கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம்: புதிய வங்கதேச அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பட்டியலில் மறு பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏன் முதலிடத்தில் உள்ளது? -அபினவ் சக்ரவர்த்தி

 இரு நாடுகளும் 1996 ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் புதுப்பிக்கப்பட உள்ளது. ஒரு புதிய ஒப்பந்தம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர, அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கடந்த வாரம் வங்கதேச நாட்டில் நடந்த  பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது அடங்கும் என்றும், ஒப்பந்தம் டிசம்பர் 2026-ல் காலாவதியாகும் என்று தகவல்கள் வெளியாகின.


BNP தலைவரின்  உதவியாளரான ஹுமாயூன் கபீர், வரவிருக்கும் அரசாங்கம் "வங்கதேசத்தின் நலன்களை" மனதில் வைத்து கொண்டு செயல்படும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த ஒப்பந்தம் எவ்வாறு உருவானது. அதன் விதிகள் என்ன, இரு நாடுகளும் ஒப்பந்த விதிமுறைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஏன் ஆர்வமாக உள்ளன?


முரண்பாடுகளிலிருந்து நட்பு வரை


1950-களில், கிழக்கு பாகிஸ்தானுடனான எல்லையிலிருந்து 18 கி.மீ தொலைவில், மேற்கு வங்கத்தில் உள்ள ஃபராக்கா என்ற இடத்தில் தடுப்பணை கட்ட இந்தியா முன்மொழிந்தபோது, ​​கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வதில் பதட்டங்கள் தொடங்கின. கட்டுமானப் பணிகள் 1961-ல் தொடங்கி 1975-ல் நிறைவடைந்த பிறகு, ஃபராக்காவின் தடுப்பணை கங்கையிலிருந்து ஹூக்ளி நதிக்குத் திருப்பிவிடத் தொடங்கியது. கொல்கத்தா துறைமுகத்தைச் சுற்றியுள்ள சேற்றை வெளியேற்றி கப்பல்கள் செல்வதற்காக வைத்திருந்தது.


கட்டுமானப் பணிகளின்போது, ​​ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்தது, 1976-ஆம் ஆண்டு சுதந்திர வங்கதேசத்தில் அவாமி லீக் சட்டமன்ற உறுப்பினரான மௌலானா பாஷானி, இந்தியாவின் நீர் கொள்கைகளுக்கு எதிராக "ஃபரக்கா நீண்ட பேரணியை வழிநடத்தியபோது முரண்பாடு உச்சத்தை எட்டியது. வங்கதேசத்தில் கங்கையின் முக்கிய கிளை நதியான பத்மா நதியை வறண்டு பாலைவனமாக்குவதற்கு இது காரணமாக அமைந்தது என்று வாதிட்டு, தடுப்பணையை இடிக்க வேண்டும் என்று மௌலானா பாஷானி கோரினார்.


அடுத்த பத்தாண்டுகளில் 1977, 1982 மற்றும் 1985-ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளும் தற்காலிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போதிலும், எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.


இறுதியாக, டிசம்பர் 1996-ல், பிரதமர்கள் எச்.டி. தேவ கவுடா மற்றும் ஷேக் ஹசீனா தலைமையில் இரு நாடுகளும் கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜனவரி முதல் மே வரையிலான வருடாந்திர வறண்ட காலங்களில் கங்கை நீர் ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான 30 ஆண்டு கட்டமைப்பை இது அமைத்தது மற்றும் ஒப்பந்தத்தை கண்காணித்து செயல்படுத்த ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.


ஒப்பந்தத்தின் விதிமுறைகள் என்ன?


அந்த நேரத்தில் இருதரப்பு ராஜதந்திர உறவில் ஒருசாதனையாக பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம், 1949 மற்றும் 1988-க்கு இடையிலான 10 நாட்களில் சராசரி தரவுகளின் அடிப்படையில், ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான மூன்று அடுக்கு அமைப்பை உருவாக்கியது. நீர் ஓட்டம் 70,000 கன அடி (வினாடிக்கு கன அடி) அல்லது அதற்குக் கீழே குறைந்தால், நாடுகள் அதை சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. நீர் ஓட்டம் 70,000 முதல் 75,000 கன அடி வரை இருந்தால், வங்கதேசம் 35,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை இந்தியா தக்க வைத்துக் கொள்கிறது. 75,000 கன அடி அல்லது அதற்கு மேல் எட்டினால், இந்தியா 40,000 கன அடியைப் பெறுகிறது. மீதமுள்ள நீரை வங்கதேசம் பெறுகிறது.


மேற்கூறிய விதிமுறைகள் கூடுதல் விதிக்கு உட்பட்டவை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 முதல் மே 10 வரை, இரு நாடுகளும் மாறி மாறி மூன்று 10 நாட்களில் 35,000 கனஅடி நீரைப் பெறும்.


குறைந்தபட்ச உத்தரவாதப் பிரிவு இல்லாவிட்டாலும், ஒப்பந்தத்தில் ஒரு அவசரகால ஏற்பாடு உள்ளது: பிரிவு II(iii) "ஃபராக்காவில் 10 நாட்களுக்குள் நீர் ஓட்டம் 50,000 கன அடிக்குக் கீழே குறைந்தால், இரு அரசாங்கங்களும் அவசர அடிப்படையில் சரிசெய்தல்களைச் செய்ய உடனடி ஆலோசனைகளை நடத்தும், சமத்துவம், நியாயமான செயல்முறை மற்றும் இரு தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்காத கொள்கைகளைப் பின்பற்றும்" என்று கூறுகிறது.


பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, இரு அரசாங்கங்களின் சம பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கூட்டுக் குழு முதலில் இந்தப் பிரச்சினையைக் கையாண்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால், அது கூட்டு நதிகள் ஆணையத்திற்கு (Joint Rivers Commission (JRC)) எடுத்துச் செல்லப்படும் என்று இரு அரசாங்களும் கூறின. 54 பகிரப்பட்ட நதிகளின் நீர் பகிர்வைப் பற்றி விவாதித்து நிர்வகிக்க இரு நாடுகளும் 1972-ஆம் ஆண்டில் கூட்டு நதிகள் ஆணையத்தை உருவாக்கின.  இருந்தபோதிலும், கங்கை நதி மட்டுமே முறையான ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?


பல ஆண்டுகளாக, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் அதிகரித்துவரும் மக்கள்தொகையின் எதிர்காலத் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர மற்ற காரணங்களுக்காக  விமர்சிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டு காலத்தின் முடிவில் பரஸ்பர ஒப்புதலின் மூலம் புதுப்பிக்க வழிவகுத்தாலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.


மார்ச் 11 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில் இந்தியா அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக 30,000 முதல் 35,000 கனஅடி தண்ணீரைக் கோருவதாகவும், புதிய ஒப்பந்தம் ஒப்பீட்டளவில் குறுகியதாக, 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்றும் மே 2025-ல் வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டு நதிகள் ஆணைய கூட்டத்தின் போது, ​​வங்கதேசம் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 40,000 கனஅடி ஒப்பந்தத்தில்  உறுதியளிக்கப்பட்டப்படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், நீண்ட ஒப்பந்த புதுப்பித்தல் காலம் மற்றும் மேம்பட்ட வெள்ள தரவு பகிர்வைத் தவிர கேட்டதாக செப்டம்பர் 2025 PTI அறிக்கை தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 2024-ல் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பதட்டங்கள் வெடித்ததன் பின்னணியில் இவை அனைத்தும் நடந்துள்ளன. இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த பிரதமர் ஷேக் ஹசீனா, அன்றிலிருந்து புதுடெல்லியில் வசித்து வருகிறார். மேலும், வங்கதேசம் அவரை நாடு கடத்துமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பரில், வங்கதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவரை குற்றவாளி எனக் கண்டறிந்து மரண தண்டனை விதித்தது. ஹசீனா இந்தத் தீர்ப்பை "ஒருசார்புடையது மற்றும் அரசியல் ரீதியிலானது" என்று அழைத்தார்.


ஏப்ரல் 2025-ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான 1960 சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவு வங்கதேச நாட்டிற்கும் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.


மற்றொரு காரணி மேற்கு வங்க மாநில அரசின் நிலைப்பாடு ஆகும். கடந்த ஆண்டு, ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால், 2011-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய நதியான டீஸ்டாவின் நீர் பகிர்வு குறித்த ஒரு முக்கிய ஒப்பந்தம், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது.


தாகாவைத் தளமாகக் கொண்ட பேராசிரியர் எஸ்.கே. தவ்பிக் எம். ஹக் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நியாயமான பகிர்வுடன் சுற்றுச்சூழல் தாங்குநிலையை சமநிலைப்படுத்துவதன்” தேவையை வலியுறுத்தியதுடன், மறுபேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படும் ஒப்பந்தத்தில் “தரவு சார்ந்த நுண்ணறிவுகளால் வழிநடத்தப்படும் முனைப்பான வெள்ள மேலாண்மையை” இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.2025 டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கல்வியாளர் அமித் ரஞ்சன் அவர்கள், பங்களாதேஷ் நாளிதழான தி டெய்லி ஸ்டார் இதழில் எழுதியதாவது: ஒப்பந்தத்தின் எதிர்காலம் இறுதியில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளின் போக்குடன் தொடர்புடையது என்பதாகும். இது “இரு நாடுகளும் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான விருப்பம், கேட்டல், புரிந்துகொள்ளல் மற்றும் ஒருவருக்கொருவர் உண்மையான கவலைகளைத் தீர்க்க முயற்சிப்பது” ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்துள்ளது.


original article : Ganga Water Sharing Treaty: Why renegotiating pact tops new Bangladesh government’s list of priorities. -Abhinav Chakraborty

Share:

மாநிலங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) நிலைத்திருக்க முடியாதது; நிதி ஆதாரத்துடன் கூடிய ஓய்வூதியக் கணக்கு முறை அவசியமானது: PFRDA தலைவர் சிவசுப்ரமணியன் ராமன். -ஹிதேஷ் வியாஸ்

 சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme (OPS)) மீண்டும் தொடங்கிய பிறகு, தற்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (National Pension Scheme (NPS)) மாறியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களிப்பைத் தொடர்கிறது என்று ராமன் கூறினார்.


மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்கலாம், ஆனால் அவை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority (PFRDA)) தலைவர் சிவசுப்ரமணியன் ராமன் கூறுகிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் எந்தவொரு மாநில அரசுக்கும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் இந்தத் திட்டம் தொடர்ந்து நீடிக்க முடியாதது என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அறிவித்துவிட்டு, அதனால் எனக்கு எந்தச் சுமையும் ஏற்படாது என்று என்னால் நினைத்துக்கொள்ள முடியாது என்று அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். சத்தீஸ்கர் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்கிய பிறகு, இப்போது மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கே (NPS) மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக அறிவித்த பஞ்சாப் மாநிலம், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (NPS) பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தான் இதற்கு முன்பு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India (SEBI)) செயல் இயக்குநராகவும், இந்தியச் சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் (Small Industries Development Bank of India (SIDBI)) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியதை ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். 


தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டங்களின் (Atal Pension Yojana (APY)) தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றின்கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (Assets Under Management (AUM)) எவ்வளவு? மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தச் சொத்து மதிப்பு எந்த அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு  கணக்கின்படி, ஓய்வூதிய நிதியத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு (AUM) சுமார் ₹17 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த மொத்தத் தொகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) பங்கு மிகக் குறைவுதான் (சுமார் ₹1,300 கோடி). ஆனால், சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது: மொத்தச் சந்தாதாரர்கள்: சுமார் 9 கோடி பேர். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 7 கோடி பேர்,  தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்: 2 கோடி பேர் என்று கூறப்படுகிறது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை (AUM) துல்லியமாகக் கணிப்பது கடினம் என்பதால், நாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு ஓய்வூதியக் கணக்கு இருக்க வேண்டும் என்பதே முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய சவாலான இலக்கு என்றாலும், இப்படி ஒரு இலக்கை நிர்ணயிப்பதன் மூலமே அதை அடைய முடியும். இதற்காக, அமைப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: விவசாயத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), சுய உதவிக்குழுக்கள் (SHGs), டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform workers), வழக்கமான பெருநிறுவன ஓய்வூதியப் பிரிவு ஆகியனவாகும். 


இளம் தனியார் துறை ஊழியர்களைக் கவரும் வகையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) வரிச் சலுகைகள், பணப்புழக்கம் அல்லது திட்டத்தின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்கள்/சீர்திருத்தங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன?


எங்களிடம் தயாரிப்புகளை மாற்றியமைக்கும் சிறந்த வசதி உள்ளது. சமீபத்திய சீர்திருத்தங்கள், அடுத்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாகச் சில காலம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கிடையில், நாங்கள் புதிய தயாரிப்புகளைச் சோதித்து வருகிறோம். நாங்கள் 'வாத்சல்யா' (Vatsalya) திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளோம், மேலும் 'என்.பி.எஸ் ஸ்வஸ்தியா' (NPS Swasthya) ஓய்வூதியத் திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்துகிறோம். ஓய்வூதியத் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வருவாயை மேம்படுத்துவது குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும், தற்போதைய 'ஆண்டுத்தொகை' (Annuity) திட்டங்களின் விலை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளதால், அவற்றுக்குப் போட்டியாக வெளிப்படையான ஓய்வூதியப் பணப்பட்டுவாடா விருப்பங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.


சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மீண்டும் திரும்ப விரும்புகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் (NPS) ஒப்பிடும்போது, இதன் நீண்டகால நிதி நிலைத்தன்மையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எவ்வாறு கருதுகிறது?


புள்ளிவிவரங்கள் தெளிவாக உள்ளன: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) எந்தவொரு மாநில அரசுக்கும் நீண்ட காலத்திற்குச் சாத்தியமானது அல்ல. இதில் எப்போதும் ஒரு நிதிச் சுமை உண்டு என்கின்றனர். மாநிலங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்கனவே தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பங்களித்து வருகின்றன, ஆனால் இப்போது மீண்டும் பழைய திட்டத்திற்கு (OPS) மாற விரும்புகின்றன. அவர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமை உண்டு, ஆனால் அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பை நிறுத்தக்கூடாது. தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு 'நிதி சார்ந்த அமைப்பு', இதில் ஒவ்வொரு ஓய்வூதியத்திற்கும் எனத் தனிப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் பொது நிதிஒதுக்கீட்டில் இருந்து நேரடியாகச் செலுத்தப்படுகிறது. மாநிலங்கள் விரும்பினால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை  வழங்கலாம், ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒரு நிதி சார்ந்த கணக்காகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் நிதிஒதுக்கீட்டில் இருந்து கூடுதல் நிதியுதவியைச் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பாதுகாப்பான ஓய்வூதிய முறைக்கு 'நிதி ஆதார அமைப்பு' (Funded Pension System) என்பது மிகவும் அவசியமானது என்றும் அதைத் தவிர்க்க முடியாதது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


மாநிலங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கின்றனவா?


பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கள் தரப்பு நியாயங்களை மிகத் தெளிவாகக் கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்ந்து பங்களிக்க விரும்பலாம், அதே சமயம், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் ஒரு வாய்ப்பாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் கூறியுள்ளார். 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கிய மாநிலங்கள், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) நிறுத்திவிட்டனவா?


சத்தீஸ்கர் மாநிலம் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்பிவிட்டது. பஞ்சாப் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மீது ஆர்வம் காட்டினாலும், இன்னும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே பங்களித்து வருவதாகக் கூறியுள்ளார். 


பயன்படுத்துபவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில், NPS (தேசிய ஓய்வூதியத் திட்டம்), அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இதர திட்டங்களை ஒன்றிணைத்துச் செயல்படுத்துவது குறித்து பொருளாதார ஆய்வு 2025–26 குறிப்பிட்டுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன, இதற்கான பணிகள் ஏதேனும் நடக்கிறதா?


அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகிய இரண்டிற்கும் இடையே நேரடித் தொடர்பு ஏதுமில்லை. மக்கள் இந்த இரண்டு கணக்குகளையும் எளிதாக வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அடல் ஓய்வூதியத் திட்டமானது அரசாங்கத்தால் உறுதி அளிக்கப்பட்ட நிலையான வருமானத்தை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். 


2016-ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund (EPF)) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றுக்கு இடையே மாறிக் கொள்ளும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சட்டம் யாரையும் கட்டாயமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரச் சொல்வதில்லை; மக்கள் நீண்டகாலப் பழக்கம் காரணமாகவே அதில் முதலீடு செய்கிறார்கள். வரி இல்லாத சிறந்த லாபத்தைத் தருவதால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது ஒரு வலிமையான திட்டமாக உள்ளது. நாம் இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, மக்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் இருக்காது என்பதால், சந்தையில் வெவ்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார். 


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டிற்கான (நிதியாண்டு 26) ஓய்வூதிய நிதி முதலீடுகள் கடன் மற்றும் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களைத் தர முடியுமா?


பிப்ரவரி 1, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த முதலீடுகள் ரூ. 11.36 லட்சம் கோடியை எட்டியுள்ளன. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டைவிட 17 சதவீதம் அதிகம் என்றும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 21 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாகவும்  கூறியுள்ளார். 



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme) எத்தனை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன?


மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உட்பட எட்டு மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை  (Unified Pension Scheme (UPS)) அறிமுகப்படுத்தியுள்ளன.


விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருடன் இணைந்து, அந்தத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைப்பதை அதிகரிக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பணியாற்றி வருகிறது. இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?


வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organization (FPOs)), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் டிஜிட்டல் தள பணியாளர்கள் (Platform Workers) ஆகியோரிடையே ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், ஓய்வூதிய முகவர்களாகச் செயல்படவும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மக்கள் சேர உதவவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் புதிய தேசிய ஓய்வூதியச் சந்தாதாரர்களைச் சேர்க்கும் சேவை மையங்களுக்கு, ஒரு சந்தாதாரருக்கு ₹100 வரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. ஊரகப் பகுதிகளில் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதையும், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளைப் பயன்படுத்தி வேளாண் தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதியைக் கொண்டு சேர்ப்பதையும் இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


original article : Old Pension Scheme unsustainable for states; concept of funded pension account essential: PFRDA Chairperson Sivasubramanian Ramann -Hitesh Vyas

Share:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் மின்சார உற்பத்தி 2070-ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியைச் சார்ந்திருக்காமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி, காற்று போன்றவை) மூலம் பெருமளவு மாற்றமடையும் என அரசின் கொள்கை அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில 'கட்டமைப்புச் சிக்கல்கள்' காரணமாக, இதுவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் உண்மையான மின்சார உற்பத்திக் குறைவாகவே உள்ளது என்பதையும் அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


— இந்தியாவின் மின்சாரத் துறையில் நிலக்கரியானது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 74 சதவீதம் பங்களிப்பதோடு, நம்பகமான மற்றும் குறைந்த செலவிலான அடிப்படை மின்சார ஆதாரமாகவும் விளங்குகிறது.


— இருப்பினும், ‘விக்சித் பாரத் மற்றும் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய சூழல்’ (Scenarios Towards Viksit Bharat and Net Zero) என்ற தலைப்பிலான நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியா தனது தூய்மையான எரிசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துவதால், மின்சார உற்பத்தித் துறையில் நிலக்கரியின் பயன்பாடு படிப்படியாக குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (Current Policy Scenario), இப்போதுள்ள நடைமுறைகளே தொடரும் பட்சத்தில், மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கு 2024-25-ஆம் ஆண்டில் உள்ள 20 சதவீதத்திலிருந்து உயர்ந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 80 சதவீதத்திற்கும்  அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 


— இந்தச் சூழலில், மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 6 சதவீதம்  முதல் 10 சதவீதம் வரை வெகுவாகக் குறையக்கூடும் என்கின்றனர். இந்தியாவின் 2070 'நிகர பூஜ்ஜிய' (Net Zero) இலக்கை நோக்கிய மிகத் தீவிரமான திட்டத்தின்கீழ், நிலக்கரி மூலமான மின்உற்பத்தி முற்றிலுமாக தேவையில்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


— நிலக்கரியின் பயன்பாடு குறையும்போது, அணுசக்தியின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய கொள்கை சூழலின் (CPS) கீழ், இப்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் அணுசக்தியின் பங்கு 2070-ஆம் ஆண்டிற்குள் 5-8 சதவீதமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்திற்கு மாற்றாகவும், கார்பன் வெளியேற்றம் இல்லாத அடிப்படை மின்சாரத்தை வழங்குவதிலும் அணுசக்தியின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


— கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டில்  76.38 ஜிகாவாட் (GW) அளவாக இருந்தது, டிசம்பர் மாதம்  2025-ஆம் ஆண்டுக்குள் 258 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


— இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித் திறனான 513 ஜிகாவாட்டில் (GW), நிலக்கரி போன்ற படிம எரிபொருள்கள் 48 சதவீதம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் 50 சதவீதம், மற்றும் அணுசக்தி 1.7 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன. மொத்த உற்பத்தித் திறனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு, 2014-15 ஆம் ஆண்டில் இருந்த 29 சதவீதத்திலிருந்து, 2025 டிசம்பர் மாதத்திற்குள் 50 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.


— இருப்பினும், மின் உற்பத்தித்திறன் இவ்வளவு வேகமாக அதிகரித்த போதிலும், உண்மையான மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின்) பங்கு குறைவாகவே உள்ளது. இது 2013-14-ஆம் ஆண்டில் 19.6 சதவீதத்திலிருந்து, 2024-25-ஆம் ஆண்டில் 22 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.


— சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை கையாளுவதில் உள்ள கட்டமைப்புச் சவால்களே இந்த இடைவெளிக்கு முக்கியக் காரணம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.


— இந்த எரிசக்தி ஆதாரங்கள் பொதுவாகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, அவற்றின் முழுத் திறனைவிடக் குறைவான உற்பத்தியையே தருகின்றன. மேலும், இவை சீரற்ற உற்பத்தி, மாறுபடும் தன்மையால் ஏற்படும் மின்தடை, மின்விநியோகக் கட்டமைப்பு வரம்புகள், குறைந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் விநியோகச் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றன.


— புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சீராகக் கிடைக்காததால், அது நாள் முழுவதும் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின் விநியோகத்தை சீராக வைத்திருக்கவும், வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இன்னும் அவசியமாக உள்ளது.


— இந்தியாவின் எதிர்கால மின்சாரத் திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், நீண்டகால அடிப்படையில் அணுசக்தி ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கும் என்றும், அது மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறன் 2025-ல் உள்ள 8.18 GW-லிருந்து, 2070-ஆம் ஆண்டிற்குள் 90 முதல் 135 ஜிகாவாட் (GW) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய அளவைவிட சுமார் 10 முதல் 15 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. 


— தூய்மை எரிசக்திக்கு (Clean Energy) முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு நிலக்கரி தொடர்ந்து அவசியமான ஒன்றாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனெனில், பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குத் தேவையான ‘நீண்டகால சேமிப்பு வசதிகள்’ (Long-duration storage) இன்னும் அதிக செலவுமிக்கதாகவும், பரவலாகப் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளன. அதேசமயம், அணுசக்தித் திட்டங்களுக்கு அதிக முதலீடும், நீண்டகால கட்டுமான காலமும் தேவைப்படுகின்றன.


— தற்போதைய கொள்கை சூழலின்படி (CPS), நிலக்கரி மின் உற்பத்தித் திறன் 2025-ஆம் ஆண்டில் 268 ஜிகாவாட்டிலிருந்து உயர்ந்து, 2050-ஆம் ஆண்டிற்குள் 450–470 ஜிகாவாட் GW என்ற உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிகர பூஜ்ஜிய உமிழ்வு (Net Zero) சூழலில், 2045-ஆம் ஆண்டிலேயே சுமார் 420–435 ஜிகாவாட் (GW) என்ற அளவில் உச்சமடைந்து, அதன் பிறகு மின் சேமிப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றுகள் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாறுவதால் படிப்படியாக குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. 


— காலப்போக்கில், புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், தற்போதுள்ள சில நிலையங்கள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு கூடுதல் மின் உற்பத்தி ஆதாரமாக, குறைந்த அளவிலேயே இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


original article : What are the major initiatives taken by India in the direction of renewable energy? -Roshni Yadav

Share:

செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது: நடைமுறை தீர்வுகளே பேசுபொருள். -சௌம்யரேந்திர பாரிக்

 முதன்முறையாக 'உலகளாவிய தெற்கு' (Global South) எனப்படும் வளரும் நாடுகளில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி  முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். 


திங்கட்கிழமை முதல், புது  டெல்லியில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த உச்சிமாநாடு (AI Impact Summit 2026) நடைபெற உள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய விவாதங்களின் மையப்புள்ளியாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறைக்கு சாத்தியமான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கும் தனது திறனை வெளிப்படுத்தவும், வளர்ந்து வரும் நாடுகள் (Global South) அமைப்பின் முக்கிய குரலாக தன்னை நிலைநிறுத்தவும், உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையை கைப்பற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


முதன்முறையாக வளர்ந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பில் (Global South) நடைபெறும் இந்த உச்சிமாநாடு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவை பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. 


திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு, பாரத் மண்டபத்தில் நடைபெறும் 'இந்தியா செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த கண்காட்சி 2026' (India AI Impact Expo 2026) நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமையும் என்றும்; இங்கு அரசின் கொள்கைகள் செயல்பாட்டுடன் இணைவதையும், புத்தாக்கங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைவதையும், தொழில்நுட்பம் நாட்டின் குடிமக்களுக்குப் பயன்படுவதையும் காண முடியும் என்று பிரதமர் அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய விவாதத்தின் சமீபத்திய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது கடந்த நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில்  இங்கிலாந்தின் பிளெட்ச்லி பூங்காவில் (Bletchley Park) நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாட்டிலிருந்து' தொடங்கியது. அங்கு 28 நாடுகள் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய 'பிளெட்ச்லி பிரகடனத்தில்' (Bletchley Declaration) கையெழுத்திட்டன. கடந்த மே மாதம் 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற சியோல் உச்சிமாநாடு (Seoul Summit), பாதுகாப்போடு சேர்த்து கண்டுபிடிப்புகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. மேலும், பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் நடந்த பாரிஸ் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு (AI Action Summit), நடைமுறை பயன்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. அதே சமயம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்குக் குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்கின்றனர். 


இந்தியாவின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. முந்தைய உச்சிமாநாடுகள் பெரிய அளவிலான அபாயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், புது தில்லி தற்போது "மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்" (People, Planet, and Progress) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவின் நோக்கம் நடைமுறை உலகப் பிரச்சனைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதாகும். இது ஒரு செயற்கை நுண்ணறிவு வல்லரசாக உருவெடுக்கும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் (Global South) கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் திட்டத்தைப் பிரதிபலிக்கிறது.


இந்த உச்சிமாநாடு உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவு (AI) நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்ட பொருளாதாரக் காரணிகளை மாற்றக்கூடும் என்ற கவலைகள் உள்ளன. உலகத் தலைவர்களும் நிறுவனத் தலைவர்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தங்களின் திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


அரசாங்கங்கள், தொழில்முறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


45-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர் குழுவினர் இதில் பங்கேற்க உள்ளனர். சீனாவுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, சீனப் பிரதிநிதிகள் குழு இதில் பங்கேற்க உள்ளது.


கூகுள் (Google), ஓப்பன் ஏஐ (OpenAI), ஆந்த்ரோபிக் (Anthropic), மைக்ரோசாப்ட் (Microsoft), அடோப் (Adobe) மற்றும் குவால்காம் (Qualcomm) போன்ற உலகின் முன்னணி மற்றும் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதப் பிரதமர் இவர்களுக்கு இரவு விருந்து அளிப்பதோடு, ஒரு வட்டமேசை மாநாட்டிலும் உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்தியா செயற்கை நுண்ணறிவுத் (IndiaAI Mission) திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவை (AI) அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதுதானென்றும் அத்துடன், இந்தியப் பொறியாளர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கி வரும் சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் நடைமுறைத் தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். 


தற்போது நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI), ஒரு சில நாடுகளால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் வெறும் பயனாளர்களாக மட்டுமே இருக்கின்றன. இந்தத் தரவுத் தொகுப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால், அதன் முடிவுகளில் ஒருதலைப்பட்சமான போக்கு  நிலவுவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தரவுத் தொகுப்புகள், கணினித் திறன், மாதிரிகள், வழிமுறைகள் மற்றும் செயலிகள் போன்ற செயற்கை நுண்ணறிவு வளங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவது இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என்று சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.


வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து வழிநடத்தும் ஏழு கருப்பொருள் பணிக்குழுக்கள் (Thematic working groups), உறுதியான முடிவுகளை முன்வைக்கும். இதில் செயற்கை நுண்ணறிவு பொதுமை முன்முயற்சி (AI Commons), நம்பகமான செயற்கை நுண்ணறிவு கருவிகள், பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு மற்றும் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளின் தொகுப்புகள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகள் ஆகியன ஆகும்.


உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சி, எதிர்கால வேலைவாய்ப்புகள் மற்றும் தற்போதுள்ள பணிகளில் அதன் தாக்கம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய அங்கமாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, தற்போது ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால்  அத்துறையின் சில சேவைகள் தேவையற்றதாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். அதோடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகப்படியான மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


அடுத்த ஐந்து நாட்களில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், தற்போதுள்ள சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு திட்டவரைவை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு, மேலாண்மை, நெறிமுறை சார்ந்த பயன்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் விவாதிக்கப்படும். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்காக உள்ளூர் தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவது உட்பட, இந்தியாவின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (Sovereign AI) குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பாதிக்கிறது, எதிர்கால வேலைகளுக்குத் தேவையான புதிய திறன்கள் எவை, மற்றும் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவியாக இருக்கும் என்பது குறித்த விரிவான விவாதங்களும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


சில நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு  மொழி மாதிரிகளை (Language Models) அறிமுகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில், சில அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Sarvam AI மற்றும் Bharatgen ஆகியவற்றின் சுயசார்பு செயற்கை நுண்ணறிவுத் திட்ட' மாதிரிகளும் இடம்பெறும் என்கின்றனர். மேலும், கணினி வன்பொருள் (Hardware) தொடர்பான அறிவிப்புகள், குறிப்பாக இந்தியாவின் தரவு மைய திறனை விரிவாக்கும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


original article : AI summit begins today, real-world solutions on table -Soumyarendra Barik

Share:

அமெரிக்காவின் துடுக்குத்தனம், ஒத்த இசைவு அல்ல. -ப சிதம்பரம்

 5 ஆண்டுகளில் இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எதை வாங்கும் என்பதுதான் கேள்வி. இந்த செலவினம் இந்தியா இப்போது அமெரிக்காவுடன் வைத்திருக்கும் சிறுவர்த்தக உபரியை நீக்கும். இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் சில பொருட்கள் அமெரிக்காவில் உள்ளன.


இது ஒரு புதிர் போன்றது. "இது ஒரு காத்தாடி, இது ஒரு பறவை, இது விமானம்.. அது என்ன?" என்ற கேள்விக்கு ஒத்ததாக உணர்கிறது. இதன் பொருள், பிப்ரவரி 6, 2026 அன்று அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கும் இதே குழப்பம் பொருந்தும். இந்த அறிக்கை நிறைய ஊகங்களை உருவாக்கியுள்ளது. இந்திய அரசாங்கம் தெளிவான விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இது சந்தேகங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அதை அதிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் நிலைமையைக் கட்டுப்படுத்துவதால், இந்த அறிக்கை அமெரிக்காவைக் கவலையடையச் செய்யாமல் இருக்கலாம். இருப்பினும், இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.


கூட்டு அறிக்கை தவறான கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் 2025-ல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral Trade Agreement (BTA)) பேச்சுவார்த்தை நடத்துவதாக பலமுறை கூறினர். வர்த்தக அமைச்சர் பலமுறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) விரைவில் எதிர்காலத்தில் முடிவடையும் என்று கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் அது செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் பின்னர், கூட்டு அறிக்கை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) அல்ல என்பது தெளிவாகியது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல. இது ஒரு சாத்தியமான இடைக்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு மட்டுமே. எளிமையான சொற்களில், ஒரு பெரிய முயற்சி மிகச் சிறிய பலனையே அளித்தது.


எங்கே பரஸ்பரம்?


கூட்டு அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, இரு தரப்பினரின் ஒப்பந்தம் பரஸ்பரம் என்று கூறினர். இந்தக் கூற்று தவறாக வழிநடத்தப்படுகிறது. உரையானது உண்மையில் காட்டுவதுடன் இதனுடன் பொருந்தவில்லை. இந்தக் கூட்டு அறிக்கையை பொதுவாகப் படித்தாலும் தெளிவாகிறது. ஒப்பந்தம் உண்மையிலேயே பரஸ்பரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. தற்போது, கூட்டு அறிக்கையின் விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது. அவை,


அனைத்து அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் அதே வேளையில், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், நெகிழி மற்றும் ரப்பர், கரிம இரசாயனங்கள், வீட்டு அலங்காரம், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மூலப் பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத பரஸ்பர வரியை (ஏப்ரல் 2, 2025 அன்று விதிக்கப்பட்ட 25 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டது) விதிக்கும். 'இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்தால்' (successful conclusion of the Interim Agreement) மட்டுமே பொதுவான மருந்துகள், இரத்தினங்கள் மற்றும் வைரங்கள் மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா நீக்கும். இதில் 0 சதவீதத்திற்கும் 18 சதவீதத்திற்கும் இடையிலான பரஸ்பரம் எங்கே?


அமெரிக்க மருத்துவ சாதனங்களில் வர்த்தகம் செய்வதற்கான நீண்டகால தடைகளை நிவர்த்தி செய்யவும், அமெரிக்க தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பொருட்களுக்கான சந்தை அணுகலை தாமதப்படுத்துவதற்கு கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி உரிம நடைமுறைகளை நீக்கவும் இந்தியா ஒப்புக்கொள்கிறது. அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான நீண்டகால வரியில்லா தடைகளை நிவர்த்தி செய்யவும் இந்தியா ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்கு பதிலுக்கு இதே போன்ற எந்த கடமையும் இல்லை. வரி அல்லாத தடைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து பொருத்தமான உறுதிப்பாடு எதுவும் இல்லை. இது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பரம் இல்லாததைக் காட்டுகிறது.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானம் மற்றும் விமான உதிரி பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் (Graphics Processing Units (GPU)) மற்றும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் பிற பொருட்கள் உட்பட தொழில்நுட்ப தயாரிப்புகளில் வர்த்தகத்தை இரு அரசாங்கங்களும் கணிசமாக அதிகரிக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தயாரிப்புகளும் அமெரிக்க ஏற்றுமதி பொருட்கள். அவை அமெரிக்கா வாங்கத் திட்டமிட்டுள்ள இந்தியப் பொருட்கள் அல்ல. இதில் பரஸ்பரம் எங்கே?


கூட்டு அறிக்கையுடன் கூடிய ஒரு நிர்வாக உத்தரவில், இந்தியா எடுத்த 'குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை' ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு, அமெரிக்காவின் எரிசக்தி பொருட்களை வாங்குவதாக இந்தியாவின் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் இந்தியாவின் கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். 


ஆகஸ்ட் 6, 2025 அன்று விதிக்கப்பட்ட கூடுதல் விளம்பர மதிப்பு வரி விகிதத்தை (25 சதவீத அபராதக் கட்டணம்) நீக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார். அமெரிக்காவிடமிருந்து எதுவும் பெறாமல், இந்தியாவிடமிருந்து மூன்று வாக்குறுதிகளைப் பெறுவதில் பரஸ்பரம் எங்கே இருக்கிறது?


வெளிப்படையான அச்சுறுத்தல்


இந்தியா ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யத் தொடங்கினால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத அபராத வரியை மீண்டும் விதிப்பது உட்பட கூடுதல் நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அரசாங்கம் பரிசீலிக்கும். பிப்ரவரி 6, 2026 அன்று ஒப்புக் கொள்ளப்பட்ட முழு கட்டமைப்பும் ஒரு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் பிரச்சினை ரஷ்ய எண்ணெய் ஆகும். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கும் இந்தியாவின் அடிபணிவுக்கும் இடையிலான பரஸ்பரம் எங்கே?


ஏப்ரல் 2, 2025 க்கு முன்பு, இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 3 சதவீத வணிகர் பூர்த்தி செய்யப்பட்ட வலையமைப்பு (MFN) விகிதத்தில் இருந்தன. அந்த நேரத்தில் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.


அதிபர் டிரம்ப் தனது கூறப்பட்ட அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். இப்போது அது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் மீதான 'பரஸ்பர' வரியின் சட்டபூர்வமான தன்மை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அது அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூட ரத்து செய்யப்படலாம். அப்படி நடந்தால், இந்தியா அதிபர் டிரம்பிற்கு அல்ல, நீதிமன்றத்திற்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும். இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான முந்தைய நிலைமைக்குத் திரும்பும். இருப்பினும், அந்த நேரத்தில், அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிடமிருந்து பல சலுகைகளைப் பெற்றிருக்கும், அதற்கு ஈடாக எதையும் கொடுக்காது. இது உண்மையான பரஸ்பரம் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.



மறைக்கப்பட்ட சுமைகள்


வர்த்தக நிபுணரான அஜய் ஸ்ரீவஸ்தவா சில முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளார். எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் 50 சதவீதமாகவே இருக்கும். ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான வரிகள் 25 சதவீதமாகவே இருக்கும். இருப்பினும், இந்தியா அமெரிக்காவிற்கு மிகவும் ஆழமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் அமெரிக்க தொழில்துறை பொருட்கள், பல பண்ணை பொருட்கள், சிவப்பு ஜோவர், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் உயர்ரக மோட்டார் சைக்கிள்களை உள்ளடக்கியது.


மற்றொரு பெரிய கேள்வி என்னவென்றால், 5 ஆண்டுகளில் இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எதை வாங்கும் என்பதுதான். இது அமெரிக்காவுடன் இந்தியா அனுபவிக்கும் சிறுவர்த்தக உபரியை அழித்துவிடும். இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் சில பொருட்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அதிக தரையிறங்கும் விலையில் அதிக அளவு விலையுயர்ந்த விமானங்கள்/இராணுவ உபகரணங்கள் மற்றும் அமெரிக்க எண்ணெயை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இவை அனைத்தையும் எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து இந்தியா நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளக்கூடும்.


original article : US audacity, not reciprocity. -P Chidambaram

Share:

‘இந்திய அறிவியல் சேவை’ மூலம் ஒரு இடைவெளியைக் குறைத்தல் -பி. ராகவன்

 அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் முதன்மையானதாக மாறிவரும் நிலையில், நிர்வாகத்தை வலுப்படுத்த ஒரு தனித்துவமான அறிவியல் பணிக்குழு (Scientific Cadre) அவசியமாகிறது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் சேவை விதிகள் பொதுவான நிர்வாகிகள் மூலம் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒரு அணுகுமுறையாக இருந்தது. இருப்பினும், அதன் பிறகு நிர்வாகமானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களால் பெருகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அரசுப் பணியில் சேர்ந்ததால், அவை வேறு ஒரு காலகட்டத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகளாலேயே தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டனர். இந்த முரண்பாடு, கொள்கை உருவாக்கத்தில் அறிவியல் நிபுணத்துவத்தை திறம்பட ஒருங்கிணைப்பதை கட்டுப்படுத்தியுள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் பணியாளர்களைக் கொண்ட பல முன்னேறிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் அறிவியல் நிர்வாகத்திற்கான ஒரு சிறப்பு கட்டமைப்பு இல்லை. எனவே, தனிபட்ட அறிவியல் சேவை விதிகளை (separate scientific service rules) உருவாக்குவதற்கான தேவை பெருகிய முறையில் வலுவடைந்து வருகிறது.


ஒரு முரண்பாடு - நிர்வாகி மற்றும் விஞ்ஞானி


குடிமைப் பணி (Civil Services) ஆட்சேர்ப்பு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. இது நிர்வாக அமைப்பின் கடினத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. எவ்வாறாயினும், அறிவியல் சார்ந்த பணிகள் சமமான கடினமான அளவில் மிகவும் மாறுபட்ட பாதையைப் பின்பற்றுகின்றன. ஒற்றைத் தேர்வை விட பல ஆண்டுகால மேம்பட்ட கல்வி, ஆராய்ச்சி மற்றும் சக நிபுணர்களின் மதிப்பாய்வு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய, மிகவும் சிறப்பு வாய்ந்த தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. அரசாங்கத்திற்குள், நிர்வாகிகளுக்கு நிர்வாகப் பணிகளுக்கேற்ப கட்டமைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், விஞ்ஞானிகள் பெரும்பாலும் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்; அதே நேரத்தில் அவர்களுக்கென்று குறிப்பிட்ட பணிகளுக்கான பயிற்சி, தொழில்முறை முன்னேற்றம் அல்லது அதிகாரப் பகிர்வு மற்றும் தொழில்முறை பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஒப்பிடத்தக்க கட்டமைப்புகள் இல்லை.


கொள்கை உருவாக்கத்தில் அறிவியல் பங்களிப்புகள் பெரும்பாலும் உடனடித் தேவைகளுக்காக, சட்ட வழக்குகள் அல்லது ஒழுங்குமுறை முடிவுகளுக்கு இது தேவைப்படலாம். இதன் காரணமாக, ஆராய்ச்சி காலக்கெடுவுக்கு உட்பட்டதாகவும் குறுகியதாகவும் மாறுகிறது. ஒரு வலுவான அணுகுமுறை தொடர்ச்சியான, நீண்ட கால ஆராய்ச்சியை ஆதரிக்கும். இது அவசரத்திற்கு பதிலாக, சான்றுகள் மற்றும் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும்.


அறிவியல் ஒரு தற்காலிக கருவியாக இல்லாமல், நிர்வாகத்தில் ஒரு நிரந்தர கொள்கையாளராக மாறும் வரை, கொள்கை மற்றும் பொது நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான அதன் முழுதிறனும் பயன்படுத்தப்படாமல் இருக்கும். எனவே, பெரும்பாலான அறிவியல் ஆராய்ச்சிகள் ஏற்கனவே உள்ள கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்தவோ அல்லது கொள்கை மாற்றத்தை வடிவமைப்பதில் நாடுகளின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ பிரத்யேகமாக வடிவமைக்கப்படவில்லை.


இந்தியாவின் பொறுப்புகள் தொழில்நுட்பரீதியாக தீவிரமான துறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பெருங்கடல்கள் மற்றும் கடற்கரைகள், பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, அணுசக்தி பாதுகாப்பு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு என விரிவடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு விஞ்ஞானிகள் தவிர்க்க முடியாதவர்களாக மாறியுள்ளனர்.


இருப்பினும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் முதன்மையானதாக மாறிவரும் நிலையில், நிர்வாகத்தை வலுப்படுத்த ஒரு பிரத்யேக அறிவியல் பணிக்குழு (Scientific Cadre) அவசியமாகிறது. அவை நடத்தை விதிகள், மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் பொது நிர்வாக செயல்பாடுகளுக்காக முதலில் வடிவமைக்கப்பட்ட படிநிலைகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்படுகின்றன. காலப்போக்கில், இது நிர்வாக கட்டமைப்புகளுக்குள் தங்கள் தொழில்முறை பங்கை முழுமையாகச் செயல்படுத்தும் விஞ்ஞானிகளின் திறனை கட்டுப்படுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இன்னும் சில நிறுவனங்கள், ஆட்சேர்ப்பு, மதிப்பீடு மற்றும் பதவி உயர்வுக்கு தனித்தனி விதிகளைக் கொண்டிருந்தாலும், அவை மத்திய குடிமைப் பணி (நடத்தை) விதிகள், 1964 ஆல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. இது முதன்மையாக அறிவியல் சுதந்திரத்திற்குப் பதிலாக நிர்வாக அதிகாரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும்.


நிர்வாக விதிகள் நடுநிலையானவை அல்ல


சேவை விதிகள் நடத்தை மற்றும் கலாச்சாரத்தை வடிவமைக்கின்றன. குடிமைப் பணி விதிகள் ஒழுக்கம் மற்றும் நடுநிலைமையை வலியுறுத்தினாலும், அறிவியல் பணிக்கு கருத்துகணிப்புகளை கேள்விக்குட்படுத்துவதும், கொள்கையை சவால் செய்யும் போதும் ஆதாரங்களை வழங்குவதும் தேவைப்படுகிறது. இதற்கு அமைப்புகள் அனுமதிக்கவில்லை என்றால், அறிவியல் உள்ளீடுகள் ஆலோசனையாக மட்டுமே இருக்கும். அவை முடிவெடுப்பதில் முழுமையாக ஒரு பகுதியாக மாறாது.


அறிவியல் முன்னேற்றம் தொடர்ச்சியான விசாரணை, ஆதாரங்களைச் சோதித்தல் மற்றும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் நேர்மையான மதிப்பீடு ஆகியவற்றைப் பொறுத்தது. நிர்வாகத்தில், இது சுற்றுச்சூழல் அபாயங்கள், தொழில்நுட்ப வரம்புகள் அல்லது நீண்டகால விளைவுகளை வெளிப்படையான முறையில் அறிவிக்கும் திறனாக மொழிபெயர்க்கிறது. நிறுவன செயல்முறைகளுக்குள் அத்தகைய மதிப்பீடுகளை முறையாகப் பதிவு செய்யவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​விஞ்ஞானிகளால் முடியாதபோது, ​​அவர்களின் பங்கு கணிசமானதாக இல்லாமல் குறியீடாக மாறும் அபாயம் உள்ளது. கொள்கையை கேள்வி கேட்க முடியாத அறிவியல் உண்மையான அறிவியல் அல்ல. அது ஒரு அலங்காரமாக மட்டுமே மாறும். நல்லாட்சிக்கு அறிவியல் மதிப்பீடுகளை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அனுமதிக்கும் அமைப்புகள் தேவை. இறுதி கொள்கை முடிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிடம் இருந்தாலும் இது நடக்க வேண்டும்.


பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அரசாங்கத்திற்குள் தனித்துவமான அறிவியல் சார்ந்த பணியாளர்களை உருவாக்கியுள்ளன. இந்த பணியாளர்களுக்கு சிறப்பு சேவை விதிகள், தெளிவான தொழில் பாதைகள் மற்றும் தொழில்முறை பாதுகாப்புகள் உள்ளன. கொள்கை உருவாக்கத்தில் வெளிப்படையான, சுதந்திரமான அறிவியல் உள்ளீட்டை உறுதி செய்வதன் மூலம் இந்த அமைப்புகள் நிர்வாகத்தை வலுப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க அறிவியல் ஒருமைப்பாடு கொள்கைகள் விஞ்ஞானிகளை அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாக்கின்றன. இந்தக் கொள்கைகளுக்கு அறிவியல் ஆலோசனையின் தெளிவான ஆவணங்கள் தேவை. மேலும் ஆராய்ச்சி முடிவுகளை அடக்குவதையோ அல்லது மாற்றுவதையோ அவை தடுக்கின்றன. அரசியல் வசதிக்காக அல்லாமல் நம்பகமான ஆதாரங்களால் கொள்கைகள் வழிநடத்தப்படுவதை உறுதி செய்கின்றன.


இந்தியாவின் நிலைமை வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்டுள்ளது. வலுவான அறிவியல் நிறுவனங்கள் மற்றும் அதிக பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருந்தபோதிலும், அரசாங்க விஞ்ஞானிகள் பெரும்பாலும் அவர்களின் நிபுணத்துவத்துடன் ஒப்பிடும்போது வரையறுக்கப்பட்ட நிறுவன அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். அவர்களின் உள்ளீடுகள் எப்போதும் முடிவெடுக்கும் செயல்முறைகளில், குறிப்பாக தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான துறைகளில் முறையான தன்மையைக் கொண்டிருக்காது. இந்த சூழ்நிலை எச்சரிக்கையான தகவல்தொடர்பு, நிச்சயமற்ற தன்மையின் வரையறுக்கப்பட்ட ஆவணப்படுத்தல் மற்றும் நெருக்கடிகளின் போது அறிவியலை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுக்கும். சில நேரங்களில், கொள்கை வகுப்பில் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, நெருக்கடிகளின்போது மட்டுமே அறிவியல் முக்கியமாக நம்பப்படுகிறது. அதன் அறிவியல் திறனை முழுமையாகப் பயன்படுத்தாத ஒரு நிர்வாக அமைப்பு நீண்டகால கொள்கை பலவீனங்களை எதிர்கொள்ளக்கூடும். இந்தியா காலநிலை நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க இலக்கு வைத்துள்ளது. இதை அடைய, நிர்வாக செயல்திறனுடன் அறிவியல் சான்றுகளை மதிக்கும் நிறுவனங்கள் தேவை. இதற்கு தேவைப்படுவது அதிக குழுக்கள் அல்லது தற்காலிக ஆலோசனை அமைப்புகள் அல்ல, கட்டமைப்பு சீர்திருத்தம் மட்டுமே. இத்தகைய சீர்திருத்தம் நிர்வாகத்தில் விஞ்ஞானிகளின் பங்கை தெளிவாக வரையறுத்து, சரியான நிறுவன பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.


இந்திய அறிவியல் சேவைகள் Indian Scientific Service (ISS) உருவாக்கம் ஒரு நடைமுறை தீர்வை வழங்குகிறது. இது முன்னேற ஒரு நேர்மறையான வழியை வழங்குகிறது. இந்திய அறிவியல் சேவைகள் (ISS) ஒரு நிரந்தர, அகில இந்திய அறிவியல் பணியாளராக செயல்பட முடியும். இது தற்போதுள்ள குடிமை சேவைகளுடன் இணைந்து செயல்பட முடியும். கடுமையான தேசிய அளவிலான தேர்வு மற்றும் சக மதிப்பீடு மூலம் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களில் முடிவெடுப்பதில் ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களாக வைக்கப்படுவார்கள். தனி அறிவியல் சேவை விதிகள் தொழில்முறை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும், அறிவியல் மதிப்பீடுகளை வெளிப்படையாகப் பதிவு செய்ய உதவும். மேலும், அறிவியல் ஆலோசனை மற்றும் கொள்கை முடிவுகளுக்கு இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்தும். இந்திய அறிவியல் சேவைகள் (ISS) நிர்வாக அமைப்புகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவற்றை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தலை உறுதி செய்கிறார்கள். விஞ்ஞானிகள் சான்றுகள், இடர் மதிப்பீடு மற்றும் நீண்டகால முன்னோக்கிய திட்டத்தில் பங்களிக்கின்றனர்.


ஒரு சாத்தியமான கட்டமைப்பு


ஒரு இந்திய அறிவியல் சேவைகளுக்கான (ISS) சாத்தியமான கட்டமைப்பில் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சேவை (Indian Environmental and Ecological Service), இந்திய காலநிலை மற்றும் வளிமண்டல சேவை (Indian Climate and Atmospheric Service), இந்திய நீர் மற்றும் நீர்நிலை சேவை (Indian Water and Hydrological Service), இந்திய கடல் மற்றும் பெருங்கடல் சேவைகள் (Indian Marine and Ocean Services), இந்திய பொது சுகாதாரம் மற்றும் உயிரி மருத்துவ சேவை (Indian Public Health and Biomedical Service), இந்திய பேரிடர் ஆபத்து மற்றும் மீள்தன்மை சேவை (Indian Disaster Risk and Resilience Service), இந்திய எரிசக்தி மற்றும் வள சேவை (Indian Energy and Resources Service), இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை சேவை (Indian Science and Technology Policy Service), இந்திய வேளாண் மற்றும் உணவு அமைப்புகள் சேவை (Indian Agricultural and Food Systems Service) மற்றும் இந்திய ஒழுங்குமுறை அறிவியல் சேவை (Indian Regulatory Science Service) போன்ற இந்த சிறப்புப் பணியாளர்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் பகுதியில் கவனம் செலுத்தும்.


இந்தியா வலுவான அறிவியல் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. அடுத்த கட்டமாக அறிவியல் நிபுணத்துவத்தை நிர்வாகக் கட்டமைப்புகளில் நேரடியாக ஒருங்கிணைப்பதாகும். இந்திய அறிவியல் சேவைகளுக்கான (ISS) தேவை இனி வெறும் யோசனை அல்ல. ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பை வலுப்படுத்துவதற்கும் எதிர்காலத்திற்கான மிகவும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதற்கும் இது ஒரு நடைமுறை மற்றும் சரியான நேரத்தில் சீர்திருத்தமாக மாறியுள்ளது.


தற்போதைய அரசியல் தலைமையின் கீழ், இந்தியா படிப்படியாக அதன் காலனித்துவ மரபைத் தாண்டி நகர்ந்து வருகிறது. அது ஒரு நம்பிக்கையான மற்றும் நவீன தேசத்தை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில், ஒரு இந்திய அறிவியல் சேவைகள் (ISS) என்பது ஒரு எதிர்கால சீர்திருத்தமாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய குடிமைப் பணியின் மாற்றத்தைப் போலவே இந்தியாவின் தேசிய இலக்குகள் மற்றும் உலகளாவிய லட்சியங்களுடன் இணைந்த அறிவியல் சார்ந்த நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும்.


பி. ராகவன் ஒரு கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு ஆராய்ச்சியாளர். அவருக்கு 15 ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் கள அனுபவம் உள்ளது. அவரது பணி சதுப்புநிலங்கள் மற்றும் கடல் புல்லில் கவனம் செலுத்துகிறது.


original article : Bridging a divide with an ‘Indian Scientific Service’ -P. Ragavan

Share:

உயிரியல் சார்ந்த இரசாயனங்கள் மற்றும் நொதிகள் என்பது என்ன? -ஷாம்பவி நாயக்

 உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் நொதிகளை அளவிடுவதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?


தற்போதைய செய்தி: உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் என்பது கரும்பு, சோளம், மாவுச்சத்து அல்லது உயிரி எச்சங்கள் போன்ற உயிரியல் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, பெரும்பாலும் நொதித்தல் அல்லது நொதி செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தொழில்துறை இரசாயனங்கள் ஆகும். உயிரி அடிப்படையிலான ரசாயனங்களின் எடுத்துக்காட்டுகளில் லாக்டிக் அமிலம், உயிரி-ஆல்கஹால்கள், கரைப்பான்கள், மேற்பரப்பில் கலக்கும் தன்மை கொண்ட இரசாயனப் பொருட்கள் மற்றும் நெகிழிகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான இடைநிலைகள் போன்ற கரிம அமிலங்கள் எடுத்துக்கட்டுகளாகும். நொதிகள் என்பவை சலவைத்தூள், உணவு பதப்படுத்துதல், மருந்துகள், ஜவுளி, கூழ் மற்றும் காகிதம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் உயிரியல் வினையூக்கிகளாகும். மேலும், உயிரி உற்பத்தியில் இவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. நொதிகள் (Enzymes) குறைந்த வெப்பநிலை மற்றும் அழுத்தங்களில் செயல்படுகின்றன. இது மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.


இந்தியாவிற்கு ஏன் இது போன்ற இரசாயனங்கள் தேவைப்படுகிறது?


உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் நொதிகளை அளவிடுவதற்கான அடிப்படைகளை இந்தியா கொண்டுள்ளது: ஒரு வேளாண் விவசாய அடித்தளம், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து நொதித்தலில் ஆழமான நிபுணத்துவம் மற்றும் வளர்ந்துவரும் உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியை விரிவுபடுத்துவது கச்சா எண்ணெய்களை (Petrochemical) இறக்குமதி செய்வதைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம். வேளாண் விளைபொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறக்கலாம். மேலும், இந்தியாவை நிலையான தொழில்துறை கொண்ட வலுவான விநியோகராக மாற்றலாம். உதாரணமாக, 2023-ஆம் ஆண்டில் இந்தியா $479.8 மில்லியன் மதிப்புள்ள அசிட்டிக் அமிலத்தை (acetic acid) இறக்குமதி செய்தது.


இன்று இந்தியா எந்த நிலையில் உள்ளது?


உயிரி தொழில்நுட்பத் துறையின் BioE3 கொள்கையின்கீழ், உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் நொதிகளை கொண்ட பகுதிகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. உயிரி அடிப்படையிலான இரசாயனப் பிரிவில், Praj Industries மற்றும் Godrej Industries போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. Godavari Biorefineries போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் எத்தனால் அடிப்படையிலான, உயிரி-பெறப்பட்ட இரசாயனங்களில் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் Jubilant Ingrevia அசிட்டிக் அன்ஹைட்ரைடு மற்றும் எத்தில் அசிடேட் போன்ற "அசிடைல்ஸ்" (acetyls) இடைநிலைகளை உருவாக்குகிறது. StringBio போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் இந்த இரசாயனங்களை உருவாக்க புதிய நுண்ணுயிர் முறைகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில், நொதிகள் சந்தை ஒரு சில பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், முன்னணி நிறுவனங்கள் மொத்த சந்தைப் பங்கில் 75%-க்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளன. இந்தச் சந்தையில் முக்கியமான நிறுவனங்களில் Novozymes India, டுபாண்ட், டிஎஸ்எம், Advance Enzyme Technologies, BASF SE மற்றும் Ultreze Enzymes Private Limited ஆகியவை அடங்கும்.


மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?


ஐரோப்பிய ஒன்றியம் (European Union (EU)) உயிரியல் பொருளாதார உத்தி மற்றும் செயல் திட்டம், வட்ட உயிரியல் பொருளாதார இலக்குகளின் ஒரு பகுதியாக உயிரியல் அடிப்படையிலான இரசாயனங்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குகிறது. இது தொழில்துறை மாற்றத்தை காலநிலை இலக்குகள், கழிவு குறைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியுடன் இணைக்கிறது. அமெரிக்காவில், USDA உயிரியல் முன்னுரிமை திட்டம், ரசாயனங்கள் மற்றும் நொதிகள் உள்ளிட்ட சான்றளிக்கப்பட்ட உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான செயல்படும் முயற்சிகளை கட்டாயமாக்குகிறது. இது உற்பத்தியாளர்களுக்கான ஆரம்பகால சந்தைகளை உருவாக்குகிறது. சீனாவின் உயிரி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், உயர் மதிப்புள்ள உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் மற்றும் நொதி தொழில்நுட்பங்களை ராஜதந்திரத் துறைகளாக முன்னிலைப்படுத்துகின்றன. ஜப்பானில், METI/NARO நிதியளிக்கப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் உயிரியல் அடிப்படையிலான இரசாயன ஆராய்ச்சியை உற்பத்தித் தயார்நிலையுடன் ஒருங்கிணைக்கின்றன.


அபாயங்கள் என்ன?


உயிரி அடிப்படையிலான இரசாயனத் துறையை உருவாக்குவதில் ஒரு முக்கிய ஆபத்து என்னவென்றால், உயிரி அடிப்படையிலான தயாரிப்புகள் பெட்ரோ ரசாயன மாற்றுகளைவிட அதிகமாக செலவாகின்றன. இந்த செலவு குறைபாடு தற்காலிகமானது மற்றும் அளவீட்டு முறையின் ஆரம்ப கட்டங்களுக்கு மட்டுமே. இது தனியார் முதலீட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்குகிறது. இரண்டாவது ஆபத்து, பல்வேறு வகையான உயிரி அடிப்படையிலான இரசாயனங்களை அளவில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நம்பகமான மூலப்பொருட்கள் மற்றும் துணை உள்கட்டமைப்பு கிடைப்பது தொடர்புடையதாகும். மூன்றாவது சவால் சந்தை ஏற்பு ஆகும். குறிப்பாக, உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் தற்போது உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களை எளிதாக மாற்ற முடியுமா என்பதுதான். விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், உற்பத்தியாளர்கள் புதிய விருப்பங்களுக்கு மாறத் தயாராக இருக்கிறார்களா என்பதையும் சார்ந்துள்ளது.


BioE3-ன் கீழ் உயிரி உற்பத்தி உள்கட்டமைப்பை அளவிடுதல் -உயிர் வலுவூட்டிகள் (biofoundries), முன்னணி ஆலைகள் மற்றும் செயல்விளக்க வசதிகள் போன்றவை - நிறுவனங்களுக்கான மூலதன அபாயத்தைக் குறைக்கும். தெளிவான தரநிலைகள், சான்றிதழ் மற்றும் கொள்முதல் கொள்கைகள் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.


ஆசிரியர் தக்ஷஷிலா நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கையின் தலைவர்.


original article : What are bio-based chemicals and enzymes? -Shambhavi Naik

Share: