பணமோசடி தடுப்பு சட்டத்தின் (Prevention of money Laundering Act (PMLA)) மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய இருக்கிறது : வழக்கு என்ன?

 உச்சநீதிமன்றம் அதன் சொந்த தீர்ப்புகளை அரிதாகவே மதிப்பாய்வு செய்கிறது. தீர்ப்புகளில் உள்ள சில தவறுகளை சரி செய்து நீதியை நிலை நிறுத்துவதே உச்ச நிதிமன்றத்தின் நோக்கமாகும். 


என்ன வழக்கு ?


ஜூலை 27, 2022 அன்று, விஜய் மதன்லால் சவுத்ரி வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா (Vijay Madanlal Choudhary v. Union of India ) வழக்கில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் முக்கிய விதிகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 540 பக்க தீர்ப்பில், மனுதாரர்களால் சவால் செய்யப்பட்ட அனைத்து பிரச்சினைகளிலும் அரசாங்கத்தின் வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பிணை (bail) வழங்கும்போது குற்றமற்றவர் என்ற அனுமானத்தை மாற்றியமைப்பது முதல் நிதிச் சட்டத்தின் கீழ் பண மசோதாவாக திருத்தங்களை நிறைவேற்றுவது மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate (ED)) அதிகாரங்களை வரையறுப்பது ஆகியவை இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஒரு மாதம் கழித்து, ஆகஸ்ட் 25, 2022 அன்று, மதன்லால் முடிவை மறுபரிசீலனை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்தது. இந்த மனுவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவில் உள்ள இரண்டு விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது.


மதிப்பாய்வுக்கான (grounds for review) காரணங்கள் என்ன?


பிணை (bail) விதிகள்: மதன்லால் வழக்கில், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கடுமையான பிணை நிபந்தனைகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பணமோசடி தடுப்பு சட்டத்தின்  பிணை விதிகளை (bail provisions) உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


மனுதாரர்கள் முதல் தகவல் அறிக்கை , குற்றப்பத்திரிக்கை அல்லது வழக்கு நாட்குறிப்பு இல்லாமல், அரசுத் தரப்பு பயன்படுத்திய ஆவணங்கள் இல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தாம் குற்றவாளி இல்லை என்ற உண்மையை  நிரூபிக்க முடியாது என்று வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றவாளிகள் இல்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் காட்ட முடியாது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.


அமலாக்க இயக்குநகரமானது ‘’காவல்துறையிலிருந்து’’ வேறுபட்டது: 


மதன்லால் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பணமோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 50-ஐ உறுதிப்படுத்தியது. இது அமலாக்க இயக்குநகரக அதிகாரிகளுக்கு எந்தவொரு நபரிடமிருந்தும் உறுதிமொழியை பதிவு செய்ய அதிகாரம் அளிக்கிறது. காவல்துறைக்கு அளிக்கப்படும் அறிக்கைகள் அல்லது வாக்குமூலங்களைப் போல் இல்லாமல் அமலாக்க இயக்குநகரக நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அமலாக்க இயக்குநகரக அதிகாரிகள் "காவல்துறை அதிகாரிகள்" அல்ல என்றும்,  விசாரணை அமைப்பின் அதிகாரிகள்  என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. மேலும், அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்யப்பட்ட நபரிடம் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையின் (Enforcement Case Information Report (ECIR)) நகலை வழங்கத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமலாக்க இயக்குநரகம் தனது முடிவை எடுக்கும்போது தண்டனை அதிகாரங்களை வழங்கும் தெளிவான விதிகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.


தீர்ப்பு எவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படுகிறது?


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது மற்றும் பிணைப்புக்குரியது (binding). எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 137-வது (Article 137) பிரிவு அதன் தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குகிறது. தீர்ப்பு வெளியான 30-நாட்களுக்குள் மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்ய வேண்டும். மரண தண்டனை தொடர்பான வழக்குகளைத் தவிர, மறு ஆய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்காமல், நீதிபதிகள் தங்கள் அறைகளில் "சுழற்சி" முறையில் விசாரிக்கின்றனர். வழக்கறிஞர்கள் பேசும் வாதங்களுக்குப் பதிலாக எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளுடன் தங்கள் வழக்கை முன் வைக்கின்றனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் மறுஆய்வு மனு மீதும் முடிவு செய்கிறார்கள்.


உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்புகளின் மதிப்பாய்வுகளை அரிதாகவே வழங்குகிறது. நீதியின் சிதைவுக்கு காரணமான கடுமையான பிழைகளை சரிசெய்வதற்கு குறுகிய அளவில் மறுஆய்வு அனுமதிக்கப்படுகிறது. "பதிவின் முகத்தில் ஒரு தவறு தெளிவாகத் தெரிகிறது" என்பது மறுபரிசீலனை செய்யப்படும் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த தவறு கண்கூடாக மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.



Original article:

Share:

வினேஷ், ஒலிம்பிக், தகுதி நீக்கம் : எடை குறைப்பு என்றால் என்ன? ஏன் அது சர்ச்சைக்குரியதாக மாறியது? -அர்ஜுன் சென்குப்தா

 எடை குறைப்பு என்பது மல்யுத்த விளையாட்டுகளில் ஒரு பொதுவான நடைமுறை. ஆனால், எடை குறைப்பு பல  எதிர்ப்புகளைக் கொண்டுள்ளது. குறுகிய காலத்தில், உடல் எடையை குறைப்பதால் பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னதாக, காலையில் நடைபெற்ற  எடையிடுதல் நிகழ்வுக்கு பிறகு அதிகாரப்பூர்மாக  தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


போட்டியன்று காலையில் வினேஷ் போகத் எடையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள்  இருப்பது கண்டறியப்பட்டது. முதல் நாள் இரவு அவர் 2 கிலோ அதிக எடையுடன் இருந்ததாகவும், அவர் எடையை இரவு முழுவதும் குறைக்க முயன்றும் அவரால் எடை குறைப்பு செய்ய முடியவில்லை எனவும் தெரிகிறது. வினேஷ் போகத்தின் நிலைமை, மல்யுத்த விளையாட்டுகளில் உள்ள எடை குறைப்பு எனும் ஒரு பெரிய சிக்கலைக் காட்டுகிறது. சமீபகாலமாக, விளையாட்டு வீரர்கள் தங்கள் போட்டிக்கு முன்பு உடல் எடையை கடுமையாகக் குறைத்து, பின்பு எடை அதிகரிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ, கலப்பு தற்காப்புக் கலைகள், முதலியன அவர்களின் எடை பிரிவுகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது நியாயமான போட்டி முறைகளை உருவாக்க செய்யப்படுகின்றன. ஒரே மாதிரியான எடை கொண்ட விளையாட்டு வீரர்கள் ஒரே மாதிரியான உடல் பண்புகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எடை பிரிவுகள் இல்லாமல் இருந்தால் அதிக எடை கொண்டவர்கள், குறைவான எடை கொண்டவர்கள் திறமையானவர்களாகவும் இருந்தாலும் அவர்களை  எளிதில் வீழ்த்திவிடலாம்.


ஒரு குறிப்பிட்ட எடை வகுப்பில் உள்ள விளையாட்டு வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும். இருப்பினும், ஒருவரின் எடை எப்போதும் நிலையானது அல்ல. ஆனால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, தண்ணீர், மேற்கொள்ளும் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் பிற உடல் செயல்பாடுகள் வரை பல காரணிகளைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும்.  மேலும், ஒரு போட்டி முழுவதும் ஒரு தடகள வீரரின் எடையை தொடர்ந்து கண்காணிப்பது என்பது நடைமுறைக்கு மாறானது. விளையாட்டு வீரர்கள் தங்கள் எடை வகுப்பு பிரிவுகளை உறுதிசெய்ய, மல்யுத்த விளையாட்டுகளில் எடை சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர். 


ஐக்கிய உலக மல்யுத்தம் (United World  Wrestling’s) ஒலிம்பிக்ஸ் விதிகளின்படி, மல்யுத்த வீரர்கள் தங்கள் போட்டியன்று காலையில் எடையிடப்படுகிறார்கள். ஒலிம்பிக் போட்டி இரண்டு நாட்களுக்கு நடைபெறுவதால், இரண்டு எடை அளவு முறைகள் உள்ளன. முதல் நாள் 30 நிமிடங்களும் இரண்டாம் நாள் 15 நிமிடங்கள் இடைவெளியில் எடையிடப்படுகின்றனர். 


மற்ற விளையாட்டுகள் அல்லது போட்டிகள் எடையிடல் தொடர்பாக வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். உண்மையில், ப்ரோ குத்துச்சண்டை (pro boxing) அல்லது தற்காப்புக் கலைகள் போன்ற விளையாட்டுகளில் சண்டையிடுவதற்கு அவர்களின் எடை நிறுத்தங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தடகள வீரர்களை எடை போடுவதையும், அவர்கள் தங்கள் போட்டியாளருடன்  நேருக்கு நேர் மோதுவதையும் பார்க்கிறார்கள்..


எடை குறைப்பு என்றால் என்ன? மோதல் விளையாட்டு வீரர்கள் ஏன் எடை குறைக்கிறார்கள்?


எடை குறைப்பு என்பது விளையாட்டு வீரர்கள் குறுகிய காலத்தில் தங்கள் எடையைக் கடுமையாக குறைப்பது ஆகும். எடையிடும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடையை உருவாக்க விளையாட்டு வீரர்களால் இது செய்யப்படுகிறது.


பெரும்பாலான மல்யுத்த விளையாட்டு வீரர்கள், ஒரு போட்டிக்கு முன் எடையைக் குறைத்து,  குறைவான  எடையுடன் இருப்பது அவர்களுக்கு நன்மையை அளிக்கிறது என்று நம்புகிறார்கள்.  எடை குறைப்பு என்பது உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதை உள்ளடக்கியது. வியர்வை வெளியேற்றுதன்  மூலம்  எடையைக் குறைக்கலாம். எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் விளையாட்டு வீரர்கள் எடையிடுவதற்கு முன், தண்ணீர் குடிப்பதில்லை, எடை அதிகமுள்ள ஆடைகளை அணிவதில்லை, எந்த உணவையும் உட்கொள்ள மாட்டார்கள்.


எடையிடுதலுக்குப் பிறகு, விளையாட்டு வீரர்கள் நிறைய திரவங்களை குடிப்பதன் மூலமும், அதிக கார்போஹைட்ரேட்டு உணவுகளை உட்கொள்வதன் மூலமும் விரைவாக எடையை மீட்டெடுக்க முடியும். இது வழக்கமாக பல மணிநேரங்கள் அல்லது ஒரு நாள் கழித்து நடக்கும் சண்டையில் ஒரு நன்மையை தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இதை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் இன்னும் தெளிவாக இல்லை.


எடை குறைப்பதால் ஏற்படக்கூடிய சில தீங்குகள் என்ன?


ஒரு விளையாட்டு வீரர் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் ஒரு குறுகிய காலத்தில் எவ்வளவு எடையை பாதுகாப்பாக குறைக்க முடியும் என்பதற்கு வரம்புகள் உள்ளன. சில சமயங்களில் உயர்மட்ட செயல்திறன் விளையாட்டுகளில், விளையாட்டு வீரர்கள் ஆபத்தான முடிவுகளுடன்  இந்த வரம்புகளைத் தளர்த்தலாம்.


2018-ஆம் ஆண்டில்,  அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (Ultimate Fighting Championship (UFC))  பங்கு பெற்ற போட்டியாளர் உரியா ஹால் (Uriah Hall) எடை குறைப்பின் போது "சிறிய அளவிலான வலிப்பு" மற்றும் "லேசான மாரடைப்பால்" பாதிக்கப்பட்டார் என்று அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்யின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 2015-ஆம் ஆண்டில், ஒன் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட சீன குத்துச்சண்டை போட்டியாளர் யாங் ஜியான் பிங் (Yang Jian Bing) எடையைக் குறைக்கும் போது நீரிழப்பு காரணமாக இறந்தார்.


கடுமையான நீரிழப்பு, எடை இழப்பு போன்றவை கடுமையான இருதய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உருவ அமைப்பை மாற்றுகிறது. வெப்ப பக்கவாதம் (heat stroke) போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் ஓ ஆர் பார்லி (O R Barley), டி டபிள்யூ. சாப்மேன் (D W. Chapman) மற்றும் கிறிஸ் அபிஸ் (Chris Abbiss) ஆகியோர் ஸ்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், தீவிர எடை குறைப்பு,  ஹார்மோன் சமநிலையின்மை, இன்சுலின் உணர்திறன் மாற்றங்கள், எலும்பு இழப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றனர்.


எடை குறைப்பு மிகவும் ஆபத்தானது, ஆனால் தற்போதுள்ள விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு இடையே விரைவாக எடையை குறைப்பது மற்றும் அதிகரிக்கப்பதன் மூலம் போட்டியில் வெற்றி முடியும் என்று நினைக்கிறார்கள்.


 எடை குறைப்பு தடை செய்யப்பட வேண்டுமா?


சில நிபுணர்கள் எடை குறைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருப்பினும், எல்லோரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக விளையாட்டு வீரர்கள், கடுமையான, நீண்ட கால பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் எடையை பாதுகாப்பாக குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.


2020-ஆம் ஆண்டு அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் வீரர் ஒருவர், "பாதுகாப்பு என்பது விளையாட்டு வீரர் அதை எவ்வாறு அணுகுகிறார்" மேலும், விளையாட்டு வீரரின் குழு எவ்வளவு அறிவாற்றல் கொண்டது என்பதைப் பொறுத்தது என்றார். சிலர் எடை போடுவதற்கு முந்தைய நாள் நான்கு அல்லது ஐந்து கிலோ குறைத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. படிப்படியாக எடையைக் குறைத்தல் என்பதே சிறந்தது.


ஒரே நேரத்தில் எடை குறைப்பை செய்வதை விட ஒரு வாரத்தில் படிப்படியாக எடையைக் குறைப்பது பாதுகாப்பானது என்று பல மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், எந்தவொரு எடை குறைப்பு முறையும் உண்மையிலேயே பாதுகாப்பானது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர், மேலும், "பாதுகாப்பான உத்திகள்" (safe strategies) என்று அழைக்கப்படுவதுகூட ஒரு தடகள வீரரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எடை குறைப்புடன் தொடர்புடைய பயிற்சியில்  உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய அபாயங்கள் இருந்தபோதிலும், அத்தகைய தலைப்புகளில் ஆபத்தான சிறிய ஆராய்ச்சிகளே உள்ளது" என்று பார்லி (Barley) குறிப்பிட்டுள்ளார்.


அத்தகைய தடை எவ்வாறு வேலை செய்யும்?


யாங்கின் மரணத்திற்குப் பிறகு, ஒன் சாம்பியன்ஷிப் (ONE Championship) விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காக எடை குறைப்பதைத் தடைசெய்தது மற்றும் பிற விளையாட்டுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இந்த அணுகுமுறையை பரிந்துரைத்தது. அவர்களின் முறையானது போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடையிடுதல் மற்றும் நீரிழப்பை சரிபார்க்க சிறுநீர் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஒன் சாம்பியன்ஷிப் (ONE Championship) அமைப்பின் தலைவர், ரிச் ஃபிராங்க்ளின் (Rich Franklin) 2017-ஆம் ஆண்டு,  "எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் உண்மையான எடையில் போட்டியிடுவதை உறுதிசெய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம், அதை சரிபார்க்க நீரேற்ற சோதனைகளைப் பயன்படுத்துகிறோம்" என்றார்.


முக்கியமாக, தற்காப்பு கலை விளையாட்டுகளில் (Mixed martial arts (MMA)) விளையாட்டு வீரர்கள் சற்று அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு சில வழிகளை வழங்குகிறது. “தடகள வீரர்களுக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அவர்கள் போட்டியிட அனுமதிக்க மாட்டோம். ஆனால், அவர்கள் எடை வரம்பை விட சற்று அதிகமாக இருந்தாலும் சரியாக நீரேற்றமாக இருந்தால், கேட்ச்வெயிட் (catchweight) முறைக்கு ஏற்பாடு செய்யலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. மேலும், அவர்கள் மற்ற போட்டியாளர் எடையில் குறைந்தது 105% எடையைக் கொண்டிருக்க வேண்டும்.


மற்ற விளையாட்டுகள் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை, ஆனால் எடை குறைப்பை ஊக்கப்படுத்த சில மாற்றங்களைச் செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் மல்யுத்த வீரர்கள் போட்டிக்கு முன் அதிக எடையை இழப்பதைத் தடுக்க இரண்டு வெவ்வேறு நாட்களில் எடைபோடுகிறார்கள். பின்னர், விரைவாக அதைத் திரும்பப் பெறுகிறார்கள்.



Original article:

Share:

மிகுதிகளின் வழக்கு : பூஜா கேத்கர் வழக்கு குறித்து . . .

 புஜா கேத்கர் குடிமைப் பணியில் நுழைந்தது, பணியமர்த்தலுக்கான செயல்முறை குறித்து கேள்விக்குள்ளாக்குகிறது.


ஒழுங்குமுறை விதியின் மீது செயல்பட்ட ஒரு மோசமான விதிமீறல் கூட முழு செயல்முறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பூஜா கேத்கரின் (Puja Khedkar) வழக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உதாரணமாகப் பார்க்கப்பட்டது. அவர் சட்டத்தை மீறிய வழிகள் நம்பமுடியாததாகத் தோன்றினாலும் அவை உண்மைதான். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்  (Union Public Service Commission (UPSC)) வேலைவாய்ப்பு தொடர்பான வழிமுறைகளில் அவர் தவறான கையாளுதல் மற்றும் சூழ்ச்சி மூலம் விதிமீறலை ஏற்படுத்தியுள்ளார். அவர் மனநோய் மற்றும் பார்வைக் குறைபாடு என்று கூறி, ஒரு சாதிச் சான்றிதழை (community certificate) போலியாக உருவாக்கி, மாற்றுத்திறனாளி சான்றிதழைப் (disability certificate) பயன்படுத்தி இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேத்கருக்கு ஊனமுற்றோர் சான்றிதழை வழங்கிய புனே மருத்துவமனை, அவருக்கு 7% இயக்கத் தன்மை (லோகோமோட்டர்) மாற்றுத்திறனாளி (locomotor disability) சான்றிதழ் மட்டும் அளித்ததாகக் கூறியது. இந்த சான்றிதழ் மூலம், சலுகைகளைப் பெறுவதற்கு இந்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் பயனுள்ளதாக இருந்திருக்காது. ஏனெனில், இவர்கள் பயனடைவதற்கு கூடுதல் சான்றிதழ் தேவைப்பட்டது. உண்மையான மாற்றுத்திறனாளிகள் தங்கள் சான்றிதழைப் பெறுவதற்கு பல தடைகளை கடக்க வேண்டும். மாற்றுத்திறனாளியை போலியாகக் காட்டி சான்றிதழைப் பெறுவது அவருக்கு ‘இதில், சிலர் மற்றவர்களை விட அதிக சலுகை பெற்றவர்களா?’ என்ற ஒரு கேள்வியை எழுப்புகிறது. அவர் தன் தந்தையின் சிவில் சர்வீஸ் பதவியைப் பயன்படுத்தி, தனக்கு கிடைக்காத பலன்களைப் பெற்றிருந்தார். அவர் ஒரு போலி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் (OBC certificate) மற்றும் பல அடையாளங்கள் மூலம் தேர்வினை எதிர்கொள்ளப் பயன்படுத்தினார். மேல்நிலையினருக்கான (creamy layer) விலக்கு அளவுகோல்களைத் தவிர்ப்பதற்காக, தனது பெற்றோர் விவாகரத்து செய்ததாக அவர் பொய்யாகக் கூறினார். கேட்கர் தனக்கான சலுகைகளை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் இவை எதுவும் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்பதுதான் பயங்கரமான உண்மை. அவர் தனது தனியார் சொகுசு காரில் ஒரு சுழல் விளக்கை வைத்து அதன் மீது சட்ட விரோதமாக மகாராஷ்டிர அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அவரது  விண்ணப்பத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை அவர் விரைவில் பெறுவார்.


NEET UG, NEET PG மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Test (CUET)) ஆகியவற்றுடன் மருத்துவ சேர்க்கைக்கான சர்ச்சைகளால், நாட்டில் தகுதித் தேர்வுகளுக்கு (qualification examinations) இது ஒரு நல்ல வருடமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்  (UPSC) முழுவதுமான கவனக்குறைவாகவும், மோசடியைக் கண்டறிய முடியாமல் இருந்ததால், அவர் மற்றும் அவருடைய பெற்றோரின் மீறல்கள் நடந்திருப்பதால், இவரின் வழக்கு ஒரு விதிவிலக்காக இருக்கலாம் என்று வாதிடுவதில் எந்தத் தகுதியும் இல்லை. இது மன்னிக்கத்தக்கது அல்ல. முழுப் போட்டித் தேர்வு முறையும் ஒரு முழுமையான மறுசீரமைப்பைப் பெறுவதை அரசாங்கம் இப்போது உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ள நிர்வாக அதிகாரிகளும், அமைப்புகளும் ஏமாறவோ அல்லது தகுதியற்றவர்களாகவோ இருக்கக்கூடாது. இதற்கிடையில், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் செயல்முறையை (disability certification process) மறுபரிசீலனை செய்ய இந்த சம்பவத்தை அரசு ஒரு காரணமாக பயன்படுத்த வேண்டும். உண்மையான விண்ணப்பதாரர்கள் நியாயமாக நடத்தப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.



Original article:

Share:

தெருநாய்கள் தொடர்பான கொள்கையை நீதிமன்றம் மாற்றியது

 தெரு நாய்களைக் கொல்வது போன்ற கொடூரமான முறைகளைப் நாம் தவிர்க்க வேண்டும். மாறாக, அனைவருக்கும் பயன் தரும் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறை அனைவருக்கும் பயன் அளிக்கும்.


எந்த சூழ்நிலையிலும் நாய்களை  கொல்ல அனுமதிக்க கூடாது. தற்போதுள்ள சட்டங்களையும் அவற்றின் நோக்கத்தையும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.



உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகால வழக்கை ஒரே அறிக்கையுடன் முடித்து வைத்துள்ளது. இந்த வழக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் & Anr எதிர். பெஸ்ட்  & Ors (Animal Welfare Board of India (AWBI vs. political, economic, socio-cultural and technological (PEST)) என அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு மே 9-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிருந்து, நாய் பிரியர்களும் நாய் வெறுப்பாளர்களும் இறுதி முடிவுக்காக காத்திருந்தனர். ஜூலை 12 அன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலர் இந்த முடிவை ஆதரித்தனர், மற்றவர்கள் அதை விமர்சித்தனர்.


நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரேபிஸை ஒழிக்கவும், மனிதர்களுடன் மோதல்களைத் தடுக்கவும் தெருநாய்களைக் கொல்ல உள்ளூர் அதிகாரிகளால் முடியுமா என்பது குறித்து வழக்கு கவனம் செலுத்தியது. மாறாக, இந்த இலக்குகளை அடைய உலக சுகாதார அமைப்பு  (World Health Organisation (WHO))-ஆதரவு கருத்தடை முறையை அவர்கள் பின்பற்ற வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. சட்டரீதியாக தெருநாய்களைக் கொல்ல அனுமதிக்கும் மாநில, மாநகராட்சி சட்டங்களுக்கும் மற்றும் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடு உள்ளது. ஒன்றிய அரசின் சட்டத்தில் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச்  சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals (PCA)) Act, 1960) மற்றும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control (ABC)) விதிகள், 2001 ஆகியவை அடங்கும். இந்தச் சட்டங்கள் தெருநாய்களைக் கொலை செய்வதைத் தடை செய்து, கருத்தடை (sterilisation) செய்வதையே ஒரே தீர்வாகக் கூறுகிறது.


இறுதி ஆணை


தெருநாய்களைக் கொல்ல அனுமதிக்கும் மாநில மற்றும் நகராட்சி சட்டங்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சவால் செய்யப்பட்டன. பம்பாய், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றங்கள், உள்ளூர் அதிகாரிகள் தெருநாய்களைக் கொல்லலாம் என்றும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-க்குக் (Prevention of Cruelty to Animals) கட்டுப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தது. இருப்பினும், தெருநாய்களைக் கொல்ல உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்தினால் அபராதம் விதிக்கும் ஒன்றிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டது 2015-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கை தேசிய பிரச்சினையாக மாறியது.


இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது வழக்கு முடிவுக்கு வந்தது. வழக்கு தொடங்கியதில் இருந்து, குறிப்பாக புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control (ABC)) விதிகள், 2023 உடன், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் கீழ், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தப் புதிய சட்டங்கள் நகராட்சிகள் தெருநாய்களைக் கொல்வதைத் தடுக்கின்றன, அதற்குப் பதிலாக கருத்தடை செய்ய வேண்டும். இந்தப் புதிய சட்டங்கள் தொடர்பாக எந்தத் தரப்பினரும் பிரச்னைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கிடையில், ஒன்றிய அரசின் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு  சட்டம், 1960 மற்றும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023) நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் உள்ளூர் அதிகாரிகள் அல்லது நகராட்சிகள் தெருநாய்களைக் கொல்வதைத் தடை செய்கிறது.


ஒவ்வொரு குடிமகனின் கடமை


“அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் என்பது அரசியலமைப்பின் மதிப்பு மற்றும் அதிகாரிகள் நிலைநிறுத்த வேண்டிய கடமை." ஒவ்வொரு குடிமகனும் காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும், உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பின் 51A(g) (Article 51A(g)) பிரிவு கூறுகிறது என்ற வார்த்தைகளுடன் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. 


விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் இரக்கமுள்ள தீர்ப்பை வழங்கி உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்த தீர்ப்பை எதிர்க்கும் நபர்கள் அல்லது  நாய்க்கு அஞ்சுபவர்கள் (cynophobes), ஒன்றிய அரசின்  புதிய  விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023-ஐ எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யலாம். இருப்பினும், அது என்ன பயனளிக்கும்? தெருநாய்களை கொல்வது உண்மையில் பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா? கொல்லப்படுவது தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்ற கருத்தை அறிவியல் ஆதரிக்கவில்லை.


2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் ரேபிஸ் (Rabies) நிபுணர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்வது மட்டுமே பயனுள்ள மற்றும் மனிதாபிமான வழி என்று அவர்களின் தொழில்நுட்ப அறிக்கை கூறுகிறது. 


2014-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி அறிக்கையில், கருத்தடை மட்டுமே அறிவியல் மற்றும் மனிதாபிமானத் தீர்வு என்று குறிப்பிட்டது. 1994-ஆம் ஆண்டு சுற்றறிக்கையில், தெருநாய்களைக் கொல்வதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று அதே மாநகராட்சி ஒப்புக்கொண்டது.


ஒரு சுற்றறிக்கையில், 1984 மற்றும் 1994-க்கு இடையில் சுமார் 450,000 தெருநாய்களைக் கொன்றதாக பாம்பே மாநகராட்சி ஒப்புக்கொண்டது. ₹2 கோடிக்கு மேல் செலவழித்தது. தெருநாய்களைக் கொல்வது பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற போதிலும், மும்பை மாநகராட்சி இந்த வழக்கில் தெருநாய்களைக் கொல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது.


நமது அரசியலமைப்பின் 51A(h) பிரிவிலிருந்து நமது குடிமக்கள் அறிவியல் மற்றும் கருணையின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பலாம். தெருநாய்களைக் கொல்வது போன்ற அறிவியலற்ற மற்றும் கொடூரமான முறைகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக அனைவருக்கும் பயனளிக்கும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். 


பெர்சிவல் பில்லிமோரியா மூத்த வழக்கறிஞர் மற்றும் All Creatures Great and Small Animal Sanctuary  அமைப்பின் நிறுவனர்; சித்தார்த்தா கே கார்க், வழக்கறிஞர்.

Original article:

Share:

அதிக அழுத்தத்தில் ஒன்றிய அரசு -டெல்லி அரசு உறவுகள்

 தகைமை உறுப்பினர்களின் (aldermen) நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிரான டெல்லியின் பலவீனத்தை காட்டுகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநர், இந்த நியமனங்களில் சுதந்திரமான அதிகாரம் கொண்டவர் என்று தீர்ப்பு கூறுகிறது. இது டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது ஒன்றிய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதையே காட்டுகிறது.


மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு, ஒன்றிய-டெல்லி அரசு உறவுகளை நிர்வகிக்கும் சட்டம் மற்றும் முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும், நியமிக்கப்பட்ட நிர்வாகியையும் சமநிலைப்படுத்த முயல்கின்றன. டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சமீபத்திய வழக்கின் இறுதி முடிவு ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும், டெல்லிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருப்பதன் மூலம் இது குறித்த கேள்வி எழுகிறது. நகராட்சி நிர்வாகத்தில் தகைமை உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநரின்  அதிகாரம் அவரது சட்டப்பூர்வ கடமை என்று நீதிமன்றம் கூறியது. இந்த அதிகாரம் டெல்லி மந்திரி சபையின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் பயன்படுத்த வேண்டிய ஒன்றல்ல. டெல்லியின் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு, துணை நிலை ஆளுநருக்கு கட்டுப்பட்டதாக கூறும் அரசியலமைப்பு விதிக்கு இந்த அதிகாரம் விதிவிலக்காகும். டெல்லி அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. நகராட்சி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநரின் தனியாக செயல்பட முடியாது என்ற டெல்லி அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட டெல்லி  மாநகராட்சி சட்டம் 1957 (Delhi Municipal Corporation Act), (1993 இல் திருத்தப்பட்டது) வெவ்வேறு அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை  வழங்குகிறது என்று நீதிமன்றம் விளக்கியது. தகைமை உறுப்பினர்களுக்கு 10 நபர்களை பரிந்துரைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சபாநாயகர் சில சட்டமன்ற உறுப்பினர்களை மாநகராட்சியில் பணிபுரிய சுழற்சி முறையில் நியமிக்கலாம். இது ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அதிகாரம் என்பதை இது காட்டுகிறது. 2018-ஆம் ஆண்டில், துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க அரசியலமைப்பு அமர்வு  ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.


மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் பல சட்ட மோதல்களுக்கு வழிவகுத்தன. டெல்லி சட்டமன்றம் கையாளும் எந்தவொரு பிரச்சினையிலும் சட்டங்களை உருவாக்குவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கிறது. டெல்லியின் சட்டமன்ற அதிகாரங்கள் பிற மாநிலங்களின் சட்டமன்ற அதிகாரங்களுடன்  வேறுபட்டது. டெல்லி சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தையும் பாராளுமன்றம் மாற்றலாம் அல்லது மீறலாம். அரசியலமைப்பில் சட்ட நிறைவேற்று அதிகாரங்கள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால்,  ஒன்றிய அரசு எந்த வகையிலும் டெல்லி அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியும். இறுதியில், ஒன்றிய அரசிற்கு இறுதி அதிகாரம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.



Original article:

Share:

தமிழக அரசியலில் பெரியாரின் தாக்கம் -ராமு மணிவண்ணன்

 சாதிய பாகுபாடுகளையும் (caste discrimination), தீண்டாமையையும் ஒழிப்பதில்  (untouchability) காங்கிரஸ் உறுதியாக இல்லை என்று கூறி 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் எடுத்த முடிவு முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகும்.


பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், சிறு வயதிலிருந்தே பொது வாழ்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிளேக் (plague) நோயின்  போது ஈரோடு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். உறவினர்கள் கைவிட்டுச் சென்றபோது அவர் இறந்த உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றார். பெரியார் இந்து மதத் துறவி போல் உடையணிந்து இந்தியா முழுவதும் பயணம் செய்தார். வாரணாசி, கொல்கத்தா, அசன்சோல், பூரி, எல்லாூர், பெஜவாடா போன்ற இடங்களுக்குச் சென்றார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகள், நடத்தைகள் மற்றும் பூசாரிகளின் நடத்தை உள்ளிட்டவற்றைப் பற்றி அறிய விரும்பினார். 1925-ஆம் ஆண்டில், சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இல்லை என்று நம்பியதால், பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். இந்த முடிவு மெட்ராஸ் மாகாணத்தில்  சமூக நீதி இயக்கத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைத்தது.


காந்தியின் கொள்கைகள் மற்றும் சுதந்திர ஈடுபாட்டினால் ஈர்க்கப்பட்ட பெரியார் 1919-ல் காங்கிரஸில் சேர்ந்தார். பெரியார் காங்கிரசின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினராக இருந்தார். மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் கதருக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய இயக்கத்தை மேம்படுத்துவதற்காக காதி ஆடைகளை ஏந்தி, காதிக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். மெட்ராஸ் மாகாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காதியின் முக்கியத்துவம் குறித்து ஊக்குவிப்பதற்கும் விழிப்புணர்வை பரப்புவதற்கும் இவர் தனது தோள்களில் கதர் ஆடைகளை சுமந்தார். திராவிட இயக்கத்தின் தந்தை (father of the Dravidian movement) என்று அழைக்கப்படும் பெரியார், 1916 நவம்பர் 20 அன்று நிறுவப்பட்ட நீதிக்கட்சியில் (Justice Party) முதலில் உறுப்பினராக இல்லை. நீதிக்கட்சி சி.நடேச முதலியார், டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டி, அலமேலு மங்கை தாயாரம்மாள் ஆகியோரால் நிறுவப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சென்னை மாகாணத்தின் நிர்வாகத்திலும் அரசியலிலும் பிராமணர் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நீதிக்கட்சி நிறுவப்பட்டது.


மெட்ராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக ஆன பிறகு, பெரியார் பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதிட்டார். காங்கிரஸ் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார. ஆனால், காங்கிரஸ் முறையாக பதிலளிக்காததால் பெரியார் விரக்தியடைந்தார். இடஒதுக்கீடுகளை வலியுறுத்தி திருச்சி (1919), திருநெல்வேலி (1920), தஞ்சாவூர் (1921), திருப்பூர் (1922), சேலம் (1923), மற்றும் திருவண்ணாமலை (1924) ஆகிய இடங்களுக்கு பயணம் செய்தார். இந்த இடங்களில் போதிய  ஆதரவு இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், ஆதிக்க சாதி மற்றும் வர்க்க நலன்களால் காங்கிரஸ் கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்தார்.


1924-ல் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் அவரது துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் காட்டியது. அவர் தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். சென்னை மாகாணத்தில் மட்டுமல்ல, மாகாணத்தை தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தார். பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், பெரியாரின் முயற்சிகளை ராஜாஜி பலமுறை தடுத்தார். பெரியாரின் வேண்டுகோள்கள் மற்றும் காந்தியுடனான சந்திப்புகளும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 


1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பெரியார் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். பிராமணர் அல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை அவர் முன்வைத்தார். இந்த கோரிக்கை பொது நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி காங்கிரஸ் இந்த கோரிக்கையை நிராகரித்தது. காங்கிரஸின் இந்த முடிவிற்கு பிறகு பெரியாரின் காங்கிரஸுடனான தொடர்பை முடிவுக்கு கொண்டு வந்தார். கட்சிக்கு திரும்ப மாட்டேன் என்றும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பேன் என்றும் சபதம் செய்தார்.  


காங்கிரஸுடனான அவரது உறவின் முடிவு, மெட்ராஸ் மாகாண அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தையும், தமிழகத்தில் சமூக நீதி இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியது. 1925-ல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் (self-respect movement) தொடங்கினார்.


1928-ல் டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையால் கொண்டுவரப்பட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (caste based reservation) பெரியார் ஆதரித்தார். இதற்கு நீதிக்கட்சி ஆதரவு அளித்தது.

பிப்ரவரி 1929-ல், சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. 34 தீவிர தீர்மானங்கள் (radical resolutions) நிறைவேற்றப்பட்டதால் இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்டது. அந்த நேரத்தில், பிராமணர் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மேல்மட்ட தலைவர்கள் நீதிக்கட்சியில் இடம்ப்பெற்று இருந்ததால் நீதிக்கட்சி விமர்சனங்களை எதிர்கொண்டது. 1930-களின் முற்பகுதியில் சுதந்திரத்திற்கான வளர்ந்து வரும் தேசியவாத போராட்டம் கட்சிக்கு தேர்தலில்  பின்னடைவை ஏற்படுத்தியது.


ஜனவரி 1937-ல், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர்கள் தங்கள் ஆற்றலையும் தொலைநோக்கையும் காத்துக்கொள்ளவும், காலம் வரும் வரை காத்திருக்கவும் பெரியார் அறிவுறுத்தினார்.


1937-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. இந்த முடிவு மாநில அரசியலுக்கு புதிய ஆற்றலையும் இயக்கவியலையும் கொண்டு வந்தது. அடையாளம் மற்றும் அதிகாரம் பற்றிய தேசிய விவாதத்தில் மொழி அரசியல் ஒரு முக்கியமான பரிமாணத்தைப் பெற்றது.


பெரியார், தமிழர் பிரதேசங்களுக்குத் தமிழர் சுயராஜ்யம் (self rule) வேண்டும் என்று வாதிட்டார். இந்தியாவின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பு தமிழர் உரிமைகள் மற்றும் நலன்களை போதுமான அளவு பாதுகாக்க முடியாது என்று அவர் நம்பினார்.


1938 டிசம்பரில், சென்னை சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி திணிப்பை பெரியார் தொடர்ந்து எதிர்த்தார். பிப்ரவரி 1940-ல் ஆளுநர் உத்தரவு மூலம் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக நீக்கி கோரும் பெரியாரின் கோரிக்கை வெற்றிபெற்றது. முகமது அலி ஜின்னா, எம்.என்.ராய் போன்ற தேசிய தலைவர்கள் பெரியாரை கவனிக்க ஆரம்பித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், ராஜாஜி பெரியாரின் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தார். மக்கள் இந்தக் கோரிக்கையை உண்மையாக ஆதரிப்பதாகக் அவர் கூறினார். ராஜாஜி 1942-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த பின்னர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.


1944-ஆகஸ்ட் மாதம் நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் பெரியார் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தை நீதிக்கட்சியுடன் இணைத்து "திராவிட கழகம்" (‘Dravida Kazhagam’) என்ற பரந்த மக்கள் இயக்கத்தை தொடங்கினார். இந்த நடவடிக்கை தமிழகத்தில் சமூக நீதி இயக்கத்தைத் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. தெற்கிலும் தமிழகத்திலும் திராவிட இயக்க வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாக இருந்தது.


பெரியார் தொடக்கத்தில் இருந்தே தேர்தல் அரசியலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார். தேர்தல் அரசியலின் மீதான அவரது வெறுப்பு அல்லது அலட்சியம் பின்னர் அவரது அரசியல் சீடரான அண்ணாதுரைடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. பெரியார் மற்றும் அண்ணாவிற்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உண்மையான பிரச்சினை அண்ணாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் தேர்தல் அரசியலுக்கு வரத் துடித்ததை பெரியார் கவனித்தார். இதன் பின்னர் செப்டம்பர் 17, 1949 அன்று சென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam) தோற்றுவிக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குள், பெரியாரின் ஆரம்பப் போராட்டங்கள் பரவலான ஆதரவாக மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் மார்ச் 1967-ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆட்சியமைத்தது. 


பேராசிரியர் ராமு மணிவண்ணன் கல்வி, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் அறிஞராக உள்ளார்.



Original article:

Share:

மருத்துவக் காப்பீடு மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவாதம் -ஜார்ஜ் மேத்யூ

 ஆயுள் காப்பீடு (life insurance) மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் (health insurance premiums) மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திரும்பப் பெறக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற மகர துவாரில் (Makar Dwar) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த ஆண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான (health and life insurance policies) பிரீமியத்தை அதிகரித்துள்ளன. 18% சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்கப்பட்டுள்ளதால், நாட்டின் மக்கள்தொகையில் பல பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு அணுக முடியாததாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.  


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மகர் த்வாரில் (Makar Dwar) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் (life insurance and health insurance premiums) மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். திங்களன்று, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பினார். மேலும், அவரது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் "மக்கள் விரோத" (anti-people) வரிக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்தார்.


ஜூலை 28 அன்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிப்பது "வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு" (uncertainties of life) வரி விதிப்பது போன்றது என்று கடிதத்தில் கட்கரி கூறினார். இந்த வரி "தொழில்துறையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். 


ஜூலை 1, 2017 முதல் சேவை வரி மற்றும் செஸ் போன்ற அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக GST உருவாகியுள்ளது. தற்போது, சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் மீதான ஜிஎஸ்டி 18% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டிக்கு முன், ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு 15% சேவை வரி இருந்தது. இதில் அடிப்படையான சேவை வரி (service taxes), ஸ்வச் பாரத் செஸ் (Swachh Bharat cess) மற்றும் கிரிஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan cess) ஆகியவை அடங்கும். ஜிஎஸ்டியில் சேவை வரியும் உள்ளதால், இந்த மாற்றம் அதிக பிரீமியங்களுக்கு வழிவகுத்தது. 15% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் பாலிசிதாரர்கள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 


சிகிச்சைக்கான அதிக செலவு பலருக்கு மருத்துவக் காப்பீட்டை வாங்குவதை கடினமாக்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவ பணவீக்கம் (Medical inflation) 14% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீள்காலக் காப்பீடு (term insurance)   கொள்கைகளுக்கும் இதே பிரச்சினை பொருந்தும்.


திங்கட்கிழமை, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகளை பெற்றதாக ஒப்புக்கொண்டது. இந்தக் கோரிக்கைகள் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தில் விலக்கு அல்லது குறைப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.


ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்களின் பரிந்துரைகளின்படி, ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகளை நிர்ணயிக்கிறது. காப்பீடு ஒரு சேவையாக கருதப்படுவதால் ஜிஎஸ்டி அனைத்து காப்பீட்டு கொள்கைகளுக்கும் பொருந்தும். கடந்த மூன்று நிதியாண்டுகளில் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி மூலம் ரூ.21,256 கோடியும், மருத்துவ கொள்கைகளை மறுவெளியீடு செய்ததன் மூலம் ரூ.3,274 கோடியும் வசூலிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இது வருவாயை ஈட்டித் தருகிறது.


காப்பீடு பாலிசிகள் வருமான வரியைக் கணக்கிடும்போது சில விலக்குகளை அனுமதிக்கின்றன. மிகவும் பிரபலமான வரி-சேமிப்பு விலக்குகள் (tax-saving deduction), குறிப்பாக ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில், வருமான வரி சட்டம், 1961-ன் (Income Tax Act) பிரிவுகள் 80C மற்றும் 80D ஆகும். பிரிவு 80C இன் கீழ், ஒரு வாடிக்கையாளர் ஒட்டுமொத்த காப்பீட்டு பிரீமியத்தில் ரூ.1.5 லட்சம் வரை விலக்குகளைப் பெறலாம். அவர்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுடன் மருத்துவ காப்பீட்டையும் தேர்வுசெய்தால், பிரிமியத்தில் கூடுதல் விலக்குகளை பிரிவு 80D வழங்குகிறது.


ஜிஎஸ்டியைக் குறைப்பது பாலிசிதாரர்களுக்கு பயனளிக்குமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். காப்பீட்டு நிறுவனங்கள் பலனை பாலிசிதாரர்களுக்கு வழங்குவார்களா என்பதைப் பார்க்க வேண்டும் என்று காப்பீட்டு துறையினர்  கூறிகின்றன.


சில்லறை பணவீக்கம் (retail inflation) அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த செலவுகளும் அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.08% ஆக இருந்த சில்லறை பணவீக்கத்தை விட மருத்துவ பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த ஆண்டு சுகாதார காப்பீடு பாலிசிகளின் பிரீமியங்கள் பெரிய அளவில் அதிகரித்திருப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஒரு முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் பிரீமியத்தை 50% உயர்த்தியுள்ளது. மக்களின் நலனுக்காக சுகாதார காப்பீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இருப்பினும், பாலிசிகளின் புதுப்பித்தல் விகிதம் கடுமையான முறையில் குறைந்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் பிரீமியம் உயர்வு மற்றும் மருத்துவ பணவீக்கம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு அல்லாத முகவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Confederation of General Insurance Agents) இதனைத் தெரிவித்துள்ளது.


உலகளவில் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது என்று கூட்டமைப்பு எடுத்துரைத்தது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India(IRDAI)) "2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு" (Insurance for All by 2047) என்ற இலக்கை அடைய இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அது கூறியது. நிதிக்கான நிலைக்குழு பிப்ரவரி 2024-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது 66-வது அறிக்கையில் இந்த இலக்கை அங்கீகரித்தது.


காப்பீட்டு திட்டங்கள், குறிப்பாக சுகாதார மற்றும் கால காப்பீடு (health and term insurance) மீதான ஜிஎஸ்டி விகிதங்களை பகுப்பாய்வு செய்ய அறிக்கை பரிந்துரைத்தது. அதிக ஜிஎஸ்டி விகிதம் அதிக பிரீமியம் செலவுகளுக்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டது. இந்த அதிக விலையானது, மக்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளைப் பெறுவதைத் தடுக்கிறது. இந்த காப்பீட்டை மிகவும் மலிவானதாக மாற்ற ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) ரூ.5 லட்சம் வரை கீழ் நுண் காப்பீடு பாலிசிகள் (microinsurance policies) மற்றும் நீள்காலக் காப்பீடுகள் (term insurance) ஆகியவற்றில் கவனம் செலுத்தினர்.


தனியார் துறை காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது: சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற சந்தைகளில், காப்பீட்டில் ஜிஎஸ்டி அல்லது வாட் வரி எதுவும் இல்லை. காப்பீடு என்பது விற்பதற்கு கடினமான தயாரிப்பாக உள்ளதால், மக்கள் காப்பீடு வாங்க விரும்பவில்லை. அதற்கு மேல், அவர்கள் எடுக்கும் எந்தக் காப்பீட்டிற்கும் அரசாங்கம் 18% வரி விதிக்கிறது. இந்த வரியை அரசு குறைக்க வேண்டும்” என்றார்.


பொதுக் காப்பீட்டுத் துறை 2023-24 நிதியாண்டில் மருத்துவப் பிரிவின் கீழ் ரூ.1,09,000 கோடியை பிரீமியமாக வசூலித்துள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 2024 நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடமிருந்து பிரீமியமாக ரூ.3,77,960 கோடி வசூலித்துள்ளன. இந்தத் தொகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மட்டும் ரூ.2,22,522 கோடி பங்களிக்கிறது.


மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்கள் 2022-23 ஆம் ஆண்டில் மொத்த சுகாதார காப்பீட்டு பிரீமியங்களில் சுமார் 64% பங்களித்துள்ளன. மீதமுள்ள 36% பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.


சுவிஸ் ரீ சிக்மா அறிக்கையின் (Swiss Re Sigma report) படி, இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் காப்பீட்டு ஊடுருவல் குறைந்துள்ளது. இது 2021-22ல் 3.2% ஆக இருந்தது 2022-23ல் 3% ஆக இருந்தது. ஆயுள் காப்பீடு அல்லாத துறையில், அது 1% ஆக தேக்க நிலையிலேயே இருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் காப்பீட்டு ஊடுருவல் 2021-22 இல் 4.2% இல் இருந்து 2022-23 இல் 4% ஆகக் குறைந்துள்ளது.  


2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்குக்கு ஏற்ப, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டை மிகவும் மலிவானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்காக சாமானிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று காப்பீட்டு ஊழியர் CoverYou-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபங்கர் மகாஜன் கூறினார்.



Original article:

Share:

வங்கதேசத்தின் பிரச்சனையில் இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? -ஷ்யாம் சரண்

 பாகிஸ்தானும் சீனாவும் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் செல்வாக்கிற்கு சவால் விடும் வகையில், தற்போதைய தலைவரான ஹசீனாவை ஆதரிப்பதாக குற்றம் சாட்டலாம். இந்தியா தனது அணுகுமுறையில் கவனமாக இருக்க வேண்டும்.


வங்கதேசத்தில் பழைய சட்ட ஒழுங்குப் பிரச்சனை மாற்ற முடியாதபடி மாறிவிட்டது. இடஒதுக்கீடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனாவின்  எதேச்சதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது. அவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடையலாம், அதை இந்தியா கவனமாக பரிசீலிக்க வேண்டும். வங்கதேசம் அரசாங்கம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இராணுவம், நியாயமான தேர்தல் நடத்துவதற்கும் உறுதியளித்துள்ளது. போராட்டங்கள் முடிவுக்கு வந்து டாக்காவிற்கு அமைதி திரும்புமா என்பது நிச்சயமற்றது.


ஆடை ஏற்றுமதியை மையமாகக் கொண்ட வங்கதேச பொருளாதாரம், நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இருந்தபோதிலும் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சகித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய் மற்றும் அதன் பின்னர் மந்தமான உலகளாவிய பொருளாதாரம், ஆடைத் தொழிலை மிக மோசமாகப் பாதித்தது. பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அரசாங்கம் மற்றும் அதன் கட்சியினரின் கடுமையான நடவடிக்கைகள் மாணவர் போராட்டத்தை ஒரு பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாற்றியது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்குவதற்கான சாத்தியம் குறித்து  இந்தியா என்ன முடிவு எடுத்தாலும், வங்கதேசம் மக்கள் ஒரு செல்வாக்கற்ற அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்பதையும், தங்கள் சொந்த எதிர்காலத்தை திட்டமிட அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என்பதையும் அது ஒப்புக் கொள்ள வேண்டும்.


2006-ஆம் ஆண்டு, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் ஒரு மக்கள் இயக்கம் ஒன்றுகூடி, அதிகரித்துவரும் சர்வாதிகார முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பல கட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் கோரியது. நேபாள மக்கள் என்ன தேர்வு செய்தாலும் மதிப்பதாக அறிவித்து, நேபாள மக்களின் நலனில் தன்னை இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்தது. நேபாளத்தின் மன்னராட்சிக்கு இந்தியா ஆதரவானது என்ற பரவலான நம்பிக்கை இருந்த நிலை மாறியது. வங்கதேசத்தில் தற்போது வளர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா ஒரு துடிப்பான பல கட்சி ஜனநாயக நாடு என்ற முறையில் ஒரு உணர்திறன் வாய்ந்த அண்டை நாட்டில் மக்கள் விருப்பத்தின் வெளிப்பாட்டை ஆதரிப்பதைக் காண வேண்டும். இது இரண்டு அரசாங்கங்களுக்கும் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க உதவும்.


2009-ஆம் ஆண்டு முதல், அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி, இந்தியா-வங்கதேசம் உறவுகளை இந்தியாவின் அண்டை நாடுகளின் கொள்கைக்கான வெற்றிக் கதையாக மாற்ற உதவியது. இதில் இந்தியாவுக்கு கிடைத்த லாபம் கணிசமானது. இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் அமைதியைக் கொண்டுவர உதவியுள்ளது. எல்லை தாண்டிய நதி போக்குவரத்தை மீட்டெடுப்பது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளன. வங்கதேசத்தின் முக்கிய சக்தி ஆதாரமாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், இது அந்த நாட்டின் பொருளாதார வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.


டாக்காவின் அரசியல் ஆட்சி நீண்டகால பரஸ்பர சார்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது. இது அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தைத் தக்கவைக்க உதவியது. அடுத்தடுத்த அரசாங்கத்துடன் இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்த இந்தியா தனது தயார்நிலையை வெளிப்படுத்த வேண்டும். நடந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றத்தை இந்தியாவுக்கு எதிரானது அல்லது இந்துக்களுக்கு எதிரானது என்ற கருத்து தவிர்க்கப்பட வேண்டும். 


பாகிஸ்தானும் சீனாவும் வங்கதேசத்தின் அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தி, அங்கு இந்தியாவின் பங்கை சவாலுக்கு உட்படுத்தி, ஹசீனாவை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டலாம்.  இருப்பினும், இந்தியா பொருளாதார நலன்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையே சுமூகமாக உறவுகள் மற்றும் நெருங்கிய கலாச்சார தொடர்புகள் உள்ளன. வங்கதேசத்தின் தற்போதைய நிலையில் கூட இரு நாட்டு தொடர்புகளும் வலுவாகவே உள்ளது. 


வங்கதேசம் இந்தியாவுடன் முக்கியமான ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் மியான்மருடன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பகிர்ந்து கொள்கிறது. இது ஒரு சவாலான மற்றும் ஒரு இராஜதந்திர முறை இரண்டையும் முன்வைக்கிறது. டெல்லி, வங்கதேச நிலைமை அமைதியாகும் வரை காத்திருக்க வேண்டும் மற்றும் அதன் பதில்களில் கவனமாகவும் விவேகமாகவும் இருக்க வேண்டும். மொஹமது முய்ஸு (Mohamed Muizzu) மாலத்தீவின் அதிபரான போது காணப்பட்டதைப் போன்ற விரோதக் கொள்கைகளை டாக்காவில் உள்ள புதிய அரசாங்கம் பின்பற்றலாம். இந்தியாவின் எதிர்வினை முதிர்ச்சியானது. விவேகமான ஈடுபாடு மற்றும் உரையாடல் மூலம் நெருக்கமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளைத் தொடரலாம். 

இடைக்கால அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வங்கதேசம் தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவை பிரதிநிதித்துவம் பெறுமா? இராணுவமும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வலியுறுத்துமா? அல்லது இராணுவம் எப்படி செயல்படும்? என்று கேள்வி எழுந்துள்ளது. ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் அமைதியின்மை மற்றும் தெருக்களில் வன்முறை தொடர்ந்தால், இராணுவம் நேரடி அரசியல் பாதையை எடுக்குமா? எல்லாவற்றிற்கும் மேலாக, தலைநகரில் இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை சேதப்படுத்தப்பட்டது,  வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக அதை நிறுவுவதற்கான தலைவர் என்ற அவரது மரபை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கான அறிகுறியாகவே இது உள்ளது. 


வங்கதேசம் நாட்டில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து செல்வதை நிராகரித்த சில பிரிவுகள் உள்ளன. அந்த வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும், கடந்த காலங்களில் வங்கதேசம் அத்தகைய சக்திகளால் வழிநடத்தப்பட்டபோது நடந்ததைப் போல இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு மீண்டும் கூர்மையாக மாறுமா? இவை அனைத்தும் தயாராக இல்லாத கேள்விகளாகும், மேலும், இந்த நிலையற்ற சூழ்நிலையில் டெல்லியின் கொள்கையில் செல்வாக்கு செலுத்தக்கூடாது. வங்கதேசத்தில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. வரவிருக்கும் நாட்களில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. காலங்காலமாக  இருந்த இருநாட்டு  இராஜதந்திர   நிலைகள்  எவ்வாறு மாற போகிறது  என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நெருங்கிய மற்றும் முக்கியமான அண்டை நாட்டு மக்களுக்கான நமது நட்பு ரீதியான உணர்வுகளை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.



Original article:

Share: