தற்போதைய செய்தி
மார்ச் மாதம் முழுவதும் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படைத் தளத்தில் நடைபெறும் 2026-ஆம் ஆண்டு Sea Dragon பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்கிறது. இப்பயிற்சியானது, பல்வேறு நட்புநாடுகளின் கடல்சார் படைகளை ஒன்றிணைத்துள்ளது. இச்சூழலில், இப்பயிற்சி குறித்தும், சில நாட்களுக்கு முன்னர் செய்திகளில் இடம்பெற்ற பிற பாதுகாப்புப் பயிற்சிகள் குறித்தும் அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. மார்ச் மாதம் முழுவதும் நடைபெறும் 2026-ஆம் ஆண்டு Sea Dragon பயிற்சியானது, அமெரிக்கக் கடற்படையின் தலைமையில் நடைபெறும் பன்னாட்டு தேசிய நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் (Anti-Submarine Warfare (ASW)) பயிற்சியாகும். இதில் இந்தியக் கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் ராயல் நியூசிலாந்து விமானப்படை ஆகியவை பங்கேற்கின்றன.
2. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பங்கேற்கும் நாடுகளின் நேசப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சிறந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் திறன்களுக்கான புரிதலை மேம்படுத்தவும் இந்தப் பன்னாட்டு தேசியப் பயிற்சி நடத்தப்படுகிறது.
3. பங்கேற்பாளர்கள் வேகம், துல்லியம் மற்றும் ஒருங்கிணைந்த பணி நிறைவேற்றுதல் மூலம் சோதிக்கப்படுவார்கள். இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் (ASW) திறன் வலுப்பெற்று, நட்பு படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும்.
இந்தியாவின் சமீபத்திய கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள்
1. மிலன் (MILAN 2026): இந்திய கடற்படையின் Exercise MILAN 2026 எனும் 13-வது பதிப்பு, 2026 பிப்ரவரி 25-ஆம் தேதி, விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான INS Vikrant-ல் நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. ‘நட்பு, ஒத்துழைப்பு, கூட்டாண்மை’ (Camaraderie, Cooperation, Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு மற்ற நாடுகள் பங்கேற்றன. இதில் 42 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 29 விமானங்கள் கலந்து கொண்டன.
2. மலபார் கடற்படைப் பயிற்சி (Malabar Naval Exercise): இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள், தங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கத்துடன் (bolster interoperability), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட பசிபிக் பகுதியிலுள்ள குவாமில் நடைபெற்ற வருடாந்திர 'மலபார்' கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றன.
3. யுத் அபியாஸ் 2025 (Yudh Abhyas 2025): இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வருடாந்திரக் கூட்டு இராணுவப் பயிற்சியான 'யுத் அபிஸ்ன்’ 21-வது பதிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 14 வரை அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெய்ன்ரைட் தளத்தில் நடைபெற்றது. படையினர் ஹெலிகாப்டர் வழித் தாக்குதல் நடவடிக்கைகள், கண்காணிப்புச் சாதனங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளின் பயன்பாடு, பாறை ஏறும் கலை, மலைப்பகுதிப் போர் உத்திகள், காயமடைந்தோரை வெளியேற்றுதல், போர்க்கால மருத்துவ உதவி, மற்றும் பீரங்கிப்படை, விமானப்படை மற்றும் மின்னணுப் போர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ராஜதந்திரப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
4. வருணா பயிற்சி (Varuna Exercise): இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி, 2025-ஆம் ஆண்டு மார்ச் 19 முதல் 22 வரை கோவா கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. கடல்சார் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படைகளை ஒன்றிணைக்கும் ஆழமான இணைப்புகளுக்கு இது ஒரு வலிமையான சான்றாகத் இருந்து வருகிறது. 'சக்தி' (Shakti) என்பது இந்தியா மற்றும் பிரான்சின் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்
5. தர்ம பாதுகாவலன் (Dharma Guardian): இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 6-வது கூட்டு இராணுவப் பயிற்சி, ஜப்பானில் உள்ள கிழக்கு ஃபுஜி பயிற்சிப் பகுதியில் நிறைவடைந்தது. இது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஆண்டு நிகழ்வாகும். தர்ம பாதுகாவலன் பயிற்சியின் 5-வது பதிப்பு 2024-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்றது. இரு நாடுகளும் பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதியைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், சுதந்திரமான, திறந்த மற்றும் அனைவர் பங்களிப்பும் உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரே நோக்கத்தையும் கொண்டுள்ளன. இந்தப் பயிற்சி, உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
6. டஸ்ட்லிக் (Dustlik): இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ‘Dustlik’-ன் 6-வது பதிப்பு, 2025 ஏப்ரல் 16 முதல் 28 வரை புனேவில் உள்ள அவுந்தில் வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் (Foreign Training Node (FTN)) நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியின் நோக்கம், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தி, பல்வேறு சூழல்கள் மற்றும் நிலப்பரப்புகளில் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திறன்களை உயர்த்துவதாகும்.
7. செயல்பாட்டுப் பயிற்சி (Passage Exercise): இந்தியக் கடற்படையின் ‘மறைந்திருத்தல்’ (stealth) ரக போர்க்கப்பலான INS Tabar, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் P-8I கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை, ஜூன் 9 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் வடக்கு அரபிக்கடலில், ஐக்கிய இராச்சியத்தின் ‘Carrier Strike Group’-உடன் இணைந்து ஒரு ‘செயல்பாட்டுப் பயிற்சியில்’ (PASSEX) பங்கேற்றன. இந்த கூட்டுப் பயிற்சி, இந்திய கடற்படை மற்றும் ராயல் கடற்படை இடையேயான அதிகரித்துவரும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், கடல் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாடு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளை இது வெளிக் காட்டுகிறது.
8. நாடோடி யானை (Nomadic Elephant): இந்தியா மற்றும் மங்கோலியா இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் 17-வது பதிப்பான ‘நாடோடி யானை’, மங்கோலியாவின் உலான்பாதர் (Ulaanbaatar) நகரில், மே 31 முதல் ஜூன் 13, 2025 வரை நடைபெறுகிறது. இது இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் 2024-ஆம் ஆண்டுப் பதிப்பு மேகாலயாவின் உம்ரோய் பகுதியில் நடத்தப்பட்டது.
9. மித்ர சக்தி (Mitra Shakti): இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் 10-வது பதிப்பான ‘மித்ர சக்தி’, மதுரு ஓயா பகுதியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில், ஆகஸ்ட் 12 முதல் 25, 2024 வரை நடத்தப்பட்டது. ‘மித்ர சக்தி’ என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.
வாயு சக்தி (Vayu Shakti) பயிற்சி
1. ‘வாயு சக்தி’ பயிற்சியின் செயல்விளக்கமானது, இந்திய விமானப்படையின் செயல்பாட்டு தயார் நிலை, துல்லியத் தாக்குதல் திறன் மற்றும் நிஜ உலகத்திற்கு நெருக்கமான போர்நிலை சூழலில் பல்வேறு துறைகளில் செயல்படும் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
2. இந்திய விமானப்படை (IAF), போக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடத்தப்பட்ட மாதிரி தாக்குதல்கள் மூலம் Operation Sindoor-ல் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சில காட்சிகளை வெளிப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் முறைகளை வெளிக்காட்டும் வகையில், ஜாகுவார் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கின.
Original Link: From Sea Dragon to MILAN: Mapping key defence exercises.