மசாலா பத்திரங்கள் (Masala Bonds) மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

தற்போதைய நிகழ்வு :


கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (Kerala Infrastructure Investment Fund Board (KIIFB)) வெளியிட்ட மசாலாப் பத்திரம் தொடர்பான அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)) மீறல்கள் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் IAS அதிகாரி டாக்டர் கே.எம். ஆபிரகாம் ஆகியோருக்கு அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) ஒரு காரணம் கூற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


2019-ம் ஆண்டு CPI(M) அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி திரட்ட மசாலாப் பத்திரத்தை வெளியிட்டபோது, ​​முதல்வர் விஜயன் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) தலைவராகவும், ஐசக் அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட அதிகமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்டும் மாநில நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) தலைமை நிர்வாக அதிகாரியாக ஆபிரகாம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்:


1. ஒரு பத்திரம் என்பது பணத்தை கடன் வாங்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது ஒரு அரசாங்கத்தால் அல்லது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படலாம். இதன் நோக்கம் நிதி திரட்டுவதாகும். அரசாங்கப் பத்திரங்கள் இந்தியாவில் G-secs என்றும், அமெரிக்காவில் Treasuries என்றும், UK-ல் Gilts என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தப் பத்திரங்கள் ஒரு இறையாண்மை உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன. இந்த உத்தரவாதத்தின் காரணமாக, அவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


2. மசாலா பத்திரங்கள் என்பவை இந்திய நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்காக வெளிநாட்டு வாங்குநர்களுக்கு வெளியிடும் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களாகும். இந்தப் பத்திரத்தின் விலை இந்திய ரூபாயில் குறிப்பிடப்படுகிறது. உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கழகம் (International Finance Corporation - IFC) இவற்றை இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் “மசாலா” (உண்மையான பொருள்: மசாலாக்களின் கலவை) என்று பெயரிட்டது.


3. முன்னதாக, வெளிநாட்டிலிருந்து பணம் திரட்டுவதற்கு, இந்திய நிறுவனங்கள் வெளிப்புற வணிகக் கடன்கள் (ECBs) போன்ற வழிகளை நம்பியிருந்தன. இந்த ஏற்பாடுகளில் உள்ள சவால்கள் என்னவென்றால், இந்திய நிறுவனம் அல்லது வெளிநாட்டுப் பத்திர வழங்கலை வழங்குபவர் நாணய ஏற்ற இறக்கங்களின் அபாயத்தை எதிர்கொள்கிறார். உதாரணமாக, பொதுவாக ஐந்து ஆண்டுகளின் இறுதியில், பத்திரத்தின் காலாவதி காலத்தில் ரூபாய் மதிப்பு பலவீனமடைவது, மீட்பு அல்லது திருப்பிச் செலுத்தும் செலவுகளை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.


4. பத்திரங்களை ரூபாய் மதிப்பில் விலை நிர்ணயம் செய்வதன் மூலமோ அல்லது வெளியிடுவதன் மூலமோ, வெளியீட்டாளர் இந்த ஆபத்தைத் தவிர்க்கிறார். பின்னர் ஆபத்து முதலீட்டாளருக்கு மாறுகிறது. மசாலா பத்திர வெளியீட்டில், முதலீட்டாளர்கள் INR அசலுடன் பொருந்தக்கூடிய USD தொகையை செலுத்துகிறார்கள். பத்திரங்களை வெளியிடுவதற்கும் சேவை செய்வதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் தேதியிலும் சந்தை மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி இந்தத் தொகை கணக்கிடப்படுகிறது.


5. 2017-ம் ஆண்டில், மசாலா பத்திரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை வெளியிட்டது. ஆண்டுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் (INR-ல்) வரையிலான பத்திரங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அது கூறியது. 50 மில்லியனுக்கும் அதிகமான பத்திரங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும்.


6. உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 2014-ம் ஆண்டில் முதல் மசாலா பத்திரத்தை சர்வதேச நிதிக் கழகத்தால் வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டில், மேம்பாட்டு நிதியைத் திரட்ட மசாலா பத்திரங்களுக்கான சந்தையைப் பயன்படுத்திய முதல்மாநிலமாக கேரளா ஆனது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக நிறுவப்பட்ட அரசு நிறுவனமான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB), 2019-ம் ஆண்டில் லண்டன் பங்குச் சந்தை (London Stock Exchange (LSE)) மற்றும் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (Singapore Exchange Ltd) ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட்ட ரூ.2,150 கோடி மதிப்புள்ள மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது.


7. 2022-ம் ஆண்டில், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மசாலாப் பத்திரங்கள் மூலம் ரூ.2,150 கோடி நிதி திரட்டியது தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறல்கள் தொடர்பான வழக்கை அமலாக்க இயக்குநரகம் (ED) பதிவு செய்தது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்புகள் உள்ளன.


8. மசாலாப் பத்திர நிதியானது எட்டுப் பகுதிகளில் 339 திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஐசக் கூறினார். இதில், பல்வேறு திட்டங்களின் நிலம் கையகப்படுத்தல் பகுதிகளுக்கு ரூ.466 கோடி செலவிடப்பட்டது. அமலாக்க இயக்குநரகம் (ED) இதை நில கொள்முதல் என்று விளக்கியுள்ளது. ஊக வணிகத்தைத் தடுக்க, நிலம் வாங்குவதற்கு வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) கட்டுப்படுத்துகிறது.


வெளிப்புற வணிகக் கடன்கள் (External Commercial Borrowings (ECB))


9. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, “வெளிப்புற வணிகக் கடன்கள் (ECB) என்பது வங்கிக் கடன்கள், வாங்குபவர்களின் கடன், விநியோகர்களின் கடன், பத்திரப்படுத்தப்பட்ட கருவிகள் (எ.கா. மிதக்கும் விகிதக் குறிப்புகள் மற்றும் நிலையான விகிதப் பத்திரங்கள், மாற்ற முடியாதவை, விருப்பப்படி மாற்றத்தக்கவை அல்லது பகுதியளவு மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள்) போன்ற வடிவங்களில் வணிகக் கடன்களைக் குறிக்கிறது.


10. வெளிநாட்டு நாணயத்தில் வெளிப்படுத்தப்படும் ஒரு இந்திய நிறுவனத்தால் வழங்கப்படும் பத்திரங்களான வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களுக்கு (Foreign Currency Convertible Bonds (FCCB)) வெளிப்புற வணிகக் கடன்கள் (ECB) கொள்கை பொருந்தும். மேலும், இவற்றுக்கான அசல் மற்றும் வட்டி வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்படும். அவை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.


அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)


1. தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய இந்தியாவில் மாறிவரும் பொருளாதார நிலைமைகளுடன், 1973-ம் ஆண்டின் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Exchange Regulation Act (FERA)) மாற்றாக 1999-ல் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) வந்தது. இது வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணப்பரிமாற்றங்களை அதிகரிப்பதையும், இந்தியாவில் அந்நிய செலாவணி சந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (FERA) சட்டம் இந்தியாவில் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை நிலவிய ஒரு காலகட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டது; நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே அந்நிய செலாவணி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அந்நிய செலாவணியைச் சேமித்து வைப்பதே இதன் நோக்கமாக இருந்தது — இது சட்டத்தின் முகப்புரையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


3. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ், குற்றங்கள் அல்லது மீறல்கள் சிவில் (குற்றவியல் அல்ல) குற்றமாக மாற்றப்பட்டன. மேலும், சுற்றுலா, கல்வி போன்றவற்றிற்காக வெளிநாடு செல்வது போன்ற நடப்புக் கணக்கின் ஒரு பகுதியாக இருக்கும் பரிவர்த்தனைகளை உரிமையாக மாறியது.  அதேநேரத்தில், மூலதனக் கணக்கில் கட்டுப்பாடுகளை விதித்தது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) எந்தவொரு மீறல்களையும் விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அதிகாரம் பெற்றுள்ளனர்.


original link:

 What are Masala Bonds and FEMA?


Share:

கர்நாடகாவின் புதிய வெறுப்புப் பேச்சு சட்டமசோதா (New Hate Speech Bill) பற்றியும் இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது குறித்தும் -வினீத் பல்லா

 வெறுக்கத்தக்க பேச்சைக் (hate speech) குறிவைத்து ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும். இது இந்தியா நீண்டகாலமாக சட்டமன்ற இடைவெளியைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. "வெறுக்கத்தக்க பேச்சு" (hate speech) என்ற சொல் பொது விவாதங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் முறையாக வரையறுக்கப்படவில்லை.


வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா-2025 (Karnataka Hate Speech and Hate Crimes (Prevention) Bill), குற்றவாளிகளுக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முன்மொழிகிறது மற்றும் இது அமைப்புகளுக்கான கூட்டுப் பொறுப்பு என்ற கருத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


"தற்போதுள்ள எந்தச் சட்டமும் வெறுப்புப் பேச்சை வெளிப்படையாகக் கையாள்வதில்லை" (no existing law deals explicitly with hate speech) என்பதால் இந்தச் சட்டம் அவசியம் என்று கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறினார். இது இந்தியாவின் சட்டக் கட்டமைப்பில் நீண்டகால இடைவெளியை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. "வெறுக்கத்தக்க பேச்சு" என்ற சொல் பொது விவாதங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் இது முறையாக வரையறுக்கப்படவில்லை.


வெறுப்புப் பேச்சுக்கான தற்போதைய சட்டக் கட்டமைப்பு


தற்போது குறிப்பிட்ட சட்டம் இல்லாத நிலையில், இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்கள் (Indian law enforcement agencies) வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளைக் கையாள பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பல விதிகளைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பிரிவுகள் முக்கியமாக பொது ஒழுங்கைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை வெறுப்புப் பேச்சை ஒரு தனி குற்றமாகக் கருதுவதில்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153A-ன் மாற்றாக பிரிவு 196 ஆனது பொதுவாகப் பயன்படுத்தப்படும் விதியாகும். இது "மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்" ஆகியவற்றைத் தண்டிக்கும்.


இருப்பினும், கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் இடையிலான இடைவெளியை தரவு காட்டுகிறது. கைதுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால் தண்டனைகள் மிகக் குறைவு. முந்தைய அறிக்கைகளிலிருந்து தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் பிரிவு 153A-க்கான தண்டனை விகிதம் 20.2% மட்டுமே பதிவாகியுள்ளது.


வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்கு, பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மற்றொரு விதி பிரிவு 299 ஆகும். இது "எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களை" தண்டிக்கும். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295A-ஐப் போன்றது.


மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 353, அரசு அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராக குற்றங்களைச் செய்ய ஒருவரைத் தூண்டக்கூடிய அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களை பரப்பும் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் போன்ற அறிக்கைகள் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கும்.


இந்தக் குற்றங்கள் ஒவ்வொன்றும் அறியத்தக்கவை. இதன் பொருள் காவல்துறையினர் பிடியாணை (warrant) இல்லாமல் ஒருவரைக் கைது செய்யலாம். குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 66A பெரும்பாலும் இணையவழி வெறுப்புப் பேச்சுக்கு பயன்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் 2015-ல் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி அதை ரத்து செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் தலையீடு


கடந்த சில ஆண்டுகளாக, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு முன்முயற்சியுடன், மாறிவரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.


அக்டோபர் 2022-ல், நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, "நாட்டில் வெறுப்பு நிறைந்த சூழல் நிலவுகிறது" என்று கூறியது. மேலும், இந்த வெறுப்புப் பேச்சு விவகாரங்களில் தாங்களாகவே நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலைமை காவல்துறை அதிகாரிகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை முறையான புகார்களுக்காகக் காத்திருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு தாமதமும் அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. ஏப்ரல் 2023-ல், இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.


இருப்பினும், இந்த உத்தரவுகளை நடைமுறைக்குக் கொண்டுவருவது கடினமாக உள்ளது. ஆகஸ்ட் 2023-ல், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வெறுப்புப் பேச்சை வரையறுப்பது சிக்கலானது என்று ஒரு விசாரணையின்போது கூறியது. ஆனால், அதைச் சமாளிப்பதில் உள்ள உண்மையான சிக்கல் சட்டம் மற்றும் நீதித்துறை தீர்ப்புகளை செயல்படுத்துவதிலும், அமல்படுத்துவதிலும் உள்ளது என்று ஒப்புக்கொண்டது.


இந்த ஆண்டு நவம்பர் 25 அன்று, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய மற்றொரு அமர்வு, உச்ச நீதிமன்றம் "வெறுப்புப் பேச்சு தொடர்பான ஒவ்வொரு சம்பவத்தையும் கண்காணிக்க விரும்பவில்லை" என்று தீர்ப்பளித்தது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தெஹ்சீன் பூனவல்லா தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டு, காவல் நிலையங்களும் உயர் நீதிமன்றங்களும் இதுபோன்ற வழக்குகளைக் கையாளத் தகுதியானவை என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. இது கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலைகளைத் தடுக்க நோடல் அதிகாரிகளை (nodal officers) நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.


'வெறுக்கத்தக்க பேச்சு' (hate speech) என்பதை வரையறுக்க முயற்சிகள்


மார்ச் 2017-ல் அதன் 267வது அறிக்கையில், இந்திய சட்ட ஆணையம் வெறுப்பைத் தூண்டுவதையும், வன்முறையைத் தூண்டுவதையும் குறிப்பாக குற்றமாக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) உள்ள பிரிவுகள் 153C மற்றும் 505A சேர்க்க பரிந்துரைத்தது.


2022-ம் ஆண்டில், "வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா" (The Hate Speech and Hate Crimes (Prevention) Bill) என்ற ஒரு தனிநபர் மசோதாவை பாரத் ராஷ்டிர சமிதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா வெறுப்புப் பேச்சை "ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிரான பாகுபாடு, வெறுப்பு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும், நியாயப்படுத்தும், ஊக்குவிக்கும் அல்லது பரப்பும்" எந்தவொரு வெளிப்பாடாகவும் வெறுப்புப் பேச்சை வரையறுக்க இது நோக்கமாகக் கொண்டது.


"வெறுப்பு குற்றம்" (hate crime) என்பதை பாதிக்கப்பட்டவரின் உண்மையான அல்லது பண்புநிலையின், மதம், சாதி, பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை உள்ளிட்டவற்றுக்கு எதிரான பாரபட்சத்தால் தூண்டப்பட்ட குற்றமாக வரையறுக்கவும் அது முன்மொழிந்தது.


இந்த குறிப்பிட்ட விதிகளுக்கு ஆதரவாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 153A மற்றும் 295A ஆகியவற்றை நீக்க இது முன்மொழிந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.


கர்நாடக மசோதா முன்மொழிவது என்ன?


வெறுக்கத்தக்க பேச்சை குறிவைத்து, குறிப்பாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா ஆகும். இது முன்மொழியப்பட்ட சட்டமானது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் 2022 தனிநபர் உறுப்பினர் மசோதாவில் காணப்படும் சில கருத்துக்களை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.


கர்நாடக அமைச்சரவையின் கூற்றுப்படி, புதிய மசோதா வெறுப்புப் பேச்சை மதம், இனம், சாதி, பாலினம், பாலியல் நோக்குநிலை, பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறனாளி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது குழுவிற்கு எதிராக காயம் அல்லது ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வெளிப்பாடாக வரையறுக்கிறது. இந்த மசோதாவில் "பாலியல் நோக்குநிலை" (sexual orientation) மற்றும் "பாலினம்" ஆகியவற்றைச் சேர்ப்பது, பொதுவாக இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் இப்போது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் பாதுகாக்கப்பட்ட வகைகளுக்கு அப்பால் பாதுகாக்கப்பட்ட வகைகளின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.


இந்த மசோதா "கூட்டுப் பொறுப்பு" (collective liability) என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. வெறுப்புப் பேச்சு ஒரு அமைப்புடன் இணைக்கப்பட்டால், அந்த அமைப்பிற்குள் பொறுப்பான பதவிகளில் உள்ள நபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படலாம். இணையத்தில் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைத் தடுக்க அல்லது அகற்ற இந்த மசோதா மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.


original link:

All about Karnataka’s new Hate Speech Bill, how the issue is regulated across India


Share:

டிஜிட்டல் அரசியலமைப்பியல் மீது படரும் நிழல் -ஃபைசான் முஸ்தபா, ஆஷாங்க் திவேதி

 அரசியலமைப்பு கொள்கைகள், தரவு சேகரிப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் முன்னிலை வகிக்கும் உலகில் அதிகளவிலான அச்சறுத்தல்களை சந்தித்து வருகின்றன. 


எந்த ஒரு நபரிடமும் கலந்தாலோசிக்காமல், ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டு முதல் 'சஞ்சார் சாத்தி' என்ற அரசாங்க செயலியை நிறுவ திறன்பேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. தெளிவற்ற தரவு சேகரிப்பு முறைகள், ஒப்புதல் இல்லாமை, கண்காணிப்பு மற்றும் வரம்பற்ற தரவு சேமிப்பு குறித்து பெரும்பாலான பங்குதாரர்கள் எழுப்பிய பரவலான கவலைகளைத் தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் இந்த மறுசீரமைப்பு வந்தது. Reuters செய்தியை வெளியிட்டது. ஆப்பிள் ஒன்றிய அரசின் கொள்கையை செயல்படுத்த மறுத்துவிட்டது.


அரசாங்கம் ஆப்பிள் நிறுவனத்தையோ அல்லது இந்தியாவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளையோ இழக்க விரும்பாததால், இந்த வெளிநாட்டு குழுக்கள் திரைக்குப் பின்னால் உள்ள சூழ்நிலையை பாதித்திருக்கலாம். 2023-ஆம் ஆண்டில் 15.9 லட்சமாக இருந்த சைபர் குற்றங்கள் 2024-ஆம் ஆண்டில் 20.4 லட்சமாக அதிகரித்தது- இதனால் இந்த செயலியை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்தது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது திறன்பேசி பயனர்கள் (mobile users) மற்றும் காவல்துறைக்கு உதவவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ​​கண்காணிப்பு, அரசாங்கத்தின் அத்துமீறல் மற்றும் தரவுகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கேள்விகள் எழுப்பட்டன. டிஜிட்டல் அரசியலமைப்புவாதம் நமக்கு ஏன் அவசரமாகத் தேவை என்பதை இந்தப் பிரச்சினைகள் காட்டுகின்றன.


டிஜிட்டல் அரசியலமைப்புவாதம் (digital constitutionalism) என்றால் என்ன?


டிஜிட்டல் அரசியலமைப்புவாதம் (Digital Constitutionalism) என்பது சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், தன்னிச்சையற்றத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற அரசியலமைப்புக் கொள்கைகளை டிஜிட்டல் வெளியில் (digital space) விரிவுபடுத்துவதாகும். தரவு சேகரிப்பு, செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் முன்னிலை வகிக்கும் உலகில் இந்த மதிப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. நவீன நிர்வாகம் (Modern governance) என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு அமைப்பாக மாறி வருகிறது. பயோமெட்ரிக் தரவுத்தளங்களாக இருந்தாலும் சரி, முன்கணிப்பு வழிமுறைகளாக இருந்தாலும் சரி அல்லது இரண்டுமாக இருந்தாலும் அது குறைவாகவே வெளிப்படுகிறது. இந்த அமைப்புகளுக்குள் வலுவான அரசியலமைப்புப் பாதுகாப்பு இல்லாத இல்லாமல், மனிதர்கள் அதிகார அத்துமீறலுக்கு எளிதில் ஆளாக நேரிடும்.


அன்றாட வாழ்க்கை இப்போது டிஜிட்டல் நிர்வாகத்தால் பாதிக்கப்படுகிறது. தானியங்கி செயல்முறைகள் இப்போது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer (KYC) காசோலைகள், நலத்திட்ட பகிர்வு, வேலை விண்ணப்பங்கள், சுகாதார பதிவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் மக்கள் இடுகையிடுவதைக்கூட கையாளுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க வெளிப்பாடு அல்லது ஒப்புதல் இல்லாமல் செயல்படுகின்றன.


இதன் விளைவாக, அதிகாரம் தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் குவிந்துள்ளது. இது ஒரு சமமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. அங்கு மக்கள் செயலற்ற தரவுப் பொருள்களாக இருக்கிறார்கள். ஆனால், தாராளமய ஜனநாயக நாடுகளில் இருக்க வேண்டிய செயலில் உள்ள உரிமைதாரர்களாக மக்கள் இல்லை.


1984ஆம் ஆண்டு George Orwell எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கண்காணிப்பு வளர்ந்துள்ளது. இது இனி வெளிப்படையாகவோ அல்லது கவனிக்க எளிதாகவோ இல்லை. இன்று, metadata-வைச் சேகரித்தல், இருப்பிடங்களைக் கண்காணித்தல், பயோமெட்ரிக் அடையாளம் காணல், நடத்தை மாதிரியாக்கம் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு ஆகியவற்றின் உதவியுடன் செய்யப்படுகிறது.


இத்தகைய அமைதியான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு, பேச்சு சுதந்திரத்தை முடக்கி (chill free speech), எதிர்ப்புக் குரல்களைத் முடக்கி, ஜனநாயககத்தைக் குலைத்துவிடும். தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தால் மக்கள் தாங்களாகவே தம்மைத் தணிக்கை செய்யத் தொடங்குவர். சுய-தணிக்கை (Self-censorship) இன்று புதிய இயல்பாக மாறிவிட்டது. தனியுரிமை உரிமை (Right to Privacy) இந்தியாவில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி மற்றொருவர் vs இந்திய அரசு மற்றும் பிறர் (Puttaswamy (Retd.) And Anr. vs Union of India And Ors) வழக்கில் உறுதிப்படுத்தியது. சில வருடங்களுக்கு முன்னர், நாடாளுமன்றம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act), 2023-ஐ நிறைவேற்றியது. குடிமக்களின் தரவைப் பாதுகாக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் அதிகளவு  குறைபாடுகள் உள்ளன. இது அரசாங்கத்திற்கு அதிக சுதந்திரத்தை அளிக்கிறது. தன்னிச்சையான அமைப்புகளால் மோசமாக கண்காணிக்கப்படுகிறது, மேலும் தனிநபர்களுக்கு பலவீனமான பாதுகாப்பை வழங்குகிறது. இது நிர்வாக வசதி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கண்ணியத்தைவிட முன்னுரிமை அளிக்கிறது. இது அரசியலமைப்பை பாதுகாக்க போதுமானதாக இல்லை.


செயல்திறன் கொண்ட நவடிக்கைகள், ஆனால் குறைவான தனிப்பட்ட கட்டுப்பாடு


தரவாக்கம் (Datafication) அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. வங்கிகள் நடத்தை பகுப்பாய்வுகளை நம்பியுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் டிஜிட்டல் மருத்துவ பதிவுகளை நம்பியுள்ளன. கல்வி இணையவழித் தளங்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் தொடர்ந்து பயனர்களின் சுயவிவரங்களை உருவாக்குகின்றன. இந்த முன்னேற்றங்கள் செயல்திறனை உருவாக்குகின்றன. ஆனால், அவை தகவல் மீதான தனிப்பட்ட கட்டுப்பாட்டையும் குறைக்கின்றன. ஒப்புதல் அளிப்பது என்பது ஒரு விரைவான தேர்வாக மாறிவிட்டது, உண்மையான தேர்வாக இல்லை. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே தரவைப் பயன்படுத்துவது குறித்த விதிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தனியுரிமையை இழப்பது என்பது அவ்வப்போது ஏற்படும் தரவு மீறல்கள் மட்டுமல்ல. அது மெதுவாக நமது அடையாளம் மற்றும் முடிவுகளின் மீதான நமது கட்டுப்பாட்டை படிப்படியாக பறிக்கிறது.


கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் இப்போது பொது இடங்களில் ஒரு பகுதியாக உள்ளன. உள்சுற்றுக் கண்காணிப்புக் கருவிகள் (Closed circuit cameras), பயோமெட்ரிக் உணர்விகள் மற்றும் டிஜிட்டல் அடையாளங்காட்டிகள் தொடர்ந்து மக்களைக் கண்காணிக்கின்றன. அதன்படி, இனப் பாகுபாடு, கண்காணிப்பு மற்றும் தவறான அடையாளம் காரணமாக அமெரிக்காவின் சில நகரங்களில் முக அங்கீகாரம் தடைசெய்யப்பட்டுள்ளது அல்லது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முக அங்கீகாரம் (facial recognition) தவறாக அடையாளம் காணப்படுவது வெளிநாடுகளில் தவறான கைதுகளுக்கு வழிவகுத்தது. இந்திய விமான நிலையங்களில் Digi Yatra-வின் தரவுகள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. இந்த அமைப்புகள் சில சமயங்களில் நிறம், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. குற்றங்களைத் தடுக்க உதவுவதற்குப் பதிலாக, முக அங்கீகார தொழில்நுட்பம் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. இது சஞ்சார் சாத்தியில் காணப்படும் சிக்கல்களைப் போன்றது.



இந்த தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இன்னும் வளர்ச்சியடைந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கண்காணிப்பைக் கட்டுப்படுத்த தெளிவான சட்டங்கள் எதுவும் இல்லை. நீதிமன்றங்களுக்கு வலுவான மேற்பார்வை இல்லை. மேலும், கண்காணிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து வெளிப்படையான தன்மை குறைவாகவே உள்ளது. இது யாருக்கு அதிகாரம் உள்ளது, யார் அதற்குப் பொறுப்பு என்பதற்கு இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. கண்காணிப்பு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது ஒரு ஜனநாயகத்தின்மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரிய மனப்பான்மை கொண்ட ஒரு கண்காணிக்கும் அரசாக மாற்றக்கூடும்.


யாருக்கு நலத்திட்டங்கள் கிடைக்கும், யாரை காவல்துறையினர் கண்காணிக்கிறார்கள், யாருடைய உள்ளடக்கம் நீக்கப்படுகிறது, யார் வேலைகள் அல்லது கடன்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை வழிமுறைகள் தீர்மானிக்கின்றன. இந்த அமைப்புகள் கருப்புப் பெட்டிகள் (black boxes) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவற்றின் முடிவுகள் தெளிவாக இல்லை. ஒருவருக்கு சலுகை மறுக்கப்பட்டாலோ அல்லது தவறாக சந்தேகிக்கப்பட்டாலோ, அவர்களுக்கு பொதுவாக எந்த விளக்கமும் கிடைப்பதில்லை. மேலும், அந்த முடிவை எதிர்க்க தெளிவான வழியும் இருப்பதில்லை.

உண்மையான விளைவுகள் உள்ளன. வழிமுறை தோல்விகள் (Algorithmic failures) தகுதியான குடும்பங்களை நலத்திட்டங்களிலிருந்து விலக்கியுள்ளன. தானியங்கி உள்ளடக்க கட்டுப்பாடு (Automated content moderation) சட்டபூர்வமான குரல்களை அமைதிப்படுத்தியுள்ளது. உண்மையில், தொழில்நுட்பம் சமத்துவம், நியாயத்தன்மை மற்றும் இயற்கை நீதியின் அரசியலமைப்பு கொள்கைகளை அமைதியாக மீறக்கூடும்.


போதுமான சட்ட அமைப்பு இல்லை


தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் வளர்ந்துவரும் டிஜிட்டல் சட்டங்கள் உட்பட இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்ட அமைப்பு, முக்கியமாக தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதையும், தளங்களை நிர்வகிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக மக்களின் சுதந்திரங்களையும், தனியுரிமையையும் பாதுகாக்க இது போதுமானதாக இல்லை. நீதிமன்றங்களால் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பிரிக்கப்பட்டவை மற்றும் தற்காலிகமானவை. அதிக ஆபத்துள்ள வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு உத்தரவுகளைப் பொறுத்தவரை, அவற்றைத் தணிக்கை செய்யவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ எந்த ஒரு வெளிப்புற அமைப்பும் இல்லை. பெரும்பாலான தொழில்நுட்ப ஆர்வமுள்ள மக்களுக்கு, தீர்வுகள் மெதுவாகவும், விலை உயர்ந்ததாகவும், அணுக முடியாததாகவும் இருந்து வருகின்றன. மக்கள் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை.


இது அரசியலமைப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் மாநில அதிகாரம் இப்போது அரசாங்க அமைப்புகளைப் போலவே டிஜிட்டல் அமைப்பால் வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும், இவை அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு உட்பட்டவை அல்ல. இந்த முரண்பாடு ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது.


டிஜிட்டல் அரசியலமைப்புவாதத்தின் பொருத்தமான மாதிரி, வெறும் தத்துவார்த்தமாக இல்லாமல், நடைமுறை ரீதியாக இருக்க வேண்டும். அது அமைப்புகள் மூலம் பாதுகாப்புகளை அமைக்க வேண்டும். பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக மீறல்கள் ஒரு சுயாதீன டிஜிட்டல் உரிமைகள் ஆணையத்தால் விசாரிக்கப்பட வேண்டும். தேவை மற்றும் விகிதாசாரத்தைப் பின்பற்றி, தீவிரமான தேசிய பாதுகாப்பு வழக்குகளில் மட்டுமே கண்காணிப்பு அனுமதிக்கப்பட வேண்டும். பொது வெளிப்படைத்தன்மை அறிக்கைகள், நாடாளுமன்ற மதிப்பாய்வு மற்றும் நீதித்துறை ஒப்புதலை கட்டாயமாக்க வேண்டும்.


ஆபத்தான செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் பாதுகாப்பு மற்றும் சார்புக்காக தொடர்ந்து சரிபார்க்கப்பட வேண்டும். மக்கள் தேவையான விளக்கத்தை பெறவும், தானியங்கி முடிவுகளுக்கு மேல்முறையீடு செய்ய தேவையான உரிமைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். தரவுப் பயன்பாட்டை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதன் மூலமும், தேவையானதை மட்டும் சேகரிப்பதன் மூலமும், தவறாகப் பயன்படுத்துவதை கடுமையாக தண்டிப்பதன் மூலமும் தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.



டிஜிட்டல் கல்வியறிவை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிமையாகக் கருத வேண்டும். தனிநபர்கள் டிஜிட்டல் அதிகார அமைப்புகளை விமர்சிக்கவும், சவால் செய்யவும், எதிர்க்கவும் திறன்பெற்றிருக்க வேண்டும். அறியாமல் இருக்கும்போது உரிமைகள் வெறும் கோட்பாடுகளாகவே (mere theories) இருந்துவிடும்.


டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குடியுரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. அவை சேவைகளின் கிடைக்கும் தன்மை, அரசியல் பங்கேற்பு மற்றும் அடையாளத்தைக் கூட தீர்மானிக்கின்றன. நிர்வாகம் முடிவுகளை எடுக்க அதிக தரவுகளைப் பயன்படுத்துவதால், அவை சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனியுரிமை போன்ற முக்கியமான மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், திறமையாக இருக்க இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. டிஜிட்டல் அரசியலமைப்புவாதம் என்பது சட்டத்தில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல. இந்த வழிமுறை ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகும். தொழில்நுட்பம் மக்களின் அமைதியான அரசரை போல் இல்லாமல், அவர்களின் சேவகராக இருப்பதை உறுதி செய்வதற்கான வாக்குறுதியாக இருக்க வேண்டும்.


ஃபைசான் முஸ்தபா பீகார் பாட்னாவில் உள்ள சாணக்யா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். ஆஷாங்க் திவேதி ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் அறிஞர்.


original link:

A growing shadow over digital constitutionalism 


Share:

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும். -கிரண் மஜும்தார்-ஷா

 சீனாவைப் போல, மூலதனச் சந்தைகளையும், விதிமுறைகளையும் புதுப்பிப்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதே முன்னேறுவதற்கான வழி.


இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் (bioeconomy) கடந்த பத்தாண்டுகளில் 16 மடங்கு வளர்ந்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் $10 பில்லியனாக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் $165 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. சரியான கொள்கைகளுடன், இது 2047-க்குள் $1.2 டிரில்லியனைத் தாண்டி, வளர்ந்த இந்தியாவின் (விக்சித் பாரத்) ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும் என்கின்றனர். ஆனால், இதற்கு அறிவியல்திறமை மட்டும் போதாது என்றும் இதற்கு வலுவான மூலதனச் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் நவீன, அறிவியல் அடிப்படையிலான ஒழுங்குமுறை அமைப்பு தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.  இந்தப் பன்னாட்டு உயிரித்தொழில்நுட்பத் துறையில் சீனா ஒரு உறுப்பு நாடு என்கிற நிலையிலிருந்து உலகளாவிய தலைவர் என்கிற நிலைக்கு  உயர உதவிய இரண்டு முக்கிய காரணிகளாகக் கருதப்படுகிறது.


இந்தியாவிடம் அறிவியல் வலிமையும் திறமையும் இருக்கிறது, ஆனால் கண்டுபிடிப்புகள் வளர உதவும் அமைப்பு பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 


உயிரித்தொழில்நுட்பமானது மற்ற துறைகளிலிருந்து வேறுபட்டது: இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. மேலும், ஆழமான அறிவியலை நம்பியுள்ளது. வளர்ச்சி அடைய நீண்டகாலம் ஆகும் என்று கூறப்படுகிறது. உலகளவில், உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சி நிலையிலேயே பொதுச் சந்தைகளில் நுழைகின்றன. எனவே, இது அவர்களுக்கு கடினமான காலங்களில் தாக்குப்பிடிக்க நீண்டகால மூலதனத்தை அளிக்கிறது.


இந்தியாவில், வருவாய் ஈட்டாத அல்லது ஆராய்ச்சி நிலையிலுள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், புதிய கண்டுபிடிப்பாளிகள் (innovators) பெரும்பாலும் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து  கிடைக்கும் பணத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த முதலீடும் குறைவாகவே உள்ளது, மேலும் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடு செய்கிறார்கள். அவரது குறைந்த மதிப்பீடுகள் புதிய தயாரிப்பு உருவாக்கத்தைக் குறைக்கிறது, மேலும் நம்பிக்கைக்குரிய இந்திய புத்தொழில் நிறுவனங்களை (Start-Up) வெளிநாடுகளுக்குச் செல்ல வழிவகுப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.


கடந்த பத்து ஆண்டுகளில், முதலீட்டு புதுமையானது எப்படி அறிவியல் புதுமைக்கு ஊக்கமளிக்கிறது என்பதை சீனா நிரூபித்துக் காட்டியுள்ளது:


ஷாங்காயில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட STAR சந்தை (STAR Market), இலாபம் ஈட்டாத, வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் ஆழமான தொழில்நுட்ப நிறுவனங்களை, இலாபம் தேவைப்படாமல் பட்டியலிட அனுமதிக்கிறது. இது ஏற்கனவே 130 பில்லியன் டாலருக்கும் மேல் நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


ஹாங்காங்கின் உயிரித்தொழில்நுட்பப் பிரிவு (2018) லாபமற்ற உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்குச் சந்தையில் நுழைய அனுமதிக்கிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு, 25 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன.


2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில், சீனாவிற்கு உயிரியல் அறிவியல் துணிகர மூலதனமாக (life-sciences venture capital) 45 பில்லியன் டாலர் கிடைத்தது—இது இந்தியாவின் அளவைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிகம்.


சீனாவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான (Research and Development (R&D)) செலவு 20 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. அதேசமயம், இந்தியாவின் செலவு 3 பில்லியன் டாலர்கள் அளவில் மட்டுமே உள்ளது.


இந்த முதலீட்டுப் பெருக்கமானது சீனா விரைவாக உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக மாற உதவியுள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய தயாரிப்பு திட்டங்களைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகியுள்ளன.


புதுமை மற்றும் உயிரித்தொழில்நுட்ப வாரியம் தேவை


NASDAQ, STAR மற்றும் ஹாங்காங்கைப் போலவே, தேசியப் பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) உள்ள ஒரு பிரத்தியேகப் பட்டியலிடும் பிரிவு (specialised listing board) வருமானம் ஈட்டாத மற்றும் ஆய்வுக் கட்டத்தில் உள்ள உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்களைப் பட்டியலிட அனுமதிக்க வேண்டும். இது, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property (IP)) சார்ந்த நிறுவனங்கள் பொறுமையுடன் முதலீடு செய்யும் (patient capital) நிதியைப் பெறவும், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் பங்கேற்கவும், இந்திய தொடக்க நிலை நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே வளரவும் உதவும் என்று வலியுறுத்துகின்றனர்.


அத்தகைய சீர்திருத்தம் உள்நாட்டு மூலதனத்தை விடுவித்து, உலகளாவிய நிறுவன முதலீட்டாளர்களை ஈர்த்து, இந்தியாவின் உயிரியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. 


ஒழுங்குமுறைச் சீர்திருத்தம்


தேவையான மூலதனம் இருந்தாலும், வேகமான மற்றும் தெளிவான விதிமுறைகள் இல்லாமல் புதிய கண்டுபிடிப்புகள் வளர முடியாது. ஆனால், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை கட்டமைப்பு இன்னும் மெதுவாகவும், பிளவுபட்டும், அதிகப்படியான அதிகாரத்துவத்துடனும் உள்ளது.


மனிதர்கள் மீதான முதல் சோதனை (FIH - First-in-Human) ஒப்புதல் பெறவே பெரும்பாலும் பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. ஒவ்வொரு கட்டத்திற்கும் (கட்டம் I, II, III) தனித்தனியான நிபுணத்துவக் குழுவின் (Subject Expert Committees (SECs)) ஆய்வு தேவைப்படுகிறது. இந்தக் குழுவின் ஒழுங்கற்ற கூட்டங்கள் அடிக்கடி தாமதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், மத்திய மருந்துகள் தர நிர்ணயக் கட்டுப்பாட்டு அமைப்பானது (Central Drugs Standard Control Organization (CDSCO)) mRNA, வட்ட வடிவ RNA (Ribonucleic Acid), CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats), CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy), அல்லது AAV (Adeno-Associated Virus) மரபணு சிகிச்சைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதற்குத் தேவையான நிபுணத்துவம் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.


சீனா பத்தாண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டது, ஆனால் சில சீர்திருத்தங்களால் அதை வெற்றிகரமாக சமாளித்தது. தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாக அமைப்பை (National Medical Products Administration (NMPA)) அறிவியல் அடிப்படையிலான, வலுவான ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றியது. மருத்துவ பரிசோதனை ஒப்புதல் நேரத்தை 40-60 சதவீதம் குறைத்தது, மேலும் பரிசோதனை கட்டங்களை ஒரே நேரத்தில் (இணையாக) நடத்த அனுமதி அளித்தது போன்ற மாறுதல்களைச் செய்தது. மேலும், சர்வதேச மருந்து ஒழுங்குமுறை தர நிர்ணய அமைப்பின் (International Council for Harmonisation of Technical Requirements for Pharmaceuticals for Human Use (ICH)) உறுப்பினரானது. இதனால் உலகத் தரத்தை எட்டியது மற்றும் புதிய மருந்துகளுக்கு விரைவான ஒப்புதல் முறையை அமல்படுத்தியது. இதன் பலனாக, பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்னதாகவே CAR-T (Chimeric Antigen Receptor T-cell therapy) சிகிச்சை முறைகளுக்கு மற்றும் மரபணு சிகிச்சை மருந்துகளுக்கு சீனா ஒப்புதல் அளித்தது என்கின்றனர். 


ஒழுங்குமுறைச் சுறுசுறுப்பு தெளிவான நம்பிக்கையை உருவாக்கியது. அது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்தது. இவை இரண்டும் இணைந்து உயிரித்தொழில்நுட்பத் துறையில் பெரிய ஏற்றத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. 








இந்தியாவிற்கான வாய்ப்புகள்


இந்தியா இரட்டைத் தூண் அமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் வேகமாக முன்னேற முடியும்:


மருத்துவ சோதனை நெறிமுறைகளின் அறிவியல் மதிப்பாய்வுக்கு (Indian Council of Medical Research (ICMR)) அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்: வலுவான ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான திறமைகளுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பு (ICMR) புதிய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் மேம்பட்ட உயிரியல் தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஆரம்பக்கட்ட சோதனைகளில், முக்கிய அறிவியல் ஆய்வு அமைப்பாக மாற முடியும்.


மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) உரிமம் வழங்குதல் மற்றும் மேற்பார்வையிடுவதில் கவனம் செலுத்தட்டும். மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமானது இறுதி அனுமதிகள், நல்ல உற்பத்தி முறைமைகள்  (Good Manufacturing Practice (GMP)) சோதனைகள், தள ஆய்வு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றை கையாள வேண்டும்.


அறிவியல் ஆய்வை (ICMR) நிர்வாக உரிமம் வழங்கும் நடைமுறையிலிருந்து (CDSCO) பிரிப்பது அனுமதிகளை விரைவுபடுத்தும், அறிவியல் தரத்தை வலுப்படுத்தும், மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் என்று நம்பப்படுகிறது. 


இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சுழற்சி ஆற்றல்


மூலதனச் சந்தை சீர்திருத்தம், ஒழுங்குமுறை சீர்திருத்தம் இல்லாமல், புதுமை நிகழாது. மூலதனத்தின் அணுகல் இல்லாமல் ஒழுங்குமுறை சீர்திருத்தம், வளர்ச்சி வேகத்தை உருவாக்காது. ஆனால், இவை இரண்டும் சேர்ந்துதான் உலகளாவிய உயிரித்தொழில்நுட்பத் தலைமைக்கு உந்துசக்தியாக விளங்கும் சுழல் இயக்கத்தை  உருவாக்குகின்றன.


ஒரு புதுமை & உயிரித்தொழில்நுட்ப வாரியமும் (Innovation & Biotech Board), அறிவியல் அடிப்படையிலான இரட்டை ஒழுங்குமுறை அமைப்பும், வலுவான நிறுவன ஆதரவும் இருந்தால், இந்தியா ஆயிரக்கணக்கான ஆழ்தொழில்நுட்ப (deep-tech) தொடக்க நிறுவனங்களை உருவாக்கலாம், mRNA, RNAi, மரபணு சிகிச்சை, உயிர் ஒத்த மருந்துகள், உயிரியல் மருந்துகள் ஆகியவற்றில் உலகத் தலைமை பெறலாம், மருத்துவ ஆய்வு மற்றும் உயிரியல் உற்பத்தியில் உலகின் சிறந்த மையமாக உயரலாம், இலட்சக்கணக்கான உயர்மதிப்பு BioE³ வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். 2047-ஆம் ஆண்டுக்குள் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப்பொருளாதாரம்  அமைக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


நம்மிடம் ஏற்கனவே அறிவியலும், திறமையும், சந்தை வாய்ப்புகளும் உள்ளன. இப்போது நமக்குத் தேவையெல்லாம் சீர்திருத்தத்திற்கான துணிச்சல் மட்டும்தான் என்கின்றனர்.


மூலதனச் சந்தை சீர்திருத்தம் மற்றும் ஒழுங்குமுறை நவீனமயமாக்கல் ஆகியவை தேசிய முன்னுரிமைகளாக இருக்க வேண்டும். துணிச்சலான நடவடிக்கையின் மூலம், இந்தியா உலகின் மருந்துகள் விற்கப்படும் பொருளாதாரச் சந்தை என்கிற நிலையிலிருந்து, உலகின் மருந்து ஆய்வுக்கூடமாக மாறமுடியும் என்று கூறப்படுகிறது. 


எழுத்தாளர், Biocon குழுமத்தின் தலைவர்.

original link:

India can build a $1.2-trillion bioeconomy by 2047.


Share:

கடற்படை தினம் 2025: இன்று நினைவுகூரப்படும் 1971 வங்கதேச ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போர் நடவடிக்கையின் கதை.

2025-கடற்படை தினம், இந்திய கடற்படை வங்காளதேசப் போர்: அதைத் தொடர்ந்து டிசம்பர்-4 அன்று கடற்படை தினமாகக் கடைப்பிடிக்க வழிவகுத்த ‘ஆபரேஷன் ட்ரைடண்ட்’ (Operation Trident) என்றால் என்ன?


கடற்படை தினம் 2025 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை அன்று, இந்திய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடற்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.


நம் நாட்டின் கடல் எல்லைகளையும், தேசிய நலன்களையும் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் வீரமிக்க ஆண்களையும் பெண்களையும் தேசம் வணங்குவாதாகத் அவர் தெரிவித்தார்.


இந்த நினைவு நாளின் தேதி காலப்போக்கில் மாறி உள்ளது. ராயல் இந்தியன் கடற்படை (Royal Indian Navy) தனது முதல் கடற்படைத் தினத்தை அக்டோபர் மாதம்  21-ஆம் தேதி, 1944-ஆம் ஆண்டு அனுசரித்தது. 1945-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், அது பம்பாய் (இப்போது மும்பை) மற்றும் கராச்சியில் டிசம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1972-ஆம் ஆண்டு வரையிலும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி  கடைப்பிடிக்கப்பட்டது. அப்படியானால், இறுதியாக டிசம்பர் 4 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?


இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ட்ரைடென்ட்


டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி நினைவுகூரப்படும் கடற்படை தினமானது, 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது கராச்சி துறைமுகத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆப்ரேஷன் டிரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையைக் குறிக்கிறது.


கடற்படை நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, பாகிஸ்தான் விமானப்படை மேற்கு இந்தியாவில் உள்ள விமான நிலையங்களைத் தாக்கியபோது போர் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இந்தியா, டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலையில் போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையானது புதிதாகப் பெறப்பட்ட சோவியத் ஓசா ஏவுகணைப் படகுகளைப் பயன்படுத்தி, கராச்சிக்கு அருகில் மூன்று கப்பல்களை மூழ்கடித்தது. இந்தப் படகுகளில் நான்கு SS-N-2 (P-15) ஸ்டைக்ஸ் வகை ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன.


இந்தியா கடற்படைக் கப்பல் கில்டான் (Indian Navy Ship (INS Kiltan)), கட்சால் (Katchall), நிபாட் (Nipat), நிகாட் (Nighat), மற்றும் வீர் (Veer) ஆகியவை பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான கைபர் (Pakistan Naval Ship (PNS Khaibar)) கப்பலை மூழ்கடித்தன. இதில் 222 பாகிஸ்தான் மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேலும்,. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் முஹாஃபிஸ் (PNS Muhafiz) மூழ்கடிக்கப்பட்டது; இதில் 33 மாலுமிகள் கொல்லப்பட்டனர். அத்துடன், வணிகக் கப்பலான எம்.வி. வீனஸ் சேலஞ்சர் (Merchant Vessel (MV) Venus Challenger) மூழ்கடிக்கப்பட்டது. இதே நாளில், இந்திய விமானப்படை கராச்சியின் கெமாரி எண்ணெய் சேமிப்புக் கலன்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது ஒரு தனிப்பட்ட நடவடிக்கை என்றாலும், இந்திய விமானப்படை இதன் பொறுப்பை ஏற்கவில்லை. இருப்பினும், இந்த தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் (Operation Trident) நடவடிக்கையில் ஒரு முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்தனர்


டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி, இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் எஸ்.என். கோலிக்கு, “அங்கார்” என்ற குறியீட்டுச் சொல் கிடைத்தது. இது அந்த நடவடிக்கை வெற்றி பெற்றதற்கான அறிகுறிச் சொல் ஆகும். 1971-ஆம் ஆண்டு போர், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி  முடிவடைந்தது. அன்றைய தினம், மாலை 4:55 மணிக்கு டாக்காவில் பாகிஸ்தானின் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி சரணடைய கையெழுத்திட்டார். அப்போது ஜெனரல் ஜெ.எஸ். அரோரா அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த கணம் போரின் நீடித்த அடையாளமாக இன்றும் உள்ளது.


ஆபரேஷன் ட்ரைடென்ட்' கடற்படை நடவடிக்கையின் முதன்மையான அம்சங்கள் 


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்  முன்னதாக செய்தி வெளியிட்டதைப் போல, இந்தத் தாக்குதல்களின் பல அம்சங்கள் புதியவை. இதில், இப்பகுதியில் முதன்முறையாக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது, ஏவுகணை தூரத்தை அதிகரிக்க பெரிய கப்பல்களால் இழுத்துச் செல்லப்பட்டது, புத்திசாலித்தனமான தகவல் தொடர்பு முறைகள் மூலம் வானொலி அலை முடக்கத்தைக் (radio silence) கடைப்பிடிப்பது, மற்றும் கடலோர பாதுகாப்புப் படகுகளை தாக்குதலுக்கு பயன்படுத்தியது ஆகியன குறிப்பிடப்படுகின்றன.


ஏவுகணைப் படகுக் குழுவினர் ரஷ்யாவில் பயிற்சி பெற்றிருந்ததால், அவர்களுக்கு ரஷ்ய மொழி நன்கு தெரிந்திருந்தது. இந்த மொழியை அவர்கள் ரேடியோ தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தினர். இது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவை ஏமாற்றியது. 'வினாஷ்' கப்பலின் தலைவரான விஜய் ஜெரத் அவர்கள், இந்த நடவடிக்கையின்போது காட்டிய பொறுமை மற்றும் தலைமைத்துவ நடவடிக்கைக்காக 'வீர சக்ரா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்திய கடற்படை ஏற்கனவே முழுமையான கடல் ஆதிக்கத்தை பெற்றுவிட்டதால், டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது ஏவுகணைத் தாக்குதலான “ஆபரேஷன் ட்ரையம்ப்” (Operation Triumph) ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.


இந்த நடவடிக்கையை வழிநடத்திய அதிகாரிகளைவிடவும், முன்னதாகச் செய்யப்பட்ட மேம்பாடுகளும் திட்டமிடலுமே பாராட்டப்பட வேண்டும் என்று கடற்படை அதிகாரியான அன்குஷ் பானர்ஜி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியா தன்னைச் சுற்றி இருந்த வளங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, தனது கடற்படை நிலையை எப்படி பலப்படுத்துவது என்று கவனமாகத் திட்டமிட்டது. இந்த 'மௌனமான' ஆண்டுகளில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன, புதிய தளங்கள் (கப்பல்கள்/விமானங்கள் போன்றவை) வாங்கப்பட்டன, மேலும், நடைமுறை அறிவு மேலாண்மை அமைப்புகள் நிறுவப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 


உதாரணமாக, 1969 மற்றும் 1970-ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா ஐந்து பெட்யா வகை நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களை (கமோர்தா (Kamorta), கத்மத் (Kadmatt), கில்டான் (Kiltan), கவரத்தி (Kavaratti), கட்சால் (Katchall), நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை (கல்வேரி (Kalveri), காண்டேரி (Khanderi), கரஞ்ச் (Karanj), குர்சுரா (Kursura)), நிஸ்தார் (Nistar) என்ற நீர்மூழ்கிக் கப்பல் மீட்புக் கலத்தை, போலந்தில் கட்டப்பட்ட இரண்டு தரையிறங்கும் கப்பல்களை (கரியால் (Gharial), குல்டார் (Guldar)), மற்றும் ஐந்து ரோந்துக் கப்பல்களை (பன்வேல், புலிகாட், பனாஜி, பாம்பன், பூரி) வாங்கியது. 1970-71 ஆம் ஆண்டில், எட்டு சோவியத் ஏவுகணைக் கப்பல்கள் (நாஷக் (Nashak), நிபாட் (Nipat), நிர்பிக் (Nirbhik), வினாஷ் (Vinash), வீர் (Veer), விஜேதா (Vijeta), வித்யுத் (Vidyut)) வெவ்வேறு கட்டங்களில் ஏற்கப்பட்டு, வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. 


இதன் விளைவாக, இந்த நடவடிக்கையின்போது, ​​இந்திய தரப்புக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி, ஆபரேஷன் பைதான் (Operation Python) தொடங்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட பெரும் சேதங்கள்  பாகிஸ்தான் கடற்படையின் மன உறுதியை பெரிதும் பாதித்தது என்கின்றனர். இதன் காரணமாக டிசம்பர் 9-ஆம் தேதி ஏற்படும் வெடிப்பு சேதத்தைக் குறைக்க, பாகிஸ்தான் கப்பல்களில் உள்ள வெடிமருந்துகளைக் குறைக்க உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

original link:

 Navy Day 2025: Story of Operation Trident, the 1971 Bangladesh War operation commemorated today.


Share:

மக்கள்தொகை கணக்கெடுப்பு நாம் யார் என்பதைப் பற்றியது. அது சாதி மற்றும் இடப்பெயர்வைப் புறக்கணிக்க முடியாது. -எஸ் ஒய் குரைஷி

 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு அல்லது தொழில் ஆகியவற்றைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே கவனத்துடன், சாதியை முழுமையாகப் பதிவுசெய்ய வேண்டும். ஒரு ஜனநாயகத்திற்கு, அது சங்கடமாக இருந்தாலும், முழுமையான தகவல் தேவை.


ஒரு நாடு அதன் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும்போது, அது தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஒரு குடியரசு தனது மக்கள் யார், யார் சேர்க்கப்பட்டுள்ளார்கள், யார் விடுபட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census) என்பது ஒரு முக்கியமான தருணம். 143 ஆண்டுகளாக, இந்தியா ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தடையில்லாமல் நடத்தி வந்துள்ளது. ஆனால், கடைசியாக 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடந்தது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கவே இல்லை.


இதற்குப் பெருந்தொற்று (Pandemic) காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்திலும்கூட, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தக் கால தாமதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டில் முடிவடையும்போது, இந்தியா புதிய மக்கள்தொகை தரவுகள் இல்லாமல் 16 முதல் 17 ஆண்டுகள் கழித்திருக்கும். இது சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட தாமதம் ஆகும். இந்த இடைவெளி வெறும் எண்ணிக்கை அளவிலான பாதிப்பு மட்டும் இல்லை. மாறாக, பழைய தரவுகளைப் பயன்படுத்திதான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தோர் வாழும் நகரங்கள், இன்னமும் அவை சிறிய ஊர்களாக இருப்பது போலக் கருதியே திட்டமிடப்படுகின்றன. நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்மானங்கள் (allocations) இன்றும் 2011-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா ஏற்கெனவே மாறிப்போன உலகிற்கு இன்னும் தனது வரவுசெலவுத் திட்டங்களை இன்னும் வகுத்துக்கொண்டிருக்கிறது. 2021 கணக்கெடுப்பை “தாமதமான 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” என்று சொல்லாமல், அதை “மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027” என்று அழைப்பது மிக முக்கியமானது. ஏனென்றால், 84-வது அரசியல் சாசனத் திருத்தப்படி பெண்களுக்கான இடஒதுக்கீடு “2026-க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு” முடிந்த பின்புதான் அமல்படுத்தப்பட வேண்டும். அதனால் 2027-ஐ “முதல் கணக்கெடுப்பு” என்று அதிகாரப்பூர்வமாக அழைத்தால் மட்டுமே சட்டப்படி சரியாக இருக்கும். ஆனால், இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு 2030-களின் நடுப்பகுதிக்கு முன்பு நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


2027-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும். இது மகளிர் இடஒதுக்கீட்டையும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசு நிர்ணயித்துள்ள 2029-ஆம் ஆண்டு என்கிற காலக்கெடு சாத்தியமற்றது என்கின்றனர். ஏனெனில், தொகுதி மறுவரையறை செய்வதற்கு பொதுவாக நான்கு முதல் ஆறு ஆண்டுகள் ஆகும். இந்தக் கணக்கெடுப்பு, 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியும் வரை இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீர்வு காணப்படாத மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கு எடுக்கப்படுமா என்பதுதான். சாதி விவரங்கள் சேர்க்கப்படுமா, தனியாக எடுக்கப்படுமா, அல்லது முழுவதுமாகத் தவிர்க்கப்படுமா என்பதை அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்கின்றனர்.


கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1931-ஆம் ஆண்டுதான் சாதிவாரியான முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு வழங்குவதற்காக, இந்தியா பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Castes - SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes - ST) ஆகியவற்றை மட்டுமே கணக்கெடுத்தது. அனைத்து சாதிகளையும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடுவது, புதிய தேசத்தில் சாதிப் பிரிவுகளை வலுப்படுத்தக்கூடாது என்ற நோக்கம் காரணமாகக் கூறப்பட்டது. 2011-ஆம் ஆண்டில், சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census - SECC) அனைத்துச் சாதிகளையும் பதிவு செய்ய முயற்சித்தது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. இதற்கு அதிகாரப்பூர்வ காரணம் தரவுகளில் இருந்த சிக்கல்கள் என்று கூறப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்தத் தரவுகள் இன்னும் பயன்படுத்தப்படாமல், வெளியிடப்படவும் இல்லை, நிராகரிக்கப்படவும் இல்லை என்ற நிலையிலேயே உள்ளன.


விரிவான சாதிவாரி தரவுகள் கிடைத்தால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC) இட ஒதுக்கீடு, சமூகநீதி மற்றும் வளப்பங்கீடு குறித்த விவாதங்களை முழுவதுமாக மாற்றியமைக்கும். விளிம்புநிலை சமூகங்களுக்கு (Marginalised communities) இது உதவும். தங்களுடைய கோரிக்கைகளை வலுவாக வைக்கத் தேவையான சரியான மக்கள் தொகை எண்ணிக்கையை இது அவர்களுக்கு அளிக்கும். துல்லியமான சாதித் தரவுகள் இல்லாமல் போகும்போது, கொள்கைகள் அனைத்தும் உண்மையான மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் அல்லாமல், வெறும் அரசியல் வாதங்களின் அடிப்படையிலேயே இயங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்று கருதுகின்றனர். 


சாதி வாரிக் கணக்கெடுப்பு பற்றிய தெளிவு இல்லாமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அறிவிப்பது, நிர்வாகத்தின் குழப்பத்தையோ அல்லது தெளிவில்லாமலோ இருப்பதையே காட்டுகிறது. இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத சிக்கலான விஷயங்கள் ஆகும். 2027-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வயது, கல்வி அறிவு, அல்லது தொழில் போன்ற விவரங்களைச் சேகரிப்பதைப் போலவே, சாதி விவரங்களையும் முழுமையாகக் கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டுமெனில் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்கின்றனர். 


மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 இடப்பெயர்வை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களைவிட்டு வெளியேறி வேலை செய்கிறார்கள். மும்பையில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள் பீகாரிலும், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசத்திலும் கணக்கெடுக்கப்படுகிறார்கள். தற்போதைய கணக்கெடுப்பு, மக்கள் காணப்படும் இடங்களிலேயே அவர்களைக் கணக்கிடுகிறது. ஆனால், இது அவர்களின் அரசியல் அல்லது குடியுரிமை உரிமைகளைப் பிரதிபலிக்கவில்லை. பட்டியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள், தாங்கள் வாழும் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படாமல், தங்கள் கிராமங்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க முடிவதில்லை. சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க பணம் இல்லாததால், வாக்களிக்க முடிவதில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலர், தாங்கள் தற்போது வாழாத கிராமங்களின் பிரச்சினைகளுக்காக வாக்களிப்பதன் மூலம், தாங்கள் உண்மையில் வசிக்கும் நகரங்களில் குரலற்றவர்களாக  இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்




இது ஒரு சிக்கலை உருவாக்குகிறது : இடம்பெயர்ந்து வந்தவர்களையும் சேர்த்து, மொத்த மக்கள்தொகையின் அடிப்படையிலேயே நகர நிர்வாகங்கள் திட்டமிடப்படுகின்றன. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருப்பதால், அவர்களால் உள்ளூரில் வாக்களிக்க முடிவதில்லை. இதனால், நகர்ப்புற நிர்வாகம் மக்கள் பொறுப்புக் குறைவானதாகிறது. மேலும், கிராமப்புறங்கள் அங்கு வசிக்காத மக்களுக்கான வளங்களைத் திட்டங்கள் மூலம் பெறுகின்றன.


சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க, மக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அங்கு 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்காவிட்டால், வேலை செய்யும் இடத்திலேயே பதிவு செய்து வாக்களிக்க தேர்தல் சட்டம் அனுமதிக்கிறது; சில சமயங்களில் அதைக் கட்டாயமாக்குகிறது. இதனால், பல மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பை பொருளாதாரத்திற்கு அளித்தாலும், வாக்களிக்க முடியாமல் போகாமல் இருக்க, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து வாக்காளர் பட்டியலை துரிதமாகப் புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது முக்கியமாக காகிதத்திற்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். இது கணக்கெடுப்பை வேகப்படுத்துகிறது, தவறுகளைக் குறைக்கிறது, நிகழ்நேர கண்காணிப்பை அனுமதிக்கிறது, மற்றும் முடிவுகளை விரைவுபடுத்துகிறது. ஆனால், சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்று எச்சரிக்கின்றனர்.  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பெயர், முகவரி, பயோமெட்ரிக்ஸ் (Biometrics) மற்றும் சாதி, வருமானம் மற்றும் குடியேற்ற வரலாறு போன்ற தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும். டிஜிட்டல் மயமாக்கப்பட்டவுடன், இந்தத் தரவை தேடலாம் மற்றும் தகவல்களை இணைய வழியிலயே இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  இது புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா அல்லது ஆதார், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு அல்லது வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு முழுமையான குடிமகன் சுயவிவரங்களை உருவாக்கப் பயன்படுமா என்பதுதான் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மக்களைக் கணக்கிடுவதே தவிர, அவர்களைக் கண்காணிப்பது அல்ல என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அது காவல்துறையினருடன் பகிரப்படவோ அல்லது குடியுரிமைச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படவோ கூடாது. தரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்பம் கணக்கெடுப்பை வேகமாகவும் துல்லியமாகவும் மாற்ற முடியும், ஆனால், சட்டவிதிகள்தான் நம்பகத்தன்மையுடன் கூடிய பாதுகாப்பை வழங்குகின்றன.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது நியாயமானதாக இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. தரவு சேகரிப்பின்போது ஒவ்வொரு மாநிலமும் அதன் தரவை அணுக அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டவாரியான முன்னேற்றத்தை பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும். முடிவுகள் இறுதியாவதற்கு முன், தன்னாட்சி ஆய்வுகள் மூலம் தரவின் துல்லியம் சரிபார்க்கப்பட வேண்டும். தரவு தவறாகப் பயன்படுத்தப்படவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பகிரப்படவோ கூடாது. சாதி ரீதியான தரவு பத்தாண்டிற்கும்  மேலாக மறைக்கப்பட்ட 2011 -ஆம் ஆண்டின் நிகழ்ந்த சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) மீண்டும் நடக்கக்கூடாது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு எதைக் கணக்கெடுக்கிறதோ, அது வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நடைமுறைகளைச் சார்ந்துள்ளது என்கின்றனர்.


2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் (Census 2027) அனைத்து எதிர்கால முடிவுகளுக்கும் வளங்கள், பிரதிநிதித்துவம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுக்குமான அடிப்படை ஆகும். ஆறுவருட தாமதம் ஏற்கெனவே சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. மேலும் தாமதங்களையோ அல்லது முழுமையற்ற நடவடிக்கைகளையோ நாம் சகித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 விரிவானதாக (சாதி உள்ளடக்கப்பட்டதாக), துல்லியமானதாக (மக்கள் வாழும் இடத்திலேயே எண்ணப்படுவதாக), வெளிப்படையானதாக (மாநிலங்களுக்கு தரவு அணுகல் வழங்குவதாக), பாதுகாக்கப்பட்டதாக (எண்ணிக்கை கணக்கெடுப்பு கண்காணிப்பாக மாறாமல் இருப்பதாக) இருக்க வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதை நிறுத்தும் குடியரசு, இறுதியில் அக்கறை செலுத்துவதையும் நிறுத்திவிடும். நியாயத்துடனும் தொலைநோக்குடனும் நாம் எண்ணும்போது, நீதியுடன் ஆட்சி செய்கிறோம். 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது நாம் எத்தனை பேர் என்பது மட்டுமல்ல. ஜனநாயகமாக நாம் யாராக இருக்கத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதாகும்.


குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் "ஒரு ஆவணப்படுத்தப்படாத அதிசயம்: மாபெரும் இந்தியத் தேர்தல் உருவான விதம்" (An Undocumented Wonder: The Making of the Great Indian Election) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.


original link:

Census is about who we are. It cannot ignore caste and migration.


Share: