இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) மாநிலங்களுக்கு இடையேயான மாறுபாடுகள் - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (LFPR)) உலகின் மிகக் குறைந்த அளவில் உள்ளது. 2000 மற்றும் 2019-க்கு இடையில் பெண் LFPR 14.4 சதவீத புள்ளிகள் ஆண்களுக்கான 8.1 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அதன்பிறகு இந்த போக்கு தலைகீழாக மாறியது. பெண்களின் LFPR 8.3 சதவீத புள்ளிகளால் ஆண்களுக்கு 1.7 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது 20129 வரை உயர்ந்துள்ளது.


• கணிசமான  அளவு பாலின இடைவெளி உள்ளது. 2022 இல் பெண்களின் LFPR (32.8%) ஆண்களை விட (77.2%) 2.3 மடங்கு குறைவாக இருந்தது.


• இந்தியாவின் குறைந்த LFPRக்கு பெரும்பாலும் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் காரணம் என்று கூறப்படுகிறது. இது 2022 இல் உலக சராசரியான 47.3%-ஐ விட மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) தரவுகளின்படி தெற்காசிய சராசரியான 24.8% ஐ விட அதிகமாக இருந்தது.


• 2018-19க்குப் பிறகு விவசாயம் அல்லாத வேலைகளை நோக்கிய மாற்றம் குறைந்துவிட்டது. 2019ஆம் ஆண்டில், மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு சுமார் 42% ஆக குறைந்தது, 2000-ல் 60% ஆக இருந்தது.


• கட்டுமானம் மற்றும் சேவைகள் இந்த மாற்றத்தின் பெரும்பகுதியை உள்வாங்கின. மொத்த வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கு 2000-ல் 23% ஆக இருந்த 2019-ல் 32% ஆக அதிகரித்துள்ளது.


• வேலைவாய்ப்பில், உற்பத்தித் துறையின் பங்கு 12-14% ஆக இருந்தது. 2018-19 முதல், இந்த மாற்றம் தேக்கமடைந்துள்ளது அல்லது தலைகீழாக மாறியுள்ளது. விவசாயத்தில் வேலை வாய்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.


• இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், வேலைகளின் தரம் இன்னும் கவலையாக உள்ளது. குறிப்பாக, தகுதிகள் கொண்ட இளம் தொழிலாளர்களுக்கு வேலைகளின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 இன் படி, மோசமான வேலை நிலைமைகள் பற்றிய கவலைகள் உள்ளன. விவசாயம் சாராத வேலைக்கான மாற்றம் தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு பெண்கள் பெரும்பாலும் சுயதொழில் அதிகரிப்பதற்கும், ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளுக்கு செல்வதும்  காரணமாகிறது. வயது வந்தோருக்கான வேலைவாய்ப்புடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் வேலைவாய்ப்பு தரம் குறைவாக உள்ளது. ஊதியம் மற்றும் வருமானம் தேக்கநிலையில் உள்ளது அல்லது தலைகிழாக மாறிவருகிறது.


• 2004-05 முதல் 2021-22 வரை “வேலைவாய்ப்பு நிலைக் குறியீடு” (employment condition index) மேம்பட்டது. இருப்பினும், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரபிரேதசம் போன்ற சில மாநிலங்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் அடையாமல் உள்ளன. மறுபுறம், டெல்லி, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.


. குறியீடு ஏழு தொழிலாளர் சந்தை குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது:


  1. வழக்கமான முறையான வேலையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம்


  1.   சாதாரண தொழிலாளர்களின் சதவீதம்


  1.   வறுமைக் கோட்டிற்குக் கீழே சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின்    சதவீதம்


  1.   வேலை பங்கேற்பு விகிதம்


  1.  சாதாரண தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம்


  1.   இடைநிலைக் கல்வி மற்றும் அதற்கு மேல் உள்ள இளைஞர்களின் வேலையின்மை விகிதம்


  1.  இளைஞர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லை


. முறைசாரா வேலைவாய்ப்பு (Informal employment) அதிகரித்துள்ளது. முறையான வேலைவாய்ப்பு துறையில் பாதி வேலைகள் முறைசாரா வேலைகள். குறிப்பாக, பெண்களுக்கு சுயதொழில் மற்றும் ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளும் வளர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 82% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் உள்ளனர். மேலும், 90% பேர் முறைசாரா வேலையில் உள்ளனர். 2022-ல் 55.8% வேலைவாய்ப்பில் சுயதொழில் முக்கிய ஆதாரமாக உள்ளது. சாதாரண மற்றும் வழக்கமான வேலைவாய்ப்பு முறையே 22.7% மற்றும் 21.5% ஆகும்.


. 2000 மற்றும் 2019க்கு இடையில், சுய வேலைவாய்ப்பு 52% நிலையானதாக இருந்தது. இருப்பினும், வழக்கமான வேலைவாய்ப்பு 10 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 14.2% இலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. 2022-ல், இது தலைகீழாக மாறியது. சுய வேலைவாய்ப்பு 55.8% ஆகவும், வழக்கமான வேலைவாய்ப்பு 21.5% ஆகவும் குறைந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் 33.3% ஆக இருந்த சாதாரண வேலை வாய்ப்பும் 2022-ல் 22.7% ஆகக் குறைந்துள்ளது.


. வழக்கமான வேலைவாய்ப்பு சிறந்த வேலைகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது நிலையான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு பலன்களை வழங்குகிறது. மறுபுறம், சாதாரண வேலை, தரம் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு ஒழுங்கற்ற தன்மை மற்றும் குறைந்த தினசரி வருவாய் காரணமாகும்.




Original article:

Share:

பாரதிய பாஷா உத்சவ் என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


• நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் ஆங்கிலம் அல்லாத, சொந்த மொழிகளைப் பேசுகிறார்கள். ஆழ்ந்த கற்றலுக்கு (deep learning) தாய்மொழி முக்கியம். நமது மொழிகள் தொடர்பு கொள்வதற்கான கருவிகள் மட்டுமல்ல அவை வரலாறு, பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் களஞ்சியங்கள், தலைமுறைகளின் கூட்டு ஞானத்தைப் பாதுகாத்து தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன.


• படைப்பாற்றல் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு நிறைந்த குழந்தைகள், தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தொடங்கும் போது செழித்து வளர்கின்றனர்.


• அவர்களின் தாய்மொழியின் தொடக்கம் வீட்டிற்கும் வகுப்பறைக்கும் இடையே ஒரு மென்மையான இணைப்பை உருவாக்குகிறது. இது குழந்தைகள் பேசுவதில் இருந்து எழுதுவதற்கு உதவுகிறது. இது சொற்களஞ்சியத்திலிருந்து அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கும், மொழியிலிருந்து பொருள் புரிதலுக்கும் வழிகாட்டுகிறது. "ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வது பாடப்புத்தகங்களிலிருந்து அல்ல. ஆனால், அவரது தாயிடமிருந்து" என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார்.


• தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகள் அடிப்படை புரிதலில் இருந்து சிக்கலான சிந்தனைகளுக்கு ஏற்றவாறு வளர உதவுகிறது. பாரதத்தின் பல மொழிகள் அறிவு மற்றும் கலாச்சாரத்தின் வளமான ஆதாரம். காஷ்மீரின் பனி மலைகள் முதல் கன்னியாகுமரியின் வெயிலில் நனைந்த கடற்கரைகள் (sun-drenched shores) வரை, மற்றும் வறண்ட நிலமான கச்சிலிருந்து கோஹிமாவின் பச்சை மலைகள் வரை, நம் மொழிகள் மக்களின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன.


• குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பது அவர்களின் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க உதவுகிறது மற்றும் எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துகிறது. குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் வலுவான அடித்தளத்தை வைத்திருந்தால், அவர்கள் மற்ற மொழிகளையும் பாடங்களையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.


உங்களுக்குத் தெரியுமா?:


• அக்டோபர் 3 அன்று, ஒன்றிய அமைச்சரவை மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கி வரலாறு படைத்தது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஆறு மொழிகளின் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது.


• பிப்ரவரி 2, 1835 அன்று, தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்தியாவின் ஆங்கிலேய ஆளுநருக்கு “இந்தியக் கல்வி குறித்த மெக்காலேயின் குறிப்புகள்” (‘Macaulay’s Minute on Indian Education’) என்ற குறிப்பை வழங்கினார். இது தாய்மொழிகளுக்கு மேல் ஆங்கிலத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது. ஆங்கிலேய நலன்களுக்கு விசுவாசமான இந்தியர்களின் வகுப்பை உருவாக்குவதையும் அவர்களின் கலாச்சார மற்றும் மொழியியல் வேர்களிலிருந்து அவர்களை விலக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.


• 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Policy on Education) கற்றல் விளைவுகளை மேம்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உயர்தர கற்பித்தல் பொருட்களுக்கு சமமான அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. கல்வியுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும். இந்திய மொழிகளை ஆதரிப்பதற்கும் கல்வியை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கும் வலுவான அமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


.  பாஷா சங்கத் திட்டம், 

. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் இயந்திர மொழிபெயர்ப்பு மையம்;


. அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் பல இந்திய மொழிகளில் உள்ள தொழில்நுட்ப புத்தகங்கள் உட்பட புத்தகங்களின் அனுவாதினி செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு;


  • பல்கலைக்கழக மானியக் குழுவின் மொழிபெயர்ப்பு மற்றும் கல்வி எழுத்து (அஸ்மிதா) முயற்சியின் மூலம் இந்திய மொழிகளில் படிப்புப் பொருட்களைப் பெருக்குதல்


  • பாரதிய பாஷா சமிதி.




Original article:

Share:

நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டு -அபூர்வா விஸ்வநாத் , அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுக்க தயாராகி வருகின்றன. எந்த அடிப்படையில் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம், அதற்கான செயல்முறைகள் என்ன?


அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக் கட்சிகள் நோட்டீஸ் கொடுக்க தயாராகி வருகின்றன. கடந்த வாரம் விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது.


2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற சேகர் குமார் யாதவ், தனது உரையின்போது சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அவர் ஒரே மாதிரியான பொது உரிமையியல் சட்டத்திற்கு (Uniform civil code) வாதிட்டார்.


அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆற்றிய உரையை உச்சநீதிமன்றம் கவனித்தது. உயர்நீதிமன்றத்திடம் விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.


புதன்கிழமை மாலைக்குள், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டனர். ராஜ்யசபாவில் இந்திய கூட்டணிக்கு 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேவையான 50 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டால் மனுவை வியாழக்கிழமை மாற்றலாம்.


பதவிநீக்க செயல்முறை


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124(4)வது பிரிவில் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்று பிரிவு 218 கூறுகிறது.


பிரிவு 124(4)-ன் கீழ், ஒரு குறிப்பிட்ட செயல்முறை மூலம் ஒரு நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது. "நிரூபித்த தவறான நடத்தை" அல்லது "இயலாமை" போன்ற இரண்டு காரணகளின் அடிப்படையில்  மட்டுமே  ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியும். 


குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில்தான் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது நடக்கும்.


ஒப்புதலுக்கு, ஒவ்வொரு அவையிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை. இதற்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு முடிவுகள் அதே அமர்வில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். பதவிநீக்கம் "நிரூபித்த தவறான நடத்தை" அல்லது "இயலாமை" அடிப்படையில் இருக்க வேண்டும்


வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய, இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:


1. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.


2. தீர்மானத்திற்கு ஆதரவான வாக்குகள் ஒவ்வொரு சபையின் மொத்த உறுப்பினர்களில் 50% க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.


இந்த நிபந்தனைகளை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.


குற்றச்சாட்டுக்கான காரணங்களும் செயல்முறைகளும் கடுமையானவை. இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. பதவி நீக்கம் என்பதும் ஒரு அரசியல் செயல்முறைதான். அதற்கு பரந்த அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இது எந்த சபை தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தது.


நடைமுறை: ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு (impeaching a judge) பின்பற்ற வேண்டிய நடைமுறை நீதிபதிகள் விசாரணை சட்டம் (Judges Inquiry Act), 1968இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டுத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமானால், கீழ் மக்களவையில் 100 உறுப்பினர்களுக்குக் குறையாமல், மாநிலங்கவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவும் இருக்க வேண்டும்.


பதவி நீக்க நடவடிக்கையின் முதல் படி தேவையான கையொப்பங்களை சேகரிப்பதாகும். தேசியவாத கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Aga Syed Ruhullah Mehdi செயல்முறையை தொடங்கினார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரான சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் முயற்சி எடுத்தார்.


குழு: தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டதும், சபாநாயகர் அல்லது மாநிலங்கவை தலைவர்  மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தியத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இருக்கும் இந்தக் குழு, ஒரு நபர் சபாநாயகர் அல்லது தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் "புகழ்பெற்ற நீதிபதி" (‘distinguished jurist’) என்று கருதப்படுகிறார். உதாரணமாக, 2011ல் நீதிபதி சௌமித்ரா சென்க்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, ​​புகழ்பெற்ற நீதிபதியாக  ஃபாலி நாரிமன் இருந்தார்.


நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை குழு ஆராய்கிறது. மன இயலாமை காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டால், மருத்துவ பரிசோதனைக்கு குழு கேட்கலாம். குழு அதன் செயல்முறையை கட்டுப்படுத்தவும். ஆதாரங்களை சேகரிக்கவும், சாட்சிகள் கேள்வி கேட்கும் செயல்முறை போன்ற அதிகாரங்கள் குழுவிற்கு உள்ளன.


முந்தைய வழக்குகளில், விசாரணையை வழிநடத்த ஒரு வழக்கறிஞரை குழு நியமித்தது. நீதிபதி ராமஸ்வாமி வழக்கில் (1993), இந்திரா ஜெய்சிங் என்ற மூத்த வழக்கறிஞர் குழுவால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞராக இருந்தார்.


குழுவின் கண்டுபிடிப்புகள்: விசாரணைக்குப் பிறகு, குழு தனது கண்டுபிடிப்புகளுடன் கூடிய அறிக்கையை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பிக்கிறது. சபாநாயகர்/தலைவர் அறிக்கையை மக்களவை /மாநிலங்களவையில்  கூடிய விரைவில் சமர்ப்பிக்கிறார்.


நீதிபதி தவறான நடத்தை அல்லது இயலாமை ஆகியவற்றில் குற்றவாளி இல்லை என்று அறிக்கை கண்டறிந்தால், பதவி நீக்க செயல்முறை முடிவடைகிறது.


நீதிபதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்ட சபை அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது. பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே அமர்வில் குடியரசுத் தலைவரிடம் நீதிபதியை நீக்கக் கோருகின்றன.


குற்றச்சாட்டு நிகழ்வுகள்


சுதந்திரம் பெற்றதில் இருந்து நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான ஆறு முயற்சிகளில் எதுவும் வெற்றி பெறவில்லை. நீதிபதிகள் ராமஸ்வாமி மற்றும் சென் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் மட்டுமே விசாரணைக் குழுக்கள் நீதிபதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்தன.


ஆறு வழக்குகளில் ஐந்தில், நிதி முறைகேடு குற்றச்சாட்டு, மீதமுள்ளவை பாலியல் தவறான நடத்தை குற்றச்சாட்டு ஆகும். 


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமிக்கு எதிராக 1993-ம் ஆண்டு முதல் பதவி நீக்க நடவடிக்கை தொடங்கியது. நிதி முறைகேடு அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு முன், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிபதிக்கு ஆதரவாக வாதாடினார்.  


அந்த தீர்மானம் தோல்வியடைந்து, ஒரு வருடம் கழித்து நீதிபதி ராமசாமி ஓய்வு பெற்றார்.


2011ஆம் ஆண்டு கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மாநிலங்கவை அவரை பதவி நீக்கம் செய்தது. ஆனால், மக்களவையில் தீர்மானம் விவாதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். நீதிபதி சென் ராஜினாமா செய்ததன் மூலம் நடவடிக்கைகள் காலாவதியானது.


2015ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ் கே கங்கேலே பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும்,  ஒரு குழு விசாரித்து 2017-ல் அவரை விடுவித்தது.


2015ஆம் ஆண்டு, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜஸ்டிஸ் ஜே பி பர்திவாலா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாடு சரியாக முன்னேறாததற்கு இடஒதுக்கீடும் ஒரு காரணம் என்று அவர் ஒரு தீர்ப்பில் கூறிய கருத்துகளின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டது.


நீதிபதி தனது தீர்ப்பில் இருந்து கருத்துக்களை நீக்கிய பின்னர் பதவி நீக்க தீர்மானம் அப்போதைய மாநிலங்கவைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் கைவிடப்பட்டது.


ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி வி நாகார்ஜுனா 2017 இல் பதவி நீக்கம் செய்ய முயன்றனர். அவர் ஒரு தலித் நீதிபதியை ஏமாற்றியதாகவும் (victimising) நிதி முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.


இரண்டு குற்றச்சாட்டுத் தீர்மானங்களும் தோல்வியடைந்தன. தீர்மானங்களில் கையெழுத்திட்ட மாநிலங்கவை உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் இது நடந்தது. இதனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.


2018இல் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மிக சமீபத்திய பதவி நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய, மாநிலங்கவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, ஆரம்ப கட்டத்திலேயே இந்த தீர்மானத்தை நிராகரித்தார்.




Original article:

Share:

மதுரையில் டங்ஸ்டன் சுரங்க உரிமை ஏலத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசு ஏன் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது? -அருண் ஜனார்த்தனன்

 முன்மொழியப்பட்ட திட்டம் சுற்றுசூழலை பாதிக்கும் என்பதன் காரணமாக எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது பற்றிய கவலையையும் எழுப்புகிறது. கூடுதலாக, இது கூட்டாட்சி பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.


தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை வழங்க ஒன்றிய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புக்கு வழிவகுத்தது. ஒன்றிய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஒரு ராஜதந்திர திட்டம்


நவம்பர் 7-ஆம் தேதி, ஒன்றிய சுரங்க அமைச்சகம் 8 முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவதாக அறிவித்தது. மதுரை மேலூர் தாலுக்காவில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியும் இதில் அடங்கும். இந்த தொகுதிகள் முக்கியமான மற்றும்  ராஜதந்திர கனிம தொகுதிகள் ஏலத்தின் 4வது பகுதியின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியது. இந்த ஏலத்தின் நோக்கமானது, உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு தன்னை சார்ந்து இருக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதாகும்.


நாயக்கர்பட்டி பகுதி 2,015.51 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இது டங்ஸ்டனின் முக்கிய தாதுவான ஷீலைட் (scheelite) நிறைந்தது. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கு டங்ஸ்டன் இன்றியமையாதது. மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அரசு நிறுவனம், இந்தப் பகுதியை டங்ஸ்டன் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாகக் கண்டறிந்தது. 


தொகுதிக்கான ஏலத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் வெற்றி பெற்றது. இது வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.


ஸ்கீலைட்  (scheelite) என்றால் என்ன?  


ஸ்கீலைட் என்பது CaWO4 என்ற வேதியியல் சூத்திரத்துடன் கால்சியம் டங்ஸ்டேட்டால் ஆன ஒரு கனிமமாகும். இது டங்ஸ்டனின் முக்கிய ஆதாரமாகும். இது டங்க்ஸ்ட்டன் என்றும் அழைக்கப்படுகிறது. சேகரிப்பாளர்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட ஷீலைட் படிகங்களை மதிக்கின்றனர். படிகங்கள் குறைபாடற்றதாக இருந்தால், அவை சில நேரங்களில் ரத்தினக் கற்களாக வெட்டப்படலாம்.


தமிழ்நாட்டில் எதிர்ப்பு


நாயக்கர்பட்டி பகுதியை நாட்டின் மதிப்புமிக்க சொத்தாக ஒன்றிய அரசு பாராட்டியது. ஆனால், இந்தப் பகுதியில் நடைபெறும் சுரங்கப் பணிகளுக்கு தமிழ்நாட்டிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பரபம்பரியத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.


முன்மொழியப்பட்ட சுரங்கத் தளத்தில் அரிட்டாபட்டி, பல்லுயிர் வளம் நிறைந்த பகுதி. இது பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின்படி அரிட்டாபட்டியில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குகைக் கோயில்கள், ஜெயின் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் படுக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். அரியவகை உயிரினங்களின் இருப்பிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகிய அனைவரும் சுரங்கம் பிராந்தியத்தின் சூழலியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நிரந்தரமாக பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர்.


பூவுலகின் நன்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் குழுக்கள், சுரங்கத்திலிருந்து கனிம நுண்கசடு (tailings) எனப்படும் கழிவுப் பொருட்கள் ஆர்சனிக், காட்மியம் மற்றும் ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்களை வெளியிடக்கூடும் என்று எச்சரித்தனர். இந்த உலோகங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உட்பட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய வேதாந்தாவின் வரலாற்றின் காரணமாக இந்த கவலைகள் அதிகரித்தன.


சுரங்கப் பகுதியில் அமைந்துள்ள தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி போன்ற கிராமங்களில் சுரங்கம் தோண்டுவதால் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1.93 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த பகுதி நவம்பர் 2022-ல் பல்லுயிர் மரபுச் சின்னமாக தமிழ்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.


ஒன்றிய -மாநில அரசு மோதல்


இந்த சர்ச்சை மீண்டும் கூட்டாட்சி மற்றும் வள மேலாண்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.


2023 அக்டோபரில் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழ்நாடு அரசு கூறியது. அந்த பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு மேற்கோள் காட்டியது. எவ்வாறாயினும், ஏலத்தை எதிர்க்கும் முறையான தகவல் எதுவும் செயல்முறையின் போது பெறப்படவில்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது.


தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநிலங்களவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தபோது, ​​மாநிலத்தின் எதிர்ப்புகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். அக்டோபர் 3, 2023 அன்று தமிழ்நாடு தனது கவலைகளை தெரிவித்தபோதிலும், ஒன்றிய அரசு அவற்றைப் புறக்கணித்து ஏலத்தில் இறங்கியது கண்டிக்கத்தக்கது என்று தனது கவலைகளை வெளிப்படுத்தினர்.


டிசம்பர் 9, 2024 அன்று, நாயக்கர்பட்டி பகுதிக்கான சுரங்க உரிமையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. டங்ஸ்டன் சுரங்கத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம், அப்படி நடந்தால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


சுரங்கத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீர்மானத்தில், “மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமமும் வழங்கக்கூடாது” என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியது.


பாதிக்கப்பட்ட கிராமங்களில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.




Original article:

Share:

தலைமை நீதிபதிகளுக்கு நீண்ட பதவிக்காலம் தேவை

 நீதிமன்றத்தின் செயல்பாட்டை அவர்கள் புரிந்துகொள்வதற்குள், அவர்கள் ஓய்வு பெற உள்ளனர்.


செப்டம்பரில், இந்தியா முழுவதும் உள்ள எட்டு உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும். இருப்பினும், ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் மிகக் குறுகிய பதவிக் காலம் இருப்பது வருந்தத்தக்கது. இது ஒரு தொடர் பிரச்சனையாக உள்ளது. இது நீதித்துறையின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், இதற்கு அவசர நடவடிக்கை தேவை.


குறுகிய காலங்கள் (Short tenures)


உண்மையில், ஒரு தலைமை நீதிபதி ஏற்கனவே தனது பதவிக்காலத்தை முடித்துவிட்டார். இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ராஜீவ் ஷக்தேர், 24 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 18 அன்று ஓய்வு பெற்றார். அவர் தனது பொறுப்பில் உறுதியாக இருந்தபோது, ​​அவர் தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி மன்மோகன், செப்டம்பர் 29-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர், டிசம்பர் 3-ம் தேதி தலைமை நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஒன்றிய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி தஷி ரப்ஸ்தான் சுமார் 6 மாதங்கள் பணியாற்றுவார். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சுரேஷ் குமார் கைத், சுமார் 8 மாத காலமாக பதவிவகித்தவர் ஆவர். நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, ஓராண்டுகால பதவியில் இருப்பார். 


மேலும், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பிரசன்னா முகர்ஜியும், நீதிபதி ஸ்ரீராம் ஓய்வு பெறும் அதே நேரத்தில் ஓய்வு பெறுகிறார். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார், சுமார் 15 மாத பதவிக் காலம் கொண்டவர். சுமார் நான்கு ஆண்டுகள் ஒப்பீட்டளவில் நீண்ட பதவியில் இருக்கும் ஒரே நீதிபதி நீதிபதி எம்.எஸ். ராமச்சந்திர ராவ் ஜார்கண்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் அனைத்து வகையான ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். தலைமை நீதிபதி நீதிமன்றத்தை நிர்வகிப்பது, அதன் நிதி ஆரோக்கியத்தை கண்காணிப்பது, நீதிபதி பதவிக்கான பெயர்களை பரிந்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீதிமன்றத்தை நிர்வகிப்பதற்கு பல்வேறு குழுக்களை அமைக்கிறது. மேலும், தலைமை நீதிபதி உயர் நீதிமன்ற ஊழியர்களின் நலனைக் கவனித்து, தேவைப்படும்போது விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். ​​கேள்வி கேட்கப்படும்போது, ​​உரிய அதிகாரிகளுக்கு முன்பாக அத்தகைய நடவடிக்கையை பாதுகாக்க ஏற்பாடு செய்கிறார்கள். 


தலைமை நீதிபதி பல நிர்வாக கோரிக்கைகளை கையாளுகிறார், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார், சட்டத்திற்கு கட்டுப்படுத்தாமல் கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக, தலைமை நீதிபதி, மாநிலத்தில் சட்டக் கல்வி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கிறார். அதே நேரத்தில் உயர் நீதித்துறை அதிகாரியாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார். தெளிவாக, கிடைக்கும் நேரத்திற்குள் இந்தப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பது சவாலான பணியாகும்.


உயர் நீதிமன்றங்கள் சிறிய நிறுவனங்கள் அல்ல. மேலும், ஒரு தலைமை நீதிபதி நாட்டின் ஒரு பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய பணிகள் மற்றொரு பகுதியில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும். ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ள, அல்லது பெரிய அளவில் கூட, நேரமும் முயற்சியும் தேவை. பெரும்பாலான தலைமை நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் நீதிமன்றங்களின் தேவைகளை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.


தலைமை நீதிபதிகளின் குறுகிய பதவிக்காலம் குறித்து நிறைய கூறப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு தனது பிரியாவிடை உரையின் போது, ​​உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுபவர்கள் "குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு ஆண்டுகள்" பதவியில் இருக்க வேண்டும் என்று கூறினார். "உயர் நீதிமன்றங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதால், இங்கு நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு (தலைமை நீதிபதிகள்) 1.5 முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 


அவர்கள் குடியேறும் நேரத்தில், "அவர்கள் ஓய்வு பெறுவதைப் பார்க்கிறார்கள்" என்று அவர் கூறினார். குறுகிய காலத்திற்குப் பிறகு ஓய்வுபெற்ற பல தலைமை நீதிபதிகள் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மத்தியிலும் இந்தப் பிரச்னை பொதுவானது. இருப்பினும், இந்தப் பிரச்சனையில் சிறிய கவனம் செலுத்தப்பட்டது.


ஆங்கிலேயர்களிடம் இருந்து ஒரு பாடம்


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்படி இல்லை. அப்போது, ​​தலைமை நீதிபதிகள் நீண்டகாலம் பதவியில் இருப்பது வழக்கம். மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 1862-ல் நடைமுறைக்கு வந்தது. 2012-ம் ஆண்டில் 150 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, ​​பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றமாக 85 ஆண்டுகளையும், சுதந்திர இந்தியாவில் நீதிமன்றமாக 65 ஆண்டுகளையும் நிறைவு செய்திருந்தது. முதல் தலைமை நீதிபதி சர் கோலி ஹர்மன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஆவர். 1947-ம் ஆண்டில், 85 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, ​​சென்னை உயர்நீதிமன்றத்தில் 11 தலைமை நீதிபதிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக எட்டு வருடங்களுக்கும் குறைவாகவே பதவிக் காலத்தை அனுபவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவின் போது, ​​நீதிபதி எம்.ஒய். இக்பால் 35-வது தலைமை நீதிபதியாக இருந்தார். எனவே, 65 ஆண்டுகளில், நீதிமன்றத்தில் 24 தலைமை நீதிபதிகள் இருந்தனர். 


அதாவது, அந்த நீதிபதிகளின் சராசரி பதவிக்காலம் 2.75 ஆண்டுகள் ஆகும். தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னாரின் பதவிக் காலத்தைக் கழிக்கும்போது சராசரி பதவிக்காலம் மேலும் குறைக்கப்படுகிறது. ராஜமன்னார் மற்றும் தலைமை நீதிபதி வீராசுவாமி கே. தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் 13 ஆண்டுகள் மற்றும் தலைமை நீதிபதி வீராசாமி கே. சுமார் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். இதன் பொருள் 45 ஆண்டுகளில் 22 தலைமை நீதிபதிகள் இருந்தனர். இது ஒவ்வொருவரின் சராசரி பதவிக்காலத்தையும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைக்கிறது.


தலைமை நீதிபதிகளின் பணிகள் அதிகரித்து மேலும் சிக்கலாகி வருகின்றன. ஆனால், இந்தப் பணிகளைச் செய்ய அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் குறைந்து வருகிறது. அவர்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு நீதிமன்ற கட்டமைப்பு மிகக் குறைந்த நேரத்தை வழங்கும்போது, ​​புதுமை, சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்திற்கு எப்படி இடம் கிடைக்கும்?


இங்கு பிரச்சனைக்கான தீர்வுகளை வழங்குவதல்ல இலக்கு. மாறாக, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்த வேண்டும். பார் கவுன்சில் உள்ளிட்ட பங்குதாரர்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பிரச்சனையானது நீதிமன்ற கட்டமைப்பை எதிர்மறையாக பாதிக்கும் முன் அவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது முக்கியம்.


என்.எல். ராஜா, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம். 




Original article:

Share:

மாநிலங்களவைத் தலைவருடன் எதிர்க்கட்சிகளின் மோதல்

 அனைத்துப் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் வெளியிடும் களமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும்.


இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 60 மாநிலங்களவை  உறுப்பினர்கள் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. மேலும், அது நடந்தால் தோற்கடிக்கப்படும். இருப்பினும், முக்கிய பிரச்சினை அதுவல்ல. மாநிலங்களவைத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே நம்பிக்கை இல்லாததுதான் உண்மையான பிரச்சனையாக உள்ளது. 


மேலும், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரின் தீர்ப்புகள் மற்றும் பொது அறிக்கைகள் அவர் ஒரு சார்புடையவர் என்பதைக் காட்டுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. டிசம்பர் 9 அன்று அவர் நிராகரித்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மூலமாக பாஜக எம்பிக்கள் பேச அனுமதித்தார். இந்த முடிவு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியது. மேலும், எதிர்கட்சி உறுப்பினர்களும் மாநிலங்களவைத் தலைவர் பாரபட்சமான முறையில் இருப்பதாக கருதுகின்றனர். உதாரணமாக, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அடிக்கடி பேசவிடாமல் நிறுத்தப்படுகிறார். இதற்கிடையில், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசாங்கத்தின் கருத்துக்களைப் பெரிதாக்குவது போலவும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை விமர்சிப்பதாகவும் தெரிகிறது. 


பெரும்பாலும், தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் மக்களவையின் சபாநாயகர் போன்ற அரசியல் சார்பற்ற பதவிகளுக்கு, கட்சிசார்ந்த போட்டியின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியானது பெரும்பான்மை கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான். இந்த நிலைப்பாடுகள் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல்கள் பெரும்பாலும் பாகுபாடானவையாக உள்ளது. பொதுவாக, பதவிக்கு வந்ததும், நடுநிலையைப் பேணுகிறார்கள் மற்றும் பெரும்பாலும் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான (no-confidence motion) அறிவிப்பு ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான திருப்பத்தைக் குறிக்கிறது.


எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடத்தைச் குறைக்க பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதன் பின்னணியில் இவை அனைத்தும் வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. அரசாங்கத்தின் மீதான விமர்சனம் தேசவிரோத செயலாக சித்தரிக்கப்படுகிறது. மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பெரும்பாலும் தூண்டுதல்கள் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது அரிதான செயலாகும். நாடாளுமன்றம் அரசியல் தாக்குதலுக்கான மற்றொரு களமாக மாறினால், அது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக சிதைந்துவிடும்.


நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து குடிமக்களுக்குச் சொல்லப்படும் செய்தி தெளிவாக இருக்க வேண்டும். அரசாங்கம் அவர்களின் கவலைகளுக்கு செவிசாய்க்கிறது மற்றும் அவர்களின் குரல்களில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இது காட்ட வேண்டும். அரசானது சமூகத்தைக் குறிப்பிட்டு குடியரசுத் துணைத்தலைவர் தங்கரைப் பாதுகாத்தது. மேலும், முக்கிய எதிர்க்கட்சியையும் கண்டித்துள்ளது. கட்சியானது இந்தியாவுக்கு எதிரானது என்று அரசாங்கம் பரிந்துரைத்தது. பெரும்பான்மை பலத்தால் அரசாங்கம் வெற்றிபெறும் அதே வேளையில், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும். அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான விரோதப் போக்கிற்கு நாடாளுமன்றம் பணயக்கைதியாக இருக்கும் போது, ​​தலைவர் நடுநிலையாக இருந்து முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அவையின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் நடுநிலையானவராகவும், அப்படிப் பார்க்கப்படும்போதுதான் இந்த பதவியின் பங்கு சாத்தியமாகும். குறைகளின் தகுதியைப் பொருட்படுத்தாமல், நிறுவன ஒருமைப்பாட்டிற்காக அரசியல் சண்டைக்கு அப்பாற்பட்டவர் என்று அவரை விமர்சிப்பவர்களுக்கு உறுதியளிக்க தலைவர் ஒரு உறுதியான அணுகுமுறையை எடுக்கலாம்.




Original article:

Share:

வைக்கம் : இரண்டு மாநிலங்கள், இரண்டு தலைவர்கள் மற்றும் சீர்திருத்தத்தின் கதை

 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறிப்பிடத்தக்க சமூக-அரசியல் நிகழ்வு நடந்தது. வைக்கம் போராட்டமானது, முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள உள்ளூர் கோவிலுக்குள் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் நுழைவதைத் தடுக்கும் தடைகளை அகற்ற வழிவகுத்தது. மதச் சீர்திருத்தத்தின் அவசியத்தை எடுத்துரைத்த பல தீவிரமான இயக்கங்களில் இந்த இயக்கம் முதன்மையானதாகப் பார்க்கப்பட்டது. அன்று முதல் பெரியார் ஈ.வெ.ராவால் நிறுவப்பட்ட திராவிட இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது. ஈ.வெ.ராமசாமி மற்றும் அதன் சுயமரியாதைக் கொள்கைகள் இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்களைக் கொண்டு வர உதவியுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் மேலும் சமத்துவ சமுதாயத்திற்கு வழி வகுத்தன. இந்த இயக்கத்தின் மூலமாக குறைவாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயம் என்னவென்றால், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் ஒரு முக்கிய சட்டப்பிரிவைச் சேர்த்தார். வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பெரியாரின் விடாமுயற்சி மற்றும் அம்பேத்கரின் தொலைநோக்கு இரண்டையும் போற்றுகிறது. தென்னிந்திய அரசியலில் இன்று நிலவும் சீர்திருத்தப் போக்குகளையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


ஒரு தீவிரமான இயக்கத்தின் பரிணாமம்


வைக்கம் மகாதேவர் கோவில் அருகே பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் தெருக்களில் நடமாட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த அநீதிக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும், நிர்வாகத்தின் அடக்குமுறையை அவர்கள் எதிர்கொண்டனர். 1924-ம் ஆண்டில், பெரியார் இயக்கத்தில் சேர்ந்தார், அது படிப்படியாக தீவிரமான இயக்கமாக மாறியது. இது அனைத்து சமூக மக்களையும் ஈர்த்தது. நவம்பர் 1925-ம் ஆண்டில், தெருக்களில் நடப்பதற்கான தடை நீக்கப்பட்டது. இது சமூக நீதியை நோக்கிய மாற்றத்தைக் குறித்தது. அடுத்த பத்தாண்டுகளில், இதேபோன்ற இயக்கங்கள் நாடு முழுவதும் பரவியது. பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அம்பாதேவி கோயில் மற்றும் காலாராம் மந்திரில் நுழைய அனுமதிக்கப்படாத போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.


இருப்பினும், தென்னிந்தியாவில் சீர்திருத்தம் வேகமாக நடந்து கொண்டிருந்தது. 1932-ம் ஆண்டு, சட்டப் பேரவையில் கோயில் நுழைவுச் சட்டத்தை (Bill to allow temple entry) அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1936-ம் ஆண்டில் திருவிதாங்கூர் கோவில் நுழைவு பிரகடனமும், 1938-ம் ஆண்டில் மலபார் கோவில் நுழைவு மசோதாவும் பிறப்பிக்கப்பட்டது. 1939-ம் ஆண்டில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலிலும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1947-ம் ஆண்டின் மதராஸ் கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் (Madras Temple Entry Authorization Act) அனைத்து சாதி இந்துக்களும் மதராஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நுழைந்து வழிபட அனுமதித்தது.


இந்தச் சீர்திருத்தங்கள் பல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே நடந்திருந்தாலும், மதச் சுதந்திரத்திற்கான உரிமையை வரையறுப்பதில் அரசியல் நிர்ணய சபை மிகுந்த கவனம் செலுத்தியது. டிசம்பர் 7, 1948 விவாதங்களின் போது, ​​பி.ஆர். அம்பேத்கர், ‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டது’ என்ற சொற்றொடரைச் சேர்த்து, அடிப்படை உரிமையின் அளவைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் தேவைப்படும்போது அரசின் தலையீட்டைச் செயல்படுத்தினார்.


இந்த ஏழு வார்த்தைகள் மதத்தில் சீர்திருத்தங்களுக்கு சட்ட அடிப்படையாக அமைந்தது. சமத்துவம் மற்றும் மதம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு இடையே மோதல் ஏற்படும்போது, இதைக் குறுக்கிட்டு தலையிடும் அதிகாரத்தையும் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கியது.


மாநிலம் மற்றும் ஒழுங்குமுறை பிரச்சினை


கோவில்கள் மற்றும் மதம் அனைத்தையும் அரசால் கட்டுப்படுத்த முடியுமா என்பது எப்போதுமே ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை அனுமதித்தால், அரசு மதச்சார்பற்றத் தன்மையை இழந்துவிடும் என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறானது மற்றும் நியாயமற்றது. பொது இடங்களான கோவில்களை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் தலையீடு சமத்துவத்தையும் அணுகலையும் உறுதி செய்கிறது. மெட்ராஸ் இந்து சமய அறநிலையச் சட்டம் (Madras Hindu Religious Endowments Act) 1927-ம் ஆண்டு முதல் இன்றைய தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை சட்டம் (Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act) 1959-ம் ஆண்டு வரையிலான நீண்ட வரலாறு, பொது ஒழுங்கு மற்றும் அறநெறிக்கு ஏற்ப மத விவகாரங்களை நிர்வகிப்பதற்கான சட்டமியற்றும் நோக்கத்தை வெளிப்படுத்தும். 


இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதராஸ் vs ஸ்ரீ ஷிரூர் மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மிந்திர தீர்த்த ஸ்வாமியர்- (Hindu Religious Endowments, Madras vs Sri Lakshmindra Thirtha Swamiar of Sri Shirur Mutt) (ஷிரூர் மடம் வழக்கு) 1954ஆம் ஆண்டு முதல் பல்வேறு தீர்ப்புகள் மூலம் இந்த நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்திய உச்சநீதிமன்றம் மதச்சார்பற்ற அரசை நிர்வகிக்க முடியும் என்ற கருத்தை உறுதி செய்தது. கோவிலின் விவகாரங்கள் மற்றும் அத்தியாவசிய மத நடைமுறைகளின் சோதனையை முன்வைத்தது.


அதன்பிறகு, 1970-ம் ஆண்டு தொடங்கி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்களை அர்ச்சகர்களாக (பூசாரிகளாக) நியமிக்க சட்டங்களை இயற்றியுள்ளன. இது மத விவகாரங்களில் தலையிடும் சர்ச்சைக்குரிய செயலாக சிலர் கருதுகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ‘ஆகமக் கோயில்கள்’ (Agamic temples) என்ற சிறப்பு வகையைக் குறிப்பிடும்போது, ​​கோயில்களில் மதச்சார்பற்ற விஷயங்களை நிர்வகிக்க மாநிலத்தின் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


மாற்றம் மற்றும் எதிர்ப்பு


கடந்த சில ஆண்டுகளாக, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் பிராமணர் அல்லாத சாதியிலிருந்து நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், ஓதுவார்கள் மற்றும் பட்டாச்சார்யாக்களை நியமித்துள்ளன. இவை நீதிமன்றங்களுக்குள்ளும் வெளியேயும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் மரபுவழி மத நம்பிக்கைகள் மற்றும் வேரூன்றிய சமூக ஆணைகளுக்கு சவால் விடுகின்றன. ஆயினும்கூட, சீர்திருத்தங்களுக்கான அழுத்தம் முன்பைவிட வலுவாக உள்ளது. வைக்கம் தொடங்கி நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினையில் அரசியல் நிர்ணய சபை விவாதத்திற்குப் பிறகு, ஒரு கட்டாயமான தார்மீக ஒருமித்த கருத்து உருவாகி வருகிறது. 


டிசம்பர் 12, 2024 அன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் ஒத்துழைத்துள்ள நிலையில், இரண்டு மாநிலங்களை ஒன்றிணைத்த வரலாற்று நிகழ்வையும் கொண்டாடுகின்றன. இரண்டு மாபெரும் தலைவர்கள் ஒன்றிணைந்ததன் மூலம் சாத்தியமான ஒரு சமூக சீர்திருத்தப் பாதையின் தொடக்கத்திற்கு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.




Original article:

Share: