது. உதாரணமாக, 1990 ஆம் ஆண்டில் உலகளாவிய விமானப் போக்குவரத்து சுமார் 0.5 பில்லியன் டன் CO2 ஐ வெளியேற்றியது. 2019 வாக்கில், இந்த எண்ணிக்கை சுமார் 1 பில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது என்று விளக்கப்படம்-1 காட்டுகிறது.


மேலும் பின்னோக்கிப் பார்த்தால், 1960 களில் இருந்து விமானத்திலிருந்து CO2 உமிழ்வானது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. விளக்கப்படம்-2, இந்த நீண்டகால போக்கு 1940 வரை நீட்டிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது 1960 களின் நடுப்பகுதியில் இருந்து உமிழ்வுகளில் நிலையான அதிகரிப்பைக் காட்டுகிறது.


உலகளாவிய உமிழ்வுகளில் விமானத்தின் பங்களிப்பு, காலப்போக்கில் வழங்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், உலகளாவிய கார்பன் திட்டத்தில் இருந்து மொத்த CO2 உமிழ்வு தரவுகளுடன் இணைப்பதன் மூலமும் தீர்மானிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் நிலப் பயன்பாட்டில் இருந்து 2.5% CO2 உமிழ்வை விமானங்கள் ஏற்படுத்தியது. இந்த தொகை 1990 களின் நடுப்பகுதியில் இருந்து 2% மற்றும் 2.5% இடையே இருந்தது, ஆனால் 2010 க்குப் பிறகு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்று விளக்கப்படம்-3 காட்டுகிறது.


டாக்டர் ஹன்னா ரிச்சி, OurWorldInData இன் துணை ஆசிரியர்.




Original article:

Share:

இந்தியாவிற்கு ஆர்க்டிக்கின் அவசியம் -அபிஜீத் சிங்

 ஆர்க்டிக்கில் கடற்படுகை சுரங்கம் (seabed mining) மற்றும் வள சுரண்டல் (resource exploitation) ஆகியவற்றிலிருந்து பயனடைய இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருந்தாலும், அது ஒரு நிலையான பிரித்தெடுக்கும் முறையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்க வேண்டும்.


மார்ச் 2024 இல், இந்தியா தனது முதல் குளிர்கால பயணத்தை ஆர்க்டிக்கில் வெற்றிகரமாக முடித்தது.


அதற்கு முன்பு, டிசம்பர் 2023 இல், ஆர்க்டிக்கில் இந்தியாவின் முதல் குளிர்காலப் பயணத்திற்குத் தயாராகுவதற்கு, நான்கு இந்திய காலநிலை விஞ்ஞானிகள் ஒஸ்லோ (Oslo) சென்றனர். இங்கு, என்ன நடக்கும் என்பது பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. இதற்கு முன், ஆர்க்டிக்கில் உள்ள ஹிமாத்ரி (Himadri) என்ற இந்தியாவின் ஆராய்ச்சி நிலையம் (India’s research station) கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. குளிர்காலத்தில் பயணங்கள் என்பது மிகவும் குளிர்ந்த நிலையைத் தாங்குவதாகும். இது, சில நேரங்களில் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும். இந்திய ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக துருவப்பகுதியின் இரவுகளில் (polar nights) நீண்ட நேரம் இருளில் இருப்பது குறித்து கவலைப்பட்டனர்.


ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் ஆர்வம்


ஆர்க்டிக் பகுதிக்கான இந்தியாவின் முதல் குளிர்கால பயணம் மார்ச் 2024 இல் வெற்றிகரமாக முடிந்தது. விஞ்ஞானிகள் இந்த மைல்கல்லை அடைந்திருந்தாலும், ஆண்டு முழுவதும் ஆர்க்டிக் பயணத்தை மேற்கொள்ள இந்தியா தயங்குவது கேள்விகளை எழுப்புகிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Polar and Ocean Research) ஆர்க்டிக்கில் குளிர்கால பயணத்திற்கான எந்தவொரு காரணத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், அறிவியல் தரவானது (scientific data), ஆர்டிக்கில் எதிர்பார்த்ததை விட வேகமாக வெப்பமடைவதை வெளிப்படுத்தியுள்ளன. ஆர்க்டிக் கடல் பனி உருகுவதற்கு இந்தியாவில் பேரழிவு தரும் காலநிலை நிகழ்வுகளை இணைக்கும் உண்மைகள் வெளிவந்தபோது, முடிவெடுப்பவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


இரண்டாவதாக, ஆர்க்டிக் கடல் பாதைகளை, குறிப்பாக வடக்கு கடல் பாதையை வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆர்க்டிக் மீதான இந்தியாவின் ஆர்வத்திற்கு ஒரு காரணமாகும். இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம், கப்பல் மீதான செலவுகளைக் குறைக்கவும், அதற்கான பயண நேரத்தைக் குறைக்கவும், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தியா நம்புகிறது.


மூன்றாவது, புவிசார் அரசியல் காரணிகளும் ஒரு தலைமையை வகிக்கின்றன. ஆர்க்டிக்கில் சீனாவின் அதிகரித்து வரும் முதலீடுகள் குறித்து, குறிப்பாக வடக்கு கடல் பாதைக்கு சீனாவுக்கு விரிவாக்கப்பட்ட அணுகலை ரஷ்யா வழங்கியிருப்பது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல் (Russia-Ukraine conflict) மற்றும் பிராந்திய கூட்டுறவு மன்றங்களை (regional cooperative forums) இடைநிறுத்துதல் ஆகியவற்றால் எழும் பதட்டங்களின் பின்னணியில், ஆர்க்டிக் மீது அதிகரித்து வரும் கவனத்தில் நாடுகளின் இராஜதந்திர ரீதியான தாக்கங்களை இந்தியா காண்கிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் நேர்மறையான உறவுகளைப் பேணுவது இந்தியாவுக்கு முன்னுரிமையாகும். பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களின் சாத்தியமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக கோலா தீபகற்பத்தில் (Kola Peninsula) ரஷ்யா அதன் அணுசக்தி திறன்களை அதிகம் நம்பியுள்ளது.


1920 ஆம் ஆண்டு ஸ்வால்பார்ட் ஒப்பந்தத்தில் (Svalbard Treaty) கையெழுத்திட்டதிலிருந்து, இந்தியாவானது, ஆர்க்டிக் பகுதியில் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில், இந்தியா ஆர்க்டிக் நுண்ணுயிரியல் (Arctic microbiology), வளிமண்டல அறிவியல் (atmospheric sciences) மற்றும் புவியியல் (geology) குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. ஒரு வருடம் கழித்து, இந்தியா ஒர் ஆர்க்டிக் ஆராய்ச்சி தளத்தை அமைத்தது. ஆர்டிக்கில் ஆராய்ச்சி தளத்தை அமைத்த சில வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2013 இல், ஆர்க்டிக் கவுன்சிலில் (Arctic Council)  இந்தியாவுக்கு 'பார்வையாளர்' (observer) அந்தஸ்து கிடைத்தது. அதன்பிறகு, 2014ல், ஸ்வால்பார்டில் மல்டி-சென்சார் மூர்டு அப்சர்வேட்டரியையும் (multi-sensor moored observatory in Svalbard), 2016ல் வளிமண்டல ஆய்வகத்தையும் அமைத்தனர். இந்த நிலையங்கள் ஆர்க்டிக் பனி மற்றும் பனிப்பாறைகள் மற்றும் ஆர்க்டிக்கில் உருகுவது இமயமலை மற்றும் இந்தியப் பருவமழையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது. 

 

இருப்பினும், இந்தியாவின் ஆர்க்டிகின் ஈடுபாடு குறித்து இந்திய கல்வியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் கருத்துகளால் வேறுபடுகின்றனர். ஆர்க்டிக்கின் மாறிவரும் காலநிலை இந்தியாவின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் அவர்கள் உடன்படவில்லை. இதனால், இந்தியாவின், குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களுக்கான சுரங்கம் தொடர்பாக, தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லாதது குறித்து சிலர் கவலைப்படுகிறார்கள். ஆர்க்டிக்கில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவானவர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் சுரங்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியா நடைமுறைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில விமர்சகர்கள் சுற்றுச்சூழல் அபாயங்களை குறித்து வலியுறுத்தி வருகின்றனர் மற்றும் கடல் வள சுரண்டலின் தீங்குகளைக் கருத்தில் கொண்டு ஒரு சீரான கொள்கைக்கு இவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.


ஒத்துழைப்புக்கான சாத்தியம்


ஆர்க்டிக் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நார்வே இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. 1980களின் பிற்பகுதியிலிருந்து, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன மற்றும் இது தெற்காசியாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய இந்தியாவும் மற்றொரு நாடும் இணைந்து பணியாற்றின. காலநிலை மாற்றம் ஆர்க்டிக் மற்றும் தெற்காசிய பருவமழையை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்கள் இன்னும் கடினமாக உழைத்து வருகின்றனர்.


இந்தியாவின் தற்போதைய கொள்கையில் ஆர்க்டிக் நாடுகளுடன் பசுமை எரிசக்தி மற்றும் சார்ந்த தொழில்களில் ஒத்துழைப்பது ஒரு பொறுப்பான பங்குதாரராக அதன் நற்பெயரை மேம்படுத்துகிறது. கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் டென்மார்க் மற்றும் பின்லாந்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. நீலப் பொருளாதாரம், இணைப்பு, கடல்சார் போக்குவரத்து, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பொறுப்பான வள மேம்பாடு ஆகியவற்றில் ஆர்க்டிக் கவுன்சிலின் பணிக்குழுக்களில் இந்தியாவின் அதிக ஈடுபாட்டை செயல்படுத்தும் வகையில் நார்வேயுடன் கூட்டாண்மைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், ஆர்க்டிக்கில் கடற்படுகை சுரங்கம் மற்றும் வள சுரண்டலுக்கான நிலையான பிரித்தெடுத்தல் நடைமுறைகளை இந்தியா ஆதரிக்க வேண்டும்.


நார்வே உடனான கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்  (scientific research and climate and environmental protection) கவனம் செலுத்தும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை உள்ளடக்கிய ஒரு பகுதியாக , பொருளாதாரம் மற்றும் மனித மேம்பாடு (economic and human development); போக்குவரத்து மற்றும் இணைப்பு (transportation and connectivity); நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு (governance and international cooperation); மற்றும் தேசிய திறன் மேம்பாடு (national capacity building) ஆகும். ஆர்க்டிக்கில் பொருளாதார வாய்ப்புகளை ஆராய இந்தியா இன்னும் எதிர்பார்க்கலாம். அப்படியானால், விஞ்ஞானரீதியாக சமூகம் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு இடமளிக்கும் ஒரு நிலையான கொள்கையை வடிவமைக்க நார்வே இந்தியாவுக்கு உதவ முடியும். ஆர்க்டிக்கிலும் உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அழுத்தத்தைத் தணிக்க ஆக்கபூர்வமான மற்றும் உணர்திறன் அல்லாத வழிகளைக் கண்டறிவது இந்தியா மற்றும் நார்வே ஆகிய இரு நாடுகளின் நலனுக்காக இருக்கும். 


அபிஜித் சிங், புது தில்லியில் உள்ள Observer Research Foundation-இன் கடல்சார் கொள்கை முன்முயற்சியின் தலைவராக உள்ளார்.  

ஆண்ட்ரியாஸ் ஓஸ்தாகன் ஒஸ்லோவில் உள்ள Fridtjof Nansen Institute-ன் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்.




Original article:

Share:

புதிய தரவு சட்டம், பத்திரிகை சுதந்திரத்திற்கு ஓர் இடையூறு -சஷாங்க் மோகன்

 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act of 2023) 'பத்திரிகை விலக்கை' (journalistic exemption) நீக்கியுள்ளது. இந்த மாற்றம் மிகவும் விரிவான பொது கலந்தாய்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


ஆகஸ்ட் 2023 இல், இந்தியா தனது முதல் பெரிய தரவு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கியது, இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 (Digital Personal Data Protection (DPDP) Act, 2023) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, இந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதற்க்கான விதிகளை அரசாங்கம் உருவாக்குகிறது, இது, பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடக்க வேண்டும். இந்த சட்டம் பெரும்பாலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக்கொள்வதைப் பற்றியது. இது அவர்களின் தரவைப் பார்த்தல் மற்றும் நீக்குவது போன்ற சில அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும், நிறுவனங்களுக்கும் சில விதிகளை உருவாக்குகிறது. மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை இருந்தால் புகார் செய்யக்கூடிய இடத்தையும் இது ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த சட்டம் வெளிப்படையாக இல்லாவிட்டால், பத்திரிகைத் துறையில் கருத்து சுதந்திரத்தையும் பாதிக்கலாம்.


வழக்கமாக, தரவு பாதுகாப்பு சட்டங்கள் பத்திரிகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு முன்பு மக்களைக் கேட்பது போன்ற தனியுரிமை விதிகளைப் பின்பற்ற வைக்காது. முன்னதாக,  டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் மூன்று பதிப்புகள், பத்திரிகையாளர்கள் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறின. ஆனால், இறுதி சட்டம் அதை மாற்றியது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India) இந்த பிரச்சனை பற்றி பேசியது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.




ஒரு தடை


தனியுரிமைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் காட்சியைக் கவனியுங்கள்: நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர். உங்கள் கட்டுரையில் அவர்களின் சந்திப்புகள், பயண இடங்கள் மற்றும் தோழர்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. மேலும் அவர்கள் பயனம் செய்யும் விமானங்கள், அதற்க்கான கட்டணங்கள் அவர்களின் நிதி பின்னணி மற்றும் நெருங்கிய நன்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முதலீடுகள் ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் தகவலைச் சேகரிக்க விரிவான ஆராய்ச்சி தேவைப்படுகிறது, ஏனெனில் இது பொதுக் களத்தில் எளிதாகக் கிடைக்காது.


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் (DPDP) கீழ், இந்தத் தகவல்கள் அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினரின் 'தனிப்பட்ட தரவு' என்று கருதப்படுகிறது. இந்தத் தரவை உங்கள் கட்டுரையில் பயன்படுத்த, முதலில் அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், உங்கள் கட்டுரை வெளியான பிறகும், அதே சட்டத்தின் கீழ் அதை நீக்கக் கோருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உண்டு. தங்கள் பிரதிநிதிகளின் செயல்கள் மற்றும் நடத்தைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு இது ஒரு சவாலாக உள்ளது.


டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் இறுதிப் பதிப்புகளில் இருந்து இதழியல் துறைக்கு விலக்கு நீக்கப்பட்டது, ஒரு குழப்பமான முடிவாகவே உள்ளது. ஆரம்பத்தில், விலக்கு டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டத்தில் (DPDP) மூன்று அம்சங்கள் முந்தைய பதிப்புகளில் சேர்க்கப்பட்டது: ஒன்று 2018 இல் தரவுப் பாதுகாப்பிற்கான நிபுணர் குழு, மற்றொன்று 2019 இல் அரசாங்கம், மற்றும் மூன்றாவது 2021 இல் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு, இவை அனைத்தும் தனிப்பட்ட தேவைகளை அங்கீகரிக்கின்றன. எவ்வாறாயினும், பத்திரிகை நடவடிக்கைகளுக்கு தெளிவான விளக்கங்கள் எதுவும் வழங்கப்படாமல் இந்த விலக்கு அடுத்த 2022 மற்றும் 2023 வரைவுகளில் தவிர்க்கப்பட்டது.




விளக்கம் இல்லை


பத்திரிக்கையாளர்களுக்கு விலக்கு அளிக்கும் பிரிவை அரசு பொது மன்றங்களில் விவாதிக்காமல் நீக்கியது. சட்டங்கள் பற்றிய தெளிவான மற்றும் வெளிப்படையான பொது ஆலோசனைகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதைச் செய்வதற்கான ஒரு வழி 'திறந்த மற்றும் வெளிப்படையான' மாதிரி. எடுத்துக்காட்டாக, இந்திய அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்காக தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்று வரைவுகளை வெளியிட்டது. ஆனால், அவர்கள் பெறப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால், வெவ்வேறு குழுக்கள் என்ன சொன்னார்கள் மற்றும் இறுதிச் சட்டத்தில் யார் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்வது கடினமாகிறது. வரைவுகள் பற்றிய கருத்துக்களை சேகரிக்க பிரத்தியேக பொது கருத்துகேட்புகளையும் அரசாங்கம் நடத்தியது. இருப்பினும், பத்திரிகையாளர்களுக்கான விலக்குகளை நீக்குவது குறித்த விவாதங்கள் இந்த பொது கருத்துக்கேட்பில் நடக்கவில்லை. அதற்கான காரணத்தை அரசாங்கம் விளக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆலோசனைகள் மற்றும் பொது கருத்து கேட்பு பெரும்பாலும் முன்மொழியப்பட்ட சட்டங்களைப் பற்றிய வெளிப்படையான விவாதத்தை ஊக்குவிப்பதில்லை.


ஒரு வேண்டுகோள்


சட்ட ரீதியாக நாம் என்ன தீர்வுகளை சிந்திக்க முடியும்? முதலாவதாக, சிக்கலை சரிசெய்ய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசாங்கம் பயன்படுத்தலாம். இந்த விதிகள் சட்டத்தின் சில பகுதிகளைப் பின்பற்றுவதிலிருந்து சில தரவு செயலிகளுக்கு விலக்கு அளிக்க அரசாங்கத்தை அனுமதிக்கின்றன. இது விரைவாக விலக்குகளை வழங்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. குடிமக்கள் பத்திரிக்கையாளர்கள் (citizen journalists) உட்பட பத்திரிகையாளர்களுக்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில விலக்குகள் வழங்கப்பட வேண்டும். இது இந்தியாவில் பத்திரிக்கைத் துறையின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும்.  

 

சஷாங்க் மோகன், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு ஆளுமை மையத்தின் திட்ட மேலாளர்.




Original article:

Share:

உத்தரவாதம் என்பது பாதுகாப்பற்றது, நலன் என்பது சுய பாதுகாப்பு -ரீதிக் கேரா, எம்.டி.

 தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance (NDA)) அரசாங்கம் பழைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் திட்டங்களுக்கு மறுபெயரிட்டதன் மூலம்  அவர்கள் சொந்த  நலனுக்காக  அதிகம் செலவு செய்தனர். பழைய திட்டங்களை பெயரிட்டு அதை புதியதாக உருவாக்கியது போல தோற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவை உண்மையில் புதிய சமூக ஆதரவு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தாமல் நிதியைக் குறைத்தன. 


தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (National Democratic Alliance (NDA)) ஆண்டுகள்  வலுவான நலன் சார்ந்த நோக்கத்திற்காக ஊடகங்களில் பாராட்டப்படுகின்றன. ஆனால்  ஒன்றிய பட்ஜெட்டில் உள்ள நிதி எண்ணிக்கைகள் இந்த கருத்தை ஆதரிக்கிறதா?


இதைக் கண்டுபிடிக்க, கடந்த 20 ஆண்டுகளில் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒப்பிடுவோம். "தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்கள்" என்று அழைக்கும் செலவினங்களை மற்றும்  "ஐக்கிய முற்போக்கு கூட்டணி “திட்டங்களுக்கான  செலவினங்களை ஒப்பிடுவோம்.  


மாறுபட்ட மாதிரிகள்?


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பத்தாண்டுகளில் (2004-2014), ஐந்து முக்கிய திட்டங்கள் “UPA schemes” என்று பெயரிடப்பட்டது.  2005 ஆம் ஆண்டின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (National Rural Employment Guarantee Act (NREGA)) மற்றும் 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் நான்கு திட்டங்கள்: 




1.பொது விநியோக முறை (Public Distribution System (PDS)), 


2.மதிய உணவு  (Mid-Day Meals (MDM)),


3.ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS))


4.2017 இல் செயல்படத் தொடங்கிய பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) மூலம் வழங்கப்படும் மகப்பேறு உரிமைகள்.


பொது விநியோக முறையைப் பொறுத்தவரை,  உணவு மானியத்தை நுகர்வோர், உற்பத்தியாளர் (குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் அரிசியை விற்கும் விவசாயிகளின் பங்கு) மற்றும் நிர்வாக செலவுகள் என்று பிரிப்பது சிக்கலானது. இருப்பினும், உணவு மானியத்தை பாதியாகக் குறைப்பது (நுகர்வோர் மானியத்தின் தோராயமாக) விஷயங்களை கணிசமாக மாற்றாது.


NDA காலத்தில் (2014-2024), பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளுக்கு நிதியளித்தது: 


1.  தூய்மை இந்தியா திட்டம் / ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan (SBA)) 2014 இல் தொடங்கப்பட்டது.


2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U)) 2015 இல் தொடங்கியது.


3. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமப்புறம்  (PM-Awas (rural)) அடுத்த ஆண்டு தொடங்கியது.


4. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்கும்  (Pradhan Mantri Ujjwala Yojana) நிதியளிக்கப்பட்டது.


5. பிரதமர்-கிசான் சம்மன் நிதி (PM-Kisan Samman Nidhi (PM-Kisan)) மற்றும் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) 2018 இல் தொடங்கியது. 


6. ஜல் ஜீவன் மிஷன் (al Jeevan Mission (JJM)) 2019 இல் தொடங்கியது.


2019-24 முதல் ஆயுஷ்மான் பாரத் பட்ஜெட் ₹32,000 கோடி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான வருடாந்திர செலவில் பாதி.  உஜ்வாலா யோஜனா உணவு மானியத்தைப் போலவே L.P.G மானியத்தையும் பயன்படுத்துகிறது. மானியத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உஜ்வாலா திட்டத்திற்கு செலவிடப்படுகிறது. 


சிலர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒப்பிடுகின்றனர். கழிப்பறைகள், L.P.G. சிலிண்டர்கள், தண்ணீர் இணைப்புகள் மற்றும் வீட்டுவசதி  போன்ற தனியார் நலன்களை அரசாங்கம் வழங்குகிறது என்று கூறுகிறார்கள். இதை அவர்கள் "புதிய நலம்” (“new welfarism”) என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்த திட்டங்களில் சில ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வெவ்வேறு பெயர்களிலும், குறைந்த செலவிலும் இருந்தன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டங்கள் புதிய பெயர்களுடன் தொடர்கின்றன. 


உதாரணமாக, மதிய உணவு திட்டம் இப்போது பிரதான் மந்திரி போஷன், பொது விநியோக முறை  இப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) ஆக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்கள் ஒரு செறிவூட்டப்பட்ட அணுகுமுறையைப் (‘self-targeting’) பின்பற்றுகின்றன. கழிப்பறை, 'புக்கா' (‘pucca’) அறை அல்லது L.P.G. இணைப்புகள் இல்லாதவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. அவர்கள் உதவி பெற்றவுடன், மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். UPA அரசின் திட்டங்களின் கீழ், பலன்களுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆண்டுதோறும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை, மாதந்தோறும் (பொது விநியோக முறைகளில்  தானியங்கள் போன்றவை) அல்லது தினசரி (பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் உணவு போன்றவை) பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை விட அதிக ஊதியம் பெறும் வேலையைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முனைகிறார்கள். மேலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பொதுவாக அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் படிக்கின்றனர்.


நலச் செலவுகள்எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து

நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தபோதிலும் நலச் செலவுகள் குறைவாகவும், எந்த வித வளர்ச்சி இல்லாமலும் உள்ளது. இது கோவிட்-19 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% க்கு மேல் சென்றது. இந்த அதிகரிப்பு பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. 14வது  நிதிக் குழுவிற்குப் பிறகு, சில திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கு 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்தது.

 

சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படாத தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களைப் போலல்லாமல், U.P.A. அரசின்  நல திட்டங்கள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டன. NDA அரசின் திட்டங்கள், மறுபுறம், அரசாங்கத்தின் முடிவுகளால் கட்டுப்படுத்தப்படும் 'இலவசங்கள்' (‘freebies’) போன்றவை. சட்டப்பூர்வ கடமைகள் இருந்தபோதிலும், பள்ளி உணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) போன்ற குழந்தைகளுக்கான U.P.A. ஆட்சிகாலத் திட்டங்களுக்கு N.D.A. ஆட்சிக்காலத்தில் நிதி குறைவாக  ஒதுக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் U.P.A ஆட்சிகாலத்தின் பங்கு 2014 இல் 1.5% ஆக இருந்து 2018-19 இல் 1% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், தொற்றுநோய் காரணமாக, அரசாங்கம் அவர்களின் நிதியை அதிகரிக்க வேண்டியிருந்தது. 


N.D.A. அரசின் திட்டங்களுக்கான நிதி அதிகரித்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி திட்டங்களுக்கான குறைந்த செலவினங்களை ஈடுசெய்ய முடியவில்லை. கடந்த பத்துண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செலவினம் மெதுவாக அதிகரித்தது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே இருந்தது. இது அவர்களின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுகிறது. உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (National Family Health Survey), L.P.G. பயன்பாடு 2015-16 ஆம் ஆண்டில் 43% ஆக இருந்து 2019-21 ஆம் ஆண்டில் 58% ஆக உயர்ந்தது. திறந்தவெளி மலம் கழிப்பு பாதியாக (39% லிருந்து 19% ஆக) குறைந்தது. அதே நேரத்தில் ‘புக்கா' வீடுகளின் எண்ணிக்கை மாறியது (56%லிருந்து 60%).


கொரோனா காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு தொடங்கிய முயற்சிகளை நம்புவதற்கு வழிவகுத்தது. 2015 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பிரதமர் விமர்சித்திருந்தார். இது காங்கிரஸின் தோல்விகளின் அடையாளம் என்று அழைத்தார். 


தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களுக்கு இடையிலான உறவு பொது விநியோகத் திட்டம் / பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது. 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நகர்ப்புறங்களில் 50% மற்றும் கிராமப்புறங்களில் 75% உள்ளடக்கப்பட வேண்டும். இது 800 மில்லியன் மக்கள். ஒவ்வொருவருக்கும் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. 


ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2022 வரை, அரசாங்கம் இந்த உரிமையை கோவிட்-19 நிவாரணமாக மாதத்திற்கு 10 கிலோவாக இரட்டிப்பாக்கியது. COVID-19 கூடுதல் நிவாரணம் 2023 இல் முடிவடைந்தபோது, அரசாங்கம் அசல் ஐந்து கிலோவை இலவசமாக்கியது, இது பொதுவாக ₹10-₹15 செலவாகும். அவர்கள் இந்த மறுசீரமைக்கப்பட்ட பொது விநியோக முறையை (PDS) PMGKAY என்று மறுபெயரிட்டனர். ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு அதிகபட்சம் ₹15 கூடுதலாக மிச்சப்படுத்தினர். 


இந்த உண்மைகள் இருந்தபோதிலும், பிஜேபி இப்போது 800 மில்லியன் மக்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பொது விநியோக முறை (P.D.S.) பாதுகாப்பில் காங்கிரஸை விட அதிக தொடர்பு கொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 (National Food Security Act, 2013)  இன் மூலம் இது சாத்தியமானது.  2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி தவறியதால் இந்த தொடர்பு ஆச்சரியமாக உள்ளது. இந்த தோல்வி மில்லியன் கணக்கான மக்களை பொது விநியோக முறையிலிருந்து வெளியேற்றியுள்ளது. 2021 மக்கள்தொகைக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விகிதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் PDS இல் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.     


மாநில அரசுகளின் முயற்சிகள்


பல மாநில அரசுகள், குறிப்பாக பிராந்திய கட்சிகளால் நடத்தப்படும் அரசுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தைக்கு பள்ளி உணவுக்கான சமையல் செலவுகளை  ஒன்றிய அரசு அதிகரிக்கவில்லை என்றாலும், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற ஏழை மாநிலங்கள் தங்கள் பள்ளி உணவுத் திட்டங்களில் வாரத்திற்கு சில முறை முட்டைகளை வழங்குகின்றன.


இதேபோல், முதியோர் மற்றும் விதவைகள் போன்ற சில சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான  ஒன்றிய அரசின் பங்களிப்பு 2006 முதல் மாதத்திற்கு ₹200 ஆக உள்ளது. இருப்பினும், பல மாநிலங்கள் கூடுதல் பணத்தைச் சேர்த்து திட்டத்தை  விரிவுபடுத்தியுள்ளனர். ஒடிசாவில், மது பாபு ஓய்வூதிய யோஜனா (Madhu Babu Pension Yojana) 58% ஓய்வூதியதாரர்களை ஆதரிக்கிறது. மேலும், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகியவை  ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) (ரூ.5,000-ரூ.6,000) உடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உரிமைகளுக்காக அதிக பணத்தை (முறையே ரூ.10,000 மற்றும் ரூ.18,000) வழங்குகின்றன.


தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஏற்கனவே அமலில் இருந்த திட்டங்களுக்கு (M.D.M /POSHAN, P.D.S/ /PMGKAY) மறுபெயரிடுவதன் மூலம் மக்கள் நலனுக்காக  செலவு செய்யும் அரசு என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் அவர்கள்  மக்களுக்கு  போதுமான நிதி அல்லது சமூக உதவிகளை வழங்கவில்லை. இது "போர் என்பது சமாதானம்" (war is peace) மற்றும் "சுதந்திரம் என்பது அடிமைத்தனம்" (freedom is slavery) என்ற ஓர்வெல்லியன் உலகைப் (Orwellian world) போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், "உத்தரவாதம் என்பது நிலையற்றது" (guarantee is precarity) மற்றும் "நலன்புரி என்பது சுய பாதுகாப்பு" (welfare is self-care) ஆகும். 


முகமது அஸ்ஜத், ஜாமியா மில்லியாவில்  பொருளாதார பேராசிரியராக உள்ளார். 

ரீதிகா கேரா டெல்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  (Indian Institute of Technology (IIT))  பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share:

உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஒரு புதிய தடையை ஏற்படுத்தியுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (TEPA) அறிவுசார் சொத்துரிமை வரம்புமீறல் -தினேஷ் அப்ரோல்

 அறிவுசார் சொத்துரிமை  (intellectual property (IP)) மீதான அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியின் வலுவான நிலைப்பாடு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின்  (Free Trade Agreements (FTAs)) வழியிலான முதலீடுகள் ஆகியவை பொது மற்றும் தனியார் நலன்களுக்கு இடையிலான சமநிலையை மாற்றலாம். இது இந்தியாவின் முக்கியமான கண்டுபிடிகளுக்கு தடையை ஏற்படுத்தும்.

 

சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுடன் இந்தியா புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து வேறுபட்டது. இந்த ஒப்பந்தம் இந்த நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (European Free Trade Association (EFTA)) வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (Trade and Economic Partnership Agreement (TEPA)) ஒரு பகுதியாகும். இது அறிவுசார் சொத்து (intellectual property (IP)), முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியா, பொதுவாக, உலக வர்த்தக அமைப்பில் அறிவுசார் சொத்துரிமை கொள்கைகளைப் பற்றி விவாதித்து இருக்கிறது.  


புறக்கணிக்கப்பட்ட பாடங்கள்


இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கோவிட்-19 பிறகான  கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களுக்கான ஒப்பந்தங்களுக்கு (The Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) விலக்கு கோரின. தடுப்பூசிகளை உருவாக்க சொந்த தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியையும் பயன்படுத்த இது தேவைப்பட்டது. வளரும் நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பில் இந்த விலக்கை எதிர்த்தன. 


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா அதிக அறிவுசார் சொத்துரிமை சலுகைகளை வழங்கக்கூடும். இந்த சலுகைகள் அறிவுசார் சொத்துரிமை மற்றும் முதலீட்டிற்கான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றத்தின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2022 இல், இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister  (EAC-PM)) “இந்தியா ஏன் அதன் காப்புரிமைச் சுற்றுச்சூழலில் அவசரமாக முதலீடு செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு பணித் தாளை (Working Paper (WP)) வெளியிட்டது. இந்த ஆவணம் அமெரிக்க காப்புரிமைக் கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. காப்புரிமை மானியங்களை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரை மற்றும் காப்புரிமை கொள்கைகளை தெளிவுபடுத்தும் யோசனையின் அடிப்படையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவை மிகவும் புதுமையாக இருப்பதிலிருந்து தடுப்பது எது என்று அந்த பணித் தாள் குறிப்பிடவில்லை. அதன் பரிந்துரைகள் பெரும்பாலும் தனியார் நலன்களுக்கு சாதகமாக உள்ளன. அவர்கள் காப்புரிமை அலுவலகத்தை பணம் சம்பாதிக்கும் நிறுவனமாகப் பார்க்கிறார்கள். பொது நன்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆலோசகர்கள் அதிக வெளிநாட்டு முதலீட்டை விரும்புகிறார்கள். மேலும், அறிவுசார் சொத்துரிமை சலுகைகளை வழங்குவது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப போட்டிக்கு உதவும் என்று நினைக்கிறார்கள்.


சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து காப்புரிமை தாக்கல் செய்யும் எண்களை இந்த கட்டுரை  ஆய்வு செய்கிறது.  இது காப்புரிமை வைத்திருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஊக்குவிக்கிறது. இருப்பினும், சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்திற்கு அரசு முதலீடு மற்றும் சுயாதீன கண்டுபிடிப்பு எவ்வாறு பங்களிக்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை. விரைவான கண்காணிப்பு காப்புரிமை ஒப்புதல்கள் தரமான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வேறுபாடு


சீனா, தங்கள் சொந்த கண்டுபிடிப்புகளை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீட்டில் இருந்து பயனடையவும் பல்வேறு திட்டங்களை வடிவமைத்துள்ளனர்.  இந்தியா  இதுபோன்ற திட்டங்களை உருவாக்கவில்லை. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் சீனா முதலீடுகளை செய்து வைத்து இருக்கிறது. இது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் தன்னம்பிக்கை பெற உதவுகிறது. ஆனால் அவர்கள் இந்த முதலீடுகளை அறிவுசார் சொத்துக்கான சந்தைகளை  உருவாக்குவதுடன் இணைக்கவில்லை. 


2024 இல் புதிய காப்புரிமை விதிகளில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (European Free Trade Association (EFTA))  சலுகைகள் அடங்கும். ஆகஸ்ட் 2022 இல் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு காப்புரிமை மானியங்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும் மற்றும் வெளிநாட்டு காப்புரிமை வைத்திருப்பவர்களுக்கு சுமையாக இருக்கும் அறிக்கையிடல் தேவைகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தது. காப்புரிமைச் சட்டம் (Patents Act) 1970இன் 25 (1) பிரிவை மாற்றுவதற்கு அவர்கள் பரிந்துரைத்தனர். ஏனெனில் சிலர் தேவையற்ற புகார்களுடன் காப்புரிமை ஒப்புதலை தாமதப்படுத்த அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.        


இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பதாரர்கள் காப்புரிமை பெறுவதற்கு  பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அமெரிக்க சிறப்பு அறிக்கை 301 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.  இருப்பினும், உலக வர்த்தக அமைப்பின் காப்புரிமை திருத்தங்களுக்குப் பிறகு, பொது நலனைப் பாதுகாப்பதற்காக இந்த விதிகள் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை அது விளக்கவில்லை. அணுகல், மலிவு, மற்றும் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதையும் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது. கூடுதலாக, காப்புரிமைகளைச் சரிபார்க்க போதுமான நபர்கள் அல்லது ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது. வெளிநாட்டு காப்புரிமை வைத்திருப்பவர்கள் சில விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதை எளிதாக்க பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.  


அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் படி, காப்புரிமை பெற்ற தயாரிப்பை இறக்குமதி செய்வது மட்டும் போதாது. காப்புரிமை வைத்திருப்பவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் கிடைக்கக்கூடியவை மற்றும் மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இப்போது, அவர்கள் சில மதிப்புமிக்க தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.


TRIPS ஒப்பந்தத்திற்கு  பிறகு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 76% காப்புரிமைகளை தாக்கல் செய்தன. இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இந்திய கண்டுபிடிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப காப்புரிமைகள் வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களிலிருந்து வருகின்றன. இந்தியாவின் வணிகத் துறையானது முதல் 10 உலகப் பொருளாதாரங்களில் (பிரேசில் மிகக் குறைவானது) இரண்டாவது குறைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்லனர். அவர்களில் சுமார் 40% பேர், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களில் பணிபுரிகின்றனர்.


தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய செலவிடப்படும் தொகை அதிகரித்து வருகிறது. இறக்குமதி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு செலவிடப்படும் பணத்தின் விகிதம் மிகவும் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த விகிதம் 2000 ஆம் ஆண்டில் 13.63% ஆக இருந்து 2018 இல் 2.18% ஆக குறைந்தது. சின்ஜென்ட்டா, பேயர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் நாட்டை விட்டு வெளியேறும் பணம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஐரோப்பா அல்லது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தை (European Free Trade Association (EFTA)) தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அவர்கள் அறிவுசார் சொத்துரிமை மூலம் சந்தைகளின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள தாய் நிறுவனங்கள், இந்திய கண்டுபிடிப்பாளர்களுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலிருந்து பெறப்பட்ட உரிமைகளை கட்டுப்படுத்துகின்றன. இது இரசாயனங்கள் மற்றும் கணினி தொடர்பான கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளை உள்ளடக்கியது. இந்திய சமூகம் இரண்டு முறை பணம் செலுத்துகிறது: முதலாவதாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (science, technology, engineering and mathematics (STEM)) துறைகளில் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் பணம் செலவிடப்படுகிறது. பின்னர், இந்திய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு இறக்குமதி, உரிமைத்தொகை மற்றும் கட்டணங்களை மீண்டும் செலுத்துகிறது.


அறிவுசார் சொத்துரிமை (intellectual property (IP)) மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (free trade agreement (FTAs)) மூலம் முதலீடு செய்வதற்கான புதிய அணுகுமுறை அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் செயல்திட்டத்தைப் பின்பற்றுகிறது. இது அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பை வலுவாக ஆதரிக்கிறது. இந்த புதிய அணுகுமுறை, பொது மற்றும் தனியார் நலன்களுக்கு இடையிலான சமநிலையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவின் பங்கேற்பானது, முக்கியமான கண்டுபிடிப்புகளை வளர்க்கும் திறனைத் தடுக்கலாம். அதற்கு பதிலாக, இது இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் இந்தியாவின் திறமையான வல்லுநர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் கண்டுபிடிப்பு மையங்களுக்கு இடம்பெயர்வதற்கு இது வழிவகுக்கும்.




Original article:

Share: