இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி : காலநிலை மாற்றம் என்பது ஓர் ஒப்பந்தத்தின் மறுசீரமைப்பு - பூமிகா சர்மா

 காலநிலை மாற்றத்தை ஒரு பொதுவான அச்சுறுத்தலாக அங்கீகரிப்பது மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் நதி மேலாண்மையிலிருந்து முழுமையான வடிநில மேலாண்மைக்கு கவனம் செலுத்துவது, ஒப்பந்தத்தை மேம்படுத்துவதோடு இருநாடுகளுக்கிடையேயான உறவுகளையும் வலுப்படுத்தும்.


1960-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட  சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT)), இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்திற்கு உலக வங்கி ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு, வேறுபாடுகளை சரி செய்யும் வகையில், ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய இந்தியா விரும்பியது. பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாக குறிப்பிட்டது. இதற்குப் பதிலடியாக, ஒப்பந்தத்தின் நடுநிலை நிபுணர் நடவடிக்கைகளைத் தவிர்த்து, இந்தியாவின் கிஷெங்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஹேக்கில் உள்ள நடுவர் மன்றத்தை பாகிஸ்தான் நாடியது.


காலநிலை தொடர்ந்து மாறிவருவது, ஒப்பந்தத்தை திருத்த வேண்டிய தேவையை உருவாகியுள்ளது. 2015-ஆம் ஆண்டில், நாசா சிந்துப் படுகையை உலகின் இரண்டாவது மிக அதிக அழுத்தமுள்ள (over-stressed aquifer) நீர்நிலையாக மதிப்பிட்டது. படுகையின் ஓட்டத்தில் சுமார் 31% காலநிலை-மாற்றத்தால்  உருகிய  பனிப்பாறைகளிலிருந்து வருகிறது. கணிக்க முடியாத பருவமழை போன்ற பிற காரணிகளும் நீர் ஓட்டத்தின் அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகும்.


சிந்து சமவெளியில் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடி இரு நாட்டின் பொருளாதாரங்களுக்கு மிகவும் முக்கியமானது.  சிந்து நதி, பாகிஸ்தானின் விவசாய உற்பத்தியில் 90% பங்களிக்கிறது  மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் நுகர்வு அதிகரிப்பால், நீர் தரம் மோசமடைவது உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.


சிந்து நதி நீர் ஒப்பந்தம் கட்டமைப்பிற்குள் உள்ள சர்ச்சைகள் முக்கியமாக கீழ்நிலை ஓட்டங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் தாக்கம் மற்றும் குறைந்த நதிக்கரை நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. மேலும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நம்பிக்கையின்மை காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எற்படாமல் உள்ளது. ஷாபுர்கண்டி தடுப்பணை திட்டத்தில் (Shahpurkandi barrage project) இந்தியாவை "நீர் பயங்கரவாதம்" (water terrorism) என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது ஓர் சமீபத்திய உதாரணம். இருப்பினும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ரவி ஆற்றில் நீர் ஓட்டம் கணிசமாக இல்லை. பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் மின்சாரம் மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்க, சிந்து நதி நீர் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளபடி, ஆற்றின் ஓட்டத்தை இந்த அணை நெறிப்படுத்தும். 


"மேல் vs கீழ் நதிக்கரை" (“upper vs lower riparian”) என்ற அரசியல், எல்லை தாண்டி, பாகிஸ்தானுக்குள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து இடையே பதட்டங்களை ஏற்படுத்துகிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில், இந்த குறுகிய பார்வைக்கு அப்பால் சென்று சிந்து நதிப் படுகையை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொள்வது அவசியம். 


முதலாவதாக, ஒப்பந்தத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சூழலியல் கண்ணோட்டத்தை கருத்திக்கொள்வது அவசியம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்குள் சுற்றுச்சூழல் ஓட்டங்களை (Environmental Flows) ஏற்றுக்கொள்வது, ஒதுக்கீடு செய்தல் மற்றும் செயல்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். பிரிஸ்பேன் பிரகடனம் (Brisbane Declaration) மற்றும் சுற்றுச்சூழல் ஓட்டத்திற்கான உலகளாவிய நடவடிக்கை செயல்திட்டம் (2018) (Global Action Agenda on Environmental Flows (2018))  இன் படி, சுற்றுச்சூழல் ஓட்டங்கள் (Environmental Flows) என்பது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைத் தக்கவைக்க தேவையான நன்னீர் ஓட்டங்களின் அளவு ஆகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித கலாச்சாரங்கள், பொருளாதாரங்கள், நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கின்றன. 


1997 ஐக்கிய நாடு நீர்வழிகள் மாநாட்டின் (UN Watercourses Convention) கொள்கைகளுடன் சுற்றுச்சூழல் ஓட்டங்களை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மாநாடு ஊடுருவல் அல்லாத நீர் பயன்பாட்டிற்கான சர்வதேச சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது. இது இரண்டு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது: நியாயமான பயன்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க எல்லை தாண்டி பிரச்சனைகள் ஏற்படுத்தவாறு பார்த்து கொள்வது ஆகியவையாகும்.

 

நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் மற்றும் எல்லை கடந்த ஆறுகளில் சுற்றுச்சூழலைப் பராமரித்தல் ஆகியவையும் சர்வதேச மரபுச் சட்டத்தில் (international customary law) குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக 2004 பெர்லின் நீர் வளங்கள் விதிகள் (Berlin Rules on Water Resources) இதை குறிப்பிடுகிறது. இந்த விதிகளின் பிரிவு-24, வடிகால் படுகையின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க போதுமான ஓட்டங்களை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இருநாடுகளும் எடுக்க வேண்டும்.  


ஜீலம் நதியின் கிளை நதியான கிஷன்கங்கா (Kishanganga) மீது இந்தியாவின் அணை தொடர்பான 2013 வழக்கில், நிரந்தர நடுவர் நீதிமன்றம், இந்தியா சுற்றுச்சூழலுக்கான நீரோட்டங்களை பாகிஸ்தானுக்கு கீழே விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த முக்கியமான தீர்ப்பு, எல்லைகடந்த நதிப் படுகைகளில் சுற்றுச்சூழல் ஓட்டங்களை பராமரிப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.


இரண்டாவதாக, சிந்துப் படுகையின் நீரியல் மீது காலநிலை மாற்ற தாக்கங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றிய நுணுக்கமான புரிதல் தேவை. இதற்கு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்நேர தரவுப் பகிர்வுக்கான வலுவான நெறிமுறையை உருவாக்குவது மற்றும் நீரின் தரத்தை மதிப்பிடுவது அவசியம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு  தரவுப் பகிர்வு தேவைப்பட்டாலும், அது முறையான வழிமுறையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது. 


காலநிலை மாற்றத்தை ஒரு பொதுவான அச்சுறுத்தலாக அங்கீகரிப்பது மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் நதி மேலாண்மையிலிருந்து முழுமையான வடிநில மேலாண்மைக்கு மாறுவது ஒப்பந்தத்தின் செயல்திறனை மேம்படுத்தும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் உலகளாவிய எல்லை தாண்டிய காலநிலை ஒத்துழைப்பிற்கான முன்மாதிரியாக செயல்படும்.  


கட்டுரையாளர் ஆசிய பசிபிக் அமைப்பின் செயல் தலைவர் ஆவார்.



Original article:

Share:

பிரதமர் மோடியின் முதல் இருதரப்பு பயணம் : இந்தியாவுக்கு ரஷ்யாவின் முக்கியத்துவம் -சுபாஜித் ராய்

 பிரதமர் மோடி அவர்களின் சமீபத்திய இரஷ்யா பயணம், இரஷ்யாவுடனான இந்தியாவின் வலுவான உறவுகளைக் காட்டுகிறது. இந்த உறவை சீனா பாதிக்காமல் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும். 


பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க ரஷ்யா செல்கிறார். மோடி பிரதமரானதில் இருந்து இரு தலைவர்களும் மொத்தம் 16 முறை சந்தித்துள்ளனர். ஆனால், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து பரந்த அளவிலான மேற்கத்திய தடைகளைத் தூண்டியது. மோடி கடைசியாக 2019 செப்டம்பரில் விளாடிவோஸ்டோக்கில் (Vladivostok) நடந்த கிழக்கு பொருளாதார மன்றத்திற்காக (Eastern Economic Forum) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதே நேரத்தில், விளாதிமீர் புடின் கடைசியாக 2021 டிசம்பரில் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார்.


நரேந்திர மோடி பிரதமரான பிறகு தனது முதல் இருதரப்பு பயணமாக இரஷ்யாவுக்கு பயணம் செய்ய முடிவு செய்திருப்பது, இந்திய பிரதமர்கள் மத்தியில் முதலில் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தை உடைத்துள்ளார். முன்னதாக, அவர் ஜூன் 2014-ல் பூட்டானுக்கும், பதவியேற்ற பிறகு ஜூன் 2019-ல் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கும் பயணம் செய்தார். கடந்த மாதம் ஜி-7 தலைவர்கள் பலதரப்பு கூட்டத்திற்காக இத்தாலி சென்றார். 


ரஷ்யாவுடனான இந்த பயணமானது, மாஸ்கோவுடனான அதன் உறவில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும், வெளியுறவுக் கொள்கை முன்னுரிமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இரஷ்ய எதிர்ப்பு இராணுவ கூட்டணியின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஜூலை 9-11 தேதிகளில் வாஷிங்டன் டி.சி.யில் (Washington DC) 32 நாடுகளைச் சேர்ந்த வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organisation (NATO)) தலைவர்கள் ஒன்றுகூடும் அதே நேரத்தில் நரேந்திர மோடி, விளாதிமீர் புடினை சந்திக்க உள்ளார்.


இரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் தாராள மனப்பான்மை மற்றும் இருநாடுகளுக்கிடையேயான நட்பை அன்புடன் நினைவுகூருகிறார்கள். இது ரஷ்யாவுடனான தற்போதைய உறவுக்கு எடுத்துச் சென்றுள்ளது. இருப்பினும், இன்று, ரஷ்யாவின் அணுகுமுறை சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் பரந்த உலகக் கண்ணோட்டம் மற்றும் முன்னுரிமைகளைப் போலல்லாமல், மிகவும் பரிவர்த்தனை மிக்கதாக உள்ளது.   


பல ஆண்டுகளாக, இந்தியா தனது உறவுகளை பல-துருவ உலகில் (multi-polar world) விரிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்தியா-ரஷ்யா உறவு சில பகுதிகளில் தேக்கமடைந்தும், சில பகுதிகளில் பலவீனமாகவும் உள்ளது. பாதுகாப்பு என்பது, இருநாடுகளின் கூட்டாண்மையின் வலுவான தூணாகும். மேலும், அணுசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியம் இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு உபகரணங்களின் ஆதாரமாக இருந்து வந்தது. இன்று, இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களில் 60 முதல் 70 சதவீதம் இரஷ்யாவிடமிருந்து  வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, காலப்போக்கில், பாதுகாப்பு ஒத்துழைப்பு இயல்பாக மாறிவிட்டது. வாங்குவோர்-விற்பவர் பரிவர்த்தனை (buyer-seller framework) என்பதிலிருந்து கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக உருவெடுத்துள்ளது.


இந்தியாவும் ரஷ்யாவும் பல இராணுவப் பொருட்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. S-400 Triumf ஏவுகணைகள், MiG-29 போர் விமானங்கள், Kamov ஹெலிகாப்டர்கள் மற்றும் T-90 டாங்கிகள், Su-30MKI போர் விமானங்கள், AK-203 துப்பாக்கிகள் மற்றும் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உரிமங்கள் ஆகியவை இதில் அடங்கும்.


கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளை உள்ளடக்கும் வகையில் இந்தியா தனது பாதுகாப்பு உபகரணங்களின் ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மாஸ்கோவின் ஆதரவை இந்தியா இழக்க முடியாது. குறிப்பாக, இப்போது கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனாவுடனான பதட்டங்களுடன், ரஷ்யாவிடமிருந்து வழக்கமான மற்றும் நம்பகமான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களைப் பெறுவது இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில் மாஸ்கோ பெய்ஜிங்குடன் முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளாது என்பதை உறுதி செய்கிறது.


2022-ம் ஆண்டில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதருமான பி.எஸ்.ராகவன், "இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை வேறு எந்த நாட்டுடனும் பகிர்ந்து கொள்ளாத ரஷ்யாவின் உறுதிப்பாட்டை அதிபர் விளாதிமீர் புடின் வலியுறுத்தினார்" என்று கூறினார். பெய்ஜிங்கிற்கு மாஸ்கோ வழங்கும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் உளவுத்துறை பகிர்வு ஏற்பாடுகள் குறித்த இந்த உத்தரவாதத்தை இந்தியா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


போர் மற்றும் எண்ணெய் வர்த்தகத்திற்கான ஊக்கம்


உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க பாதிப்பைத் தணிக்க, இந்தியா அதிக அளவில் இரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோர் நலன் கருதி இந்தியா தொடர்ந்து இரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று 2022 நவம்பரில் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட போது வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தினார்.


இரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில் இருந்த எழுச்சி இருதரப்பு வர்த்தகத்திற்கான முந்தைய எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகளை மீறியுள்ளது.  இந்த மோதலுக்கு முன்னர், இருதரப்பு நாடுகளின் வர்த்தக இலக்கு 2025-க்குள் 30 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், 2023-24 நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 65.70 பில்லியன் டாலரை எட்டியது என்று வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், கனிம வளங்கள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் ஆகியவை இந்தியாவின் இறக்குமதியான 61.44 பில்லியன் டாலர் ஆகும்.

நுட்பமான இராஜதந்திர சூழ்நிலைகளை வழிநடத்துதல்


எவ்வாறாயினும், போர் காரணமாக இந்தியாவை அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் ஒரு நுட்பமான இராஜதந்திரமான நிலையில் வைத்துள்ளது. இதில், இந்தியாவானது இரஷ்ய படையெடுப்பை வெளிப்படையாகக் கண்டிக்காமல், போரின் ஆரம்பகால வாரங்களில் நடந்த புச்சா படுகொலை (Bucha massacre) குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து. மேலும், இரஷ்ய தலைவர்களால் வெளியிடப்பட்ட அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தும் இராஜதந்திரமான சூழ்நிலையில் வழிநடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) பல தீர்மானங்களில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.


நவம்பர் 2022-ல் தனது பயணத்தின் போது, ஜெய்சங்கர் "அமைதி, சர்வதேச சட்டத்தை மதித்தல் மற்றும் ஐ.நா சாசனத்திற்கான ஆதரவு" (peace, respect for international law and support for the UN Charter) குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இருநாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த கொள்கைகளை இரஷ்யா மீறுவதை நிவர்த்தி செய்வதாக பரவலாக விளக்கப்படுகிறது.


செப்டம்பர் 2022-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடந்த கடைசி சந்திப்பில், நரேந்திர மோடி விளாதிமீர் புடினிடம் "இது போர் சகாப்தம் அல்ல" (this is not the era of war) என்று கூறினார். இந்த அறிக்கை பின்னர் ஜி-20 இன் பாலி பிரகடனத்திலும் (Bali declaration) மற்றும் மேற்கத்திய தலைவர்களாலும் எதிரொலிக்கப்பட்டது. நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரஷ்யாவை மீண்டும் வலியுறுத்தியது.


மாஸ்கோ மற்றும் கியேவ் இடையே உள்ள தொடர்பு திறக்கப்பட்டுள்ளது


இரு தரப்புக்கும் இடையில் ஒரு நடுநிலையாளராக இந்தியா தன்னை நிலைநிறுத்துகிறது என்ற கருத்து உள்ளது. விளாதிமீர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இருவருடனும் பேசிய சில உலகத் தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர். இத்தாலியில் நடந்த ஜி-7 மாநாட்டில் நடந்த சந்திப்பின் போது, ஜெலன்ஸ்கி மோடியை கியேவுக்கு வருமாறு அழைத்தார். மேலும் பிரதமர் கீவ் நாட்டிற்குச் செல்லலாம் என்று சில பேச்சுக்கள் எழுந்துள்ளன.


இருப்பினும், கடந்த மாதம் சுவிட்சர்லாந்து நடத்திய உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவில்லை. மேலும், நாடுகளின் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. ரஷ்யா இந்த உச்சிமாநாட்டை "நேரத்தை வீணடிப்பது" (waste of time) என்று விமர்சித்ததுடன் அதில் பங்கேற்கவும்வில்லை. அதேவேளையில், இந்தியா "இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்" என்ற நிலைப்பாட்டை எடுத்துக்காட்டியது.


செப்டம்பர் 2022-ல், நெருக்கடியில் நடுநிலை வகிக்க நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை மெக்சிகோ முன்மொழிந்தது. இந்த நெருக்கடியான நிலைமையைத் தீர்க்க குட்டெரெஸ் தனித்தனியாக இந்தியாவின் உதவியைக் கோரினார். செப்டம்பர் 2022-ல், கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியில் இந்தியா ரஷ்யாவுடன் ஈடுபட்டதாகவும், உக்ரைனில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த உலகளாவிய கவலைகளை மாஸ்கோவுக்கு தெரிவித்ததாகவும் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.


மேற்கு மற்றும் சீனா இரண்டின் மீதும் ஒரு பார்வை


இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான சந்திப்புகளைத் தொடர்ந்து மோடியின் இரஷ்ய பயணம் நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் உக்ரைன் தலைவருடன் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்தார். இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இநதியா வருகை தந்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் மெக்கால் மற்றும் முன்னாள் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழு, தலாய் லாமா மற்றும் இந்தியாவின் உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க தர்மசாலாவுக்கு வருகை தந்தனர்.


இந்தியாவின் பார்வையில், மோடியின் வருகை 2000-ம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாடுகளைத் தொடர்கிறது. இந்தியாவிலும் ரஷ்யாவிலும் மிக உயர்ந்த நிறுவனமயமாக்கப்பட்ட பேச்சுவார்த்தையான 21 உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.


2021 டிசம்பரில் நடந்த கடைசி உச்சிமாநாட்டிலிருந்து, மோடியும் புதினும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் குறைந்தது 10 தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.


உக்ரைன் போரில் ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக நம்பப்படுவது கவலையாக உள்ளது. இதில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் திரும்பி வந்தனர், சுமார் 40 பேர் ரஷ்யாவில் உள்ளனர். அவர்களை விரைவாக திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது மோடியின் வருகையின் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் முக்கிய கவலையானது ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகள் ஆகும். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வரலாற்று உறவை வலுப்படுத்தும் நோக்கில் மோடியின் பயணம் அமைந்துள்ளது. இந்தியாவின் இராஜதந்திர நலன்களுக்கு எதிரான மாஸ்கோவிற்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, பெய்ஜிங் இந்த உறவைப் பாதிக்காமல் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



Original article:

Share:

சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய விவாதத்தின் போலித்தனம் -எம் என் பாணினி

 காலநிலை பேரழிவுகளுக்கு வளர்ச்சி எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதை பல எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. எவ்வாறாயினும், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சியே வளர்ச்சியாகும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின்  வேலைப்பளுவை  கணிசமாகக் குறைக்க முடியும்.    


இந்தியா முழுவதும் உள்ள சமூக இயக்கங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இயங்கி வருகின்றன.  கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நர்மதா பள்ளத்தாக்கு திட்டம், உத்தரகண்டில் சிப்கோ இயக்கம் போன்ற திட்டங்களுக்கு எதிரான இயக்கங்கள் மனித உயிர்வாழ்வுக்கு மரங்கள், காடுகள், மண், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த இயக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வளர்ச்சிக்கான தேவைகளை பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த இயக்கங்கள் தெரிவிக்கின்றன.


சுரங்கம், எஃகு ஆலைகள், அணுசக்தி ஆலைகள், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, அணைகள், கால்வாய்கள், ஆழ்குழாய் கிணறு பாசனம், கலப்பின விதைகள், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு பாரிய சுற்றுச்சூழல் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டும் ஆதாரங்களை சுற்றுச்சூழல் நிபுணர்கள் சேகரித்துள்ளனர். இந்த வளர்ச்சி சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு  வழிவகுக்கும். இதன் விளைவாக எதிர்பராத வானிலை மாற்றம், புயல்கள், அதிக மழை, வெள்ளம், வெப்ப அலைகள், தொற்றுநோய்கள், புகைமூட்டம் மற்றும் மாசுபாடு போன்ற இயற்க்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.  


ஆனாலும், வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது. சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் விரைவான தொழில்மயமாக்கலை ஏற்றுக்கொண்டோம். திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் பாரம்பரிய சமூகத்தையும் பின்தங்கிய பொருளாதாரத்தையும் நவீன தேசமாக மாற்றும் என்று அரசாங்கம் நம்பியது. காந்தியின் ஹிந்த் ஸ்வராஜ் (Hind Swaraj model) மாதிரி, மறுபுறம், குடிசைத் தொழில்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்து அவர் கற்பனை செய்த கிராமக் குடியரசுகளை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆரம்பத்தில், அரசாங்கம் மட்டுமே "வளர்ச்சியில்" கவனம் செலுத்தியது. இருப்பினும், மக்கள் அனைத்து சமூகப் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுத்தனர். இது தனிநபர்கள், சாதிகள் மற்றும் சமூகங்களுக்கான உரிமைகளின்  கோரிக்கையாக மாறியது. 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதாக கூறி பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.  

 

வெளிப்படையான நுகர்வு மற்றும் நுகர்வோர் இந்த தேவைகளின் அவசியத்தை குறிக்கிறது. ஆனால், காந்தியவாதிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதை வெறுக்கிறார்கள். இருப்பினும், வளர்ச்சி என்பது தனிநபர்கள் மற்றும்  சமூகத்தில் மிகவும் பின்தங்கிய சாதிகள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சியாகும்.  நுகர்வு பயன்பாடு சமூக அந்தஸ்தைக் குறிப்பதால், சமூகத்தில் பின்தங்கிய மக்களில் பலர் மேல் அடுக்கு மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் சுயமரியாதையை உறுதிப்படுத்துகின்றனர். நகர்ப்புற உயரடுக்கு மக்கள் இந்த மாற்றத்தை மோசமான நுகர்வோர் என்று கருதலாம். ஆனால், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் தங்கள் சமூக அடையாளங்களை உறுதிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.  


உழைக்கும் ஏழை மக்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களை பயன்படுத்த முடிந்தால், அது உடல் சோர்வை கணிசமாகக் குறைக்கும். புதிய இயந்திரங்கள் கையால் துடைப்பதை அகற்றினால், அதனுடன் தொடர்புடைய களங்கத்தையும் அகற்றலாம்.    


சர்க்காவால் (charkha) செய்யப்பட்ட காதி துணி, அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால், தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு தகுந்த குழி வழங்கப்படுதில்லை. பணக்காரர்கள் சிக்கனத்தைக் காட்ட காதியை அணிந்தாலும், அதன் தயாரிப்பாளர்கள் செயற்கை மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்ட ஆடைகளை அதிக காலம் நீடிக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஆடைகளை விரும்புகிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பினர், வளர்ச்சிக் கொள்கைகளிலிருந்து பயன் பெறாமல், உற்பத்தி, நுகர்வு மற்றும் விநியோகம் பற்றி முடிவெடுப்பதில் ஈடுபட விரும்புகிறார்கள். வளர்ச்சிக்கு ஒரு விடுதலைப் பக்கமுண்டு என்பதை இது காட்டுகிறது. வளர்ச்சிக்கான உரிமையை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமையாகக் கருதுவதில் ஆச்சரியமில்லை.           


அறிஞர்களும் கொள்கை வகுப்பாளர்களும் வளர்ச்சியினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முயற்சித்து வருகின்றனர்.  அவர்கள் நிலையான அல்லது மாற்று வளர்ச்சியின் மாதிரிகளைக் கண்டறிய முயன்றனர். ஆனால், இந்த மாதிரிகள் எப்போதும் நிலையானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, ஜெர்மனியின் பசுமைக் கட்சி கதிர்வீச்சு அபாயங்கள் காரணமாக அணுசக்தி ஆலைகளை மூடியது. உக்ரைன் போரின் போது ரஷ்யாவிலிருந்து வரும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பது அதிகரித்தது. லித்தியம் பேட்டரிகள் ஒரு தூய்மையான ஆற்றல் மாற்றாகக் கருதப்படுகின்றன. ஆனால், லித்தியம் சுரங்கம் மற்றும் பயன்படுத்தப்பட்ட   பேட்டரிகளை அகற்றுவது மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. மற்ற பசுமை தொழில்நுட்பங்களிலும் இது  போன்ற சிக்கலை ஏற்படுத்துகின்றன.  


பிரச்சனை என்னவென்றால், சுற்றுச்சூழல் நிபுணர்களின் அறிவுரைகளை நாம் பின்பற்றினால், நாம் வளர்ச்சி அடைவது கடினமாகிவிடும். வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பதில் கவனம் செலுத்திய பழங்காலக் கால வாழ்க்கை முறை, மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், அந்த காலத்திற்குத் திரும்புவதே உண்மையான வளர்ச்சி. ஹோமோ சேபியன்கள் குடியேறிய விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது, ​​அவர்களின் பரிணாம வளர்ச்சியில் தவறான திருப்பத்தை எடுத்திருக்கலாம். 


நாம் வளர்ச்சிக்கான பாதையில் இருந்து பின்வாங்க வேண்டுமா? ஒரு புதிய சிந்தனைப் பள்ளி சுற்றுச்சூழலில் ஆதிக்கம் செலுத்தும் காலநிலை மாற்ற ஆய்வறிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. அதிகரித்த கார்பன் டை ஆக்சைடு தாவரங்களுக்கு நன்மை பயக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பரிணாம உயிரியலாளர்கள் புவியியல் சக்திகளால் குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்ததாக  கூறுகின்றனர். மனித வளர்ச்சியின் காரணமாக பேரழிவு ஏற்படுவது, தொடர்ச்சியான சுழற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  காலநிலை அடிக்கடி மாறலாம். இந்த அறிவியல்பார்வைகளை நாம் கருத்தில் கொண்டால், வளர்ச்சியைக் குறை கூறுவது தவறு என்றுத் தோன்றுகிறது. நீண்ட மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மனித தேவைகளைக் கண்டிப்பதும் தவறாகத் தெரிகிறது.



Original article:

Share:

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டிற்கு நீட் (NEET) போன்ற தேர்வு ஏன் தேவையில்லை? -சக்திராஜன் ராமநாதன், சுந்தரேசன் செல்லமுத்து

 மருத்துவத் தேர்வு முறையில் சீர்திருத்தத்தின் நோக்கம் பின்தங்கிய பொருளாதாரரீதியில் பின்னணியில் உள்ளவர்களுக்கு மருத்துவத் துறையில் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வதாகும். இது அவர்களின் சமூகங்களில் சுகாதார அணுகலை மேம்படுத்த பங்களிக்க அவர்களுக்கு உதவும். 


சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்களைத் தூண்டியுள்ளது. சமீபத்திய முன்னேற்றங்கள் அதை தேசிய அக்கறையாக உயர்த்தியுள்ளன. தகுதியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் நியாயமான சேர்க்கையை உறுதி செய்யவும், மருத்துவ நுழைவுச் செயல்முறையை சீரமைக்கவும் நீட் (NEET) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிக கட்டணப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்த தேர்வைப் பற்றி பல கேள்விகள் உள்ளன: நீட் அதன் நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்ததா? மருத்துவக் கல்வியின் வணிகமயமாக்கலை குறைத்து விட்டதா?


இந்த ஆண்டு, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வில் கலந்துகொண்டு, விண்ணப்பக் கட்டணம் ரூ1,000 முதல் ரூ.1,700 வரை செலுத்தியுள்ளனர். இந்தக் கட்டணங்கள் மட்டுமே தேர்வு நிறுவனத்திற்கு சுமார் ரூ337 கோடியை ஈட்டிக்கொடுத்துள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு தேர்வரும் தேர்வுக்குத் தயாராக பயிற்சி மையங்களில் கட்டணமாக லட்சக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறார்கள்.


ஆரம்பத்தில் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நீட் தேர்வுக்கான தகுதி வரம்பு 2020-ல் 30 சதவீதமாகவும், 2023-ல் பூஜ்ஜிய சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான காலியிடங்களால் இந்த மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 60,000 இடங்களை நிரப்பிய பிறகு, தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 50,000 இடங்களை நிரப்புவதில் கட்டணம் செலுத்தும் திறன் முக்கியமானது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், மருத்துவம் படிக்கும் கனவை நனவாக்க முடியாது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட பாதி மருத்துவ இடங்கள் பணக்காரர்களுக்கு திறம்பட ஒதுக்கப்பட்டு, தகுதிக்கு வெகுமதி அளிக்கும் இலக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. 


கடந்த ஆண்டுகளில், இந்தியாவின் மருத்துவக் கல்வி முறை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சிலை மாற்றுவது, ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:1ல் இருந்து 1:3 ஆகக் குறைப்பது மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு அரசு-தனியார் கூட்டு மாதிரியை ஏற்றுக்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். தனியார் நிறுவனங்கள். மற்றும் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் மூலமும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மூன்றாம் நிலை சிகிச்சை அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (Ayushman Arogya Mandir) என பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத்துறையால் நடத்தப்படும் சேவைகளிலிருந்து தனியார் பங்களிப்பை உள்ளடக்கியதாக மாற்றியுள்ளன.


இந்த சீர்திருத்தங்களின் முக்கிய அங்கமான  நீட் தேர்வு, இங்கிலாந்தின் யுனிவர்சிட்டி கிளினிக்கல் ஆப்டிட்யூட் டெஸ்ட் (University Clinical Aptitude Test (UCAT)) மற்றும் அமெரிக்காவின் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தேர்வு (Medical College Admission Test (MCAT)) போன்ற தேர்வுகளிலிருந்து வேறுபட்டது. UCAT மற்றும் MCATக்கு இடைநிலைக் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் தேவைப்பட்டாலும், நீட் தேர்வுக்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த முறை மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதன் முக்கியத்துவத்தைக் குறைக்கலாம். கூடுதலாக, மாநில அரசுகள் மற்றும் கல்வி அமைச்சகங்கள் தங்கள் மாநிலங்களில் எதிர்கால மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை. மேலும், வினாத்தாள் கசிவு, முறையான அனுமதியின்றி கருணை மதிப்பெண்கள் ஒதுக்கீடு போன்ற விவகாரங்களால் நீட் மற்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) மீது சந்தேகம் எழுந்துள்ளது. 


தமிழ்நாடு தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் பல தேர்வுகளை நடத்தியுள்ளது. இது 1970 களில் நேர்காணல் முறையுடன் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நுழைவுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணுடன், உயர்நிலைக் கல்வித் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடங்களில் பெற்ற மதிப்பெண்களுக்கு 2/3 வெயிட்டேஜ் கொடுத்தனர். 


ஆனந்தகிருஷ்ணன் கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கியது. இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வுகளை அரசு ரத்து செய்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மேல்நிலை மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த முறை பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 


நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், தமிழ்நாடு அரசு சமூக சமத்துவத்தையும் உள்ளடக்கத்தையும் உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினர். பி.கலையரசன் மற்றும் ஏ.கே.ராஜன் கமிட்டிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.   


தமிழ்நாட்டின் ஐம்பது ஆண்டுகால அனுபவங்கள் இளம் மருத்துவர்களின் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணிகளைக் காட்டுகின்றன. இந்தக் காரணிகளில் உள்கட்டமைப்பு, ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் நோயாளிகள் பராமரிப்பு சேவைகளின் அளவு ஆகியவை அடங்கும். நுழைவுத் தேர்வுகளை விட அவை மிகவும் தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளன. தேர்வு அடிப்படையிலான தேர்வு அளவுகோல் சேர்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 


அமெரிக்க கல்வியாளர்களான வில்லியம் செட்லாசெக் (William Sedlacek) மற்றும் சூ எச். கிம் (Sue H. Kim) மக்கள் வெவ்வேறு கலாச்சார மற்றும் இன அனுபவங்களைக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் தங்கள் திறமைகளை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார்கள். எனவே, ஒரே ஒரு நடவடிக்கை அனைவருக்கும் சமமாக வேலை செய்யும் என்பது சாத்தியமில்லை. பல வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களைச் சோதிப்பது நியாயமானதல்ல. 


நீட் தேர்வு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். பொது சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது, கல்வி என்பது பொதுப் பட்டியலில் ஒரு பகுதியாகும். குறிப்பாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சேர்க்கை செயல்முறைகளை வடிவமைக்கும் முன் அனைத்து மாநிலங்களும் நம்பிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நீட் மீதான விவாதம் கல்வி சமத்துவம் மற்றும் கூட்டாட்சி போன்ற பரந்த பிரச்சினைகளை உள்ளடக்கியது. இது ஒரு கல்விப் பிரச்சினை மட்டுமல்ல, ஆழமான அரசியல் பிரச்சினையும் கூட.


நீட் தேர்வில் சிக்கல்கள் இருந்தால், வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? ஒரு தேர்வுக்குப் பதிலாக, இரண்டு முதல் மூன்று வருட பள்ளி செயல்திறன் மற்றும் பொதுத் திறனாய்வுத் தேர்வின் இறுதி மதிப்பீடு தேர்வை மேம்படுத்தலாம். இது, தற்போதைய ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றுடன் சேர்க்கையை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும். மீண்டும் மீண்டும் முயற்சிகளை எடுக்காமல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு கட்டுப்படுத்துவது மற்றும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் தேர்வர்களுக்கு 15% இடங்களை ஒதுக்குவது ஒரு நியாயமான அமைப்பை உருவாக்கும். நர்சிங் போன்ற சுகாதார இணை மருத்துவ  இடங்களின் ஒரு சிறிய பகுதியை ஒதுக்குவது பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளைப் போலவே நேரடி இரண்டாமாண்டு சேர்க்கையை அனுமதிக்கும். உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் கொள்கைகுறி கேள்விகள் சேர்க்கப்படலாம். இந்தக் கேள்விகளின் மதிப்பெண்கள் சமநிலையில்  சிறந்த தேர்வரைத் தேர்வு செய்ய உதவும்.


மருத்துவ நுழைவுத் தேர்வு செயல்முறையைச் செம்மைப்படுத்துவதன் முதன்மை நோக்கம், அதிக சராசரி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதை உறுதி செய்வதாகும். கணிசமான அளவு அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் சேர்க்கை அளவுகோல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேசமயம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போதிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்கள் மருத்துவத் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்த பிரதிநிதித்துவம் அவர்களின் சமூகங்களுக்கு சுகாதார சேவையை அணுக உதவும்.


ராமநாதன், சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறையின் உதவிப் பேராசிரியராகவும், செல்லமுத்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இணைப் பேராசிரியராகவும், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் (GADA) மாநிலத் தலைவராகவும் உள்ளார்.



Original article:

Share:

காவல்துறை அதிகாரிகளுக்கான புதிய விதிகள் என்ன? -ஆர்.கே.விஜே

 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதால், காவல்துறை அதிகாரிகளின் அடிப்படை கடமைகள் எவ்வாறு மாறியுள்ளன? முதியவர்கள் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக மாற்றப்பட்ட சில விதிகள் யாவை? மின்னணு ஆதாரங்களை பாதுகாப்பது பற்றி என்ன கூறுகிறது? மின்னணு ஆதாரங்களை எவ்வாறு சேமிக்க முடியும்?


முதல் தகவல் அறிக்கை (First Information Report)  பதிவு செய்வதற்கான விதிகள் என்ன?


ஒரு காவல் நிலையத்தின் ஆய்வாளர், தனக்கு அதிகாரம் இல்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை மறுக்க முடியாது. ஜீரோ எஃப்ஐஆர் (zero FIR) பதிவு செய்வதற்கு அவர் கட்டுப்பட்டவர் என்று புதிய குற்றவியல் சட்ட நடைமுறைகள் கூறுகின்றன. அவர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, வழக்கை சரியான காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) இப்போது பிரிவு 173-ன் கீழ் ஒரு புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தவறினால் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாகலாம்.


முன்பு போலவே வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தகவல்களை அளிக்கலாம். கூடுதலாக, புதிய விதிகளின் கீழ் மின்னணு முறையிலும் புகார் அளிக்கலாம். இந்தத் தகவலை அளிப்பவரிடம் காவல் ஆய்வாளர் மூன்று நாட்களுக்குள் கையொப்பம் பெற்று அளிக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணை செய்யும் அதிகாரியை யாரும் தடுக்க முடியாது. தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், காவல்துறை அதிகாரிகள் அதை உடனடியாக விசாரிக்கலாம். மின்னணுத் தகவலைச் சமர்ப்பிப்பதற்கான முறையானது, குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு கணினி கட்டமைப்பு (Crime and Criminal Tracking Network and Systems (CCTNS)) வலைத்தளம், காவல்துறை இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மின்னஞ்சல் ஐடிகள் போன்ற அமைப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒளிப்பதிவு (videography) என்ன பற்றி? 


காவல்துறையின் நடவடிக்கைகளின் போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) ஒளிப்பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்குகிறது. பிரிவு 185-ன் கீழ் தேடுதல் நடத்தப்படும் இடங்கள், பிரிவு 176-ன் கீழ் ஒரு குற்றம் நடந்த இடம், மற்றும் பிரிவு 105-ன் கீழ் தேடுதல் அல்லது சொத்தை கைப்பற்றும் செயல்முறை ஆகியவை கட்டாயமாக ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். காவல்துறையின் சிறிய அலட்சியம் குற்றவாளிகளுக்கு சாதகமாக மாறிவிடும். விசாரணை அதிகாரிகளுக்கு  மின்னணு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த செயல்பாடுகளை நிறைவேற்ற அவர்களுக்கு முறையான பயிற்சி தேவைப்படுகிறது.


'eSakshya' எனப்படும் கிளவுட் அடிப்படையிலான மொபைல் செயலி, அமலாக்க முகமைகளுக்காக தேசிய தகவல் மையத்தால் (National Informatics Centre) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு  செய்ய அனுமதிக்கிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி சாட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் சுயப்படத்தை எடுக்கலாம். தரவு ஒருமைப்பாட்டை (integrity of data) உறுதிப்படுத்த ஒவ்வொரு பொருளும் புவி-குறியிடப்பட்டு (geo-tagged) நேர முத்திரையிடப்படுகிறது. 'eSakshya' என்பது இடை-செயல்படக்கூடிய குற்றவியல் நீதி அமைப்பின் (Inter-operable Criminal Justice System (ICJS)) கீழ் ஒரு முயற்சியாகும். பதிவு செய்யப்பட்ட தரவுகள் நீதித்துறை, வழக்கு விசாரணை மற்றும் சைபர் தடயவியல் நிபுணர்கள் போன்ற பிற நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.  


கைது விதிகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது ?


கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை காவல் நிலையத்தின்  முகப்பு பலகையில் கட்டாயம் வைக்க வேண்டும்.  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்ட பிரிவு 37-ன் படி, இந்தத் தகவலைப் பராமரிக்கவும், முக்கியமாகக் காட்டவும் ஒரு அதிகாரி, குறைந்தபட்சம் ஒரு உதவி துணை-ஆய்வாளர் தேவை. பெயர்கள், முகவரிகள் மற்றும் குற்றங்களின் தன்மை கொண்ட பலகைகள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு வெளியே டிஜிட்டல் காட்சிகள் உடன் வைக்கப்பட வேண்டும். 


பலவீனமான, நோய்வாய்ப்பட்ட அல்லது வயதான நபர்களை கைது செய்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன என்று பிரிவு 35(7) கூறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனைக்குரிய குற்றம் சாட்டப்பட்ட மேற்படி பலவீனமான, நோய்வாய்ப்பட்ட அல்லது வயதான நபர் எனில், குறைந்தபட்சம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியின் அனுமதி பெற்று,  கைது செய்ய வேண்டும். சில சூழ்நிலைகளில் கைவிலங்குகள் (handcuffs) பயன்படுத்தப்படலாம். ஆனால் புலனாய்வு அதிகாரிகள் அவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தப்பிக்கவோ அல்லது தவறான குற்றங்களை செய்வதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைவிலங்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காலக்கெடு பற்றி  


பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவப் பரிசோதனைக்காக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதான் பிரிவு 184(6)-ன்படி பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் மருத்துவ அறிக்கையை ஏழு நாட்களுக்குள் விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். விசாரணை  அதிகாரிகள் அதை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். இந்த புதிய சட்டம் குறித்து மருத்துவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (Protection of Children from Sexual Offences Act (POCSO)) சட்ட வழக்குகள் இப்போது குற்றத்தைப் பதிவுசெய்த இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்முறை வழக்குகளுக்கு மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டது.


பிரிவு 193(3)(h)-ன் கீழ் புதிய விதியின்படி, ஒரு மின்னணு சாதனத்தின் பாதுகாப்பு வரிசையை விசாரணை அதிகாரி பராமரிக்க வேண்டும். மின்னணு சாதனங்கள் உணர்திறன் மற்றும் சேதமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்த பராமரிப்பு முக்கியமானது. மின்னணு பதிவுகளின் ஒருமைப்பாட்டை பராமரிக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தங்கள் திறமைகளை மேம்படுத்த வேண்டும். இந்த கட்டாய விதிகள் காரணமாக சைபர் நிபுணர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவு 90 நாட்களுக்குள் விசாரணையின் முன்னேற்றம் குறித்து தகவல் அளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.


பாரதிய நியாய சன்ஹிதாவின் சட்ட பிரிவு 113, ‘பயங்கரவாதச் செயலை’ (‘terrorist act’) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி இந்தப் பிரிவின் கீழ் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமா என்பதைத் முடிவு செய்ய வேண்டும். வழிகாட்டுதல்கள் எதுவும் சரியாக  வழங்கப்படாததால், UAPA-வின் கீழ் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதா, விசாரணைக்குத் தேவையான நேரம், விசாரணை அதிகாரிகளின்  பதவி, தேவைப்படும் ஆய்வு நிலை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரால் ஏற்படும் ஆபத்து போன்ற காரணிகளை  காவல் கண்காணிப்பாளர் கருத்தில் கொள்ள வேண்டும்.  


ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரி ஆவார்.



Original article:

Share:

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட HPV தடுப்பூசியின் உண்மை நிலவரம் -பி.ஓம்கார் நாத், ஒய்.மாதவி

 மனித பாப்பிலோமா வைரஸ்க்கு (human papilloma virus (HPV)) எதிராக பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சி அதன் நேரம், விளம்பரப்படுத்துதல் மற்றும் செலவு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.


மனித பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) எதிரான தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் (cervical cancer) அதன் விளைவாக ஏற்படும் மரணத்தையும் எவ்வாறு தடுக்கிறது என்பது குறித்து இந்தியாவின் பொது சுகாதாரத் துறை சமீபத்தில் ஒருதலைப்பட்சமான கலந்துரையாடலுக்கு உட்பட்டது. சுவாரஸ்யமாக, மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. மனிதர்களைப் பாதிக்கும் 200 இனங்களில் (strains) ஒன்றிரண்டு இனங்கள் மட்டுமே முன்-புற்றுநோய் காயங்கள் (precancerous lesions) தொடர்புடையவை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் (cervical cancer) இறக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் HPV வைரஸால் நேர்மறையாக தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆண்கள் உட்பட பெரும்பாலான HPV-நேர்மறை நபர்கள் புற்றுநோயை உருவாக்குவதில்லை அல்லது அதிலிருந்து இறப்பதில்லை.


இந்தியாவின் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள் (Population Based Cancer Registries (PBCR)) மற்றும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (International Agency for Research on Cancer (IARC)) ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பரவலில் சரிவைக் குறிப்பிட்டுள்ளன. இந்தப் போக்கு இந்தியாவிலும் உலக அளவிலும் காணப்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பு அல்லது செயல்திறனைப் பொருட்படுத்தாமல் இது காணப்படுகிறது. எனவே,  HPV க்கு எதிராக அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான வலுவான உந்துதல் நியாயமற்றது, ஏனெனில் HPV பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, காற்று, நீர் அல்லது தொற்றுநோயால் அல்ல, அதிக ஆபத்துள்ள குழுக்களில் கவனம் செலுத்துவது நல்லது.  மேற்கத்திய நாடுகளில் உள்ள இளம் பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவதற்கான ஒரு முக்கிய காரணம், பல பாலியல் பங்காளிகளைக் கொண்ட டீன் ஏஜ் பெண்கள் வைரஸைப் பரப்பலாம், இது அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த யோசனை இந்திய சமுதாயத்தில் சர்ச்சைக்குரியது மற்றும் நியாயமற்றதாக தோன்றுகிறது, ஏனெனில் ஆண்களும் வைரஸை பரப்பலாம். 


தடுப்பூசி உற்பத்தியின் தொடக்கம் 


இந்தக் கட்டுரையானது, உள்நாட்டு HPV-வைரஸ் தடுப்பூசிகளின் நேரம், விளம்பரப்படுத்தல் மற்றும் விலை நிர்ணயம் போன்ற மூன்று முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.  சில அதிக ஆபத்துள்ள மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் முக்கிய பயனுள்ளதாக உள்ளது என்று  கருதப்படுகிறது. இந்திய சீரம் நிறுவனம் (Serum Institute of India (SII)) 'செர்வாவாக்' (Cervavac) என்ற மருந்தை உருவாக்கி செலவு குறைந்த உள்நாட்டு தடுப்பூசியாக சந்தைப்படுத்தியது.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் காப்புரிமை பெற்ற HPV-வைரஸ்  தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த 'உள்நாட்டு' (indigenous) தடுப்பூசியை உருவாக்க கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஆனது ஏன் என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. HPV-வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு  rDNA நுட்பங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வைரஸ் போன்ற துகள்களை (virus-like particles (VLPs)) செர்வாவாக் (Cervavac) என்ற மருந்து பயன்படுத்துகிறது. 1970-களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட ஹெபடைடிஸ்-பி (Hepatitis-B) தடுப்பூசியைத் தொடர்ந்து, இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (cervical cancer) தடுப்பூசி உலகளவில் இரண்டாவது rDNA தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.


rDNA முறைகளுக்கு முன்பு, தடுப்பூசிக்கான உற்பத்தி பெரும்பாலும் தொண்டு அல்லது பொதுத் துறைகளால் நிர்வகிக்கப்பட்டது. இதன் இனங்கள் (strains) மற்றும் தொழில்நுட்பங்களின் பரவலான பகிர்வு இருந்து வருகிறது. மேலும், இதன் தடுப்பூசிகள் பொதுவாக காப்புரிமை பெறவில்லை. 1980-களில் அமெரிக்க காப்புரிமைச் சட்ட (U.S. Patent Act) திருத்தங்களுடன் இது மாறியுள்ளது. இது, மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (genetically modified organisms (GMO)) மற்றும் வாழ்க்கை செயல்முறைகளுக்கு காப்புரிமை பெற அனுமதித்தது. பே-டோல் சட்டம் (Bayh-Dole Act) பொது நிதியுதவி பெற விஞ்ஞானிகள் மூலம் நிறுவனங்களை நிறுவ அனுமதித்தது. இது தடுப்பூசிக்கான கண்டுபிடிப்புகளை மேலும் மாற்றியது. 1995 முதல் டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் (Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) மூலம் அமெரிக்க காப்புரிமைச் சட்டங்களை உலகளவில் ஏற்றுக்கொண்டது உலகளவில் தடுப்பூசியின் வளர்ச்சியை கணிசமாக மாற்றியது.


தடுப்பூசி கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டது. இந்த மாற்றங்கள் அதன் அமைப்பு, காப்புரிமைக்கான உத்திகள் மற்றும் கல்வி மற்றும் தொழில்துறை இரண்டிலும் விநியோக நடைமுறைகளை பாதித்தன. இந்த 'மதிப்பு கூட்டுதலின்' (value addition) முக்கியமான அம்சம், பொது 'ஆராய்ச்சியை' தனியார் வளர்ச்சியாக மாற்றுவதை சட்டப்பூர்வமாக்குவதாகும். இந்த செயல்முறையால் காப்புரிமை மூலம் ஏகபோகத்தையும் உள்ளடக்கியது. தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி உலகளவில் பொதுமக்களிடமிருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் அரசியலால் உதவியது. வில்லியம் முராஸ்கின், "சர்வதேச ஆரோக்கியத்தின் அரசியல்: குழந்தைகளுக்கான தடுப்பூசி முயற்சி மற்றும் மூன்றாம் உலகத்திற்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான போராட்டம்" (The Politics of International Health: The Children’s Vaccine Initiative and the Struggle to Develop Vaccines for the Third World) என்ற புத்தகத்தில் இதைப் பற்றி விவாதித்தார். சமீபத்தில், ஸ்டூவர்ட் ப்ளூம் (Stuart Blume) மற்றும் பாப்டிஸ்ட் பேலாக்-பாவ்லி (Baptiste Baylac-Paouly) ஆகியோரால் திருத்தப்பட்ட ஒரு தொகுப்பு, "நோய்த்தடுப்பு மற்றும் நாடுகள்: தடுப்பூசி தயாரிப்பதற்கான அரசியல்" (Immunization and States: The Politics of Making Vaccine) என்ற தலைப்பில், இந்திய சூழ்நிலையை உள்ளடக்கியது மற்றும் இந்த தலைப்பை மேலும் விரிவாகக் கூறியது. இந்த புதிய கண்டுபிடிப்பின் நிலைமைகளின் கீழ் உருவாக்கப்பட்டது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (cervical cancer) முதல் தடுப்பூசியாக மெர்க்கால் கார்டசில் (Gardasil) மற்றும் உலகளவில் கிளாக்சோ ஸ்மித்க்லைன் மூலம் செர்வாரிக்ஸ் (Cervarix) என விற்பனை செய்யப்பட்டது. 


HPV-வைரஸ் தடுப்பூசி பின்தங்கிய குழுக்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது : ஆய்வு  


இந்தியாவில் தாக்கம் 


இந்த முன்னேற்றங்கள் பொதுவாக இந்திய மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையிலும் குறிப்பாக தடுப்பூசி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில், இந்திய காப்புரிமைச் சட்டம்-1970 (Indian Patent Act)  விவசாய மற்றும் உயிரியல் தயாரிப்புகளைத் தவிர்த்து செயல்முறை காப்புரிமைகளை மட்டுமே அனுமதித்தது. இது உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியை வளர்த்து, இருபதாண்டுகளுக்குள் இந்தியாவை உலகளாவிய மருந்தகமாக மாற்றியது. அவை உலகளாவிய வடக்கில் (global north) அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குறைவான விலையில் பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தன. உதாரணமாக, ஹெபடைடிஸ்-பிக்கு (hepatitis-B) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.டி.என்.ஏ தடுப்பூசி (rDNA vaccine), செயல்முறை காப்புரிமையின் (process patent) கீழ் ஐந்து ஆண்டுகளுக்குள் சந்தையில் நுழைந்தது மட்டுமல்லாமல், உலகளாவிய வடக்கை (global north) விட குறைவான விலையில்  விநியோகித்தது. 


இருப்பினும், தற்போதைய தயாரிப்பு காப்புரிமை ஆட்சியின் கீழ், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கெதிராக (cervical cancer) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டி.என்.ஏ தடுப்பூசி (DNA vaccine) தயாரிப்பு காப்புரிமை (product patents) காலாவதியாகும் வரை இருபதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization) முக்கிய HPV தடுப்பூசி காப்புரிமைகளின் காலாவதியை அறிவித்தது. இது நேச்சர் பயோடெக்னாலஜியில் (Nature Biotechnology) பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் தடுப்பூசியை உருவாக்குவதில் தாமதமானது பெரும்பாலும் பன்னாட்டு காப்புரிமை ஏகபோகங்களால் ஏற்படுகிறது. இருப்பினும், செர்வாவாக்கின் (Cervavac) அதிக சந்தை விலை புதிராகவே உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு முன்பு, இரண்டு பன்னாட்டு தடுப்பூசிகள் (கார்டசில் மற்றும் செர்வாரிக்ஸ்) இந்தியாவில் ஒரு டோஸுக்கு ₹.4,000 -மாக விற்கப்பட்டன. அந்த விலையில் பாதி விலையில் இருந்தாலும், தனியார் சந்தையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி இன்னும் பெருமளவில் கட்டுப்படியாகவில்லை. இது தேவைப்படும் மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு தடுப்பூசியை எட்டாதவாறு வைத்திருக்கிறது. இன்னும் கவலையான விஷயம் என்னவென்றால், நியாயமற்ற விலை நிர்ணய உத்திதான் காரணமாக உள்ளது. இதன் விலை உண்மையில் உற்பத்தி செலவுகளை பிரதிபலிக்காது. முதலாவதாக, இந்தியத் தொழில்துறையானது rDNA தயாரிப்புகளை, குறிப்பாக தடுப்பூசிகளை, குறிப்பிட்ட அளவில் தயாரிக்க உள்கட்டமைப்பு ரீதியாக நல்ல நிலையில் உள்ளது. இரண்டாவதாக, செர்வாவாக்கின் வளர்ச்சிக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill & Melinda Gates Foundation (BMGF)) பெரும் சவால்கள் நிதியிலிருந்து (Grand Challenges Fund) கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலர் உட்பட கணிசமான நிதி கிடைத்தது. மூன்றாவதாக, செர்வாவாக் தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்பு கோவிஷீல்ட் தடுப்பூசி (Covishield vaccine) உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் (Department of Biotechnology) கணிசமாக ஆதரிக்கப்படுகிறது.


வளங்களின் இத்தகைய பகிரப்பட்ட பயன்பாடு, மிகவும் குறைவான விலை நிர்ணயத்தை செயல்படுத்த உண்மையான தடுப்பூசிக்கான உள்ளீடு செலவுகளைக் குறைத்திருக்க வேண்டும். இதனால், இந்திய சீரம் நிறுவனத்தின் (Serum Institute of India(SII)) விலை நிர்ணய உத்தியில் சந்தேகம் எழுகிறது. குறைந்த வர்த்தக அளவிலும் கூட அதிக அளவு லாபம் ஈட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வர்த்தகத்தை அதிகரிக்க அதன் அளவு மற்றும் குறைந்த விளிம்பு விலை நிர்ணயம் ஆகியவற்றின் பொருளாதாரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இது செய்கிறது. எந்தவொரு தடுப்பூசியின் வெற்றிக்கும் அதிக மக்கள் தொகை பாதுகாப்பு முக்கியமானது. எனவே, இந்த அணுகுமுறை பொது சுகாதாரத்திற்கு அவசியம்.


போட்டியிடும் தடுப்பூசிகள் மிகக் குறைவு


உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து போட்டியிடும் பிற தடுப்பூசிகள் இல்லாதது மற்றொரு தீவிர கவலையாகும். இந்த போட்டியிடும் தடுப்பூசிகள் Cervavac இன் தற்போதைய விலையை குறைத்திருக்கலாம். 2010-ம் ஆண்டு முதல் மற்ற உள்நாட்டு நிறுவனங்களால் குறைந்தது நான்கு வெவ்வேறு தடுப்பூசி போட்டியாளர்கள் உருவாக்கத்தில் இருப்பதால் இது ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சாந்தா பயோடெக்னிக்ஸ், மலிவான rDNA ஹெபடைடிஸ்-பி தடுப்பூசியை (rDNA Hepatitis-B vaccine) தயாரித்தது. அந்த நிறுவனம் 2015-ம் ஆண்டிற்குள் குறைவான விலையில் HPV தடுப்பூசியை சந்தைக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தது. அவர்கள் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உரிமங்களைப் பெற்றனர். இருப்பினும், பாரிஸில் உள்ள சனோஃபி பாஸ்டர் (Sanofi Pasteur) என்பவர் சாந்தாவை வாங்கிய பிறகு இந்தத் திட்டம் சரிவைச் சந்தித்தது. சனோஃபி பாஸ்டர், மெர்க்கின் கார்டாசிலுடன் (Merck’s Gardasil) பல வழிகளில் தொடர்பு கொண்டிருந்தார். சாந்தா பயோடெக்னிக்ஸ், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ், பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகியவற்றின் அறிவிப்புகள் ஒரே நேரத்தில் இருந்தபோதிலும், அவற்றின் தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை. இது முந்தைய காப்புரிமை தடைகள் காலாவதியான பின்னர் இன்னும் கவலைகளை எழுப்புகிறது. சாந்தா பயோடெக்னிக்ஸ் (Shantha Biotechnics), இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ் (Indian Immunologicals), ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் (Bharat Biotech) மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஜிடஸ் காடிலா (Zydus Cadila) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் HPV தடுப்பூசிகளை அறிவித்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அதே நேரத்தில் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், முந்தைய காப்புரிமை தடையின் காலாவதிக்குப் பிறகு அவை கிடைக்காதது கவலைக்குரியது.

 

தற்போது, ஒன்பது முதல் 26 வயதுடைய சிறுமிகளுக்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக செர்வாவாக் தடுப்பூசி (Cervavac vaccine) உள்ளது. இதன் விலை இரண்டு டோஸ்களுக்கு ₹.500 ஆகும். இந்த விலை அதிகமாகக் கருதப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களின் கீழ் வராத மில்லியன் கணக்கானவர்களுக்கு, Cervavac இன் சில்லறை விலை கடுமையாக உயர்ந்து ₹2,000 ஆக இருக்கும். குறைந்த காப்பீட்டுத் திட்ட பாதுகாப்பு மற்றும் அதிக கையுருப்புச் செலவு மீறி (out-of-pocket) சுகாதார செலவுகள் உள்ள ஒரு நாட்டில் கவலை அளிக்கிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் (cervical cancer) தடுப்பதற்கான அனைவருக்குமான HPV தடுப்பூசி பற்றிய நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், போட்டியின்மை மற்றும் தெளிவற்ற விலை நிர்ணயம் அதன் பொது தாக்கத்தின் காரணமாக ஆராயப்பட வேண்டும்.   


ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பி.ஓம்கார் நாத் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். ஒய். மாதவி முன்பு புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனத்தில் (CSIR-NISCAIR) முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றினார்.


Original article:

Share:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் -த.ராமகிருஷ்ணன்

 ஆர்.சம்பந்தன் தமிழர் பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை, ஆனால் அவர் குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு உறுதிபடுத்தும் சக்தியாகக் காணப்பட்டார்.


இலங்கை தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் காலமானார். அவரது மரணம் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த உள்நாட்டுப் போரின் அதிர்ச்சியை தமிழர்கள் இன்னும் எதிர்கொள்கின்றனர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சம்பந்தன் பெரிய முன்னேற்றத்தை அடையாவிட்டாலும், குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர் ஒரு உறுதிபடுத்தும் சக்தியாகக் காணப்பட்டார். சிங்களத் தலைமைகள் உட்பட அனைவருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


தமிழர் தலைவர்


1949 இல் இலங்கை தமிழ் அரசு கட்சியை (Ilankai Tamil Arasu Katchi (ITAK))  நிறுவிய எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பின்பற்றிய சம்பந்தன்,  1977 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை (ITAK)-ஐ உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (Tamil United Liberation Front (TULF)) 17 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக முதன்முதலில் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தொகுதிகளில் தனி மாநிலத்தை வாதாடி வெற்றி பெற்றது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறையால் பல தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதற்க்கு வழிவகுத்தது, இனப்பிரச்சினையில் புதுடெல்லியை தலையிட தூண்டியது. 1984-ல் ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானபோது இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. 


ராஜீவ் காந்தியின் தலைமையின் கீழ், தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாறியது. ஒரு காலத்தில் தமிழர்களின் ஒரே குரலாகக் கருதப்பட்ட இந்தக் கூட்டணி, இலங்கைக்குள் ஒரு அரசியலமைப்பு தீர்வை நோக்கமாகக் கொண்ட 1985 திம்பு பேச்சுவார்த்தைகளில் (Thimpu talks seeking) ஈடுபட்டதை போல, பல பிரதிநிதிகளில் ஒன்றாக மாறியது. பின்னர் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணக்கமான செயல்பாட்டைத் தொடங்கியது. 13 வது சட்ட திருத்தத்தின் (13th Amendment) கீழ் கட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியுடன் மாகாண சபைகளை உருவாக்க 1987 ஜூலையில் ராஜீவ்-ஜெயவர்தன உடன்படிக்கை (Rajiv-Jayawardene Accord of July 1987), இந்தியா பிரதமர் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர்களை விலக்கியது. இந்த மாற்றம் சம்பந்தனுக்கும் ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உடன்படிக்கை இருந்த போதிலும், தமிழ் தலைவர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்காததால், 1985 முதல் 2000 வரை புலிகளின் நடவடிக்கைகளில் நீலன் திருச்செல்வம் மற்றும் அ.அமிர்தலிங்கம் போன்ற அறிஞர்களும் மிதவாதிகளும் கொல்லப்பட்டனர்.


2000களில், சம்பந்தன் சில முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் (Liberation Tigers of Tamil Eelam) குறிவைக்கப்பட்டவராய் இருந்தாலும்,  சம்பந்தன் 2001 பாராளுமன்றத் தேர்தலின் போது புலிகளின் நோக்கத்தை நடைமுறையில் ஆதரிக்கத் தொடங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் 2001ல் நிறுவப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance (TNA)), இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்தது. 2000ல் ஐந்து இடங்களை வென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 2001ல் 15 இடங்களாக அதிகரித்தது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 109 இடங்களில் வென்று ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியது. அடுத்த ஆண்டு, 2002ல், விக்ரமசிங்கேவின் அரசு, விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நார்வே நாடு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்தது.


2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தீவிர மோதலைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தினார். 2009ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அரசியல் தீர்வைக் காண்பது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவ்வப்போது அரசாங்கத்துடன் உடன்படவில்லை. எவ்வாறாயினும், கடந்த 15 வருடங்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு முக்கிய தேர்தலிலும் எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்காமல் பங்கேற்றுள்ளது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் முதலமைச்சர் சி.வி. சம்பந்தனால் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் (2013-2018) தோல்வியடைந்தார். 2010 மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தல்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு  எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தது: விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்த ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன எதிர்பாராதவிதமாக ராஜபக்சேவை தோற்கடித்தபோது, ​​தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.


பொருளாதார சீரமைப்பு


உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சம்பந்தனின் ஆக்கபூர்வமான செயல்பாடு, நீதி மற்றும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அடைவதில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர். அவர்கள் கூட்டாட்சி மற்றும் தனி உரிமையை இலக்காகக் கொண்டிருந்தனர், இருப்பினும் இந்த இலக்குகளை அடைய முடியவில்லை.  


ராஜபக்சே 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்க்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ள நிலையில், துரதிஷ்டவசமாக,  சம்பந்தன் தலைமையிலான அரசு இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை.  


இலங்கைத் தமிழ் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் மேற்கு நாடுகளுக்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை விட்டுவிட்டு, சிங்களத் தலைமையுடன் அதிக அதிகாரங்களைப் பகிர்வதற்கான பேச்சு வார்த்தையினால் எந்தப் பயனும் இல்லை.  


வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்கள் திறமையற்ற தொழிலாளர்களுக்காகவும், மேலதிக கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதை விரும்புகிறார்கள். இந்த பிராந்தியங்களில் பொருளாதார பலம் இல்லா நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. 


சம்பந்தனின் இறுதிக் காலத்தில் அவர் தனது அரசியல் குழுவிற்குள் தனிமைப்படுத்தப்பட்டவராகத் இருந்தார். இது இலங்கைத் தமிழர்கள் சமூகத்திலிருந்து விலகியிருப்பதைப் பிரதிபலிக்கிறது, பெரும்பாலும் சிங்களத் தலைவர்கள் தங்கள் செயல்திட்டங்களை நிவர்த்தி செய்யத் தவறியதன் காரணமாக,  தமிழ் அரசியல் தலைவர்கள் இப்போது தமிழர்களுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதிலும், இளைஞர்கள் உயர் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் மீதான தார்மீகப் பொறுப்பைக் கொண்ட இந்தியா, சம்பந்தன் பரிந்துரைத்ததைப் போல, "ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத" (united, undivided, indivisible) இலங்கையில் தமிழ் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.


Share: