மோசடி பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது: திட்டம் குறித்து இதுவரை தெரிய வந்தவை. -சித்தார்த் உபாசனி

 சைபர் பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? எந்தளவு பாதிக்கப்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்? பணம் எங்கிருந்து வரும்? இதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த வாரம், புதிய திட்டங்களின் அடிப்படையில் குடிமக்களை மையமாகக் கொண்ட புதுமையான முயற்சிகளில் ஒன்றான ஒரு விரிவான விளக்கத்தை அறிவித்தது. இதில் பிப்ரவரி 6 அன்று பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டத்திற்குப் பிறகு தனது உரையில், சிறிய மதிப்புள்ள மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு மக்கள் எவ்வாறு இழப்பீடு பெறுவார்கள் என்பதை நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.


புதன்கிழமை நடந்த நாடாளுமன்ற கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தரவுத்தளத்தில் (National Cyber Crime Reporting Portal) நிதி மோசடி புகார்களின் எண்ணிக்கை 2025-ல் 25% அதிகரித்து 24.03 லட்சம் புகார்களை எட்டியது.


இதுவரை தெரிய வந்தவை


அனைத்து புகார்களும் இந்திய ரிசர்வ் வங்கியின் இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்படக்கூடாது. இதன் அமைப்பின் அடிப்படையில், இன்னும் வெளியிடப்படாத இந்த கட்டமைப்பைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவை பின்வருமாறு.


ஒன்று : மொத்த இழப்பீடு ரூ.25,000 அல்லது மோசடி மதிப்பில் 85%, எது குறைவாக இருக்கிறதோ அதுவாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்டவர் இன்னும் குறைந்தது 15% இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.


இரண்டு : மோசடி செய்யப்பட்ட தொகையில் 70%-ஐ இந்திய ரிசர்வ் வங்கியே தடுத்து நிறுத்தும், மீதமுள்ள 15% ஐ வங்கிகள் வழங்கும்.


மூன்று : மோசடி செய்பவர்களுடன் தங்கள் ஒரு முறை கடவுச்சொல்லை (One-Time Password (OTP)) பகிர்ந்து கொண்டு பணத்தை இழந்தவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். இது தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாகும். தற்போது, ​​ஒருவர் தவறுதலாக OTP-ஐப் பகிர்ந்து கொண்டால் பணத்தை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. OTP என்பது பொதுவாக ஆறு இலக்க எண்ணாகும். இது ஒரு பரிவர்த்தனையை அங்கீகரிக்கப் பயன்படுகிறது. இதன் காரணமாக, வங்கி அதிகாரி என்று கூறினாலும், OTP-கள் அல்லது பிற முக்கியமான வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து  எச்சரிக்கின்றன.


நான்கு : இந்தத் திட்டத்தில் "கேள்விகள் கேட்கப்படாது" மற்றும் ஒரு முறை மட்டுமே செய்யப்படும் நடவடிக்கையாக இருக்கும். இதன் பொருள் பல முறை பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து இழப்பீடு கிடைக்காது.


"ஒரு முறை தவறு செய்த பிறகு, வாடிக்கையாளர் விழிப்புடன் இருந்து தனது தவறை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒரு தவறை ஒரு முறை மன்னிக்க முடியும். இதனால், அந்தத் தவறிலிருந்து ஏற்படும் இழப்பை திருப்பிச் செலுத்த முடியும். அதனால்தான் நாங்கள் ஒரு முறை வரம்பை நிர்ணயித்துள்ளோம். அது வாழ்நாள் முழுவதும், ஆண்டுதோறும் அல்ல. மக்கள் மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், குறைந்தபட்சம் (அவர்கள்) தங்கள் சொந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வார்கள்," என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிப்ரவரி 6 அன்று விளக்கினார்.



தர்க்கம் மற்றும் எண்ணிக்கைகள்


முதலில் பார்க்கும்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழியப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் ஒரு மகத்தான பயிற்சியாகும். மத்திய வங்கியின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024-25-ஆம் ஆண்டில் வங்கித் துறையில் 13,516 அட்டை மற்றும் இணைய மோசடி (card and internet frauds) வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் சுமார் ₹520 கோடி இழப்புகள் ஏற்பட்டன. இது 2023-24-ஆம் ஆண்டில் இருந்து கடுமையான சரிவைக் குறிக்கிறது. இதில் ரூ.1,457 கோடி மதிப்புள்ள 29,082 வழக்குகள் காணப்பட்டன. இருப்பினும், இந்த தரவு ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளை உள்ளடக்கிய மோசடிகள்  மட்டுமே அடங்கும். சிறிய மதிப்புள்ள மோசடிகள் மிகவும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், இந்த இழப்பீட்டுக் கட்டமைப்பு பெரிய மோசடிகளுக்கானது அல்ல.


இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜே கருத்துப்படி, சிறிய மதிப்புள்ள மோசடிகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக இருந்தாலும், அவை ரூபாய் அடிப்படையில் மொத்தத் தொகையில் 15%-க்கும் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக, இழப்பீடு ₹25,000-ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். மோசடி வழக்குகளில் 65% ₹50,000-க்கும் குறைவான தொகைகளைக் கொண்டுள்ளது என்றும் ஆளுநர் மல்ஹோத்ரா கூறினார்.


2024-25-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அட்டை மற்றும் இணைய மோசடிகள் (card and internet frauds) குறைந்திருக்கலாம் என்றாலும், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface (UPI)) மூலம் செய்யப்படும் சிறிய மதிப்புள்ள மோசடிகள் அதிகரித்து வருகின்றன.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மோசடிகள் ஒரு குறியீடுகள்


2024-25-ஆம் ஆண்டில், ரூ.981 கோடி மதிப்புள்ள 12.64 லட்சம் UPI மோசடி சம்பவங்கள் நடந்தன. இது 2023-24-ஆம் ஆண்டில் ரூ.1,087 கோடி மதிப்புள்ள 13.42 லட்சம் வழக்குகளிலிருந்து குறைந்திருந்தாலும், 2025-26 மோசமான ஆண்டாக மாறக்கூடும் என்று கூறுகின்றன.

டிசம்பர் 2025-ல் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2025-26-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரூ.805 கோடி மதிப்புள்ள 10.64 லட்சம் UPI மோசடிகள் நடந்துள்ளன. இந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் அதே விகிதத்தில் மோசடிகள் நடந்ததாகக் கருதினால், 2025-26-ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16 லட்சமாக உயர்ந்து ரூ.1,200 கோடியைத் தாண்டக்கூடும். இந்த புள்ளிவிவரங்கள் UPI தொடர்பான மோசடிகளை மட்டுமே உள்ளடக்கியது.


வங்கிகள் (banks) மற்றும் வங்கி அல்லாத கடன் அட்டைகள் (non-bank issuers of credit cards) மற்றும் முன்பணம் செலுத்தும் கருவிகளை (pre-paid instruments) வழங்குபவர்களால் புகாரளிக்கப்பட்ட அனைத்து பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளையும் ஒருவர் கணக்கிட்டால், 2023-24 ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை 42% அதிகரித்து 28.22 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த தொகை 74% அதிகரித்து ரூ.4,403 கோடியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான தரவுகளின்படி, 2023-24 இல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருக்கலாம் என்று நிதி அமைச்சகம் மார்ச் 2025-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2022-23 இல் ரூ.12,723, 2023-24 இல் ரூ.15,602, மற்றும் 2024-25 இல் ரூ.17,769 என்ற அளவில் இந்த பணப்பரிமாற்ற மோசடிகளின் சராசரி அளவு அதிகரித்து வருகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ.25,000 வரம்பை மிகவும் நியாயமானதாக ஆக்குகிறது.


எவ்வளவு குறைவான பணம் மீட்கப்படுகிறது என்பதன் காரணமாக ஒரு முறை இழப்பீட்டுத் திட்டமும் முக்கியமானது. UPI மோசடி மீட்புகள் பற்றிய தரவு கிடைக்கவில்லை என்றாலும், ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட அட்டை மற்றும் இணைய வங்கி வழக்குகளுக்கு சில யோசனைகளைத் தருகிறது. 2023-24-ஆம் ஆண்டில், ரூ.1,457 கோடி மதிப்புள்ள 29,082 வழக்குகளில், ரூ.139 கோடி மட்டுமே மீட்கப்பட்டது.


இந்திய ரிசர்வ் வங்கி திட்டத்தில் பதிலளிக்கப்படாத கேள்விகள்


இந்திய ரிசர்வ் வங்கியின் மோசடி இழப்பீட்டு கட்டமைப்பில் இதுவரை மிகக் குறைந்த விவரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏராளமான கேள்விகள் உள்ளன. அவற்றில் இரண்டு முக்கியமானவை. இந்தத் திட்டம் கடந்தகால மோசடிகளுக்குப் பொருந்துமா அல்லது விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு நடக்கும் மோசடிகளுக்கு மட்டும் பொருந்துமா என்பது ஒரு கேள்வி. மற்றொரு கேள்வி நிதியின் ஆதாரம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய வங்கி எங்கிருந்து பணம் பெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


இந்திய ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை, சில ஆயிரம் கோடிகள் அதன் மிகப்பெரிய நிதி ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய தொகையாகும். 2024-25 ஆம் ஆண்டில், மத்திய வங்கியின் மொத்த வருமானம் ரூ.3.38 லட்சம் கோடியாக இருந்தது மற்றும் ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு மாற்றியது. ஆனால், அதன் வருவாயிலிருந்து அனைத்து மோசடி கோரிக்கைகளையும் திருப்பித் தர முடியும் என்று அர்த்தமல்ல. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதன் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இன்னும் தெளிவான உறுதிப்படுத்தல் இல்லை. இது மற்றும் பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் காத்திருக்கின்றன.


Original article : RBI plans to compensate victims of fraud transactions: What we know of the scheme so far. -Siddharth Upasani

Share:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘அடுத்த ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI)’ என்று குறிப்பிட்ட AgriStack என்பது என்ன? -ஹரிகிஷன் சர்மா

 அரசாங்கம் நேரடி பண பரிமாற்றம் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல் உட்பட அதன் அனைத்து முக்கிய விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் AgriStack பதிவேடுகளை படிப்படியாக ஒருங்கிணைக்க இலக்கு வைத்துள்ளது.


பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், AgriStack தரவுத்தளங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research (ICAR)) தொகுப்பு ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுடன் வேளாண் நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியான Bharat-VISTAAR (Virtually Integrated System to Access Agricultural Resources) தொடங்கப்படுவதாக அறிவித்தார்.


டிஜிட்டல் அக்ரிஸ்டாக்கை "அடுத்த ஒருங்கிணைந்த கட்டண இடைமுக" முயற்சிகளில் ஒன்று" என்று விவரித்த அதே வேளையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேர்காணலில் இந்த கருவியின் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


வேளாண் துறையில் தரவை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான மையத்தின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI))  திட்டத்தின் ஒரு பகுதியாக AgriStack 2024-ல் தொடங்கப்பட்டது.


இது பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்தும், உழவர்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்கும் மற்றும் தனித்துவமான ஆலோசனை வழங்குவதன் மூலம் ஆபத்தை குறைக்கும்.



AgriStack என்றால் என்ன?


AgriStack என்பது பண்ணைத் துறைக்கான ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) ஆகும். இது டிஜிட்டல் வேளாண்மைத் திட்டத்தின் (Digital Agriculture Mission (DAM)) கீழ் ஒரு முன்முயற்சியாகும். மேலும், இது செப்டம்பர், 2024-ல்  ஒன்றிய  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.


AgriStack வேளாண்துறையில் மூன்று அடிப்படை பதிவேடுகள் அல்லது தரவுத்தளங்களைக் கொண்டுள்ளது: உழவர்களுக்கான பதிவேடு, புவி-குறிப்பிடப்பட்ட ஊரக  வரைபடங்கள் மற்றும் பயிர் விதைப்பு பதிவேடு, இவை அனைத்தும் மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.


ஒவ்வொரு உழவருக்கும் அவர்களின் நில உடைமை மற்றும் ஒரு பகுதியில் வளர்க்கப்படும் பயிர்களின் விவரங்களுடன் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் (ஆதார் அட்டை போன்ற ஒன்று) வழங்கப்படுகிறது.


AgriStack கட்டமைக்கப்பட்ட மூன்று அடிப்படை பதிவேடுகள் எவை?


AgriStack கட்டமைக்கப்பட்ட அடிப்படை பதிவேடுகள் பின்வருமாறு:


1. உழவர்களுக்கான பதிவேடு


AgriStack-ன் கீழ், உழவர்களுக்கு ஆதாரைப் போன்ற ஒரு டிஜிட்டல் அடையாளம் (வேளாண் அட்டை) வழங்கப்படுகிறது. அவை மாநிலத்தின் நிலப் பதிவுகள், கால்நடை உரிமை, விதைக்கப்பட்ட பயிர்கள், மக்கள்தொகை விவரங்கள், குடும்ப விவரங்கள், திட்டங்கள் மற்றும் பெறப்பட்ட சலுகைகள் ஆகியவற்றுடன் மாறும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன.


11 கோடி உழவர்களுக்கு  டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவற்றில் இதுவரை 8.62 கோடி உருவாக்கப்பட்டுள்ளன.


2024-25-ஆம் ஆண்டுக்கான மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், மாநிலங்களுக்கு அந்தந்த பதிவேடுகளை உருவாக்க ஒன்றிய அரசு நிதி உதவியை ஒதுக்கியுள்ளது. உழவர் அடையாள அட்டை உருவாக்கத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை அடங்கும்.


உழவர்கள் பதிவேட்டை உருவாக்குவதன் மூலம், ஒரு உழவர் சலுகைகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் முறையில் அணுக முடியும். இது சிக்கலான ஆவணங்களைத் தவிர்க்கிறது மற்றும் அலுவலகங்கள் அல்லது சேவை வழங்குநர்களை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை அல்லது தேவையில்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.


உழவர்கள் பதிவேட்டை மார்ச் 2027-க்குள் மாறும் உரிமைகள் பதிவுகளுடன் (Records of Rights (RoR)) ஒன்றிணைத்து முடிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், இலக்கு மார்ச் 2028-ஆக நிர்ணயிக்கப்பட்டது.


2. பயிர் விதைப்பு பதிவேடு (Crop Sown Registry)


உழவர்களால் பயிரிடப்பட்ட பயிர்கள் பற்றிய விவரங்கள் பயிர் விதைப்பு பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும். இது ஒவ்வொரு பருவத்திலும் மொபைல் (obile-based Digital Crop Surveys) அடிப்படையிலான டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. 2023-24-ஆம் ஆண்டில் பயிர் விதைப்பு பதிவேட்டை உருவாக்க 11 மாநிலங்களில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு குறித்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


2026 காரீஃப் பருவத்திற்குள் நாட்டின் 604 மாவட்டங்களில் உள்ள 30 கோடி பண்ணை நிலங்களையும் உள்ளடக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. சத்தீஸ்கர், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மிசோரம், திரிபுரா, சிக்கிம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய 15 மாநிலங்களில் இலக்கு வைக்கப்பட்ட கிராமங்களில் 70%-க்கும் மேற்பட்ட நிலங்கள் ஏற்கனவே பயிர் விதைப்பு பதிவேடு முயற்சியின்கீழ் இடம் பெற்றுள்ளன.


3. புவி-குறிப்பு கிராம வரைபடத் தரவு (Geo-referenced Village Maps data)


புவி-குறிப்பு கிராம வரைபடப் பதிவேட்டில் அவற்றின் இருப்பிடங்களுடன் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) இணைக்கப்பட்ட நிலப் பதிவுகளின் புவியியல் தகவல்கள் உள்ளன. இதுவரை, மொத்தமுள்ள 6.75 லட்சம் ஊரகப் பகுதிகளில் 5.4 லட்சம் கிராம வரைபடங்கள் புவிசார் குறிப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 2027-க்குள் அனைத்து ஊரகப் பகுதிகளையும் இடம் பெற செய்வதே இதன் இலக்காக உள்ளது.


AgriStack-ஆல் இயக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் உழவர்களுக்கு எவ்வாறு உதவும்?


நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)), குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல், உர விநியோகம், கடன்கள், காப்பீடு, சேமிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவசாயத் திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் AgriStack பதிவேடுகளை படிப்படியாக ஒருங்கிணைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.


சில மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டன. உதாரணமாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் விவசாயி பதிவேடு/DCS-இணைக்கப்பட்ட தளங்கள் விரைவான ஒப்புதல்களை எவ்வாறு செயல்படுத்தியுள்ளன, குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல்/உர விநியோகத்திற்கான குறைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் கசிவு-தடுப்பு நேரடி பண பரிமாற்றம் ஆகியவற்றை எவ்வாறு செயல்படுத்தியுள்ளன என்பதை நிரூபித்துள்ளன.


இதேபோல், அரசாங்கம் இப்போது PM KISAN திட்டத்தின்கீழ் புதிய உழவர்களைப் பதிவு செய்ய உழவர் அட்டையைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சில மாநிலங்கள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)) உழவர்களைச் சேர்க்க இதைப் பயன்படுத்துகின்றன. மத்தியப் பிரதேசத்தில், AgriStack-இயக்கப்பட்ட உர விநியோக மாதிரி செயற்கை பற்றாக்குறை, சமத்துவமின்மை அணுகல் மற்றும் திசைதிருப்பும் முயற்சியைச் சமாளிக்கிறது. மகாராஷ்டிராவில், உழவர்களுக்கான கடன் அட்டை  (Kisan Credit Card (KCC)) கடன்களை வழங்குவதற்காக AgriStack சோதனை முறையில் தொடங்கப்பட்டது.


Original article : What is AgriStack, which FM Nirmala Sitharaman has termed as the ‘next UPI’?

-Harikishan Sharma


Share:

வனப்பகுதிகளுக்கு சிறந்த கண்காணிப்பு ஏன் தேவைப்படுகிறது? -அபினவ் ராய்

 புவி வெப்பமடைதல், வெப்ப அலைகள், காற்று மற்றும் நீர் மாசுபாடு, வெள்ளம், மண் அரிப்பு மற்றும் பாலைவனமாக்கல் போன்ற பல சுற்றுச்சூழல் சவால்களைத் குறைக்க வனப்பகுதி மற்றும் இயற்கை தாவரங்கள் உதவுகின்றன. இருந்த போதிலும், வனபகுதிகள் எவ்வாறு வரையறுக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன? இந்தியாவில் வன நிர்வாகம் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை எவ்வாறு வடிவமைக்கிறது?


வனப்பகுதிகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகின்றன. நீர் ஆதாரங்களை நிலைநிறுத்துகின்றன. நுண்தட்பவெப்பநிலைகளை (Microclimate)) ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் கார்பன் பிரித்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மலைகளில், மரங்கள் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகளுக்கு எதிராக இயற்கையான தடைகளாக செயல்படுகின்றன. ஏனெனில், அவற்றின் வேர்கள் மண்ணிற்கு அடியில் ஒன்றாக இணைந்துள்ளன. அவற்றின் பல சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைத் தவிர, மரம் அல்லாத வனப் பொருட்கள் (Non-Timber Forest Products (NTFPs)) மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக அமைகின்றன.


இத்தகைய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதிலும், வன வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் வன நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த மாதம்,  ஒன்றிய  சுற்றுச்சூழல் அமைச்சகம் வான் (Sanrakshan Evam Samvardhan) ஆதினியம், 2023-ன் கீழ் வழிகாட்டுதல்களை தளர்த்தி, எளிமைப்படுத்தியது. இது அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வணிகத் தோட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு போன்ற வனவியல் நடவடிக்கைகளுக்கு வன நிலத்தை குத்தகைக்கு எடுக்க அனுமதிக்கிறது.


வனபகுதிகள் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால், இது இந்தியாவின் வன மேலாண்மை முயற்சிகளில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) உலகளாவிய வன வள மதிப்பீட்டு (Global Forest Resources Assessment (GFRA)) அறிக்கை 2025-ன் படி, இந்தியா மொத்த வனப் பரப்பளவில் (72,739 ஆயிரம் ஹெக்டேர்) உலகளவில் 9-வது இடத்திலும், நிகர வருடாந்திர வனப் பரப்பளவு அதிகரிப்பில் 3-வது இடத்திலும் உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகளாவிய வன வள மதிப்பீட்டு அறிக்கை, மொத்த உலகளாவிய நிலப்பரப்பில் 32 சதவீதம் (தோராயமாக 4.14 பில்லியன் ஹெக்டேர்) வனபகுதிகளால் சூழப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. முதல் ஐந்து நாடுகள் ரஷ்ய கூட்டமைப்பு, பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் உலக வனப்பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்டவற்றை (54 சதவீதம்) கொண்டுள்ளன.


இந்தியாவில் வனப்பகுதிகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் வகைகள், பரவல் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வோம்.


இந்திய வன ஆய்வு (FSI) 'வனப்பரப்பு' என்பது ஒரு ஹெக்டேர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட அனைத்து நிலங்களையும், 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மரக் கவிகை (tree canopy) அடர்த்தியைக் கொண்ட நிலங்களையும், உரிமை அல்லது சட்டப்பூர்வ நிலையைப் பொருட்படுத்தாமல் வரையறுக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்திய வன நிலை அறிக்கையை (India State of Forests Report (ISFR)) வெளியிடும் இந்திய வன ஆய்வு அறிக்கை, முக்கியமாக ResourceSat-2, லீனியர் இமேஜிங் சுய-ஸ்கேனிங் சென்சார்-III) செயற்கைக்கோள் தரவை வரைபடத்திற்காகப் பயன்படுத்துகிறது. இந்த செயற்கைக்கோள் 23.5 மீட்டர் இடம்சார்ந்த தெளிவுத்திறனை வழங்குகிறது. இருந்தபோதிலும் மிகச் சிறந்த விவரங்களை இதனால் கண்டறிய முடியாது.


எனவே, இது ஒற்றைப் பயிர் சாகுபடி, தோட்டங்கள், பழத்தோட்டங்கள், மூங்கில், பனை போன்றவற்றை வனப்பகுதிகளாக கருதுகிறது. அவை இயற்கையான வனப்பகுதிகளைப் போன்ற சுற்றுச்சூழல் மதிப்பைக் கொண்டிருக்காமல் இருக்கலாம். இருப்பினும், இயற்கையான வனப்பகுதிகள் மற்றும் தோட்டங்களைத் தனித்தனியாகக் கருதும் கட்டமைப்புகள் உள்ளன. அவை:


1. பிரேசிலின் வன-கார்பன் கணக்கியல்.


2. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் அகற்றுதல் சான்றிதழ் கட்டமைப்பு.


3. காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் நிலப் 

   பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் (Good Practice  

   Guidance for Land Use, Land-Use Change and Forestry (GPG-LULUCF)) 

  ஆகியவற்றிற்கான சிறந்த  நடைமுறை வழிகாட்டுதல்  போன்றவை  இதில் 

  அடங்கும்.


எனவே, ஒரு வனப்பகுதியை பாதுகாக்க, மீட்டெடுக்க மற்றும் பாதுகாக்க பயனுள்ள தலையீடுகளுக்கு மிகவும் நுணுக்கமான வரையறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வழிமுறை உதவும்.


இந்தியாவில் வனப்பகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?


இந்தியாவின் தாவர பன்முகத்தன்மை அதன் தனித்துவமான புவியியல் இருப்பிடத்திலிருந்து வருகிறது. இது மாறுபட்ட காலநிலை நிலைகளை வழங்குகிறது. தாவரங்களை பாதிக்கும் முதன்மையான காரணிகளில் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் அதன் பருவகால பரவல் மற்றும் நிலப்பரப்பின் உயரம் ஆகியவை அடங்கும்.


கடக ரேகை நாட்டை இரண்டு பரந்த காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கிறது: அவை தெற்கில் வெப்பமண்டல காலநிலை மற்றும் வடக்கில் துணை வெப்பமண்டல காலநிலை ஆகும். காலநிலை நிலைமைகள் மற்றும் பிரதான தாவர வகையின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள் வெப்பமண்டல பசுமையான மற்றும் அரை-பசுமைமாறா, வெப்பமண்டல இலையுதிர் காடுகள், வெப்பமண்டல முள் காடுகள், கடற்கரை மற்றும் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மலைக்காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. மலைக்காடுகள் உயர் இமயமலைத் தொடர்கள் மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் உயர்ந்த மலைகள் போன்ற அதிக உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.


1000 மீட்டர் உயரம் வரை, வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகள் இரண்டும் கோடை வெப்பம் (35°C-45°C) மற்றும் மிதமான வெப்பம் (10°C-15°C) மற்றும் குளிர் (5°C-10°C) ஆகிய ஒரே மாதிரியான காலநிலையை அனுபவிக்கின்றன. இதனால், இந்த காலநிலைகளின் வனப்பகுதிகள் அதிக 'ஒற்றுமைகளையும்' குறைவான 'வேறுபாடுகளையும்' வெளிப்படுத்துகின்றன.


உயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலை குறைகிறது. இது அதிக உயரம் கொண்ட இமயமலைத் தொடர்களில் மேல்நோக்கிச் செல்லும்போது வெப்பமண்டலத்திலிருந்து டன்ட்ரா வகைக்கு (tundra type) தாவரங்களில் தொடர்புடைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அடிவாரத்தில் உள்ள இலையுதிர் காடுகள் ஈரமான-மிதமான (1000-2000 மீட்டர்), குளிர் மிதமான (2000-3000 மீட்டர்), துணை-ஆல்பைன் (3000-4000 மீட்டர்) மற்றும் ஆல்பைன் தாவரங்கள் (4000-5000 மீட்டர்) ஆகியவற்றால் மாற்றப்படுகின்றன.


இடையில், மிதமான புல்வெளிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. அவை மேய்ச்சல் நிலங்களும், குஜ்ஜார்கள், பக்கர்வால்கள், போட்டியாக்கள், காடிஸ் மற்றும் பிற பழங்குடியினரால், பிராந்தியங்களுக்கு இடையே மக்கள் தங்கள் கால்நடைகளுடன் பருவகால இயக்கம் - மனிதகுலத்தை விட்டு இடம் பெயரும் நடைமுறையை ஆதரிக்கின்றன.


மேலும், இமயமலையின் தெற்கு நோக்கிய சரிவுகள், நிலப்பரப்பில் மழை பொழிவதற்கு முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. வறண்ட வடக்கு சரிவுகளைவிட அடர்த்தியான தாவரங்களைக் கொண்டுள்ளன. அடர்த்தியின் அடிப்படையில், வனப்பகுதி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:


1.மிகவும் அடர்ந்த வனம் (VDF, மரச்சிறை அடர்த்தி ≥ 70%)


2.மிதமான அடர்ந்த வனம் (MDF, 40% ≤ மரச்சிறை அடர்த்தி < 70%)


3.திறந்தவெளி வனம்  (OF, 10% ≤ மரச்சிறை அடர்த்தி < 40%)


4.புதர்க்காடு (மரச்சிறை அடர்த்தி < 10%) மற்றும் வனம் அல்லாத பகுதி


வனம் அல்லாத பகுதிகளின் விரிவாக்கம் கவலைக்குரியதா?


இந்தியாவின் இயற்கை தாவரங்களின் மிகப்பெரிய பன்முகத்தன்மை, பல்வேறு வகையான காலநிலை மற்றும் புவியியல் நிலைமைகளை பிரதிபலிக்கிறது. இது இமயமலையின் உயரமான பகுதிகளில் மிதமான தாவரங்கள்; வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பமண்டல இலையுதிர் வனபகுதிகள்; மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வெப்பமண்டல மழைக்காடுகள்; மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தின் டெல்டா பகுதிகளில் சதுப்புநிலங்கள்; ராஜஸ்தானின் அரை வறண்ட பகுதிகளில் வெப்பமண்டல முள் காடுகள், புற்கள் மற்றும் புதர்கள் போன்றவற்றை கொண்டுள்ளது.


இந்திய வன நிலை அறிக்கை (India State of Forests Report (ISFR)) 2023-ன் படி, இந்தியாவின் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதம் வனபகுதியைக் கொண்டுள்ளது. இது 2021 மதிப்பீடுகளை விட 156.41 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுகிறது. மரங்களின் பரப்பளவு 1,12,014 சதுர கிமீ (3.41 சதவீதம்) ஆக உள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட வனபகுதிகளுக்குள் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள், வகைப்படுத்தப்படாத அல்லது ஊரக பகுதிகளில் காடுகள், அத்துடன் பதிவு செய்யப்பட்ட வனபகுதிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் ஆகியவை அடங்கும்.


பரப்பளவு வாரியாக, மத்தியப் பிரதேசம் (77,073 சதுர கி.மீ), அருணாச்சலப் பிரதேசம் (65,882 சதுர கி.மீ) மற்றும் சத்தீஸ்கர் (55,812 சதுர கி.மீ)  போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய வனப்பகுதியைக் கொண்டுள்ளன. சதவீத அடிப்படையில், லட்சத்தீவுகள் அதிக வனப்பகுதியைக் கொண்டுள்ளன (91.33 சதவீதம்), அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்), மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (81.62 சதவீதம்) வனப்பகுதியைக் கொண்டுள்ளன.

ஆனால், மிக நெருக்கமாகப் படித்தால், பதிவு செய்யப்பட்ட காடுகளுக்கு வெளியே மிகவும் அடர்ந்த காடு  (-63.88 சதுர கி.மீ.), மிதமான அடர்ந்த காடு (-416.47 சதுர கி.மீ.), மற்றும் புதர் பகுதிகள் (-1,912.46 சதுர கி.மீ.) குறைந்துள்ளன என்பது தெரிகிறது. பதிவு செய்யப்பட்ட காடுகளுக்குள் கூட, மிகவும் அடர்ந்த காடுகளில் (+2,431.50 சதுர கி.மீ.) அதிகரிப்பு தவிர, மற்ற அனைத்து காட்டு வகைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பதிவு செய்யப்பட்ட காடுகளுக்குள் (+1,197.48 சதுர கி.மீ.) மற்றும் பதிவு செய்யப்பட்ட காடுகளுக்கு வெளியே (+1,763.33 சதுர கி.மீ.) இரண்டிலும் காடு அல்லாத பகுதிகளின் விரிவாக்கம் மிகப் பெரிய கவலையளிக்கும் காரணியாக உள்ளது.


நிலையான வளர்ச்சியை நோக்கி


சுருக்கமாக, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு அதன் வளர்ச்சி இலக்குகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சமநிலைப்படுத்த வேண்டும். வனப்பகுதி மற்றும் இயற்கை தாவரங்கள் புவி வெப்பமடைதல், வெப்ப அலைகள், காற்று மற்றும் நீர் மாசுபாடு, வெள்ளம், மண் அரிப்பு மற்றும் பாலைவனமாக்கல் போன்ற சுற்றுச்சூழல் சவால்களை குறைக்க உதவுகின்றன. எனவே, வன வளங்களை திறம்பட கண்காணித்தல், பாதுகாத்தல், மீட்டமைத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு மிகவும் நுணுக்கமான வரையறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வழிமுறை தேவை என்று வாதிடலாம்.


Original article : Why forests demand more effective monitoring?. -Abhinav Rai


Share:

உள்துறை அமைச்சகம் வந்தே மாதரம் பாடலுக்கான முதல் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. -குஷ்பூ குமாரி

 மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களும் தேசிய கீதத்திற்கு முன்பாக பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த வழிகாட்டுதல்களை ஜனவரி மாதம் 28-ஆம் தேதி உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs (MHA)) அறிவித்தது. தேசியப் பாடல்களுக்கான இத்தகைய நெறிமுறைகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவதற்கு ஏறக்குறைய 3 நிமிடம் 10 வினாடிகள் ஆகும்.


முக்கிய அம்சங்கள்:


1. பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்', சுதேசி இயக்கத்தின் (1905–08) போது ஒரு எழுச்சிக் குரலாக மாறியதுடன், இந்திய சுதந்திரப் போராட்டத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை இதற்கு தேசிய கீதத்திற்கு இணையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியது. இருப்பினும், இதனைப் பாடும்போதோ அல்லது வாசிக்கும்போதோ பின்பற்ற வேண்டிய உடல் அசைவுகள், ஒழுக்கமுறைகள் அல்லது சட்டப்பூர்வமான கட்டாய விதிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.


2. தேசியப் பாடலைப் பாடுவதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) முதல் வழிகாட்டுதல்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறைத் தலைவர்களுக்கும், தலைமைச் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டன. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் நீடிக்கக்கூடிய ஆறு பத்திகள் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ, அங்கிருப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


3. செய்திப்படங்கள் அல்லது ஆவணப்படங்களின் போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டால், பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அந்தச் சூழலில் எழுந்து நிற்பது படத்தின் ஓட்டத்தைத் தடை செய்வதுடன், தேவையற்ற குழப்பத்தையும் ஒழுங்கீனத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இது பாடலுக்குப் பெருமை சேர்ப்பதற்குப் பதிலாக இடையூறாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


4. அதிகாரப்பூர்வமாக தேசியப் பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:


(i) அரசு கௌரவங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில்.


(ii) முறையான அரசு விழாக்களிலும், அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இதர நிகழ்வுகளிலும் குடியரசுத் தலைவர் வருகை தரும்போதும் அல்லது அங்கிருந்து புறப்படும்போதும்.


(iii)  அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும்.


(iv) அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் முறையான அரசு விழாக்களுக்கு ஆளுநர்கள் அல்லது துணை நிலை ஆளுநர்கள் வரும்போதும், அங்கிருந்து புறப்படும்போதும்.


(v) தேசியக் கொடி அணிவகுப்பிற்கு கொண்டு வரப்படும் போது.


இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மற்ற சிறப்பு நிகழ்வுகளிலும் தேசியப் பாடல் இசைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


5. தேசியக் கொடி ஏற்றப்படும் போதும், அணிவகுப்புகள் அல்லாத பிற கலாச்சார அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் போதும், மற்றும் அரசு அல்லது பொது விழாக்களுக்குக் குடியரசுத் தலைவர் வருகை தரும் போதும், தேசியப் பாடல் இசைக்கப்பட்டு அனைவராலும் பாடப்பட வேண்டும். இத்தகைய தருணங்களில், இசைக் கருவிகளுடனோ அல்லது அவை இல்லாமலோ, குழுவாக இணைந்து தேசியப் பாடலைப் பாடுவது ஊக்குவிக்கப்படுகிறது.


6. அனைத்துப் பள்ளிகளிலும், அன்றைய நாள் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்கள் அனைவரும் இணைந்து பாடும் தேசியப் பாடலுடன் தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் தங்களுடைய பாடத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடுவதை ஊக்கப்படுத்தவும், மாணவர்களிடையே தேசியக் கொடிக்கு மதிப்பளிக்கும் பண்பை வளர்க்கவும் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


7. தாய்நாட்டிற்குச் செலுத்தும் வணக்கமாகவும், உரிய மரியாதையுடனும், முறையான ஒழுக்கத்துடனும் பாடும் வரை, தேசியப் பாடலை அனைவரும் இணைந்து கூட்டாகப் பாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


8. சமீப காலங்களில், 'வந்தே மாதரம்' பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகள் குறித்தும், தேசியச் சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் இதற்குத் தண்டனைகள் விதிக்க முடியுமா என்பது குறித்தும் பல நீதிமன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


9. தேசியப் பாடலைப் போலல்லாமல், தேசிய கீதமானது (National Anthem) தெளிவான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51A(a)-ன்படி, தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். மேலும், தேசிய கீதத்தைப் பாடுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான விரிவான நடைமுறைகள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுகளின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.


10. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதனை எவ்வாறு பாட வேண்டும் மற்றும் இசைக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிமுறைகளை இந்த ஆணைகள் வழங்குகின்றன. உதாரணமாக, அரசு விழாக்களில் தேசிய கீதத்தின் முழு வடிவம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். மேலும், தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அதனை மாற்றி அமைப்பதற்கோ அல்லது நாடகத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கோ அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


11. சட்டத்தின்படி, யாராவது வேண்டுமென்றே தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தாலோ அல்லது தேசிய கீதம் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தாலோ, அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


150-வது ஆண்டில் வந்தே மாதரம்


1. "வந்தே மாதரம்" பாடல் உருவானதன் 150-வது ஆண்டை முன்னிட்டு, 2025 டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் 10 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த ஆண்டு அந்தப் பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிப்பதால், மத்திய அரசு ஓராண்டு கால கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்டம் இந்த பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம்  2026-ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக நவம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2. சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடல், 1875-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1881-ஆம் ஆண்டு 'பங்கதர்ஷன்' (Bangadarshan) இதழில் தொடராக வெளிவந்த சட்டோபாத்யாயவின் 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலில் இது சேர்க்கப்பட்டது. 1896-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ரவீந்திரநாத் தாகூர் இந்தப் பாடலுக்கு இசையமைத்து முதன்முதலில் பாடியதாகக் கூறப்படுகிறது. 


3. "தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்" என்று பொருள்படும் "வந்தே மாதரம்" பாடல், 1905-ஆம் ஆண்டு கர்சன் பிரபு மேற்கொண்ட வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தின் போதுதான் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இது வங்காளத்தைத் தாண்டி நாடு முழுவதும் பரவியது. மேலும், இந்தப் பாடல் சமஸ்கிருத மொழியில் இருந்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்களும் இதனை எளிதில் புரிந்துகொண்டு தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.


4. 1882-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'ஆனந்தமடம்', முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக சந்நியாசிகள் மேற்கொண்ட கிளர்ச்சியைப் பற்றிய கதையாகும். இந்த நாவலில், மகேந்திரன் என்ற இல்லறவாசி, பவானந்தர் என்ற போர்வீரத் துறவியைச் சந்திக்கும் போது இந்தப் பாடல் இடம்பெறுகிறது. பவானந்தர் இப்பாடலின் முதல் வரிகளைப் பாடுகிறார்.


5. மகேந்திரன் ஆர்வத்துடன் இந்த "தாய்" யார் என்று கேட்கிறான், ஆனால் பவானந்தர் அதற்குப் பதிலளிக்காமல், மேலும் சில வரிகளைப் பாடுகிறார். குழப்பமடைந்த மகேந்திரன், "துறவி பாடுவது ஒரு தாயைப் பற்றி அல்ல, நாட்டைப் பற்றி" என்று கூறுகிறான். அதற்கு பவானந்தர், கண்களில் கண்ணீருடன், "எங்களைப் பெற்றெடுத்த இந்த மண்ணைத் தவிர வேறு எந்தத் தாயையும் நாங்கள் அறியமாட்டோம்" என்று பதிலளிக்கிறார்.


6. இந்தப் பாடல் நாட்டின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தியதால் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. அதே சமயம், இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இப்பாடல் ஒரு இந்து பெண் தெய்வத்தை போற்றுவது போல் அமைந்துள்ளதாகக் கூறி, முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


7. தேசிய கீதத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்து அரசியலமைப்புச் சபை விவாதித்தபோது, 'வந்தே மாதரம்' பாடலுக்குப் பதிலாக தாகூரின் 'ஜன கண மன' தேர்ந்தெடுக்கப்பட்டது. மே மாதம் 21-ஆம் தேதி, 1948-ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு எழுதிய குறிப்பில் நேரு இதனை விளக்கினார். 'வந்தே மாதரம்' இந்தியர்களால் "ஆழமாக மதிக்கப்படும்" ஒரு பாடலாக இருந்தாலும், இசைக்குழுவினர் இசைப்பதற்கு 'ஜன கண மன' பாடல் மிகவும் எளிதாக இருந்ததாக நேரு குறிப்பிட்டுள்ளார்.


Original article : MHA issues first protocol on Vande Mataram -Khushboo Kumari

Share:

சாந்தி சட்டத்திற்கு எதிரான ஒரு வழக்கு -சுவ்ரத் ராஜு

 வழங்குநர்களுக்கு ஏன் இழப்பீடு வழங்கப்படுகிறது? அணுசக்தி பாதிப்புகளுக்கான குடிமையியல் பொறுப்புச் சட்டத்தில் (Civil Liability for Nuclear Damage Act (CLNDA) இந்தச் சட்டம் எதை மாற்றுகிறது? பொறுப்பு வரம்பை நிர்ணயிப்பது தார்மீக அபாயத்தை' உருவாக்குமா? கடந்தகால அணுசக்தி இலக்குகள் ஏன் தவறவிடப்பட்டன?


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட  சாந்தி சட்டம் (அணு ஆற்றல் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம்) (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Act (SHANTI Act)), அணுசக்தித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கும் திறந்து விடுகிறது. மேலும், இது அணுசக்தி பாதிப்புகளுக்கான குடிமையியல் பொறுப்புச் சட்டத்தின்கீழ் (CLNDA) உள்ள இழப்பீட்டு கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. குறிப்பாக, வழங்குநர் பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டு உச்சவரம்பு ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த சிக்கல்களை எழுப்பியுள்ளன.


சாந்தி சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?


இந்தச் சட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.


முதலாவதாக, இது தனியார் நிறுவனங்கள் அணு மின் நிலையங்களை நடத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்தத் துறையில் ஒன்றிய அரசுக்கு இருந்த தனிப்பட்ட அதிகாரம் முடிவுக்கு வருகிறது. இரண்டாவதாக, விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மின் நிலையத்தை நடத்துபவரே ஏற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அணுசக்தி உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பழுதடைந்த உபகரணங்களால் விபத்து ஏற்பட்டால் விநியோககர்கள் மீது வழக்கு தொடர மின் நிலைய நடத்துனர்களுக்கு இருந்த "மீட்பு உரிமை" இப்போது நீக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை சிறிய மின் நிலையங்களுக்கு ₹100 கோடி எனவும், பெரிய மின் நிலையங்களுக்கு ₹3,000 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்கையும் சேர்த்து, ஒரு விபத்துக்கான மொத்த இழப்பீட்டு வரம்பு 300 மில்லியன் (சுமார் ₹3,900 கோடி) சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அணு ஆற்றல் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் (CLNDA) பிரிவு 46-ஐ நீக்கியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பிற சட்டங்களின்கீழ் தீர்வு காண்பதற்கான வழிமுறை தடுக்கப்பட்டுள்ளது.


இறுதியாக, இது அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கான (Atomic Energy Regulatory Board) ஒரு சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது; ஆனால், அதன் உறுப்பினர்கள் அணுசக்தி ஆணையத்தால் (Atomic Energy Commission) அமைக்கப்பட்ட ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறுவதன் மூலம், அந்த வாரியத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.


சட்டம் ஏன் வழங்குநர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது?


அனைத்து பெரிய விபத்துகளிலும் வடிவமைப்பு குறைபாடுகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.


ஃபுகுஷிமா அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட GE (General Electric) நிறுவனத்தின் 'மார்க்-1' (Mark-1) பாதுகாப்பு வடிவமைப்பில் உள்ள பலவீனம், 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரை மேலும் மோசமாக்கியதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். 1986-ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் விபத்திற்கு, அந்த அணு உலையின் "நேர்மறை மின் திறன் குணகம்'" (positive power coefficient) மற்றும் அதன் "குறைபாடுள்ள அவசரகால நிறுத்த அமைப்பு" (deficient emergency shutdown system) ஆகியவையே இரண்டு முக்கிய காரணங்கள் என்று சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனை குழுவின் அறிக்கை தெரிவித்தது. அதேபோல், 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த த்ரீ மைல் தீவு (Three Mile Island) விபத்து குறித்து ஆய்வு செய்த அமெரிக்க அதிபர் ஆணையம், அணு உலையின் கட்டுப்பாட்டு அறை வடிவமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், அந்த உலையை வழங்கிய நிறுவனம், அதில் இருந்த ஆபத்துகள் பற்றி இயக்குநருக்குத் தெரிவிக்காததைக் கடுமையாக விமர்சித்தது. எனவே, சாந்தி (SHANTI) சட்டத்தின்கீழ் அணு உலை விநியோகஸ்தர்களுக்கு (Suppliers) வழங்கப்படும் இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையுமில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.


இருப்பினும், பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள், இந்தியாவில் ஏற்படக்கூடிய இழப்பீடு பொறுப்புகள் குறித்து கடுமையாகப் புகார் அளித்தனர்.


2026-ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (U.S. National Defense Authorization Act), இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி பொறுப்பு விதிகளை சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கோருகிறது; இந்த சர்வதேச நெறிமுறைகள் அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு  சாதகமாக உள்ளன.


சாந்தி (SHANTI) சட்டத்தின்படி, வழங்கப்பட்ட உபகரணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்து அதனால் விபத்துக்கள் ஏற்பட்டாலும், அந்த உபகரணங்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் இந்தியாவில் எந்தவிதமான  குடிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது.


ஏற்படக்கூடிய சேதத்தின் மதிப்போடு ஒப்பிடும்போது பொறுப்பு வரம்பு எந்த அளவில் உள்ளது?"


ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையம் (The Japan Centre for Economic Research), புகுஷிமா அணு உலை விபத்தினால் சுமார் 80 டிரில்லியன் யென் (₹46 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது. அதேபோல், செர்னோபில் விபத்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பெலாரஸ் நாடு மட்டுமே தனக்கு ஏற்பட்ட இழப்பு 235 பில்லியன் டாலர் (₹21 லட்சம் கோடி) என மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கோவா மாநிலத்தின் பரப்பளவிற்கு இணையான “செர்னோபில் தவிர்ப்பு மண்டலம்” (Chernobyl Exclusion Zone) எனப்படும் இடம், கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் யாரும் வசிக்க முடியாத இடமாகவே இருந்து வருகிறது.


இதற்கு நேர்மாறாக, சாந்தி (SHANTI) சட்டம் நிர்ணயித்துள்ள இழப்பீட்டு வரம்பு, இந்தத் தொகைகளில் சுமார் ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். இந்தியா சர்வதேச துணை இழப்பீட்டு ஒப்பந்தத்தின் (Convention on Supplementary Compensation) நிதியைப் பயன்படுத்தினாலும்கூட, ஒரு பெரிய விபத்தினால் ஏற்படும் சேதத்தில் 1 சதவீத அளவைக் கூட நெருங்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். இதனால், இந்தியாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரம்பிற்கு மேல் இழப்பீடு கோர சட்டப்பூர்வ உரிமை இருக்காது. மேலும், அவர்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படும் இழப்புகளைத் தாங்களே சுமக்க வேண்டியிருக்கும். இத்தகைய வரம்பு இல்லையென்றால், தனியார் அணுசக்தி நிறுவனங்கள் கடுமையான நிதி அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்கின்றனர். எனவே, ஒருவேளை அணுசக்தி விபத்து ஏற்பட்டால், அந்த நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதற்கே இந்த சாந்தி (SHANTI) சட்டம் வழிவகை செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு விளைவுகள் என்ன?


முகவர்களின் செயல்களின் விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது ஒரு "தார்மீக அபாயத்தை" உருவாக்குகிறது. பொறுப்பு வரம்புடன் கூடுதலாக, இந்தச் சட்டம் "கடுமையான இயற்கை பேரழிவால்" ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. இது அபாயகரமான தொழில்களுக்கான இந்தியாவின் "முழுமையான பொறுப்பு" கட்டமைப்பை மாற்றியமைக்கிறது. ஃபுகுஷிமா (Fukushima) பேரழிவு ஒரு சுனாமியால் ஏற்பட்டது என்ற உண்மையைப் புறக்கணிக்கிறது. இது நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் பாதுகாப்பான ஆலைகளை நிறுவுவதற்கான தொழில்துறையின் ஆர்வத்தைக் குறைக்கிறது.


இந்தியாவில் அணுசக்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?


இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அணுசக்தி பல ஆண்டுகளாக சுமார் 3 சதவீதம் மட்டுமே பங்களித்து வருகிறது. 1980-ஆம் ஆண்டுகளில், 2000-ஆம் ஆண்டிற்குள் 10 கிகாவாட் (Giga Watt (GW)) இலக்கை எட்ட அரசாங்கம் திட்டமிட்டது. அதேபோல் 2006-ஆம் ஆண்டில், 2020-ஆம் ஆண்டிற்குள் 20 கிகாவாட் இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உண்மையான உற்பத்தித்திறன் 2000-ஆம் ஆண்டில் 2.86 கிகாவாட் மற்றும் 2020-ஆம் ஆண்டில் 6.78 கிகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. அதிக செலவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களே இந்த பின்னடைவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பிடும் சிறிய மட்டு அணு உலைகள்(Small Modular Reactors) இன்னும் சோதிக்கப்படாத நிலையில் உள்ளன. மேலும், அவை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிக செலவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2047-ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் என்ற புதிய இலக்கு சாத்தியமற்றதாகப் பார்க்கப்படுகிறது. 


இந்தச் சட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் என்ன?


குறைந்த அளவிலான உற்பத்தித் திறன் கொண்டவை என்ற போதிலும், அணு உலைகள் இன்றும் பெரிய வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தால் (Westinghouse Electric Company) இரண்டு AP1000 அணு உலைகள் தலா சுமார் 18 பில்லியன் டாலர் செலவில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்தியாவின் சாந்தி சட்டம் (SHANTI Act), தனியார் நிறுவனங்களும் சர்வதேச விநியோகஸ்தர்களும் இத்தகைய திட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது விபத்துகளுக்கான பொறுப்புகள் ஏதுமின்றி லாபம் ஈட்ட அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 


சுவ்ரத் ராஜு, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கான கூட்டமைப்புடன் (Coalition for Nuclear Disarmament and Peace) தொடர்புடைய ஒரு இயற்பியல் ஆய்வாளர் ஆவார்.


Original article : A case against the SHANTI Act -Suvrat Raju

Share:

எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் (Valley of the Kings) கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள், பண்டையகால வணிகத் தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. -என். சாய் சரண்


 இந்தியப் பயணிகள் கல்லறைகளின் உட்புறத்தில் தங்கள் பெயர்களை எழுதும் பொதுவான வழக்கத்தைப் பின்பற்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பண்டைய தமிழகம், இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசு ஆகியவற்றிற்கு இடையே இருந்த வணிகத் தொடர்புகள் குறித்த புதிய விவரங்களை ஒரு முக்கிய கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. எகிப்தின் 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Kings) பகுதியில் உள்ள கல்லறைகளில், கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தமிழ்-பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகளை இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சார்லோட் ஷ்மிட் (Charlotte Schmid) மற்றும் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இங்கோ ஸ்ட்ராச் (Ingo Strauch) ஆகியோர் மேற்கொண்ட 2024–25 ஆய்வின் போது இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. 1926-ஆம் ஆண்டு 'மன்னர்களின் பள்ளத்தாக்கில்' (Valley of the Kings) ஆய்வு செய்து, 2,000-க்கும் மேற்பட்ட கிரேக்கச் சுவர் எழுத்துக்களை (graffiti) ஆவணப்படுத்திய பிரெஞ்சு அறிஞர் ஜூல்ஸ் பெய்லெட் என்பவரின் முந்தைய பணியைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் தீபன் நெக்ரோபோலிஸில் (Theban Necropolis) உள்ள ஆறு கல்லறைகளில் இவற்றை பதிவு செய்தனர்.


தற்போது நடைபெற்று வரும் சர்வதேச தமிழ் கல்வெட்டியல் மாநாட்டில், 'மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்தியக் கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் அறிஞர்கள் தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், இந்தக் கல்வெட்டுகளை உருவாக்கியவர்கள் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்றும் அறிஞர்கள் தெரிவித்தனர்.


இந்தக் கல்லறைகளுக்குத் தாங்கள் வந்ததற்கான அடையாளமாக, அங்குள்ள அறைகள் மற்றும் நடைபாதைகளின் சுவர்களில் பார்வையாளர்கள் தங்கள் பெயர்களைச் செதுக்கிச் சிறிய கல்வெட்டுகளையும் கிறுக்கல்களையும் (graffiti) விட்டுச் சென்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கல்லறைகளின் உள்ளே மற்ற மொழிகளில், குறிப்பாகக் கிரேக்க மொழியில் ஏராளமான கிறுக்கல்கள் உள்ளன. அவற்றோடு சேர்த்தே இந்த இந்தியக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இத்தகைய சூழலில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழக்கத்தைப் பின்பற்றியே இந்தியப் பார்வையாளர்களும் கல்லறைகளின் உட்புறத்தில் தங்கள் பெயர்களைப் பொறித்துச் சென்றுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 


சிகை கொற்றன் (Cikai Koṟraṉ) என்ற பெயர் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இது ஐந்து கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களுக்கு அருகிலும், உட்புறச் சுவர்களின் உயரமான இடங்களிலும் உள்ள பிற கிறுக்கல் அடையாளங்களுக்கு நடுவே இப்பெயர் காணப்பட்டது. ஒரு கல்லறையில், நுழைவாயிலில் சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது என்று ஸ்ட்ராச்  தெரிவித்துள்ளார்.


சிகை கொற்றன் (Cikai Koṟṟaṉ) என்ற பெயர் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. இதன் முதல் பகுதியான 'சிகை', சமஸ்கிருத சொல்லான 'ஷிகா' (śikhā) என்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம். இதற்கு 'குடுமி' அல்லது 'கிரீடம்' என்று பொருள் கூறப்படுகிறது. இது ஒரு பொதுவான பெயராக இல்லாவிட்டாலும், இதன் இரண்டாம் பகுதியான 'கொற்றன்' என்பது முற்றிலும் தனித்துவமான தமிழ்ச் சொல்லாகும். இதற்குப் போர்க்குணமிக்க வலுவான பின்னணி உண்டு என்கிறார். 'கொற்றம்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து இது உருவானது என்றும் இதற்கு 'வெற்றி' மற்றும் 'பகைவரை அழித்தல்' என்று பொருள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். சேரர்களின் வீரக் கடவுளான கொற்றவை மற்றும் அரசனைக் குறிக்கும் கொற்றவன் ஆகிய சொற்களிலும் இதே வேர்ச் சொல் எதிரொலிப்பதை நாம் காணலாம் என்று ஸ்மிட் தெரிவித்துள்ளார்.


'கொற்றன்' என்ற பெயர் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மற்ற பொருட்களிலும் காணப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு செங்கடல் துறைமுகமான பெரெனிகேயில் (Berenike) கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்பாண்ட ஓட்டில் 'கொற்றபுமான்' (Koṟṟapumāṉ) என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயர் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது. புறநானூற்றில் புகழப்படும் சேர மன்னன் 'பிட்டாங்கொற்றன்', சில நேரங்களில் நேரடியாக 'கொற்றன்' என்றே அழைக்கப்படுகிறார். இதே போன்ற பெயர்கள் கி.பி. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய சேர தலைநகரான புகளூர் கல்வெட்டுகளிலும் காணப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தக் கல்லறைகளில் மேலும் இரண்டு நபர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறித்துள்ளனர். அவற்றில் ஒரு கல்வெட்டு 'கோபன் வரத கண்டான்' (கோபன் வந்து பார்த்தான்) என்று வாசிக்கப்படுகிறது. 'கோபன்' என்ற பெயர் தமிழ்நாட்டின் அம்மன்கோவில்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர 'சாதன்' மற்றும் 'கிரன்' ஆகிய மற்ற தமிழ் பெயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலில் இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தபோது, என்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் பல ஆண்டுகளாகப் பலர் இந்தக் கல்லறைகளைப் பார்வையிட்டுள்ளனர், ஆனால் இதுவரை யாரும் இதில் இந்தியத் தொடர்பு இருப்பதை அடையாளம் காணவில்லை என்றும் ஒருவேளை தான் தவறாகப் புரிந்து கொண்டேனா என்று சார்லட்டிடமே கேட்டதாக ஸ்ட்ராச் கூறியுள்ளார். 


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகரான கே. ராஜன் கூறுகையில், பண்டைய தமிழகத்தின் மலபார் கடற்கரைக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இதற்கு முன்பு எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிகேவை (Berenike) மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டன என்றும் ஆனால் தற்போது அந்த கவனம் நைல் நதிப் பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Original article : Tamil Brahmi inscriptions found in Egypt’s Valley of the Kings shed light on ancient trade links. -N. Sai Charan

Share: