நவீன மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழிலாளர் சூழலமைப்பை செயல்படுத்துதல் -ஹர்ஷ வர்தன் அகர்வால்


நான்கு தொழிலாளர் சட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் இயக்கவியலை ஆதரிக்கும் ஒரு நவீன தொழிலாளர் ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்தும்.


2025-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், இந்தியா தனது 'விக்சித் பாரத்' (மேம்பட்ட இந்தியா) இலக்கை நோக்கி ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்தது. இந்த நவீனமயமாக்கப்பட்ட சட்டங்களான - ஊதியங்கள் மீதான சட்டம் (2019), தொழில்துறை உறவுகள் சட்டம் (2020), சமூகப் பாதுகாப்புச் சட்டம் (2020), மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் (2020) - ஆகியவை நடைமுறைக்கு வந்ததன் மூலம், இந்தியா தொழிலாளர் உரிமைகளில் ஒரு பெரிய பாய்ச்சலை அடைந்துள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும், வணிகப் போட்டியை மேம்படுத்தும், மேலும் மேம்பட்ட (விக்சித் பாரத்) மற்றும் தற்சார்பு (ஆத்மநிர்பர்) நிலையை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் ஒரு நியாயமான, நவீன மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் பல தசாப்தங்களாக மெதுவாக வளர்ந்துள்ளன, வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்காகப் பல தனித்தனி சட்டங்களை உருவாக்கியுள்ளன. இந்தச் சட்டங்கள் வேலைவாய்ப்பிற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்திருந்தாலும், இந்தியாவின் வளர்ந்துவரும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தொழிலாளர் சக்தியைக் கருத்தில் கொண்டு, அவற்றை எளிமைப்படுத்துவது அவசியமாகியது. இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் (Second National Commission on Labour), சட்டங்களை மேலும் பரந்த விதிகளாக (Codes) இணைக்கப் பரிந்துரைத்தது. 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தொழிற்துறை, முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு, நான்கு விரிவான தொழிலாளர் விதிகள் (Labour Codes) உருவாக்கப்பட்டன.


பெரிய அளவிலான மற்றும் இளம்பணியாளர் குழு


இந்தியாவில், உலகின் மிகப்பெரிய மற்றும் இளைஞர் பணியாளர் குழுக்களில் ஒன்று உள்ளது. இதில், 643 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். வரும் ஆண்டுகளில் புதிய உலகளாவிய தொழிலாளர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினை இந்தியா வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2017–18-ஆம் ஆண்டு மற்றும் 2023–24-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா 16.83 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வேலையின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்தது, மற்றும் முறைசார் வேலைவாய்ப்பு (Formal Employment) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


இந்தியாவில் உள்ள பல தொழிலாளர்கள் இன்னும் முறைசாரா துறையில் இருப்பதால், அவர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் ஒரு எளிமையான மற்றும் தெளிவான தொழிலாளர் முறை இருப்பது முக்கியமாகிறது. சமூகப் பாதுகாப்பு குறியீடு இப்போது முறைசாரா துறையையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் பொருளாதாரம் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. மேலும், இந்த வளர்ச்சியை ஆதரிக்க ஒரு நவீன தொழிலாளர் முறையின் அவசியத்தைக் காட்டுகின்றன.


தொழிலாளர் குறியீடுகள் (Labour Codes) தொழிலாளர்களுக்கு சிறந்த மற்றும் நிலையான பாதுகாப்பை அளிக்கின்றன. அவை குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயிக்கின்றன, நியமனக் கடிதங்களை (appointment letters) கட்டாயப்படுத்துகின்றன, சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்கின்றன, மேலும் வாரத்திற்கு 48 மணிநேரம் என வேலை நேரத்தை வரம்புக்குள் வைக்கின்றன. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான குறியீடு (Occupational Safety and Health (OSH Code)) பாதுகாப்புக் குழுக்கள், இலவச சுகாதார பரிசோதனைகள் மற்றும் உயர் பணியிட தரநிலைகளை சேர்ப்பதன் மூலம் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.

சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 (The Code on Social Security, 2020) அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எங்கு வேண்டுமானாலும் ஊழியர் நிலை காப்பீட்டுக் கழகத்தின் (Employees' State Insurance Corporation (ESIC)) காப்பீட்டை உறுதி செய்கிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (Employees' Provident Fund (EPF)) செயல்முறைகளை விரைவுபடுத்துகிறது. எளிதான செஸ் (cess) கூடுதல் வரி பணபலன்கள் மூலம் கட்டுமானத் துறைக்கு ஆதரவளிக்கிறது. மேலும், பல்வேறு வகையான தொழிலாளர்களுக்காக ஒரு தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியத்தை (National Social Security Fund) உருவாக்குகிறது.


இந்தக் குறியீடுகளின்கீழ் உள்ள மற்றொரு முக்கிய சீர்திருத்தம் என்னவென்றால், இணக்கத் தேவைகளை எளிதாக்குவதாகும். ஒற்றைப் பதிவு, ஒற்றை உரிமம் மற்றும் ஒற்றைத் தாக்கல் முறைக்கு மாறியது, நிர்வாகச் சுமைகளை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSME)), கணிசமாகக் குறைக்கிறது. ஊதியங்களுக்கான ஒருங்கிணைந்த வரையறை பல சட்டங்களில் தெளிவைக் கொண்டுவருகிறது. இது பிரச்சனைகளைக் குறைக்கவும் மற்றும் ஊதியம் தொடர்பான கணக்கீடுகளில் முன்னறிவிப்புத் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறிய குற்றங்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை எடுப்பதைக் கைவிடுதல் மற்றும் வரையறுக்கப்பட்ட வழிமுறை அடிப்படையிலான ஆய்வுகள் போன்ற டிஜிட்டல் செயல்முறைகளை அறிமுகப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான இணக்கத்தை ஊக்குவிக்கிறது.


எதிர்கால வேலைக்குத் தயாராகுதல்


இந்தியாவின் தொழிலாளர் குழுமம் பல்வகைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், கிக் தொழில் (தற்காலிகமான, ஒப்பந்த அடிப்படையிலான, பகுதி நேர வேலை) மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழில் (ஆன்லைனில் வேலை கொடுப்பவர் – வேலை செய்பவரை இணைக்கும் ஆப் அல்லது இணையதளம்) அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நெகிழ்வான பணி மாதிரிகள் (flexible working models) மற்றும் டிஜிட்டல் மூலம் இயக்கப்பட்ட வாழ்வாதாரங்களின் விரைவான வளர்ச்சி ஆகும். இந்தச் சூழலில், சமூகப் பாதுகாப்பு குறியீட்டில் கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்களைச் சேர்த்தது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த தொழிலாளர் குழுமத்தின் அளவு 2024-25-ஆம் ஆண்டில் ஒரு கோடியில் இருந்து 2029-30-ஆம் ஆண்டுக்குள் 2.35 கோடியாக எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சமூகப் பாதுகாப்பிற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவது, வேலையின் மாறிவரும் தன்மைக்கு இணங்கக்கூடிய ஒரு தொலைநோக்கு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 


நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் முறைப்படுத்தலையும் இந்த விதிகள் வலியுறுத்துகின்றன. தெளிவான விதிகள், தரப்படுத்தப்பட்ட வரையறைகள் மற்றும் வெளிப்படையான செயல்முறைகள் அதிக நிறுவனங்கள் முறையான பொருளாதாரத்தில் நுழைய ஊக்குவிக்கின்றன மற்றும் பணியாளர்களில் பெரும் பகுதியினருக்கு பாதுகாப்பை விரிவுபடுத்த உதவுகின்றன.


பணியிடத்தில் பெண்களுக்கு ஒரு ஊக்கம்


இந்தியாவில் பெண்களின் பணியாளர் பங்கேற்பு விகிதம் மேம்பட்டுள்ளது, ஆனால், இன்னும் அதன் முழுத் திறனை எட்டவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024-ன் படி இது 32.8 சதவீதமாக உள்ளது. தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) பெண்களுக்குச் சம ஊதியம், சிறந்த மகப்பேறு சலுகைகள் மற்றும் அமைப்புசாரா, கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள முறை பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. மேலும், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியச் சட்டம்  பெண்களின் சம்மதத்துடனும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் இரவுநேரங்களில் பணிபுரிய அனுமதிக்கிறது. இது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த விதிகள் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உதவுகின்றன. தொழில்துறை விதிகளைத் தெளிவுபடுத்துதல் மற்றும் விவாதங்களுக்கான தீர்மானத்தை விரைவுபடுத்துதல் மூலம் தொழிலாளர் பாதுகாப்பை வணிகத் தேவைகளுடன் சமநிலைப்படுத்த தொழிலாளர் சட்டங்கள் முயல்கின்றன. அதே நேரத்தில், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றையும் உறுதி செய்கிறது. இந்த அணுகுமுறை முதலீடு, உறுதித்தன்மை மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.



இந்தக் குறியீடுகளைச் செயல்படுத்தும் செயல்முறை முன்னேறிச் செல்லும்போது அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக உள்ளது. நாடு முழுவதும் ஒருமைப்பாடு மற்றும் தெளிவை உறுதி செய்வதற்காக குறியீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வரம்புகள் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளுடன் மாநிலங்கள் இணைந்து செயல்படுவது முக்கியமாகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இது மிகவும் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இந்தச் சீர்திருத்த உத்வேகம் தொடர வேண்டும், அதிக முதலீடுகளுக்கு ஆதரவளித்து, இதன் மூலம் நாட்டில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். 


ஹர்ஷா வர்தன் அகர்வால் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தலைவராக உள்ளார்.

Original Article: Enabling a modern and future-ready labour ecosystem 


Share:

ஶ்ரீநகரின் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் ஏன் நிலைத்திருக்கப் போராடுகின்றன? -திகேந்தர் சிங் பன்வார்

ஸ்ரீநகரின் சதுப்புநிலங்கள், ஏரிகள் மற்றும் மலைகள் அதன் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன? 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரங்கள் எவ்வாறு மாறியுள்ளன? சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் ஏன் சிக்கல்களை எதிர்கொள்கின்றன? எதிர்கால சவால்களைத் தாங்கக்கூடிய ஒரு வலுவான, உள்ளூர் பொருளாதாரத்தை உருவாக்க என்ன செய்யலாம்?


"பூமியில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது காஷ்மீர்தான்." இருப்பினும், இன்று காஷ்மீரின் அந்தச் சொர்க்கம் சிதைந்து கொண்டிருக்கிறது மேலும், அழகுக்கும் சீர்குலைவுக்கும் இடையில்; பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கும், வெளியிலிருந்து திணிக்கப்பட்ட வளர்ச்சி மாதிரிகளுக்கும் இடையில் ஒரு பிராந்தியப் பொருளாதாரத்தின் பிளவுக்கோடுகளை நாம் காண்கிறோம். ஸ்ரீநகர், அதிகரித்துவரும் சூழலியல் அழுத்தம், பலவீனமடைந்துவரும் பாரம்பரியத் துறைகள், மற்றும் சட்டப்பிரிவு 370-வது நீக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட ஆளுகைச் சீர்குலைவுகளின் பின்விளைவுகளையும் எதிர்கொள்கிறது. சதுப்புநில இழப்பு, விநியோகச் சங்கிலிமுறிவுகள், நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை பொருளாதார பலவீனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.


ஸ்ரீநகர் ஏன் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமாக உள்ளது?


ஸ்ரீநகர், ஒரு இமயமலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் இயற்கையாகவே சூழலியல் ரீதியாகப் பலவீனமானது. அங்குள்ள சதுப்புநிலங்கள், ஏரிகள் மற்றும் மலைகள் நீண்டகாலமாக நகரின் வேளாண்மை, சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த தொழில்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. ஆனால், விரைவான மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி, வெள்ள அபாயங்கள், மற்றும் அடிப்படை சேவைகளின் மீதான அழுத்தம் ஆகியவை தற்போது இந்த நுட்பமான அமைப்பைப் பாதிக்கின்றன. ஒரு காலத்தில் நீர்வழித்தடங்களாக இருந்த பகுதிகள் இப்போது கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், “அபகரிக்கப்பட்ட சதுப்புநிலங்கள் மற்றும் அடைபட்ட வடிகால்கள் வெள்ளச் சேதத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் வாழ்க்கைத் செலவை உயர்த்துகிறது என்று சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம், தோட்டக்கலைத் துறை - ஒரு காலத்தில் கிராமப்புற காஷ்மீருக்கும் நகர்ப்புற காஷ்மீருக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு குறிப்பிடுவது என்னவென்றால், இப்பகுதியின் சிறப்பு தகுதிநிலை நீக்கப்பட்ட பின்னர், வளர்ச்சி குறைந்தது, விநியோகச் சங்கிலிகள் (supply chains) தோல்வியடைந்தன. மேலும், பல மக்கள் தங்கள் முக்கிய வாழ்வாதாரத்தை இழந்தனர் என்று குறிப்பிடுகிறது. 


சட்டப்பிரிவு  370 நீக்கப்பட்ட பிறகு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?


ஆகஸ்ட் மாதம் 2019-ஆம் ஆண்டில் பிரிவு 370 நீக்கப்பட்டதிலிருந்து, இப்பகுதி ஒரு வியத்தகு நிர்வாக மாற்றத்தை சந்தித்துள்ளது. மாநில அந்தஸ்து கலைப்பு, தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் நீடித்த ஊரடங்கு உத்தரவுகள் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, பொருளாதார நிறுவனங்களையும் சீர்குலைத்துள்ளன. உதாரணமாக, ஸ்ரீநகர் மற்றும் காண்டர்பாலில் (Ganderbal) உள்ள பெண் தொழில்முனைவோர் பற்றிய ஒரு ஆய்வு, தகவல் தொடர்பு முடக்கம், இணையதளக் கட்டுப்பாடு மற்றும் முடக்கம் எவ்வாறு கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களுடன் இணைத்தல் மற்றும் ஒரு சிறுவணிகத்தை நிலைநிறுத்துவதற்கான அந்தப் பெண்களின் திறனை எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியது என்பதைக் காட்டுகிறது.


ஸ்ரீநகரில், தனியார்துறை வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி 32,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நகர்ப்புற வேலையின்மை 11.8 சதவீதமாகவும், இளைஞர்கள் வேலையின்மை 32 சதவீதமாகவும், பெண்கள் வேலையின்மை 53.6 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது மூன்று தூண்களின் சரிவு ஏற்பட்டது: சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் கைவினைஞர் தொழில்கள்.


சுற்றுலாத் துறை என்பது நகரம் புத்துயிர் பெறுவதற்கான ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், அது மிகவும் பருவகாலத்தன்மை சார்ந்ததாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது.


சமீபத்திய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் நெடுஞ்சாலை மூடல்கள் காரணமாக 800-க்கும் மேற்பட்ட பழங்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இதனால் சில நாட்களிலேயே ₹200 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. இது உள்ளூர் விநியோகச் சங்கிலி எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.


விநியோகச் சிக்கல்கள், காலநிலை அச்சுறுத்தல்கள், பலவீனமான சந்தை அணுகல் மற்றும் மோசமான கொள்கைகள் ஆகியவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) தோட்டக்கலையின் பங்கைக் குறைத்துள்ளன. மேலும், இது நம்பகமான வளர்ச்சித் துறையாக மாறுவதைத் தடுத்துவிட்டன.


கைவினைஞர் தொழில்களும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளன. கைவினைத் தொழிலில் உள்ள பெண் கைவினைஞர்கள் சுரண்டல், சந்தைகளுக்கான அணுகல் இல்லாமை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் முறிவு ஆகியவற்றை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். முறைசாரா தொழில்களில் பல சாலையோர வியாபாரிகள் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ₹250–300 வரை மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது


பொருளாதாரச் சீர்குலைவுகள் காரணமாக, சில விளிம்புநிலைப் பிரிவினரும், திருநங்கை சமூகத்தினரும், மற்ற வருமான ஆதாரங்கள் இல்லாததால், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுவதாக  வேதனை தெரிவித்துள்ளனர்.


 


பெருநகர மூலதன முதலீட்டு மாதிரி ஏன் தோல்வியடைகிறது?


ஸ்ரீநகருக்கான பல வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள், அதை ஒரு பெரிய முதலீடுகள் தேவைப்படும் இடமாகக் காண்கின்றன. அதாவது மனை வணிகம், சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு தானாகவே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று கருதுகின்றன. ஆனால், உள்ளூர் நிர்வாகம் பலவீனமாக இருக்கும்போது, பாரம்பரிய வேலைகள் புறக்கணிக்கப்படும்போது, மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது இந்த அணுகுமுறை தோல்வியடைகிறது.


உதாரணமாக, ஸ்ரீநகரின் "பொலிவுறு நகரம்" திட்டங்களில், நகரத்தை நவீனமாகக் காட்ட, கைவினைஞர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், மரங்கள் வெட்டப்படுவதும் பசுமையான பகுதிகள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழும் ஒன்றாக மாறியுள்ளது. 


எனவே, வளர்ச்சி என்பது உள்ளூர் பொருளாதாரத்தை அடிப்படையாகக்  கொண்டதாக இல்லாவிட்டால், ஸ்ரீநகரை ஒரு பெரிய பெருநகர தலைநகராக மாற்ற முயற்சிப்பது உண்மையில் நகரத்திற்கு உதவுவதற்குப் பதிலாக அதை மேலும் பலவீனப்படுத்தலாம்  என்று எச்சரிக்கின்றனர்.


நிலையான வளர்ச்சிக்குச்  சாத்தியமான வழிகள் என்னென்ன?


தோட்டக்கலைக்கு ஒரு நல்ல குளிர்ப்பதனத் தொழில்நுட்ப சங்கிலி அமைப்பு (cold-chain system), சூழலுக்குத் தயாரான பயிர்கள் (climate-ready crops) மற்றும் வலுவான உழவர் குழுக்கள் தேவை. சதுப்புநிலங்கள், வெள்ளச் சமவெளிகள், மற்றும் ஏரிகளை பாதுகாக்க வேண்டும், அவற்றை வளர்ச்சி சார்ந்த நகரத் திட்டமிடலில் சேர்க்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாமல் நகரங்களை விரிவாக்குவதற்குப் பதிலாக, நாம் பசுமை உள்கட்டமைப்பில் (green infrastructure) கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


சமூகத்தால் வழிநடத்தப்படும், பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட (heritage-focused), மற்றும் சுற்றுச்சூழலுடன் இணக்கமான அணுகுமுறைகள் (eco-friendly approaches) மூலம் சுற்றுலாவை வளர்க்க முடியும் என்கின்றனர். இந்த அணுகுமுறைகள் கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை தர  வேண்டும்.


ஸ்ரீநகரின் கைவினைப் பொருளாதாரத்திற்கு அதன் கலாச்சார மதிப்பைப்  மதிக்கும் வலுவான ஆதரவு தேவை என்கின்றனர். மேலும், நெசவாளர்கள், சால்வை செய்பவர்கள், மரவேலை செய்பவர்கள், காகிதக்கூழ் கலைஞர்கள்  மற்றும் பித்தளைப் பொருட்கள் செய்பவர்கள் ஆகியோரின் பாரம்பரிய குழுக்களுக்கு  வடிவமைப்பு உதவி, எளிதான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருப்பங்கள் (easy digital marketing options) மற்றும் சுரண்டல் செய்யும் இடைத்தரகர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கும் அமைப்புகள் முக்கியமானவை என்றும் கூறுகின்றனர். கைவினைஞர்கள் வசிக்கும் பகுதிகளை நவீன வளர்ச்சிக்கு "முக்கியத்துவம் குறைந்தவை" என்று கருதுவதற்குப் பதிலாக, அரசு சிறு நிதி (micro-finance), பகிரப்பட்ட மூலப்பொருள் ஆதாரங்கள், ஏற்றுமதி இணைப்புகள், மற்றும் வேலை செய்யும் இடங்களுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


நகர்ப்புற திட்டமிடல் கைவினைஞர்களுக்கான இடங்களை உள்ளடக்க வேண்டும், அவர்கள் வேலை செய்யும் இடங்களைப் பாதுகாக்க வேண்டும், மற்றும் சாலையோர வியாபாரிகளை குற்றவாளிகள்போல் நடத்துவதையோ அல்லது அவர்களை வெளியேற்றுவதையோ தவிர்க்க வேண்டும். ஸ்ரீநகருக்கு இப்போது  தேவை அவர்களை இடம்பெயரச் செய்வதல்ல மாறாக அனைவரையும் உள்ளடக்கிய நிலையான  நிர்வகிக்கப்பட்ட மாற்றம்தான் என்றும் கூறுகின்றனர். 


நீடித்த பொருளாதார மீட்சிக்கு வலுவான  உள்ளூர் அளவில் நிர்வாகத்தை மீண்டும் உருவாக்குவது மிக முக்கியமானது. உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாமல், மேலிருந்து வரும் முடிவுகள் மேலும் அந்நியப்படுத்தலை மட்டுமே உருவாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அரசின் கொள்கையானது, பெண் தொழில்முனைவோருக்கு முறையான இணையதள இணைப்புகள், முறையாகச் சந்தைப்படுத்தல் தளங்கள், திறன் பயிற்சிகள், மற்றும் ஆதரவு உதவி எண்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


வளர்ச்சி மந்தநிலை மற்றும் வேலையின்மை ஆகியவை பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளன. சமூகப் பாதுகாப்பு, தொழிற்பயிற்சி, மற்றும் பல்வகைப்பட்ட வாழ்வாதாரங்களுக்காக ஒருங்கிணைந்த திட்டம் நமக்குத் தேவை.


மிக முக்கியமாக, ஸ்ரீநகரின் எதிர்காலம் சுற்றுலா அல்லது மனை வணிகத்தை மட்டும் நம்பியிருக்காமல், சமநிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


தோட்டக்கலை, கைவினைப் பொருட்கள், சிறு தொழில்கள், சிறப்புச் சுற்றுலா, மற்றும் சேவைகள் ஆகியவை அபாயத்தைக் குறைக்க சமமாக வளர வேண்டும். எடுத்துக்காட்டாக, தோட்டக்கலை மட்டுமே இப்பகுதியில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வேலை அளிக்கிறது. எனவே, அதைப் புறக்கணிப்பது முழு பொருளாதாரத்தையும் பலவீனப்படுத்துகிறது என்று சமச்சீரான பொருளாதார வளர்ச்சியைக் கோருகிறது. 


சுற்றுலாவை வலுவாகவும் நிலையாகவும் மாற்ற, உள்ளூர் கைவினைஞர்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் விளம்பரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும், வீடுகளில் தங்கும் வசதியை (Homestays) ஊக்குவித்தல் மற்றும் விடுமுறை அல்லாத காலங்களில் (Off-season) செயல்பாடுகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கமானது பெரிய திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், முறைசாரா துறையை மேம்படுத்துவதிலும், கிராமம் மற்றும் நகரப் பொருளாதாரங்களை இணைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


ஸ்ரீநகரின் எதிர்காலத்திற்கு இவை அனைத்தும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?


ஸ்ரீநகர் ஒரு திருப்புமுனையில் உள்ளது. சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுடன் நகரம் போராடி வருகிறது. உண்மையான முன்னேற்றம் என்பது வெறும் அதிக பணம் வருவது அல்லது புதிய “பொலிவுறு நகர” திட்டங்கள் மட்டும் அல்ல. மாறாக, ஸ்ரீநகரின் நிலம், வேலைப்பாட்டுத் தளங்கள், மற்றும் கைவினைப் பாரம்பரியங்களை மீட்டெடுப்பது போன்ற நடவடிக்கைகள் போதுமானது என்றும் அறிவுறுத்தகின்றனர். மேலும், பெண் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், மற்றும் சிறு வேளாண் தொழிலாளர்களுக்குச் சிறந்த இணைய இணைப்பு, வலுவான நிர்வாகம், சந்தை அணுகல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் அவர்களுக்கு ஆதரவளிப்பது மிகமுக்கியமானது என்று கூறுகின்றனர்.


இதைச் செய்வதன் மூலம், நகரம் பலவீனத்திலிருந்து வலிமைக்கு மாறலாம். அதாவது, வெளியில் இருந்து வரும் பணத்தை மட்டுமே சார்ந்து இருக்கும் ஒரு பொருளாதார மாதிரியில் இருந்து, உள்ளூரிலும் நிலையானதாகவும் வளரும் ஒரு பொருளாதார மாதிரிக்கு நகர முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


கொள்கை வகுப்பாளர்கள், குடிமைச் சமூகம், உள்ளூர் பொருளாதாரம் ஆகியோருக்கான கேள்வி இதுதான்: நாம் அந்தப் பாதையில் நடப்போமா — அல்லது ஸ்ரீநகரின் சொர்க்கம் நம் கைகளிலிருந்து நழுவிப் போக விடுவோமா?


திகேந்தர் சிங் பன்வார், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் ஆவார், தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.


Original Article: Why are Srinagar’s traditional livelihoods struggling to survive? 

Share:

நிரூபிக்கும் பொறுப்பு: SIR 2.0 மற்றும் வாக்காளர் குறித்து…

தகுதிவாய்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை வாக்காளரின் மீது சுமத்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) அமைப்பின் கணக்கெடுப்பு முறை குறைபாடுடையது.


இந்திய தேர்தல் ஆணையமானது 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்” (Special Intensive Revision (SIR)) நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கை குறித்து உடனடியாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றமே இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகுமா என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, பீகாரில் மேற்கொள்ளப்பட்ட அதே குறைபாடுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த முறையை இப்போது மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்வது மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Block Level Officers (BLO)) கொடுக்கும் படிவத்தை நிரப்பி, 2002-2005-ஆம் ஆண்டின் பழைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட வேண்டும். பீகாரில் இதனால் தேர்தல் முடிவு பெரிதாக மாறவில்லை என்றாலும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததாகத் தெரிவிக்கின்றனர். உள்ளூர் வட்டார அளவிலும் வேறு பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையமானது பெரும்பாலானோருக்கு படிவம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் பல வாக்காளர்கள் இன்னும் படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த மாதம் வரும் வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் வர வேண்டுமானால் என்னென்ன ஆவணம் கொடுக்கப்பட வேண்டும் என்ற குழப்பமும் தொடர்கிறது. “வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிற விதி வெறும் பெயரளவில் மட்டுமே  இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு இருப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கும் எந்த வயது வந்தவரும் இயல்பாகவே செல்லுபடியான வாக்காளர்களே என்று கவுகாத்தி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறையானது வழக்கமான விதியைத் தலைகீழாக மாற்றிவிட்டது. முன்பு வாக்களித்தவர்களாக இருந்தாலும், இப்போது தேர்தல் ஆணையம் பட்டியலிட்ட பழைய ஆவணங்கள் அல்லது பதிவுகள் மூலம் தங்களை சட்டப்பூர்வ வாக்காளர்களாக நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசுகளின் பொறுப்பைப் பொதுமக்கள்மீது திணிக்கும் இந்த மாற்றம், பலரை — குறிப்பாகத் திருமணமான பெண்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் போன்றோரை — வாக்குரிமையிழக்கச் செய்யும் என்று எச்சரிக்கின்றனர். ஏற்கெனவே பீகாரில் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். “சாதாரண குடியிருப்பாளர்” என்ற விதியை மிகக்கடுமையாகப் புரிந்துகொள்வது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளன. பீகார் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம் முக்கியமாக வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறை எப்படி நடத்தப்பட்டது என்பதையே விவாதித்தது. உண்மையான வாக்காளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை கட்சிப் பிரதிநிதிகளிடமும் தன்னார்வலர்களிடமும் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், வாக்காளர் பதிவு தகவல் சேகரிக்கும் முறை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை ஆராயவில்லை. புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பங்களையும் (பெரும்பாலும் அதிக வேலைப்பளு கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பட்டியலை திருத்த முடியாமல் போவதால் ஏற்படும் சிக்கல்கள்) குறித்து ஆராயவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப உதவியுடன் மெதுவாகவும் கவனமாகவும் வீடு வீடாகச் சென்று போலியான பதிவுகளை நீக்கியிருக்க முடியும். அதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியலை “சீரமைப்பதில்” அதிகக் கவனம் செலுத்தி, மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதில் குறைவாகவே அக்கறை காட்டும் ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டிப்புகளை (duplicates) நீக்க, தேர்தல் ஆணையம் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், மெதுவான, கவனமான, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் முறையைப் பயன்படுத்தி இருக்கலாம். அதற்குப் பதிலாக, அது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதைவிட, வாக்காளர் பட்டியலை “சீரமைப்பதில்” அதிகக் கவனம் செலுத்தும் ஒரு முறையைத் தேர்ந்தெடுத்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது (SIR) மேலும் பல மாநிலங்களுக்குப் பரவும் நிலையில், நீதிமன்றம் நடைமுறைகளைத் தாண்டிச் சென்று, இந்தச் செயல்முறையே அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை ஆராய வேண்டும். தேர்தல் ஆணையம், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் உள்ள குடிமக்கள் தாங்கள் அதில் இருப்பதாக நிரூபிக்கச் சொல்வதற்குப் பதிலாக, சரியான வாக்காளர் பதிவுக்கான பொறுப்பை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் ஒரு தெளிவான உத்தரவு தேவைப்படுகிறது.



Share:

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பில் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏன் முக்கிய மையமாக தொடர்கிறது? -கண்ணன் கே

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புலனாய்வு முகமையின் பங்கு காலப்போக்கில் எவ்வாறு உருவாகியுள்ளது?


நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு வெளியே வெடித்த காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்து, தளவாட உதவிகளை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) புதன்கிழமை கைது செய்தது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.


இந்தியாவின் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க அமைப்பான தேசிய புலனாய்வு முகமை, ஒரு நாள் கழித்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது, அதன் பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், குறிப்பிடத்தக்க அதிகாரங்களுடன் அதிகாரம் பெற்ற இந்த அமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? தேசிய விசாரணை முகமையின் (NIA) தனித்துவமான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் அதன் உத்தரவாதம் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றது? என்பதை ஆராய்வோம்.


26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் தேசிய புலனாய்வு முகமை (NIA) உருவாக்கத்திற்கு எவ்வாறு வழிவகுத்தன?


26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நிறுவப்பட்ட தேசிய புலனாய்வு முகமை, சிக்கலான, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் நாடுகடந்த பயங்கரவாதத் திட்டங்களை விசாரிக்கும் திறன் கொண்ட ஒரு சிறப்பான அமைப்பின் முக்கியத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.


2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதியன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் இருந்த இடைவெளிகளை இந்த நிகழ்வு வெளிக்காட்டியது. மாநில

காவல்துறையினரும் பிற மத்திய அமைப்புகளும் நாடுகடந்த அல்லது மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத பரிமாணத்துடன் குற்றங்களை ஒருங்கிணைத்து விசாரிக்க முடியவில்லை.


தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக இயற்றப்பட்ட 2008-ஆம் ஆண்டின் NIA சட்டம், உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய புலனாய்வு முகமையை ஒரு சிறப்பு அங்கீகாரம் பெற்ற ஒன்றிய அரசின் அமைப்பாக உருவாக்கியது. இது நாடுகடந்த மற்றும் சிக்கலான பயங்கரவாதத் திட்டங்களை விசாரிக்கும் திறன் கொண்டது.


தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடரும் இந்தியாவின் முக்கிய அமைப்பாக தேசியப் புலனாய்வு முகமை (NIA) உள்ளது. திட்டமிடப்பட்ட குற்றங்கள் என்று அழைக்கப்படும் இந்தக் குற்றங்கள், 2008-ஆம் ஆண்டின் தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act (UAPA)), 1967-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இதில் அடங்கும்.


2019ஆம் ஆண்டு திருத்தங்கள் தேசியப் புலனாய்வு முகமையின் அதிகாரத்தை எவ்வாறு வலுப்படுத்தின


அதன் தொடக்கத்திலிருந்து, தேசியப் புலனாய்வு முகமையின் பங்கு விரிவடைந்துள்ளது. இந்த முகமை இப்போது பயங்கரவாதச் செயல்களில் மட்டுமல்ல, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பரந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் அகற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. இது குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட பயங்கரவாத வலையமைப்புகளின் நிதி மற்றும் தளவாடப் பிரிவுகளை அதன் வரம்பிற்குள் கொண்டு வருகிறது.


வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, தேசியப் புலனாய்வு முகமை இப்போது சிறப்புப் பிரிவுகளை நிறுவியுள்ளது: அதன்படி,


1. பயங்கரவாத நிதி மற்றும் போலி நாணயத்தாள் (Terror Funding and Fake Currency (TFFC)) பிரிவு.


2. இணைய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (Anti Cyber Terrorism Division (ACTD)).


3. மனித கடத்தல் எதிர்ப்புப் (Anti Human Trafficking Division (AHTD)) பிரிவாகும்


தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பாக அதன் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் பல தனித்துவமான அதிகாரங்களையும் தேசியப் புலனாய்வு முகமை கொண்டுள்ளது. இந்த அமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது மற்றும் மாநில அரசாங்கங்களின் முன் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்தியாவில் எங்கும் திட்டமிடப்பட்ட குற்றங்களின் விசாரணையை எடுத்துக்கொள்ள முடியும். இது செயல்பாட்டுத் திறனை உறுதிசெய்கிறது மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வழக்குகளில் அதிகார வரம்புத் தடைகளை நீக்குகிறது.


மேலும், தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்கும் வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களால் (NIA Special Courts) விசாரிக்கப்படுகின்றன. இது பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள் குறித்த விரைவான விசாரணைக்கான கட்டமைப்பை உறுதி செய்கிறது.


2019ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை  (திருத்தம்) சட்டம், அமைப்பின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தியது:


1. எல்லைக்கு அப்பாற்பட்ட அதிகார வரம்புகள் (Extra-territorial jurisdictions) - சர்வதேச ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு, இந்திய குடிமக்களுக்கு எதிராகவோ அல்லது இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ இருந்தால், இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் திட்டமிடப்பட்ட குற்றங்களை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரம் பெற்றுள்ளது.


2. திட்டமிடப்பட்ட குற்றங்களின் விரிவாக்கப்பட்ட பட்டியல் (Expanded list of scheduled offences) - மனித கடத்தல், நாணயத்தை போலியாக உருவாக்குதல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் இணைய-பயங்கரவாதம் ஆகியவற்றை திட்டமிடப்பட்ட குற்றங்களின் பட்டியலை விரிவுபடுத்தி, மேலும் பல வகையான குற்றங்களைச் சேர்த்துள்ளது.


3. சிறப்பு நீதிமன்றங்களின் பெயர்கள்- இந்தத் திருத்தம், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, குறிப்பிட்ட குற்றங்களை விசாரிக்க சில அமர்வு நீதிமன்றங்களை தேசியப் புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை அனுமதிக்கிறது.


வளர்ந்துவரும் ஆணை மற்றும் சவால்கள்


இவ்வாறு தேசியப் புலனாய்வு முகமை (NIA) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. தேசிய புலனாய்வு முகாமையால் பதிவுசெய்யப்பட்ட 95% வழக்குகளில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இது பொதுமக்களின் நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் பயங்கரவாத குழுக்களை ஊக்கப்படுத்துகிறது. இது பயங்கரவாதம் தொடர்பான உளவுத்துறையின் முக்கிய ஆதாரமாகவும் செயல்படுகிறது மற்றும் பயங்கரவாதத்தை திறம்பட எதிர்த்துப் போராட ஒன்றிய மற்றும் மாநில நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.


தேசிய பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் உள்ள காவல் படைகளுக்கு தேசியப் புலனாய்வு முகமை வழக்கமான பயிற்சித் திட்டங்களையும் நடத்துகிறது. பல பயங்கரவாதக் குழுக்களைக் கைது செய்வதிலும், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சீர்குலைப்பதிலும், சில தாக்குதல் முயற்சிகளைத் தடுப்பதிலும் தேசியப் புலனாய்வு முகமை முக்கியப் பங்கு வகிக்கிறது.


ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மைக்கு முக்கிய காரணமாக இருந்த பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் முக்கிய நிதி வலையமைப்புகளை துண்டித்து, பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்த பெருமையும் இந்த அமைப்பிற்கு உண்டு. இந்த முயற்சிகள் தேசியப் பாதுகாப்பிற்கு தேசியப் புலனாய்வு முகமையின்  முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இருப்பினும், தேசியப் புலனாய்வு முகமையின் தனித்துவமான அதிகாரங்களும் பல சவால்களை முன்வைக்கின்றன. திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளை தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாநில அரசுகள் பரிந்துரைக்க முடியும் என்றாலும், மத்திய அரசு தானாக முன்வந்து, விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பை ஒரு கருவியாக பயன்படுத்தலாம். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது (state subject) என்பதால் இது சில சமயங்களில் கவலைகளை எழுப்பியுள்ளது.


இந்த அமைப்பின் அதிகார வரம்பு விரிவடையும்போது, ​​குறிப்பாக இணைய பயங்கரவாதம் மற்றும் கள்ளநோட்டு போன்ற களங்களை நிவர்த்தி செய்வதற்கு அதிக நிதி, ஆட்சேர்ப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும். இந்திய எல்லைகளைத் தாண்டி தேசியப் புலனாய்வு முகமையின் அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திர வழிகள் மூலமாகவும், சட்ட உதவி தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களின்படியும் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், இந்தியாவிற்கு வெளியே நிகழும் குற்றங்களை விசாரிப்பது அமைப்பிற்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்துகிறது.


தேசியப் புலனாய்வு முகமை மற்றும் இந்தியாவின் வளர்ந்துவரும் பயங்கரவாத எதிர்ப்பு உத்தி


சுருக்கமாக, பயங்கரவாதச் செயல்களிலிருந்து இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தேசியப் புலனாய்வு முகமை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் தொடர்ச்சியான சிறப்பையும் ஆழமான நிபுணத்துவத்தையும் உறுதி செய்வதற்கு, சில நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்கும், அவை:


1. இந்தியக் காவல் பணி ((Indian Police Service (IPS)) மற்றும் பிற காவல் மற்றும் சேவைகளில் இருந்து நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நம்பியிருப்பதைவிட, சிறப்பு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளின் நிரந்தரப் படையை உருவாக்குவது என்பது நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் ஒரு முக்கியமான சீர்திருத்தமாகும்.


2. தேசியப் புலனாய்வு முகமை, மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் (state Anti Terror Squads (ATS)) மற்றும் காவல் படைகளுக்கு இடையே புலனாய்வுப் பகிர்வு அமைப்பை உருவாக்க வேண்டும். இது பயனுள்ள தகவல்தொடர்புக்கு வழிவகுக்கும் மற்றும் முயற்சிகள் இரட்டிப்பாவதைத் தவிர்க்கும்.


3. சைபர் பயங்கரவாதம், போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு (encrypted communication) போன்ற குற்றங்களின் தொடர்ந்து வளர்ந்துவரும் தன்மையைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப அதிநவீன தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியான மற்றும் அதிக முதலீடு செய்ய வேண்டும்.


4. இதில் மேம்பட்ட தடயவியல் பகுப்பாய்வு மற்றும் புதிய பயங்கரவாத தொகுதிகளின் நுட்பத்துடன் பொருந்தக்கூடிய டிஜிட்டல் விசாரணை கருவிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.


இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக தேசியப் புலனாய்வு முகமை உள்ளது. மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மாற்றியமைக்கும், பரிணமிக்கும் மற்றும் தொடர்ந்து மேம்படுத்தும் அதன் திறன், அதிகரித்துவரும் சிக்கலான தேசிய பாதுகாப்பில் அதன் செயல்திறனை மேலும் வலுப்படுத்தும்.



Share:

இந்தியாவின் முக்கிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 2025ஆம் ஆண்டு உலக போதைப்பொருள் அறிக்கை -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி


கடந்த வாரம், தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau (NCB)) டெல்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவுடன் இணைந்து, டெல்லியில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்தது. நான்கு மாத கால நடவடிக்கையான கிரிஸ்டல் ஃபோர்ட்ரெஸ் (Crystal Fortress) வெற்றிகரமான நடவடிக்கையைக் குறிக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த ஷேன் வார்ரிஸ் (25) மற்றும் நாகாலாந்தின் திமாபூரைச் சேர்ந்த எஸ்தர் கிம்மி (43) என இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து இயக்கப்படும் இந்த சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு, டெல்லி மற்றும் நாகாலாந்தில் உள்ள காவல்துறையினர் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து பணியாற்றியதால் பிடிபட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரெஸ் (Operation Crystal Fortress): இந்த நடவடிக்கைக்கு “ஆபரேஷன் கிரிஸ்டல் ஃபோர்ட்ரெஸ்” என்று பெயர் வந்தது. “கிரிஸ்டல்” என்பது மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளைக் குறிக்கிறது. மேலும், “ஃபோர்ட்ரெஸ்” என்பது போதைப்பொருள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை கோட்டை என்று குறிக்கிறது. மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை அதன் வெள்ளை, பளபளப்பான கிரிஸ்டல் போன்ற தோற்றம் காரணமாக “ஐஸ்” (Ice) என்றும் அழைக்கப்படுகிறது. இரவு விருந்து கேளிக்கைகளில் இதற்கு மிக அதிக தேவை உள்ளது.


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம், 2025

டிசம்பர் 7, 1987 அன்று, போதைப்பொருள் இல்லாத உலகத்திற்கான குழுப்பணி மற்றும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக ஜூன் 26ஆம் தேதியை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது.

உலகம் முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நாள் உலக போதைப்பொருள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டின் கருப்பொருள், "இணைப்பை துண்டிக்கவும். திட்டமிட்ட  குற்றத்தை நிறுத்து". இது திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வலுவான மற்றும் நீடித்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


4. ஆபரேஷன் வீட்அவுட் (Operation WeedOut): இந்தியாவிற்குள் hydroponic-கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பலை ஒழிப்பதற்காக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI)) "வீட்அவுட்" என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியா முழுவதும் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் என்பது நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்படும் முதன்மையான உளவுத்துறை மற்றும் அமலாக்க அமைப்பாகும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களைக் கண்டறிந்து தடுப்பது இந்த அமைப்பின் முக்கியப் பணியாகும்.


5. ஆபரேஷன் சமுத்திரகுப்த் (Operation Samudragupt): ஜனவரி 2022-ல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்திரகுப்த், இந்தியக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்திய கடற்படை மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau (NCB)) இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். கடத்தலை எதிர்த்துப் போராட உதவும் வகையில், தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் நிகழ்நேரத் தகவலையும் பகிர்ந்து கொண்டது. 2023-ஆம் ஆண்டில், கொச்சி கடற்கரையில் 2,525 கிலோ உயர்தர மெத்தம்பேட்டமைன் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.15,000 முதல் 25,000 கோடி வரை இருக்கலாம். இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட மரணப் பிறை (டெத் கிரசென்ட்) பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


6. ஆபரேஷன் நார்கோஸ் (Operation NARCOS): ஜூன் 2022-ல், ரயில்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை (ரயில்வே பாதுகாப்புப் படை (RPF)) ஒரு சிறப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது. இது போன்ற சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடும் போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்த, ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை சோதனைகளை தீவிரப்படுத்தியது மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உடன் இணைந்து பணியாற்றி நாடு முழுவதும் உள்ள கடத்தல்காரர்களைக் கண்டறிந்தது.


மரண (தங்க) பிறை மற்றும் மரண (தங்க) முக்கோணம் (Death (Golden) Crescent and Death (Golden) Triangle)


1. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகம் (United Nations Office on Drugs and Crime (UNODC)) படி, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் போதைப்பொருள் கடத்தலின் இரண்டு குறிப்பிடத்தக்க பகுதிகள் தங்க பிறை (Golden Crescent) மற்றும் தங்க முக்கோணம் (Golden Triangle) ஆகும். “தங்கப் பிறை” ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சட்டவிரோத ஓபியம் உற்பத்தி போன்ற பகுதிகளை கொண்டுள்ளது. மேலும், "தங்க முக்கோணம்" மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற பகுதிகளை கொண்டுள்ளது..


2. தங்கப் பிறை மற்றும் தங்க முக்கோணப் பகுதிக்கு இடையில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளிலிருந்து போதைப்பொருட்களால், குறிப்பாக ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் நாடு முழுவதும் அதிகமாக கிடைக்கிறது. உலகின் போதைப்பொருட்களுக்கான

தேவையில் சுமார் 90% இந்த இரண்டு பகுதிகளிலிருந்தே வருகிறது. இந்தியா ஒரு பெரிய சந்தையாகவும், மற்ற நாடுகளுக்கு ஒரு போக்குவரத்துப் பாதையாகவும் உள்ளது என்று ராகேஷ் அஸ்தானா எழுதினார்.


3. 2023ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சர் ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ குறித்த மாநாட்டில் பேசுகையில், “முன்னர் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய பகுதி ‘தங்க முக்கோணம்’ மற்றும் ‘தங்கப் பிறை என்று அழைக்கப்பட்டது, ஆனால், இந்திய அரசாங்கம் சர்வதேச அளவில் இதற்கு ‘மரண முக்கோணம்’ மற்றும் ‘மரணப் பிறை’ என்று பெயரிடப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இந்த அணுகுமுறை போதைப்பொருட்களுக்கு எதிரான நமது போராட்டத்தின் திசையையும் தீவிரத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.


2025ஆம் ஆண்டு உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின அறிக்கை


1. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (UN Office on Drugs and Crime (UNODC)) உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின அறிக்கையை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் போதைப்பொருள் போக்குகள் மற்றும் வடிவங்கள் பற்றிய அறிவியல் மற்றும் பாரபட்சமற்றக் கண்ணோட்டத்தை வழங்குகிறது.


2. "உலக போதைப்பொருள் பிரச்சனையின் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு செலவுகளை கூட்டும் உலகளாவிய நிலையற்ற தன்மை" என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 316 மில்லியன் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் (மது மற்றும் புகையிலை தவிர்த்து), 15 முதல் 64 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் ஆறு சதவீதம் பேர், 2013ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 5.2 சதவீதமாக இருந்தனர்.

3. கஞ்சா (Cannabis) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக இருந்தது. இதை பயன்படுத்துவோர் 244 மில்லியனாக இருந்தனர். அதைத் தொடர்ந்து opioids (61 மில்லியன்), amphetamines (30.7 மில்லியன்), cocaine (25 மில்லியன்) மற்றும் "ecstasy" (21 மில்லியன்) ஆகியவை உள்ளன. மோதல்கள் அல்லது உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும் அதிகமான மக்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வழிவகுக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.


4. போதைப்பொருள் பயன்பாட்டுக் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தவறியதன் விலையையும் அறிக்கை சுட்டிக்காட்டியது - 2021ஆம் ஆண்டில் இயலாமை மற்றும் அகால மரணங்கள் (disability and premature deaths (DALY)) காரணமாக அரை மில்லியன் இறப்புகள் மற்றும் 28 மில்லியன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஆண்டுகளை இழந்தனர். 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்பாட்டுக் பிரச்சனைகள் உள்ள 12 பேரில் ஒருவருக்கு மட்டுமே தேவையான மருத்துவ சிகிச்சையையும் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


5. பிராந்திய ரீதியாக, ஆசியாவில் கஞ்சா பயன்பாட்டில் பாலின இடைவெளி உலகளவில் மிகப்பெரியது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது; கடந்த ஆண்டில் கஞ்சாவைப் பயன்படுத்திய 100 பேரில் 90 பேர் ஆண்களாக இருக்கின்றனர். மேலும், உலகளவில் போதைப்பொருட்களை பயன்பாடுத்துபவர்களில் ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் (2022-ல் 5.2 மில்லியன்) உள்ளனர். மேலும், அந்தக் குழுவிற்குள், மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (Human Immunodeficiency Virus (HIV)) 615,000 மற்றும் (hepatitis C) 2.8 மில்லியன்களில் உள்ளனர்.


Original Article: Crystal Fortress to Samudragupt: India’s major anti-drug operations and what 2025 World Drug Report says

Share:

எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு -அமிதாப் சின்ஹா

எத்தியோப்பியாவில் ஹய்லி குபி (Hayli Gubbi) எரிமலை வெடிப்பு: வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. அனைத்து கணக்கீடுகளின் படியும் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. எரிமலைக்குழம்பு அல்லது மாக்மா ஓட்டம் எதுவும் இல்லை. ஆனால், எரிமலை வெடிக்கும்போது அதிக அளவு வாயு மற்றும் புகைமூட்டம் வெளியேறியது.


எத்தியோப்பியாவில் ஹய்லி குபி எரிமலை வெடிப்பு: எத்தியோப்பியாவிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் எரிமலை சாம்பல் அதிக உயர மேகமாக (high-altitude cloud) இந்தியாவை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை, எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில், செங்கடல் கடற்கரைக்கு அருகில் உள்ள Hayli Gubbi எரிமலையின் அரிய வெடிப்பிலிருந்து வெளியேறிய எரிமலை சாம்பல் அது.


பல நீண்டதூர விமானங்கள் பறக்கும் அதே உயரத்தில் எரிமலை சாம்பல் மேகம் நகர்ந்து கொண்டிருந்தது. இது ஆபத்தானது. ஏனெனில், இது பார்வை நிலையைக் குறைக்கும் மற்றும் சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களைக் கொண்டுள்ளது. இவற்றைத் தவிர்க்க விமான நிறுவனங்களின் அட்டவணையை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஹய்லி குபி எரிமலை வெடிப்பு என்றால் என்ன?


வடகிழக்கு எத்தியோப்பியாவில் உள்ள ஹய்லி குபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. அது எரிமலைக்குழம்பு அல்லது மாக்மாவை உருவாக்கவில்லை. மாறாக, பெரிய அளவிலான வாயு மற்றும் புகைமூட்டம் எரிமலை வெடிப்பில் வெளியேறியது. தீங்கு விளைவிக்கும் சாம்பல் துகள்கள் எரிமலைக்கு அருகில் விழுந்தன. ஆனால், மிகவும் நுண்ணிய துகள்களும், சல்பர்-டை-ஆக்சைடு அல்லது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்களும் வளிமண்டலத்தில் அதிக உயரத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15-40 கிலோமீட்டர் உயரத்தில் செல்லக்கூடியத்தன்மை கொண்டவை.


எரிமலையைச் சுற்றியுள்ள காற்று கடுமையாக வெப்பமடைந்து, இலகுவாகி, மேலே எழுவதால் இது நிகழ்கிறது. அது மேலே எழும்போது, ​​அது மெல்லிய சாம்பல் துகள்கள் மற்றும் வாயுக்களையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது.


அந்த உயரத்தில், காற்று நீரோட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கும். மேலும், எரிமலை புகை காற்று நீரோட்டத்தின் திசையில் பயணிக்கிறது. எத்தியோப்பியன் எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளியேறிய புகை விவகாரத்தில் இது போன்று நடந்தது.


காற்று நீரோட்டங்களைத் தொடர்ந்து, எரிமலை சாம்பல் மற்றும் வாயுக்கள் மேற்கு நோக்கி இந்தியாவை நோக்கி பயணித்து. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நுழைந்து, பின்னர் தென்மேற்கு இருந்து வடகிழக்கு திசையில் டெல்லி மற்றும்

உத்தரபிரதேசம் நோக்கி நகரும். அதே பாதையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலைக்குள் இந்த சாம்பல் மேகங்கள் முழுமையாக சீனாவிற்குள் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அது ஆபத்தானதா?


எரிமலை வெடிப்புகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் அதிக அளவு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும். ஆனால், இந்தப் புகைமூட்டம் மிக அதிக உயரத்தில் நகர்ந்து கொண்டிருந்ததால் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், அவை பெரும்பாலும் இந்த உயரங்களில் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தின. தொலைதூர சர்வதேச வழித்தடங்களில் பறக்கும் வணிக விமானங்கள் பொதுவாக பூமியிலிருந்து 10-14 கிலோமீட்டர் உயரத்தில் செல்கின்றன. இது எரிமலை சாம்பல் மேகம் சென்று கொண்டிருந்த பகுதியாகும்.


எரிமலை சாம்பல் மேகம் பார்வை திறனில் பாதிப்பை ஏற்படுத்தி, விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் திறன் கொண்டது. மிக நுண்ணிய துகள்கள் விமான எஞ்சின்களுக்குள் நுழைந்து உருகக்கூடும். இதனால் என்ஜின்கள் செயலிழக்கக்கூடும். விமானங்களில் வலுவான சுத்திகரிப்பு அமைப்புகள் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், இந்த சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் உணர்விகள் சாம்பலால் தடுக்கப்பட்டு சரியாக வேலை செய்வதை நிறுத்தக்கூடும். சில தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இன்னும் சுத்திகரிப்பு அமைப்புகள் வழியாக செல்ல வாய்ப்புள்ளது.


ஆபத்து முக்கியமாக விமானத்தின் இயந்திரங்களும் மற்ற இயந்திரப் பாகங்களுக்கும் தான் உள்ளது. இதனாலேயே விமான நிறுவனங்கள் எரிமலை சாம்பல் பயணிக்கும் பகுதிகளைத் தவிர்க்கின்றன. உலகம் முழுவதும் எரிமலை வெடிப்புகளைக் கண்காணித்து, ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச மையங்களின் வலைப்பின்னல் ஒன்று உள்ளது. விமானப் போக்குவரத்து நிர்வகிக்கப்படும் அடிப்படையில், பயணிகள் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது.



அது எப்படி முடிகிறது?


எரிமலைத் தூண்களின் இயக்கம் ஒரு குறுகியகால நிகழ்வாகும். அவற்றின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்குள் முற்றிலுமாக நின்றுவிடும். காலப்போக்கில், சிறிய சாம்பல் துகள்கள் பரவி, சிக்கல்களை ஏற்படுத்த முடியாத அளவுக்கு மெல்லியதாகின்றன. மேகங்களும் மழையும் இந்தத் துகள்களில் பலவற்றை காற்றில் இருந்து அகற்ற உதவுகின்றன. இதனால் அவற்றின் தாக்கத்தை பெரிதும் குறைத்துவிடும்.


சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் காற்றில் நீண்டகாலம் தங்கியிருக்கும். ஆனால், அவை ஏற்கனவே வளிமண்டலத்தில் உள்ளன. வளிமண்டலத்தில் அவற்றின் தற்போதைய செறிவில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புகைமூட்டத்தில் உள்ள இந்த வாயுக்களின் அளவு அதிகமாக இல்லை.


Orginal Article: Hayli Gubbi volcanic eruption in Ethiopia

Share: